ஸ்ரீ கோதா ஸூப்ரபாதம் / ஸ்ரீ கோதா ஸ்துதி / ஸ்ரீ கோதா பிரபத்தி / -ஸ்ரீ உ . வே . கோவிந்த ஸ்வாமிகள் –

ஸ்ரீ விஷ்ணு சித்த ஸூதே கோதே பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட ஜகதீ சித்ரி கர்தவ்யம் லோக ரக்ஷணம் -1-லோக ரக்ஷண அர்த்தமாக திருப்பள்ளி எழுச்சி

உத்திஷ்ட உத்திஷ்ட ஹே கோதே உத்திஷ்ட துளஸீ ஸூதே
உத்திஷ்ட லோக மாதஸ் த்வம் த்ரை லோக்யம் மங்களம் குரு -2-

மாத ஸமஸ்த ஜகதாம் வட வ்ருஷ தாமா
வஷஸ் ப்ரதேச ஸம் அலங்க ரணார்த மத்ய
த்வந் மௌலி பந்த ஸூர பீக்ருத சாரு மாலாம்
வாஞ்சன் ஹி திஷ்டதி தரே தவ ஸூ ப்ரபாதம் -3-

லோக ஜநநீ -வடபத்ர ஸாயி -சூடிக் கொடுக்கும் மாலைக்கு ஆசைப்பட்டுள்ளான் –
திருப்பள்ளி எழுந்து அருளுவாய் –

தவ ஸூப்ரபாதம் அருணாப்ஐ லோசனே
பவது ப்ரஸன்ன வதந இந்து மண்டலே
கிரி புத்ரி காதி வநித அபி ரர்சிதே
வர ரங்க நாத தயிதே தயா நிதே –4—தேவ ஸ்த்ரீகளால் பூஜிக்கப் பட்டவள்

திக்மாம் சுனா விகசி தானி மநோ ஹராணி
பத்மா தளாநி குமுதானி நிமீலி தானி
கூஜந்தி கோகில கணா ஸூக ஸாரி காத்யா
ஸ்ரீ விஷ்ணு சித்த தனயே தவ ஸூ ப்ரபாதம் -5-

தாமரை மலர்கள் சூரியனால் அலர்த்தப்பட்டன -ஆம்பல் மலர்கள் கூடி விட்டன -குயில் இனங்கள் கூவுகின்றன –
கிளி சாரிகைகள் ஸப்திக்கின்றன -நல் விடிவு ஆகட்டும் –

ஸத் மாந்த ரேஷு நிவஸ வ்ரஜ கன்ய காத்யா
ஸ்வர்ணாதி பூஷண கரா ததி மந்தனேந
ஸ்ரோத்ராஸ்ர யோத்யந துகிம் மது ரோர வஸ்தே
ஸ்ரீ விஷ்ணு சித்த தனயே தவ ஸூ ப்ரபாதம் –6-

அருகில் வசிக்கும் இடைப்பெண்கள்- வாஸ நறும் குழல் ஆய்ச்சியர் தங்க மயமான வளையல்கள்
அணிந்த கைகளினால் தயிர் கடையும் இனிமையான த்வனி உனது காதில் விழ வில்லையோ –
நல் விடிவு ஆகட்டும் –

பட்டரா காதி முனய சமுபாஸ்ய ஸந்த்யாம்
ஷீராதி பக்வ பல ஹஸ்த தரா மஹாந்த
த்வத் தேஹ போஷண ரதா கலு தாதவர்கா
திஷ்டந்தி தேவிவ ஸூ தே தவ ஸூ ப்ரபாதம் –7-

பெரியாழ்வார் முதலான முனிவர்கள் ஸந்த்யாவந்தனத்தை அனுஷ்ட்டித்து விட்டு
உன் தேஹ போஷணத்தில் ஆசை உடையவர்களாக தகப்பன்மார்கள் ஆகையால் பால் பழம் முதலான
வஸ்துக்களுடன் வந்து நிற்கின்றார்கள் -ஓ பூமிப்பிராட்டியே உனக்கு நல்விடிவு ஆகட்டும் –

வைகான ஸா க்ய வர வம்ஸ ஸூ ஜாத விப்ரா
ஸ்ரீ மல்லி காதி ஸூ மநோ ஹர புஷ்பகாணி
ஆதாய பாத யுகம் அர்ச்சயிதும் ப்ரபந்நா
ஸ்ரீ விஷ்ணு சித்த தனயே தவ ஸூ ப்ரபாதம் –8-

வைகானஸ வம்ஸர்-ப்ராஹ்மண உத்தமர் -அர்ச்சகர்கள் -உன் திருவடிகளை அர்ச்சிக்க
மல்லிகை முதலிய மலர்கள் கொண்டு –

ஸ்ரீ மத் த்ரி வேணி வர தீர்த கடான் வஹந்த
த்வன் மஜ்ஜனார்த மதுநாத்ர ஸமாக தாஸ்ச
த்வத் கிங்கரா ப்ரிய தமா ஸூவி ஸூத்த பாவா
திஷ்டந்தி தேவி வஸூ தே தவ ஸூ ப்ரபாதம் –9-திரு முக்குள தீர்த்தம் திருமஞ்சனத்துக்கு

ஸ்ரீ தர்ம நாம வர சைல ஸூரம்ய ஸாநவ்
ஸ்ரீ சம்பகாக்ய வன ஸோபித தேச மத்யே
ஸ்ரீ தன்வினவ்யவர பத்தன வாஸ ஸீலே
ஸ்ரீ விஷ்ணு சித்த தனயே தவ ஸூ ப்ரபாதம் –10-
சம்பகாரண்ய வானம் சூழ்ந்த தாழ்வரையில் ஸ்ரீ வில்லி புத்தூரில் நித்ய வாஸம்

ஸ்ரீ பட்ட நாத க்ருத க்ருத்ரிம கானநேது
ஸ்ரீ வைஜயந்தி தரு மூல ஸூரம்யதேசே
ஸ்ரீ மத் குலீர குஜ வாஸர பல்குனி பே
ஸஞ்ஜாத தேவி வரதே தவ ஸூ ப்ரபாதம் –11-
திருத் துளஸீ அடியிலே ஆடி செவ்வாய் திருப்பூர நக்ஷத்ர திரு அவதாரம்

பஞ்சானனாதி சக்களத்தி விவர்தமானா
அத்ராக தாத்ய விபுதா தயிதா சமேதா
த்வத் தர்சநோத் ஸூக மநா ஸூ க்ருதாபி லாஷா
திஷ்டந்தி தேவி வஸூதே தவ ஸூ ப்ரபாதம் –12-சிவாதி தேவர்களின் தேவிமார்கள் உடன் வந்துள்ளார்கள்

ஸூர்யேந்து பவ்ம புத வாக்பதி ஸூக்ர மந்தா
மோஷாதி ராஸி பத யோ த்வஐ ராஹ வாத்யா
ஸ்ரீ தன்வி நவ்ய நகரம் சமுபாக தாஸ்து
த்வாம் ஆஸ்யந்தி வஸூதே தவ ஸூப்ர பாதம் –13-மேஷம் முதலான ராசிகளுக்கு அதிபதிகள் உன்னை ஆஸ்ரயிக்கிறார்கள்

ஸ்ரீ வல்ல பாக்ய வர ராஜ மஹாதி ராஜ
ஸ்ரீ சோழ ராஜ ந்ரு வரா கலு கேரளாத்யா
மாணிக்ய கோடி மகுடா தவ பாத பத்மம்
தேவ்ய ஆஸ்ரயந்தி வஸூதே தவ ஸூ ப்ரபாதம் –14-

ஸ்ரீ வல்லப தேவ பாண்டியன் -சோழ சேர மஹாராஜர்கள் க்ரீடங்களை திருவடித் தாமரைகளில்
தாழ்த்து ஆஸ்ரயிக்கிறார்கள்

ஸ்ரீ மந் வநாத்ரி வர வேங்கட சைல அரங்க
ஸ்ரீ கிருஷ்ண பத்தன வராதி நிவாஸ தேவா
த்வன் மங்கள யுக்தி மதுரை அபக்ருஷ்ட சித்தா
திஷ்டந்தி தேவி வஸூ தே தவ ஸூ ப்ரபாதம் –15-
திருமலை -திரு மாலிருஞ்சோலை திருக்கண்ண புரம் ஸ்ரீ ரெங்கம் முதலான திவ்ய தேச எம்பெருமான்கள்
தேவரீருடைய மங்களா சாசன பாசுரங்களினால் அபஹரிக்கப் பட்ட திரு உள்ளத்தை கொண்டுள்ளார்கள் –

ஸ்ரீ த்வாரகா ஸூ மதுரா வ்ரஜ பத்த நாதி
ப்ருந்தாடவீ நிவஸநா ஹரயோது நாத்ர
த்வத் திவ்ய ஸூக்தி மதுரை பரி துஷ்ட சித்தா
திஷ்டந்தி தேவி வஸூதே தவ ஸூ ப்ரபாதம் –16-

ஸ்ரீ வடமதுரை ஸ்ரீ மத் த்வாரகை ஸ்ரீ ஆயர்பாடி ஸ்ரீ பிருந்தாவனம் -முதலிய திவ்ய தேச
எம்பெருமான்கள் தேவரீருடைய திவ்ய ஸூ க்திகளினால் மிகுந்த ஸந்தோஷத்தை அடைகிறார்கள் –

வாசா ஸூ தத்த ஸூ கடாஹ ஸூ தான்ன பூர்ண
ஸ்ரீ ஸூ ந்தராக்ய ந்ருபதி ஸ்வ தலம் விஹாய
தர் மாத்ரி சானுமகமத் தவ தர்ச நார்தம்
ஸ்ரீ விஷ்ணு சித்த தனயே தவ ஸூப்ரபாதம் -17-

தேவரீர் திருவாக்கினால் சமர்ப்பிக்கப் பற்ற நூறு தடா அக்கார அடிசிலினால் மிக்க திருப்தி அடைந்த அழகர்
தன்னுடைய திருமாலிருஞ்சோலை திருமலையையும் விட்டு உன்னைக் காணும் ஆசையினால்
ஸ்ரீ வில்லிபுத்தூர் அருகிலே உள்ள தர்மாதிரியின் அடிவாரத்திலே எழுந்து அருளி உள்ளார் –

தங்கால பூதர நிவாஸ ரமா நிவாஸ
அத்ராகதோய மதுநா கருடாதி ரூட
த்வத் திவ்ய வக்த்ர கமலம் அவலோக நார்தம்
ஸ்ரீ விஷ்ணு சித்த தனயே தவ ஸூ ப்ரபாதம் –18-

உமது தாமரை போன்ற திருமுகத்தைக் காணும் ஆசையினால் திருத்தண்கால் திருமலையில்
நித்ய வாசம் செய்து அருளும் இன்பெருமான் கருடாரூடனாய் கொண்டு எழுந்து அருளி உள்ளார் –

ஸ்ரீ வேங்கடாசல நிவாஸ ரமா நிவாஸ
த்வத் புக்த மால்ய ஸூரபீ க்ருத திவ்ய காத்ர
சைலேது திஷ்டதி தரே தவ ஸூ ப்ரபாதம் –19-

திருவேங்கட மலையில் உறையும் அலர் மேல் மங்கை உறை மார்பன் உமது சூடிக் களைந்த மாலையை
சூடிக் கொண்டு அதனாலே மிகவும் பரிமிளிதமான திவ்ய மங்கள விக்ரஹம் கொண்டு
ஸ்ரீ வில்லி புத்தூர் சமீபத்திலே வடக்கே உள்ள சேஷாசலத்திலே எழுந்து அருளி விட்டார் –

இஷ்வாகு பூஜித ஹரி வர ரங்கநாத
த்வா முத்வ ஹார்த மதுநா கருடாதி ரூட
அத் ராக தோயம் அரவிந்த தளாய தாஷ
ஸ்ரீ விஷ்ணு சித்த தனயே தவ ஸூ ப்ரபாதம் –20-

இஷ்வாகு மஹா ராஜ வம்ஸ அரசர்களால் திருவாராதனம் செய்யப்பட ஸ்ரீ ரெங்கநாதன் -தாமரைக் கண்ணன் –
இங்கே கருடனில் ஆரோகணித்து உம்மைத் திருமணம் புரிந்து கைக்கொள்ள எழுந்து அருளி உள்ளார்
ஸ்ரீ பெரியாழ்வார் திருமகளாரே உமக்கு நாள் விடிவு ஆகட்டும் —

——–

ஸ்ரீ கோதா ஸ்துதி –

பஜ ஸுவ்ம்ய விமான தலே நிவஸம் வர ரங்க பதிம் வினதா தனயம்
அத பட்ட பதே தனயாம் வஸூதாம் கமலாமபராம் கருணா பரிதாம் –21-

ஸுவ்ம்ய விமானத்தில் எழுந்து அருளியுள்ள மற்ற ஒரு பிராட்டியோ என்னும்படி யானவளும் –
கருணை பொருந்தியவளுமான ஸ்ரீ பெரியாழ்வார் திருமகளான
ஸ்ரீ ஆண்டாளையும் ஸ்ரீ ரெங்க மன்னரையும் ஸ்ரீ வினதைச் சிறுவனையும் பூஜிக்கக் கடவீர் –

கிரிஜா வரவாணி புலோமா ஸூ தாதி சிரோமணி பாத யுகே வஸூ தே
துளஸீ வனஜே குண வாரி நிதே யதிராஜா ஸஹோதரி பாலயமாம் –22-

துளஸீ வனத்தில் திரு அவதரித்தவளும் -குணக்கடலும் -பார்வதி சரஸ்வதி இந்திராணி
முதலானவர்களுடைய ஸிரோ ரத்னங்களால் அலங்கரிக்கப்பட்ட திருவடி யுடையவளும்
யதிராஜ ஸஹோதரியுமான பூமி தேவியே அடியேனை ரசிக்கக் கடவாய் –

அயித் விஜ நந்தினி ரங்கி குடும்பினி விஸ்வ ஸூர ரஷிணி நந்தனஜே
யதுகுல வாரித சந்த்ர ஸூ ஸோபிணி விஷ்ணு மனஸ்தித விப்ர ஸூதே
உபநிஷதம்புதி மந்தன சம்பவ சங்கத ஸஞ்சித ஸூக்தி கரி
ஜய ஜய ஹே யதிராஜ ஸஹோதரி கிருஷ்ண விநோதினி தே விதரே –23-

ஸ்ரீ பெரியாழ்வாருக்கு மிகுந்த ஸந்தோஷம் உண்டுபண்ணுபவரும் ஸ்ரீ ரெங்கநாதனுடைய திவ்ய மஹிஷியாயும் –
ஸமஸ்த ரக்ஷகராயும் – ஸ்ரீ துளஸீ வனத்தில் திரு அவதரித்து அருளி ஆயர் குலத்தை ஆஸ்தானம் பண்ணி அருளுபவளும் –
ஸ்ரீ விஷ்ணு சித்தர் திருமகளாயும் உபநிஷத் சமுத்திரம் கடைந்து திருப்பாவை அம்ருதம் வழங்கியவளும் –
ஸ்ரீ கிருஷ்ணனுக்கு பிரியதமமாய் இருப்பவளும் யதிராஜ ஸஹோதரியுமான பூமிப் பிராட்டியே நீ ஜெயத்துடன் விளங்குவாயாக –

வட தரு ஸோபித தேச வரே ஸ்தித தேவ வரே த்ருட பக்தி யுதே
நிஐ கச தாரித மால்யக பந்தித வாசித ரங்க பதேர் தயிதே
யதுகுல நந்தன சங்கம காமினி சாபர வவ் க்ருத மஜ்ஜனகே
ஜய ஜய ஹே யதிராஜ ஸஹோதரி கிருஷ்ண விநோதினி தேவி தரே –24-

ஆல மரங்கள் சூழ்ந்த சோபை மிக்க பிரதேசம் -வட பெரும் கோயில் உடையான் இடம் மிகுந்த பக்தி உடையவள் –
சூடிக் கொடுத்த மாலை சூடி அதனாலே வாசனை மிக்க ஸ்ரீ ரெங்க ராஜதானி உடைய ஸ்ரீ ரெங்கநாதன் மஹிஷி –
யாதவ குல விளக்கான கண்ணனை அடைய நீராட்டம் அனுஷ்டித்து அவனை மகிழப் பண்ணியவள் –
யதிராஜ ஸஹோதரி -பூமிப்பிராட்டியே நீர் ஐயத்துடன் விளங்குவாய் –

விநா விஷ்ணு சித்தஸ்ய புத்ரீம் கதிர் நோ
ஸதா விஷ்ணு சித்தஸ்ய புத்ரீம் ஸ்மராமி
ஸ்திரே விஷ்ணு சித்தஸ்ய புத்ரி ப்ரஸீத
ப்ரியம் விஷ்ணு சித்தஸ்ய புத்ரி ப்ரயச்ச –25-

உம்மைத் தவிர வேறு கதி உடையோம் அல்லோம் -எப்பொழுதும் ஸ்மரிக்கிறோம் –
கிருபை செய்து கைக் கொண்டு ப்ரீதி காரித கைங்கர்யங்களும் அருள வேண்டும் –

நாளாபி தே ஸமே ஸூபே திவாகரேச கர்கடே
சுதா கரேச பூர்வ பல்குநீ யுதே குஜே தினே
துளஸ் யனர்த கானேன வஸூந்தர அம்ச சம்பவாம்
வர ப்ரதாம் பஜே நிஸம் வடேஸ் வரேஸ்ய நாயிகாம் –26-

நள வருஷம் -ஆடி மாசம் -செவ்வாய் கிழமை -திருப்பூர நக்ஷத்ரம் -திருத் துளஸீ வனத்தில்
ஸ்ரீ பூமா தேவி அம்சம் -ஸமஸ்த அபீஷ்டங்கள் அருளுபவள் –
வட பெரும் கோயிலுடையான் திவ்ய மஹிஷி -ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாரை பூஜிப்போம் –

——-

ஸ்ரீ கோதா பிரபத்தி –

ஸ்யாமாம் கமல பத்ராஷிம் லஷ்மணார்ய அநுஜாம் மஹீம்
தேவீம் கோதாம் அஹம் வந்தே ரெங்க நாதஸ்ய நாயிகாம் –27-

தன்வினவ்ய புரே ஜாதாம் தனுர் மாச வ்ரதோத்ஸூகாம்
விஷ்ணு சித்த ஸூதாம் வந்தே கிருஷ்ண பக்தி ஸமந்விதம் -28-

நந்த கோப ஸூதம் மத்வா வட மூல நிவாஸினம்
தனுஷ்மந் நூதன புரம் ஸ்ரீ கோப புரமேவச –29-

த்விஜ ராஜ குலே ஜாதாம் வ்ரஜ கன்யா அநு காரிணீம்
உபாஸ்மஹே ஸதாம் கோதாம் வ்ரதம் ஆசரிதம் யயா –30-

த்ரி ஸத்வாரிம் ச ததிகம் காதானாம் ச சதம் துயா
சக்ரே நிஜாப தேஸேன வந்தே தாம் வஸூ தாம் ஸஜாம் –31-
நாச்சியார் -தனது திருநாமம் கிட்டே 142 பாசுரங்கள் அருளிச் செய்த
ஸ்ரீ பூமா தேவி அம்சமான ஆண்டாளை வணங்குகிறேன் –

ஸர்வ உபநிஷத் ஸாரா த்ரிம் ஸத் காதாய யாக்ருதா
தாம் வந்தே வஸூதாம் கோதாம் ஸர்வ ஸுவ்பாக்ய தாயகாம் –32-திருப்பாவை முப்பதும் உபநிஷத் சாரம் தானே –

ஸ்ரீ விஷ்ணு சித்த தனயாம் ஸ்ரித பாரிஜாதாம்
ஷித்யம்ச ஸம்பவ வராம் கமலாமி வாந்யாம்
ஸ்ரீ ரெங்கராஜ மஹிஷீம் நவ பத்த நஸ்தாம்
கோதாம் அநந்ய சரண சரணம் ப்ரபத்யே –33-ஆஸ்ரிதர்களுக்கு பாரிஜாதம் –

மல்லி தேச வர்தமான தன்விநவ்ய பத்தநே
பக்த பாலநோத்யதாமி ஹாக தாமிமாம் மஹீம்
வடாக்ய வ்ருஷ ஸாயிநே ஸ்வீய முக்த மால்யதாம்
விஷ்ணு சித்த புத்ரிகாம் அஹம் பஜே ஸூப்ரபாதம் –34-

ஹித்வா வைகுண்ட போகம் நிரதிசய ஸூகம் பிரம்ம ருத்ராத் யலப்யம்
நித்யைர் முக்தைச் ச ஸேவ்யம் புத வர விதிதம் ஸாஸ்வதம் பக்த கம்யம்
ஸ்ரீ பாண்ட்யே பூமி லோகே பிரதித யஸஸா யாகதா தன்வினவ்யம்
ஸா கோதா ரக்ஷது நோ ஹிம கர வதனா விஷ்ணு சித்தஸ்ய புத்ரீ –35-

கோதா ரக்ஷதுநோ ஜக த்ரய ஹிதா கோதாம் உதார அம்பஜே
சித்தே திஷ்டது கோதாயா ஸஹரி கிருஷ்ணஸ்துமே மாதவ
கோதாயை ஸததம் நமோஸ்து ஜகதாம் மாத்ரைஷ்ட தாயை நம
கோதாயா கலு காஸ்தி வத்ஸலதமா மத்யே மஹிஷ்யா ஹரே –36–

கோதாயா சரணாம் புஜம்து மனஸா த்யாத்வாது யஸ் திஷ்டதி
ஸோஹி க்ஷேமம் அவாப்னுயாதிஹ பரே முக்திம் ச நான்யத் த்ருவம்
கோதா யாம் த்வயி பக்தி லேச ரஹிதம் தோஷேரதம் துர்ஜனம்
ஹே கோதே வரதே ஸ்ரி தார்த்தி ஹரிணி ஸர்வம் ஸஹே ரக்ஷமாம் –37-

ஸ்ரீ மத் ஸுவ்ம்ய முனிம் வரம் குரு வரம் நத்வாது லோகார்யகம்
ஈஸானீம் திஸமாஸ்ரிதம் ச கருடன் ஸ்ரீ கோபுர த்வாரகம்
ஸ்ரீ மத் ஹஸ்தி யுதாம் ப்ரசன்ன வதனாம் லஷ்மீம் ச ராம ப்ரபும்
ஸீதா லஷ்மண ஸேவிதம் ச கமலா வாஸம் ச காம்ய ப்ரதம்–38-

ஸ்ரீ பூமீ ஸஹிதம் வனாத்ரி நிவஸம் ஸ்ரீ ஸூ ந்தராக்யம் ந்ருபம்
கோதா தாத ஸூ பூஷி தம்ச கமலா நாதம் ச சைன்யேஸ்வரம்
கோதா தர்பண தீர்த்த மத்புத வரம் தார்ஷ்ம்யம் ச வேதாத்மகம்
கோபாலா கோபாலா பித பூப திம்ச வஸுதாம் கோதாம் உதாராம் பஜே –39-

ஸ்ரீ மத் தன்வி நவீன பத்தன வரே ப்ரக்யாத கீர்த்யாயுத
ஸ்ரீ மச் சைல கிடாம்பி ஸூரி குலஜ ஸ்ரீ சைல ஸூரே ஸூத
ஸர்வ அபீஷ்ட பல ப்ரதம் விஜயதம் கோதா ப்ரபோத ஸ்த்வம்
கோதா ப்ரீதி கரம் முதாஸ க்ருதவான் கோவிந்த நாமா கவி –40-

———-

ஸ்ரீ கோதா மங்களம்

வேண் வாக்ய வம்ஸ ஸம்பூத பட்ட நாத சுதே தரே
துளஸீ வனஜே தேவி ஹே கோதே தவ மங்களம் –41-

ரம்ய ஜாமாத்ரு தேவஸ்ய வல்லபே மஹிஷீ வரே
நீலோத் பல தளஸ் யாமே ஹே கோதே தவ மங்களம் –42-

த்விஜ ராஜ ஸூதே கோதே கோபீ கன்ய அநு காரிணி
ஸ்ரீ ராமானுஜ யோகீந்த்ரா வரஜே தவ மங்களம் –43-

நந்த கோப ஸூதம் த்யாத்வா லோக உஜ்ஜீவன ஹேதுநா
வ்ரத கர்மாத்ய நுஷ்டாத்ர்யை கோதாயை நித்ய மங்களம் –44-

ஸ்ரீ சைலார்ய தநூஜேந கோவிந்தேந க்ருதாத்வியம்
விஷ்ணு சித்த தநூஜாய மங்களா வளி ரேததாம் –45-

ஸ்ரீ தன்வி நவ்ய புராபிஜன கிடாம்பி குல திலக ஸ்ரீ சைலார்ய தநூஜ
ஸ்ரீ வைஷ்ணவ கவி கோகிலம் ஆஸூ கவி கோவிந்தார்ய க்ருதி ஷு
ஸ்ரீ கோதா ஸூ ப்ரபாதம் சம்பூர்ணம் –

——————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ உ . வே . கோவிந்த ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: