ஸ்ரீபராசரபட்டர்–அருளிச் செய்த -ஸ்ரீ குண ரத்ன கோஸம்- ஸ்ரீ ஸூவர்ண குஞ்சிகா–ஸ்லோகங்கள் –29-30-31-32–

மங்களம் மங்களா நாஞ்ச-என்றபடி பகவானை மங்களம் எனபது பிராட்டி சம்பந்தத்தாலே –
பிராட்டிக்கு மங்கள ஸ்வரூபமாய் இருத்தலே இயல்பு -காரணத்தால் வந்தது அன்று -என்கிறார் –

தவ ஸ்பர்சாத் ஈசம் ஸ்ப்ருசதி கமலே மங்கள பதம்
தவ இதம் ந உபாதே: உபநிபதிதம் ஸ்ரீ: அஸி யத:
ப்ரஸூநம் புஷ்யந்தீம் அபி பரிமளர்த்திம் ஜிகதிஷு:
ந ச ஏவந்த்வாத் ஏவம் ஸ்வததே இதி கச்சித் கவயதே–ஸ்லோகம் -29-

ஸ்ரீ சொல் மங்களம் என்னும் பொருள் –
மங்களம் கிமபியல் லோகே சதித்யுச்யதே தத் சர்வம் த்வததீ நமேவஹி
யதச் ஸ்ரீ ரிதய பேதே நவா யத்வா ஸ்ரீ மதிதீ த்ருசேந வச்சா தேவி ப்ரதாமச் நுதே -கூரத் ஆழ்வான்-ஸ்ரீ ஸ்தவம்
உன்னுடைய அதீனத்தாலே-ஸ்ரீ -சம்பந்தத்தால் இந்த -ஸ்ரீ சப்தம் கொண்டே -ஸ்ரீ ரெங்கம் இத்யாதி போலே –
புஷ்பத்திற்கு சிறப்பு மணத்தாலே -திருஷ்டாந்தம் -மணத்துக்கோ சிறப்பு இயல்பு -வேறு ஒரு காரணத்தால் வந்தது அல்ல –
பரிமளர்த்திமபி-ஆகப் பிரிந்து நிலை இல்லை -பிரபையையும் ப்ரபாவனையும் புஷ்பத்தையும் மணத்தையும் போலே -முமுஷூப்படி-

ஜிகதிஷூ– சொல்ல ஆசைப்படுபவன் -நறு மணம் உடன் சேர்ந்தே புஷ்பம் சொல்லுவது போலே –
நாற்றத் துழாய் –ஐந்து ஆறு குளிக்கு இருக்கும் கோயில் சாந்து போலே -நறு மணம் உடன் கூடிய திருத் துழாய் என்பது போலே –
ஸ்ரீயஸ்ரீ -திருவுக்கும் திருவாகிய செல்வன் ஆகையால் தெய்வத்துக்கு அரசு —
ஆஸ்ரயிக்கும் அர்த்தம் -மங்களம் இவளுக்கு ஒரு காரணம் பற்றி இல்லை –
திரு முளை மருத் சங்கரணம் பிராட்டி சந்நிதியில் இருந்தே இன்றும் –
எழில் வேதம் -சுடர் மிகு சுருதி –மிதுனத்தை பற்றி பேசுவதால் –

தாமரை மலரில் அமர்ந்தவளே! ஸ்ரீரங்கநாயகீ! உனது நாயகனான ஸ்ரீரங்கநாதனுக்கு
“ஸ்ரீ” என்னும் மங்களச் சொல் அடைமொழியாக உள்ளது எப்படி?
உனது தொடர்பு அவனுடன் உள்ளதால் அல்லவா?
அந்த மங்களச் சொல் உனக்கும் அடைமொழியாக உள்ளது.
ஆனால் அவ்வாறு அந்தச் சொல் உனது அடைமொழியாக உள்ளதற்கு எந்தக் காரணமும் இல்லை –
ஏனெனில்
நீயே மங்களகரமான பொருளாகவே அல்லவா உள்ளாய்?
ஒரு மலருக்கு நறுமணம் என்பது பெருமை அளிக்கிறது.
ஆனால் அந்த நறுமணத்திற்கு வேறு எதனாலாவது பெருமை உண்டாகுகிறதா என்ன? எதனாலும் அல்ல.
யாராவது ஒருவன் இந்த காரணத்தினால் நறுமணம் இப்படி உள்ளது என்று கூறுகிறானா?

மங்களப் பெயரீசற்கு வந்ததுன் தொடர்பா னிற்கோ
அங்கன் அன்று அஃது இயற்க்கை யல்லையோ திரு நீ அல்லி
நங்கையே சிறப்பு அலர்க்கு நறு மணத்தால் அதற்கும்
எங்கனம் சிறப்புக் கேது வியம்புவன் கவிஞன் மாதோ –29-

——

பிராட்டியினாலே மங்களம் ஆவது மாத்திரம் அன்று –
இறைமையே யவளது பூர்ண கடாஷத்தால் தான் ஏற்பட்டது என்றும்
அற்பமான கடாஷத்தைப் பெற்றவர் இந்த்ராதியர் ஆயினர் என்றும்
ஆதலில் இறைவனையும் இந்த்ராதியரையும் பற்றின வேதம் முடிவில் இலக்குமியையே கூறியது என்றும் அருளிச் செய்கிறார் –

அபாங்கா: பூயாம்ஸ: யதுபரி பரம் ப்ரஹ்ம தத் அபூத்
அமீ யத்ர த்வித்ரா: ஸச சதமகாதி: தததராத்
அத: ஸ்ரீ: ஆம்நாய: தத் உபயம் உசந் த்வாம் ப்ரணிஜகௌ
ப்ரசஸ்தி: ஸா ராஜ்ஞ: யத் அபி ச புரீ கோச கதநம்.–ஸ்லோகம் –30-

த்வித்ரா -இரண்டு மூன்று துளிகள்
கோச -பொக்கிஷத்தினுடையவும்-
புரீ கோசம் -நகர பொக்கிஷம் -பர ப்ரஹ்மம் இந்திரன் –ஆதாரம் -நகரமும் பர ப்ரஹ்மமும்

தைக்கின்றதாழி -திரு விருத்த பாசுர வியாக்யானத்தில் -இவள் கால் பட்ட மணல் பரதத்வம் ஆகாதோ -பட்டர் அருளிச் செய்வாராம் –
பூர்வர்கள் இவள் கால் மணலில் பட்டால் அதில் அவன் இருப்பானே என்பர் –
பட்டர் மணல் அவனாகும் என்றாரே –

சிதைக்கின்ற தாழி என்று ஆழியை சீறி தன் சீர் அடியால்
உதைக்கின்ற நாயகம் தன்னொடு மாலே உனது தண்டார்
ததைக்கின்ற தண் அம் துழாய் அணிவான் அதுவே மனமாய்
பதைக்கின்ற மாதின் திறத்து அறியேன் செயற் பால் அதுவே -34—மின்னிடை மடவார்கள் -6-2-

முன்புள்ளார் கூடல் இழைக்க புக்கவாறே-அது சிதறி வருகிற படியை கண்டு-அத்தோடு சீறி அருளா நின்றாள் என்பார்கள்
பட்டர்–இது கூடுகைக்கு ஏகாந்தம் இன்றியே-பிரிகைக்கும் ஒரு புடை உண்டாய் இருக்கையாலே சீறி உதையா நின்றாள் -என்று
கூடல் இழைக்க புக்கவாறே கடல் ஆனது திரை ஆகிய கையால் அழிக்க புக்க வாறே அத்தோடு சீறா நின்றாள்-
நாயகனும் வரவு தாழ்ந்தவாறே ,கடலோடு சீரும் அத்தனை இறே–
பெறுதற்கு அரிதான திரு அடிகளாலே ,கிடீர் அசேதனமான கூடலை உதைகின்றது
அவன் சர்வேஸ்வரன் ஆவது இவள் காலுக்கு இலக்கான வாறே
இவளை இப்படி பிச்சேற்றி இவள் பிச்சை கண்டு பிச்சேறி இருகிறவன்-
க்ரம பிராப்தியும் இவள் உடைய த்வரையும் சாதனம் இல்லை-அப்ரயோகம் -பலம் அவன் தன்னாலே இருந்த படி-

பதி ஸம்மானம் -தோள் மாலை சாத்தினார் பெருமாள் -பூர்வர் -தட்டு மாறி -காலில் விழுந்து நில் என்றார் பெருமாள் -பட்டர்
மலராள் மணம் நோக்கம் உண்டானே -திரு மங்கை ஆழ்வார்
ந ஜீவேயம் ஷணமபி வி நாதம் அஸி தேஷணாம்-பெருமாள் அருளிச் செய்தார் இறே
ஸ்ரத்தை யினாலேயே தேவன் ஆகிறான் -ஸ்ருதி-தது -அது ஆனது -என்கிறார் வஸ்து போலே –
திரு நின்ற பக்கம் திறவிது -திரு மழிசைப்பிரான் –

ப்ரஹ்மாத் யாச்ச ஸூராஸ் சர்வே முனயச்ச தபோத நா
ஏதந்தே த்வத் பதச்சாயா மாஸ்ரித்ய கமலேஸ்வரி –
அரசனைப் போல் இலக்குமி -நகரினைப் போல் பர ப்ரஹ்மம் -பொக்கிஷம் போல் இந்த்ராதி –
சர்வத்துக்கும் ஆதாரம் அவன் -அவன் இடம் இருந்து தோன்றியதால் இவர்கள் பொக்கிஷம் –
ஒரு அரசனுடைய நகரத்தையும் பொக்கிஷத்தையும் ஒருவன் வருணித்தால் அது அரசனையே சாரும்
அது போலே வேதம் அனைத்தும் பிராட்டியையையே சாரும் –ஆம்நாய -வேதம் –

மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! உனது உயர்ந்த கடாக்ஷம் எதன் மீது சென்று அதிகமாக விழுந்ததோ,
அந்தப்பொருள் ப்ரஹ்மம் எனப்பட்டது. அந்தக் கடாக்ஷங்கள் எந்தப் பொருள்களின் மீது குறைவாக விழுந்ததோ,
அவை இந்திரன் முதலான பரப்ரஹ்மத்தைவிடத் தாழ்வான பொருள்களாக ஆனது.
எனவே பரப்ரஹ்மத்தைக் குறித்தும், இந்திரன் முதலான தேவர்களைக் குறித்தும் உள்ள வேதங்கள் உன்னையே
மறைமுகமாக கூறுகின்றன என உறுதியாகக் கூற இயலும். ஒரு நகரத்தைப் பற்றியும், அந்த நகரத்தின்
செல்வச் செழிப்பைப் பற்றியும் ஒரு நூல் கூறுவதாக வைத்துக்கொள்வேம்.
அந்த வர்ணனை, அந்த நாட்டின் அரசனை அல்லவா மறைமுகமாக குறிக்கிறது?

இவள் தனது பரிபூர்ணமான கடாக்ஷத்தை வீசியபடி உள்ளதாலேயே நம்பெருமாளுக்கு ஸ்வாமித்வம் போன்ற
பல தன்மைகள் நித்யமாக உள்ளன. இராமன் – ந ஜீவேயம் க்ஷணம் அபி – சீதையைப் பிரிந்து என்னால்
ஒரு நொடி கூட வாழ இயலாது – என்றான் அல்லவா?
நகரம் என்று ப்ரஹ்மமும், செல்வம் என்று தேவர்களும், மன்னன் என்று ஸ்ரீரங்கநாச்சியாருமே கூறப்பட்டனர்.

ஆக வேதங்கள் இவளைப் பற்றியே கூறுகின்றன என்றார்.

கடைக் கண்ணால் திரு நீ மிக்குக் கண்டது பரப் பிரம்மம்
படைத்தன விந்திராதி பார்வைகள் இரண்டு மூன்றே
எடுத்திரு பொருளுமோதி இயம்பிய துனையே வேதம்
படித்திடி னகர் செல்வங்கள் பார்த்திவன் புகழ்வாகாதோ–30–

————

இறைவனது இறைமை பிராட்டி அடியாக ஏற்படுமாயின்
இயல்பினில் அவனுக்கு ஏற்றம் இல்லை என்றாகாதோ
என்பாருக்கு திருஷ்டாந்தத்துடன் விடை யிறுக்கிறார் –

ஸ்வத: ஸ்ரீ: த்வம் விஷ்ணோ: ஸ்வம் அஸி தத ஏவ ஏஷ: பகவாந்
த்வத் ஆயத்த ருத்தித்வேபி அபவத் அபராதீந விபவ:
ஸ்வயா தீப்த்யா ரத்நம் பவத் அபி மஹார்கம் ந விகுணம்
ந குண்ட ஸ்வாதந்த்ர்யம் பவத் இதி ச ந ச அந்ய ஆஹித குணம்–ஸ்லோகம் –31-

திருவே நீ இறைவனுக்கு இயல்பாகவே சொத்தாக இருக்கின்றாய் -அதனாலேயே இந்த அரங்கநாதன்
உன் அதீனமான ருத்தித்வேபி -சிறப்பை உடையவனாய் இருப்பினும்
அபராதீன -மற்று ஒருவரால் ஏற்படாத –
விபவ -பெருமை உடையவனாக
அபவத்-ஆயினான்
ரத்னம் தன்னதான ஒளியினாலே விலை மதிப்புள்ளதாக ஆனாலும் -விகுணம்- குணம் அற்றதாக ஆகவில்லை –
குண்ட ஸ்வா தந்த்ர்யம் -முக்கியத் தன்மை குன்றியனதாகவும் ஆவதில்லை –
அந்ய-மற்று ஒன்றால் ஆஹித -ஏற்பட்ட குணம் ச -சிறப்பை உடையதாகவும் நச பவதி -ஆவதும் இல்லை-

ஸ்வத்வ மாத்மநி சஞ்ஜாதாம் ஸ்வாமித்வம் ப்ரஹ்மணி ஸ்திதம் -ஸ்வாமி சொத்து சம்பந்தம் –
குணம் உள்ளாவான் என்பதால் பகவான் –
ரத்னம் ஒளியினால் விலை பெற்றால் அந்யாயத்தம் ஆகாது இறே -நம்பிள்ளை
ஸ்வத-பிராட்டிக்கு சேஷத்வம் இச்சையாலே வந்தது என்பாரும் உண்டு மகிஷி யாதலால்-

மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! நீ ஸ்ரீரங்கநாதனுக்கு உரிமை உள்ளவளாக எப்போதும் இருக்கிறாய்.
இதனால் தானே உன் மூலம் பெருமைகள் அடைந்த அவன் தனது இயல்பான பெருமைகளையும் கொண்டு விளங்குகிறான்.
ஒரு இரத்தினக் கல்லுக்கு பெருமை, மதிப்பு போன்ற அனைத்தும் அதிலிருந்து வீசும் ஒளிக்கே உரியது.
ஆயினும் அந்தக் கல்லைக் காணும் யாரும் ஒளியை மட்டும் மதித்து விட்டு,
இரத்தினக்கல் முக்கியத்வம் கொண்டது இல்லை என்று ஒதுக்கி விடுவதில்லையே.
ஆகவே ஒளியால் உண்டாகிய சிறப்பை இரத்தினம் ஏற்கிறது அல்லவா?

அவனை ஒளிர வைப்பது இவளே என்றார். அது மட்டும் அல்ல,
அந்த இரத்தினக்கல்லை ஒளிர வைப்பதன் மூலம் நமக்கு, “இதோ இரத்தினம் இங்கே உள்ளது”,
என்று காண்பிக்கவும் உதவுகிறாள்.

இயல்பினால் சொத்தாம் உன்னால் இறை சிறப்பு எய்தினாலும்
அயல் பொருளாலே யாகும் அதிசயம் உடையனாகான்
சுய வொளி துலக்கு மேனும் தூ மணி குண மற்றொன்றால்
உயர்ந்தது திரு முதன்மை ஒழிந்தது என்று உரைக்கப் போமோ -31-

ஒளி போலே விட்டுப் பிரியாதவள் -ஆதலின் பிராட்டி வேறு ஒரு பொருள் அல்லள் –

————

இங்கனம் இலக்குமியின் ஸ்வரூபத்தை இதுகாறும் அனுசந்தித்து
இனி ஸ்வரூபத்தையும் திரு மேனியையும் பற்றின திருக் குணங்களைக் கூறுவாராய்ப்
பெருமாளுடையவும் பிராட்டியினுடையவும் பொதுக் குணங்களை அனுசந்திக்கிறார்-

ப்ரசகந பல ஜ்யோதி: ஞான ஐச்வரீ விஜய ப்ரதா
ப்ரணத வரண ப்ரேம க்ஷேமங்கரத்வ புரஸ்ஸரா:
அபி பரிமள: காந்தி: லாவண்யம் அர்ச்சி: இதி இந்திரே
தவ பகவதச்ச ஏதே ஸாதாரணா குண ராசய:–ஸ்லோகம் — 32–

பிரசகன-சக்தி என்ன –
பல -பலம் என்ன –
ஜ்யோதிர் -தேஜஸ் என்ன –
ஞானைச்வரீ விஜய ப்ரதா -அறிவு ஐஸ்வர்யம் வீர்யம் பிரசித்தி என்ன
ப்ரணத வரண -வணங்கினோரை வரித்தல் என்ன
ப்ரேம -ப்ரீதி என்ன
ஷேமங்க ரத்வ -ஷேமத்தைச் செய்தல் என்ன
புரஸ்ஸரா -இவைகளை முன்னிட்டவைகளும்
திவ்ய தம்பதிகளின் பொதுவான ஆத்ம குணங்களை அருளி திரு மேனிக் குணங்களை அனுசந்திக்கிறார் –

அபி -மேலும்
அபி பரிமள: காந்தி: லாவண்யம் அர்ச்சி: இதி இந்திரே -நறுமணமும் சௌந்தர்யமும் லாவண்யமும் பளபளப்பும் என்கிற இந்த –

தவ பகவதச் ச ஏதே சாதாரணா குண ராசே –குணக் குவியல்களும் உனக்கும் பெருமாளுக்கும் பொதுவானவை-

ஞானாதி ஷட்குணமயீ-இவை மற்ற குணங்களுக்கு ஊற்றுவாய்
பிரசகனம் -பிரவர்த்திக்கும் சேதனருக்கு சக்தியைக் கொடுத்து ப்ரவர்த்திபிக்கும் தன்மை –
பலம் -தனது சங்கல்பத்தாலே அனைத்தையும் தாங்கும் சக்தி
ஜ்யோதிஸ் பிறரை அபிபவிக்கும் திறம்கூட்டு ஒருவரையும் வேண்டா கொற்றம் –
ஞானம் யாவற்றையும் ஒரு காலே எப்போதும் உள்ளபடி கண்டு அறிய வற்றை இருக்கை
ஐஸ்வர்யம் தம் இஷ்டப்படி நியமிக்கும் திறம் –
விஜயம் -வீர்யம் -விசேஷ ஜெயம் -விஜயம் -ஆயாசம் இன்றி அதனை -வீர்யம் -சர்வத்தையும் அனாயாசமாக தரிக்கை
ப்ரதை -என்னை யாக்கி எனக்கே தன்னைத் தந்த கற்பகம் -விஜயப்ரதா -வெற்றியால் வந்த புகழ் என்றுமாம்
பிரணத வரணம்-யாத்ருச்சிக ஸூ கருத லேசத்தை பிறப்பித்து அடியார் என்று ஏற்றுக் கொள்ளுதல்
குணக் குவியல்கள் -ஒவ் ஒன்றே பல்கித் திரள் திரளாய்க் குவிந்து இருக்குமே
இவை இறைவனிடம் ஸ்வா தீனமாகவும் இலக்குமியினுடம் பராதீனமாகவும் -அவனால் – ஏற்பட்டவைகள்-

ஸ்ரீரங்கநாயகீ! சக்தி, பலம், தேஜஸ், ஞானம், ஐஸ்வர்யம், வீர்யம் முதலான ஆறு குணங்கள்;
அடியார்களுக்குத் தன்னையே கொடுத்தல்; அடியார்களை அரவணைத்தல்; அடியார்களைப் பிரிந்தால் தவித்து நிற்பது;
அடியார்களுக்கு எப்போதும் நன்மையே செய்தல்; நறுமணம் வீசும் திருமேனி; பளபளக்கும் திருமேனி –
ஆக இப்படியான பல திருக்கல்யாண குணங்கள் குவியலாக உன்னிடமும் ஸ்ரீரங்கநாதனிடமும் பொதுவாக உள்ளதல்லவா?

1.பலம் = தன்னுடைய ஸங்கல்பம் மூலம் அனைத்தையும் தாங்குதல்
2.தேஜஸ் = எதற்கும் துணையை எதிர்பாராமல், அவர்களைத் தன் வயப்படுத்தும் திறன்
3.ஞானம் = அனைத்தையும் முன்கூட்டியே அறிவது
4.ஐச்வர்யம் = அனைத்தையும் தன் விருப்பப்படி நியமித்தல்
5.வீர்யம் = புருவம் கூட வியர்க்காமல் எளிதில் வெல்லும் திறன்
6.ப்ரதா = தன்னையே அடியார்களுக்குக் கொடுத்தல்
7.ப்ரணத வரணம் = குற்றத்தையும் குணமாகக் கொண்டு ஏற்றுக் கொள்ளுதல்
8.ப்ரேமம் = அடியார்களை விட்டு நீங்கினால் துன்பம் கொள்ளுதல்
9.க்ஷேமங்கரத்வம் = நன்மைகளை அளித்தல்

மிகும் ஆற்றல் பலம் தேசு மெய்யுணர்தல் விசயம் சேர் புகழுடனே ஐஸ்வர்யம்
அகவையில் அன்புடைமை யண்டினாரை ஆதரித்து வயமாக்கல் காத்தலாதி
மகில்வேற்றும் உயிர்க் குணனும் உறுப்பில் மேவும் வனப்பு மணம் ஒளி யழகு என்று இன்ன
பகவானும் நீயுமே இப் பண்பினங்கள் பரமேசுவரி பொதுவாய்ப் படைத்துளீரே–32-

———————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திரு மலை நல்லான் ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: