ஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ யுத்த காண்டம் – –6.128–ஸ்ரீ ப4ரத ப்ரியாக்2யானம் (ஸ்ரீ பரதனுக்கு பிரியமானதை தெரிவித்தல்) —

shrutvA tu mAM kushalinamarogaM vigatajvaram |
aviShyati guhaH prItaH sa mamAtmasamaH sakhA || 6-125-5

5. guhaH = Guha; bhaviShayti = will be; priitaH = pleased; shrutvaa = in hearing; maam = about me; aatmasamaH = as well as my own self.

“Guha will be pleased to hear about me, as being safe, healthy and free from trouble. He is my friend, as well as my own self.”

bharatastu tvayA vAchyaH kushalaM vachanAnmama |
siddhArthaM shaMsa mAM tasmai sabhAryaM sahalakShmaNam || 6-125-7

7. bharataH tu = Bharata too; vaachyaH = is to be asked by you; mama vachanaat = in my name; kushalam = the news about his welfare; shamsa= tell; tasmai = him; maam = that me; sabhaaryam sahalakShmaNam = along with my wife and Lakshmana; siddhaartham = have accomplished on object.

“Bharata too is to be asked by you, the news about his welfare, in my name. Tell him of me as having returned, accomplished of our object, with my consort and Lakshmana.”

upayaataM cha maaM saumya bharataaya nivedaya |
saha raakShasaraajena hariiNaamiishvareNa cha || 6-125-12

12. saumya = O gently Hanuma!; nivedaya = inform; bharataaya = to Bharata; maam = of me; upayaatam = as having come near;raakShasaraajena saha = along with Vibhishana; iishvareNa hariiNaam = and Sugreeva the lord of monkeys.

“O gentle Hanuma! Inform to Bharata, of me as having come near Ayodhya, along with Vibhishana and Sugreeva the lord of monkeys.”

saMgatyA bharataH shrImAnrAjyenArthI svayaM bhavet |
prashAstu vasudhAM sarvAmakhilAM raghunandanaH || 6-125-17

17. samgatyaa = having been associated (for long); raajyena = with the kingdom; bhavet shriimaan bharataH = if the illustrious Bharata; arthii = has a desire; svayam = for himself; raghunanadanaH = (let) Bharata; prashaastu = rule; sarvaam vasudhaam = the entire kingdom; akhilaam = in one piece.

“Having been associated with the kingdom for long, if the illustrious Bharata is longing for it himself, let Bharata rule the entire kingdom in one piece.”

iti pratisamAdiShTo hanUmAnmArutAtmajaH |
mAnuShaM dhArayanrUpamayodhyAM tvarito yayau || 6-125-19

19. iti = thus; pratisamaadiShTaH = commanded; hanuman = hanuma; maarutaatmajaH = the son of wind-god; dhaarayan = assuming;maanuSham ruupam = a human form; tvaritaH = swiftly; yayau = went; ayodhyaam = to Ayodhya.

Assuming a human form, when thus commanded by Rama, Hanuma the son of wind-god, swiftly left for Ayodhya.

sakhA tu tava kAkutstho rAmaH satyaparAkramaH |
sasItaH saha saumitriH sa tvAM kushalamabravIt || 6-125-23

23. saH raamaH = that Rama; tava sakhaa = your friend; kaakutthsaH = born in Kakutthsa dynasty; satya paraakramaH = who is true in his prowess; sa siitaH = along with Seetha; saha saumitriH = and Lakshmana; abraviit = enquired; tvaam kushalam = of your welfare.

“Along with Seetha and Lakshmana, Rama, your friend, that scion of Kakutthsa, of true prowess, has for his part enquired of your welfare.”

pa~nchamImadya rajanImuShitvA vachanAnmuneH |
bharadvAjAbhyanuGYAtaM drakShyasyadyaiva rAghavam || 6-125-24

24. drakShyasi = you can see; raaghavam = Rama; adyaiva = here itself today; bharadvaajaanuJNaatam = when he has been duly permitted by Bharadwaja the sage; uShitvaa = after spending; muneH = vachanaat = at the instance of the sage; raajaniim = for a night; paN^chamiim = of the fifth lunar day (of the bright half of the month of Ashvayuja).

“You can see Rama here itself today, when he has been duly permitted by Bharadwaja the sage, after spending, at the instance of the sage, for a night of the fifth lunar day (of the bright half of the month of Ashvayuja).”

vasantaM daNDakAraNye yaM tvaM chIrajaTAdharam || 6-125-36
anushochasi kAkutsthaM sa tvA kushalamabravIt |

36. vasantam = who was residing; daN^DakaaraN^ya = in the forest of Dandaka; chiira jaTAadharam = wearing the bark of trees and matted locks; kaakutthsam = Rama; yam anushochasi = for whom you were repenting; saH = that Rama; abraviit = has enquired; tvaam = you; kaushalam = about your welfare.

“Rama, for whom you are repenting residing as he was in the forest of Dandaka wearing the bark of trees and matted locks, has enquired about your welfare.”

evamukto hanumatA bharataH kaikayIsutaH || 6-125-40
papAta sahasA hR^iShTo harShAnmohamupaagamat |

40. evam = thus; uktaH = spoke; hanumataa = by Hanuma; bharataH = Bharata; kaikeyiisutaH = the son of Kaikeyi; hR^iShTaH = felt delighted;papaata = and sank; sahasaa = all at once; bhuumau = to the ground; upaagamat moham = and fainted; harShaat = through joy.

Hearing the words of Hanuma, Bharata the son of Kaikeyi, felt delighted and sank all at once to the ground as also fainted through joy.

ashokajaiH prItimayaiH kapimAli~Ngya sambhramAt || 6-125-42
siShecha bharataH shriimaan vipulairashrubindubhiH |

42. aaliN^gya = embracing; kapim = Hanuma; sambhramaat = with eagerness; shriimaan = the illustrious; bharataH = Bharata; siShecha = bathed (him) vipulaiH = with copious; ashrubindubhiH = tear-drops; priitimayaiH = born of delight; ashokajaiH = and as such; other than those born of anguish.

Embracing Hanuma with eagerness, the illustrious Bharata bathed him with copious tear-drops born of delight and as such, other than those born of anguish.

nishamya rAmAgamanaM nR^ipAtmajaH |
kapipravIrasya tadAdbhutopamam |
praharShito rAmadidR^ikShayAbhavat |
punashcha harShAdidamabravIdvachaH || 6-125-46

46. nishamya = hearing; kapipraviirasya = from Hanuma; raamaagamanam = the news of arrival of Rama; adbhutopamam = resembling a wonder;niR^ipaatmajaH = Bharata the prince; abhavat = became; praharShataH = over-joyed; raama didR^ikShayaa = by a desire to see Rama; punashcha = and spoke; idam vachanam = the following words; punashcha = again; harShaat = with delight.

Hearing the news of Rama’s arrival resembling a womnder, from Hanuma, Bharata the prince felt overjoyed by a desire to see Rama and spoke the following words again with delight:

——————————————————

அத்தியாயம் 128 (535) ஸ்ரீ ப4ரத ப்ரியாக்2யானம் (ஸ்ரீ பரதனுக்கு பிரியமானதை தெரிவித்தல்)

ஸ்ரீ அயோத்தி இருக்கும் இடம் நோக்கி யோசித்தபடி நின்று கொண்டிருந்த ஸ்ரீ ராமர், ஸ்ரீ ஹனுமானை அழைத்து ஒரு விஷயம் சொன்னார்.
ஸ்ரீ ஹனுமானே, நீ போய் அரசன் மாளிகையில் யாவரும் நலமா என்று அறிந்து வா.
முதலில் ச்ருங்கிபேர புரம் போ. குஹனைப் பார். அடர்ந்த காட்டின் நடுவில் இருப்பான். வேடர்கள் தலைவன்.
அவனை பார்த்து நான் குசலம் விசாரித்ததாகச் சொல்லு. அவனும் குசலமா என்று கேட்டுத் தெரிந்து கொண்டு,
உடல் நலம் எல்லாம் விசாரி. எனக்கு ஆத்ம சமமான சகா. என் விஷயமாக தெரிந்து கொள்ள ஆவலாக இருப்பான்.

அவன் அயோத்தி போகும் வழியையும், பரதனின் நிலையையும் அறிந்திருப்பான்.
விவரமாக கேட்டுத் தெரிந்து கொள். பரதனிடம், நான் சகோதரனுடனும், மனைவியுடனும் எடுத்த
காரியத்தை முடித்துக் கொண்டு திரும்பி வந்திருப்பதையும் சொல்.
பலசாலியான ராவணன், வைதேஹியை கவர்ந்து சென்றதையும், சுக்ரீவனை சந்தித்ததையும்,
யுத்தத்தில் வாலி வதம் ஆனதையும், மைதிலியைத் தேடி அலைந்ததையும், நீ போய் கண்டு கொண்டதையும்,
பெரும் கடலைத் தாண்டியதையும், சமுத்திரத்தின் உதவியையும், சமுத்திரத்தின் மேல் ஸேதுவைக் கட்டியதையும்,
ராவணன் எப்படி வதம் செய்யப் பட்டான் என்பதையும் மகேந்திரன் கொடுத்த வர தானமும்,
ப்ரும்மா, வருணன் முதலானோர் வந்து வரம் கொடுத்துச் சென்றதையும்,
மகாதேவ பிரஸாதத்தையும், என் தந்தையை சந்தித்ததும், திரும்பி வந்து இங்கு இருப்பதையும் பரதனிடம் தெரிவி.

ராக்ஷஸ ராஜா விபீஷணனும், வானர ராஜா சுக்ரீவனும் வந்திருப்பதையும் இவர்கள் உதவியுடன்
ராவணனை ஜயித்து அளவில்லா கீர்த்தியடைந்துள்ளதையும் தெரிவி.
அவன் என்னிடம் எந்த விதமான எதிர்பார்ப்புகளுடன் இருக்கிறான் என்பதை, குறிப்பறிந்து செயல் படும் நீ தெரிந்து கொள்.
பரதனுடைய நடவடிக்கைகளும், இருக்கும் நிலையையும் உன்னித்துப் பார். பேச்சில், முகக் குறிப்பில்,
வர்ணத்தில், பார்வையில், சம்பாஷனையில், எல்லா செல்வமும் நிறைந்து, யானை, குதிரை, ரதங்கள்
ஏராளமாக இருக்க, தந்தை, பாட்டன் வழி வந்த ராஜ்யம் அவன் மனதை மாற்றியிருக்கிறதா என்று கவனித்துப் பார்.

இவ்வளவு நாள் அனுபவித்து ஆண்ட காரணத்தால் ராஜ்யத்தில் அவனுக்கு ஈடுபாடு இருக்குமானால்,
உலகம் பூராவையும், அவனும் ரகு நந்தனனே, ஆளட்டும். அவன் மனதையும் தெரிந்து கொண்டு,
செயலையும் தெரிந்து கொண்டு நாங்கள் நெருங்கி வெகு சமீபத்தில் வரும் முன் வந்து சொல்.
இவ்வாறு கட்டளையிடப் பட்ட ஹனுமான் மனித ரூபத்தை எடுத்துக் கொண்டு, அயோத்தி சென்றான்.

வேகமாக நாலெட்டாக கால் வைத்து, கருடன் போல, நல்ல பாம்பைக் கண்டதும் பாய்ந்து வந்து
எடுப்பதைப் போன்ற வேகத்துடன் நடந்தான். பித்ரு பதத்தை தாண்டி, புஜகேந்திராலயம் எனும்
பாம்புகள் வாழும் இடத்தையும் தாண்டிச் சென்றான்.
(விஹகேந்திராலயம் என்றும் பாடம். அந்த முறையில் விஹக-பறவை, பறவை ராஜனான
கருடனின் வீட்டையும் தாண்டி என்பது திலகர் உரை).

கங்கா, யமுனையின் சங்கமத்தை தாண்டி, ச்ருங்கிபேர புரம் சென்றான். குகனைக் கண்டு அவனுடன் பேசியதில்
மகிழ்ச்சியோடு ஹனுமான் சொன்னான். நீ காகுத்ஸனின் சகா. சத்ய பராக்ரமனான ராமனின் தோழன்.
சௌமித்ரியுடனும், சீதையுடனும் உன்னை குசலம் விசாரித்தான். இன்று பஞ்சமி.
இன்று இரவு முனிவர் வார்த்தைக்கு கட்டுப் பட்டு அங்கு வசித்து விட்டு பரத்வாஜ முனிவர் அனுமதி கொடுத்தால்,
இன்றே ராமனைக் காண்பாய். இதைக் கேட்டு உடல் புல்லரிக்க, குகன் சந்தோஷம் அடைந்தான்.

அவனிடம் விடை பெற்று, துள்ளி குதித்து, ராம தீர்த்தம் என்பதையும், வாலுகினீம் என்ற நதியையும்,
கோமதி நதியையும், பயங்கரமான சால வனம் என்ற வனத்தையும் கடந்து சென்றான்.
ஆயிரக் கணக்கான ஜனங்கள், இருண்டு கிடந்த பெரும் வீதிகள், இவற்றையும் கடந்து வேகமாக
வெகு தூரம் சென்று நந்திக்ராமம் அருகில் வந்து விட்டதற்கு அறிகுறியாக, மலர்ந்து கிடந்த மரங்கள்,
அடர்ந்த தோப்பு ஒன்றை அடைந்தான். ஸ்த்ரீகள் கைகளில் குழந்தைகளுடனும், வயதானவர்களும்,
பலரும் மகிழ்ச்சியுடன் வளைய வந்து கொண்டிருந்தனர்.
சைத்ர ரதம் எனும் தேவ லோக தோட்டத்தில் இருப்பது போல மரங்கள் தெரிந்தன.

அயோத்தியின் இரண்டு மைல் தூரத்தில், ஆசிரமத்தில் இளைத்து, மரவுரி அணிந்தவனாக,
மான் தோலை போர்த்திக் கொண்டு நின்ற பரதனைப் பார்த்தான். உடல் பூரா புழுதி மண்டிக் கிடக்க,
வயது முதிர்ந்தவன் போல நடுங்கும் உடல், சகோதரனுக்கு ஏற்பட்ட கஷ்டத்தால் தானும் வருந்தி,
பழங்களையும், காய் கிழங்குகளையுமே உணவாகக் கொண்டு, தர்ம வழியில் தவம் செய்பவனாக,
மேல் தூக்கி கட்டப் பட்ட ஜடையுடன், மரவுரி தரித்து, ப்ரும்ம ரிஷி போல தேஜஸுடன்,
தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டு வாழ்ந்த பரதனைக் கண்டான்.

பாதுகையின் பேரில், நாட்டை ஆண்டு வந்தவனைக் கண்டான். நான்கு வர்ணத்தாரும் பயமின்றி
வாழ வகை செய்து கொடுத்தவனாக, மந்திரிகள் புடை சூழ, புரோஹிதர்கள் சுத்தமாக வந்து நிற்பதையும்,
படை வீரர்களின் தலைவர்கள் வந்து விவரங்கள் சொல்வதையும், காஷாய வஸ்திரம் அணிந்த ஊர் ஜனங்களையும் கண்டான்.
அவர்கள் (வல்கலையும்) மரவுரியும், மான் தோலும் அணிந்திருக்கும் பொழுது, புர ஜனங்களும்
உயர்ந்த ஆடையணிகளை ஒதுக்கியவர்களாக, தர்ம வத்ஸலனான அரசனின் வழியே தாங்களும்
காஷாய வஸ்திரம் தரித்து நடமாடியதும், தர்மமே உருவெடுத்து வந்தவன் போலவும்,
தர்மஞானியே உருவெடுத்து வந்து விட்டவன் போலவும் இருந்த பரதனைக் கண்டு மாருதாத்மஜன்,
கை கூப்பி வணங்கி, தான் வந்த விஷயத்தை தெரிவித்தான்.

தண்டகாரண்யத்தில் மரவுரி, மான் தோல் தரித்து கஷ்ட ஜீவனம் செய்கிறான் என்று எந்த ராமனை நினைத்து
நீ வருந்துகிறாயோ, அந்த காகுத்ஸனான ராமன் உன்னை குசலம் விசாரித்தான்.
தேவனே, இந்த ஆழ்ந்த சோகத்தையும் வேதனையும் தீரும் காலம் வந்து விட்டது.
இந்த முஹுர்த்தத்திலேயே நீ சகோதரனான ராமனுடன் இணைவாய். கவலையை விடு.
ராவணனை வதம் செய்து, மைதிலியை திரும்பப் பெற்று, மகா பலசாலியான நண்பர்களைப் பெற்று,
அவர்களுடன் வந்து கொண்டே இருக்கிறான். லக்ஷ்மணனும் உடன் வருகிறான். புகழ் வாய்ந்த வைதேஹியும் உடன் வருகிறாள்.

மகேந்திரனுடன் சசி சேர்ந்ததைப் போல சீதை ராகவனை, ராமனை அடைந்தாள்.
சகோதரன் மேல் பாசம் மிகுந்த பரதன் இந்த செய்திகளைக் கேட்டு மகிழ்ந்தான்.
ஆனந்த மிகுதியில் மூர்ச்சையாகி விழுந்தான். முஹுர்த்த நேரத்தில் எழுந்து ஆஸ்வாஸம் செய்து கொண்டு
பிரியமாக பேசும் ஹனுமானைப் பார்த்து மேலும் விவரங்கள் கேட்டான்.
பரபரப்புடன் தன் ஆனந்த கண்ணீர் அவன் மார்பை நனைக்க இறுக அணைத்துக் கொண்டான்.

தேவனோ, மனிதனோ நீ யார் என்று தெரியவில்லை. ஏதோ என்னிடம் உள்ள கருணையால் இங்கு வந்து நல்ல செய்தி சொன்னாய்.
பிரியமானதைச் சொன்னவனே, உனக்கு நான் என்ன தருவேன்?
நூற்றுக் கணக்காக, ஆயிரக் கணக்காக பசுக்கள் தரவா? நூறு கிராமங்கள் தரவா?
நல்ல குண்டலங்கள் அணிந்த நல்ல நடத்தையுள்ள பதினாறு கன்னிகளை மனைவியாகத் தரட்டுமா?

இந்த பெண்கள் பொன் வர்ணமும், எடுப்பான நாசியும், இடையும், சந்திரன் போன்ற சௌம்யமான முகமும்
கொண்ட எல்லா விதமான ஆபரணங்களும் பூண்டவர்களாக, நல்ல குலத்தில் பிறந்தவர்கள்.
ராமன் வருகிறான் என்று ஹனுமான் சொல்லக் கேட்ட அரச குமாரனான பரதன்,
ராமர் வரும் திசையை ஆவலுடன் பார்த்தபடி, மேலும் விசாரித்தான்.

————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: