ஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ யுத்த காண்டம் – –6.58–ப்ரஹஸ்த வதம் (ப்ரஹஸ்தனின் வதம்)–

raaghavasya vachaH shrutvaa pratyuvaacha vibhiiShaNaH || 6-58-3
eSha senaapatistasya prahasto naama raaksasaH |
laN^kaayaam raakShasendrasya tribhaagabalasaMvR^itaH || 6-58-4
viiryavaanastravichchhuuraH suprakhyaataparaakramaH |

3; 4. shrutvaa = hearing; raaghavasya = Rama’s vachaH = words; vibhiiSaNaH = Vibhishana; pratyuvaacha = replied (as follows); eSaH = He;tribhaaga samvR^itaH = who is guarded by two thirds of the army; laN^kaayaam = in Lanka; viiryavaan = a demon of prowess; astravit = skilled in the use of weapons; shuuraH = strong; suprakhyaata paraakramaH = with a highly excellent bravery; raakSasaH = is a demon; prahasto naama = called Prahasta; senaapatiH = the Army General; tasya raakSasendrasya = of that Ravana.

Hearing Rama’s words, Vibhishana replied as follows “He is guarded by two-thirds of the army of Lanka. He is a demon of prowess, skilled in the use of mystic weapons and valiant. He is the demon named Prahasta, the Army general of Ravana.”

vaanaraisH ca api samkruddhai raakShasa oghaaH samantataH || 6-58-15
paadapair giri shR^ingaish ca sampiShTaa vasudhaa tale |

15. raakSasaughaaH cha api = even the flock of demons; sampiSTaaH = were crushed; vasudhaatale = on to the earth; samkruddhaiH = by the furious; vaanaraiH = monkeys; samantataH = on all sides; paadapaiH = with trees; girshR^iN^gaishcha = and mountain-peaks.

Even the flock of demons on all sides were crushed on to the earth by the furious monkeys with tree and mountain-peaks.

jaambavaa.ns tu susamkruddhaH pragR^ihya mahatiim shilaam || 6-58-22
paatayaam aasa tejasvii mahaa naadasya vakShasi |

22. tejasvii = the energetic; jaambavaamstu = Jambavan; susamkruddhaH = with a great fury; pragR^ihya = seized; mahatiim = a huge; shilaam = rock; paatayaamaasa = and threw; vakSasi = on the chest-region; mahaanaadasya = of Mahanada.

The energetic Jambavan with a great fury seized a huge rock and threw it on the chest-region of Mahanada.

tataH sR^ijantam baaNa oghaan prahastam syandane sthitam || 6-58-34
dadarsha tarasaa niilo vinighnantam plavam gamaan |

34. tataH = thereafter; niilaH = Nila; dadarsha = saw; prahastam = Prahasta; sR^ijantam = who was employing; baaNaughaan = a multitude of arrows; sthitam = staying; syndane = in the chariot; vidhamantam = and annihilating; plavaNgamaan = the monkeys; tarasaa = swiftly.

Then, Nila saw Prahasta who was employing a multitude of arrows sitting in the chariot and annihilating the monkeys swiftly.

tato roShapariitaatmaa dhanustasya duraatmanaH |
babhaJNja tarasaa niilo nanaada cha punaH punaH || 6-58-44

44. tataH = thereafter; niilaH = Nila; roSapariitaatmaa = his mind filled with anger; tarasaa = quickly; babhaN^ja = broke; dhanuH = the bow;tasya = of Prahasta; duraatmanaH = the evil-minded demon; nanaada cha = and shouted; punaH punaH = again and again.

Thereafter the greatly enraged Nila quickly broke the bow of Prahasta the evil-minded demon and shouted again and again.

tasya yuddha abhikaamasya mR^idhe musala yodhinaH |
prahastasya shilaam niilo muurdhni tuurNam apaatayat || 6-58-53

53. niilaH = Nila; tuurNam = quickly; apaatayat = hurled; shilaam- that rock; muurdhni = on the head; tasya prahastasya = of that Prahasta;yuddheabhikaamasya = who was longing for war; musalayodhinaH = and fighting with a mace; mR^idhe = in the battle.

Nila quickly hurled that rock on the head of Prahasta who was longing for war and fighting with a mace in the battle.

na shekuH samavasthaatum nihate vaahinii patau |
setu bandham samaasaadya vishiirNam salilam yathaa || 6-58-58

58. vaahiniipate = the Army-chief; nihate = having been killed; (those demons); na shekuH = could not; samavasthaatum = continue to stand firmly there; salilam yathaa = any more than water; samaasaadya = on reaching; vishiirNam = a breached setubandham = bridge.

Thier chief of Army having been killed, those demons could not continue to stand firmy there, any more than water on reaching a breached bridge.

tatas tu niilo vijayii mahaa balaH |
prashasyamaanaH svakR^itena karmaNaa |
sametya raameNa salakShmaNena |
prahR^iShTa ruupas tu babhuuva yuuthapaH || 6-58-60

60. vijayii = the triumphant; yuuthapaH = warrior; niilaH = Nila; tataH = thereafter; prashasya maanaH = was honoured; raameNa = by Rama;sametya = joined; salakSmaNena = with Lakshmana; karmaNaa = for his task; sukR^itena = accomplished well; babhuuva = and experienced;prahR^iSTa ruupaH = supreme joy.

The triumphant Nila, however, was honoured by Rama and Lakshmana for his task well accomplished and experienced supreme joy.

——————————————————

அத்தியாயம் 58 (465) ப்ரஹஸ்த வதம் (ப்ரஹஸ்தனின் வதம்)

நல்ல பராக்ரம சாலியான ப்ரஹஸ்தன் படையுடன் முன்னேறி வருவதையறிந்து,
ராமர் சற்று சிரித்தபடி, விபீஷணனிடம் விசாரித்தார். யார் இது? பெரிய உருவமும், நல்ல பலசாலியாகவும் தோற்றம் அளிக்கிறார்.
பெரும் படையுடன் வருகிறார். யார் இந்த வீர்யவானான நிசாசரன், சொல் என்றார்.
விபீஷணன் விவரித்தான். இவர் தான் சேனாபதி ப்ரஹஸ்தன், என்ற ராக்ஷஸன்.
லங்கையில் ராக்ஷஸ ராஜனுடைய முக்கால் பங்கு படைக்குத் தலைவர். நல்ல வீர்யம் உடையவர்.
அஸ்திர ஞானம் உடையவர். சூரர். புகழ் பெற்றவர். இதன் பின், பெரும் படையுடன், நல்ல வீரன் என்று பெயர் பெற்றவரும்,
பெருத்த சரீரம் உடையவரும், பெரும் படையின் சேனாபதியுமான, ப்ரஹஸ்தன் நெருங்க நெருங்க, ராக்ஷஸர்கள் கர்ஜிக்கும் சத்தமும் அதிகமாகியது.

கைகளில் கத்தி, சக்தி, இஷ்டி, பாணங்கள், சூலங்கள், முஸலங்கள், க3தை4கள், பரிகங்கள், ப்ராஸங்கள், பரஸ்வதங்கள்
என்று வித விதமான ஆயுதங்களுடன் விசித்ரமான வில் இவற்றுடன் ஜெயித்தே தீருவது என்ற சங்கல்பத்துடன் வந்த
ராக்ஷஸ கூட்டத்தைப் பார்த்து முதலில் வானரங்கள் ஓடின. சற்று பொறுத்து, மரம், கிளைகளை எடுத்துக் கொண்டு,
பூத்து குலுங்கும் மரங்களையும், பெரும் பாறாங்கற்களையும், எடுத்துக் கொண்டு யுத்தத்துக்குத் தயாராக வானர வீரர்களும் வந்து சேர்ந்தனர்.
இருவருக்கும் இடையில் பெரும் போர் மூண்டது. கல் மழை ஒரு புறம், அம்புகள், பாணங்கள் மழை ஒரு புறம்.
ஏராளமான ராக்ஷஸர்களும், வானரங்களும் இந்த போரில் மடிந்து விழுந்தனர். சூலத்தால் அடிபட்டவர்கள் பலர்.
உயர்ந்த ஆயுதங்கள் தாக்கி மடிந்து விழுந்தனர் சிலர். பரஸ்வதம் குத்தி கிழித்து சிலர் வீழ்ந்தனர்.
பேச்சு மூச்சு இன்றி பலர் தரையில் விழுந்து கிடந்தனர். அம்புகள் குறி தவறாது வந்து பட்டதில் ஹ்ருதயம் பிளந்து பலர் உடலை இழந்தனர்.
வாட்கள் நடுவில் இரண்டாக பிளக்க, தரையில் விழுந்த சில சடலங்கள் ராக்ஷஸர்கள் ஒரு புறம் விழ, வானரங்களுக்கும் நிறைய சேதம்.

கஷ்டங்கள் இருவருக்கும் பொதுவாகவே இருந்தன. ராக்ஷஸர்கள் சூலத்தாலும், பரஸ்வதத்தாலும் வானரர்களைக் குத்திக் கிழித்தனர் என்றால்,
வானரங்கள், மரக் கிளைகளாலும், மலையிலிருந்து கொண்டு வந்த பாறாங்கற்களாலும் பூமியோடு பூமியாக ராக்ஷஸர்களைத் தள்ளி நசுக்கி விட்டனர்.
வானரங்கள் கைத்தலத்தால் அடித்ததே வஜ்ரம் தாக்குவது போல இருந்தது.
முஷ்டிகளாலும் கைகளாலும் பலரைக் கொன்று தள்ளினர். வாயிலிருந்து ரத்தத்தை உமிழ்ந்தவர்களாக பற்களை இழந்தவர்களாக,
கண்கள் தெறித்து விழ, சற்று முன் சிம்ம நாதம் செய்த ராக்ஷஸர்களின் வேதனைக் குரல் எங்கும் ஒலித்தது.
இரு தரப்பிலும் இதே நிலை தான். அடிப்பதும், வீழ்வதும், ஓலமிடுவதுமாக போர்க்களம், இரு சாராருக்கும்
மிகுந்த சேதத்தை விளைவித்தது. வானரங்களும், ராக்ஷஸர்களும் ஆத்திரத்துடன், வீரனுக்குரிய வழியை ஏற்று,
சற்றும் பயப்படாமல் கண்களைச் சுழற்றி, போரைத் தொடர்ந்து செய்தனர். நராந்தகனும், கும்பஹனுவும், மகா நாதனும், சமுன்னதனும் –
இவர்கள் ப்ரஹஸ்தனின் மந்திரிகள். ஏராளமான வானரங்களை கொன்று குவித்தனர்.

இவர்களிடம் அடிபட்டு விழுந்து எழுந்து அடுத்த அடி படும் முன் ஓடிய வானரங்கள், ஒரு பெரிய பாறாங்கல்லைக் கொண்டு
வந்து நராந்தகன் தலை மேல் போட்டு அவனை அழித்தன. துர்முகன் என்ற வானர வீரன் ஒரு பெரிய மரக்கிளையைக் கொண்டு வந்து,
சமுன்னதனை ஓங்கி அடித்து விழச் செய்தான். ஜாம்பவான், மிகுந்த கோபத்துடன், தன் கையில் இருந்த கல்லால் மகா நாதனின்
மார்பில் ஓங்கி வீசி விழச் செய்தான். தாரன் என்ற வானரம், கும்பஹனுவை தலையில் ஒரு மரக் கிளையால் அடித்து உயிரிழக்கச் செய்தான்.
இதைக் கவனித்த ப்ரஹஸ்தன், அடக்க மாட்டாத ஆத்திரத்துடன் தன் ரதத்தில் ஏறி, வில்லையும் அம்பையும் எடுத்து
சரமாரியாக வானரங்களின் மேல் பொழிந்து பயங்கரமான யுத்தம் செய்தான். இரண்டு சேனைகளிலும்,
ஊழிகாலம் போல பெரும் போர் தொடர்ந்தது. நதியில் தோன்றும் சுழலோ, சமுத்திரத்தின் அலை ஓசைகளோ எனும் படி
யுத்த கலையில் வல்லவனான ப்ரஹஸ்தன் கைகளிலிருந்து வெளிப்பட்ட அம்புகள் வானரங்களைக் குறி வைத்து அழித்தன.

ராக்ஷஸ, வானர வீரர்களின் சடலங்கள் மலை போல குவியலாயிற்று. ரத்தமும் நிணமும் விழுந்து சேறாக,
பூமியே கண்ணுக்குத் தெரியவில்லை, மாதவ மாதம், பலாச புஷ்பங்கள் பூமியை மறைத்தபடி விழுந்து கிடப்பது போலத் தோன்றியது.
உடைந்த ஆயுதங்களும், மரக்கிளைகளும், உடல்களும், யம சாகரத்தை நோக்கி ஓடும் நதியைப் போல ரத்தம் பெருக ஓடுவதும்,
சேறாகி கிடந்த நிணமும், பாசி படர்ந்தது போன்ற தோற்றத்தைத் தர, உடல் தனியாக, தலை தனியாக போன சரீரங்களே மீன்களாக,
யுத்த பூமி என்ற நதி, மேகம் கறுத்து நிறைந்திருக்கும் நாட்களில் சுழித்துக் கொண்டு ஓடும் நீரோடு,
ஹம்ஸங்களும், ஸாரஸ பக்ஷிகளும் சஞ்சரிக்கும் இடத்தில், கழுகுகளும், கங்க பக்ஷிகள் மேலே வட்டமிட (யுத்த பூமி என்ற நதி) ஓடியது.

இந்த நதியைக் கடந்து வெளி வர, ராக்ஷஸர்களும், வானரங்களும் முயன்றன. புழுதி படிந்த பத்மத்தை,
தண்டுடன் யானைக் கூட்டம் எப்படி அழிக்குமோ, அது போல ரதத்தில் இருந்த ப்ரஹஸ்தன் தன் பாணங்கள்
என்ற மழையால் வானர வீரர்களை அடியோடு அழிப்பதை வெகு தூரத்திலிருந்து நீலன் கண்டான்.
வாயு வேகமாக வீசுவது போல ஆகாய மார்கமாக வேகமாக அந்த இடம் வந்து சேர்ந்தான்.
இதைக் கண்ட சேனாபதி ப்ரஹஸ்தன், நீலனை நோக்கி தன் ஆதித்யனின் வர்ணத்தில் பள பளத்த ரதத்தை செலுத்தினார்.
வில்லாளிகளுள் சிறந்தவரான அவர் தன் வில்லை எடுத்து, நீலனைக் குறி வைத்து அடிக்கலானார்.
கோபம் கொண்ட பாம்புகள் போல வேகமாக வந்த கூர்மையான பாணங்கள் நீலனின் உடலில் பட்டு தெறித்து விழுந்தன.
நெருப்பு போல சுடும் அந்த பாணங்களின் தாக்குதலால் பாதிக்கப் பட்டாலும், சமாளித்துக் கொண்டு
ஒரு பெரிய மரக் கிளையால் ப்ரஹஸ்தனை ஓங்கி அடித்தான்.

இந்த அடி வாங்கிய ராக்ஷஸ வீரனான ப்ரஹஸ்தன் மேலும் பெரும் குரலில் ஜய கோஷம் செய்தபடி, தன் கை வில்லில்
அம்புகளை பூட்டி வானரங்களை அடித்த வண்ணம் இருந்தார். அகாலத்தில் வந்த சரத்கால மழையை தாங்க மாட்டாமல்
பசு மாட்டுக் கூட்டம் திணறுவது போல வானரங்கள் திணறினார்கள். கண்கள் மூடி நினைவின்றி கிடந்த
நீலன் சட்டென்று மூர்ச்சை தெளிய கண் விழித்து, ஒரு சால விருக்ஷத்தைக் கொண்டு ப்ரஹஸ்தனின் குதிரைகளை உயிரிழக்கச் செய்தான்.
மனோ வேகத்தில் ஓடக் கூடிய குதிரைகள் மடிந்து விழுந்தன. ப்ரஹஸ்தனின் வில்லை எடுத்து,
நிமிஷ நேரத்தில் உடைத்து எறிந்தான் நீலன். தன் கையில் இருந்த வில் பறி போனதை உணர்ந்த ப்ரஹஸ்தன்
முஸலம் என்ற பயங்கரமான ஆயுதத்தை கையில் எடுத்து ரதத்திலிருந்து இறங்கி நின்றபடி
நேருக்கு நேர் இரண்டு, சேனாபதிகளும் தயாராயினர். இருவர் உடலும் ரத்தப் பெருக்கினால் குளித்தது போல கிடந்தது.

சிங்கமும் சார்தூலமும் மோதிக் கொள்வது போல சிம்ம, சார்தூலம் போன்ற தங்கள் சேஷ்டையால்,
தங்கள் கூர்மையான பற்களால் ஒருவரையொருவர் காயப்படுத்தினர். இருவரும் விஜயத்தை நோக்கி
வீரத்துடன் போரிடும் வீர்யவான்கள். போரில் புற முதுகு காட்டியறியாதவர்கள்.
வ்ருத்திரனும், வாஸவனும் போல புகழை விரும்பி போரிட்டவர்கள். சமமான பலம், வீரம் உடைய இருவரும் சளைக்காமல் போரிட்டனர்.
முஸலத்தால் நீலனின் நெற்றியில் ஓங்கி அடித்த ப்ரஹஸ்தன். ரத்தம் பெருக அவன் அலறியதை கேட்டார்.
அதே க்ஷணத்தில் ஒரு பெரிய மரத்தை எடுத்து, ப்ரஹஸ்தனின் மார்பில் அடித்து விட்டான் நீலன்.
எதிர் பாராத இந்த தாக்குதலால் நிலை குலைந்தாலும், முஸலத்தை எடுத்துக் கொண்டு நீலனை துரத்திக் கொண்டு ஓடினார்.
வெகு வேகமாக ஓடி வந்து தன் மேல் விழுந்த ப்ரஹஸ்தனை ஒரு பெரிய கல்லால் தாக்கினான்.

வானர வீரனின் கையிலிருந்து வேகமாக வந்து விழுந்த பெரிய பாறாங்கல், ப்ரஹஸ்தனின் தலையை சிதற அடித்து விட்டது.
தன் சக்தியை இழந்து, கீழே விழுந்த அந்த க்ஷண பொழுதிலேயே உயிரும் பிரிந்தது. தடாலென உயிரற்ற சரீரம் விழுந்தது.
வேரோடு பிடுங்கிய மரம் சாய்வது போல சாய்ந்தான். ப்ரஸ்ரவன மலையில் சிறு அருவிகளில் நீர் பெருகி ஓடுவது போல
சரீரத்தின் பல பாகங்களிலிருந்தும் ரத்தம் பெருக்கெடுத்தது. அசைக்க முடியாத ப்ரஹஸ்தனே விழுந்தவுடன்,
ராக்ஷஸ சேனை வேறு வழியின்றி லங்கைக்கு திரும்பிச் சென்றது. சேதுவினால் தடைபட்ட நதி ஜலம் திரும்பி
வருவது போல திரும்பிச் சென்றது, ராக்ஷஸ சேனை. அரசனின் மாளிகைக்குள் சென்று திடுமென
ஊமைகள் ஆனது போல எதுவும் சொல்ல முடியாத சோகத்தில் மூழ்கியவர்களாக நின்றனர்.
நீலன் வெற்றி வீரனாக தன் பக்கத்து வீரர்களால் கொண்டாடப் பட்டான்.
ராமரையும் லக்ஷ்மணனையும் தேடிச் சென்று அவர்களுடன் மகிழ்ச்சியோடு நின்றான்.

————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: