ஸ்ரீ விஷ்ணு பர்வம்–அத்யாயம் – 93–(வஜ்ரநாபபுரே ப்ரத்யும்ன ப்ரவேஷம்)–நடிகர்களாக வஜ்ரபுரத்தை அடைந்த யாதவர்கள் |–

நடிகர்களின் திறமைக்கேற்ற பாராட்டும், பரிசும்; பிரத்யும்னன் குறித்துப் பிரபாவதியிடம் கூறிய சுசீமுகீ; மலர்மாலையில் மறைந்து வண்டாக வந்த பிரத்யும்னன்; பிரபாவதியின் சந்திரோபாலம்பணம்–

வைஷ²ம்பாயன உவாச
தத꞉ ஸ்வபுரவாஸீநாமஸுராணாம் நராதி⁴ப |
த³தா³வாஜ்ஞாம் வஜ்ரநாபோ⁴ தீ³யதாம் க்³ருஹமுத்தமம் ||2-93-1

ஆதித்²யம் க்ரியதாமேஷாம் ப³ஹுரத்னமுபாயனம் |
வாஸாம்ஸி ஸுவிசித்ராணி ஸுகா²ய ஜனரஞ்ஜனம் ||2-93-2

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “பின்னர் மன்னன் வஜ்ரநாபன் நகரங்களில் வாழும் அசுரர்களிடம், “அவர்களுக்கு {நடிகர்களுக்கு} மிகச் சிறந்த அறைகளைக் கொடுங்கள்.(1) அவர்களை விருந்தினர்களாக நடத்தி, மக்களுக்கு விருப்பமான பல்வேறு ரத்தினங்களையும், பல்வேறு ஆடைகளையும் அவர்களுக்குக் கொடுங்கள்” என்று ஆணையிட்டான்.(2)

ப⁴ர்துராஜ்ஞாம் ஸமாலப்⁴ய ததா² சக்ருஷ்²ச ஸர்வஷ²꞉ |
பூர்வாஷ்²ருதோ நட꞉ ப்ராப்த꞉ கௌதூஹலமஜீஜனத் ||2-93-3

நடஸ்யாத² த³து³ர்தை³த்யா꞉ ஸத்காரம் பரயா முதா³ |
பர்யாயார்தே² த³து³ஷ்²சாபி ரத்னானி ஸுப³ஹூன்யத² ||2-93-4

தத꞉ ஸ நந்ருதே தத்ர வரத³த்தோ நடஸ்ததா² |
ஸ்வபுரே புரவாஸீனாம் பரம் ஹர்ஷம் ஸமாத³த⁴த் ||2-93-5

அவர்களும், தங்கள் தலைவனின் ஆணையை ஏற்று இவை அனைத்தையும் செய்தனர். ஏற்கனவே நாம் கேள்விப்பட்ட அந்த நடிகனும் {பத்ரன்} அங்கே வந்து அவர்களின் ஆவலை அதிகரித்தான்.(3) அவர்கள் பெரும் மகிழ்ச்சியுடன் கூடியவர்களாக ரத்தினங்களைக் கொடையாக அளித்து அந்த நடிகனை வரவேற்றனர்.(4) அதன் பிறகு வரம்பெற்ற நடிகன், ஸுபுர நகரக் குடிமக்களைத் தன் நடனத்தின் மூலம் பெரும் மகிழ்ச்சியடையச் செய்தான்.(5)

ராமாயணம் மஹாகாவ்யமுத்³தே³ஷ்²யம் நாடகீக்ருதம் |
ஜன்ம விஷ்ணோரமேயஸ்ய ராக்ஷஸேந்த்³ரவதே⁴ப்ஸயா ||2-93-6

லோமபாதோ³ த³ஷ²ரத² ருஷ்²யஷ்²ருங்க³ம் மஹாமுனிம் |
ஷா²ந்தாமப்யானயாமாஸ க³ணிகாபி⁴꞉ ஸஹானக⁴ ||2-93-7

ராமலக்ஷ்மணஷ²த்ருக்⁴னா ப⁴ரதஷ்²சைவ பா⁴ரத |
ருஷ்²யஷ்²ருங்க³ஷ்²ச ஷா²ந்தா ச ததா²ரூபை꞉ நடை꞉ க்ருதா꞉ ||2-93-8

தத்காலஜீவினோ வ்ருத்³தா⁴ தா³னவா விஸ்மயம் க³தா꞉ |
ஆசசக்ஷுஷ்²ச தேஷாம் வை ரூபதுல்யத்வமச்யுதம் ||2-93-9

ஸம்ஸ்காராபி⁴னயௌ தேஷாம் ப்ரஸ்தாவானாம் ச தா⁴ரணம் |
த்³ருஷ்ட்வா ஸர்வே ப்ரவேஷ²ம் ச தா³னவா விஸ்மயம் க³தா꞉ ||2-93-10

தே ரக்தா விஸ்மயம் நேது³ரஸுரா꞉ பரயா முதா³ |
உத்தா²யோத்தா²ய நாட்யஸ்ய விஷயேஷு புன꞉ புன꞉ ||2-93-11

த³து³ர்வஸ்த்ராணி துஷ்டாஷ்²ச க்³ரைவேயவலயானி ச |
ஹாரான்மனோஹராம்ஷ்²சைவ ஹேமவைடூ³ர்யபூ⁴ஷிதான் ||2-93-12

ப்ருத²க³ர்தே²ஷு த³த்தேஷு லோகைஸ்தே துஷ்டுவுர்னடா꞉ |
அஸுராம்ஷ்²ச முனீம்ஷ்²சைவ கோ³த்ரைரபி⁴ஜனைரபி ||2-93-13

ராட்சசர்களின் மன்னனை (ராவணனை) அழிப்பதற்காக ஒப்பற்ற விஷ்ணுவின் பிறப்பு உள்ளிட்ட பெருங்காவியமான ராமாயணத்தை நிகழ்த்திக் காண்பித்தனர்.(6) சாந்தைக்காக லோமபாதரும், தசரதனும் முனிவர் ரிஷ்யங்கரிடம் எவ்வாறு வேசிகளை அழைத்து வந்தனர் என்பது நடித்துக் காட்டப்பட்டது.(7) அந்த நிகழ்ச்சியில் ராமன், லக்ஷ்மணன், சத்ருக்னன், பரதன், ரிஷ்யசிருங்கர், சாந்தை ஆகிய பாத்திரங்களை அதே தோற்றத்தில் கண்டதாகத் தானவ முதியோர் மீண்டும் மீண்டும் சொல்லி வியக்கும் வண்ணம் அந்த நடிகர்கள் நடித்துக் காட்டினர்.(8,9) அவர்களது உடைகள், நடிப்பு, நுழைவு, அறிமுகம் ஆகியவற்றைக் கண்ட தானவர்கள் ஆச்சரியத்தில் நிறைந்தனர்.(10) அந்த நிகழ்ச்சியின் குறிப்பிட்ட பகுதிகளில் அசுரர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து மீண்டும் மீண்டும் எழுந்து தங்கள் பாராட்டைத் தெரிவித்து,(11) பொன், வைடூரியங்களாலான அழகிய ஆரங்களையும் {மாலைகளையும்}, கங்கணங்களையும், துணிமணிகளையும் கொடைளித்தனர்.(12) அந்த நடிகர்கள் தங்கள் ஊதியத்தைப் பெற்றுக் கொண்ட பிறகு அசுரர்களின் குடும்பம் {முன்னோர்கள்}, பிறப்புக்கு {கோத்ரத்துக்கு} ஏற்பத் தனி ஸ்லோகங்களுடன் அவர்களைத் துதித்தனர்.(13)

ப்ரேஷிதம் வஜ்ரநாப⁴ஸ்ய ஷா²கா²நக³ரவாஸிபி⁴꞉ |
நடஸ்ய தி³வ்யரூபஸ்ய நரேந்த்³ராக³மனம் ததா³ ||2-93-14

புரா ஷ்²ருதார்தோ² தை³த்யேந்த்³ர꞉ ப்ரேஷ²யாமாஸ பா⁴ரதா |
ஆனீயதாம் வஜ்ரபுரம் நதோ(அ)ஸாவிதி ஹர்ஷித꞉ ||2-93-15

தா³னவேந்த்³ரவச꞉ ஷ்²ருத்வா ஷா²கா²நக³ரவாஸிபி⁴꞉ |
நீதா வஜ்ரபுரம் ரம்யம் நடவேஷேண யாத³வா꞉ ||2-93-16

ஆவாஸஷ்²ச ததோ த³த்த꞉ ஸுக்ருதோ விஷ்²வகர்மணா |
ஏஷ்டவ்யம் யச்ச தத்ஸர்வம் த³த்தம் ஷ²தகு³ணோத்தரம் ||2-93-17

அத² காலோத்ஸவம் சக்ரே வஜ்ரநாபோ⁴ மஹாஸுர꞉ |
காரயாமாஸ ரம்யம் ச சமூவாடம் ப்ரஹ்ருஷ்டவான் ||2-93-18

ததஸ்தான்பரிவிஷ்²ராந்தான்ப்ரேக்ஷார்தா²ய ப்ரசோத³யத் |
த³த்த்வா ரத்னானி பூ⁴ரீணி வஜ்ரநாபோ⁴ மஹாப³ல꞉ ||2-93-19

உபவிஷ்டஷ்²ச தாந்த்³ரஷ்டும் ஸஹ ஜ்ஞாதிபி⁴ராத்மவான் |
ச²ன்னே சாந்த꞉புரம் ஸ்தா²ப்ய சக்ஷுர்த்³ருஷ்²யே நராதி⁴ப꞉ ||2-93-20

ஓ! மன்னா, அதன் பிறகு சார்பு நகரங்களில் {கிளை நகரங்களில்} வசிப்போர் அந்த அழகிய நடிகர்களின் வரவை வஜ்ரநாபனுக்கு அறிவித்தனர்.(14) ஓ! பாரதா, தைத்தியர்களின் மன்னன் இதை முன்பே கேள்விப்பட்டிருந்தான். இதனால் மகிழ்ச்சியடைந்த அவன் அந்த நடிகனை அழைத்து வர தூதனை அனுப்பினான்.(15) தானவ மன்னனின் ஆணையின் பேரில் கிளை நகரங்களில் வாழும் தைத்தியர்கள், நடிகர்களின் வேடத்தில் இருந்த யாதவர்களை அழகிய வஜ்ரபுரத்திற்கு அழைத்துச் சென்றனர்.(16) அவர்கள் தங்குவதற்குத் தேவ தச்சனால் கட்டப்பட்ட அழகிய வீடு ஒன்று அளிக்கப்பட்டது, நூற்றுக்கணக்கான அவசியப் பொருட்களும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டன.(17) அதன் பிறகு அந்தப் பேரசுரன் வஜ்ரநாபன் ஓர் அழகிய பந்தலை அமைத்து அந்த நடிகர்களுடன் சேர்ந்து ஒரு பெரும் விழாவை நடத்தினான்.(18) அவர்களுக்குக் களைப்பு நீங்கியதும், பெருஞ்சக்திவாய்ந்த வஜ்ரநாபன் ஏராளமான ரத்தினங்களை அவர்களுக்குக் கொடுத்து நாடகத்தைத் தொடங்குமாறு அவர்களை வேண்டினான்.(19) ஓ! மன்னா, அந்தப் பேரசுரன், அனைத்தையும் பார்க்கக்கூடிய இடத்தில் திரைக்குப் பின்னால் தன் குடும்பப் பெண்களை அமர்த்திவிட்டுத் தன் உற்றார் உறவினர்களுடன் வந்து அமர்ந்து கொண்டான்.(20)

பை⁴மாபி ப³த்³த⁴னேபத்²யா நடவேஷத⁴ராஸ்ததா² |
கார்யார்த²ம் பீ⁴மகர்மாணோ ந்றித்யார்த²முபசக்ரமு꞉ ||2-93-21

ததோ க⁴னம் ஸஸுஷிரம் முரஜானகபூ⁴ஷிதம் |
தந்த்ரீஸ்வரக³ணைர்வித்³தா⁴னாதோத்³யானன்வவாத³யன் ||2-93-22

ததஸ்து தே³வகா³ந்தா⁴ரம் சா²லிக்யம் ஷ்²ரவணாம்ருதம் |
பை⁴மஸ்த்ரிய꞉ ப்ரஜகி³ரே மன꞉ஷ்²ரோத்ரஸுகா²வஹம் ||2-93-23

ஆகா³ந்தா⁴ரக்³ராமராக³ம் க³ங்கா³வதரணம் ததா² |
வித்³த⁴மாஸாரிதம் ரம்யம் ஜகி³ரே ஸ்வரஸம்பதா³ ||2-93-24

லயதாலஸமம் ஷ்²ருத்வா க³ங்கா³வதரணம் ஷு²ப⁴ம் |
அஸுராம்ஸ்தோஷயாமாஸ உத்தா²யோத்தா²ய பா⁴ரத ||2-93-25

பயங்கரச் செயல்களைச் செய்பவர்களான பைமர்கள், நடிகர்களாகத் தங்களுக்குத் தாங்கே உடுத்திக் கொண்டும், இசைநாடகத்துக்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டும் அந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்தனர்.(21) முதலில் அவர்கள் கானம் {ஜாலர்தாளம்}, வேணு {சுசீரம் / புல்லாங்குழல்}, முரஜம் {முரசுகள் / மிருதங்கங்கள்}, ஆனகம் {துந்துபி} முதலிய இசைக்கருவிகளிலும், தந்திக் கருவிகளிலும் {வீணையிலும்} பல்வேறு ராகங்களை இசைத்தனர்,(22) பிறகு, பைமர்களால் அழைத்து வரப்பட்ட பெண்கள், மனத்திற்கும், காதுக்கும் இனிமையைத் தரும் சாலிக்ய காந்தர்வப் பாடலைப் பாடினார்கள்.(23) ஏழு ஸ்வரங்களுடன் கூடிய காந்தாரத்தையும், பிறவற்றையும், வசந்தம் ராகத்துடனும், பிற ராகங்களுடனும் கூடிய மூன்று கிராமங்களையும் பயன்படுத்திக் கங்கையின் புனிதநிலையில் இறங்கி வந்ததைச் சொல்லும் பாடலை இனிமையாகப் பாடினர்[காந்தாரம் எனும் ராகத் தொகுதியையும், கங்காவதரணம் எனும் விசேஷ ராகத்தையும் இனிய ஆஸாரிதம், வித்தம் எனும் ராகங்களையும் ஸுஸ்வரத்துடன் பாடினர்” ].(24) அசுரர்கள், நேரமும் {லயமும்}, ராகமும் {தாளமும்} அமைந்ததும், கங்கை இறங்கி வந்ததைச் சொல்வதுமான அந்த இனிய பாடலைக் கேட்டு மீண்டு மீண்டும் எழுந்து நடிகரங்களை மகிழ்ச்சியிலாழ்த்தினர்.(25)

நந்தி³ம் ச வாத³யாமாஸ ப்ரத்³யும்னோ க³த³ ஏவ ச |
ஸாம்ப³ஷ்²ச வீர்யஸம்பன்ன꞉ கார்யார்த²ம் நடதாம் க³த꞉ ||2-93-26

நாந்த்³யந்தே ச ததா³ ஷ்²லோகம் க³ங்கா³வதரணாஷ்²ரிதம் |
ரௌக்மிணேயஸ்ததோ³வாச ஸம்யக்ஸ்வபி⁴னயான்விதம் ||2-93-27

ரம்பா⁴பி⁴ஸாரம் கௌபே³ரம் நாடகம் நந்ருதுஸ்தத꞉ |
ஷூ²ரோ ராவணரூபேண ரம்பா⁴வேஷம் மனோவதீ ||2-93-28

நலகூப³ரஸ்து ப்ரத்³யும்ன꞉ ஸாம்ப³ஸ்தஸ்ய விதூ³ஷக꞉ |
கைலாஸோ ரூபிதஷ்²சாபி மாயயா யது³நந்த³னை꞉ ||2-93-29

ஷா²பஷ்²ச த³த்த꞉ க்ருத்³தே⁴ன ராவணஸ்ய து³ராத்மன꞉ |
நலகூப³ரேண ச யதா² ரம்யா சாப்யத² ஸாந்த்விதா ||2-93-30

நடிகனாக வேடந்தரித்திருந்த பெருஞ்சக்திவாய்ந்த பிரத்யும்னனும், கதனும், சாம்பனும் ஏதோவொரு காரியத்திற்காக நந்தியை[இஃது ஓர் அறச்சடங்கின் தொடக்கத்திலோ, ஒரு நாடகத்தின் தொடக்கத்திலோ ஆசி கூறும் வகையில் மன்னனைத் துதிப்பது அல்லது ஒரு தேவனைப் புகழ்வதாகும்”] இசைத்தனர்.(26) அந்த முன்னுரை முடிந்த பின்னர் ருக்மிணியின் மகன், கங்கை இறங்கி வந்ததைக் குறித்துச் சொல்லும் பாடலை அழகிய அசைவுகளுடன் பாடினான்.(27) அதன்பிறகு, ரம்பாபிசாரம்[“ரம்பை தன் காதலனைத் தேடி செல்லும் கதையைச் சொல்லும் நாடகம் இஃது”] எனும் கௌபேர நாடகத்தை அவர்கள் நடிக்கத் தொடங்கினர். ராவணன் வேடத்தில் சூரனும், ரம்பையின் வேடத்தில் மநோவதியும்,(28) நளகூபரனின் வேடத்தில் பிரத்யும்னனும், அவனது விதூஷகனாக[அரச சபைகளில் இருக்கும் நகைச்சுவை நடிகன் இப்படி அழைக்கப்படுவான்”] சாம்பனும் நடித்தனர். யாதவர்கள் தங்கள் மாய சக்திகளால் கைலாசத்தின் காட்சியை அங்கே காட்டினர்[ராவணன், ரம்பை, நளகூபரன் உள்ளிட்ட ஆக்யானம், மஹாபாரதத்தின் ராமோபாக்யானப்பகுதியில் வருகிறது. இந்த முழு நிகழ்வு ராமாயணத்தின் உத்தரக் காண்டம் அத்தியாயம் 26ல் விளக்கப்பட்டிருக்கிறது” ].(26-29) அவர்கள், கோபங்கொண்ட நளகூபரனால் தீய ராவணன் எவ்வாறு சபிக்கப்பட்டான், ரம்பை எவ்வாறு தேற்றப்பட்டாள் என்பதை நடித்துக் காட்டினர்.(30)

ஏதத்ப்ரகரணம் வீரா நந்ருதுர்யது³நந்த³னா꞉ |
நாரத³ஸ்ய முனே꞉ கீர்திம் ஸர்வஜ்ஞஸ்ய மஹாத்மன꞉ ||2-93-31

பாதோ³த்³தா⁴ரேண ந்ருத்யேன ததை²வாபி⁴னயேன ச |
துஷ்டுவுர்தா³னவா வீரா பை⁴மாநாமதிதேஜஸாம் ||2-93-32

தே த³து³ர்வஸ்த்ரமுக்²யானி ரத்னான்யாப⁴ரணானி ச |
ஹாராம்ஸ்தரலவித்³தா⁴ம்ஷ்²ச வைடூ³ர்யமணிபூ⁴ஷிதான் ||2-93-33

விமானானி விசித்ராணி ரதா²ம்ஷ்²சாகாஷ²கா³மின꞉ |
க³ஜானாகாஷ²கா³ம்ஷ்²சைவ தி³வ்யநாக³குலோத்³ப⁴வான் ||2-93-34

சந்த³னானி ச தி³வ்யானி ஷீ²தானி ரஸவந்தி ச |
கு³ரூண்யகு³ருமுக்²யானி க³ந்தா⁴ட்⁴யானி ச பா⁴ரத ||2-93-35

சிந்தாமணீனுதா³ராம்ஷ்²ச சிந்திதே ஸர்வகாமதா³ன் |
ப்ரேக்ஷாஸு தாஸு ப³ஹ்வீஷு த³த³ந்தோ தா³னவாஸ்ததா² ||2-93-36

த⁴னரத்னைர்விரஹிதா꞉ க்ருதா꞉ புருஷஸத்தம |
ஸ்த்ரியோ தா³னவமுக்²யானாம் ததை²வ ச ஜனேஷ்²வர ||2-93-37

வீர யாதவர்களால் நடிக்கப்பட்ட உயரான்ம நாரதரின் மகிமையைச் சொல்லும் இந்த நாடகப்பகுதி நிறைவடைந்ததும், பெருஞ்சக்திவாய்ந்த பைமர்களின் ஆடல்களில் தானவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.(31,32) அவர்கள் விலைமதிப்புமிக்க ஆடைகள், ஆபரணங்கள், வைடூரியம் பதிக்கப்பட்ட பதக்கங்களைக் கொண்ட ஆரங்கள்,(33) அழகிய விமானங்கள், வானுலாவும் தேர்கள், {தேவலோக யானைகளின் குலத்தில் பிறந்த} ஆகாயத்தில் செல்லக்கூடிய யானைகள்,(34) தெய்வீகமான குளிர்ந்த சந்தனம், நறுமணமிக்க அகில், இன்னும் பிற நறுமணப் பொருட்கள்,(35) நினைத்தவுடன் விருப்பங்கள் அனைத்தையும் தரவல்ல மதிப்புமிக்கச் சிந்தாமணி ரத்தினங்கள் ஆகியவற்றை அவர்களுக்குக் கொடையளித்தனர்.(36) தானவர்கள் இவ்வழியில் ஒவ்வொரு காட்சிக்கும் கொடையளித்துத் தங்கள் வளங்களையும், ரத்தினங்களையும் இழந்தனர். தானவத் தலைவர்களின் பெண்களும் இதே விதியைப் பகிர்ந்து கொண்டனர்.(37)

ததோ ஹம்ஸீ ப்ரபா⁴வத்யா꞉ ஸகீ² ப்ராஹ ப்ரபா⁴வதீம் |
க³தாஸ்மி த்³வாரகாம் ரம்யாம் பை⁴மகு³ப்தாமனிந்தி³தே ||2-93-38

ப்ரத்³யும்னஷ்²ச மயா த்³ருஷ்டோ விவிக்தே சாருலோசனே |
ப⁴க்திஷ்²ச கதி²தா தஸ்ய மயா தவ ஷு²சிஸ்மிதே |2-93-39

தேன ஹ்ருஷ்டேன காலஸ்ச க்ருத꞉ கமலலோசனே |
அத்³ய ப்ரதோ³ஷஸமயே த்வயா ஸஹ ஸமாக³மே ||2-93-40

தத³த்³ய ருசிரஷ்²ரோணி தவ ப்ரியஸமாக³ம꞉ |
ந ஹ்யாத்மவார்தாம் பா⁴ஷந்தி மித்²யா பை⁴மகுலோத்³ப⁴வா꞉ ||2-93-41

மறுபுறம், பிரபாவதியின் தோழியான சுசீமுகி, அவளிடம், “ஓ! அழகியே, பைமர்களால் பாதுகாக்கப்படும் அழகிய துவாரகை நகரத்திற்கு நான் சென்றிருந்தேன்.(38) ஓ! இனிய புன்னகையையும், அழகிய கண்களையும் கொண்டவளே, அங்கே நான் பிரத்யும்னனைக் கமுக்கமாகச் சந்தித்து, உன் காதலை {பக்தியை} அவனிடம் தெரிவித்தேன்.(39) ஓ! தாமரை போன்ற கண்களைக் கொண்டவளே, இதில் மகிழ்ச்சியடைந்த அவன் உன்னைச் சந்திக்க இந்த மாலை வேளையை நிச்சயித்திருக்கிறான்.(40) ஓ! அழகிய இடையைக் கொண்டவளே, பைமர்கள் ஒரு பொய்யையும் ஒருபோதும் பேசுவதில்லை; உண்மையில் இன்றே நீ உன் காதலனைச் சந்திப்பாய்” என்றாள்.(41)

தத꞉ ப்ரபா⁴வதீ ஹ்ருஷ்டா ஹம்ஸீம் தாமித³மப்³ரவீத் |
உஷிதாஸி மமா(ஆ)வாஸே ஸ்வப்துமர்ஹஸி ஸுந்த³ரி ||2-93-42

த்வயாஹம் ஸஹிதாவாஸே த்³ரஷ்டுமிச்சா²மி கைஷ²விம் |
நி꞉ஸாத்⁴வஸா ப⁴விஷ்யாமி த்வயா ஸஹ விஹங்க³மே ||2-93-43

ஹம்ஸீ ததே²தி சோவாச ஸகீ²ம் கமலலோசனாம் |
ஆருரோஹ ச தத்³த⁴ர்ம்யம் ப்ரபா⁴வத்யா விஹங்க³மா ||2-93-44

விஷ்²வகர்மக்ருதே தத்ர ஹர்ம்யப்ருஷ்டே² ப்ரபா⁴வதீ |
ஸம்விதா⁴னம் சகாராஷு² ப்ரத்³யும்நாக³மனக்ஷமம் ||2-93-45

தஸ்மின்க்ருதே ஸம்விதா⁴னே காமமானயிதும் யயௌ |
ப்ரபா⁴வதீமனுஜ்ஞாப்ய ஹம்ஸீ வாயுஸமா க³தௌ ||2-93-46

நடவேஷத⁴ரம் காமம் க³த்வோவாச ஷு²சிஸ்மிதா |
அத்³ய பூ⁴த꞉ ஸ ப⁴க³வன்ஸமயோ வர்ததே நிஷி² ||2-93-47

இதைக் கேட்ட பிரபாவதி, மகிழ்ச்சியில் நிறைந்தவளாக அந்த அன்னத்திடம், “ஓ! அழகிய பெண்ணே, இன்று என் அறையில் காத்திருந்து இங்கேயே உறங்குவாயாக.(42) நீ என்னுடன் இருந்தால் எவருக்கும் நான் அஞ்சமாட்டேன். உன்னுடன் சேர்ந்தே நான் கேசவரின் மகனைக் காண விரும்புகிறேன்” என்றாள்.(43)
அந்த அன்னமும், தாமரைக் கண்களைக் கொண்டவளும், தன் தோழியுமான பிரபாவதியிடம், “அவ்வாறே ஆகட்டும்” என்றது. அதன்பிறகு பிரபாவதி தன் அறைக்குச் சென்றாள்.(44) அதன்பிறகு, தேவதச்சனால் கட்டப்பட்ட அந்த வீட்டின் மேல் மாடியில், பிரத்யும்னனின் வரவுக்கான ஏற்பாடுகளைப் பிரபாவதி செய்யத் தொடங்கினாள்.(45) அந்த ஏற்பாடுகள் முடிந்ததும் பிரபாவதியின் அனுமதியுடன் காமனை {பிரத்யும்னனை} அழைத்து வருவதற்காக அந்த அன்னமானவள் காற்றைப் போன்ற வேகத்துடன் சென்றாள்.(46)
இனிய புன்னகையைக் கொண்ட அவள் {அந்த அன்னம்}, நடிகனின் வேடத்தில் வாழ்ந்து வந்த காமனிடம் {பிரத்யும்னனிடம்} சென்று , “இன்றிரவில் நீ அவளைச் சந்திப்பாய்” என்றாள்.(47)

ததே²தி ப்ராஹ தாம் காம꞉ ஸா நிவ்ருத்தாத² பக்ஷிணீ |
அப்⁴யாக³தா ச ஸா ஹம்ஸீ ப்ரபா⁴வதிமதா²ப்³ரவீத் |
அப்⁴யேதி ரௌக்மிணேயோ(அ)ஸாவாஷ்²வஸாயதலோசனே ||2-93-48

ப்ரத்³யும்னோ நீயமானம் து த³த்³ருஷே² மால்யமாத்மவான் |
ப்⁴ரமரைராவ்ருதம் வீர꞉ ஸுக³ந்த⁴மரிமர்த³ன꞉ ||2-93-49

நிலில்யே தத்ர மால்யே து பூ⁴த்வா மது⁴கரஸ்ததா³ |
ப்ரபா⁴வத்யா நீயமானே விதி³தார்த²꞉ ப்ரதாபவான் ||2-93-50

ப்ரவேஷி²தம் ச தன்மால்யம் ஸ்த்ரீபி⁴ர்மது⁴கராயுதம் |
உபனீதம் ப்ரபா⁴வத்யைஸ்த்ரீபி⁴ஸ்தத்³ப்⁴ரமராவ்ருதம் ||2-93-51

அவிதூ³ரே ச வின்யஸ்தம் ப்ரபா⁴வத்யா ஜனாதி⁴ப |
ப்⁴ரமராஸ்தே யயு꞉ ஸௌம்ய ஸந்த்⁴யாகாலே ஹ்யுபஸ்தி²தே ||2-93-52

ஸ பை⁴மப்ரவரோ வீரஸ்தை꞉ ஸஹாயைர்விஹீனத꞉ |
கர்ணோத்பலே ப்ரபா⁴வத்யா நிலில்யே ஷ²னகைரிவ ||2-93-53

பிறகு வேகமாகப் பிரபாவதியிடம் திரும்பிச் சென்று அவள், “ஓ! அகன்ற விழிகளைக் கொண்டவளே, உன்னைத் தேற்றிக் கொள்வாயாக; ருக்மிணியின் மகன் வரப் போகிறான்” என்றாள்.(48)
அப்போது, தற்கட்டுப்பாட்டைக் கொண்டவனும், பகைவரைக் கொல்பவனுமான பிரத்யும்னன், வண்டுகள் நிறைந்த நறுமணமிக்க மலர்மாலை பிரபாவதிக்காகக் கொண்டு செல்லப்படுவதைக் கண்டு, ஒரு வண்டின் வடிவை ஏற்று அதில் {அந்த மாலையில்} அமர்ந்து கொண்டான்.(49,50) கருவண்டுகள் நிறைந்த அந்த மாலையானது, பணிப்பெண்களால் அந்தப்புரத்திற்குப் பிரபாவதியிடம் கொண்டு செல்லப்பட்டது.(51) அந்த மாலையானது பிரபாவதியின் அருகிலேயே வைக்கப்பட்டிருந்தது. ஓ! மென்மையான மன்னா, மெதுவாக மாலை வேளை வந்ததும், மற்ற வண்டுகள் பறந்து சென்று விட்டன.(52) பைமத் தலைவனான அந்த வீரன் {பிரத்யும்னன்} தன்னைப் பின்தொடர எவரும் இல்லாதவனாகப் பிரபாவதியின் காதை அலங்கரித்திருந்த மலரில் மெதுவாக அமர்ந்தான்.(53)

தத꞉ ப்ரபா⁴வதீ ஹம்ஸீமுவாச வத³தாம் வரா |
உத்³யதம் பூர்ணசந்த்³ரம் ஸா ஸமீக்ஷ்யாதிமனோஹரம் ||2–93-54

ஸகி² த³ஹ்யதி மே(அ)ங்கா³னி முக²ம் ச பரிஷு²ஷ்யதி |
ஔத்ஸுக்யம் ஹ்ருதி³ சாதீவ கோ(அ)யம் வ்யாதி⁴ரனௌஷத⁴꞉ ||2-93-55

த³த⁴த்³த்³விகு³ணமௌத்ஸுக்யமஸௌ பூர்ணநிஷா²கர꞉ |
நவோதி³த꞉ ஷீ²தரஷ்²மி꞉ ஸக்²யம் ஹரதி ச ப்ரிய꞉ ||2-93-56

ந த்³ருஷ்டபூர்வோ ஹி மயா ஷ்²ருதமாத்ரேண காங்க்ஷித꞉ |
அஹோ தூ⁴மயதே(அ)ங்கா³னி ஸ்த்ரீஸ்வபா⁴வஸ்ய தி⁴க்க²லு |
கல்பயாமி யதா² பு³த்³த்⁴யா யதி³ நாப்⁴யேதி மே ப்ரிய꞉ ||2-93-57

குமுத்³வதீக³தம் மார்க³ம் ஹா க³மிஷ்யாம்யகிஞ்சனா |
மத³நாஷீ²விஷேணாஸ்மி ஹா ஹா த³ஷ்டா மனஸ்வினீ ||2-93-58

ஷீ²தவீர்யா꞉ ப்ரக்ருத்யைவ ஜக³தௌ ஹ்ராத³னா꞉ ஸுகா²꞉ |
த³ஹந்தி மம கா³த்ராணி கிம் நு சந்த்³ரக³ப⁴ஸ்தய꞉ ||2-93-59

ப்ரக்ருத்யா ஷீ²தலோ வாயுர்னானாபுஷ்பரஜோவஹ꞉ |
தா³வாக்³நிஸத்³ருஷோ² மே(அ)த்³ய த³ந்த³ஹீதி ஷு²பா⁴ம் தனும் ||2-93-60

தத꞉ ஸங்கல்பயே ஏவ ஸ்தை²ர்யம் கார்யமிவாத்மன꞉ |
நாவதிஷ்ட²தி நிர்வீர்யம் மன꞉ ஸங்கல்பத⁴ர்ஷிதம் ||2-93-61

விமனஸ்காஸ்மி முஹ்யாமி வேபது²ர்மே மஹான்ஹ்ருதி³ |
ப³ப்⁴ரமீதி ச மே த்³ருஷ்டிர்ஹா ஹா யாமி த்⁴ருவம் க்ஷயம் ||2-93-62

புத்திசாலித்தனமாகப் பேசுபவளான பிரபாவதி, அப்போது அழகிய முழு நிலவு எழுவதைக் கண்டு, அந்த அன்னத்திடம் {சுசீமுகியிடம்},(54) “ஓ! தோழி, என் அங்கங்கள் எரிகின்றன, என் வாய் உலர்ந்து போகிறது, என் முகம் வாடுகிறது, என் இதயம் ஆவலால் நிறைந்திருக்கிறது. இந்நோயின் பெயரென்ன?(55) புதிதாயெழும் முழு நிலவின் குளிர்ந்த கதிர்கள் அனைவராலும் விரும்பப்படுகின்றன. எனக்கு விருப்பமில்லாததைப் போல இன்னும் எனக்குள் கவலையை உண்டாக்குகிறது.(56) ஓ! பெண்களின் இயல்புக்கு ஐயோ {சீ, சீ என்ன இந்தப் பெண்களின் இயல்பு} அவரை நான் கண்டதில்லை. அவரைக் குறித்துக் கேள்விப்பட்டதிலேயே நான் அவரை விரும்புகிறேன். இருப்பினும் என் அங்கங்கள் எரிகின்றன.(57) என் காதலர் இன்னும் வராததால் இவ்வாறு சொல்கிறேன். {என் காதலர் வராத ஏக்கத்தில் என் அங்கங்கள் எரிகின்றன}. அவர் வராமல் இருந்தால் {இளமையில் மரணமடைந்த} குமுதவதியின் விதியையே நானும் அடைவேன். ஐயோ, நான் தற்கட்டுப்பாட்டைக் கொண்டவளாக இருந்தாலும் காமனெனும் பாம்பால் கடிக்கப்பட்டேன்.(58) நிலவின் கதிர்கள் இயல்பில் குளுமையானவை, இனிமையானவை, எழில் மிக்கவை. ஆனால், அவை என் உடலைச் சுடுகின்றன.(59) பல்வேறு மலர்களின் மணங்களைச் சுமந்து வரும் தென்றல் இயல்பில் குளிர்ந்ததாக இருப்பினும் காட்டுத் தீயைப் போல என் அழகிய உடலைச் சுடுகின்றது.(60) நான் பொறுமையாக இருக்க நினைத்தாலும் பலவீனமான என் மனம் அந்த உறுதியைக் கலைத்து அவ்வாறான நிலையை அடைய அனுமதிக்க மறுக்கிறது.(61) என் இதயம் நடுங்குகிறது, மீண்டும் மீண்டும் வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். என் மனத்தின் மீதான கட்டுப்பாட்டை இழந்து, மதியிழந்தவளாகச் சாகப் போகிறேன்” என்றாள் {பிரபாவதி}”.(62)

இதி ஷ்²ரீமஹாபா⁴ரதே கி²லேஷு ஹரிவம்ஷே² விஷ்ணுபர்வணி
வஜ்ரநாப⁴புரே ப்ரத்³யும்னக³மனே த்ரினவதிதமோ(அ)த்⁴யாய꞉

————–—————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாஸ பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: