ஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ உத்தர காண்டம்–110–ஸஹானுகம ஸ்ரீராம ஸ்வர்காரோஹனம் (உடன் வந்தவர்களுடன் ஸ்ரீ ராமர் சுவர்கம் செல்லுதல்)–

அத்தியாயம் 110 (647) ஸஹானுகம ஸ்ரீராம ஸ்வர்காரோஹனம் (உடன் வந்தவர்களுடன் ஸ்ரீ ராமர் சுவர்கம் செல்லுதல்)

நதியை நோக்கி அரை யோஜனை தூரம் சென்றபின், சரயூ நதியின் பாவனமான ஜலத்தை ரகுநந்தனன் கண்டார்.
நதியில் சுழல் சுழலாக தண்ணீர் பிரவகித்து கொண்டிருந்தது. நாலாபுறமும் நதியை பார்த்தபடி கரையில் வந்து பிரஜைகளுடன் நின்றார்.

அந்த முஹுர்த்தத்தில், பிதாமகர் ப்ரும்மா, தேவர்களும் ரிஷிகளும் சூழ, மற்றும் பல மகான்களோடு வந்து சேர்ந்தார்.
காகுத்ஸன் ஸ்வர்கம் செல்லத் தயாராக வந்து நின்ற இடத்தில், பல திவ்ய விமானங்கள், நூறு, கோடிக் கணக்காக வந்து இருந்தன.

ஆகாயமே திவ்ய ஜோதி பரவி பிரகாசமாக இருந்தது. தாங்களே பிரபையுடன், தன் தேஜஸால் ஸ்வர்கம் செல்லும் புண்யாத்மாக்கள்,
புண்ய கார்யங்களை, நற்செயல்களைச் செய்தவர்கள், இவர்களால் அங்கு வீசிய காற்றே பாவனமாக ஆயிற்று.

சுகமாக, வாசனையாக காற்று வீசியது. தேவர்கள் பூமாரி பொழிந்தனர். ராமர் சரயூ நதியில் கால் வைத்தவுடன்
நூற்றுக்கணக்கான கந்தர்வ, அப்ஸர கணங்கள் வாத்யங்களை முழங்கினர்.

அந்தரிக்ஷத்திலிருந்து பிதாமகர் விஷ்ணோ, வா, வா, உனக்கு மங்களம். ராகவா, எங்கள் பாக்கியம்.
சகோதரர்களுடன் வந்து சேர்ந்தாய். (சகோதர்களுடன் என்று பன்மையில் சொன்னதால்,
லக்ஷ்மணனும் அங்கு சேர்ந்தான் என்பது தீர்த்தருடைய உரை).

மற்ற தேவர்களும் உடன் வர, உன் இருப்பிடமான ஸ்வர்கத்தில் காலடி எடுத்து வை.
தன் இயல்பான சரீரத்தை ஏற்றுக் கொள், எந்த சரீரம் விருப்பமானதோ, பழமையான வைஷ்ணவீம்- விஷ்ணுத் தன்மை அல்லது,
பரப்ரும்ம ஸ்வரூபத்தையோ ஏற்றுக் கொள். தேவா, தாங்கள் தான் உலகுக்கு கதி.

யாரும் உங்களை உள்ளபடி அறிந்தவர்கள் என்பது இல்லை. விசாலாக்ஷியான மாயா தேவியைத் தவிர,
உங்கள் முன் அவதாரங்களை யார் அறிவார். நினைத்து பார்க்க முடியாத உங்களை, (அசிந்த்யம்),
வியாபித்து மகானாக இருப்பவரை (மஹத்பூதம்), அழிவில்லாதவரை (அக்ஷயம்),
அனைத்தையும் தன்னுள் அடக்கியவரை (சர்வ சங்க்ரஹ) என்ற ரூபங்க ளில் தாங்கள் விரும்பும் ரூபம் எதுவோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்.

பிதாமகர் சொன்னதைக் கேட்டு, சற்று யோசித்து, சகோதரர்கள் சரீரத்துடன், தன் சரீரமும் சேர வைஷ்ணவமான
தன் தேஜஸை ஏற்றுக் கொண்டார். தேவதைகள் உடனே விஷ்ணு மயமான தேவனை பூஜித்தார்கள்.

ஆதித்யர்கள், மருத்கணங்கள், இந்திரர்கள், அக்னி முதலானவர்கள், மற்றும் உள்ள திவ்யமான ரிஷி கணங்கள்,
கந்தரவ, அப்ஸர, நாக, யக்ஷர்கள், தைத்யர்கள், தானவ, ராக்ஷஸர்கள் அனைவரும், நினைத்ததை சாதித்து
பூர்ணமாக ஆனவரை சாது, சாது என்று போற்றி புகழ்ந்தனர்.

இதன் பின் விஷ்ணு, பிதாமகரிடம், இதோ என்ணுடன் வந்துள்ள ஜனங்கள், இவர்களுக்கும் இடம் தர வேண்டும் என்றார்.
இவர்கள் அனைவரும் ஸ்னேகத்துடன் என்னைத் தொடர்ந்து வந்துள்ளனர்.

பக்தர்கள். இவர்களை நாமும் கவனித்து மதிப்புடன் நடத்த வேண்டும். ஆத்மாவைத் துறந்தவர்கள்
(நான் எனும் எண்ணத்தை விட்டவர்கள்). என் பொருட்டு தியாகம் செய்தவர்கள்.
இதைக் கேட்டு பிதாமகர், இவர்கள் சாந்தானிகர்கள் என்ற உலகை அடையட்டும் என்று ஆசிர்வதித்தார்.

உன்னை நினைத்து உன்னுடன் வந்த பறவைகள், உட்பட அனைத்து ஜீவன்களும், மற்றொரு ப்ரும்ம லோகம்
போன்ற இந்த உலகில் வசிக்கட்டும். வானரங்களும், கரடிகளும், எந்த தேவனின் அம்சமாக புவியில் தோன்றினவோ,
அந்த தேவதைகளுடன் சேரட்டும். சுக்ரீவன் உடனே சூரிய மண்டலத்தில் பிரவேசித்தான்.

தேவர்கள் கண் முன்னே அவரவர் பித்ருக்களை சென்று அடைந்தனர். இவ்வாறு பிதாமகர் சொன்னவுடன்
சரயூ நதியில் முழ்கி அச்சமயம் உயிரை விட்ட பிராணிகள் அனைத்தும், பூவுலகில் இருந்த சரீரத்தை விட்டு விமானத்தில் ஏறி,
தேவலோகத்தின் பிரகாசமான சரீரங்களைப் பெற்றார்கள். திவ்யமான தேவ சரீரத்துடன் ஒளி மயமாகி நின்றார்கள்.

சரயூ நதி தீரம் சென்ற ஸ்தாவர ஜங்கமங்கள், அந்த நீர் மேலே பட்டவுடன் தேவ லோகம் சென்றனர்.
ருக்ஷ (கரடிகள்) வாநரங்கள், ராக்ஷஸர்களும் ஸ்வர்கம் சென்றனர். ஜலத்தில் தங்கள் சரீரத்தை விட்ட அனைவரையும்
தேவ லோகத்தில் ப்ரும்மா, முப்பதாயிரம் பேருடன் வந்து, மகிழ்ச்சியோடு தேவ லோகத்தில் இடம் கொடுத்து அழைத்துச் சென்றார்.

————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: