ஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ உத்தர காண்டம்–107–ஸ்ரீ குச ஸ்ரீ லவாபிஷேக: (ஸ்ரீ குச ஸ்ரீ லவர்க ளின் அபிஷேகம்)–

அத்தியாயம் 107 (644) ஸ்ரீ குச ஸ்ரீ லவாபிஷேக: (ஸ்ரீ குச ஸ்ரீ லவர்க ளின் அபிஷேகம்)

ஸ்ரீ லக்ஷ்மணனை அனுப்பி விட்டு ராமர், தாங்க முடியாத துக்கமும், வேதனையும் அனுபவித்தார்.
புரோஹிதரையும் மந்திரிகள், மற்றும், நீதி முறைகளை அறிந்த அறிஞர்களையும் பார்த்து,
இன்று பரதனை அயோத்யா ராஜ்யத்தில் முடி சூட்டி அபிஷேகம் செய்து வைக்கிறேன்.

அயோத்யாபதியாக பரதன் இருப்பான். நான் வனம் செல்கிறேன். ஏற்பாடுகளைச் செய்யுங்கள்.
நானும் இன்றே லக்ஷ்மணனை தொடர்ந்து செல்கிறேன். பிரஜைகள் திகைத்து தலை வணங்கி நின்றனர்.

செய்வதறியாது, சிலையாக நின்றனர். பரதனும் திகைத்தான். ராஜ்யம் என்ற சொல்லையே
கேட்கப் பிடிக்காதவன் போல, பதில் சொன்னான். சத்யமாக சொல்கிறேன்.
ராமா, ஸ்வர்கமே ஆனாலும், நீ இல்லாத இடத்தில் எனக்கு வாசமே வேண்டாம் என்றான்.

ராஜ்யத்தை வைத்துக் கொண்டு நான் என்ன செய்வேன். எனக்கு ஆசையும் இல்லை.
இதோ இந்த குச, லவர்கள் இருக்கிறார்கள். நராதிபனே, இவர்களை ராஜ்யத்தில் முடி சூட்டி வை.

கோசல தேசத்தில் குசனையும், உத்தர பிரதேசத்தில் லவனையும் அரசனாக்கு.
தூதர்கள் வேகமாக சென்று சத்ருக்னனை அழைத்து வரட்டும்.
நாங்கள் ஸ்வர்காரோஹணம் செய்யப் போவதை மட்டும் சொல்லாமல் அழைத்து வா.

பரதன் சொன்னதையும், ஊர் ஜனங்கள் தலை குனிந்து நிற்பதையும் பார்த்து வசிஷ்டர் சொன்னார்.
வத்ஸ ராமா, இதோ இந்த பிரஜைகளைப் பார். இவர்கள் விருப்பம் என்ன என்று தெரிந்திருந்தும்,
மாறாக இவர்கள் விருப்பப் படாததைச் செய்யாதே.

உடனே ராமன் அவர்களை உற்சாகப் படுத்தி, நான் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்று கேட்டான்.
எல்லோரும் ஏகோபித்த குரலில், நாங்கள் ராமனை பின் தொடர்ந்து செல்வோம்.

ராமன் இருக்கும் இடத்தில் நாங்களும் இருப்போம். அவன் செல்லும் இடம் தொடர்ந்து செல்வோம்.
ராமா, பிரஜைகளிடம் உனக்கு அன்பு உண்டு. ராமா, புத்திரர்கள், மனைவி மக்களோடு எங்களையும் அழைத்துச் செல்.

தபோ வனம் தான் போவாயோ, நுழைய முடியாத கோட்டையோ, காடோ, சமுத்திரமோ, எதுவானாலும் நாங்களும் உடன் வருகிறோம்.
எங்களைத் தியாகம் செய்து விடாதே என்று வேண்டினர். இது தான் எங்கள் விருப்பம். நாங்கள் வேண்டுவதும் இதைத்தான்.

அரசனே, உங்களுடன் கூடவே பயணம் செய்வது தான் எங்கள் ஆசை என்றனர்.
பிரஜைகள் உறுதியாகச் சொன்னதை ராமரும் ஆமோதித்தார். தன் முடிவையும் அன்றே நிச்சயித்து விட்ட ராமர்,
கோஸல தேசத்துக்கு குசனையும், உத்திர பிரதேசத்துக்கு லவனையும் அபிஷேகம் செய்வித்தார்.

நல்ல பாடகர்களான இருவரையும் மடியில் இருத்தி, அணைத்து உச்சி முகர்ந்து,ஆயிரக் கணக்கான ரதங்கள்,
இருபதாயிரம் யானைகள், அதே அளவு குதிரைகள், ஒவ்வொருவருக்கும் தேவையான தனம் இவற்றைக் கொடுத்தார்.

நிறைய தனம், நிறைய ரத்னம், ஆரோக்யமான மகிழ்ச்சி நிறைந்த மக்கள் என்று தன் நகரங்களுக்கு அவர்களை அனுப்பி வைத்தார்.
அதன் பின் சத்ருக்னனுக்கு தூதனை அனுப்பினார்.

————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: