ஸ்ரீபராசரபட்டர்–அருளிச் செய்த -ஸ்ரீ குண ரத்ன கோஸம்-ஸ்ரீ ஸூவர்ண குஞ்சிகா– ஸ்லோகங்கள் –33-34-35-36–

இன்னமும் யௌவனம் முதலிய குணங்கள் பொதுவானவையே எனக் கூறித்
தம்பதிகளுக்கு பரஸ்பரம் குணங்கள் போக்யங்களாய் இருத்தலையும் அருளிச் செய்கிறார்-

அந்யே அபி யௌவந முகா யுவயோ: ஸமாநா:
ஸ்ரீரங்க மங்கள விஜ்ரும்பண வைஜயந்தி
தஸ்மிமஸ்தவ த்வயிச தஸ்ய பரஸ்பரேண
ஸம்ஸ்தீர்ய தர்ப்பண இவ ப்ரசுரம் ஸ்வதந்தே–ஸ்லோகம் — 33–

விஜ்ரும்பண -பரப்புகிற
சம்ச்தீர்ய தர்ப்பண இவ -கண்ணாடியில் போலே பரவி
பரஸ்பரேண ப்ரசுரம் ஸ்வ தந்தே -ஒருவருக்கு ஒருவர் மிகவும் இனிக்கின்றன –

ஓன்று என்னலாம்படி அவ்வளவு ஒத்திருத்தல் பற்றி மற்றவர் குணங்களை தம் குணங்களே எனக் கருதிக் களிக்கின்றனர்
யௌவனம் முகா -முதலியவை என்றது
ஆர்ஜவம் முதலிய ஆத்ம குணங்களும் -மென்மை முதலிய திரு மேனிக் குணங்களும்
ஸ்ரீ ரங்க மங்கள -என்று ஸ்ரீ ரங்க நாதனையே சொல்லிற்று என்றும்
அவனைச் செழிப்புறச் செய்யும் கொடி போல்வாளே-என்றுமாம் –

ஸ்ரீரங்கத்திற்கு மங்களம் சேர்க்கின்ற கொடி போன்று உள்ளவளே! ஸ்ரீரங்கநாயகீ!
என்றும் இளமையாக உள்ளது போன்ற தன்மையும் உங்களுக்கு (உனக்கும், நம்பெருமாளுக்கும்) பொதுவாகவே உள்ளது.
இப்படியாக உனது திருக் கல்யாண குணங்களை ஸ்ரீரங்கநாதனும்,
அவனுடைய திருக்கல்யாண குணங்களை நீயும் கண்ணாடி போன்று ப்ரதிபலிக்கின்றீர்கள் அல்லவோ?
உங்கள் இருவருக்கும் இது இனிமையாக உள்ளது போலும்.

உனக்கு ஏற்கும் கோல மலர்ப்பாவை” என்று ஆழ்வாரும் புகழ்ந்தாரே!
ஆண்டாளும் – குழலகர், கண்ணழகர், வாயழகர், கொப்பூழில் எழுகமலப் பூ அழகர் – என்றாளே

இன்னமும் இருவர் தங்கள் இளமை முன்னிட்ட பண்பு
மன்னியே பொதுவாய் மாறி மாறி மற்றிவரிற்று ஒன்றி
நன்னிலைக் கண்ணாடி போல நனி திகழ்ந்து அளிக்கும் இன்பம்
மன்னு தென்னரங்கத் தோங்கு மங்களக் கொடி போல்வாளே–33

———-

இங்கனம் குணங்கள் பொதுவாய் இருப்பினும் விலஷணமான ரச அனுபவத்திற்காக
பெண்ணிற்கே உரிய குணங்களும் ஆணிற்கே உரிய குணங்களும் உடையீராய்த் தம்பதிகளாக
நீங்கள் பிரிந்து உள்ளீர் என்று வேறுபடுத்தும் குணங்களை அனுசந்திக்கிறார் –

யுவத்வாதௌ துல்யே அபி அபரவசதா சத்ருசமந
ஸ்திரத்வ ஆதீந் க்ருத்வா பகவதி குணாந் பும்ஸ்த்வ ஸுலபாந்
த்வயி ஸ்த்ரீத்வ ஏகாந்தாந் ம்ரதிம பதி பாரார்த்த்ய கருணா
க்ஷமா ஆதீந் வா போக்தும் பவதி யுவயோ: ஆத்மநி பிதா–ஸ்லோகம் —34 —

விலஷண குண பேதங்கள் கலந்து அனுபவக்க சுவை மூட்டும் –
தாங்கள் அனுபவிக்க என்றும் -அடியார்கள் அனுபவிக்கவும் என்றுமாம்-

யுவத்வாதௌ துல்யேப் யபரவசதா சத்ருசமன –
கீழ்ச் சொன்ன யௌவன முகா -என்பதை வேறு சிறப்புக் குணங்களைக் கூற அனுவதித்த படி
அபரவசதா -பிறருக்கு வசப்படாமை -ஸ்வாதந்த்ர்யம் –

ஸ்திரத்வாதீன் க்ருத்வா பகவதி குனான் பும்ஸ்த்வ ஸூலபான் –
ஸ்திரத்வம் -என்ன இடைஞ்சல் வரினும் அடியாரைக் கை விடாமை
பிராட்டிக்கு ம்ரதிம-மென்மை-குணத்திற்கு எதிர்தட்டு
சத்ருசமனம் -தண்டதரத்வம் -மனக் கடிந்யம் வேண்டுமே
மர்ஷயாமி ஹதுர்பலா -பிராட்டிக்கு தண்டதரத்வ பராசக்தியே இல்லையே
ஆதி சப்தத்தால் சௌர்யாதிகளை கொள்வது –

த்வயி ஸ்த்ரீத்வ ஏகாந்தாந் ம்ரதிம பதி பரார்த்த்ய -ஷமாதீன்வா போக்தும் பவதி யுவயோ ராத்மனி பிதா-

ஆத்ம குணங்களை பேசும் இடம் என்பதால் மன நெகிழ்வு -ம்ரதிம -மென்மை
ஷமாதீன் -ஆதி சப்தத்தால் வாத்சல்யாதிகள்
பிராட்டி சத்ருசமனம் செயதாவது இறைவன் செய்யும் பொழுது மறுக்காமல் இருப்பதே -தானாக செய்வதற்கு இல்லை –
அசந்தேசாத்து ராமஸ்ய தபசாச்சா நுபலா நாத் நத்வா குர்மி தசக்ரீவ -பச்ம பச்மார்ஹ தேஜஸா -என்றாள் இறே
பாரதந்த்ர்யம் கலசாத சத்ருச மனம் அவனிடம் -பாரதந்த்ர்யம் சத்ரு சமனத்துக்கு இடைஞ்சல்
ஸ்வா தந்த்ர்யம் கலசாத கருணை இவளுக்கு -ஸ்வா தந்த்ர்யம் கருணைக்கு இடைஞ்சல் –
இலக்குமி இன்றி கருணை முதலிய குணங்கள் அவனிடம் வெளிப்படாதே –

ஸ்ரீரங்கநாயகீ! மேலே கூறப்பட்ட இளமை முதலியவை உங்கள் இருவருக்கும் பொதுவாக உள்ளது என்றாலும்
ஸ்ரீரங்கநாதனிடம் ஆண்களுக்கே உரிய சில குணங்கள் உள்ளன. அவையாவன –
அபரவசதா)-மற்றவர்களுக்கு எளிதில் வசப்படாமல் இருத்தல்,
அடியார்களின் பகைவர்களை அழித்தல்,
என்ன இடையூறு வந்தாலும் அடியார்களைக் காத்து நிற்பது – இவை முதலான குணங்கள் அவனிடம் மட்டுமே உண்டு.
உன்னிடம் பெண்களுக்கே உரிய குணங்கள் பொதிந்து உள்ளன. அவையாவன் –
இரக்கம் நிரம்பிய மனம்,
ஸ்ரீரங்கநாதனின் குறிப்பறிந்து நடத்தல்-நம்பெருமாளுக்கு வசப்படுதல்,-
விரோதியாயினும் இரக்கம் கொள்ளுதல் (காகாசுரன் முதலான உதாரணம்)
கருணை, பொறுமை போன்ற பல குணங்கள் உன்னிடம் உள்ளன.-
இப்படியாக உங்கள் இருவரிடமும் உள்ள குணங்களில் வேறுபாடு உள்ளது.

பகர்ந்தன பொது வென்றாலும் பகை தெறல் திரம் பிறர்க்காட்
புகுந்திடலின்மை இன்ன புருடர் பண்பிறையில் வைத்தும்
மகிழ்நருக் காதல் மென்மை பொறை யருள் மகட் பண்புன்தன்
அகமுற வைத்தும் துய்க்க அடைந்துளீர் ஆன்ம பேதம் -34-

மகிழ்நருக் காதல்-கணவனுக்கு வசப்பட்டு இருத்தல் –

————-

ஸ்வரூபத்தின் கண் உள்ள வேறுபட்ட குணங்களைக் கூறினார் முன் ஸ்லோகத்தில் –
திரு மேனியின் கண் உள்ள வேற்பட்ட குணங்களை அனுசந்திக்கிறார் இதில் —

கந கநக யுவதசாம் அபி முக்ததசாம்
யுவ தருணத்வயோ: உசிதம் ஆபரணாதி பரம்
த்ருவம் அஸமாந் தேச விநிவேசி விபஜ்ய ஹரௌ
த்வயி ச குசேசய உதர விஹாரிணி நிர்விசஸி–ஸ்லோகம் —35 —

கந கநக த்யுதீ -மேகம் பொன் போன்ற ஒளிகளையும்
நீலமுண்ட மின்னன்ன மேனிப் பெருமான்
நீலதோயத -சுருதி -பொன்னின் சோதி இலக்குமியிடம் -ஹிரண்ய வர்ணாம்
இரண்டு ஜோதிகளின் சேர்த்தி அழகை நம் கண் முன் கொணர்ந்து நிறுத்தி அருளுகிறார் –

யுவதசாமபி முக்ததசாம் -யௌவன இளம் பருவங்கள் –
காளைப் பருவம் இறைவனுக்கு -பால்யம் யௌவனம் சந்தி- நிலை பிராட்டிக்கு
ஸூதி சைசவ யௌவன வ்யதிகர -என்பர் 43 ஸ்லோகத்தில்-

யுவ தருணத்வயோ: உசிதம் ஆபரணாதி பரம் –
யௌவனம் இளமை இவைகளுக்கு ஏற்றதே -துல்ய சீல வயோ வ்ருத்தாம் -ஒரே வயது இல்லை ஏற்ற வயது –
ஆபரணாதி -ஆதி சப்தத்தால் ஆண்களுக்கே உரிய அவயவ அமைப்பு பெண்களுக்கே உரிய அவயவ அமைப்பு
முதலியன கூறப்படுகின்றன
பரம் -விலஷணம் என்றவாறு -சமானம் -ஏகம் ஓன்று -அசமானம் -அநேகம் பின்னம் –
வேறு வேறு திவ்ய ஆபரணங்கள் திவ்ய அவயவங்கள் –

த்ருவம் அஸமாந் தேச விநிவேசி விபஜ்ய ஹரௌ த்வயி ச குசேசய உதர விஹாரிணி நிர்விசஸி–-
த்ருவம் -நிச்சயம் –
தேச -இடங்களில்
விநிவேசி -அமையப் பெற்றதும்
பரம் -சிறந்ததுமான
ஆபராணாதி-திவ்ய ஆபரணங்கள் முதலியவற்றையும்
ஹரௌ -இறைவன் இடத்தும்
த்வயிச -நின்னிடத்தும்
விபஜ்ய -பிரித்து
நிர்விசசி -அனுபவிக்கின்றாய்-
பிராட்டி பிரதான்யம் பற்றி இறைவனைக் கூறாமல் பிராட்டி அனுபவத்தை மாத்ரம் அருளிச் செய்கிறார் –

தாமரை மலரில் பிறந்தவளே! ஸ்ரீரங்கநாயகீ! உன்னிடம், உனது திருமேனியின் நிறமானது பொன் போன்ற ஒளி வீசியபடி உள்ளது;
ஸ்ரீஸூக்தம் – ஹிரண்ய வர்ணாம்-உனது கணவனான ஸ்ரீரங்கநாதனிடம் மேகம் போன்ற நிறம் வீசியபடி உள்ளது.
உன்னிடம் பால்யப் பருவமும், யௌவநப் பருவமும் சந்திக்கின்ற பருவம் நிறைந்துள்ளது;
உனது கணவனோ காளைப் பருவத்தில் உள்ளான்.
உங்கள் இருவரின் மீதும், உங்கள் பருவத்திற்கும் இளமைக்கும்
ஏற்றது போன்ற அழகான ஆபரணங்கள் காணப்படுகின்றன.
அவற்றைக் காண்பவர்களின் கண்களுக்கு அவை பெரும் ஆனந்தம் அளிக்கின்றன.

————

இனி மூன்று சுலோகங்களால் திவ்ய மங்கள விக்ரஹத்தை வருணிக்கிறார் –
இதில் பாற் கடலின் சாரம் எல்லாம் திரண்டு பிராட்டி திரு மேனி யாயின –
தம் சாரத்தை இழந்த பாற் கடல் பொருளாகிய சந்தரன் முதலியன எல்லாம் கோது ஆகிவிட்டன என்று வருணித்து
நித்யமான அப்ராக்ருத திவ்ய மங்கள விக்ரஹத்தை இங்கனம் வருணிப்பது தகுமோ -என்கிறார் –

அங்கம் தே ம்ருது சீத முக்த மதுர உதாரை: குணை: கும்பத:
க்ஷீராப்தே கிம் ருஜீஷதாம் உபகதா: மந்யே மஹார்கா: தத:
இந்து: கல்பலதா ஸுதா மதுமுகா இதி ஆவிலாம் வர்ணநாம்
ஸ்ரீரங்கேச்வரி சாந்த க்ருத்ரிமகதம் திவ்யம் வபு: ந அர்ஹதி–ஸ்லோகம் —36 —

அங்கம் தே ம்ருது சீத முக்த மதுர உதாரை: குணை:-திருமேனியை மென்மை என்ன -குளிர்ச்சி என்ன
முக்த -அழகு என்ன -இனிமை என்ன -உதாரை -பெரும் தன்மை என்ன –இந்த சாரமான குணங்களைக் கொண்டு

கும்பத ஷீராப்தே கிம் ருஜீஷதாம் உபகதா மன்யே மஹார்காச் தத- –இந்து கல்பலதா ஸூதா மதுமுகா இதி ஆவிலாம் வர்ண நாம் –
கும்பத -கோக்கின்ற பாற் கடலுக்கு -இந்து -சந்திரனும் -கற்பகக் கொடியும் அமுதமும் மது முதலியனவும் –
ருஜீஷதாம் -சாறு பிழிந்த கோதாக இருக்கும் தன்மையை
உபகதாகிம் -அடைந்தன கொல்-
தத மஹார்கா-அதனால் அவை மிகவும் மதிப்புடையன என்று மன்யே -எண்ணுகின்றேன் –
இதி ஆவிலாம் வர்ணா நாம் -என்று கலங்கின வருணனைக்கு

ஸ்ரீ ரங்கேச்வரி
சாந்த க்ருத்ரி மகதம் திவ்யம் வபுர் ந அர்ஹதி –செயற்கைப் பேச்சே இல்லாத
அப்ராக்ருதமான உனது திருமேனி தகுதி உடையதாய் இல்லை-

சந்த்ரனிடம் உள்ள அழகு குளிர்ச்சி மென்மை என்னும் குணங்களை எடுத்தும்
கற்பகக் கொடியில் உள்ள ஔதார்ய குணத்தை எடுத்தும்
அமுதத்தினுடைய இனிமையை எடுத்தும்
மதுவினுடமுள்ள குளிர்ச்சியை எடுத்தும் -பிராட்டியின் திருமேனியை வகுத்ததனால் இவை கோது ஆகி விட்டன
நித்தியமான திருமேனி என்று அறியாமல் கலக்கத்தால் வருணனை –
அமிர்தம் போல பிறக்கவில்லை தோன்றினாள் –

ஸ்ரீரங்கநாயகீ! திருப்பாற்கடலின் அரசன் என்ன செய்தான் என்றால் –
சந்திரனின் அழகு மற்றும் குளிர்ச்சியை உனக்கு அளித்தான்;
சந்திரனின் மென்மையையும் உனக்கு அளித்தான்; கற்பக மரத்தின் ஈகைத் தன்மையை உனக்கு அளித்தான்;
அமிர்தத்தின் இனிமையை உனக்கு அளித்தான்.
இதனால்தான் சந்திரன், கற்பகம், அம்ருதம் முதலானவை சாறு பிழியப்பட்ட வெறும் சக்கை போன்று உள்ளன என்று நான் நினைக்கிறேன்.
இப்படி இருந்தாலும் இந்த உலகினரால் அவை பெரிதும் போற்றப்படுகின்றன.
இப்படியான முரண்பாடுகள் நிறைந்த கவிஞர்கள் மூலமாக உனது திருமேனியை வர்ணிக்க இயலுமா?
அந்த வர்ணனைகள் உனது திருமேனிக்குப் பொருந்துமா?

இதற்கு மற்றும் ஒரு விதமாகப் பொருள் கொள்வோரும் உண்டு.
சந்த்ரன் முதலானவைகள் ஸ்ரீரங்கநாச்சியாருக்குத் தங்கள் சிறப்புகளை அளித்த காரணத்தினால் தான்
அவை இந்த உலகிலனரால் பெரிதும் போற்றப்படுகின்றன – என்பதாகும்.
இவ்விதம் பொருள் கொண்டால் –
இயற்கையாகவே இந்தத் தன்மைகள் இல்லாதவள் ஸ்ரீரங்கநாச்சியார் – என்றாகி விடும் அல்லவா?
இதனை உணர்ந்த பட்டர், இறுதி வரியில் –
சாந்த க்ருத்ரிம கதம் திவ்யம் – செயற்கை என்பதே இல்லாத தெய்வீகமான திருமேனி – என்று முடித்தார்.

ஆக – அந்தப் பொருள்கள் மேன்மை பெற்றாலும், அவை உனக்கு அளிப்பதாகக் கூறப்படும் தன்மைகள்,
தெய்வீகமான உனது திருமேனிக்கு ஏற்கவல்லது அல்ல – என்பதாகும்.

மதியமுது மதுகற்ப வல்லி மானும் மாண் பொருளின் தண்மை யழகு இனிமை வன்மை
மெதுமை எனும் குணம் கொண்டு உன் விளங்கும் அங்கம் வெண் திருப் பாற் கடல் கோப்பக் கோதாய் நின்றே
அதிக மதிப் பதனாலே யடைந்த போலும் அவை யெனவே அகம் கலங்கி வருணித் திட்டால்
அது திவிய மா மாக்கற் பேச்சே யற்ற ஆருடம்புக் கடுக்குமோ சி ரரங்கத் தாளே–36–

ஆக்கல் பேச்சே அற்ற – புதிதாக உண்டாகப்படுதல் என்கிற பேச்சிற்கே இடமில்லாத-

————-———————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திரு மலை நல்லான் ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: