ஸ்ரீ விஷ்ணு பர்வம்–அத்யாயம் – 105–(ஸ்ரீ பிரத்யும்நேந ஷம்பர ஸைந்ய வித்ராவணம்)–சம்பரன் மகன்களுடன் போரிட்ட ஸ்ரீ பிரத்யும்னன் |–

சம்பரனின் நூறு மகன்களைக் கொன்ற பிரத்யும்னன்; கேதுமாலி, துர்தரன், சத்ருஹந்தன், பிரமர்த்தனன் ஆகியோரின் அழிவு

வைஷ²ம்பாயந உவாச
தத꞉ ப்ரவ்ருத்³த⁴ம் யுத்³த⁴ம் து துமுலம் லோமஹர்ஷணம் |
ஷ²ம்ப³ரஸ்ய து புத்ராணாம் ருக்மிண்யா நந்த³நஸ்ய ச ||2-105-1

தத꞉ க்ருத்³தா⁴ மஹாதை³த்யா꞉ ஷ²ரஷ²க்திபரஷ்²வதா⁴ன் |
சக்ரதோமரகுந்தாநி பு⁴ஷு²ண்டீ³ர்முஸலாநி ச ||2-105-2

யுக³பத்பாதயந்தி ஸ்ம ப்ரத்³யும்நோபரி வேகி³தா꞉ |
கார்ஷ்²ணாயநிஸ்து ஸங்க்ருத்³த⁴꞉ ஸர்வாஸ்த்ரத⁴நுஷஷ்²ச்யுதை꞉ ||2-105-3

ஏகைகம் பஞ்சபி⁴꞉ க்ருத்³த⁴ஷ்²சிச்சே²த³ ரணமூர்த⁴நி |
புநரேவாஸுரா꞉ க்ருத்³தா⁴꞉ ஸர்வே தே க்ருதநிஷ்²சயா꞉ ||2-105-4

வவ்ருஷு꞉ ஷ²ரஜாலாநி ப்ரத்³யும்நவத⁴காங்க்ஷயா |
தத꞉ ப்ரகுபிதோ(அ)நங்கோ³ த⁴நுராதா³ய ஸத்வர꞉ ||2-105-5

ஷ²ம்ப³ரஸ்ய ஜகா⁴நாஷு² த³ஷ² புத்ராந்மஹௌஜஸ꞉ |
ததோ(அ)பரேண ப⁴ல்லேந குபித꞉ கேஷ²வாத்மஜ꞉ ||2-105-6

சிச்சே²தா³ஷு² ஷி²ரஸ்தஸ்ய சித்ரஸேநஸ்ய வீர்யவான் |
ததஸ்தே ஹதஷே²ஷாஸ்து ஸமேத்ய ஸமயுத்³த்⁴யத ||2-105-7

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “அதன்பிறகு ருக்மிணியின் மகனுக்கும், சம்பரனின் மகன்களுக்கும் இடையில் மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் வகையில் போர் நடந்தது.(1) கோபத்தில் நிறைந்திருந்த அந்தப் பெருந்தைத்தியர்கள், பிரத்யும்னன் மீது கணைகளையும், சக்திகளையும், பராசங்களையும், தோமரங்களையும், குண்டங்களையும், புசுண்டிகளையும், கதாயுதங்களையும் அடுத்தடுத்து பொழியத் தொடங்கினர்.(2) கோபத்தில் தூண்டப்பட்டிருந்த கிருஷ்ணனின் மகனும் போரில் தன் வில்லில் இருந்து ஏவப்பட்ட ஐந்து ஐந்து கணைகளால் அவர்கள் ஒவ்வொருவரையும் துளைத்தான்.(3) இதனால் பெருங்கோபம் கொண்டவர்களும், உறுதிமிக்கவர்களுமான அந்த அசுரர்கள், பிரத்யும்னனைக் கொல்வதற்காக ஆயுதங்களின் வலைப்பின்னலை உண்டாக்கினர்.(4) கோபத்தால் தூண்டப்பட்ட அனங்கனும் {மன்மதனான பிரத்யும்னனும்} தன் வில்லை எடுத்துக் கொண்டான். அவன் பெருஞ்சக்திவாய்ந்த சம்பரனின் மகன்கள் பத்து பேரைக் கொன்றான்.(5) பெருஞ்சக்திவாய்ந்த கேசவனின் மகன், அடுத்தக் கணத்தில் கோபத்தில் நிறைந்தவனாக ஒரு பல்லத்தால் சித்திரசேனனின் தலையை அறுத்தான்.(6) சம்பரனின் எஞ்சிய மகன்கள் போர் வெறியோடு விரைந்து கணைகளை ஏவத் தொடங்கினர். அனங்கனைக் கொல்வதற்காக அவர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் கணைகளை ஏவிப் போரிட்டனர். (7)

ஷ²ரவர்ஷம் விமுஞ்சந்தோ ஹ்யப்⁴யதா⁴வஞ்ஜிகா⁴ம்ஸிதும் |
தத꞉ ஸந்தா⁴ய பா³ணாம்ஸ்தே விமுஞ்சந்தோ ரணோத்ஸுகா꞉ ||2-105-8

க்ரீட³ந்நிவ மஹாதேஜா꞉ ஷி²ராம்ஸ்யேஷாமபாதயத் |
நிஹத்ய ஸமரே ஸர்வாஞ்ச²தமுத்தமத⁴ந்விநாம் ||2-105-9

ப்ரத்³யும்ந꞉ ஸமராகாங்க்ஷீ தஸ்தௌ² ஸங்க்³ராமமூர்த⁴நி |
ஹதம் புத்ரஷ²தம் ஷ்²ருத்வா ஷ²ம்ப³ர꞉ க்ரோத⁴மாத³தே⁴ ||2-105-10

ஸூதம் ஸஞ்சோத³யாமாஸ ரத²ம் மே ஸம்ப்ரயோஜய |
ராஜ்ஞோ வாக்யம் நிஷா²ம்யாத² ப்ரணம்ய ஷி²ரஸா பு⁴வி ||2-105-11

ஸஸைந்யம் நோத³யாமாஸ ரத²ம் ஸ ஸுஸமாஹிதம் |
யுக்தம்ருஷ்யஸஹஸ்ரேண ஸர்பராஜஸகேதநம் ||2-105-12

ஷா²ர்தூ³லசர்மஸம்விஷ்டம் கிங்கிணீஜலபாலிநம் |
ஈஷா²ம்ருக³க³ணாகீர்ணம் பங்க்திப⁴க்திவிராஜிதம் ||2-105-13

தாராசித்ரபிநத்³தா⁴ங்க³ம் ஸ்வர்ணகூப³ரபூ⁴ஷிதம் |
ஸுபதாகமஹோச்ச்²ராயம் ம்ருக³ராஜோக்³ரகேதநம் ||2-105-14

ஸுவிப⁴க்தவரூத²ம் ச லோஹேஷாவஜ்ரகூப³ரம் |
மந்தா³ரோத³க்³ரஷி²க²ரம் சாருசாமரபூ⁴ஷிதம் ||2-105-15

நக்ஷத்ரமாலாபிஹிதம் ஹேமத³ண்ட³ஸமாஹிதம் |
விராஜமாநம் ஷ்²ரீமந்தமாரோஹச்ச²ம்ப³ரோ ரத²ம் ||2-105-16

மறுபுறம், பெருஞ்சக்திவாய்ந்த கிருஷ்ணனின் மகன், விளையாடிக் கொண்டிருப்பவனைப் போல அவர்களின் தலைகளைத் துண்டித்துக் கொண்டிருந்தான்.(8) இவ்வாறு, பெரும் வில்லாளிகளான சம்பரனின் நூறு மகன்களையும் கொன்றுவிட்டு மேலும் போரிடும் விருப்பத்தோடு போர்க்களத்தில் நின்று கொண்டிருந்தான். சம்பரன், தன்னுடைய நூறு மகன்களும் கொல்லப்பட்டதைக் கேட்டுக் கோபத்தில் நிறைந்தான்.(9,10) அவன் தன்னுடைய சாரதியிடம் தன் தேரை ஆயத்தம் செய்யச் சொன்னான். அந்தச் சாரதியும் மன்னனின் ஆணையை ஏற்றுக் கொண்டு தலையால் தரையைத் தீண்டி அவனை வணங்கிவிட்டு அங்கே தேரைக் கொண்டு வந்து,(11) படைவீரர்களைத் தயாராகும்படி கேட்டுக் கொண்டான். அந்தத் தேரானது, பாம்புகளைக் கயிறுகளாகக் கொண்டு கட்டப்பட்ட ஆயிரம் கரடிகளால்[மான்கள்] இழுக்கப்பட்டது.(12) அது புலித்தோலால் மறைக்கப்பட்டு, சிறுமணிகளால் அமைந்த வலைப்பின்னலால் அலங்கரிக்கப்பட்டு, ஓநாய்களால் நிறைந்திருந்தது.(13) அடுத்தடுத்துப் பத்துப் படிக்கட்டுகளைக் கொண்டிருந்த அதில் நட்சத்திரங்கள் வரையப்பட்டு, பொன்னால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதில் பொருத்தப்பட்டிருந்த கொடிக்கம்பத்தில், சிங்கத்தின் வடிவங்கள் வரையப்பட்ட கொடிகள் அழகூட்டிக் கொண்டிருந்தன.(14) அந்தத் தேரைச் சுற்றிலும் மரத்தாலான மோதற்றடைகளும் {காக்கும் கவசங்களும்}, இரும்பு அச்சாணிகளும் இருந்தன. மந்தர மலையின் சிகரத்தைப் போல உயரமாகவும், வரிசையான அழகிய சௌரிகளாலும், நட்சத்திரங்களால் மறைக்கப்பட்டுப் பொன்னாலான கொடிக்கம்பங்களால் அஃது அலங்கரிக்கப்பட்டிருந்தது.(15,16)

காஞ்சநம் சித்ரஸந்நாஹம் த⁴நுர்க்³ருஹ்ய ஷ²ராம்ஸ்ததா² |
ப்ரஸ்தி²த꞉ ஸமராகாங்க்ஷீ ம்ருத்யுநா பரிசோதி³த꞉ ||2-105-17

சதுர்பி⁴꞉ ஸசிவை꞉ ஸார்த⁴ம் ஸைந்யேந மஹதா வ்ருத꞉ |
து³ர்த⁴ர꞉ கேதுமாலீ ச ஷ²த்ருஹந்தா ப்ரமர்த³ந꞉ ||2-105-18

ஏதை꞉ பரிவ்ருதோ(அ)மாத்யைர்யுயுத்ஸு꞉ ப்ரஸ்தி²தோ ரணே |
த³ஷ²நாக³ஸஹஸ்ராணி ரதா²நாம் த்³வே ஷ²தே ததா² ||2-105-19

ஹயாநாம் சாஷ்டஸாஹஸ்ரை꞉ ப்ரயுதைஷ்²ச பதா³திநாம் |
ஏதை꞉ பரிவ்ருதோ யோதை⁴꞉ ஷ²ம்ப³ர꞉ ப்ரயயௌ ததா³ ||2-105-20

ப்ரயாதஸ்ய து ஸஞ்க்³ராமே உத்பாதா ப³ஹவோ(அ)ப⁴வன் |
க்³ருத்⁴ரசக்ராகுலே வ்யோம்நி ஸந்த்⁴யாகாராப்⁴ரநாதி³தம் ||2-105-21

க³ர்ஜந்தி பருஷம் மேகா⁴ நிர்கா⁴தஷ்²சாம்ப³ராத்பதத் |
ஷி²வா விநேது³ரஷி²வம் ஸைந்யம் ஸங்காலயந்மஹத் ||2-105-22

சம்பரன், காலனால் தூண்டப்பட்டவனைப் போலப் பொற்கவசம் பூண்டு, வில்லையும் கணைகளையும் எடுத்துக் கொண்டு, தன்னுடைய படைவீரர்களுடனும், நான்கு அமைச்சர்களுடனும் போருக்குப் புறப்பட்டுச் சென்றான்.(17) துர்தரன், கேதுமாலி, சத்ருஹந்தன், பிரமர்த்தனன் என்ற நான்கு அமைச்சர்கள் சூழப் போரிடும் விருப்பத்துடன் சம்பரன் புறப்பட்டுச் சென்றான்.(18) அந்தச் சம்பரன், அனைத்துப் பக்கங்களிலும் பல்வேறு நிமித்தங்கள் தோன்றிக் கொண்டிருந்த போர்க்களத்திற்கு இருநூறு தேர்கள், இரண்டாயிரம் யானைகள்,(19) எட்டாயிரம் குதிரைகள், பத்து லட்சம் காலாட்படை வீரர்களுடன் சென்றான்.(20) {அவன் போருக்குப் புறப்பட்டுச் செல்லும்போது எரிகொள்ளிகள் விழுந்தன. வானத்தில் கழுகுகள் பறந்தன. மாலைப் பொழுதைப் போல முழங்கும் மேகங்களால் வானம் நிறைந்திருந்தது.(21) மின்னல் தோன்றியது. மேகங்கள் கடும் ஒலிகளை வெளியிட்டன}. நரிகள் ஊளையிட்டு அந்தப் பெரும்படையைப் பீதியில் பீடிக்கச் செய்தது.(22)

த்⁴வஜஷீ²ர்ஷே(அ)பதத்³க்³ருத்⁴ர꞉ காஞ்க்ஷந்வை தா³நவாஸ்ருஜம் |
ரதா²க்³ரே பதிதஷ்²சாஸ்ய கப³ந்தோ⁴ பு⁴வி த்³ருஷ்²யதே ||2-105-23

சீசீகூசீதி வாஷா²ந்தி ஷ²ம்ப³ரஸ்ய ரதோ²பரி |
ஸ்வர்பா⁴நுக்³ரஸ்த ஆதி³த்ய꞉ பரிகை⁴꞉ பரிவேஷ்டித꞉ ||2-105-24

ஸ்பு²ரதே நயநம் சாஸ்ய ஸவ்யம் ப⁴யநிவேத³நம் |
பா³ஹு꞉ ப்ரகம்பதே ஸவ்ய꞉ ப்ராஸ்க²லந்ரத²வாஜிந꞉ ||2-105-25

த்⁴வாங்க்ஷோ மூர்த்⁴நி நிபதித꞉ ஷ²ம்ப³ரஸ்ய ஸுராரிண꞉ |
வவர்ஷ ருதி⁴ரம் தே³வ꞉ ஷ²ர்கராங்கா³ரமிஷ்²ரிதம் ||2-105-26

உல்காபாதஸஹஸ்ராணி நிபேதூ ரணமூர்த⁴நி |
ப்ரதோதோ³ ந்யபதத்³த⁴ஸ்தாத்ஸாரதே²ர்ஹயயாயிந꞉ ||2-105-27

ஏதாநசிந்தயித்வா து உத்பாதாந்ஸமுபஸ்தி²தான் |
ப்ரயயௌ ஷ²ம்ப³ர꞉ க்ருத்³த⁴꞉ ப்ரத்³யும்நவத⁴காங்க்ஷயா ||2-105-28

பே⁴ரீம்ருத³ங்க³ஷ²ங்கா²நாம் பணவாநகது³ந்து³பே⁴꞉ |
யுக³பந்நாத்³யமாநாநாம் ப்ருதி²வீ ஸமகம்பத ||2-105-29

தேந ஷ²ப்³தே³ந மஹதா ஸந்த்ரஸ்தா ம்ருக³பக்ஷிண꞉ |
ஸமந்தாத்³து³த்³ருவுஸ்தஸ்மாத்³ப⁴யவிக்லவசேதஸ꞉ ||2-105-30

ரநமத்⁴யே ஸ்தி²த꞉ கார்ஷ்ணிஷ்²சிந்தயந்நித⁴நம் ரிபோ꞉ |
ஸைந்யை꞉ பரிவ்ருதோ(அ)ஸங்க்²யைர்யுத்³தா⁴ய க்ருதநிஷ்²சய꞉ ||2-105-31

கழுகுகள், தானவர்களின் குருதியைப் பருக விரும்பி கொடிமரங்களின் உச்சியில் அமர்ந்தன. தலையற்ற முண்டங்கள் அவனது தேரில் விழுவதாகத் தெரிந்தது.(23) சம்பரனின் தேரில் {தேருக்கு மேல் பறந்த} பறவைகள் தெளிவற்ற ஒலிகளை வெளியிட்டன. சந்திரன் ராகுவால் பீடிக்கப்பட்டு (கிரகணம் ஏற்பட்டு) அதன் வட்டில் அதனால் சூழப்பட்டது {நிலவில் சுற்றொளி தெரிந்தது}.(24) அவனது இடது கையும், கண்ணும் பேரழிவை முன்னறிவிக்கும் வகையில் துடித்தன. அவனது தேரில் பூட்டப்பட்டிருந்த குதிரைகள் {கால் தடுக்கி விழுந்து} வேகத்தைக் குறைத்தன.(25) தேவர்களின் பகைவனான சம்பரனின் தலையில் கங்கப் பறவைகள்[காக்கைகள்] அமர்ந்தன. இந்திரன் நெருப்புக் கங்குகள் கலந்த குருதி மழையைப் பொழியத் தொடங்கினான்.(26) ஆயிரக்கணக்கான கொள்ளிக் கட்டைகள் போர்க்களத்தில் விழுந்தன, சாரதியின் கைகளில் இருந்து கடிவாளங்கள் நழுவின.(27) ஆனால் கோபத்தில் நிறைந்திருந்த சம்பரன் அந்தத் தீய நிமித்தங்களைக் கவனிக்காமல் பிரத்யும்னனைக் கொல்லப் புறப்பட்டான்.(28) அடுத்தடுத்து முழக்கப்பட்ட பேரிகைகள், மிருதங்கங்கள், சங்கங்கள், பணவங்கள், ஆனகங்கள், துந்துபிகள் ஆகியவற்றின் ஒலியால் பூமி நடுங்கினாள்.(29) இந்தப் பயங்கர ஒலியால் உண்டான பீதியால் பீடிக்கப்பட்ட விலங்குகளும், பறவைகளும் அனைத்துப் பக்கங்களிலும் சிதறி ஓடின.(30) எனினும், பகைவனைக் கொல்லும் விருப்பத்தில் இருந்த கிருஷ்ணனின் மகன் {பிரத்யும்னன்} அப்போது போர்க்களத்தில் காத்துக்கொண்டிருந்தான்.(31)

க்ருத்³த⁴꞉ ஷ²ரஸஹஸ்ரேண ப்ரத்³யும்நம் ஸமதாட³யத் |
ஸம்ப்ராப்தாம்ஷ்²சைவ தாந்பா³ணாம்ஷ்²சி²ச்சே²த³ க்ருதஹஸ்தவத் ||2-105-32

ப்ரத்³யும்நோ த⁴நுராதா³ய ஷ²ரவர்ஷம் முமோச ஹ |
தஸ்மிந்ஸைந்யே ந கோ(அ)ப்யஸ்தி யோ ந வித்³த⁴꞉ ஷ²ரேண வை ||2-105-33

ப்ரத்³யும்நஷ²ரபாதேந தத்ஸைந்யம் விமுகீ²க்ருதம் |
ஷ²ம்ப³ரஸ்ய ததா²ப்⁴யாஷே² ஸ்தி²தம் ஸம்ஹ்ருத்ய பீ⁴தவத் ||2-105-34

ஸ்வப³லம் வித்³ருதம் த்³ருஷ்ட்வா ஷ²ம்ப³ர꞉ க்ரோத⁴மூர்ச்சி²த꞉ |
ஆஜ்ஞாபயாமாஸ ததா³ ஸசிவாந்தா³நவேஷ்²வர꞉ ||2-105-35

க³ச்ச²த்⁴வம் மந்நியோகே³ந ப்ரஹரத்⁴வம் ரிபோ꞉ ஸுதம் |
நோபேக்ஷணீய꞉ ஷ²த்ருர்வை வத்⁴யதாம் க்ஷிப்ரமேவ வை ||2-105-36

உபேக்ஷித இவ வ்யாதி⁴꞉ ஷ²ரீரம் நாஷ²யேத்³த்⁴ருவம் |
ததே³வ து³ர்மதி꞉ பாபோ வத்⁴யதாம் மத்ப்ரியேப்ஸயா ||2-105-37

போரிடும் தீர்மானத்துடன் கூடிய சம்பரன், ஆயிரக்கணக்கான படைவீரர்கள் சூழ ஆயிரக்கணக்கான கணைகளால் பிரத்யும்னனைத் தாக்கினான். எனினும் அவன், தன் கைகளின் வேகத்தை வெளிப்படுத்தி அந்தக் கணைகள் தன்னை அடையும் முன்பே அவற்றை வெட்டி வீழ்த்தினான்.(32) பிறகு தன்னுடைய வில்லை வளைத்து, அந்தப் படையில் கணையால் தாக்கப்படாத எவனும் கிடையாது என்ற அளவுக்குக் கணைகளை ஏவினான்.(33) இவ்வாறு பிரத்யும்னனால் ஏவப்பட்ட கணைகளால் தாக்கப்பட்ட சம்பரனின் படைவீரர்கள் அச்சத்துடன் அவனிடம் திரும்பிச் சென்றனர்.(34) தன்னுடைய படைவீரர்கள் புறமுதுகிடுவதைக் கண்டு கோபத்தால் நிறைந்த சம்பரன், தன் அமைச்சர்களிடம்,(35) “என் ஆணையின் பேரில் சென்று என்னுடைய பகைவனுடைய மகனைத் தாக்குங்கள். அவனைப் புறக்கணிக்காமல் உடனடியாகக் கொல்லுங்கள்.(36) அவன் புறக்கணிக்கப்பட்டால் தொடக்கத்தில் அலட்சியம் செய்யப்படும் ஒரு நோயைப்போல மொத்தமாக நம்மை அழித்துவிடுவான். எனக்கு மகிழ்ச்சியளிக்க விரும்பினால், தீய ஆன்மா கொண்டவனும், இழிந்தவனுமான இந்தப் பாவியைக் கொல்வீராக” என்று ஆணையிட்டான்.(37)

ததஸ்தே ஸசிவா꞉ க்ருத்³தா⁴꞉ ஷி²ரஸா க்³ருஹ்ய ஷா²ஸநம் |
ஷ²ரவர்ஷம் விமுஞ்சந்தஸ்த்வரிதா நோத³யந்ரதா²ன் ||2-105-38

தாந்த்³ருஷ்ட்வா தா⁴வத꞉ ஸங்க்²யே க்ருத்³தோ⁴ மகரகேதந꞉ |
சாபமுத்³யம்ய ஸம்ப்⁴ராந்தஸ்தஸ்தௌ² ப்ரமுக²தோ ப³லீ ||2-105-39

து³ர்த⁴ரம் பஞ்சவிம்ஷ²த்யா ஷ²ரை꞉ ஸந்நதபர்வபி⁴꞉ |
பி³பே⁴த³ ஸுமஹாதேஜா꞉ கேதுமாலிம் த்ரிஷஷ்டிபி⁴꞉ ||2-105-40

ஸப்தத்யா ஷ²த்ருஹந்தாரம் த்³வ்யஷீ²த்யா து ப்ரமர்த³நம் |
பி³பே⁴த³ பரமாமர்ஷீ ருக்மிண்யா நந்தி³வர்த⁴ந꞉ ||2-105-41

ததஸ்தே ஸசிவா꞉ க்ருத்³தா⁴꞉ ப்ரத்³யும்நம் ஷ²ரவ்ருஷ்டிபி⁴꞉ |
ஏகைகஷோ² பி³பே⁴தா³ஜௌ ஷஷ்டிபி⁴꞉ ஷஷ்டிபி⁴꞉ ஷ²ரை꞉ ||2-105-42

தாநப்ராப்தாஞ்ச²ராந்பா³ணைஷ்²சிச்சே²த³ மகரத்⁴வஜ꞉ |
ததோ(அ)ர்த⁴சந்த்³ரமாதா³ய து³ர்த⁴ரஸ்ய ஸ ஸாரதி²ம் ||2-105-43

ஜகா⁴ந பஷ்²யதாம் ராஜ்ஞாம் ஸர்வேஷாம் ஸைநிகஸ்ய வை |
சதுர்பி⁴ரத² நாராசை꞉ ஸுபர்வை꞉ கங்கதேஜிதை꞉ ||2-105-44

ஜகா⁴ந சதுர꞉ ஸோ(அ)ஷ்²வாந்து³ர்த⁴ரஸ்ய ரத²ம் ப்ரதி |
ஏகேந யோக்த்ரம் ச²த்ரம் ச த்⁴வஜமேகேந ப³ந்து⁴ரம் ||2-105-45

ஷஷ்ட்யா ச யுக³சக்ராக்ஷம் சிச்சே²த³ மகரத்⁴வஜ꞉ |
அதா²பரம் ஷ²ரம் க்³ருஹ்ய கங்கபத்ரம் ஸுதேஜிதம் ||2-105-46

முமோச ஹ்ருத³யே தஸ்ய து³ர்த⁴ரஸ்யாந்யஜீவிந꞉ |
ஸ க³தாஸுர்க³தஷ்²ரீகோ க³தஸத்த்வோ க³தப்ரப⁴꞉ ||2-105-47

சம்பரனின் ஆணைக்குக் கீழ்ப்படிந்த அமைச்சர்கள், கோபத்தால் நிறைந்தவர்களாகக் கணைமாரி பொழிந்தபடியே தங்கள் தேர்களைச் செலுத்திச் சென்றனர்.(38) பெருஞ்சக்திவாய்ந்த பிரத்யும்னன், அவர்கள் போர்க்களத்தை நோக்கி விரைவதைக் கண்டு கோபத்தால் தூண்டப்பட்டு, விரைவாகத் தன் வில்லை எடுத்துக் கொண்டு அங்கே நின்றான்.(39) ருக்மிணியின் மகிழ்ச்சியைப் பெருக்குபவனும், பெருஞ்சக்திவாய்ந்தவனுமான பிரத்யும்னன், கோபத்துடன் துர்தரனை ஐந்து கணைகளாலும், அறுபத்துமூன்றால் கேதுமாலியையும், எழுபதால் சத்ருஹந்தனையும், எண்பத்திரண்டு கணைகளால் பிரமர்த்தனனையும் தாக்கினான்.(40,41) இதனால் கோபத்தில் நிறைந்த அமைச்சர்கள் கணைமாரியால் பிரத்யும்னனை மறைத்தனர். உண்மையில் அஃது அற்புதம் நிறைந்ததாகத் தெரிந்தது. அவர்கள் ஒவ்வொருவரும் நூற்றி இருபது கடுங்கணைகளை அவன் மீது ஏவினார்கள்.(42) மகரத்வஜன் (பிரத்யும்னன்) தன்னைத் தாக்குவதற்கு முன் அவை அனைத்தையும் வெட்டி வீழ்த்தினான்.(43) பிறகு பிறை வடிவக் கணையொன்றை எடுத்துப் படைவீர்கள், போர்வீரர்கள் ஆகியோரின் கண்களுக்கு முன்பாகவே துர்தரனின் தேரோட்டியைக் கொன்றான்.(44) அடுத்தக் கணத்திலேயே கங்க இறகுகளைக் கொண்ட நான்கு கணைகளைக் கொண்டு அவனது நான்கு குதிரைகளைக் கொன்றான், ஒரு கணையால் அவனது குடையையும், கடிவாளத்தையும், மற்றொன்றால் கொடிமரத்தையும், அறுபது கணைகளால் அச்சாணிகள், சக்கரங்கள், கம்பங்கள் ஆகியவற்றையும் வீழ்த்தினான்.(45) அதன்பிறகு கங்க இறங்கைக் கொண்ட மற்றொரு கணையை எடுத்துக் கொண்ட அவன் குறுகிய வாழ்நாளைக் கொண்ட துர்தரனின் மார்பில் அதை ஏவினான்.(46) அந்தத் தானவன், தன் அழகு, காந்தி, உயிர் ஆகியவறை இழந்து, புண்ணியம் குறைந்த கோளைப் போலத் தேரில் இருந்து விழுந்தான்.(47)

நிபபாத ரதோ²பஸ்தா²த்க்ஷீணபுண்ய இவ க்³ரஹ꞉ |
து³ர்த⁴ரே நிஹதே ஷூ²ரே தா³நவே தா³நவேஷ்²வர꞉ ||2-105-48

கேதுமாலீ ஷ²ரவ்ராதைரபி⁴து³த்³ராவ க்ருஷ்ணஜம் |
ப்ரத்³யும்நமத² ஸங்க்ருத்³தோ⁴ ப்⁴ருகுடீபீ⁴ஷணாநாந꞉ ||2-105-49

க்ருத்வாப்⁴யதா⁴வத்ஸஹஸா திஷ்ட² திஷ்டே²தி சாப்³ரவீத் |
ஸங்க்ருத்³த⁴꞉ க்ருஷ்ணஸூநுஸ்து ஷ²ரவர்ஷைரவாகிரத் ||2-105-50

பர்வதம் வாரிதா⁴ராபி⁴꞉ ப்ராவ்ருஷீவ யதா² க⁴ந꞉ |
ஸ வித்³தோ⁴ தா³நவாமாத்ய꞉ ப்ரத்³யும்நேந த⁴நுஷ்மதா ||2-105-51

சக்ரமாதா³ய சிக்ஷேப ப்ரத்³யும்நவத⁴காங்க்ஷயா |
தம் து ப்ராப்தம் ஸஹஸ்ராரம் க்ருஷ்ணசக்ரஸமத்³யுதிம் ||2-105-52

நிபத்யோத்பத்ய ஸஹஸா ஸர்வேஷாமேவ பஷ்²யதாம் |
தேநைவ தஸ்ய சிச்சே²த³ கேதுமாலே꞉ ஷி²ரஸ்ததா³ ||2-105-53

தத்³த்³ருஷ்ட்வா கர்ம விபுலம் ரௌக்மிணேயஸ்ய தே³வராட் |
விஸ்மயம் பரமம் ப்ராப்த꞉ ஸர்வைர்தே³வக³ணை꞉ ஸஹ ||2-105-54

க³ந்த⁴ர்வாப்ஸரஸஷ்²சைவ புஷ்பவர்ஷைரவாகிரன் |
கேதுமாலிம் ஹதம் த்³ருஷ்ட்வா ஷ²த்ருஹந்தா ப்ரமர்த³ந꞉ |
மஹாப³லஸமூஹேந ப்ரத்³யும்நமத² து³த்³ருவே ||2-105-55

தே க³தா³ம் முஸலம் சக்ரம் ப்ராஸதோமரஸாயகான் |
பி⁴ந்தி³பாலாந்குடா²ராம்ஷ்²ச பா⁴ஸ்வராந்கூடமுத்³க³ரான் ||2-105-56

யுக³பத்ஸங்க்ஷிபந்தி ஸ்ம வதா⁴ர்த²ம் க்ருஷ்ணநந்த³நே |
ஸோ(அ)பி தாந்யஸ்த்ரஜாலாநி ஷ²ஸ்த்ரஜாலைரநேகதா⁴ ||2-105-57

சிச்சே²த³ ப³ஹுதா⁴ வீரோ த³ர்ஷ²யந்பாணிலாக⁴வம் |
க³ஜாந்ஸோ(அ)ப்⁴யஹநத்க்ருத்³தோ⁴ க³ஜாரோஹாந்ஸஹஸ்ரஷ²꞉ ||2-105-58

ரதா²ந்ஸாரதி²பி⁴꞉ ஸார்த⁴ம் ஹயாம்ஷ்²சைவ மமர்த³ ஹ |
பாதயம்ஸ்தாஞ்ச²ரவ்ராதைர்நாவித்³த⁴꞉ கஷ்²சிதீ³க்ஷ்யதே || 2-105-59

வீரத்தானவனான துர்தரன் கொல்லப்பட்டதும் தைத்திய தலைவனான கேதுமாலி கணைகளைப் பொழிந்தபடியே கிருஷ்ணனின் மகனை நோக்கி விரைந்தான்.(48) கோபத்துடனும், கடுமுகத்துடனும் கூடிய அவன் பிரத்யும்னனிடம் மீண்டும் மீண்டும் “நில்! காத்திருப்பாயாக” என்றான்.(49) இதனால் கோபமடைந்த கிருஷ்ணனின் மகன், மழைக்காலத்தில் மலையில் நீரைத் தெளிக்கும் மேகத்தைப் போலக் கணைகளால் அவனை மறைத்தான்.(50) பெரும் வில்லாளியான பிரத்யும்னனால் கடுங்காயம் அடைந்த அந்தத் தானவ அமைச்சன், தன் சக்கரத்தை எடுத்துக் கொண்டு பிரத்யும்னனைக் கொல்வதற்காக அதை ஏவினான்.(51) எனினும் அந்த மகரத்வஜன் {பிரத்யும்னன்}, கிருஷ்ணனின் சக்கரத்துக்கு இணையான வலிமை கொண்ட அந்தச் சக்கரம் தன் மீது பாயும் முன்பே துள்ளி குதித்து அதைப் பிடித்துக் கொண்டான்.(52) மேலும் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அதைக் கொண்டு கேதுமாலியின் தலையைக் கொய்தான்.(53) ருக்மிணியின் மகனுடைய அற்புதம்நிறைந்த அந்தப் பெருஞ்செயலைக் கண்டு தேவர்களின் மன்னனும், தேவர்களும் ஆச்சரியத்தால் நிறைந்தனர்.(54) கந்தர்வர்களும், அப்சரஸ்களும் அவன் மீது மலர்மாரி பொழிந்தனர். கேதுமாலி கொல்லப்பட்டதைக் கண்ட சத்ருஹந்தனும், பிரமர்த்தனனும் ஒரு பெரும்படை சூழ பிரத்யும்னனை நோக்கி ஓடினர்.(55) அவர்கள் அனைவரும் கிருஷ்ணனின் மகனைக் கொல்வதற்காக அவன் மீது கதாயுதங்கள், முசலங்கள், சக்கரங்கள், பாசங்கள், தோமரங்கள், கணைகள், பிண்டிபாலங்கள், கோடரிகள் {குடாரங்கள்} ஆகியவற்றையும் பிற ஆயுதங்களையும் {கூடங்கள், முத்கரங்கள் ஆகியவற்றையும்} ஏவினர்.(56) எனினும் வீரனான அந்தக் காமன் {பிரத்யும்னன்}, தன் கர நளினத்தை வெளிப்படுத்தும் வகையில் அவை அனைத்தையும் தன் கணைகளால் பல துண்டுகளாக வெட்டினான்.(57) கோபம் கொண்ட அவன் ஆயிரக்கணக்கான யானைகள், மாவுத்தர்கள், தேர்கள், தேரோட்டிகள், குதிரைகள் ஆகியவற்றில் காயமடையாதவர் எவரும் இல்லாதபடிக்கு அனைவரையும் தன்னுடைய கணைகளால் தாக்கினான்.(58,59)

ஏவம் ஸர்வாணி ஸைந்யாநி மமந்த² மகரத்⁴வஜ꞉ |
நதீ³ம் ப்ராவர்தயத்³கோ⁴ராம் ஷோ²ணிதாம்பு³தரங்கி³ணீம் ||2-105-60

முக்தாஹாரோர்மிப³ஹுலாம் வஸாமேதோ³ஸ்தி²பங்கிநீம் |
ச²த்ரத்³வீபஷ²ராவர்தாம் ரதை²꞉ புலிநமண்டி³தாம்||2-105-61

கேயூரகுண்ட³லாகூர்மாம் த்⁴வஜமத்ஸ்யவிபூ⁴ஷிதாம் |
நாக³க்³ராஹவதீம் ரௌத்³ரீம் மத்ஸ்யகூர்மவிபூ⁴ஷிதாம் ||2-105-62

கேஷ²ஷை²வலஸஞ்ச²ந்நாம் ஷ்²ரோணிஸூத்ரம்ருணாலிகாம் |
நராநநஸுபத்³மாம் ச ஹம்ஸசாமரவீஜிதாம் ||2-105-63

ஷி²ரஸ்திமிஸமாகீர்ணாம் ஷோ²ணிதௌஅக⁴ப்ரவர்திநீம் |
நதீ³ம் து³ஸ்தரணீம் பீ⁴மாமநங்கே³ந ப்ரவர்திதாம் ||2-105-64

து³ஷ்ப்ரேக்ஷாம் து³ர்க³மாம் ரௌத்³ராம் ஹீநதேஜ꞉ ஸுது³ஸ்தராம் |
ஷ²ஸ்த்ரக்³ராஹவதீம் கோ⁴ராம் யமராஷ்ட்ரவிவர்த்³தி⁴நீம் ||2-105-65

அவர்களின் படைவீரர்களைக் கலங்கடித்த பிரத்யும்னன், குருதியையே நீராகக் கொண்ட ஒரு பயங்கர ஆற்றை அங்கே உண்டாக்கினான்.(60) முத்து ஆரங்களே அதன் அலைகள் பலவாகவும், சதை, கொழுப்பு, ஊனீர் ஆகியவை புழுதியாகவும், சக்கராயுதங்கள் தீவுகளாகவும், கணைகள் சுழல்களாகவும், தேர்கள் அழகிய கரையாகவும்,(61) கங்கணங்களும், காது குண்டலங்களும் ஆமைகளாகவும், கொடிகளே மீன்களாகவும், யானைகள் பிற நீர்வாழ் விலங்குகளாகவும் இருந்தன.(62) அந்த ஆறு குதிரைகளை நீர்வாழ் விலங்குகளாகவும், தலைமுடிகளைப் பாசிகளாகவும், அரைஞாண்களைத் தாமரைத் தண்டுகளாகவும், அழகிய முகங்களைத் தாமரைகளாகவும், சாமரங்களை அன்னங்களாகவும்,(63) தலைகளைத் திமி மீன்களாகவும், குருதியை நீராகவும் கொண்டிருந்தது. அனங்கனால் அங்கே உண்டாக்கப்பட்ட ஆறானது, எவராலும், குறிப்பாகப் பலவீனர்களால் கடக்கப்பட முடியாததாக இருந்தது.(64) பயங்கரமானதாகவும், கடக்கப்பட முடியாததாகவும், ஆயுதங்களால் நிறைந்ததாகவும் இருந்த அது {அந்த ஆறு}, யமனின் ஆட்சிப்பகுதி வரை விரிந்திருந்தது.(65)

தத்ர ருக்மிஸுத꞉ ஷ்²ரீமாந்விலோட³யதி த⁴ந்விந꞉ |
ஷ²த்ருஹந்தாரமாஷ்²ரித்ய ஷ²ராநப்⁴யகிரந்ப³ஹூன் ||2-105-66

ஷ²த்ருஹந்தா புந꞉ க்ருத்³தோ⁴ முமோச ஷ²ரமுத்தமம் |
ப்ரத்³யும்நஸ்ய ஸமாஸாத்³ய ஹ்ருத³யே நிபபாத ஹ ||2-105-67

ஸ வித்³த⁴ஸ்தேந பா³ணேந ப்ரத்³யும்நோ ந வ்யகம்பத |
ஷ²க்திம் ஜக்³ராஹ ப³லவாஞ்ச²த்ருஹந்த்ரே முமூர்ஷவே ||2-105-68

ஸா க்ஷிப்தா ரௌக்மிணேயேந ஷ²க்திர்ஜ்வாலாகுலா ரணே |
பபாத ஹ்ருத³யம் பி⁴த்த்வா ஷ²க்ராஷ²நிஸமஸ்வநா ||2-105-69

ஸ பி⁴ந்நஹ்ருச்ச ஸ்ரஸ்தாங்கோ³ முக்தமர்மாஸ்தி²ப³ந்த⁴ந꞉ |
பபாத ருதி⁴ரோத்³கா³ரீ ஷ²த்ருஹந்தா மஹாப³ல꞉ ||2-105-70

ருக்மிணியின் அழகிய மகன், பிற வில்லாளிகளைக் கலங்கடித்துவிட்டு, சத்ருஹந்தன் மீது எண்ணற்ற கணைகளை ஏவினான்.(66) கோபத்தால் நிறைந்த அவனும் கணைகளை ஏவி பிரத்யும்னனின் மார்பைத் தாக்கினான்.(67) கேசவனின் பலம்வாய்ந்த மகன் அந்தக் கணைகளால் தாக்கப்பட்டுக் காயமடைந்தாலும் நடுங்காமல் இருந்தான். அவன் மரணத் தருவாயில் இருந்த சத்ருஹந்தனைக் கொல்வதற்காக சக்தி ஆயுதம் ஒன்றை எடுத்துக் கொண்டான்.(68) ருக்மிணியின் மகனால் ஏவப்பட்டு எரிந்து கொண்டிருந்த அந்தச் சக்தி ஆயுதம், இந்திரனின் வஜ்ரத்தைப் போன்ற ஒலியை வெளியிட்டபடியே பாய்ந்து பகைவனின் இதயத்தைத் துளைத்தது.(69) பெருஞ்சக்திவாய்ந்த சத்ருஹந்தன், இதயம் பிளக்கப்பட்டவனாகவும், அங்கங்கள் சிதைக்கப்பட்டவனாகவும், முக்கிய உறுப்புகளும், மூட்டுகளும் பிரிக்கப்பட்டவனாகவும் கீழே விழுந்து குருதி கக்கினான்.(70)

பதிதம் ஷ²த்ருஹந்தாரம் த்³ருஷ்ட்வா தஸ்தௌ² ப்ரமர்த³ந꞉ |
ஜக்³ராஹ முஸலம் ஸோ(அ)த² வசநம் சேத³மாத³தே³ ||2-105-71

திஷ்ட² கிம் ப்ராக்ருதைரேபி⁴꞉ கரிஷ்யஸி ரணப்ரிய꞉ |
மாம் யோத⁴யஸ்வ து³ர்பு³த்³தே⁴ ததஸ்த்வம் ந ப⁴விஷ்யஸி ||2-105-72

வ்ருஷ்ணிவம்ஷ²குலே ஜாத꞉ ஷ²த்ருரஸ்மத்பிதா தவ |
புத்ரம் ஹந்தாஸ்ம்யஹம் தஸ்ய ததோ(அ)ஸௌ நிஹதோ ப⁴வேத் ||2-105-73

ம்ருதேந தேந து³ர்பு³த்³தே⁴ ஸர்வதே³வக்ஷயோ ப⁴வேத் |
தை³தேயா தா³நவா꞉ ஸர்வே மோத³ந்தாம் ஹதஷ²த்ரவ꞉ ||2-105-74

ஹதே த்வயி மமாஸ்த்ரேண த்வத்ஸமுத்தை²ஷ்²ச ஷோ²ணிதை꞉ |
ஷ²ம்ப³ரஸ்ய து புத்ராணாம் கரோம்யுத³கஸத்க்ர்யாம் ||2-105-75

அத்³ய ஸா பீ⁴ஷ்மகஸுதா கருணம் விலபிஷயதி |
நிஹதம் த்வாம் ச ஷ்²ருத்வைவ யௌவநஸ்த²ம் க³தாயுஷம் ||2-105-76

ஸ தே பிதா சக்ரத⁴ரோ நிஷ்ப²லாஷோ² ப⁴விஷ்யதி |
ஹதம் த்வாம் ஸ விதி³த்வாத² ப்ராணாம்ஸ்த்யக்ஷ்யதி மந்த³தீ⁴꞉ ||2-105-77

சத்ருஹந்தன் கொல்லப்பட்டதைக் கண்ட பிரமர்த்தனன், முசலாயுதத்துடன் முன்வந்து,(71) “ஓ! போரிடும் விருப்பம் கொண்டவனே, இந்தச் சாதாரண மனிதர்களுடன் போரிடுவதில் பயனென்ன? ஓ! தீய புத்தி கொண்டவனே, ஒரு கணம் இங்கே உறுதியாக நின்று என்னுடன் போரிட்டால் இந்தப் பூமியில் இனியும் நீ வாழ மாட்டாய்.(72) நீ விருஷ்ணி குலத்தில் பிறந்தவன், உன் தந்தையோ எங்கள் பகைவன். இன்று எங்களால் அவனது மகனைக் கொல்ல முடிந்தால் அவனும் கொல்லப்படுவான்.(73) ஓ! தீய புத்தியைக் கொண்டவனே, உன் மரணத்தால் தேவர்கள் அழிவடைவார்கள், தைத்தியர்களும், தானவர்களும் தங்கள் பகைவன் கொல்லப்பட்டதால் இன்புற்றிருப்பார்கள்.(74) என் ஆயுதங்களால் உன்னைக் கொன்று, இறந்து போன சம்பரன் மகன்களின் நீர்க்கடனை உன் குருதியால் நிறைவேற்றுவேன்.(75) உன்னைப் போன்ற இளம் மகனின் மரணத்தைக் கேட்டு பீஷ்மகனின் மகள் {ருக்மிணி} பரிதாபகரமாக அழுது புலம்புவாள்.(76) தீயவனும், உன் தந்தையுமான அந்தச் சக்கரபாணியும் உன் மரணத்தைக் கேட்டு இன்று தன் உயிரை விடுவான்” என்றான்.(77)

இத்யுக்த்வா பரிகே⁴ணாஷு² தாட³யத்³ருக்மிணீஸுதம் |
தாடி³தோ ஹி மஹாதேஜா ரௌக்மிணேய꞉ ப்ரதாபவான் ||2-105-78

தோ³ர்ப்⁴யாமுத்க்ஷிப்ய தஸ்யைவ ரத²ம் மஹ்யாம் வ்யசூர்ணயத் |
ஸோ(அ)வப்லுத்ய ரதா²த்தஸ்மாத்பதா³திரவதஸ்தி²வான் ||2-105-79

தாம் க³தா³ம் க்³ருஹ்ய ஸஹஸா ரௌக்மிணேயமுபாத்³ரவத் |
தயைவ க³த³யா காம꞉ ப்ரமர்த³நமபோத²யத் ||2-105-80

ஹதே ப்ரமர்த³நே தை³த்யே த்³ருஷ்ட்வா ஸர்வே ப்ரது³த்³ருவு꞉ |
ந ஷ²க்தா꞉ ப்ரமுகே² ஸ்தா²தும் ஸிம்ஹத்ராஸாத்³க³ஜா இவ ||2-105-81

ஸாரமேயம் யதா² த்³ருஷ்ட்வாவிக³ணே வை பலாயதே |
ததா² ஸேநா விஷீத³ந்தீ ப்ரத்³யும்நஸ்ய ப⁴யார்தி³தா ||2-105-82

க்ஷதஜா தி³க்³த⁴வஸ்த்ரா வை முக்தகேஷா² விஷோ²ப⁴நா |
ரஜஸ்வலேவ யுவதி꞉ ஸேநா ஸமவகூ³ஹதே ||2-105-83

மத³நஷ²ரவிபி⁴ந்நா ஸைநிகாநப்³யயாயாத்³யுவதி
ஸத்³ருஷ²வேஷா ஸாத்³வஸை꞉ பீட்³யமாநா |
ரதிஸமரமஷ²க்தா வீக்ஷிதும் ஸோச்ச²ஸந்தீ
ஸ்வக்³ருஹக³மநகாமா நேச்ச²தே ஸ்தா²துமத்ர ||2-105-84

பிரமர்த்தனன் இதைச் சொல்லிவிட்டு, தன் பரிகத்தைக் கொண்டு ருக்மிணியின் மகனை விரைவாக அடித்தான். பெருஞ்சக்திவாய்ந்தவனும், சுறுசுறுப்பு மிக்கவனுமான ருக்மிணியின் மகன் இவ்வாறு தாக்கப்பட்டதும் தன் கரங்களால் அவனது தேரைத் தூக்கி வீசித் தரையில் அடித்து நொறுக்கினான்.(78) அப்போது அந்தத் தானவன் தன் தேரில் இருந்து கீழே குதித்துக் காலாளாகத் தரையில் நின்றான்.(79) பிறகு தன் கதாயுதத்தைக் கேசவன் மகன் மீது வீசினான். மறுபுறம் அந்தக் காமனோ {பிரத்யும்னனோ}, அந்தக் கதாயுதத்தைக் கொண்டே பிரமர்த்தனனை நசுக்கினான்.(80) பிரமர்த்தனன் கொல்லப்பட்டதைக் கண்ட தைத்தியர்களால் பிரத்யும்னன் முன்பு நிற்க இயலாமல் சிங்கத்தால் பீதியடையும் யானைமந்தையைப் போலத் தப்பி ஓடத் தொடங்கினர்.(81) {வேட்டை} நாயைக் கண்ட ஆடுகளைப் போலவே பிரத்யும்னனால் பீதியடைந்த தைத்திய படைவீரர்களும் தங்கள் இதயம் கலங்கினர்.(82) தலைமயிர் கலைந்தவர்களாகவும், குருதியால் கறைபட்ட ஆடைகளைக் கொண்டவர்களாகவும், அழகற்றவர்களாகவும் தோன்றிய தானவப் படை வீரர்கள், மாதவிலக்கில் உள்ள பெண்ணைப் போலத் தெரிந்தனர்.(83) காமாந்தகனான கொடூரனால் முரட்டுத் தனமாகக் கையாளப்பட்டு, மன்மதனின் கணைகளால் துளைக்கப்பட்டு அந்தப் போரில் {காமப்போரில்} தாக்குப்பிடிக்க முடியாமல் தன் வீட்டுக்குத் தப்பியோடும் இளம்பெண்ணைப் போலவே கணைகளால் தாக்கப்பட்டு அச்சத்தில் நிறைந்திருந்த அந்தத் தானவப் படைவீரர்களும் போர்க்களத்தைவிட்டு அகன்று, பெருமூச்சு விட்டபடியே அங்கிருந்து தப்பி ஓடினர்” என்றார் {வைசம்பாயனர்}.(84)

இதி ஷ்²ரீமஹாபா⁴ரதே கி²லேஷு ஹரிவம்ஷே² விஷ்ணுபர்வணி
ஷ²ம்ப³ரஸைந்யப⁴ங்கோ³ நாம பஞ்சாதி⁴கஷ²ததமோ(அ)த்⁴யாய꞉

————–—————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாஸ பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: