ஸ்ரீ விஷ்ணு பர்வம்–அத்யாயம் – 60–(ருக்மிபராஜயம்)–

ருக்மிணியைத் திருமணம் செய்த கிருஷ்ணன்; கிருஷ்ணனிடம் தோல்வியடைந்த ருக்மி; ருக்மிணியின் பிள்ளைகள்; கிருஷ்ணனின் திருமணங்கள்-

வைஶம்பாயந உவாச
க்ருஷ்ணேந ஹ்ரியமாணாம் தாம் ருக்மீ ஶ்ருத்வா து ருக்மிணீம் |
ப்ரதிஜ்ஞாமகரோத்க்ருத்³த³꞉ ஸமக்ஷம் பீ⁴ஷ்மகஸ்ய ஹ ||2-60-1

[ ருக்ம்யுவாச ]
அஹத்வா யுதி⁴ கோ³விந்த³மநாநீய ச ருக்மிணீம் |
குண்டி³நம் ந ப்ரவேக்ஷ்யாமி ஸத்யமேதத்³ப்³ரவீம்யஹம் ||2-60-2

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “ருக்மி, தன் தங்கை {ருக்மினி} கிருஷ்ணனால் கடத்தப்பட்டாள் என்பதைக் கேட்டதும், கோபத்தால் நிறைந்தவனாக, “கிருஷ்ணனைக் கொன்று, ருக்மிணியை மீட்காமல் நான் குண்டின நகரத்திற்கு {குண்டினபுரத்திற்குத்} திரும்பமாட்டேன்” என்று பீஷ்மகனின் முன்பு உறுதிமொழியேற்றான்.(1,2)

ஆஸ்தா²ய ஸ ரத²ம் வீர꞉ ஸமுத³க்³ராயுத⁴த்⁴வஜம் |
ஜவேந ப்ரயயௌ க்ருத்³தோ⁴ ப³லேந மஹதா வ்ருத꞉ ||2-60-3

வீரனான ருக்மி கோபத்தில் இதைச் சொல்லிவிட்டு, பயங்கர ஆயுதங்களும், கொடிகளும் நிறைந்த தேரில் ஏறினான். ஒரு பெரும்படை சூழ விரைவாக அவன் புறப்பட்டுச் சென்றான்

தமந்வயுர்ந்ருபாஶ்சைவ த³க்ஷிணாபத²வர்திந꞉ |
க்ராதோ²(அ)ம்ஶுமாஞ்ச்²ருதர்வா ச வைணுதா³ரிஶ்ச வீர்யவாந் ||2-60-4

பீ⁴ஷ்மகஸ்ய ஸுதாஶ்சாந்யே ரதே²ந ரதி²நாம் வரா꞉ |
க்ரத²கைஶிகமுக்²யாஶ்ச ஸர்வ ஏவ மஹாரதா²꞉ ||2-60-5

பீஷ்மகனின் மகன்களும், தேர்வீரர்களில் முதன்மையானவர்களும், கிராதன், அம்சுமான், சுருதர்வன், வேணுதாரி ஆகியோரும், தக்காணத்தின் மன்னர்களும், கிரதக் கைசிகத்தைச் சேர்ந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பிறரும் அவனைப் பின்தொடர்ந்து சென்றனர்.(4,5)

தே க³த்வா தூ³ரமத்⁴வாநம் ஸரிதம் நர்மதா³மநு |
கோ³விந்த³ம் த³த்³ருஶு꞉ க்ருத்³தா⁴꞉ ஸஹைவ ப்ரியயா ஸ்தி²தம் ||2-60-6

பெருந்தொலைவைக் கடந்த பிறகு அவர்கள் நர்மதை ஆற்றின் அருகே கோவிந்தனையும், அவனது அன்புக்குரிய மனைவியையும் {ருக்மிணியையும்} கண்டனர்.

அவஸ்தா²ப்ய ச தத்ஸைந்யம் ருக்மீ மத³ப³லாந்வித꞉ |
சிகீர்ஷுர்த்³வைரத²ம் யுத்³த⁴மப்⁴யயாந்மது⁴ஸூத³நம் ||2-60-7

ஸ விவ்யாத⁴ சது꞉ஷஷ்ட்யா கோ³விந்த³ம் நிஶிதை꞉ ஶரை꞉ |
தம் ப்ரத்யவித்⁴யத்ஸப்தத்யா பா³ணைர்யுதி⁴ ஜநார்த³ந꞉ ||2-60-8

செருக்கு நிறைந்த ருக்மி, தன் படையை அங்கேயே நிறுத்திவிட்டு, தேரோடு தேர் தனியாக மோதும் வகையில் மதுசூதனனிடம் சென்று அறுபத்துநான்கு கூரிய கணைகளால் அவனைத் துளைத்தான். ஜனார்த்தனனும் எழுபது கணைகளால் பதிலுக்கு அவனைக் காயப்படுத்தினான்.(7,8)

பதமாநஸ்ய சிச்சே²த³ த்⁴வஜம் சாஸ்ய மஹாப³ல꞉ |
ஜஹார ச ஶிர꞉ காயாத்ஸாரதே²ஸ்தஸ்ய வீர்யவாந் ||2-60-9

ருக்மி மிகக் கவனமாக இருந்தபோதிலும், பெரும்பலம்வாய்ந்தவனும், வீரமிக்கவனுமான மாதவன், அவனுடைய தேரின் கொடிக்கம்பத்தையும், அவனுடைய தேரோட்டியின் உடலில் இருந்து தலையையும் துண்டித்தான்.

தம் க்ருச்ச்²ரக³தமாஜ்ஞாய பரிவவ்ருர்ஜநார்த³நம் |
தா³க்ஷிணாத்யா ஜிகா⁴ம்ஸந்தோ ராஜாந꞉ ஸர்வ ஏவ ஹி ||2-60-10

அவனை {ருக்மியைக்} கடும் நிலையில் கண்ட தக்காணத்து மன்னர்கள் ஜனார்த்தனனைக் கொல்லும் நோக்கத்துடன் அவனைச் சூழ்ந்தனர்.

தமம்ஶுமாந்மஹாபா³ஹுர்விவ்யாத⁴ த³ஶபி⁴꞉ ஶரை꞉ |
ஶ்ருதர்வா பஞ்சபி⁴꞉ க்ருத்³தோ⁴ வைணுதா³ரிஶ்ச ஸப்தபி⁴꞉ ||2-60-11

வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அம்சுமான் பத்துக் கணைகளாலும், சுருதர்வன் ஐந்தாலும், வேணுதாரி ஏழாலும் அவனைத் தாக்கினர்.

ததோ(அ)ம்ஶுமந்தம் கோ³விந்தோ³ பி³பே⁴தோ³ரஸி வீர்யவாந் |
நிஶஸாத³ ரதோ²பஸ்தே² வ்யதி²த꞉ ஸ நராதி⁴ப꞉ ||2-60-12

அப்போது பேராற்றல் வாய்ந்த கோவிந்தன், அம்சுமானின் மார்பில் தாக்கியபோது அந்த மன்னன் துன்பத்துடன் தன் தேரில் அமர்ந்தான்.

ஶ்ருதர்வணோ ஜகா⁴நாஶ்வாம்ஶ்சதுர்பி⁴ஶ்சதுர꞉ ஶரை꞉ |
வேணுதா³ரோர்த்⁴வஜம் சி²த்த்வா பு⁴ஜம் விவ்யாத⁴ த³க்ஷிணம் ||2-60-13

அதன்பிறகு நான்கு கணைகளால் சுருதர்வனின் நான்கு குதிரைகளைக் கொன்ற மாதவன், வேணுதாரியின் கொடிக்கம்பத்தையும் வெட்டிவீழ்த்தி, அவனது வலக்கரத்திலும் காயமேற்படுத்தினான்.

ததை²வ ச ஶ்ருதர்வாணம் ஶரைர்விவ்யாத⁴ பஞ்சபி⁴꞉ |
ஶிஶ்ரியே ஸ த்⁴வஜம் ஶாந்தோ ந்யஷீத³ச்ச வ்யதா²ந்வித꞉ ||2-60-14

அடுத்தக் கணமே அவன் ஐந்து கணைகளால் சுருதர்வனையும் தாக்கிக் காயப்படுத்தியபோது, அவன் தன் தேரின் கொடிக்கம்பத்தைப் பிடித்தவாறே பெருந்துன்பத்துடன் கீழே அமர்ந்தான்.

முஞ்சந்த꞉ ஶரவர்ஷாணி வாஸுதே³வம் ததோ(அ)ப்⁴யயு꞉ |
க்ரத²கைஶிகமுக்²யாஶ்ச ஸர்வ ஏவ மஹாரதா²꞉ ||2-60-15

இவ்வாறு வாசுதேவன் கணைமாரியைப் பொழியத் தொடங்கிய போது, கிரதக் கைசிகத்தைச் சேர்ந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அனைவரும் அவனை நோக்கி விரைந்தனர்.

பா³ணாஇர்பா³ணாம்ஶ்ச சிச்சே²த³ தேஷாம் யுதி⁴ ஜநார்த³ந꞉ |
ஜகா⁴ந சைஷாம் ஸம்ரப்³த⁴꞉ பதமாநஶ்ச தாஞ்ச²ராந் ||2-60-16

கோபமடைந்த ஜனார்த்தனன் தன் கணைகளால் அவர்களுடைய கணைகளை அறுத்தான். அவர்கள் மிகக் கவனமாக இருந்தாலும் அவன் அவர்கள் அனைவரையும் காயமடையச் செய்தான்.

புநராந்யாம்ஶ்சது꞉ஷஷ்ட்யா ஜகா⁴ந நிஶிதை꞉ ஶரை꞉ |
க்ருத்³தா⁴நாபததோ வீராநத்³ரிவத்ஸ மஹாப³ல꞉ ||2-60-17

பெரும்பலம்வாய்ந்தவனான அவன் {கிருஷ்ணன்} அந்த மன்னர்கள் அனைவரையும் காயப்படுத்திவிட்டு, கோபம்நிறைந்த மற்ற மன்னர்களை நோக்கி விரைந்து சென்றான்.

வித்³ருதம் ஸ்வப³லம் த்³ருஷ்ட்வா ருக்மீ க்ரோத⁴வஶம்க³த꞉ |
பஞ்சபி⁴ர்நிஶிதைர்பா³ணைர்விவ்யாதோ⁴ரஸி கேஶவம் ||2-60-18

ஸாரதி²ம் சாஸ்ய விவ்யாத⁴ ஸாயகைர்நிஶிதைஸ்த்ரிபி⁴꞉ |
ஆஜகா⁴ந ஶரேணாஸ்ய த்⁴வஜம் ச நதபர்வணா ||2-60-19

கோபத்தில் நிறைந்திருந்த ருக்மி, தன் படை தப்பி ஓடுவதைக் கண்டு ஐந்து கூரிய கணைகளால் கேசவனின் மார்பில் காயத்தை ஏற்படுத்தி, அத்தகைய மூன்று கணைகளால் அவனுடைய தேரோட்டியையும் காயப்படுத்தி, வளைந்த முனையுடைய கணையால் அவனது {கிருஷ்ணனின்} கொடிக்கம்பத்தையும் வெட்டி வீழ்த்தினான்.(18,19)

கேஶவஸ்த்வரிதம் த்³ருஷ்ட்வா க்ருத்³தோ⁴ விவ்யாத⁴ மார்க³ணை꞉ |
த⁴நுஶ்சிச்சே²த³ சாப்யஸ்ய பதமாநஸ்ய ருக்மிண꞉ ||2-60-20

ருக்மி, கோபத்தில் அறுபது கணைகளால் கேசவனைத் துளைத்து மிகக் கவனமாக இருந்தாலும், அவன் {கிருஷ்ணன்} அவனுடைய {ருக்மியின்} வில்லை அறுத்தான்.

அதா²ந்யத்³த⁴நுராதா³ய ருக்மீ க்ருஷ்ணஜிகா⁴ம்ஸயா |
ப்ராது³ஶ்சகார சாந்யாநி தி³வ்யாந்யஸ்த்ராணி வீர்யவாந் ||2-60-21

பேராற்றல் கொண்ட ருக்மி, அத்தகைய மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு கேசவனைக் கொல்வதற்காக தெய்வீக ஆயுதங்களை ஏவத் தொடங்கினான்.

அஸ்த்ரைரஸ்த்ராணீ ஸம்வார்ய தஸ்ய க்ருஷ்ணோ மஹாப³ல꞉ |
புநஶ்சிச்சே²த³ தச்சாபம் ரதி²நாம் ச த்ரிபி⁴꞉ ஶரை꞉ ||2-60-22

பெருஞ்சக்திவாய்ந்த மாதவன், தன் ஆயுதங்களால் அவனது ஆயுதத்தை எதிர்த்து, மீண்டும் அவனது வில்லை அறுத்து, மூன்று கணைகளால் அவனது தேரையும் நொறுக்கினான்.

ஸ ச்சி²ந்நத⁴ந்வா விரதா²꞉ க²ட்³க³மாதா³ய சர்ம ச |
உத்பபாத ரதா²த்³வீரோ க³ருத்மாநிவ வீர்யவாந் ||2-60-23

வீரமிக்கவனான மன்னன் ருக்மி இவ்வாறு தன் வில்லும், தேரும் நொறுங்கியவனாகத் தன் வாளையும், கேடயத்தையும் எடுத்துக் கொண்டு தன் தேரில் இருந்து கீழே குதித்தான்.

தஸ்யாபி⁴பதத꞉ க²ட்³க³ம் சிச்சே²த³ யுதி⁴ கேஶவ꞉ |
நாராசைஶ்ச த்ரிபி⁴꞉ க்ருத்³தோ⁴ பி³பே⁴தை³நமதோ²ரஸி ||2-60-24

இவ்வாறு அவன் குதிப்பதைக் கண்ட கேசவன், கோபத்தில் அவனுடைய வாளை வெட்டி வீழ்த்தி, இறகுபடைத்த மூன்று கூரிய கணைகளால் அவனது மார்பைத் துளைத்தான்.

ஸ பபாத மஹாபா³ஹுர்வஸுதா⁴மநுநாத³யந் |
விஸம்ஜ்ஞோ மூர்ச்சி²தோ ராஜா வஜ்ரேணேவ மஹாஸுர꞉ ||2-60-25

வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட ருக்மி, வஜ்ரத்தால் வீழ்ந்த பெரும் அசுரனைப் போல மொத்த பூமியும் எதிரொலிக்கும்படி மயக்கமடைந்து கீழே விழுந்தான்.

தாம்ஶ்ச ராஜ்ஞ꞉ ஶரை꞉ ஸர்வாந்புநர்விவ்யாத⁴ மாத⁴வ꞉ |
ருக்மிணம் பதிதம் த்³ருஷ்ட்வா வ்யத்³ரவந்த நராதி⁴பா꞉ ||2-60-26

அதன் பிறகு கேசவன் தன் கணைகளால் மற்ற மன்னர்களைத் தாக்கத் தொடங்கினான். எனினும், ருக்மி வீழ்ந்ததைக் கண்ட அவர்கள் தப்பி ஓடினார்கள்.(

விசேஷ்டமாநம் தம் பூ⁴மௌ ப்⁴ராதரம் வீக்ஷ்ய ருக்மிணீ |
பாத³யோர்ந்யபதத்³விஷ்ணோர்ப்⁴ராதுர்ஜீவிதகாங்க்ஷிணீ ||2-60-27

அசைவற்றவனாகப் பூமியில் கிடக்கும் தன் அண்ணனைக் கண்ட ருக்மிணி, அவனது {ருக்மியின்} உயிருக்காக விஷ்ணுவின் பாதங்களில் வீழ்ந்தாள்.

தாமுத்தா²ப்ய பரிஷ்வஜ்ய ஸாந்த்வயாமாஸ கேஶவ꞉ |
அப⁴யம் ருக்மிணே த³த்த்வா ப்ரயயௌ ஸ்வபுரீம் தத꞉ ||2-60-28

கேசவன் அவளை உயர்த்தி, வாரித் தழுவிக் கொண்டு அவளுக்கு ஆறுதலளித்தான். பிறகு ருக்மியின் பாதுகாப்புக்கு உறுதியளித்துவிட்டு அவன் தன் நகரத்திற்குப் புறப்பட்டுச் சென்றான்.

வ்ருஷ்ணயோ(அ)பி ஜராஸம்த⁴ம் ப⁴ங்க்த்வா தாம்ஶ்சைவ பார்தி²வாந் |
ப்ரயயுர்த்³வாரகாம் ஹ்ருஷ்டா꞉ புரஸ்க்ருத்ய ஹலாயுத⁴ம் ||2-60-29

மறுபுறம் ராமன் {பலராமன்} தலைமையிலான விருஷ்ணிகள் ஜராசந்தனையும், பிறரையும் வீழ்த்திவிட்டு, மகிழ்ச்சியாகத் துவாரகைக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

ப்ரயாதே புண்ட³ரீகாக்ஷே ஶ்ருதர்வாப்⁴யேத்ய ஸங்க³ரே |
ருக்மிணம் ரத²மாரோப்ய ப்ரயயௌ ஸ்வாம் புரீம் ப்ரதி ||2-60-30

தாமரைக் கண்ணனான கேசவன் புறப்பட்ட பிறகு போர்க்களத்திற்கு வந்த சுருதர்வன், தன் தேரில் ருக்மியை ஏற்றிக் கொண்டு தன் நகரத்திற்கு அவனை இட்டுச் சென்றான்.

அநாநீய ஸ்வஸாரம் து ருக்மீ மாநமதா³ந்வித꞉ |
ஹீநப்ரதிஜ்ஞோ நைச்ச²த்ஸ ப்ரவேஷ்டும் குண்டி³நம் புரம் ||2-60-31

ஆணவம் கொண்டவனும், உணர்வுமிக்கவனுமான ருக்மி, தன் தங்கையை மீட்க இயலாமல் தன் உறுதிமொழி நொறுங்கிப் போனதைக் கண்டு குண்டின நகரத்திற்குள் நுழைய விரும்பவில்லை.

வித³ர்பே⁴ஷு நிவாஸார்த²ம் நிர்மமே(அ)ந்யத்புரம் மஹத் |
தத்³போ⁴ஜகடமித்யேவ ப³பூ⁴வ பு⁴வி விஶ்ருதம் ||2-60-32

அவன் {ருக்மி}, விதர்ப்ப மாகாணத்தில் போஜகதம் என்ற பெயரால் பூமியில் கொண்டாடப்படும் மற்றொரு நகரத்தைத் தான் வசிப்பதற்காக அமைத்தான்.

தத்ரௌஜஸா மஹாதேஜா த³க்ஷிணாம் தி³ஶமந்வகா³த் |
பீ⁴ஷ்மக꞉ குண்டி³நே சைவ ராஜோவாஸ மஹாபு⁴ஜ꞉ ||2-60-33 |

பெரும்பலம்வாய்ந்த ருக்மி அந்த நகரத்தில் வசித்தவாறே தென்மாவட்டங்களை ஆட்சி செய்யத் தொடங்கினான், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட மன்னன் பீஷ்மகன், குண்டின நகரத்தில் வாழ்ந்து வந்தான்.

த்³வாரகாம் சாபி ஸம்ப்ராப்தே ராமே வ்ருஷ்ணிப³லாந்விதே |
ருக்மிண்யா꞉ கேஶவ꞉ பாணிம் ஜக்³ராஹ விதி⁴வத்ப்ரபு⁴꞉ ||2-60-34

ராமன், விருஷ்ணி படையுடன் துவாரகையை அடைந்தபோது, கேசவன் முறைப்படி ருக்மிணியின் கரம்பற்றினான் {திருமணம் செய்து கொண்டான்}.

தத꞉ ஸஹ தயா ரேமே ப்ரியயா ப்ரீயமாணயா |
ஸீதயேவ புரா ராம꞉ பௌலோம்யேவ புரந்த³ர꞉ ||2-60-35

அதன் பிறக அவன், சீதையுடன் ராமனும், புலோமனின் மகளான சசியுடன் புரந்தரனும் மகிழ்ச்சியாக வாழ்ந்ததைப் போல இனிமை நிறைந்த தன் மனைவியின் துணையில் இன்புற்றிருந்தான்.

ஸா ஹி தஸ்யாப⁴வஜ்ஜ்யேஷ்டா² பத்நீ க்ருஷ்ணஸ்ய பா⁴மிநீ |
பதிவ்ரதா கு³ணோபேதா ரூபஶீலகு³ணாந்விதா ||2-60-36

அழகியும், நல்லியல்பைக் கொண்டவளும், தூய்மையானவளும், அனைத்து நற்குணங்களையும் கொண்டவளுமான அந்த ருக்மிணியே கிருஷ்ணனின் முதல் மனைவியாவாள்.

தஸ்யாமுத்பாத³யாமாஸ புத்ராந்த³ஶ மஹாரதா²ந் |
சாருதே³ஷ்ணம் ஸுதே³ஷ்ணம் ச ப்ரத்³யும்நம் ச மஹாப³லம் ||2-60-37

பலம்வாய்ந்தவனான மாதவன் அவளிடம், பெருஞ்சக்திவாய்ந்தவர்களான பிரத்யும்னன், சாருதேஷ்ணன், ஸுதேஷ்ணன்,

ஸுஷேணம் சாருகு³ப்தம் ச சாருபா³ஹும் ச வீர்யவாந் |
சாருவிந்த³ம் ஸுசாரும் ச ப⁴த்³ரசாரும் ததை²வ ச ||2-60-38

ஸுஷேணன், சாருகுப்தன், வீரமிக்கச் சாருபாஹு, சாருவிந்தன், ஸுசாரு, பத்ரசாரு

சரூம் ச ப³லிநாம் ஶ்ரேஷ்ட²ம் ஸுதாம் சாருமதீம் ததா² |
த⁴ர்மார்த²குஶலாஸ்தே து க்ருதாஸ்த்ரா யுத்³த⁴து³ர்மதா³꞉ ||2-60-39

பலம்வாய்ந்தவர்களில் முதன்மையான சாரு என்ற பத்து மகன்களையும், சாருமதி என்ற பெயரில் ஒரு மகளையும் பெற்றான். அவர்கள் அனைவரும் ஆயுதங்களில் தேர்ச்சி அடைந்தவர்களாகவும் போரில் பயங்கரர்களாகவும், அறவியல், அரசியல் ஆகியவற்றை நன்கறிந்தவர்களாகவும் இருந்தனர்.

மஹிஷீ꞉ ஸப்த கல்யாணீஸ்ததோ(அ)ந்யா மது⁴ஸூத³ந꞉ |
உபயேமே மஹாபா³ஹுர்கு³ணோபேதா꞉ குலோத்³ப⁴வா꞉ ||2-60-40

வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட மதுசூதனன், உயர்ந்த குலங்களில் பிறந்தவர்களும், நற்குணங்களைக் கொண்டவர்களுமான

காலிந்தீ³ம் மித்ரவிந்தா³ம் ச ஸத்யாம் நாக்³நஜிதீமபி |
ஸுதாம் ஜாம்ப³வதஶ்சாபி ரோஹிணீம் காமரூபிணீம் ||2-60-41

காளிந்தி, மித்ரவிந்தை, அயோத்தியின் மன்னன் நக்னஜித்தின் மகளான ஸத்யை, ஜாம்பவான் மகளான ஜாம்பவதி, விரும்பும் வடிவத்தை ஏற்கவல்லவளும்,

மத்³ரராஜஸுதாம் சாபி ஸுஶீலாம் ஶுப⁴லோசநாம் |
ஸாத்ராஜிதீம் ஸத்யபா⁴மாம் லக்ஶ்மணாம் சாருஹாஸிநீம் ||2-60-42

நற்குணம் கொண்டவளும், மத்ர மன்னனின் மகளுமான ரோஹிணி, அழகிய கண்களைக் கொண்ட லக்ஷ்மணை, ஸத்ராஜித்தின் மகள் ஸத்யபாமா என்ற பெயர்களைக் கொண்டவர்களுமான வேறு ஏழு அழகிகளையும் மணந்து கொண்டான்.

ஶைப்³யஸ்ய ச ஸுதாம் தந்வீம் ரூபேணாப்ஸரஸோபமாம் |
ஸ்த்ரீஸஹஸ்ராணி சாந்யாநி ஷோட³ஶாதுலவிக்ரம꞉ ||2-60-43

அதையும் தவிர, அழகில் அப்ஸரஸ் போன்றவளும், ஸைப்யனின் மகளுமான காந்தாரியும் அவனுடைய மற்றொரு ராணியாக இருந்தாள்[கிருஷ்ணனுக்கு 1. சூரியனின் மகளான காளிந்தி, 2. வசுதேவனின் தங்கையான ராஜாதி தேவிக்கும், அவந்தி மன்னனுக்கும் பிறந்த மகளான மித்ரவிந்தை (சைப்யை என்று அறியப்படுபவள்), 3. கோசல நாட்டு மன்னன் நக்னஜித்தின் மகளான ஸத்யா (கௌசல்யா), 4. ஜாம்பவானின் மகளான ஜாம்பவதி, 5. வசுதேவனின் தங்கையான சுருதகீர்த்தியின் மகள் ரோஹிணி (பத்ரை என்றும், கைகேயி என்றும் அறியப்படுபவள்), 6. மத்ர மன்னனின் மகளான லக்ஷ்மணை, 7. சத்ராஜித்தின் மகளான சத்யபாமா, 8. காந்தாரி ஆகிய எட்டு மனைவிகள் இருந்தனர். முதல் மனைவியான ருக்மிணி {விதர்ப்பி} ஸ்ரீதேவி என்பதால் இங்கே கணக்கில் கொள்ளப்படவில்லை. சில பட்டியல்களில் காந்தாரி விடுபடுகிறாள். ஒருவேளை காந்தாரியும், மித்ரவிந்தையும் ஒருத்தியாகவே இருக்கலாம்.]. அளவற்ற ஆற்றலைக் கொண்ட ரிஷிகேசன் {கிருஷ்ணன்}, ஒரே நேரத்தில் பதினாறாயிரம் கன்னிப்பெண்களை மணந்து கொண்டு ஒரே நேரத்தில் அவர்களுடன் இன்புற்றிருந்தான்.

உபயேமே ஹ்ருஷீகேஶ꞉ ஸர்வா பே⁴ஜே ஸ தா꞉ ஸமம் |
பரார்த்⁴யவஸ்த்ராப⁴ரணா꞉ காமை꞉ ஸர்வை꞉ ஸுகோ²சிதா꞉ |
ஜஜ்ஞிரே தாஸு புத்ராஶ்ச தஸ்ய வீரா꞉ ஸஹஸ்ரஶ꞉ ||2-60-44

ஆடம்பரங்களுக்குப் பழக்கப்பட்ட அவர்கள் அனைவரும் விரும்பிய விலைமதிப்புமிக்க ஆடைகளும், ஆபரணங்களும் கொடுக்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டனர்.

ஶாஸ்த்ரார்த²குஶலா꞉ ஸர்வே ப³லவந்தோ மஹாரதா²꞉ |
யஜ்வாந꞉ புண்யகர்மாணோ மஹாபா⁴கா³ மஹாப³லா꞉ ||2-60-45

சக்திவாய்ந்தவர்களும், பெரும்பலம் கொண்டவர்களும், ஆயுதங்கள் அனைத்திலும் தேர்ச்சியடைந்தவர்களும், வேள்விகளையும், அறச்சடங்குகளையும் செய்பவர்களுமான ஆயிரக்கணக்கான மகன்களை மாதவன் அவர்களிடம் பெற்றான்” என்றார் {வைசம்பாயனர்}.

இதி ஶ்ரீமஹாபா⁴ரதே கி²லேஷு ஹரிவம்ஶே விஷ்ணுபர்வணி
ருக்மிணீஹரணம் நாம ஷஷ்டிதமோ(அ)த்⁴யாய꞉

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: