ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகம சாஸ்திரத்தில் உள்ள – ஸ்ரீ லஷ்மீ தந்த்ரம் –அத்தியாயம் –29-அக்னீ ஷோம வேறுபாடுகள்

அத்யாயம் – 29 –அக்னீ ஷோம வேறுபாடுகள்

ஸூத்த அஸூத்த ஷட் அத்வாக்ய விசித்திர நிர்மாணபித்தயே
நமஸ் ஸ்ரீ வத்ஸ பாமிந்யை பவ சந்தாப சந்தயே –1-

அக்னீ ஷோம விபாகம் மே க்ரியா பூதி வித்யாம் அபி
ப்ரூஹி மே தத்வத பத்மே வித்யாயாஸ் தாரிகா க்ருதே–2-

ஸ்ரீ
வியாபகம் யத் பரம் ப்ரஹ்ம சக்திர் நாராயணீ ஹி யா
சா ஹி அஹம் பரிணாமே ந பவாமி ப்ராண வாக்ருதி–3-

அக்னீ ஷோம விபாகம் மே தாரிகாயா நிசாம்ய
க்ரியா பூதி விதாநம் ச யதாவத் ஸூர நந்தன -4-

உன்மேஷஸ் பரமோ விஷ்ணோராத்யஸ் ஷாட் குண்யசின்மய
சாஹம் சம்ப்ருத சம்பாரா சக்திஸ் தே கதிதா புரா -5-

அவனின் சக்தியாக ஸ்ருஷ்ட்டி நிலையாக உள்ளேன்

ஸ்ருஷ்டவத்யா ஜகத் க்ருத்ஸ்னம் தஸ்யா மே ரஷனோத்யமே
த்விதா ப்ரவரத்தே ரூபம் முகே நைஸ்வர்ய தேஜஸா –6-

ஷாட் குண்ய மேவ மே ரூபம் கிஞ்சித் தேஜோ முகம் மதம்
ஷாட் குண்யமேவ மே ரூபம் பரம ஐஸ்வர்ய சம்முகம் -7

தேஜோ முகம் து யத் ரூபம் சா க்ரியா சக்தி ருச்யதே
சைவாக் நி ருச்யதே சக்திஸ் சர்வோ பப்லவதா ஹ நாத் –8 -தேஜஸ் அதிகமாக உள்ள கிரியா சக்தியே அக்னி

ஐஸ்வர்ய சம்முகம் ரூபம் பூதிர் லஷ்மீ ரிதீ ரிதா
சக்திர் ஐஸ்வர்ய பூயிஷ்டா சா மே ஸோம மயீ த நு -9-ஐஸ்வர்யம் ஓங்கி போதிசக்தி-லஷ்மீ சோமனை உள்ளடக்கி இருக்கும்

சோஷணாத் ஸர்வ தோஷானாம் அக்னி சக்தி க்ரியா மயீ
ஜகதா ப் யாய யந்த் யன்யா பூதி ஸோம இஹோஸ்யதே -10-

அக்னி துன்மங்களை ஒழித்து செயல்களைக் கொண்டதாக இருக்கும்
மற்ற சக்தி பூதி சோமம் என்பதாகும்

இச்சா ஞான க்ரியா மய்யாஸ்தே இமே வ்யூஹஜே மம
ஷாட் குண்ய விக்ரஹா சாஹம் வ்யூஹினீ பரமேஸ்வரீ –11–
இச்சா ஞான கிரியா சக்திகளுடன் கூடிய அக்னி சக்தி பூ சக்தி வ்யூஹ நிலையில் வெளிப்படும்
ஆறு குணங்களும் சமமாகவும் பரி பூர்ணமாகவும் உள்ள பரமேஸ்வரி வடிவமே வியூகம்

யா சா சக்தி க்ரியாக்யா மே ஷாட் குண்யம் தேஜஸ்ஸ உஜ்ஜ்வலம்
தஸ்யா ஆ சம்ஸ் த்ரயோ வ்யூஹா ஸூர்ய சோம அக்னி சக்த்ய –12-
தேஜஸ் அதிகமாக உள்ள கிரியா சக்தி ஸூர்ய சக்தி சோம சக்தி அக்னி சக்தி இவற்றைக் கொண்டது

தாஸாமாத்யா பரா திவ்யா ஸூர்யாக்யா சக்திர் உஜ்ஜ்வலா
நிர்வஹந்தீ ஜகத் க்ருத்ய மநிசம் பரிவர்த்ததே -13-
இவற்றுள் ஸூர் ய சக்தி மிக உயர்ந்தது -எப்போதும் வெளிப்பட்டபடியும் ஜகத் ஸ்ருஷ்ட்டியையும் செய்தபடி உள்ளது

அத்யாத்மம தி தைவம் ச ததா சைவாதி பவ்திகம்
தஸ்யா ரூப த்ரயம் வித்தி ஸூர் யாக்யாயா ஸூ ரேஸ்வர –14-
ஸூர்ய சக்தி ஆத்மா தெய்விகம் பூதங்கள் என்ற மூன்று ரூபங்களுடன் கூடியதாக உள்ளது

அத்யாத்மஸ்தா து ஸூர் யாக்யா பிங்களா மார்க்க காமிநீ
ஆலோகேனாதி பூதஸ்தா ஸூர்ய சக்தி ப்ரவர்த்ததே –15-
ஆத்மாவுடன் தொடர்பு கொண்ட நிலையில் ஸூர்ய சக்சாக்தி பிங்களை மூலமாக யோக சக்தியைக் கடக்கிறது
இந்த சக்தி ஒளி ரூபமாகத் தன்னை வெளிப்படுத்தி உள்ளது

ஸூர்ய மண்டல ஸம்ஸ்தாநா சக்திஸ் சான்யாதி தைவிகீ
ஸூர்ய மண்டல ஸம்ஸ்தாநா அர்ச்சி ஷோ யா ப்ரகீர்த்திதா –16-அர்ச்சிஸ் பகல் தேவதையின் சக்தி
ருசஸ்தா வித்தி தேவேச தபந்தீஸ்தப நாத்மிகா
தீப்தயோ யாஸ்தந்த ஸ்தாஸ்தானி சாமானி வித்தி மே –17-கதிர்கள் ருக்வேத மந்த்ரங்கள்
இவையே ஸூரியனுக்கும் நமக்கும் வெப்பம் கொடுக்கின்றன
அந்தஸ் ஸ்தாயா பரா சக்தி பவ்ருஷீம் தனுமாஸ்திதா
தாம் வித்தி புருஷம் திவ்யம் ரமணீயம் யஜுர் மயம் –18-ஸூர்ய ஒளியே சாமம் -மண்டல வர்த்தியே பரப்ரஹ்மம்
திவ்ய போக்ய திவ்ய மங்கள விக் ரஹம் -யஜுர் மயம்
சங்கு சக்ர தரம் ஸ்ரீ சம் பீனோதாரா சதுர்புஜம்
பிரசன்ன வதனம் பத்ம விஷ்டரம் புஷ்க்ரேஷணம்–19-
மூர்த்தாந்த புருஷஸ் யாஸ்யா தச ஹோதா நிகத்யதே
பாத பாணி சதுர் ஹோதா தேவஸ் யாஸ்யஸூ ரேஸ்வர–20
தைத்திரீய ஆரணீயக ம்-சொல்லும் -தலையாக தச ஹோதா மந்த்ரம் – கால்கள் கைகள் சதுர் ஹோதா மந்த்ரம்

லோம மாம்ஸ அஸ்தி மஜ்ஜாஸ் ருக் பஞ்ச ஹோதா ஸூரேஸ்வர
ஸ்தநா வண்டவ் ச பும்ஸ்த்வம் ச ஷட்டோதாபாந ஏவ ச –21-

சீர் ஷண்யா ஸப்த யே ப்ராணா ஸப்த ஹோதா நிகத்யதே
சோபாஸ்து தஷிணாஸ் தஸ்ய சம்பாரா சந்த்ய ஸ்ம்ருதா –22-

நாடயோ தேவ பத்ன்ய அஸ்ய ஹோத் ருணாம் ஹ்ருதயம் மன
சேதன பவ்ருஷம் ஸூக் தம் சக்தி ஸ்ரீ ஸூ க் தம் உச்யதே –23–புருஷ ஸூ க்தம் ஞானம் -ஸ்ரீ ஸூ க்தம் சக்தி

ஓங்கார ப்ரணவஸ் தாரோ க்ருஹ்யம் நாம ஸனாதனம்
யஜும் ஜி ருத்ர சுக்ராணி ஸ்தூல நாமானி தஸ்ய து –24-

ஸூ ஷ்மமான பெயர்கள் ஓங்காரம் பிரணவம் தாரா
ஸ்தூலமான பெயர்கள் யஜுஸ் ருத்ரம் சுக்ரம்

யஜுர் மய மனும் திவ்ய மப்யஸ்யன் புருஷம் நரஸ்
அநு வ்யாஹ்ருத்ய பீ சார பபேப்ய அபி ப்ரமுச்யதே –25-

தபத்யேவம் பரா சக்தி ஸ் த்ரயீ ஸூர்யாக்ய யாம்பரே
த்ரி வித்யைஷா பரா சக்தி ப்ரக்யாதா ஸூர்ய சம்ஜ்ஞயா –26-

உயர்ந்த சக்தியான ஸூ ர்யன் த்ரயீ என்னும் விண்ணில் பிரகாசிக்க –
அது மூன்று விதங்களில் அறியப்படுகிறது

ஸாவித்ரீ நாம வேதா நாம் ஜநநீ பரிவர்த்ததே
த்ரி வர்ண ப்ரணவாதார பூர் புவஸ் ஸ்வஸ் த்ரி நாடிகா –27-
ததாதி வர்ண பவ நா சிரஸ் கல்பித சேகரா
ஷித்யாதி புருஷார்ந்தார்ணா ப்ரகாசாநந்த விக்ரஹா –28-
உதிதா ப்ரஹ்மணோ பூயோ ப்ரஹ்மணி ப்ரதிஷ்டதி
வேதா நாம் ஜநநீ சைஷா வர்ணா நாம் ஜநநீ பரா –29-

வேதங்கள் தாய் ஸாவித்ரீ -ஒலி ரூபம் -மூன்று எழுத்து பிரணவம் கொண்டுள்ளாள்
பூ புவஸ் ஸ்வஸ்–மூன்று நாடி
தத் சவிதுர் வரேண்யம்–தத் முக்ய ப்ராணன்
தலை சிரஸ் மந்திரத்தால் அலங்காரம்
ஓம் ஆபோ ஜ்யோதி ரஸோ அம்ருதம் ப்ரஹ்ம பூர் புவ ஸூ வ ரோம்
ப்ரஹ்மத்திலே வெளிப்பட்டு ப்ரஹ்மத்திலே லயிக்கிறாள்

அநு லோம விலோ மாப்யாம் ஸுவ்ம்யாக்நே யீ நிகத்யதே
ஸை ஷா ஸூர்ய வபுர் திவ்யா ஸாவித்ரீ மன்மயீ கலா –30-

அ முதல் ஹ வரை ஏழும் ஏர் வரிசை / ஷ முதல் ஆ ஏழும் இறங்கு வரிசை —
ஸூர்ய வடிவில் ஸாவித்ரீ என்னும் கலை –

காயத்ரீ நாம மாயந்தம் தாரயதே மஹதோ பயாத்
ஆதாய ஜீவநம் கோபிர் பூ சரித் ப்ராணி சம்பவம் –31-
புநர் முஞ்சதி மேகுஷு நவமா ஸத்ருதம் குரை
உக்தா ஸூர்ய மயீ சக்தி ஸ்ருணு வஹ்நீ மயீம் பராம் –32–

ஸூ ர்யனை உள்ளடக்கிய சக்தியான காயத்ரீ உச்சாரணமே ரக்ஷணம்
அடுத்து அக்னியை உள்ளடக்கிய சக்தி பற்றி கூறுகிறேன் –

ஏஷாமி த்ரி விதா சக்ர சக்திர் வஹ் நி மயீ மம
திவ்யே காபிந் தநா ஹி அன்யா ஷிதவ் ஷிதி மயேந்தநா –33
ததே புக்தேந்தநா கோஷ்டே சக்திர் வஹ் நி மயா த்ரி தா
சர்வ தேவ மயீ ஸைஷா தேவா நாம் முகமுச்யதே –34-
த்ரி வர்கஸ் தை ஸ் து தா ஸைஷா த்ரிஷ்டு பித் யுச்யதே புதை
துர்காணி தாரயந்த்யாத்ம பாராயண பரம் நரம் –35-

சக்தி ஸோம மயீ த்வந்யா ஸாபி த்ரேதா நிகத்யதே
திவி பிம்பாத்மநா த்வேகா ததாந் யைஷ தி ரூபிணீ –36-
சரதி ப்ராணி நாம் அந்தஸ் இடயைக அம்ருதாத்மிகா
அநுஷ் டிம்பிஸ் ஸ்தூயமா நா ச ஏஷ அனுஷ்டு புதீ ரிதா –37-

சோமனை உள்ளடக்கிய என்னுடைய சக்தி மூன்று நிலைகள்
விண்ணில் வளையமாக சந்திரன் -பூமியில் ஸ்தாவரங்கள் –
மூன்றாவது நிலையில் உயிர்களுக்கு இடா நாடியாகவும் அம்ருதமாகவும் அறியப் படுகிறாள் –
அனுஷ்டுப் சந்தஸ்ஸால் போற்றப்படுவதால் அனுஷ்டுப் என்றும் கூறப்படுகிறாள்

ம்ருத்யஞ்ஜய இதி ப்ரோக்தா சா வித்யா ம்ருத்யு நாஸி நீ
ஸூர்ய ஸோம அக்னி ரூபாணாம் தாஸா மாஸாம் புரந்தர –38-
ஹவிஷ் க்ருதுதிதா ஸூர்யாத் ஸோம ரூபா ஹவிர் மயீ
ஹவிரத்தி ததாக்ந் யாக்யா வஹ் நி விப்ரமுக்யாத்மநா –39-

அனுஷ்டுப் சந்தஸிசில் உள்ள இந்த மந்த்ரம் ம்ருத்யஞ்ஜய மந்த்ரம் எனப்படும்
ஸூர்யன் சோமன் அக்னீ இந்த மந்திரத்தின் பல ரூபங்கள்
அவளுடைய கிரியா சக்தி ரூபமான ஸோமன் -ஸூ ர்யன் இடம் வெளிப்பட்டு வெண்ணெயை
ஹவிர்பாவம் அளிப்பதாகக் கொள்ளப்படுகிறது
ஹவிர்பாக வெண்ணெயை அவள் உண்கிறாள் -அக்னியின் வாய் எனப்படும் அந்தணனாக உண்கிறாள் –

திஸ் ருபிர் வர்த்ததே க்ருத்ஸ்நம் லோக தந்த்ர மஹிர் நிசம்
இதி வ்யூஹ த்ரயோ பேதா வ்யூஹி நீ ஸா க்ரியாத் மிகா –40-

இந்த மூன்று சக்திகளாலும் ஸ்ருஷ்ட்டி இரவு பகலாக நடை பெறுகின்றன –
இந்த கிரியா சக்தியை உள்ளடக்கிய மூன்று வ்யூஹங்களுடைய –
சங்கர்ஷணன் ப்ரத்யும்னன் அநிருத்தன் -இவற்றின் சாரமாகும் –

சக்தி பரம கம்பீரா மம தேஜோ முகோத் கதா
ஸூ ர்ய இந்து வஹ்னி கோட யோக நியுதார்புத பாஸ்வரா –41-
சக்ரம் ஸூ தர்சனம் நாம ஸா பவத் யரி தாரணம்
அஸ்த்ரம் பரம தேஜிஷ்டமாக் நேயம் நாம வைஷ்ணவம் –42-

எனது சக்தியே ஸூ தர்சனம் போல் தேஜஸ் மிக்கு கோடிக்கணக்கான ஸூர்ய சந்த்ர அக்னி
போல் உள்ளது

பரோத்யம ஸ்வரூபம் தத் ப்ராணாதி ப்ராண நம் பரம்
உத்யந்தி ஸர்வாண்யஸ் த்ராணி தஸ்மாத் ஸர்வாச்ச சக்தய –43-
கரணம் சாதகம் பஞ்ச க்ருத்ய வித்யவ் ஹரே
ந தத் க்ருத்யம் விநா தேந யத் ஸ்யாத் விஷ்ணோர் மஹாத்மன –44-
சங்கல்பாதி ஸ்வரூபேயம் ஸ்ருஷ்டவ் விஷ்ணோ ப்ரவர்த்ததே
ரஷனே ஸம்ஹ்ருதவ் சைவ தத்தே சக்ர மயீம் த நும் –45-

இந்த எனது சக்தியே ஸ்ரீ விஷ்ணுவின் சங்கல்ப ரூபமாய் ஸ்ருஷ்ட்டித்தும்
ஸ்ரீ ஸூ தர்சன ரூபமாய் ரக்ஷணம் சம்ஹாரம் செய்கிறது

மம அம்சஜா பராக் நே யீ க்ரியா சக்திர் ஹி வைஷ்ணவீ
ஆ ப்ரஹ்மஸ்தம் பர்யந்தம் ஷோடா விஷ்டப்ய திஷ்டதி –46-

இந்த கிரியா சக்தி எனது அம்சம் –விஷ்ணுவைச் சேர்ந்தது -அக்னி போல் உள்ளது –
ஆ ப்ரம்மா த்ருணாதி உள்ள அனைத்திலும் ஆறு நிலைகளில் உள்ள ஸ்ருஷ்ட்டி மூலமாகப் பரவி நிற்கிறது –

தத்ர வர்ண மயம் சக்ரம் ப்ரதமம் ஸ்ருணு வாஸவ
தாரிகா தாரக த்வந்த்வ மஷகம் பார மேஸ்வரம் –46-
நாபவ் ஸூர்ய இந்து பாரூபம் ஸ்ரிதம் ஸ்வாரம் த்விரஷ்டகம்
காதி பாந்தம் த்ரி ரஷ்டாரம் மாதி ஹந்தம் து நேமிகம் –48
ப்ரதி பர்யந்த வஹ்னியாத்மா வர்காந்த பிண்ட ஸம் நிப
வர்ண சக்ரம் இதம் திவ்யம் வர்த்ததே வர்ண வர்த்மநா –49-

இந்த சக்கரத்தின் அச்சு ஆரமாக விஷ்ணுவின் தாரிக தாரக மந்த்ரங்கள் அமைந்துள்ளன –
16 ஸ்வர அக்ஷரங்கள் ஸூர்ய சந்த்ர ஒளி ரூபமாக சக்கரத்தின் வெளி வட்டம்
க தொடங்கி ப வரையில் ம தொடங்கி ஹ வரையில் உள்ள 24 அக்ஷரங்கள் இணைக் கம்பிகள்
அக்னியைக் குறிக்கும் ஷ எழுத்து வட்டமாக வெளிப்பகுதியுடன் இணைந்து
இவ்வாறு அக்ஷரங்களின் திவ்ய சக்கரம் உள்ளது –

கலா சக்ரம் இதம் சக்ர ஞான அக்ஷம் சக்தி நாமி காம்
ஐஸ்வர்யாரம் பலாத்வேந மேப் யாத்யம் த்ரி குணேந து –50-

இந்திரனே கலைச் சக்கரம் இப்படி உள்ளது -ஆரமாக ஞானமும் வெளி வட்டமாக சக்தியும் –
இணைக் கம்பிகள் ஐஸ்வர்யம் உள் வட்டமாக பலம் வீர்யம் தேஜஸ் உள்ளன –

தத்வம் து வாஸூ தேவம் அக்ஷம் நாபி ஸங்கர்ஷண உஜ்ஜ்வல
ப்ரத்யும்ன ஆரம் ததா சக்ர ப்ரதி ரூப அநிருத்தகம் –51-
அஷ நாபி நேமிஸ்தை துர்யாத்யை பத சக்ரகம்
மந்த்ரம் அஷாதிகை பீஜ பிண்ட சம்ஞ்ஞா பதாத்மபி –52-
கால அக்ஷம் நாபி பாவ்யக்தம் மஹ்தாத்யர பஞ்சரம்
மன ஸ்ரோத்ர ததர்த்தாதி விகார பரிமண்டலம் –53-
லோக லௌகிக பர்யந்தம் புவனம் சக்ரம் அந்திமம்
ஷட் சக்ரம் தததீ ஹஸ்தை பொவ்ருஷீம் தநும் ஆஸ்திதா –54-
ஸூ தர்சன க்ரியா சக்திர் வைஷ்ணவீ சக்ரம் அத்யகா
பீஜம் பிண்டம் பதம் சம்ஞ்ஞா அஸ்யா ஸ்ருணு சதுஷ்டயம் –55 —

புவனம் என்னும் சக்கரத்தின் அச்சாணியாக கலையும் -உள் வட்டமாக அவ்யக்தமும் –
ஆரங்களாக மஹத்தாதிகளும் -வெளி வட்டமாக மனம் இந்திரியங்கள் இந்திரிய விஷயங்கள் -ஆகியவை உள்ளன
ஸ்ரீ ஸூ தர்சனம் கிரியா சக்தி -அவள் திருக்கரங்களில் ஸ்ருஷ்டியின் ஆறு நிலைகளும் உள்ளன
அடுத்து அவளுடைய பீஜம் பிண்டம் பதம் சம்ஞ்ஞ மந்த்ரங்களைக் கேட்ப்பாயாக –

சோமம் ப்ரதமம் ஆதாய ப்ராணம் அந்தே நியோ ஜயேத்
தத அம்ருதம் உபாதாய யோஜயேத் கால பாவகம் –56-

ஸோமம் -ஸ -அக்ஷரம் எடுத்து -பிராணனின் -இறுதியில் சேர்த்து -ஸஹ -கிட்டி -அதைத் தொடர்ந்து
அம்ருதம் -ஸ -அக்ஷரத்தை -கால பாவகம் -ரா -அஷரத்துடன் சேர்த்து –அடுத்து

தத் ஸமஸ்த அநலம் குர்யான் மாயாம் வ்யாபிந மந்தத
ஏதத் ஸுவ் தர்சனம் பீஜம் மத க்ரியா சக்தி ஜ்ரும்பிதம் -57-

அடுத்து அநலம் -ர -அஷரத்துடன் அத்தைச் சேர்த்து -அதனை மாயா வ்யாபின் -ஈம் -அஷரத்துடன் சேர்த்து –
ஸஹஸ்ரா ஈம் -இதுவே கிரியா சக்தியின் வெளிப்பாடு -ஸூ தர்சனத்தின் பீஜம் ஆகும் –

ஸப்த வர்ணாத் மகம் திவ்யம் இதம் பீஜம் மஹர்த்திதம்
ஏதத் ஏவ மஹத் பிண்டம் மாயா வ்யாபி ஸமுஜ்ஜிதம்–58

ஏழு அக்ஷரங்கள் கொண்ட இந்த பீஜம் அனைத்தையும் அளிக்க வல்லதாகும் –
மாயா -வ்யாபின்-ஆகிய அக்ஷரங்கள் -இல்லாத பொழுது மஹத் பிண்டம் ஆகும் –

காலாக்நி யர்கா யுதா காரம் ஏதத் வஜ்ராம்புத த்வநி
பஞ்ச வர்ணம் மஹா பிண்டம் துர்தரம் தேவதா நவை –59-

ஐந்து அக்ஷரங்கள் கொண்ட மஹத் பிண்டம் -கால அக்னியுடன் சூர்யன் இணைந்து
பொறுக்க ஒண்ணாத இடி போல் முழங்குவதாகும்

ஸூசி நா ஸக்ருத் ஸ்மர்ய மஜி தேந்த்ர யுத ஸ்மரம்
ஸ்ம்ருத்வா து ஸாந்தயே ஸ்மர்யே பீஜே மே தாரிகா திகே –60-

இதனை புலன் அடக்கியவர்களே அறிவார் -தாரிகா அநு தாரிகா -பீஜ மந்த்ரங்களைக் கொண்டு
ஸூ தர்சனத்தை சாந்தி பண்ண வேண்டும் –

யோ அசவ் பிண்டோர்த்வ பாகஸ்தோ வர்ண காலாந லாபித
தஹ்யந்தே தேந தைத்யேந்த்ரா லோகாச்சைவ யுகஷயே –61-
காலாநல அக்ஷரம் -ர காரம் -தைத்ய அரசர்களையும் ஸமஸ்த லோகங்களையும் யுக முடிவில் அழிப்பதாகும்

த்வதீய சக்தி சம்ஸ்தேன த்வக்நி நாக்நிந ஸமித்யதே
ஸக்திம் ப்ராணயதி ப்ராண பூரிதோ அம்ருத தேஜஸா –62-
அம்ருதம் தேஜஸ்ஸூ உடன் கூடிய பிராணனை ஓங்கி வளர்ப்பதாகும்

இதி பிண்ட ஸ்வரூபம் தே கதிதம் ஸூர புங்கவ
வ்யாபகை பஞ்சபி பிண்டம் கல்பிதம் த்வந்த ராந்த்ரா –63-
வர்மாஸ் த்ராந்தம் ஸ்ருவாத்யம் ச ஸம்ஜ்ஞா மந்த்ரத்வம் ருச்சதி
வ்யாபகவ் யோஜயே தந்தே பிண்டாத்யோ ஸோம ஸூர்யோ –64-
அந்தே ஸோம அக்னி கூடஸ்ய ஹி ஏகம் வ்யாபக மாநயேத்
ஆத்யந்த யோகஸ்த தாந்த்யஸ்ய வர்ணஸ்ய வ்யாபகவ் ஸ்ம்ருதவ் -65

ஓம் ஸம் ஹம் ஸ்ராம் ரம் ஹும் பட் -என்று ஸ்ரீ ஸூ தர்சன மந்த்ர உபதேசம் செய்யப்பட்டது –

வர்ம ப்ராண ஊர் ஐயோர் வ்யோம துஷ்டோ பத்ரவ மர்தநம்
யஸ் ஸங்கர்ஷணஸ்து ஸம்ஹார கல்பாந்தே அகில கோசரே –66-
ஸ பட்காரஸ் தத் அந்தே ச அப்யாஹ் லாதா சாந்தி காரக
இதி பிண்ட விகர்ஷாத்மா ஸுவ்வம்யாக்நே யோ புனஸ் ஸ்ம்ருத –67-

ஹூம் வர்ண மந்த்ரம் -பட் மந்த்ரம் சங்கர்ஷணனைக் குறிக்கும் -ட் சாந்தியை உண்டாக்கும்
இவ்வாறு சோமன் அக்னி மந்த்ரம் பிண்ட ரூபத்தில் இருந்து வந்தது –

ஸ்வ வர்ணைஸ் அங்கவா நே ஷு பலீ ஸுவ் தர்சனோ புனஸ்
திவ்ய அந்தரிக்ஷ பவ்மாநாம் போகாநாம் அப்தி சாதநம் –68-

சக்தி வாய்ந்த ஸூ தர்சன மந்த்ரம் இம்மை மறுமை அனைத்துக்கும் சாதனமாக இருக்குமே

கல்ப த்ருமோ புனஸ் ஸ அயமாஸ்ரிதாம் புரந்தர
நாராயணாத் ஸமுத்யத்யா மம நித்யம் ஜகத்திதே –69-
அக்னீ ஷோம விபாகஸ்தே கதிதோ வ்ருத்ர ஸூதந
க்ரியா பூதி விபேதச்ச க்ரியா சக்திபிதாபி ச –70-
க்ரியா சக்தி ப்ரபாவச்ச பீஜ பிண்டாதி பேதத
பூய சக்ர க்ரியா சக்தே ருத்தி மேதாவதீம் ஸ்ருணு –71-

வ்ருத்தாசூரனை அழித்த இந்திரனே இந்த மந்த்ரம் கற்பக வருஷம் போல் –
அக்னி சோமன் இவர்களின் -வேறுபாடு க்ரியா சக்தி பூதி சக்தி வேறுபாடு பிண்டம் பீஜம் வேறுபாடு
இவற்றை உனக்கு வெளியிட்டு அருளினேன்
இனி க்ரியா சக்தியின் விரிவை விவரித்து அருளிச் செய்வேன்
29 அத்யாயம் ஸம்பூர்ணம்

——————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: