ஸ்ரீபராசரபட்டர்–அருளிச் செய்த -ஸ்ரீ குண ரத்ன கோஸம்- ஸ்ரீ ஸூவர்ண குஞ்சிகா– ஸ்லோகங்கள் –21-22-23-24–

விளையாட்டிற்கு உபயோகப்படும் இந்த லீலா விபூதி மாத்திரம் அன்று –
நித்ய விபூதியும் பிராட்டிக்காகவே உள்ளது என்கிறார் –
இத்தாலும் முந்தின ஸ்லோகத்தாலும் பிராட்டியினுடைய உபய விபூதி யோகமும் கூறப்பட்டதாயிற்று –

யத் தூரே மநஸ: யத் ஏவ தமஸ: பாரே யத் அதயத்புதம்
யத் காலாத் அபசேளிமம் ஸுரபுரீ யத் கச்சத: துர்கதி:
ஸாயுஜ்யஸ்ய யத் ஏவ ஸூதி: அதவா யத் துர்க்ரஹம் மத் கிராம்
தத் விஷ்ணோ: பரமம் பதம் தவக்ருதே மாத: ஸமாம்நாஸிஷு:–ஸ்லோகம் -21-

தபசேளிமம் -முதுமை அடையாததோ
மத்கிராம் துர்க்ரஹம் -என் சொற்களுக்கு எட்டாததோ
தவக்ருதே மாதஸ் சமாம் நாஸிஷூ -உனக்காக என்றே ஓதினார்கள் –
யத் -வாக்யம் தோறும் தனித் தனியே கூறியது தனித் தனி லஷணம் என்று தோற்ற

யத்தூரே மனசோ -வாக்குக்கும் எட்டாமைக்கும் இது உப லஷணம் -மனத்தோடு வாக்கும் மீளுகின்றன -சுருதி

யதேவ தமஸ பாரேய -தம ரஜ குணச் சொற்களால் பிரக்ருதியை சுருதி காட்டும் –
யதேவ பரமம் தம்ஸ பரஸ்தாத் -பிரகிருதி சம்பந்தம் சிறிதும் அற்றது என்றபடி

தத்யத்புதம் -அதி ஸூ ந்தரம் அத்புதஞ்ச -ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் –

யத்காலா தபசேளிமம் -ந காலச் தத்ர வை பிரபு -காலாதிகா -காலத்தை அதிக்ரமித்தது –
சாயுஜ்யஸ் யாஸூதி -சாயுஜ்யத்துக்கு பிறப்பிடம் -சாயுஜ்யம் உஜ்ஜ்வல முசந்தி யதாபரோஷ்யம்
சாலோக்யம் லீலா விபூதியில் ஸ்ரீ விஷ்ணு லோகத்தில் பெறலாம் –
சாயுஜ்யத்தை பரம பதத்திலே பெறலாம் என்பதால் யதேவ -என்கிறார் –

ரதவா யத் துர்க்ரஹம் மத்கிராம் -சிறப்பாக பிராட்டியின் மதுரமான கடாஷத்தினால்
சிறந்த கவி வாணனான என்னாலும் பேச முடியாதது -பேசித் தலைக் கட்டப் போகாது என்னவுமாம் –
வாசோயதீய விபவச்ய திரச்க்ரியாயை -பேசப் புகின் பரமபதத்தின் மகிமையைக் குறைத்ததாகும் -கூரத் ஆழ்வான்

தத்விஷ்ணோ பரமம் பதம் தவக்ருதே மாதஸ் சமாம் நாஸிஷூ –
வைகுண்டே து பரே லோகே ஸ்ரியா சார்த்தம் ஜகத்பதி ஆஸ்தி

தாயே! ஸ்ரீரங்கநாயகி! அந்த இடம் மனத்தால் கூட நினைக்க இயலாத தொலைவில் உள்ளது;
அந்த இடம் மிகுந்த வியப்பை அளிக்க வல்லது;
அந்த இடம் காலத்தினால் கட்டப்பட்டு முதுமை என்பதையே அடையாமல் என்றும் உள்ளது;
அந்த இடத்தை நோக்கிச் செல்லும் மோக்ஷம் பெற்ற ஒருவனுக்கு, உயர்ந்த தேவர்களின் நகரமான அமராவதி நகர் கூட நரகமாகக் காட்சி அளிக்கும்;
அந்த இடம் முக்தி என்ற உன்னதமான நிலையின் இருப்பிடம் ஆகும்;
அந்த இடம் எனது கவிதைச் சொற்களால் எட்ட முடியாததாக உள்ளது;
அந்த இடம் ஸ்ரீமந்நாராயணனின் இருப்பிடமாகவும் உள்ளது –
இப்படிப்பட்ட உயர்ந்ததான பரமபதத்தை உனக்குரிய இடமாக அல்லவா பெரியவர்கள் கூறினார்கள்?

இந்தச் ச்லோகத்தில் பரமபதம் ஸ்ரீரங்கநாச்சியாருக்கே உரியது என்றார்.
இவளது பதியாக உள்ளதால், இந்த இடம் நம்பெருமாளுக்கு வந்தடைந்தது என்று மறைமுகமாகக் கூறினார்.

எது மனதுக்கு எட்டாது தமசுக் கப்பால் எது வியப்புக்கு உரியது எது காலத்தாலே
எது மாறாது எதனை அடைகின்றானுக்கே இமையோரின் எழில் நகரும் நரகாய்த் தோற்றும்
எது சாயுச்சயம் அளிப்பது ஈது நிற்க என் பேச்சுக்கு எது நிலமே யன்றோ மாயோ
னதுவான வப் ப்ரம பதமும் கூட அன்னாய் நின் தனக்கு என்றே ஒதினாரே –21-

———

கீழ்க் கூறிய உபயவிபூதிகளும் அவற்றில் உள்ள எல்லாப் பொருள்களும் –
இறைவனும் -பிராட்டியின் பரிகரங்கள்-என்கிறார் –

ஹேலாயாம் அகிலம் சராசரம் இதம் போகே விபூதி: பரா:
தந்யா: தே பரிசாரகர்மணி ஸதா பச்யந்தி யே ஸூரய:
ஸ்ரீரங்கேச்வர தேவி கேவல க்ருபா நிர்வாஹ்ய வர்கே வயம்
சேஷித்வே பரம: புமாந் பரிகரா ஹ்யேதே தவ ஸ்பாரணே–ஸ்லோகம் -22-

அகிலம் சராசர மிதம் ஹேலாயாம் —சமஸ்தமான ஜங்கமும் ஸ்தாவரமுமான இவ்வுலகம் உனது விளையாட்டில் உபயோகப் படுகின்றது –
கண் எதிரே காட்டுதலால் இதம் -என்று இதன் விசித்திர தன்மையையும்
அகிலம் என்றதால் அதன் பெருமையையும்
பிராட்டியின் லீலையும் விசித்ரமாய் மஹத்தாய் உள்ளது எனக் காட்டினார் ஆயிற்று

பரா விபூதி போகே -மேலான நித்ய விபூதியானது போகத்தில் உபயோகப் படுகின்றது -மும்மடங்கு பெரியது
சுத்த சத்வ மயம் பரா விபூதி –
அனுபவிக்கத் தக்க இடமும்- கருவியாகும்- அனுபவிக்கும் பொருள்களாயும் நித்ய விபூதி

தன்யாச்தே பரிசார கர்மணி சதா பச்யந்தி யே ஸூரய-எப்பொழுதும் சேவித்துக் கொண்டு இருக்கிற அந்த பாக்யசாளிகலான நித்ய ஸூரிகள்
நினது கைங்கர்யச் செயலில் உபயோகப் படுகின்றனர் –
அவனது ப்ரீதிக்கு பாத்ரம் என்பதால் நித்ய ஸூரிகள் தந்யர்-அனுபவத்தால் உண்டான ப்ரீத கார்ய கைங்கர்யம்

ஸ்ரீ ரங்கேச்வர தேவி கேவல க்ருபா நிர்வாஹ்ய வர்கே வயம்-நாங்கள் நிர்ஹேதுக கிருபையினால் நிர்வஹிக்கத் தக்கவர்களின்
திரளில் உபயோகப் படுகின்றோம் –பிராட்டியின் ஸ்வாபாவிக கருணை வெளிப்படுத்தும் பரிகரம் நாமே

சேஷித்வே பரம புமான் பரிகரா ஹ்யேதே தவ ஸ்பாரணே -பரம புருஷன் சேஷியாய் இருக்கும் தன்மையில் உபயோகப் படுகின்றான் –
சேஷியாய் இருத்தலால் அவனும் பரிகரமே-தனது பெருமையில் இவர்கள் பரிகரங்கள் அல்லவா -குடை சாமரம் போலே –

இதனால் திருமகளார் தனிக் கேள்வன் என இறைவனது பெருமையும்
அவனுக்கு சேஷப் பட்டிருத்தல் ஆகிய பிராட்டியினது பெண்மையும் தோற்றுகின்றன-

ஸ்ரீரங்கநாதனின் நாயகியே! தாயே!
அசைகின்ற பொருள்களும் அசையாத பொருள்களும் நிறைந்த இந்த உலகம் உனது பொழுது போக்கிற்காகவே உள்ளது.
என்றும் உன்னையும் நம்பெருமாளையும் விட்டுப் பிரியாமல் வணங்கியபடி நின்றுள்ள, புண்ணியம் பல செய்தவர்களான
நித்ய ஸூரிகள் (கருடன், ஆதிசேஷன், முதலானோர்) உனது கட்டளைக்காகவே காத்துக் கிடக்கின்றனர்.
உனது கருணையை வெளிப்படுத்துவதற்காகவே, அந்தக் கருணை உபயோகப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த உலகத்தில் நாங்கள் உள்ளோம்.
உனக்குப் பலவகையிலும் உதவிட நம்பெருமாள் உள்ளான்.
ஆக உனக்காக உள்ளவை என்பது எண்ணில் அடங்காதவை ஆகும்.

ஒருவன் வேலைக்காரர்களைத் தனக்கு அடிமைகள் என்று ஓலை எழுதி வாங்கிக் கொள்ளும்போது, அந்த ஓலையில்
அவர்கள் தனது மனைவிக்கும் அடிமைகள் என்று தனியாக எழுதுவதில்லை.
ஆனால் அவர்கள் அவனது மனைவிக்கும் தொண்டு செய்கின்றனர்.-முமுக்ஷுப்படி- 44
இது போல நாம் அனைவரும் அவனுக்கு அடிமைகள் என்றால், இவளுக்கும் அடிமை என்றே கருத்து.

விளையாடச் சராசரம் இவ்வனைத்தும் போகம் விளைத்தற்குமே தக்க விபூதியாகும்
களியாடச் சதா காணும் செல்வரான காமரு ஸூ ரிகளாவர் பணி விடைக்கே
உள நாங்கள் உனது இயல்பாம் கருணையாலே உறு துணையா நீ தாங்க விறமைக்கு ஈசன்
உளன் அரங்க நாயகனுக்கு உற்ற தேவீ உன் பெருமைக்கு ஏற்ற பரிகரங்கள் அம்மா –22-

————

நித்ய விபூதியில் உள்ள அயோத்தியை என்னும் நகரம் பெருமாளுக்கும் பிராட்டிக்கும் ராஜதாநியாகும் -என்கிறார்-

ஆஜ்ஞா அநுக்ரஹ பீம கோமல பூரி பாலா பலம் போஜுஷாம்
யா அயோத்த்யா இதி அபராஜிதா இதி விதிதா நாகம் பரேண ஸ்த்திதா
பாவை: அத்புத போக பூம கஹநை: ஸாந்த்ரா ஸுதா ஸ்யந்திபி:
ஸ்ரீரங்கேச்வர கேஹலக்ஷ்மி யுவயோ: தாம் ராஜதாநீம் விது:–ஸ்லோகம் –23-

ஆஜ்ஞா அநுக்ரஹ பீம கோமல பூரி பாலா-ஆணையினாலும் அனுக்ரஹத்தாலும் முறையே
பயங்கரராயும் ஸூமுகராயும் உள்ள நகரப் பாதுகாப்பாளரை யுடையதோ –

போஜூஷாம் பலம் -பக்தர்களுக்கு பலனாய் உள்ளதோ -சாதன சாத்திய பக்தி இரண்டையும் குறிக்கும் பக்தி –
பக்தருக்கும் பிரபன்னருக்கும் இதுவே பயன் –

யா அயோத்த்யா இதி அபராஜிதா -யாராலும் தகைய இயலாத அயோத்தியை -தோற்கடிக்க படாத அபராஜிதை –

இதி விதிதா -வேதத்தினால் அறிந்தமை புலப்படுத்துகின்றது –

நாகம் பரேண ஸ்த்திதா-பரமாகாசத்துக்கு மேலே இருப்பது –
நாகம் -என்பதற்கு பிரகிருதி மண்டலம் என்றும் சொல்வர் –

பாவை அத்புத போக பூம கஹநைஸ் ஸாந்தரா ஸூதா ஸ்யந்திபி -அம்ருததைப் பெருக்கும் -இனிய -ஆச்சர்யமான
போக பூம -கஹநைஸ் -அனுபவத்தின் மிகுதியினால்- நிறைந்த பாவை – -பொருள்களினால் –
சாந்த்ரா -செறிந்ததோ-
சர்வதா அநுபூயமா நைரபி அபூர்வவத் ஆச்சர்யம் ஆவஹத்பி -எம்பெருமானார் –

ஸ்ரீ ரங்கேஸ்வர கேஹ லஷ்மி யுவயோஸ் தாம் ராஜதாநீம் விது —
இல்லாள் இன்றேல் வெறியாடும் ஆதலின் கேஹ லஷ்மி -என்று விளித்தார்-
ராஜதாநீ -பிரதான நகரீ ராஜ்ஞ்ஞாம் ராஜதாநீதி கத்யதே -அரசரின் முக்ய நகரம்-

ஸ்ரீரங்கநாதனுடைய பெரியகோயில் என்னும் இல்லத்து மஹாலக்ஷ்மியே! ஸ்ரீரங்கநாயகி!
நீயும், உனது கணவனான நம்பெருமாளும் வேதங்களில் அயோத்யை என்றும், அபராஜிதா என்றும் பெயர் கொண்ட நகரத்தை
உங்கள் தலைநகரமாகக் கொண்டுள்ளீர்கள்.
(அயோத்யை என்றால் யாராலும் எளிதாக நெருங்க இயலாத என்று பொருள்,
அபராஜிதா என்றால் யாராலும் வெல்ல இயலாதது என்று பொருள்).
அந்த நகரம் எங்கு உள்ளது என்றால் – ஆகாயத்திற்கும் மேலே ஸ்வர்கத்திற்கும் மேலே உள்ளது.
அங்கு உனது ஆணைப்படி பயங்கர ஆயுதம் உடைய காவலர்களும்,
உனது இனிய கருணை மூலம் காவல் காத்துவரும் துவாரபாலகர்களும் உள்ளனர்.
அந்த இடம் உனது அடியார்களுக்கு மிக்க பயன்கள் அளிக்கவல்ல பல பொருள்களையும் கொண்டதாக உள்ளது.
இதனை உங்கள் தலைநகராகப் பெரியவர்கள் அறிவர்.

அற்புதமா மதியான போகம் துன்னும் அமுது ஒழுகு பொருள் மலிந்து பக்தருக்கு
நற் பயனாய் நாகத்திற் கப்பாற் பட்டு நாமுறுத்து மாணை யுடன் அருளுமேவும்
பொற்புடையோர் காவல் பூண்டு அயோத்தி என்றும் புகல் பராஜிதை என்றும் வேதம் போற்றும்
நற் புரமே தலை நகராம் நாயகற்கும் நளிரரங்கக் கோயிலலக்குமியே நிற்கும் –23-

———-

அந்நகரத்தின் கண் உள்ள திவ்ய ஆஸ்தான மண்டபமும் உங்களதே -என்கிறார் –

தஸ்யாம் ச த்வத் க்ருபாவத் நிரவதி ஜநதா விச்ரம் அர்ஹ அவகாசம்
ஸங்கீர்ணம் தாஸ்ய த்ருஷ்ணா கலித பரிகரை: பும்பி: ஆநந்த நிக்நை:
ஸ்நேஹாத் அஸ்தாந ரக்ஷா வ்யஸநிபி: அபயம் சார்ங்க சக்ர அஸி முக்யை:
ஆநந்தை கார்ணவம் ஸ்ரீ: பகவதி யுவயோ: ஆஹு: ஆஸ்தாந ரத்நம்–ஸ்லோகம் –24-

த்ருஷ்ணா -வேட்கையினாலே
கலித-கைக் கொண்ட
பும்பி சங்கீர்ணம் -புருஷர்களால் நெருங்கினதும்
ஆநத்தை கார்ணவம்-ஒரே இன்பக் கடலுமான
யுவயோராஹூ -உங்களுடையது என்று சொல்லுகிறார்கள்-

தஸ்யாம் ச த்வத் க்ருபாவத் நிரவதி ஜநதா விச்ரம் அர்ஹ அவகாசம் -பரப்புடைத்த திவ்ய ஆஸ்தான மண்டபம்
சர்வாத்ம சாதாரண நாத கோஷ்டி பூரேபி துஷ்பூர மஹாவகாசம்-ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம் –
யாவரும் வந்து ஒதுங்கலாம் படி பிராட்டியுடைய கடாஷம் போலே
இந்த திவ்ய மண்டபமும் -கிருபை போலே என்னாமல் கிருபை யுடைத்தான என்றுமாம் –

சங்கீர்ணம் தாஸ்ய த்ருஷ்ணா கலித பரிகரை பும்பி: ஆநந்த நிக்நை -தொடை யொத்த துளவமும் கூடையும் பொலிந்து
தோன்றிய தோள் தொண்டர் அடிப் பொடியார் –
க்ருஹீத தத்தத் பரிசார சாதனை -ஆளவந்தார் –
சூட்டு நன்மாலைகள் தூயன ஏந்தி -நம்மாழ்வார்-
சாமரம் குடைகள் ஏந்தி ஆனந்த பரவசர்களாக அங்கு நெருங்கி உள்ளனர் –
அடிமையில் வேறுபாடு இருந்தாலும் ஆனந்தத்தில் அங்கு வேறுபாடு இல்லையே –

ஸ்நேஹாத் அஸ்தாந ரக்ஷா வ்யஸநிபி: அபயம் சார்ங்க சக்ர அஸி முக்யை:-திவ்ய ஆயுத புருஷர்கள் பொங்கும் பரிவினால் அஸ்தானே சங்கை –
அபயம் -இவ்விடம் பயம் அற்று இருப்பதால் –
ஹேதிபிஸ் சேதனாவத்பி ருதீரித ஜயஸ்வ நம -காளிதாசன் –
இவர்களால் பல்லாண்டு பாடப் பெற்றவன் –

ஆநந்தை கார்ணவம் ஸ்ரீ: பகவதி யுவயோ: ஆஹு: ஆஸ்தாந ரத்நம்–-நிரதிசய ஆனந்தம் தருவதாதலின் ஆநத்த ஏக ஆர்ணவம் –
ஆஸ்தானம் ஆனந்தமயம் -ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம்
ஆனந்த மயமான மணி மண்டபம் -மா முனிகள் –
ஆஸ்தான ரத்னம் -ஜாதௌ ஜாதௌ யத் உத்க்ருஷ்டம் தத் ரத்னம் இதி கத்யதே –
ச காரம் -ராஜ தானி மட்டும் அன்று ஆஸ்தான ரத்னமும் உங்களுடையதே –

தாயே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ!
இப்படியாக உள்ள உனது அந்த நாட்டில், உனது கருணையானது எப்படி ஒரு எல்லையில்லாமல் உள்ளதோ
அதே போன்று கணக்கில்லாமல் உனது அடியார்கள் கூட்டம் இளைப்பாற வந்த வண்ணம் உள்ளது.
அந்த இடம் அத்தனை அடியார்களையும் தாங்கும் வண்ணம் பரந்த இடம் உள்ளதாக விளங்குகிறது.
உனக்கு அடிமைத்தனம் பூண்டு விளக்கும் அடியார்களின் கூட்டம், சாமரம் முதலானவற்றைக் கொண்டு, ஆனந்தமே உருவாக உள்ளது.
உன்னையோ அல்லது உனது கணவனான நம்பெருமாளையோ, அந்த நாட்டில் காத்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை.
இருந்த போதிலும், உன் மீது உள்ள மாறாத அன்பு காரணமாக
பகவானிடம் உள்ள சார்ங்கம் என்னும் வில், சுதர்சன சக்ரம், நந்தகம் என்ற வாள் போன்றவை உள்ளன.
இவை உள்ளதால் பயம் என்பதே இல்லாத இடமாகவும், ஆனந்தக் கடலாகவும் உனது அந்தத் திருநாடு உள்ளதாகப் பெரியவர்கள் கூறுவார்கள்.

அவ்வயினின் கருணை யெனச் சனத் திரள்கள் அளவின்றி யிளைப்பாறற்க்கு இடமுடைத்தாய்
அவ்வவ கைக்கொடு கருலி யடிமை பூணும் ஆவலுடன் உவகை மிகுந்து அவர் மிடைந்து
தெவ்விலதா யினும் தெய்வப் படைகள் அன்பிற் சிறந்து முயன்று அளித்திடவே பயம் தீர் இன்பப்
பவ்வ மணி யாத்தான மண்டபத்தைப் பகர்வர் திரு பகவதி நும் மிருவீர்க்குமே –24

அவ்வயின்-அந்த இடத்தில்
தெவ் -பகைமை
இன்பப் பவ்வம் -இன்பக் கடல் ஆத்தான மண்டபத்துக்கு இது அடை மொழி
மணி -சிறந்த –

———–———————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திரு மலை நல்லான் ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: