ஸ்ரீரங்கம் –25 வகையான ஏழின் சிறப்பு–

*ஸ்ரீரங்கம் ~ ஏழின் சிறப்பு..!*

*01.* ஏழு உலகங்களை உள்ளடக்கிய பொருளில் *ஏழு பிரகாரங்களுடன்.,
ஏழு மதில்களை* கொண்டுள்ளது ஸ்ரீரங்கம் கோவில்.

*02.* ஏழு *பெரிய* பெருமை உடைய….
1) பெரிய கோவில்.,
2) பெரிய பெருமாள்.,
3) பெரிய பிராட்டியார்.,
4) பெரிய கருடன்.,
5) பெரியவசரம்.,
6) பெரிய திருமதில்.,
7) பெரிய கோபுரம்.,
இப்படி அனைத்தும் *பெரிய* என்ற சொற்களால் வரும் பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில்….

*03.* ஸ்ரீரங்கம் அரங்கனாதருக்கு ஏழு நாச்சிமார்கள்….
1) ஸ்ரீதேவி.,
2) பூதேவி.,
3) துலுக்க நாச்சியார்.,
4) சேரகுலவல்லி நாச்சியார்.,
5) கமலவல்லி நாச்சியார்.,
6) கோதை நாச்சியார்.,
7) ரெங்க நாச்சியார் ஆகியோர்….

*04.* ஸ்ரீரங்கம் கோவிலில் வருடத்திற்கு ஏழு முறை நம்பெருமாள்
தங்க குதிரை வாஹனத்தில் எழுந்தருளுவார்….
1) விருப்பன் திருநாள்.,
2) வசந்த உற்சவம்.,
3) விஜயதசமி.,
4) வேடுபரி.,
5) பூபதி திருநாள்.,
6) பாரிவேட்டை.,
7) ஆதி பிரம்மோத்சவம்.,
ஆகியவை….

*05.* ஸ்ரீரங்கம் கோவிலில் வருஷத்திற்கு ஏழு முறை (மாதங்கள்) நம்பெருமாள்
திருக்கோவிலை விட்டு வெளியே எழுந்தருளுவார்….
1) சித்திரை.,
2) வைகாசி.,
3) ஆடி.,
4) புரட்டாசி.,
5) தை.,
6) மாசி.,
7) பங்குனி….

*06.* ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் உற்சவத்தில் ஏழாம் திருநாளன்று
வருஷத்திற்கு ஏழு முறை (மாதங்கள்) நம்பெருமாள் நெல்லளவு கண்டருளுவார்….
1) சித்திரை.,
2) வைகாசி.,
3) ஆவணி.,
4) ஐப்பசி.,
5) தை.,
6) மாசி.,
7) பங்குனி….

*07.* ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் நவராத்திரி உற்சவத்தில் *ஏழாம் திருநாளன்று*
ஸ்ரீரங்க நாச்சியார் திருவடி சேவை நடைபெறும்.

*08.* தமிழ் மாதங்களில் *ஏழாவது மாதமான ஐப்பசி மாதத்தில் மட்டும்* (30 நாட்களும்)
தங்க குடத்தில் புனித நீர் யானை மீது எடுத்து வரப்படும்.

*09.* ராமபிரானால் பூஜிக்கப்பட்ட பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில்.
*ராமாவதாரம் ஏழாவது* அவதாரமாகும்.

*10.* இராப்பத்து *ஏழாம் திருநாளன்று* நம்பெருமாள் திருகைத்தல சேவை நடைபெறும்.

*11.* ஸ்ரீரங்கம் தாயார் சன்னதியில் வருடத்திற்கு ஏழு உற்சவங்கள் நடைபெறும்.
1) கோடை உற்சவம்.,
2) வசந்த உற்சவம்.,
3) ஜேஷ்டாபிஷேகம்., திருப்பாவாடை.,
4) நவராத்திரி.,
5) ஊஞ்சல் உற்சவம்.,
6) அத்யயநோத்சவம்.,
7) பங்குனி உத்திரம்….

*12.* பன்னிரண்டு ஆழ்வார்களும் *ஏழு சன்னதிகளில்* எழுந்தருளி இருக்கிறார்கள்.
1) பொய்கையாழ்வா., பூதத்தாழ்வார்., பேயாழ்வார்.,
2) நம்மாழ்வார்., திருமங்கையாழ்வார்., மதுரகவியாழ்வார்.,
3) குலசேகராழ்வார்.,
4) திருப்பாணாழ்வார்.,
5) தொண்டரடிப் பொடியாழ்வார்.,
6) திருமழிசையாழ்வார்.,
7) பெரியாழ்வார்., ஸ்ரீஆண்டாள்….

*13.* இராப்பத்து *ஏழாம் திருநாள்* நம்மாழ்வார் பராங்குச நாயகி அலங்காரத்தில் வருவதால்
அன்று மட்டும் ஸ்ரீஸ்தவம் மற்றும் ஸ்ரீகுணரத்ன கோசம் சேவிக்கப்படும்….

*14.* பெரிய பெருமாள் திருமுக மண்டலம் உள்ள இடமான தென் திசையில் *ஏழு கோபுரங்கள்* உள்ளன.
1) நாழிகேட்டான் கோபுரம்.,
2) ஆர்யபடாள் கோபுரம்.,
3) கார்த்திகை கோபுரம்.,
4) ரங்கா ரங்கா கோபுரம்.,
5) தெற்கு கட்டை கோபுரம் – I.,
6) தெற்கு கட்டை கோபுரம் – II.,
7) ராஜகோபுரம்….

*15.* ஏழு உற்சவத்தில் குறிப்பிட்ட மண்டபங்களை தவிர மற்ற மண்டபங்களுக்கு பெருமாள் எழுந்தருள மாட்டார்.
1) வசந்த உற்சவம் ~ நீராழி மண்டபம்.,
2) சங்கராந்தி ~ சங்கராந்தி மண்டபம்.,
3) பாரிவேட்டை ~ கனு மண்டபம்.,
4) அத்யயநோற்சவம் ~ *(தெரிந்தவர்கள் கூறுங்கள்)*
5) பவித்ர உற்சவம் ~ பவித்ர உற்சவ மண்டபம்.,
6) ஊஞ்சல் உற்சவம் ~ ஊஞ்சல் உற்சவ மண்டபம்.,
7) கோடை உற்சவம் ~ நாலுகால் மண்டபம்….

*16.* ஏழு சேவைகள் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே கண்டு களிக்கும் சேவைகளாகும்….
1) பூச்சாண்டி சேவை.,
2) கற்பூர படியேற்ற சேவை.,
3) மோகினி அலங்காரம்., ரத்னங்கி சேவை.,
4) வெள்ளி கருடன் மற்றும் குதிரை வாஹனம்.,
5) உறையூர்., ஸ்ரீரங்கம் மற்றும் ராமநவமி சேர்த்தி சேவை.,
6) தாயார் திருவடி சேவை.,
7) ஜாலி சாலி அலங்காரம்….

*17.* திருக்கோயில் வளாகத்தில் உள்ள *ஏழு மண்டபங்களில்* நம்பெருமாள் ஒரு நாள் மட்டுமே எழுந்தருள்வார்….
1) நவராத்ரி மண்டபம்.,
2) கருத்துரை மண்டபம்.,
3) சங்கராந்தி மண்டபம்.,
4) பாரிவேட்டை மண்டபம்.,
5) சேஷராயர் மண்டபம்.,
6) சேர்த்தி மண்டபம்.,
7) பண்டாரம் ஆஸ்தான மண்டபம்….

*18.* திருக்கோவிலில் உள்ள *ஏழு பிரகாரங்களிலும் பெருமாளின் ஏழு திருவடிகள்* உள்ளன.

*19.* *ஏழு பிரகாரங்களிலும் ஏழு திருமதில்கள்* அமையப் பெற்றுள்ளன.

*20.* திருக்கோயில் வளாகத்தில் *ஏழு ஆச்சார்யர்களுக்கும்* தனி சன்னதி உள்ளது….
1) ராமானுஜர்.,
2) பிள்ளை லோகாச்சாரியார்.,
3) திருக்கச்சி நம்பி.,
4) கூரத்தாழ்வான்.,
5) வேதாந்த தேசிகர்.,
6) நாதமுனி.,
7) பெரியவாச்சான் பிள்ளை….

*21.* சந்திர புஷ்கரிணியில் *ஆறு முறையும்.,* கொள்ளிடத்தில் *ஒருமுறையும்* இப்படியாக
*ஏழு முறை* சின்ன பெருமாள் தீர்த்தவாரி கண்டருள்வார்….
1) விருப்பன் திருநாள் ~ சித்திரை மாதம்.,
2) வசந்த உற்சவம் ~ வைகாசி மாதம்., (3) பவித்ரோத்சவம் ~ ஆவணி மாதம்.,
4) ஊஞ்சல் உற்சவம் ~ ஐப்பசி மாதம்.,
5) அத்யயன உற்சவம் ~ மார்கழி மாதம்.,
6) பூபதி திருநாள் ~ தை மாதம்.,
7) பிரம்மோத்சவம் ~ பங்குனி மாதம்….

22. நம்பெருமாள் *மூன்று முறை எழுந்தருளும் ஏழு வாஹனங்கள்*….
1) யானை வாஹனம் ~ சித்திரை., தை., மாசி.,
2) தங்க கருடன் வாஹனம் ~ சித்திரை., தை., பங்குனி.,
3) ஆளும் பல்லக்கு ~ சித்திரை., தை., பங்குனி.,
4) இரட்டை பிரபை ~ சித்திரை., மாசி., பங்குனி.,
5) சேஷ வாஹனம் – சித்திரை., தை., பங்குனி.,
6) ஹனுமந்த வாஹனம் – சித்திரை., தை., மாசி.,
7) ஹம்ச வாஹனம் ~ சித்திரை., தை., மாசி….

23. மாசி மாதம் நடைபெறும் திருப்பள்ளியோடம் திருவிழாவில் நம்பெருமாள்
*ஏழு வாஹனங்களில் மட்டும்* உலா வருவார்.

24. கற்பக விருட்சம்.,
ஹனுமந்த வாஹனம்.,
சேஷ வாஹனம்.,
சிம்ம வாஹனம்.,
ஒற்றை பிரபை ஆகிய இந்த ஐந்து வாஹனங்கள்
தங்கத்திலும் யாளி வாஹனம்., இரட்டை பிரபை ஆகிய இந்த இரண்டு வாகனங்கள் வெள்ளியிலும் ~ ஆகிய
*ஏழு வாஹனங்களை தவிர* மற்ற அனைத்து வாகனங்கள் வெள்ளியிலோ அல்லது தங்கத்திலோ ஆனது.

25. மற்ற கோவில்களில் காண முடியாதவை….
1) தச மூர்த்தி.,
2) நெய் கிணறு.,
3) மூன்று தாயார்கள் ஒரே சன்னதியில்.,
4) 21 கோபுரங்கள்.,
5) நெற்களஞ்சியம்.,
6) தன்வந்தரி.,
7) நான்கு திசைகளிலும் ராமர் சன்னதி….

கொடுக்கப்பட்டுள்ள 25ல் ~ இரண்டையும்., ஐந்தையும் கூட்டினால் வருவது ஏழு (2 + 5 = 7)

———————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: