ஸ்ரீ நியாஸ சதகம் -ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் –

ஸ்ரீமாந் வேங்கடநாதார்ய: கவிதார்க்கிக கேஸரீ,
வேதாந்தாசார்ய வர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி.

{உத்தம ஞான ஸம்பத்தையுடையவரும், வேதாந்தங்களுக்கு சாஸ்த்ரோக்தமான பொருள் உரைப்பதில் பிரஸித்தி பெற்றவரும்,
திருவேங்கடநாதன் என்னும் திருநாமத்தை வஹிப்பவரும், கவனம் பண்ணுபவர், ஹேதுவாதம் செய்பவர் இவர்கள்
எத்திறமையோராயினும் அவர்களுக்கெல்லாம் சிங்கம் போன்றவருமான
நம் தூப்புல் வேதாந்த தேசிகன் அடியேன் மனத்திலே எப்போதும் வீற்றிருக்கக் கடவர்.}

———–

ந்யாஸ வித்யையாவது —
ஆநுகூல்ய ஸங்கல்பம், ப்ராதிகூல்ய வர்ஜநம், கார்ப்பண்யம், மஹாவிச்வாசம், கோப்ருத்வ்வரணம்
என்னும் இவ்வைந்து அங்கங்களோடே கூடினதாய்,
சரணாகதி என்றும், நிக்ஷேபம் என்றும், த்யாகம் என்றும், ப்ரபத்தி என்றும் சொல்லப் பெறுகிற ஓர் வித்யையாம்.

இது ஸர்வாதிகாரம். வர்ணாச்ரம தர்மம் இதற்கு அங்கமன்று. ஸக்ருத்கர்த்தவ்யம். அந்திம ஸ்மிருதி அபேக்ஷிதமன்று.
இந்த ஸரீரம் விட்டபோதே பலம் ஸித்தம்
1-உபாஸநத்தில் சக்தி யில்லாமையும்,
2-அதற்கேற்ற ஜ்ஞானமில்லாமையும்,
3-சாஸ்த்ராநுமதமான ஜாதி குணாதிகளில்லாமையும்,
4-பலத்தைப் பெறக் கால விளம்பம் பொறாமையும் என்னும் இந்நான்கும்
தனித்தும் ஒன்றிரண்டு மூன்றுகளுடன் சேர்ந்தும் ப்ரபத்திக்கு அதிகாரம் ஆகும்.

அந்த அதிகாரமாவது 15 பிரிவாகிறது. அசக்தி மாத்திரம் 1. அஜ்ஞாந மாத்திரம் 2. சாஸ்த்ரா நநுமதி மாத்திரம்.
3. விளம்பம் பொறாமை மாத்திரம் 4. அசக்தியும் அஜ்ஞாநமும் சேர்ந்து 5. அசக்தியும் சாஸ்த்ரா நநுமதியும் சேர்ந்து
6. அசக்தியும் விளம்பம் பொறாமையும் சேர்ந்து 7. அஜ்ஞாநமும் சாஸ்த்ரா நநுமதியும் சேர்ந்து
8. அஜ்ஞாநமும் விளம்பம் பொறாமையும் சேர்ந்து 9. சாஸ்த்ரா நநுமதியும் விளம்பம் பொறாமையும் சேர்ந்து
10. அசக்தியும், அஜ்ஞாநமும், சாஸ்த்ரா நநுமதியும் சேர்ந்து 11. அசக்தியும், அஜ்ஞாநமும் விளம்பம் பொறாமையும் சேர்ந்து
12. அசக்தியும், சாஸ்த்ராநநு மதியும் விளம்பம் பொறாமையும் சேர்ந்து
13. அஜ்ஞாநமும், சாஸ்த்ராநநு மதியும் விளம்பம் பொறாமையும் சேர்ந்து
14. அஜ்ஞாநமும் அசக்தியும் சாஸ்த்ராநநு மதியும் விளம்பம் பொறாமையும் இந்நான்கும் சேர்ந்து 15.

இப்படி இந்நான்கும் சேர்ந்தால் ஒன்று; தனித்தனி நான்கு; இரண்டிரண்டு சேர்ந்தால் ஆறு ;
மும்மூன்று சேர்ந்தால் நான்கு ; ஆகப் பதினைந்து ஆகிறது.
இவைகளில் எந்த விதமான அதிகாரம் உடையவனானாலும் ந்யாஸவித்யையில் அதிகாரிதான்.

——–

அஹம் மத் ரக்ஷண பரோ மத் ரக்ஷண பலம் ததா
ந மம ஸ்ரீபதேரேவேத் யாத்மாநம் நிக்ஷிபேத் புத: (1)

அஹம் — அடியேனும், ஆத்மஸ்வரூபம்;
மத் ரக்ஷண பர: அடியேனை ரக்ஷிக்கும் பொறுப்பும், எனது ரக்ஷணத்தின் சுமையும் ;
ததா — அவ்வாறே, அப்படியே :
மத் ரக்ஷண பலம் — அடியேனை ரக்ஷிப்பதால் உண்டாகும் பயனும், எனது ரக்ஷணத்தால் உண்டாகும் பலமும் :
ந மம — அடியேனுடையவை அன்று ; நான் எனக்கு உரியேன் அல்லேன் ;
ஸ்ரீபதே: ஏவ — ஸ்ரீய:பதியான நாராயணன் உடையவையே, ஸர்வசேஷியான ஸ்ரீமந்நாராயணனுக்கே சேஷம்,
அவனே இவைகட்கெல்லாம் கடவன்;
இதி — என்று, இவ்வாறு ;
புத: பண்டிதன் ;
ஆத்மாநம் — தன்னை ;
நிக்ஷிபேத் — ஸமர்ப்பிக்கக் கடவன்]

அஹம் — அடியேனும் அடியேனைச் சேர்ந்தவைகளும், நான், ஆத்மஸ்வரூபம்.
“அடியேனும், அடியேனைச் சேர்ந்தவைகளும் எனக்குச் சேஷம் அல்ல. நான் எனக்கு உரியேன் அல்லேன்.
ஸர்வசேஷியான ஸ்ரீமந்நாராயணனுக்கே எல்லாம் சேஷம்” என்று அநுசந்திக்கை
“ஸ்வரூபஸமர்ப்பணம்” இது இம்மை யிலும் மறுமையிலும் உளதாம்.

“அடியேனையும் அடியேனுடையனவாகப் பேர்பெற்றவற்றையும் அடியேன் ஸ்வதந்த்ரனாய் ரக்ஷித்துக் கொள்ளச் சக்தி யற்றவன்.
தகுதியில்லாதவன். இவற்றினுடைய ரக்ஷணபரமும் அந்த ஸ்ரீய:பதி யுனுடையதே” என்று அநுஸந்தித்தல் “பரஸமர்ப்பணம்”.
இந்தச் சரீர முடிவில் மற்றொரு திவ்ய சரீரத்தை அடைந்து அர்ச்சிராதி மார்க்கத்தினால் பரமபதத்தைச் சேர்ந்து
அங்கு ஸ்ரீவைகுண்டநாதனை அநுபவித்து அதன் போக்கு வீடாகக் கைங்கர்யம் அடைதல் பலம்.
இதுவும் ப்ரதான பலியான ஸ்ரீமந்நாராயணன் உடையதே” என்று அநுஸந்தித்தல் “பலஸமர்ப்பணம்” .

ஸ்ரீபதேரேவ — என்றதால் இந்த ஸமர்ப்பணத்தில் திருமகளாரோடு கூடிய நாராயணனே
உத்தேச்யன் என்று சொல்லப் பெற்றதாயிற்று.

“இனி, ‘மலர்மகள் விரும்பும் நமரும் பெறலடிகள்’ (1-3-1) என்று தொடங்கி
‘திருவுடையடிகள்’ (1-3-8) என்றும் ,
‘மையகண்ணாள் மலர் மேலுறை வாளுறை மார்பினன்’ (4-5-2) என்றும்,
‘நமக்கும் பூவின்மிசை நங்கைக்கு மின்பன்'(4-5-8) என்றும்,
‘கோலத் திரு மா மகளோடுன்னைக் கூடாதே'(6-9-3) என்றும் சொல்லிக் கொண்டு போந்து,
‘திருவாணை’ (10-10-2) என்றும்,
‘கோலமலர்ப் பாவைக்கன் பாகிய வென்னன்பே'(10-10-7) என்றும் தலைக்கட்டுகையாலே,
ஸ்ரீமானான நாராயணனே பரதத்துவம் என்றும் சொல்லிற்று.

இத்தால், நம் ஆசார்யர்கள் ரஹஸ்யத்திற் பத த்வயத்தாலும் அருளிச் செய்துகொண்டு போகும் அர்த்தத்திற்கு அடி
இவ்வாழ்வாராயிருக்குமென்றதாயிற்று.
ஆச்ரயணவேளையிலே ‘மலர்மகள் விரும்பும் நமரும் பெறலடிகள்'(1-3-1) தொடங்கி
போகவேளையிலே ‘கோல மலர்ப் பாவைக் கன்பாகிய வென்னன்பே’ என்று சொல்லுகையாலே,
ஆச்ரயண வேளையோடு போகவேளையோடு வாசியற
ஒருமிதுநமே உத்தேச்யமென்னுமிடம் சொல்லிற்றாயிற்று ; [ஈடு. முதல் ஸ்ரீய:பதி.]

புத: — அநேக காலம் குருகுல வாஸம் பண்ணி மந்திர மந்திரார்த்தங்களை ஆசார்யன் மூலமாக நன்கு உணர்ந்து ,
தத்வ, உபாய புருஷார்த்தங்களைப் பற்றிய விவேகம் பெற்றவன்.
“முமுக்ஷுவான அதிகாரிக்கு இவ்வுபாயத்தில் அங்கி ஸ்வரூபமாவது —
ஆபரணத்தை உடையவனுக்கு அவன்தானே ரக்ஷித்துக் கொண்டு பூணக் கொடுக்குமா போலே யதாவஸ்திதமான ஆத்மநிக்ஷேபம்.
அதாவது —
ப்ரணவத்தில் ப்ரதமாக்ஷரத்தில் ப்ரக்ருதி ப்ரத்யயங்களாலே ஸர்வ ரக்ஷகனாய், ஸர்வ சேஷியாய்த் தோற்றின
ஸர்வேச்வரனைப் பற்ற ஆத்மாத்மீய ரக்ஷண வ்யாபாரத்திலும், ஸ்வாதீநமாகவும் ஸ்வார்த்தமாகவும் தனக்கு
அந்வயம் இல்லாதபடி பரந்யாஸ ப்ரதாநமான அத்யந்த பாரதந்த்ரிய விசிஷ்டசேஷத்வ அநுஸந்தாநவிசேஷம்.

‘ஸ்வாத்மாநம் மயி நிக்ஷிபேத்’ என்று சோசிதமான இவ்வநுஸந்தாந விசேஷத்தை அநுஷ்டிக்கும்படி :–
சேஷியாய், ஸ்வதந்த்ரனான ஈச்வரன் தன் ப்ரயோஜனமாகவே தானே ரக்ஷிக்கும் பணிக்கு ஈடாக
அநந்யார்ஹ , அநந்யாதீத சேஷ பூதனாய் அத்யந்த பரதந்த்ரனான தான் ‘ஆத்மாபி சாயம் நமம’ என்கிறபடியே
எனக்குரியேனல் லேன், ஒன்றை நிருபாதிகமாக என்னது என்னவும் உரியேன் அல்லேன்,
‘ஸ்வயம் ம்ருத்பிண்ட பூதஸ்ய பரதந்த்ரஸ்ய தேஹிந: ஸ்வரக்ஷணேப்ய சக்தஸ்ய கோஹேது: பாரக்ஷணே’ என்கிறபடியே
என்னையும் என்னது என்று பேர் பெற்றவற்றையும் நானே ஸ்வதந்த்ரனாயும், ப்ரதாநபலியாயும்
ரக்ஷித்துக் கொள்ள யோக்யனுமல்லேன்,

‘ஆத்மா ராஜ்யம் தநஞ்சைவ களத்ரம் வாஹா நாநிச, ஏதத் பகவதே ஸர்வ மிதி தத்ப்ரே க்ஷிதம் ஸதா’ என்று
விவேகிகள் அநுஸந்தித்த க்ரமத்திலே என்னுடைய ஸ்வாத்மாத்மீயங்களும் அவனதே,
‘ஆத்மாத்மீய பரந்யாஸோ ஹ்யாத்ம நிக்ஷேப உச்யதே’ என்கையால்
இவற்றினுடைய ரக்ஷண பரமும்’நஹி பாலந ஸாமர்த்ய ம்ருதே ஸர்வேச்வரம் ஹரிம்’ என்கிறபடியே
ஸர்வரக்ஷகனான அவனதே.
‘தேந ஸம்ரக்ஷ்ய மாணஸ்ய பலே ஸ்வாம்ய வியுக்ததா, கேசவார்ப்பண பர்யந்தாஹ்யாத்ம நிக்ஷேப உச்யதே’ என்கிறபடியே
ரக்ஷண பலமும் ப்ரதாநபலியான அவனதே என்று பாவிக்கை.
முமுக்ஷு மாத்ர ஸாமாந்யம் ஸ்வரூபாதி ஸமர்ப்பணம்,
அகிஞ்சநே பர ந்யாஸ ஸ்த்வதிகோங்கிதயா ஸ்தித: அத்ர ரக்ஷா பர ந்யாஸஸ் ஸமஸ்ஸர்வபலார்த்திநாம்,
ஸ்வரூப பல நிக்ஷேப ஸ்த்வதிகோ மோக்ஷ காம்க்ஷிணாம்.

பலார்த்தியாய் உபாயாநுஷ்டாநம் பண்ணுகிற ஜீவன் பலியாயிருக்க ஈச்வரன் இங்கு ப்ரதாநபலியானபடி எங்ஙனே என்னில் :-
அசித்தின் பரிமாணங்கள் போல சித்துக்குத் தான் கொடுத்த புருஷார்த்தங்களும்
ஸர்வ சேஷியான தனக்கு உகப்பாய் இருக்கையாலே ஈச்வரன் ப்ரதாந பலி ஆகிறான்.
அசேதநமான குழமணனை அழித்துப் பண்ணியும், ஆபரணம் பூட்டியும் அழகு கண்டு உகக்கிறதோடு
சேதநமான கிளியைப் பஞ்சரத்தில் வைத்துப் பால் கொடுத்தும்,
வேண்டினபடி பறக்கவிட்டும் அதில் உகப்பு கண்டு உகக்கிறதோடு வாசியில்லையிறே நிரபேக்ஷரான ரஸிகர்க்கு.

ஆன பின்பு இங்கு ஸ்வ நிர்ப்பரத்வ பர்யந்த ரக்ஷகை கார்த்ய பாவநம்,
த்யக்த ரக்ஷாபல ஸ்வாம்யம் ரக்ஷ்யஸ்யாத்ம ஸமர்ப்பணம்.
ஸ்தோத்ரத்தில்
‘வபுராதிஷு யோபி கோபிவா குணதோ ஸா நி யதா ததா வித:
ததயந்தவ பாதபத்மயோரஹ மத்யைவ மயா ஸமர்ப்பித:’ என்கிறதுக்குத் தாத்பர்யம் என் என்னில் :–
முத்ரையிட்டு இருக்கிற ராஜாவின் கிழிச்சீரை ஒரு ஹேதுவாலே தன் கையிலே இருந்தால்
ராஜாகைக் கொள்ளும் என்று உள்ளிருக்கிற மாணிக்கத்தின் ஸ்வரூப ஸ்வபாவங்களை விசதமாக அறியாதே
கிழிச்சீரையோடே மீளக் கொடுக்குமா போலே தேஹாத்யதிரிக்தாத்மாவின் ஸ்வரூப ஸ்வபாவ ஸ்திதிகளை
விசதமாக விவேகிக்க அறியாதாரும் உள்ள அறிவைக் கொண்டு ஆத்ம ஸமர்ப்பணம் பண்ணினால்
அவ்வளவாலும் அநாதிகாலம் பண்ணின ஆத்மாபஹார சௌர்யத்தால் உண்டான பகவந் நிக்ரஹம் சமிக்கும்
என்கிற சாஸ்த்ரார்த்தத்திலே திருவுள்ளம்.

இதுக்குமேல் ‘மம நாத யதஸ்தி’ என்கிற ச்லோகத்தில்
இஸ்ஸமர்ப்பணத்தைப் பற்ற அநுஸந்தேயம் பண்ணிற்றும்
ஸ்வரூபாதிவிவேகம் அன்றிக்கே ஸமர்ப்பிக்கப் புக்காலும் தன்னுடைய த்ரவ்யத்தை ராஜாவுக்கு
உபஹாரமாகக் கொடுப்பாரைப் போலே, என்னது என்கிற அபிமாநத்தோடே ஸமர்ப்பிக்கில்
ஆத்மாபஹார சௌர்யம் அடியற்றதாகாது என்கைக்காக அத்தனை அல்லது சாஸ்த்ர சோசிதமாய்த் தாம்
அநுஷ்டித்த ஸமர்ப்பணத்தை அஜ்ஞக்ருத்யம் ஆக்கினபடி அன்று.

ஆக இரண்டு ச்லோகத்தாலும் யதாவஸ்தித ஸ்வரூபாதி விவேகம் இல்லையே ஆகிலும்
‘ந மம’ என்று ஸ்வஸம்பந்தம் அறுக்கையே ‘அஹமபி தவைவாஸ்மி ஹி பர:’ என்னும்படி
பர ஸமர்ப்பண ப்ரதாநமான சாஸ்த்ரார்த்தத்தில் ஸாரம் என்றது ஆயிற்று.
இப்படி சேஷத்வ அநுஸந்தாந விசிஷ்டமான ஸ்வ ரஷ பர ஸமர்ப்பணம்
த்வயத்தில் உபாய பரமான பூர்வகண்டத்தில் மஹா விச்வாஸ பூர்வக கோப்ருத்வ வரண கர்பமான
சரண சப்த உபலிஷ்ட க்ரியாபதத்திலே சேர்த்து அநிஸந்திக்க ப்ராப்தம்.

இப்படி இவை ஆறும் இம் மத்த்ரத்திலே விமர்ச தசையில் தனித்தனியே அநுஸந்தித்தாலும்,
வாக்யார்த்த ப்ரதிபத்தி தசையில் அல்லாத வாக்யார்த்தங்கள் போலே ஸாங்கமான ப்ரதாநம் ஏகபுத்யாரூடமாம்.
ஆகையால் யதாசாஸ்த்ரம் ஸாங்கப்ரதாந அநுஷ்டாநம் ஸக்ருத்கர்த்தவ்யம் ஆயிற்று.
அநேக வ்யாபார ஸாத்யமான தாநுஷ்கனுடைய லக்ஷ்ய வேதார்த்தமான பாணமோக்ஷம் க்ஷண க்ருதயம் ஆகிறாப்போலே
இவ் ஆத்ம ரக்ஷாபர ஸமர்ப்பணம் இருக்கும்படி என்று ச்ருதி ஸித்தம்.
இப் பரஸமர்ப்பணமே ப்ரபத்தி மந்த்ரங்களில் ப்ரதாநமாக அநுஸந்தேயம் என்னும் இடத்தை
‘அநநைவ து மந்த்ரேண ஸ்வாத்மாநம் மயி நிக்ஷிபேத், மயி நிக்ஷிப்த கர்த்தவ்ய:
க்ருத க்ருத்யோ பவிஷ்யதி’ என்று ஸாத்யகி தந்த்ரத்திலே பரஸ்வீகாரம் பண்ணுகிற சரண்யன் தானே தெளிய அருளிச் செய்தான்.

இதில் ஸாங்காநுஷ்டாநமாய் அற்றது –
கர்த்ருத்வ த்யாக, மமதா தியாக, பலத்யாக, பலோபயத்வத்யாக பூர்வகமான
ஆநுகூல்ய ஸங்கல்பாத்ய அர்த்தாநு ஸந்தாநத்தோடே குருபரம்பரா உபஸத்தி பூர்வக த்வய வசந முகத்தாலே
ஸ்வரூப பலந்யாஸ கர்பமான ஆத்ம ரக்ஷாபர ஸமர்ப்பணம் பண்ணுகை.
இக் கர்த்ருத்வ த்யாகத்துக்கு நிபந்தநம் தன் கர்த்ருத்வமும் அவன் அடியாக வந்தது என்று தனக்கு
யாவதாத் மானபாவியான பகவதேவ பாரதந்த்ரத்தை அறிகை.

மமதா த்யாகத்துக்கும் பலத்யாகத்துக்கும் நிபந்தநம் ஆத்மாத்மீயங்களுடைய ஸ்வரூபாநுபந்தி
பவதேக சேஷத்வ ஜ்ஞாநம்.
பலோபாயத்வ த்யாகத்துக்கு நிபந்தநம் சரண்ய ப்ரஸாதமான இவனுடைய அநுஷ்டாநம்
ப்ரதாந பலத்துக்கு வ்யவ ஹிதகாரணம் ஆகையும்,
அசேதநமாகையாலே பல ப்ரதாந ஸங்கல்ப ஆச்ரயம் அல்லாமையும்,
ஈச்வரன் பலோபாயம் ஆகிறது ஸஹஜ ஸௌ ஹார்த்தத்தாலே கரணகளேபர ப்ரதாநந் தொடங்கி
த்வயோச்சாரண பர்யந்தமாக ஸர்வத்துக்கும் ஆதி காரணம் ஆன தானே
ப்ரஸாத பூர்வக ஸங்கல்ப விசேஷ விசிஷ்டனாய்க் கொண்ட வ்யவஹித காரணம் ஆகையாலும்,
உபயாந்த சூந்யனுக்கு அவ்வோ உபாயஸ்தாநத்திலே நிவேசிக்கையாலும்.
இங்ஙன் இருக்கைக்கு அடி தர்மிக்ராஹகம் ஆன சாஸ்த்ரத்தாலே அவகதமான வஸ்து ஸ்வபாவம் ஆகையால்
இவ்வர்த்தம் யுக்திகளால் சலிப்பிக்க ஒண்ணாது.

இஸ்ஸாங்காநுஷ்டாநத்துக்கு நடாதூர் அம்மாள் அருளிச் செய்யுஞ் சுருக்கு: —
அநாதிகாலம் தேவரீருக்கு அநுஷ்டாசரணம் பண்ணுகையாலே ஸம்ஸரித்துப் போந்தேன்,
இன்று முதல் அநுகூலனாய் வர்த்திக்கக் கடவேன், ப்ரதிகூலாசரணம் பண்ணக் கடவேனல்லேன்,
தேவரீரைப் பெறுகைக்கு என் கையில் ஒரு கைம்முதல் இல்லை, தேவரீரையே உபாயமாக அறுதியிட்டேன்,
தேவரீரே உபாயமாகவேணும், அநிஷ்டநிவ்ருத்தியிலாதல் இஷ்டப்ராப்தி யிலாதல் எனக்கு இனி பரம் உண்டோ? — என்று.
இவ்விடத்தில் ஆநுகூல்ய ஸங்கல்பாதிகள் உபாய பரிகரமாய் ஸக்ருத்தாய் இருக்கும்.

மேல் இவன் கோலின அநுகூல வ்ருத்யாதிகளோடு போருகிற இடமும் உபாய பலமாய் யாவதாத்ம பாவியாய் இருக்கும்..
இவற்றில் பிராதிகூல்யவர்ஜநமும் அம்மாள் அருளிச் செய்தபடியே ஆநுகூல்ய ஸங்கல்பம் போலே
ஸங்கல்ப ரூபம் ஆனாலும் ஸக்ருத் கர்த்தவ்யம் என்னும் இடம் ‘அபாயேப்யோ நிவ்ருத்தோஸ்மி’ என்கிறபடியே
அபிஸந்தி விராமம் ஆதல் ப்ராதிகூல்ய ஸ்வரூப நிவ்ருத்தியாதல் ஆனாலும்
அதில் ப்ரதமக்ஷணம் அங்கமாய் மேலுள்ளது பலமாகக் கடவது. இப்படி விச்வாஸத்திலும் பார்ப்பது.

ப்ரவ்ருத்தி ரநுகூலேஷு நிவ்ருத்திச்சாந்யத: பலம்
ப்ராப்த ஸுக்ருதாச் சஸ்யாத் ஸங்கல்பேச ப்ரபத்தித:
ஆகையால் இருந்த நாளில் நிரபராத கைங்கர்யத்தையும், ப்ராரப்த சரீராநந்தரம் மோக்ஷத்தையுஞ் சேர
பலமாகக் கோலி ப்ரபத்தி பண்ணுவார்கள் நிபுணர்.

அறவே பரமென் றடைக்கலம் வைத்தன ரன்றுநம்மைப்
பெறவே கருதிப் பெருந்தக உற்ற பிரானடிக்கீ
ழுறவே யிவனுயிர் காக்கின்ற வோருயி ருண்மையைநீ
மறவே லெனநம் மறைமுடி சூடிய மன்னவரே.

[வேதாந்தமாகிய ஸாம்ராஜ்யத்தில் முடிசூடி நிற்கின்ற அரசர்களாகிய நம் ஆசார்யர்கள் தன் ஸம்பந்தம் பொருந்திய
சேதநனுடைய ஸ்வரூபத்தைக் காப்பவனும், உலகுக் கெல்லாம் ஒரே அந்தர்யாமியாய் இருப்பவனுமான
எம்பெருமானுடைய ஸ்வபாவத்தை நீ மறவாதே என்று சிக்ஷித்து, அநாதியாக நம்மை அடைவதற்கே
ஊற்றம் உடையவனாய் இருந்து , அளவற்ற கிருபையை வைத்தவனாகிய எம்பெருமானுடைய திருவடியின் கீழ்
சேதநனுடைய பொறுப்பு அற்றுப்போக வேண்டும் என்று நினைத்து ரக்ஷிக்கப்பட வேண்டிய வஸ்துவாக ஸமர்ப்பித்தனர்]
{ஸ்ரீமத்ரஹஸ்யத்ரய ஸாரம், ஸாங்க ப்ரபதநாதிகாரம்.} என்றதன் சுருக்கமே இம் முதல் சுலோகம்.

மேலும் இந்தச் சுலோகத்தின் பொருளை
“எனக்குரிய னெனதுபர மென்பே றென்னா திவையனைத்து மிறையில்லா விறைக்க டைத்தோம்”
—-(தேசிகமாலை, அமிருதரஞ்சனி 8)

{நானே எனக்கு ஸ்வாமி. என்னை ரக்ஷிக்குங் கடமையும் என்னுடையதே. அதன் பலனும் என்னுடையதே.” என்று
நினையாமல் ஸ்வரூபம் பரம் பலன் எல்லாவற்றையும் தனக்கு ஒரு நாயகன் இல்லாத பகவானிடம்
ஸமர்ப்பித்தோம் என்று இவர்தாமே அருளிச் செய்துள்ளதும் காண்க}

————

ந்யஸயாம்ய கிஞ்சந: ஸ்ரீமந் அநுகூலோந்யவர்ஜித:
விச்வாஸ ப்ரார்த்தநா பூர்வம் ஆத்ம ரக்ஷா பரம் த்வயி. (2)

[ஸ்ரீமந்: ஸ்ரீமந் நாராயணனே! திருமகளோடு வருந்திருமாலே!
அகிஞ்சந: தேவரீரைப் பெறுவதற்கு வேறு உபாயங்களை அறிவதற்கும் அநுஷ்டிப்ப தற்கும் சக்தியற்றவனான அடியேன் ;
அநுகூல: அநுகூலனாக ஆகக் கடவேன் என்கிற ஸங்கல்பம் உடையவ னாகவும்;
அந்யவர்ஜித: அநுகூலனாயிருப்பதற்கு வேறான ப்ராதிகூல்யத்தை விட்ட வனாகவும் இருந்து;
விச்வாஸ ப்ரார்த்தநாபூர்வம்: நீ என்னை ரக்ஷிப்பாய் என்கிற துணிவும், நீ என்னை ரக்ஷிக்கவேண்டும்
என்கிற ப்ரார்த்தனையையும் முன்னிட்டு;
ஆத்ம ரக்ஷாபரம்”: அடியேனைக் காக்கும் பொறுப்பை
த்வயி : தேவரீரிடத்தில் ந்யஸ்யாமி – ஸமர்ப்பிக்கின்றேன்]

முதல் சுலோகத்தில் கூறப் பெற்ற ரக்ஷாபர ஸமர்ப்பண ரூபமான அங்கியை
ஆநுகூல்ய ஸங்கல்பம் முதலான ஐந்து அங்கங்களுடன் அநுஷ்டிக்க வேண்டும் என்று காட்டா நின்று கொண்டு
ஸ்ரீய:பதியான பகவானை விளித்து தாம் அநுஷ்டித்த முறையிலே அருளிச் செய்கிறார் இதில்.

திருகமள் கேள்வனே! தேவரீரை அடைவதற்கு உபாயங்களாகிய கர்மஞான பக்திகள் போன்ற
எத்தகைய முதலும் இல்லாதவனும், தேவரீருக்கு என்றுமே அநுகூலனும், பிராதி கூல்யத்தை அடியோடு
விட்டவனுமாகியஅடியேன் நன்னம்பிக்கையுடனும்,அடியேனைக் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டிக் கொண்டும்,
அடியேனை ரக்ஷிக்கும் பரத்தைத் தேவரீரிடத்தில் வைத்து விடுகின்றேன்.

ப்ரபத்திக்கு ஐந்து அங்கங்கள் உண்டு. அவையாவன:—
(1) ஆநுகூல்ய ஸங்கல்பம் (2) ப்ராதிகூல்ய வர்ஜநம்
(3) மஹாவிச்வாஸம் (4)கோப்த்ருத்வ வரணம் (5) கார்ப்பண்யம் என்பன.

(1) ஆநுகூல்ய ஸங்கல்பம் – எம்பெருமான் திருவுள்ளத்திற்கு உகந்தவற்றையே செய் வதாய் உறுதி கொள்ளல்
(2) ப்ராதிகூல்ய வர்ஜநம் – எம்பெருமான் திருவுள்ளத்திற்கு விபரீதமானவற்றைச் செய்யாதிருக்க உறுதி கொள்ளல்;
அல்லது அவற்றைப் புரிய எண்ணங் கொள்ளாமை; அல்லது அவற்றைச் செய்யாது விடுதல்.
(3) மஹாவிச்வாஸம் – எம்பெருமான் நம்மைக் காக்க வல்லவன் என்று தேறித் தவறாது நம்மை ரக்ஷிப்பான் என்று திடமாக நம்புதல்.
(4)கோப்த்ருத்வ வரணம் – பக்தியோகம் முதலிய உபாயங்களைஅநுஷ்டிக்கச்சக்தியற்ற தம் விஷயத்தில்
அருள் புரிந்து அவ்வுபாயங்களின் ஸ்தாநத்தில் நின்று பலன் கொடுக்கு மாறு அவனை வேண்டுகை.
(5)கார்ப்பண்யம் – பக்தியோகம் முதலிய உபாயங்களில் தமக்கு அதிகாரமின்மையும், எம்பெருமானைத் தவிர
வேறு தெய்வத்திடமோ, மோக்ஷத்தைத் தவிர வேறு பலனிலோ பற்றில்லாமையும் அநுஸந்தித்தல்;
அல்லது இவ்வநுஸந்தாநத்தால் தமக்கிருந்த கர்வம் ஒழியப் பெறுதல்;
அல்லது எம்பெருமானது கருணை தம்மீது வளர்ந்து ஓங்கும்படி தாழ்ந்து நின்று அஞ்ஜலி நமஸ்காரம் முதலியவற்றைச் செய்தல்

இந்தச் சுலோகத்தில் ‘அநுகூல:’ என்றதால் ஆநுகூல்ய ஸங்கல்பமும்,
‘அந்யவர்ஜித:’ என்றதால் ப்ராதிகூல்ய வர்ஜநமும்,
விச்வாஸ ப்ரார்த்தநாரூபம்’ என்றதால் மஹா விச் வாஸம், கோப்த்ருத்வ வரணம் என்பனவும்,
‘அகிஞ்சந:’ என்றதால் கார்ப்பண்யமும்,
‘ஆத்ம ரக்ஷாபரம் ந்யஸ்யாமி’ என்றதால் ஸாங்க பர ஸமர்ப்பணமும் கூறப்பெற்றன.

“அநாதிகாலம் தேவரீருக்கு அநிஷ்டாசரணம் பண்ணுகையாலே ஸம்ஸரித்துப் போந்தேன்.
இன்று முதல் அநுகூலனாய் வர்த்திக்கக் கடவேன்; ப்ரதிகூலாசரணம் பண்ணக் கடவேனல்லேன்;
தேவரீரைப் பெறுகைக்கு என் கையில் ஒரு கைம்முதல் இல்லை; தேவரீரையே உபாயமாக அறுதியிட்டேன்;
தேவரீரே உபாயமாக வேண்டும்; அஷ்ட நிவ்ருத்தியிலாதல், இஷ்ட ப்ராப்தியிலாதல் இனிபரம் உண்டோ’” என்பது
இஸ் ஸாங்கா நுஷ்டாநத்துக்கு நடாதூர் அம்மாள் அருளிச் செய்யும் சுருக்கு.

நின்னருளாங் கதியன்றி மற்றொன் றில்லே
னெடுங்காலம் பிழைசெய்த நிலைக ழிந்தே
னுன்னருளுக் கினிதான நிலையு கந்தே
னுன்சரணே சரணென்னுந் துணிவு பூண்டேன்
மன்னிருளாய் நின்றநிலை யெனக்குத் தீர்த்து
வானவர்தம் வாழ்ச்சிதர வரித்தே னுன்னை
யின்னருளா லினியெனக்கோர் பரமேற் றாம
லென்றிருமா லடைக்கலங்கொ ளென்னை நீயே–(தேசிகமாலை, அமிருதசுவாதினி—31)
என்ற இவர் பாசுரம் இப்பொருளையே விளக்குதல் காண்க.

[எனக்குத் தலைவனான எம்பெருமானே! தேவரீருடைய கிருபையாகிய கதியைத் தவிர அடியேனுக்கு வேறு கதியில்லை;
அநாதிகாலமாக தேவரீர் திருவடிகளில் அபராதம் செய்து வந்த நிலை இப்போது நீங்கிவிட்டது.
தேவரீர் கிருபையைப் பெறுவதற்கு ஸாதநமாக தேவரீர் திருவடிகளில் ப்ரபத்தியை அநுஷ்டித்தேன்
என் அக்ஞாநத்தை ஒழித்து நித்யஸுரி களின் வாழ்வை அடியேனுக்குத் தருமாறு தேவரீரை வேண்டிக் கொண்டேன்.
இனிமேல் அடியேனுக்கு ஒரு பொறுப்பும் வைக்காமல் அடியேனைக் காக்கவேண்டிய வஸ்துவாக ஏற்றுக் கொள்வாயாக.
இதில் ‘நின்னருளாங் ……….இல்லேன்’ என்றதால் கார்ப்பண்யமும்,
‘நெடுங்காலம் … கழிந்தேன்’ என்றதால் ப்ராதிகூல்ய வர்ஜநமும்,
‘உன்னருளுக்கு … உகந்தேன்’ என்றதால் ஆநுகூல்ய ஸங்கல்பமும்,
’ உன்சரணே … பூண்டேன்’ என்ற தால் ‘மஹாவிச்வாஸமும்’,
‘மன்னிருளாய் … வரித்தேனுன்னை’ என்றதால் ‘கோப்த்ருத்வ வரணமும்’
‘இன்னருளால் … என்னைநீயே’ என்றதால் ஆத்ம ஸமர்ப்பணமும் கூறப் பெற்றுள்ளன.
எனவே, ஐந்து அங்கங்களுடன் கூடிய ப்ரபத்தியை இப்பாசுரம் விளக்குதல் தேற்றம்]

உகக்குமவை யுகந்துகவா வனைத்துமொழிந் துறவுகுண
மிகத்துணிவு பெறவுணர்ந்து வியன்காவ லெனவரித்துச்
சகத்திலொரு புகலில்லாத் தவமறியேன் மதிட்கச்சி
நகர்க்கருணை நாதனைநல் லடைக்கலமா யடைந்தேனே.{தேசிகமாலை, அடைக்கலப்பத்து-5}
என்ற பாசுரமும் இவண் அநுஸந்தேயம்.

[உலகில் வேறோர் உபாயத்தையும் செய்யமுடியாதவனும், மற்றவுபாயத்தைப் பற்றிய அறிவற்றவனுமான அடியேன்,
பேரருளாளன் உகந்தவற்றைச் செய்வதையே விரும்பி, அவன் உகவாத அனைத்தையும் செய்யாது நீங்கி,
பலன் தருவதில் மிக்க உறுதியாகிய மஹாவிச்வாஸத்தை அடைவதற்கு ஸாதகமாக
பேரருளாளனுக்கும், ஜீவாத்மாவுக்கும் உள்ள சம்பந்தத்தையும், அவனுடைய குணங்களையும் அநுஸந்தித்து,
அவனையே அதிசயிக்கத் தக்க ரக்ஷகனாகவேண்டும் என்று பிரார்த்தித்து, அழகிய மதிள்கள் சூழ்ந்த காஞ்சியின்
கருணையே வடிவாகக் கொண்ட ஸ்வாமியான பேரருளாளனை சிறந்த கதியாகப் பற்றினேன்.
இதில் ‘உகக்குமவையுகந்து’ என்றதால் ஆநுகூல்ய ஸங்கல்பமும்,
‘உகவாவனைத்துமொழித்து’என்றதால் ப்ராதிகூல்ய வர்ஜநமும்,
‘மிகத் துணிவு பெறவுணர்ந்து’ என்றதனால் மஹாவிச்வாஸமும்
‘காவலென வரித்து’ என்றதனால் கோப்த்ருத்வ வரணமும்
‘புகலில்லாத் தவமறியேன்’ என்றதால் கார்ப்பண்யமும்
‘அடைக்கலமாயடைந்தேன்’ என்றதால் அங்கியாகிய ஆத்ம ஸமர்ப்பணமும் கூறப் பெற்றுள்ளன.
எனவே பேரருளாளன் திருவடிகளில் ஐந்து அங்கங்களுடன் கூடிய ப்ரபத்தியை அநுஷ்டித்தேன் – என்றபடி]

இவ்வித்யைக்கு பரிகரமாவது
“ஆநுகூல்ய ஸங்கல்பமும், ப்ராதிகூல்ய வர்ஜனமும், கார்ப்பண்யமும், மஹாவிச்வாஸமும், கோப்த்ருத்வ வரணமும்.
இவ்விடத்தில் ‘ஆநுகூல்ய ஸங்கல்ப: ப்ராதிகூல்ய வர்ஜநம், ரக்ஷிஷ்யதீதி மஹாவிச்வாஸோ
கோப்த்ருத்வ வரணம் ததா. ஆத்மநிக்ஷேப கார்ப்பண்யே ஷட்விதா சரணாகதி’ இத்யாதிகளிற் சொல்லுகிற
ஷாட்வத்யமும் அஷ்டாங்க யோகம் என்னுமாப்போலே அங்காங்கி ஸமுச்சயத்தாலே ஆகக் கடவது என்னும் இடமும்,
இவற்றில் இன்னதொன்றுமே அங்கி, இதரங்கள் அங்கங்கள் என்னும் இடமும்
‘நிக்ஷே பாபர பர்யாயோ ந்யாஸ: பஞ்சாங்கஸம்யுத:, ஸந்யாஸஸ்த்யாக இத்யுக்தச் சரணாகதிரித்யபி’ என்கிற ச்லோகத்தாலே
ந்யாய நிரபேக்ஷமாக ஸித்தம்.

இவ்விடத்தில் ‘சாச்வதீ மம ஸம்ஸித்திரியம் ப்ரஹ்வீ பவாமி யத், புருஷம் பரமுத்திச்ய நமே ஸித்திரிதோந்யதா,
இத்யங்கமுதிதம் ச்ரேஷ்டம் பலேப்ஸா தத்விரோதிநீ’ என்று அஹிரிபுத்ந்யோக்தமான பலத்யாக ரூபாங்காந்தரம்
மோக்ஷார்த்தமான ஆத்ம நிக்ஷேபத்திலே நியதம்.
பலஸங்க கர்த்ருத்வாதி த்யாகம் கர்மயோகம் முதலாக நிவ்ருத்தி தர்மங்கள் எல்லாத்திலும் வருகையாலே
இவ்வநுஸந்தாநம் முமுக்ஷுவுக்கு ஸாங்க ஸமர்ப்பண தசையிலே கர்த்தவ்யம்.
இங்கு பரிகரங்களானவற்றில் ஆநுகூல்ய ஸங்கல்பத்துக்கும் ப்ராதிகூல்ய வர்ஜநத்துக்கும் நிபந்தநம்
ஸர்வசேஷியான ஸ்ரீய:பதியைப்பற்ற ப்ரவருத்தி நிவ்ருத்திகளாலே அபிமதாநு வர்த்தநம்
பண்ண வேண்டும்படி இவனுக்குண்டான பாரார்த்யஜ்ஞாநம்.
இத்தாலே, ‘ஆநுகூல்யேதராப்யாம்து விநிவ்ருத்திரபாயத:’ என்கிறபடியாலே அபாய பரிஹாரம் ஸித்தம்.

கார்ப்பண்யமாவது முன்பு சொன்ன ஆகிஞ்சந்யாதிகளுடைய அநுஸந்தாநமாதல், அதடியாக வந்த கர்வஹாநியாதல்,
க்ருபாஜநக க்ருபணவ்ருத்தியாதலாய் நின்று சரண்யனுடைய காருண்யோத்தம்பநார்த்தமுமாய் ,
‘கர்ப்பண்யேநாப்யுபாயாநாம் விநிவ்ருத்தி ரிஹேரிதா’ என்கிறபடியே பின்பு மநந்யோபாயதைக்கும் உபயுக்தமாய் இருக்கும்.

மஹாவிச்வாஸம் ‘ரக்ஷிஷ்யதீதி விஷ்வாஸா தபீஷ்டோபாய கல்பநம்’ என்கிறபடி
அணியிடாத அநுஷ்டாநஸித்யர்த்தமுமாய் பின்பு நிர்பரதைக்கும் உறுப்பாய் இருக்கும்.
ஸ்வரூபாநுசித புருஷார்த்தங்கள் போலே ஸ்வரூப ப்ராப்தமான அபவர்கமும் புருஷார்த்தமாம்போது
அர்த்திக்கக்கொடுக்க வேண்டுகையாலே இங்கு கோப்த்ருத்வ வரணமும் அபேக்ஷிதம்.
நன்றாயிருப்பதொன்றையும் புருஷன் அர்த்திக்கக் கொடாதபோது புருஷார்த்தங் கொடுத்தான் ஆகானிறே.
ஆகையாலேயிறே ‘அப்ரார்த்திதோ நகோபாயேத்’ என்றும்,
‘கோப்த்ருத்வ வரணம் நாம ஸ்வாபிப்ராய நிவேதநம்’ என்றுஞ் சோல்லுகிறது.

இப்படி இவ்வைந்தும் இவ்வித்யாநுஷ்டாந காலத்தில் உபயுக்தங்கள் ஆகையால்
இவை இவ்வாத்ம நிக்ஷேபத்துக்கு அவிநாபூத ஸ்வபாவங்கள்.
இவ்வர்த்தம் பிராட்டியை சரணமாகப் பற்ற வாருங்கோள் என்று ஸாத்விக ப்ரக்ருதியான
த்ரிஜடை ராக்ஷஸிகளுக்குச் சொல்லுகிற வாக்கியத்திலும் காணலாம்.
‘ததலம் க்ரூர வாக்யைர்வ:’ என்று ப்ராதிகூல்யவர்ஜநம் சொல்லப்பட்டது.
‘ஸாந்த்வமே வாபிதீயதாம்’ என்கையாலே மந:பூர்வமாக அல்லது வாக்ப்ரவ்ருத்து யில்லாமையாலே
ஆநுகூல்ய சங்கல்பம் ஆக்ருஷ்டம் ஆயிற்று.
‘ராவாத்திபயம் கோரம் ராக்ஷஸாநா முபஸ்திதம்’ என்று போக்கற்று நிற்கிற நிலையைச் சொல்லுகையாலே
அதிகாரமான ஆகிஞ்சந்யமும் அதினுடைய அநுஸந்தாநமுகத்தாலே வந்த கர்வஹாந்யாதி ரூபமாய்
அங்கமான கார்ப்பண்யமுஞ் சொல்லிற்றாயிற்று.

‘அலமேஷா பரித்ராதும் ராக்ஷஸ்யோமஹதோபயாத்’ என்கையாலும்
இத்தை விவரித்துக் கொண்டு ‘அலமேஷா பரித்ராதும் ராகவாத்ராக்ஷஸீகணம்’ என்று திருவடி அநுவதிக்கையாலும்
பெருமாள் ஒருத்தனை நிக்ரஹிக்கப் பார்க்கிலும்அவர் சீற்றத்தை ஆற்றி இவள் ரக்ஷிக்கவல்லள் ஆகையாலே
ரக்ஷிஸ்யதீதி விச்வாஸம் சொல்லப் பட்டது.
‘அபியாசாம வைதேஹீ மேதத்தி மம ரோசதே’, பர்த்ஸிதாமபி யாசத்வம் ராக்ஷஸ்ய:கிம்விவக்ஷயா’ என்கையாலே
கோப்த்ருத்வ வரணம் சொல்லிற்றாயிற்று. இவ்வைந்துக்கும் அங்கியான ஆத்மநிக்ஷேபம்
‘ப்ரணிபாத ப்ரஸந்நாஹி மைதிலீ ஜககாத்மஜா’ என்று ப்ரஸாதகரண விசேஷத்தைச் சொல்லுகிற
ப்ரணிபாத சப்தத்தாலே விவக்ஷிதம் ஆயிற்று.
ஆகையால் ‘ந்யாஸ:பஞ்சாங்க ஸம்யுத:’ என்கிற சாஸ்த்ரம் இங்கே பூர்ணம்.
இப்படி உபதேசிக்க ராக்ஷஸிகள் விலக்காதமட்டே பற்றாகப் பிராட்டி தன் வாத்ஸல்யாதிசயத்தாலே
‘பவேயம் சரணம் ஹிவ:’ என்று அருளிச் செய்தாள்.

இப்பாசுரம் ஸஹ்ருதயமாய் பலபர்யந்தமானபடியை
‘மாதர் மைதிலி ராக்ஷஸீஸ்த்வயிததை வார்த்ராபராதாஸ்த்வயா ரக்ஷந்த்யாபவநாத்ம ஜால்லகுதரா
ராமஸ்ய கோஷ்டீ க்ருதா’ என்று அபியுக்தர் வெளியிட்டார்கள்.
இவ்விடத்தில் த்ரிஜடையுடைய ஆத்மாத்மீய பர ஸமர்ப்பணத்திலே அவளுக்குப் பிறவித் துவக்காலே
நம்மவர்கள் என்று கண்ணோட்டம் பிறக்கும் ராக்ஷஸிகளும் அந்தர்பூதைகள்.
அப்படியே ஸ்ரீவிபீஷணாழ்வானோடு கூடவந்த நாலு ராக்ஷஸர்களும் அவருடைய உபாயத்திலே அந்தர்பூதர்கள்.
அங்குற்ற அபயப்ரதாந ப்ரகரணத்திலும் இவ்வங்காங்கி வர்க்கம் அடைக்கலம். எங்ஙனை என்னில் :–

ப்ராதிகூல்யத்திலே வ்யவஸ்திதனான ராவணனுக்குங்கூட ‘ப்ரதீயதாம் தாசரதாய மைதிலீ’
‘ஸீதாஞ்ச ராமாய நிவேத்ய தேவீம்வஸேம ராஜந்நிஹ வீதசோகா:’ என்று ஹிதஞ்சொல்லுகையாலே
ஆநுகூல்ய ஸங்கல்பந் தோற்றிற்று.

இந்த ஹிதவசநம் பித்தோபஹதனுக்குப் பால்கைக்குமாப்போலே அவனுக்கு உத்வேக ஹேதுவாயிற்று.
‘தீவாந்து திக்குல பாம்ஸநம்’ என்று திக்காரம் பண்ணினபின்பு இனி இவனுக்கு உபதேசிக்கவும் ஆகாது,
இவனோடு அநுபந்தித்த விபூதிகளும் ஆகாது, இவன் இருந்த இடத்தில் இருக்கவும் ஆகாது என்று அறுதியிட்டு
‘த்யக்த்வா புத்ராம்ச்ச தாராம்ச்ச’ பரித்யக்தா மயா லங்கா மித்ராணிச தநாநிச’ என்கிற ஸ்வவாக்கியத்தின்படியே
அங்கு துவக்கற்றுப் போருகையாலே ப்ராதிகூல்ய வர்ஜநாபிஸந்தி தோற்றிற்று.

‘ராவணோ நாம துர்வ்ருத்த:’ என்று தொடங்கி ஸர்வஜித்தான ராவணனோட்டை விரோதத்தாலே
தாம் போக்கற்று நிற்கிற நிலையைச் சொல்லுகையாலும்,
பின்பும் ‘அநுஜே ராவணஸ்யாஹம் தேந சாஸ்ம்யவமா நித: பவந்தம் ஸர்வபூதாநாம் சரணம் சரணங்கத:’
என்கையாலும் கார்ப்பண்யம் சொல்லப் பட்டது.

அஞ்சாதே வந்து கிட்டி ‘ஸர்வலோக சரண்யாய ராகவாய மஹாத்மநே’ என்று சொல்லும்படி
பண்ணின மஹாவிச்வாஸம் ‘விபூஷணோ மஹாப்ராஜ்ஞ:’ என்று காரண முகத்தாலே சொல்லப்பட்டது.
ப்ராஜ்ஞதையை விசேஷிக்கிற மஹச்சப்தத்தாலே விச்வாஸாதிசந்தானே விவக்ஷிதமாகவுமாம்.

‘ராகவம் சரணம் கத:’ என்கையாலே உபாய வரணாந்தர் நீதமான கோப்த்ருத்வ வரணம் சொல்லிற்றாயிற்று.

உபாயவரண சப்தத்தாலே வ்யஞ்சிதமாகிற அளவு அன்றிக்கே ‘நிவேதயமாம் க்ஷிப்ரம் விபீஷண முபஸ்திதம்’
என்கையாலே கடகபுரஸ்ஸரமான ஆத்மநிக்ஷேபம் சொல்லிற்று.

இப்ரகரணத்திலே நிவேதந சப்தம் விஜ்ஞாபநமாத்ரபரமானால் நிஷ்ப்ரயோஜநம்.
இப்படி மற்றும் உள்ள ப்ரபத்தி ப்ரகரணங்களிலும் லௌகீகத்ரவ்ய நிக்ஷேபங்களிலும்
ஸங்க்ஷேப விஸ்தர ப்ரக்ரியையாலே இவ்வர்த்தங்கள் காணலாம்.
தான் ரக்ஷிக்க மாட்டாததொரு வஸ்துவை ரக்ஷிக்கவல்லன் ஒருவன் பக்கலிலே ஸமர்ப்பிக்கும் போது தான்
அவன் திறத்தில் அநுகூலாபிஸந்தியைத் தவிர்ந்து, இவன் ரக்ஷிக்க வல்லன்,
அபேக்ஷித்தால் ரக்ஷிப்பதுஞ் செய்யும் என்று தேறி , தான் ரக்ஷித்துக் கொள்ளமாட்டாமையை அறிவித்து,
நீ ரக்ஷிக்க வேணும் என்று, ரக்ஷ்ய வஸ்துவை அவன் பக்கலிலே ஸமர்ப்பித்து, தான் நிர்பரனாய் பயங்கெட்டு
மாரிலே கைவைத்துக் கொண்டு உறங்கக்காணா நின்றோமிறே.’ [ஸ்ரீமத்ரஹஸ்யத்ரயஸாரம், பரிகரவிபாகாதிகாரம்]

ஸ்ரீமந் — ஸ்ரீ மஹாலக்ஷ்மியோடு கூடிய நாராயணனே!
லக்ஷ்மியோடு கூடின எம்பெருமானே ப்ரபத்திக்கு உத்தேச்யன் என்பது இதனால் அறிவிக்கப் பெற்றது.
முதலில் புருஷகார ப்ரபத்தி பண்ணி, அம்முகத்தாலே வசீக்ருதனான எம்பெருமானிடத்தில்
ப்ரபத்தி செய்யவேண்டும் என்பதும் ஸூசிக்கப் பெறுகின்றது.

இவ்வாசார்ய சிரேஷ்டர் தெய்வநாயகனைச் சரணம் அடையத் திருவுள்ளங்கொண்டு முதலில்
செங்கமலவல்லித் தாயாரிடம் செய்யும் புருஷகார ப்ரபத்தியை முதற் பாசுரத்தால் வெளியிடுகிறார் “மும்மணிக்கோவை”யில்.

அருடரு மடியவர்பான் மெய்யை வைத்துத்
தெருடர நின்ற தெய்வ நாயகநின்
னருளெனுஞ் சீரோ ரரிவை யானதென
விருள்செக வெமக்கோ ரின்னொளி விளக்காய்
மணிவரை யன்ன நின்றிரு வுருவி
லணியம ராகத் தலங்கலா யிலங்கி
நின்படிக் கெல்லாந் தன்படி யேற்க
வன்புட னின்னோ டவதரித் தருளி
வேண்டுரை கேட்டு மீண்டவை கேட்பித்
தீண்டிய வினைகண் மாண்டிட முயன்று
தன்னடி சேர்ந்த தமருனை யணுக
நின்னுடன் சேர்ந்து நிற்குநின் றிருவே.

[தேவரீரால் அருள்புரியப்பெற்ற அடியவர்கள் மீது மெய்யாக ஒழுகுந் தன்மையை இட்டு ‘அடியவர்க்கு மெய்யன்’ எனப்
பெயர் பெற்று அடியோங்களுக்கு ஜ்ஞாநக்கண்ணை அருள்கின்ற தெய்வநாயகனே!
எமக்கு அஜ்ஞாநமாகிய இருள் ஒழியும்படி ஒப்பற்ற இனிய பிரகாசத்தையுடைய தீபம் போன்றவளாய்,
இந்த்ரநீல பர்வதம் போன்ற தேவரீர் அழகிய திருமேனியில் திருவாபரணங்கள் அமர்ந்து நிற்கின்ற திருமார்பில்
மாலையாகப் பிரகாசித்துக்கொண்டு, தேவரீர் ப்ரகாரங்களுக்கு எல்லாம் தன் பிரகாரங்கள் ஒத்திருக்குமாறு
தேவரீரைப் பிரியமாட்டாத அன்புடன், தேவரீரோடு தானும் அவதரித்தருளி,
ஆச்ரிதர்கள் பிரார்த்திக்கும் உரைகளைத்தான் முந்துறக் கேட்டு, மறுபடியும் அவ்வுரைகளைத் தேவரீர் கேட்குமாறு செய்து,
திரண்ட கர்மங்கள் ஒழிந்து போகச் செய்ய முயன்று, தன் திருவடிகளை அடைந்த பாகவதர்கள் தேவரீரை அடையும்படி
தேவரீர் கருணையெனும் குணமே ஒப்பற்ற பெண்வடிவு கொண்டது என்னலாம்படி தேவரீருக்கும்
பெருமையைத் தருகின்ற பெரிய பிராட்டி தேவரீரோடு க்ஷணமும் பிரியாது சேர்ந்து நிற்கின்றாள்] என்ற தேசிகமாலைப் பாசுரமே அது.

எம்பெருமானுடைய குணங்களுக்கு அளவே இல்லை. ஒரு பொருளுக்கு உளதாகக் கூறும் குணமானது
தன்னைப் பெற்றிருக்கும் மற்றொரு பொருளைக் காட்டிலும் ஒரு பேதத்தைக் காட்டுவதால் அக்குணம் விசேஷணம் என்னப் பெறும்.
இத்தகைய விசேஷணம் “ஸ்வரூபநிரூபக விசேஷணம்” என்றும், “நிரூபித ஸ்வரூப விசேஷணம்” என்றும் இருவகைப்படும்.
ஒரு வஸ்துவின் ஸ்வரூபத்தை எந்தக் குணத்தை உடையதாகக் கூறியே விளக்கினால் அன்றி
அவ்வஸ்துவின் ஸ்வரூபத்தை அறியமுடியாதோ, அந்தக் குணம் ஸ்வரூபநிரூபக விசேஷணம் எனப்படும்.
ஒரு வஸ்துவின் ஸ்வரூபத்தை விளக்கியபின் அதன் பெருமை புலப்படுவதற்கு எந்தக் குணங்கள்
வெளியிடப் பெறுகின்றனவோ, அவை நிரூபித ஸ்வரூப விசேஷணம் எனப்படும்.
எம்பெருமானுடைய ஸ்வரூபத்தை ஸத்யத்வம், ஜ்ஞாநத்வம், அநந்தத்வம், ஆநந்தத்வம், அமலத்வம் என்னும்
ஐந்து குணங்களை யிட்டே விளக்க வேண்டும். ஆதலின் இவ்வைந்தும் ஸ்வரூப நிரூபகம் ஆகும்.
இந்தக்குணங்கள் “அமலனவியாத சுடரளவில்லா வாரமுதம்” (தேசிகமாலை அருத்த பஞ்சகம் 1) என்ற வடியிற் கூறப்பெற்றுள்ளன.

(1) ஸத்யத்வம் — எஞ்ஞான்றும் மாறுபடாத தன்மை. இது ‘அவியாத’ எனும் சொல்லாற் கூறப்பெற்றது.

(2) ஜ்ஞாநத்வம் — எப்பொழுதும் குறைவுபடாத ஜ்ஞாந ஸ்வரூபனாந் தன்மை.
இது ‘சுடர்’ என்ற சொல்லால் உணர்த்தப் பெற்றது.

(3) அநந்தத்வம் — ‘இங்குத்தான் இருக்கின்றான்’ என்று தேசத்தாலும்,
‘இப்பொழுதுதான் இருக்கின்றான்’ என்று காலத்தாலும்,
‘இந்த வஸ்துவின் ஸ்வரூபமாக இருக்கின்றான்’ என்று வஸ்துவினாலும் அளவிடமுடியாதபடி
எவ்விடத்திலும், எக்காலத்திலும், எந்த வஸ்து ஸ்வரூபனாகவும் நிற்கும் தன்மை.
இது ‘அளவில்லா’ என்றதால் கூறப்பெற்றது.

(4) ஆநந்தத்வம் – தோஷங்கள் இல்லாத தன்மை. இது ‘அமலன்’ என்றதால் குறிக்கப்பெற்றது.

இவ்வைந்து குணங்களால் எம்பெருமானது ஸ்வரூபத்தை ஒருவாறு அறிந்தபின்
ஸௌசீல்யம், காருண்யம், வாத்ஸல்யம் முதலிய அளவற்ற திருக்கல்யாண குணங்கள்
அவன் பெருமையைக் காட்டுகின்றன. இவை நிரூபித ஸ்வரூப விசேஷணமாகும்.

“இப்படி ஸபத் நீகனாய்க்கொண்டு ஸர்வ ரக்ஷண தீக்ஷிதனாய் ‘சாந்தானந்த’ (சதுச்லோகீ 4)
‘ஸ்வ வைச்வ ரூப்யேண’ (ஸ்தோத்ர ரத்நம் 38) இத்யாதிகளிற்படியே
ஸ்வரூபத்தாலும், குணத்தாலும், ப்ரணயத்தாலும் ஸுச்லிஷ்டனான சரண்யனுக்கு
‘தன்னடியார் திறத்தகத்து’ (பெரியாழ்வார் திருமொழி 4-9-2) இத்யாதிகளில் அபிப்ரேதங்களாய்
புருஷகாரமும் தன்னேற்ற மென்னலாம் படியான சரண்யத்வ உபயுக்தங்களான ஆகாராந்தரங்களைச்
சொல்லுகிறது இங்குற்ற நாராயண சப்தம்.

அவையாவன :– சரீராத்மபாவநியாமகங்களான சேஷசேஷித்வாதி ஸம்பந்தங்களும்,
ஆச்ரயணீயதைக்கும் பலப்ரதானத்துக்கும் உபயுக்தமான குணவர்க்கமும், ஸககாரி நிரபேக்ஷமாக
ஸர்வத்தையும் நினைத்தபோதே தலைக்கட்டவல்ல ஸங்கல்பரூப வ்யாபாரமும்,
‘ஸ்வமுத்திச்ய ஸ்ரீமாந்’ (ஸ்ரீரங்கராஜஸ்தவம் 2-87) என்கிறபடியே ஆச்ரித ஸம்ரக்ஷணம் தானும்
தன்பேறாக ரக்ஷிக்கிற ப்ரயோஜந விசேஷமும்.

இங்கு குணவர்க்கம் என்கிறது ;–
காருண்ய ஸௌலப்ய ஸௌசீல்ய வாத்ஸல்ய க்ருதஜ்ஞாதிகளும், ஸர்வஜ்ஞத்வஸர்வ சக்தித்வ
ஸத்ய ஸங்கல்பத்வ பரிபூர்ணத்வ பரமோதாரத்வாதிகளும் ;

காருண்யம் — ஒரு வ்யாஜத்தை முன்னிட்டு நம்முடைய துக்கங்களைக் கழிக்கைக்கு தானே
நினைத்திருக்கையாலே ‘எம்மாபாவியர்க்கும் விதிவாய்க்கின்று வாய்க்கும்’ (திருவாய்மொழி 5-1-7) என்று நம்புகைக்கு உறுப்பாம் ;

ஸௌலப்யம் –‘சேணுயர்வானத்திருக்கும் தேவபிரான்’ (திருவாய்மொழி 5-3-9) என்று அகலாதபடி
‘ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம் நாராயணனே நமக்கே பறை தருவான்’ (திருப்பாவை 1) என்று
ஆபால கோபாலம் அணியனாய் அபேக்ஷிதம் தந்தருளும் என்கைக்கு உறுப்பாம்;

ஸௌசீல்யம் –‘அம்மானாழிப் பிரானவனெவ்விடத்தான்யானார்’ (திருவாய்மொழி 5-1-7) என்று
அகலாமைக்கு உறுப்பாம்;

வாத்ஸல்யம் — ‘நீசனேன் நிறைவொன்றுமிலேன்'(திருவாய்மொழி 3-3-4) என்று ஸ்வ தோஷத்தைக் கண்டு
அவன் அநாதரிக்கிறான் என்று வெருவாமைக்கு உறுப்பாம்;

க்ருதஜ்ஞத்வம் — ‘மாதவனென்றதே கொண்டு’ (திருவாய்மொழி 2-7-4)
‘திருமாலிருஞ்சோலைமலை யென்றேன்’ (திருவாய்மொழி 10-8-1) என்கிறபடியே
தன் பக்கலிலே அதிலகுவாயிருப்பதொரு வ்யாஜத்தைக் கண்டாலும் இனி நம்மைக் கைவிடான் என்கிற தேற்றத்திற்கு உறுப்பாம்;

மார்தவார்ஜித வாதிகளுக்கும் இப்படியே உபயோகம் கண்டுகொள்வது.

ஸர்வஜ்ஞத்வம் —‘எல்லாமறிவீர்’ (திருவாய்மொழி 4-9-6) என்கிறபடியே ஆச்ரிதருடைய
இஷ்ட ப்ராப்தி அநிஷ்ட நிவ்ருத்தி உபாயங்களையும் விரோதிகளையும் அறிகைக்கு உறுப்பாம்;

ஸர்வசக்தித்வம் — ‘கூட்டரிய திருவடிகட்கூட்டினை'(திருவாய்மொழி 4-9-9) என்கிறபடியே
ஆச்ரிதர் மநோ ரதங்களைக் கடிப்பிக்கைக்கு உறுப்பாம்;

ஸத்ய ஸங்கல்பத்வம் — ‘சன்மசன்மாந்திரங்காத்து’ (திருவாய்மொழி 3-7-7) இத்யாதிகளிற்படியே
‘மோக்ஷயிஷ்யாமி'(ஸ்ரீபகவத்கீதை 18-66) என்றது முடிவு செய்கைக்கு உறுப்பாம்;

பரிபூர்ணத்வம் — ‘செல்வநாரணனென்று’ (திருவாய்மொழி 1-10-8) இத்யாதிகளிற்படியே
பாவ தாரதம்யம் பார்க்கும் அளவே ஆனாலும் நாம் செய்யும் கிஞ்சித்காரத்தில் கௌரவலாவகங்களைப் பாராமைக்கு உறுப்பாம்;

பரமோதாரத்வம்–அல்பமான ஆத்மாத்மீயங்களை சோராநீத நூபுர ந்யாயத்தாலே ஸமர்ப்பித்தவர்களுக்குத் தான்
‘எனக்கே தன்னைத் தந்த கற்பகம்’ (திருவாய்மொழி 2-7-11) என்கிறபடியே,
அநந்தமான ஆத்மாத்மீயங்களை வழங்குகைக்கு உறுப்பாம்;

ஸ்தைர்ய தைர்யாதிகளுக்கும் இப்படி உபயோகம் கண்டுகொள்வது. ” [ஸாரஸாரம் த்வயாதிகாரம்]

இப்பிரபத்தி வித்யைக்கு உபயுக்தங்களாய் அநுஸந்தேயங்களான —
ஸர்வஜ்ஞத்வம், ஸர்வசக்திதத்வம், ஸர்வஸ்வாமித்வம் முதலான குணங்கள் எல்லாம் ”
த்வயி” என்கிற பதத்தில் அநுஸந்தேயம். இவை முன்னர் விளக்கப் பெற்றிருத்தல் காண்க.

பகவானுடைய குணங்கள் எல்லாம் பரோபகாரார்த்தமாகவே (பிறருக்கு உதவுவதற்காகவே) யிருக்கிறபடியால்
அவனைக் கல்யாண குணவான் என்று சாஸ்த்ரங்கள் முறையிடுகின்றன.
ஸர்வஜ்ஞத்வம் முதலான குணங்களை இவ்வளவு என்று எண்ண முடியாது.
ஸர்வஜ்ஞத்மாவது:– எப்பொழுதும் எல்லா வஸ்துக்களையும் உள்ளது உள்ளபடியே பார்ப்பது.
ஸர்வசக்தித்வமாவது :– நினைத்ததை நினைத்தபடியே முடிக்க சக்தி யுண்டாயிருக்கை; இந்த சக்தி பலவிதம்.
ஸத்யகாமத்மாவது:– போக்யமான வஸ்துக்கள் நினைத்தபோது ஸித்தமாயிருக்கை;
ஸத்ய ஸங்கல்பத்வமாவது –தான் ஸங்கல்பித்ததற்கு (நினைத்ததற்கு) ஒருவராலும் தடையில்லாமல்
ஸங்கல்பித்தபடியே நிறைவேற்றுகை.

ஸர்வேச்வரன் விபீஷணாழ்வானை ரக்ஷிக்க ஸங்கல்பித்தபோது ஸுக்கிரீவன் அங்கதன் முதலான தம்முடைய
அந்தரங்கமான மந்திரிகள் தடுத்தபோதிலும் அந்த ரக்ஷண ஸங்கல்பம் தடையில்லாமல் நிறைவேறிற்று.
பாணாஸுரனை சிக்ஷிக்க (தண்டிக்க) ஸங்கல்பித்தபோது, சிவன், ஸுப்ரஹ்மண்யன் முதலானவர்கள்
குறுக்கே விழுந்தபோதிலும் அவனைத் தண்டித்தே விட்டான்.
பரமோதாரத்வமாவது;– ஆச்ரிதர்களுக்கு அவர்கள் அபேக்ஷித்ததற்கு அதிகமாகவே கொடுத்தும்
‘நாமென்ன கொடுத்தோம்’ என்றிருக்கை.
க்ருதஜ்ஞதையாவது — தன் விஷயத்தில் அல்பம் செய்தாலும் அதை எப்போதும் அதிகம் நினைத்திருக்கை.
ஆச்ரித வத்ஸலத்வமாவது — ஆச்ரிதர்களிடத்தில் எவ்வளவு குற்றம் இருந்தாலும் அதைப் பாராததுபோல் இருக்கை.
ஸௌசீல்யமாவது ;– தான் எல்லாரையும்விட ஸர்வப்ரகாரத்தாலும் உத்தமனாயிருந்தும் ,
ஜாதி, குணம், நடத்தை இவை எல்லாவற்றிலும் மிகவும் தாழ்ந்தவர்களுடன், ஸஹோதரர்களோடு
போல் பிரியமாகப் பழகுந்தன்மை.
ஸௌலப்யமாவது:– ஆச்ரிதர்கள் நினைத்தமாத்திரத்தில் அவர்கள் இருக்கும் இடத்திற்குத் தானே வந்து கிட்டுகை.
ஆச்ரிதபாரதந்த்ர்யமாவது :– தான் ஸர்வேச்வரனாயிருந்தும் ஆச்ரிதர் இட்ட வழக்காக அவர்கள் இடும்
ஏவல் தொழில்களைத் தன் மேன்மைக்குத் தகாததாயிருந்தும் மிக அன்புடன் இவ்வளவு கிடைத்ததே என்று செய்வது.

இவை முதலான எண்ணிறந்த மஹா குணங்கள் ஸர்வேச்வரனுக்கு ஸ்வபாவ ஸித்தங்கள் என்று
ச்வேதாச்வதரோபநிஷத்தில் சொல்லப் பெற்றிருக்கிறது. இவனுக்கு அஜ்ஞானம் ஒருகாலும் கிடையாது.

[ இப்பிரபத்தி வித்யைக்கு உபயுக்தங்களாய் அநுஸந்தேயங்களான, இங்கு விளக்கப் பெற்றுள்ள
ஸர்வஜ்ஞத்வம் முதலான அகில குணங்களும் “த்வயி” என்ற பதத்தில் அநுஸந்தேயம்.]

———-

ஸ்வாமிந் ஸ்வ சேஷம் ஸ்வ வசம் ஸ்வ பரத்வேந நிர்ப் பரம்
ஸ்வ தத்த ஸ்வ தியா ஸ்வார்த்தம் ஸ்வஸ்திந் நிஸ்யஸிமாம் ஸ்வயம். (3)

[ ஸ்வாமிந் — ஸ்வத்வத்தை உடையவரே! ஸர்வசேஷியான ஸ்ரீமந்நாராயணனே !
ஸ்வ சேஷம் — தேவரீருடைய ஸொத்தாகவும் தேவரீருக்குச் சேஷ பூதனாயும்;
ஸ்வ வசம் — தேவரீருக்கு அதீநனாயும் இருக்கிற, தேவரீருக்கு உட்பட்டவனும் ஆன; மாம் -அடியேனை;
ஸ்வதத்த ஸ்வதியா — தேவரீரால் கொடுக்கப் பெற்றதான தேவரீரைக் குறித்ததான புத்தியினால்,
தேவரீரால் அளிக்கப் பெற்ற தேவரீருடைய புத்தியால், இச்சரீர ப்ரதாநம் முதல் ஸதாசார்ய ஸம்ச்ரயணம் பண்ணி வைத்து
த்வயோச்சாரணம் வரையில் உள்ள ஜ்ஞாநத்தினால்;
ஸ்வார்த்தம் — தேவரீருக்காகவே, தேவரீருடைய லாபத்துக்காகவே;
நிர்ப்பரம் — அடியேனுக்குச் சுமையில்லாதபடி, அடியேனுக்கு ஒரு பொறுப்பும் இல்லாதபடி;
ஸ்வபரத்வேந — செய்யவேண்டிய கார்யங்கள் தேவரீருடைய பரமாக, தேவரீருடைய பொறுப்பாகவே;
ஸ்வஸ்மிந் — தேவரீரிடத்தில்; ஸ்வயம் — தேவரீரே; ந்யஸ்யஸி — வைத்துக் கொள்ளுகின்றீர்.]

அடியேனை ஸொத்தாகவுடைய பெருமாள், தனக்கு அடிமையானவனும், தன்வசமாயிருப்பவனும்,
தன்னிடம் பரத்தை வைத்துவிட்டபடி யாலே எல்லாவித பரமும் நீங்கினவனுமான அடியேனுக்குத் தன்னைப் பற்றிய
ஞானத்தைத் தானே கொடுத்து, தான் அளித்த தன்னறிவாலே தனக்காகவே தன்னிடத்தில்
தானே அடியேனை வைத்துக் கொள்ளுகிறார்.

முன் சுலோகத்திற் சொன்ன ஸாங்கமான பரஸமர்ப்பணமும் நிவ்ருத்தி தர்மத்திற்கு உரியதான ஸாத்விக த்யாகம்
என்கிற அங்கத்துடன் அநுஷ்டிப்பது என்று அருளிச் செய்கிறார் இதில்.

ஸர்வ நியந்தாவாயாகிய திருநாராயணனே ! தேவரீருக்கு ஒரு மேன்மையைத் தருவதற்காகவே ஏற்பட்டவனாயும்,
தேவரீர் இட்ட வழக்காய் இருந்து அதீநனாயும் அடியேன் இருக்கின்றேன்.
இவ்வாறுள்ள அடியேனை தேவரீர் கொடுத்த தேவரீருக்குச் சேஷமான புத்தியாலே
வேறொருவரின் பிரார்த்தனையின்றி தேவரீர் பிரயோஜநத்துக்காகவே அடியேனுக்கு
ஒரு பரம் இல்லாமல் இருக்கும்படி தேவரீர் திருவடிகளில் வைத்துக் கொள்ளுகிறீர்.

தன்னதிகாராநுரூபமாக தவிர வேண்டுமவை தவிர்த்து, செய்யவேண்டுமவை செய்யுமிடத்தில்
அடியேன் ஸ்வதந்த்ரனாய்ச் செய்கிறேன் அல்லேன். அடியேனுக்கு இக்கர்மம் சேஷபூதம் என்றும்,
அடியேனுக்கு இன்னபலத்துக்கு இதுவே ஸாதனம் என்றும் பிறக்கும் நினைவை மாற்றி
ஸர்வேச்வரன் செய்விக்க அவனுக்குச் சேஷமான கைங்கரியத்தை அவன் உகப்பே பிரயோஜநமாக
அநுஸந்தித்து அநுஷ்டிக்கை ஸாத்விகத்யாகம். இவ்வாறு அநுஷ்டிப்பது.

நிவ்ருத்தி தர்மங்களை அநுஷ்டிக்கும் ஜீவன் கர்த்ருத்வத்தையும், மமதையையும், பயனில் ஸம்பந்தத்தையும்
விட்டுவிடவேண்டும். இதுவே ஸாத்விகத்யாகம்.
கர்த்ருத்வத்தை விடுகையாவது :– இந்தக் காரியத்தை யான் செய்யவில்லை,
எம்பெருமான் தான் என்னைக்கொண்டு செய்கிறான் என்று எண்ணுவது.
மமதையை விடுகையாவது:– எனக்குப் பிரயோஜநத்தைக் கொடுப்பதால் இந்தக் கர்மம் என்னுடையது
என்கிற நினைவை விடுவது.
பயனில் ஸம்பந்தத்தை விடுகையாவது:- இந்தக் கர்மத்தினால் வரும் பயனை வேண்டாமல் தன் ஸம்பந்தத்தை ஒழித்தல்.

ஸ்வவசம் — என்பதால் தனக்கு ஸ்வதந்த்ரத் தன்மையின்மை சொல்லிற்று.

நிர்ப்பரம் — என்பதால் ரக்ஷணப் பொறுப்பில் தனக்குச் சம்பந்தம் இல்லாமை அறிவிக்கப் பெற்றது.

ஸ்வதத்த — என்கையால் அளிக்கப்பெற்ற புத்தி நான் ஸம்பாதித்தது அன்று;
அவன் தந்து அருளியதே என்று அஹங்கார நிவ்ருத்தி கூறப் பெற்றது.

ஸ்வதியா — என்பதால் எம்பெருமான் அநுக்ரஹித்த ஜ்ஞாநம் என்னுடையதன்று,
அவனுடையதே என்று மமதா த்யாகம் பேசப் பெற்றது.

ஸ்வார்த்தம் –என்பதால் பல த்யாகம் உரைக்கப் பெற்றது.

ஸ்வயம் ஸ்வஸ்மின் ந்யஸ்யஸி — என்பதால் கர்த்ருத்வ த்யாகம் கூறியபடி.

கீழில் திருவாய்மொழியிலே ” நலமந்தமில்லதோர் நாடு புகுவீர்” என்று இவர் தாமும் அருளிச்செய்து,
ஸர்வேச்வரனும் இவர்க்கும் இவர் பரிகரத்துக்கும் மோக்ஷங் கொடுப்பானாகப் பாரிக்க, அத்தைக்கண்டு;
தேவரீர் எனக்கு மோக்ஷம் தந்தருளப் பார்த்ததாகில் இங்ஙனே தரப் பார்ப்பது; அதாகிறது “உனக்கு மோக்ஷங்கொள்” என்று
எனக்காகத் தருகை யன்றிக்கே, ‘நமக்காகக்கொள்’ என்று தேவர்க்கே யாம் படியாகத் தரவேணுமென்று தாம்
நினைத்திருந்த படியை அவன் திரு முன்னே பிரார்த்திக்கிறார்.
எம்பார் இத்திருவாய்மொழி யருளிச் செய்யப்புக்கால், இருந்தவர்களை “யார்” என்று கேட்டுக் கதவுகளையும் அடைப்பித்து,
குஹ்யமாகவாம் அருளிச் செய்வது.’ [ஈடு. ஒன்பதாந் திருவாய்மொழி — எம்மாவீடு — ப்ரவேசம்]

எனக்கே யாட்செய் எக்காலத்துமென்று என்
மனக்கே வந்து இடைவீடின்றி மன்னித்
தனக்கே யாக எனைக்கொள்ளு மீதே
எனக்கே கண்ணனை யான் கொள்சிறப்பே.(திருவாய்மொழி 2-9-4)

(ஈடு. நாலாம் பாட்டு. இத்திருவாய் மொழியிலே இவர் நிஷ்கர்ஷித்த ப்ராப்யமாவது :–
ஸ்ரக் சந்தனாதிகளோபாதி தனக்கே எனைக்கொள்ளு மீதே என்றிறே; இவ்விடத்திலே எம்பார் அருளிச் செய்யும்படி :–
“ஸர்வேச்வரன் திரிவித சேதநரையும் ஸ்வரூபாநு ரூபமாக அடிமை கொள்ளா நின்றான்;
நாமும் இப்படிப் பெறுவோமேயென்று.” முக்தரும், நித்யரும், தாங்களும் ஆநந்தித்து அவனையும் ஆநந்திப்பிப்ப வர்கள்;
பத்தர் தாங்கள் ஆநந்தியாதே அவனை ஆநந்திப்பிப்பர்கள்; இன்புறும் இவ் விளையாட்டுடையானிறே;”
மயர்வற மதிநலமருளப் பெற்றவர், ‘தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே’ என்று ப்ரார்த்திப்பானேன்?
‘திருவுள்ளமானபடி செய்கிறான் என்றிராதே’ என்று பிள்ளை திருநறையூரரையர் எம்பாரைக் கேட்க
“அது கேளீர் ! முன்பு பிரிந்தன்று, பின்பு பிரிவுக்கு ப்ரஸங்கமுண்டாயன்று, இரண்டுமின்றியிருக்கச் செய்தே,
‘அகலகில்லேன் அகலகில்லேன்’ என்னப் பண்ணுகிறது விஷயஸ்வ பாவமிறே;
அப்படியே ப்ராப்யருசி ப்ரார்த்திக்கப் பண்ணுகிறது” என்று அருளிச் செய்தார்.
எம்மாவீட்டிலெம்மாவீடாய், வைஷ்ணவஸர்வஸ்வமுமாய், உபநிஷத்குஹ்யமுமாய், ஸர்வேச்வரன் பக்கலிலே
அபேக்ஷித்துப் பெறுமதாய், இவ்வாத்மாவுக்கு வகுத்ததுமான பாரதந்த்ர்யத்தை அவன் பக்கலிலே அபேக்ஷிக்கிறார்.
முதலிலேயே “ஆட்செய்” என்னவேணும்; ஆட்செய்யென்று — ஸ்வாதந்த்ர்யத்தே வ்யாவர்த்திக்கிறது.
அதில் “எனக்காட்செய்” என்னவேணும்; எனக்காட்செய் என்று — அப்ராப்ம விஷயங்களை வ்யாவர்த்திக்கிறது.
எனக்கேயாட்செய் என்று — தனக்குமெனக்கும் பொதுவான நிலையைத் தவிர்த்து, “எனக்கேயாட்செய்” என்னவேணும்.
இதுதான் “ஒழிவில் காலமெல்லா முடனாய் மன்னி” நிற்கவேணும்;
“க்ரியதாமிதி மாம்வத” என்கிறபடியே, “இன்னத்தைச் செய்” என்று ஏவிக்கொள்ள வேணும்;
இப்படி ஒரு வார்த்தை அருளிச் செய்து நெடுங்கை நீட்டாக இருக்கவொண்ணாது,
என்னுடைய ஹ்ருதயத்திலே வந்து புகுரவேணும்; புகுந்தாலும் போக்குவரத்துண்டாக வொண்ணாது,
ஸ்த்தாவர ப்ரதிஷ்டையாக எழுந்தருளியிருக்கவேணும். இருந்து கொள்ளும் கார்யமென்? என்றால்,

[தனக்கேயாக வெனைக் கொள்ளுமீதே] — ஸ்ரக்சந்தநாதிகளோபாதியாகக் கொள்ள வேணும்.
அது சூடுமவனுக்கும் பூசுமவனுக்கு முறுப்பாய் மிகுதி கழித்துப்போகடு மித்தனை யிறே.
ஒரு மிதுநமாய்ப் பரிமாறா நின்றால் பிறக்கும் இனிமையும் இரண்டு தலைக்கும் ஒத்திருக்குமிறே,
அங்ஙன் என்னுடைய ப்ரீதிக்கு நான் அந்வயித்தவனாக வொண்ணாது, “நின்” என்றும், “அம்மா” என்றும் —
முன்னிலையாக ஸம்போதித்துக் கொண்டு போரா நிற்கச் செய்தே, இங்குப் படர்க்கையாகச் சொல்லுவானேன்? என்னில்;
“ப்ராப்ய நிஷ்கர்ஷம் பண்ணுகிற ஸமயத்திலே, திருமுகத்தைப் பார்க்கில் வ்யவஸாயங்குலையும்” என்று ,
கவிழ்ந்திருந்து கையோலை செய்து கொடுக்கிறார்.

[எனக்கே கண்ணனை] — “தனக்கேயாக” என்ற பின்புத்தை, எனக்கேயிறே. புருஷார்த்தமாகைக்காகச் சொல்லுகிறார்.
ஒரு சேதநனிறே அபேக்ஷிப்பான். நீர் அபேக்ஷிக்கிற இது செய்வோமாகப் பார்த்தால் எல்லார்க்கும் செய்யவேணுங்காணுமென்ன,
[யான்கொள்] –ஸ்வரூப ஜ்ஞாநத்தை நீ பிறப்பிக்க, அத்தாலே ஸ்வரூபஜ்ஞாநமுடைய நான் ஒருவனும்
பெறும்படி பண்ணவேணும். உமக்கும் எப்போதும் நம்மாற் செய்யப்போகாதென்ன,
[சிறப்பே]– பலகால் வேண்டா, ஒருகால் அமையும்; அதுதன்னிலும், திருவாசலைத் திருக்காப்புக் கொண்டு
ஒருவர் அறியாதபடி சிறப்பாகச் செய்யவும் அமையும். சிறப்பாகிறது — ஏற்றம். அதாவது
புருஷார்த்தம். ஸ்வரூபாநுரூபமான புருஷார்த்தத்தைக் கொண்டருளவேணுமென்ற படி.
சிறப்பாவது — முக்தியும் ஸம்பத்தும், நன்றியும். இவற்றில், நான் உன்பக்கல் கொள்ளும் மோக்ஷம்
உனக்கேயாக எனைக் கொள்ளுமதுவே. உன்பக்கல் நான் கொள்ளும் ஸம்பத்தென்னவுமாம்.
நன்றியென்னவுமாம். என்பன இவண் அநுஸந்தேயம்.

[“தமக்கேயா யெமைக் கொள்வார் வந்தார்தாமே” என்பது இம் மஹாதேசிகன் அருளிச் செய்த
திருச்சின்னமாலை (4)ப்பாசுர ஈற்றடி]

————

ஸ்ரீமந் அபீஷ்ட வரத த்வாம் அஸ்மி சரணம் கத:
ஏதத் தேஹாவஸாநே மாம் த்வத் பாதம் ப்ராப்ய ஸ்வயம். (4)

[ஸ்ரீமந் — திரு மா மகளுடன் கூடிய ஸ்ரீமந் நாராயணனே ! இறையும் அகலகில்லாத பெரிய பிராட்டியார் உறை மார்ப !
அபீஷ்டவரத ! — ஆச்ரிதர்களுக்கு இஷ்டமான பலன்களை அளித்துக் காக்கின்றதனால் வரதன் என்று
அஸாதாரமான திருநாமத்தையுடைய பேரருளாளரே ! த்வம் — தேவரீரை சரணம் — உபாயமாக கத;
அஸ்மி — (அடியேன்) அடைந்தவனாக இருக்கின்றேன், ஆகின்றேன் ;
ஏதத் தேஹா வஸாநே — சரீரத்தின் இறுதிக் காலத்திலே;
த்வத் பாதம் — தேவரீருடைய திருவடிகளை, வைகுந்தநாதனான தேவரீர் திருவடிகளை ;
ஸ்வயம் — தேவரீரே; ப்ராப்ய — (வேறோர் உதவியின்றி) அடைவிக்க வேண்டும் ]

பெருந்தேவிநாதனே ! கருத வரந்தருந் தெய்வப் பெருமாளே ! தேவரீரை அடைக்கலமாக அடைந்திருக்கிறேன்.
இச் சரீரம் விழும் பொழுது அடியேனுக்குத் தேவரீர் திருவடிகளைத் தேவரீரே சேர்ப்பிக்க வேண்டும்.

வேண்டுவார் வேண்டுவன நல்கி அளிக்கும் திருநாரணனே ! அடியேன் தேவரீரையே சரணமாகப் பற்றினேன்.
தேவரீர் வேறொரு உதவியை எதிர்பாராமல் இந்தச் சரீரத்தின் முடிவிலே தேவரீர் திருவடிகளை அடைவிக்க வேண்டும்.

ஸ்ரீய: பதியான நாராயணனே உபாயமாகவும் உபேயமாகவும் இருக்கின்றான் என்பது இதனால் அறிவிக்கப் பெற்றதாயிற்று.

ஏதத் தேஹா வஸாநே — என்பதனால் ஆர்த்தனாய் இப்பொழுதே மோக்ஷம் தந்து அருள வேண்டும் என்று
கோரிப் பிரபத்தி பண்ணினாலும் உடனே சரீரத்தின் முடிவைச் செய்து மோக்ஷத்தைக் கொடுப்பன் என்று ஏற்படும்.
பிரபத்தி இருவகைப் படும். அவையாவன :– (1)த்ருப்த ப்ரபத்தி (2) ஆர்த்தப் ப்ரபத்தி.
இச்சரீரம் உள்ள வரையில் கர்ம பலன்களை அனுபவித்து, இறுதியில் மோக்ஷத்தைப் பெற விரும்பிச் செய்யும்
சரணாகதி த்ருப்த ப்ரபத்தி.
இச்சரீரம் உள்ளவரையிலும் கூடப் பொறுக்காது இந்த க்ஷணமே மோக்ஷம் பெறவேண்டும் என்று
விரும்பிச் செய்யும் சரணாகதி ஆர்த்தப்ரபத்தி.

புகலுலகி லில்லாது பொன்னருள்கண் டுற்றவர்க்கு
மகலகிலா வன்பர்க்கு மன்றேதன் னருள்கொடுத்துப்
பகலதனாற் பழங்கங்குல் விடிவிக்கும் பங்கயத்தா
னகலகிலே னென்றுறையு மத்திகிரி யருண்முகிலே.(தேசிகமாலை, அருத்தபஞ்சகம் 8.)

[திருமகள் க்ஷணகாலமும் பிரியமாட்டேன் என்று நித்யவாஸம் செய்யப் பெற்றவனும், திருவத்தி மாமலையில் நின்று
கருணையாகிய நீரைப் பொழியும் மேகம் போன்றவனுமான பேரருளாளன், உலகத்தில் வேறு உபாயம் அநுட்டிக்க முடியாமல்,
பெரிய பிராட்டியின் திருவருளைப் புருஷகாரப் பிரபத்தியாகப் பெற்று, தன்னைச் சரணம் அடைந்தவருக்கும்,
தனது அநுபவத்தை விட்டு ஒரு கணப்பொழுதும் பிரிந்து இருக்கமுடியாத காதல் உள்ள பாகவதர்கட்கும்
அவர்கள் பிரார்த்தித்த காலத்திலே தன் பரமகிருபையை வைத்து மோக்ஷாநுபவம் ஆகிய பகலால் அநாதியான
ஸம்ஸாரம் ஆகிய காளராத்திரியை நீக்கி பொழுது விடியச் செய்வான்] என்று இவ் வேதாந்த வாரியனே விளம்புதல் காண்க.

சரணமாகும் தனதாளடைந்தார்க்கெல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்.-(திருவாய்மொழி 9-10-5)

[ஈடு – அஞ்சாம் பாட்டு . இப்படி பக்தி யோகத்தால் ஆச்ரயிக்க க்ஷமரமன்றிக்கே தன் திருவடிகளையே
உபாயமாகப் பற்றினார் திறத்து அவன் செய்தருளும்படியை அருளிச் செய்கிறார்.]

(சரணமாகும் தனதாளடைந்தார்க்கெல்லாம்) ஜந்ம்வ்ருத்தஜ்ஞாநங்களால் குறைய நின்றேராயாகிலும்,
தன் திருவடிகளையே உஉபாயமாகப் பற்றினார்க்கெல்லாம் ரக்ஷகனாம்.
கீழ் மூன்று பாட்டாலும் சொன்ன பக்தி யோகம் அதிக்ருதாதிகாரம், இதில் சொல்லுகிற ப்ரபத்தி ஸர்வாதிகாரம் என்கிறது;
“ஸமோஹம் ஸர்வபூதேஷு” என்னக்கடவதிறே. பகவத் விஷயந்தான் ஸ்பர்ச வேதியாயிருக்குமிறே;
கைசிகத்தில் பகவத் ஸம்பந்தம் உடையான் ஒரு சண்டாளனோட்டை ஸம்பாஷணம் ப்ராஹ்மணனுடைய
ஆசார வைகல்யத்துக்குப் பரிஹாரமாய்த்து; அவ்விடத்திலெல்லாம் சொல்லுகிற அர்த்தம் இதுவே யாய்த்து.

(மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்) — இவன் தன் பக்கலிலே பரந்யாஸம் பண்ணின அன்று தொடங்கி
இவனையொழியத் தனக்குச் செல்லாமை யுண்டாயிருக்கச் செய்தேயும் , இவனுடைய ருசியை அநுவர்த்தித்து,
சரீர விச்லேஷத்தளவும் அவசரப் ரதீக்ஷனாய் நின்று, பிள்ளையதுண்டானால் பரமபதத்தைக் கொடுக்கும் உபகாரகன்.
தன் திருவடிகளைப் பற்றினவன்றே தானிருக்கிற விடத்திலே இவனைக் கொடு போய்ச் சேரவைத்துக் கொள்ள வேண்டியிருக்கச் செய்தேயும்,
நடுவு இவனிருக்கும் நாலு நாளும் அவனுக்கு ஒரு பகல் ஆயிரம் ஊழியாயிருக்கையாலே, “மரணமானால்” என்கிறது.
“மரணமானால்” என்கிறது — தனக்கு அசக்தியில்லை, இவனுக்குக் கர்த்தவ்யமில்லை,
இவன் ருசியைக் கடாக்ஷித்து நிற்கிற வித்தனை. இப்பாட்டில் “மரணமானால்” என்றத்தைக் கொண்டிறே
கீழ்ச்சொன்ன நிரூபரணமெல்லாம் என்றிறே அருளிச் செய்தார்.

தன்னினைவில் விலக்கின்றித் தன்னை நண்ணார்
நினைவனைத்துத் தான்விளைத்தும் விலக்குநாத
னெந்நினைவை யிப்பவத்தி லின்று மாற்றி
யிணையடிக்கீ ழடைக்கலமென் றெம்மை வைத்து
முன்னினைவால் யாமுயன்ற வினையால் வந்த
முனிவயர்ந்து முத்திதர முன்னே தோன்றி
நன்னினைவா னாமிசையுங்க கால மின்றோ
நாளையோஓ வென்றுநகை செய்கின் றானே.—- (தேசிகமாலை, அதிகாரச்சுருக்கு 49)

[ஸர்வேச்வரன் ஸங்கல்பித்த விஷயத்தை எவரும் தடை செய்ய இயலாது. அவன், தன்னை அடையாத
நாஸ்திகர்களுக்குச் சகலவித ஆசைகளையும் உண்டாக்கி அவர்கள் அந்தப் போகங்களை அடைய முடியாது
தானே தடை செய்கின்றான். இத்தகைய எம்பெருமான் நம்மீது அருள் புரிந்து நமக்கு ஸம்ஸாரத்தில் உள்ள நசையைத் தீர்த்தான் ;
தன் திருவடிகளின் கீழே நம்மைக் காக்க வேண்டிய வஸ்துவாகக் கொண்டான்.
முன்பு அகங்கார மமகாரங்களால் நமக்கு ஏற்பட்ட கர்மங்களால் தனக்கு உண்டான கோபம் தீர்ந்தான் ;
நமக்கு மோக்ஷத்தை அளிக்க முற்பட்டுப் பல அவதாரங்களையும் செய்து நம்மோடு கலந்து பரிமாறினான்.
இப்படி யிருந்தும் இந்த அருமையை அறியாத நாம் ஸம்ஸாரத்தை விட மனங்கொள்ளாது ‘இன்றைக்கு நாளைக்கு’
என்று காலம் தாழ்த்துவதைக் கண்டு அவன் பரிஹஸிக்கின்றான்.
என்னே நம் அறியாமை ! ‘நான் மோக்ஷம் கொடுப்பதற்கு விரைந்தாலும் சேதநன் ஸம்ஸாரத்தை விட மனங்கொள்ளாது
‘இன்று ஆகட்டும், நாளை ஆகட்டும்’ என்று காலம் தாழ்க்கின்றான். என்னே இவன் அறியாமை !’ என்று
பகவான் பரிஹஸிக்கின்றான் என்க] என்றும் ;

ஒன்றே புகலென் றுணர்ந்தவர் காட்டத் திருவருளா
லன்றே யடைக்கலங் கொண்டநம் மத்தி கிரித்திருமா
லின்றே யிசையி னிணையடி சேர்ப்ப ரினிப்பிறவோம்
நன்றே வருவதெல் லாநமக் குப்பர மொன்றிலதே. (தேசிகமாலை அமிருத ரஞ்சனி 18)

[ ஐம்பொருளையும் சரீராத்மபாவம் முதலிய ஸம்பந்தத்தையும் அறிந்த ஆசார்யர்கள்
‘ஸ்ரீமந்நாராயணன் ஒருவனே உபாயம்’ என்று உபதேசிக்க, அல்லது, எம்பெருமானே உபாயம் என்று அறிந்த
ஆசார்யர்கள் அவன் திருவடிகளில் நம்மை ஸமர்ப்பிக்க, பிரதி உபகாரத்தை எதிர்பாராத, சிறந்த அவனுடைய கிருபையினால்,
அப்பொழுதே ரக்ஷிக்கப்பட வேண்டிய வஸ்துவாக ஏற்றுக் கொண்ட நம்முடைய அத்திகிரி நாதனான பேரருளாளர்,
இப்பொழுதே முத்தியைப் பெற நாம் ஸம்மதித்தால் தம்முடைய இரண்டு திருவடிகளில் சேர்த்துக் கொள்வார்.
இனி மறுபடியும் இக்கர்ம பூமியில் பிறக்க மாட்டோம். இனி இச்சரீரம் அழியும் அளவும் வரும் இன்பங்களும் துன்பங்களும்
ஆகிய எல்லாம் நமக்கு அநுகூலங்களே. இனி நாம் உஜ்ஜீவிப்பதற்காகச் செய்ய வேண்டிய பொறுப்பு ஒன்றும் இல்லை.]
என்றும் இந் ந்யாஸ தசக வாசிரியர் தாமே கூறி யருளியுள்ளார்.

இப் பாசுரத்துக்கு நம் ஸ்வாமியே வியாக்கியானம் இட்டுள்ளார். அதிற் சில பங்க்திகள் தருவாம் இங்கு.

‘நம்மத்திகிரித் திருமால்’ என்றது —
‘வேகவத் யுத்தரே தீரே புண்ய கோட்யாம் ஹரிஸ் ஸ்வயம், வரதஸ் ஸர்வ பூதாநாமத்யாபி பரித்ருச்யதே’,
‘நிகரில் புகழாயுலகு மூன்றுடையாயென்னை யாள்வானே’ இத்யாதிகளிற்படியே
ஆச்ரித ஸம்ரக்ஷணோப யுக்த ஸௌசீல்யஸ் ஸ்வாமித்வ விசிஷ்டனாய், நண்ணினவர்களுக்கு விண்ணுலகந்தர
விரைந்து ரக்ஷாபேக்ஷாப்ரதீக்ஷனாய் மண்ணுலகில் வந்து பலப்ரதா நோந்முகனாய் நிற்கிற பெருமாள் என்றபடி.

‘இன்றே யிசையிலிணையடி சேர்ப்பர்’ என்றது —
‘க்வாஹ மத்யந்துர்புத்தி:க்வ சாத்ம ஹிதவீக்ஷணம், யத்தி தம் மம தேவேச ததாஜ்ஞாபய மாதவ,
த்வாம் ப்ரபந்நோஸ்மி தாஸஸ்நே நாந்யா க்வாபி கதிர் மம, அத்யைவ கிங்கரீ க்ருத்ய நிதேஹி த்வத்பதாம் புஜே.’
இத்யாதிகள்படியே பரமபுருஷார்த்தைக நமஸ்காரமளவில் அப்போதே கொடுவுலகு காட்டாதே
கொழுஞ்சோதி யுயரத்துக் கூட்டரிய திருவடி கூட்டி அருள்வர் என்றபடி. (ஸ்ரீமத்ரஹஸ்யரத்நாவளீ ஹ்ருதயம்)

இச்சுலோகத்தில் த்வய மந்திரத்தின் கிரமத்தை அநுஸரித்துச் சரணாகதி செய்ததின் பின் பலனைப் பிரார்த்திக்கிறார்.

—————-

த்வச் சேஷத்வே ஸ்த்திரதியம் த்வத் ப்ராப்த்யேக ப்ரயோஜநம்
நிஷித்த காம்ய ரஹிதம் குரு மாம் நித்ய கிங்கரம். (5)

[(பகவானே !) மாம் — அடைக்கலமான அடியேனை; த்வத் சேஷத்வே — தேவரீருக்குச் சேஷ பூதமாயிருப்பதிலே ;
ஸ்த்திரதியம் — உறுதியான புத்தியை உடையவனாக ; குரு – செய்தருள வேண்டும்;
த்வத் ப்ராப்தி ஏக ப்ரயோஜநம் — தேவரீரை அடைதலே முக்கிய பலம் என்ற எண்ணம் உடையவனாகவும்
குரு — செய்தருளவேண்டும் ;
நிஷித்த காம்ய ரஹிதம் — சாஸ்த்ரங்களில் விலக்கப் பட்டவைகளான காம்ய கர்மங்களில் ஸம்பந்தம் அற்றவனாகவும்,
சாஸ்திரங்களில் நிஷித்தங்களான அற்ப பலத் தாசையினாலே சூந்யனாகவும் ;
குரு — செய்தருளுக; நித்ய கிங்கரம் — எப்போதும் தாஸ வ்ருத்தி செய்பவனாகவும் ,
இவ்வாறு நிலை நின்ற அடிமைக்காரனாகவும் ; குரு — செய்தருள வேண்டும்.]

மேல் ஐந்து சுலோகங்களாலே உத்தர க்ருத்யத்தை பிரார்த்திக்கிறார்.
அவற்றில் முதல் மூன்று சுலோகங்களால் இங்கு இருக்கும் நாட்களில் ஒரு குற்றமும் இன்றிப் பண்ணும்
உத்தர க்ருத்யம் பிரார்த்திக்கப் பெறுகிறது.
இவ்வைந்தாவது சுலோகத்தில் சேஷத்வாநுஸந்தாந பூர்வமாக நித்ய கிங்கரத் தன்மையைப் பிரார்த்திக்கிறார்.

தேவரீருக்கே அடியேன் என்பதிலே திடமான ஞானத்தை உடையவனும்,
தேவரீரை அடைவது ஒன்றே பயனாகக் கொண்டவனும், விலக்கப் பட்ட கர்மங்களையும், காமிய கர்மங்களையும்
விட்டவனும் ஆன அடியேனை நித்ய கிங்கரனாகச் செய்து கொள்ள வேண்டும்.

தேவரீரிடத்தில் சரணாகதி பண்ணி பரம் அற்றிருக்கிற அடியேனுக்குச் சேஷித்வம் ஒருக்காலும் தோற்றாமல்
தேவரீருக்கே சேஷம் என்ற நல்ல புத்தியை நிலையாய் இருக்கும்படி செய்தருள வேண்டும்.
தேவரீரை அடைவதைத் தவிர இதர பயனில் ஆசையற்றவனாகவும் பண்ண வேண்டும்.
சாஸ்திரங்களில் தள்ளுண்ட கர்மங்களையும், பசுபுத்திராதி அற்ப பலன்களையும் விடும்படிக்கான புத்தியையும்
தந்தருள வேண்டும். இப்படி எப்போதும் தேவரீரது கைங்கரியத்தில் ஈடுபட்டவனாகவும் பண்ணி யருள வேண்டும்.

த்வயத்தில் உத்தரகண்டத்தில் நான்காம் வேற்றுமையில் இஷ்டத்தையும்,
நமஸ்ஸில் அநிஷ்ட நிவ்ருத்தியையும் பிரார்த்திக்கிற முறையில் இங்கும் முதலில் இஷ்டப் பிரார்த்தனையையும்,
பிறகு அநிஷ்ட நிவ்ருத்தி பிரார்த்தனையையும் செய்து மேல் உத்தராவதி, மேல் எல்லை, இல்லாத
நித்திய கைங்கர்ய ரூபமான பல பிரார்த்தனையையும் செய்ததாயிற்று.

நிஷித்த காம்யரஹிதம் — பகவத் பக்தி, ஜ்ஞானம் இவற்றின் வளர்ச்சி, கைங்கர்யத்துக்கு உபயோகமானவை,
ஸ்ரீவைஷ்ணவர்களின் ஸம்ருத்தி — இவற்றைப் பகவானிடத்தில் பரமை காந்தியாகிய ப்ரபந்நன் யாசிக்கலாம் என்று
பிரமாணம் இருப்பதால் இவை அநிஷித்த காம்யங் களாகும்.
இவைகட்குப் புறம்பான பசுபுத்திராதிகளை வேண்டுதல் நிஷித்தமாம்.
இது அடியேனுக்கு இல்லாமல் இருக்கும்படி கிருபை பண்ணவேண்டும்.
அன்றிக்கே நிஷித்தங்களும், காம்யங்களும் இல்லாதபடி செய்தருள வேண்டும்.
அதாவது — சாஸ்திரங்களில் செய்யக் கூடா தன என்று விலக்கப் பெற்ற கார்யங்களைச் செய்வது முதலிய
அபராதங்களைச் செய்யாதிருக் கும்படி கிருபை பண்ண வேண்டும். செய்யாவிட்டால் தோஷத்தைக் கொடுக்காதனவும்,
ஐஹிகம், ஆமுஷ்மிகம் என்று இருவகையான பயனை யளிப்பனவுமான காம்ய கர்மங்களைச் செய்யாதவனாகவும் செய்தருள வேண்டும்.

——-

தேவி பூஷண ஹேத்யதி ஜுஷ்டஸ்ய பகவம் ஸ்தவ:
நித்யம் நிரபராதேஷு கைங்கர்யேஷு நியுங்க்ஷ்வ மாம். (6)

( பகவந்: — ஞானம், சக்தி, பலம், ஐச்வர்யம், வீர்யம், தேஜஸ்ஸு என்கிற ஆறு குணங்கள் நிறைந்த எம்பெருமானே!
தேவி: –ஸ்ரீபூமி நீளைகள், பிராட்டிமார்கள்: பூஷண — திருவணிகலன்கள்: திருவாபரணங்கள்:
ஹேதி — திவ்யாயுதங்கள்: ஆதி – திருவணுக்கள் முதலானவைகளால்: ஜுஷ்டஸ்ய — அடையப் பெற்ற:
தவ — தேவரீருடைய: நிரபராதேஷு — குற்றமற்ற : கைங்கர்யேஷு –குற்றேவல்களில்: அடிமைகளில்:
மாம் — அடியேனை: நித்யம் — ஒழிவில் காலம் எல்லாம், எல்லாக் காலத்திலும்,
நியுங்க்ஷ்வ — நியமித்தருள வேண்டும், விநியோகித்துக் கொள்ளுக.

அகில விபூதிகளுடன் கூடிய தேவரீர் விஷயத்தில் அபராதம் இல்லாத கைங்கர்யத்தை அடியேன்
செய்யும்படி நியமித்தருள வேண்டும் என்று பிரார்த்திக்கிறார் இதில்.

ஸ்ரீபூமி நீளைகளாகிற பிராட்டிமார்களாலும், திவ்யாபரணங்களாலும், திவ்யாயுதங்களாலும் அடையப் பெற்று
அதனால் ஆநந்தம் அடையும் தேவரீரது, அபராத லேசமும் புகவொட்டாத கைங்கர்யங்களில்
நித்யமாக அடியேனை இறுத்திக் கொள்ள வேணும்.

ஷாட்குண்யபரிபூரணனே! அகில ஜகத்தையும் ஆபரணமாகவும், ஆயுதமாகவும் கொண்டு ஸர்வ ஜகத் சரீரகனாய்
தேவிமார்களுடனும் ஸகல கல்யாண குணங்களுடனும் கூடிய தேவரீர் விஷயத்தில் இங்குச் சரீரம் உள்ளதனையும்,
பின்னர் யாவதாத்மபாவியாகவும் எவ்விதக் குற்றமும் இல்லாத கைங்கர்யங்களைச் செய்யும்படி அடியேனை நியமித்தருள வேண்டும்.

பகவந் –
“மைத்ரேய! பகவச் சப்தஸ் ஸர்வகாரண காரணே! ஸம்பார்த்தேதி ததா பர்த்தா பகாரோர்த்த்வயாந்வித:
நேதாகமயிதா ஸ்ரஷ்டா ககாரார்த்தஸ் ததாமுநே. ஐச்வர்யஸ்ய ஸமக்ரஸ்ய வீர்யஸ்ய யசஸச்ஸ்ரீய:
ஜ்ஞாநவைராக்ய யோச்சைவ, ஷண்ணாம் பக இதீரணா. வஸந்தி தத்ர பூதாநி பூதாத்மந்யகிலாத்மநி,
ஸச பூதேஷ்வசேஷேஷு வகாரார்த்தஸ் ததோவ்யய:ஜ்ஞாந சக்தி பலைச்வர்ய வீர்ய தேஜாம்ஸ்ய சேஷத:
பகவத்சப்தவாச்யாநி விநா ஹேயைர் குணாதிபி: ஏவமேஷ மஹாசப்தோ மைத்ரேய! பகவாநிதி,
பரப்ரஹ்ம பூதஸ்ய வாஸுதேவஸ்ய நாந்யக: தத்ர பூஜ்ய பதார்த்தோக்தி பரிபாஷா ஸமந்வித:
சப்தோயம் நோபசாரேண த்வந்யத்ர ஹ்யுபசாரத:” (விஷ்ணுபுராணம் 6-5-72)

[ மைத்ரேயரே! ‘பகவான்’ என்னும் சப்தம் ஸர்வ காரணங்களுக்கும் காரண பூதனான ஸர்வேச்வரன்
விஷயத்தில் சொல்லப் பெறுகிறது. ‘(ப்ரக்ருதியை) கார்யதசை அடையச்செய்பவன்,
‘ஸ்வாமி’ என்னும் இரண்டு அர்த்தங்களுடன் கூடியது பகாரம்; முனிவரே!
அவ்வாறே ‘ரக்ஷிப்பவன், ஸம்ஹரிப்பவன், ஸ்ருஷ்டிப்பவன்’ என்பது ககாரத்தின் அர்த்தம்.
ஸம்பூர்ணமான ஐச்வர்யம், வீர்யம், யசஸ், ஜ்ஞாநம், வைராக்யம் என்னும் இந்த ஆறு குணங்களுக்கும்
‘பக’ என்னும் பதம் வாசகமாயிருக்கிறது.
பூதங்களை சரீரமாகக்கொண்டவனும், எல்லாவற்றுக்கும் ஆத்மாவாயிருப்பவனுமான அவனிடத்தில் பூதங்கள் வஸிக்கின்றன.
அவனும் அகில பூதங்களிலும் வஸிக்கின்றான். ஆகையால் அழிவற்றவனான பகவான் வகராத்துக்கு அர்த்தமாகிறான்.
கீழானவையான முக்குணங்கள் முதலியவற்றுடன் சேராத
‘ஜ்ஞாநம், சக்தி, பலம், ஐச்வர்யம், வீர்யம், தேஜஸ் என்னும் எல்லா குணங்களும்
‘பகவாந்’ என்னும் சப்தத்தினால் சொல்லப்படுகின்றன. மைத்ரேயரே! இம்மாதிரியாக பகவான் என்னும்
இந்த மஹாசப்தம் பரப்ரஹ்மமான வாஸுதேவனுக்கே உரித்தானது. வேறொருவரையும் குறிக்காது.
‘பூஜிக்கத்தக்க பொருளைக் குறிப்பது’ என்னும் பரிபாஷையுடன் கூடிய இந்த சப்தம் அவன் விஷயத்தில்
ஔபசாரிகமாகச் சொல்லப் பெறுவதில்லை. மற்ற விஷயங்களில் ஔபசாரிகமாக அமுக்யமாகச் சொல்லப் பெறுகிறது.]

“பிணக்கற அறுவகைச் சமயமும் நெறியுள்ளியுரைத்த, கணக்கறு நலத்தனன்
அந்தமிலாதி யம்பகவன்” (திருவாய்மொழி 1-3-5)
{(அந்தமிலாதி) ஆப்ததமன். எல்லார்க்கும் உத்பத்தி விநாசங்களாலே யிறே ஜ்ஞாந ஸங்கோசம் பிறப்பது;
இவனுக்கு அவையில்லாமையாலே அகர்மவச்யன் என்கிறது.
(அம்பகவன்) — ஜ்ஞாநாதிகளால் அல்பம் உத்கர்ஷம் உடையவன் பக்கலிலே பகவச்சப்தம் வர்த்தியாநின்றதிறே ;
“அந்யத்ரஹ்யுபசாரத:” பகவச்சப்தம் முக்யமாக வசிப்பது இவன் பக்கலிலே, அல்லாதார் பக்கல் ஔபசாரிகம்.
(அம்பகவன் வணக்குடைத்தவ நெறிவழி நின்று) — “நமஸ்யந்தச்சமாம் பக்த்யா” என்று பக்தி சரீரத்திலே நின்று
அருளிச் செய்தானிறே. அங்கநா பரிஷ்வங்கம் போலே போகரூப மாயிறே இதுதான் இருப்பது— ஈடு”}

“இப்படி ஸ்வாதீந ஸர்வ ஸத்தாதிகளை உடையவனாய் இருக்கிற ஈச்வரனுடைய ஸ்வரூபம்
ஸத்யத்வாதிகளாகிற ஸ்வரூப நிரூபக தர்மங்களாலே ஸத்யமாய் ஜ்ஞாநமாய் அநந்தமாய் ஆநந்தமாய் அமலமாய் இருக்கும்.
இவ்வர்த்தத்தை ‘நந்தாவிளக்கே யளத்தற்கரியாய்'(பெரிய திருமொழி 3-8-1) என்றும்
‘உணர் முழு நலம்'(திருவாய்மொழி 1-1-2) என்றும்,
‘சூழ்ந்ததனிற் பெரிய சுடர் ஞானவின்பம்’ (திருவாய்மொழி 10-10-10) என்றும்,
‘அமலன்’ ( அமலனாதிப் பிரான். 1) என்றும்இத்யாதிகளாலே ஆழ்வார்கள் அநுஸந்தித்தார்கள்.
மற்றுள்ள குணங்களும் திவ்ய மங்கள விக்ரஹாதிகளும் எல்லாம் ஈச்வரனுக்கு நிரூபித ஸ்வரூப விசேஷணங்களாயிருக்கும்.
இக்குணங்களில் ஜ்ஞாநபல ஐச்வர்ய வீர்யசக்தி தேஜஸ்ஸுக்கள் என்று ஆறு குணங்கள் பரத்வோபயுக்தங்களாயிருக்கும்.
ஸௌசீல்ய வாத்ஸல்யாதிகள் ஸௌலப்யோப யுக்தங்களா யிருக்கும்.
இக்குணங்கள் எல்லாம் ஸர்வ காலத்திலும் ஸ்வரூபாச்ரிதங்களாயிருக்கும்.
பரவ்யூஹாதி விபாகங்களில் குணநியமம் சொல்லுகிறதெல்லாம் அவ்வோரூபங்களை அநுஸந் திப்பார்க்கு
ஸர்வேச்வரன் ஆவிஷ்கரிக்கும் குணவிசேஷங்கள் சொல்லுகைக்காக அத்தனை, ஔபநிஷத வித்யா விசேஷங்கள் தோறும்
அநுஸந்தேய குணவிசேஷங்கள் நியதமானாற்போல பகவச் சாஸ்த்ரோக்தமான ரூப விசேஷாநு ஸந்தாநத்துக்கும்
குண விசேஷங்கள் நியதங்கள்.
அவ்விடத்தில் பரரூபத்தில் ஜ்ஞாநாதிகுணங்கள் ஆறும் வேத்யங்கள்” [ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம். தத்வத்ரயசிந்த நாதிகாரம்]

“வ்யூஹங்கள் நாலென்றும் மூன்றென்றும் சாஸ்த்ரங்கள் சொல்லும். நாலு வ்யூஹம் உண்டாயிருக்க
வ்யூஹ வாஸுதேவ ரூபத்திற்கு பர ரூபத்திற்காட்டில் அநுஸந்தாய குணபேதம் இல்லாமையாலே த்ரிவ்யூஹம் என்கிறது.
இப்பக்ஷத்தை ‘குணைஷ்ஷட்பிஸ்த்வேதை: ப்ரதம தரமூர்த்தி ஸ்தவ பபௌ,
ததஸ் திஸ்ரஸ்தேஷாம் த்ரியுக யுகளைர்ஹி த்ரிப்ரபு:’ (வரதராஜஸ்தவம் -16) என்கிற ச்லோகத்திலே ஸங்க்ரஹித்தார்கள்.
இப்பரவ்யூஹங்களில் குணக்ரியாவிபாகங்கள்
‘ஷாட்குண்யாத் வாஸுதேவ; பர இதி ஸபவாந் முக்தபோக்யோ பலாட்யாத் போதாத் ஸங்கர் ஷணஸ்த்வம் ஹரஸி
விதநுஷே சாஸ்த்ர மைச்வர்யவீர்யாத் ப்ரத்யும்நஸ் ஸர்க்கதர்மௌ நயஸிச பகவந்! சக்தி தேஜோ நிருத்த:
பிப்ராண: பாஸி தத்வம் கமயஸி ச ததா வ்யூஹ்ய ரங்காதிராஜ.’ (ஸ்ரீரங்கராஜஸ்தவம். உத்தரசதகம்.39)
என்கிற ச்லோகத்திலே ஸங்க்ரஹிக்கப் பட்டன. ஜாக்ரதாதிபத பேதங்களில் உள்ள விசேஷங்கள் எல்லாம்
‘ஜாக்ரத் ஸ்வப்நாத் யல ஸதூரிய ப்ராயத் யாத்ரு க்ரமவதுபாஸ்ய: ஸ்வாமிந்! தத்தத் ஸஹ பரிபர்ஹ;
சாதுர் வ்யூஹம் வஹஸி சதுர்த்தா’ (ஸ்ரீரங்கராஜஸ்தவம் 2-40) என்று ஸங்க்ரு ஹீதங்களாயிற்று.
[ஸ்ரீமத்ரஹஸ்யத்ரய ஸாரம், தத்வத்ரய சிந்த நாதிகாரம்.]

ஈண்டு ஆளப்பெற்ற மேற்கோள்களின் பொருள் வருமாறு:–
மூவிரண்டு குணங்களை உடைய வரதராஜனே! தேவரீருடைய அகில மூர்த்திகட்கும் முதன்மையான
பர வாஸு தேவமூர்த்தி கீழ்ச்சொன்ன இந்த ஆறு குணங்களால் விளங்கிற்று. அதற்கு மேல் மும்மூர்த்திகள்
அந்த குணங்களுடைய மூவிரண்டுகளாலே பிரகாசித்தன. இப்படிப்பட்ட வ்யவஸ்தை யாதொன்று உண்டு
அந்த வ்யவஸ்தை குணங்களை வெளியிடுதல் பற்றியாம். தேவரீரோவெனில் அகில மூர்த்திகளிலுமே
எண்ணிறந்த சிறந்த கல்யாண குணங்களையுடையீரா யிராநின்றீர். (வரதராஜஸ்தவம் 16)

பகவானாகிய திருவரங்க நகராதிபனே! பூஜ்யரான தேவரீர் வாஸுதேவாதி வ்யூஹரூபேண அவதரித்து
ஞானம் முதலிய ஆறு குணங்களோடுகூடி பரவாஸுதேவர் என வழங்கப்பெற்றவராகி முக்தர்கட்கு அநுபாவ்யராக ஆகின்றீர் ;
பலத்தோடு கூடின ஞானத்தோடு கூடி ஞானமும் பலமுமாகிற இரண்டு குணங்களை உடையவராய்க் கொண்டு
ஸங்கர்ஷண மூர்த்தியாகி ஸம்ஹாரத் தொழிலை நடத்துகின்றீர் சாஸ்த்ரத்தை அளிக்கின்றீர்;
ஐச்வர்ய வீர்யங்களோடு கூடி ப்ரத்யும்ந மூர்த்தியாகி ஸ்ருஷ்டியையும் பண்ணி தர்மத்தையும் ப்ரவர்த்திப்பிக்கிறீர்
சக்தி தேஜஸ்ஸுக்களாகிற இரண்டு குணங்களை உடையவராகி அநிருத்த மூர்த்தியாய் ரக்ஷணத் தொழிலை நடத்துகின்றீர்;
தத்வஜ்ஞாந ப்ரதாநமும் பண்ணுகின்றீர் (ஸ்ரீரங்கராஜஸ்தவம், 2-39.)

திருவரங்கநாதரே! விழித்துக் கொண்டிருப்பாரும், உறங்கிக் கொண்டிருப்பாரும், ஸுஷுப்தியில் இருப்பாரும்,
மூர்ச்சா தசையில் இருப்பாருமான த்யாநம் செய்பவர்களின் ரீதிகளையுடைய அதிகாரிகளாலே
உபாஸிக்கத் தகுந்தவராய் தகுதியான பரிச்சதங்களை உடையவராய் நான்கு வகையாக
வ்யூஹ சதுஷ்டயத்தை வஹிக்கின்றீர் (ஸ்ரீரங்கராஜஸ்தவம், 2-40)

ஜ்ஞாநசக்தி பலைச்வர்ய வீர்ய தேஜஸ்ஸுக்கள் என்கிற சிறந்த ஆறு குணங்களும்
பரவாஸு தேவமூர்த்தியிலே புஷ்கலங்கள் என்றும், எம்பெருமானுக்கு மற்றும் உள்ள அநந்த கல்யாண குணங்களுள்
இந்த ஆறு குணங்களே சிறந்தவை என்றும், இக்குணங்கள் அடியாகத்தான் இவற்றின் சாகோபசாகைகளாக
இதர குணங்கள் பெருகுகின்றன வென்றும்,
“ப்ரக்ருஷ்டம் விஜ்ஞாநம் பலமதுல மைச்வர்ய மகிலம் விமர்யாதம் வீர்யம் வரத பரமா சக்திரபிச,
பரம் தேஜச்சேதி ப்ரவரகுண ஷட்கம் ப்ரதமஜம் குணாநாம் நிஸ்ஸீம்நாம் கணநவிகுணாநாம் ப்ரஸவபூ;” என்ற
சுலோகத்தில் (வரதராஜஸ்தவம், 15) கூரத்தாழ்வான் பணித்துள்ளான்.

(i) ஜ்ஞாநமாவது — எப்போதும் ஸ்வத: ஏக காலத்தில் பஞ்சேந்த்ரியங்களினாலும் அறியக் கூடியவற்றை யெல்லாம் ஸாக்ஷாத்கரிக்கை.
(ii) சக்தியாவது — ஸ்வ ஸங்கல்ப மாத்திரத்தால் அஸங்க்யேயமான புவநங்கட்கும் உபாதாந காரணமாகை.
(iii) பலமாவது– ஸமஸ்தசித் அசித் ஸமூகங்களையும் சிறிதும் இளைப்பின்றித் தாங்கும் வல்லமை
(iv) ஐச்வர்யமாவது — ஸ்வாதந்தர்யத்தோடு எங்குந் தடையின்றிச் செல்லும் ஸங்கல்பத்தையுடைமை.
(v) வீர்யமாவது — தான் உபாதாந காரணமாகிச் சேதநா சேதநங்களை உண்டாக்கியும் தனக்கு ஒரு விகாரமின்றிக்கேயிருக்கை.
(vi) தேஜஸ்ஸாவது — வேறொருதவியின்றி அடைந்தாரது தாபங்களைப் போக்கியும் எதிரிகட்குத் தாபத்தைத் தந்தும் போருந்தன்மை.

(1) அஜடம் ஸ்வாத்ம ஸம்போதி நித்யம் ஸர்வாவகாஹநம்,
ஜ்ஞாநம் நாமகுணம் ப்ராஹு: ப்ரதமம் குணசிந்தகா:
[குணத்தைச் சிந்திக்குமவர்கள் முதலில் ஜ்ஞாநம் என்று பிரஸித்தமான குணம் அஜடமாயும்,
தன்னைத்தானே அறிகிறதாயும், நித்யமாயும், எல்லா விஷயங்களையும் பிரகாசிப்பதாயும் இருக்கும் என்று சொல்லுகிறார்கள்.
ஜ்ஞாநமாவது — எப்பொழுதும் எல்லாவற்றையும் தெளிவாக விளக்கக்கூடியதாயும், தனக்குத்தானே பிரகாசமாயும் உள்ள குண விசேஷம்.]

(2) ஜகத் ப்ரக்ருதிபாவோ யஸ்ஸக்தி ப்ரகீர்த்தித:
[ஜகத்திற்குக் காரணமா யிருப்பது யாதொன்று உண்டோ அது சக்தி என்ற சொல்லப் படும்.
சக்தியாவது — ஜகத்காரணமா யிருக்கின்ற குண விசேஷமாதல், அகடித கடனா ஸாமர்த்யமாதல் — சேராதவற்றைச் சேர்ப்பது]

(3) பலம் தாரண ஸாமர்த்யம்
[பலமாவது — எல்லா வஸ்துக்களையும் தாங்கும் ஸாமர்த்யம்]

(4) கர்த்ருத்வம் நாமயித்தஸ்ய ஸ்வாதந்தர்ய பரிப்ரும்ஹிதம்
ஐச்வர்யம் நாமதத்ப்ரோக்தம் குணதத்வார்த்த சிந்தகை:

[அந்த பரமாத்மாவுக்கு ஸ்வாதந்தர்யத்தோடு கூடின யாதொரு கர்த்தாவா யிருக்குந் தன்மை பிரஸித்தமா யிருக்கிறதோ அது,
குணங்களின் உண்மை யறிந்தவர்களாலே ஐசுவர்யம் என்ற பிரஸித்தமான குணமாகச் சொல்லப் பெற்றது.
ஐச்வர்யமாவது — எல்லாவற்றிற்கும் கர்த்தாவா யிருத்தலின் லக்ஷணமான ஸ்வாதந்தர்யம் அல்லது
எல்லா வஸ்துக்களையும் நியமிக்கும் ஸாமர்த்யம்.]

(5) தஸ்யோபாதாந பாவேபி விகாரவிரஹோஹிய:
வீர்யம் நாமகுணஸ்ஸோயம் அச்யுதத்வாபராஹ்வய
[ஸர்வேசுவரனுக்கு ஜகத்துக்கு பாதான காரணமாயிருக்கும் நிலைமையிலேயும் விகாரமின்மை யிருக்கின்றது.
இங்ஙனம் இருக்கின்ற அந்த அவிகாரத்வமானது வீர்யம் என்ற பிரஸித்தமான குணம் என்று சொல்லப்படும்.
அதுவே அச்யுதம் என்ற வேறு பெயராலும் அழைக்கப் பெறும்.
வீர்யமாவது — ஜகத்திற்கு பாதான காரணமாயிருந்தும் ஸ்வரூப விகாரமில்லா திருக்கும் அவிகாரதை — விகாரமில்லாதிருத்தல்.]

(6) தேஜஸ்ஸாவது — ஸஹாயத்தை யபேக்ஷியாதிருத்தல்

“செழுங்குணங்க ளிருமூன்று முடையார்” என்பது இவ்வாசிரியர் அருளிச் செய்த திருச்சின்னமாலை (5)ப்பாசுரவடி.
பகவச்சப்தத்தின் உண்மைப்பொருள் உணர்ந்த தென்சொற்கடந்து வட சொற்கலைக்கெல்லை தேர்ந்த
ஸ்ரீவல்லபர் (தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனார்) தாம் இயற்றிய தமிழ் வேதமாகிய
திருக்குறள் பாயிரம். முதல் அதிகாரம். கடவுள் வாழ்த்து முதற்குறளை.
அகர முதல வெழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே யுலகு.
என அமைத்துப் பாடியுள்ளார். பரிமேலழகரும் “இப்பாட்டான் முதற் கடவுளதுண்மை கூறப்பட்டது” என்று
நுண்ணிய உரை வகுத்துள்ளதும் நன்கு நோக்கற்பாலது.
யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலரவர்கள் பதிப்பில் இக்குறளின் கீழ்
ஐசுவரியம், வீர்யம், புகழ், திரு, ஞானம், வைராக்கியம் என்னுமாறுக்கும்
பகமென்னும் பெயருண்மையால் பகவனென்பதற்கு இவ்வாறு குணங்களையுமுடையோனென்பது பொருள்
எனக் குறிப்பு எழுதியுள்ளார்கள்.

ஆதிபகவன் என்னு மிருபெயரொட்டுப் பண்புத்தொகை வடநூன் முடிபு என உரையிட்டனர் பரிமேலழகியார்.
“அமலனாதிபிரான்” (திருப்பாணாழ்வார் அருளிச்செய்த பத்துப்பாட்டு) வியாக்கியானமான
“முநிவாஹந போகம்” ஸ்ரீநிகமாந்த மஹாதேசிகன் அருளிச் செய்த இருபத்தெட்டாவது ரஹஸ்யம்.
இதில் “(ஆதி) ‘ஏஷ கர்த்தாந க்ரியதே’ இத்யாதிகளிற்படியே ஸர்வஜகதேக காரணபூதன்
இத்தால் காரணமே சரண்யம் என்கிறபடியே முமுஷுவுக்கு சரணமாகப் பற்றப்படுபவன் என்று பலிதம்:
இக்காரணத்வமும் மோஷப்ரதத்வமும் சத்ரசாமரங்கள் போலே ஸர்வலோக சரண்யனுக்கு விசேஷசிஹ்நங்கள்” என்றுள்ளன காண்க.
முழுதுணர் நீர்மையினோராகிய ஸ்ரீவல்லபர் பகவச் சப்தத்தால் பெறக் கூடிய நாராயணன் எனுந் திருநாமத்தை
“வாலறிவன்” (2.ஸர்வஜ்ஞன்) “பொறிவாயில் ஐந்தவித்தான்”. (6.ஹ்ருஷீகேசன்) “தனக்குவமையில்லாதான்”
(7.அதுல:) “எண்குணத்தான்” (9) என்ற அகாரவாச்யனின் பெயர்களை எடுத்தோதி
“அடியளந்தான்” (பொருட்பால் 610) என்று உலகளந்த திரிவிக்ரமன் பெயரைக்காட்டி இறுதிப் பாலில்
“தாமரைக்கண்ணான்” (புணர்ச்சி மகிழதல் 1103) என்று செங்கண்மாலை ஸ்பஷ்டமாகப் பேசித்
தலைக் கட்டியுள்ளது நன்கு நோக்கி இன்புறற்குரியது.

“முதற்கடவுள்” யார் என்பது ஆழ்வார்களுள் ஆதியாகிய பொய்கையார்
“உலகளந்த மூர்த்தி யுருவே முதல்” (முதல் திருவந்தாதி. 14) என்றும்
“முதலாவார் மூவரே அம்மூவருள்ளும் முதலாவான் மூரிநீர்வண்ணன் – முதலாய நல்லான்” (முதல் திருவந்தாதி.15)
என்றும் கண்டோக்தமாகக் காட்டியிருப்பதால் தெற்றென அறியலாம்.
திருவள்ளுவருக்கு வழிபடு கடவுளும் குறளுக்கு ஏற்புடைக்கடவுளும் திருமால் என்பது பேரறிஞர் கண்ட பேருண்மை.
தேவீ — பிராட்டிமார்கள்.
இப்படி அதி மநோஹரமான அநந்த போக பர்யங்கத்திலே ரஜதகிரியின் மேலே மரதககிரி இருந்தாற்போலே
‘ஏழுலகும் தனிக்கோல் செல்ல’ வீற்றிருந்து ‘விண்ணோர்தலைவ’னாய் குமாரயுவாவாய்
‘சோதி வெள்ளத்தினுள்ளே எழுவதோருரு’ என்னும் படி ஆதித்ய சதஸஹஸ்ர ஸமுதாயம் போலே
அநவதிக தேஜஸ்ஸை யுடையனாய் ‘விச்வமாப்யாயந் காந்த்யா பூர்ணேந்து யுத துல்யயா’ என்னும் படி
அநவதிக லாவண்யத்தையுடையனாய் ஸர்வசேஷியான தன்னுடைய க்ருபையும் க்ஷமையும் வண்மையும்
வடிவு கொண்டாற்போலே இருக்கிற நாச்சிமார்களில் ஸ்வாபிமத, நித்ய, நிரவத்ய, அநுரூப ஸ்வரூபாதிகளை
உடையனாய் ஸ்வவைச்வரூப்யத்தாலே ஸதாநுபவம் பண்ணாநின்றாலும் இன்று அநுபவிக்கத் தொடங்கினாற்போலே
ஆச்சர்யரஸாவஹையாய், ‘சாந்தாநந்த’ இத்யாதிகளின்படியே ஸர்வப்ரகாரஸம்ச் லேஷத்தை உடையனாய்
‘திருமார்வத்து மாலை நங்கை’யாய் அமுதில் வரும் பெண்ணமு’தாய்
‘வேரிமாறாத பூமேலிருந்து வினைதீர்க்கு’ மவளாய் தன் கடாக்ஷலேசத்தாலே கமலாஸநாதி வைபவத்தையும் கொடுக்குமவளாய்
‘தேவதேவ திவ்யமஹிஷீ’ என்னும் படியான மேன்மையும்
‘கருணாஸ்ராநதமுகீ’ என்னும் படியான நீர்மையும் உடையளான பெரிய பிராட்டியார்
‘தாக்ஷிண்யஸீமா’ என்று தோற்றும்படி தக்ஷிணபார்ச்வத்திலே நீலமேகத்தை அணைந்த நிலை மின்போலே
ஸேவித்திருந்து தன்னுடைய சேஷித்வ போக்யத்வ கைங்கர்யப்ரதி ஸம்பந்தித்வங்களைப் பூரித்துக் கொண்டு
அகில பரிஜநங்களை அவஸரோசிதா சேஷவ்ருத்திகளிலும் ஆஜ்ஞாபிக்க ‘ஏவம் பூதபூமி நீளாநாயக’ என்கிறபடியே
பெரிய பிராட்டியாருடைய ரூபாந்தரம் என்னலாம் படி அநவரத பஹுமாந விஷயையாய்
‘பச்சைமாமலை போல் மேனி’க்கும் படிமாவான நிறத்தை உடையளான ‘பார் என்னும் மடந்தை’யும்
‘அல்லி மலர்மகள் போகமயக்குகள் அத்யல்பம் என்னும்படி நித்யப்ரபோதம் நின்றவிடம் தெரியாதே
நீளாதுங்க ஸ்தநகிரிதடீஸுப்தம் என்னப் பண்ணுமவளாய் நீலோத்பவச்யாமளையான ஸ்ரீநீளைப் பிராட்டியும்;
அடியார் இடத்திலே ஸேவித்திருக்கும்படி தாங்களும் இடத்திலே ஸேவித்திருக்க;
‘ஸேவ்ய: ஸ்ரீபூமி நீளாபி:’ உடனமர் காதல்மகளிர் திருமகள் மண்மகள் ஆயர்மடமகள் என்றிவர் மூவர்’ இத்யாதிகளில்
சொன்ன சேர்த்தியிலே அடிமை செய்யுமவர்களுக்கு ‘ரஸம்’ என்றும் ‘ஆநந்தம்’ என்றும் சொல்லும்படியான
நிரதிசய யோக்யதையுடையனான நிருபாதிகசேஷியை நிருபாதிகஜ்ஞாத விகாஸத்தாலே
‘அவாவறச் சூழ்ந்தாய்’ என்னும்படி அனுபவித்து (ஸ்ரீபரமபத ஸோபாநம். பராப்திபர்வம்)

தேமா மலர்க்கயஞ்சூழ் கோயின் மேவுந் திருவரங்கர்
தாமாத ரித்ததிருத் தேவிமாரிற் றரங்கவுடைப்
பூமாது நாளும் புரத்தே சுமந்து புரக்குமலர்
மாமாது செல்வங் கொடுத்தே யுயிர்களை வாழ்விக்குமே. (திருவரங்கத்துமாலை.80)

(தேனையுடைய பெரிய பூக்கள் நிறைந்த தடாகங்கள் சூழ்ந்த திருவரங்கம் பெரிய கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற
திருஅரங்கர் தாம் அன்புவைத்த திருமகள் நிலமகள் என்னும் உபயதேவியர்களுள் கடலை உடுக்கும் ஆடையாக
உடைய நிலமகள் எந்நாளும் உயிர்களைத் தனது உடம்பின் மேலே தாங்கிக் காப்பாற்றுவாள்.
தாமரையில் தோன்றிய திருமகள் அவ்வுயிர்ட்கட்குச் செல்வத்தைக் கொடுத்துக் காப்பாற்றுவாள்.
எம்பெருமானது வலப்பக்கத்திலே ஸ்ரீதேவியும் இடப்பக்கத்தில் பூதேவியும் எப்பொழுதும் விட்டுப் பிரியாமல் உடன் உறைவர்.)

பூஷணஹேத்யாதி –
ஸ்ரீவத்ஸ கௌஸ்துப கிரீட வநமால நூபுரஹாராதிகள், ஸ்ரீ சங்கு சக்ராதிகள்,
அநந்தகருட விஷ்வக்ஸாநாதிகள் திருவணுக்கன் முதலானவைகள்.
“அங்கே குமுதாதிகளான திவ்ய பார்ஷதேச்வரர்களும், சண்டாதிகளான திவ்ய த்வாரபாலர்களும்
ஸஸ்நேக பஹுமாந அவ லோக நம்பண்ண அநீகேச்வர நியுக்தரான ஆஸ்தான நிர்வாஹகர் அருளப்பாடிட
அடிக்கடியும் தொழுவ தெழுவதாய்க்கொண்டு திருமாமணிமண்டபத்தின் முகப்பிலே சென்றேறி அங்கே
சிறகுடைய மஹா மேருவைப் போலே சிறந்த திருமேனியுடையனாய் த்ரயீமயனாய்

‘திருமகள்சேர்மார்ப’னுக்குத் திருக்கண்ணாடி போலே அபிமுகனாய் நிற்கிற
‘காலார்ந்தகதிக்கருட’னைக்கண்டு கழல்பணிந்து ‘பிணங்கி அமரர் பிதற்றும் குணம்’ என்கிற படியே
ஓரொரு ஸ்வாமி குணத்தைப்பற்றி வாதி ப்ரதிவாதிகளைப் போலே வாசி வகுப்பதும்
அதி ஸ்நேஹத்தாலே அஸ்தானே பய சங்கை யுடையாரைப்போலே ஸம்ப்ரமம் பண்ணுவதுமாய்க் கொண்டு
ரஸிக்கிற நித்ய ஸுரிகள் நிரையாக இருக்கின்ற அழகோலக்கத்தின் நடுவே சென்று:
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ’ என்கிற ஆசை நிறைந்து
திவ்யபரிஜந பரிச்சத ஆயுத ஆபரணாழ்வார்கள் ஸ்வாஸாதாரண லக்ஷண விசிஷ்ட விக்ரஹங்களோடே
யதாஸ்தாநம் ஸேவித்து நிற்கிற நிலைகளைக்கண்டு ஸர்வவிதகைங்கர்ய மநோரதாதி ரூடனாய்க்கொண்டு கிட்டச்சென்று;

பர்யங்க பரிஸரத்திலே முன்பு தங்களைக்கொண்டு எம்பெருமான் நடத்தின க்ருஷிபலித்தது என்று
பூர்ண மநோரதரான பூர்வாசார்யர்களைக் கண்டு;
‘அறியாதன அறிவித்து’
‘என்னைத்தீமனம் கெடுத்து’
‘நும் கால்கள் என் தலைமேல் கெழுமீர்’ என்று க்ருதஜ்ஞதை தோற்றப்பணிந்து
உபயவிபூதியும் தனிக்கோல் செல்ல வானிளவரசு மன்னிவீற்றிருக்கிற
அமிதெளஜஸ் ஸான திவ்ய ஸிஹ்மாஸந ரூபதிவ்ய பர்யங்கத்தை அணுகி :
விபூதித்வயாநுபந்திகளான ஆதாரதத்வங்களும் பர்யங்க வித்தையில் ‘பூதபவிஷ்யத்தத்வங்கள்’ என்றாற்போலவும்
பகவச்சாஸ்திரங்களில் ‘தர்மா தர்மாதிகள்’ என்றாற்போலவும் பரக்கவும் சுருங்கவும் பலவகையாகச் சொல்லுகிற
பாதம் முதலான அவயவங்களுமெல்லாம் அவ்வவ்வபிமாநிதேவதா விசேஷங்களாய் இருக்கும்படியைத் தெளியக்காணும்.

‘சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம்’ ‘நிவாஸஸய்யாஸந’ என்கிறபடியே
அவஸரோசித ரூபங்களைக் கொண்டு அசேஷ சேஷ வ்ருத்திகளைப் பண்ணுகையாலே சேஷன் என்றும்,
த்ரிவித பரிச்சேத ரஹிதனையும் தன் மடியில் ஏகதேசத்தில் வைக்கும்படியான வைபவத்தையுடையானாகையாலே
‘அநந்தன்’ என்றும் திரு நாமத்தையுடையவனாய், ஸர்வகந்த வஸ்துவுக்கும் வாஸனையுண்டாம்படியான
திவ்ய பரிமளத்தையுடையவனாய், ‘வேரிமாறாத பூமேலிருப்பாளு’டனே புஷ்பஹாஸ ஸுகுமாரனானவன்
மூவுலகும் தொழ வீற்றிருக்கும்படி ஸுகுமாரதமனாய், அம்ருத ப்ரவாஹம் சுழியாறு பட்டாற்போலே அவதாதசீதலமான
போக வேஷ்ட நத்தையுடையனாய் சேதசத்ர பரம்பரை போலவும் பூர்ணேந்து மண்டல ஸஹஸ்ரங்களை நிரைத்தாற் போலவும்
பரந்து உயர்ந்த பணாஸஹஸ்ரத்தின் மணிகிரண மண்டல பாலாதபத்தாலே ‘புண்டரீகம்’ என்னும் பேரையுடைத்தான
பரமபதமெல்லாம் உல்லஸிதமாம்பாடி பண்ணக்கடவனான திருவநந்தாழ்வானைக் கண்டு;
அவனோடொக்க ஒருமிடறாய் அநேக முகமாக போக ஸாம்யத்தை ஆசைப்பட்டு,
அவனுடைய அம்ருத வர்ஷிகளான இரண்டாயிரம் திருக்கண்களுக்கும் தான் ஏகலக்ஷ்யமாய்
அவன் மேலே அமர்ந்திருக்கிற ‘மேலாத்தேவர்கள் மேவித்தொழும் மாலாரை’க் கண்டு,
தானும் அநந்த த்ருஷ்டியாய் அத்யந்த ஸாமீப்யம் பெறும் (ஸ்ரீபரமபத ஸோபாநம். திவ்யதேசப்ராப்திபர்வம்.)

ஸ்ரீய: பதியான ஸர்வேச்வரனுக்கு ஸ்ரீகௌஸ்துப ஸ்தாநீயனாய்க் கொண்டு ஹ்ருதயங்கமனாய்,
குமாரன் என்றும், புத்ரன் என்றும், சிஷ்யன் என்றும், ப்ரேஷ்யன் என்றும், சேஷபூதன் என்றும்,
தாசபூதன் என்றும், அவ்வோசாஸ்த்ரங்களிலே ப்ரதி பந்நனா யிருக்கும் ஜீவாத்மா,
இவன் தனக்கு வகுத்த சேஷியாய், அயர்வறுமமரர்களதி பதியாய் உயர்வற வுயர்நலமுடையனாய்,
நமக்கும் பூவின்மிசை நங்கைக்கு மின்பினாய், ஞாலத்தார் தமக்கும் வானத்தவர்க்கும் பெருமானான ஸர்வேச்வரன்
‘வைகுண்டேது பரேலோகேச்ரியா ஸார்த்தம் ஜகத்பதி: ஆஸ்த்தே’ என்றும்
‘ஒண்டொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்ப’ என்றும் சொல்லுகிறபடியே
பெரிய பிராட்டியாரோடே கூடத்தெளிவிசும்பிலே
‘யாயோத்யேத்ய பராஜிதேதி விதிதா நாகம்பரேண ஸ்திதா’ என்கிறபடியே
அயோத்யாதி சப்தவாச்யமான கலங்காப் பெருநகரிலே ஸஹஸ்ரஸ் தூணாதி வாக்யங்களாலே யோதப்படுகிற
திருமாமணி மண்டபத்திலே கௌஷீதகீப்ராஹ்ம ணாதிகளிலே யோதப்படுகிற பரியங்க விசேஷத்திலே
‘சென்றாற் குடையா மிருந்தாற் சிங்காதனமாம்’ என்றும்
‘நிவாஸசய்யாஸந’ என்றும் சொல்லுகிறபடியே
ஸர்வதேச ஸர்வகால ஸர்வாவஸ்தோசித ஸர்வவித கைங்கர்யங்களையும், ஸர்வவித சரீரங்களாலே அநுபவித்து,
சேஷத்வமே தனக்கு நிரூபகமாகையாலே சேஷன் என்றே திருநாமமாம்படியான திருவனந்தாழ்வானாகிற
திருப்பள்ளி மெத்தையிலே வானிளவர சாய்க்கொண்டுதான் வாழ்கிற வாழ்வை. (ஸ்ரீமத்ரஹஸ்யத்ரயஸாரம். உபோத்காதாதிகாரம்)

இவற்றில் த்ரிகுணத்ரவ்யத்துக்கு ஸ்வரூபபேதம் குணத்யாச்ரயத்வம் ஸததபரிணாமசீலமான இத் திரவ்யத்துக்கு
ஸத்வ ரஜஸ் தமஸ்ஸுக்கள் அந்யோந்யம் ஸமமானபோது மஹாப்ரளயம். விஷமமானபோது ஷ்ருஷ்டி ஸ்திதிகள்
குண வைஷம்யம் உள்ள ப்ரதேசத்திலே மஹதாதி விகாரங்கள்.
இதில் விக்ருத மல்லாத ப்ரதேசத்தையும் விக்ருதமான ப்ரதேசத்தையுங்கூட ப்ரக்ருதி மஹதஹங்கார தந்மாத்ர பூதேந்த்ரியங்கள்
என்று இருபத்தினாலு தத்துவங்களாக சாஸ்த்ரங்கள் வகுத்துச் சொல்லும்.
சில விவக்ஷா விசேஷங்களாலே யோரொருவிடங்களிலே தத்வங்களை யேறவுஞ்சுருங்கவுஞ் சொல்லா நிற்கும்.
இத்தத்வங்களிலவாந்தர வகுப்புக்களுமவற்றி லபிமாநி தேவதைகளுமவ்வோ வுபாஸநாதிகாரிகளுக்கு அறிய வேணும்.
ஆத்மாவுக்கு அவற்றிற் காட்டில் வ்யாவ் ருத்தியறிகை இங்கு நமக்கு ப்ரதாநம்.

இவையெல்லாம் ஸர்வேச்வரனுக்கு அஸ்த்ரபூஷணாதி ரூபங்களாய் நிற்கும் நிலையை
புருடன்மணி வரமாகப் பொன்றா மூலப்
பிரகிருதி மறுவாக மான்றண்டாகத்
தெருள்மருள்வா ளுறையாக வாங்கா ரங்கள்
சார்ங்கஞ்சங் காகமனந் திகிரி யாக
விருடிகங்க ளீரைந்துஞ் சரங்க ளாக
விருபூத மாலைவன மாலை யாகக்
கருடனுரு வாமறையின் பொருளாங் கண்ணன்
கரிகரிமே னின்றனைத்துங் காக்கின் றானே.
என்கிற கட்டளையிலே யறிகை உசிதம் (ஸ்ரீ மத்ரஹஸ்யத்ரய ஸாரம் தத்வத்ரயசிந்தநாதிகாரம்)

நாராயண னென்றது நாரங்களுக்கு அயநம் என்றபடி.
(95) நாரங்களாவன நித்ய வஸ்துக்களினுடைய திரள்
(96) அவையாவன:- ஜ்ஞாநா நந்தாமலத்வாதிகளும் ஜ்ஞாநசக்த் யாதிகளும் வாத்ஸல்ய ஸௌசீல்யாதிகளும்
திருமேனியும் காந்தி ஸௌகுமார்யாதிகளும் திவ்யபூஷணங்களும் திவ்யாயுதங்களும் பெரியபிராட்டியார் தொடக்கமான
நாச்சிமார்களும் நித்யஸுரிகளும் சத்ரசாமராதிகளும் திருவாசல் காக்கும் முதலிகளும் கணாதிபரும்
முக்தரும் பரமாகாசமும் ப்ரக்ருதியும் பத்தாத்மாக்களும் காலமும் மஹதாதி விகாரங்களும் அண்டங்களும்
அண்டத்துக்கு உட்பட்ட தேவாதிபதார்த்தங்களும்
(97) அயநம் என்றது – இவற்றுக்கு ஆச்ரயம் என்றபடி.
(98) அங்ஙனன்றிக்கே இவை தன்னை ஆச்ரயமாகவுடையவன் என்னவுமாம். (99) (பிள்ளை லோகாசார்யர் அருளிச் செய்த முமுஷப்படி)

நித்யம் நிரபராதேஷு கைங்கர்யேஷு எக்காலத்தும் எவ்விதக்குற்றமும் இல்லாத கைங்கர்யங்களை
ஒழிவில் காலமெல்லாம் உடனாய்மன்னி வழுவிலாவடிமை செய்ய வேண்டும் நாம் (திருவாய்மொழி 3-3-1)
(ஈடு முதற்பாட்டில் திருவேங்கடமுடையான் திருவடிகளிலே ஸர்வதேச ஸர்வகால ஸர்வாவஸ்தைகளிலும்
எல்லாவடிமைகளும் செய்ய வேணும்) என்கிறார்.
(ஒழிவில் காலமெல்லாம்) முடிவில்லாத காலமெல்லாம் அநந்தமான காலமெல்லாம் என்றபடி
‘ஒழிவில் காலமெல்லா’மென்று கீழே கழிந்த காலத்தையுங் கூட்டி அடிமை செய்யப்பாரிக்கிறார் என்று
இங்ஙனே அதிப்ரஸங்கம் சொல்லுவாருமுண்டு. அதாகிறது கீழ்கழிந்த காலத்தை மீட்கை என்று ஒரு பொருளில்லையிறே.
‘நோபஜநம் ஸ்மரந்’ என்கிறபடியே கீழ்கழிந்த காலத்தில் இழவு நெஞ்சிற் படாதபடி மறப்பிக்கையேயிறே உள்ளது
‘நமேது: கம்’ இத்யாதி ஆகையாலே இனிமேலுள்ள காலமெல்லாம் என்றபடி
(உடனாய்) காலமெல்லாம் வேண்டினவோபாதி தேசாநு பந்தமும் அபேக்ஷிதமாயிருக்கிறது காணும் இவர்க்கு.
இளைய பெருமாள் படை வீட்டிலும் அடிமை செய்து வநவாஸத்திலும் அடிமை செய்தாற்போலே
(மன்னி) ஸர்வேச்வரனும் பிராட்டியுமாய்த் திரையை வளைத்துக் கொண்டிருந்தாலும், படிக்கம் குத்துவிளக்குப்போலே
அவ்வளவிலும் நின்று அந்தரங்கமான வ்ருத்திகளைப் பண்ண வேணும். இத்தால், ஸர்வாவஸ்த்தைகளையும் நினைக்கிறது.
‘ரமமாணாவநேத்ரய’ என்னக் கடவதிறே. இருவருக்கு உண்டான அநுபவத்திலே மூவரைச் சொல்லுகிறதிறே,
அவ்விருவருக்கும் பரஸ்பர ஸம்ச்லேஷத்தால் பிறக்கும் ரஸம் அச்சேர்த்தியைக் கண்டவனுக்கும் பிறக்கையாலே.
(ஒழிவில் காலம் இத்யாதி) ஸர்வ காலத்தையும் ஸர்வ தேசத்தையும் ஸர்வாவஸ்த்தையையும் நினைக்கிறது.
ஆழ்வார் திருவரங்கப் பெருமாளரையர் இத்திருவாய் மொழிபாடப் புக்கால்
‘ஒழிவில்காலமெல்லாம் காலமெல்லாம் காலமெல்லாம்’ என்று இங்ஙனே நெடும்போதெல்லாம் பாடி,
மேல் போகமாட்டாதே அவ்வளவிலே தலைக்கட்டிப் போவராம்.
(வழுவிலா அடிமை செய்ய வேண்டும்)
அடிமையிலொன்றும் ஒருவர்க்கும் கூறு கொடுக்க வொண்ணாதாயிற்று. எல்லா வடிமையும் நான் செய்ய வேணும்:
இளைய பெருமாள் பிரியாதே காட்டிலேயுங்கூடப் போந்து செய்த அடிமைகளும் செய்ய வேணும் :
ஸ்ரீ பரதாழ்வான் படைவீட்டிலே பிரிந்திருந்து செய்த அடிமைகளும் செய்ய வேணும்.
ஸ்ரீ பரதாழ்வானைக் கைகேயி ‘ராஜந்’ என்ன அப்போது அந்த ஸ்வாதந்தர்யம் பொறுக்கமாட்டாமே
படுகுலைப் பட்டாற்போலே ‘விலலாப’ என்று கூப்பிட்டானிறே;
பாரதந்த்ர்யரஸம் அறிவார்க்கு ஸ்வாதந்த்ர்யம் ‘அநர்த்தம்’ என்று தோற்றுமிறே.
‘ஏபிச்சஸசி வைஸ்ஸார்த்தம்’ தன்னிற்காட்டிலும் கண்குழிவுடையார் இத்தனை பேருண்டாயிற்று.
தன்னோடொத்த ஆற்றாமையுடையார் அநேகரைக் கூட்டிக்கொண்டு போந்தான்.
எனக்கன்றோ, இவன் தம்பி என்று ஸ்வாதந்த்ர்யம் பண்ணி அவர்க்குக் கண்ணழிக்கலாவது:
இவர்களுக்குச் சொல்லிற்றுச் செய்ய வேணுமே: இவர்கள் தாங்களே கார்யத்தை விசாரித்து அறுதியிட்டு
நீர் இப்படி செய்யும் என்று அவர்கள் ஏவினால் அப்படி செய்ய வேண்டிவருமிறே அவர்க்கு.
அவருடைய வ்யதிரேகத்தில் தனக்கு உண்டான ஆற்றாமையை அறிவிக்கப் போகிறானாகில் தனியே போய் அறிவிக்கவுமாமிறே;
இவர்களையெல்லாம் திரட்டிக்கொண்டு போனதுக்குக் கருத்தென்? என்னில் நம் ஒருவர் முகத்துக்கண்ணீர் கண்டால்
பொறுக்கமாட்டாதவர் தம்மைப்பிரிந்த பிரிவு பொறுக்கமாட்டாதே கண்ணும் கண்ணீருமாயிருப்பார் இத்தனை பேரைக்கண்டால் மீளாரோ?
என்னுங்கருத்தாலே பூசலுக்குப் போவாரைப்போலே யானை குதிரை யகப்படக்கொண்டு போகிறானிறே:
அவற்றுக்கும் அவ்வாற்றாமை யுண்டாகையாலே ‘சிரஸாயாசித:’ என்பேற்றுக்குத் தாம் அபேக்ஷித்துத்தருமவர்
நான் என் தலையாலே யிரந்தால் மறுப்பரோ? ‘மயா’ – அத்தலை யித்தலையானால் செய்யா தொழிவரோ?
‘ப்ராது:’ ‘பஸ்மஸாத் குருதாம்சிகீ’ என்னும் படி தம் பின் பிறந்தவனல்லனோ நான்?
என் தம்பிமார்க்கு உதவாத என்னுடைமையை அக்நிக்கு விருந்திட்டேனென்றாரிறே.
‘யத்விநா’ இத்யாதி ‘சிஷ்யஸ்ய’ ப்ராதாவாகக் கூறு கொண்டு முடி சூடியிருக்குமவனோ நான்?
அசேஷ ரஹஸ்யமும் நம்மோடேயன்றோ அதிகரித்தது. ‘தாஸஸ்ய’ சிஷ்யனாய்க்ரய விக்ரயார்ஹனன்றிக்கே யிருந்தேனோ?
ஆன பின்பு நான் அபேக்ஷித்தகாரியத்தை மறுப்பரோ? இதிறேகைங்கர்யத்தில் சாபல முடையார் இருக்கும்படி.
(வழுவிலா அடிமை) ஓரடிமை குறையிலும் உண்டது உருக்காட்டாதாயிற்று இவர்க்கு.
(செய்ய) முன்பும் உண்டிறே இக்கைங்கர்யமநோரதம் : இப்போது இவ்வளவால் போராது, அநுஷ்டாந பர்யந்தமாக வேணும்.
(அடிமை செய்ய வேண்டும்) கைங்கர்ய மநோரதமே பிடித்து உத்தேச்யமாயிருக்கிறதாயிற்று இவர்க்கு
‘க்ஷூத்ர விஷயாநுபவம் பண்ண வேணும்’ என்று புக்கால் இரண்டு தலைக்கு மொக்கரஸமான போகத்துக்கு
ஒரு தலையிலே த்ரவ்யத்தை நியமித்து, போககாலம் வருமளவும் லீலையாலே போது போக்கி,
போக காலம் வந்தவாறே புறப்படத் தள்ளி விடுவார்கள்.
இனி ‘ஸ்வர்க்காநுபவம் பண்ண வேணும்’ என்று புக்கால் ‘ஸ்வர்க்கே பிபாத பீதஸ்ய க்ஷயிஸ்ணோர் நாஸ்தி நிர்வ்ருதி’ என்கிறபடியே
அருகே சிலர் நரகாநுபவம் பண்ணக்காண்கையாலே இருந்து அனுபவிக்கிற இதுதானும்
உண்டது. உருக்காட்டாதபடியாயிருக்கும்: இனித்தான் அவ்விருப்புக்கு அடியான புண்யமானது
சாலிலெடுத்த நீர்போலே க்ஷயித்தவாறே ‘த்வம்ஸ’ என்று முகம் கீழ்ப்படத் தள்ளுவார்கள்.
இப்படி ஸ்வரூபத்துக்கு அநநுரூபமாய் அஹங்காரமமகாரங்களடியாக வரும் இவ்வநுபவங்கள் போலன்றிக்கே
ஸ்வரூபத்தோடே சேர்ந்ததுமாய், அடிமை கொள்ளுகிறவனும், நித்யனாய், அடிமை செய்கிறவனும், நித்யனாய்,
காலமும் நித்யமாய், தேசமும் நித்யமாய், ஒரு காலமும் மீள வேண்டாதபடி அபுநராவ்ருத்திலக்ஷண மோக்ஷமாய்
க்ஷூத்ரவிஷயாநுபவம் போலேது : கமிச்ரமாயிருக்கையன்றிக்கே நிரதிசய ஸுகமாயிருப்பதொன்றிறே இது
(நாம்) தம் திருவுள்ளத்தையுங் கூட்டி நாம் என்கிறாராதல் : அன்றிக்கே, கேசவன் தமர்க்குப் பின்பு இவர்
தாம் தனியரல்லாமையாலே, திருவுள்ளம் போலே யிருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களையும் கூட்டிக்கொண்டு நாம் என்கிறராதல்

(இப்பாட்டால் – ப்ராய்யப்ரதாநமான திருமந்த்ரத்திலர்த்தத்தை அருளிச் செய்கிறார்.
ஒழிவில் காலமெல்லா முடனாய் மன்னி வழுவிலாவடிமை செய்ய வேண்டுமென்கிற இத்தால் –
சதுர்த்தியில் ப்ரார்த்தநையைச் சொல்லுகிறது; நாம் என்கிற இடம்– ப்ரணவ ப்ரதிபாத்யனான இவனுடைய
ஸ்வரூபத்தைச் சொல்லுகிறது சப்த ஸ்வபாவத்தைக் கொண்டு சொன்னோம்’ என்று அருளிச் செய்தருளின வார்த்தை;
‘தெழிகுரல்’ இத்யாதியால் – நாராயண சப்தார்த்தத்தை அருளிச் செய்கிறார்.
ப்ராப்த விஷயத்தில் பண்ணும் கைங்கர்யமிறே ப்ராப்யமாவது;
இனி ஸௌலப்யமும் வடிவழகும் ஸ்வாமித்வமும் எல்லாம் நாராயண சப்தத்துக்கு அர்த்தமிறே.
(“இவனுக்கு பகவான் போக்யமாகலாம். மற்றுமுள்ளவர்களுடைய கைங்கர்யம் போக்கியமாமோவென்ன
கர்மபலமன்றிக்கே வருகையால் எல்லாம் போக்கியமாகக் குறையில்லை. பூஷணாதிகள் அசேதனங்களாகிலும்
அதின் அதிஷ்டாந தேவதைகளைச் சொல்லும் நிரபராத என்றதால் அபராதங்கலசில் ரஸ்யமாகா தென்கை.
நித்யம் என்றத்தால் ஒழிவில் காலத்திற்படியே ப்ரார்த்திக்கப்படுகிறது.)

————

மாம் மதீயம் ச நிகிலம் சேதநா சேதநாத்மகம்,
ஸ்வ கைங்கர்யோ பகரணம் வரத ஸ்வீகுரு ஸ்வயம்–7-

(வரத- வேண்டுவதெல்லாம் தருபவனே! வேண்டுவார்களுக்கு வேண்டும் வரங்களை அளிப்பதால்
வரதன் என்னும் திருநாமம் உடைய ஸ்வாமியே!
மாம் – அடியேனையும் மதீயம் – என்னுடையது என்று பேர்பெற்ற,
என்னுடையவை யென்னும் படியான தேசந ஆசெதந ஆத்மிகம் – உயிருள்ளதும் உயிரில்லாதனவுமான,
அறிவுள்ளதும் அறிவில்லாததுமான நிகிலம்ச எல்லாவற்றையும்
ஸ்வ கைங்கர்ய உபகரணம் – தன்னுடைய கைங்கரியத்துக்கு உரிய ஸாமக்ரியாக, தேவரீருடைய பணிவிடை
தொண்டு ஊழியங்களுக்குக் கருவியாக
ஸ்வயம்-தானாகவே
ஸ்வீகுரு-அங்கீகரித்தருளுக, ஸ்வீகரித்தருள வேண்டும்.

அடியேனையும் அடியேனைச் சேர்ந்த ஸகல வஸ்துக்களையும் தேவரீரடைய கைங்கர்யத்துக்கு
உபயோகமாகும்படி செய்தருள வேண்டும் என்று பிரார்த்திக்கிறார் இதில்
ஹே! வரத! என்னையும் என்னைச் சேர்ந்த சேதநாசேதனங்களாகிய அனைத்தையும் தனது
கைங்கர்யத்துக்கு உபகரணமாகத் தானே எடுத்துக்கொள்ளும்.
இச்சுலோகத்தில் இவர் பிரார்த்தித்தபடியே பகவான் இவரை அடிமை கொள்ளுகிறோம் என்ன
அதற்கு அமையாது ததிபாண்டாதிகளுக்குப் போல அநுபந்திகளையும் அடிமை கொள்ள வேண்டும் என்கிறார்.
அடியேனையும் அடியேனுடைய பசுபுத்திராதிகளையும் தேவரீருடைய ஊழியத்துக்குத் தக்கபடி உபயோகித்துக் கொள்க.

ஏ வரதனே! தேவரீரிடத்தில் சரணாகதி பண்ணின அடியேனையும் அடியேனுக்குச் சேஷம்
என்னும்படி யிருந்துள்ள சேதநர்களையும் அசேதநங்களையும் தேவரீருடைய
கைங்கரியத்துக்கு உபயோகமாகும்படி செய்தருள வேண்டும்.
சேதந அசேதந ஆத்மகம் – தத்துவங்கள் மூன்று. அவையாவன: சேதநம், அசேதநம், ஈசுவரன் என்பவை.
அறிவுள்ள ஜீவாத்மா சேதநன் எனப்படுவான். இவனுக்கு ஜ்ஞாநம் ஒரு குணமாய் நிற்கும்.
இந்த ஜ்ஞாநம் தர்ம பூத ஜ்ஞாநம் எனப்பெறும். ஜீவனுடைய ஸ்வரூபமும் ஜ்ஞாந மயமாகவே நிற்கும்.
ஆதலின் ஜீவன் தர்மபூதஜ் ஞாநம் என்னப் பெறுவான். இந்த ஜீவாத்மா தனக்கு எப்பொழுதும்
தோன்றிக் கொண்டேயிருப்பான். தன்னை நான் என்று அறியும் போது தர்ம பூதஜ் ஞாநம் உதவ வேண்டும் என்பதில்லை.
ஆனால் ஜீவன் தன்னைத் தவிர வேறு எந்தப் பொருளையும் தன் தர்மபூதஜ் ஞாநத்தால் மட்டுமே அறிய முடியும்.
தன் ஸ்வரூபத்தைத் தர்ம பூத ஜ்ஞாநத்தைக் கொண்டும் அறியலாம். ஜீவன் அணுவாகவும் ஆநந்த ஸ்வரூபமாகவும் நிற்பவன்;
சரீரத்திற் காட்டிலும் வேறுபட்டவன். அழிவற்றவன்; எம்பெருமானுக்கு அடியனாகவே நிற்பவன்;
இத்தகைய ஜீவாத்மாக்கள் எண்ணற்றவர்; அவர்கள் பத்தர், முக்தர், நித்யர் என மூவகைப்படும்.
அறிவில்லாத வஸ்து அசேதநம் என்னப்படும். அசேதநத்தால் கிடைக்கக்கூடிய பலனை அநுபவிப்பவன் சேதநனே.
இந்த அசேதநம் த்ரிகுணம், காலம், சுத்த ஸத்துவம் என மூன்று வகைப்படும். த்ரிகுணம் என்பதுவே மூல ப்ரக்ருதி.
இது சத்துவம் ரஜஸ் தமஸ் என்னும் மூன்று குணங்களை உடையதாதலின் த்ரிகுணம் எனப்பெறும்.
காலம் என்பது எங்கும் பரந்து நிற்கும் ஒரே த்ரவ்யம்.
இதில் ஸத்துவம் முதலிய குணங்களில் சுத்த ஸத்துவம் என்பது ரஜோ குணம் தமோகுணம் ஆகிய இரண்டும்
இன்றி ஸத்துவ குணத்திற்கு மாத்திரம் ஆதாரமான ஒரு த்ரவ்யம்.

முத்திக் கருள்சூட மூன்றைத் தெளிமுன்ன மித்திக்கா லேற்கு மிதம் (தேசிகமாலை அமிருத ரஞ்சனி 3)
(மோக்ஷத்திற்குக் காரணமான பகவானுடைய க்ருபையைப் பெறுவதற்கு சேதநம் அசேதநம் ஈசுவரன் என்னும்
மூன்று தத்துவங்களை முதலில் தெரிந்து கொள். இந்த வழியால் உபாயம் பொருந்தும்)

ஸ்வ கைங்கர்ய – இங்குள்ள ஸ்வ என்ற பதம் தன்னையும், தன்னைச் சேர்ந்தவர்களையும் சொல்லும்.
அடியேனையும், அடியேனைச் சேர்ந்தவர்களையும் உனக்கும், உன்னடியார்களுக்கும்
கைங்கர்யத்துக்கு உரிய ஸாமக்ரிகளாக அங்கீகரித்தருள வேண்டும்.
இப்படி அருளிச் செய்தவாறே முன்பு “கூழாள் பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோம்” என்று
நின்ற மஹாராஜர் தெளிந்து, தாம் பண்ணின அபராதத்திற்கு பெருமாளை க்ஷமை கொண்டு,
தாமே புருஷகாரமாய் ‘வந்து மண்ணும் மணமும் கொண்மின்’, ‘எமதிடம் புகுதுக’ இத்யாதிகளில் ப்ரக்ரியையாலே
‘நாங்களும் ஸ்ரீ விபீஷணாழ்வானும் ஒரு வாசியற அடிமை செய்யப்பெற வேண்டும்;.
நாங்களும் இவனுக்கு ‘ஸகா தாஸோஸ்மி’ என்னும்படி அடியோமாக வேண்டும்’ என்று விண்ணப்பம் செய்ய
இப்படி ப்ரதி பந்தகம் கழிந்து அநந்தரம் பெருமாளுக்கு சரணாகத லாபமாகிற புருஷார்த்தம் பிறந்த படியையும்
‘தத்தமஸ்யா பயம் மயா’ என்கையாலே அபயம் பெற்ற சரணாகதனுக்கும்,
இப்படி விசேஷித்துப்பெருமாள் பாசுரமின்றிக்கே தங்களுக்கு வேறொரு உபாயமின்றிக்கே
சரணாகதனுடைய அபிமாநத்திலே அடங்கிக்கூட வந்த ராக்ஷஸர்களுக்கும்
பெருமாள் திருவடிகளைப் பெறுமையாகிற பரம புருஷார்த்தம் பிறந்தபடியையும் பர்யங்க வித்யாதிகளில் படியே
பரஸ்பர ஸம்ச்லேஷத்தாலே பிறந்த ப்ரீதிபரீவாஹமான ஸம்வாத விசேஷங்களையும் எல்லாம்
இந்த ஸர்க்கத்தின் சேஷத்தாலும் மேலில் ஸர்க்கத்தின் முகப்பாலுமாகச் சொல்லி
சரணாகதி வேதமான ப்ரபந்தத்திலே உபநிஷத் பாகமான அபய ப்ரதாந ப்ரகரணத்தைத் தலைக்கட்டுகிறான்
ஸ்ரீ வால்மீகி பகவான்’ (அபய ப்ரதாந ஸாரம். 9. சரண்ய சரணாகத சங்கலாப:)

‘தனக்கு சேஷபூதருமாய் பரதந்த்ரருமாய் இருக்கையாலே தன் கைகளும் கால்களும் போலே
தன்னிலே சொருகி தனித்து ஓர் உபாய பலங்கள் இல்லாதநாலு ராக்ஷஸரோடே கூட உத்தேச்யமான
திருவடிகளைளவும் செல்லவொண்ணாதபடி ஹர்ஸ பாரவச்யம்தள்ள,
திருவடிகளோடே பிற வித்துவக் குடைத்தான பூமியிலே விழுந்தான்
இப்படி ஒருவன் சரணாகதனாய் திருவடிகளைப் பெறும் போது, அவனைப் பற்றினார்க்கும்
அவனுடைய ஆத்மாத்மீய பரஸமர்ப்பணத்திலே துவக்குண்டானபடியாலே, தனித்து பரீக்ஷிப்பாருமின்றிக்கே,
ராஜ ஸேவகருடைய ஸ்தநந்தயருக்குப் போலே புருஷார்த்தலாபம் துல்யமாம் என்று
‘பசுர்மநுஷ்ய: பக்ஷீ வா யே ச வைஷ்ணவ ஸம்ஸ்ரீயா: தேநைவ தே ப்ரயாஸ்யந்தி தத்விஷ்ணோ: பரமம் பதம்
இத்யாதிகளில் சொல்லுகிற சாஸ்த்ரார்த்தத்தை வெளியிடுகிறான்
(சதுர்பி : ஸஹராக்ஷஸை:”) (அபய ப்ரதாந ஸாரம். 10.ப்ராப்திப் ரகார:) ப்ரபஞ்சது என்பன இவண் அநுஸந்தேயங்கள்.)

————

த்வதேக ரக்ஷ்யஸ்ய மம த்வமேவ கருணாகர,
ந ப்ரவர்த்தய பாபாநி ப்ரவ்ருத்தாநி நிவ்ருத்தய: (8)

(ஹே கருணாகர!
அருள்மாகடலே! கருணைக்கடலே! த்வத் ஏக ரக்ஷ்யஸ்ய தேவரீர் ஒருவராலேயே காக்கப்பட வேண்டிய :
மம அடியேனுக்கு: த்வம் ஏவ தேவரீரே: பாபாநி பாபங்களை :
ந ப்ரவர்த்தய நேராமலிருக்கும்படி செய்தருள வேண்டும்:
ப்ரவ்ருத்தாநி நேர்ந்தவைகளை : நிவர்த்தய நீக்கி விட வேண்டும்.
பேரருளாளனே! தேவரீராலேயே ரக்ஷிக்கப்பட வேண்டிய அடியேனுக்கு தேவரீரே பாபங்களைச் சேரவிடக்கூடாது:
முன்பே சேர்ந்திருப்பவைகளை விலக்கி விட வேண்டும்.
கருணை வள்ளலாகிய வரதனே! தேவரீரை அன்றி வேறு ரக்ஷகன் இல்லாத அடியேனுக்குச் சரணாகதி
செய்வதற்கு முன்பு செய்த பாபங்களை ஒழித்து விடும்படியும் சரணாகதிக்குப் பிறகு
பாபங்களைச் செய்யாமலிருக்கும்படிக்கும் செய்தருள வேண்டும்.
த்வம் ஏவ
தேவரீரே அடியேன் தலையில் வேறொரு சுமையைச் சுமத்தாமலும் தேவரீருக்கு அதீநமல்லாத வேறொரு
ஸஹகாரியைத் தேடாமலும் செய்தருள வேண்டும்.
“இப்படி ஸபரிகரமான பக்தி யோகத்தில் அதிகரிக்கைக் கீடான விளம்பக்ஷமத்வ ஜ்ஞாந சக்த்யாதிகளின்றிக்கே
‘நின்னருளே புரிந்திருந்தேன்’,.
‘துணியேன் இனி நின்னருளல்லது எனக்கு’,
‘உன் திருவருளன்றிக் காப்பரிதால்’ என்றிருக்கும் அதிகாரிக்கு அநுஷ்டேயமான
சரண வரணம் ஆநுகூல்ய ஸங்கல் பாதிபரிகரயுக்தமாய் ‘அநந்ய ஸாத்யே ஸ்வாபீஷ்டே’ இத்யாதிகள் படியே
ப்ரார்த்த நாந்வித ஸக்ருத் பரந்யாஸ ரூபமாய் இருக்கும்.

அத்யந்தாகிஞ்சநனுடைய பரந்யாஸத்திற்கு அவ்விஷயத்தில் கர்த்தவ்ய சேஷம் இல்லை.
ஸர்வ சக்தியினுடைய ஸங்கல்பத்திற்கு அவாந்தர வ்யாபரராபேக்ஷா நியமம் இல்லை:
இரண்டும் இப்படி ஸக்ருத்தாயிருக்கும்.
ஆசார்யனாலே தன்னை ந்யஸ்த பரனாக அறிந்த சிஷ்யன் தான் பரந்யாஸம் பண்ணான்.
இவனுக்குப் பலத்தில் சங்காதிகள் வந்தாலும் ஆசார்யனுடைய பரந்யாஸம் பலாவிநா பூதம்.
அவன் தனக்காகப் பண்ணின பரந்யாஸம் தனக்குப் ப்ரமிதம் அல்லாத போது பரந்யாஸம் பண்ணினால்
பூர்வ பரந்யாஸம் பலித்தே விடும். பின்பிலது மிகுதியான ஸுக்ருதத்தின்படியாம்.

உயர்ந்த திடர்க்கு அடைத்து ஏற்றலாம்படி,தாழ்ச்சியுடைய விஷயத்தில்தானே ப்ரவஹிக்கும்படியான
க்ருபா குணத்தாலே ஸ்வதந்த்ர சேஷிதன் கூறாகவும் பேறாகவும் மேலுள்ள நன்மைகளை எல்லாம் விளைக்கும்.
இந்த ப்ரபத்தி ‘தாவதார்த்தி’ இத்யாதிகள் படியே அங்கமாயும் ஸ்வதந்த்ரமாயும் நின்று
ஸகல பல ஸாதந மாகையாலும், அபேக்ஷித ஸித்திக்குக் கைமுதல் அற்று
சரண்ய ஸ்வபாவாதி பரிஜ்ஞாநம் உடையார் எல்லார்க்கும் அதிகரிக்கலாம்.
ஆகையாலும், தன்பலம் போலே தேசகாலாதி நியமமில்லாமையாலும், ஸபரிகரமாக ஸக்ருத் கர்த்தவ்யம் ஆகையாலும்,
ஸுகரமாகையாலும், ‘உபாயஸ்ஸுக்ரச்சாயம் துஷ்கரச்ச மதோ மம’ என்னும்படியான வ்யவஸாய கௌரவத்தை உடைத்தாகையாலும்,
ப்ரஹ்மாஸ்த்ர துல்யை யாகையாலும், யஜ்ஞாதி ஸுக்ருதங்களைப் போலே நச ப்ரதிபந்தார் ஹ மல்லாமையாலும்,
சரண்யோபநிஷத்துக்களுக்கெல்லாம் சிரோ பூஷணம் என்னும்படி மேலாய் நிற்கையாலும்,
இதன் ப்ரபாவம் ‘ஸத்கர்மநிரதா’ இத்யாதிகளாலே பரக்கப் பேசப்பட்டது.

மற்றுள்ள சாஸ்தரார்த்தங்கள் போலே அதிகாரிக்ருத்யமான ப்ரபதநத்தில் சிலருடைய அதிகாரி விசேஷணத்வாதி
வ்யபிதேசம் ஸித்தோபாய ப்ராதாந்ய பரம். ஸுதியில் ந்யாஸ ப்ரஹ்ம சப்த ஸாமாநா தி கரண்யம் அந்யபரம்.
‘பகவதந் யார்ஹ சேஷ பூதனுக்கு பகவதபி மதமில்லாத விஷயத்தில் பக்தியும் ப்ரபத்தியும்
கைங்கர்யமும் ஸ்வரூப விருத்தம்’ என்னலாயிருக்க பத்தி யோகத்தை விசேஷித்து
ஸ்வரூப விருத்தம் என்றவர்களுக்கு அதிகாரி விசேஷ ஸ்வரூப விரோதத்திலே தாத்பர்யம்.
தேசகால, அதிகார்யாதி பேதத்தாலே குருலகுவிகல்பம் ப்ராயச்சித்தாதிகள் எல்லாவற்றிலும் ப்ரஸித்தம்.

இப்படி யதாதிகாரம் ஸர்வ கர்ம ப்ராயச்சித்தமாக விதித்த பக்தி ப்ரபத்திகளில் ஒரு வழியிலே இழிந்தவனுக்கு
அப்போதே உத்தர பூர்வா காச்லேஷம் ப்ராமாதிக விஷயம்.
விவேகாதி பூர்த்தியுடையாருக்கு புத்தி பூர்வோத்தராகம் அநாபத்தில் புகாது.
மந்த விவேகருக்கு மின்னொளி போலே தோற்றிப் ப்ராயச்சித்தாந்தமாய் மறையும்.
ராகாதி காடிந்யம் உடையாருக்கு சிக்ஷா விசேஷங்களாலே பிரிதலுண்டாம்.
பூர்வாக விநாசம் ப்ராரப்த வ்யதிரிக்த விஷயம். ஸ்வதந்த்ர ப்ரபத்தி நிஷ்டனான செய்த வேள்வியனுக்குப்
ப்ராரப்த கார்யமான கர்ம வர்க்கத்தியிலும் ஆர்த்தியின் அளவுக்கீடாக தேஹாந்தராதி ஹேதுவான அம்சம் கழியும்.
‘யஸ்ய ப்ரஸாதே ஸகலா:’ ‘ப்ரஸந்நமபவத் தஸ்மை’ இத்யாதிகளின் படியே
இவனளவில் ஸத்வஸ்த்தரானவர்கள் எல்லாரும் ஸுப்ரஸந்நராவார்கள்.

‘பகவத் பரிக்ரு ஹீதனுக்கு யமவச்யத்வாதிகள் இல்லை’ என்னுமிடம்,
‘பரிஹர மதுஸுதந ப்ரபந்நாந்’,
‘தேவம் சார்ங்கதரம் விஷ்ணும்’,
‘நலியும் நரகமும் நைந்த நமனுக்கிங்கு யாதொன்றுமில்லை’.
‘நமன் கூறு செய்து கொண்டிறந்த குற்றமெண்ணவல்லனே’,
‘நாவலிட்டுழி தருகின்றோம் நமன் தமர் தலைகள் மீதே’,
‘நரகமே சுவர்க்கமாகும் நாமங்களுடைய நம்பி’ இத்யாதிகளாலே அறியலாம்.

ஆகையால் இப்படி நிஸ்ஸம்சயனான இவன்
‘ஆள்கின்றான். ஆழியான் ஆரால் குறைவுடையம்’,
‘எத்தினால் இடர்க்கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே’,
‘திருமால் தலைக்கொண்ட நங்கட் கெங்கே வரும் தீவினையே’ இத்யாதிகளின் படியே
நிரபேக்ஷனாய், நிர்பரனாய், நிர்பயனாம். மங்கும் அவஸ்தையில்லாத போது
மடலூரும் அவஸ்தையாய் மாக வைகுந்தம் காண்பதற்கு மனம் ஏகம் எண்ணியிருக்கும்.

முன்செய்த வினைத்திரளின் முளைத்த தன்றி
முற்றுள்ள முதலரிந்து முளைத்த கூற்றிற்
றன்செய்ய திருவருளா லிசைவு பார்த்துத்
தழல் சேர்ந்த துலமெனத் தானே தீர்த்துப்
பின் செய்த வினையினினை வொன்றா தொன்றும்
பிழை பொறுத்து வேறுளது விரகான் மாற்று
மென்செய்ய தாமரைகட் பெருமா னெண்ண
மெண்ணாதா ரெட்டிரண்டு மெண்ணா தாரே- (ஸ்ரீபரம பதஸோபாநம். 5. ப்ரஸாதநபர்வம்)

(முன்பு செய்த பாபக்கூட்டத்தில் பலன் கொடுக்கத் தொடங்கிய பாபம் தவிர கைம்முதலாக உள்ள பாபங்களை
முழுதும் போக்கி, பயன்கொடுக்கத் தொடங்கிய பாகத்தில் ப்ரபந்தனுடைய அங்கீகாரத்தை எதிர்பார்த்து
அவன் விரும்பிய காலத்தில் தன்னுடைய ருஜுவான கிருபையால் அக்நியில் சேர்ந்த பஞ்சு என்னும்படி
தானே போக்கி ப்ரபத்திக்குப் பிறகு செய்யும் பாபங்களில் அறிவு இல்லாமல்,
தெரியாமல் நேர்கின்ற பாபங்களைப் பொறுத்து, தெரிந்து செய்ய வேண்டியதாய்த் தீர்ந்த குற்றத்தை
பிராயச்சித்தம் முதலியவற்றில் மூட்டிப் போக்குபவனான சிவந்த தாமரை போன்ற கண்களையுடைய எனக்கு
நாதனான ஸர்வேசுவரனுடைய திருவுள்ளத்தின் போக்கை அறியாத மானிடர்
திருமந்திரம், துவயம், சரமசுலோகம் என்னும் இரகஸியத்திரயத்தை அறியாதவர்களே) என்பன இங்கு அநுஸந்திக்கத்தக்கன.

ப்ராரப்தேதர பூர்வபாபமகிலம்
ப்ராமாதிகம் சோத்தரம்
ந்யாஸேந க்ஷபயந்நநப்யுபகந
ப்ராரப்த கண்டஞ்சந:
தீபூர்வோத்தர பாப்மநா மஜநநா
ஜ்ஞாதேபிதந்நிஷ்க்ருதே:
கௌடில்யேஸதி சிக்ஷயாப்நகயத்
க்ரோடீகரோதி ப்ரபு : (ஸ்ரீமத் ரஹஸ்யத்ரயஸாரம். அபராத பரிஹாராதிகாரம்)

(சேதநனுடைய கர்மங்கள் ப்ராரப்தம், ஸஞ்சிதம் என இரு வகைப்படும்.
பலன் கொடுக்கத் தொடங்கிய கர்மம் ப்ராரப்தம் எனப்பெறும். பின் ஒரு காலத்தில் பலன் அளிப்பதற்காகத்
தனியாய்க் குவிந்து மூட்டையாய் இருப்பது ஸஞ்சிதம் எனப்படும்.
பக்தியோகம் ஸஞ்சித கர்மங்களை மாத்திரம் போக்கும். ப்ரபத்தி ஸஞ்சித கர்மங்களைப் போக்கி
ப்ராரப்தத்தில் நாம் இந்தச்சரீரம் உள்ளவரை பலனை அனுபவிக்க வேண்டிய கர்மங்களைத் தவிர
மீதியுள்ளவற்றையும் போக்கி விடுகின்றது.
ப்ரபத்திக்குப் பிறகு அறியாமல் செய்யும் பாபங்களை இவனிடம் சேராதபடி நீக்கி விடுகின்றது.
கால தேசங்களைக் கொண்டு மனப்பூர்வமாகச் செய்யும்படி நேர்ந்த பாபங்களையும்
ப்ராயச் சித்தாந்திகளைக் கொண்டு ஒழித்து விடுகின்றது. மனப்பூர்வமாய்ச் செய்யும் பாபங்கள் நீங்கும் வகை பின்வருமாறு:-.
பாபம் செய்ய நேரிட்டதற்கு வருந்திப் பச்சாத்தாபம் அடைவதால் கால்பங்கும்,
பிறகு பாபம் செய்யாது நிறுத்தி விடுவதால் கால்பங்கும்,
ப்ராயச்சித்தம் செய்ய முயல்வதால் கால்பங்கும், ப்ராயச்சித்தம் செய்து முடிப்பதால் கால்பங்கும்
ஆக, பாபம் முழுவதும் தீர்கிறது. ப்ராயச்சித்தங்களில் சிறந்தது மறுபடியும் ப்ரபத்தி செய்வதே.
இதுவே ப்ராயச்சித்த ப்ரபத்தி யெனப்படும். ப்ராயச்சித்தம் செய்யாத புருடர் இவ்வுலகிலேயே சில தண்டனையைப் பெறுவர்.
ஆக எவ்வகையிலும் ப்ரபந்நனுக்கு நரகமோ மறுபிறவியோ கிடையாது. இச்சரீரம் உள்ள வரையிலும் உள்ள
விளம்பத்தைக் கூடப் பொறுக்காது உடனே முக்தி வேண்டும் என்பவனுக்கு உடனேயே ஸகல கர்மங்களையும்
போக்கிப் பலனை நல்குகின்றது. இத்தகைய பெருமை பக்தி யோகத்திற்கு இல்லை என்பதுங் காண்க)

—————–

அக்ருத்யாநாஞ்ச கரணம் க்ருத்யாநாம் வர்ஜநம் ச மே,
க்ஷமஸ்வ நிகிலம் தேவ ப்ரணதார்த்தி ஹர ப்ரபோ (9)

(ப்ரணத ஆர்த்தி ஹர! சரணாகதர்களுடைய ஆர்த்தியைப் போக்குபவனே!
ஆச்ரிதர்களுடைய அகில துக்கங்களையும் அறவே போக்குபவனே!
ப்ரபோ! – ஸர்வஸ்வாமியே! ஸமர்த்தனாய் ஸ்வாமியானவனே! தேவ தேவனே! லீலாரஸப் ரவ்ருத்தனே!
ஜகத் ஸ்ருஷ்டி முதலிய வியாபாரங்களை லீலையாகவுடையவனே!
மே அடியேனுடைய :
அக்ருத்யாநாம் – செய்யத்தகாதவைகளுடைய :
கரணம் ச செய்தலையும் க்ருத் யாநாம் – செய்யத்தக்கவைகளின் செய்ய வேண்டுமவற்றினுடைய :
வர்ஜநம் ச விடுதலையும்:
நிகிலம் – இந்த அனைத்தையும் எல்லாவற்றையும்: க்ஷமஸ்வ பொறுத்தருள வேண்டும்.

அடைந்தவர்களுடைய வருத்தங்கள் அகற்றுபவனே! ஸர்வ விதமான சக்தி உடையவனே! தேவப்பெருமாளே!
அடியேனது செய்யாதன செய்கை செய்ய வேண்டியதை விடுகையாகிய அனைத்தையும் பொறுத்து அருள வேண்டும்.
சரணாகதர்களுடைய துன்பம் அனைத்தையும் தொலைக்கும் ஸர்வ ஸ்வாமியான தேவாதி தேவனே!
அடியேனுடைய அக்ருத்யம் செய்தலையும் செய்யத்தக்க க்ருத்யங்களைச் செய்யாது விடுதலையும் க்ஷமித்தருள வேண்டும்.

பாபங்கள் இரண்டு வகைப்படும். அவையாவன: அக்ருத்ய கரணம், க்ருத்யாகரணம் என்பன.
சாஸ்த்ரங்களில் செய்யக்கூடாதன என்று விலக்கப்பட்டவைகளைச் செய்வது அக்ருத்ய கரணம்.
சாஸ்த்ரங்களில் அவசியம் செய்ய வேண்டியன என்று விதிக்கப் பெற்ற காரியங்களைச் செய்யாமல் இருப்பது க்ருத்யாகரணம்.
இவை யனைத்தையும் ஸர்வ ஸ்வாமியாய் ப்ரணதார்த்தி ஹரனான தேவரீர் க்ஷமித்தருள வேண்டும் என்று பிரார்த்தித்தபடி.
தேவ! “பொன்னகில் சேர்ந்தலைக் கும்புனல் வேகை வட கரையிற் றென்ன னுகந்து
தொழுந்தேன வேதியர் தெய்வ மொன்றே (தேசிகமாலை பன்னிருநாமம். 10)

ஜகத்ஸ்ருஷ்டி முதலிய வியாபாரங்களை லீலையாகவுடையவன்.
“லோகவத்துலீலா கைவல்யம்” என்பது ப்ரஹ்மஸுத்ரம்.
மன்னர்கள் பந்தாடுவதை விளையாட்டாகக் கொண்டிருப்பது போல் பரமாத்மாவும் ஜகத் ஸ்ருஷ்டி முதலியவற்றை
விளையாட்டாகக் கொண்டிருக்கிறார். அதனாலேயே இந்த உலகத்திற்கு லீலாவிபூதி என்று பெயர்.
ஸ்ரீ பாஷ்யகாரரும் “அகில புவந ஜந்ம ஸ்தேம பங்காதி லீலே” என்று அகில உலகங்களையும்
உண்டாக்கி அளித்து, அழிப்பதையே லீலையாக உடையவன் பகவான் என்று அருளிச் செய்திருக்கிறார்.
பிள்ளை லோகாசாரியரும் “இதற்கு ப்ரயோஜநம் கேவலலீலை” என்றார். லீலை என்றால் விளையாட்டு.
அஃதாவது அப்பொழுது உண்டாகிற ஆனந்தத்தையொழியப்
பின்வரும் பலனை எதிர்பாராமல் செய்யப்படும் செய்கையே விளையாட்டு.

துன்பமும் இன்பமு மாகிய செய்வினை யாய்உல கங்களுமாய்
மன்பல் லுயிர்களு மாகிப் பலபல மாய மயக்குக்களால்
இன்புறு மிவ்விளை யாட்டுடை யானைப்பெற் றேதுமல் லலிலனே. (திருவாய்மொழி 3-10-7) என்பர் நம்மாழ்வார்.

உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட் டுடையாரவர்
தலைவர் அன்னவர்க் கேசரண் நாங்களே. (இராமாவதாரம் பாலகாண்டம் கடவுள் வாழ்த்து.1) என்பர் கம்பநாட்டாழ்வான்.

“மநோ வாக்காயை ரநாதிகால ப்ரவ்ருத்த அநந்த அக்ருத்ய கரண க்ருத்யாகரண
பகவதபசார பாகவத அபசார அஸஹ்யாப சாரரூப நாநாவிதா நந்தாபசாராந்
ஆரப்தகார்யாந் அநாரப்த கார்யாந் க்ருதாந் கரிஷ்யமாணாஞ்ச ஸர்வாநசேஷத: க்ஷமஸ்வ.” (சரணாகதிகத்யம்)

(மனம் வாக்கு சரீரம் என்கிற மூன்று உறுப்புகளினாலும், அடி தெரியாத நெடுநாளாக விளைந்த
அளவில்லாத செய்யத் தகாத காரியங்களைச் செய்தலும், செய்ய வேண்டியதைச் செய்யாதொழிவதும்,
எம்பெருமான் திறத்தில் அபசாரப்படுவதும், அவன் அடியார் திறத்தில் அபசாரப் படுகையும்,
பொறுக்க வொண்ணாதபடி அபசாரப்படுகையும் ஆக இவ்வாறுள்ள பலவகைப்பட்ட கணக்கற்ற குற்றங்களை
பலன் கொடுக்க ஆரம்பித்தவைகளையும், பலன் அளிக்க ஆரம்பியாமல் இருப்பவைகளையும்,
முன்பு செய்யப்பட்டவைகளையும், செய்யப்படுகிறவைகளையும், செய்யப்போகிறவைகளையும்
இந்த அனைத்தையும் அணுவளவும் மிஞ்சாதபடி பொறுத்தருள வேண்டும் என்று அருளிச் செய்திருப்பது இவண் அநுஸந்தேயம்)

————————-

ஸ்ரீமந் நியத பஞ்சாங்கம் மத்ரக்ஷண பரார்ப்பணம்
அசீகர : ஸ்வயம் ஸ்வஸ்மிந் அதோஹ மிஹ நிர்ப்பர: (10)

(ஸ்ரீமந் : திருமாமகள்கேள்வனான நாராயணனே!
நியத பஞ்ச அங்கம் – நீங்காத ஐந்து அங்கங்களை உடையதான:
மத் ரக்ஷண பர அர்ப்பணம் – அடியேனுடைய ரக்ஷாபர ஸமர்ப்பணத்தை :
ஸ்வம் – தானாகவே ஸ்வஸ்மிந் – தன்னிடத்தில் அசீகர : செய்தீர் :
அத ஆகையால் அஹம் – அடியேன். இஹ- அடியேனுடைய ரக்ஷணவிஷயத்தில் :
நிர்ப்பர : – பொறுப்பில்லாதவனானேன்.
‘ஸ்ரீமாந்’ ‘அசீகரத்’ என்பன பாட பேதங்கள். அப்பொழுது ஸ்ரீவிசிஷ்டனான நாராயணன் செய்து கொண்டான் என்பது பொருள்.

ஐந்து அங்கங்களோடு கூடின அடியேன் ரக்ஷிப்பதாகிற பரஸமர்ப்பணத்தைத் தானே தன்னிடத்திலேயே
பெருந்தேவீ நாயிகாஸமேத தேவராஜன் செய்து கொண்டான்.
ஆகையினால் அடியேன் இங்கு எத்தகைய பாரமும் இல்லாதவனாக ஆகி விட்டேன். அடியேன் நிர்ப்பரன்.

ஸம்ஸார தொல்லைகளைப் போக்கும் பெருமை வாய்ந்த தேசிகர் கடாக்ஷத்தினால் வேறு வழியைப்
பின்பற்றாமலும் செய்யாதன செய்வதில் துவக்கு அற்றவனாயும், உண்மை அறிந்து சங்கைகள் நீங்கி
பேரருளாளரான தேவரீரைப் புகலாய்க் கொண்டு அடியேன் பாரத்தை வைத்து நிர்பரனாகவும், நிர்பயனாகவும் இருக்கிறேன்.

ஸ்ரீமந்நாராயணனே! அடியேனுடைய ரக்ஷாபர ஸமர்ப்பணத்தை தேவரீரை அடியேனைக் கொண்டு பண்ணி வைத்தீர்.
இனிமேல் இவ்விஷயத்தில் அடியேனுக்கு ஒரு பொறுப்பு இல்லை.

நியத பஞ்சாங்கம் – பிரபத்திக்கு ஆநுகூல்யஸங்கல்பம் முதலான ஐந்து அங்கங்களும் இன்றியமையாதன.
இவ்வங்கங்கள் இல்லாவிடில் பிரபத்தி பலியாது என்றதாயிற்று.

‘நிக்ஷேபாபரபர்யாயோ ந்யாஸ: பஞ்சாங்க ஸம்யுத:
ஸந்யாஸஸ்த்யாக இத்யுக்தச் சரணாக திரித்யபி.’ (லக்ஷ்மீதந்த்ரம் 17-74)

(நிக்ஷேபம் என்கிற மறு பெயரையுடையதும் ஐந்து அங்கங்களோடு கூடியதுமான பரந்யாஸம் ஸந்யாசம் என்றும்
த்யாகம் என்றும் சரணாகதி என்றும் சொல்லப்பெற்றது)

தொடக்கத்தில் அஹம் மத் ரக்ஷணபரம் (1) என்றும் இறுதியில்
ஸ்ரீமாந் (10) என்றும் அருளிச் செய்தபடியால் ஆத்யந்தங்களில் ஸாத்விகத்யாகம் செய்ய வேண்டும் என்பதாயிற்று.

நிர்ப்பர – இதனால் ரக்ஷ்ய வஸ்துவை அவன் பக்கலிலே ஸமர்ப்பித்துத் தான் நிர்ப்பரனாய்
பயங்கெட்டு மார்பிலே கை வைத்துக்கொண்டு கிடந்து உறங்குகிறேன் என்றபடி.

(ஸாங்கமான பரஸமர்ப்பணத்தைத் தேவரீரே செய்து வைத்தருளினீர்.
ஆதலால் அடியேன் நிர்ப்பரனாய் இருக்கிறேன் என்று விண்ணம் செய்து தசகத்தைப் பூர்த்தி செய்கிறார் இதில்.)

———————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: