ஸ்ரீ விஷ்ணு பர்வம்–அத்யாயம் – 109–(ஸ்ரீ பலதேவாஹ்நிகம்)–ஸ்ரீ ஆஹ்நிகத் துதி |–

ஸ்ரீ பிரத்யும்னனின் பாதுகாப்புக்காக ஸ்ரீ பலராமனால் சொல்லப்பட்ட துதி;
நீண்ட வாழ்நாள், செல்வம், வெற்றி ஆகியவற்றைக் கொடுக்கும் ஸ்ரீ ஆஹ்நிக ஸ்தோத்திரம்–

வைஷ²ம்பாயந உவாச
அத்ராஷ்²சர்யாத்மகம் ஸ்தோத்ரமாஹ்நிகம் ஜயதாம் வர |
ப்ரத்³யும்நே த்³வாரகாம் ப்ராப்தே ஹத்வா தம் காலஷ²ம்ப³ரம் ||2-109-1

ப³லதே³வேந ரக்ஷார்த²ம் ப்ரோக்தமாஹ்நிகமுச்யதே |
யஜ்ஜப்த்வா து ந்ருபஷ்²ரேஷ்ட² ஸாயம் பூதாத்மதாம் வ்ரஜேத் ||2-109-2

கீர்திதம் ப³லதே³வேந விஷ்ணுநா சைவ கீர்திதம் |
த⁴ர்மகாமைஷ்²ச முநிபி⁴ர்ருஷிபி⁴ஷ்²சாபி கீர்திதம் ||2-109-3

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “ஓ! வெற்றியாளர்களில் முதன்மையானவனே, பிரத்யும்னன் சம்பரனைக் கொன்றுவிட்டு துவாரகா நகரை அடைந்தபோது மாலை வேளைக்கான ஓர் அற்புத மந்திரம் ஓதப்பட்டது.(1) பிரத்யும்னனின் பாதுகாப்புக்காக அந்நேரத்தில் பலதேவனால் ஓதப்பட்ட மாலை நேர மந்திரத்தை {ஆஹ்நிக ஸ்தோத்திரத்தை}[இந்த ஸ்தோத்ரத்தில் பிரம்மா, வேதங்கள், அங்க உபாங்கங்கள், பஞ்சபூதங்கள், மகரிஷிகள், முப்பத்துமூன்று தேவர்கள், அஷ்டகுல பர்வதங்கள், ஸர்ப்பராஜாக்கள், புண்ய நதி தீர்த்தங்கள், தேவ கன்னிகைகள், மாதாக்கள், க்ரஹங்கள், ஆபத்ஸஹாயர்கள், முனிவர்கள், யக்ஞசிரேஷ்டர்கள், மங்களத்ரவ்யங்கள், ஆயுதங்கள் இவை முக்கியமாக ரக்ஷைக்காகச் சொல்லப்பட்டுப் பலஸ்ருதியோடு முடிகிறது”] நான் சொல்லப் போகிறேன்.(2) இதை ஒருவன் மாலை வேளையில் ஓதினால் ஆன்மா தூய்மையடைந்தவன் ஆவான். பலதேவன், வாசுதேவன், அறப்பற்றுள்ள ரிஷிகள், முனிவர்கள் ஆகியோரால் இஃது ஓதப்பட்டது.(3)

கர்ஹிசித்³ருக்மிணீபுத்ரோ ஹலிநா ஸம்யுதோ க்³ருஹே |
உபவிஷ்ட꞉ ப்ரணம்யாத² தமுவாச க்ருதாஞ்ஜலி꞉ ||2-109-4

ப்ரத்³யும்ந உவாச
க்ருஷ்ணாநுஜ மஹாபா⁴க³ ரோஹிணீதநய ப்ரபோ⁴ |
கிஞ்சித்ஸ்தோத்ரம் மம ப்³ரூஹி யஜ்ஜப்த்வா நிர்ப⁴யோ(அ)ப⁴வம் ||2-109-5

{ஒரு நாள் ருக்மிணியின் மகன் (பிரத்யும்னன்) ஹலியின் (பலராமனின்) வீட்டில் கூப்பிய கரங்களுடன் அவனை வணங்கிவிட்டு, பின்வருமாறு வேண்டினான்.(4) பிரத்யும்னன், “ஓ! கிருஷ்ணரின் தமையனாரே, ஓ! பெரும்புகழ்வாய்ந்தவரே, ஓ! ரோஹிணியின் மைந்தரே, ஓ! தலைவா, நான் அச்சமற்றவனாவதற்கான ஒரு மந்திரத்தை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(5)

ப³லதே³வ உவாச
ஸுராஸுரகு³ருர்ப்³ரஹ்மா பாது மாம் ஜக³த꞉ பதி꞉ |
அதோ²ங்காரவஷட்காரௌ ஸாவித்ரீ வித⁴யஸ்த்ரய꞉ ||2-109-6

அப்போது பலராமன் சொன்ன அந்த ஆஹ்நிகத் துதி பின்வருமாறு},
“அண்டத்தின் தலைவனும், தேவாசுரர்களின் ஆசானுமான பிரம்மன் என்னைக் காக்கட்டும். ஓங்காரம், வஷட்காரம், சாவித்ரி, மூன்றுவிதிகள்[“மூன்றுவிதிகள் என்பன அபூர்வ, நியம, பரிசங்கிய விதிகள் ஆகும்] ஆகியவை என்னைக் காக்கட்டும்.(6)

ருசோ யஜூம்ஷி ஸாமாநி ச²ந்தா³ம்ஸ்யாத²ர்வணாநி ச |
சத்வாரஸ்த்வகி²லா வேதா³꞉ ஸரஹஸ்யா꞉ ஸவிஸ்தரா꞉ ||2-109-7

புராணமிதிஹாஸாஷ்²சாகி²லாந்யுபகி²லாநி ச |
அங்கா³ந்யுபாங்கா³நி ததா² வ்யாக்²யாதாநி ச பாந்து மாம் ||2-109-8

{ரிக், யஜுர், சாம, அதர்வணமெனும்} நான்கு வேதங்களும், புராணங்களும், இதிஹாஸங்களும், கிலாக்கள், உபகிலாக்கள் {அங்கங்களும், உப அங்கங்களும்}, வேதாங்கங்கள்,[வேதாங்கங்கள் என்பன, சிக்ஷை, வியாகரணம், சந்தம், நிருக்தம், ஜ்யோதிஷம், கல்பம் ஆகியனவாகும். உபாங்கங்கள் என்பன, புராணம், நியாயம், மீமாம்ஸம், தர்மஸாஸ்திரங்கள் ஆகும்”] அவற்றின் உரைகள் {வியாக்யானங்கள்} ஆகியனவும் என்னைக் காக்கட்டும்.(7,8)

ப்ருதி²வீ வாயுராகாஷ²மாபோ ஜ்யோதிஷ்²ச பஞ்சமம் |
இந்த்³ரியாணி மநோ பு³த்³தி⁴ஸ்ததா² ஸத்த்வம் ரஜஸ்தம꞉ ||2-109-9

வ்யாநோதா³நௌ ஸமாநஷ்²ச ப்ராணோ(அ)பாநஷ்²ச பஞ்சம꞉ |
வாயவ꞉ ஸப்த சைவாந்யே யேஷ்வாயத்தமித³ம் ஜக³த் ||2-109-10

நிலம், காற்று, ஆகாயம், நீர், ஒளி, புலன்கள், மனம், புத்தி, சத்வ ரஜஸ் தமோ குணங்கள்,(9) வியானம், உதானம், ஸமானம், பிராணம், அபானம் என்றழைக்கப்படும் ஐந்து உயிர்க்காற்றுகள் {வாயுக்கள்}, அண்டத்தில் படர்ந்தூடுருவி இருக்கும் பிற ஏழு காற்றுகள்[ஏழு காற்றுகள் என்பன, ஆவஹம், பிரவஹம், உத்வஹம், ஸம்வஹம், விவஹம், பிரணவஹம், பரிவஹம் என்பனவாகும்] ஆகியன என்னைக் காக்கட்டும்.(10)

மரீசிரங்கி³ராத்ரிஷ்²ச புலஸ்த்ய꞉ புலஹ꞉ க்ரது꞉ |
ப்⁴ருகு³ர்வஸிஷ்டோ² ப⁴க³வாந்பாந்து தே மாம் மஹர்ஷய꞉ ||2-109-11

கஷ்²யபாத்³யாஷ்²ச முநயஷ்²சதுர்த³ஷ² தி³ஷோ² த³ஷ² |
நரநாராயணௌ தே³வௌ ஸக³ணௌ பாந்து மாம் ஸதா³ ||2-109-12

ருத்³ராஷ்²சைகாத³ஷ² ப்ரோக்தா ஆதி³த்யா த்³வாத³ஷை²வ து |
அஷ்டௌ ச வஸவோ தே³வா அஷ்²விநௌ த்³வௌ ப்ரகீர்திதௌ ||2-109-13

மஹாரிஷிகளான மரீசி, அங்கிரஸ், அத்ரி, புலஸ்தியர், புலஹர், கிரது, பிருகு, தெய்வீகரான வசிஷ்டர் ஆகியோர் என்னைக் காக்கட்டும்.(11)

கசியபரின் தலைமையிலான பதினான்கு முனிவர்களும், பத்துத் திக்குகளுடனும், கணங்களுடனும் கூடிய நர நாராயணர்களும் என்னைக் காக்கட்டும்.(12)

பதினோரு ருத்ரர்களும், பனிரெண்டு ஆதித்யர்களும், எட்டு வசுக்களும், இரண்டு அஸ்வினிகளும் என்னைக் காக்கட்டும்[அஜைகபாத், அஹிர்புத்நியன், பிநாகீ, அபராஜிதன், ருதன், பித்ருரூபன், த்ரையம்பகன், மஹேஷ்வரன், விருஷாகபி, சம்பு, ஹவனன், ஈஷ்வரன் ஆகியோர் பதினோரு ருத்ரர்கள் ஆவர். அம்சன், பகன், மித்ரன், வருணன், ஜலோஷ்வரன், தாதா, அர்யமான், ஜயந்தன், பாஸ்கரன், திவஷ்டா, பூஷன், இந்திரன், விஷ்ணு ஆகியோர் பனிரெண்டு ஆதித்யர்கள் ஆவர். தரன், துருவன், ஸோமன், சாவித்ரி, அநிலன், அநலன், பிரத்யூஷா, பிரபாஸன் ஆகியோர் அஷ்ட வசுக்கள் ஆவர். நாஸத்யன், தஸ்ரன் ஆகியோர் அஸ்வினி இரட்டையர்களாவர்”].(13)

ஹ்ரீ꞉ ஷ்²ரீர்லக்ஷ்மீ꞉ ஸ்வதா⁴ புஷ்டிர்மேதா⁴ துஷ்டி꞉ ஸ்ம்ருதிர்த்⁴ருதி꞉ |
அதி³திர்தி³திர்த³நுஷ்²சைவ ஸிம்ஹிகா தை³த்யமாதர꞉ ||2-109-14

தேவாசுர அன்னையரான ஹ்ரீ, ஸ்ரீ, லக்ஷ்மி, ஸ்வதை, புஷ்டி, மேதை, துஷ்டி, ஸ்மிருதி, திருதி, அதிதி, திதி, தனு, சிம்ஹிகை ஆகியோர் என்னைக் காக்கட்டும்.(14)

ஹிமவாந்ஹேமகூடஷ்²ச நிஷத⁴꞉ ஷ்²வேதபர்வத꞉ |
ருஷப⁴꞉ பாரியாத்ரஷ்²ச விந்த்⁴யோ வைடூ³ர்யபர்வத꞉ ||2-109-15

ஸஹ்யோத³யஷ்²ச மலயோ மேருமந்த³ரத³ர்து³ரா꞉ |
க்ரௌஞ்சகைலாஸமைநாகா꞉ பாந்து மாம் த⁴ரணீத⁴ரா꞉ ||2-109-16

ஹிமவான் {இமயம்}, ஹேமகூடம், நிஷதம், ஸ்வேதம், ரிஷபம், பாரியாத்ரம், விந்தியம், வைடூர்யம்,(15) ஸஹ்யம், உதயம், மலையம், மேரு, மந்தரம், தர்துரம், கிரௌஞ்சம், கைலாசம், மைநாகம் ஆகிய மலைகள் என்னைக் காக்கட்டும்.(16)

ஷே²ஷஷ்²ச வாஸுகிஷ்²சைவ விஷா²லாக்ஷஷ்²ச தக்ஷக꞉ |
ஏலாபத்ர꞉ ஷு²க்லவர்ண꞉ கம்ப³லாஷ்²வதராவுபௌ⁴ ||2-109-17

ஹஸ்திப⁴த்³ர꞉ பிடரக꞉ கர்கோடகத⁴நஞ்ஜயௌ |
ததா² பூரணகஷ்²சைவ நாக³ஷ்²ச கரவீரக꞉ ||2-109-18

ஸுமநாஸ்யோ த³தி⁴முக²ஸ்ததா² ஷ்²ருங்கா³ரபிண்ட³க꞉ |
மணிநாக³ஷ்²ச ப⁴க³வாம்ஸ்த்ரிஷு லோகேஷு விஷ்²ருத꞉ ||2-109-19

நாக³ராட³தி⁴கர்ணஷ்²ச ததா² ஹாரித்³ரகோ(அ)பர꞉ |
ஏதே சாந்யே ச ப³ஹவோ யே சாந்யே நாநுகீர்திதா꞉ ||2-109-20

பூ⁴த⁴ரா꞉ ஸத்யத⁴ர்மாண꞉ பாந்து மாம் பு⁴ஜகே³ஷ்²வரா꞉ |
ஸமுத்³ரா꞉ பாந்து சத்வாரோ க³ங்கா³ ச ஸரிதாம் வரா ||2-109-21

சேஷன், வாசுகி, விசாலாக்ஷன், தக்ஷகன், ஏலாபத்ரன், சுக்லவர்ணன், கம்பலன், அஸ்வத்ரர்கள்,(17) ஹஸ்திபத்ரன், பிடரகன், கார்க்கோடகன், தனஞ்ஜயன், பூர்ணகன், கரவீரகன்,(18) ஸுபநாஸ்யன், ததிமுகன், சிருங்காரபிண்டகன், மூவுலகங்கள் முழுவதும் அறியப்பட்ட தலைவன் மணி {மணிநாகன்} ஆகியோரும்,(19) நாக மன்னர்களான ததிகர்மன் {அதிகரணன்}, ஹாரித்ரகன் ஆகியோரும், என்னால் பெயர் குறிப்பிடப்படாதவர்களும்,(20) வாய்மை நிறைந்தவர்களும், அண்டத்தைத் தாங்குபவர்களுமான பிற நாகர்களும் என்னைக் காக்கட்டும்.
பெருங்கடல்கள் நான்கும் என்னைக் காக்கட்டும். ஓடைகளில் முதன்மையான கங்கையாறு,(21)

ஸரஸ்வதீ சந்த்³ரபா⁴கா³ ஷ²தத்³ருர்தே³விகா ஷி²வா |
த்³வாராவதீ விபாஷா² ச ஷ²ரயூர்யமுநா ததா² ||2-109-22

கல்மாஷீ² ச ரதோ²ஷ்மா ச பா³ஹுதா³ ச ஹிரண்யதா³ |
ப்லக்ஷா சேக்ஷுமதீ சைவ ஸ்ரவந்தீ ச ப்³ருஹத்³ரதா² ||2-109-23

க்²யாதா சர்மண்வதீ சைவ புண்யா சைவ வதூ⁴ஸரா |
ஏதாஷ்²சாந்யாஷ்²ச ஸரிதோ யாஷ்²சாந்யா நாநுகீர்திதா꞉ ||2-109-24

உத்தராபத²கா³மிந்ய꞉ ஸலிலை꞉ ஸ்நபயந்து மாம் |
வேணீ கோ³தா³வரீ ஸீதா காவேரீ கௌங்கணாவதீ ||2-109-25

க்ருஷ்ணா வேணா முக்திமதீ தமஸா புஷ்பவாஹிநீ |
தாம்ரபர்ணீ ஜ்யோதிரதா² உத்ப²லோது³ம்ப³ராவதீ ||2-109-26

நதீ³ வைதரணீ புண்யா வித³ர்பா⁴ நர்மதா³ ஷு²பா⁴ |
விதஸ்தா பீ⁴மரத்²யா ச ஐலா சைவ மஹாநதீ³ ||2-109-27

சரஸ்வதி, சந்திரபாகை, சதத்ரு, தேவிகை, சிவை, இராவதி {துவாரசுவதி}, பிபாஸை, ஸரயு, யமுனை,(22) கல்மாஷி, ரதோஷ்மை, பாஹுதை, ஹிரண்யதை, பலக்ஷை, இக்ஷுமதி, சிரவந்தி, பிரஹத்ரதை,(23) விக்யாதை, கொண்டாடப்படும் சர்மண்வதி, புனிதமான வதூஸரை ஆகிய ஆறுகளும், என்னால் பெயர் குறிப்பிடப்படாதவையும்,(24) வடக்கில் பாய்பவையுமான ஆறுகளும் என் மீது தங்கள் நீரைத் தெளிக்கட்டும். வேணி, கோதாவரி, {ஸீதா}, காவிரி, கொங்கணாவதி,(25) கிருஷ்ணை, வேணை, சுக்திமதி, தமஸை, புஷ்பவாஹினி, தாமிரபரணி, ஜோதிரதை {ஜோதிதரை}, உத்கலை, உதும்பராவதி,(26) வைதரணி, புனிதமான விதர்ப்பை, நர்மதை, விதஸ்தை, பீமரதி, மஹாநதி, ஐலை,(27)

காளிந்தீ³ கோ³மதீ புண்யா நத³꞉ ஷோ²ணஷ்²ச விஷ்²ருத꞉ |
ஏதாஷ்²சந்யாஷ்²ச வை நத்³யோ யாஷ்²சாந்யா ந து கீர்திதா꞉ ||2-109-28

த³க்ஷிணாபத²வாஹிந்ய꞉ ஸலிலை꞉ ஸ்நபயந்து மாம் |
க்ஷிப்ரா சர்மண்வதீ புண்யா மஹீ ஷு²ப்⁴ரவதீ ததா² ||2-109-29

ஸிந்து⁴ர்வேத்ரவதீ சைவ போ⁴ஜாந்தா வநமாலிகா |
பூர்வப⁴த்³ரா பராப⁴த்³ரா ஊர்மிலா ச பரத்³ருமா ||2-109-30

க்²யாதா வேத்ரவதீ சைவ சாபதா³ஸீதி விஷ்²ருதா |
ப்ரஸ்தா²வதீ குண்ட³நதீ³ நதீ³ புண்யா ஸரஸ்வதீ ||2-109-31

சித்ரக்⁴நீ சேந்து³மாலா ச ததா² மது⁴மதீ நதீ³ |
உமா கு³ருநதீ³ சைவ தாபீ ச விமலோத³கா ||2-109-32

விமலா விமலோதா³ ச மத்தக³ங்கா³ பயஸ்விநீ |
ஏதாஷ்²சாந்யாஷ்²ச வை நத்³யோ யாஷ்²சாந்யா நாநுகீர்திதா꞉ ||2-109-33

தா மாம் ஸமபி⁴ஷிஞ்சந்து பஷ்²சிமாமாஷ்²ரிதா தி³ஷ²ம் |
பா⁴கீ³ரதீ² புண்யஜலா ப்ராச்யாம் தி³ஷி² ஸமாஷ்²ரிதா ||2-109-34

காளிந்தி, கோமதி, சோணை ஆகிய ஆறுகளும், என்னால் பெயர் குறிப்பிடப்படாதவையும்,(28) தெற்கில் பாய்பவையுமான ஆறுகளும் என் மீது தங்கள் நீரைத் தெளிக்கட்டும். க்ஷிப்ரை, புனிதமான சர்மண்வதி, மஹி, சுப்ரவதி,(29) ஸிந்து, வேத்ரவதி, போஜாந்தை, வனமாலிகை, பூர்வபத்ரை, அபராபத்ரை, ஊர்மிளை, பரத்ருமை,(30) வேத்ரவதி, நன்கறியப்பட்ட சாபதாங்கி {சாபதாஸி}, {பிரஸ்தரவதி, குண்டந்தி}, புனிதமும், அழகும் மிக்க ஸரஸ்வதி,(31) மித்ரக்னி {சித்ரக்நி}, இந்துமாலா, மதுமதி, உமை, குருந்தி, தாபி, விமலோதகை,(32) விமலை, விமலோதை, மத்தகங்கை, பயஸ்விநி ஆகிய ஆறுகளும், என்னால் பெயர் குறிப்பிடப்படாதவையும்,(33) மேற்கில் பாய்பவையுமான ஆறுகளும், சிவனால் தரிக்கப்பட்டவளும், கிழக்கில் பாய்பவளும், புனிதமானவுமான பாகீரதியும் என் மீது தங்கள் நீரைத் தெளிக்கட்டும்.(34)

ஸா து த³ஹது மே பாபம் கீர்திதா ஷ²ம்பு⁴நா த்⁴ருதா |
ப்ரபா⁴ஸம் ச ப்ரயாக³ம் ச நைமிஷம் புஷ்கராணி ச ||2-109-35

க³ங்கா³தீர்த²ம் குருக்ஷேத்ரம் ஷ்²ரீகண்ட²ம் கௌ³தமாஷ்²ரமம் |
ராமஹ்ரத³ம் விநஷ²நம் ராமதீர்த²ம் ததை²வ ச ||2-109-36

க³ங்கா³த்³வாரம் கநக²லம் ஸோமோ வை யத்ர சோத்தி²த꞉ |
கபாலமோசநம் தீர்த²ம் ஜம்பூ³மார்க³ம் ச விஷ்²ருதம் ||2-3-109-37

ஸுவர்ணபி³ந்து³ விக்²யாதம் ததா² கநகபிங்க³ளம் |
த³ஷா²ஷ்²வமேதி⁴கம் சைவ புண்யாஷ்²ரமவிபூ⁴ஷிதம் ||2-109-38

ப³த³ரீ சைவ விக்²யாதா நரநாராயணாஷ்²ரம꞉ |
விக்²யாதம் ப²ல்கு³தீர்த²ம் ச தீர்த²ம் சந்த்³ரவடம் ததா² ||2-109-39

கோகாமுக²ம் புண்யதமம் க³ந்கா³ஸாக³ரமேவ ச |
மக³தே⁴ஷு தபோத³ஷ்²ச க³ங்கோ³த்³பே⁴த³ஷ்²ச விஷ்²ருத꞉ ||2-109-40

புனிதத் தடாகங்களான பிரபாஸம், பிரயாகை, நைமிஷம், புஷ்கரம், கங்கை, குருக்ஷேத்திரம், ஸ்ரீகண்டம், கௌதமாஸ்ரமம், ராமஹ்ரதம், விநசநம், ராமதீர்த்தம்,(35,36) சோமன் எழுந்த காங்கத்வாரம், {கநகலம்}, கபாலமோசனம், {ஜம்பூமார்க்கம்},(37) நன்கறியப்பட்ட ஸ்வர்ணபிந்து, கனகபிங்களம், தசாச்வமேதிகம்,(38) நர நாராயணாஸ்ரமமாகக் கொண்டாடப்படும் பதரி, பல்கு தீர்த்தம், நன்கறியப்பட்ட சந்திரவடம்,(39) கோகாமுகம், கங்காஸாகரம், மகத நாட்டின் தபோதம், நன்கறியப்பட்ட கங்கோத்பேதம் ஆகிய தீர்த்தங்களும், நான் பெயர் குறிப்பிடாதவையும்,(40)

தீர்தா²ந்யேதாநி புண்யாநி ஸேவிதாநி மஹர்ஷிபி⁴꞉ |
[ஸூகரம் யோக³மார்க³ம் ச ஷ்²வேதத்³வீபம் ததை²வ ச ||2-109-41

ப்³ரஹ்மதீர்த²ம் ராமதீர்த²ம் வாஜிமேத⁴ஷ²தோபமம் |
தா⁴ராஸம்பாதஸம்யுக்தா க³ங்கா³ கில்பி³ஷநாஷி²நீ ||2-109-42

க³ங்கா³ வைகுண்ட²கேதா³ரம் ஸூகரோத்³பே⁴த³நம் பரம் |
தம் ஷா²பமோசநம் தீர்த²ம் புநந்த்வேதாநி கில்பி³ஷாத்] ||2-109-43

மாம் ப்லாவயந்து ஸலிலை꞉ கீர்திதாகீர்திதாநி வை |
த⁴ர்மார்த²காமவிஷயோ யஷ²꞉ப்ராப்தி꞉ ஷ²மோ த³ம꞉ |
வருணேஷோ²(அ)த² த⁴நதோ³ யமோ நியம ஏவ ச ||2-109-44

மஹாரிஷிகள் வாழ்ந்து வந்த இடங்களுமான தீர்த்தங்களும் தங்கள் புனித நீரை எங்கள் மீது தெளிக்கட்டும்.
புனிதத் தலங்களான ஸூகரம், யோகமார்க்கம், ஸ்வேதத்வீபம்,(41) பிரஹ்மதீர்த்தம், ராமதீர்த்தம் ஆகியவையும், பாவங்களை அழிக்கும் கங்கையும், அவளது ஓடைகளும்,(42) வைகுண்டத்தைப் போன்ற கேதாரம், ஸுகரோத்பேதனம், பாபமோசனம் {சாபமோசனம்} ஆகியவையும் என் பாவங்களை அழித்து என்னைத் தூய்மையாக்கட்டும்.(43)
தர்மம், அர்த்தம், காமம், புகழ், பிராப்தி, சமம், தமம், வருணம், குபேரம், {தனதம்}, யமம், நியமம்,(44)

காலோ நய꞉ ஸம்நதிஷ்²ச க்ரோதோ⁴ மோஹ꞉ க்ஷமா த்⁴ருதி꞉ |
வித்³யுதோ(அ)ப்⁴ராண்யதௌ²ஷத்⁴ய꞉ ப்ரமாதோ³ந்மாத³விக்³ரஹா꞉ ||2-109-45

யக்ஷா꞉ பிஷா²சா க³ந்த⁴ர்வா꞉ கிந்நரா꞉ ஸித்³த⁴சாரணா꞉ |
நக்தஞ்சரா꞉ கே²சரிணோ த³ம்ஷ்ட்ரிண꞉ ப்ரியவிக்³ரஹா꞉ ||2-109-46

லம்போ³த³ராஷ்²ச ப³லிந꞉ பிங்கா³க்ஷா விஷ்²வரூபிண꞉ |
மருத꞉ ஸஹ பர்ஜந்யா꞉ கலாத்ருடிலவா꞉ க்ஷணா꞉ ||2-109-47

காலம், நயம், ஸந்நதி, கோபம் {குரோதம்}, மயக்கம் {மோஹம்}, மன்னிக்கும் தன்மை, பொறுமை {க்ஷமை, திருதி}, மின்னல் {வித்யுத்}, மேகங்கள், மூலிகைகள் {ஓஷதி}, கிரஹங்கள், {பிரமாத, உன்மாத, விக்ரஹ},(45) யக்ஷர்கள், பிசாசங்கள், கந்தர்வர்கள், கின்னரர்கள், ஸித்தர்கள், சாரணர்கள், இரவுலாவிகள் {நிசாசரரர்கள்}, வானுலாவிகள், விலங்குகள், மங்கலக் கோள்கள், {கேசரர்கள்},(46) லம்போதரன், பலி, பிங்காக்ஷன், விஸ்வரூபி, காற்றுகளுடன் கூடிய இந்திரன், {மருதர்கள், பர்ஜன்யன்}, கலை, திருதி, லவம், க்ஷணம்[“கலை, திருதி, லவம், க்ஷணம் என்பன காலப்பிரிவினைகள் {நேர அலகுகள்} ஆகும். விஷ்ணு புராணத்தில், பாகவதம் மற்றும் வைவர்த்த புராணத்தில் இருந்து குறிப்புகள் பின்வருமாறு: 2 பரமாணு = 1 அணு, 3 அணுக்கள் = 1 திரஸரேணு, 3 திரஸரேணுக்கள் = 1 திருதி, 100 திருதிகள் = 1 வேதம், 3 வேதங்கள் = 1 லவம், 3 லவங்கள் = 1 நிமேஷம் {நிமிஷம்}, 3 நிமேஷங்கள் = 1 க்ஷணம், 5 க்ஷணங்கள் = 1 காஷ்டை, 15 காஷ்டைகள் = 1 லகு, 15 லகுக்கள் = 1 நாரிகம் {நாழிகை}, 2 நாரிகங்கள் = 1 முஹூர்த்தம், 6 அல்லது 7 நாரிகங்கள் {7.5 நாழிகை}= 1 யாமம்” என்றிருக்கிறது. ஒரு யாமம் என்பது 3 மணி நேரம் கொண்ட கால அளவு. ஒரு பகலில் 4 யாமங்களும், ஓர் இரவில் 4 யாமங்களும் நேரும்.],(47)

நக்ஷத்ராணி க்³ரஹாஷ்²சைவ ருதவ꞉ ஷி²ஷி²ராத³ய꞉ |
மாஸாஹோராத்ரயஷ்²சைவ ஸூர்யாசந்த்³ரமஸௌ ததா² ||2-109-48

ஆமோத³ஷ்²ச ப்ரமோத³ஷ்²ச ப்ரஹர்ஷ꞉ ஷோ²க ஏவ ச |
ரஜஸ்தமஸ்தப꞉ ஸத்யம் ஷு²த்³தி⁴ர்பு³த்³தி⁴ர்த்⁴ருதி꞉ ஷ்²ருதி꞉ ||2-109-49

ருத்³ராணீ ப⁴த்³ரகாளீ ச ப⁴த்³ரா ஜ்யேஷ்டா² து வாருணீ |
பா⁴ஸீ ச காளிகா சைவ ஷா²ண்டி³லீ சேதி விஷ்²ருதா꞉ ||2-109-50

ஆர்யா குஹூ꞉ ஸிநீவாலீ பீ⁴மா சித்ரரதீ² ரதி꞉ |
ஏகாநம்ஷா² ச கூஷ்மாண்டீ³ தே³வீ காத்யாயநீ ச யா ||2-109-51

லோஹித்யா ஜநமாதா ச தே³வகந்யாஸ்து யா꞉ ஸ்ம்ருதா꞉ |
கோ³நந்தா³ தே³வபத்நீ ச மாம் ரக்ஷந்து ஸபா³ந்த⁴வம் ||2-109-52

காலத்தின் பிற பிரிவினைகள், விண்மீன்கள் {நக்ஷத்ரங்கள்}, கோள்கள் {கிரஹங்கள்}, பருவகாலங்கள் {சிசிராதி ருதுக்கள்}, மாதங்கள், பகல்கள், இரவுகள், சூரியன், சந்திரன்,(48) கவலை, அச்சம், உணர்வுகள், செருக்கு, வாய்மை {ஆமோதம், பிரமோதம், பிரஹர்ஷம், சோகம், ஜனம், தமம், தபம், ஸத்யம்}, சித்தி {சுத்தி}, விருத்தி {புத்தி}, ஸ்ருதி, திருதி,(49) ருத்ராணி, பத்ரகாளி, பத்ரா ஜ்யேஷ்டை, வாருணி, பாஸி, காளிகை, சாண்டிலி,(50) {ஆர்யை,} குஹூ, ஸிநிவாலி, பீமை, சித்ரவதி, ரதி, {ஏகாநம்ஸை, கஷ்மாண்டீ}, காத்யாயனி,(51) லோஹித்யை, அயனமித்ரை, கனதை {ஜனமாதா, கோநந்தா, தேவபத்னி} ஆகியோரும், வேறு தெய்வீகக் காரிகையரும் தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து என்னைக் காக்கட்டும்.(52)

நாநாப⁴ரணவேஷா²ஷ்²ச நாநாரூபாங்கிதாநநா꞉ |
நாநாதே³ஷ²விசாரிண்யோ நாநாஷ²ஸ்த்ரோபஷோ²பி⁴தா꞉ ||2-109-53

பல்வேறு ஆடைகளை உடுத்தியவர்களும், பல்வேறு ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களும், பல்வேறு வடிவங்களில் தோன்றுபவர்களும், பல்வேறு நிலங்களில் திரிபவர்களும், பல்வேறு ஆயுதங்களைத் தரிப்பவர்களும் என்னைக் காக்கட்டும்.(53)

மேதோ³மஜ்ஜாப்ரியாஷ்²சைவ மத்³யமாம்ஸவஸாப்ரியா꞉ |
மார்ஜாரத்³வீபிவக்த்ராஷ்²ச க³ஜஸிம்ஹநிபா⁴நநா꞉ ||2-109-54

கங்கவாயஸக்³ருத்⁴ராணாம் க்ரௌஞ்சதுல்யாநநாஸ்ததா² |
வ்யாளயஜ்ஞோபவீதாஷ்²ச சர்மப்ராவரணாஸ்ததா² ||2-109-55

க்ஷதஜோக்ஷிதவக்த்ராஷ்²ச க²ரபே⁴ரீஸமஸ்வநா꞉ |
மத்ஸரா꞉ க்ரோத⁴நாஷ்²சைவ ப்ராஸாதா³ ருசிராளயா꞉ ||2-109-56

மத்தோந்மத்தப்ரமத்தாஷ்²ச ப்ரஹரந்த்யஷ்²ச தி⁴ஷ்டி²தா꞉ |
பிங்கா³க்ஷா꞉ பிங்க³கேஷா²ஷ்²ச ததோ(அ)ந்யா லூநமூர்த⁴ஜா꞉ ||2-109-57

ஊர்த்⁴வகேஷ்²ய꞉ க்ருஷ்ணகேஷ்²ய꞉ ஷ்²வேதகேஷ்²யஸ்ததா² வரா꞉ |
நாகா³யுதப³லாஷ்²சைவ வாயுவேகா³ஸ்ததா²பரா꞉ ||2-109-58

ஏகஹஸ்தா ஏகபாதா³ ஏகாக்ஷா꞉ பிங்க³ளா மதா꞉ |
ப³ஹுபுத்ராள்பபுத்ராஷ்²ச த்³விபுத்ரா꞉ புத்ரமண்டி³கா꞉ ||2-109-59

முக²மண்டீ³ பி³டா³லீ ச பூதநா க³ந்த⁴பூதநா |
ஷீ²தவாதோஷ்ணவேதாலீ ரேவதீ க்³ருஹஸஞ்ஜ்ஞிதா꞉ ||2-109-60

கொழுப்பையும், ஊனீரையும் விரும்புபவர்கள், மது, இறைச்சி, குடல் ஆகியவற்றை விரும்புபவர்கள், பூனைகள், புலிகள், யானைகள், சிங்கங்கள் ஆகியவற்றின் முகங்களைக் கொண்டவர்கள்,(54) கோழி, காகம், கழுகு, கிரௌஞ்சம் ஆகியவற்றின் முகங்களைக் கொண்டவர்கள், பாம்புகளைப் பூணூலாக அணிந்தவர்கள், தோல்களை உடுத்துபவர்கள்,(55) வாயில் குருதி கொண்டவர்கள், முரசு, பேரிகை போன்ற குரலைக் கொண்டவர்கள், கோபக்காரர்கள், முழுமையான மகிழ்ச்சி கொண்டவர்கள், அழகிய வீடுகளைக் கொண்டவர்கள்,(56) வெறி கொண்டவர்கள், அதிகம் குடிப்பவர்கள், பிறரை அடிப்பவர்கள், மஞ்சள் கண்களைக் கொண்டவர்கள், மஞ்சள் முடி கொண்டவர்கள், மழித்த தலைகளைக் கொண்டவர்கள்,(57) மேல்நோக்கிய தலைமயிர் கொண்டவர்கள், கருப்பு முடி கொண்டவர்கள், வெள்ளை முடி கொண்டவர்கள், ஆயிரம் யானைகளின் பலத்தைக் கொண்டவர்கள், காற்றின் வேகத்தில் பயணிப்பவர்கள்,(58) ஒரே கையைக் கொண்டவர்கள், ஒரே காலைக் கொண்டவர்கள், மஞ்சள் நிறத்தில் ஒரே கண்ணைக் கொண்டவர்கள், பல பிள்ளைகளைப் பெற்றவர்கள், குறைந்த அளவு பிள்ளைகளைப் பெற்றவர்கள், இரண்டே பிள்ளைகளைப் பெற்றவர்கள், சிறுவர்களுடன் விளையாடுபவர்கள்,(59) முகமண்டி, பிடாலி, பூதனை, கந்தபூதனை, சீதவாத உஷ்ண வேதாலி, ரேவதி ஆகிய பெயர்களைக் கொண்டவர்கள்,(60)

ப்ரியஹாஸ்யா꞉ ப்ரியக்ரோதா⁴꞉ ப்ரியவாஸா꞉ ப்ரியம்வதா³꞉ |
ஸுக²ப்ரதா³ஷ்²சாஸுக²தா³꞉ ஸதா³ த்³விஜஜநப்ரியா꞉ || 2-109-61

நக்தஞ்சரா꞉ ஸுகோ²த³ர்கா꞉ ஸதா³ பர்வணி தா³ருணா꞉ |
மாதரோ மாத்ருவத்புத்ரம் ரக்ஷந்து மம நித்யஷ²꞉ ||2-109-62

பிதாமஹமுகோ²த்³பூ⁴தா ரௌத்³ரா ருத்³ராங்க³ஸம்ப⁴வா꞉ |
குமாரஸ்வேத³ஜாஷ்²சைவ ஜ்வரா வை வைஷ்ணவாத³ய꞉ ||2-109-63

மஹாபீ⁴மா மஹாவீர்யா த³ர்போத்³பூ⁴தா மஹாப³லா꞉ |
க்ரோத⁴நாக்ரோத⁴நா꞉ க்ரூரா꞉ ஸுரவிக்³ரஹகாரிண꞉ ||2-109-64

நக்தஞ்சரா꞉ கேஸரிணோ த³ம்ஷ்ட்ரிண꞉ ப்ரியவிக்³ரஹா꞉ |
லம்போ³த³ரா ஜக⁴நிந꞉ பிங்கா³க்ஷா விஷ்²வரூபிண꞉ ||2-109-65

நகைச்சுவை, கோபம் ஆகியவற்றை விரும்புபவர்கள், ஆடைகளை விரும்புபவர்கள், நற்சொல் பேசுபவர்கள், இன்ப துன்பங்களைக் கொடுப்பவர்கள், இருபிறப்பாளர்களால் விரும்பப்படுபவர்கள்,(61) இரவில் திரிபவர்கள், நன்மையைக் கொண்டு வருபவர்கள், எப்போதும் கொடூரர்களாக இருப்பவர்கள், பிள்ளைகளைப் பாதுகாக்கும் தாய்மாரைப் போல என்னை எப்போதும் காக்கும் தாய்மார்கள்,(62) பெரும்பாட்டனின் முகத்தில் இருந்து பிறந்தவர்கள், பயங்கரர்கள், ருத்ரனின் அங்கங்களில் இருந்து பிறந்தவர்கள், குமரனின் (கார்த்திகேயனின்) வியர்வையில் இருந்து பிறந்தவர்கள், வைஷ்ணவ ஜ்வரங்கள்,(63) பேருடல் படைத்தவர்கள், பெரும் வீரர்கள், போலி செருக்கில் பிறந்தவர்கள், பெருஞ்சக்திவாய்ந்தவர்கள், கோபக்காரர்கள், கோபமடையாதவர்கள், கொடூரர்கள், தேவர்களைப் போலத் தெரிபவர்கள்,(64) இரவில் திரிபவர்கள், சிங்க முகம் கொண்டவர்கள், பெரிய பற்களைக் கொண்டவர்கள், சச்சரவுகளை உண்டாக்குபவர்கள், பெரிய வயிற்றைக் கொண்டவர்கள், பெரிய இடையைக் கொண்டவர்கள், மஞ்சள் கண்களைக் கொண்டவர்கள், பெரிய வடிவங்களைக் கொண்டவர்கள்,(65)

ஷ²க்த்ய்ருஷ்டிஷூ²லபரிக⁴ப்ராஸசர்மாஸிபாணய꞉ |
பிநாகவஜ்ரமுஸலப்³ரஹ்மத³ண்டா³யுத⁴ப்ரியா꞉ ||2-109-66

த³ண்டி³ந꞉ குண்டி³ந꞉ ஷூ²ரா ஜடாமுகுடதா⁴ரிண꞉ |
வேத³வேதா³ங்க³குஷ²லா நித்யயஜ்ஞோபவீதிந꞉ ||2-109-67

வ்யாளாபீடா³꞉ குண்ட³லிநோ வீரா꞉ கேயூரதா⁴ரிண꞉ |
நாநாவஸநஸம்வீதாஷ்²சித்ரமால்யாநுலேபநா꞉ ||2-109-68

க³ஜாஷ்²வோஷ்த்ரர்க்ஷமார்ஜாரஸிம்ஹவ்யாக்⁴ரநிபா⁴நநா꞉ |
வராஹோலூககோ³மாயும்ருகா³கு²மஹிஷாநநா꞉ ||2-109-69

வாமநா விகடா꞉ குப்³ஜா꞉ கராளா லூநமூர்த⁴ஜா꞉ |
ஸஹஸ்ரஷ²தஷ²ஷ்²சாந்யே ஸஹஸ்ரஜடதா⁴ரிண꞉ ||2-109-70

சக்தி, ரிஷ்டி, சூலம், பரிகம், பராஸம், சர்மம், அஸி ஆகிய ஆயுதங்களைத் தரித்தவர்கள், பிநாகம், வஜ்ரம், முசலம், பிரம்மதண்டம் முதலிய ஆயுதங்களை விரும்புபவர்கள்,(66) தண்டங்களையும், கமண்டலங்களையும் கொண்டவர்கள், துணிவுமிக்கவர்கள், சடாமுடி தரித்தவர்கள், மகுடம் தரித்தவர்கள், வேதங்களில் நிபுணர்கள், எப்போதும் வேள்விக்கான பூணூலைத் தரித்தவர்கள்,(67) பாம்புகளைத் தலையில் சூடியவர்கள், காதுகுண்டலங்களைத் தரித்தவர்கள், புஜங்களில் கேயூரங்கள் தரித்தவர்கள், பல்வேறு வகை ஆடைகளை அணிபவர்கள், அழகிய மாலைகளால் தங்களை அலங்கரித்துக் கொள்பவர்கள், களிம்புகளைத் தங்கள் உடலில் பூசிக் கொள்பவர்கள்,(68) யானைகள், குதிரைகள், ஒட்டகங்கள், கரடிகள், பூனைகள், சிங்கங்கள், புலிகள் ஆகியவற்றின் முகங்களைக் கொண்டவர்கள், பன்றி, ஆந்தை, நரி, மான், எலி, எருமை ஆகியவற்றின் முகங்களைக் கொண்டவர்கள்,(69) உயரம் குறைந்தவர்கள் {குள்ளர்கள்}, அங்கப்பழுதுடையவர்கள், கூன் முதுகைக் கொண்டவர்கள், கராலர்கள், தலையை மழித்துக் கொண்டவர்கள், ஆயிரவர், நூற்றுவர், ஆயிரம் சடை தரித்தவர்,(70)

ஷ்²வேதா꞉ கைலாஸஸந்ங்காஷா²꞉ கேசித்³தி³நகரப்ரபா⁴꞉ |
கேசிஜ்ஜலத³வர்ணாபா⁴ நீலாஞ்ஜநசயோபமா꞉ ||2-109-71

ஏகபாதா³ த்³விபாதா³ஷ்²ச ததா² த்³விஷி²ரஸோ(அ)பரே |
நிர்மாம்ஸா꞉ ஸ்தூ²லஜங்கா⁴ஷ்²ச வ்யாதி³தாஸ்யா ப⁴யங்கரா꞉ ||2-109-72

வாபீதடா³க³கூபேஷு ஸமுத்³ரேஷு ஸரித்ஸு ச |
ஷ்²மஷா²நஷை²லவ்ருக்ஷேஷு ஷூ²ந்யாகா³ரநிவாஸிந꞉ || 2-109-73

கைலாசம் போன்று வெள்ளையாக இருப்பவர்கள், சூரியனைப் போன்று பிரகாசமாக இருப்பவர்கள், மழை மேகங்களைப் போலக் கருப்பாக இருப்பவர்கள், அஞ்சன மை போல நீலமாக இருப்பவர்கள்,(71) ஒற்றைக் கால் கொண்டவர்கள், இரு கால் கொண்டவர்கள், இரு தலைகளைக் கொண்டவர்கள், சதையற்றவர்கள், பெரும் இடை கொண்டவர்கள், அகலத் திறந்த வாய்களைக் கொண்டவர்கள், பயங்கரர்கள்,(72) கோள்கள், தடாகங்கள், மடுக்கள், குளங்கள், கடல்கள், ஆறுகள், இடுகாடுகள், மலைகள், மரங்கள், ஆகியவற்றிலும் சூன்யமான வீடுகளிலும் வசிப்பவர்கள் ஆகியோர் அனைத்து வகையிலும் என்னைக் காக்கட்டும்.(73)

ஏதே க்³ரஹாஷ்²ச ஸததம் ரக்ஷந்து மம ஸர்வத꞉ |
மஹாக³ணபதிர்நந்தீ³ மஹாகாலோ மஹாப³ல꞉ |
மாஹேஷ்²வரோ வைஷ்ணவஷ்²ச ஜ்வரௌ லோகப⁴யாவஹௌ ||2-109-74

க்³ராமணீஷ்²சைவ கோ³பாலோ ப்⁴ருங்க³ரீடிர்க³ணேஷ்²வர꞉ |
தே³வஷ்²ச வாமதே³வஷ்²ச க⁴ண்டாகர்ண꞉ கரந்த⁴ம꞉ ||2-109-75

ஷ்²வேதமோத³꞉ கபாலீ ச ஜம்ப⁴க꞉ ஷ²த்ருதாபந꞉ |
மஜ்ஜநோந்மஜ்ஜநௌ சோபௌ⁴ ஸந்தாபநவிளாபநௌ ||2-109-76

நிஜகா⁴ஸோ க⁴ஸஷ்²சைவ ஸ்தூ²ணாகர்ண꞉ ப்ரஷோ²ஷண꞉ |
உல்காமாலீ த⁴மத⁴மோ ஜ்வாலாமாலீ ப்ரத³ர்ஷ²ந꞉ ||2-109-77

ஸங்க⁴ட்டந꞉ ஸங்குடந꞉ காஷ்ட²பூ⁴த꞉ ஷி²வங்கர꞉ |
கூஷ்மாண்ட³꞉ கும்ப⁴மூர்தா⁴ ச ரோசநோ வைக்ருதோ க்³ரஹ꞉ ||2-109-78

கணங்களின் பெருந்தலைவன் (கணேசன்), நந்தி, பெருங்காலன், பெருஞ்சக்திவாய்ந்தவன், உலகில் அஞ்சப்படுபவர்களான பெருந்தலைவன் (சிவன்), விஷ்ணு ஆகிய இருவருக்கும் உடைய ஜ்வரங்கள்,(74) கிராமணி, கோபாலன், பிருங்காரீடி, கணேஷ்வரன், தலைவன் வாமதேவன், காதுகளில் மணிகளைக் கொண்டவன் (கண்டாகர்ணன்), கரந்தமன்,(75) ஸ்வேதமோதன், கபாலி, ஜம்பகன், பகைவரை எரிப்பவன் {சத்ருதாபனன்}, மஜ்ஜன், உனமஜ்ஜன், சந்தாபனன், விலாபனன்,(76) நிஜாகஸன், அகஸன், ஸ்தூணாகர்ணன், பிரசோஷணன், உல்காமாலி, தபதமன், ஜ்வாலாமலி, பிரதர்ஷனன்,(77) ஸங்கட்டணன், ஸங்குடனன், காஷ்டபூதன், சிவங்கரன், கூஷ்மாண்டன், கும்பமூர்த்தன், ரோசனன், {கிரஹமாகிபலி}, வைக்ருதன்,(78)

அநிகேத꞉ ஸுராரிக்⁴ந꞉ ஷி²வஷ்²சாஷி²வ ஏவ ச |
க்ஷேமக꞉ பிஷி²தாஷீ² ச ஸுராரிர்ஹரிலோசந꞉ ||2-109-79

பீ⁴மகோ க்³ராஹகஷ்²சைவ ததை²வாக்³ரமயோ க்³ரஹ꞉ |
உபக்³ரஹோ(அ)ர்யகஷ்²சைவ ததா² ஸ்கந்த³க்³ரஹோ(அ)பர꞉ ||2-109-80

சபலோ(அ)ஸமவேதாலஸ்தாஸம꞉ ஸுமஹாகபி꞉ |
ஹ்ருத³யோத்³வர்தநஷ்²சைட³꞉ குண்டா³ஷீ² கங்கணப்ரிய꞉ ||2-109-81

ஹரிஷ்²மஷ்²ருர்க³ருத்மந்தோ மநோமாருதரம்ஹஸ꞉ |
பார்வத்யா ரோஷஸம்பூ⁴தா꞉ ஸஹஸ்ராணி ஷ²தாநி ச || 2-109-82

ஷ²க்திமந்தோ த்⁴ருதிமந்தோ ப்³ரஹ்மந்யா꞉ ஸத்யஸங்க³ரா꞉ |
ஸர்வகாமாபஹந்தாரோ த்³விஷதாம் ச ம்ருதே⁴ ம்ருதே⁴ ||2-109-83

ராத்ராவஹநி து³ர்கே³ஷு கீர்திதா꞉ ஸகலைர்கு³ணை꞉ |
தேஷாம் க³நாநாம் பதய꞉ ஸக³ணா꞉ பாந்து மாம் ஸதா³ ||2-109-84

அனிகேதன், ஸுராரிக்னன், சிவன், அசிவன், க்ஷேமகன், பிசிதாஸி, ஸுராரி, ஹரிலோசனன்,(79) பீமகன், கிரஹகன், உக்ரமயகிரஹன், உபக்ரஹன், அர்யகன், ஸ்கந்தக்ரஹன்,(80) சபலன், அஸ்மவேதாளன், தாமஸன், ஸுமஹாகபி, ஹிரதயுதவாதனன், ஜடன், குண்டாசி, கங்கணப்ரியன்,(81) ஹரிமசம்ஸ்ரு, மனோவேக காற்று வேகம் கொண்ட கருத்மான், பார்வதியின் கோபத்திலிருந்து பிறந்த சக்திமிக்க நூற்றுவர், ஆயிரவர்,(82) பெருஞ்சக்திவாய்ந்தவர்கள், உறுதிமிக்கவர்கள், பிராமணர்களிடம் அர்ப்பணிப்புமிக்கவர்கள், வாய்மைக்குக் கட்டுப்பட்டவர்கள், போரில் பகைவரின் ஆசைகள் அனைத்தையும் முற்றிலும் அழிப்பவர்கள்(83) ஆகியோர் அனைவரும் இரவிலும், பகலிலும், கடினமான காலங்களிலும் துதிக்கப்படும்போது, கணங்களின் துணையுடன் கூடிய கணேசனுடன் சேர்ந்து எப்போதும் என்னைக் காக்கட்டும்.(84)

நாரத³꞉ பர்வதஷ்²சைவ க³ந்த⁴ர்வாப்ஸரஸாம் க³ணா꞉ |
பிதர꞉ காரணம் கார்யமாத⁴யோ வ்யாத⁴யஸ்ததா² ||2-109-85

அக³ஸ்த்யோ கா³ளவோ கா³ர்க்³ய꞉ ஷ²க்திதௌ⁴ம்ய꞉ பராஷ²ர꞉ |
க்ருஷ்ணாத்ரேயஷ்²ச ப⁴க³வாநஸிதோ தே³வலோ ப³ல꞉ ||2-109-86

ப்³ருஹஸ்பதிருதத்²யஷ்²ச மார்கண்டே³ய꞉ ஷ்²ருதஷ்²ரவா꞉ |
த்³வைபாயநோ வித³ர்ப⁴ஷ்²ச ஜைமிநிர்மாட²ர꞉ கட²꞉ ||2-109-87

விஷ்²வாமித்ரோ வஸிஷ்ட²ஷ்²ச லோமஷ²ஷ்²ச மஹாமுநி꞉ |
உத்தங்கஷ்²சைவ ரைம்யஷ்²ச பௌலோமஷ்²ச த்³விதஸ்த்ரித꞉ ||2-109-88

ருஷிர்வை காலவ்ருக்ஷீயோ முநிமேதா⁴திதி²ஸ்ததா² |
ஸாரஸ்வதோ யவக்ரீதி꞉ குஷி²கோ கௌ³தமஸ்ததா² ||2-109-89

ஸம்வர்த ருஷ்²யஷ்²ருங்க³ஷ்²ச ஸ்வஸ்த்யாத்ரேயோ விபா⁴ண்ட³க꞉ |
ருசீகோ ஜமத³க்³நிஷ்²ச ததோ²ர்வஸ்தபஸாம் நிதி⁴꞉ ||2-109-90

நாரதர், பர்வதர், கந்தர்வர்கள், அப்ஸரஸ்கள், கணங்கள், பித்ருக்கள், காரணம், காரியம், ஆதி, வியாதி,(85) அகஸ்தியர், காலவர், கார்க்யர், சகிதி, தௌம்யர், பராசரர், கிருஷ்ணாத்ரேயர், அசிதர், தேவலர், பலர்,(86) பிருஹஸ்பதி, உதத்யர், மார்க்கண்டேயர், சுருதச்ரவர், துவைபாயனர், விதர்ப்பர், ஜைமினி, மாடரர், கடர்,(87) விஷ்வாமித்ரர், வசிஷ்டர், பெரும் முனிவரான லோமசர், உதங்கர், நைப்யர், பௌலோமர், துவிதர், திருதர்,(88) காலவிருக்ஷ்யரிஷி, மேதாதிமுனி, ஸாரஸ்வதர், யவக்ரீதி, குசிகர், கௌதமர்,(89) ஸம்வர்த்தர், ரிஷ்யசிருங்கர், ஸ்வஸ்திகயாத்ரேயர், விபாண்டகர், ரிசீகர், ஜமதக்னி, தவங்களின் கருவூலமான ஔர்வர்,(90)

ப⁴ரத்⁴வாஜ꞉ ஸ்தூ²லஷி²ரா꞉ கஷ்²யப꞉ புலஹ꞉ க்ரது꞉ |
ப்³ருஹத³க்³நிர்ஹரிஷ்²மஷ்²ருர்விஜய꞉ கண்வ ஏவ ச ||2-109-91

வைதண்டீ³ தீ³ர்க⁴தாபஷ்²ச வேத³கா³ர்தோ²(அ)ம்ஷு²மாஞ்ச்சி²வ꞉ |
அஷ்டாவக்ரோ த³தீ⁴சிஷ்²ச ஷ்²வேதகேதுஸ்ததை²வ ச ||2-109-92

உத்³தா³ளக꞉ க்ஷீரபாணி꞉ ஷ்²ருங்கீ³ கௌ³ரமுக²ஸ்ததா² |
அக்³நிவேஷ்²ய꞉ ஷ²மீகஷ்²ச ப்ரமுசுர்முமுசுஸ்ததா² ||2-109-93

ஏதே சாந்யே ச ருஷய꞉ ப³ஹவ꞉ ஷ²ம்ஸிதவ்ரதா꞉ |
முநய꞉ ஷ²ம்ஸிதாத்மாநோ யே சாந்யே நாநுகீர்திதா꞉ ||2-109-94

க்ரதவ꞉ ஷா²தி⁴ந꞉ ஷா²ந்தா꞉ ஷா²ந்திம் குர்வந்து மே ஸதா³ |
த்ரயோ(அ)க்³நயஸ்த்ரயோ வேதா³ஸ்த்ரைவித்³யா꞉ கௌஸ்துபோ⁴ மணி꞉ ||2-109-95

உச்சை꞉ஷ்²ரவா ஹய꞉ ஷ்²ரீமாந்வைத்³யோ த⁴ந்வந்தரிர்ஹரி꞉ |
அம்ருதம் கௌ³꞉ ஸுபர்ணஷ்²ச த³தி⁴கௌ³ராஷ்²ச ஸர்ஷபா꞉ ||2-109-96

பரத்வாஜர், ஸ்தூலசிரர், கசியபர், புலஹர், கிரது, பிருஹதக்னி, ஹரிஸ்மஸரு, விஜயர், கண்வர்,(91) வைதண்டி, தீர்கதாபர், வேதகார்த்தர், அம்சுமான், சிவர், அஷ்டாவக்ரர், ததீசி, ஸ்வேதகேது,(92) உத்தாலகர், க்ஷீரபாணி, சிருங்கி, கௌர்முகர், அக்னிவேஸ்யர், சமீகர், பிரமுசு, முமுசு ஆகியோரும்,(93) நோன்புகளை நோற்பவர்களான பிற முனிவர்கள் பலரும், ஆன்மாக்களைக் கட்டுப்படுத்திய முனிவர்களும், இங்கே துதிக்கப்படாதவர்களும்,(94) வேள்விகளைச் செய்யும் பிற முனிவர்களும், அமைதியான முனிவர்களும் எப்போதும் எனக்கு அமைதியை அருளட்டும்.
மூன்று அக்னிகள், மூன்று வேதங்கள், மூன்று வித்தைகள், கௌஸ்துபமணி,(95) உச்சைஸ்ரவஸ் குதிரை, மருத்துவத்தில் திறன்மிகுந்த மங்கலமான தன்வந்திரி, ஹரி, அம்ருதம், கருடன் {ஸுபர்ணம்}, வெண்பறவைகள்,(96)

ஷு²க்லா꞉ ஸுமநஸ꞉ கந்யா꞉ ஷ்²வேதச்ச²த்ரம் யவாக்ஷதா꞉ |
தூ³ர்வா ஹிரண்யம் க³ந்தா⁴ஷ்²ச வாலவ்யஜநமேவ ச ||2-109–97

ததா²ப்ரதிஹதம் சக்ரம் மஹோக்ஷஷ்²சந்த³நம் விஷம் |
ஷ்²வேதோ வ்ருஷ꞉கரீ மத்த꞉ ஸிம்ஹோ வ்யாக்⁴ரோ ஹயோ கி³ரி꞉ ||2-109-98

ப்ருதி²வீ சோத்³த்⁴ருதா லாஜா ப்³ராஹ்மநா மது⁴ பாயஸம் |
ஸ்வஸ்திகோ வர்த⁴மாநஷ்²ச நந்த்³யாவர்த꞉ ப்ரியங்க³வ꞉ |
ஷ்²ரீப²லம் கோ³மயம் மத்ஸ்யோ து³ந்து³பி⁴꞉ படஹஸ்வந꞉ ||2-109-99

ருஷிபத்ந்யஷ்²ச கந்யாஷ்²ச ஷ்²ரீமத்³ப⁴த்³ராஸநம் த⁴நு꞉ |
ரோசநா ருசகஷ்²சைவ நதீ³நாம் ஸங்க³மோத³கம் ||2-109-100

ஸுபர்ணா꞉ ஷ²தபத்ராஷ்²ச சகோரா ஜீவஜீவகா꞉ |
நந்தீ³முகோ² மயூரஷ்²ச ப³த்³த⁴முக்தாமணித்⁴வஜா꞉ ||2-109-101

ஆயுதா⁴நி ப்ரஷ²ஸ்தாநி கார்யஸித்³தி⁴கராணி ச |
புண்யம் வை விக³தக்லேஷ²ம் ஷ்²ரீமத்³வை மங்க³ளாந்விதம் ||2-109-102

வெண்கடுகு, வெண்மலர்கள், கன்னிகைகள், வெண்குடை, யவம், அக்ஷதை, அருகம்புல், தங்கம், நறுமணப்பூச்சு, விசிறி,(97) சக்கராயுதம், பெரும் காளை, சந்தனம், நஞ்சு, வெள்ளை காளை, மதங்கொண்ட யானை, சிங்கம், புலி, குதிரை, மலை,(98) பூமாதேவி {நிலம்}, நெற்பொரி, பிராமணர்கள், தேன், பாயஸம், சுவஸ்திகாவளதக்கை, நந்தியாவர்த்த மலர், குங்குமப்பூ, வில்வம், கோமயம், மீன் {மத்ஸயம்}, துந்துபி, படகம் ஆகியவற்றின் ஒலி,(99) முனிவர்களின் மனைவியர் {ரிஷிபத்னிகள்}, கன்னிகைகள், மங்கல இருக்கைகள் {ஸ்ரீமத்பத்ராஸனம்}, விற்கள், கோரோசனை, மங்களத்திரவியம், ஆறுகளின் (ஆறுகள் கடலுடன் கலக்கும்) சங்கமத்தில் கிடைக்கும் நீர்,(100) நல்ல இலைகள், தாமரை, சகோரம், ஜீவ ஜீவக பறவை, நந்தீமுகப் பறவை, மயில் {மயூரம்}, முத்து, ரத்தினம் பதித்த கொடிக்கம்பங்கள்,(101) நல்ல ஆயுதங்கள் எனக் காரியங்களை நிறைவேற்றவல்லவையும், நற்பேற்றை வழங்குபவையும், கடினமான நிலைமைகளை அழிப்பவையும், நல்ல விளைவுகளை உண்டாக்குபவையுமான இவை அனைத்தும் என்னைக் காக்கட்டும்[இந்த ஆஹ்நிக துதி, மஹாபாரதம் அநுசாஸனபர்வம் பகுதி 150ல் சொல்லப்படும் சாவித்ரி மந்திரத்திற்கு நெருக்கமானதாக இருக்கிறது. ].(102)

ராமேணோதா³ஹ்ருதம் பூர்வமாயு꞉ ஷ்²ரீஜயகாங்க்ஷிணா |
ய இத³ம் ஷ்²ராவயேத்³வித்³வாம்ஸ்ததை²வ ஷ்²ருணுயாந்நர꞉ ||2-109-103

மங்க³ளாஷ்டஷ²தம் ஸ்நாதோ ஜபந்பர்வணி பர்வணி |
வத⁴ப³ந்த⁴பரிக்லேஷ²ம் வ்யாதி⁴ஷோ²கபராப⁴வம் ||2-109-104

ந ச ப்ராப்நோதி வைகல்யம் பரத்ரேஹ ச ஷ²ர்மத³ம் |
த⁴ந்யம் யஷ²ஸ்யமாயுஷ்யம் பவித்ரம் வேத³ஸம்மிதம் ||2-109-105

ஷ்²ரீமத்ஸ்வர்க்³யம் ஸதா³ புண்யமபத்யஜநநம் ஷி²வம் |
ஷு²ப⁴ம் க்ஷேமகரம் ந்ரூணாம் மேதா⁴ஜநநமுத்தமம் ||2-109-106

ஸர்வரோக³ப்ரஷ²மநம் ஸ்வகீர்திகுலவர்த⁴நம் |
ஷ்²ரத்³த³தா⁴நோ த³யோபேதோ ய꞉ படே²தா³த்மவாந்நர꞉ |
ஸர்வபாபவிஷு²த்³தா⁴த்மா லப⁴தே ச ஷு²பா⁴ம் க³திம் ||2-109-107

இது நீண்டகாலத்திற்கு முன்னர்ப் பலராமனால் ஓதப்பட்டது. நீண்ட வாழ்நாள், செழிப்பு, வெற்றி ஆகியவற்றை விரும்பும் மனிதர்கள் நல்லோரைக் கொண்டு ஓதச் செய்து இதைக் கேட்க வேண்டும்.(103) திதிகள் தோறும் {நாள்தோறும்} நீராடிவிட்டு, நூற்றெட்டு மங்கலப் பெயர்களுடன் கூடிய இந்த மந்திரத்தை {ஆஹ்நிகத் துதியை} ஒருவன் ஓதினால் அவன் மரணம், பற்று, நோய், கவலை ஆகியவற்றால் பீடிக்கப்படமாட்டான்.(104) இந்த மந்திரம் இம்மையிலும், மறுமையிலும் நன்மையை ஏற்படுத்தும். வேதங்களுக்கு இணையான இந்தப் புனித மந்திரம் நற்பேற்றையும், நீண்ட வாழ்நாட்களையும், புகழையும் கொடுக்கும்.(105) இந்த மந்திரம் {ஆஹ்நிக ஸ்தோத்ரம்} எப்போதும் செழிப்பைக் கொடுக்கும். தெய்வீகமானதும், புனிதமானதுமான இது சந்ததியையும், மங்கலத்தையும் அருளும். இது நற்பேற்றையும், செழிப்பையும் அருளும். தவத்தின் பலன்களைக் கொடுக்கக்கூடிய இது {ஆஹ்நிக மந்திரம்} மனிதர்களுக்கு மிகச் சிறந்த துதியாகும்.(106) இந்த மந்திரம் அனைத்து பிணிகளையும் போக்கவல்லதும், ஒருவனுடைய புகழையும், அவனுடைய குலத்தின் புகழையும் அதிகரிக்கவல்லதும் ஆகும். அன்பு நிறைந்த இதயம் கொண்ட ஒருவனால் இந்த மந்திரம் கவனத்துடன் ஓதப்பட்டால், அவனுடைய ஆன்மா அனைத்துப் பாவங்களில் இருந்தும் தூய்மையடையும், அவன் மங்கல உலகை அடைவான்” என்றார் {வைசம்பாயனர்}.(107)

இதி ஷ்²ரீமஹாபா⁴ரதே கி²லேஷு ஹரிவம்ஷே² விஷ்ணுபர்வணி
ப³லதே³வாஹ்நிகம் நாம நவாதி⁴கஷ²ததமோ(அ)த்⁴யாய꞉

————–—————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாஸ பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: