ஸ்ரீபராசரபட்டர்–அருளிச் செய்த -ஸ்ரீ குண ரத்ன கோஸம்-ஸ்ரீ ஸூவர்ண குஞ்சிகா– ஸ்லோகங்கள் –13-14-15-16–

உப ப்ருஹ்மணங்களோடு கூடிய வேதம் பிராட்டியைப் பற்றியது என்று
கீழ் -தேவிக்ருதம் -என்ற ஸ்லோகத்தில் கூறியதை விளக்குகிறார்
மேல் இரண்டு ஸ்லோகங்களால்-

அஸ்ய ஈசாநா ஜகத: இதி அதீமஹே யாம் ஸம்ருத்திம்
ஸ்ரீ: ஸ்ரீஸூக்தம் பஹு முகயதே தாம் ச சாகாநுசாகம்
ஈஷ்டே கச்சித் ஜகத இதி ய: பௌருஷே ஸூக்த உக்த:
தம் ச த்வத்கம் பதிம் அதிஜகௌ உத்தர: ச அநுவாக:–ஸ்லோகம் –13 –

சம்ருத்திம் -ஐஸ்வர் யத்தை
அதீமஹே-ஒதுகின்றோமோ –
அஸ்யேசா நா ஜகத-பூர்வ காண்டத்தில் உள்ள ஸ்ருதி வாக்யத்தை அப்படியே கையாளுகிறார்
சாகா நுசாகம் -இதம் ஹி பௌருஷம் ஸூக்தம் சர்வ வேதேஷூ பட்யதே-போலே ஸ்ரீ ஸூக்தமும் சாகைகள் தோறும் உள்ளது
பஹூ முக்யதே சாகா நுசாகம் -மேலும் மேலும் பல்கிப் பரி பூரணமாக -என்றபடி –
ஈஷ்டே கச்சிஜ் ஜகத இதி ய பௌருஷே ஸூக்த உக்த-இவ் வனைத்தும் புருஷனே என்றது புருஷ ஸூக்தம் –
அம்ருதத்வத்திற்கு -மோஷத்திற்கு -ஈச்வரனே என்று ஸ்பஷ்டமாகவும் கூறுகிறது என்பதை ஈஷ்டே கச்சிஜ் ஜகத -என்கிறார்
தாம்ச -புருஷ ஸூ க்தத்தில் சொல்லப் பட்டவனையும் நாராயண அனுவாகாதிகளிலே சொல்லப் பட்டவனையும் -என்றபடி
யுத்தரச் சாநுவாகச்ச -அத்ப்யஸ் ஸ்ம் பூத -என்று தொடங்கும் அடுத்த அனுவாகம்

உம்மை -லஷ்மி ஸ்ரத்தையால் தேவன் தேவத் தன்மையை அடைகிறான் எனபது போன்ற வாக்யங்கள் –
அந்தப் புருஷனை யான் அறிகின்றேன் -புருஷ ஸூக்தம் நாராயண அனுவாகம் மனுவாகத்திலும் வாக்யங்கள் ஒற்றுமை உற்றுக் காணப்படும்
உனக்கு பதி என்று தலை கட்டும் இவை–பிராட்டிக்கு பிரதானம் கொடுத்து பேசுகிறார் –
சேஷித்வே பரம புமான் பரிகராஹ் யேதே தவ ஸ்பாரணே-என்று மேலேயும் அருளிச் செய்வார் –

ஹே ஸ்ரீரங்கநாயகி! மஹாலக்ஷ்மீ! இந்த உலகத்தின் ஈஸ்வரி, நாயகி என்று உன்னை வேதங்கள் சில இடங்களில் ஓதியுள்ளன.
இப்படிப்பட்ட பெரும் செல்வமான உன்னை, ஸ்ரீஸூக்தம் என்ற உயர்ந்த க்ரந்தம் தனது
ஒவ்வொரு மந்திரத்திலும் பலவாகப் புகழ்ந்து கூறுகிறது.
புருஷ ஸூக்தத்தில் இந்த உலகம் முழுமைக்கும் நாயகன் என்றும், புருஷன் என்றும் ஸ்ரீரங்கநாதன் வர்ணிக்கப்படுகிறான்.
இப்படிப்பட்ட நம்பெருமாளை அநுவாகமும் விவரித்துக் கூறுகின்றது.
அந்தக் க்ரந்தங்கள் அவனை உனது கணவனாக அல்லவா ஓதின?

புருஷஸூக்தம் தனது நாயகனைக் கூறுவதாகவும், ஸ்ரீஸூக்தம் தன்னையே கூறுவதாகவும் மஹாலக்ஷ்மி,
பாஞ்சராத்ர ஆகம நூலான லக்ஷ்மி தந்த்ரத்தில் கூறினாள். அந்த வரிகள்:
1. தத்ர பும்லக்ஷணம் ஸூக்தம் ஸத்ப்ரஹ்ம குண பூஷிதம் –
புருஷர்களின் லக்ஷணம் கூறப்பட்டதால் அதனைத் தான் (திருவரங்கன்) கைக்கொண்டான்.
2. தத்ர ஸ்த்ரீலக்ஷணம் ஸூக்தம் ஸத்ப்ரஹ்ம குண பூஷிதம் –
பெண்களின் பெருமைகள் பேசப்பட்டதால் அதனை நான் (ஸ்ரீரங்கநாச்சியார்) கைக்கொண்டேன்.

இறைவி இவ் உலகத்திற்கு என்று ஒதுகின்றமை தன்னை
நெறி பல விரித்து மேன் மேல் நிகழ்த்துமே திரு நின் ஸூக்தம்
இறை எனப் புருட ஸூக்தத் தியம்பிய ஒருவனைப் பின்
மறை யநுவாக முன் தன் மகிழ்நன் என்று ஓதும் அன்றே –13-

————

மறை முடிகளுக்கு மாத்திரமன்றி ஸ்ரீ இராமாயணம் முதலிய உப ப்ருஹ்மணங்களும்
நினது மகிமையிலே நோக்கம் -என்கிறார் —

உத்பாஹு: த்வாம் உபனிஷத் அஸௌ ஆஹ ந ஏகா நியந்த்ரீம்
ஸ்ரீமத்ராமாயணம் அபி பரம் ப்ராணிதி த்வத் சரித்ரே
ஸ்மர்த்தார: அஸ்மத் ஜநநி யதமே ஸேதிஹாஸை: புராணை:
நிந்யு: வேதா ந அபி ச ததமே த்வந் மஹிம்நி ப்ராமாணம்.–ஸ்லோகம் –14 –

அஸ்மத் ஜநநி -எமது அன்னையே –
உத்பாஹு: த்வாம் உபனிஷத் அஸௌ ஆஹ ந ஏகா நியந்த்ரீம்-
ஸ்ரீ ஸூக்தாதி உபநிஷத் மட்டும் கையை உயர்த்திக் கொண்டு உன்னை இறைவியாக கூறவில்லை –
சத்யம் சத்யம் புனஸ் சத்யம் உத்த்ருத்ய புஜ முச்யதே -முக்காலும் உண்மை -பிராட்டியே உலகிற்கு இறைவி என்று
உபநிஷத் சத்யம் செய்கின்றனவாம்
அசௌ-என்று முன் ஸ்லோகத்தில் குறிப்பிட்ட ஸ்ரீ ஸூக்தத்தைச் சுட்டியது
பின்னையோ எனின் –

ஸ்ரீ மத் ராமாயணமபி பரம் ப்ராணிதி த்வச் சரித்ரே-ஸ்ரீ மத் ராமாயணமும் கூட நினது வரிதர விஷயமாக மிகவும் பேசி ஜீவித்து இருக்கின்றது –
சாஹி ஸ்ரீ என்று செல்வமாகக் கூறப்படும் வேதங்களில் சொன்ன பயன் இராமாயணத்திலும் உண்டாதலின் அதனை ஸ்ரீமத் என்று விசேஷிக்கிறார்
பரம் -விசேஷணம்-இதிஹாச ஸ்ரேஷ்டமான ஸ்ரீ ராமாயணம் -த்வத் சரித்ரே பரம் என்று கூட்டி உரைக்கலுமாம்-
பிராட்டி சரித்ரத்தாலேயே ஸ்ரீமத் இராமாயணம் ஜீவித்து இருக்கிறது –
ஜீவிதம் வயங்க்ய வைபவம் உள்ளுறை பொருள் சீதாயாச் சரிதம் மஹத் -புருஷகார வைபவமே பிராட்டியின் சரித்ரம்
கிருபை பாரதந்த்ர்யம் அனன்யார்ஹத்வம்-மூன்றையும் மூன்று பிரிவுகளால் வெளியிட்டு அருளினாள்

ஸ்மர்த்தார: அஸ்மத் ஜநநி யதமே சேதிஹாசை புராணை-எவர்கள் ஸ்ம்ருதி காரர்களோ
அவர்களும் வேதங்களை இதிஹாசங்களோடு கூடிய புராணங்களைக் கொண்டு –
நிந்யூர் வேதா நபி ஸ ததமே த்வந் மஹிம்நி பிரமாணம் -நினது மஹிமையில் மேற்கோளாக நயப்பித்தனர் -நிரூபித்தனர் –

நான் பிறப்பதற்குக் காரணமாக இருந்தவளே! ஸ்ரீரங்கநாயகி!
இத்தகைய ஸ்ரீஸூக்தம் போன்றவை மட்டும் தங்கள் கைகளை உயர்த்தி உன்னைப் புகழ்ந்து நிற்கவில்லை.
ஸ்ரீமத் இராமாயணமும் உனது சரிதத்தை வெகுவாகவே கூறியுள்ளது
(ஸ்ரீரங்கநாதனுக்கும் இராமனுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
அந்த இராமன் ஆராதனை செய்து வந்த பெருமாள் ஸ்ரீரங்கநாதன் ஆவான்.
இதனால் தான் இராமாயணத்தைக் கூறுகிறார் போலும்). இவை மட்டும் அல்ல,
பராசரர் போன்ற ஸ்ம்ருதி ஒதியவர்களுக்கும் கூட – புராணங்கள், வேதங்கள் ஆகியவை உன்னைக் குறித்துக் கூறுவதாகப்
பல மேற்கோள்களையும் ஆதாரங்களையும் காண்பித்தனர்.

வால்மீகி முனிவரே – ஸீதாயாச் சரிதம் மஹத் – ஸீதையின் சரிதமே இதில் ப்ரதானம் –

உயர்த்தி புயமீசுவரியாக வுன்னை உபநிடத மாத்திரமே யுரைக்க லில்லை
உயர்த்தி யுடைச் சீ ராமாயணமும் கூட உயிர் உறுவது உனது நனி சரித்ரத்தால்
உயிர்த் திரளுக்கு ஒரு தாயே மேற் கோளாக உன்னுடைய மகிமையினுக்கு உபபாதித்தார்
செயிர்த் தினையுமில் மறையை மிருதிகாரர் சீர் இதிகாசத்துடனே புராணம் கொண்டே –14–

உயர்த்தி புயம் -புயம் உயர்த்தி என்று மாற்றி
செயிர்- குற்றம்
உப பாதித்தார் -நிரூபித்தார்-

—————

மேல் நான்கு ஸ்லோகங்களால் உலகில் உள்ள நல்லன யாவும் பிராட்டி கடாஷம் பெற்றவை –
அல்லன பெறாதவை என்கிறார் –
இங்கனம் ஸ்ருதி பிரமாணத்தால் அறியப்படும் பிராட்டியினுடைய கடாஷத்தின் யுடைய
லவ லேசத்திற்கு  வசப்பட்டவை சிறந்த பொருள்கள் யாவும் -என்கிறார் –

ஆகுக்ராம நியாமகாத் அபி விபோ: ஸர்வ நிர்வாஹகாத்
ஐச்வர்யம் யத் இஹ உத்தரோத்தர குணம் ஸ்ரீரங்கபர்த்து: ப்ரியே
துங்கம் மங்களம் உஜ்ஜ்வலம் கரிமவத் புண்யம் புந: பாவநம்
தந்யம் யத் தத் அதச்ச வீக்ஷ்ணபுவ: தே பஞ்சஷா விப்ருஷ:–ஸ்லோகம் –15 –

ஆகுக்ராம நியாமகா தபிவிபோ ரா சர்வ நிர்வாஹகாத் –
சிறிய ஊரை ஆளுகின்றவன் தொடங்கி எல்லாவற்றையும் நிர்வஹிக்கின்ற விபுவான
பிரமன் வரையிலும் இவ் உலகத்திலே –
ஐஸ்வர்யம் யதிஹோத்த ரோத்தர குணம் ஸ்ரீ ரங்க பர்த்து ப்ரியே-
உத்தர உத்தர குணம் -மேன்மேலும் சிறப்பு வாய்ந்த -யாதொரு ஐஸ்வர்யம் உண்டோ –
துங்கம் மங்கள முஜ்ஜ்வலம் கரிமவத் புண்யம் புன பாவனம் –
துங்கம் -மேரு முதலிய உயரமான பொருளும்
மங்களம் -புஷ்பம் முதலிய மங்களப் பொருளும்
கரிமவத் -இமயம் முதலிய கனத்த பொருளும்
புண்யம் -வேள்வி முதலிய அறமும்
புனர் -மேலும்
பாவனம் -காவிரி முதலிய தூய்மைப் படுத்தும் பொருளும் –
தன்யம் யத் தததச்ச விஷண புவஸ் தேபஞ்சஷா விப்ருஷ —
தான்யம் பாக்யத்தைப் பெற்ற பொருளும் என்கிற
யத் ஐஸ்வர்யம் -யாதொரு ஐஸ்வர்யம் உண்டோ –
தத் -அந்த ஆளுகின்ற ஐஸ்வர்யமும்
அதச்ச -இந்த துங்கம் முதலிய ஐஸ்வர்யமும்
தே -நினது
வீஷண புவ -பார்வையில் யுண்டான
பஞ்ச ஷா விப்ருஷ -ஐந்தாறு திவலைகள் –

ஸ்ரீரங்கநாதனின் மனதைக் கவர்ந்தவளே! ஸ்ரீரங்கநாயகி! ஒரு சிறிய நாட்டை ஆளும் அரசன் தொடக்கமாக,
அனைத்தையும் (உனது அருளால்) ஆள்பவனாக உள்ள ப்ரம்மன் வரையில் உள்ளவர்களை எடுத்துக் கொள்வோம்.
அவர்களிடம் இருக்கும் செல்வங்கள்; மேலும் இந்த உலகில் காணப்படும் மேரு மலை போன்ற உயர்ந்த பொருள்கள்,
இரத்தினம் போன்ற ஒளிவீசும் பொருள்கள், இமயமலை போன்ற பருத்த பொருள்கள், யாகம் முதலான புண்ணியப் பொருள்கள் –
இவை அனைத்தையும் ஆண்டு அனுபவிக்கக்கூடிய வல்லமை – எப்படி உண்டாகுகிறது?
எனது தாயே! ஸ்ரீரங்கநாயகீ! கருணையும் கடாக்ஷமும் வீசுகின்ற உனது பார்வை மூலமாக அல்லவோ?

ஒருவனுக்குப் பல பொருள்கள் திருவரங்கன் அருளால் கிட்டினாலும் –
அவற்றை அனுபவிக்கக் கூடிய தகுதியையும், திறனையும், ஞானத்தையும் இவளே ஏற்படுத்துகிறாள்.

சிற்றூர் மன் முதலாகச் செக மனைத்தும் திறம்பாமல் நடாத்துகின்ற இறைவன் காறும்
பெற்றுள்ள செல்வமும் ஈங்கு அரங்க நாதன் பேரன்பே மேன் மேலும் பெருக்கமாக
மற்றோங்கி வளர்ந்தவவும் கனத்தனவும் மங்களமும் இலங்குநவும் பாக்கியத்தைப்
பெற்றனவும் பாவனமும் அறமும் நின்ன பெரும் கருணை நோக்கின் துளி ஐந்தாறாமே–15-

————–

பிராட்டியின் கடாஷம் ஐஸ்வர் யத்துக்கு காரணமாதல் போலே
வறுமைக்கு அவள் கடாஷம் இன்மையே ஹேது -என்கிறார் –

ஏக: முக்தாதபத்ர ப்ரசல மணி கணாத்காரி மௌளி: மநுஷ்ய:
த்ருப்யத் தந்தாவளஸ்த: ந கணயதி நதாந் யத் க்ஷணம் க்ஷோணி பாலாந்
யத் தஸ்மை திஷ்டதேந்ய: க்ருபணம் சரண: தர்சயந் தந்த பங்க்தீ
தத் தே ஸ்ரீரங்கராஜ ப்ரணயிநி நயந: உதஞ்சி்த ந்யஞ்சிதாப்யாம்–ஸ்லோகம் –16 –

ஏகோ-ஒரு மனுஷ்யர்
முக்தாத பத்ர ப்ரசலமணி-முத்துக் குடையில் அசைகின்ற ரத்னங்களாலே
கணாத்காரி மௌளிர்-உராய்தலினால் கண கண என்று ஒலிக்கின்ற கிரீடம் ஏந்தினவனாய்க் கொண்டும்
மநுஷ்ய -த்ருப்யத் தந்தாவளஸ்த-மனிதன் களிப்புக் கொண்ட யானை மீது இருந்து கொண்டும்
தோ ந கணயதி ந தான் யத்ஷணம் ஷோணி பாலான் –
வணங்கின அரசர்களை சிறிது நேரம் கூட மதிப்பது இல்லை எனபது யாது ஓன்று உண்டோ –
யத் தஸ்மை திஷ்டதேன்ய க்ருபணமசரணோ தர்சயன் தந்த பங்க்தீ-அதுவும் மற்றொரு மனிதன் வேறு புகல் அற்றவனாய்
தன் ஏழைமை தோற்ற பல் வரிசைகளை காண்பித்துக் கொண்டு அந்த யானை மீது இருப்பவனுக்கு
திஷ்டதேயத் -தன் கருத்தைப் புலப்படுத்தி நிற்கிறான் எனபது யாதொன்று உண்டோ
தத் தே ஸ்ரீ ரங்கராஜ பிரணயிநி நயனோ தஞ்சித ந்யஞ்சிதாப்யாம் —
அதுவும் உனது கண்களினுடைய உதஞ்சித -திறத்தலாலும்-நயஞ்சிதாப்யாம் -மூடுதலாலும்-உண்டாகின்றன –

அந்வய வ்யதிரேகங்கள் இரண்டையும் காட்டினார் ஆயிற்று –

இந்த உலகின் நிலை என்ன? ஒரு மணிதன் மிகுந்த மன மகிழ்வுடன், யானை மீது கம்பீரமாக அமர்ந்து கொண்டு ,
முத்துக் குடையைப் பிடித்தபடி, அந்தக் குடையில் உள்ள ரத்ன மணிகள் அசையும்படி வருகிறான்.
அந்த இரத்தினங்கள் உள்ள அவனது க்ரீடமோ “கண கண” என்று ஒலி எழுப்புகிறது.
அவனிடம் அரசர்கள் கூட வந்து வணங்கி நிற்கின்றனர். ஆயினும் அவனோ அந்த அரசர்களைப் பொருட்படுத்தாமல் சென்று விடுகிறான்.
மற்றொரு மனிதன் எந்த கதியும் இல்லாதவனாக, தனது ஏழ்மையை தன்னுடைய பற்களின் இளிப்பு மூலமாக
அந்த யானை மீது உள்ளவனுக்குக் காண்பிக்கிறான்.

முதல் மனிதன் செல்வக் களிப்பில் உள்ளதும், அடுத்தவன் வறுமையின் பிடியில் உள்ளதும் ஏன்?
ஸ்ரீரங்கநாதனின் ப்ராணனாகவே உள்ளவளே! ஸ்ரீரங்கநாயகீ!
உனது அருள் நிறைந்த பார்வை திறப்பதும் மூடுவதாலும் அல்லவா இந்த ஏற்றத் தாழ்வுகள் உள்ளன?

ஒரு முத்துக் குடை மணிகளுரச மௌலி ஒலிப்ப கண கண வென்றே ஒரு மானிடனார்
கருமத்தக் கரிமிசை வீற்று இருந்தே சற்றும் காவலரே வணங்கிடுனும் கணிசியாமை
இருபத்திப் பல்வரிசை யிளித்து முன்னே இன்னோருவன் புகலின்றி ஏங்கும் தன்மை
புரிவித்ததற் கிவை முறையே திறக்குமூடும் பொன்னரங்கர் காதலி நின் கண்கள் தாமே –16

———-———————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திரு மலை நல்லான் ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: