ஸ்ரீ விஷ்ணு பர்வம்–அத்யாயம் – 110–(தந்யோபாக்யாநம்)–ஸ்ரீ நாரதர் சொன்ன ஸ்ரீ கிருஷ்ணனின் மகிமை |–

ஸ்ரீ மத் துவாரகையில் பலநாட்டு மன்னர்களின் முன்னிலையில் ஸ்ரீ கிருஷ்ணனின் பெருமையைச் சொன்ன ஸ்ரீ நாரதர்.

வைஷ²ம்பாயந உவாச
ஹ்ருதோ யதை³வ ப்ரத்³யும்ந꞉ ஷ²ம்ப³ரேணாத்மகா⁴திநா |
மாஸே(அ)ஸ்மிந்நேவ ஸாம்ப³ஸ்து ஜாம்ப³வத்யாமஜாயத ||2-110-1

பா³ல்யாத்ப்ரப்⁴ருதி ராமேண ஷ²ஸ்த்ரேஷு விநியோஜித꞉ |
ராமாத³நந்தரஷ்²சைவ மாநித꞉ ஸர்வவ்ரூஷ்ணிபி⁴꞉ ||2-110-2

ஜாதமாத்ரே தத꞉ க்ருஷ்ண꞉ ஷு²பா⁴ம் தாமவஸத் புரீம் |
நிஹதாமித்ரஸாமந்த꞉ ஷ²க்ரோத்³யாநம் யதா²மர꞉ ||2-110-3

யாத³வீம் ச ஷ்²ரியம் த்³ருஷ்ட்வா ஸ்வாம் ஷ்²ரியம் த்³வேஷ்டி வாஸவ꞉ |
ஜநார்த³நப⁴யாச்சைவ ந ஷா²ந்திம் லேபி⁴ரே ந்ருபா꞉ ||2-110-4

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “தன் அழிவைத் தானே விரும்பிய சம்பரனால் பிரத்யும்னன் அபகரிக்கப்பட்ட அதே மாதத்தில் ஜாம்பவதி சாம்பனைப் பெற்றாள்.(1) அவன் {சாம்பன்} தன்னுடைய குழந்தைப் பருவத்தில் இருந்து பலராமனால் ஆயுதப் பயன்பாடுகளில் பயிற்றுவிக்கப்பட்டான். பிற விருஷ்ணிகள் அவனை ராமனுக்குச் சற்றே குறைந்தவனாகக் கருதி மதித்து வந்தனர்.(2) அவன் {சாம்பன்} பிறந்ததிலிருந்து கிருஷ்ணன், பகைவர்களற்றவனாகவும், பகை மன்னர்கள் யாரும் அற்றவனாகவும் நந்தனத் தோட்டத்தில் வாழும் தேவர்களைப் போலத் தன்னுடைய தலைநகரில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தான்.(3) அந்த நேரத்தில் ஜனார்த்தனனின் மீது கொண்ட அச்சத்தால் பகை மன்னர்களால் அமைதியாக இன்புற்றிருக்க முடியவில்லை; யாதவர்களின் செழிப்பைக் கண்ட வாசவனும் கூடத் தன் வளங்களைத் தானே விரும்பாதிருந்தான்.(4)

கஸ்யசித்த்வத² காலஸ்ய புரே வாரணஸாஹ்வயே |
து³ர்யோத⁴நஸ்ய யஜ்ஞே வை ஸமீயு꞉ ஸர்வபார்தி²வா꞉ ||2-110-5

தாம் ஷ்²ருத்வா மாத⁴வீம் லக்ஷ்²மீம் ஸபுத்ரம் ச ஜநார்த³நம் |
புரீம் த்³வாரவதீம் சைவ நிவிஷ்டாம் ஸாக³ராந்தரே ||2-110-6

தூ³தைஸ்தை꞉ க்ருதஸந்தா⁴நா꞉ ப்ருதி²வ்யாம் ஸர்வபார்தி²வா꞉ |
ஷ்²ரியம் த்³ரஷ்²டும் ஹ்ருஷீகேஷ²மாஜக்³மு꞉ க்ருஷ்ணமந்தி³ரம் ||2-110-7

அந்த நேரத்தில் துரியோதனன் ஹஸ்தினாபுரத்தில் {வாரண நகரத்தில் [யானையின் பெயரைக் கொண்ட நகரத்தில்]} ஒரு வேள்வியைச் செய்தான், மன்னர்கள் அனைவரும் அந்த நகரத்திற்குப் புறப்பட்டுச் சென்றனர்.(5) ஜனார்த்தனனையும், அவனது மகன்களையும், அவனது செழிப்பையும், கடற்கரையில் அமைந்துள்ள துவாரகா நகரையும் கேள்விப்பட்ட அந்த மன்னர்கள்,(6) தங்கள் ஒற்றர்களின் {அல்லது தூதர்களின்} மூலம் செய்திகளைச் சேகரித்துவிட்டு, விருந்தினர்களை விரும்புபவனும், தன் புலன்களைக் கட்டுப்படுத்தியவனுமான கிருஷ்ணனைக் காண அவனது அரண்மனைக்குச் சென்றனர்.(7)

து³ர்யோத⁴நமுகா²꞉ ஸர்வே த்⁴ருதராஷ்த்ரவஷா²நுகா³꞉ |
பாண்த³வப்ரமுகா²ஷ்²சைவ த்⁴ருஷ்டத்³யும்நாத³யோ ந்ருபா꞉ ||2-110-8

பாண்ட்³யாஷ்²சோலகலிங்கே³ஷா² பா³ஹ்லீகா த்³ராவிடா³꞉ க²ஷா²꞉ |
அக்ஷௌஹிணீ꞉ ப்ரகர்ஷந்தோ த³ஷ² சாஷ்டௌ ச பூ⁴மிபா꞉ ||2-110-9

ஆஜக்³முர்யாத³வபுரீம் கோ³விந்த³பு⁴ஜபாலிதாம் |
தே பர்வதம் ரைவதகம் பரிவார்யாவநீஷ்²வரா꞉ ||2-110-10

விவிஷு²ர்யோஜநாக்²யாஸு ஸ்வாஸு ஸ்வாஸு ச பூ⁴மிஷு |
தத꞉ ஷ்²ரீமாந்ஹ்ருஷீகேஷ²꞉ ஸஹ யாத³வபுங்க³வை꞉ ||2-110-11

திருதராஷ்டிரனின் ஆளுகையில் இருந்த மன்னன் துரியோதனன், {அவனது தம்பிகள்}, பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்}, திருஷ்டத்யும்னன் ஆகியோரும்,(8) பாண்டிய, சோழ, கலிங்க, பாஹ்லீக, திராவிட, கச நாடுகளின் மன்னர்கள் ஆகியோரும், பிறரும் எனப் பதினெட்டு அக்ஷௌஹிணி படைவீரர்களும், கிருஷ்ணனின் ஆயுதங்களால் பாதுகாக்கப்பட்ட யாதவர்களின் நகரத்தை அடைந்தனர்.(9) {அந்த மன்னர்கள், ரைவதக மலையின் அருகில் தங்கள் தொண்டர்களுடன் தங்கள் தங்களுக்குரிய இடங்களில் தங்கினர்}.(10) தாமரைக் கண்ணனான ரிஷிகேசன், மன்னர்களுக்குரிய இடங்களில் அவரவர் தங்க வைக்கப்பட்ட பிறகு, முன்னணி யாதவர்களுடன் சேர்ந்து தானும் அவர்களிடம் சென்றான்.(11)

ஸமீபம் மாநவேந்த்³ராணாம் நிர்யயௌ கமலேக்ஷணா꞉ |
ஸ தேஷாம் நரதே³வாநாம் மத்⁴யஸ்தோ² மது⁴ஸூத³ந꞉ ||2-110-12

வ்யராஜத யது³ஷ்²ரேஷ்ட²꞉ ஷ²ரதீ³வ தி³வாகர꞉ |
ஸ தத்ர ஸமுதா³சாரம் யதா²ஸ்தா²நம் யதா²வய꞉ ||2-110-13

க்ருத்வா ஸிம்ஹாஸநே க்ருஷ்ண꞉ காஞ்சநே நிஷஸாத³ ஹ |
ராஜாநோ(அ)பி யதா²ஸ்தா²நம் நிஷேது³ர்விவிதே⁴ஷ்வத² ||2-110-14

ஸிம்ஹாஸநேஷு சித்ரேஷு பீடே²ஷு ச நராதி⁴பா꞉ |
ஸ யாத³வநரேந்த்³ராணாம் ஸமாஜ꞉ ஷு²ஷு²பே⁴ ததா³ ||2-110-15

ஸுராணாமஸுராணாம் ச ஸத³ஸி ப்³ரஹ்மணோ யதா² |
தேஷாம் சித்ரா꞉ கதா²ஸ்தத்ர ப்ரவ்ருத்தாஸ்தத்ஸமாக³மே |
யதூ³நாம் பார்தி²வாநாம் ச கேஷ²வஸ்யோபஷ்²ருண்வத꞉ ||2-110-16

யது குல மன்னனான மதுசூதனன் அந்த மன்னர்களுக்கு மத்தியில் கூதிர் காலச் சூரியனைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(12) அதன் பிறகு அவரவர் வயதுக்கும் இடத்திற்கும் தகுந்த மதிப்பை அளித்துவிட்டு கிருஷ்ணன் பொன்னாலான தன் அரியணையில் அமர்ந்தான்.(13) அந்த மன்னர்களும் தங்கள் தகுதிகளின் அடிப்படையில் அமைந்தவையும், அழகாக அலங்கரிக்கப்பட்டவையுமான இருக்கைகளில் அமர்ந்தனர்.(14) பிரம்மனின் தர்பார் மண்டபத்தில் ஒளிரும் தேவர்களையும், அசுரர்களையும் போல அந்த மன்னர்களும் பேரழகுடன் திகழ்ந்தனர்.(15) யதுக்களும், மன்னர்களும் கிருஷ்ணன் கேட்கும் வகையில் பல்வேறு கருத்துகளை அங்கே பேசிக் கொண்டிருந்தனர்.(16)

ஏதஸ்மிந்நந்தரே வாயுர்வவௌ மேக⁴ரவோபம꞉ |
துமுலம் து³ர்தி³நம் சாஸீத்ஸவித்³யுத்ஸ்தநயித்நுமத் ||2-110-17

தத்³து³ர்தி³நதலம் பி⁴த்த்வா நாரத³꞉ ப்ரத்யத்³ருஷ்²யத |
ஸம்வேஷ்டிதஜடாபா⁴ரோ வீணாஸக்தேந பா³ஹுநா ||2-110-18

ஸ பபாத நரேந்த்³ராணாம் மத்⁴யே ஸாக³ரஸம்நிப⁴꞉ |
நாரதோ³(அ)க்³நிஷி²கா²கார꞉ ஷ்²ரீமாஞ்ச²க்ரஸகோ² முநி꞉ ||2-110-19

தஸ்மிந்நிபதிதே பூ⁴மௌ நாரதே³ முநிபுங்க³வே |
தத³த்³பு⁴தம் மஹாமேக⁴ம் வ்யபாக்ருஷ்யத து³ர்தி³நம் ||2-110-20

ஸோ(அ)வகா³ஹ்ய நரேந்த்³ராணாம் மத்⁴யே ஸாக³ரஸம்நிப⁴꞉ |
ஆஸநஸ்த²ம் யது³ஷ்²ரேஷ்ட²முவாச முநிரவ்யயம் ||2-110-21

ஆஷ்²சர்யம் க²லு தே³வாநாமேகஸ்த்வம் புருஷோத்தம꞉ |
த⁴ந்யஷ்²சாஸி மஹாபா³ஹோ லோகே நாந்யோ(அ)ஸ்தி கஷ்²சந ||2-110-22

அதேவேளையில், மின்னலுடனும், மேக முழக்கத்துடனும் கூடிய சூறாவளி அங்கே வீசியது. சில கணங்களுக்குப் பிறகு, அந்தத் தீய பருவ நிலையைப் பிளந்து கொண்டு சடாமுடியால் முற்றிலும் மறைக்கப்பட்டவரும், கைகளில் வீணையுடன் கூடியவருமான நாரதர் தோன்றினார்.(17,18) சக்ரனின் நண்பரும், நெருப்பைப் போன்று பிரகாசிப்பவருமான நாரத முனிவர், தீப்பிழம்பைப் போல மன்னர்களின் முன்பு இறங்கி வந்தார்.(19) முனிவர்களில் முதன்மையான நாரதர் நிலத்தைத் தீண்டிய உடனேயே அங்கே நிலவிய தீய பருவ காலம் மறைந்தது.(20) நாரதர், பெருங்கடலைப் போன்ற அந்த மன்னர்களின் சபையில் நுழைந்து, அரியணையில் அமர்ந்திருந்தவனும், நித்யனுமான அந்த யது மன்னனிடம் {கிருஷ்ணனிடம்},(21) “ஓ! பெருங்கரங்களைக் கொண்டவனே, நீ ஒருவனே தேவர்களுக்கும் ஆச்சரியமானவனாக இருக்கிறாய். ஓ! புருஷோத்தமா, இவ்வுலகில் உன்னைப் போன்ற அருளைப் பெற்றவன் எவனுமில்லை” என்றார்.(22)

ஏவமுக்த꞉ ஸ்மிதம் க்ருத்வா ப்ரத்யுவாச முநிம் ப்ரபு⁴꞉ |
ஆஷ்²சர்யஷ்²சைவ த⁴ந்யஷ்²ச த³க்ஷிணாபி⁴꞉ ஸஹேத்யஹம் ||2-110-23

ஏவமுக்தோ முநிஷ்²ரேஷ்ட²꞉ ப்ராஹ மத்⁴யே மஹீப்⁴ருதாம் |
க்ருஷ்ண பர்யாப்தவாக்யோ(அ)ஸ்மி க³மிஷ்²யாமி யதா²க³தம் ||2-110-24

பலம்வாய்ந்தவனான கிருஷ்ணன் இவ்வாறு சொல்லப்பட்டதும் புன்னகைத்தவாறே, “ஆம், நான் ஆச்சரியமானவன்தான், குறிப்பாகக் கொடைகளின் காரியத்தில் நல்லூழைப் பெற்றவன்” என்றான்.(23) மன்னர்களுக்கு மத்தியில் இவ்வாறு சொல்லப்பட்டதும் முனிவர்களில் முதன்மையான நாரதர், “ஓ! கிருஷ்ணா, சரியான மறுமொழியைக் கேட்டவனானேன். நான் இனி விரும்பிய உலகத்திற்குச் செல்வேன்” என்றார்.(24)

தம் ப்ரஸ்தி²தமபி⁴ப்ரேக்ஷ்ய பார்தி²வா꞉ ப்ராஹுரீஷ்²வரம் |
கு³ஹ்யம் மந்த்ரமஜாநந்தோ வசநம் நாரதே³ரிதம் ||2-110-25

ஆஷ்²சர்யமித்யபி⁴ஹிதம் த⁴ந்யோ(அ)ஸீதி ச மாத⁴வ |
த³க்ஷிணாபி⁴꞉ ஸஹேத்யேவம் ப்ரயுக்தே(அ)பி ச நாரதே³ ||2-110-26

கிமேதந்நாபி⁴ஜாநீமோ தி³வ்யம் மந்த்ரபத³ம் மஹத் |
யதி³ ஷ்²ராவ்யமித³ம் க்ருஷ்ண ஷ்²ரோதுமிச்சா²ம தத்த்வத꞉ ||2-110-27

அந்தக் கூட்டத்தில் இருந்த மன்னர்களால் நாரதரின் புதிர்நிறைந்த சொற்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை. எனவே அவர்கள், நாரதர் புறப்பட இருந்த சமயத்தில் அண்டத்தின் தலைவனான கேசவனிடம்,(25) “ஓ! மாதவா, ’ஆச்சரியம் என்றும், அருள் என்றும்’ நாரதர் சொன்னார், நீயும் ’கொடைகள் {தக்ஷிணைகள்}’ என்று மறுமொழி கூறினாய்.(26) ஓ! கிருஷ்ணா, இந்தத் தெய்வீக வெளிப்பாடுகளை {திவ்யமான மந்திரப் பதங்களை} எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. நாங்கள் கேட்பதற்குத் தகுந்தவர்களாக இருந்தால், அவற்றின் உண்மை பொருளைக் கேட்க விரும்புகிறோம்” என்றனர்.(27)

தாநுவாச தத꞉ க்ருஷ்ணா꞉ ஸர்வாந்பார்தி²வபுங்க³வான் |
ஷ்²ரோதவ்யம் நாரத³ஸ்த்வேஷ த்³விஜோ வ꞉ கத²யிஷ்யதி ||2-110-28

ப்³ரூஹி நாரத³ தத்த்வார்த²ம் ஷ்²ரோதுகாமா மஹீபு⁴ஜ꞉ |
யத்த்வயாபி⁴ஹிதம் வாக்யம் மயா நு ப்ரதிபா⁴ஷிதம் ||2-110-29

அப்போது கிருஷ்ணன், முன்னணி மன்னர்களான அவர்கள் அனைவரிடமும், “ஆம், நீங்கள் கேட்பதற்குத் தகுந்தவர்கள்தான், இருபிறப்பாளரான நாரதர் அதை உங்களுக்குச் சொல்வார்.(28) ஓ! தெய்வீக முனிவரே, உமது கேள்விக்கும், என் மறுமொழிக்கும் உண்டான உண்மைப் பொருளைக் கேட்க ஆவலாக இருக்கும் இந்த மன்னர்களுக்கு அவற்றை விளக்கிச் சொல்வீராக” என்றான்.(29)

ஸ பீடே² காஞ்சநே ஷு²ப்⁴ரே ஸூபவிஷ்ட꞉ ஸ்வலங்க்ருத꞉ |
ப்ரபா⁴வம் தஸ்ய வந்த்³யஸ்ய ப்ரவக்துமுபசக்ரமே ||2-110-30

நாரத³ உவாச
ஷ்²ரூயதாம் போ⁴ ந்ருபஷ்²ரேஷ்டா² யாவந்த꞉ ஸ்த² ஸமாக³தா꞉ |
அஸ்ய க்ருஷ்ணஸ்ய மஹதோ யதா² பாரமஹம் க³த꞉ ||2-110-31

அஹம் கதா³சித்³க³ங்கா³யாஸ்தீரே த்ரிஷவணாதிதி²꞉ |
சராம்யேக꞉ க்ஷபாபாயே த்³ருஷ்²யமாநே தி³வாகரே ||2-110-32

அபஷ்²யம் கி³ரிகூடாப⁴ம் கபாலத்³வயதே³ஹிநம் |
க்ரோஷ²மண்ட³லவிஸ்தாரம் தாவத்³த்³விகு³ணமாயதம் ||2-110-33

அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்ததும், வெண்மையானதுமான ஒரு பொன் ஆசனத்தில் அமர்ந்திருந்த நாரதர் அந்தச் சொற்களை விளக்கத் தொடங்கினார். நாரதர்,(30) “ஓ! கூடியிருக்கும் மன்னர்களே, இந்தப் பெருங்கேள்வியில் நான் எவ்வாறு தேர்ந்தேன் என்பதைக் கேளுங்கள் {இந்தக் கிருஷ்ணனது பெருமைகளின் எல்லை நான் புரிந்து கொண்ட அளவில் நீங்கள் அனைவரும் கேட்பீராக}.(31) ஒரு காலத்தில், நான் {ஒரு நாளைக்கு மூன்று வேளை நீராடுபவர்களின் விருந்தினராக இருந்த நான்} இரவு முடிந்து சூரியன் உதித்த போது, தனியாகக் கங்கைக் கரையில் நடந்து கொண்டிருந்தேன்.(32) என் வீணையின் வடிவம் போன்றதும், இரண்டு குரோசங்கள் நீளம் கொண்டதுமான ஓர் ஆமையை நான் கண்டேன்.(33)

சதுஷ்²சரணஸுஷ்²லிஷ்தம் க்லிந்நம் சைவ ஸபாங்கிலம் |
மம வீணாக்ருதிம் கூர்மம் க³ஜசர்மசயோபமம் ||2-110-34

ஸோ(அ)ஹம் தம் பாணிநா ஸ்ப்ருஷ்ட்வா ப்ரோக்தவாஞ்ஜலசாரிணம் |
த்வமாஷ்²சர்யஷ²ரீரோ(அ)ஸி கூர்ம த⁴ந்யோ(அ)ஸி மே மத꞉ ||2-110-35

யத்த்வமேவமபே⁴த்³யாயாம் கபாலாப்⁴யாம் ஸமாவ்ருத꞉ |
தோயே சரஸி நி꞉ஷ²ங்க꞉ கிஞ்சித³ந்யமசிந்தயன் ||2-110-36

அது நான்கு கால்களுடனும், இரண்டு ஓடுகளுடனும், நீரில் நனைந்தும், பாசிகளால் மறைக்கப்பட்டும் ஒரு மலையைப் போல் பெரிதாக இருந்தது. அதன் தோல் யானையைப் போன்று கடினமானதாக இருந்தது.(34) அப்போது என் கரங்களால் அந்த நீர்விலங்கைத் தீண்டி, “ஓ! ஆமையே, ஆச்சரியமான உடலைக் கொண்டவனாகவும், வெல்லப்பட முடியாத இரண்டு ஓடுகளைக் கொண்டவனாகவும் இருப்பதால் நற்பேறு பெற்றவனாகவும், பெரியவனாகவும் நான் உன்னைக் கருதுகிறேன். எவரையும் கவனிக்காமல் கவலையற்றவனாக நீ நீரில் திரிந்து கொண்டிருக்கிறாய்” என்றேன்.(35,36)

ஸ மாமுவாசாம்பு³சர꞉ கூர்மோ மாநுஷவத்ஸ்வயம் |
கிமாஷ்²சர்யம் மயி முநே த⁴ந்யஷ்²சாஹம் கத²ம் விபோ⁴ || 2-110-37

க³ங்கே³யம் நிம்நகா³ த⁴ந்யா கிமாஷ்²சர்யமத꞉ பரம் |
யத்ராஹமிவ ஸத்த்வாநி சரந்த்யயுதஷோ² த்³விஜ ||2-110-38

நீருலாவியான அந்த ஆமை, இதைக் கேட்டுவிட்டு ஒரு மனிதனைப் போல என்னிடம், “ஓ! முனிவரே, என்னில் ஆச்சரியமென்ன இருக்கிறது? ஓ! முனிவரே, நான் எவ்வாறு அருளப்பட்டவன் ஆவேன்?(37) கீழ்நோக்கிப் பாய்பவளும், என்னைப் போன்ற நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான விலங்குகள் உலவும் இடமாக இருப்பவளுமான இந்தக் கங்கையே அருளப்பட்டவள். இவளை விட ஆச்சரியம் நிறைந்தது வேறென்ன?” என்று கேட்டது.(38)

ஸோ(அ)ஹம் குதூஹலாவிஷ்டோ நதீ³ம் க³ங்கா³முபஸ்தி²த꞉ |
த⁴ந்யாஸி த்வம் ஸரிச்ச்²ரேஷ்டே² நித்யமாஷ்²சர்யபூ⁴ஷிதா |2-110-39

யா த்வமேவ மஹாதே³ஹை꞉ ஷ்²வாபதை³ருபஷோ²பி⁴தா |
ஹ்ரதி³நீ ஸாக³ரம் யாஸி ரக்ஷந்தீ தாபஸாலயான் ||2-110-40

இதனால் ஆவலில் நிறைந்த நான் கங்கையாற்றை அணுகி அவளிடம், “ஓ! ஆறுகளில் முதன்மையானவளே, உன்னில் நீ பல மடுக்களைக் கொண்டிருக்கிறாய். பேருடல் படைத்த விலங்குகள் பலவற்றால் அலங்கரிக்கப்பட்டவளான நீ {முனிவர்கள் பலரின்} ஆசிரமங்களைப் பாதுகாத்துப் பெருங்கடலுக்குச் செல்கிறாய். எனவே நீ அருளப்பட்டவள், உன்னில் ஆச்சரியங்கள் பலவற்றைக் கொண்டிருக்கிறாய்” என்றேன்” {என்றார் நாரதர்}.(39,40)

ஏவமுக்தா ததோ க³ங்கா³ ரூபிணீ ப்ரத்யபா⁴ஷத |
நாரத³ம் தே³வக³ந்த⁴ர்வம் ஷ²க்ரஸ்ய த³யிதம் த்³விஜம் || 2-110-41

மா மைவம் தே³வக³ந்த⁴ர்வ ஸங்க்³ராமகலஹப்ரிய |
நாஹம் த⁴ந்யா த்³விஜஷ்²ரேஷ்ட² நைவாஷ்²சர்யோபஷோ²பி⁴தா ||2-110-42

தவ ஸத்யே நிவிஷ்டஸ்ய வாக்யம் மாம் ப்ரதிபா³த⁴தே |
ஸர்வாஷ்²சர்யகரோ லோகே த⁴ந்யஷ்²சைவார்ணாவோ த்³விஜ꞉ ||2-110-43

யத்ராஹமிவ விஸ்தீர்ணா꞉ ஷ²தஷோ² யாந்தி நிம்நகா³꞉ |
ஸோ(அ)ஹம் த்ரிபத²கா³வாக்யம் ஷ்²ருத்வார்ணவமுபஸ்தி²த꞉ ||2-110-44

ஓ! ஜனமேஜயா, இவ்வாறு சொல்லப்பட்டதும் இருபிறப்பாளர்களில் முதன்மையானவரும், தெய்வீக கந்தர்வரும், இந்திரனுக்குப் பிடித்தமானவருமான நாரதரின் முன்பு தன் சொந்த வடிவில் தோன்றிய கங்கை,(41) “ஓ! தெய்வீகப் பாடகரே, ஓ! இருபிறப்பாளரில் முதன்மையானவரே, ஓ! சச்சரவுகள் செய்ய விரும்புபவரே, இவ்வாறு சொல்லாதீர்; நான் அருளப்பட்டவளுமில்லை, ஆச்சரியங்களைக் கொண்டவளும் இல்லை.(42) உம்மைப் போன்ற வாய்மை நிறைந்தவரின் சொற்களுக்கு நான் அஞ்சுகிறேன். ஓ! இருபிறப்பாளரே, என்னைப் போன்ற நூற்றுக்கணக்கான ஆறுகள் பாயும் இடமாக இருப்பவரும், பேராச்சரியங்கள் நிறைந்தவருமான பெருங்கடலே {சமுத்ரராஜனே} அருளப்பட்டவர்” என்றாள்.(43,44)

ஆஷ்²சர்யம் க²லு லோகாணாம் த⁴ந்யஷ்²சாஸி மஹார்ணவ |
யேந க²ல்வஸி யோநிஸ்த்வமம்ப⁴ஸாம் ஸலிலேஷ்²வர꞉ ||2-110-45

ஸ்தா²நே த்வாம் வாரிவாஹிந்ய꞉ ஸரிதோ லோகபாவநா꞉ |
இமா꞉ ஸமபி⁴க³ச்ச²ந்தி பத்ந்யோ லோகநமஸ்க்ருதா꞉ ||2-110-46

நாரதர், மூவழிகளில் பாய்பவளின் (கங்கையின்) சொற்களைக் கேட்டுப் பெருங்கடலிடம் சென்று, “ஓ! பெருங்கடலே, ஓ! நீர்நிலைகளின் தலைவா, நீ நீர்நிலைகள் அனைத்தின் மூலமாக இருப்பதால் நீயே இவ்வுலகில் அருளப்பட்டவன், ஆச்சரியங்கள் நிறைந்தவன்.(45) குறிப்பாக, உலகத்தோரால் வழிபடப்படுபவர்களும், அவர்களைத் தூய்மைப்படுத்துபவர்களும், நீர் நிறைந்தவர்களுமான ஆறுகள் உன் மனைவியராக உன்னிடம் வருகின்றனர்” {என்றார்}.(46)

ஸமுத்³ரஸ்த்வேவமுக்தஸ்து ததோ மாமவத³த்³வச꞉ |
ஸ்வம் ஜலௌக⁴தலம் பி⁴த்த்வா வ்யுத்தி²த꞉ பவநேரித꞉ ||2-110-47

மா மைவம் தே³வக³ந்த⁴ர்வ நாஸ்ம்யாஷ்சர்யோ த்³விஜர்ஷப⁴ |
வஸுதே⁴யம் முநே த⁴ந்யா யந்நாஹமுபரி ஸ்தி²த꞉ ||2-110-48

ருதே து ப்ர்^இதி²வீம் லோகே கிமாஷ்²சர்யமத꞉ பரம் |
ஸோ(அ)ஹம் ஸாக³ரவாக்யேந க்ஷிதிம் க்ஷிதிதலே ஸ்தி²த꞉ ||2-110-49

இவ்வாறு சொல்லப்பட்டதும், காற்றின் வலிமையால் நீரைப் பிளந்து கொண்டு உதித்தெழுந்த பெருங்கடல் {சமுத்ரராஜன்},(47) “ஓ! தெய்வீகப் பாடகரே, ஓ! இருபிறப்பாளரில் முதன்மையானவரே, இவ்வாறு சொல்லாதீர்; நான் ஆச்சரியங்கள் நிறைந்தவனுமில்லை, அருளப்பட்டவனுமில்லை.(48) நான் வாழும் இந்தப் பூமியே அருளப்பட்டவள். இந்த அண்டத்தில் பூமியைவிட ஆச்சரியம் நிறைந்தது வேறென்ன?” என்று கேட்டான்.(49)

கௌதூஹலஸம்ஆவிஷ்டோ ஹ்யப்³ருவம் ஜக³தோ க³திம் |
த⁴ரித்ரி தே³ஹிநாம் யோநே த⁴ந்யா க²ல்வஸி ஷோ²ப⁴நே ||2-110-50

ஆஷ்²சர்யம் சாபி பூ⁴தேஷு மஹத்யா க்ஷ்மயா யுதே |
தேந க²ல்வஸி பூ⁴தாநாம் த⁴ரணீ மநுஜாரணி꞉ ||2-110-51

பெருங்கடலின் சொற்களைக் கேட்ட நான், ஆவலில் நிறைந்தவனாகப் பூமிப்படுகைக்குச் சென்று அண்டத்தின் சக்தியாக இருக்கும் பிருத்வியிடம், “ஓ! பெரும் பொறுமை கொண்ட அழகிய பூமியே, உலகங்கள் அனைத்தையும் தாங்குவதால் நீயே இந்த அண்டத்தில் அருளப்பட்டவளும்,(50) ஆச்சரியம் நிறைந்தவளாகவும் இருக்கிறாய். உயிரினங்களையும், மனிதர்களையும் தாங்குபவளாகவும், பொறுமையின் பிறப்பிடமாகவும் நீயே இருக்கிறாய்.(51)

க்ஷமா த்வத்த꞉ ப்ரபூ⁴தா ச கர்ம சாம்ப³ரகா³மிநாம் |
ததோ பூ⁴꞉ ஸ்துதிவாக்யேந ஸா மயோக்தேந தேஜிதா ||2-110-52

விஹாய ஸஹஜம் தை⁴ர்யம் ப்ரத்யக்ஷா மாமபா⁴ஷத |
தே³வக³ந்த⁴ர்வ மா மைவ ஸங்க்³ராமகலஹப்ரிய ||2-110-53

நாஸ்மி த⁴ந்யா ந சாஷ்²சர்யம் பாரக்யேயம் த்⁴ருதிர்மம |
ஏதே த⁴ந்யா த்³விஜஷ்²ரேஷ்ட² பர்வதா தா⁴ரயந்தி மாம் ||2-110-54

வானுலாவும் தேவர்களின் படைப்பாக நீ இருக்கிறாய்” என்றேன்.அவள், என் சொற்களால் தூண்டப்பட்டும், தனக்கு இயல்பான பொறுமையைக் கைவிட்டும் என்னிடம்,(52) “ஓ! சச்சரவுகள் செய்வதில் விருப்பம் கொண்ட தெய்வீகப் பாடகரே, இவ்வாறு சொல்லாதீர்.(53) நான் அருளப்பட்டவளுமில்லை, ஆச்சரியம் நிறைந்தவளுமில்லை. என்னுடைய இந்தப் பொறுமை பிறரைச் சார்ந்திருக்கிறது. ஓ! இருபிறப்பாளர்களில் முதன்மையானவரே, என்னைத் தாங்கும் மலைகளே உண்மையில் பெரியவை,(54)

ஆஷ்²சர்யாணி ச த்³ருஷ்யந்தே ஏதே லோகஸ்ய ஹேதவ꞉ |
ஸோ(அ)ஹம் த⁴ரணிவாக்யேந பர்வதாந்ஸமுபஸ்தி²த꞉ ||2-110-55

த⁴ந்யா ப⁴வந்தோ த்³ருஷ்²யந்தே ப³ஹ்வாஷ்²சர்யாஷ்²ச பூ⁴த⁴ரா꞉ |
காஞ்சநஸ்யாக்³ரரத்நஸ்ய தா⁴தூநாம் ச விஷே²ஷத꞉ ||2-110-56

தேந க²ல்வாகரா꞉ ஸர்வே ப⁴வந்தோ பு⁴வி ஷா²ஷ்²வதா꞉ |
தே மமைதத்³வச꞉ ஷ்²ருத்வா பர்வதாஸ்தஸ்து²ஷாம் வரா꞉ ||2-110-57

ஊசுர்மாம் ஸாந்த்வயுக்தாநி வசாம்ஸி வநஷோ²பி⁴தா꞉ |
ப்³ரஹ்மர்ஷே ந வயம் த⁴ந்யா நாப்யாஷ்²சர்யாணி ஸந்தி ந꞉ |
ப்³ரஹ்மா ப்ரஜாபதிர்த⁴ந்ய꞉ ஸர்வாஷ்²சர்ய꞉ ஸுரேஷ்வபி ||2-110-58

அவற்றில்தான் ஆச்சரியங்கள் காணப்படுகின்றன. அவைகளே உலகங்களின் பாலங்களாக இருக்கின்றன” என்றாள்.
ஓ! மன்னர்களே, இந்தச் சொற்களைக் கேட்டு மலைகளிடம் சென்ற நான்,(55) “ஓ! மலைகளே, நீங்களே பெரியவர்கள், பேராச்சரியங்கள் பலவற்றால் நிறைந்தவர்கள். மேலும் நீங்களே தங்கச் சுரங்கங்களாகவும், விலைமதிப்புமிக்கப் பல ரத்தினங்களின் சுரங்கங்களாகவும் எப்போதும் பூமியில் நீடித்து வாழ்கிறீர்கள்” என்றேன்.(56)
அசைவற்றவையும், காடுகளால் அலங்கரிக்கப்பட்டவையுமான மலைகள் என் கேள்வியை ஆற்றுப்படுத்தும் மறுமொழியைத் தெரிவித்தன. அவை,(57) “ஓ! பிராமண முனிவரே, நாங்கள் பெரியவர்களல்ல, எங்களில் எந்த ஆச்சரியமும் இல்லை. படைப்பாளனான பிரம்மனே பெரியவன், தேவர்களில் ஆச்சரியம் நிறைந்தவன் அவனே” என்றன.(58)

ஸோ(அ)ஹம் ப்ரஜாபதிம் க³த்வா ஸர்வப்ரப⁴வமவ்யயம் |
தஸ்ய வாக்யஸ்ய பர்யாயபர்யாப்தமிவ லக்ஷயே ||2-110-59

ஸோ(அ)ஹம் பிதாமஹம் தே³வம் லோகயோநிம் சதுர்முக²ம் |
ஸ்தோதும் பஷ்²சாது³பக³த꞉ ப்ரணதோ(அ)வநதாநந꞉ ||2-110-60

ஸோ(அ)ஹம் வாக்யஸமாப்த்யர்த²ம் ஷ்²ராவயே பத்³மயோநிஜம் |
ஆஷ்²சர்யம் ப⁴க³வாநேகோ த⁴ந்யோ(அ)ஸி ஜக³தோ கு³ரு꞉ ||2-110-61

ந கிங்சித³ந்யத்பஷ்²யாமி பூ⁴தம் யத்³ப⁴வதா ஸமம் |
த்வத்த꞉ ஸர்வமித³ம் ஜாதம் ஜக³த்ஸ்தா²வரஜங்க³மம் ||2-110-62

ஸதே³வதா³நவா மர்த்யா லோகபூ⁴தேந்த்³ரியாத்மகா꞉ |
ப⁴வந்தி ஸர்வதே³வேஷ² த்³ருஷ்ட்வா ஸர்வமித³ம் ஜக³த் ||2-110-63

தேந க²ல்வஸி தே³வாநாம் தே³வதே³வ꞉ ஸநாதந꞉ |
தேஷாமேவாஸி யத்ஸ்ரஷ்டா லோகாநாமாதி³ஸம்ப⁴வ꞉ ||2-110-64

படைப்பாளனான பிரம்மனுடன் இந்தக் கேள்விச் சுழலுக்கு முடிவேற்படும் என்று எண்ணி அவரிடம் சென்றேன்.(59) சுயம்புவும், நான்கு தலைகளைக் கொண்ட தேவனும், உலகத்தின் பிறப்பிடமுமான அவரை முறையாக அணுகி வணங்கிவிட்டு, என் சொற்களுக்கு முடிவேற்படும் என்ற எதிர்பார்ப்பில் அவரிடம், “நீரே பெரியவர், ஆச்சரியம் நிறைந்தவர், உலகின் ஆசான்.(60,61) இவ்வுலகில் உமக்கு இணையாக வேறு உயிரினம் ஏதும் கிடையாது. அசைவன, அசையாதனவற்றுடன் கூடிய இந்த அண்டம் உம்மில் இருந்தே தோன்றியது.(62) ஓ! தேவர்களின் மன்னா, தேவர்களும், தானவர்களும், மூவுலகங்களின் பிற படைப்புகளும், இந்த அண்டமும், வெளிப்பட்டவையும், வெளிப்படாதவையுமான அனைத்தும் உம்மில் இருந்தே தோன்றின.(63) தேவர்களின் நித்திய மன்னர் நீரே. ஓ! தேவா, தேவர்களில் சிறந்தவராக இருக்கும்போது உலகங்கள் அனைத்தின் தோற்றமாக நீர் இருப்பதில் ஆச்சரியமென்ன” என்று கேட்டேன்.(64)

ததோ மாம் ப்ராஹ ப⁴க³வாந்ப்³ரஹ்மா லோகபிதாமஹ꞉ |
த⁴ந்யாஷ்²சர்யாஷ்²ரிதைர்வாக்யை꞉ கிம் மாம் நாரத³ பா⁴ஷஸே ||2-110-65

ஆஷ்²சர்யம் பரமம் வேதா³ த⁴ந்யா வேதா³ஷ்²ச நாரத³ |
யே லோகாந்தா⁴ரயந்தி ஸ்ம வேதா³ஸ்தத்த்வார்த²த³ர்ஷி²ந꞉ ||2-110-66

ருக்ஸாமயஜுஷாம் ஸத்யமத²ர்வணீ ச யந்மதம் |
தந்மயம் வித்³தி⁴ மாம் விப்ர த்⁴ருதோ(அ)ஹம் தைர்மயா ச தே ||2-110-67

என் சொற்களைக் கேட்ட பெரும்பாட்டன் பிரம்மன், “ஓ! நாரதா, நீ ஏன் என்னைப் பெரியவனாகவும், ஆச்சரியம் நிறைந்தவனாகவும் சொல்கிறாய்?(65) உலகங்களைத் தாங்கும் வேதங்களே பெரியவை, ஆச்சரியம் நிறைந்தவை. ஓ! விப்ரா, ரிக், சாம, யஜூர், அதர்வணங்களில் கிடக்கும் உண்மைகளாக என்னை அறிவாயாக. வேதங்கள் என்னைத் தாங்குகின்றன, நானும் அவற்றைத் தாங்குகிறேன்” என்றார்.(66,67)

பாரமேஷ்ட்²யேந வாக்யேந நோதி³தோ(அ)ஹம் ஸ்வயம்பு⁴வா |
வேதோ³பஸ்தா²நிகாம் சக்ரே மதிஸம்ஸ்தா²நவிஸ்தராத் ||2-110-68

ஸோ(அ)ஹம் ஸ்வயம்பூ⁴வசநாத்³வேதா³ந்வை ஸமுபஸ்தி²த꞉ |
அவோசம் தாம்ஷ்²ச சதுரோ மந்த்ரப்ரவசநாந்விதான் ||2-110-69

த⁴ந்யா ப⁴வந்த꞉ புண்யாஷ்²ச நித்யமாஷ்²சர்யபூ⁴ஷிதா꞉ |
ஆதா⁴ரஷ்²சைவ விப்ராணாமேவமாஹ ப்ரஜாபதி꞉ ||2-110-70

ஸ்வயம்பு⁴வோ(அ)பீஹ பரம் ப⁴வத்ஸு ப்ரஷ்²நமாக³தம் |
யுஷ்மத்பரதரம் நாஸ்தி ஷ்²ருத்யா வா தபஸாபி வா ||2-110-71

சுயம்புவான அந்தப் பரமேஷ்டியின் சொற்களைக் கேட்ட நான் வேதங்களிடம் செல்ல வேண்டும் என என் மனத்தில் தீர்மானித்தேன்.(68) பெரும்பாட்டனின் சொற்களின்படி, மந்திரங்களால் வழிபடப்படும் நான்கு வேதங்களின் அருகில் சென்று அவற்றிடம்,(69) “ஓ! வேதங்களே, நீங்களே பெரியவர்கள், ஆச்சரியம் நிறைந்தவர்கள், பிராமணர்களின் பிறப்பிடமாக இருக்கிறீர்கள் எனப் பெரும்பாட்டன் சொல்கிறார்.(70) ஸ்ருதியிலும், தபங்களிலும் உங்களில் மேம்பட்டவை எவையுமில்லை. எனவே அதை நான் உங்களிடம் கேட்பதற்காக வந்திருக்கிறேன்” என்றேன்.(71)

ப்ரத்யூசுஸ்தே ததோ வாக்யம் வேதா³ மாமபி⁴த꞉ ஸ்தி²தா꞉ |
ஆஷ்²சர்யாஷ்²சைவ த⁴ந்யாஷ்²ச யஜ்ஞாஷ்²சாத்மபராயணா꞉ ||2-110-72

யஜ்ஞார்தே² ச வயம் ஸ்ருஷ்தா தா⁴த்ரா யேந ஸ்ம நாரத³ |
தத³ஸ்மாகம் பரோ யஜ்ஞோ ந வயம் ஸ்வவஷே² ஸ்தி²தா꞉ ||2-110-73

அப்போது தலை கவிழ்ந்த வேதங்கள் என்னிடம் மறுமொழியாக, “{பரமாத்மாவுக்காகச் செய்யப்படும்} யக்ஞங்களே {வேள்விகளே} பெரியவை, ஆச்சரியம் நிறைந்தவை.(72) ஓ! நாரதா, யக்ஞங்களுக்காவே {வேள்விகளுக்காகவே} நாங்கள் படைக்கப்பட்டோம். நாங்கள் எங்கள் வசப்பட்டவர்களல்ல. எனவே, யக்ஞங்களே {வேள்விகளே} எங்களை ஆள்கின்றன” என்றன.(73)

ஸ்வயம்பு⁴வ꞉ பரா வேதா³ வேதா³நாம் க்ரதவ꞉ பரா꞉ |
ததோ(அ)ஹமப்³ருவம் யஜ்ஞாந்ப்³ருஹத்³வாக்³பி⁴꞉ புரஸ்க்ருதான் ||2-110-74

போ⁴ யஜ்ஞா꞉ பரமம் தேஜோ யுஷ்மாஸு க²லு லக்ஷ்யதே |
ப்³ரஹ்மணாபி⁴ஹிதம் வாக்யம் யச்ச வேதை³ருதீ³ரிதம் ||2-110-75

ஆஷ்²சர்யமந்யல்லோகே(அ)ஸ்மிந்ப⁴வத்³ப்⁴யோ நாபி⁴க³ம்யதே |
த⁴ந்யா꞉ க²லு ப⁴வந்தோ யே த்³விஜாதீநாம் ஸ்வவம்ஷ²ஜா꞉ ||2-110-76

தே(அ)பி க²ல்வக்³நயஸ்த்ருப்திம் யுஷ்மாபி⁴ர்யாந்தி தர்பிதா꞉ |
பா⁴கை³ஷ்²ச த்ரித³ஷா²꞉ ஸர்வே மந்த்ரைஷ்²சைவ மஹர்ஷய꞉ ||2-110-77

சுயம்புவான தேவனை விட வேதங்களே மேம்பட்டவை, வேதங்களைவிட யக்ஞங்களே மேம்பட்டவை என்பதைக் கேட்டு இல்ல நெருப்பால் தலைமை தாங்கப்படும் யக்ஞங்களிடம் சென்று,(74) “ஓ! யக்ஞங்களே, பெரும்பாட்டனாலும், வேதங்களாலும் சொல்லப்பட்டதைப் போல நான் உங்களிடம் பேரொளியைக் காண்கிறேன்.(75) உங்களைவிட ஆச்சரியம் நிறைந்தவை இவ்வுலகில் வேறேதும் இல்லை. நீங்கள் இருபிறப்பாளர்களிடம் பிறந்தவர்கள் என்பதால் பெரியவர்களாக இருக்கிறீர்கள்.(76) வேள்விக் காணிக்கைகளின் ஒரு பகுதியில் தேவர்களும், வேள்வி மந்திரங்களில் பெரும் முனிவர்களும், வேள்வியின் ஆகுதிகளில் {ஹவிஸ் பாகங்களால்} அக்னிகளும் உங்களால் நிறைவடைகின்றனர்” என்றேன்.(77)

அக்³நிஷ்டோமாத³யோ யஜ்ஞா மம வாக்யாத³நந்தரம் |
ப்ரத்யூசுர்மாம் ததோ வாக்யம் ஸர்வே யூபத்⁴வஜா꞉ ஸ்தி²தா꞉ ||2-110-78

ஆஷ்²சர்யஷ²ப்³தோ³ நாஸ்மாஸு த⁴ந்யஷ²ப்³தோ³(அ)பி வா முநே |
ஆஷ்²சர்யம் பரமம் விஷ்ணு꞉ ஸ ஹ்யஸ்மாகம் பரா க³தி꞉ ||2-110-79

யதா³ஜ்யம் வயமஷ்²நீமோ ஹுதமக்³நிஷு பாவநம் |
தத்ஸர்வம் புண்ட³ரீகாக்ஷோ² லோகமூர்தி꞉ ப்ரயச்ச²தி ||2-110-80

நான் சொல்லி முடித்ததும், வேள்விக்களங்களில் (யூபக் கொடிக்கம்பங்களுடன்} இருந்த அக்னிஷ்டோமமும், பிற யக்ஞங்களும் {வேள்விகளும்},(78) “ஓ! முனிவரே, எங்களின் மத்தியில் ஆச்சரியமென்றும், பெரிதென்றும் சொல்லேதும் இல்லை. விஷ்ணு மட்டுமே பேராச்சர்யம் வாய்ந்தவன். அவனே எங்கள் பரம புகலிடமாக {கதியாக} இருக்கிறான்.(79) தாமரைக் கண்ணனான விஷ்ணு, மனிதர்களாக வெளிப்பட்டு நாங்கள் உண்பதற்கான ஆகுதிகளை {நெய்யாலான ஹவிஸாக} நெருப்பில் காணிக்கையளிக்கிறான். பெருங்கரங்களைக் கொண்டவனும், செந்தாமரைகளைப் போன்ற கண்களைக் கொண்டவனும், மனைவியுடன் கூடியவனுமான அந்த விஷ்ணுவே பெரியவன், கொடைகளுடன் கூடிய ஒரு யக்ஞமும் அவனைப் போலப் பெரியதே” என்று மறுமொழி கூறின.(80)

ஸோ(அ)ஹம் விஷ்ணோர்க³திம் ப்ரேப்ஸுரிஹ ஸம்பதிதோ பு⁴வி |
த்³ருஷ்டஷ்²சாயம் மயா க்ருஷ்ணோ ப⁴வத்³பி⁴ரிஹ ஸம்வ்ருத꞉ ||2-110-81

யந்மயாபி⁴ஹிதோ ஹ்யேஷ த்வமாஷ்²சர்யம் ஜநார்த³ந |
த⁴ந்யஷ்²சாஸீதி ப⁴வதாம் மத்⁴யஸ்தோ² ஹ்யத்ர பார்தி²வா꞉ ||2-110-82

ப்ரத்யுக்தோ(அ)ஹமநேநாத்³ய வாக்யஸ்யாஸ்ய யது³த்தரம் |
த³க்ஷிணாபி⁴꞉ ஸஹேத்யேவம் பர்யாப்தம் வசநம் மம ||2-110-83

அதன்பிறகு விஷ்ணுவின் நடமாட்டத்தை உறுதி செய்து கொள்வதற்காகப் பூமிக்கு இறங்கி வந்து தகுந்தவர்களான உங்களைப் போன்ற மன்னர்களால் சூழப்பட்ட கிருஷ்ணனைக் கண்டேன்.(81) உங்கள் அனைவராலும் சூழப்பட்டிருந்த மாதவனிடம் நான், “நீயே பெரியவனும், ஆச்சரியம் நிறைந்தவனும் ஆவாய்” என்றேன்.(82) அவனும், “கொடைகளுடன் சேர்த்து {தக்ஷிணையுடன் கூடிய நான்}” என்று மறுமொழி கூறினான். இஃது என் சொற்களுக்கு ஒரு முடிவைக் கொண்டு வந்திருக்கிறது.(83)

யஜ்ஙாநாம் ஹி க³திர்விஷ்ணு꞉ ஸர்வேஷாம் ஸஹத³க்ஷிண꞉ |
த³க்ஷிணாபி⁴꞉ ஸஹேத்யேவம் ப்ரஷ்²நோ மம ஸமாப்தவான் ||2-110-84

கூர்மேணாபி⁴ஹிதம் பூர்வம் பாரம்பர்யாதி³ஹாக³தம் |
ஸத³க்ஷிணோ(அ)ஸ்மிந்புருஷே தத்³வாக்யம் ப்ரதிபாதி³தம் || 2-110-85

யந்மாம் ப⁴வந்த꞉ ப்ருச்ச²ந்தி வாக்யஸ்யாஸ்ய விநிர்ணயம் |
ததே³தத்ஸர்வமாக்²யாதம் ஸாத⁴யாமி யதா²க³தம் ||2-110-86

{வேள்விகள் அனைத்தின் கதியாக இருப்பவன் குணங்களுடன் கூடிய விஷ்ணுவே ஆவான்}. ஆமை சொன்னவை தொடங்கிச் சொற்களை வரிசையாகப் பின்தொடர்ந்தே நான் இங்கே வந்தேன். அவை தக்ஷிணையுடன் கூடிய இந்தப் புருஷனை சரியாகக் காட்டின.(84,85)) உங்களால் கேட்கப்பட்ட நான், என் சொற்களின் ரகசியத்தை இவ்வாறு விளக்கிச் சொன்னேன். நான் இனி திரும்பிச் செல்கிறேன்” என்றார்.(86)

நாரதே³ து க³தே ஸ்வர்க³ம் ஸர்வே தே ப்ருதி²வீபு⁴ஜ꞉ |
விஸ்மீதா꞉ ஸ்வாநி ராஷ்த்ராணி ஜக்³மு꞉ ஸப³லவாஹநா꞉ ||2-110-87

ஜநார்த³நோ(அ)பி ஸஹிதோ யது³பி⁴꞉ பாவகோபமை꞉ |
ஸ்வமேவ ப⁴வநம் வீரோ விவேஷ² யது³நந்த³ந꞉ ||2-110-88

நாரதர் தேவலோகத்துக்குப் புறப்பட்டுச் சென்றதும் ஆச்சரியத்தால் பீடிக்கப்பட்ட மன்னர்கள், தங்கள் படைகளுடனும், வாகனங்களுடனும் தங்கள் தங்கள் நாடுகளுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.(87) யது குல வீரத் தலைவனான ஜனார்த்தனனும், யாதவர்களுடன் சேர்ந்து நெருப்பு போலப் பிரகாசிப்பவனாகத் தன் அரண்மனைக்குள் நுழைந்தான்” என்றார் {வைசம்பாயனர்}.(88)

இதி ஷ்²ரீமஹாபா⁴ரதே கி²லேஷு ஹரிவம்ஷே² விஷ்ணுபர்வணி
த⁴ந்யோபாக்²யாநம் நாம த³ஷா²தி⁴கஷ²ததமோ(அ)த்⁴யாய꞉

————–—————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாஸ பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: