ஸ்ரீ விஷ்ணு பர்வம்–அத்யாயம் – 108–(மாயாவத்யா ஸஹ ஸ்ரீ பிரத்யும்னஸ்ய ஸ்ரீ மத் துவாரகா கமனம்)

மாயாவதியுடன் ஸ்ரீ மத் துவாரகையை அடைந்த ஸ்ரீ பிரத்யும்னன்; மட்டற்ற மகிழ்ச்சியடைந்த ஸ்ரீ ருக்மிணி

வைஷ²ம்ப்யன உவாச
ஸமப்தமாயோ மாயாஜ்ஞோ விக்ராந்த꞉ ஸமரே(அ)வ்யய꞉ |
அஷ்டம்யாம் நிஹதோ யுத்³தே⁴ மாயாவீ காலஷ²ம்ப³ர꞉ ||2-108-1

தம்ருக்ஷவந்தே நக³ரே நிஹத்யாஸுரஸத்தமம் |
க்³ருஹ்ய மாயாவதீம் தே³வீமாக³ச்ச²ந்நக³ரம் பிது꞉ ||2-108-2

யோ(அ)ந்தரிக்ஷக³தோ பூ⁴த்வா மாயாவீ ஷீ²க்⁴ரவிக்ரம꞉ |
ஆஜகா³ம புரீம் ரம்யாம் ரக்²Sஇதாம் தேஜஸா பிது꞉ ||2-108-3

ஸோ(அ)ந்தரிக்ஷாந்நிபதித꞉ கேஷ²வாந்த꞉புரே ஷி²ஷு²꞉ |
மாயாவத்யா ஸஹ தயா ரூபவானிவ மன்மத²꞉ ||2-108-4

தஸ்மிம்ஸ்தத்ராவபதிதே மஹிஷ்ய꞉ கேஷ²வஸ்ய யா꞉ |
விஸ்மிதாஷ்²சைவ ஹ்ருஷ்டாஷ்²ச பீ⁴தாஷ்²சைவாப⁴வம்ஸ்தத꞉ ||2-108-5

ததஸ்தம் காமஸங்காஷ²ம் காந்தயா ஸஹ ஸங்க³தம் |
ப்ரேக்ஷந்த்யோ ஹ்ருஷ்டவத³னா꞉ பிப³ந்த்யோ நயனோத்ஸவம் ||2-108-6

தம் வினீதமுக²ம் த்³ருஷ்ட்வா ஸஜ்ஜமானம் பதே³ பதே³ |
அப⁴வன்ஸ்னிக்³த⁴ஸஞ்கல்பா꞉ ஸர்வாஸ்தா꞉ க்ருஷ்ணயோஷித꞉ ||2-108-7

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “பெருஞ்சக்திவாய்ந்த மாயாவியான சம்பரன், தன் மாயைகள் அனைத்தும் முடிந்ததும், எட்டாம் பிறைநாளில் {அஷ்டமியில்} போரில் கொல்லப்பட்டான்.(1) பிரத்யும்னன், அசுரர்களின் முதன்மையான அவனை ரிக்ஷவந்த நகரத்தில் கொன்றுவிட்டுத் தன்னுடன் மாயாவதியை அழைத்துக் கொண்டு தன் தந்தையின் நகருக்கு {துவாரகைக்குப்} புறப்பட்டுச் சென்றான்.(2) வேகமாகச் செல்லவல்லவனான அந்த வீரன், தன் மாயா சக்தியின் மூலம் வானத்தில் எழுந்து தன் தந்தையின் சக்தியால் பாதுகாக்கப்படும் அழகிய துவாராவதி நகரை அடைந்தான்.(3) மன்மதனை (காமனைப்) போன்ற அந்த இளைஞன், மாயாதியுடன் சேர்ந்து வானத்தில் இருந்து கேசவனின் அந்தப்புரத்திற்குள் இறங்கினான்.(4) இவ்வாறு பிரத்யும்னன் கீழே இறங்கி வந்தபோது, கேசவனின் ராணிகள் ஆச்சரியத்தாலும், மகிழ்ச்சியாலும், அச்சத்தாலும் நிறைந்தனர்.(5) காமனுக்கு ஒப்பான அந்த இளைஞனையும், அவனது மனைவியையும் கண்ட பிறகு அவர்களது முகங்களில் மகிழ்ச்சி பெருகியது; அவர்கள் தங்கள் கண்களால் அவனது முகத்தில் உள்ள அமுதத்தைப் பருகுபவர்களைப் போலத் தெரிந்தனர்.(6) நாணம் நிறைந்த அந்தப் பிள்ளையின் முகத்தையும், அடிமேல் அடியெடுத்து வைத்து அடக்கத்துடன் நடக்கும் நடையும் கண்ட அவர்கள் அனைவரும் அவனிடம் அன்பால் நிறைந்தனர்.(7)

ருக்மிணீ சைவ தம் த்³ருஷ்ட்வா ஷோ²கார்தா புத்ரக³ர்த்³தி⁴னீ |
ஸபத்னீஷ²தஸங்கீர்ணா ஸபா³ஷ்பா வாக்யமப்³ரவீத் || 2-108-8

யாத்³ருக்ஸ்வப்னோ மயா த்³ருஷ்டோ நிஷா²யாம் யௌவனே க³தே |
கம்ஸாரிணா மமானீய த³த்தம் ஸாஹாரபல்லவம் ||2-108-9

ஷ²ஷி²ரஷ்²மிப்ரதீகாஷ²ம் முக்தாதா³மவிபூ⁴ஷிதம் |
கேஷ²வேனாங்கமாரோப்ய மம கண்டே² ந்யப³த்⁴யத ||2-108-10

ஷ்²யாமா ஸுசாருகேஷா² ஸ்த்ரீ ஷு²க்லாம்ப³ரவிபூ⁴ஷிதா |
பத்³மஹஸ்தா ந்ரீறீக்ஷந்தீ ப்ரவிஷ்டா மம வேஷ்²மனி ||2-108-11

ததா² புனரஹம் க்³ருஹ்ய ஸ்னாபிதா ருசிராம்பு³னா |
குஷே²ஷ²யமயீம் மாலாம் ஸ்த்ரீ ஸங்க்³ருஹ்யாத² பாணினா ||2-108-12

நூறு சக்களத்திகளால் சூழப்பட்டவளும், மகனைப் பெற்ற அன்னையுமான ருக்மிணி, அந்தப் பிள்ளையைக் கண்டதும் துயரால் பீடிக்கப்பட்டாள். கண்ணீர் சிந்தியபடியே அவள்,(8) “ஐயோ, நடு இரவில் கண்ட கனவில் கம்சனைக் கொன்றவர் {கம்ஸாரிணர் கிருஷ்ணர்} எனக்கு மாந்தளிர்களை {மாவிலைகளைத்} தந்தார்.(9) கேசவர் என்னை மடியில் வைத்துக் கொண்டு நிலவின் கதிர்களுக்கு ஒப்பான முத்து மாலையை என் கழுத்தில் சூட்டினார்.(10) அழகிய சுருள்முடிகளுடன் கூடியவளும், வெள்ளை ஆடை உடுத்தியவளும், கையில் தாமரையைக் கொண்டவளுமான ஓர் இளம்பெண் {என்னைப் பார்த்துக் கொண்டே} என் அறைக்குள் நுழைந்தாள்.(11) அழகாக என் மீது அவள் நீரைத் தெளித்தாள் {அழகாக என்னை நீராட்டினாள்}. அதன்பிறகு அந்தப் பெண் என் தலையைத் தன் கைகளால் தீண்டித் தாமரை மாலையை எனக்குக் கொடுத்தாள்” என்று சொன்னாள்.(12)

மம மூர்த⁴ன்யுபாக்⁴ராய த³த்தா ஸ்வச்சா² தயா மம |
ஏவம் ஸ்வப்னான்கீர்தயந்தீ ருக்மிணீ ஹ்ருஷ்டமானஸா ||2-108-13

ஸகீ²ஜனவ்ருதா தே³வீ குமாரம் வீக்ஷ்ய தம் முஹு꞉ |
த⁴ந்யாயா꞉ க²ல்வயம் புத்ரோ தீ³ர்கா⁴யு꞉ ப்ரியத³ர்ஷ²ன꞉ ||2-108-14

ஈத்³ருஷ²꞉ காமஸங்காஷோ² யௌவனே ப்ரத²மே ஸ்தி²த꞉ |
ஜீவபுத்ரா த்வயா புத்ர காஸௌ பா⁴க்³யஸமன்விதா ||2-108-15

கிமர்த²ம் சாம்பு³த³ஷ்²யாம꞉ ஸபா⁴ர்யஸ்த்வமிஹாக³த꞉ |
அஸ்மின்வயஸி ஸுவ்யக்தம் ப்ரத்³யும்னோ மம புத்ரக꞉ ||2-108-16

ப⁴வேத்³யதி³ ந நீத꞉ ஸ்யாத்க்ருதாந்தேன ப³லீயஸா |
வ்யக்தம் க்ருஷ்ணகுமாரஸ்த்வம் ந மித்²யா மம தர்கிதம் ||2-108-17

விஜ்ஞாதோ(அ)ஸி மயா சிஹ்னைர்வினா சக்ரம் ஜனார்த³ன꞉ |
முக²ம் நாராயணஸ்யேவ கேஷா²꞉ கேஷா²ந்த ஏவ ச ||2-108-18

தன் தோழிகளால் சூழப்பட்டிருந்த ருக்மிணி, தன் கனவை இவ்வாறு விளக்கிச் சொல்லி மீண்டும் மீண்டும் அந்த இளவரசனைக் கண்டு,(13) “அழகும், நீண்ட ஆயுளும் கொண்டவனும், காமனுக்கு ஒப்பானவனும், இளமையின் முதல் நிலையில் அடியெடுத்து வைத்தவனுமான இத்தகைய பிள்ளையை மகனாகப் பெற்ற பெண் அருளப்பட்டவளே.(14) ஓ! மகனே, மேகம் போன்ற நிறத்துடன் கூடிய உன்னைப் போன்ற மகனால் அருளப்பட்ட நல்லூழ் கொண்ட அந்தப் பெண் யார்? உன் மனைவியுடன் நீ இங்கே வந்ததேன்?(15) ஐயோ, சக்திவாய்ந்த யமன், என் குழந்தை பிரத்யும்னனை அபகரிக்காதிருந்தால், இந்நேரம் அவனும் உன் வயதையே அடைந்திருப்பான்.(16) என் ஊகம் ஒருபோதும் பொய்யாகாது. நிச்சயம் நீ விருஷ்ணி குல இளவரசனே;(17) உன் மேனியில் உள்ள அடையாளங்களால் நீ சக்கரம் இல்லாத ஜனார்த்தனரைப் போலத் தெரிகிறாய். உன் முகமும், தலைமுடியும் நாராயணருக்கு ஒப்பானவையாக இருக்கின்றன,(18)

ஊரூ வக்ஷோ பு⁴ஜௌ துல்யௌ ஹலின꞉ ஷ்²வஷு²ரஸ்ய மே |
கஸ்த்வம் வ்ருஷ்ணிகுலம் ஸர்வம் த்³யோதயன்வபுஷா ஸ்தி²த꞉ ||2-108-19

அஹோ நாராயணஸ்யேவ தி³வ்யா தே பரமா தனு꞉ |
ஏதஸ்மின்னந்தேரே க்ருஷ்ண꞉ ஸஹஸா ப்ரவிவேஷ² ஹ |
நாரத³ஸ்ய வச꞉ ஷ்²ருத்வா ஷ²ம்ப³ரஸ்ய வத⁴ம் ப்ரதி ||2-108-20

ஸோ(அ)பஷ்²யத்தம் ஸுதம் ஜ்யேஷ்ட²ம் ஸித்³த⁴ம் மன்மத²லக்ஷணை꞉ |
ஸ்னுஷாம் மாயாவதீம் சைவ ஹ்ருஷ்டசேதா ஜனார்த³ன꞉ |
ஸோ(அ)ப்³ரவீத்ஸஹஸா தே³வீம் ருக்மிணீம் தே³வதாமிவ ||2-108-21

க்ருஷ்ண உவாச
அயம் ஸ தே³வி ஸம்ப்ராப்த꞉ ஸுதஷ்²சாபத⁴ரஸ்தவ ||2-108-22

உன் தொடைகளும், கரங்களும், மார்பும் என் மைத்துனரான ஹலாதரருக்கு {பலராமருக்கு} ஒப்பானவையாக இருக்கின்றன. ஐயோ, நீ நாராயணரின் இரண்டாம் தெய்வீக உடலைக் கொண்டவன் போலத் தெரிகிறாய். உன் மேனியால் நீ மொத்த மொத்த விருஷ்ணி குலத்தையும் அலங்கரிக்கிறாய்.(19) ஓ! பிள்ளாய், யார் நீ?” என்று கேட்டாள் {ருக்மிணி}.

அதே வேளையில், சம்பரனின் அழிவை நாரதரிடம் இருந்து கேட்டிருந்த கிருஷ்ணன், அங்கே திடீரென நுழைந்தான்.(20) ஜனார்த்தனன், காமனுக்கு ஒப்பான தன் மூத்த மகனையும், தன் மருமகள் மாயாவதியையும் கண்டு இன்பத்தால் நிறைந்து,(21) தேவி போன்ற ருக்மிணியிடம், “ஓ! தேவி, பெரும் வில்லாளியான உன் மகன் இதோ வந்துவிட்டான்.(22)

அனேன ஷ²ம்ப³ரம் ஹத்வா மாயாயுத்³த⁴விஷா²ரத³ம் |
ஹதா மாயாஸுதா꞉ ஸர்வா யாபி⁴ர்தே³வானபா³த⁴யத் ||2-108-23

ஸதீ சய ஷு²பா⁴ ஸாத்⁴வீ பா⁴ர்யா வை தனயஸ்ய தே |
மாயாவதீதி விக்²யாதா ஷ²ம்ப³ரஸ்ய க்³ருஹோஷிதா ||2-108-24

மா ச தே ஷ²ம்ப³ரஸ்யேயம் பத்நீதி ப⁴வது வ்யதா² |
மன்மதே² து க³தே நாஷ²ம் க³தே சானங்க³தாம் புரா ||2-108-25

காமபத்னீ ந காந்தைஷா ஷ²ம்ப³ரஸ்ய ரதிப்ரியா |
மாயாரூபேண தம் தை³த்யம் மோஹயத்யஸக்ருச்சு²பா⁴ ||2-108-26

மாயையில் திறன்மிக்கச் சம்பரனை இவன் கொன்றுவிட்டான். தேவர்களைத் துன்புறுத்த அவன் பயன்படுத்தி வந்த மாயக் கலைகள் அனைத்தையும் இவன் கற்றிருக்கிறான்.(23) மங்கலமானவளும், கற்புநிறைந்தவளுமான இந்தப் பெண் உன் மகனின் மனைவியாவாள். அவள் இந்தக் காலம் வரை சம்பரனின் வீட்டில் மாயாவதி என்ற பெயரில் வாழ்ந்து வந்தாள்.(24) இவளை சம்பரனின் மனைவி என்று நினைத்து மனம் வருந்தாதே. காமனின் அன்புக்குரிய மனைவியான ரதியென நீ இவளை அறிவாயாக. முற்காலத்தில் மன்மதன், ஹரனின் கோபத்தீயால் எரிக்கப்பட்டு அங்கங்களற்றவன் ஆனதில் இருந்து இந்தக் காலம் வரை இந்த மங்கலப் பெண், தன் மாய சக்தியால் உண்டான தன்னைப் போன்ற தோற்றத்தின் மூலம் அந்தத் தைத்தியனை {சம்பரனை} எப்போதும் மயக்கத்தில் {மோகத்தில்} வைத்திருந்தாள்.(25,26)

ந சைஷா தஸ்ய கௌமாரே வஷே² திஷ்ட²தி ஷோ²ப⁴னா |
ஆத்மமாயாமயம் க்ருத்வா ரூபம் ஷ²ம்ப³ரமாவிஷ²த் ||2-108-27

பத்ன்யேஷா மம புத்ரஸ்ய ஸ்னுஷா தவ வராங்க³னா |
லோககாந்தஸ்யா ஸாஹாய்யம் கரிஷ்யதி மனோமயம் ||2-108-28

ப்ரவேஷ²யைனாம் ப⁴வனம் பூஜ்யாம் ஜ்யேஷ்டா²ம் ஸ்னுஷாம் மம |
சிரம் ப்ரநஷ்டம் ச ஸுதம் ப⁴ஜஸ்வ புனராக³தம் ||2-108-29

இந்த அழகிய பெண், இளமையில் கூடச் சம்பரனை நாடவில்லை; இவள், தன் மாய சக்திகளின் மூலம் தன்னைப் போன்ற வடிவத்தை உண்டாக்கி, சம்பரனிடம் அவளை அனுப்பி வந்தாள்.(27) ஓ! அழகிய பெண்ணே, என் மகனின் மனைவியும், உன்னுடைய மருமகளுமான இவள் காமனுக்குத் துணையாக இருந்து அவனை நிறைவடையச் செய்வாள்.(28) நமது மூத்த மருமகளான இவள் நம் அன்புக்குத் தகுந்தவளாவாள். இவளை உன் அறைக்கு அழைத்துச் சென்று, தொலைந்து போய்த் திரும்பி வந்திருக்கும் உன் மகனுக்கு உணவளிப்பாயாக” என்றான் {கிருஷ்ணன்}”.(29)

வைஷ²ம்பாயன உவாச
ஷ்²ருத்வா து வசனம் தே³வீ க்ருஷ்ணேனோதா³ஹ்ருதம் ததா³ |
ப்ரஹர்ஷ²மதுலம் லப்³த்⁴வா ருக்மிணீ வாக்யமப்³ரவீத் ||2-108-30

அஹோ த⁴ன்யதராஸ்மீதி வீரபுத்ரஸமாக³மாத் |
அத்³ய மே ஸப²ல꞉ காம꞉ பூர்ணோ மே(அ)த்³ய மனோரத²꞉ ||2-108-31

சிரப்ரநஷ்டபுத்ரஸ்ய த³ர்ஷ²னம் ப்ரியயா ஸஹ |
ஆக³ச்ச² புத்ர ப⁴வனம் ஸபா⁴ர்ய꞉ ப்ரவிவேஷ² ச ||2-108-32

வைசம்பாயனர் {ஜனமேயனிடம்}, “கிருஷ்ணனால் சொல்லப்பட்ட சொற்களைக் கேட்ட ருக்மிணி, பெருமகிழ்ச்சி அடைந்தவளாக,(30) “என் வீர மகன் திரும்பி வந்துவிட்டதால் நான் பேறுமிக்கவளானேன். என் பிறவி அருளப்பட்டது,(31) தொலைந்து போன என் மகன் தன் மனைவியுடன் திரும்பி வந்துவிட்டதால் என் நோக்கம் நிறைவேறியது. என் மகனே வா, உன் மனைவியுடன் இந்த அறைக்குள் நுழைவாயாக” என்றாள் {ருக்மிணி}.(32)

ததோ(அ)பி⁴வாத்³ய சரணௌ கோ³விந்த³ம் மாதரம் ச தாம் |
ப்ரத்³யும்ன꞉ பூஜயாமாஸ ஹலினம் ச மஹாப³லம் ||2-108-33

உத்தா²ப்ய தம் பரிஷ்வஜ்ய மூர்த்⁴ன்யுபாக்⁴ராய வீர்யவான் |
ப்ரத்³யும்னம் ப³லினாம் ஷ்²ரேஷ்ட²ம் கேஷ²வ꞉ பரவீரஹா ||2-108-34

ஸ்னுஷாம் சோத்தா²ப்ய தாம் தே³வீம் ருக்மிணீ ருக்மபூ⁴ஷணா |
பரிஷ்வஜ்யோபஸங்க்³ருஹ்ய ஸ்னேஹாத்³க³த்³க³த³பா⁴ஷிணீ ||2-108-35

ஸமேத்ய ப⁴வனம் பத்ன்யா ஷ²சீந்த்³ரமதி³திர்யதா² |
ப்ரவேஷ²யாமாஸ ததா³ ருக்மிணீ ஸுதமாக³தம் ||2-108-36

பிரத்யும்னன், தன் அன்னையையும், கோவிந்தனையும் வணங்கிவிட்டு, ஹலாதரனிடம் {பலராமனிடம்} பணிந்து தலை வணங்கினான்.(33) பகைவரின் போர்வீரர்களைக் கொல்பவனும், பெருஞ்சக்தி வாய்ந்தவனுமான கேசவன், பிரத்யும்னனை உயர்த்தி, ஆரத்தழுவிக் கொண்டு உச்சி முகர்ந்தான்.(34) ருக்மிணி தேவியும், அன்பால் தடைபட்ட சொற்களுடன் பொன்னால் அலங்கரிக்கப்பட்ட தன் மருமகளை உயர்த்தி, தன் மடியில் அமர்த்தி அவளை ஆரத் தழுவிக் கொண்டாள்.(35) அதிதி, சசியுடன் கூடிய தேவர்களின் மன்னனை வழிநடத்துவதைப் போலவே ருக்மிணியும் மனைவியுடன் திரும்பி வந்திருக்கும் தன் மகனை தன் அறைக்குள் அழைத்துச் சென்றாள்” என்றார் {வைசம்பாயனர்}.(36)

இதி ஷ்²ரீமஹாபா⁴ரதே கி²லேஷு ஹரிவம்ஷே² விஷ்ணுபர்வணி
ப்ரத்³யும்நாக³மனே(அ)ஷ்டாதி⁴கஷ²ததமோ(அ)த்⁴யாய꞉

————–—————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாஸ பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: