ஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ உத்தர காண்டம்–106–ஸ்ரீ லக்ஷ்மண பரித்யாக: (ஸ்ரீ லக்ஷ்மணனை தியாகம் செய்தல்)–

அத்தியாயம் 106 (643) ஸ்ரீ லக்ஷ்மண பரித்யாக: (ஸ்ரீ லக்ஷ்மணனை தியாகம் செய்தல்)

தலை குனிந்தபடி நின்றிருந்த ராகவனைப் பார்த்து, லக்ஷ்மணன், மதுரமாக சொன்னான்.
என் பொருட்டு வருந்தாதே. காலனின் கதி முன்னாலேயே நிர்ணயிக்கப் பட்டு விடுகிறது.

அப்படித்தான் மன வருத்தமாக இருக்கும். நீ உன் பிரதிக்ஞையை பாலனம் செய். காகுத்ஸா,
தான் கொடுத்த வாக்கை நிறை வேற்றாத அரசர்கள் நரகம் தான் போவார்கள். எனக்குத் தண்டனை கொடு.

மரண தண்டனை தான் என்றாலும் தயங்காதே. தர்மத்தை காப்பாற்று, ராகவா, வதம் செய்து விடு எனவும்
ராமர் தர்மசங்கடத்துக்கு உள்ளானார். மந்திரி வர்கங்களை அழைத்து நடந்ததைச் சொன்னார்.

தாபஸராக வந்தவருக்கு (காலன் )தான் வாக்கு கொடுத்ததையும், துர்வாசர் வந்து அவசரப் படுத்தியதையும் விவரித்தார்.
இதைக் கேட்டு எல்லோருமாக யோசித்தனர். மகான் வசிஷ்டர் சொன்னார். லக்ஷ்மணனை இழக்க உன்னால் முடியாது.

அவன் பிரிவை தாங்க முடியாது தான் என்றாலும், அவனை தியாகம் செய்து விடு. காலனுக்கு கொடுத்த வாக்கும் வீணாகாது.
வாக்கு மீறுவது தர்மத்திற்கு புறம்பானது. அதை அரசன் பாலித்தே ஆகவேண்டும்.

தர்மம் நஷ்டமானால், மூவுலகமும், சராசரமும், தேவ, ரிஷி கணங்களுடன் நாசமாகும். சந்தேகம் இல்லை.
புருஷ சார்துர்லா, நீ தர்ம பாலனம் செய்ய, லக்ஷ்மணனை தவிர்த்து உலகை க்ஷேமமாக இருக்கச் செய்.

எல்லோரும் ஒருமித்துச் சொன்ன ஆலோசனையைக் கேட்ட, ராமர் சபை மத்தியில் லக்ஷ்மணனைப் பார்த்துச் சொன்னார்.
லக்ஷ்மணா, நான் உன்னை விட்டேன். தர்மத்திற்கு மாறாக நான் செய்யக் கூடாது. த்யாகமும் வதமும் ஒன்றே.

நல்ல மனிதர்களுக்கு இரண்டுமே வேதனை அளிக்கக் கூடியதே. ராமர் இப்படிச் சொல்லவும் கண்களில் நீர் நிரம்ப,
மனம் வேதனையில் வாட, வெளியேறிய லக்ஷ்மணன் தன் வீட்டுப் பக்கம் செல்லாமல், நேராக சரயூ நதிக்கரை சென்றான்.

நீரில் மூழ்கி, தன் சுவாசத்தை வெளி விடாமல் அடக்கிக் கொண்டான். மூச்சை அடக்கி, நீரினுள் கிடந்தவனைப் பார்த்து,
இந்திரனுடன் கூட வந்த அப்ஸர கணங்களும், தேவ, ரிஷி கணங்களும் பூமாரி பொழிந்தனர்.

மற்ற ஜனங்களுக்குத் தெரியாமல், இந்திரன், லக்ஷ்மணனைத் தூக்கி, தேவலோகத்தில் சேர்ப்பித்தான்.
விஷ்ணுவின் நான்கில் ஒரு பாகம் வந்து சேர்ந்து விட்டது என்று தேவர்கள் எல்லோரும் மகிழ்ந்து கொண்டாடினர்.

————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: