ஸ்ரீ பராசரபட்டர்–அருளிச் செய்த -ஸ்ரீ குண ரத்ன கோஸம்–ஸ்ரீ ஸூவர்ண குஞ்சிகா– ஸ்லோகங்கள் –37-38-39-40–

சிறிது தலை வணங்கியும் இடை சுருங்கியும் உள்ள பிராட்டியின் திருமேனி
நம் வாக்கிற்கு எட்டாதது என்கிறார் –

ப்ரணமத் அநு விதித்ஸா வாஸநா நம்ரம் அக்ரே
ப்ரணயி பரிசிசீஷா குஞ்சிதம் பார்ச்வகேந
கநக நிகஷ சஞ்சத் சம்பக ஸ்ரக் ஸமாந
ப்ரவரம் இதம் உதாரம் வர்ஷ்ம வாசாம் அபூமி:–ஸ்லோகம் —37 —

ப்ரணமத் அநு விதித்சா வாஸநா நம்ம் அக்ரே- -திருமுடியில் பிரணமத்-வணங்கினாரை
அநு விதித்சா -அநு சரிக்கும் விருப்பத்தின் உடைய –
வாசநா -பழக்கத்தாலே
நம்ரம் -வணங்கியதும் –
தற்குறிப்பேற்ற அணி -சதா அனுக்ரஹ சம்பன்னா -இவள்
வணக்கத்தை ஏற்று அவர்கட்கு இணைய நிற்றலுக்கு அறிகுறியாய் சிறிது தலை வணங்கி நிற்கிறாள்-

பிரணயி பரிசிசீஷா குஞ்சிதம் பார்ச்வகேந-
பக்க பிரதேசத்தினால் காதலனுடைய பழகுதலின் விருப்பத்தினாலே சுருங்கியதும் -முகத்தைப் பருவம்
தனது காதலனோடு பழகும் பொழுது நாணி ஒடுங்குதல் இயல்பே –
பய பக்தியினால் ஒடுங்கி இருப்பதாகவுமாம் –

கநக நிகஷ சஞ்சச் சம்பக ஸ்ரக் சமாந -பரவர மிதமுதாரம் வர்ஷ்ம வாசா மபூமி
உரை பொன்னுக்கும் பிரகாசிக்கின்ற செண்பக மாலைக்கும்
சமான ப்ரவரம் -ஒரே கோத்ரத்தைச் சேர்ந்தது -சமமானது
இந்த கம்பீரமான நினது திருமேனி சொற்களுக்கு நிலம் இல்லாதது –
உரை பொன்னையும் செண்பக மாலையையும் உவமித்தமையால் ஒளியோடு மணமும் தோன்றும் –
உதாரம் -பெரும் தன்மை -வள்ளன்மை என்றுமாம்
இதம் வாசாமபூமி -அப்ராக்ருதமான திவ்ய மங்கள விக்ரஹம் அர்ச்சா ரூபமாய் நம் கண்ணுக்கு தோற்றிற்று
ஆயினும் வாக்கிற்குப் புலனாகாது இருப்பதே –

ஸ்ரீரங்கநாயகீ!
உன்னைக் கண்டு வணங்கி நிற்கும் அடியார்களுக்கு உத்தமப் பெண்கள் போன்று நீயும் பதில் வணக்கம் செய்கிறாய்.
இதனால் உனது திருமுடியானது சற்றே சாய்ந்து உள்ளது.
உனது கணவன் ஸ்ரீரங்கநாதன் அருகில் உள்ளதால், அவனது திருமேனியில் உனது மென்மையான திருமேனி
பட்டவுடன் எழுந்த கூச்சம் காரணமாக உனது திருமேனி ஒரு பக்கம் ஒடுங்கி உள்ளது.
உரைத்துச் சிவந்துள்ள பொன் போன்றும், நன்கு தொடுத்த செண்பக மலர்மாலை போன்றும் உனது திருமேனியின் பேரழகு உள்ளது.
இந்தப் பேரழகு, எனது வாய் மூலம் உண்டாகும் சொற்களில் அடங்குமா?

வணங்கினார்க்கு இணையும் எண்ணின் வாசனை யதனான் மீது
வணங்கி யன்பனை நெருங்கும் வாஞ்சையால் புடை சுருங்கி
மணம் கமழ் செண்பகப் பூ மாலையொடு உரை பொன்னென்ன
குணம் கொள் இவ்வண்மை மேனி கூறுதற்கு எளிதோ அம்மா –37-

———-

கருணை நோக்கம் அலை எறியும் திருமுக மண்டலத்துடன் தாமரை மலரில் வீற்று இருக்கும் திரு மகளை
ஒரு நொடிப் போதும் விடாது கண்டு அனுபவிப்போமாக -என்கிறார் –

ஏகம் ந்யஞ்ச்ய நதி க்ஷமம் மம பரம் ச ஆகுஞ்ச்ய பாதாம்புஜம்
மத்யே விஷ்டர புண்டரீகம் அபயம் விந்யஸ்ய ஹஸ்தாம்புஜம்
த்வாம் பச்யேம நிஷேதுஷீம் ப்ரதிகலம் காருண்ய கூலங்கஷ
ஸ்பார அபாங்க தரங்கம் அம்ப மதுரம் முக்தம் முகம் பிப்ரதீம்–ஸ்லோகம் —38 —

ஏகம் ந்யஞ்ச்ய நதி ஷமம் மம பரஞ் சாகுஞ்ச்ய பாதாம்புஜாம் –
அடியேனுக்கு வணங்குவதற்கு தக்கவாறு ஒரு– வலத் –திருவடித் தாமரையை – ந்யஞ்ச்ய – தொங்கவிட்டும்
மற்றொரு -இடத் -திருவடித் தாமரையை -ஆகுஞ்ச்ய -மடித்தும்-
முலை உணாயே-என்னும் தாய் போலே பிராட்டியும் தன் குழந்தை பட்டரை வகுத்த திருவடியைக் காண்பித்து
நீ வணங்காய் என்று அழைக்கின்றனள் போலும் –

மத்யே விஷ்டர புண்டரீம் அபயம் விந்யச்ய ஹஸ்தாம் புஜம் -த்வாம் பச்யேம நிஷேதுஷீம் ப்ரதிகலம்
காருண்யா கூலங்கஷ-ஸ்பார அபாங்க தரங்கம் அம்ப மதுரம் முக்தம் முகம் பிப்ரதீம்–
திருக் கைத் தாமரையை அபயத்தைக் காண்பிக்குமாறு வைத்தும்
தாமரை ஆசனத்தின் நடுவே -நிஷேதுஷீம் -வீற்று இருப்பவளும்
கருணையால் -கூலங்கஷ-கரை புரளுகிற விசாலமான
அபாங்க தரங்கம் -அலை எறியும் கடக் கண் நோக்கம் உடையதும் –
இனிய எழில் உடைய திருமுகத்தை பிப்ரதீம் -தரித்துக் கொண்டு இருப்பவளுமான
த்வாம் ப்ரதிகலம் பச்யேம -உன்னை ஷணம் தோறும் சேவிக்கக் கடவோம்-
பத்மே ஸ்திதாம் பத்ம வர்ணாம் -விகாஸிக கமலேஸ்திதா -என்பார்களே –

பிரதிகலம் -அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதமாய் இருத்தலின் ஒரு நொடியும் விடலாகாது –
அம்பா -குழந்தைக்குத் தாயைக் காண்பது ஆனந்தம் அன்றோ –
பச்யேம -பன்மையில் -மம-வணங்குவது ஒருவரே ஆகிலும் பேற்றில் அனுபவத்தில் எல்லோரையும் கூட்டிக் கொள்கிறார்
அடியேன் செய்யும் விண்ணப்பமே -யாமுறாமை-எனபது போலே-

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! உன்னிடம் அனைவரும் வந்து எளிதாக வணங்கும்படியாக
ஒரு திருவடித் தாமரையை தொங்கவிட்டபடி அமர்ந்துள்ளாய்.
மற்றொரு திருவடியை நன்கு மடித்து அமர்ந்திருக்கிறாய்.
உனது திருக் கைகளை அபயம் என்றும் காண்பிக்கும்படி வைத்துள்ளாய்.
இப்படியாக உள்ள நீ இனிய தாமரை மலரில் அமர்ந்துள்ளாய்.
உனது திருமுகம் எப்படி உள்ளது என்றால் –
கருணை என்னும் அலை வீசி எறியும் கடல் போன்று விளக்கும் கண்கள்,கடைப்பார்வை வீசியபடி உள்ளன;
இனிமையாக உனது திருமுகம் உள்ளது; மிகுந்த எழிலுடன் கூடியதாக உள்ளது.
இப்படிப்பட்ட உன்னை நாங்கள் எப்போதும் வணங்கி நிற்போம்.

இங்கு அம்ப என்ற பதம் காண்க. பட்டர் மிகவும் உரிமையுடன் ஸ்ரீரங்கநாச்சியாரை “அம்மா” என்று அழைக்கிறார்.
என்ன இருந்தாலும் அவள் கையாலேயே தொட்டில் கட்டப்பட்டு சீராட்டப்பட்டவர் அல்லவா?

நளின மலர்த் தாள் ஓன்று நால விட்டு நான் வணங்க மற்றும் ஒரு தாள் மடக்கி
நலிர்க் கமலக் கரமபயம் நல்க வைத்து நாப்பணலர் தாமரை மேல் வீற்று இருப்பாய்
அளி கரையில் பொருவு மகன் கடைக் கண் நோக்கம் அலை எறியு நனியினிய எழில் முகத்தை
களி பெருகக் கணக்கின்றி யன்னாய் உன்னைக் காணும் தோறும் கணம் தோறும் காண்போமியாமே–38–

————

இங்கனம் பிராட்டி எழுந்து அருளி இருக்கும் வீற்றுடைமைக்குத் தோற்றுத் திருவடிகளிலே வணங்குகின்றார்-

ஸுரபித நிகமாந்தம் வந்திஷீய இந்திராயா:
தவ கமல பலாச ப்ரக்ரியம் பாதயுக்மம்
வஹதி யதுபமர்தை: வைஜயந்தீ ஹிமாம்ப:
ப்லுதிபிரிவ நவத்வம் காந்த பாஹாந்தராளே–ஸ்லோகம் —39 —

ஸூ ரபித நிகமாந்தம் வந்திஷீ யேந்திராயா-தவ கமல பலாச ப்ரக்ரியம் பாதயுக்மம் –
பரிமளிக்கும் படி செய்யப்பட வேதாந்தத்தை உடையதும் –
தாமரை இதழினுடைய பிரகாரத்தை உடையதுமான இணையடியை வணங்கக் கடவேன் –
பிராட்டியின் திருவடிகளைப் பற்றிப் பேசுவதனால் வேதாந்தங்கள் சிறப்புறுகின்றன –

தாமரை போன்றவை யாதலால் மணம் கமழச் செய்தன -என்றவாறே
வேத புருஷன் போலே தாமும் திருவடித் தாமரைகளைச் சூடிப் பரிமளிக்க ஆசைப் படுகிறார் -வந்தீஷ்யே –
யன்மூர்த் நிமே ஸ்ருதி சிரஸ் ஸூ சபாதி –பாதாரவிந்த மரவிந்த விலோச நஸய -ஆளவந்தார் –
வந்திஷீய -துதிக்கக் கடவேன் -என்னவுமாம் –

இந்திராயா இதி பரமைச்வர்யே -தாது இந்ததீதி இந்திரா -இறைவனுக்கும் ஈஸ்வரியே
அவன் திரு மார்பில் ஏறி இருப்பதே சிறந்த ஐஸ்வர்யம் –
காசான்யா த்வாம் ருதே தேவி சர்வ யஜ்ஞமயம் வபு அத்யாச்தே தேவதேவச்ய யோகி சிந்த்யம் கதாப்ருத -ஸ்ரீ விஷ்ணு புராணம்
ஏறாளும் இறையோனும் திசை முகனும் திருமேனியில் சில சமயங்களில் இடம் பெறுகின்றனரே யன்றி
திருமகள் போல் நிரந்தரமாக வசிப்பது இல்லையே –
கமல பலாச ப்ரக்ரியம் -மணம் மென்மை-தாமரை இதழை ஒத்த இணையடி -இதழ் போன்ற திரு விரல்கள்
சேர்த்தி அழகை பாத யுக்மம் -என்று அருளிச் செய்கிறார் –

வஹதி யதுபமர்தைர் வைஜயந்தீ ஹிமாம்ப -ப்லுதி பிரிவ நவத்வம் காந்த பாஹாந்த ராளே–
எந்த திருவடியின் துகைத்ததனால் கணவனுடைய திரு மார்பகத்திலே
வன மாலையானது பனி நீரினால் நனைத்தால் களினால் போலே புதுமையை வஹிக்கின்றதோ –
பிராட்டியின் திருவடிகள் துகைத்தாலும் வைஜயந்தி வாடுவது இல்லையாம் –
பனி நீர் தெளித்தால் போலே புதுமை பெறுமாம் –
அவ்வளவு மென்மையும் தண்மையும் வாய்ந்தவை திருவடிகள் –
தேனே மலரும் திருப்பாதம்
பாஹாந்தராளம் -திரு மார்பகத்தை -இரு புறத் தோள்களின் மத்திய ப்ரதேசம்
இலக்குமி இஷ்டப்படி விளையாடித் திரியும்படியான விரிவுடைமை வெளிப்படுத்த இங்கனம் அருளிச் செய்கிறார் –

ஸ்ரீரங்கநாயகி! நீ உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன் திருமார்பில் எப்போதும் அமர்ந்துள்ளாய்.
உனது திருவடிகள் படுவதால், அவன் அணிந்துள்ள வைஜயந்தி என்ற மாலை வாடாமல் உள்ளது;
அதன் மீது குளிர்ந்த நீர் தெளித்தது போன்று எப்போதும் புதிதாகவே உள்ளது.
இப்படிப்பட்ட உனது திருவடிகளைப் போற்றும் வேதாந்தங்கள், மேலும் சிறப்படைந்து மிகுந்த மணம் வீசுகின்றன.
தாமரை மலர் போன்றுள்ள உனது இத்தகைய திருவடிகளை நான் சரணம் என்று வணங்குகின்றேன். (என்னை நழுவ விடாதே).

ஸ்ரீரங்கநாச்சியார் எப்போதும் தனது திருவடிகளை அவனது மாலைகளின் மீது படும்படி வைப்பதாலேயே
அவனது மாலைகள் வாடாமல் உள்ளன என்று கருத்து.

பைந்தொடை பனி நீர் மெய்யும் பான்மையில் மிதித்துப் பல்கால்
மைந்தனின் விரிந்த மார்பில் வைசயந்து இயைய லர்த்தி
இந்திரை மறை யந்தத்தை இன் மணம் புணர்த்தும் பூவின்
சந்தமா ரிதழேய் நின் தன தாளிணை வந்திப்பேனே –39-

பூ -சிறப்புப் பற்றி தாமரை –
பூ வெனப்படுவது பொறி வாழ் பூவே
சந்தமார் -அழகு நிறைந்த
இதழ் ஏய்-இதழ் போன்ற-

————

வணங்கினார் திறத்துச் செலுத்தும் கடாஷத்தின் மகிமை கூறுகிறார் —

த்வத் ஸ்வீகார கலா அவலேப கலுஷா: ராஜ்ஞாம் த்ருச: துர்வசா:
நித்யம் த்வத் மது பாந மத்த மதுப ச்ரீ நிர்பராப்யாம் பதிம்
த்ருக்ப்யாம் ஏவஹி புண்டரீக நயநம் வேத: விதாமாஸ தே
ஸாக்ஷாத் லக்ஷ்மி தவ அலோக விபவ: காக்வா கயா வர்ணயதே?–ஸ்லோகம் —40 —

த்வத் ஸ்வீகார கலாவலேப கலுஷா ராஜ்ஞாம் த்ருசோ துர்வசா –
அரசர்களுடைய கண்கள் உன்னுடைய அங்கீகாரத்தின் -கடாஷத்தின் -லேசத்தினால் உண்டான –
அவலேப -கர்வத்தினாலே
கலுஷா -கலங்கினவைகளாய்-
துர்வசா -வருணிக்க இயலாதவைகளாக ஆகி விடுகின்றன –-செல்வச் செருக்கு தோற்ற கலங்கினவைகள்-

நித்யம் தவன் மதுபான மத்த மதுப ச்ரீ நிர் பராப்யாம் பதிம் –
எப்பொழுதும் நீ யாகிற தேனை குடிப்பதால் மதம் கொண்ட வண்டுகளினுடைய சோபையினால் நிறைந்தவைகளாய்-
இலக்குமியின் எழில் திருமேனியைக் கண்டு கொண்டே அனுபவித்தலினாலே இறைவன் தாமரைக் கண்ணனாக ஆனான் –
பிராட்டி தேன்-இறைவன் கண்கள் வண்டுகள் -தேனை மாந்து உண்டு –மதம் கொண்டு உடல் சிவந்து அசைவற்று நிற்கின்றன –
கண்கள் பிறளாது சிவந்து இருக்கின்றன -விடாதே கண்டு கொண்டே இருத்தலினால் –
பிராட்டி திருமேனி காந்தி பரவிக் கண்கள் சிவந்தன என்னவுமாம் –
கப்யாசம் புண்டரீக ஏவ அஷணீ-பரத்வ சிஹ்னம் -காரண இடுகுறி –

த்ருக்ப்யா மேவஹி புண்டரீக நயனம் வேதோ விதா மாச தே
கண்களினாலேயே அன்றோ உன்னுடைய கணவனை வேதம் தாமரைக் கண்ணனாக தெரிந்து கொண்டது –

சாஷாத் லஷ்மி தவாவலோக விபவ காக்வா கயா வர்ண்யதே —
உனது அவலோக விபவ -கடாஷ வைபவம் எந்த வழியினால் வருணிக்கப் படும் –

ஸ்ரீரங்கநாயகியே! மஹாலக்ஷ்மீ! உனது கருணை மிகுந்த கடாக்ஷம் காரணமாக இந்த உலகில் உள்ள அரசர்கள்
மிகுந்த செல்வம் பெற்று, கர்வம் கொண்டுள்ளனர்.
அவர்களது கண்களில் பார்வையைக் காணவே இயலவில்லை (அத்தனை கர்வம் உள்ளது).
உனது கணவனான ஸ்ரீரங்கநாதனின் கண்கள், கருவண்டுகள் போன்று
உன்னைத் தேனாக நினைத்து எப்போதும் உன்னையே மொய்த்தபடி உள்ளன.
இதனால் அவனது கண்கள் சிவந்து விட்டன.
இதன் மூலமாக மட்டுமே வேதங்கள் அவனை செந்தாமரைக் கண்ணன் (புண்டரீகாக்ஷன்) எனப் புகழ்ந்தன போலும்.
இப்படியாக பல பெருமைகள் கொண்ட உனது திருக் கண்களை நான் எவ்வாறு வர்ணிக்க இயலும்?

நம்பெருமாள் இவளைப் பார்த்தபடி உள்ளதால் அவனது கண்கள் சிவந்து விடுகின்றன.
இதனால் வேதங்கள் அவனைச் செந்தாமரைக் கண்ணன் என்றன.
ஆக, அவளால் இவன் பெயர் எடுப்பது மீண்டும் ஒருமுறை கூறப்பட்டது.

நீ சிறிதே கடைக் கணிப்ப நிருபர் கண்கள் நிலவு மதத்தால் கலங்கி நிலமே யல்ல
பேசிடற்குன் பத்தி கண்கள் நாளும் நீயாம் பிரசத்தைப் பருகி மதம் பிடித்த வண்டின்
தேசுடனே திகழுவதால் அவனை வேதம் செங்கமலக் கண்ணன் எனத் தெரிந்தது அன்றே
பேசுவது இங்கு இலக்குமியே நேரே நின் தன் பீடு பெறு பார்வையினை எவ்வாறோ தான் -40–

பிரசம் -தேன்

———–————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திரு மலை நல்லான் ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: