ஸ்ரீ விஷ்ணு பர்வம்–அத்யாயம் – 106–(ஷம்பரவதே ஸ்ரீ நாரதவாக்யம்)–

சம்பராசுரனுக்கும் பிரத்யும்னனுக்கும் இடையில் நடைபெற்ற போர்; பிரத்யும்னனின் முற்பிறவி வரலாறு–

வைஷ²ம்பாயன உவாச
ஷ²ம்ப³ரஸ்து தத꞉ க்ருத்³த⁴꞉ ஸூதமாஹ விஷா²ம்பதே |
ஷ²த்ருப்ரமுக²தோ வீர ரத²ம் மே வாஹய த்³ருதம் ||2-106-1

யாவதே³னம் ஷ²ரைர்ஹன்மி மம விப்ரியகாரகம் |
ததோ ப⁴ர்த்ருவச꞉ ஷ்²ருத்வா ஸூதஸ்தத்ப்ரியகாரக꞉ ||2-106-2

ரத²ம் ஸஞ்சோத³யாமாஸ சாமீகரவிபூ⁴ஷிதம் |
தம் த்³ருஷ்த்வா ரத²மாயாந்தம் ப்ரத்³யும்ன꞉ பு²ல்லலோசன꞉ ||2-106-3

ஸந்த³தே⁴ சாபமாதா³ய ஷ²ரம் கனகபூ⁴ஷிதம் |
தேனாஹனத்ஸுஸங்க்ருத்³த⁴꞉ கோபயஞ்ஷ²ம்ப³ரம் ரணே ||2-106-4

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “ஓ! மன்னா, அப்போது கோபத்தில் நிறைந்திருந்த சம்பரன் தன் தேரோட்டியிடம், “ஓ! வீரா, விரைவில் என் தேரை பகைவனிடம் {பிரத்யும்னனிடம்} கொண்டு செல்வாயாக.(1) எனக்குத் தீங்கிழைத்தவனைக் கணைகளால் நான் கொல்லப் போகிறேன்” என்றான்.

எப்போதும் அவனுக்கு நல்லதைச் செய்பவனான அந்தத் தேரோட்டி, தன் தலைவனின் சொற்களைக் கேட்டு,(2) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட அந்தத் தேரைச் செலுத்தினான். இனிமைமிக்கக் கண்களைக் கொண்ட பிரத்யும்னன், அந்தத் தேர் தன்னை அணுகுவதைக் கண்டு கோபத்துடன் தன் வில்லை எடுத்துக் கொண்டு பொற்கணைகளை அதில் பொருத்தினான். அதன் பிறகு அவன் அதைக் கொண்டு சம்பரனைத் தாக்கிப் போரில் தன் கோபத்தைத் தூண்டச் செய்தான்.(3,4)

ஹ்ருத³யே தாடி³தஸ்தேன தே³வஷ²த்ரு꞉ ஸுவிக்லவ꞉ |
ரத²ஷ²க்திம் ஸமாஷ்²ரித்ய தஸ்தௌ² ஸோ(அ)த² விசேதன꞉ ||2-106-5

ஸ சேதனாம் புன꞉ ப்ராப்ய த⁴னுராதா³ய ஷ²ம்ப³ர꞉ |
விவ்யாத⁴ கார்ஷ்ணிம் குபித꞉ ஸப்தபி⁴ர்நிஷி²தை꞉ ஷ²ரை꞉ ||2-106-6

தானப்ராப்தாஞ்ஷ²ரான்ஸோ(அ)த² ஸப்தபி⁴꞉ ஸப்ததா⁴ச்சி²னத் |
ஷ²ம்ப³ரம் ச ஜகா⁴நாத² ஸப்தத்யா நிஷி²தை꞉ ஷ²ரை꞉ ||2-106-7

புன꞉ ஷ²ரஸஹஸ்ரேண கங்கப³ர்ஹிணவாஸஸா |
அஹனச்ச²ம்ப³ரம் க்ரோதா⁴த்³தா⁴ராபி⁴ரிவ பர்வதம் ||2-106-8

ப்ரதி³ஷோ² விதி³ஷ²ஷ்²சைவ ஷ²ரதா⁴ராஸமாவ்ருதா |
[ஸ தி³ஷோ² விதி³ஷ²ஷ்²சைவ ஷ²ரதா⁴ரா ஸமாவ்ருணோத்] || 2-106-9

அந்த⁴காரீக்ரூதம் வ்யோம தி³னகர்தா ந த்³ருஷ்²யதே |
ததோ(அ)ந்த⁴காரமுத்ஸார்ய வைத்³யுதாஸ்த்ரேண ஷ²ம்ப³ர꞉ ||2-106-10

தேவர்களின் பகைவனான சம்பரன், அந்தக் கணைகளால் தன் முக்கிய அங்கங்கள் பிளக்கப்பட்டவனாகப் பெரிதும் கலக்கமடைந்தான். தன் தேரின் கொடிக்கம்பத்தைப் பிடித்தபடியே அவன் தன் நினைவை இழந்தான்.(5) சில கணங்களுக்குப் பிறகு தன் நினைவு மீண்ட அந்தத் தானவன் சம்பரன் கோபத்துடன் தன் வில்லை எடுத்துக் கொண்டு ஏழு கூரிய கணைகளால் கிருஷ்ணனின் மகனைத் தாக்கினான்.(6) பிரத்யும்னன், அந்தக் கணைகள் தன்னை அடையும் முன்பே ஏழு கணைகளைக் கொண்டு ஏழு பகுதிகளாக அவற்றைத் துண்டித்தான். பிறகு எழுபது கணைகளைச் சம்பரன் மீது ஏவினான்.(7) மழையால் மலையை மறைக்கும் மேகத்தைப் போல அவன் அழகிய சிறகுகளைக் {மயில் இறகுகளைக்} கொண்ட ஆயிரம் கணைகளால் சம்பரனை மீண்டும் தாக்கினான். திசைகள் அனைத்திலும் கணைகளால் மறைக்கப்பட்ட வானம் சூரியன் காணப்படாமல் இருளில் மறைந்தது.(8,9) இதைக் கண்ட சம்பரன், தன் வஜ்ரத்தால் {வைத்யுத ஆயுதத்தால்} அந்த இருளை விலக்கிவிட்டுப் பிரத்யும்னனுடைய தேரின் மீது கணைகளைப் பொழிந்தான்.(10)

ப்ரத்³யும்னஸ்ய ரதோ²பஸ்தே² ஷ²ரவர்ஷம் முமோச ஹ |
தத³ஸ்த்ரஜாலம் ப்ரத்³யும்ன꞉ ஷ²ரேணானதபர்வணா ||2-106-11

சிச்சே²த³ ப³ஹுதா⁴ ராஜந்த³ர்ஷ²யன்பாணிலாக⁴வம் |
ஹதே தஸ்மின்மஹாவர்ஷே ஷ²ராணாம் கார்ஷ்ணினா ததா³ ||2-106-12

த்³ருமவர்ஷம் முமோசாத² மாயயா காலஷ²ம்ப³ர꞉ |
த்³ருமவர்ஷோச்ச்²ரிதம் த்³ருஷ்ட்வா ப்ரத்³யும்ன꞉ க்ரோத⁴மூர்ச்சி²த꞉ ||2-106-13

ஆக்³னேயாஸ்த்ரம் முமோசாட² தேன வ்ருக்ஷானநாஷ²யத் |
ப⁴ஸ்மீபூ⁴தே வ்ருக்ஷவர்ஷே ஷி²லாஸங்கா⁴தமுத்ஸ்ருஜத் ||2-106-14

ப்ரத்³யும்னஸ்தம் து வாயவ்யை꞉ ப்ரோத்ஸாரயத ஸம்யுகே³ |
ததோ மாயாம் பராம் சக்ரே தே³வஷ²த்ரு꞉ ப்ரதாபவான் ||2-106-15

ஸிம்ஹான்வ்யாக்⁴ரான்வராஹாம்ஷ்²ச தரக்ஷூ²ந்ருக்ஷவானரான் |
வாரணான்வாரித³ப்ரக்²யான்ஹயானுஷ்ட்ரான்விஷா²ம்பதே ||2-106-16

முமோச த⁴னுராயம்ய ப்ரத்³யும்னஸ்ய ரதோ²பரி |
க³ந்த⁴ர்வாஸ்த்ரேண சிச்சே²த³ ஸர்வாம்ஸ்தான்க²ண்ட³ஷ²ஸ்ததா³ ||2-106-17

ஓ! மன்னா {ஜனமேஜயா}, பிரத்யுமனனும் தன் கர நளினத்தை வெளிப்படுத்தியபடியே தன்னுடைய கடுங்கணைகளால் அக்கணைகளைப் பல துண்டுகளாகத் துண்டித்தான்.(11) கிருஷ்ணனின் மகனால் கணைகளின் பெருமழை நிறுத்தப்பட்ட போது, அந்தக் காலசம்பரன் தன் மாயா சக்திகளின் மூலம் மரங்களைப் பொழிந்தான்.(12) அந்த மரங்களைக் கண்ட பிரத்யும்னன் கோபத்துடன் கூடியவனாக நெருப்பாயுதங்களை {ஆக்னேயாஸ்திரங்களை} ஏவி அவை அனைத்தையும் அழித்தான். மரங்கள் அனைத்தும் சாம்பலாக்கப்பட்ட போது சம்பரன் கல் மழையைப் பொழிந்தான்.(13,14) பிரத்யும்னன் அதை வாயு ஆயுதங்களின் {வாயவ்ய ஆயுதங்களின்} மூலம் போர்க்களத்தில் இருந்து அகற்றினான். ஓ! மன்னா, அப்போது தேவர்களின் பகைவனான சம்பரன்,(15) தன் வில்லை எடுத்துக் கொண்டு, பெரும் மாயக் காட்சியை உண்டாக்கி பிரத்யும்னனுடைய தேரின் மீது சிங்கங்கள், புலிகள், கரடிகள், குரங்குகள், குதிரைகள், ஒட்டகங்கள், கழுதைகள், மேகம் போன்ற யானைகள் ஆகியவற்றை வீசினான். எனினும் அந்தக் காமன், கந்தர்வ ஆயுதங்களால் அவற்றைப் பல துண்டுகளாகத் துண்டித்தான்.(16,17)

ப்ரத்³யும்னேன து ஸா மாயா ஹதா தாம் வீக்ஷ்ய ஷ²ம்ப³ர꞉ |
அன்யாம் மாயாம் முமோசாத² ஷ²ம்ப³ர꞉ க்ரோத⁴மூர்ச்சி²த꞉ ||2-106-18

க³ஜேந்த்³ரான்பி⁴ன்னவத³னான்ஷஷ்டிஹாயனயௌவனான் |
மஹாமாத்ரோத்தமாரூடா⁴ன்கல்பிதான்ரணகோவிதா³ன் ||2-106-19

தாமாபதந்தீம் மாயாம் து கார்ஷ்னி꞉ கமலலோசன꞉ |
ஸைம்ஹீம் மாயாம் ஸமுத்ஸ்ரஷ்டும் சக்ரே பு³த்³தி⁴ம் மஹாமனா꞉ ||2-106-20

ஸா ஸ்ருஷ்டா ஸிம்ஹமாயா து ரௌக்மிணேயேன தீ⁴மதா |
மாயா நாக³வதீ நஷ்டா ஆதி³த்யேனேவே ஷ²ர்வரீ ||2-106-21

நிஹிதாம் ஹஸ்திமாயாம் து தாம் ஸமீக்ஷ்ய மஹாஸுர꞉ |
அன்யாம் ஸம்மோஹினீம் மாயாம் ஸோ(அ)ஸ்ருஜத்³தா³னவோத்தம꞉ ||2-106-22

தாம் த்³ருஷ்ட்வா மோஹினீம் நாம மாயாம் மயவிநிர்மிதாம் |
ஸம்ஜ்ஞாஸ்த்ரேண து ப்ரத்³யும்னோ நாஷ²யாமாஸ வீர்யவான் ||2-106-23

பிரத்யும்னனால் தன் மாயை விலக்கப்பட்டதைக் கண்ட சம்பரன், கோபத்துடன்கூடியவனாக மற்றொரு அருஞ்செயலைச் செய்தான்.(18) அவன், அறுபது தலைகளை {அறுபது வயதைக்} கொண்டவையும், நன்கு அலங்கரிக்கப்பட்டவையும், போர்வெறி கொண்டவையும், திறன்மிகு மாவுத்தர்களால் செலுத்தப்படுபவையுமான இளம் யானைகளை ஏவினான்.(19) அந்த மாயப் படைப்புகள் தன் மீது பாய இருப்பதைக் கண்டவனும், தன் கொடியில் மீன் சின்னம் கொண்டவனுமான அந்தத் தாமரைக் கண்ணன் (பிரத்யும்னன்) மாயச் சிங்கங்களை உண்டாக்க விரும்பினான்.(20) ஓ! மன்னா, இரவை அகற்றும் சூரியனைப் போலவே ருக்மிணியின் நுண்ணறிவுமிக்க மகனால் உண்டாக்கப்பட்ட அந்த மாயச் சிங்கங்களும் அந்த மாய யானைகளை அழித்தன.(21) தானவர்களின் மன்னனான சம்பரன், தன் மாய யானைகள் கொல்லப்பட்டதைக் கண்டு ஸம்மோஹினி மாயையை உண்டாக்கினான்.(22) பெருஞ்சக்திவாய்ந்த பிரத்யும்னன், மயனின் படைப்பான (கவர்ச்சிமிக்க) அந்த மாய மோகினி சம்பரனால் ஏவப்பட்டதைக் கண்டு தன் சஞ்சன (நனவு) ஆயுதத்தால் அதைத் தடுத்தான்.(23)

ஷ²ம்ப³ரஸ்து தத꞉ க்ருத்³தோ⁴ ஹதயா மாயயா ததா³
ஸைம்ஹீம் மாயாம் மஹாதேஜா꞉ ஸோ(அ)ஸ்ருஜத்³தா³னவேஷ்²வர꞉ ||2-106-24

ஸிம்ஹானாபததோ த்³ருஷ்ட்வா ரௌக்மிணேய꞉ ப்ரதாபவான் |
அஸ்த்ரம் கா³ந்த⁴ர்வமாதா³ய ஷ²ரபா⁴னஸ்ருஜத்ததா³ |
தே(அ)ஷ்டாபதா³ ப³லோத³க்³ரா நக²த³ம்ஷ்ட்ராயுதா⁴ ரணே ||2-106-25

ஸிம்ஹான்வித்³ராவயாமாஸுர்வயுர்ஜலத⁴ரானிவ |
ஸிம்ஹான்வித்³ரவதோ த்³ருஷ்ட்வா மாயயாஷ்டபதே³ன வை ||2-106-26

பெருஞ்சக்திவாய்ந்த தானவ மன்னன் சம்பரன், தன் மாயை அழிக்கப்பட்டதைக் கண்டு பெருங்கோபம் கொண்டவனாகச் சிங்கமாயையை {மாயைகளின் மாயையை} வெளிப்படுத்தினான்.(24) பெருஞ்சக்திவாய்ந்த ருக்மிணியின் மகன், தன் மீது பாய இருக்கும் சிங்கங்களைக் கண்டு கந்தர்வ ஆயுதங்களை எடுத்துக் கொண்டு சரபங்களை[“எட்டுக் கால்களைக் கொண்டதும், குறிப்பாகப் பனி மூடிய பகுதிகளில் வசிப்பதுமான ஓர் அற்புத விலங்கு இஃது” – மஹாபாரதம் வன பர்வம் பகுதி 134, துரோண பர்வம் பகுதி 1, சாந்தி பர்வம் பகுதி 117, சாந்தி பர்வம் பகுதி 119 ஆகியவற்றில் சரபம் குறித்த குறிப்புகள் காணக்கிடைக்கின்றன.] உண்டாக்கினான்.(25) எட்டுக் கால்களையும், நகங்களையும், பற்களையும் கொண்ட அந்தச் சரபங்கள், மேகங்களைச் சிதறடிக்கும் காற்றைப் போல அந்தச் சிங்கங்களை விரட்டின. எட்டுக் கால்களைக் கொண்ட மாய விலங்குகளால் சிங்கங்கள் விரட்டப்படுவதைக் கண்ட சம்பரன், அவற்றைக் கொல்வதற்கான வழிமுறைகளைக் குறித்துச் சிந்திக்கத் தொடங்கினான்.(26)

ஷ²ம்ப³ரஷ்²சிந்தயாமாஸ கத²மேனம் நிஹன்மி வை |
அஹோ மூர்க²ஸ்வபா⁴வோ(அ)ஹம் யன்மயா ந ஹத꞉ ஷி²ஷு²꞉ ||2-106-27

ப்ராப்தயௌவனதே³ஹஸ்து க்ருதாஸ்த்ரஷ்²சாபி து³ர்மதி꞉ |
தத்கத²ம் நிஹநிஷ்யாமி ஷ²த்ரும் ரணஷி²ர꞉ஸ்தி²தம் ||2-106-28

மாயா ஸா திஷ்ட²தே தீவ்ரா பன்னகீ³ நாம பீ⁴ஷணா |
த³த்தா மே தே³வதே³வேன ஹரேணாஸுரகா⁴தினா ||2-106-29

தாம் ஸ்ருஜாமி மஹாமாயாமாஷீ²விஷஸமாகுலாம் |
தயா த³ஹ்யேத து³ஷ்டாத்மா ஹ்யேஷ மாயாமயோ ப³லீ ||2-106-30

அவன் {சம்பரன்}, “ஐயோ, நான் எப்படிப்பட்ட மூடனாக இருந்திருக்கிறேன். நான் ஏன் இவன் குழந்தையாக இருக்கும்போதே இவனைக் கொல்லாதிருந்தேன்?(27) இப்போது இந்தத் தீய மனம் கொண்டவன் இளமையை அடைந்து ஆயுதங்கள் அனைத்திலும் தேர்ச்சி பெற்றிருக்கிறான். போரின் முகப்பில் நிற்கும் இந்தப் பகைவனை நான் எவ்வாறு கொல்லப் போகிறேன்?(28) அசுரர்களை அழிப்பவனான பெருந்தேவன் ஹரனால் எனக்குப் போதிக்கப்பட்டதும், {பந்நகீ என்றழைக்கப்படுவதும்} பாம்புகளாலானதுமான அந்தப் பயங்கர மாயையை நான் மட்டுமே அறிவேன்.(29) பெருஞ்சக்திவாய்ந்தவனும், தீயவனுமான இந்த மாயாபலி அதன் மூலம் எரிக்கப்படுவானென நான் நினைக்கிறேன்” என்று நினைத்தான்.(30)

ஸா ஸ்ருஷ்டா பன்னகீ³ மாயா விஷஜ்வாலாஸமாகுலா |
தயா பன்னக³மய்யா து ஸரத²ம் ஸஹவாஜினம் ||2-106-31

ஸஸூதம் ஸ ஹி ப்ரத்³யும்னம் ப³ப³ந்த⁴ ஷ²ரப³ந்த⁴னை꞉ |
ப³த்⁴யமானம் ததா³ த்³ருஷ்ட்வா ஆத்மானம் வ்ருஷ்ணிவம்ஷ²ஜ꞉ ||2-106-32

மாயாம் ஸஞ்சிந்தயாமாஸ ஸௌபர்ணீம் ஸர்பநாஷி²னீம் |
ஸா சிந்திதா மஹாமாயா ப்ரத்³யும்னேன மஹாத்மனா ||2-106-33

ஸுபர்ணா விசரந்தி ஸ்ம ஸர்பா நஷ்டா மஹாவிஷா꞉ |
ப⁴க்³னாயாம் ஸர்பமாயாயாம் ப்ரஷ²ம்ஸந்தி ஸுராஸுரா꞉ || 2-106-34

ஸாது⁴ வீர மஹாபா³ஹோ ருக்மிண்யானந்த³வர்த⁴ன |
யத்த்வயா த⁴ர்ஷிதா மாயா தேன ஸ்ம பரிதோஷிதா꞉ ||2-106-35

இவ்வாறு நினைத்த சம்பரன், எரியும் நஞ்சு நிறைந்த பாம்புகளை வெளிப்படுத்தியதும் அந்த மாயையானது தேர், குதிரைகள் ஆகியவற்றுடனும், தேரோட்டியுடன் பிரத்யும்னனையும் சேர்த்து கட்டுகளால் கட்டியது.(31) பிரத்யும்னன், மாயப் பாம்புகளால் இவ்வாறு கட்டப்பட்டுத் தான் கொல்லப்படப்போவதை நினைத்து பாம்புகளைக் கொல்லவல்ல கருட மாயையை {சௌபர்ணியை} நினைத்தான்.(32) உயரான்ம பிரத்யுமனன் அதை நினைத்ததும் கருடர்கள் பாயத் தொடங்கி நஞ்சுமிக்கப் பாம்புகளை அழித்தன.(33) அந்தப் பாம்புகளின் மாயை விலக்கப்பட்டபோது, தேவர்களும், அசுரர்களும், “நன்று செய்தாய், நன்றாகச் செய்தாய்.(34) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, ருக்மிணியின் மகனே, உன்னால் அந்த மாயை விலக்கப்பட்டதில் நாங்கள் பெரிதும் மகிழ்கிறோம்” என்று சொல்லி அவனைத் துதித்தனர்.(35)

ஹதாயாம் ஸர்பமாயாயாம் ஷ²ம்ப³ரஷ்²சிந்தயத்புன꞉ |
அஸ்தி மே காலத³ண்டா³போ⁴ முத்³க³ரோ ஹேமபூ⁴ஷித꞉ ||2-106-36

தமப்ரதிஹதம் யுத்³தே⁴ தே³வதா³னவமானவை꞉ |
புரா யோ மம பார்வத்யா த³த்த꞉ பரமதுஷ்டயா ||1-106-37

க்³ருஹாண ஷ²ம்ப³ரேமம் த்வம் முத்³க³ரம் ஹேமபூ⁴ஷிதம் |
மயா ஸ்ருஷ்டம் ஸ்வதே³ஹே வை தப꞉ பரமது³ஷ்²சரம் ||2-106-38

மாயாந்தகரணம் நாம ஸர்வாஸுரவிநாஷ²னம் |
அனேன தா³னவௌ ரௌத்³ரௌ ப³லினௌ கம்அரூபிணாஉ ||2-106-39

ஷு²ம்ப⁴ஷ்²சைவ நிஷு²ம்ப⁴ஷ்²ச ஸக³ணௌ ஸூதி³தௌ மயா |
ப்ராணஸம்ஷ²யமாபன்னே த்வயா மோக்ஷ்ய꞉ ஸ ஷ²த்ரவே ||2-106-40

இத்யுக்த்வா பார்வதீ தே³வீ தத்ரைவாந்தரதீ⁴யத |
தத³ஹம் முத்³க³ரம் ஷ்²ரேஷ்ட²ம் மோசயிஷ்யாமி ஷ²த்ரவே ||2-106-41

ஓ! ஜனமேஜயா, மாயப்பாம்புகள் விலக்கப்பட்டதும் சம்பரன் மீண்டும், “போர்க்களத்தில் தேவர்களாலும், அசுரர்களாலும் தாக்குப்பிடிக்க முடியாததும், யம தண்டத்திற்கு ஒப்பானதும், பொன்னாலானதுமான ஒரு தண்டம் என்னிடம் இருக்கிறது. முற்காலத்தில் உமாதேவி மகிழ்ச்சியுடன் அதைக் கொடுத்து,(36,37) என்னிடம், “ஓ! சம்பரா, பொன்னலான இந்தத் தண்டத்தை எடுத்துக் கொள்வாயாக. அனைத்து வகை மாயைகளை அகற்ற வல்லதும், அசுரர்கள் அனைவரையும் கொல்லவல்லதுமான இந்தத் தண்டத்தைக் கடுந்தவப் பயிற்சிகளின் மூலம் என் உடலில் இருந்து உண்டாக்கினேன்.(38,39) வானுலாவிகளும், பயங்கரம் நிறைந்த தானவர்களுமான சும்பன், நிசும்பன் ஆகியோரையும் அவர்களின் தொண்டர்களையும் இந்தத் தண்டத்தைக் கொண்டே யமனுலகு அனுப்பி வைத்தேன்.(40) உன் உயிர் பேராபத்தில் இருக்கும்போது இந்தத் தண்டத்தை உன் பகைவனின் மீது நீ வீசுவாயாக” என்றாள் {உமை}” என்று நினைத்தான் {சம்பரன்}.(41)

தஸ்ய விஜ்ஞாய சித்தம் து தே³வராஜோ(அ)ப்⁴யபா⁴ஷத |
க³ச்ச² நாரத³ ஷீ²க்⁴ரம் த்வம் ப்ரத்³யும்னஸ்ய ரத²ம் ப்ரதி ||2-106-42

ஸம்போ³த⁴ய மஹாபா³ஹும் பூர்வஜாதிம் ச மோக்ஷய |
வைஷ்ணவாஸ்த்ரம் ப்ரயச்சா²ஸ்மை வதா⁴ர்த²ம் ஷ²ம்ப³ரஸ்ய ச ||2-106-43

அபே⁴த்³யம் கவசம் சாஸ்ய ப்ரயச்சா²ஸுரஸூத³ன |
ஏவமுக்தோ மக⁴வதா நாரத³꞉ ப்ரயயௌ த்வரம் ||2-106-44

அவனது நோக்கத்தை அறிந்த தேவர்களின் மன்னன் {இந்திரன்} நாரதரிடம், “பெருங்கரம் கொண்ட பிரத்யும்னனின் தேரை விரைவில் அணுகி,(42) அவனது முற்பிறவியைக் குறித்து அவனுக்கு நினைவு படுத்துவீராக. அசுரரைக் கொல்பவனான அவனுக்குத் துளைக்கப்பட முடியாத இந்தக் கவசத்தையும், வைஷ்ணவ ஆயுதங்களையும் கொடுப்பீராக” என்றான். மகவானால் {இந்திரனால்} இவ்வாறு சொல்லப்பட்ட நாரதர் விரைந்து சென்றார்.(43,44)

ஆகாஷே²(அ)தி⁴ஷ்டி²தோ(அ)வோசன்மகரத்⁴வஜகேதனம் |
குமாரம் பஷ்²ய மாம் ப்ராப்தம் தே³வக³ந்த⁴ர்வநாரத³ம் |
ப்ரேஷிதம் தே³வராஜேன தவ ஸம்போ³த⁴னாய வை ||2-106-45

ஸ்மர த்வம் பூர்வகம் பா⁴வம் காமதே³வோ(அ)ஸி மானத³ |
ஹரகோபானலாத்³த³க்³த⁴ஸ்தேனானங்க³ இஹோச்யதே ||2-106-46

த்வம் வ்ருஷ்ணிவம்ஷ²ஜாதோ(அ)ஸி ருக்மிண்யா க³ர்ப⁴ஸம்ப⁴வ꞉ |
ஜாதோ(அ)ஸி கேஷ²வேன த்வம் ப்ரத்³யும்ன இதி கீர்த்யஸே ||2-106-47

ஆஹ்ருத்ய ஷ²ம்ப³ரேண த்வமிஹானீதோ(அ)ஸி மானத³ |
ஸப்தராத்ரே த்வஸம்பூர்ணே ஸூதிகாகா³ரமத்⁴யத꞉ ||2-106-48

வதா⁴ர்த²ம் ஷ²ம்ப³ரஸ்ய த்வம் ஹ்ரியமாணோ ஹ்யுபேக்ஷித꞉ |
கேஷ²வேன மஹாபா³ஹோ தே³வகார்யார்த²ஸித்³த⁴யே ||2-106-49

அவர் வானத்தில் நின்றவாறே பிரத்யும்னனிடம், “ஓ! இளவரசே, தெய்வீகப் பாடகனான நாரதனாக என்னை அறிவாயாக. உனக்கு நினைவுறுத்துவதற்காகத் தேவர்களின் மன்னன் என்னை இங்கே அனுப்பினான்.(45) ஓ! கௌரவத்தை அளிப்பவனே, உன் முற்பிறவியை நினைவுகூர்வாயாக. ஓ! வீரா, நீயே காமன் {மன்மதன்}. ஹரனின் கோபத்தால் சாம்பலான நீ அங்கங்களற்றவன் ஆனாய்.(46) விருஷ்ணி குலத்தில், ருக்மிணியிடம் கேசவனால் பெறப்பட்டு, இங்கே பிரத்யும்னன் என்ற பெயரில் நீ அறியப்படுகிறாய்.(47) ஏழாம் இரவு முடிவடைவதற்கு முன்பே பேற்றறையில் {பிரசவ அறையில்} இருந்து சம்பரன் உன்னை அபகரித்துச் சென்றான்.(48) ஓ! பெருங்கரம் கொண்ட வீரா, தேவர்களின் பெரும்பணியான சம்பரனின் அழிவின் நிமித்தமாகவே அவன் உன்னைக் கடத்திச் சென்றபோதும் கேசவன் அவனை அலட்சியம் செய்தான்.(49)

யைஷா மாயாவதீ நாம பா⁴ர்யா வை ஷ²ம்ப³ரஸ்ய து |
ரதிம் தாம் வித்³தி⁴ கல்யாணீம் தவ பா⁴ர்யாம் புராதனீம் ||2-106-50

தவ ஸம்ரக்ஷணார்தா²ய ஷ²ம்ப³ரஸ்ய க்³ருஹே(அ)வஸத் |
மாயாம் ஷ²ரீரஜாம் தஸ்ய மோஹனார்த²ம் து³ராத்மன꞉ ||2-106-51

ரதே꞉ ஸம்பாத³னார்தா²ய ப்ரேஷயத்யநிஷ²ம் ததா³ |
ஏவம் ப்ரத்³யும்னம் பு³த்³த்⁴வா வை தத்ர பா⁴ர்யா ப்ரதிஷ்டி²தா ||2-106-52

ஹத்வா தம் ஷ²ம்ப³ரம் வீர வைஷ்ணவாஸ்த்ரேண ஸம்யுகே³ |
க்³ருஹ்ய மாயாவதீம் பா⁴ர்யாம் த்³வாரகாம் க³ந்துமர்ஹஸி ||2-106-53

க்³ருஹாண வைஷ்ணவம் சாஸ்த்ரம் கவசம் ச மஹாப்ரப⁴ம் |
ஷ²க்ரேண தவ ஸங்க்³ருஹ்ய ப்ரேஷிதம் ஷ²த்ருஸூத³ன ||2-106-54

மாயாவதி என்ற பெயரில் சம்பரனின் துணைவியாக இருப்பவளே உன் முன்னாள் மனைவியான மங்கலப் பெண் ரதி என்று அறிவாயாக.(50) அவள் {மாயாவதி}, {உன் பாதுகாப்புக்காகவும்}, அந்தத் தீய தானவனிடம் மோகத்தையும், மறதியையும் உண்டாக்கவும் தன் மேனியில் இருந்து மாயையின் மூலம் உண்டாக்கப்பட்ட ரதியை அவனிடம் அனுப்புகிறாள்.(51,52) ஓ! பிரத்யும்னா, வைஷ்ணவ ஆயுதங்களால் போர்க்களத்தில் சம்பரனைக் கொன்றுவிட்டு, உன் மனைவியான மாயாவதியுடன் துவாரகைக்குச் செல்வாயாக.(53) ஓ! பகைவரைக் கொல்பவனே, இந்த வைஷ்ண ஆயுதத்தையும், பேரொளிமிக்க இந்தக் கவசத்தையும் பெற்றுக்கொள்வாயாக. இவற்றைத் தேவர்களின் மன்னன் உனக்காக அனுப்பி வைத்திருக்கிறான்.(54)

ஷ்²ருணு மே ஹ்யபரம் வாக்யம் க்ரியதாமவிஷ²ங்கயா |
அஸ்ய தே³வரிபோஸ்தாத முத்³க³ரோ நித்யமூர்ஜித꞉ ||2-106-55

பார்வத்யாம் பரிதுஷ்டாயாம் த³த்த꞉ ஷ²த்ருனிப³ர்ஹண꞉ |
அமோக⁴ஷ்²சைவ ஸங்க்³ராமே தே³வதா³னவமானவை꞉ ||2-106-56

தத³ஸ்த்ரப்ரவிகா⁴தார்த²ம் தே³வீம் த்வம் ஸ்மர்துமர்ஹஸி |
ஸ்தவ்யா சைவ நமஸ்யா ச மஹாதே³வீ ரணோத்ஸுகை꞉ ||2-106-57

தத்ர வை க்ரியதாம் யத்ன꞉ ஸங்க்³ராமே ரிபுணா ஸஹ |
இத்யுக்த்வா நாரதோ³ வாக்யம் ப்ரயயௌ யத்ர வாஸவ꞉ ||2-106-58

என்னுடைய மற்றொரு சொல்லையும் கேட்டு அச்சமில்லாமல் அதைச் செயல்படுத்துவாயாக. பெருஞ்சக்திவாய்ந்ததும், பகைவர் அனைவரையும் கலங்கடிக்கவல்லதுமான ஒரு தண்டத்தைத் தேவர்களின் பகைவனான இவனிடம் பார்வதி மகிழ்வுடன் கொடுத்திருக்கிறாள்; தேவர்களிலோ, தானவர்களிலோ, மனிதர்களிலோ எவராலும் போரில் அதைத் தாக்குப்பிடிக்க முடியாது.(55,56) அந்த ஆயுதத்திற்கு எதிர்வினையாற்ற நீ அந்தத் தேவியை நினைக்க வேண்டும். அதையுந்தவிர, போரிடும் விருப்பமுள்ள எவரும் அந்தப் பெருந்தேவியை எப்போதும் வணங்கி அவளது மகிமைகளைத் துதிக்க வேண்டும்.(57) நீ உன் பகைவனுடன் போரிடும்போது கவனமாக இருப்பாயாக” என்றார் {நாரதர்}. நாரதர் இதைச் சொல்லிவிட்டு வாசவன் {இந்திரன்} இருக்குமிடத்திற்குத் திரும்பிச் சென்றார்” என்றார் {வைசம்பாயனர்}.(58)

இதி ஷ்²ரீமஹாபா⁴ரதே கி²லேஷு ஹரிவம்ஷே² விஷ்ணுபர்வணி
ஷ²ம்ப³ரவதே⁴ நாரத³வாக்யே ஷட³தி⁴கஷ²ததமோ(அ)த்⁴யாய꞉

————–—————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாஸ பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: