ஸ்ரீபராசரபட்டர்–அருளிச் செய்த -ஸ்ரீ குண ரத்ன கோஸம்- ஸ்ரீ ஸூவர்ண குஞ்சிகா–ஸ்லோகங்கள் –5-6-7-8–

கீழ் இரண்டு ஸ்லோகங்களில் இவர் வேண்டினபடியே பிராட்டி குளிரக் கடாஷித்து அருள
ஸ்வரூபாதிகளை நேரே சாஷாத் கரித்து-
பிரமன் முதலியோரும் துதிக்க அரிய இந்த வைபவத்தையோ நான் துதிப்பது –
அழகிது வாழ்க என் சிறந்த வாக்கு என்று தம்மையே தாம் பரிஹசித்துக் கொள்கிறார் –

யத் யாவத் தவ வைபவம் ததுசித ஸ்தோத்ராய தூரே ஸ்ப்ருஹா
ஸ்தோதும் கேவயம் இதி அத: ச ஜக்ருஹு: ப்ராஞ்ச: விரிஞ்சி ஆதயச்ச
அபி ஏவம் தவ தேவி வாங் மநஸயோ: பாஷா அநபிக்ஞம் பதம்
காவாச: ப்ரயாதாமஹே கவயிதும் ஸ்வஸ்தி ப்ரசஸ்த்யை கிராம்.—-ஸ்லோகம் – 5-

யத் -என்ன ஸ்வரூபம் உடையது –
யாவத் -என்ன அளவுடையது -என்றபடி
தவ வைபவம் -இறைவனது வைபவத்திலும் வேறுபாடு தோன்ற உனது வைபவத்தை –
தூரோ ஸ்ப்ருஹ–ஸ்ப்ருஹ-விருப்பம் -முயன்று என்னாமல்-விரும்பத் தக்க பலம் –
முக்தியை விட இத்தை அன்றோ விரும்புவார்கள் –
தூரோ நடுவில் வைத்து ஸ்தோத்ரத்துடன் ஸ்ப்ருஹையை சேர ஒட்டாமல் -அமைந்த அழகு
பொருளில் மட்டும் அன்றி சொல்லிலும் சேர ஒட்டாமல் அமைந்துள்ளதே-

ஸ்தோதும்கே வயமித்யதச்ச ஜக்ருஹூ ப்ராஞ்சோ விரிஞ்ச்யாத்ய –
ப்ராஞ்ச-நீண்ட கால அறிவும் அனுபவமும் வாய்க்கப் பெற்ற-
விரிஞ்சி -படைப்பவன் -பிரமன் -என்றபடி சகாரம் அவன் முதலாக அனைவராலும் –
அத -சுட்டுச் சொல் -இதம் -ஏதத் அத தத் -நான்கு சுட்டுச் சொற்கள்
கண் எதிரில் நெருங்கி உள்ளதை -இதம் -என்றும் -மிகவும் நெருங்கி உள்ளதை ஏதத்-என்றும் –
தொலைவில் உள்ளதை அத -என்றும் -கண்ணுக்குத் தெரியாததை தத் -என்றும் சுட்ட வேண்டும்
பிராட்டியுடைய வைபவம் ப்ரஹ்மாதிகளுக்கும் ஸ்துதிக்க அரிதாம் படி தொலைவில் உள்ளதால் -அத -என்கிறார்

அப்யே வந்ததவ தேவி வாங்மனஸ் யோர் பாஷா நபிஹ்ஞம் பதம்-
அப்யேவம்-ஏவம் அபி
பாஷா -பேசுதல் -இலக்கணையால் பழகுதல் –
பதம் -பத்யத இதி பதம் -பெற்று அனுபவிக்கத் தகும் -பிராட்டியினது வைபவம் –

காவாச ப்ரயதா மஹே கவயிதம் ஸ்வஸ்தி ப்ரசச்த்யை கிராம்-
ப்ரயதா மஹே-விடாப்பிடியாக முயல்கின்றோம் –சாபலத்தால் முயல்வதால் ப்ர விசேஷணம்-
கவயிதும் -பிராட்டியின் வைபவத்தை உள்ளது உள்ளபடி சொல்லி விடுகை அன்றிக்கே இல்லாததும் புனைந்து
கவிஞர் போல் வருணிக்கவும் புகுந்தேன் –

பிராட்டி மகிழ்ந்து புகர் பெற்று தனது ஸ்வரூபாதிகளை நேரே காட்டிக் கொடுத்தருள -தேவி -என்று விளித்து
நினது என்று முன்னிலைப் படுத்தி அருளிகிறார் –

அம்மா! ஸ்ரீரங்கநாயகியே! உன்னுடைய மகிமையானவை எப்படிப்பட்டவை, அதற்கு அளவு ஏதும் உள்ளதா,
அது எத்தன்மை உடையது என்று உணர்ந்து, அந்த மகிமைகளைப் புகழ்ந்து கூறும் விருப்பம் யாருக்கு உள்ளது?
பல யுகங்களாக இருந்து, அதனால் மிகவும் அனுபவமும் அறிவும் பெற்றுத் திகழ்கின்ற ப்ரம்மன் முதலானோர்,
உன்னைப் பற்றிப் புகழ்ந்து பாடுவதற்கு எண்ணம் கொண்டனர். ஆயினும் அவர்கள்,
“இவளைப் பற்றி நம்மால் புகழ்ந்து பாட இயலுமா? நாம் எம்மாத்திரம்?”, என்று கூறும் சொற்களையே கூறினர்.
இப்படியாகச் சொற்களால் மட்டும் அன்றி மனதால் கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு உனது பெருமைகள் உள்ளன.
இதனை நன்றாக அறிந்திருந்தும், உனது பெருமைகளை வர்ணிக்கச், சரியாகச் சொற்களைக் கூட அமைக்கத் தெரியாத நான் முயற்சி செய்கிறேன்.
ஆயினும் உனது அருள் மூலமாக அப்படிப்பட்டச் சொற்களுக்கும் நன்மைகள் உண்டாக வேண்டும்.
ஸ்ரீரங்கநாச்சியார், “யாரும் செய்யத் துணியாத செயலை இந்தக் குழந்தை செய்கிறது.
நாம் ஆதரிப்போம்”, என்று எண்ணி, தன்னைக் கடாக்ஷிப்பாள் என்றார்.

தேவி நின வைபவம் அத்தனைக்கும் சேரும்
திறந்தன வாந் துதி விழைதல் அரிதே யன்றோ
யாவரது துதித்திடற்கு யாம் என்றார்கள்
யாத் தசகத்தான் முதலா முன்னோர் கூட
நா வலிமை இல்லாதேம் நாமானாலும்
நா மனங்கள் பழகலா நின் வைபவத்தைப்
பா வரிசை பாடிடவே முயல்கின்றேமால்
பா வனங்களின் சிறப்பு வாழ்க மாதோ –5

———-

பிரமன் முதலியோரும் ஸ்துதிக்க அறிய பிராட்டியினது வைபவத்தை ஸ்துதிக்க நானே உரியேன் -என்கிறார் –

ஸ்தோதாரம் உசந்தி தேவி கவய: யோவிஸ்த்ருணீதே குணாந்
ஸ்தோதவ்யஸ்ய ததச்ச தே ஸ்துதிதுரா மய்யேவ விச்ராம்யதி
யஸ்மாத் அஸ்மத் அமர்ஷணீய பணிதி ஸ்வீகாரத: தே குணா:
க்ஷாந்தி ஔதார்ய தயா ஆதய: பகவதி ஸ்வாம் ப்ரஸ்துவீரந் ப்ரதாம்.–ஸ்லோகம் – 6-

ஸ்தோதாரன் தம் உசந்தி-உசந்தி -விரும்புகிறார்கள்
தேவி கவையோ -கவய -அறிஞர்கள்
யோ விஸ்த்ருணீதே குணான் ஸ்தோதவ்யஸ்ய -ஸ்துதிக்கத் தக்கதனுடைய குணங்களை விவரிகின்றானோ –
ததச்சதே-ஆகையினாலே உன்னைக் குறித்து
ஸ்துதி துரா மய்யேவ விஸ்ராம்யதி-ஸ்துதிக்கும் பொறுப்பு என்னிடமே முடிவடைகிறது –
யஸ்மாத் அஸ்மத் அமர்ஷணீய பணிதி ஸ்வீகாரத: -ஏன் எனில் எமது பொறுக்க ஒண்ணாத சொற்களை ஏற்பதனால்
தஸ்தே குணா ஷாந்த்யௌதார்ய தயாதயோ பகவதி ஸ்வாம் ப்ரஸ்து வீரன் ப்ரதாம்-நினது பொறுமை கொடை தயவு
முதலிய குணங்கள் பிரசித்தியை வெளியிடும் –

என்னைப் போன்ற புன்சொல் யுடையார் வேறு யாரும் இலராதலின் யானே பிராட்டியைத் ஸ்துதிப்பிக்க அதிகாரி ஆயினேன் –
மய்யேவ என்று கீழே ஒருமையில் சொல்லி அஸ்மத் என்று பன்மையில் தமது இழவு தோற்ற அருளுகிறார் –
நம் போன்ற அனுசந்திப்பவர்களையும் சேர்த்துக் கொள்கிறார் என்றுமாம் –
தே குணா -பகவான் குணம் போன்ற ஸ்வாதந்த்ரம் கலசாத திருக் குணங்கள் –

ஸ்ரீரங்கநாயகியே! தேவி! பகவானாகிய நம்பெருமாளுக்கு ஏற்றவளே!
இந்த உலகத்தில் உள்ள நல்லவர்கள் அனைவரும், யார் ஒருவனை விரும்புவார்கள் என்றால் –
எந்த ஒரு பொருள் துதிக்கத்தக்கதாக உள்ளதோ,
ஆனால் அந்தப் பொருளின் குணங்களை முழுவதுமாக யாராலும் விவரிக்க இயலாமல் உள்ளதோ,
அந்தப் பொருளை ஒருவன் அதன் குணங்களுடன் விவரித்தான் என்றால் – அவனையே பெரிதும் மதிப்பார்கள் .

இப்படிப்பட்ட அபூர்வமான பொருளாக இருக்கும் உன்னையும் , உனது குணங்களையும் வர்ணித்துத் துதிபாடும்
முழுத் தகுதியும் எனக்கே வந்து விட்டது, இது எப்படி என்றால் –
நான் உன்னைத் துதிக்கும்போது எனது தாழ்மையான வாய் மூலமாக, பொருத்தம் இல்லாத சொற்கள் வந்து நிற்கும் .
ஆயினும் அதனை நீ மிகவும் மனம் மகிழ்ந்து கேட்டு நிற்பாய்.
இதன் மூலம் உனது உன்னதமான குணங்களான –
குற்றங்களைப் பொறுத்தல்,
அந்தக் குற்றங்களையும் பெருந்தன்மையுடன் ஏற்பது,
எனக்குச் சரியாகத் துதித்துக் கூற சொற்கள் அமையவில்லையே என்று நான் துன்பப்படுவதைக் கண்டு
என் மீது வருத்தம் கொண்டு எனக்கு அருளுதல் (தயை) – ஆகியவை தாமாகவே வெளிப்பட்டுவிடுகிறது அல்லவோ?

தாழ்ந்த சொற்களால் புகழப்படும் ஸ்ரீரங்கநாச்சியார், அந்தத் தாழ்ந்த சொற்களையும் பொறுத்துக் கொள்கிறாள் அல்லவா?
இதன் மூலம் அவளது க்ஷாந்தி குணம் – குற்றங்களைப் பொறுத்தல் – வெளிப்படுகிறது.
“இந்தக் குழந்தை தனது தாழ்ந்த சொற்கள் கொண்டு என்னைத் துதித்துவிட்டது என்று இதனை உலகம் பழிக்கக் கூடாது,
என்னைத் துதிக்க இது மிகவும் தடுமாறுகிறதே”, என்று தனது மனதில் என் மீது இரக்கம் கொள்கிறாள்.
இதன் மூலம் அவளது தயை வெளிப்படுகிறது.
அந்தச் சொற்களையும் ஏற்றுக் கொள்வதன் மூலம் அவளது வாத்ஸல்யம் – குற்றத்தையும் குணமாகக் கொள்ளுதல் – வெளிப்படுகிறது.
இதனால் எனது சொற்களுக்கு அதிகமான மேன்மையை அளித்துவிடுகிறாள். இதனால் அவளது ஔதார்யம் வெளிப்படுகிறது.

ஆக, எனது சொற்கள் கொண்டு அவளது குணங்களை நான் புகழ வேண்டிய அவசியம் இல்லை.
எனது துதிகள், அவளது குணங்கள் தாமாகவே வெளிப்படக் காரணமாக உள்ளனவே – என்றார்.

வட தளம்- தேவகி உதரம்- வேத சிரஸ்- சடகோப வாக்கிலும் – திரு மேனியிலும் காணலாம்-
அது போல நீயே உன்னை பாடி கொள்ள வேணும் என்கிறார்..

துதித்திடுவோன் துதிபடுவதன் கணுள்ள
தூய குணங்களை விரிப்போன் என்பர் மேலோர்
துதித்திடு நற் பொறுப்பதனால் எந்தன் மீதே
சுமந்து விடும் ஏன் என்னில் பொறுக்க ஒணாத
அதிப் பிழைகள் படும் எமது சொற்கள் ஏற்ப
தரிதேனும் பகவதி நீ ஏற்றுக் கொள்வாய்
இதிற் பல நின் பொறை கொடை தண்ணளி முன்னான
இயற் குணங்கள் தேவி நனி விளங்கும் அன்றே –6

——————

பொறுக்க ஒணாத எனது சொல்லை ஏற்பதை விட நல்ல கவிதையாகத் தன ஸ்துதியை
பிராட்டியே பூர்த்தி செய்து கொள்வாளாக -என்கிறார்-

ஸூக்திம் ஸமக்ரயது ந: ஸ்வயம் ஏவ லக்ஷ்மீ:
ஸ்ரீரங்கராஜ மஹிஷீ மதுரை: கடாக்ஷை:
வைதக்த்ய வர்ணகுண கும்பந கௌரவை: யாம்
கண்டூல கர்ண குஹரா: கவய: தயந்தி–ஸ்லோகம் – 7-

ஸூக்திம் சமக்ரயது நஸ் ஸ்வயமேவ லஷ்மீ ஸ்ரீ ரங்கராஜ மஹிஷீ மதுரை கடாஷை –
ஸ்ரீ ரங்கராஜனுடைய பட்டத்தரசியான ஸ்ரீ ரங்க நாச்சியார்
இனிய கடாஷங்களினால் நமது நல் வாக்கை தானே பூர்த்தி செய்து கொள்வாளாக –

மதுரை: கடாக்ஷை: – என்பது காண்க. இவளது பார்வை மிகவும் குளிர்ந்தது. இதனைக் கூறுவதற்கு முன்னால்,
இவளை ஸ்ரீரங்கராஜனின் மஹிஷி என்றது காண்க. இவ்விதம் கூறக் காரணம் –
அரங்கனின் பார்வையானது சரிசமமானதாகும் – தண்டனை அளிப்பதாகவும், கருணை பொழிவதாகவும் அவனது பார்வை உள்ளது.
ஆனால் இவள் பார்வை அப்படிப்பட்டது அல்ல என்று சுட்டிக் காட்டவே, அவனது மஹிஷி என்றார்.
இவள் பார்வையானது கருணையை மட்டுமே பொழியவல்லது.
முன்னுரு செய்து அருளிய திருவாய்மொழி போலே இல்லாமல் கடாஷமே போதும் —

வைதக்ய வர்ண குண கும்பந கௌரவைர் –
வைதக்யமாவது அணி சுவை முதலிய பொருள் திறம் -சாமர்த்ய்மாக என்றுமாம் –
வர்ண -எழுத்து குணங்கள் -தெளிவு மென்மை இனிமை
கும்பந கௌரவம் -சொற் கோப்பின் சிறப்பு-
பொருள் திறம் என்ன எழுத்துக் குணங்கள் என்ன சேர்த்திச் சிறப்பு என்ன இவைகளினாலே –

யாம் கண்டூல கர்ண குஹரா கவையோ தயந்தி –
அறிஞர்கள் தினவெடுத்த காதின் தொளைகளை உடையவர்களாய் குடிக்கின்றார்களோ –
கேட்கப் பேராவல் கொண்டவர்கள் என்றபடி –
குடிக்கின்றார்கள் என்றதால் அமுதம் போன்ற இனியது என்றதாயிற்று-

ஸ்ரீரங்கநாயகியைக் குறித்த இந்த ஸ்லோகங்களில் குறையுடன் கூடிய சொற்கள் பல இருக்கக்கூடும்.
ஆயினும் அவற்றைத் திருத்த நான் எந்தவிதமான முயற்சியும் செய்யவில்லை.
அந்த ஸ்ரீரங்கநாதனின் பட்ட மஹிஷியான ஸ்ரீரங்கநாச்சியார் இவற்றைப் பிழை திருத்தி ஏற்றுக் கொள்வாள்.
இப்படியாக என் மீதும், எனது துதிகள் மீதும், குளிர்ந்த அவள் அருள் பார்வை பொழிந்து நிற்கும்.
இதன் மூலம் எனது துதிகளில் பொருள் விளக்கும்
அழகு (அணி போன்றவை) , சொல்லின் அழகு, தெளிவான நடை, இனிமையான பதங்கள் போன்றவை தாமாகவே ஏற்பட்டு விடும்.
இதனால் இந்த உலகில் உள்ள நல்லவர்கள் எனது ஸ்துதிகளைத் தங்கள் காதுகளால் பருகும் நிலை உண்டாகி விடும்.
ஸ்ரீரங்கநாச்சியார் இதனைக் குழந்தையின் மழலைச் சொல்லாக ஏற்று மகிழ்வாள் என்றார்-
இவரே பிழை உள்ளது என்று கூறிவிட்டு, இப்போது நல்ல சொல் என்பது எப்படி?
இந்தச் சொற்கள் தாயாரைப் புகழ்வதால் நல் வாக்கு ஆனது.

நல்லதா முற்றத் தானே நடத்துக நமது சொல்லை
செல்வி சீர ரங்க ராசன் தேவி தன குளிர்ந்த நோக்கால்
சொல்லியை பருத்தச் சீர்மை தொகுப்புறும் குணங்களோடு
வல்லு நர் செவியின் வாஞ்சை மாறிடப் பருகுமாறே –7–

———–

அநாக்ராத அவத்யம் பஹுகுண பரீணாஹி மநஸ:
துஹாநம் ஸௌஹார்த்தம் பரிசிதம் இவ அதாபி கஹநம்
பதாநாம் ஸௌப்ராத்ராத் அநிமிஷ நிஷேவ்யம் ஸ்ரவணயோ:
த்வம் ஏவ ஸ்ரீ: மஹ்யம் பஹுமுகய வாணீ விலஸிதம்.–ஸ்லோகம் – 8-

அநாக்ராதாவத்யம் -அ நாக்ராத அவத்யம் –தோஷ கந்தமே இல்லாததும்
பஹூ குண பரீணாஹி -பல கல்யாண குணங்களின் பெருக்கத்தை யுடைய
மனசோ-துஹா நம் சௌஹார்த்தம்-ரசிகர்களின் மனதிற்கு களிப்பை காப்பதும்
பரிசுதமிவ-பழகியது -அர்த்தம் தெரிந்தது போன்றதும்
அதாபி கஹ நம் -ஆயினும் ஆழ்பொருளை உடையதும் –
பரிசிதம என்பதால் தெளிவும் கஹநம் என்பதால் காம்பீர்யம்
கீழ் ஸ்லோகத்தில் அருளிய வைதக்த்யம் வர்ண குணம் விவரிக்கப் பட்டது-
பதா நாம் சௌப்ராத்ரா தநிமிஷ நிஷேவ்யம் ஸ்ரவணயோ-சொற்களின் சேர்க்கையினாலே செவிகளுக்கு இமை கொட்டாமல் கேட்கத் தக்கதுமான
த்வமேவ ஸ்ரீர் மஹ்யம் பஹூமுகய வாணீ விலஸிதம் –வாக் விலாசத்தை எனக்கு நீயே பல வாயிலாகப் பெருக்க வேணும் –

மஹாலக்ஷ்மி! ஸ்ரீரங்கநாயகி! எனக்கு உன்னைக் குறித்து ஸ்துதிகளை இயற்றத் தேவையான வாக்கு வன்மையை,
பல வழிகளில் நீ அளிக்க வேண்டும்.
அப்படி எனக்கு அளித்த வரம் மூலமாக உண்டான ஸ்துதிகள் எப்படி இருக்கவேண்டும் என்றால் –
குற்றம் என்பதன் வாசனையே அவற்றில் இருத்தல் கூடாது;
பலவகையான இலக்கண குணங்கள் (நடை, பொருள் போன்றவை) அதில் காணப்பட வேண்டும்;
அதன் பொருளானது முன்பே கேள்விப்பட்டது போன்று எளிதில் விளங்குவதாக இருக்க வேண்டும்;
இனிமையான சொற்கள் கோர்வையாக இணைந்து, அந்த ஸ்துதிகளைக் கேட்பவர்களின் காதுகளை மூடாமல் விளங்க வேண்டும்.

ஸரஸ்வதி இவளது அடிமையாக உள்ளதால், அவளிடம் வேண்டுவதையும் ஸ்ரீரங்கநாச்சியாரிடமே வேண்டுகிறார்.
ஸரஸ்வதி இவளது அடிமை என்பதை, இவரது தந்தையான கூரத்தாழ்வான் – பாரதீ பகவதீ து யதீயதாஸி – என்றார்.

குற்றத்தின் வாடை யற்றுக் குணம் பல பல்கி நெஞ்சில்
குற்ற வின்பத்தை நல்கி உள்ளுற்று ஆழ்ந்து எளிய தேனும்
சொற்றச் சொல்லியையைப் பெற்றுச் சுருதிகள் இமையாது ஏற்கும்
பெற்றிய வாணி லீலை பெருக்குக திருவே நீயே –8–

—————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திரு மலை நல்லான் ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: