ஸ்ரீபராசரபட்டர்–அருளிச் செய்த -ஸ்ரீ குண ரத்ன கோஸம்- ஸ்ரீ ஸூவர்ண குஞ்சிகா– ஸ்லோகங்கள் –9-10-11-12–

தமது வேண்டுகோளின் படியே சிறந்த கவிதா சக்தியைப் பெற்ற ஆசிரியர் ஸ்ரீ ரங்க நாதனை நோக்கி
நின்னிலும் சிறப்புடையவளாக பிராட்டியைக் கூறுகின்றோம் -நன்கு கேட்டு மகிழ்ந்து அருள்க -என்கிறார் —

ஸ்ரிய: ஸ்ரீ: ஸ்ரீரங்கேசய தவ ச ஹ்ருத்யாம் பகவதீம்
ஸ்ரியம் த்வத்தோபி உச்சை: வயம் இஹ பஹாம: ஸ்ருணுதராம்
த்ருசௌ தே பூயாஸ்தாம் ஸுகதரளதாரே ஸ்ரவணத:
புந: ஹர்ஷ உத்கர்ஷாத் ஸ்புடது புஜயோ: கஞ்சுகசதம்–ஸ்லோகம் – 9-

ஸ்ரீயச் ஸ்ரீச்-திருவுக்கும் திருவாகிய செல்வா –
ஸ்ரீ ரங்கேச-ஸ்ரீ ரங்கத்தில் பள்ளி கொண்டு அருள்பவனே –திருவுக்கும் திரு என்று பரத்வம் சொல்லி இங்கே சௌலப்யம்
தவ ச ஹ்ருதயம் பகவதீம் -ஸ்ரீரியம்-நினக்கும் கூட திரு உள்ளத்துக்கு பிடித்த நற் குணங்கள் வாய்ந்த

த்வத்தோபி உச்சை: வயம் இஹ பஹாம-நின்னிலும் மேலாக யாம் இங்கு கூறுகின்றோம் –
வயம் -பிராட்டி கடாஷம் பெற்ற ஹர்ஷத்தால் பன்மையில் –
ஆளவந்தார் போன்ற பரமாச்சார்யர்களையும் சேர்த்து அருளுகிறார் என்றுமாம்-

இஹ -இந்த பிரபந்தத்தில் -இவ்விடத்தில் -நினது முன்னிலையிலே –
ஸ்ருணுதராம்-நன்கு கேட்டருளுக-இத்தைக் கேட்டதும் மெய் மறந்து இருக்க கேளாய் -என்கிறார் –
த்ருசௌ தேபூயாஸ்தாம் ஸூக தரளதாரே ஸ்ரவணத-கேட்பதா நினது திருக்கண்கள் ஸூகத்தாலே பிறழ்கிற
கரு விழிகளை யுடையனவாய் ஆயிடுக –
புனர் ஹர்ஷ உத் கர்ஷாத் ஸ்புடது புஜயோ கஞ்சுகசதம் -மேலும் ஹர்ஷத்தின் மிகுதியாலே பூரித்த திருத் தோள்களிலே
பல அங்கிகள் வெடித்திடுக-
புனர் -மேலும்-அடிக்கடி என்னவுமாம் -கர்ம சம்பந்தத்தால் -மலராத குவியாத திருமேனி ஹர்ஷத்தாலே விகாரம் தவிர்க்க ஒண்ணாது இறே-

உன்னை அடைய எங்களால் பற்றப்படுகின்ற ஸ்ரீரங்கநாயகியின் பதியே! ஸ்ரீரங்கநாதா! எங்கள் மனதிற்கு மட்டும் அல்ல,
உனது மனதிற்கும் பிடித்த பல திருக் கல்யாண குணங்கள் கொண்டவளாக ஸ்ரீரங்கநாச்சியார் உள்ளாள்.
அவளது திருக் கல்யாண குணங்கள் காரணமாக உன்னை விட அவள் உயர்ந்தவள் என்று உன் முன்பாகவே கூறப் போகிறேன்.
இதனை உனது காதுகள் குளிர நீ கேட்க வேண்டும் . நீ கேட்பதன் காரணமாக உனது கண்களில் மகிழ்ச்சி நிலை நின்று,
அதனால் உனது பெரிய கண்கள் மின்னியபடி காணப்படும். இவற்றைக் கேட்பதன் மூலம் உனது
அகண்ட திரண்ட தோள்கள் மகிழ்ச்சியின் காரணமாக மேலும் வளர வேண்டும்.
இதனால் அந்தத் தோள்களில் அணிவிக்கப்படும் பல அங்கிகளும் வெடித்துக் கிழிந்து போக வேண்டும்.

பட்டர் கூறக் கூற அரங்கனின் திருக்கண்கள் மகிழ்ச்சியால் மலர்ந்தன,
அவனது திரண்ட புஜங்கள் மேலும் வளர்ந்தன–அவன் அணிந்திருந்த அங்கிகள் கிழிந்தன.

ஸ்ரீயபதி- அஹம் மாம் – எல்லா வற்றிலும் மீனில் தண்ணீர் உடம்பு எங்கும் போல பிராட்டி அவன் உடல் தோறும்-

திருவுக்கும் திருவே ஸ்ரீ அரங்கில் பள்ளி சேர்வோனே நினக்கு மனக்கு இனியளான
திரு மகளைப் பகவதியை நினக்கும் மேலாச் செப்புகின்றோம் யாமிங்கு நன்கு கேளாய்
கரு விழிகள் பிறழ்ந்திடுக நினது கண்ணில் காது கொடுக்கும் சுகத்தால் கஞ்சுகங்கள்
இரு புயமும் பொருமி மிக வுவகை கூர எண்ணில் அடங்காது வெடிபடுக மேலும் –9

————

கீழ்ப் பிரதிஜ்ஞை செய்த படி பிராட்டியத் ஸ்துதிக்க கருதி அவளது ஸ்வரூபாதிகள் உடைய சித்திக்கு
இதிஹாசாதிகளுடன் கூடிய ஸ்ருதியே பிரமாணம் -என்கிறார்-

தேவி ஸ்ருதிம் பகவதீம் ப்ரதமே புமாம்ஸ:
த்வத் ஸத் குண ஒக மணி கோச க்ருஹம் க்ருணந்தி
தத்த்வார பாடந படூநிச ஸேதிஹாஸ
ஸந்தர்க்கண ஸ்ம்ருதி புராண புரஸ்ஸராணி–ஸ்லோகம் –10 –

பிரதமே புமாம்ச –வால்மீகி பராசராதிகள் –ப்ரபன்ன குல முன்னோர் -நம்மாழ்வார் பூர்வாச்சார்யர்கள்
மணி கோச க்ருஹம் -ரத்னக் குவியலின் இல்லங்கள் -சுருதி -ஓதி ஓதுவித்து ஆதியாய் வரும் வேதங்கள் –மாநாதிநாமேய சித்தி
தத்த்வார பாடந படூ நிச -அதன் வாயிலைத் திறப்பதில் திறமை உள்ளவைகளாகவும்
க்ருணந்தி-கூறுகிறார்கள் –
த்வத் வத் குணவ் க மணி கோச க்ருஹம் க்ருணந்தி-பிராட்டியின் சம்பந்தத்தாலே குணங்கள் நன்மை பெறுகின்றன –

தத்த்வார பாடந படூ நிச சேதிஹாச சம் தர்க்கண ஸ்ம்ருதி புராண புரஸ் ஸராணி –
சம் தர்க்கணம்-நேர்மையான தர்க்கம் -மீமாம்சை போல்வன
ஸ்ம்ருதி -மனு முதலியன
புராணம் ஸ்ரீ விஷ்ணு புராணாம் போல்வன-இவைகளை முன்னிட்டவை என்றது திவ்ய பிரபந்தங்களை –
செய்ய தமிழ் மாலைகள் நாம் தெறி யவோதி தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே –

தாயே! ஸ்ரீரங்கநாயகி! முன்னோர்கள் பலரும், மிகவும் உயர்ந்த வேதங்கள் நான்கையும் உன்னுடைய
இனிமையான திருக்கல்யாண குணங்கள் என்னும் உயர்ந்த கற்கள் வைத்துள்ள ஒரு பெட்டி என்றே கருதி
அவற்றை மிகவும் போற்றி, பாதுகாத்து வந்தனர். இந்தப் பெட்டியைத் திறக்கும் திறவுகோலாக (சாவி)
உள்ளவை எவை என்றால் – இதிகாசங்கள் (இராமாயணம், மஹாபாரதம்),
மீமாம்ஸை போன்றவை (ஸந்தர்க்கணம்), ஸ்ம்ருதிகள் – என்பவை ஆகும்.

வேதங்கள் என்பவை இவளது குணங்களைக் காக்கும் பேழைகள் என்றார்.
ஆக மேலோட்டமாகப் பார்த்தால் வேதங்கள் பெரிய பெருமாளைப் புகழ்வது போலத் தோன்றினாலும்,
ஆழ் பொருளில் இவளையே துதிக்கின்றன எனலாம்.
இவளது குணங்களை – ஒக – என்றார். இதன் பொருள் – கூட்டம் கூட்டமாக – என்பதாகும்.
அந்தக் குணங்களால் இவளுக்கு எந்தவிதமான புதிய ஏற்றம் வரப் போவதில்லை.
ஆபரணங்களாலா தங்கத்திற்கு மதிப்பு? தங்கத்தால் அல்லவோ ஆபரணங்களுக்கு மதிப்பு?
அது போல, இவளால் குணங்களுக்குப் பெருமை என்றார்.

புருடர்கள் புகல்வர் தொல்லோர் புன்மைகள் சிறிதும் புல்லாச்
ஸ்ருதியைத் தேவி நின்ன சுப குண மணி வீடு என்றே
செறி புதா திறக்கும் சீர்மை கெழுமிய திறவு கோலே
தருக்க நல் லிதிகாசங்கள் தரும நூல் புராணமாதி -10

————–

இப்படி பிரமாணங்கள் இருந்தும் உண்மையை அறியாதாராய் சம்சாரத்தில் உழன்று இழந்து
இருக்க காரணம் பிராட்டியின் கடாஷத்துக்கு சிறிதும் இலக்காமையே -என்கிறார் –

ஆஹு: வேதாந் அமாநம் கதிசன கதிசா ராஜகம் விச்வம் ஏதத்
ராஜந்வத் கேசித் ஈசம் குணிநம் அபி குணை: தம் தரித்ராணம் அந்யே
பிக்ஷௌ அந்யே ஸுராஜம்பவம் இதிச ஜடா: தே தலாதலி அகார்ஷு:
யே தே ஸ்ரீரங்க ஹர்ம்ய அங்கண கநகலதே நக்ஷணம் லக்ஷ்யம் ஆஸந்–ஸ்லோகம் –11 –

ஸ்ரீ ரங்க ஹர்ம்யாங்கண கன கலதே-ஸ்ரீ ரங்க விமானத்தினுடைய முற்றத்தின் கண் உள்ள தங்கக் கொடியே-
யே தே -லஷ்யம் -எவர்கள் உன்னுடைய -கடாஷத்துக்கு இலக்காக
ந ஆசன்-ஆக வில்லையோ
தே ஜடா கதி சன -அந்த அறிவிலிகளான சிலர்-சிலர் -என்று அநாதாரம் தோற்ற பாஹ்ய குத்ருஷ்டிகளை அருளிச் செய்கிறார்
ஆஹூர் வேதாந் அமாநம் -வேதான் அமானம் -ஆஹூ -வேதங்களை பிரமாணம் அல்ல என்று சொல்லினார் –
கத்திச -மற்றும் சிலர்
ஏதத் விச்வம் அராஜகம் -இந்த உலகத்தை இறைவன் அற்றதாக சொல்லினர் –
கேசித் ராஜன்வத் -வேறு சிலர் நல்ல இறைவனை யுடையதாகச் சொல்லினார்
அன்யே -மற்றையோர்
தம் ஈசம் குணி நம் அபி குணை: தம் தரித்ராணாம் -அந்த நல்ல இறைவனை நியமிப்பவனாயும் குணம் உள்ளவனாயும் இருந்தாலும்
குணங்களாலே சூன்யனாக சொல்லினார்
அன்யே பிஷௌ ஸூ ராஜம்பவம் -வேறு திறத்தோர் பிச்சை எடுப்பவனிடம் நல்ல இறைமையை சொல்லினர்
இத்திச தலாதலி அகார்ஷு: -இவ் வண்ணமாகவும் கையினால் அடித்துக் கொள்ளும் சண்டையை செய்தனர் –

ஸ்ரீரங்க விமானத்தில் காணப்படும் தங்கக் கொடியே! ஸ்ரீரங்கநாயகி! இங்கு பலவிதமான, அறிவற்ற மனிதர்கள் உள்ளனர்.
அவர்கள் – வேதங்கள் அனைத்தும் சரியானவை அல்ல, அவை பரம்பொருளைக் காண்பிக்கவில்லை என்றனர்
(இது பௌத்தர்கள், ஜைனர்களைக் குறிக்கும்);
இந்த உலகம் இறைவனால் இயக்கப்படுவது அல்ல என்றனர் (இது சாங்கியர்களின் கொள்கை);
நல்ல தலைவனாக மட்டும் ஒருவன் உண்டு என்றனர் (இது கணாத மதம் ஆகும்);
சிலர் அனைத்தையும் ஆள்பவனாகவும், பல குணங்களை உடையவனாகவும் பரம்பொருள் உள்ள போதிலும்
அவனுக்குக் குணங்கள் கிடையாது என்றனர் (இது அத்வைதம்);
மேலும் சிலர் பிச்சை எடுக்கும் ஒருவனிடம் இறைவனுக்கான தன்மை உண்டு என்றனர் (இது சைவமதம்) –
இப்படியாகப் பல மதங்களைச் சேர்ந்தவர்கள் விவாதம் செய்து, கைகளால் அடித்தும் கொள்கின்றனர்.
அவர்கள் அனைவரும் உனது கடாக்ஷம் நிறைந்த பார்வை பெறாதவர்கள் என்பது உண்மை.

இவளது பார்வை ஒரு நொடிப் பொழுது பட்டிருந்தாலும், அவர்கள் மிக்க பண்டிதர்களாகி இருப்பார்கள் என்று கருத்து.
ஆக இவளது கடாக்ஷம் இருந்தால் மட்டுமே உண்மையான அறிவு பெற்று, பரம்பொருளான பெரியபெருமாளை அறிய இயலும்.

வேதங்கள் பிரமாணம் அல்ல என்பார் வியனுலகுக்கு இறையவனே இல்லை என்பார்
நாதன் உண்டு இவ் யுலகிற்கு நல்லன் என்பார் நலனுடைய வவன் தனை நிர்க் குணனே என்பார்
ஏதம் கொள் இரப்பாளன் இறைவன் என்பார் இப்படியே மதி கேடர் அடித்துக் கொள்வர்
போது இறையும் அரங்கத்து விமான முற்றப் பொலங்கொடியே இலக்கு நினக்கு ஆகாதாரே -11

பொலங்கொடி-தங்கக் கொடி-

———

பிராட்டியின் கடாஷத்திற்கு இலக்கான பாக்யவான்களே வேதாந்தத்தின் புதை பொருளாகிய பிராட்டி யுடைய
மஹிமையைக் கண்டு அனுபவிக்க இட்டுப் பிறந்தவர்கள் -என்கிறார்-
உட்கண்ணில் பக்தி என்னும் சித்தாஞ்சம் இட்டுக் கொண்டே மலை-மறை உச்சி போன்ற இடங்களில்
ஒளித்து வைக்கப் பட்டுள்ள பிராட்டி மகிமை என்னும் புதையலை கண்டு அனுபவிக்கப் பெறுகின்றனர் –

மநஸி விலஸதா அக்ஷ்ணா பக்தி ஸித்தாஞ்ஜநேந
ஸ்ருதி சிரஸி நிகூடம் லக்ஷ்மி தே வீக்ஷமாணா:
நிதி மிவ மஹிமாநம் புஞ்ஜதே யே அபி தந்யா:
நநு பகவதி தைவீம் ஸம்பதம் தே பிஜாதா:–ஸ்லோகம் –12 –

அஷ்ணா -ஞானக் கண்ணாலே
வீஷமாணா -பார்க்கப் பெற்றவர்களாய்
புஞ்ஜதே -அனுபவிக்கிறார்கள்
நி கூடம் -நன்றாக மறைக்கப் பட்டுள்ள –
தே தைவீம் சம்பதமபி ஜாதா ந நு – -அவர்கள் தேவ சம்பந்தம் பெற்ற சம்பத்தைக் குறித்து பிறந்தவர்கள் அல்லவா
யேபி தன்யா -தனம் -பாக்யத்தை ப்ராப்தா எய்தினவர் தன்யா பாக்யவான்கள் –

பகவானுடைய திருக்கல்யாண குணங்கள் அனைத்தையும் கொண்டவளே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகியே!
உனது பெருமையைப் பற்றி வேதாந்தங்களில் நேரடியாக எதுவும் கூறப்படவில்லை என்று சிலர் கூறுவார்கள்.
ஆனால் உனது பெருமைகளை அவை மறைமுகமாகக் கூறுகின்றன. இதனைக் கண்டறிவது எப்படி?
புதையலை அடைய ஸித்தாஞ்ஜநம் என்ற ஒரு வித கண் மை கொண்டு காண்பது போன்று , உனது பக்தி என்னும்
கண் மை தடவினால் அந்த வேதாந்த ரகசியங்கள் எளிதாகப் புலப்படும்.
இதனைச் சிலர் இப்படியாகத் தங்கள் மனதால் எளிதாக அறிந்து விடுகின்றனர்.
அவர்கள் எம்பெருமானின் சம்பந்தம் பெற்றவர்கள் என்று கூறவும் வேண்டுமா?
அப்படி இல்லை என்றால் அவர்களால் இவ்வாறு அறிய இயலாது அல்லவா?

த்வயத்தில் சப்தத்தையே மறைத்து போவார்கள்–கடை சரக்கு அன்று இது–
நிபுடம்-ரகசியம்- பிராட்டியை உள் வைத்து இருப்பதால்–நிதி
புதையலை எடுத்த பின்னர், அதனைக் கொண்டு ஆபரணம் செய்வது முதலான செயல்களைச் செய்து
புதையலைப் பயனுள்ளதாக்குகிறோம்.
இது போன்று ஸ்ரீரங்கநாச்சியாரைப் பற்றிய ஞானம் உண்டான பின்னர்,
அவள் மூலமாக நம்பெருமாள் என்ற ஆபரணத்தைப் பெற்று விடுகிறோம்.

பத்தி சித்தாஞ்சனத்தால் பகவதி மறையில் முடி
வைத்த நின் மகிமை கண்டு மனக் கணின் நிதியே போலத்
துய்த்திடுவோர்கள் செல்வி துகளறு பாக்கியத்தால்
மெய்த் திருவான தெய்வப் பிறவியே மேயார் அன்றே –12

மெய்த் திரு -உண்மைச் சம்பத்து
தெய்வப் பிறவி -தைவீ சம்பத் -உள்ளவர்கள்
மேயார் -மேவியார் -மேயான் வேங்கடம் -எனபது போலே –

——————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திரு மலை நல்லான் ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: