ஸ்ரீ விஷ்ணு பர்வம்–அத்யாயம் – 91–(வஜ்ரநாபவதவ்ருத்தாந்தம்)-பிரபாவதி – வஜ்ரநாபவதம் |–

வஜ்ரநாபன் பெற்ற வரங்கள்; பத்ரநாபன் பெற்ற வரம்; பிரபாவதியிடம் அன்னப்பறவையைத் தூதனுப்பிய இந்திரன்

ஜனமேஜய உவாச
பா⁴னுமத்யாபஹரணம் விஜயம் கேஷ²வஸ்ய ச ||2-91-1

க்ரீடா³ம் ச ஸாக³ரே தி³வ்யாம் வ்ருஷ்ணீநாமதிதேஜஸாம் |
அஷ்²ரௌஷம் பரமாஷ்²சர்யம் முனே த⁴ர்மப்⁴ருதாம் வர ||2-91-2

வஜ்ரநாப⁴வத⁴ம் யுக்தம் நிகும்ப⁴வத⁴கீர்தனே |
தன்மே கௌதூஹலம் ஷ்²ரோதும் ப்ரஸாதா³த்³ப⁴வதோ முனே ||2-91-3

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! முனிவரே, ஓ! அறவோரில் முதன்மையானவரே, பானுமதி அபகரிக்கப்பட்டதையும், கேசவனின் வெற்றிப்பேற்றையும், ஒப்பற்ற சக்தி கொண்ட விருஷ்ணிகள் கடலில் தேவர்களைப் போல விளையாடியதையும்,(1) தேவலோகத்தில் இருந்து சாலிக்யம் கொண்டு வரப்பட்டதையும், இன்னும் பல அற்புதக் காரியங்களையும் நான் கேட்டேன்.(2) நிகும்பன் அழிக்கப்பட்டதைச் சொன்னபோது வஜ்ரநாபன் குறித்து நீர் குறிப்பிட்டீர். ஓ! முனிவரே, இப்போது அதைக் கேட்க நான் ஆவலாக இருக்கிறேன்” என்றான்.(3)

வைஷ²ம்பாயன உவாச
ஹந்த தே வர்தயிஷ்யாமி வஜ்ரநாப⁴வத⁴ம் ந்ருப |
விஜயம் சைவ காமஸ்ய ஸாம்ப³ஸ்யைவ ச பா⁴ரத ||2-91-4

மேரோ꞉ ஸானௌ நரபதே தபஷ்²சக்ரே மஹாஸுர꞉ |
வஜ்ரநாப⁴ இதி க்²யாதோ நிஷ்²சித꞉ ஸமிதிஞ்ஜய꞉ ||2-91-5

தஸ்ய துஷ்டோ மஹாதேஜா ப்³ரஹ்மா லோகபிதாமஹ꞉ |
வரேண ச்ச²ந்த³யாமாஸ தபஸா பரிதோஷித꞉ ||2-91-6

அவத்⁴யத்வம் ஸ தே³வேப்³யோ வவ்ரே தா³னவஸத்தம꞉ |
புரம் வஜ்ரபுரம் சாபி ஸர்வரத்னமயம் ஷு²ப⁴ம் ||2-91-7

ஸ்வச்ச²ந்தே³ன ப்ரவேஷ²ஷ்²ச ந வாயோரபி பா⁴ரத |
அசிந்திதேன காமாநாமுபபத்திர்னராதி⁴ப ||2-91-8

ஷா²கா²நக³ரமுக்²யானாம் ஸம்வாஹானாம் ஷ²தானி ச |
நக³ரஸ்யாப்ரமேயஸ்ய ஸமந்தாஜ்ஜனமேஜய ||2-91-9

ததா² தத³ப⁴வத்தஸ்ய வரதா³னேன பா⁴ரத |
உவாஸ வஜ்ரநக³ரே வஜ்ரநாபோ⁴ மஹாஸுர꞉ ||2-91-10

கோடிஷோ² வரலப்³த⁴ம் தமஸுரா꞉ பரிவார்ய தே |
ஊஷுர்வஜ்ரபுரே ராஜன்ஸம்வாஹேஷு ததை²வ ச ||2-91-11

ஷா²கா²நக³ரமுக்²யேஷு ரம்யேஷு ச நராதி⁴ப |
ஹ்ருஷ்டபுஷ்டப்ரமுதி³தா ந்ருப தே³வஸ்ய ஷ²த்ரவ꞉ ||2-91-12

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “ஓ! பெரும் மன்னா, ஓ! பரதனின் வழித்தோன்றலே, காமன் {பிரத்யும்னன்}, சாம்பன் ஆகியோரின் வெற்றிப்பேற்றையும், வஜ்ரநாபனின் அழிவையும் நான் சொல்லப்போகிறேன் கேட்பாயாக.(4) ஓ! படைகளை வெல்பவனே, வஜ்ரநாபன் என்ற பெயர் படைத்த பேரசுரன் ஒருவன் சுமேரு மலையின் உச்சியில் கடுந்தவம் செய்து கொண்டிருந்தான்.(5) உலகின் பெரும்பாட்டனும், தெய்வீகனுமான பிரம்மன், அவனது தவங்களில் மகிழ்ந்து ஒரு வரம் கேட்குமாறு அவனிடம் சொன்னான்.(6) ஓ! ஜனமேஜய மன்னா, தானவர்களில் முதன்மையான அவன், தேவர்களால் கொல்லப்படாத நிலையைப் பெறுவது, காற்றும் புக முடியாததும், நினைக்காத போதும் விருப்பத்திற்குரிய ஒவ்வொரு பொருளையும் கொடுக்கவல்லதும், மதில்களால் சூழப்பட்ட தோட்டங்களையும், கிளை நகரங்கள் பலவற்றையும், பெருமைகள் அனைத்துடன் கூடிய ஒப்பற்ற ரத்தினங்களையும் கொண்டதுமான வஜ்ர நகரத்தைப் பெறுவது என்ற இரு வரங்களைக் கேட்டான்.(7-9) பேரசுரன் வஜ்ரநாபன் அந்த வரத்தின் மூலம் தான் வேண்டியதைப் பெற்றுக் கொண்டு வஜ்ர நகரத்தில் வாழ்ந்து வந்தான்.(10) ஓ! மன்னா, இந்த வரத்தைப் பெற்ற அந்தப் பேரசுரனின் புகலிடத்தை நாடி வந்த கோடிக்கணக்கான அசுரர்கள், அவனது தோட்டங்களிலும், அழகிய கிளை நகரங்கள் பலவற்றிலும் வாழ்ந்து வந்தனர்.(11) ஓ! மன்னா, தேவர்களின் பகைவர்களான அவர்கள் நல்ல உடல் நலத்துடனும், ஊட்டத்துடனும், நிறைவுடனும் அங்கே வாழ்ந்து வந்தனர்.(12)

வஜ்ரநாபோ⁴(அ)த² து³ஷ்டாத்மா வரதா³னேன த³ர்பித꞉ |
புரே(அ)ஸ்ய சாத்மனஷ்²சைவ ஜக³த்³பா³தி⁴துமுத்³யத꞉ ||2-91-13

மஹேந்த்³ரமப்³ரவீத்³க³த்வா தே³வலோகம் விஷா²ம்பதே |
அஹமீஷி²துமிச்சா²மி த்ரைலோக்யம் பாகஷா²ஸன ||2-91-14

அத²வா மே ப்ரயச்ச²ஸ்வ யுத்³த⁴ம் தே³வக³ணேஷ்²வர |
ஸாமான்யம் ஹி ஜக³த்க்ருத்ஸ்னம் காஷ்²யபானாம் மஹாத்மனாம் ||2-91-15

ஒரு காலத்தில் தான் பெற்ற வரத்தினாலும், தன்னுடைய நகரத்தினாலும் செருக்கில் மிதந்து வந்த தீயவனான வஜ்ரநாபன், உலகை ஒடுக்க முற்பட்டான்.(13) ஓ! மன்னா, அவன் தேவர்களின் மன்னனிடம் {இந்திரனிடம்} சென்று, “ஓ! பாகனைக் கொன்றவனே, மூவுலகங்கள் அனைத்தும் கசியபரின் உயரான்ம மகன்கள் அனைவருக்கும் உரிய பொது உடைமைகளாகும். எனவே, நான் மூவுலகங்களையும் ஆள விரும்புகிறேன். ஓ! தேவர்களின் மன்னா, என்னுடைய முன்மொழிவை நீ ஏற்றுக் கொள்ளாவிட்டால் என்னுடன் போரிடுவாயாக” என்றான்.(14,15)

ஸ ப்³ருஹஸ்பதினா ஸார்த⁴ம் மந்த்ரயித்வா மஹேஷ்²வர꞉ |
வஜ்ரநாப⁴ம் ஸுரஷ்²ரேஷ்ட²꞉ ப்ரோவாச குருவம்ஷ²ஜ ||2-91-16

ஸத்ரேஷு தீ³க்ஷித꞉ ஸௌம்ய கஷ்²யபோ ந꞉ பிதா முனி꞉ |
தஸ்மின்வ்ருத்தே யதா²ந்யாய்யம் ததா² ஸ ஹி கரிஷ்யதி ||2-91-17

ஓ! குருவின் வழித்தோன்றலே {ஜனமேஜயனே}, தேவர்களில் முதன்மையான மஹேந்திரன், வஜ்ரநாபனின் சொற்களைக் கேட்டு, பிருஹஸ்பதியுடன் ஆலோசித்து,(16) “ஓ! மென்மையானவனே, நம் தந்தையான கசியப முனிவர் இப்போது தவத்தில் ஈடுபட்டு வருகிறார். அது நிறைவடைந்ததும் அவரே நியாயமானதைச் செய்வார்” என்றான்.(17)

தத꞉ ஸ பிதரம் க³த்வா கஷ்²யபம் தா³னவோ(அ)ப்³ரவீத் |
யதோ²க்தம் தே³வராஜேன தமுவாசாத² கஷ்²யப꞉ ||2-91-18

ஸத்ரே வ்ருத்தே கரிஷ்யாமி யதா²ந்யாயம் ப⁴விஷ்யதி |
த்வம் து வஜ்ரபுரே புத்ர வஸ க³ச்ச² ஸமாஷ்²ரித꞉ ||2-91-19

அந்தத் தானவன் தன்னுடைய தந்தையான கசியபரிடம் சென்று தன் விருப்பத்தைத் தெரிவித்தான். தேவர்களின் மன்னன் சொன்னதையே கசியபரும் சொன்னார்.(18) அவர் {கசியபர்}, “ஓ! மகனே, வஜ்ர நகரத்திற்குச் சென்று தற்கட்டுப்பாட்டுடன் அங்கே வாழ்வாயாக. யஜ்ஞம் நிறைவடைந்ததும் நியாயமானதைச் செய்கிறேன்” என்றார்.(19)

ஏவமுக்தே வஜ்ரநாப⁴꞉ ஸ்வமேவ நக³ரம் க³த꞉ |
மஹேந்த்³ரோ(அ)பி யயௌ தே³வோ த்³வாரகாம் த்³வாரஷா²லினீம் ||2-91-20

க³த்வா சாந்தர்ஹிதோ தே³வோ வாஸுதே³வமதா²ப்³ரவீத் |
வஜ்ரநாப⁴ஸ்ய வ்ருத்தாந்தம் தமுவாச ஜனார்த³ன꞉ ||2-91-21

ஷௌ²ரேருபஸ்தி²தோ தே³வ வாஜிமேதோ⁴ மஹாக்ரது꞉ |
தஸ்மின்வ்ருத்தே வஜ்ரநாப⁴ம் பாதயிஷ்யாமி வாஸவ ||2-91-22

தத்ரோபாயம் ப்ரவேஷே² து சிந்தயாவ꞉ ஸதாம் க³தே꞉ |
நானிச்ச²யா ப்ரவேஷோ²(அ)ஸ்தி தத்ர வாயோரபி ப்ரபோ⁴ ||2-91-23

இவ்வாறு சொல்லப்பட்ட வஜ்ரநாபன் தன் நகருக்குத் திரும்பிச் சென்றான். மஹேந்திரன், பல வாயில்களைக் கொண்ட துவாராவதி நகருக்குச் சென்று,(20) வஜ்ரநாபன் சொன்னதை வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்} கமுக்கமாகச் சொன்னான். அப்போது ஜனார்த்தனன்,(21) “ஓ! வாசவா, இப்போது வசுதேவரின் குதிரை வேள்வி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அது நிறைவடைந்ததும் நான் வஜ்ரநாபனைக் கொல்வேன்.(22) ஓ! தலைவா, ஓ! அறவோரின் புகலிடமே, வஜ்ரநாபனின் விருப்பமில்லாமல் காற்றாலும் அவனது நகருக்குள் புக முடியாது. வசதியான ஒரு நேரத்தில் நாம் அதற்குள் நுழைவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்” என்றான்.(23)

ததோ க³தோ தே³வராஜோ வாஸுதே³வேன ஸத்க்ருத꞉ |
வாஜிமேதே⁴ ச ஸம்ப்ராப்தே வஸுதே³வஸ்ய பா⁴ரத ||2-91-24

தஸ்மின்யஜ்ஞே வர்தமானே ப்ரவேஷா²ர்த²ம் ஸுரோத்தமௌ |
சிந்தயாமாஸதுர்வீரௌ தே³வராஜாச்ய்தாவுபௌ⁴ ||2-91-25

ஓ! பரதனின் வழித்தோன்றலே, அந்தக் குதிரைவேள்வியில் தேவர்களின் மன்னன் {இந்திரன்}, வாசுதேவனின் மகனால் {பிரத்யும்னனால்} கௌரவிக்கப்பட்டுப் புறப்பட்டுச் சென்றான்.(24) வீரமிக்க வாசவனும் {இந்திரனும்}, தேவர்களில் முதன்மையான கேசவனும் வசுதேவரின் வேள்வி நிறைவடைவதற்கு முன்பே வஜ்ர நகரத்திற்குள் நுழைவதற்கான வழிமுறைகளைச் சிந்திக்கத் தொடங்கினர்.(25)

தத்ர யஜ்ஞே வர்தமானே ஸுநாட்யேன நடாஸ்ததா³ |
மஹர்ஷீம்ஸ்தோஷயாமாஸ ப⁴த்³ரநாமேதி நாமத꞉ ||2-91-26

தம் வரேண முநிஷ்²ரேஷ்டா²ஷ்²ச²ந்த³யாமாஸுராத்மவத் |
ஸ வவ்ரே து நடோ ப⁴த்³ரோ வரம் தே³வேஷ்²வரோபம꞉ ||2-91-27

தே³வேந்த்³ரக்ருஷ்ணச்ச²ந்தே³ன ஸரஸ்வத்யா ப்ரசோதி³த꞉ |
ப்ரணிபத்ய முநிஷ்²ரேஷ்டா²னஷ்²வமேதே⁴ ஸமாக³தான் ||2-91-28

வசுதேவனின் வேள்வியில் பத்ரன் என்ற பெயர் கொண்ட நடிகன் ஒருவன், தன்னுடைய அழகிய நடிப்பால் பெரும் முனிவர்களை மகிழ்ச்சியடையச் செய்தான்.(26) அப்போது அந்த முன்னணி முனிவர்கள் ஒரு வரத்தை வேண்டுமாறு அவனிடம் கேட்டனர். தேவர்களின் மன்னனுக்கு {இந்திரனுக்கு} ஒப்பானவனும், நடிகனுமான பத்ரன், அந்தக் குதிரை வேள்வியில் கூடியிருந்த சிறந்த முனிவர்களான அவர்களை வணங்கி, கல்வி தேவியினால் {சரஸ்வதியினால்} தூண்டப்பட்டது போலக் கிருஷ்ணனின் விருப்பத்திற்கேற்ற வகையில் பின்வரும் வரத்தை வேண்டினான்.(27,28)

நட உவாச
போ⁴ஜ்யோ த்³விஜானாம் ஸர்வேஷாம் ப⁴வேயம் முநிஸத்தமா꞉ |
ஸப்தத்³வீபாம் ச ப்ரூதி²வீம் விசரேயமிமாமஹம் ||2-91-29

ப்ரஸித்³தா⁴காஷ²க³மன꞉ ஷ²க்னுவம்ஷ்²ச விஷே²ஷத꞉ |
அவத்⁴ய꞉ ஸர்வபூ⁴தானாம் ஸ்தா²வரா யே ச ஜங்க³மா꞉ ||2-91-30

யஸ்ய யஸ்ய ச வேஷேண ப்ரவிஷே²யமஹம் க²லு |
ம்ருதஸ்ய ஜீவதோ வாபி பா⁴வ்யேனோத்பாதி³தஸ்ய வா ||2-91-31

ஸ தூர்யஸ்தாத்³ருஷ²꞉ ஸ்யாம் வை ஜராரோக³விவர்ஜித꞉ |
துஷ்தேயுர்முனயோ நித்யமன்யே ச மம ஸர்வதா³ ||2-91-32

அந்த நடிகன் {பத்ரன்}, “ஓ! முனிவர்களில் முதன்மையானவர்களே, நான் இருபிறப்பாளர்கள் அனைவரின் உணவென ஆவேனாக[“எல்லா த்விஜர்களுக்கும் நான் அனுபவிக்கத் தக்கவனாக ஆக வேண்டும்”]; தனித்தீவுகளாக இருக்கும் ஏழு கண்டங்களைக் கொண்ட பூமி முழுவதும் செல்லக்கூடியவன் ஆவேனாக;(29) எத்தடையுமின்றி நான் வானம் முழுவதும் திரிபவன் ஆவேனாக; பலத்தைக் கொடையாகப் பெற்றவனும், அசையும் உயிரினங்களாலும், அசையாத உயிரினங்களாலும் கொல்லப்பட முடியாதவனும் ஆவேனாக.(30) பிறந்த, இறந்த, பிறக்கப்போகிற எந்த வடிவத்தையும் நான் ஏற்கவல்லவன் ஆவேனாக. {அனைத்து வகையிலும் அவர்களைப் போன்றே தோன்றும் {நடிக்கும்} திறமையுடன் இருப்பேனாக}.(31) எனக்கு முதுமை நேராதிருக்கட்டும், முனிவர்கள் எப்போதும் என்னிடம் நிறைவடைந்தவர்களாக இருக்கட்டும்” என்று கேட்டான்.(32)

ஏவமஸ்த்விதி ஸம்ப்ரோக்தோ ப்³ராஹ்மணைர்ந்ருபதே நட꞉ |
ஸப்தத்³வீபாம் வஸுமதீம் பர்யடத்யமரோபம꞉ ||2-91-33

புராணி தா³னவேந்த்³ராணாமுத்தராம்ஷ்²ச குரூம்ஸ்ததா² |
ப⁴த்³ராஷ்²வான்கேதுமாலாம்ஷ்²ச காலாப்⁴ரத்³வீபமேவ ச ||2-91-34

பர்வணீஷு து ஸர்வாஸு த்³வாரகாம் யது³மண்டி³தாம் |
ஆயாதி வரத³த்த꞉ ஸ லோகவீரோ மஹானட꞉ ||2-91-35

ஓ! மன்னா, அந்த முனிவர்கள், “அப்படியே ஆகட்டும்” என்றனர். தேவனைப் போன்ற அவன் {பத்ரன்}, தனித்தீவுகளான ஏழு கண்டங்களை {த்வீபங்களைக்} கொண்ட பூமி முழுவதும் திரியத் தொடங்கினான்.(33) தானவ மன்னர்களின் நகரங்களிலும், உத்தரகுரு, பத்ராஸ்வம், கேதுமாலம் என்ற நாடுகளிலும், காலாம்ரத்தீவிலும் தன்னுடைய நிகழ்ச்சிகளை நடத்தத் தொடங்கினான்.(34) இந்த வரத்தைப் பெற்ற அந்தப் பெரும் நடிகன், ஒவ்வொரு பர்வத்தின் போதும் யாதவர்களால் அலங்கரிக்கப்பட்ட துவாரகைக்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.(35)

ததோ ஹம்ஸாந்தா⁴ர்தராஷ்ட்ராந்தே³வலோகநிவாஸின꞉ |
உவாச ப⁴க³வாஞ்ஷ²க்ர꞉ ஸாந்த்வயித்வா ஸுரேஷ்²வர꞉ ||2-91-36

ப⁴வந்தோ ப்⁴ராதரோ(அ)ஸ்மாகம் காஷ்²யபா தே³வபக்ஷிண꞉ |
விமானவாஹா தே³வானம் ஸுக்ருதீனாம் ததை²வ ச ||2-91-37

தே³வாநாமஸ்தி கர்தவ்யம் கார்யம் ஷ²த்ருவதா⁴ன்விதம் |
தத்கர்தவ்யம் ந மந்த்ரஷ்²ச பே⁴த்தவ்யோ ந꞉ கத²ஞ்சன ||2-91-38

ந குர்வதாம் தே³வதாஜ்ஞாமுக்³ரோ த³ண்ட³꞉ பதேத³பி |
ஸர்வத்ராப்ரதிஷித்³த⁴ம் வோ க³மனம் ஹம்ஸஸத்தமா꞉ ||2-91-39

க³த்வாப்ரவேஷ்²யமன்யேஷாம் வஜ்ரநாப⁴புரோத்தமம் |
இதோ(அ)ந்த꞉புரவாபீஷு சரத்⁴வமுசிதம் ஹி வ꞉ ||2-91-40

ஒரு நாள் தேவர்களின் மன்னனும், தெய்வீகனுமான சக்ரன் {இந்திரன்}, தார்தராஷ்டிர அன்னப்பறவைகளிடம்,(36) “ஓ! தெய்வீகப் பறவைகளே, நீங்கள் தேவர்கள், அறவோர் ஆகியோரின் விமானங்களாக இருப்பினும், கசியபரால் பெறப்பட்ட என்னுடன் பிறந்தவர்களுமாவீர்கள்.(37) இப்போது தேவர்களின் பகைவரைக் கொல்லும் பெருங்கடமை நமக்கிருக்கிறது. அதை நீங்கள் நிறைவேற்ற வேண்டும். இந்த ஆலோசனையை வெளிப்படுத்தாமல் கவனமாக இருப்பீராக.(38) தேவர்களின் ஆணைகளுக்கு நீங்கள் கீழ்ப்படியவில்லையெனில் கடுந்தண்டனைகளைப் பெறுவீர்கள். ஓ! அன்னங்களில் முதன்மையானவர்களே, நீங்கள் விரும்பியவாறு எங்கும் செல்லவல்லவர்கள்.(39) எனவே, வேறு யாரும் நுழைய முடியாத வஜ்ரநாபனின் மிகச் சிறந்த நகரத்திற்குச் சென்று அவனது அந்தப்புரத்தில் உள்ள தடாகங்களில் நீங்கள் திரிய வேண்டும்.(40)

தஸ்யாஸ்தி கன்யாரத்னம் ஹி த்ரைலோக்யாதிஷ²யம் ஷு²ப⁴ம் |
நாம்னா ப்ரபா⁴வதீ நாம சந்த்³ராபே⁴வ ப்ரபா⁴வதீ ||2-91-41

வரதா³னேன ஸா லப்³தா⁴ மாத்ரா கில வரானனா |
ஹைமவத்யா மஹாதே³வ்யா꞉ ஸகாஷா²தி³தி ந꞉ ஷ்²ருதம் ||2-91-42

ஸ்வயம்வரா ச ஸா கன்யா ப³ந்து⁴பி⁴꞉ ஸ்தா²பிதா ஸதீ |
ஆத்மேச்ச²யா பதிம் ஹம்ஸா வரயிஷ்யதி ஷோ²ப⁴னா || 2-91-43

தத்³ப⁴வத்³பி⁴ர்கு³ணா வாச்யா꞉ ப்ரத்³யும்னஸ்ய மஹாத்மன꞉ |
ஸத்³பூ⁴த꞉ குலரூபஸ்ய ஷீ²லஸ்ய வயஸஸ்ததா² ||2-91-44

யதா³ ஸா ரக்தபா⁴வா ச வஜ்ரநாப⁴ஸுதா ஸதீ |
தஸ்யா꞉ ஸகாஷா²த்ஸந்தே³ஷோ² நயிதவ்ய꞉ ஸமாதி⁴னா ||2-91-45

ப்ரத்³யும்னஸ்ய புனஸ்தஸ்மாதா³னயத்⁴வம் ததை²வ ச |
ஸ்வபு³த்³த்⁴யா ப்ராப்தகாலம் ச ஸம்விதே⁴யம் ஹிதம் மம ||2-91-46

நேத்ரவக்த்ரப்ரஸாத³ஷ்²ச கர்தவ்யஸ்தத்ர ஸர்வதா² ||2-91-47

ததா² ததா² கு³ணா வாச்யா꞉ ப்ரத்³யும்னஸ்ய மஹாத்மன꞉ |
யதா² யதா² ப்ரபா⁴வத்யா மனஸ்தத்ர ப⁴வேத்ஸ்தி²தம் ||2-91-48

வ்ருத்தாந்தஷ்²சானுதி³வஸம் ப்ரதே³யோ மம ஸர்வதா² |
த்³வாரவத்யாம் ச க்ருஷ்ணஸ்ய ப்⁴ராதுர்மம யவீயஸ꞉ ||2-91-49

தாவத்³யத்னஷ்²ச கர்தவ்ய꞉ ப்ரத்³யும்னோ யாவதா³த்மவித் |
பர்யாவர்தேத்³வராரோஹாம் வஜ்ரநாப⁴ஸுதாம் விபு⁴꞉ ||2-91-50

அந்த வஜ்ரநாபனுக்கு, மூவுலகங்களிலும் ஒப்பற்ற அழகைக் கொண்டவளும், சந்திரக் கதிர்களைப் போன்று வெண்ணிறம் கொண்டவளும், பெண்களில் ரத்தினமும், பிரபாவதி என்ற பெயர் கொண்டவளுமான மகள் ஒருத்தி இருக்கிறாள்.(41) ஹைமவதி தேவியால் அருளப்பட்ட வரத்தின் மூலம் அந்த அழகிய மகள் அவளது அன்னைக்குக் கிடைத்தாள்.(42) ஓ! அன்னங்களே, அந்த அழகிய பெண்ணை அவளது தோழியர் ஸ்வயம்வரத்தில் நிறுத்த போகின்றர், அவளும் தான் விரும்பிய கணவனைத் தேர்ந்தெடுக்கப் போகிறாள்.(43) உயரான்ம பிரத்யும்னனின் பல்வேறு திறன்களையும், அவனது குடும்பம், அழகு, குணம், வயது ஆகியவற்றையும் அவளிடம் நீங்கள் விளக்கிச் சொல்வீராக.(44) வஜ்ரநாபனின் மகளான அந்தக் கன்னிகை பிரத்யும்னனிடம் அன்பு கொள்கிறாள் என்பதைக் காணும்போது, அந்தச் செய்தியைக் கவனமாகக் கொண்டு சென்று,(45) பிரத்யும்னனின் பதில் செய்தியை அவளுக்குத் தெரிவிப்பீராக. தூது செல்லும் இந்தப் பணியில், உங்கள் நுண்ணறிவுக்குத் தகுந்த வகையில்,(46) அவர்களின் கண்களையும், முகங்களையும் ஆள்வீராக {கண்காணிப்பீராக}[“தக்க காலத்தில் எனக்கு ஹிதமானது உங்கள் ஸ்வய புத்தியால் செய்யத்தக்கது. ப்ரபாவதியின் நேத்ரமும், முகமும் மலரும்படி உங்களால் செய்யத்தக்கது” ]. இவ்வாறு நீங்கள் எனக்கு நன்மையைச் செய்ய வேண்டும்.(47) ஓ! அன்னங்களே, பிரபாவதியின் மனத்தை ஈர்ப்பது போன்ற வகையில் பிரத்யும்னனின் திறன்கள் அனைத்தையும் நீங்கள் விளக்கிச் சொல்ல வேண்டும்.(48) அங்கே நடப்பனவற்றை எனக்கும், துவாராவதியில் உள்ள என் தம்பி கிருஷ்ணனுக்கும் தினமும் சொல்ல வேண்டும்.(49) தற்கட்டுப்பாட்டைக் கொண்ட தலைவன் பிரத்யும்னன், வஜ்ரநாபனின் மகளை அபகரிக்கும் வரை நீங்கள் இவ்வாறு முயற்சி செய்ய வேண்டும்.(50)

அவத்⁴யாஸ்தே து தே³வானாம் ப்³ரஹ்மணோ வரத³ர்பிதா꞉ |
தே³வபுத்ரைர்ஹி ஹந்தவ்யா꞉ ப்ரத்³யும்னப்ரமுகை²ர்யுதி⁴ ||2-91-51

நடோ த³த்தவரஸ்தஸ்ய வேஷமாஸ்தா²ய யாத³வா꞉ |
ப்ரத்³யும்நாத்³யா க³மிஷ்யந்தி வஜ்ரநாப⁴விநாஷ²னா꞉ ||2-91-52

ஏதச்ச ஸர்வம் கர்தவ்யமன்யச்ச ஸர்வமேவ ஹி |
ப்ராப்தகாலம் விதா⁴தவ்யமஸ்மாகம் ப்ரியகாம்யயா ||2-91-53

ப்ரவேஷ²ஸ்தத்ர தே³வானாம் நாஸ்தி ஹம்ஸா꞉ கத²ஞ்சன |
வஜ்ரநாபே⁴ப்ஸிதே தத்ர ப்ரவேஷ²꞉ க²லு ஸர்வதா² ||2-91-54

பிரம்மன் அளித்த வரத்தால் செருக்கில் மிதக்கும் அந்தத் தானவர்களைத் தேவர்களால் கொல்ல முடியாது. எனவே பிரத்யும்னனும், தேவர்களின் பிற மகன்களும்தான் போரில் அவர்களை அழிக்க வேண்டும்.(51) பத்ரன் என்ற பெயரைக் கொண்ட நடிகன் ஒருவன், (அவனது நகருக்குள் நுழையும்) வரத்தை இப்போது அடைந்திருக்கிறான். எனவே, பிரத்யும்னன் தலைமையிலான யாதவர்கள் வேடந்தரித்துக் கொண்டு வஜ்ரநாபனின் நகருக்குள் நுழைவார்கள்.(52) ஓ! தார்தராஷ்டிரர்களே, நான் சொன்ன இவை யாவற்றையும் நீங்கள் செய்ய வேண்டும். எனக்கு இந்த நன்மையைச் செய்வதைத் தவிர்த்துக் காலத்திற்குத் தகுந்த பயனை விளைவிக்கும் செயல்களையும் நீங்கள் செய்ய வேண்டும்.(53) ஓ! அன்னங்களே, வஜ்ரன் விரும்பினால் மட்டுமே அவனுடைய நகருக்குள் நீங்கள் நுழைய முடியும். தேவர்களால் எந்த வழிமுறைகளினாலும் அங்கே நுழைய முடியாது” என்றான் {இந்திரன்}.(54)

இதி ஷ்²ரீமஹாபா⁴ரதே கி²லேஷு ஹரிவம்ஷே² விஷ்ணுபர்வணி
வஜ்ரநாப⁴வதே⁴ ஏகனவதிதமோ(அ)த்⁴யாய꞉

————–—————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாஸ பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: