ஸ்ரீ விஷ்ணு பர்வம்–அத்யாயம் – 88–(ஜலக்ரீடாவர்ணனம்)-யாதவக் கடல்நீர்விளையாட்டு |-

பெண்களுடனும், அப்ஸரஸ்களுடனும் ஸ்ரீ கிருஷ்ணனும், யாதவர்களும் கடல் நீரில் விளையாடிய சமுத்ர ஜலக்ரீடை

ஜனமேஜய உவாச
முனே(அ)ந்த⁴கவத⁴꞉ ஷ்²ராவ்ய꞉ ஷ்²ருதோ(அ)யம் க²லு போ⁴ மயா |
ஷா²ந்திஸ்த்ரயாணாம் லோகானாம் க்ருத்வா தே³வேன தீ⁴மதா ||2-88-1

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! முனிவரே, நுண்ணறிவுமிக்க மஹாதேவன், மூவுலகங்களில் அமைதியை மீட்டெடுக்கத் தேவையான அந்தகனின் அழிவு பற்றிய கதையை நான் கேட்டேன்

நிகும்ப⁴ஸ்ய ஹதம் தே³ஹம் த்³விதீயம் சக்ரபாணினா |
யத³ர்த²ம் ச யதா² சைவ தத்³ப⁴வான்வக்துமர்ஹதி ||2-88-2

இனி, சக்கரபாணியான கிருஷ்ணனால் நிகும்பனின் மற்றொரு உடல் அழிக்கப்பட்டது ஏன் என்பதை விரிவாகச் சொல்வதே உமக்குத் தகும்” என்று கேட்டான்

வைஷ²ம்பாயன உவாச
ஷ்²ரத்³த³தா⁴னஸ்ய ராஜேந்த்³ர வக்தவ்யம் ப⁴வதோ(அ)னக⁴ |
சரிதம் லோகநாத²ஸ்ய ஹரேரமிததேஜஸ꞉ ||2-88-3

வைசம்பாயனர் {ஜனமேஜயனே}, “ஓ! பாவமற்ற மன்னா, அண்டத்தின் பலம்வாய்ந்தவனும், உயர்ந்தவனுமான தலைவன் ஹரியின் வரலாற்றைக் கேட்பதில் பெரும் மதிப்பை வெளிப்படுத்துகிறாய். எனவே நான் இதை உனக்குச் சொல்ல வேண்டும்

த்³வாரவத்யாம் நிவஸதோ விஷ்ணோரதுலதேஜஸ꞉ |
ஸமுத்³ரயாத்ரா ஸம்ப்ராப்தா தீர்தே² பிண்டா³ரகே ந்ருப ||2-88-4

ஓ! மன்னா, ஒப்பற்ற சக்தி கொண்ட ஹரி துவாரகை நகரத்தில் வாழ்ந்தபோது, பிண்டாரகம் {பிண்டாலகம்} எனும் புனிதத் தலத்திற்குக் கடல்வழியாகப் பயணம் செய்தான்

உக்³ரஸேனோ நரபதிர்வஸுதே³வஷ்²ச பா⁴ரத |
நிக்ஷிப்தௌ நக³ராத்⁴யக்ஷௌ ஷே²ஷா꞉ ஸர்வே விநிர்க³தா꞉ ||2-88-5

ஓ! பரதனின் வழித்தோன்றலே, அந்த நேரத்தில் உக்ரசேனனும், வசுதேவனும் நகரத்தின் ஆளுனர்களாக இருந்தனர். மற்றவர் அனைவரும் நாராயணனைப் பின்தொடர்ந்தனர்.

ப்ருத²க்³ப³ல꞉ ப்ருத²க்³தீ⁴மாம்ˮல்லோகநாதோ² ஜனார்த³ன꞉ |
கோ³ஷ்ட்²யா꞉ ப்ருத²க்குமாராணாம் ந்ருதே³வாமிததேஜஸாம் ||2-88-6

ஓ! மன்னா, பலதேவனும், ஜனார்த்தனனும், தேவர்களைப் போன்ற சக்திமிக்கப் பிற இளவரசர்களின் கூட்டங்களும் தனித்தனியே புறப்பட்டுச் சென்றனர்.(

க³ணிகானாம் ஸஹஸ்ராணி நி꞉ஸ்ருதானி நராதி⁴ப |
குமாரை꞉ ஸஹ வார்ஷ்ணேயை ரூபவத்³பி⁴꞉ ஸ்வலங்க்ருதை꞉ ||2-88-7

ஓ! மன்னா {ஜனமேஜயா}, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட அழகிய விருஷ்ணி இளவரசர்களுடன் ஆயிரக்கணக்கான ஆடற்பெண்டிரும் சென்றனர்.

தை³த்யாதி⁴வாஸம் நிர்ஜித்ய யது³பி⁴ர்த்³ருட⁴விக்ரமை꞉ |
வேஷ்²யா நிவேஷி²தா வீர த்³வாரவத்யாம் ஸஹஸ்ரஷ²꞉ ||2-88-8

ஓ! வீரா, பலம்வாய்ந்தவர்களான யாதவர்கள், அந்த ஆயிரக்கணக்கான ஆடற்பெண்டிரையும் கடற்படுகையில் இருந்து நீரை விலக்கி துவாராவதி நகரில் குடியமர்த்தி இருந்தனர்[“உறுதியான பராக்ரமமுடைய யது வீரர்களைக் கொண்டு (நிகும்பன் முதலிய) அஸுரர் வஸிக்குமிடத்தை (ஷட்புரத்தை) ஜயித்து த்வாரகையில் ஆயிரக்கணக்கில் வேசியர் வைக்கப்பட்டனர்” )

ஸாமாந்யாஸ்தா꞉ குமாராணாம் க்ரீடா³னார்யோ மஹாத்மனாம் |
இச்சா²போ⁴க்³யா கு³ணைரேவ ராஜன்யா வேஷயோஷித꞉ ||2-88-9

அழகு நிறைந்தவர்களான அந்த ஆடற்பெண்டிர், தங்கள் திறன்களின் காரணமாக இளவரசர்களின் இன்பத்திற்குரியவர்கள் ஆனார்கள்.

ஸ்தி²திரேஷா ஹி பை⁴மானாம் க்ருதா க்ருஷ்ணேன தீ⁴மதா |
ஸ்த்ரீநிமித்தம் ப⁴வேத்³வைரம் மா யதூ³நாமிதி ப்ரபோ⁴ ||2-88-10

ஓ! தலைவா, நுண்ணறிவுமிக்கக் கிருஷ்ணன், பெண்களுக்கான உட்பகையால் யாதவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்று நினைத்து பைமர்களுக்கிடையே இந்த நடைமுறையை நிறுவியிருந்தான்.

ரேவத்யா சைகயா ஸார்த⁴ம் ப³லோ ரேமே(அ)னுகூலயா |
சக்ரவாகானுராகே³ண யது³ஷ்²ரேஷ்ட²꞉ ப்ரதாபவான் ||2-88-11

காத³ம்ப³ரீபானகலோ பூ⁴ஷிதோ வனமாலயா |
சிக்ரீட³ ஸாக³ரஜலே ரேவத்யா ஸஹிதோ ப³ல꞉ ||2-88-12

யதுக்களில் முதன்மையானவனும், பலம்வாய்ந்தவனும், மது பருகிய போதையுடன் கூடியவனும், காட்டு மலர்மாலையால் அலங்கரிக்கப்பட்டவனுமான பலதேவன், நீரில் விளையாடிய போது, ஒரு சக்கரவாகப் பறவையைப் போல ரேவதியுடன் மட்டுமே இன்புற்றிருந்தான்.(11,12)

ஷோட³ஷ² ஸ்த்ரீஸஹஸ்ராணி ஜலே ஜலஜலோசன꞉ |
ரமயாமாஸ கோ³விந்தோ³ விஷ்²வரூபேண ஸர்வத்³ருக் ||2-88-13

அனைத்தையும் படைத்தவனும், தாமரைக் கண்ணனுமான கோவிந்தன் {கிருஷ்ணன்}, தன் சொந்த உடல்கள் பலவற்றினால் உறவாடியபடியே தன்னுடைய பதினாறாயிரம் மனைவியருடன் கடலில் தனித்தனியாக விளையாடிக் கொண்டிருந்தான்

அஹமிஷ்டா மயா ஸார்த⁴ம் ஜலே வஸதி கேஷ²வ꞉ |
இதி தா மேநிரே ஸர்வா ராத்ரௌ நாராயணஸ்த்ரிய꞉ ||2-88-14

ஓ! மன்னா, அந்த நேரத்தில் கேசவனின் மனைவியருக்கு மத்தியில், “நானே கேசவருக்கு மிகப் பிடித்தமானவள்; அவர் என்னுடன் மட்டுமே விளையாடிக் கொண்டிருக்கிறார்” என்ற எண்ணம் இருந்தது.

ஸர்வா꞉ ஸுரதசிஹ்னாங்க்³ய꞉ ஸர்வா꞉ ஸுரததர்பிதா꞉ |
மானமூஹுஷ்²ச தா꞉ ஸர்வா கோ³விந்தே³ ப³ஹுமானஜம் ||2-88-15

தங்கள் மேனி முழுவதும் போகத்திற்குரிய அடையாங்களைக் கொண்ட அந்தக் காரிகையர் அனைவரும் கோவிந்தனிடம் காதல் சரசமாடினர்

அஹமிஷ்டாஹமிஷ்டேதி ஸ்னிக்³தே⁴ பரிஜனே ததா³ |
நாராயணஸ்த்ரிய꞉ ஸர்வா முதா³ ஷ²ஷ்²லாகி⁴ரே ஷு²பா⁴꞉ ||2-88-16

நற்பெண்டிரில் அழகியரான அந்த நாராயணக் காரிகையர் {நாராயணனின் மனைவியர்}, “நான் மட்டுமே கேசவருக்கு மிகப் பிடித்தமானவள்” என்று எண்ணி ஏமாந்தனர் {தங்களைத் தாங்களே புகழ்ந்து கொண்டனர்}.

கரஜத்³விஜசிஹ்னானி குசாத⁴ரக³தானி தா꞉ |
த்³ருஷ்ட்வா த்³ருஷ்ட்வா ஜஹ்ருஷிரே த³ர்பணே கமலேக்ஷணா꞉ ||2-88-17

{தாமரையைப் போன்று அழகிய கண்களைக் கொண்ட அந்தப் பெண்கள், தங்கள் முலைகளில் நகக்குறிகளையும், உதடுகளில் பற்குறிகளையும் மீண்டும் மீண்டும் முகக்கண்ணாடியில் கண்டு மகிழ்ச்சியடைந்தனர்

கோ³த்ரமுத்³தி³ஷ்²ய க்ருஷ்ணஸ்ய ஜகி³ரே க்ருஷ்ணயோஷித꞉ |
பிப³ந்த்ய இவ க்ருஷ்ணஸ்ய நயனைர்வத³னாம்பு³ஜம் ||2-88-18

கிருஷ்ணனின் மனைவியர், தங்கள் கண்களால் கேசவனின் முக அமுதத்தைப் பருகிவிடுபவர்களைப் போல அவனைக் கண்டனர்.

க்ருஷ்ணார்பிதமனோத்³ருஷ்ட்ய꞉ காந்தா நாராயணஸ்த்ரிய꞉ |
மனோஹரதரா ராஜன்னப⁴வன்னேகநிஷ்²சயா꞉ ||2-88-19

கேசவனிடம் மட்டுமே நிலைத்த மனங்களையும், கண்களையும் கொண்ட அந்தக் காரிகையர் முன்பைவிட அப்போது அழகாகத் தெரிந்தனர்.

ஏகார்பிதமனோத்³ருஷ்ட்யோ நேர்ஷ்யாம் தாஷ்²சக்ரிரே(அ)ங்க³னா꞉ |
நாராயணேன தே³வேன தர்ப்யமாணமனோரதா²꞉ ||2-88-20

தலைவன் நாராயணன் அந்தப் பெண்கள் அனைவரையும் நிறைவடையச் செய்ததால், ஒருவனிடமே நிலைத்த மனங்களையும், கண்களையும் கொண்ட அவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் பொறாமையை வளர்த்துக் கொள்ளவில்லை

ஷி²ராம்ஸி க³ர்விதான்யூஹு꞉ ஸர்வா நிரவஷே²ஷத꞉ |
வால்லப்⁴யம் கேஷ²வமயம் வஹந்த்யஷ்²சாருத³ர்ஷ²னா꞉ ||2-88-21

அந்த அழகிய பெண்கள், கேசவனால் முற்றிலும் பீடிக்கப்பட்டவர்களைப் போலப் பெருமையுடன் தங்கள் தலைகளை அசைக்கத் தொடங்கினர்.

தாபி⁴ஸ்து ஸஹ சிக்ரீட³ ஸர்வாபி⁴ர்ஹரிராத்மவான் |
விஷ்²வரூபேண விதி⁴னா ஸமுத்³ரே விமலே ஜலே ||2-88-22

தற்கட்டுப்பாட்டைக் கொண்ட ஹரி, தன் அண்ட வடிவின் வழிமுறைகளைப் பின்பற்றி இவ்வாறு கடலின் தூய நீரில் அந்தப் பெண்களுடன் விளையாடத் தொடங்கினான்.

உவாஹ ஸர்வக³ந்தா⁴ட்⁴யம் ஸ்வச்ச²ம் வாரி மஹோத³தி⁴꞉ |
தோயம் விலவணம் ம்ருஷ்டம் வாஸுதே³வஸ்ய ஷா²ஸனாத் ||2-88-23

ஓ! வீரா, அந்நேரத்தில் வாசுதேவனின் ஆணையின் பேரில் கடலின் நீர் உப்பிலிருந்து விடுபட்டிருந்தது, அந்தப் பெருங்கடல் அனைத்து வகை நறுமணங்களுடன் கூடிய தூய நீரைக் கொண்டிருந்தது

கு³ல்ப²த³க்⁴னம் ஜானுத³க்⁴னமூருத³க்⁴னமதா²பி வா |
நார்யஸ்தா꞉ ஸ்தனத³க்⁴னம் வா ஜலம் ஸமபி⁴காங்க்ஷிதம் ||2-88-24

கணுக்காலளவு, முழங்காலளவு, தொடையளவு, முலையளவு என அந்தப் பெண்கள் விரும்பிய அளவுக்கு அந்தக் கடல் நீரைத் தந்தது

ஸிஷிசு꞉ கேஷ²வம் பத்ன்யோ தா⁴ரா இவ மஹோத³தி⁴ம் |
ஸிஷேச தாஷ்²ச கோ³விந்தோ³ மேக⁴꞉ பு²ல்லலதா இவ ||2-88-25

ஆறுகள் தங்கள் நீரைக் கடலில் பொழிவதைப் போல, மேகங்கள் மலரும் கொடிகளில் நீரைப் பொழிவதைப் போல அந்த நீர் விளையாட்டில் {ஜலக்ரீடையில்} கேசவனின் மனைவியர் அவன் மீது நீரைத் தெளித்தனர்

அவலம்ப்³யபரா꞉ கண்டே² ஹரிம் ஹரிணலோசனா꞉ |
உபகூ³ஹஸ்வ மாம் வீர பதாமீத்யப்³ருவன்ஸ்த்ரிய꞉ ||2-88-26

மான்களைப் போன்ற கண்களைக் கொண்ட அவர்களில் சிலர், கிருஷ்ணனின் கழுத்தைத் தழுவிக் கொண்டு, “ஓ! ஹரி, நான் மூழ்கப் போகிறேன், என்னைக் காப்பீராக” என்றனர்

காஷ்²சித்காஷ்ட²மயைஸ்தேரு꞉ ப்லவை꞉ ஸர்வாங்க³ஷோ²ப⁴னா꞉ |
க்ரௌஞ்சப³ர்ஹிணநாகா³நாமாகாரஸத்³ருஷை²꞉ ஸ்த்ரிய꞉ ||2-88-27

அழகிய பெண்கள் சிலர் மயில், யானைகளின் வடிவங்களிலான மரப்படகுகளை {தெப்பங்களை} நீரில் செலுத்தத் தொடங்கினர்.

மகராக்ருதிபி⁴ஷ்²சான்யா மீநாபை⁴ரபி சாபரா꞉ |
ப³ஹுரூபாக்ருதித⁴ரை꞉ புப்லுவுஷ்²சாபரா꞉ ஸ்த்ரிய꞉ ||2-88-28

மகர {முதலை} வடிவிலான படகுகளைச் சிலரும், மீன்வடிவிலான படகுகளைச் சிலரும் பல்வேறு வடிவங்களிலான படகுகளை இன்னும் சிலரும் செலுத்தத் தொடங்கினர்

ஸ்தனகும்பை⁴ஸ்ததா² தேரு꞉ கும்பை⁴ரிவ ததா²பரா꞉ |
ஸமுத்³ரஸலிலே ரம்யே ஹர்ஷயந்த்யோ ஜனார்த³னம் ||2-88-29

கடல் நீரில் ஜனார்த்தனனை மகிழ்விக்க விரும்பிய பெண்களில் நீர்க்குடங்களைப் போன்ற தங்கள் முலைகளைக் கொண்டு சிலரும், நீர்க்குடங்களையே கொண்டு சிலரும் நீந்தினர்

ரராம ஸஹ ருக்மிண்யா ஜலே தஸ்மின்முதா³ யுத꞉ |
யேனைவ கார்யயோகே³ன ரமதே(அ)மரஸத்தம꞉ ||2-88-30

மகிழ்ச்சியால் நிறைந்த கிருஷ்ணனும் ருக்மிணியுடன் விளையாடத் தொடங்கினான். நாராயணனின் மனைவியர், தேவர்களில் முதன்மையான கேசவனுக்குப் பெரும் மகிழ்ச்சியை அளிக்கும் செயல்களையே செய்தனர்.

தத்ததே³வ ஹி தாஷ்²சக்ருர்முதா³ நாராயணஸ்த்ரிய꞉ |
தனுவஸ்த்ராவ்ருதாஸ்தன்வ்யோ லீலயந்த்யஸ்ததா²பரா꞉ |
சிக்ரீடு³ர்வாஸுதே³வஸ்ய ஜலே ஜலஜலோசனா꞉ ||2-88-31

மெலிந்தவுடல் கொண்ட அந்தக் காரிகையருக்கு மத்தியில், மேகம் போன்ற கண்களைக் கொண்டவர்களும், மெலிந்த ஆடை அணிந்தவர்களுமான சிலர் வாசுதேவனின் அசைவுகளை போலத் தாங்களும் செய்து காட்டினர்

யஸ்யா யஸ்யாஸ்து யோ பா⁴வஸ்தாம் தாம் தேனைவ கேஷ²வ꞉ |
அனுப்ரவிஷ்²ய பா⁴வஜ்ஞோ நினாயாத்மவஷ²ம் வஷீ² ||2-88-32

அனைவரின் மனவிருப்பத்தையும் அறிந்தவனான கேசவன், அந்தப் பெண்களின் மனங்களில் நுழைந்து, அவர்கள் விரும்பியதைச் செய்து நிறைவடையச் செய்தான்

ஹ்ருஷீகேஷோ²(அ)பி ப⁴க³வான்ஹ்ருஷீகேஷ²꞉ ஸனாதன꞉ |
ப³பூ⁴வ தே³ஷ²காலேன காந்தாவஷ²க³த꞉ ப்ரபு⁴꞉ ||2-88-33

தெய்வீகனும், நித்தியனும், பலம்வாய்ந்தவனுமான ரிஷிகேசன், தற்கட்டுப்பாட்டைக் கொண்ட அனைவரின் தலைவனாக இருந்தாலும், கால நெருக்கடிக்குத் தகுந்த வகையில் தன் அன்புக்குரிய மனைவியரின் கட்டுப்பாட்டுக்குள் தன்னை நிறுத்திக் கொண்டான்

குலஷீ²லஸமோ(அ)ஸ்மாகம் யோக்³யோ(அ)யமிதி மேநிரே |
வம்ஷ²ரூபேண வர்தந்தமங்க³னாஸ்தா ஜனார்த³னம் ||2-88-34

என்ன ஆச்சரியம்? அந்தக் காரிகையர், மனித வடிவில் இருந்த ஜனார்த்தனனைத் தங்கள் பிறவிக்கும் {குலத்துக்கும்}, தகுதிகளுக்கும் {தரத்திற்கும்} ஏற்ற கணவனாகக் கருதினர்

ததா³ தா³க்ஷிண்யயுக்தம் தம் ஸ்மிதபூர்வாபி⁴பா⁴ஷிணம் |
க்ருஷ்ணம் பா⁴ர்யாஷ்²சகமிரே ப⁴க்த்யா ச ப³ஹு மேநிரே ||2-88-35

அந்தப் புத்திசாலிப் பெண்கள், அன்புடனும், பேசுவதற்கு முன் எப்போதும் சிரித்தபடியும் கிருஷ்ணனுக்குத் தகுந்த மதிப்பை வழங்கி அர்ப்பணிப்புடன் அவனை நாடினர்.

ப்ருத²க்³கோ³ஷ்ட்²ய꞉ குமாராணாம் ப்ரகாஷ²ம் ஸ்த்ரீக³ணை꞉ ஸஹ |
அலஞ்சக்ருர்ஜலம் வீரா꞉ ஸாக³ரஸ்ய கு³ணாகரா꞉||2-88-36

கீ³தந்ருத்யவிதி⁴ஜ்ஞானாம் தாஸாம் ஸ்த்ரீணாம் ஜனேஷ்²வர |
தேஜஸாப்யாஹ்ற்^தானாம் தே தா³க்ஷிண்யாத்தஸ்தி²ரே வஷே² ||2-88-37

ஷ்²ருண்வந்தஷ்²சாருகீ³தானி ததா² ஸ்வபி⁴னயான்யபி |
தூர்யாண்யுத்தமநாரீணாம் முமுஹுர்யது³புங்க³வா꞉ ||2-88-38

இளவரசர்கள், பெண்களுடன் நீரில் விளையாடுவதற்காகத் தனித்தனி குழுக்களை அமைத்தனர். சாதனைகளின் சுரங்கங்களான அந்த வீரர்கள் நீரில் விளையாடிக் கொண்டிருந்தனர்.(36) ஓ! மன்னா, பாடும் கலையிலும், ஆடற்கலையிலும் திறன்மிகுந்தவர்களும், அந்த இளவரசர்களால் வலுக்கட்டாயமாகக் கொண்டுவரப்பட்டவர்களுமான பெண்கள், அன்புடன் கூடிய அவர்களின் நடத்தையால் மகிழ்ச்சியடைந்தனர்.(37) அந்த அழகிய பெண்களின் எழில்மிகு நடைகளை {அபிநயங்களைக்} கண்டும், இசைக்கருவிகளின் இசையையும், அவர்களின் பாடல்களையும் கேட்டும் அந்த யதுகுல வீரர்கள் பெரிதும் மகிழ்ந்தனர்.(38)

பஞ்சசூடா³ம் தத꞉ க்ருஷ்ண꞉ கௌபே³ர்யஷ்²ச வராப்ஸரா꞉ |
மாஹேந்த்³ரீஷ்²சானயாமாஸ விஷ்²வரூபேண ஹேதுனா ||2-88-39

தா꞉ ப்ரோவாசாப்ரமேயாத்மா ஸாந்த்வயித்வா ஜக³த்ப்ரபு⁴꞉ |
உத்தா²பயித்வா ப்ரணதா꞉ க்ருதாஞ்ஜலிபுடாஸ்ததா² ||2-88-40

க்ரூடா³யுவத்யோ பை⁴மானாம் ப்ரவிஷ²த்⁴வமஷ²ங்கிதா꞉ |
மத்ப்ரியார்த²ம் வராரோஹா ரமயத்⁴வம் ச யாத³வான் ||2-88-41

த³ர்ஷ²யத்⁴வம் கு³ணான்ஸர்வாந்ந்ருத்யகீ³தை ரஹ꞉ஸு ச |
ததா²பி⁴னயயோகே³ஷு வாத்³யேஷு விவிதே⁴ஷு ச ||2-88-42

ஏவம் க்ருதே விதா⁴ஸ்யாமி ஷ்²ரேயோ வோ மனஸேப்ஸிதம் |
மச்ச²ரீரஸமா ஹ்யேதே ஸர்வே நிரவஷே²ஷத꞉ ||2-88-43

உலகின் தலைவனும், அளவற்ற சக்தி கொண்டவனுமான தலைவன் கிருஷ்ணன், தன் அண்ட வடிவின் காரணமாக மிக அழகிய அப்சரஸ்களான பஞ்சசூடை, கௌபேரிகள் {குபேரனிடம் உள்ள அப்சரஸ்கள்}, மாஹேந்திரிகள் {இந்திரனிடமுள்ள அப்சரஸ்கள்} ஆகியோரை வரவழைத்ததும்,(39) அவர்கள் கூப்பிய கரங்களுடன் வந்து அவனை வணங்கினர். அவர்களைத் தேற்றிய அந்த உலகத்தலைவன் {ஜகத்பிரபு},(40) “ஓ! அழகிய அப்சரஸ்களே, என்னை நிறைவடையச் செய்வதற்காக இங்கே எந்தவிதக் கவலையுமின்றி நுழைந்து விளையாட்டுப் பெண்களாகி {க்ரீடாஸ்திரீகளாகி} யாதவர்களை மகிழ்வியுங்கள்.(41) பல்வேறு இசைக் கருவிகளிலும், ஆடல் பாடல்களிலும், இன்னும் பிற புதிரான கலைகளிலும் நீங்கள் பெற்ற திறன்கள் அனைத்தையும் அவர்களுக்குக் காட்டுங்கள்.(42) அவர்கள் அனைவரும் என் அங்கங்களைப் போன்றவர்கள். எனவே, அவர்களை மகிழ்வித்தால் நீங்கள் நன்மையை அடைவீர்கள்” என்றான்.(43)

ஷி²ரஸாஜ்ஞாம் து தா꞉ ஸர்வா꞉ப்ரதிக்³ருஹ்ய ஹரேஸ்ததா³ |
க்ருடா³ யுவத்யோ விவிஷு²ர்பை⁴மாநாமப்ஸரோவரா꞉ ||2-88-44

தாபி⁴꞉ ப்ரஹ்ருஷ்டமாத்ராபி⁴ர்த்³யோதித꞉ ஸ மஹார்ணவ꞉ |
ஸௌதா³மினீபி⁴ர்னப⁴ஸி க⁴னவ்ருந்த³மிவானக⁴ ||2-88-45

தா ஜலே ஸ்த²லவத்ஸ்தி²த்வா ஜகு³ஷ்²சாப்யத² வாஹயன் |
சக்ருஷ்²சாபி⁴னயம் ஸம்யக்ஸ்வர்கா³வாஸ இவாங்க³னா꞉ ||2-88-46

க³ந்தை⁴ர்மால்யைஷ்²ச தா தி³வ்யைர்வஸ்த்ரைஷ்²சாயதலோசனா꞉ |
ஹேலாபி⁴ர்ஹாஸ்யபா⁴வைஷ்²ச ஜஹ்ருர்பை⁴மமனாம்ஸி தா꞉ ||2-88-47

கடாக்ஷைரிங்கி³தைர்ஹாஸ்யை꞉ கேலிரோஷை꞉ ப்ரஸாதி³தை꞉ |
மனோ(அ)னுகூலைர்பை⁴மானாம் ஸமாஜஹ்ருர்மனாம்ஸி தா꞉ ||2-88-48

உத்க்ஷிப்யோத்க்ஷிப்ய சாகாஷ²ம் வாதஸ்கந்தா⁴ன்ப³ஹூம்ஷ்²ச தான் |
மதி³ராவஷ²கா³ பை⁴மா மானயந்தி வராப்ஸரா꞉ ||2-88-49

அந்த அப்சரஸ்கள் தலைவணங்கி ஹரியின் ஆணையை ஏற்றுக் கொண்டு யாதவர்களின் விளையாட்டுப் பெண்களாக அவர்களுடன் சேர்ந்து கொண்டனர்.(44) ஓ! பாவமற்றவனே, மின்னலால் வானத்தில் ஒளியூட்டப்படும் மேகங்களைப் போலவே அங்கே அவர்கள் நுழைந்ததும் கடலின் நீர் பிரகாசமடைந்தது.(45) அவர்கள், நிலத்தில் நிற்பதைப் போல நீரில் நின்று கொண்டு தேவலோகத்தில் இசைப்பதைப் போல நீரில் பல்வேறு பாடல்களைப் பாடினர்.(46) அகன்ற விழிகளைக் கொண்ட அந்தப் பெண்கள், தெய்வீக ஆடைகளாலும், விளையாட்டுப் புன்னகையாலும், முகபாவங்களாலும், விழி அசைவுகளாலும், கோபத்தாலும், தங்கள் இதயம் விரும்பும் வகையிலான தொண்டாலும் பைமர்களின் மனங்களைக் கொள்ளை கொண்டனர்.(47,48) முன்னணி அப்சரஸ்களான அவர்கள் போதையில் இருந்த பைமர்களை மீண்டும் மீண்டும் வானத்தில் தூக்கிப் போட்டு மீண்டும் அவர்களைக் கீழே கொண்டு வந்தனர்.(49)

க்ருஷ்ணோ(அ)பி தேஷாம் ப்ரீத்யர்த²ம் விஜஹ்ரே வியதி ப்ரபு⁴꞉ |
ஸர்வை꞉ ஷோட³ஷ²பி⁴꞉ ஸார்த⁴ம் ஸ்த்ரீஸஹஸ்ரைர்முதா³ன்வித꞉ ||2-88-50

ப்ரபா⁴வஜ்ஞாஸ்து தே வீரா꞉ க்ருஷ்ணஸ்யாமிததேஜஸ꞉ |
ந ஜக்³முர்விஸ்மயம் பை⁴மா கா³ம்பீ⁴ர்யம் பரமாஸ்தி²தா꞉ ||2-88-51

கேசித்³ரைவதகம் க³த்வா புனராயாந்தி பா⁴ரத |
க்³ருஹான்யன்யே வனான்யன்யே காங்க்ஷிதான்யரிமர்த³ன ||2-88-52

அபேய꞉ பேயஸலில꞉ ஸாக³ரஷ்²சாப⁴வத்ததா³ |
ஆஜ்ஞயா லோகநாத²ஸ்ய விஷ்ணோரதுலதேஜஸ꞉ ||2-88-53

அதா⁴வன்ஸ்த²லவச்சாபி ஜலே ஜலஜலோசனா꞉ |
க்³ருஹ்ய ஹஸ்தே ததா² நார்யோ யுக்தா மஜ்ஜம்ஸ்ததா²பி ச ||2-88-54

ப⁴க்ஷ்யபோ⁴ஜ்யானி பேயானி சோஷ்யம் லேஹ்யம் ததை²வ ச |
ப³ஹுப்ரகாரம் மனஸா த்⁴யாதே தேஷாம் ப⁴வத்யுத ||2-88-55

அம்லானமால்யதா⁴ரிண்யஸ்தா꞉ ஸ்த்ரியஸ்தானனிந்தி³தான் |
ரஹ꞉ஸு ரமயாஞ்சக்ரு꞉ ஸ்வர்கே³ தே³வரதானுகா³꞉ ||2-88-56

யாதவர்களை மகிழ்ச்சியடையச் செய்வதற்காகக் கிருஷ்ணனும் தன் பதினாறாயிரம் மனைவியருடன் மகிழ்ச்சியாக வானத்தில் விளையாடத் தொடங்கினான்.(50) வீரமிக்கப் பைமர்கள், பலம்வாய்ந்த கிருஷ்ணனின் அளவற்ற சக்தியை அறிந்திருந்ததால் அவனது இந்த அருஞ்செயலைக் கண்டு ஆச்சரியமடையவில்லை; மாறாக அதனில் முற்றான ஈர்ப்பைக் கண்டனர்.(51) ஓ! பாரதா, ஓ! பகைவரைக் கொல்பவனே {ஜனமேஜயா}, அவர்களில் சிலர் தாங்களாகவே ரைவதகத்திற்குத் திரும்பிச் சென்றனர், சிலர் தங்கள் வீடுகளுக்கும், மேலும் சிலர் தாங்கள் விரும்பிய வனங்களுக்கும் சென்றனர்.(52) எவராலும் பருக முடியாத கடல் நீரானது, உலகின் பெருஞ்சக்திவாய்ந்த தலைவனான விஷ்ணுவின் ஆணையின் பேரில் அனைவராலும் பருகத்தகுந்த நற்பானமானது.(53) அவர்கள், தாமரைக் கண்களைக் கொண்ட காரிகையரின் கரங்களைப் பற்றிக் கொண்டு, நிலத்தில் நடப்பதைப் போல நீரில் நடந்து, மீண்டும் நீருக்குள் பாய்ந்தனர்.(54) அவர்கள் உணவுப் பொருட்களையோ, பானத்தையோ நினைத்த மாத்திரத்தில் அவை அவர்களின் முன்பு கொண்டு வரப்பட்டன.(55) புத்தம்புது மலர்களாலான மாலைகளைச் சூடியிருந்த அந்தக் காரிகையர், இவ்வாறே அந்தத் தனிமையான இடத்தில் யது குல இளவரசர்களுடன் விளையாடத் தொடங்கினர்.(56)

நௌபி⁴ர்க்³ருஹப்ரகாராபி⁴ஷ்²சிக்ரீடு³ரபராஜிதா꞉ |
ஸ்னாதானுலிப்தமுதி³தா꞉ ஸாயாஹ்னே(அ)ந்த⁴கவ்ருஷ்ணய꞉ ||2-88-57

ஆயதாஷ்²சதுரஸ்ராஷ்²ச வ்ருத்தாஷ்²ச ஸ்வஸ்திகாஸ்ததா² |
ப்ராஸாதா³ நௌஷு கௌரவ்ய விஹிதா விஷ்²வகர்மணா ||2-88-58

கைலாஸமந்த³ரச்ச²ந்தா³ மேருச்ச²ந்தா³ஸ்ததை²வ ச |
ததா² நானாவயஷ்²ச²ந்தா³ஸ்ததே²ஹாம்ருக³ரூபிண꞉ ||2-88-59

வைடூ³ர்யதோரணைஷ்²சித்ராஷ்²சித்ராபி⁴ர்மணிப⁴க்திபி⁴꞉ |
மஸாரக³ல்வர்கமயைஷ்²சித்ரப⁴க்திஷ²தைரபி ||2-88-60

ஆக்ரீட³ க³ருட³ச்ச²ந்தா³ஷ்²சித்ரா꞉ கனகரீதிபி⁴꞉ |
க்ரௌஞ்சச்ச²ந்தா³꞉ ஷு²கச்ச²ந்தா³ க³ஜச்ச²ந்தா³ஸ்ததா²பரே ||2-88-61

கர்ணதா⁴ரைர்க்³ருஹீதாஸ்தா நாவ꞉ கார்தஸ்வரோஜ்ஜ்வலா꞉ |
ஸலிலம் ஷோ²ப⁴யாமாஸு꞉ ஸாக³ரஸ்ய மஹோர்மிமத் ||2-88-62

ஸமுச்ச்²ரித꞉ ஸிதை꞉ போதைர்யானபாத்ரைஸ்ததை²வ ச |
நௌபி⁴ஷ்²ச ஜி²ல்லிகாபி⁴ஷ்²ச ஷு²ஷு²பே⁴ வருணாலய꞉ ||2-88-63

புராண்யாகாஷ²கா³னீவ க³ந்த⁴ர்வாணாமிதஸ்தத꞉ |
ப³ப்⁴ரமு꞉ ஸாக³ரஜலே பை⁴மயானானி ஸர்வத꞉ ||2-88-64

வெல்லப்பட முடியாதவர்களான விருஷ்ணிகளும், அந்தகர்களும், மாலை வேளை வந்ததும் தங்கள் மேனிகளில் களிம்புகளிட்டு நீராடி, படகுவீடுகளில் விளையாடத் தொடங்கினர்.(57) ஓ! குருவின் வழித்தோன்றலே {ஜனமேஜயனே}, தேவதச்சனான விஷ்வகர்மன், அந்தப் படகுகள் அனைத்திலும் சதுரஸ்ர, ஸ்வஸ்திக முதலிய பல்வேறு அரண்மனைகளை {சதுர, ஸ்வஸ்திக வடிவங்களில் மாடங்களை} அமைத்திருந்தான்.(58) அந்தப் படகுகளில் சில கைலாச, மந்தர, சுமேரு மலைகளைப் போல இருந்தன. அவற்றில் சில பறவைகளைப் போன்றும், மான்களைப் போன்றும் இருந்தன.(59) அந்தப் படகுகளில் அமைக்கப்பட்டிருந்த அறைகள், தரைவிரிப்புகள் விரிக்கப்பட்டவையாகவும், மரகதம், சந்திரகாந்தம், சூரியகாந்தம் முதலிய விலைமதிப்புமிக்கக் கற்களால் ஒளியூட்டப்பட்டவையாகவும் இருந்தன.(60) அதன் வாயில்கள் வைடூரியங்களால் அமைக்கப்பட்டிருந்தன. கருடன், கிரௌஞ்சம், சுகம் {கிளி}, யானை ஆகியவற்றின் அழகிய வடிவங்கள் பொன்னால் வரையப்பட்ட அறைகள் அந்தப் படகுகளில் இருந்தன.(61) படகோட்டிகளால் செலுத்தப்பட்ட அந்தத் தங்கப் படகுகள், அலைகள் நிறைந்த கடலின் நீருக்குப் பெரிதும் அழகூட்டின.(62) முழுமையாக தெய்வீகப் பொருட்களால் செய்யப்பட்ட பெரிய கட்டடங்களைப் போன்ற பெரிய கப்பல்கள், சிறிய படகுகள், தெப்பங்கள் ஆகியவற்றால் வருணனின் வசிப்பிடம் {கடல்} அழகூட்டப்பட்டது.(63) கந்தர்வர்களின் வானுலாவும் நகரங்களைப் போலவே பைமர்களின் படகுகளும் கடலில் நகரத் தொடங்கின.(64)

நந்த³னச்ச²ந்த³யுக்தேஷு யானபாத்ரேஷுபா⁴ரத |
நந்த³னப்ரதிமம் ஸர்வம் விஹிதம் விஷ்²வகர்மணா ||2-88-65

உத்³யானானி ஸபா⁴வ்ருக்ஷா தீ³ர்கி⁴கா꞉ ஸ்யந்த³னானி ச |
நிவேஷி²தானி ஷி²ல்பானி தாத்³ருஷா²ன்யேவ ஸர்வதா² ||2-88-66

ஸ்வர்க³ச்ச²ந்தே³ஷு² சான்யேஷு ஸமாஸாத்ஸ்வர்க³ஸன்னிபா⁴꞉ |
நாராயணாஜ்ஞயா வீர விஹிதா விஷ்²வகர்மணா ||2-88-67

ஓ! பரதனின் வழித்தோன்றலே, தேவதச்சனான விஷ்வகர்மன், தெய்வீக நந்தவனத்தைப் போலவே அந்தப் படகுகள் அனைத்தையும் செய்திருந்தான்.(65) தோட்டங்கள், சபைகள், மரங்கள், குளங்கள், தேர்கள் ஆகியவையும், கலை வடிவங்கள் பிறவும் நந்தவனத்தில் இருப்பதைப் போலவே செய்யப்பட்டிருந்தன.(66) ஓ! வீரா, நாராயணனுடைய ஆணையின் பேரில் தேவலோகத்திற்கு ஒப்பான அந்தப் படகுகளில் அனைத்தும் தெய்வீக வடிவங்களைப் போலவே கட்டப்பட்டிருந்தன. மேலும் நான் என்ன சொல்வேன்.(67)

வனேஷு ருருவுர்ஹ்ருத்³யம் மது⁴ரம் சைவ பக்ஷிண꞉ |
மனோஹரதரம் சைவ பை⁴மாநாமதிதேஜஸாம் ||2-88-68

தே³வலோகோத்³ப⁴வா꞉ ஷ்²வேதா விலேபு꞉ கோகிலாஸ்தத்தா³ |
மது⁴ராணி விசித்ராணி யதூ³னாம் காங்க்ஷிதானி ச ||2-88-69

சந்த்³ராம்ஷு²ஸமரூபேஷு ஹர்ம்யப்ருஷ்டே²ஷு ப³ர்ஹிண꞉ |
நந்ருதுர்மது⁴ராராவா꞉ ஷி²க²ண்டி³க³ணஸம்வ்ருதா꞉ ||2-88-70

பதாகா யானபாத்ராணாம் ஸர்வா꞉ பக்ஷிக³ணாயுதா꞉ |
ப்⁴ரமரைருபகீ³தாஷ்²ச ஸ்ரக்³தா³மாஸக்தவாஸிபி⁴꞉ ||2-88-71

நாராயணாஜ்ஞயா வ்ருக்ஷாபுஷ்பாணி முமுசுர்ப்⁴ருஷ²ம் |
ருதவஷ்²சாருரூபாணி விஹாயஸி க³தாஸ்ததா² ||2-88-72

பெருஞ்சக்திவாய்ந்த பைமர்களின் படகுகளில் அமைக்கப்பட்டிருந்த வனங்களில் பறவைகள் வெளியிட்ட இன்னொலிகள் கேட்போரின் மனங்களைக் கொள்ளை கொண்டன.(68) தேவலோகத்தில் பிறந்த வெண்குயில்கள் யாதவர்கள் விரும்பும் பல்வேறு இன்னொலிகளை வெளியிட்டன.(69) இன்னொலிகளை அகவும் ஆண்மயில்கள், சந்திரக் கதிர்களைப்போன்ற அழகிய வீடுகளின் கூரைகளில் பெண் மயில்கள் சூழ ஆடிக் கொண்டிருந்தன.(70) அந்தப் படகுகளில் ஏற்றப்பட்டிருந்த கொடிகளில் பல்வேறு பறவைகள் நிறைந்திருந்தன, மாலைகளில் வண்டுகள் அமர்ந்து ரீங்காரமிட்டன.(71) நாராயணனுடைய ஆணையின் பேரில் பருவகாலத்தின் அழகிய அறிகுறிகள் வானில் தோன்றின, மரங்கள் தொடர்ந்து மலர்களைப் பொழிந்தன.(72)

வவௌ மனோஹரோ வாதோ ரதிகே²த³ஹர꞉ ஸுக²꞉ |
ரஜோபி⁴꞉ ஸர்வபுஷ்பாணாம் ப்ருக்தஷ்²சந்த³னஷை²த்யப்⁴ருத் ||2-88-73

ஷீ²தோஷ்ணமிச்ச²தாம் தத்ர ப³பூ⁴வ வஸுதா⁴பதே |
வாஸுதே³வப்ரஸாதே³ன பை⁴மானாம் க்ரீட³தாம் ததா³ ||2-88-74

ந க்ஷுத்பிபாஸா ந க்³லாநிர்ன சிந்தா ஷோ²க ஏவ ச |
ஆவிவேஷ² ததா³ பை⁴மான்ப்ரபா⁴வாச்சக்ரபாணின꞉ ||2-88-75

அப்ரஷா²ந்தமஹாதூர்யா கீ³தந்ருத்யோபஷோ²பி⁴தா꞉ |
ப³பூ⁴வு꞉ ஸாக³ரக்ரீடா³ பை⁴மாநாமதிதேஜஸாம் ||2-88-76

ப³ஹுயோஜனவிஸ்தீர்ணம் ஸமுத்³ரம் ஸலிலாஷ²யம் |
ருத்³த்⁴வா சிக்ரீடு³ரிந்த்³ராபா⁴ பை⁴மா꞉ க்ரூஷ்ணாபி⁴ரக்ஷிதா꞉ ||2-88-77

மலரிதழ்களுடன் கூடியதும், சந்தனத்தின் குளுமையைச் சுமந்து வருவதும், அழகும், இனிமையும் நிறைந்த {மனோகரமான} காற்று அங்கே வீசி மனிதர்களின் ஆசையைத் தூண்டியது.(73) ஓ! மன்னா, கதாதாரியான வாசுதேவனின் ஆதிக்கத்தின் பேரில் அந்நேரத்தில் பைமர்கள், தங்கள் இன்பத்திற்கேற்ற வெப்பத்தையும், குளிரையும் அனுபவித்தனர்.(74) அந்தச் சக்கரபாணியின் காந்தியினால் அவர்களில் எவரும் பசியையோ, தாகத்தையோ, களைப்பையோ, கவலையையோ அடையவில்லை.(75) இவ்வாறு பேரிகைகளின் ஒலி, இசை, நடனம் ஆகியவற்றால் தொடர்ந்து உயிர்ப்புடன் இருந்த அவர்களின் கடல் விளையாட்டில் கிருஷ்ணனால் பாதுகாக்கப்பட்ட பைமர்கள் பல யோஜனைகள் பரப்புடைய நீரைத் தடுத்து விளையாடிக் கொண்டிருந்தனர்.(76,77)

பரிச்ச²த³ஸ்யானுரூபம் யானபாத்ரம் மஹாத்மன꞉ |
நாராயணஸ்ய தே³வஸ்ய விஹிதம் விஷ்²வகர்மணா ||2-88-78

ரத்னானி யானி த்ரைலோக்யே விஷி²ஷ்டானி விஷா²ம்பதே |
க்ருஷ்ணஸ்ய தானி ஸர்வாணி யானபாத்ரே(அ)திதேஜஸ꞉ || 2-88-79

ப்ருத²க்ப்ருத²ங்நிவாஸாஷ்²ச ஸ்த்ரீணாம் க்ருஷ்ணஸ்ய பா⁴ரத |
மணிவைடூ³ர்யசித்ராஸ்தா꞉ கார்தஸ்வரவிபூ⁴ஷிதா꞉ ||2-88-80

ஸர்வர்துகுஸுமாகீர்ணா꞉ ஸர்வக³ந்தா⁴தி⁴வாஸிதா꞉ |
யது³ஸிம்ஹை꞉ ஷு²பை⁴ர்ஜுஷ்டா꞉ ஷ²குனை꞉ ஸ்வர்க³வாஸிபி⁴꞉ || 2-88-81

தேவதச்சன், உயரான்ம தேவனான நாராயணனின் படகை அவனது தொண்டர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற வகையில் அமைத்திருந்தான்.(78) ஓ! மன்னா, பெருஞ்சக்திவாய்ந்த கிருஷ்ணனின் படகிற்குள் மூவுலகங்களிலும் மதிப்புமிக்க ரத்தினங்கள் அனைத்தும் கொண்டுவரப்பட்டன.(79) ஓ! பரதனின் வழித்தோன்றலே, கிருஷ்ணனின் ஒவ்வொரு மனைவிக்கும் தங்கத்தால் அமைக்கப்பட்டதும், முத்து, வைடூரியங்களால் அலங்கரிக்கப்பட்டதுமான தனி அறை அமைக்கப்பட்டிருந்தது.(80) முன்னணி யாதவர்கள், அனைத்துப் பருவ காலங்களுக்கும் உரிய மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, அனைத்து வகை நறுமணப்பொருட்களும் பூசிக்கொண்டு மங்கலமான தேவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தனர்” என்றார் {வைசம்பாயனர்}.(81)

இதி ஷ்²ரீமஹாபா⁴ரதே கி²லேஷு ஹரிவம்ஷே² விஷ்ணுபர்வணி
பா⁴னுமதீஹரணே அஷ்டாஷீ²திதமோ(அ)த்⁴யாய꞉

————–—————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாஸ பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: