ஸ்ரீ விஷ்ணு பர்வம்–அத்யாயம் – 39–ஜாமதக்ன்யேன ராமக்ருஷ்ணயோ ஸங்கதி)–பரசுராமரைச் சந்தித்த கிருஷ்ணன் |–

பலராமனும், கிருஷ்ணனும் தென்திசை பயணம் செய்து பரசுராமரைச் சந்தித்தது-

வைஷ²ம்பாயன உவாச
விகத்³ரோஸ்து வச꞉ ஷ்²ருத்வா வஸுதே³வோ மஹாயஷா²꞉ |
பரிதுஷ்டேன மனஸ வசனம் சேத³மப்³ரவீத் ||2-39-1

ராஜா ஷாட்³கு³ண்யவக்தா வை
ராஜா மந்த்ரார்த²தத்த்வவித் |
ஸதத்த்வம் ச ஹிதம் சைவ
க்ருஷ்ணோக்தம் கில தீ⁴மதா ||2-39-2

பா⁴ஷிதா ராஜத⁴ர்மாஷ்²ச ஸத்யாஷ்²ச ஜக³தோ ஹிதா꞉ |
விகத்³ருணா யது³ஷ்²ரேஷ்ட² யத்³தி⁴தம் தத்³விதீ⁴யதாம் ||2-39-3

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “பெருஞ்சிறப்புமிக்க வஸுதேவன், விகத்ருவின் சொற்களைக் கேட்டு, மகிழ்ச்சிமிக்க இதயத்துடன், “ஓ! கிருஷ்ணா, அரசின் பேச்சாளர்களிலும், அரச ஆலோசனைகளின் பொருளை அறிந்தவர்களிலும் முதன்மையானவனும், புத்திமானுமான விகத்ரு சொல்வது உண்மையான, பொருள் நிறைந்த சொற்களுமாகும். இவன் அரச கடமைகள் தொடர்பானவற்றையும், அண்டத்திற்கு நன்மை விளைவிக்கும் உண்மைகளையும் சொல்லியிருக்கிறான். யதுக்களில் முதன்மையான இவன் சொல்வதைக் கேட்பாயாக” என்றான் {வஸுதேவன்}.(1-3)

ஏதச்ச்²ருத்வா பிதுர்வாக்யம் விகத்³ரோஷ்²ச மஹாத்மன꞉|
விகத்³ரோஸ்தத்³வசஸ்தத்²யம் நிஷ²ம்ய யது³புங்க³வ꞉ |
வாக்யமுத்தமமேகாக்³ரோ ப³பா⁴ஷே புருஷோத்தம꞉ ||2-39-4

மனிதர்களில் முதன்மையான கிருஷ்ணன், தன் தந்தையின் சொற்களையும், உயரான்ம விகத்ருவின் சொற்களையும் கேட்டு அறிவுக்குகந்த பின்வரும் சொற்களைச் சொன்னான்.

ப்³ருவதாம் வஹ் ஷ்²ருதம் வாக்யம் ஹேதுத꞉ க்ரமதஸ்ததா² |
ந்யாயத꞉ ஷா²ஸ்த்ரதஷ்²சைவ தை³வம் சைவானுபஷ்²யதாம் ||2-39-5

கிருஷ்ணன், “அறிவு, ஒழுங்கு, தர்க்கம், சாத்திரங்கள் ஆகியவற்றின் முன்னறிவிப்புகளை (முன்னறிவிப்புகளின் போக்கை) ஆய்வு செய்து உம்மால் சொல்லப்பட்டவற்றைக் கேட்டேன்.

ஷ்²ரூயதாமுத்தரம் வாக்யம் ஷ்²ருத்வா ச பரிக்³ருஹ்யதாம் |
நயேன வ்யவஹர்தவ்யம் பார்தி²வேன யதா²க்ரமம் ||2-39-6

என் மறுமொழியைக் கேட்பீராக, கேட்டபிறகு அதை ஏற்பீராக. ஒரு மன்னன், ஒழுக்கத்தையும், அறத்தையும் அடிப்படையாகக் கொண்ட நெறிகளின் விதிப்படி செயலாற்ற வேண்டும்.

ஸந்தி⁴ம் ச விக்³ரஹம் சைவ யானமாஸனமேவ ச |
த்³வைதீ⁴பா⁴வம் ஸம்ஷ்²ரயம் ச ஷாட்³கு³ண்யம் சிந்தயேத்ஸதா³ ||2-39-7

அமைதியை ஏற்படுத்தல் {சமாதானம்}, சச்சரவு செய்தல், செல்கலன்கள் {வாகனங்கள்}, இருக்கைகள், பகை உண்டாக்கல், உதவி செய்தல் ஆகியவற்றை நாள்தோறும் தியானிக்க வேண்டும்[“ஸமாதானம், சண்டைப் போரில் முன்னேறுதல் அல்லது பின்வாங்குதல், பலத்துடன் ஒரே நிலையில் நிற்றல், மித்ர பேதம் செய்தல், சரணாகதி செய்தல் இந்த ஆறு ராஜ தத்வங்களை எப்போதும் யோசிக்க வேண்டும்” ]

ப³லின꞉ ஸன்னிக்ருஷ்டே து ந ஸ்தே²யம் பண்டி³தேன வை |
அபக்ரமேத்³தி⁴ காலஜ்ஞ꞉ ஸமர்தோ² யுத்³த்³த⁴முத்³வஹேத் ||2-39-8

கல்விமானான ஒரு மன்னன், {தன்னைவிட} பலம்வாய்ந்த ஒரு பகைவனின் முன்பு தன்னை நிறுத்திக் கொள்ளாமல் தப்பிச் செல்ல வேண்டும். உரிய காலத்திலும், தன் பலத்திற்கு ஏற்ற வகையிலும் அவன் போரில் ஈடுபட வேண்டும்.

அஹம் தாவத்ஸஹார்யேண முஹூர்தே(அ)ஸ்மின்ப்ரகாஷி²தே |
ஜீவிதார்த²ம் க³மிஷ்யாமி ஷ²க்திமானப்யஷ²க்தவத் ||2-39-9

எனவே, நான் இயன்றவனாக இருந்தாலும், உயிரைக் காப்பாற்றிக் கொள்ள இயலாத ஒருவனைப் போல இந்தக் கணத்திலேயே வழிபடத்தகுந்தவரான பலதேவருடன் {பலராமனுடன்} தப்பிச் செல்லப் போகிறேன்

தத꞉ ஸஹ்யாசலயுதம் ஸஹார்யேணாஹமக்ஷயம் |
ஆத்மத்³விதீய꞉ ஷ்²ரீமந்தம் ப்ரவேக்ஷ்யே த³க்ஷிணாபத²ம் ||2-39-10

கரவீரபுரம் சைவ ரம்யம் க்ரௌஞ்சபுரம் ததா² |
த்³ரக்ஷ்யாவஸ்தத்ர ஸஹிதௌ கோ³மந்தம் ச நகோ³த்தமம் ||2-39-11

மதிப்புக்குரிய என் அண்ணனுடன், என்னைப் போலவே அழகாக இருக்கும் சஹ்ய மலையில் {மேற்குத் தொடர்ச்சி மலையின் வடக்குப் பகுதி} ஏறி, தக்காண பீட பூமிக்குள் {தென்னாட்டுக்குள்} நுழைந்து, கரவீரம், கிரௌஞ்சம், மலைகளில் முதன்மையான கோமந்தம் ஆகிய அழகிய நகரங்களைக் காணப் போகிறேன்.(10,11)

ஆவயோர்க³மனம் ஷ்²ருத்வா ஜிதகாஷீ² ஸ பார்தி²வ꞉ |
அப்ரவிஷ்²ய புரீம் த³ர்பாத³னுஸாரம் கரிஷ்யதி ||2-39-12

தத꞉ ஸஹ்யவனேஷ்வேவ ராஜா யாதி ஸ ஸானுக³꞉ |
ஆவயோர்க்³ரஹணே சைவ ந்ருபதி꞉ ப்ரயதிஷ்யதி ||2-39-13

அந்தப் பேரரசன் {ஜராசந்தன்}, நாம் புறப்பட்டதைக் கேள்விப்பட்டு, வெற்றிக்களிப்படைந்து, {மதுரா} நகருக்குள் நுழையாமல் செருக்குடன் எங்களைப் பின்தொடர்வான். அவன் தன் தொண்டர்களுடன் சஹ்யக் காடுகளுக்குச் சென்று எங்களைக் கைது செய்ய முயற்சி செய்வான்.(12,13)

ஏஷா ந꞉ ஷ்²ரேயஸீ யாத்ரா ப⁴விஷ்யதி குலஸ்ய வை |
பௌராணாமத² புர்யாஷ்²ச தே³ஷ²ஸ்ய ச ஸுகா²வஹா ||2-39-14

எனவே எங்களது புறப்பாடு யது குலத்திற்கு நன்மையை விளைவிக்கும். இதன் மூலம் மாகாணத்திற்கும் {நாட்டிற்கும்}, நகரத்திற்கும், குடிமக்களுக்கும் நன்மை விளையும்

ந ச ஷ²த்ரோ꞉ பரிப்⁴ரஷ்டா ராஜானோ விஜிகீ³ஷவ꞉ |
பரராஷ்ட்ரேஷு ம்ருஷ்யந்தி ம்ருதே⁴ ஷ²த்ரோ꞉ க்ஷயம் வினா ||2-39-15

மற்றொரு நாட்டில் வெற்றியை அடைய விரும்பும் மன்னர்கள், பகைவன் தன் நாட்டில் இருந்து தப்பி ஓடும்போது, அந்தப் பகைவர்களைக் கொல்லாமல் போரில் இருந்து விலக மாட்டார்கள்” என்றான் {கிருஷ்ணன்}.

ஏவமுக்த்வா து தௌ வீரௌ க்ருஷ்ணஸங்கர்ஷணாவுபௌ⁴ |
ப்ரபேத³துரஸம்ப்⁴ராந்தௌ த³க்ஷிணௌ த³க்ஷிணாபத²ம் ||2-39-16

இந்த உரையாடலுக்குப் பிறகு, வீரமிக்கக் கிருஷ்ணனும், சங்கர்ஷணனும், இயன்றவர்களாக இருப்பினும், மனத்தில் சிறிதளவும் கவலை கொள்ளாமல் தெற்கே புறப்பட்டுச் சென்றனர்.

தௌ து ராஷ்ட்ராணி ஷ²தஷ²ஷ்²சரந்தௌ காமரூபிணௌ |
த³க்ஷிணாம் தி³ஷ²மாஸ்தா²ய சேரதுர்மார்க³கௌ³ ஸுக²ம் ||2-39-17

அவர்கள் விரும்பிய வடிவங்களை ஏற்றுக் கொண்டு நூற்றுக்கணக்கான தென்னாடுகளில் பயணிக்கத் தொடங்கினர்.

ஸஹ்யப்ருஷ்டே²ஷு ரம்யேஷு மோத³மானாவுபௌ⁴ ததா² |
த³க்ஷிணாபத²கௌ³ வீராவத்⁴வானம் ஸம்ப்ரபேத³து꞉ ||2-39-18

அதன்பிறகு சஹ்யமெனும் அழகிய மலையில் ஏறி இன்புற்று தெற்கே செல்ல வழிவகுக்கும் சாலையை அடைந்தனர்.

தௌ ச ஸ்வல்பேன காலேன ஸஹ்யாசலவிபூ⁴ஷிதம் |
கரவீரபுரம் ப்ராப்தௌ ஸ்வவம்ஷே²ன விபூ⁴ஷிதம் ||2-39-19

தௌ தத்ர க³த்வா வேணாயா நத்³யாஸ்தீராந்தமாஷ்²ரிதம் |
ஆஸேத³து꞉ ப்ரரோஹாட்⁴யம் ந்யக்³ரோத⁴ம் தருபுங்க³வம் ||2-39-20

அவர்கள் அந்தச் சாலை வழியே சென்ற போது, தங்கள் குலத்தோரால் தலைமை தாங்கப்பட்டதும், சஹ்ய மலையால் அலங்கரிக்கப்பட்டதுமான கரவீரமெனும் நகரத்தைக் குறுகிய காலத்திற்குள் அடைந்தனர். அங்கே அவர்கள் வேணையாற்றங்கரையில் ஒரு பெரிய ஆல மரத்தைக் கண்டனர்[வேணை ஆறு, கிருஷ்ணா ஆற்றுக்கு நீர் கொண்டு வரும் கிளையாறு என்று அறியப்படுகிறது. மஹாராஷ்டிர மாநிலத்தில் மேற்கில் உள்ள சதாரா மாவட்டத்தில் மஹாபலீஸ்வர் என்ற மலைசார்ந்த நகரத்தில் இந்த ஆறு உற்பத்தியாகிறது. கரவீரம் என்று இங்கே குறிப்பிடப்படும் நகரம் இந்த மஹாபலீஸ்வராகவும் இருக்கலாம்.].(19,20)

அத⁴ஸ்தாத்தஸ்ய வ்ருக்ஷஸ்ய முனிம் தீ³ப்ததபோத⁴னம் |
அம்ஸாவஸக்தபரஷு²ம் ஜடாவல்கலதா⁴ரிணம் ||2-39-21

கௌ³ரமக்³நிஷி²கா²காரம் தேஜஸா பா⁴ஸ்கரோபமம் |
க்ஷத்ராந்தகரமக்ஷோப்⁴யம் வபுஷ்மந்தமிவார்ணவம் ||2-39-22

ந்யஸ்தஸங்குசிதாதா⁴னம் காலே ஹுதஹுதாஷ²னம் |
க்லின்னம் த்ரிஷவணாம்போ⁴பி⁴ராத்³யம் தே³வகு³ரும் யத² ||2-39-23

ஸவத்ஸாம் தே⁴னுகாம் ஷ்²வேதாம் ஹோமது⁴க்காமதோ³ஹனாம் |
க்ஷீராரணிம் கர்ஷமாணம் மஹேந்த்³ரகி³ரிகோ³சரம் ||2-39-24

த³த்³ருஷ²துஸ்தௌ ஸஹிதாவபரிஷ்²ராந்தமவ்யயம் |
பா⁴ர்க³வம் ராமமாஸீனம் மந்த³ரஸ்த²ம் யதா² ரவிம் ||2-39-25

ந்யாயதஸ்தௌ து தம் த்³ருஷ்ட்வா பாத³மூலே க்ருதாஸனௌ |
வஸுதே³வஸுதௌ வீரௌ ஸதி⁴ஷ்ண்யாவிவ பாவகௌ ||2-39-26

அங்கே, மஹேந்திர மலையின் அருகே, பிருகுவின் வழித்தோன்றலும், ஒருபோதும் களைப்படையாதவரும், நித்தியமானவரும், பெரும் முனிவருமான ராமர் {பரசுராமர்}, அரணி மரம் போன்ற பால் வண்ணம் கொண்டதும், விரும்பியபோதெல்லாம் பால் தருவதும், {க்ஷீராணி என்ற} கன்றுடன் கூடியதுமான தம்முடைய வேள்விப் பசுவிடம் பால் கறந்து கொண்டிருப்பதை அவர்கள் கண்டனர். தோளில் கோடரியும், மேனியில் மரவுரியும், தலையில் சடாமுடியும் தரித்திருந்தவரும், நெருப்பின் தழல் போன்று வெண்மையானவரும், சூரியனைப் போன்று பிரகாசிப்பவரும், கடலைப் போன்று அசைவற்றவரும், ஒரு நாளைக்கு மூன்று திருப்படையல்களைச் செய்வதால் மெலிந்தவரும், தேவர்களின் ஆசானை {பிருஹஸ்பதியைப்} போன்றவரும், க்ஷத்திரியர்களை அழிப்பவருமான அவர் {பரசுராமர்} அந்த மரத்தினடியில் {ஆலமரத்தினடியில்} அமர்ந்திருந்தார்.(21-26)

க்ருஷ்ணஸ்தம்ருஷிஷா²ர்தூ³லமுவாச வத³தாம் வர꞉ |
ஷ்²லக்ஷ்ணம் மது⁴ரயா வாசா லோகவ்ருத்தாந்தகோவித³꞉ ||2-39-27

அப்போது பேசுபவர்களில் முதன்மையானவனும், மனிதர்களின் வரலாற்றை அறிந்தவனுமான கிருஷ்ணன், ரிஷிகளில் முதன்மையான அவரிடம் {பரசுராமரிடம்} இனிய சொற்களில்,

ப⁴க³வஞ்ஜாமத³க்³ன்யம் த்வாமவக³ச்சா²மி பா⁴ர்க³வம் |
ராமம் முனீனாம்ருஷப⁴ம் க்ஷத்ரியாணாம் குலாந்தகம் ||2-39-28

“ஓ! மதிப்புக்குரிய ஐயா, ரிஷிகளில் முதன்மையானவரும், பிருகு குலத்தில் பிறந்த ஜமதக்னியின் மகனும், க்ஷத்திரியர்களை அழித்தவருமான ராமராக {பரசுராமராக} நான் உம்மை அறிகிறேன்

த்வயா ஸாயகவேகே³ன க்ஷிப்தோ பா⁴ர்க³வ ஸாக³ர꞉ |
இஷுபாதேன நக³ரம் க்ருதம் ஷூ²ர்பாரகம் த்வயா ||2-39-29

த⁴னு꞉ பஞ்சஷ²தாயாமமிஷுபஞ்சஷ²தோச்ச்²ரயம் |
ஸஹ்யஸ்ய ச நிகுஞ்ஜேஷு ஸ்பீ²தோ ஜனபதோ³ மஹான் || 2-39-30

அதிக்ரம்யோத³தே⁴ர்வேலாமபராந்தே நிவேஷி²த꞉ |
த்வயா தத்கார்தவீர்யஸ்ய ஸஹஸ்ரபு⁴ஜகானனம் ||2-39-31

ஓ! பிருகுவின் வழித்தோன்றலே {பார்க்கவரே}, உமது கணைகளின் வேகத்தால் பெருங்கடலைக் கலங்கடித்து {அதன் நீரை வற்ற செய்து}, இரண்டாயிரம் முழம் அகலமும், ஆயிரம் முழம் நீளமும் கொண்ட {ஐநூறு விற்களின் {வில்லடி} அகலமும், ஐநூறு அம்புகளின் {அம்படி} நீளமும் கொண்ட} சூர்ப்பாரம் {சூர்பார்கம்} எனும் நகரத்தை நீர் அமைத்தீர். பெருங்கடலின் கரையில் அமைந்துள்ள சஹ்ய மலையின் வளமான {தாழ்வரையில்} காடுகளில் ஒரு பெரும் மாகாணத்தை {தேசத்தை} நீர் அமைத்தீர்.(29-31)

சி²ன்னம் பரஷு²னைகேன ஸ்மரதா நித⁴னம் பிது꞉ |
இயமத்³யாபி ருதி⁴ரை꞉ க்ஷத்ரியாணாம் ஹதத்³விஷாம் ||2-39-32

உமது தந்தையின் அழிவை நினைவு கூர்ந்து, காட்டுக்கு ஒப்பான கார்த்தவீரியனின் ஆயிரம் கரங்களையும் உமது கோடரியால் துண்டித்தீர்.

ஸ்னிக்³தை⁴ஸ்த்வத்பரஷூ²த்ஸ்ருஷ்டை꞉ ரக்தபங்கா வஸுந்த⁴ரா |
ரைணுகேயம் விஜானே த்வாம் க்ஷிதௌ க்ஷிதிபரோஷணம் ||2-39-33

பரஷு²ப்ரக்³ரஹே யுக்தம் யதை²வேஹ ரணே ததா² |
ததி³ச்சா²வஸ்த்வயா விப்ர கஞ்சித³ர்த²முபஷ்²ருதம் ||2-39-34

உமது கோடரியால் கொல்லப்பட்டுப் பிரகாசமிழந்த க்ஷத்திரியர்களின் கொடுங்குருதியால் நனைந்த மண்ணை இன்னும் பூமியானவள் தன்னில் கொண்டிருக்கிறாள். ஓ! ரேணுகையின் மகனே, க்ஷத்திரியர்களை எதிர்த்துக் கோபத்துடன் பூமியில் போரிட்ட போது, பிடித்திருந்த அதே வகையிலேயே இங்கே அந்தக் கோடரி இருக்கிறது. ஓ!விப்ரரே, உம்மிடம் இருந்து சிலவற்றை நாங்கள் கேட்க விரும்புகிறோம். மனத்தில் தயக்கமேதுமில்லாமல் அதற்கு மறுமொழி கூறுவீராக.(33,34)

உத்தரம் ச ஷ்²ருதார்தே²ன ப்ரத்யுக்தமவிஷ²ங்கயா |
ஆவயோர்மது²ரா நாம யமுனாதீரஷோ²பி⁴னீ ||2-39-35

ஓ! முனிவர்களில் சிறந்தவரே, யமுனைக் கரையில் வாழும் இரு யாதவர்களைக் குறித்து நீர் ஒருவேளை கேள்விப்பட்டிருக்கலாம். மதுராவில் வாழும் அந்த யாதவர் இருவர் நாங்களே.

யாத³வௌ ஸ்வோ முநிஷ்²ரேஷ்ட² யதி³ தே ஷ்²ருதிமாக³தௌ |
வஸுதே³வோ யது³ஷ்²ரேஷ்ட²꞉ பிதா நௌ ஹி த்⁴ருதவ்ரத꞉ ||2-39-36

யதுக்களில் முதன்மையானவரும், எப்போதும் நோன்புகளை நோற்பவரும், எங்கள் தந்தையுமான வசுதேவர், நாங்கள் பிறந்தது முதல் கம்ஸன் மீது கொண்ட அச்சத்தின் காரணமாக எங்களை விரஜத்தில் {ஆய்ப்பாடியில்} இருக்கச் செய்தார்

ஜன்மப்ரப்⁴ருதி சைவாவாம் வ்ரஜேஷ்வேவ நியோஜிதௌ |
தௌ ஸ்வ꞉ கம்ஸப⁴யாத்தத்ர ஷ²ங்கிதௌ பரிவர்த்³தி⁴தௌ ||2-39-37

வயஷ்²ச ப்ரத²மம் ப்ராப்தௌ மது²ராயாம் ப்ரவேஷி²தௌ |
தாவாவாம் வ்யுத்தி²தம் ஹத்வா ஸமாஜே கம்ஸமோஜஸா ||2-39-38

அங்கே நாங்கள் அச்சமேதுமின்றி வள்ரந்தோம். நாங்கள் உரிய வயதை அடைந்ததும் சக்திவாய்ந்தவர்களாக மதுராவுக்குள் நுழைந்து, செருக்குமிக்கக் கம்சனை அவனது சபையில் வைத்து அழித்தோம்.(37,38

பிதரம் தஸ்ய தத்ரைவ ஸ்தா²பயித்வா ஜனேஷ்²வரம் |
ஸ்வமேவ கர்ம சாரப்³தௌ⁴ க³வாம் வ்யாபாரகாரகௌ ||2-39-39

அதன் பிறகு அவனது தந்தையான உக்ரசேனரை முன்பு போலவே அவருக்கான அரச அலுவலில் நிறுவி, {மீண்டும்} ஆயர்குலச் சிறுவர்களின் பணியில் ஈடுபட்டோம்

அதா²வயோ꞉ புரம் ரோத்³து⁴ம் ஜராஸந்தோ⁴ வ்யவஸ்தி²த꞉ |
ஸங்க்³ராமான்ஸுப³ஹூன்க்ருத்வா லப்³த⁴லக்ஷாவபி ஸ்வயம் ||2-39-40

தத꞉ ஸ்வபுரரக்ஷார்த²ம் ப்ரஜானாம் ச த்⁴ருதவ்ரத |
அக்ருதார்தா²வனுத்³யோகௌ³ கர்தவ்யப³லஸாத⁴னௌ ||2-39-41

அரதௌ² பத்தினௌ யுத்³தே⁴ நிஸ்தனுத்ரௌ நிராயுதௌ⁴ |
ஜராஸந்தோ⁴த்³யமப⁴யாத்புராத்³த்³வாவேவ நி꞉ஸ்ருதௌ ||2-39-42

ஓ! உறுதிமிக்க நோன்புகளைக் கொண்டவரே, அதன்பிறகு, ஜராசந்தன் எங்கள் நகரைப் பலமுறை முற்றுகையிட்டபோது நாங்கள் போரிட்டாலும், மேலும் போரிட இயன்றவர்களாக இருப்பினும், {மீண்டும் மீண்டும் செய்யப்பட்ட} அவனது ஆயத்தங்களினால் {படையெடுப்புகளால்} ஏற்பட்ட அச்சத்தினாலும், எங்கள் நகரத்தின் நன்மையையும், குடிமக்களின் நன்மையையும் விரும்பியதாலும், படைவீரர்கள், வாகனங்கள், கவசங்கள், ஆயுதங்கள் ஆகியன இல்லாத பலவீனர்களாக நாங்கள் இருந்ததாலும் வேறு ஆயத்தமேதும் செய்யாமல் கால்நடையாக எங்கள் நகரத்தை விட்டு வெளியேறினோம்.(40-42)

ஏவமாவாமனுப்ராப்தௌ முநிஷ்²ரேஷ்ட² தவாந்திகம் |
ஆவயோர்மந்த்ரமாத்ரேண கர்துமர்ஹஸி ஸத்க்ரியாம் ||2-39-43

ஓ! முனிவர்களில் முதன்மையானவரே, இவ்வாறே நாங்கள் உம்மிடம் வந்தோம். நீர் எங்களுக்கு ஆலோசனைகளை நல்கி வரவேற்பீராக” என்றான் {கிருஷ்ணன்}.

ஷ்²ருத்வைதத்³பா⁴ர்க³வோ ராமஸ்தயோர்வாக்யமனிந்தி³தம் |
ரைணுகேய꞉ ப்ரதிவசோ த⁴ர்மஸம்ஹிதமப்³ரவீத் ||2-39-44

பிருகு குலத்தில் பிறந்தவரும், ரேணுகையின் மகனுமான ராமர் {பரசுராமர்}, அவர்கள் தங்களுக்குத் தகுந்த சொற்களைச் சொல்வதைக் கேட்டு அறத்தைக் கருவாகக் கொண்ட சொற்களில் மறுமொழி கூறினார்.

அபராந்தாத³ஹம் க்ருஷ்ண ஸம்ப்ரதீஹாக³த꞉ ப்ரபோ⁴ |
ஏக ஏவ வினா ஷி²ஷ்யைர்யுவயோர்மந்த்ரகாரணாத் ||2-39-45

{பரசுராமர்}, “ஓ! தலைவா, கிருஷ்ணா, உனக்கு ஆலோசனை கூறுவதற்காகவே என் சீடர்களின்றி நான் இங்கே தனியாக வந்தேன்.

விதி³தோ மே வ்ரஜே வாஸஸ்தவ பத்³மனிபே⁴க்ஷண |
தா³னவானாம் வத⁴ஷ்²சாபி கம்ஸஸ்யாபி து³ராத்மன꞉ ||2-39-46

ஓ! தாமரைக் கண்ணா, விரஜத்தில் {கோகுலத்தில்} உன் வசிப்பிடத்தையும், தீய ஆன்மாவைக் கொண்ட கம்ஸனும், பிற தானவர்களும் அழிந்ததையும் நான் அறிவேன்

விக்³ரஹம் ச ஜராஸந்தே⁴ விதி³த்வா ப்ருஷோத்தம |
தவ ஸப்⁴ராத்ருகஸ்யேஹ ஸம்ப்ராப்தோ(அ)ஸ்மி வரானன ||2-39-47

ஓ! அழகிய முகத்தைக் கொண்டவனே, ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, உனக்கும், ராமனுக்கும் {பலராமனுக்கும்} ஜராசந்தனுடன் ஏற்பட்ட சச்சரவை அறிந்தே நான் இங்கே வந்தேன்.

ஜானே த்வாம் க்ருஷ்ண கோ³ப்தாரம் ஜக³த꞉ ப்ரபு⁴மவ்யயம் |
தே³வகார்யார்த²ஸித்³த்⁴யர்த²மபா³லம் பா³லதாம் க³தம் ||2-39-48

ஓ! கிருஷ்ணா, அண்டத்தின் நித்திய தலைவனான நீ சிறுவனாக இல்லாவிட்டாலும், தேவர்களின் பணியை நிறைவேற்றுவதற்காகச் சிறுவனாக இருக்கிறாய் என்பதை நான் அறிவேன்.

ந த்வயாவிதி³தம் கிஞ்சித்த்ரிஷு லோகேஷு வித்³யதே |
ததா²பி ப⁴க்திமாத்ரேண ஷ்²ருணு வக்ஷ்யாமி தே வச꞉ ||2-39-49

மூவுலகங்களிலும் நீ அறியாததேதுமில்லை என்றாலும், அர்ப்பணிப்புடன் நான் சொல்வப் போவதைக் கேட்பாயாக.

பூர்வஜைஸ்தவ கோ³விந்த³ பூர்வம் புரமித³ம் க்ருதம் |
கரவீரபுரம் நாம ராஷ்ட்ரம் சைவ நிவேஷி²தம் ||2-39-50

ஓ! கோவிந்தா, உன் முன்னோர்களே இந்தக் கரவீரபுரத்தை அமைத்து நிறுவினர்

புரே(அ)ஸ்மிந்ந்ருபதி꞉ க்ருஷ்ண வாஸுதே³வோ மஹாயஷா²꞉ |
ஷ்²ருகா³ல இதி விக்²யாதோ நித்யம் பரமகோபன꞉ ||2-39-51

ஓ! கிருஷ்ணா, பெரும் கோபம் நிறைந்தவனும், சிறப்புமிக்கவனும், கொண்டாடப்படுபவனுமான மன்னன் வாசுதேவ சிருகாலன் இப்போது இந்நகரை ஆள்கிறான்.

ந்ருபேண தேன கோ³விந்த³ தவ வம்ஷ²ப⁴வா ந்ருபா꞉ |
தா³யாதா³ நிஹதா꞉ ஸர்வே வீரத்³வேஷானுஷா²யினா ||2-39-52

அந்த மன்னன், வீரர்களிடம் கொண்ட பொறாமையினால் உன் குலத்தில் பிறந்த மன்னர்களையும், உன் உறவினர்கள் அனைவரையும் அழித்துவிட்டான்.

அஹங்காரபரோ நித்யமஜிதாத்மாதிமத்ஸரீ |
ராஜ்யைஷ்²வர்யமதா³விஷ்ட꞉ புத்ரேஷ்வபி ச தா³ருண꞉ ||2-39-53

ஓ! கோவிந்தா, பெருஞ்செருக்குமிக்க மன்னன் சிருகாலன், கட்டுப்பாடில்லா மனம் கொண்டவனாக, அடுத்தவரின் செழிப்பைக் காணச் சகியாமல், தான் கொண்ட நாட்டினாலும், வளத்தினாலும் செருக்கடைந்து, தன் மகன்களையே ஒடுக்குபவனாக இருக்கிறான்.

தன்னேஹ ப⁴வத꞉ ஸ்தா²னம் ரோசதே மே நரோத்தம |
கரவீரபுர்ரே கோ⁴ரே நித்யம் பார்தி²வதூ³ஷிதே ||2-39-54

ஓ! மனிதர்களில் சிறந்தவனே, மன்னர்கள் அனைவராலும் நிந்திக்கப்படும் இந்தப் பயங்கரமான கரவீரபுரத்தில் நீ வாழக்கூடாது என நான் நினைக்கிறேன்.

ஷ்²ரூயதாம் கத²யிஷ்யாமி யத்ரோபௌ⁴ ஷ²த்ருபா³த⁴னௌ |
ஜராஸந்த⁴ம் ப³லோத³க்³ரம் ப⁴வந்தௌ யோத⁴யிஷ்யத꞉ ||2-39-55

உங்கள் பகைவனான ஜராசந்தனைத் தடுத்து, நீங்கள் சக்தியுடன் போரிடக் கூடிய இடத்தை நான் இப்போது சொல்லப் போகிறேன் கேட்பாயாக

தீர்த்வா வேணாமிமாம் புண்யாம் நதீ³மத்³யைவ பா³ஹுபி⁴꞉ |
விஷயாந்தே நிவாஸாய கி³ரிம் க³ச்சா²ம து³ர்க³மம் ||2-39-56

ஓ! மாதவா, உனக்கு நன்மை உண்டாகட்டும். இன்றே நாம் நமது கரங்களைக் கொண்டு புனித ஆறான வேணையை நீந்திக் கடந்து, இந்நாட்டின் எல்லையில் அமைந்துள்ள கடப்பதற்கரிதான மலையில் இரவைக் கழிப்போம்.

ரம்யம் யஜ்ஞகி³ரிம் நாம ஸஹ்யஸ்ய ப்ரருஹம் கி³ரிம் |
நிவாஸம் மாம்ஸப⁴க்ஷாணாம் சௌராணாம் கோ⁴ரகர்மணாம் ||2-39-57

நாநாத்³ருமலதாயுக்தம் சித்ரம் புஷ்பிதபாத³பம் |
ப்ரோஷ்யே தத்ர நிஷா²மேகாம் க²ட்வாங்கா³ம் நாம நிம்னகா³ம் ||2-39-58

ப⁴த்³ரம் தே ஸந்தரிஷ்யாமோ நிகஷோ²பலபூ⁴ஷணாம் |
க³ங்கா³ப்ரபாதப்ரதிமாம் ப்⁴ரஷ்டாம் ச மஹதோ கி³ரே꞉ ||2-39-59

ஊனுண்ணும் பயங்கர விலங்குகளின் வசிப்பிடமும், மரம், செடி கொடிகள் நிறைந்ததும், பூத்துக் குலுங்கும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டதும், யஜ்ஞகிரி என்ற பெயரைக் கொண்டதுமான சஹ்ய மலையின் சிறு பகுதியில் ஓரிரவைக் கழித்து, கங்கையின் அருவிக்கு ஒப்பாக அந்தப் பெருமலையில் இருந்து வெளிவருவதும், பொற்தாமரைகளால் அலங்கரிக்கப்பட்டதுமான கட்வாங்கி {கட்வாங்க} ஆற்றைக் கடந்து, தவசிகளுடன் கூடிய பல்வேறு காடுகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் கங்கையின் {கங்கையின் அருவிகளுக்கு ஒப்பான} அருவிகளைக் காண்போம்.(57-59)

தஸ்யா꞉ ப்ரபாதம் த்³ரக்ஷ்யாம-
ஸ்தாபஸாரண்யபூ⁴ஷணம் |
உபபு⁴ஜ்ய த்விமான்காமா-
ந்க³த்வா தாந்த⁴ரணீத⁴ரான் ||2-39-60

த்³ரக்ஷ்யாமஸ்தத்ர தான்விப்ரா-
ஞ்சா²ம்யதோ வை தபோத⁴னான் |
ரம்யம் க்ரௌஞ்சபுரம் நாம
க³மிஹ்யாம꞉ புரோத்த்மம் ||2-39-61

மதிப்புக்குத் தகுந்தவர்களாக இருப்பினும் அவற்றைப் பொருட்படுத்தாத தவசிகளை அந்த மலையில் {யஜ்ஞகிரியில்} காண்போம். அதன்பிறகு அந்த {கட்வாங்கி} ஆற்றைக் கடந்து கிரௌஞ்சமெனும்[கிரௌஞ்ச கிரி என்று கர்நாடகத்தில் ஓரிடம் இருக்கிறது.] அழகிய நகரத்திற்குச் செல்வோம்.(60,61

வம்ஷ²ஜஸ்தத்ர தே ராஜா க்ருஷ்ண த⁴ர்மரத꞉ ஸதா³ |
மஹாகபிரிதி க்²யாதோ வனவாஸ்யஜனாதி⁴ப꞉ || 2-39-62

ஓ! கிருஷ்ணா, அந்த மாகாணத்தின் {நாட்டின்} அறம்சார்ந்த மன்னன் மஹாகபி என்பவன் உன் குலத்தில் பிறந்தவனாவான்

தமத்³ருஷ்ட்வைவ ராஜானம் நிவாஸாய க³தே(அ)ஹனி |
தீர்த²மானடு³ஹம் நாம தத்ரஸ்தா²꞉ ஸ்யாம ஸங்க³தா꞉ ||2-39-63

நாம் அந்த மன்னனைச் சந்திக்காமல், இரவைக் கழிப்பதற்காக நித்திய புனிதத் தலமான ஆந்துஹம் {ஆனதூஹம்} செல்வோம்

ததஷ்²ச்யுதா க³மிஷ்யாம꞉ ஸஹ்யஸ்ய விவரே கி³ரிம் |
கோ³மந்தமிதி விக்²யாதம் நைகஷ்²ருங்க³விபூ⁴ஷிதம் ||2-39-64

அங்கே இருந்து புறப்பட்டு, சஹ்ய மலையின் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள சிகரங்கள் பலவற்றுடன் கொண்டாடப்படும் கோமந்த மலைக்குச்[இன்றுள்ள கோவா மாநிலம் கோமந்தக நாடு என்றே அழைக்கப்பட்டது. கர்நாடகத்தின் ஷிமோகா மலையில் உள்ள சர்திரகுடி மலை இஃது என்றும் சிலர் சொல்கிறார்கள்.] செல்வோம்

க²க³தைகமஹாஷ்²ருங்க³ம் து³ராரோஹம் க²கை³ரபி |
விஷ்²ராமபூ⁴தம் தே³வானாம் ஜ்யோதிர்பி⁴ரபி⁴ஸம்வ்ருதம் ||2-39-65

ஸோபானபூ⁴தம் ஸ்வர்க³ஸ்ய க³க³நாத்³ரிமிவோச்ச்²ரிதம் |
தம் விமானாவதரணம் கி³ரிம் மேருமிவாபரம் ||2-39-66

ஓ! கிருஷ்ணா, அங்கிருக்கும் சிகரங்களில் ஒன்று, பறவைகளும் எட்ட முடியாத உயரத்திற்கு வானில் எழுந்திருக்கிறது. தேவலோகத்திற்குச் செல்லும் படிக்கட்டும், ஒளிக்கோள்களால் சூழப்பட்ட தேவர்களின் ஓய்விடமான ஆகாய வீட்டைப் போன்று உயரமானதும், தெய்வீக வாகனங்கள் அனைத்தும் இறங்கும் இடமுமான அந்த {கோமந்த} மலையானது, இரண்டாம் சுமேரு மலையைப் போன்றதாகும்.(65,66)

தஸ்யோத்தமே மஹாஷ்²ருங்கே³ பா⁴ஸ்வந்தௌ தை³வரூபிணௌ |
உத³யாஸ்தமயே ஸூர்யம் ஸோமம் ச ஜ்யோதிஷாம் பதிம் ||2-39-67

ஊர்மிமந்தம் ஸமுத்³ரம் ச அபாரத்³வீபபூ⁴ஷணம் |
ப்ரேக்ஷமாணௌ ஸுக²ம் தத்ர நகா³க்³ரே விசரிஷ்யத²꞉ ||2-39-68

அந்த உயர்ந்த சிகரத்தில் ஏறி, சூரியனும், சந்திரனும், ஒளிக்கோள்களின் பிரகாசமான தலைவர்களும் எழுவதையும், மறைவதையும், பெருங்கடலின் பொங்கும் அலைகளையும், அவற்றை அலங்கரிக்கும் அபார த்வீபத்தையும் {தீவையும்} கண்டு அங்கே உலவலாம்.(67,68)

ஷ்²ருங்க³ஸ்தௌ² தஸ்ய ஷை²லஸ்ய கோ³மந்தஸ்ய வனேசரௌ |
து³ர்க³யுத்³தே⁴ன தா⁴வந்தௌ ஜராஸந்த⁴ம் விஜேஷ்யத²꞉ ||2-39-69

கோமந்த மலை சிகரத்தின் காட்டில் அமைந்துள்ள கோட்டையில் இருந்தபடி நீ ஜராசந்தனைத் தடுத்துப் போரிட்டால் உன்னால் அவனை வெல்ல முடியும்.

தத்ர ஷை²லக³தௌ த்³ருஷ்ட்வா ப⁴வந்தௌ யுத்³த⁴து³ர்மதௌ³ |
ஆஸக்த꞉ ஷை²லயுத்³தே⁴ வை ஜராஸந்தோ⁴ ப⁴விஷ்யதி ||2-39-70

ப⁴வதோரபி யுத்³தே⁴ து ப்ரவ்ருத்தே தத்ர தா³ருணே |
ஆயுதை⁴꞉ ஸஹ ஸம்யோக³ம் பஷ்²யாமி ந சிராதி³வ ||2-39-71

மலைச்சிகரத்தில் உன்னைக் காணும் ஜராசந்தனால் பாறைகளில் போரிட இயலாது. அந்தப் பயங்கரப் போர் நேரும்போது நீ அடையப் போகும் ஆயுதங்களை என் முன்னே நான் காண்கிறேன்.(70,71)

அங்க்³ராமஷ்²ச மஹான்க்ருஷ்ண நிர்தி³ஷ்டஸ்தத்ர தை³வதை꞉ |
யதூ³னாம் பார்தி²வாணாம் ச மாம்ஸஷோ²ணிதகர்த³ம꞉ ||2-39-72

ஓ! கிருஷ்ணா, தேவர்களால் விதிக்கப்பட்டபடியே யாதவர்களுக்கும், பிற மன்னர்களுக்கும் இடையில் நடக்கும் அத்தகைய போரில் சதையும், குருதியும் கலந்த சேற்றால் பூமி நிறைந்திருக்கும்.

தத்ர சக்ரம் ஹலம் சைவ க³தா³ம் கௌமோத³கீம் ததா² |
ஸௌனந்த³ம் முஸலம் சைவ வைஷ்ணவாந்யாயுதா⁴னி ச ||2-39-73

த³ர்ஷ²யிஷ்யந்தி ஸங்க்³ராமே பாஸ்யந்தி ச மஹீக்ஷிதாம் |
ருதி⁴ரம் காலயுக்தானாம் வபுர்பி⁴꞉ காலஸம்நிபை⁴꞉ ||2-39-74

யமனுடைய வடிவங்களைப் போலத் தோன்றும் சக்கரம், கலப்பை, கௌமோதகீ எனும் கதாயுதம், சௌநந்தமெனும் உலக்கை ஆகியவையும் பிற வைஷ்ணவ {விஷ்ணுவின்} ஆயுதங்களும் காலனால் தூண்டப்பட்டு அந்தப் போரில் மன்னர்களின் குருதியைக் குடிக்கும்.(73,74)

ஸ சக்ரமுஸலோ நாம ஸங்க்³ராம꞉ க்ருஷ்ண விஷ்²ருத꞉ |
தை³வதைரிஹ நிர்தி³ஷ்ட꞉ காலஸ்யாதே³ஷ²ஸஞ்ஜ்ஞித꞉ ||2-39-75

தத்ர தே க்ருஷ்ண ஸங்க்³ராமே ஸுவ்யக்தம் வைஷ்ணவம் வபு꞉ |
த்³ரக்ஷ்யந்தி ரிபவ꞉ ஸர்வே ஸுராஷ்²ச ஸுரபா⁴வன ||2-30-76

ஓ! கிருஷ்ணா, ஓ! தேவர்களின் வசிப்பிடமாக இருப்பவனே, தேவர்களால் விதிக்கப்பட்டபடியும், காலத்தால் கொண்டுவரப்பட்டபடியும் சக்கரத்தாலும், கதாயுதத்தாலும் அமையும் அந்தப் போரில் தேவர்களும், உன் பகைவர்களும் உன்னை விஷ்ணு வடிவில் காண்பார்கள்.(75,76)

தாம் ப⁴ஜஸ்வ க³தா³ம் க்ருஷ்ண சக்ரம் ச சிரவிஸ்ம்ருதம் |
ப⁴ஜஸ்வ ஸ்வேன ரூபேண ஸுராணாம் விஜயாய வை ||2-39-77

நீண்ட காலமாக உன் நினைவுக்குள் வராத அந்தச் சக்கரத்தையும், கதாயுதத்தையும் தேவர்களின் பணியை நிறைவேற்றுவதற்காக விஷ்ணுவின் வடிவில் நீ எடுப்பாயாக

ப³லஷ்²சாயம் ஹதம் கோ⁴ரம் முஸலம் சாரிபே⁴த³னம் |
வதா⁴ய ஸுரஷ²த்ரூணாம் ப⁴ஜதாம்ˮல்லோகபா⁴வன꞉ ||2-39-78

உலகின் ஆதாரமான ரோஹிணியின் மகன் {பலராமன்}, பகைவரைக் கலங்கடிக்கவல்ல கலப்பையையும், பயங்கரமான உலக்கையையும் தேவர்களின் பகைவரை அழிப்பதற்காக எடுத்துக் கொள்ளட்டும்.

ஏஷ தே ப்ரத²ம꞉ க்ருஷ்ண ஸங்க்³ராமோ பு⁴வி பார்தி²வை꞉ |
ப்ருதி²வ்யர்தே² ஸமாக்²யாதோ பா⁴ராவதரணே ஸுரை꞉ ||2-39-79

பூமியின் சுமையில் இருந்து அவளை விடுவிப்பதற்காக நடந்த கூட்டத்தில் தேவர்களால் பேசப்பட்டதுபோல, உலகில் மன்னர்களுடனான உன்னுடைய முதல் போரானது இதுவாகவே இருக்கும்.

ஆயுதா⁴வாப்திரத்ரைவ வபுஷோ வைஷ்ணவஸ்ய ச |
லக்ஷ்ம்யாஷ்²ச தேஜஸஷ்²சைவ வ்யூஹானாம் ச விதா³ரணம் ||1-39-80

இந்தப் போரில் நீ விஷ்ணுவின் வடிவை ஏற்று, ஆயுதங்களையும், செழிப்பையும், சக்தியையும் அடைந்து, பகைவரின் படையை அழிப்பாய்

அத꞉ ப்ரப்⁴ருதி ஸங்க்³ராமோ த⁴ரண்யாம் ஷ²ஸ்த்ரமூர்ச்சி²த꞉ |
ப⁴விஷ்யதி மஹான் க்ருஷ்ண பா⁴ரதம் நாம வைஷ²ஸம் ||2-39-81

ஓ! கிருஷ்ணா, இந்தப் போரானது, ஆயுதங்கள் நிறைந்ததும், பாரதம் என்ற பெயரில் நடக்கப் போவதுமான மற்றொரு பெரும்போருக்கான வித்துகளைத் தூவும்.

தத்³க³ச்ச² க்ருஷ்ண ஷை²லேந்த்³ரம் கோ³மந்தம் ச நகோ³த்தமம் |
ஜராஸந்த⁴ம்ருதே⁴ c꞉ஆபி விஜயஸ்த்வாமுபஸ்தி²த꞉ ||2-39-82

எனவே, நீ மலைகளில் சிறந்த கோமந்தத்திற்குச் செல்வாயாக. ஜராசந்தன் அழிவின் விளிம்பில் இருக்கிறான் என்பது சில அறிகுறிகளின் மூலம் தெரிகிறது.

இத³ம் சைவாம்ருதப்ரக்²யம் ஹோமதே⁴னோ꞉ பயோம்ருதம் |
பீத்வா க³ச்ச²த ப⁴த்³ரம் வோ மயா(ஆ)தி³ஷ்டேன வர்த்மனா ||2-39-83

இந்த வேள்விப் பசுவின் அமுதம் போன்ற பாலைப் பருகிவிட்டு என்னால் சுட்டிக்காட்டப்பட்ட வழியில் செல்வாயாக. உனக்கு நன்மை நேரட்டும்” என்றார் {பரசுராமர்}

இதி ஷ்²ரீமஹாபா⁴ரதே கி²லேஷு ஹரிவம்ஷே² விஷ்ணுபர்வணி
ராமவக்யே ஏகோனசத்வாரிம்ஷோ²(அ)த்⁴யாய꞉

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: