ஸ்ரீ மா முனிகள் வியாக்யானந்த்தில் நவ ரசங்கள் -ஸ்ரீ உ வே வெங்கடேஷ் ஸ்வாமிகள் –

மா முனிகள் வியாக்யானம்
நவ ரஸ பரி பூர்ணம் -நகை-அழுகை -வெகுளி -இளிவரல் -மருக்கை-வியப்பு – அச்சம் பெருமிதம் வகை அமைதி -சம நிலை
பூமிகா ஸந்நிதிஷ்டம் -அவதாரிகை -நடுவில் தொகுத்து -தொடர்பு -கட்டமைப்பு
பிரதி பத விஷயானாம் தர்சகம் -பதம் தோறும்
யுக்த யுக்தே -பிரதி வசன கதே -கேள்வி சம்பாஷணாத்
ரூபிகார்யே -உருவகம்
சத் பிரமாணம் -மேற்கோள் காட்டி
பொருந்த வைத்து –
முன்னோர் மொழிகள் தப்பாமல்

நவரசம் தலைக்கொண்டு கவி நடையும்
சுவை மணக்கும் உரை
நகை சுவை
வளையல் சோரன் -2-9-10
வெண்ணெய் பாபம் திருட்டு

சொல்லிலரசிப் படுதி நங்காய் சூழல் உடையன் உன் பிள்ளை தானே
இல்லம் புகுந்து என் மகளைக் கூவி கையில் வளையை கழற்றிக் கொண்டு
கொல்லையினின்றும் கொணர்ந்து விற்ற அங்கு ஒருத்திக்கு அவ்வளை கொடுத்து
நல்லன நாவற் பழங்கள் கொண்டு நான் அல்லேன் என்று சிரிகின்றானே -2 9-10 – –

நான் அல்லன் என்று சிரிக்கின்றானே –
நான் அல்லேன் காண் –
1-நான் அல்லேன் என் கையில் வளை கண்டாயோ –
2-நான் அல்லேன்-நான் உன் இல்லம் புகுகிறது கண்டாயோ –
3-நான் அல்லேன்-உன் பெண்ணைப் பேர் சொல்லி அழைக்கிறதைக் கேட்டாயோ –
4-நான் அல்லேன்-வந்து கையில் வளை கழற்றினது கண்டாயோ-
5-கண்டாயாகில் உன் வளையை அங்கே பறித்து கொள்ளா விட்டது என் -என்றாப் போலே
எனக்கு மறு நாக்கு எடுக்க இடம் இல்லாதபடி சில வார்த்தைகளைச் சொல்லி நின்று சிரியா நின்றான்
இதில் காட்டில் உண்டோ துஸ் ஸகமான தீம்பு -என்கை –

மா முனிகள் கண்ணன் பாவத்தில் இருந்து வியாக்யானம் –

—————————————————-

அழுகை 3-9-4-
சொற்களுக்கு வியாக்யானம் முன்பு காட்சியில் உள்ள சோகம் அழுகை விவரித்து வியாக்யானம் –
சுமத்ரா தேவி பெருமாள் இடம் காட்டுக்குப் போகச் சொன்னது வால்மீகி ராமாயணத்தில் இல்லை என்றாலும்
வேறே கல்பங்களில் இருக்கலாம்
இரண்டு விளக்கம் காட்டி அருளுகிறார்
கொடிய வனம் -விளக்கி -வெம் கானம்
தசரதன் -தாய் மார் -சோகங்களையும் காட்டி அருளி வியாக்யானம்

மாற்றுத் தாய் சென்று வனம் போகே என்றிட
ஈற்றுத் தாய் பின் தொடர்ந்து எம்பிரான் என்று அழ
கூற்றுத் தாய் சொல்ல கொடிய வனம் போன
சீற்றம் இலாதானைப் பாடிப் பற சீதை மணாளனைப் பாடிப் பற -3 9-4 –

மாற்றுத் தாய் சென்று வனம் போகே என்றிட –
மாற்றுத் தாய் -என்றது மற்றைத் தாய் என்ற படி
அன்றிக்கே
மாறு-என்று ஒப்பாய் மாறான தாய் -பெற்ற தாய்க்கு போலியான தாய்-என்னவுமாம்
ஸ்ரீ கௌசலையரோபாதி -ஸ்ரீ பெருமாள் பக்கலிலே அதி ச்நேஹிதையாய் இறே ஸ்ரீ சுமித்ரையார் இருப்பது
இப்படி இருக்கிற தாயார் ஆனவள் சென்று -நீர் வனத்திலே போம் -என்று சொல்ல –
அதாவது –
திருவபிஷேக மங்கள மகோ உத்சவ அர்த்தமாக திருப் படை வீடு எல்லாம் அலங்கரித்து –
உத்சவமும் தொடக்கி
புரோஹிதரான வசிஷ்டாதிகளும் தானுமாக கொண்டு –
ராஜாவான சக்கரவர்த்தி
திரு அபிஷேக அர்த்தமாக பெருமாளுக்கு காப்புக் கட்டி
புரச் சரணங்களும் செய்வித்து
இனி அபிஷேகம் செய்யும் இத்தனை
என்று முஹூர்த்தம் பார்த்து இருக்கிற அளவில்
வேதை ரேவா -அஹம் ஏவ வேதா -வேதைஸ் சர்வ இதி -அஹம் வேத்ய ஏவச
ஏவ ஓவ் ஒன்றிலும் சேர்த்து -வேதாந்த வேத்ய நிஜ வைபவ
அஹம் வேதமி –
கைகேயி ஆனவள் -குப்ஜை வார்த்தையால் நெஞ்சு கலங்கி
பர்த்தாவான சக்கரவர்த்தியை பார்த்து எனக்கு இரண்டு வரம் உண்டே முன்னே தந்து இருப்பது –
அது இரண்டும் இப்போது செய்ய வேணும் -அதாவது
ராமனை அபிஷேகம் செய்யாமல் காட்டிலே போக விட வேண்டும்
பரதனை அபிஷேகம் செய்ய வேணும் -என்ன
சத்ய தர்ம பராயணன் ஆகையாலே -என் செய்வோம் -என்று
இடி விழுந்தால் போலே இவ்வார்த்தையை கேட்டுக் கிலேசப்பட்டு
பெருமாளை அழைத்து கொண்டு வரும்படியாக சுமத்ரனை போக விட்டு
தான் கலங்கிக் கிடக்க –
சுமந்த்ரன் சென்று –
ஐயர் எழுந்து அருளச் சொல்கிறார் -என்கையாலே
பெருமாளும் திரு அபிஷேகத்துக்கு என்று -அலங்கர்த்த திவ்ய காத்ரராய்கொண்டு
பிராட்டி மங்களா சாசனம் பண்ணிக் கொண்டு அந்தப்புரத் த்வாரதளவும் பின்னோடு வர
திவ்ய அந்தபுரத்தி நின்றும் புறப்பட்டும் பெரிய கோலாகலத்தொடே எழுந்து அருளி
வந்து -தகப்பனாரைக் காணப் புகுந்த அளவிலே
கலங்கிக் கிடக்கிற படியைக் கண்டு -இதுக்கடி என் -என்று பயப்பட்டு
ஐயருக்கு இப்போது கிலேசம் எது -என்று கைகேயியைக் கேட்க
முன்பே எனக்கு இரண்டு வரம் தந்து இருப்பார் –
அந்த இரண்டு வரமும் இப்போது பெருகைக்காக உம்மைக் காட்டிலே போக விட வேணும் என்றும்
பரதனை அபிஷேகம் செய்ய வேணும் என்றும்- நான் அபேஷித்தேன்
சத்யம் தப்பாதவர் ஆகையாலே அதுக்கு அனுமதி பண்ணி உம்மைக் காட்டிலே போக விடுவதாக
அழைத்து விட்டார் -இப்போது உம்மை கண்டவாறே வாய் திறந்து சொல்ல மாட்டாமல் கிடக்கிறார் -என்ன
இப்படியோ நான் ஐயருக்கு பர தந்த்ரனாய் வர்த்தித்த படி
என்னை நியமிக்கும் போதைக்கும் இப்படி கிலேசிக்கவும் வேணுமோ
நெருப்பிலே விழச் சொன்னால் அதுவும் நான் செய்யேனோ -என்ன
ஆனால் அவருக்காகா நான் சொல்லுகிறேன்- நீர் வனவாச அர்த்தமாக போம் -என்ன அப்படி செய்யக் கடவேன் என்று
சங்கல்பித்து பறப்பட்டு- தாயாரான கௌசல்யாரையும் வந்து கண்டு -வன கமன அர்த்தமாக உத்யோக்கிற அளவிலே
இளைய பெருமாள்-தம்முடைய திருத் தாயாரான சுமத்ரையர் பக்கலிலே வந்து
ஐயர் சொல்லிற்று செய்ய வேண்டுகையாலே -பெருமாள் காட்டிலே எழுந்து அருளா நின்றார்
நானும் கூட சேவித்து கொண்டு போகிறேன் -என்ன
ஸ்ர்ஷ்டஸ்த்வம் வனவாசாய ஸ்வ துரக்த ச்சூஹர்ஜ் ஜன ராமே பிரமாதம் மகார்ஷி புத்ரப்ராதரிகச்சதி -என்றும்
ராமம் தசரதம் வித்தி மாம் வித்தி ஜனகாத்மாஜம் அயோத்யாமடவிம் வித்தி கச்ச தாதா சுகம் -என்றும்
சொல்லி இவரை ஒருப்படுத்தி
பெருமாள் பக்கலிலே சென்று
அவர் வன கமன அர்த்தமாக உத்யோகித்து நிற்கிற படியைக் கண்டு
சக்கரவர்த்தியும் கைகேயியும் செய்த கொடுமையை நினைத்து நெஞ்சு எரிந்து –
ஒரு பெண் பெண்டாட்டி என் பிள்ளைக்கு வேணும் என்று பறித்து கொண்ட
ராஜ்ஜியம் உமக்கு வேண்டா -ஒருவரும் அபிமாநியாத வனமே உமக்கு அமையும் –
ஆன பின்பு வனத்திலே எழுந்து அருளும் -என்று சொன்னது
வனம் போகே -என்றது வனமே போகு -என்றபடி
இந்த அவதாரணம் இறே கீழ்ச் சொன்ன பொருளைக் காட்டுகிறது

ஈற்றுத் தாய் பின் தொடர்ந்து எம்பிரான் என்று அழ –
பெற்ற தாயாரான கௌசலையார் பின்னே தொடர்ந்து சென்று
தம்முடைய பிரிவாற்றாமை எல்லாம் சொல்லி
ஏக புத்ரரான நான் உம்மை பிரிந்து இருக்க மாட்டேன் -என்னுடைய நாயகனே -என்று கட்டிக் கொண்டு அழ –

கூற்றுத் தாய் சொல்ல –
கூற்றம் போன்ற கைகேயி ஆகிற தாய் சொல்ல
பெருமாளுடைய ஸௌகுமாரத்தையும்-போகிற இடத்தில் உண்டான கொடுமையையும் பாராமல்-
பதினாலு சம்வத்சரம் வனவாசம் பண்ண சொன்ன க்ரௌர்யத்தை பற்ற -இவளைக்
கூற்றுத் தாய் -என்கிறது
பித்ரு வசன பரதந்த்ரராய் போனார் -என்னா நிற்க செய்தே
இவள் சொன்னதுக்காக போனார் -என்கிறது
அவர் வாய் விட்டுச் சொல்ல மாட்டாதே -அனுமதி பண்ணிக் கிடக்க –
அது தானும் சொன்னாள் இவள் ஆகையாலே இறே
மாற்றுத் தாய் சென்று வனம் போகே என்றிடவும்
ஈற்றுத் தாய் பின் தொடர்ந்து எம்பிரான் என்று அளவும்
கூற்றுத் தாய் சொல் அடியாக கொடிய வனத்தில் போன -என்றபடி

அதவா
மாற்றுத் தாய் என்கிறது கைகேயி ஆகவும்
கூற்றுத் தாய் என்கிறது -சுமித்ரையார் யாகவும் யோஜ்ஜிக்கவுமாம் –
அப்போதைக்கு
மாற்றுத்தாய் என்றது சபத்னி ஆகையாலே ஸ்ரீ கௌசல்யாருக்கு தன் நினைவாலே மாற்றாம் தாய் -என்றபடி
ஸ்ரீ பரத ஆழ்வான் நினைவுக்கு மேல் பொருந்தாமையாலே-மாற்றாம் தாய் – என்கிறது ஆகவுமாம்
மாறு -என்ற சொல்லி –தாய் -என்ன வேண்டுகிறது பெருமாள் நினைவாலே இறே
நடுவிலாச்சி என்று இறே அவர் எப்போதும் அருளி செய்வது

சென்று வனம் போகே என்று இட –
வனமே சென்று போக -என்று நியமிக்க
அதாவது
ராஜ போகத்தில் நெஞ்சு வையாதே -வனத்தளவும் சென்று அதிலே போய் விடு -என்று நியமிக்க -என்கை
வா– என்கிறாள் அன்றே போ -என்னும் அதுவே இறே இவள் சொல்லுவது

ஈற்றுத் தாய் -இத்யாதி
பெற்ற தாயாரான கௌசலையார் -என் நாயனே -ஏக புத்ரையான நன் உம்முடைய விச்லேஷம்
வ்யசனம் பொறுக்க மாட்டேன் -நான் எப்படி உம்மை போக விட்டு தரித்து இருப்பது -என்று
பின் தொடர்ந்து சென்று அழ

கூற்றத் தாய் சொல்ல
சுமித்ரை யாகிற தாய் சொல்ல
கூறு பட்ட ஹவிஸ்ஸை புஜிக்கை யாகையாலே கூற்றுத் தாய் -என்னுதல்
சக்கரவர்த்திக்கு மூவரும் சக தர்ம சரிணிகள் ஆகையாலே
யாதம்சத்தாலே -கூற்றுத் தாய் என்னுதல்
ஸ்ரீ கௌசல்யாரைப் போலே நிஷேதித்து அனுமதி பண்ணாமல்
அஹம் மமதைகளால் ஒருத்தி -எனக்கு -என்றது -உமக்கு என் செய்ய -என்று இவள்
சொன்ன அத்தை மிகவும் திரு உள்ளம் பற்றுகையாலே
விஸ்லேஷ பீருக்கள் அபிப்ராயத்தால் கூற்றம் போன்ற தாய் என்னுதல்
இப்படி இருக்கிறவள் வசனத்தை கொண்டு கொடிய வனம்போன

முற்பட்ட யோஜனை -நாலூர் பிள்ளை இட்டு அருளின வியாக்யான பிரக்ரியை
பிற்பட்ட யோஜனை பிள்ளை இட்டு அருளின வியாக்யான பிரக்ரியை
முற்பட்ட யோஜனையில்
சென்று வனம் போக -என்ற இதுக்கு ஸ்வர ஸார்த்தம் சித்திக்கையும் –
கூற்றுத்தாய் சொல்ல கொடிய வனம் போன இது –
தண்டக நூற்றவள் சொல் கொண்டு போகி -என்றும்
குலக் குமரா காடுறையப் போ என்று விடை கொடுப்ப விலக்குமணன் தன்னோடும் அங்கே ஏகியது -என்றும்
கொடியவள் வாய் கடிய சொல் கேட்டு –கான்தொடுத்த நெறி போகி -என்றும் கீழ் மேல் அருளி செய்தவற்றுக்கு
சேர்ந்து இருக்கையும் உண்டு
சம்ப்ரதாயத்திலும் வந்தால்-
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்ரீ பாதத்தில் கேட்ட ஸ்ரீ சிறிய ஆழ்வானப் பிள்ளை குமாரர் பக்கலிலே கேட்ட ஸ்ரீ நாலூர் பிள்ளை
அருளிச் செய்தது ஆகையாலே பிராபல்யம் உண்டு
அவர் தாம் ஸ்ரீ ஆச்சான் பிள்ளை திரு தமப்பனார் ஆகையாலே ஸ்ரீ பிள்ளைக்கு பரம ஆச்சார்யரும் இறே
ஆகையால் அந்த யோஜனை முற்பட எழுதி
ஸ்ரீ பிள்ளை அருளிச் செய்த யோஜனை பிற்பட எழுதப் பட்டது
ஸ்ரீ பிள்ளை ஆகிறார் –ஸ்ரீ திரு வாய் மொழி பிள்ளை
இவர் இப்பிரபந்ததுக்கு ஸ்வாபதேச வியாக்யானம் இட்டு அருளி இருப்பதாக பெரியோர் பணிப்பர்

இரண்டு யோஜனையிலும்-ஸ்ரீ சுமித்ரையார் ஸ்ரீ பெருமாள் முகம் பார்த்து சொன்னதாக சொல்லப் பட்ட வசனம்
ஸ்ரீ ராமாயணத்தில் இல்லை ஆகிலும்
இதிஹாசாந்தர புராணாதிகளில் ஆதல்
கல்பாந்தரித்தாலே ஆதல்
உண்டு என்று கொள்ள வேண்டும்
மயர்வற மதி நலம் அருள பெற்றவர் இவர் இப்படி அருளி செய்கையாலே

கொடிய வனம் போன –
கன்னிரைந்து தீய்ந்து கழை உடைந்து கால் சுழன்று பின்னும்
திரைவயித்றுப் பேயே திரிந்து உலாவ கொன்னவிலும் வெம்கானம் -என்னும் படி இறே
காட்டின் கொடுமை தான் இருப்பது -இப்படி இருக்கிற காட்டிலே
நைவாய வேல் நெடும் கண் நேரிழையும் இளம் கோவும் பின் போக எழுந்து அருளின

சீற்றம் இலாதனை –
கட்டின காப்போடே காட்டிலே தள்ளி விட்டாள் – என்னும் சீற்றம் ஏக தேசமும்
திரு உள்ளத்தில் இல்லாதவனை
மாச லஷ்மண சந்தாபம் கார்ஷிர் லஷம்யா விபர்ய யே-ராஜ்ஜியம் வா வனவாசோ வா
வனவாசோ மகோதய -என்று சந்தோஷத்தோடே இறே எழுந்து அருளிற்று

சீதை மணாளனைப் பாடிப் பற-
வனவாசம் தான் சரசமாய்த்தது அவள் கூட போகையாலே -இறே
ஸ்ரீ பிராட்டியும் தாமும் -ஏகாந்த ரசம் அனுபவிக்கலாம் தேசம் -என்று இறே காடு தன்னை விரும்பிற்று –
தர்சனம் சித்ர கூட ச்யமந்தாகினியாச்ச சோபதே -அதிகம் புரவாசச்ச மன்யே தவச தர்சநாத் -என்று இறே அருளி செய்தது
இப்படி இருக்கிறவனை பாடிப் பற என்று பிரதிகோடியான அவளைப் பார்த்து நியமிக்கிறாள்

————

வெகுளி -கோபம் -சங்க காலம் அர்த்தம்
innocent
இப்பொழுது
கொடி இழந்தது கற்பே -வளையல் அர்த்தம் –
கிருபா சமுத்திரம் -அருள் மா கடல் அமுது -சமஸ்க்ருத -மா கடல் -ocean
1-6-9-இருவர் கோபம்
ஹிரண்யன் கோபம் -சீறி வெகுண்டு
the most unkindest போல்
இரட்டிப்பு கோபத்துடன் ஹிரண்யன் தட்ட –
அளந்திட்ட -அவனே அளந்த
ஹிரண்யனுடைய ஒள்ளியதான விச்தீர்ணமான மார்வை –-
பாகவத அபசாரம் பட்ட -எண்ணி -கோபம் அக்னி ஜ்வாலை -பிரதிபலித்து
வயிற்றில் பய அக்னி
இரண்டாலும் ஒளி
பிளந்திட்ட கைகளால் -hard work இல்லாமல் smart work

அளந்திட்ட தூணை அவன் தட்ட ஆங்கே
வளர்ந்திட்டு வாள் உகிர் சிங்க உருவாய்
உளம் தொட்டு இரணியன் ஒண் மார்வகலம்
பிளந்திட்ட கைகளால் சப்பாணி பேய் முலை உண்டானே சப்பாணி -1 6-9 –

அளந்து இட்ட -ஹிரண்யன் அளந்து நட்ட
வாள் -கத்தி போல் குரூரமான
தொட்டு -இப்போது ஆகிலும் அனுகூலிக்க கூடுமோ என்று பரீஷித்து –
முன்பே நரஸிம்ஹத்தை வைத்து நட்ட தூண் -என்ன ஒண்ணாதபடி -தானே தனக்கு பொருந்த பார்த்து –

அளந்து நட்ட தூணை அவன் தட்ட –
வேறே சிலர் தட்டில் -கையிலே நரசிம்கத்தை அடக்கி கொண்டு வந்து தூணிலே
பாய்ச்சினார்கள் என்ன ஒண்ணாதபடி -அவன் தானே –
எங்கும் உளன் -என்று பிரகலாதன் பண்ணின பிரதிக்ஜை பொறாமல் -பிள்ளையை சீறி வெகுண்டு தூண் புடைப்ப –
என்கிறபடியே அவனை சீறி -அந்த சீற்றத்தினுடைய அதிசயத்தாலே –
ஆனால் நீ சொல்லுகிறவன் இங்கு இல்லை – என்று அழன்று அடிக்க –

ஆங்கே –
அடித்த இடம் ஒழிய ஸ்தலாந்தரத்திலே தோன்றிலும் -இவன் இங்கு இல்லை -என்று
பிரதிக்ஜை நிலை நின்றது ஆம் என்று -அத் தூணிலே அவன் அடித்த இடம் தன்னிலே –
வளர்ந்திட்டு –
பரிய இரணியன் -என்னும்படி பருத்து வளர்ந்த வடிவை உடையனானவன் -கீழ் படும்படியாக தான் வளர்ந்து –

வாள் உகிர் சிங்க உருவாய் –
அஸ்த்ர சஸ்த்ரங்களில் ஒன்றாலும் படக் கடவன் அல்லவாகவும்-
தேவாதி சதிர்வித ஜாதியில் உள்ள வற்றில் ஒன்றின் கையில் படக் கடவன் அல்லவாகவும் –
பிரம ருத்ராதிகள் கொடுத்த வரத்துக்கு விரோதம் வாராதபடி ஒளியை உடைத்தான உகிர்களை உடைய நர ஸிம்ஹ ரூபியாய் –

உளம் தொட்டு -எங்கும் உளன் என்று பிரகலாதன் சொன்னபடியே –
தான் -இல்லை -என்று சொன்ன ஸ்தலம் தன்னிலே -உண்டு -என்னும்படியாக தோற்றுகையாலும் –
சிரம் பற்றி முடி இடிய கண் பிதுங்க வாய் அலற தெழித்தான்-என்கிறபடியே ஒரொன்றே துச்சகமாம்படி –
பண்ணின பீடா விசேஷங்களாலும்-பீதியிலே நெஞ்சு இளகி அனுகூலிக்க கூடுமோ என்று ஹிருதயத்தை பரிஷை பண்ணி –

ஹிரண்யன் ஒண் மார்வகலம் –
ஹிரண்யனுடைய ஒள்ளியதான விச்தீர்ணமான மார்வை –
ஒண்மையாவது-நரஸிம்ஹத்தினுடைய கோப அக்நியாலும் தன்னுடைய உதரத்தில் பய அக்நியாலும் பிறந்த
பரிதாபத்தாலே -அக்னி முகத்தில் பொன் போலே உருகி பதம் செய்து ஒளி விடுகை –

இத்தால் -திரு உகிருக்கு அனாயாசேன கிழிக்கலாம் படியான படியைச் சொல்லுகிறது –
அகலம் என்கையாலே -வர பல பூஜை பலங்களாலே மிடி யற வளர்ந்த பரப்பாலே –
திரு உகிற்கு எல்லாம் இரை போந்தபடியை சொல்லுகிறது –

பிளந்திட்ட கைகளால் -உடலகம் இருபிளவாக்கையில் நீள் உகிர் படையது வாய்த்தவனே –
என்கிறபடியே திரு உகிர்களாலே இரண்டு கூறாக பிளந்து பொகட்ட திருக் கைகளால் சப்பாணி –

பேய் முலை இத்யாதி -அவனைப் போலே பிரதிகூல்யம் தோற்ற நிற்க்கையும் அன்றிக்கே –
தாயாய் வந்த பேய் -என்கிறபடியே வஞ்சகையாய் வந்த பூதனை உடைய முலையை
பிராண சகிதமாக உண்டு முடித்தவனே -சப்பாணி –

—————————————————

இளி வரல் இகழ்ந்து -4-3-5-

அத்தை பிள்ளை
நான்கு கைகள் -மூன்று கண்கள் –
யார் தூக்கி -அவனே யமன் -கண்ணன் தூக்க –
ஒரு நாளில் 99- வசவு வரை கொல்ல மாட்டேன் -எண்ணிக் கொண்டே திட்டுவானாம்

பகவத் நிந்தைக்கு ஜீவனாம்சம் வைத்து கேட்கும் அவர்களுடைய செவிக்கும் சுடும்படியான
தண்ணிய வசவுகளே சொல்லி -வைகை –
அலை வலைமை தவிர்த்த-விரோதம் போக்கி
தன்னை -வியாக்யானம் -இப்படி உள்ளவனையும் திருத்தி
இளிவரவு இருந்தாலும்
இந்த -கையால் ஆகாத இத்யாதி -ஆசாமி -போல் தன்னை
இப்படி இவன் செய்து திரிந்த கொடுமையை
நினைத்து இறே -சிசுபாலன் -என்னாதே -தன்னை -என்று இவர் ஊன்றி அருளிச் செய்தது —

பல பல நாழம் சொல்லி பழித்த சிசுபாலன் தன்னை
அலை வலைமை தவிர்த்த அழகன் அலங்காரன் மலை
குலமலை கோலமலை குளிர் மா மலை கொற்ற மலை
நீலமலை நீண்டமலை திரு மால் இரும் சோலை யதே – 4-3 5-

அலை வலைமை தவிர்த்த –
விஷய கௌ ரவாதிகளை பாராமல் தன் நெஞ்சில் தோற்றியதை சொல்லுவதே அலை வலைமை
சரம தசையில் -தன் அழகைக் காட்டி தன் அளவிலே த்வேஷத்தை மாற்றுகையாலே
தான் -என்றால் நிந்தித்து கொண்டு திரியும் அலை வலைத் தனத்தை போக்கிக் காத்தவன் -என்றபடி

பல பல -இத்யாதி –
பல பல குற்றங்களைச் சொல்லி நிந்தித்த சிசுபாலன் தன்னை –
இவன் சொல்லும் தோஷங்கள் -அனுகூலர் வாக்கால் சொல்லத் தக்கது அல்லாமையாலே
நாழ் -என்கிறது நாழ் =குற்றம்
அது தனக்கு ஒரு சங்க்யை இல்லாமையாலே பல பல என்கிறது
அது தன்னை நெஞ்சால் நினைத்து இருக்கும் அளவு அன்றிக்கே -பிறர் அறியும் படி
வாய் விட்டு சொல்வதே -என்று -சொல்லி -என்கிறது
கேட்பார் செவி சுடும் கீழ்மை வசவுகளே வையும் -என்றார் இறே ஆழ்வாரும்
அதாவது
பகவத் நிந்தைக்கு ஜீவனாம்சம் வைத்து கேட்கும் அவர்களுடைய செவிக்கும் சுடும்படியான
தண்ணிய வசவுகளே சொல்லி -வைகை –
சேட்பால் பழம் பகைவன் -என்று அதுக்கடியும் அருளி செய்தார் இறே அவர் தாமே –
அதாவது –
ஹிரண்ய ராவண ஜென்மங்களே தொடங்கி-மிகவும் ஸ்வபாவமாய் கொண்டு வருகிற
பழையதான பகையை உடையவன் -என்றபடி -இவன் ஓரோர் ஜன்மங்களில் பண்ணின
பிரதி கூல்யத்துக்கு ஓர் அளவு இல்லை இறே -அவ்வவ் ஜன்மங்களில் உண்டான காலத்தின் மிகுதியும்
பண்ணின பிரதி கூல்யத்தின் உடைய மிகுதியும் -இவை எல்லா வற்றையும் நினைக்கிறது –
பகைமையினுடைய பழமையாலே அந்த வாசனை ஆய்த்து -இந்த ஜன்மத்தில் இவன்
இப்படி நிந்தனை பண்ணி திரிகைக்கு ஹேது –இப்படி இவன் செய்து திரிந்த கொடுமையை
நினைத்து இறே -சிசுபாலன் -என்னாதே -தன்னை -என்று இவர் ஊன்றி அருளிச் செய்தது —

அலை வலைமை தவிர்த்த அழகன் –
சரம தசையில் -தன அழகைக் காட்டி தன் அளவிலே த்வேஷத்தை மாற்றுகையாலே
தான் -என்றால் நிந்தித்து கொண்டு திரியும் அலை வலைத் தனத்தை போக்கி காத்தவன்-ரஷித்தவன்
அலங்காரன் மலை
இப்படி இருந்துள்ள அழகருக்கு மேலே -முடிச்சோதி -படியே உண்டான
அலங்காரத்தையும் உடையவன் நித்ய வாசம் பண்ணுகிற திருமலை
குல மலை –
தொண்டைக் குலத்துக்கு தலையான மலை
கோல மலை
அழகருக்கும் ஆஸ்ரிதருக்கும் அநவரத அனுபாவ்யமான அழகை உடைய மலை
குளிர் மா மலை
ரஷகன் ஆனவனுக்கு ரஷ்ய வர்க்கம் பொறாமையால் வந்த தாபத்தையும் –
ரஷ்ய பூதரான இவர்களுக்கு ரஷகனை பொறாமையால் வந்த தாபத்தையும்
ஆற்றும் படியான குளிர்த்தி மிக்கு இருக்கும் மலை
கொற்ற மலை –
தன் அபிமானத்தாலே ஒதுங்கினாரை சம்சாரம் மேலிடாத படி நோக்கும் வெற்றியை உடைத்தான மலை
நில மலை
மணிப் பாறையாய் இருக்கும் அளவன்றிக்கே -சூரிகளுக்கும் முமுஷூகளுக்கும்
புஷ்ப பல த்ருமாதிகளாய் முளைக்கவும் -முளைக்க வேணும் என்று
ப்ரார்த்திக்கைக்கும் யோக்யமான மலை –
நீண்ட மலை –
பரம பதத்துக்கும் சம்சாரத்துக்கும் இடை வெளி அற்று -ஒரு கோவையாம் படியான ஒக்கத்தை உடைய மலை
இப்படி இருக்கிற திரு மால் இரும் சோலை ஆகிற அதுவே -அலங்காரன் மலை

——————————————————

மருக்கை -வியப்பு -ஆச்சர்யம் -பூ சூட்டல்
மாலிகன் –
சீமாலி கனவனோடு தோழமை கொள்ளவும் வல்லாய் –
சி -ஒவ்பசாரிகம் -மாலிகன் என்று பேரை உடையனாய் அசூர பிரக்ருதியாய் இருக்கிறவனோடே
உன் குணத்தாலே கலந்து தோழமை கொளவும் வல்லவனே
சாமாறு அவனை நீ எண்ணி –
சாது பீடாதிகளை பண்ணப் புக்க வாறே -இனி அவனை அழிய செய்யாவிடில் நாடு குடி கிடவாது –
என்று அவன் சாகத் தக்க வழிகளை நீயே சிந்தித்து
அதாவது –
தோழனை கொன்றான் -என்று தனக்கு அபவாதம் வராதபடியாகவும்
தன்னாலே தான் முடிந்தான் -என்னும்படியாகவும் தக்க வழியை சிந்திக்கை –
அவனை -என்கிற இடத்தில் ஐகாரம் அவ்யயம்

என்று எப்படி எவனை எதனைக் கொண்டு அழிக்க அறிந்தவன்

சீமாலி கனவனோடு தோழமை கொள்ளவும் வல்லாய்
சாமாறு அவனை நீ எண்ணி சக்கரத்தால் தலை கொண்டாய்
ஆமாறு அறியும் பிரானே அணி அரங்கத்தே கிடந்தாய்
ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய் இருவாட்சி பூ சூட்ட வாராய் 2-7 8-

சீமாலிகன் எனும் இடத்தில் சி -எனுமது ஒவ்பசாரிக சொல்
ஸ்ரீ என்னுமது சி என்றாய் கண்ணனோடு நடப்பு கொண்டதால் வந்த சீர்மையை சொலுகிறது என்பர்
சீமாலிகன் இத்யாதி –
மாலிகன் என்பான் ஒருத்தன் கிருஷ்ணனுக்கு சகாவாய்-பல ஆயுதங்களும்
பயிற்றுவிக்க கிருஷ்ணன் பக்கலிலே கற்று -இந்த ஆசக்தி பலத்தாலே ஒருவருக்கும் அஞ்சாமல்
லோகத்தில் உள்ள சாதுக்களை நலிந்து -திரியப் புக்கவாறே –
சகாவாய் போந்த இவனை நிரசிக்க ஒண்ணாது -என்று திரு உள்ளத்தில் அத்யந்த வ்யாகுலம்
நடந்து போகிற காலத்திலே-அவனை ஒரு போது கருக நியமித்தவாறே –
அவன் தான் நறுகு முறுகு என்றால் போலே சில பிதற்றி -எல்லா ஆயுதங்களையும் பயிற்று வித்தீர்
ஆகிலும் என்னை ஆழி பயிற்று வித்தீர் இலீரே என்ன
இது நமக்கு அசாதாரணம் -உனக்கு கர்த்தவ்யம் அன்று காண் -என்ன –
எனக்கு கர்த்தவ்யம் அன்றிலே இருப்பது ஒரு ஆயுதம் உண்டோ -என்று
அவன் நிர்பந்தங்களை பண்ணினவாறே -இவனுடைய துஸ் ஸ்பாவங்கள் அடியாக
இவனை நிரசிக்க வேணும் -என்று திரு உள்ளம் பற்றி தன்னுடைய சீர்மை குன்றாதபடி
ஆயுதம் பயிற்றுவிக்கிறானாக திரு ஆழியை ஒரு விரலாலே சுழற்றி ஆகாசத்தில் எழ வீசி
சுழன்று வருகிற திரு ஆழியை மீண்டும் திருக் கையிலே அநாயாசேன ஏற்க
அவன் இத்தை கண்டு -எனக்கு இது அரிதோ -என்று கை நீட்ட
உனக்கு இது அரிது காண் -என்ன செய்தேயும் -அவன் வாங்கி சுழற்றி மேலே விட்டு
மீண்டு சுழன்று வருகிற போது பிடிப்பானாக நினைத்து -தன் கழுத்தை அடுக்க தன் விரலை
எடுத்து கொடு நிற்க -அது -வட்ட வாய் நுதி நேமி ஆகையாலே -சுழலா இடம் போராதது கொண்டு
அதன் வீச்சு இவன் கையில் பிடிபடாமல் இவன் தலையை அரிந்து பொகட்டது என்று இதிஹாசாதிகளிலே
சொல்லப்பட்டதொரு விருத்தாந்தத்தை இப்பாட்டில் பூர்வ அர்த்தத்தால் ஸங்க்ரஹேன சொல்லுகிறது –

சீமாலி கனவனோடு தோழமை கொள்ளவும் வல்லாய் –
சி -ஒவ்பசாரிகம் -மாலிகன் என்று பேரை உடையனாய் அசூர பிரக்ருதியாய் இருக்கிறவனோடே
உன் குணத்தாலே கலந்து தோழமை கொளவும் வல்லவனே
சாமாறு அவனை நீ எண்ணி –
சாது பீடாதிகளை பண்ணப் புக்க வாறே -இனி அவனை அழிய செய்யாவிடில் நாடு குடி கிடவாது –
என்று அவன் சாகத் தக்க வழிகளை நீயே சிந்தித்து
அதாவது –
தோழனை கொன்றான் -என்று தனக்கு அபவாதம் வராதபடியாகவும்
தன்னாலே தான் முடிந்தான் -என்னும்படியாகவும் தக்க வழியை சிந்திக்கை –
அவனை -என்கிற இடத்தில் ஐகாரம் அவ்யயம்

சக்கரத்தால் தலை கொண்டாய் –
நமக்கு அசாதாரணமான ஆயுதம் -உனக்கு இது ஆகாது காண் -என்ன செய்தேயும்
அவன் நிர்பந்தம் பண்ணினதுக்காக அவனை ஆழி பயிற்றுவிக்கிறானாக
உபாய ரூபேண திரு ஆழியாலே சிரசேதம் பண்ணிப் பொகட்டவனே

ஆமாறு அறியும் பிரானே –
சத்ரு நிரசனம் -ஆஸ்ரித ரஷணம் ஆகிய இவற்றில் ஏதேனும் ஒன்றில் புகுந்தால்
மேல் விளைவது அறியும் உபகாரகன் ஆனவனே

அணி அரங்கத்தே கிடந்தாய்
இங்கே கிடந்தால் நமக்கு முமுஷுக்களை லபிக்கலாம் -என்று
சம்சாரத்துக்கு ஆபரணமான ஸ்ரீ கோவிலிலே பள்ளி கொண்டு அருளுகிறவனே
ஏமாற்றம் என்னை தவிர்த்தாய் –
நல்லவர்கள் வாழும் நளிர் அரங்கம் -என்கிறபடியே பரிவர் உள்ள தேசத்திலே
பள்ளி கொள்ளுகையலே உன் சௌகுமார்யாதிகளை நினைத்து -உனக்கு என் வருகிறதோ –
என்று வயிறு எரியா நிற்கும் க்லேசத்தை போக்கினவனே
எமாற்றமாவது -துக்கம்
இருவாட்சி பூ சூட்ட வாராய் –
கால புஷ்பமான இது செவ்வி அழிவதற்கு முன்னே உன்திருக் குழலிலே நான் சூட்டும்படி வாராய் –

——————————————-

அச்சம் -கண்ணன் மற்றவரை -2-1-1-

மெச்சூது சங்கம் இடத்தான் நல்வேயூதி
பொய் சூதில் தோற்ற பொறை உடை மன்னர்க்காய்
பத்தூர் பெறாத அன்று பாரதம் கை செய்த
அத்தூதன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் -2-1 1- –

அப்பூச்சி -பயங்கரமாய் உள்ளது -அதாவது -லோகத்தில் பாலரானவர்கள் எதிர்தலைக்கு
பயங்கரமாக காட்டுவன சில சேஷ்டிதங்கள் இவ்விடத்தில் விசேஷம் உண்டு –
அது ஏது என்னில் -நீர்மையை கண்டு -நம்மிலே ஒருவன் -என்று இருக்கும் அவர்கள் பயப்படும்படி
ஈஸ்வரத்வ சிஹ்னங்களைக் காட்டுகை –

ஸ்ரீ உய்ந்த பிள்ளை-ஸ்ரீ திரு வரங்கம் பெரிய கோவிலில் ஸ்ரீ எம்பெருமானார்
காலத்தில் எழுந்து அருளி இருந்தார் ஒரு அரையர் – பாடா நிற்க –
திரு வோலக்கத்திலே அத்தூதன் என்று -பெருமாளை காட்டுவது –
அப்பூச்சி என்று கண்ணை இறுத்து கொண்டு வருவதாக அபிநயிக்க –
ஸ்ரீ உடையவர் பின்னே சேவித்து எழுந்து அருளி இருந்த ஸ்ரீ எம்பார் -திருக் கைகளை
திருத் தோள்களோடு சேர்ந்து காட்ட -அவரும் அப்படியே அபிநயித்து கொண்டு வர –
இதுக்கடி என் என்று விசாரித்து புரிந்து பார்த்து அருளி –
ஸ்ரீ கோவிந்த பெருமாள் இருந்தீரோ -என்று அருளிச் செய்தார்-என்று பிரசித்தம் இறே –

அப்பூச்சி என்கிறது -இரண்டு திருக் கையில் ஆழ்வார்களையும்
அம்மனே என்கிறது -கண்டு பயப்பட்டு சொல்லுகிற வார்த்தை –

———–

கஞ்சன் கறுக்கொண்டு நின் மேல் கரு நிற செம்மயிர் பேயை
வஞ்சிப்பதற்கு விடுத்தான் என்பதோர் வார்த்தையும் உண்டு
மஞ்சு தவழ மணி மாட மதிள் திரு வெள்ளறையில் நின்றாய்
அஞ்சுவன் நீ அங்கு நிற்க அழகனே காப்பிட வாராய் -2 8-6 – –அந்திக்காப்பு –யசோதை –

இருள் தான் ஒரு வடிவு கொண்டால் போலே -கருத்த நிறத்தையும்
அக்னி ஜ்வாலை போலே சிவந்த தலை மயிரையும் உடையாளாய் இருக்கிற பேய்ச்சியை-
நேர் கொடு நேர் சென்றால் அவனை உன்னால் சாதிக்க போகாது –வஞ்சனத்தால் சென்று சதி –

அஞ்சுவன் நீ அங்கு நிற்க –
பூதனை வந்து வஞ்சனத்தால் உன்னை நலிய தேடினதும் தன் வசமாய் அன்றிகே கம்ச ப்ரேரிதையாய்-
என்ற வார்த்தை பிறக்கையால்-அவன் இன்னம் யாரை வர விடும் -எது செய்யும் என்று தெரியாது -என்று
பய ஸ்தானமான அவ்விடத்தில் நீ நிற்கிற இதுக்கு நான் அஞ்சா நின்றேன்

அழகனே காப்பிட வாராய் –
ஆன பின்பு அங்கு நில்லாதே அதிலோகமான அழகை உடையவனே –
உன் அழகுக்கு த்ர்ஷ்டி தோஷம் வாராதபடியாகக் காப்பிட வாராய்
பொங்கும் பரிவால் -பட்டர் பிரான் -அச்சம் காட்டி

———-

பெருமிதம் –1-2-1-
உள் அமுது -சப்தத்துக்கு வியாக்யானம் -பரோபகார சீலை யானாற் போலே இவளும்-

சீதக் கடலுள் அமுதன்ன தேவகி
கோதை குழலாள் அசோதைக்கு போத்தந்த
பேதை குழவி பிடித்து சுவைத்து உண்ணும்
பாதக் கமலங்கள் காணீரே பவள வாயீர் வந்து காணீரே -1-2-1-

சீதக் கடலுள் அமுதன்ன தேவகி
அகாதமாகையாலே குளிர்த்தி மாறாத சமுத்ரத்திலே -தேவ போக்யமாக பிறந்த
அமிர்தம் புறவமுதாம் படி –
அமுதத்தில் வரும் பெண்ணமுது என்கிறபடியே உள்ளமுதாக பிறந்த
பிராட்டியோடே ஒத்த தேவகி பிராட்டி -அதாவது –
அவள் பரோபகார சீலை யானாற் போலே இவளும் பரோபாகார சீலை -என்றபடி –

பாதக் கமலங்கள் காணீர் –
இப்படி இருந்துள்ள திருவடித் தாமரைகளை வந்து காணும் கோள்-
கமலம் -என்கையாலே –
திருவடிகளில் உண்டான நிறத்தையும் -சைத்ய -மார்தவ -ஸௌரப்யாதிகளையும் -சொல்லுகிறது –

மலர் மகள் கை வருட -மலர் போது சிவக்கும்
மலர் போது -மலர்கின்ற பொழுதே -இருக்கும் திருவடி –

பவள வாயீர் வந்து காணீரே –
பவளம் போல் சிவந்த அதரத்தை உடையீர் வந்து காணும் கோள் என்று –
யசோதை பிராட்டி -தான் அனுபவித்த அம்சத்தை –
சஜாதீயைகளாய்-அநு புபூஷூக்களாய் இருப்பாரையும் ஸ்லாகித்து கொண்டு
அழைத்து காட்டின பாசுரத்தாலே அருளிச் செய்தார் ஆய்த்து-

அழைக்கும் பொழுதும் பெருமிதம்

————

உவகை -மகிழ்ச்சி 3-10-அடையாளப்பத்து
ராமாயணம் சொன்னால் வேறே ஒன்றையும் செய்யாமல்
தசரதன் தொடங்கி பாட
அரக்கிகள் -தூங்க -திருவடி பாட
ராமாயணம் பாட தூங்கினால் அரக்கிகள்
மதுரம் வாக்கியம் -தமிழில் பாடி –
ராவணன் -வேதம் பாடும் -வல்லவன் -சமஸ்க்ருதம் –
அவனுக்குத் தெரியாத பாஷை
நவ வ்யாக்ர பண்டிதர்
அகஸ்தியர் ஆஸ்ரமம் தங்கி சீதையும் அறிவாள்
பாசுரப்படி ராமாயணம் திருவடி பாட –

திக்கு நிறை புகழாளன் தீ வேள்விச் சென்ற நாள்
மிக்க பெரும் சவை நடுவே வில்லிறுத்தான் மோதிரம் கண்டு
ஒக்குமால் அடையாளம் அனுமான் என்று உச்சி மேல்
வைத்துக் கொண்டு உகந்தனளால் மலர்க் குழலாள் சீதையுமே–3-10-9-

மா முனிகள் சீதையாகவே வியாக்யானம் -ஆல் -மீண்டும் மீண்டும் அசை போட்டு உகந்தாள் –

திக்கு நிறை புகழாளன் தீ வேள்விச் சென்ற நாள் -திக்குகளில் நிறைந்த கீர்த்தியை யுடையனான ஸ்ரீ ஜனக ராஜனுடைய
அக்னிகளைக் கொண்டு செய்யும் யாகத்தில் விச்வாமித்ரருடன் போன காலத்திலே
மிக்க பெரும் சவை நடுவே வில்லிறுத்தான் மோதிரம் கண்டு -மிகவும் பெரிய சபையின் நடுவிலே ருத்ர தனுசை முறித்த
ஸ்ரீ ராமபிரானுடைய திரு மோதிரத்தை பார்த்து -சபை நடுவே -பாட பேதம்
மலர்க் குழலாள் சீதையுமே-அனுமான் அடையாளம்
ஒக்குமால் என்று-பூச் சூடிய திருக் கூந்தலை யுடையலான ஸ்ரீ சீதா பிராட்டியாரும் –
வாராய் ஹனுமான் -நீ சொன்ன அடையாளங்கள் எல்லாம் ஒத்திரா நின்றுள்ளவையே என்று திருவடியைச் சொல்லி –
ஆல்-அசைச் சொல் –அந்தத் திருவாழியை
உச்சி மேல் வைத்துக் கொண்டு உகந்தனளால் -தன் தலையின் மீது வைத்துக் கொண்டு மகிழ்ந்தாள் –
ஆல் – மகிழ்ச்சிக் குறிப்பு –

தலை மேல் வைத்து உகந்து
கை மேல் வைத்து உகந்து
திருவிரல் -திருக்கை -திருத்தோள் -திருமேனி -படுக்கையில் இருந்தது போல் மகிழ்ந்தாள்

———-

அமைதி
தொல்காப்பியம் -சம நிலை -சந்தனம் பூசிக் கொண்டாலும் -கத்தியால் வெட்டினாலும் –
பகவத் அனுபவம் -பேர் மகிழ்ச்சி -ப்ரஹ்ம ஆனந்தம் –
3-6-8-பாபங்களை அனைத்தும் ஊதி விரட்டி

சிறு விரல்கள் தடவி பரிமாற செம்கண் கோட செய்ய வாய் கொப்பளிக்க
குறு வெயர்ப்புருவம் கூடலிப்ப கோவிந்தன் குழல் கொடூதின போது
பறைவையின் கணங்கள் கூடு துறந்து வந்து சூழ்ந்து படு காடு கிடப்ப
கறைவையின் கணங்கள் கால் பரப்பி இட்டுக் கவிழ்ந்து இறங்கி செவி ஆட்டகில்லாவே -3 6-8 – –

பறைவையின் கணங்கள்
பஷிகளினுடைய திரள்கள்
கூடு துறந்து –
தம் தாமுடைய வஸ்தவ்ய ஸ்தலங்களை விட்டு
வந்து சூழ்ந்து படு காடு கிடப்ப –
குழலோசை வழியே ஊதுகிறவன் அளவும் வந்து சூழ்ந்து கொண்டு -வெட்டி விழுந்த காடு போலே பரவசமாய் கிடக்க
கறைவையின் கணங்கள்-
பசுக்களினுடைய திரள்கள் ஆனவை
கால் பரப்பி இட்டுக் –
பாரவச்யத்தாலே கால்களை பரப்பி
கவிழ்ந்து இறங்கி –
தலைகளை மிகவும் நாற்றிக் கொண்டு
செவி ஆட்டகில்லாவே –
செவியை இசைக்கில் இசைக்கு பிரதிபந்தகம் ஆம் -என்று
செவியை ஆட்டவும் மாட்டாதே நின்றன —

அப்ராக்ருத ஆனந்தம் பெற்று சம நிலை
ஆசு கவி -150 ஸ்லோகம் -குழல் பற்றியே
முரளி -முகுந்த -ரசனா -நாக்கு லீலா -லீலை

அழகுக்கு உவமை சொல்ல முடியாத பிஞ்சு விரல்கள் -தடவி
பரிமாற தேன் வந்து பொழியுமே -மனசாலே பாவித்து நித்தியமாக பேர் இன்பம் அடைவோம்

————————————-

படித்தால் புரியாது சேவித்தால் புரியும் வியாக்கியானங்கள்
செவிக்கு இனிய சொற்கள் சுவை மணக்கும் உரை

———-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே வெங்கடேஷ் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: