ஸ்ரீபராசரபட்டர்–அருளிச் செய்த -ஸ்ரீ குண ரத்ன கோஸம்- ஸ்ரீ ஸூவர்ண குஞ்சிகா–ஸ்லோகங்கள் —25-26-27-28—

அம்மண்டபத்திலே பிராட்டி பெருமாளுடன் திருவனந்தாழ்வான் மீது வீற்று இருந்து
இன்பம் பயப்பதை அருளிச் செய்கிறார் –

தத்ர ஸ்ரக் ஸ்பர்ச கந்தம் ஸ்புரத் உபரி பணாரத்ந ரோசி: விதாநம்
விஸ்தீர்ய அநந்த போகம் ததுபரி நயதா விச்வம் ஏகாத பத்ரம்
தை: தை: காந்தேந சாந்தோதித குண விபவை: அர்ஹதா த்வாம் அஸங்க்யை:
அந்யோந்ய அத்வைத நிஷ்டா கநரஸ கஹநாந் தேவி பத்நாஸி போகாந்–ஸ்லோகம் –25-

தத்ர ஸ்ரக் ஸ்பர்ச கந்தம் ஸ்புரத் உபரி பணாரத்ந ரோசி: விதாநம்-
பூமாலை -குளிர்ச்சிக்கு-மென்மைக்கு மணத்துக்கு உபமானம் –
மேலே விச்தீர்ய-பரப்புடைமை
உபரி -உயர்த்தி
ஸூ தாமருசி ம்ருதிம ஸூ கந்தி -ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம்
பணங்களின் ரத்ன ஒளியாலே மேல்கட்டி –
சுடர் பாம்பனை நம் பரனைத் திருமாலை -இனத்துத்தி யணி பணம் ஆயிரத்தின் கீழே -இருப்பவன் அன்றோ இறைவன்-

விஸ்தீர்ய அநந்த போகம் ததுபரி நயதா விச்வம் ஏகாத பத்ரம்-
திருமேனியை விரித்து அதன் மீது அமருகின்றான் –
நாந்தம் குணா நாம் கச்சந்தி தேவா நன்தோய முச்யதே -என்றபடி குணங்களுக்கு அந்தம் இல்லாமை பற்றி அனந்தன்
ரஷகத்வாதி குணங்களுக்கு அந்தம் இல்லாமை பற்றி இறைவன் அநந்தன்
கைங்கர்ய குணங்கள் அந்தம் இல்லாமை பற்றி ஆதிசேஷன் அநந்தன்
கால தேச வஸ்து அபரிச்சேத்யனை தன்னிடம் கொண்டமையாலும் அநந்தன் –
வங்கமலி தடம் கடலுள் அநந்தன் என்னும் வரி யரவின் அணைத் துயின்ற மாயோன் -பெரிய திருமொழி -7-8-1-
கொற்றக் குடையின் கீழ் உலகை நடாத்துவதற்கு வீற்று இருந்து அருளுகிறான்
ஏகாத பத்ரம் -அத்விதீயன் என்பதால் குடையும் ஒன்றே யாயிற்று
விஸ்வ மேகாத பத்ரயிது மச்மத ஸூன் நிஷண்ணம்-ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம் –

தை: தை: காந்தேந சாந்தோதித குண விபவை: அர்ஹதா த்வாம் அஸங்க்யை:-
காந்தேன -காதலன் -அழகன் என்றுமாம் –
சாந்தோதித தசை -பர வாஸூ தேவனுக்கு
நித்யோதித தசை -வ்யூஹ வாஸூ தேவன்

அந்யோந்ய அத்வைத நிஷ்டா கநரஸ கஹநாந் தேவி பத்நாஸி போகாந்–அன்பு விஞ்சி ஒருவரே என்னலாம் படி அன்யோன்யம்
அஹந்தா ப்ரஹ்மணச் தஸ்ய -எல்லா உயிர்களுக்கும் ஆத்மாவாய்-நான் என்னலாம் படியான இறைவன் உடைய
அஹந்தை -நான் என்பதன் தன்மை -வடிவாய் உள்ளவள் பிராட்டி யாதலின்
பிரிக்க ஒண்ணாத படி ஒன்றி இருக்கும் அத்வைத நிஷ்டை –
சமரசமாய் இருக்கும் நிலையினாலே பேரின்பம் மிக்க போகங்களை விளைக்கின்றாள் பிராட்டி-

உலகை நடாத்துகிற -அடை மொழியால் ரஷகத்வம் இறைவனுக்கே -என்றும்
பிராட்டி துணை புரிபவள் என்றும் விளங்கும்
லஷ்ம்யா சஹ ஹ்ருஷீகேச ரஷக -பிராட்டியின் சஹாயமும் இறைவனது ரஷித்தலும் கூறப்படும் –
சஹாயமாவது புருஷகாரமாக இருத்தல்
ரஷித்தலில் பிரதான்யம் பிராட்டிக்கு இல்லை என்றாலும்
போகத்தில் ப்ரதான்யம் விளக்க –காந்தேன போகான் பத்நாசி-என்றார் –

இப்படியாக நீ அமர்ந்துள்ள மண்டபத்தில் ஆதிசேஷன் எப்படி விளங்குகிறான் என்றால் –
அவனது உடலானது மலர் மாலைகள் போன்று மென்மையாகவும், நறுமணம் வீசுவதாகவும் உள்ளது;
அவனது படத்துடன் கூடிய தலைகளில் ஒளிர்கின்ற இரத்தினக் கற்கள், மேல் விதானம் விரித்தது போன்று உள்ளது –
இப்படியாக விரிந்த உடலையும் கவிழ்க்கப்பட்ட குடை போன்ற தலைகளையும் ஆதிசேஷன் கொண்டுள்ளான்.
அதன் மீது கம்பீரமாக நம்பெருமாள் அமர்ந்து இந்த உலகத்தை வழி நடத்தியபடி உள்ளான்.
அவனது திருக்கல்யாண குணங்கள் எண்ணற்றவையாகவும், அதிசயங்கள் நிரம்பியவையாகவும் உள்ளன.
இதனால் அன்றோ அவன் உனக்குத் தகுந்தவனாக உள்ளான்?
இப்படியாக நீ உனது மனதிற்குப் பிடித்த நம்பெருமாளோடு ஒன்றாகவே உள்ளாய்.
நீங்கள் இருவரும் அன்யோன்யமான திவ்ய தம்பதிகளாகவே உள்ளீர்கள்.
இப்படியாக அல்லவா நீ போகங்களை அனுபவிக்கிறாய்?

ஓர் ஆஸனத்திற்கு வேண்டிய தன்மைகளாவன மென்மை, நறுமணம், குளிர்ச்சி, பரப்பு, உயர்த்தி என்பதாகும்.
இவை அனைத்தும் ஆத்சேஷனிடம் உள்ளதாகக் கூறுகிறார்.
ஒன்றை ஒன்று பிரியாமல் உள்ள நிலைக்கு அத்வைத நிஷ்டை என்று பெயர். இதனை இங்கு கூறுவது காண்க.
ஆக, நம்பெருமாள் இந்த உலகத்தைக் காத்து நிற்க, இவள் அவனுக்குத் துணையாக நிற்பதாகக் கூறினார்.

பூந்தெரியல் போல மண குணம் பொலிந்த பொங்கு மணி யொளி மேலாப் புடைய நந்தப்
பாந்தளுடல் விரித்ததன் மேல் வீற்றிருந்து பல்லுலகு மொரு குடைக் கீழ்ப் பட நடாத்திச்
சாந்தமுடன் தானுகரும் தனதெண் சாந்தோதித குணங்களானிற் கேற்கும்
காந்தனுடன் அங்கு ஒருவருக்கு ஒருத்தர் தேவி கலந்தொன்று தலிற் கனிவான் போகம் சேர்த்தி –25-

பாந்தள் -பாம்பு
கனிவான் போகம் -ரசம் கனிந்த சிறந்த அனுபவம் –

பூந்தெரியல் போல மண குணம் பொலிந்த பொங்கு மணி யொளி மேலாப் புடைய நந்தப்
பாந்தளுடல் விரித்ததன் மேல் வீற்றிருந்து பல்லுலகு மொரு குடைக் கீழ்ப் பட நடாத்திச்
சாந்தமுடன் தானுகரும் தனதெண் சாந்தோதித குணங்களானிற் கேற்கும்
காந்தனுடன் அங்கு ஒருவருக்கு ஒருத்தர் தேவி கலந்தொன்று தலிற் கனிவான் போகம் சேர்த்தி –25-

பாந்தள் -பாம்பு
கனிவான் போகம் -ரசம் கனிந்த சிறந்த அனுபவம் –

———-

பிராட்டி போல் இன்னம் பல தேவியர்கள் உளர் எனினும்
சமரசத் தன்மைக்குச் சிறிதும் குறை இல்லை –
மேலும் அது பெருகுவதற்கே உறுப்பாம் -என்கிறார் –

போக்யா வாமபி நாந்தரீயகதயா புஷ்ப அங்கராகைஸ் ஸமம்
நிர்வ்ருத்த ப்ரணய அதிவாஹந விதௌ நீதா: பரீவாஹதாம்
தேவி த்வாம் அநு நீளயாஸஹ மஹீ தேவ்ய: ஸஹஸ்ரம் ததா
யாபி: த்வம் ஸ்தந பாஹு த்ருஷ்டி பிரிவ ஸ்வாபி: ப்ரியம் ச்லாகஸே.–ஸ்லோகம் –26-

போக்யா வாமபி நாந்தரீயகதயா புஷ்ப அங்கராகைஸ் ஸமம் -திவ்ய தம்பதிகள் யாவர்க்கும் போக்ய பூதர்
வாம்பி -நும் இருவருக்கும்
புஷ்ப பூவிற்கும்
அங்காரகைஸ் சமம் -பூசும் சாந்திற்கும் சமமமாக
நாந்தரீயக தயா -இன்றியமையாதது -அந்தரா பாவம் அந்தரீயம்
போக்யா -இனியர்களும் -அசேதனம் போலே பாரதந்தர்ய நிலை
அந்த திவ்ய தம்பதிகளுக்கும் போகர் ஏனைய தேவியர்கள் –
போக்யதையில் பிராட்டிக்கே பிரதான்யம் என்றதாயிற்று -போக்யதையில் தரித்து நிற்க இதர தேவியர் –

நிர்வ்ருத்த பிரணய அதி வாஹன விதௌ நீதா பரீவாஹதாம்-பிரணய ரசப் பெரு வெள்ளம் இத்தேவியர் வாயிலாக வெளியேறும்

தேவி த்வாம் அநு நீளயா ஸஹ மஹீ தேவ்ய: ஸஹஸ்ரம் ததா –
த்வாம் அநு-என்பதால் பெரிய பிராட்டிக்கு பூமிப் பிராட்டி அடங்கி இருத்தலும்
நீளயா சஹ-என ஒரு உருபு கொடுத்து பேசுவதால் பூமிப் பிராட்டிக்கு நீளா தேவி அடங்கி இருத்தலும் தோற்றும்
குழல் கோவலர் மடப்பாவையும் மண் மகளும் திருவும் பட்ட மகிஷிகள்-

யாபிஸ் த்வம் ஸ்தன பாஹு திருஷ்டி பிரிவ ஸ்வாபி ப்ரியம் ச்லாகசே – தனது அவயவங்கள் போல்வார் –
தழுவினால் பெரும் மகிழ்ச்சி அடைவாள் –பரஸ்பரம் அசூயை இடமில்லை-

திருமகளும் மண் மகளும் ஆய்மகளும் சேர்ந்தால்
திருமகட்கே தீர்ந்தவாறு என் கொல்-திருமகள் மேல்
பாலோதம் சிந்தப் பட நாகணைக் கிடந்த
மாலோத வண்ணர் மனம் -பொய்கையார் –

அழைக்கும் கருங்கடல் வெண்டிரைக்கே கொண்டு போயலர் வாய்
மழைக்கண் மடந்தை யரவணை ஏற மண் மாதர் விண் வாய்
அழைத்துப் புலம்பி முலை மலை மேனின்று மாறுகளாய்
மழைக் கண்ண நீர் திருமால் கொடி யான் என்று வார்கின்றதே –திரு விருத்தம் –

அநுப பன்னமாய் இருப்பதொரு அர்த்தத்தை சொல்லவே இது எங்கனே கூடும்படி என்று தலைமகள் நெஞ்சிலே படும்
அவள் விசாரித்து நிர்ணயிக்கும் காட்டில் அவன் வந்து கொடு கிற்கும் என்னும் விஸ்ரம்பத்தாலே -நம்பிக்கையாலே –
சொன்னார்களாக அமையும் காண் -என்று பட்டர் அருளிச் செய்தார் -வியாக்யான ஸ்ரீ ஸூக்திகள் –

தேவீ! ஸ்ரீரங்கநாயகீ! மனம் ஒருமித்த தம்பதிகளின் இனிமையை சாந்து, சந்தனம், மலர்கள் ஆகியவை அதிகரிக்கும் அன்றோ?
அது போல நீயும் நம்பெருமாளும் இணைந்துள்ள போது, உங்கள் இன்பத்தை மேலும் அதிகரிக்கும்படியாக
நீளாதேவியும், பூதேவியும் மற்றும் ஆயிரக்கணக்கான தேவிகளும் உள்ளனர்.
ஒரு குளத்தில் நிரம்பியுள்ள நீரை வெளியேற்றினால் அன்றோ குளம் பெருமையும் பயனும் பெற்று நிற்கும்.
இதுபோல இவர்கள் அனைவரும் உங்கள் இருவரின் காதலைத் தங்கள் வழியாக அனைவருக்கும் வெளிப்படுத்துகின்றனர்.
இப்படியாக உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன் மற்ற தேவியருடன் உள்ளபோதும் நீ மகிழ்ந்தே உள்ளாய்.
அவர்கள் உனது நாயகனை அணைத்துக் கொள்ளும் போது, உனது உடல் உறுப்புகளாக மாறியே இவர்கள்
அணைத்துக் கொள்கின்றனர் என்று நீ நினைக்கிறாய் அல்லவோ?
அவர்கள் உனது கைகள் போன்றும், ஸ்தனங்கள் போன்றும், கண்கள் போன்றும் விளங்க –
இப்படியாக நீ உனது ப்ரியமான நம்பெருமாளை மகிழ்விக்கிறாயா?
இங்கு மற்ற தேவிமார்கள் அனைவரும் ஸ்ரீரங்கநாச்சியாரின் அவயவங்களே என்று கூறுகிறார்-

இருவீர்க்கும் அனுபவித்தற்கு இனியராகி இன்றியமையாது மலர் சாந்து போலப்
பெருகார்க்கும் பிரேமத்தின் வெள்ளம் கேடு பிறப்பியாவாறு அமைத்த மறு காலாய் நின்
பொருவார்க்கும் புவி மடந்தை யோடு நீளை போன்ற வாயிரந்தேவி மார்கள் உள்ளார்
இருபார்க்கும் விழி கொங்கை கொண்டென்ன ஏந்தலை நீ யவராலின் புறுத்தி தேவி -26-

———–

இங்கனம் ச பத்நிகளைக் கூறி பணிவிடை செய்வோரைக் கூறுகிறார் —

தே ஸாத்யா: ஸந்தி தேவா ஜநநி குண வபு: வேஷ வ்ருத்த ஸ்வரூபை:
போகைர்வா நிர்விசேஷா: ஸவயஸ இவயே நித்ய நிர்தோஷ கந்தா:
ஹே ஸ்ரீ: ஸ்ரீரங்கபர்த்து: தவச பத பரீசார வ்ருத்யை ஸதாபி
ப்ரேம ப்ரத்ராண பாவ ஆவில ஹ்ருதய ஹாடாத் கார கைங்கர்ய போகா:–ஸ்லோகம் –27-

தே சாத்யாஸ் ஸந்தி தேவா -வேத வாக்யத்தை அப்படியே கையாண்டபடி -சாத்யா-எனபது நித்ய ஸூரிகளின் பெயர்
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -முமுஷுக்கள் இவர்கள் சாத்யர் என்பதால் இப் பெயராயிற்று –
ஜனனி குண வபுர் வேஷ வ்ருத்த ஸ்வரூபை போகைர்வா –
ஜனனி -தாயே என்று விளித்து-
அபஹத பாப்மத்வம் முதலிய குணங்களில் சாம்யம் -திவ்ய மங்கள விக்ரஹம் -வடிவத்தில் சாம்யம் –
கோலம் -சங்காழி ஏந்தி-தொண்டுக்கே கோலம் பூண்டு – -நடத்தை கன்மங்களுக்கு வசப்படாமை
ஸ்வரூபம் ஞானானந்த அமலத்வாதி ஆத்ம ஸ்வரூபம்-
சேஷித்வம் சேஷத்வம் ஒன்றே வாசி அவனுக்கும் இவர்களுக்கும் –
போகம் -விபூதியுடன் கூடிய பரமாத்ம ஸ்வரூபத்தை சாஷாத் கரித்தல்-

சவயச -ஒத்த பருவம் சமானமான வயசு பஞ்ச விம்சதி வ்ருஷர்கள்-நிரஞ்சன பரமம் சாம்யம் -சத்ய சங்கல்பத்தால் பெற்றது –
எனக்கு தன்னைத் தானே தந்த கற்பகம் –

நிர்விசேஷாஸ் சவயச இவயே நித்ய நிர்தோஷ கந்தா -கீழ் சொன்னவை முக்தர்களுக்கும் ஒக்கும்
இங்கு நித்யர்களுக்கே உண்டான சிறப்பு -என்றுமே குற்றம் அற்றவர்கள் அன்றோ
தூ மணி மாடம் நித்யர்கள் -துவளில் மா மணி மாடம் -தோஷம் இருந்து நீக்கப் பட்டது போலே முக்தர்கள் –
தோஷம் க்லேச கர்ம விபாகாசயங்கள் -ஹதாகில க்லேச மலை ஸ்வபாவாத -ஆளவந்தார் –
1-அவித்யா ஸ்மிதா ராக த்வேஷாபிநிவேசா க்லேசா -கிலேசம்
அஞ்ஞானம் –தேஹாத்ம அபிமானம் -யானே என் தனதே என்று இருந்தேன் –
அது அடியாக அஹங்காரம் –ராகம் -த்வேஷம் –அபி நிவேசம் -கிலேசங்கள்
2-கர்மம் இவற்றுக்கு காரணமான புண்ய பாபங்கள்
3-விபாகம் -ஜாதி ஆயுள்–இவற்றால் வரும் விபாகங்கள்-
4-ஆசயம் -முன்னைய அனுபவத்தால் உண்டான மனத்தின் கணுள்ள சம்ஸ்காரம்-
ஸூபம் -அன்று -ஸ்ரீ கூரத் தாழ்வான்-ஆழ்வானை இழந்தோம் -என்ற கிலேசம் -வேண்டாம் –
நம்மையே நினைத்து இரும் என்றான் நம் பெருமாள்
பூர்ண -ஆயுசு கேட்டாராம் ஸ்ரீ பட்டருக்கு எம்பெருமானார் -பதில் அருளால் தீர்த்தம் பிரசாதித்து அனுப்பினாராம் -ஐதீகம்

ஹே ஸ்ரீ ஸ்ரீ ரங்க பர்த்து ஸ்தவ ச பதபரீ சாரவ்ருத்யை சதாபி -ப்ரேம ப்ரத்ராண பாவா விலஹ்ருதய ஹடாத் கார கைங்கர்ய போகா —
இவை இறைவனுக்கும் இல்லாத கைங்கர்ய பரர்களுக்கே கைங்கர்ய மஹா ரசம் உள்ளது என்கிறது –
அனுபவ ஜநிதி ப்ரீதி காரித கைங்கர்யம் –
அன்பினால் உருகிச் சித்த வருத்தி கலங்கிச் செய்தல்லது நிற்க ஒண்ணாது நெஞ்சாரச் செய்யும் கைங்கர்யம் –
பலாத்க்ருத்ய –தூண்டப்பட்டு -இன்பம் பயக்கும் திருமாலுக்கு என்றே யாட்செய்ய –
அடிமை செய்வர் திருமாலுக்கே -என்பதால் ஸ்ரீ ரங்க நாதனுக்கும் உனக்கும் -என்கிறார்-
திருவடிகளில் கைங்கர்ய வ்ருத்தி-வாழ்ச்சி தாளிணைக் கீழ் அன்றோ-

அனைவருக்கும் தாயானவளே! ஹே மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ!
ஸாத்யர் என்று வேதங்களில் கூறப்படும் நித்ய ஸூரிகள் – உனது குணங்களில் இருந்து மாறுபடாமல் உள்ளவர்கள்;
மேலும் அவர்கள் உனது வடிவத்திலும் மனம் ஒத்து நிற்பவர்கள்; தங்கள் கோலங்களாலும் செயல்களாலும்
உனக்குப் பொருந்தி உள்ளவர்கள்; அவர்கள் உங்கள் இருவருக்கும் நண்பர்களாக உள்ளனர்; குற்றம் இல்லாமல் உள்ளனர்;
என்றும் உங்கள் மீது உள்ள அன்பு மாறாமல், அந்த அன்பு காரணமாகக் கலங்கிய உள்ளத்துடன் இருப்பவர்கள்;
உனக்குப் பணிவிடைகளைச் செய்வதில் விருப்பம் உள்ளவர்கள் –
இப்படிப்பட்ட இவர்கள் ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளிலும் உனது திருவடிகளிலும் என்றும் தொண்டு புரியவே உள்ளனர்.

கோலத்தில் பொருத்தமாக இருத்தல் என்றால் நம்பெருமாளைப் போன்றே நான்கு திருக்கரங்களுடன் இருத்தல்.
செயல்களில் பொருத்தம் என்றால் இவர்களைப் போன்றே நித்ய ஸூரிகளும் கர்ம வசப் படாமல் இருத்தல்.

உற்றார் போனட்புரிமை யுடலம் கோலம் உயிரினிலை செயல் போகம் பண்பொடு ஆண்டில்
சற்றேனும் மாறின்றிக் குற்றம் என்றும் சாராது சாத்திய தேவர்கள் என்னப்
பெற்றார்கள் உள்ளுருகிக் குழம்பி எண்ணம் பிரேமையினால் பெறுவித்த பணியின் புற்றோர்
குற்றேவற்கு ளரன்றோய் திருவே என்றும் குளிரரங்கக் கோனொடுந்தன் குரை கழற்கே –27

அன்பு செய்வித்தது -பிரேமையினால் செய்வித்த பணி -ப்ரீதி காரித கைங்கர்யம்
குற்றேவற்கு என்றும் உளர் என்று அந்வயம்-

———–

பிராட்டி இன்றி இறைவனை நிரூபிக்க முடியாது -என்கிறார்-

ஸ்வரூபம் ஸ்வாதந்த்ர்யம் பகவத: இதம் சந்த்ர வதநே
த்வத் ஆச்லேஷ உத்கர்ஷாத் பவதிகலு நிஷ்கர்ஷ ஸமயே
த்வம் ஆஸீ: மாத: ஸ்ரீ: கமிது : இதமித்தம்த்வ விபவ:
தத் அந்தர் பாவாத் த்வாம் ந ப்ருத கபிதத்தே ச்ருதி: அபி–ஸ்லோகம் –28-

ஸ்வரூபம் -இது -இதம் அம்சத்தைக் காட்டும்
ஸ்வா தந்த்ர்யம் -இத்தம் இனையது அம்சத்தைக் காட்டும்-மற்றவற்றுக்கும் உப லக்ஷணம்
ஸ்வா தந்த்ர்ய ரூபா சா விஷ்ணோ -அஹிர்புத்ன்ய சம்ஹிதா பிரமாணம் –

பகவத இதம் சந்தர வதநே -மதி முகம் வாய்ந்த தாயே –
த்வத் ஆச்லேஷ உத்கர்ஷாத் -ஆச்லேஷத்திற்கு உத்கர்ஷமாவது பிரிக்க முடியாத தத்வமாய் இருத்தல் –
பவதிகலு நிஷ்கர்ஷ ஸமயே-நிஷ்கர்ஷமாவது ஒன்றாயுள்ள திவ்ய தம்பதிகளின் தன்மையை அறுதி இட்டுப் பார்த்தல் –

த்வம் ஆஸீ: மாத: ஸ்ரீ: கமிது : இதமித்தம்த்வ விபவ:தத் அந்தர் பாவாத் த்வாம் ந ப்ருத கபிதத்தே ச்ருதி: அபி –
தர்மியைச் சொன்ன போதே தர்மமும் அதனுள் அடங்கும் அன்றோ–
த்வாம் அபி –ஸ்ருதிர் அபி -என்று கூட்டி –
நாராயண பரம் ப்ரஹ்ம சக்திர் நாராயணீ சசா வியாபிகா பதி சம்ச்லேஷாத்
ஏக தத்வமிவ ஸ்த்திதௌ-அஹிர்பித்ன்யா சம்ஹிதை இதையே காட்டும் –

ப்ருதக் நாபிதத்தே -சுருதி விஷ்ணு பத்னீ -அவனை இட்டே இவளைக் கூறும்
விசேஷணமாக இவள் இருத்தலால் -அவனையும் லஷ்மி பதியே என்று கூறும் –

இன்னார் இனையார் என்னும் தன்மை உன்னை வைத்தே –
பேணிக் கருமாலைப் பொன்மேனி காட்டா முன் காட்டும் திருமாலை நாங்கள் திரு —
அவனது ஸ்வரூப நிரூபிகை இவளே -இன்னார் என்று காட்ட
நிரூபித்த ஸ்வரூப விசேஷணம்-இனையார் -என்று விவரிக்கும்
நிலாவும் மதியும் போலே -பிராட்டியைப் பிரிந்த தனி நிலை இல்லையே –

ப்ரபேவ திவசே சஸ்ய ஜ்யோத்ஸ்நேவ ஹிமதீதிதே
அஹன்தையா வி நாஹம் ஹி நிருபாக்க்யோ நசித்யதி
அஹந்தா ப்ரஹ்மணச் தஸ்ய சாஹ மஸ்மி
அஹமர்த்தம் விநாஹந்தா நிராதாரா நசித்யதி –ஸ்ரீ லஷ்மீ தந்திரம் –

நானே அப் பரம் பொருளுக்கு அஹந்தையாய் உள்ளேன் என்கிறாளே –
ஒன்றுக்கு ஓன்று ஆதார ஆதேய பாவம் -அஹம் அவன் -அகந்தை இவள் -பிரித்து சொல்ல இடம் இல்லை
பிரபை பிரபவான் –ரத்னம் ஓளி –புஷ்பம் மணம்- போலே அன்றோ -விஷ்ணு பத்னீ –

சந்திரனைப் போன்ற குளிர்ந்த முகம் உடையவளே! தாயே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ!
நன்றாக ஆராய்ந்து பார்த்தால் உனது கணவனான ஸ்ரீரங்கநாதனின் ஸ்வரூபம், திருக்கல்யாண குணங்கள்
போன்றவை உனது தொடர்பு அவனுக்கு உள்ளதால் அல்லவோ உண்டாகிறது?
இப்படியாக உனது கணவனுடைய ஸ்வரூபமாகவும், இனிய குணங்களாகவும் நீயே விளங்குகின்றாய்.
வேதங்கள் இதனை நன்கு உணர்ந்துள்ளன.
அவை உன்னை நம்பெருமாளின் ஸ்வரூபமாகவும், திருக்கல்யாண குணங்களாகவும் கண்டன.
ஆகவே தான் அவை உன்னைத் தனியே ஓதவில்லை போலும்!

ஸ்வாமி பிள்ளைலோகாசார்யார் முமுக்ஷுப்படியில் – பிரித்து நிலையில்லை (45) என்றும்,
ப்ரபையையும் ப்ரபாவானையும் புஷ்பத்தையும் மணத்தையும் போலே (46) என்றும் அருளிச் செய்தார்.

இதே கருத்தை ஸ்வாமி தேசிகன் –
இன்னமுதத் திருமகள் என்றிவரை முன்னிட்டு எம்பெருமான் திருவடிகள் அடைகின்றேன் – என்றார்.

இந்த விறைமை யுரிமை எம்பிராற்கே யிறுக்கமா நீ தழுவும் ஏற்றத்தாலே
வந்தனவாம் இவை தம்மை மனத்தில் எண்ணி வரையறுக்கப் புகின் மலரின் மகளே தாயே
இந்துமுகி யேந்தலுடை யிதுவாம் தன்மை இனையதாம் தன்மையவாம் ஏற்றமாவாய்
அந்த முறை யடங்குதலால் அவனுக்குள்ளே அருமறையும் உன்னை வேறாய் அறைந்ததில்லை–28–

—————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திரு மலை நல்லான் ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: