ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் அருளிச் செய்த ஸ்ரீ வரவர முனி அஷ்டகம் –ஸ்ரீ அண்ணன் ஸ்வாமிகள் பரம்பரை விவரம் —

ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் தனியன் –

ஸகல வேதாந்த ஸாரார்த்த பூர்ணா ஷயம் விபுல வாதூல கோத்ர உத்பவாநாம் வரம்
ருசிர ஜாமாத்ரு யோகீந்திர பாதாஸ்ரயம் வரத நாராயணம் மத் குரும் ஸமாஸ்ரயே

பர்யங்கேபி பரம் தத்வம் ரங்க ஷாயிந மேவய
உத்திஷ்டத் யநு பூயாஹம் தம் வந்தே வர யோகிநம் –1-

உஷஸ் யுக்தாய லோகார்ய ப்ரமுக ஆச்சார்ய ஸூக்திபி
உச்சைஸ் ஸ்துத்வாத கோவிந்தம் தத் திவ்ய ஸ்தல காஞ்சிதம் –2-

காவேர்யா கமல உத்பாஸி ஸம்ஸ்ப்ருஷ்ய ஸலீலம் ஷுபம்
கோவிந்த குண ஷிலாதி த்யாத்வா அஷ்ரு கலிலாநந –3-

ரோமாஞ்சித சலத் காத்ர பக்த்யா பரமயைவ ய
புநாதி தீர்த்தம் சங்காஹ்ய தம் வந்தே வர யோகிநம் –4-

பகவத் ஸாஸ்த்ர நிர்த்திஷ்ட விதி நைவ நிமஜ்ஜ்ய
திவ்ய காஷாய ஸூத்த ஊர்த்வ புண்ட்ர மாலாதி பூஷித –5–

மஹா மந்த்ராதி ஸம் ஜப்ய விஷிஷ்டைஸ் பரி வாரித
ஸ்ரீ ரெங்க தாம ஸம் ஸேவ்ய தத் தத்வாந் யுப ப்ரும்ஹ்ய ச –6–

ஆராத்ய ரங்க ராஜாதீந் அநு யோகம் விதாய ச
அபு நாத் அம்ருதைர் ஆர்யாந் தம் வந்தே வர யோகிநம் –7-

வந்தே ஸுவ்ம்ய வராக்ரிய யோகிநம் அஹம் த்யான அம்ருதா ஸ்வாதிநம்
ஸ்ரீ ரெங்காதிப பாத பங்கஜ பரி சார்யா குணை காந்திநம்
ஆஜ்ஜா ஸாஸ்த்ர விதேர விஸ்யதமலம் ஸம்ஸாரி கந்தாஸஹம்
காலே ஷு த்ரி ஷு சைவ காமித பல ப்ராப்த் யை குரூணாம் குரும் — 8-

இது ஸ்ரீ எறும்பி அப்பா அருளிச் செய்த ஸ்ரீ பூர்வ தினசரி சுருக்கம் –
த்யான ஸ்லோகம் -போல் அமைந்துள்ளது

———–

1-ஸ்ரீ வாதூல வரத நாராயண குரு ஸ்வாமிகள் -ஒண்ணான அண்ணன் ஸ்வாமி –
புரட்டாசி -கன்னி-உத்திரட்டாதி திரு அவதாரம் -1371-
ஸ்ரீ பரம பதம் -சித்திரை த்ருதீயை திதி

2–ஸ்ரீ கோயில் கந்தாடை ஆயன் -ஸ்ரீ ஸ்ரீநிவாஸாச்சார்யார் ஸ்வாமிகள் -மார்கழி உத்தரட்டாதி

3-ஸ்ரீ ஸ்வாமி கோயில் அண்ணன் -ஸ்ரீ வராச்சார்யர் ஸ்வாமிகள் -புரட்டாசி உத்தரட்டாதி

4–(11th Swami as per Chart )ஸ்ரீ குமார கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் -ஸ்ரீ ஸ்ரீநிவாஸாச்சார்யார் ஸ்வாமிகள் –ஆவணி மிருக சீர்ஷம் –
ஸ்ரீ பரம பதம் –பிலவங்க வருஷம் -1547-மார்கழி கிருஷ்ண சதுர்த்தசி திதி-

5-(12th Swami as per Chart)-ஸ்ரீ பெரிய கந்தாடை அண்ணன் ஸ்வாமிகள் -பங்குனி ஆயில்யம்
ஸ்ரீ பரம பதம் -விச்வாவஸு -1605-மார்கழி சுக்ல பக்ஷ சப்தமி திதி-

6th (13th Swami as per Chart) ஸ்ரீ ஸ்வாமி குமார கந்தாடை அண்ணன் ஸ்வாமிகள் -ஆடி சித்திரை
ஸ்ரீ பரம பதம் -சுக்ல வருஷம் -1629-மார்கழி -சுக்ல பக்ஷ தசமி திதி

7–(14th Swami as per Chart)ஸ்ரீ ஸ்வாமி வேதலப்பை அண்ணன் ஸ்வாமிகள் -ஸ்ரீ வரதாச்சார்யர் ஸ்வாமிகள் -ஆவணி திருவோணம்
ஸ்ரீ பரம பதம் -விளம்பி -1658-கார்த்திகை சுக்ல சதுர்தசி திதி

8-(15a Swami as per Chart)ஸ்ரீ ஸ்வாமி குமார அண்ணன் -ஸ்ரீ குமார வரதாச்சார்யர் ஸ்வாமிகள் -மாசி புனர்பூசம்

9-(15b Swami as per Chart)ஸ்ரீ ஸ்வாமி கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் -ஸ்ரீ ஸ்ரீநிவாஸாச்சார்யார் ஸ்வாமிகள் -ஐப்பசி ரோஹிணி
ஸ்ரீ பரம பதம் -பிங்கள -1677-ஆடி பவ்ர்ணமி திதி

10–(16a Swami as per Chart ) ஸ்ரீ கந்தாடை அண்ணன் ஸ்வாமிகள் -ஸ்ரீ வரதாச்சார்யர் ஸ்வாமிகள் -ஆனி -சதயம் –
ஸ்ரீ பரமபதம் -ஸர்வஜித் –1707-வைகாசி -கிருஷ்ண பஞ்சமி திதி

11th- (17a Swami as per Chart)ஸ்ரீ ஸ்ரீநிவாஸாச்சார்யார் ஸ்வாமிகள் -ஐப்பசி உத்திராடம்

12th (17b Swami as per Chart) ஸ்ரீ குமார கந்தாடை அண்ணன் ஸ்வாமிகள் -ஸ்ரீ வித்வத் வரதாச்சார்யர் ஸ்வாமிகள் -ஆவணி அனுஷம்
ஸ்ரீ பரமபதம் -சுக்ல வருஷம் –1749-ஆவணி சுக்ல திரயோதசி திதி –

13–(18th Swami as per Chart) ஸ்ரீ கோயில் அண்ணன் ஸ்ரீ ரெங்காச்சார்யார் ஸ்வாமிகள் -வைகாசி பூரம்
ஸ்ரீ பரமபதம் -விரோதி -1769-மார்கழி -கிருஷ்ண பஞ்சமி

14–(19th Swami as per Chart)-ஸ்ரீ பெரிய அண்ணன் ஸ்வாமிகள் -சித்திரை -ரோஹிணி
ஸ்ரீ பரமபதம் -யுவ -1815-மார்கழி -சுக்ல -துவாதசி -திதி

15–(20th Swami as per Chart) ஸ்ரீ அண்ணன் வரதாச்சார்யர் ஸ்வாமிகள் -மார்கழி பூராடம்
ஸ்ரீ பரமபதம் -ஈஸ்வர -1817-மார்கழி கிருஷ்ண த்ருதீயை திதி

16-(21st Swami as per Chart)ஸ்ரீ அண்ணன் ரெங்காச்சார்யார் ஸ்வாமிகள் -ஐப்பசி மூலம்

17 (22nd Swami as per Chart) ஸ்ரீ குமார அண்ணன் ஸ்வாமிகள் –ஸ்ரீ வரதாச்சார்ய ஸ்வாமிகள் -ஆங்கீரஸ வருஷம் பங்குனி ரேவதி
ஸ்ரீ பரமபதம் -சாதாரண வருஷம் -1850-ஆவணி சுக்ல தசமி திதி

18-(23rd Swami as per Chart) ஸ்ரீ அண்ணன் ரெங்காச்சார்யார் ஸ்வாமிகள் -ஸோப கிருது வருஷம் -வைகாசி கேட்டை –
ஸ்ரீ பரமபதம் -கர -1891–3rd nov -ஐப்பசி சுக்ல த்விதீயை திதி

19-(24th Swami as per Chart)-ஸ்ரீ அண்ணன் வரதாச்சார்யர் ஸ்வாமிகள் -பவ வருஷம் -ஆவணி பூசம் [20-Jun-1874]
ஸ்ரீ பரமபதம் -பரிதாபி -ஆனி -சுக்ல அஷ்டமி -[22-Jun-1912]

20 (25th Swami as per Chart) ஸ்ரீ அண்ணன் ரெங்காச்சார்யார் ஸ்வாமிகள் -சாதாரண வருஷம் -ஆனி சித்திரை -[17-Jun-1910]
ஸ்ரீ பரமபதம் -[04-Dec-1992]-ஆங்கீரச கார்த்திகை சுக்ல தசமி –

21 (26th Swami as per Chart) ஸ்ரீ அண்ணன் ஸ்ரீநிவாஸாச்சார்யார் ஸ்வாமிகள் -தாது வருஷம் மாசி திருவாதிரை -[20-Feb-1937]

22-(27th Swami as per Chart.)வர்த்தமான ஸ்வாமிகள் -ஸ்ரீ அண்ணன் திருவேங்கடாச்சார்யார் ஸ்வாமிகள் -விரோதி வருஷம்-ஐப்பசி -உத்ராடம் [28-Oct-1949]

—————

ஸ்ரீ கோயில் கந்தாடை யண்ணன் ஸ்வாமி திருநட்சத்திரம் – புரட்டாசி பூரட்டாதி

தனியன்
ஸ்ரீரம்ய வரமௌநீந்த்ர ஸ்ரீபாதாப்ஜமதுவ்ரதம்
வ்ருஷபே மைத்ரபே ஜாதம் வரதார்யமஹம் பஜே

ஸகல வேதாந்தஸார அர்த்த பூர்ணாஸயம்
விபுல வாதூலகோத்ரோத்பவாநாம் வரம்
ருசிரஜாமாத்ரு யோகிந்த்ர பாதாஸ்ரயம்
வரதநாராயணம் மத்குரும் ஸம்ஸ்ரயே

வாழி திருநாமம்
திருச்சேலை இடைவாழி திருநாபி வாழியே
தானமரு மலர்க்கண்கள் தனியுதரம் மார்பம்
தங்கு தொங்கும் உபவீதம் தடந்தோள்கள் வாழியே
மானபரன் மணவாள மாமுனி சீர் பேசும்
மலர்ப்பவளவாய் வாழி மணிமுறுவல் வாழியே
ஆனனமுந்திருநாமம் அணி நுதலும் வாழியே
அருள்வடிவன் கந்தாடை அண்ணன் என்றும் வாழியே

பேராத நம்பிறப்பைப் போக்க வல்லோன் வாழியே
பெரிய பெருமாள் அருளால் பெருமை பெற்றோன் வாழியே
ஏராரு நன்மதியின் ஏற்றமுள்ளோன் வாழியே
எதிராசன் தரிசனத்தை எடுத்துரைப்போன் வாழியே
பாரார நன்புகழைப் படைக்க வல்லோன் வாழியே
பகர்வசனபூடணத்தின் படியுடையோன் வாழியே
ஆராமஞ்சூழ்கோயில் அவதரித்தோன் வாழியே
அவனி தொழுங் கந்தாடை அண்ணன் என்றும் வாழியே

ஆசாரியர்: பெரிய ஜீயர்

சிஷ்யர்கள்: கோயில் கந்தாடை அப்பன், நாயன், பிள்ளை அப்பா

இவர்வாதூல கோத்திரத்தில் முதலியாண்டான் வம்சத்தில் புரட்டாசி மாதம்
பூரட்டாதி நட்சத்திரத்தில் திருவரங்கத்தில் அவதரித்தார்.
மாமுநிகள் தம்மிடம் இருந்த அழகிய சிங்கர் விக்கிரகத்தை திருவாராதனப் பெருமாளாக இவருக்கு அளித்தார்.
இவருடைய பால்ய வயதிலேயே இவருடைய திருத்தகப்பனார் ஸ்ரீ தேவராஜ தோழப்பா பரமபதம் அடைந்தார்.
அதனால் கோவிலில் இவர் வம்சத்தாருக்குக் கிடைக்க வேண்டிய மரியாதைகள் கிடைக்கவில்லை.

எம்பெருமானார் இவர் கனவில் தோன்றி மாமுனியை ஆச்ரயிக்கும்படி தெரிவித்தார்.
மாமுனிகள் இந்த வம்சத்தாருக்கு மீண்டும் மரியாதைகள் கிடைக்கும்படி ஏற்பாடுகளைச் செய்தார்.
மேலும் கீழ உத்தரவீதியில் இருந்த 16 கல் மண்டபத்தையும் இவருக்கு மடமாகக் கொடுத்தார்.
வேண்டும்போது பண உதவிகளையும் செய்தார்.
இவர் மாமுனிகளின் பெருமையைக் கூறும் கண்ணிநுண்சிறுத்தாம்பு என்னும் 13 பாசுரங்கள் கொண்ட நூலையும் இயற்றினார்.
மேலும் வரவரமுநி அஷ்டகம், ராமானுஜார்ய திவ்யாஞ்ஞா என்னும் நூல்களையும் செய்தருளினார்.

மணவாளமாமுனிகளின் உபதேசரத்ன மாலைக்கு கீழ்க்காணும் தனியனை அருளிச் செய்தார்.
முன்னந் திருவாய்மொழிப்பிள்ளை தாம் உபதேசித்த நேர்
தன்னின் படியைத் தணவாத சொல் மணவாளமுனி
தன்னன்புடன் செய் உபதேசரத்தின மாலைதன்னை
தன்நெஞ்சு தன்னில் தரிப்பவர் தாள்கள் சரண் நமக்கே

இவர் உத்தம நம்பி, எரும்பியப்பா, அப்பிள்ளை, அப்பிள்ளார் ஆகியோரையும் மாமுனிகளிடம் ஆச்ரயிக்கச் செய்தவர்.
இவர் கந்தாடையப்பன், திருகோபுரத்து நாயனார், சுத்த சத்வம் அண்ணன், திருவாழி ஆழ்வார் பிள்ளை,
கந்தாடை நாயன், ஜீயர் நாயனார், ஆண்ட பெருமாள் நாயனார், ஐயன் அப்பா ஆகிய
ஸ்வாமிகளை தம்முடைய அஷ்டதிக்கஜங்களாக நியமித்தார்.

மாமுனிகள் இவருடைய ஆசார்யனுக்குரிய நியம நிஷ்டைகளைக் கண்டு
இவருக்கு பகவத் சம்பந்தாசார்யர் என்று விருது கொடுத்து அழைத்தார்.
நம்பெருமாள் இவருக்கு ஜீயர் அண்ணன் என்ரு அருளப்படிட்டார்.
காஞ்சிப் பேரருளாளர் இவருகு ஸ்வாமி அண்ணன் என்று அருளப்பாடிட்டார்.

புரட்டாசி மாதத்துக்கு ஒரு தனி விசேஷம் உண்டு.
இம்மாதத்தில்தான் திருவேங்கடமுடையான், வேதாந்தாசார்யர் (தூப்புல் பிள்ளை),
ஸ்ரீகோயில் கந்தாடையண்ணன், ஒன்றான வானமாமலை ராமானுஜ ஜீயர் (பொன்னடிக்கால் ஜீயர்),
ஆகியோர் திருவவதாரம் செய்தார்கள்.

மாமுனிகள் ஸ்ரீகோயில் கந்தாடையண்ணனையும் ஒன்றான வானமாமலை ராமானுஜ ஜீயரையும்
தம்முடைய அஷ்டதிக் கஜங்களாக நியமித்தார்.
மாமுனிகள் அஷ்டதிக் கஜங்களில் ஒருவரான ஸ்ரீப்ரதிவாதி பயங்கரம் அண்ணா,
வேதாந்தாசார்யருடைய திருக்குமாரரான நயநவரதாசாரியர் சிஷ்யர் ஆவர்.

இந்த மாதத்தில் அவதரித்த மேற்கண்ட இந்த இரு ஆசார்யர்கள்லும் மாமுனிகளின் சிஷ்யர்களாகத் திகழ்ந்தவர்கள்.
ஸ்ரீஎரும்பியப்பாவும் ஸ்ரீப்ரதிவாதிபயங்கரம் அண்ணாவும் தங்களுடைய பிரபந்தங்களான
வரவரமுநி சதகங்களில் இவருடைய மேன்மையையும் பெருமையையும் எடுத்துக் கூறியுள்ளனர்.

மாமுனிகள் இறுதிக்காலத்தில் இவர் திருக்கரங்களினால் செய்த தளிகையை விரும்பி உகந்து அமுதுண்டு மகிழ்ந்தார்.

இவர் விபவ வருடம் கி.பி. 1448 சித்திரை மாதம் கிருஷ்ண பட்ச திருதியை அன்று ஆசார்யன் திருவடி அடைந்தார்.

——————-

http://www.koilkandhadaiannan.com/index.php#SupCD

————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: