ஸ்ரீ விஷ்ணு பர்வம்–அத்யாயம் – 83–(யஷவிஸ்தரோ துஷ்டநிக்ரஹஷ்ச)–யாகத்தடை செய்த அசுரர்கள் |–

பிரம்மதத்தர் செய்த யாகம்; யாகத்தைக் காத்த வசுதேவன்; யாகக் காணிக்கையில் பங்கு கேட்ட அசுரர்கள்; பிரம்மதத்தரின் மகள்களைக் கடத்திச் சென்ற அசுரர்கள்; அசுரர்களுக்கு அலோசனை வழங்கிய நாரதர்.

வைஷ²ம்பாயன உவாச
ஏதஸ்மின்னேவ காலே து சதுர்வேத³ஷட³ங்க³வித் |
ப்³ராஹ்மணோ யாஜ்ஞவல்க்யஸ்ய ஷி²ஷ்யோ த⁴ர்மகு³ணான்வித꞉ ||2-83-1

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “அந்த நேரத்தில், ஓ மன்னா, யாஜ்ஞவல்கியரின் சீடரும், நான்கு வேதங்களையும், ஆறு அங்கங்களையும் நன்கு அறிந்தவரும், அறநெறி சார்ந்தவரும்,

ப்³ரஹ்மத³த்தேதி விக்²யாதோ விப்ரோ வாஜஸனேயிவான் |
அஷ்²வமேத⁴꞉ க்ருதஸ்தேன வஸுதே³வஸ்ய தீ⁴மத꞉ ||2-83-2

பிரம்மதத்தன் என்ற பெயரைக் கொண்டவருமான வாஜஸ்நேய பிராமணர் ஒருவர்

ஸ ஸம்வத்ஸரதீ³க்ஷாயாம் தீ³க்ஷித꞉ ஷட்புராலய꞉ |
ஆவர்தாயா꞉ ஷு²பே⁴ தீரே ஸுனத்³யா முநிஜுஷ்டயா ||2-83-3

ஷத்புர நகரத்தில் முனிவர்களால் அடையப்பட்ட ஆவர்த்தகை எனும் நல்லாற்றின் புனிதக்கரையில் ஓராண்டு காலம் நீளும் யஜ்ஞம் செய்யும் தீக்ஷை பெற்றார்[யாஜ்ஞவல்கியரின் சீடரும், நான்கு வேதங்களையும், ஆறு அங்கங்களையும் நன்கு அறிதவரும், அறநெறி சார்ந்தவரும், வாஜஸ்னேய ஸம்ஹிதையைக் கற்றவரும், பிரம்மதத்தன் என்ற பெயரைக் கொண்டவருமான பிராமணர் ஒருவர், ஷட்புர நகரத்தில் முனிவர்களால் அடையப்பட்ட ஆவர்த்தகை எனும் மங்கலமான ஆற்றின் புனிதக்கரையில் ஓராண்டு காலம் நீளும் வேள்வியின் தொடக்கச் சடங்கைச் செய்தார்.].

ஸகா² ச வஸுதே³வஸ்ய ஸஹாத்⁴யாயீ த்³விஜோத்தம꞉ |
உபாத்⁴யாயஷ்²ச கௌரவ்ய க்ஷீரஹோதா மஹாத்மன꞉ ||2-83-4

ஓ! குருவின் அரச வழித்தோன்றலே {குருகுலத்தவனே/ ஜனமேஜயனே}, வசுதேவனின் நண்பரும், அவனுடன் கல்வி பயின்ற மாணவருமானதால், ஓர் ஆசானும், பேரான்மா கொண்டவரும், அலுவல்முறை புரோகிதரும், இருபிறப்பாளர்களில் முதன்மையானவருமான அவர் {பிரம்மதத்தர்},

வஸுதே³வஸ்தத்ர யாதோ தே³வக்யா ஸஹித꞉ ப்ரபோ⁴ |
யாஜமான்யே ஷட்புரஸ்த²ம் யதா² ஷ²க்ரோ ப்³ருஹஸ்பதிம் ||2-83-5

யஜ்ஞம் செய்வதற்காக ஷட்புரத்திற்குச் சென்ற போது, (தேவர்களின் மன்னனான) சக்ரன் (தங்கள் ஆசானான) பிருஹஸ்பதியைப் பாதுகாப்பதைப் போலவே அவரை {பிரம்மதத்தரைப்} பாதுகாப்பதற்காகத் தேவகியுடன் சேர்ந்து வசுதேவன் அங்கே சென்றான்.

தத்ஸத்ரம் ப்³ரஹ்மத³த்தஸ்ய ப³ஹ்வன்னம் ப³ஹுத³க்ஷிணம் |
உபாஸந்தி முநிஷ்²ரேஷ்டா² மஹாத்மானோ த்³ருட⁴வ்ரதா꞉ ||2-83-6

உணவும், கொடைகளும் நிறைந்திருந்த பிரம்மதத்தரின் அந்த யஜ்ஞத்தில் {வேள்வியில்} அர்ப்பணிப்பில் உறுதிமிக்கப் பெரியோரும்

வ்யாஸோ(அ)ஹம் யாஜ்ஞவல்க்யஷ்²ச ஸுமந்துர்ஜைமிநிஸ்ததா² |
த்⁴ற்^திமாஞ்ஜாப³லிஷ்²சைவ தே³வலாத்³யாஷ்²ச பா⁴ரத ||2-83-7

ஓ! பாரதக் குலத்தோனே, வியாசர், யாஜ்ஞவல்கியர், சுமந்து, ஜைமினி, திருதிமானான ஜாபாலி, தேவலர் ஆகியோரும், முன்னணி முனிவர்கள் பிறரும் அங்கே இருந்தனர். {வைசம்பாயனனான} நானும் அங்கே சென்றிருந்தேன்.

ருத்³த்⁴யானுரூபயா யுக்தம் வஸுதே³வஸ்ய தீ⁴மத꞉ |
யத்ரேப்ஸிதாந்த³தௌ³ காமாந்தே³வகீ த⁴ர்மசாரிணீ ||2-83-8

அந்த யஜ்ஞத்தில், பூமியில் அவதரித்திருக்கும் அண்டப்படைப்பாளனான வாசுதேவனின் {கிருஷ்ணனின்} அருளால் அறம்சார்ந்த தேவகி, வசுதேவனின் பெருமைக்குத்தகுந்த முறையில் இரவலர்கள் விரும்பிய பொருட்களை அவர்களுக்கு மத்தியில் கொடையளித்தாள்.

வாஸுதே³வப்ரபா⁴வேண ஜக³த்ஸ்ரஷ்டுர்மஹீதலே |
தஸ்மின்ஸத்ரே வர்தமானே தை³த்யா꞉ ஷட்புரவாஸின꞉ ||2-83-9

யஜ்ஞம் தொடங்கியதும், ஷத்புரவாசிகளும், வரங்களால் செருக்கடைந்தவர்களுமான நிகும்பனும், பிற தைத்தியர்களும் அங்கே கூடி,

நிகும்பா⁴த்³யா꞉ ஸமாக³ம்ய தமூசுர்வரத³ர்பிதா꞉ |
கார்யதாம் யஜ்ஞபா⁴கோ³ ந꞉ ஸோமம் பாஸ்யாமஹே வயம் |
கன்யாஷ்²ச ப்³ரஹ்மத³த்தோ நோ யஜமான꞉ ப்ரயச்ச²து ||2-83-10

“எங்களுக்குரிய யஜ்ஞபாகத்தை {வேள்விப்பங்கைக்} கொடுப்பீராக. நாங்கள் சோம பானம் பருகப் போகிறோம், பிரம்மதத்தன் தன்னுடைய மகள்களை எங்களுக்குக் கொடுக்கட்டும்

ப³ஹ்வ்ய꞉ ஸந்த்யஸ்ய கன்யாஷ்²ச ரூபவத்யோ மஹாதமன꞉ |
ஆஹூய தா꞉ ப்ரதா³தவ்யா꞉ ஸர்வதை²வ ஹி ந꞉ ஷ்²ருதம் ||2-83-11

இந்தப் பெரும் மனிதனிடம் அழகிய மகள்கள் பலர் இருப்பதாக நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். எனவே, அவன் அவர்களை அழைத்து எங்களிடம் கொடுக்கட்டும்

ரத்னானி ச ப்³ரஹ்மத³த்தோ விஷி²ஷ்டானி த³தா³து ந꞉ |
அன்யதா² து ந யஷ்டவ்யம் வயமாஜ்ஞாபயாமஹே ||2-83-12

தான் கொண்ட மதிப்புமிக்க ரத்தினங்களையும் அவன் எங்களுக்குக் கொடுக்கட்டும். இந்த ஆணையை மீறினால், இந்த யஜ்ஞத்தை நடத்த நாங்கள் அவனை அனுமதிக்க மாட்டோம்” என்றனர்.

ஏதச்ச்²ருத்வா ப்³ரஹ்மத³த்தஸ்தானுவாச மஹாஸுரான் |
யஜ்ஞபா⁴கோ³ ந விஹித꞉ புராணே(அ)ஸுரஸத்தமா꞉ ||2-83-13

இதைக் கேட்ட பிரம்மதத்தர், அந்தப் பேரசுரர்களிடம், “ஓ! முன்னணி அசுரர்களே, வேள்விக் காணிக்கைகளில் உங்களுக்கென எந்தப் பங்கும் வேதங்களில் விதிக்கப்படவில்லை

கத²ம் ஸத்ரே ஸோமபானம் ஷ²க்யம் தா³தும் மயா ஹி வ꞉ |
ப்ருச்ச²தேஹ முநிஷ்²ரேஷ்டா²ன்வேத³பா⁴ஷ்யார்த²கோவிதா³ன் ||2-83-14

அவ்வாறிருக்கையில், இந்த யஜ்ஞத்தில் சோமம் பருக நான் எவ்வாறு உங்களை அனுமதிப்பேன்? உங்களுக்கு என் சொற்களில் நம்பிக்கை ஏற்படாவிட்டால், வேதங்களையும், அவற்றின் விளக்கங்களையும் நன்கறிந்த இந்தப் பெரும் முனிவர்களிடம் நீங்கள் கேட்பீராக.

கன்யா ஹி மம யா தே³யாஸ்தாஷ்²ச ஸங்கல்பிதா மயா |
அந்தர்வேத்³யாம் ப்ரதா³தவ்யா꞉ ஸத்³ருஷா²நாமஸம்ஷ²யம் ||2-83-15

வேதங்களைப் பின்பற்றி {கொடுப்பேனென ஏற்கனவே நான் மனத்தில் உறுதி ஏற்றுள்ள} உரிய மணமகன்களுக்கே என் மகள்களை நான் திருமணம் செய்து கொடுப்பேன்; இதுவே என் தீர்மானம்.

ரத்னானி து ப்ரயச்சா²மி ஸாந்த்வேனாஹம் விசிந்த்யதாம் |
ப³லான்னைவ ப்ரதா³ஸ்யாமி தே³வகீபுத்ரமாஷ்²ரித꞉ ||2-83-16

எனினும் நீங்கள் உடன்பட்டால் என்னிடம் உள்ள ரத்தினங்கள் அனைத்தையும் நான் உங்களுக்குத் தருவேன். நீங்கள் உங்கள் பலத்தைக் காட்டினால் தேவகியின் மகனுடைய {கிருஷ்ணனின்} ஆதரவைப் பெற்றவனான நான் அதையும் உங்களுக்குக் கொடுக்க மாட்டேன்” என்றார் {பிரம்மதத்தர்}

நிகும்பா⁴த்³யாஸ்து ருஷிதா꞉ பாபா꞉ ஷட்புரவாஸின꞉ |
யஜ்ஞவாடம் விலுலுடு²ர்ஜஹ்ரு꞉ கன்யாஷ்²ச தாஸ்ததா² ||2-83-17

ஷட்புரத்தைச் சேர்ந்த தீய தானவர்களும், நிகும்பனும், பிறரும், இந்தச் சொற்களைக் கேட்டு, யஜ்ஞத்திற்குரிய பொருட்களை வாரி இறைத்து, அவற்றைச் சிதறச்செய்து அவனுடைய மகள்களையும் அபகரித்துச் செல்லத் தொடங்கினர்.

தத்³த்³ருஷ்ட்வா ஸம்ப்ரவ்ருத்தம் து த³த்⁴யாவானகது³ந்து³பி⁴꞉ |
வாஸுதே³வம் மஹாத்மானம் ப³லப⁴த்³ரம் க³த³ம் ததா² ||2-83-18

அசுரர்களால் வேள்விப் பொருட்கள் கொள்ளையடிக்கப்படுவதைக் கண்ட ஆனகதுந்துபி {வசுதேவன்}, சிறப்புமிக்கக் கிருஷ்ணனையும், பலபத்ரனையும் {பலராமனையும்}, கதனையும் நினைத்தான்

விதி³தார்த²ஸ்தத꞉ க்ருஷ்ண꞉ ப்ரத்³யும்னமித³மப்³ரவீத் |
க³ச்ச² கன்யாபரித்ராணம் குரு புத்ராஷு² மாயயா ||2-83-19

அவன் அவ்வாறு நினைத்த உடனேயே அனைத்தையும் அறிந்து கொண்ட கிருஷ்ணன், {தன் மகன்} பிரத்யும்னனிடம், “ஓ! என் மகனே, செல், உன் மாயா சக்திகளைப் பயன்படுத்தி அந்தக் கன்னியரைக் காப்பாயாக.

யாவத்³யாத³வஸைன்யேன ஷட்புரம் யாம்யஹம் ப்ரபோ⁴ |
ஸ யயௌ ஷட்புரம் வீர꞉ பிதுராஜ்ஞாகரஸ்ததா³ ||2–83-20

ஓ வலிமைமிக்க வீரா, யாதவப் படையுடன் சேர்ந்து விரைவில் நானும் ஷட்புரத்திற்கு {அனுபுரத்திற்குப்} புறப்படுவேன்” என்றான்.
நுண்ணறிவுமிக்கவனும், பெருஞ்சக்திவாய்ந்தவனும், எப்போதும் தந்தைக்குக் கீழ்ப்படிபவனும், வீரனுமான பிரத்யும்னன், இதைக்கேட்டுவிட்டு, ஒரு கணத்திற்குள் {கண்ணிமைக்கும் நேரத்திற்குள்} ஷட்புரத்திற்குச் சென்று,

நிமேஷாந்தரமாத்ரேண க³த்வா காமோ மஹாப³ல꞉ |
கந்யாஸ்தா மாயயா தீ⁴மானுபஜஹ்ரே மஹாப³ல꞉ ||2-83-21

மாயாமயீஷ்²ச க்ருத்வா(அ)ன்யா ந்யஸ்தவான்ருக்மிணீஸுத꞉ |
மா பை⁴ரிதி ச த⁴ர்மாத்மா தே³வகீமுக்தவாம்ஸ்ததா³ ||2-83-22

தன்னுடைய மாயா சக்திகளால் அந்தக் கன்னியரை அபகரித்தான். ருக்மிணியின் அறம் சார்ந்த மகன் {பிரத்யும்னன்}, தன்னுடைய மாயா சக்தியால் அவர்களை {அந்தக் கன்னியரைப்} போன்றே மாயாவடிவங்களை உண்டாக்கி, அவற்றை அந்தத் தைத்தியர்களின் முன் வைத்து, தேவகியிடம், “அஞ்சாதீர்” என்று சொன்னான்.

மாயாமயீஸ்ததோ ஹ்ருத்வா ஸுதா ஹ்யஸ்ய து³ராஸதா³꞉ |
ஷட்புரம் விவிஷு²ர்தை³த்யா꞉ பரிதுஷ்டா நராதி⁴ப ||2-83-23

ஓ! மன்னா, தடுக்கப்பட முடியாதவர்களான அந்தத் தைத்தியர்கள், பிரம்மதத்தரின் மகள்களை விட்டு அந்த மாயக் கன்னியரை அபகரித்துக் கொண்டு தங்கள் நகருக்குள் நிறைவுடன் நுழைந்தனர்.

கர்ம சாஸார்யதே தத்ர விதி⁴த்³ருஷ்டேண கர்மணா |
யத்³விஷி²ஷ்டம் ப³ஹுகு³ணம் தத³பூ⁴ச்ச நராதி⁴ப ||2-83-24

அதன்பிறகு, ஓ! மன்னா, அந்த மகத்தான பெரும் யஜ்ஞம் {வேள்வி}, உரிய சடங்குகளுடன் கொண்டாடப்பட்டது

ஏதஸ்மின்னந்தரே ப்ராப்தா ராஜானஸ்தத்ர பா⁴ரத |
ஸத்ரே நிமந்த்ரிதா꞉ பூர்வம் ப்³ரஹ்மத³த்தேன தீ⁴மதா ||2-83-25

ஓ! பரதனின் வழித்தோன்றலே, நுண்ணறிவுமிக்கப் பிரம்மதத்தரால் அழைக்கப்பட்ட மன்னர்கள் அனைவரும் வேள்விக்களத்தை அடைந்தனர்.

ஜராஸந்தோ⁴ த³ந்தவக்த்ர꞉ ஷி²ஷு²பாலஸ்ததை²வ ச |
பாண்ட³வா தா⁴ர்தராஷ்ட்ராஷ்²ச மாலவா꞉ ஸக³ணாஸ்ததா² ||2-83-26

ஜராசந்தன், தந்தவக்தரன், சிசுபாலன், பாண்டவர்கள், திருதராஷ்டிரனின் மகன்கள், தொண்டர்களுடன் கூடிய மாளவன்,

ருக்மீ சைவாஹ்வ்ருதிஷ்²சைவ நீலோ வா த⁴ர்ம ஏவ ச |
விந்தா³னுவிந்தா³வாவந்த்யௌ ஷ²ல்ய꞉ ஷ²குநிரேவ ச ||2-83-27

ருக்மி, ஆஹ்விருதி, நீலன், தர்மன் ஆகியோரும், அவந்தியின் மன்னர்களான விந்தனும், அனுவிந்தனும், சல்யன் {அல்லது சால்வன்}, சகுனி ஆகியோரும்

ராஜானஷ்²சாபரே வீரா மஹாத்மானோ த்³ருடா⁴யுதா⁴꞉ |
ஆவாஸிதா நாதிதூ³ரே ஷட்புரஸ்ய ச பா⁴ரத ||2-83-28

உன்னதமான போர்வீரர்களான மன்னர்கள் பிறரும் ஷட்புரத்தின் அருகில் முகாம் அமைத்தனர்

தாந்த்³ரூஷ்ட்வா நாரத³꞉ ஷ்²ரீமானசிந்தயத³னிந்தி³த꞉ |
க்ஷத்த்ரஸ்ய யாத³வானாம் ச ப⁴விஷ்யதி ஸமாக³ம꞉ ||2-83-29

இதைக் கண்ட குற்றமற்ற நாரதர், “இந்த யஜ்ஞத்தில் ஷத்திரியர்கள், யாதவர்கள் என அனைவரும் ஒன்றுகூடியுள்ளனர். நிச்சயம் இது பிணக்கிற்கு வழிவகுக்கும். {நானே போருக்குக் காரணமாவேன்}

அத்ர ஹேதுரஹம் யுத்³தே⁴ தஸ்மாத்தத்ப்ரயதாம்யஹம் |
ஏவம் ஸன்சிந்தயித்வாத² நிகும்ப⁴ப⁴வனம் க³த꞉ ||2-83-30

எனவே நான் அதற்கான முயற்சியைச் செய்ய வேண்டும்” என்று நினைத்தார். இவ்வாறு நினைத்துக் கொண்டே அவர் நிகும்பனின் வீட்டை அடைந்தார்.

பூஜித꞉ ஸ நிகும்பே⁴ன தா³னவைஷ்²ச ததா²பரை꞉ |
உபவிஷ்ட꞉ ஸ த⁴ர்மாத்மானிகும்ப⁴மித³மப்³ரவீத் ||2-83-31

அவர் நிகும்பனாலும், பிற தானவர்களாலும் வழிபடப்பட்டார். அற ஆன்மா கொண்ட அந்த முனிவர், அதன் பிறகு தன் இருக்கையில் அமர்ந்து கொண்டு நிகும்பனிடம்,

கத²ம் விரோத⁴ம் யது³பி⁴꞉ க்ருத்வா ஸ்வஸ்தை²ரிஹாஸ்யதே |
யோ ப்³ரஹ்மத³த்த꞉ ஸ ஹரி꞉ ஸ ஹி தஸ்ய விபு⁴꞉ ஸகா² ||2-83-32

“யாதவர்களைப் பகைத்துக் கொண்டு எவ்வாறு இங்கே நீங்கள் சுகமாக அமர்ந்திருக்கிறீர்கள்? பிரம்மதத்தர், கிருஷ்ணனுடைய தந்தையின் {வசுதேவனின்} நண்பன் என்பதை நீங்கள் அறியமாட்டீரா?

ஷ²தானி பாஞ்ச பா⁴ர்யாணாம் ப்³ரஹ்மத³த்தஸ்ய தீ⁴மத꞉ |
ஆனீதா வஸுதே³வஸ்ய ஸுதஸ்ய ப்ரியகாம்யயா || 2-83-33

நுண்ணறிவுமிக்கப் பிரம்மதத்தரின் ஐநூறு மனைவியரும், வசுதேவனின் மகனுடைய {கிருஷ்ணனின்} நிறைவுக்காக வேள்விக்களத்திற்கு அழைக்கப்பட்டிருக்கின்றனர்.

ஷ²தத்³வயம் ப்³ராஹ்மணீனாம் ராஜன்யானாம் ஷ²தம் ததா² |
வைஷ்²யானாம் ஷ²தமேகம் ச ஷூ²த்³ராணாம் ஷ²தமேவ ச ||2-83-34

அவர்களில் இருநூறு பேர் பிராமணர்களுக்குப் பிறந்தவர்கள், நூறு பேர் க்ஷத்திரியர்களுக்குப் பிறந்தவர்கள், நூறு பேர் வைசியர்களுக்குப் பிறந்தவர்கள், இன்னும் நூறு பேர் சூத்திரர்களுக்குப் பிறந்தவர்கள்.

தாபி⁴꞉ ஷு²ஷ்²ரூஷிதோ தீ⁴மாந்து³ர்வாஸ த⁴ர்மவித்தம꞉ |
தேன தாஸாம் வரோ த³த்தோ முனினா புண்யகர்மணா ||2-83-35

ஏகைகஸ்தனயோ ராஜன்னேகைகா து³ஹிதா ததா² |
ரூபேணானுபமா꞉ ஸர்வா வரதா³னேன தீ⁴மத꞉ ||2-83-36

ஓ! மன்னா, கல்விமானும், அறம்சார்ந்தவருமான துர்வாச ரிஷியை அவர்கள் அனைவரும் வழிபட்டனர். அவர், “நீங்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக ஒரு மகனையும், ஒரு மகளையும் அடுத்தடுத்து பெறுவீர்கள்” என்று அவர்கள் அனைவருக்கும் வரமளித்தார்.(35,36)

கன்யா ப⁴வந்தி தனயாஸ்தஸ்யாஸுர புன꞉ புன꞉ |
ஸங்க³மே ஸங்க³மே விஈர ப⁴ர்த்ருபி⁴꞉ ஷ²யனே ஸஹ ||2-83-37

ஓ! வீர அசுரா, அந்த வரத்தால் அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கணவனுடன் கலந்து அழகிய மகள்களை ஈன்றனர். அவர்கள் ஒப்பற்ற அழகைக் கொண்டவர்களாகவும்,

ஸர்வபுஷ்பமயம் க³ந்த⁴ம் ப்ரஸ்ரவந்தி வராங்க³னா꞉ |
ஸர்வதா³ யௌவனே ந்யஸ்தா꞉ ஸர்வாஷ்²சைவ பதிவ்ரதா꞉ ||2-83-38

மென்மையானவர்களாகவும், எப்போதும் இளமை நிறைந்தவர்களாகவும், கற்புள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். அனைத்து மலர்களின் நறுமணமும் அவர்களின் உடல்களில் கமழும்.

ஸர்வா கு³ணைரப்ஸரஸாம் கீ³தந்ருத்யகு³ணோத³யம் |
ஜானந்தி ஸர்வா தை³தேய வரதா³னேன தீ⁴மத꞉ ||2-83-39

ஓ தைத்தியா, அந்த நுண்ணறிவுமிக்க ரிஷியின் {துர்வாசரின்} வரத்தால் ஆடற்பாடற்கலைகளையும், அப்சரஸ்களின் திறன்களையும் அவர்கள் அறிந்தார்கள்; அவர்கள் அனைவரும் நற்சிறப்புகளைக் கொண்டவர்களாக இருக்கின்றனர்

புத்ராஷ்²ச ரூபஸம்பன்னா꞉ ஷா²ஸ்த்ரார்த²குஷ²லாஸ்ததா² |
ஸ்வே ஸ்வே ஸ்தி²தா வர்ணத⁴ர்மே யதா²வத³னுபூர்வஷ²꞉ ||2-83-40

அதே போல அவருடைய {பிரம்மதத்தரின்} மகன்களும், தங்கள் தங்கள் வகைக்குரிய கடமைகளை முறையாகப் பின்பற்றி வருகின்றனர். அவர்கள் புனித உரைகளுக்கு விளக்கம் சொல்லும் புத்திசாலிகளாகவும், அழகர்களாகவும் இருக்கின்றனர்.

தா꞉ கன்யா பை⁴மமுக்²யானாம் த³த்தா꞉ ப்ராணேன தி⁴மதா |
அவஷே²ஷம் ஷ²தம் த்வேகம் யதா³னீதம் கில த்வயா ||2-83-41

ஓ! வீரா, நுண்ணறிவுமிக்கப் பிரம்மதத்தர், கிட்டத்தட்ட தம்முடைய மகள்கள் அனைவரையும் {நானூறு பேரை} முன்னணி பைமர்களுக்கு {பீம குலத்தோருக்குக்} கொடுத்துவிட்டார். எஞ்சிய நூறு பேரை நீங்கள் அபகரித்து வந்திருக்கிறீர்கள்

தத³ர்தே² யாத³வான்வீர யோத⁴யிஷ்யஸி ஸர்வதா² |
ஸஹாயார்த²ம் து ராஜானோ த்⁴ரியந்தாம் ஹேதுபூர்வகம் ||2-83-42

அவர்களுக்காக யாதவர்கள் போரிடுவார்கள். எனவே, ஓ! வீரா, பிற மன்னர்களின் உதவியைப் பெற முறையாக அவர்களை அழைப்பாயாக.

ப்³ரஹ்மத³த்தஸுதார்த²ம் ச ரத்னானி விவிதா⁴னி ச |
தீ³யந்தாம் பூ⁴மிபாலானாம் ஸஹாயார்த²ம் மஹாத்மனாம் ||2-83-43

ஓ! அசுரர்களே, பிரம்மதத்தரின் மகள்களை நீங்களே வைத்துக் கொள்ள விரும்பினால், பெருஞ்சக்திவாய்ந்த மன்னர்களுக்குப் பல்வேறு ரத்தினங்களைக் கொடுத்தும்

ஆதித்²யம் க்ரியதாம் சைவ யே ஸமேஷ்யந்தி வை ந்ருபா꞉ |
ஏவமுக்தே ததா² சக்ருரஸுராஸ்தே(அ)திஹ்ற்^ஷ்டவத் ||2-83-44

இங்கே வரும் மன்னர்கள் அனைவரையும் உன் விருந்தினர்களாக மதித்தும் அவர்களின் உதவியை நீங்கள் நாடுவீராக” என்றார் {நாரதர்}. நாரதரால் இவ்வாறு சொல்லப்பட்ட அசுரர்கள் பெரும் மகிழ்ச்சியுடன் அவரது ஆணைகளை நிறைவேற்றினர்.

லப்³த்⁴வா பஞ்சஷ²தம் கன்யா ரத்னானி விவிதா⁴னி ச |
யதா²ர்ஹேண நரேந்த்³ரைஸ்தா விப⁴க்தா ப⁴க்தவத்ஸலா꞉ ||2-83-45

அந்த மன்னர்கள், பல்வேறு ரத்தினங்களையும், அர்ப்பணிப்புமிக்க ஐநூறு கன்னிகையரையும் பெற்றுத் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர்.

ருதே பாண்டு³ஸுதாண்வீரான்வாரிதா நாரதே³ன தே |
நிமேஷாந்தரமாத்ரேண தத்ர க³த்வா மஹாத்மனா ||2-83-46

மறுபுறம் சிறப்புமிக்க நாரதர் ஒரு கணத்திற்குள் பாண்டுவின் வீர மகன்களிடம் சென்று, அவர்களைத் தடுத்ததால் அவர்கள் அந்தக் காணிக்கையில் எந்தப் பங்கையும் பெற்றுக் கொள்ளவில்லை.

துஷ்டைஸ்தைரஸுரா ஹ்யுக்தா ராஜன்பூ⁴மிபஸத்தமை꞉ |
ஸர்வகாமஸம்ருத்³தா⁴ர்தை²ர்ப⁴வத்³பீ⁴꞉ க²க³மை꞉ ஸ்வயம் ||2-83-47

அதன்பேரில் மகிழ்ச்சி அடைந்த முன்னணி மன்னர்கள் அந்த அசுரர்களிடம், “வானத்தில் செல்லவல்லவர்களும், இன்பத்திற்குரிய பொருட்கள் அனைத்தையும் பெற்றவர்களுமான உங்களைப் போன்ற தெய்வீக வீரர்களால்,

அர்சிதா꞉ ஸ்ம யதா²ந்யாயம் க்ஷத்ரம் கிம் வ꞉ ப்ரயச்ச²து |
க்ஷத்ரம் சார்சிதபூர்வம் ஹி தி³வ்யைர்வீரைர்ப⁴வத்³விதை⁴꞉ ||2-83-48

இதற்கு முன்னர்ப் பலமுறை க்ஷத்திரியர்கள் துதிக்கப்பட்டிருக்கின்றனர். இப்போதும் அவர்கள் முறையாக உங்களால் கௌரவிக்கப்பட்டனர். பதில்மதிப்பாக உங்களுக்கு அவர்கள் என்ன தர வேண்டும்?” என்று கேட்டனர்.

நிகும்போ⁴(அ)தா²ப்³ரவீத்³த்⁴ருஷ்ட꞉ க்ஷத்ரம் ஸுரரிபுஸ்ததா³ |
அனுவர்ணயித்வா க்ஷத்ரஸ்ய மாஹாத்ம்யம் ஸத்யமேவ ச ||2-83-49

தேவர்களின் பகைவனான நிகும்பன் இதைக் கேட்டு இன்பத்தில் நிறைந்தான். அவன், க்ஷத்திரியர்களின் பெருமையையும், வாய்மையையும் விளக்கிவிட்டு அவர்களிடம்

யுத்³த⁴ம் நோ ரிபுபி⁴꞉ ஸார்த⁴ம் ப⁴விஷ்யதி ந்ருபோத்தமா꞉ |
ஸாஹாய்யம் தா³துமிச்சா²மோ ப⁴வத்³பி⁴ஸ்தத்ர ஸர்வதா² ||2-83-50

“ஓ! முன்னணி மன்னர்களே, இன்று எங்கள் பகைவருடன் நாம் போரிட வேண்டும். உங்கள் சக்திக்குத் தகுந்த வகையில் நீங்கள் எங்களுக்கு உதவி செய்வீராக” என்றான்.

ஏவமஸ்த்விதி தானூசு꞉ க்ஷத்ரியா꞉ க்ஷீணகில்பி³ஷா꞉ |
பாண்ட³வேயாந்ருதே வீராஞ்ச்²ருதார்தா²ந்நாரதா³த்³விபோ⁴ ||2-83-51

ஓ! தலைவா, நாரதரிடம் இருந்து உண்மையை அறிந்து கொண்ட பாண்டுவின் வீர மகன்களைத் தவிர, க்ஷத்திரியர்களில் பாவம் நிறைந்த அனைவரும் நிகும்பனின் சொற்களைக் கேட்டு, “அப்படியே ஆகட்டும்” என்றனர்.

க்ஷத்ரியா꞉ ஸந்நிவிஷ்டாஸ்தே யுத்³தா⁴ர்த²ம் குருநந்த³ன |
பத்ன்யஸ்து ப்³ரஹ்மத³த்தஸ்ய யஜ்ஞவாடம் க³தா அபி ||2-83-52

{ஓ! குரு குலத்தோனே, அதன்பிறகு அந்த க்ஷத்திரியர்கள் போருக்கு ஆயத்தமாகினர். பிரம்மதத்தரின் மனைவியரும் யஜ்ஞசாலையை அடைந்தனர்}

க்ருஷ்ணோ(அ)பி ஸேனயா ஸார்த⁴ம் ப்ரயயௌ ஷட்புரம் விபு⁴꞉ |
மஹாதே³வஸ்ய வசனமுத்³வஹன்மனஸா ந்ருப ||2-83-53

மறுபுறம், ஓ! மன்னா, பலம்நிறைந்தவனான கிருஷ்ணன், தன் மனத்தில் மஹாதேவனின் {சிவனின்} சொற்களை நினைவுகூர்ந்து, தன் படையுடன் ஷட்புரத்திற்குப் புறப்பட்டான்.

ஸ்தா²பயித்வா த்³வாரவத்யாமாஹுகம் பார்தி²வம் ததா³ |
ஸ தயா ஸேனயா ஸார்த⁴ம் பௌராணாம் ஹிதகாம்யயா ||2-83-54

தலைவன் வாசுதேவன் {கிருஷ்ணன்}, குடிமக்களின் நலன் விரும்பி ஆஹுகனை {உக்ரசேனனைத்} துவாரகையில் விட்டுவிட்டு படையுடன் ஷட்புரத்தை அடைந்து

யஜ்ஞவாடஸ்யாவிதூ³ரே தே³வோ நிவிவிஷே² விபு⁴꞉ |
தே³ஷே² ப்ரவரகல்யாணே வஸுதே³வப்ரசோதி³த꞉ ||2-83-55

வசுதேவனின் ஆணையின் பேரில் வேள்விக்களத்தின் அருகில் ஒரு மங்கலமான இடத்தில் முகாமிட்டான். பலம்நிறைந்தவனும், அழகனுமான கிருஷ்ணன்,

த³த்தகு³ல்மாப்ரதிஸரம் க்ருத்வா தம் விதி⁴வத்ப்ரபு⁴꞉ |
ப்ரத்³யும்னமடனே ஷ்²ரீமான்ரக்ஷார்த²ம் விநியுஜ்ய ச ||2-83-56

புதர்களைக் கொண்டு அடைதற்கரிதான இடமாக அந்த முகாமை மாற்றி, அங்கே பிரத்யும்னனைக் காவற்பணியில் ஈடுபடுத்தினான்” என்றார் {வைசம்பாயனர்}.

இதி ஷ்²ரீமஹாபா⁴ரதே கி²லேஷு ஹரிவம்ஷே² விஷ்ணுபர்வணி
ஷட்புரவதே⁴ க்ருஷ்ணஸ்ய ஷட்புரக³மனே
த்ர்யஷீ²திதமோ(அ)த்⁴யாய꞉

————–—————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாஸ பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: