ஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ உத்தர காண்டம்–105–துர்வாசாகம: (துர்வாசர் வருகை)–

அத்தியாயம் 105 (642) துர்வாசாகம: (துர்வாசர் வருகை)

இவர்கள் இருவரும் அறைக்குள் பேசிக் கொண்டிருந்த பொழுது, துர்வாச முனிவர் வந்து சேர்ந்தார்.
தவ வலிமை மிக்க அந்த ரிஷி, சீக்கிரம் ராமனைக் காண வேண்டும். எனக்கு ஒரு காரியம்.

அவனிடம் சொல்ல வேண்டும் என்று பரபரத்தார். லக்ஷ்மணன் இதைக் கேட்டு, பணிவாக வேண்டினான்.
எப்படிப்பட்ட வீரனானாலும், யுத்தத்தில், ஜயித்து விடக்கூடிய வலிமை மிக்கவன், அவரிடம் மரியாதையுடன் வரவேற்று,
ப்ரும்மன், என் சகோதரன் மிக முக்கியமான வேலையில் ஈடுபட்டிருக்கிறார்.

தற்சமயம் அந்த காரியத்தில் நான் குறுக்கிடுவதற்கில்லை. என்ன காரியம் சொல்லுங்கள். நான் செய்கிறேன்.
ஏதாவது வேண்டுமா? என்று கேட்டான். அல்லது, ஒரு முஹுர்த்தம் காத்திருங்கள்.

இதைக் கேட்டு முனிவர் கோபம் கொண்டார். ஆத்திரம் கண்களை மறைக்க கண்களாலேயே லக்ஷ்மணனை
எரித்து விடுபவர் போல பார்த்தார். இந்த க்ஷணத்தில் ராமனிடம் நான் வந்திருப்பதைச் சொல்.

ராமனிடத்தில் இந்த க்ஷணமே நான் வந்திருப்பதை சொல். இல்லாவிடில், நீ, உன் ராஜ்யம், ராகவன்,
இந்த நகரம், எல்லாவற்றையும் சேர்த்து பொசுக்கி விடுவேன். பரதனையும் தான்,
சௌமித்ரே. உன் சந்ததிகளில் யார் யார் இருக்கிறார்களோ, அவர்களையும் பஸ்மமாக்கி விடுவேன்.

என் மனதில் கோபத்தை அடக்கிக் கொள்ளும் சக்தி எனக்கு இல்லை. இவ்வாறு பயங்கரமாக ரிஷியின்
வாயிலிருந்து வார்த்தைகள் வரவும், க்ஷண நேரம் லக்ஷ்மணன் யோசித்தான்.

என் ஒருவன் மரணம் சம்பவிக்கட்டும், பரவாயில்லை. மற்றவர்கள் அழிவும் சர்வ நாசமும் தடுக்கப்படும்,
இவ்வாறு தீர்மானம் செய்தவனாக ராமனிடத்தில் செய்தியைத் தெரிவித்தான்.

லக்ஷ்மணன் சொன்னதைக் கேட்டு, காலனை அனுப்பி விட்டு, வெளி வாசலுக்கு வந்து அத்ரி புத்திரரான
துர்வாசரை வரவேற்க வந்தார். துர்வாசரை வணங்கி வரவேற்று, என்ன காரியம் சொல்லுங்கள் என்று வினவினார்.

தர்ம வத்ஸலா, கேள். இன்று நான் ஆயிர வருஷங்கள் தவம் செய்து முடிக்கிறேன். அதனால் நல்ல உணவு வேண்டும்.
மாசற்றவனே, உன்னால் முடிந்தவரை எனக்கு போஜனம் செய்து வைக்க ஏற்பாடு செய்.

இதைக் கேட்டு ராகவன் உடனே அவசரமாக, முனிவரின் போஜனத்திற்கான ஏற்பாடுகளைச் செய்தான்.
அம்ருதத்திற்கு இணையான அந்த போஜனத்தை உண்டு முனிவர், திருப்தியானார்.

சாது, ராமா என்று வாழ்த்தி விட்டு தன் ஆசிரமம் சென்றார். முனிவர் தன் ஆசிரமம் சென்றபின் காலனின்
எச்சரிக்கை ஞாபகம் வர, மிகவும் வேதனைக்குள்ளானார். வேதனையோடு, காலனின் கோர உருவமும் மனதில் தெரிய,
தலை குனிந்தபடி, எதுவும் செய்யத் தோன்றாமல் வாயடைத்து நின்றார். காலன் சொல் திரும்பத் திரும்ப மனதில் வந்து அலைக்கழித்தது.

————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: