ஸ்ரீ விஷ்ணு பர்வம்–அத்யாயம் – 113–(மிருதப்ராஹ்மணபுத்ரஸ்ய புன꞉ ப்ரத்யாநயனம்)-பிராமணரின் குழந்தைகளை மீட்ட ஸ்ரீ கிருஷ்ணன் |-

பிராமணனின் நான்கு மகன்களையும் மீட்டுக் கொடுத்த கிருஷ்ணன்–

அர்ஜுன உவாச
தத꞉ பர்வதஜாலானி ஸரிதஷ்²ச வனானி ச |
அபஷ்²யம் ஸமதிக்ரம்ய ஸாக³ரம் வருணாலயம் ||2-113-1

ததோ(அ)ர்க⁴முத³தி⁴꞉ ஸாக்ஷாது³பனீய ஜனார்த³னம் |
ஸ ப்ராஞ்ஜலி꞉ ஸமுத்தா²ய கிம் கரோமீதி சாப்³ரவீத் ||2-113-2

அர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம்}, “மலைகளையும், ஆறுகளையும், காடுகளையும் கடந்து சென்ற நாங்கள் மகரங்களின் வசிப்பிடமான பெருங்கடலைக் கண்டோம்.(1) அப்போது பெருங்கடலானவன் {சமுத்ரராஜன்}, தன் சொந்த வடிவில் கரங்களைக் கூப்பிய படியும், அர்க்கியத்தைச் சுமந்தபடியும் ஜனார்த்தனனின் முன்பு தோன்றி, “நான் செய்ய வேண்டியதென்ன?” என்று கேட்டான்.(2)

ப்ரதிக்³ருஹ்ய ஸ தாம் பூஜாம் தமுவாச ஜனார்த³ன꞉ |
ரத²பந்தா²னமிச்சா²மி த்வயா த³த்தம் நதீ³பதே ||2-113-3

பெருங்கடலின் துதியை ஏற்றுக் கொண்ட ஜனார்த்தனன், “ஓ! ஆறுகளின் தலைவா, “என் தேருக்கான வழியை நீ வழங்க வேண்டுமென விரும்புகிறேன்” என்றான்.(3)

அதா²ப்³ரவீத்ஸமுத்³ரஸ்து ப்ராஞ்ஜலிர்க³ருட³த்⁴வஜம் |
ப்ரஸீத³ ப⁴க³வன்னைவமன்யோ(அ)ப்யேவம் க³மிஷ்யதி ||2-113-4

த்வயைவ ஸ்தா²பிதம் பூர்வமகா³தோ⁴(அ)ஸ்மி ஜனார்த³ன |
த்வயா ப்ரவர்ததே மார்கே³ யாஸ்யாமி க³மனாயதாம் ||2-113-5

அன்யே(அ)ப்யேவம் க³மிஷ்யந்தி ராஜானோ த³ர்பமோஹிதா꞉ |
ஏவம் ஸஞ்சிந்த்ய கோ³விந்த³ யத்க்ஷ²மம் தத்ஸமாசர ||2-113-6

அப்போது சமுத்ரன், கூப்பிய கரங்களுடன் கூடியவனாகக் கருடத்வஜனிடம் {கிருஷ்ணனிடம்}, “ஓ! தலைவா, அருளப்பட்டிருப்பாயாக. இவ்வாறு செயல்படாதே, பின்னர்ப் பிறரும் இவ்வாறு செய்வார்கள்.(4) ஓ! ஜனார்த்தனா, எட்டாத ஆழமுடைய பரந்த பரப்பில் முன்பு நீயே என்னை நிலை நிறுத்தினாய். நீ நிறுவிய வழியையே நான் பின்பற்றுவேன்.(5) நீ இவ்வாறு செய்தால், பலத்தில் செருக்குடைய பிற மன்னர்களும் இந்த வழியின் மூலம் என்னைக் கடந்து செல்வார்கள். எனவே, ஓ! கோவிந்தா, சரியென நீ கருதுவதைச் செய்வாயாக” என்றான்.(6)

வாஸுதே³வ உவாச
ப்³ராஹ்மணர்த²ம் மத³ர்த²ம் ச குரு ஸாக³ர மத்³வச꞉ |
மத்³ருதே ந புமான்கஸ்சித³ன்யஸ்த்வாம் த⁴ர்ஷயிஷ்யதி ||2-113-7

வாசுதேவன், “எனக்காகவும், இந்தப் பிராமணருக்காகவும் என் சொற்களைப் பின்பற்றுவாயாக. என்னைத் தவிர வேறு எவராலும் உன்னைத் தாக்க {கடந்து செல்ல} முடியாது” என்றான்.(7)

அதா²ப்³ரவீத்ஸமுத்³ரஸ்து புனரேவ ஜனார்த³னம் |
அபி⁴ஷா²பப⁴யாத்³பீ⁴தோ பா³ட³மேவம் ப⁴விஷ்யதி ||2-113-8

ஷோ²ஷயாம்யேஷ மார்க³ம் தே யேன த்வம் க்ருஷ்ண யாஸ்யஸி |
ரதே²ன ஸஹ ஸூதேன ஸத்⁴வஜேன து கேஷ²வ ||2-113-9

சாபத்திற்கு அஞ்சிய பெருங்கடல் அப்போது ஜனார்த்தனனிடம், “ஓ! கிருஷ்ணா, ஓ! கேசியைக் கொன்றவனே, அவ்வாறே ஆகட்டும்.(8) நான் வற்ற செய்யும் பாதையில் கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட உன்னுடைய தேர் அதன் சாரதியுடன் செல்லட்டும்” என்றான்.(9)

வாஸுதே³வ உவாச
மயா த³த்தோ வர꞉ பூர்வம் ந ஷோ²ஷம் யாஸ்யஸீதி ஹ |
மானுஷாஸ்தே ந ஜானீயுர்விவிதா⁴ன்ரத்னஸஞ்சயான் ||2-113-10

ஜலம் ஸ்தம்ப⁴ய ஸாதோ⁴ த்வம் ததோ யாஸ்யாம்யஹம் ரதீ² |
ந ச கஷ்²சித்ப்ரமாணம் தே ரத்னானாம் வேத்ஸ்யதே நர꞉ ||2-113-11

வாசுதேவன், “ஓ! பெருங்கடலே, உன்னில் உள்ள ரத்தினக் குவியலைக் குறித்து மக்கள் அறியாத வரையில் நீ ஒருபோதும் வற்றமாட்டாயென முன்பு நான் உனக்கு வரமளித்திருந்தேன் {எனவே உன் நீரை நீ வற்ற செய்யாதே}.(10) என்னையும், என் தேரையும் அனுமதிக்கும் எல்லை வரை மட்டும் உன் நீர் கலங்காதிருக்கட்டும் {அசையாமல் இறுகட்டும்}. அவ்வாறு செய்தால் ஒருபோதும் எந்த மனிதனாலும் உன்னில் உள்ள ரத்தினக் குவியலின் அளவை மதிப்பிட முடியாது” என்றான்.(11)

ஸாக³ரேண ததே²த்யுக்தே ப்ரஸ்தி²தா꞉ ஸ்ம ஜலேன வை |
ஸ்தம்பி⁴தேன பதா² பூ⁴மௌ மணிவர்ணேன பா⁴ஸ்வதா ||2-113-12

ததோ(அ)ர்ணவம் ஸமுத்தீர்ய குரூனப்யுத்தரான்வயம் |
க்ஷணேன ஸமதிக்ராந்தா க³ந்த⁴மாத³னமேவ ச ||2-113-13

ததஸ்து பர்வதா꞉ ஸப்த கேஷ²வம் ஸமுபஸ்தி²தா꞉ |
ஜயந்தோ வைஜயந்தஷ்²ச நீலோ ரஜதபர்வத꞉ ||2-113-14

மஹாமேரு꞉ ஸகைலாஸ இந்த்³ரகூடஷ்²ச நாமத꞉ |
பி³ப்⁴ராணா வர்ணரூபாணி விவிதா⁴ன்யத்³பு⁴தானி ச ||2-113-15

இதைக் கேட்டப் பெருங்கடல், “அவ்வாறே ஆகட்டும்” என்றான்; நாங்கள் ஒளிபெருந்திய அந்தச் செந்நீரில் நிலத்தில் செல்வது போலச் சென்றோம்.(12) ஒரு கணத்தில் நாங்கள் பெருங்கடலையும், உத்தரக் குருவையும், கந்தமாதனத்தையும் கடந்து சென்றோம்.(13) அப்போது ஏழு மலைகளான ஜயந்தம், வைஜயந்தம், நீலம், ரஜதம்,(14) மஹாமேரு, கைலாசம், இந்திரக்கூடம் ஆகியவை பல்வேறு அற்புத வடிவங்களை ஏற்றுக் கேசவனின் முன்பு தோன்றி கோவிந்தனை வணங்கிவிட்டு,(15)

உபஸ்தா²ய ச கோ³விந்த³ம் கிம் குர்மேத்யப்³ருவம்ஸ்ததா³ |
தாம்ஷ்²சைவ ப்ரதிஜக்³ராஹ விதி⁴வன்மது⁴ஸூத³ன꞉ ||2-113-16

தானுவாச ஹ்ருஷீகேஷ²꞉ ப்ரணாமாவனதான்ஸ்தி²தான் |
விவரம் க³ச்ச²தோ மே(அ)த்³ய ரத²மார்க³꞉ ப்ரதீ³யதாம் ||2-113-17

தே க்ருஷ்ணஸ்ய வச꞉ ஷ்²ருத்வா ப்ரதிக்³ருஹ்ய ச பர்வதா꞉ |
ப்ரத³து³꞉ காமதோ மார்க³ம் க³ச்ச²தோ ப⁴ரதர்ஷப⁴ ||2-113-18

“நாங்கள் செய்ய வேண்டியதென்ன?” என்று கேட்டன.
மதுசூதனனான ரிஷிகேசன், அவர்கள் அனைவரையும் வரவேற்று,(16) தன் முன் தலைவணங்கி நின்ற அந்த மலைகளிடம், “நீங்கள் எனக்கு வழி வழங்க வேண்டும்” என்றான்.(17)
அந்த மலைகள், கிருஷ்ணனின் சொற்களைக் கேட்டு அவற்றை ஏற்றுக் கொண்டு அவனுக்கு வழி வழங்கி மறைந்தன. ஓ! பாரதக் குலத்தில் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே},(18)

தத்ரைவாந்தர்ஹிதா꞉ ஸர்வே ததா³ஷ்²சர்யதரம் மம |
அஸக்தம் ச ரதோ² யாதி மேக⁴ஜாலேஷ்விவாம்ஷு²மான் ||2-113-19

ஸப்தத்³வீபான்ஸஸிந்தூ⁴ம்ஷ்²ச ஸப்த ஸப்த கி³ரீனத² |
லோகாலோகம் ததா²தீத்ய விவேஷ² ஸுமஹத்தம꞉ ||2-113-20

இக்காரியத்தைக் கண்டு நான் பேராச்சரியத்தால் நிறைந்தேன். மேகங்களின் ஊடாகச் செல்லும் சூரியனைப் போல நாங்கள் தடங்கலேதும் இன்றிப் பயணித்தோம்.(19) அந்தச் சிறந்த தேர், ஏழு த்வீபங்கள், பெருங்கடல்கள், ஏழு ஆறுகள் ஆகியவற்றையும், லோகாலோகத்தையும் {லோகாலோக மலையையும்} கடந்து மற்றொரு பகுதிக்குள் {உலகத்திற்குள்} நுழைந்தது.(20)

தத꞉ கதா³சித்³து³꞉கே²ன ரத²மூஹுஸ்துரங்க³மா꞉ |
பங்கபூ⁴தம் ஹி திமிரம் ஸ்பர்ஷா²த்³விஜ்ஞாயதே ந்ருப ||2-113-21

அத² பர்வதபூ⁴தம் தத்திமிரம் ஸமபத்³யத |
ததா³ஸாத்³ய மஹாராஜ நிஷ்ப்ரயத்னா ஹயா꞉ ஸ்தி²தா꞉ ||2-113-22

ததஷ்²சக்ரேண கோ³விந்த³꞉ பாடயித்வா தமஸ்ததா³ |
ஆகாஷ²ம் த³ர்ஷ²யாமாஸ ரத²பந்தா²னமுத்தமம் ||2-113-23

இவ்வாறு சென்று கொண்டிருந்த போது ஒரு குறிப்பிட்ட இடத்தில் குதிரைகள் தேரை இழுக்கப் பெரிதும் சிரமப்படுவதை நான் கண்டேன். என் கரங்களால் அவற்றைத் தீண்டியபோது, இருளானது அடர்த்தியான புழுதியைப் {சேற்றைப்} போல இருப்பதை உணர்ந்தேன்.(21) அது படிப்படியாக ஒரு மலையின் வடிவை ஏற்றது. {குதிரைகள் மேலும் நகர முடியாமல் நின்றன}.(22)அதைக் கண்ட கோவிந்தன், தன் சக்கரத்தால் அந்த இருளையும், புழுதியையும் விலக்கினான், தேருக்கான வழியும் புலப்பட்டது.(23)

நிஷ்க்ரம்ய தமஸஸ்தஸ்மாதா³காஷே² த³ர்ஷி²தே ததா³ |
ப⁴விஷ்யாமீதி ஸஞ்ஜ்ஞா மே ப⁴யம் ச விக³தம் மம !!2-113-24

ததஸ்தேஜ꞉ ப்ரஜ்வலிதமபஷ்²யம் தத்ததா³ம்ப³ரே |
ஸர்வலோகம் ஸமாவிஷ்²ய ஸ்தி²தம் புருஷவிக்³ரஹம் ||2-113-25

தம் ப்ரவிஷ்டோ ஹ்ருஷீகேஷோ² தீ³ப்தம் தேஜோநிதி⁴ம் ததா³ |
ரத² ஏவ ஸ்தி²தஷ்²சாஹம் ஸ ச ப்³றஹ்மணஸத்தம꞉ ||2-113-26

ஸ முஹூர்தாத்தத꞉ க்ருஷ்ணோ நிஷ்²சக்ராம ததா³ ப்ரபு⁴꞉ |
சதுரோ பா³லகான்க்³ருஹ்ய ப்³ராஹ்மணஸ்யாத்மஜாம்ஸ்ததா³ ||2-113-27

ப்ரத³தௌ³ ப்³ராஹ்மணாயாத² புத்ரான்ஸர்வாஞ்ஜனார்த³ன꞉ |
த்ரய꞉ பூர்வம் ஹ்ருதா யே ச ஸத்³யோ ஜாதஷ்²ச பா³லக꞉ ||2-113-28

வானம் புலப்பட்டு, இருளில் இருந்து நாங்கள் வெளிப்பட்டு என் அச்சம் அகன்ற பிறகே நான் இன்னும் உயிரோடிருக்கிறேன் என நினைத்தேன்.(24) ஒரு கணத்தில், உலகங்கள் அனைத்திலும் படர்ந்து பரந்திருக்கும் ஒரு மனிதனின் வடிவில் ஓர் ஒளிக் குவியலை வானத்தில் கண்டேன்.(25) பிறகு, ரிஷிகேசன் அந்த ஒளிக் குவியலுக்குள் நுழைந்தான், அந்தப் பிராமணர்களில் சிறந்தவரும், நானும் தேரில் காத்திருந்தோம்.(26) பெருஞ்சக்திவாய்ந்த கிருஷ்ணன் ஒரு கணத்தில் அந்தப் பிராமணரின் நான்கு மகன்களுடன் திரும்பி வந்து,(27) முன்பு களவாடப்பட்ட மூன்று சிறுவர்களையும், புதிதாகப் பிறந்த குழந்தையையும் அந்தப் பிராமணரின் கரங்களில் ஒப்படைத்தான்.(28)

ப்ரஹ்ருஷ்டோ ப்³ராஹ்மணஸ்தத்ர புத்ராந்த்³ருஷ்ட்வா புன꞉ ப்ரபோ⁴ |
அஹம் ச பரமப்ரீதோ விஸ்மிதஷ்²சாப⁴வம் ததா³ ||2-113-29

ததோ வயம் புன꞉ ஸர்வே ப்³ராஹ்மணஸ்ய ச தே ஸுதா꞉ |
யதா²க³தா நிவ்ருத்தா꞉ ஸ்ம ததை²வ ப⁴ரதர்ஷப⁴ ||2-113-30

தத꞉ ஸ்ம த்³வாரகாம் ப்ராப்தா꞉ க்ஷணேன ந்ற்^பஸத்தம |
அஸம்ப்ராப்தே(அ)ர்த⁴தி³வஸே விஸ்மிதோ(அ)ஹம் புன꞉ புன꞉ ||2-113-31

ஸபுத்ரம் போ⁴ஜயித்வா து த்³விஜம் க்ருஷ்ணோ மஹாயஷா²꞉ |
த⁴னேன வர்ஷயித்வா ச க்³ருஹம் ப்ராஸ்தா²பயத்ததா³ ||2-113-32

ஓ! பேரரசே {யுதிஷ்டிரரே}, அந்தப் பிராமணர் தமது மகன்களைத் திரும்பப் பெற்றதும் பெருமகிழ்ச்சியடைந்தார், நானும் பேராச்சரியத்திலும், பெருமகிழ்ச்சியிலும் நிறைந்தேன்.(29) ஓ! பாரதர்களில் முதன்மையானவரே, அதன் பின்னர் நாங்கள் ஏற்கனவே சென்ற வழியிலேயே அந்தப் பிராமணரின் மகன்களுடன் திரும்பி வந்தோம்.(30) ஓ! மன்னர்களில் முதன்மையானவரே, ஒரே கணத்தில் துவாரகையை அடைந்த நாங்கள் அந்தப் பகலின் முதல் பகுதியே {முற்பகலே} கூட நிறைவடையாததைக் கண்டோம். அதைக் கண்ட நான் மீண்டும் ஆச்சரியத்தால் நிறைந்தேன்.(31) அதன் பிறகு, பெருஞ்சக்திவாய்ந்த கிருஷ்ணன், அந்தப் பிராமணருக்கும், அவரது மகன்களுக்கும் உணவளித்து, செல்வத்தால் அவர்களை நிறைவடையச் செய்து, அவர்களது வீட்டிற்கு அனுப்பி வைத்தான்” என்றான் {அர்ஜுனன்}.(32)

இதி ஷ்²ரீமஹாபா⁴ரதே கி²லேஷு ஹரிவம்ஷே² விஷ்ணுபர்வணி
வாஸுதே³வமாஹாத்ம்யே ப்³ராஹ்மணபுத்ராநயனே
த்ரயோத³ஷா²தி⁴கஷ²ததமோ(அ)த்⁴யாய꞉

————–—————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாஸ பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: