Archive for January, 2021

ஸ்ரீ விஷ்ணு பர்வம்–அத்யாயம் – 92–(வஜ்ரநாபபுரம் ப்ரதி ப்ரத்யும்நாதீனாம் கமனம்)–வஜ்ரபுரம் சென்ற தெய்வீக அன்னங்கள் | —

January 31, 2021

வஜ்ரநகரம் சென்ற அன்னங்கள்; சுசீமுகீ என்ற அன்னப்பறவையைத் தோழியாக அடைந்த பிரபாவதி; பிரத்யும்னன் குறித்து பிரபாவதியிடமும், பத்ரநாபன் குறித்து வஜ்ரநாபனிடமும் சொன்ன அன்னம்; துவாரகை திரும்பிய அன்னங்கள்; நடிகனாகப் பிரத்யும்னன்-

வைஷ²ம்பாயன உவாச
தே வாஸவவச꞉ ஷ்²ருத்வா ஹம்ஸா வஜ்ரபுரம் யயு꞉ |
பூர்வோசிதம் ஹி க³மனம் தேஷாம் தத்ர ஜனாதி⁴ப ||2-92-1

தே தீ³ர்கி⁴காஸு ரம்யாஸு நிபேதுர்வீர பக்ஷிண꞉ |
பத்³மோத்பலைராவ்ருதாஸு காஞ்சனை꞉ ஸ்பர்ஷ²னக்ஷமை꞉ ||2-92-2

தே வை நத³ந்தோ மது⁴ரம் ஸம்ஸ்க்ருதாபூர்வபா⁴ஷிண꞉ |
பூர்வமப்யாக³தாஸ்தே து விஸ்மயம் ஜனயந்தி ஹி ||2-92-3

அந்த꞉புரோபபோ⁴க்³யாஸு சேருர்வாபீஷு தே ந்ருப |
த்³ருஷ்டாஸ்தே வஜ்ரநாப⁴ஸ்ய த்ரிவிஷ்டபநிவாஸின꞉ ||2-92-4

ஆலபந்த꞉ ஸுமது⁴ரம் தா⁴ர்தராஷ்ட்ரா ஜனேஷ்²வர |
ஸ தானுவாச தை³தேயோ தா⁴ர்தராஷ்ட்ரானித³ம் வச꞉ ||2-92-5

த்ரிவிஷ்டபே நித்யரதா ப⁴வந்தஷ்²சாருபா⁴ஷிண꞉ |
யதை³வேஹோத்ஸவோ(அ)ஸ்மாகம் ப⁴வத்³பி⁴ரவக³ம்யதே ||2-92-6

ஆக³ந்தவ்யம் ஜாலபாதா³꞉ ஸ்வமித³ம் ப⁴வதாம் க்³ருஹம் |
விஸ்ரப்³த⁴ம் ச ப்ரவேஷ்டவ்யம் த்ரிவிஷ்டபநிவாஸிபி⁴꞉ ||2-92-7

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “ஓ! மன்னா, அந்த அன்னப்பறவைகள் முன்பிருந்தே வஜ்ரபுரத்திற்குச் செல்வது வழக்கம். எனவே வாசவனின் சொற்களைக் கேட்ட உடனே அங்கே அவை சென்றன.(1) ஓ! வீரா, அந்தப் பறவைகள், தீண்டதகுந்த மென்மையான தங்கத் தாமரைகளும், நீலோத்பலங்களும் நிறைந்த அழகிய தடாகங்களில் இறங்கின. அவை ஏற்கனவே அங்கே பல முறை வந்திருந்தாலும் இப்போது தங்கள் இனிய செம்மொழியால் {மதுரமான ஸம்ஸ்க்ருத அபூர்வ பாஷையில் பேசி} அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தின.(2,3) ஓ! ஜனமேஜய மன்னா, அந்தத் தெய்வீக அன்னப்பறவைகள் இனிய சொற்களைப் பேசி வஜ்ரநாபனின் அந்தப்புரத் தடாகங்களில் திரிந்து அவனுக்கு மிகப் பிடித்தமானவையாகின.
அப்போது அவன் அந்தத் தார்தராஷ்டிரங்களிடம் பின்வரும் சொற்களில்,(4,5) “தேவலோகத்தில் வாழ்வதால் எப்போதும் நீங்கள் இனிய சொற்களைப் பேசுகிறீர்கள். என் வீட்டில் பெரும் விழாவென நீங்கள் அறியும்போதெல்லாம் இங்கே வாருங்கள். ஓ! தேவலோகத்தில் வாழும் அன்னங்களே, என்னுடைய இந்த வீட்டை உங்களுடையதாகக் கருதி நம்பிக்கையுடன் இங்கே நுழையுங்கள்” என்றான்.(6,7)

தே ததோ²க்தா꞉ ஷ²குனயோ வஜ்ரநாபே⁴ன பா⁴ரத |
ததே²த்யுக்த்வா ஹி விவிஷு²ர்தா³னவேந்த்³ரநிவேஷ²னம் ||2-92-8

சக்ரு꞉ பரிசயம் தே ச தே³வகார்யவ்யபேக்ஷயா |
மானுஷாலாபினஸ்தே து கதா²ஷ்²சக்ரு꞉ ப்ருத²க்³விதா⁴꞉ ||2-92-9

வம்ஷ²ப³த்³தா⁴꞉ காஷ்²யபானாம் ஸர்வகல்யாணபா⁴கி³னாம் |
ஸ்த்ரியோ ரேமுர்விஷே²ஷேண ஷ்²ருண்வந்த்ய꞉ ஸங்க³தா꞉ கதா²꞉ ||2-92-10

ஓ! பரதனின் வழித்தோன்றலே {ஜனமேஜயனே}, வஜ்ரநாபனால் இப்படிச் சொல்லப்பட்ட அந்தப் பறவைகள் அந்தத் தானவ மன்னனின் அரண்மனைக்குள் நுழைந்தன; தேவர்களின் பணிகளைச் செய்வதற்காக மனிதர்களைப் போலப் பேசி, பல்வேறு சொற்களைச் சொல்லும் {கதைகள்} அனைத்தையும் அவை அறிந்து கொண்டன.(8,9) அருள் வடிவங்கள் அனைத்துடனும் கசியபருடைய மகன்களின் (தானவர்களின்) அரண்மனைகளில் வாழும் பெண்கள், அந்த அன்னங்கள் பேசும் அழகிய கதைகளைக் கேட்டு பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.(10)

விசரந்தஸ்ததோ ஹம்ஸா த³த்³ருஷு²ஷ்²சாருஹாஸினீம் |
ப்ரபா⁴வதீம் வராரோஹாம் வஜ்ரநாப⁴ஸுதாம் ததா³ ||2-92-11

ஹம்ஸா꞉ பரிசிதாம் சக்ருஸ்தாம் ததஷ்²cஆருஹாஸினீம் |
ஸகீ²ம் ஷு²சிமுகீ²ம் சக்ரே ஹம்ஸீம் ராஜஸுதா ததா³ ||2-92-12

ஸா தாம் கதா³சித்பப்ரச்ச² வஜ்ரநாப⁴ஸுதாம் ஸகீ²ம் |
விஷ்²ரம்பி⁴தாம் ப்ருத²க்ஸூக்தைராக்²யானகஷ²தைர்வராம் ||2-92-13

த்ரைலோக்யஸுந்த³ரீம் வேத்³மி த்வாமஹம் ஹி ப்ரபா⁴வதி |
ரூபஷீ²லகு³ணைர்தே³வி கிஞ்சீத்வாம் வக்துமுத்ஸஹே ||2-92-14

வ்யதிக்ராமதி தே பீ⁴ரு யௌவனம் சாருஹாஸினி |
யத³தீத்ம் புனர்னைதி க³தம் ஸ்ரோத இவாம்ப⁴ஸ꞉ ||2-92-15

காமோபபோ⁴க³துல்யா ஹி ரதிர்தே³வி ந வித்³யதே |
ஸ்த்ரீணாம் ஜக³தி கல்யாணி ஸத்யமேதத்³ப்³ரவீமி தே ||2-92-16

ஸ்வயம்வரே ச ந்யஸ்தா த்வம் பித்ரா ஸர்வாங்க³ஷோ²ப⁴னே |
ந ச காம்ஷ்²சித்³வரயஸே தே³வாஸுரகுலோத்³ப⁴வான் ||2-92-17

வ்ரீடி³தா யாந்தி ஸுஷ்²ரோணி ப்ரத்யாக்²யாதாஸ்த்வயா ஷு²பே⁴ |
ரூபஷௌ²ர்யகு³ணைர்யுக்தான்ஸத்³ற்^ஷா²ம்ஸ்த்வம் குலஸ்ய ஹி ||2-92-18

இவ்வாறு வஜ்ரநாபனின் அந்தப்புரத்திற்குள் திரிந்து வந்த அன்னங்கள், புன்னகையுடன் இருக்கும் அவனது அழகிய மகள் பிரபாவதியைக் கண்டு அவளிடம் அறிமுகம் செய்து கொண்டன.(11) அந்த அன்னங்களில் சுசீமுகி என்பவள் {என்ற அன்னப்பறவை}, அழகிய புன்னகையைக் கொண்ட அந்த இளவரசியிடம் {பிரபாவதியிடம்} நட்பு பூண்டாள்.(12) அந்தச் சுசீமுகி, நூற்றுக்கணக்கான அழகிய கதைகளைச் சொல்லி வஜ்ரநாபனின் மகளிடம் நம்பிக்கையை உண்டாக்கி, ஒரு நாள் அவளிடம் {பிரபாவதியிடம்},(13) “ஓ! பிரபாவதி, அழகு, குணம், திறன்களைப் பொறுத்தவரையில் உன்னை நான் மூவுலகிலும் பேரழகியாகக் கருதுகிறேன். நான் உன்னிடம் சிலவற்றைச் சொல்ல விரும்புகிறேன்.(14) ஓ! அழகிய புன்னகையைக் கொண்டவளே, உன் இளமை கிட்டத்தட்ட வீணாகிறது; ஓடை நீரைப் போலச் சென்றதேதும் திரும்புவதில்லை.(15) இவ்வுலகில் பெண்களுக்கு ஆண்களுடன் இன்புறுவதைவிடப் பெரிய மகிழ்ச்சி வேறேதும் கிடையாது. ஓ! மங்கலப் பெண்ணே, நான் உனக்கு உண்மையைச் சொல்கிறேன்.(16) ஓ! அழகிய அங்கங்களைக் கொண்டவளே, உன் தந்தை நீ விரும்பியவனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள ஆணையிட்டும், தேவர்களிலோ, அசுரர்களிலோ யாரையும் நீ கணவனாகத் தேர்ந்தெடுக்காமல் இருப்பதேன்?(17) ஓ! இளமைநிறைந்த பெண்ணே, அழகும், வீரமும், பிற திறன்களும் கொண்ட மணமகன்கள் பலர் இங்கே வந்தாலும் அவர்கள் அலட்சியம் செய்து புறக்கணிக்கப்பட்டவர்களாகத் திரும்பிச் செல்கிறார்கள்.(18)

ஆக³தான்னேச்ச²ஸே தே³வி ஸத்³ருஷா²ன்குலரூபயோ꞉ |
இஹைஷ்யதி கிமர்த²ம் த்வாம் ப்ரத்³யும்னோ ருக்மிணீஸுத꞉ ||2-92-19

த்ரைலோக்யே யஸ்ய ருஊபேண ஸத்³ருஷோ² ந குலேன வா |
கு³ணைர்வா சாருஸர்வாங்கி³ ஷௌ²ர்யேணப்யதி வா ஷு²பே⁴ ||2-92-20

தே³வேஷு தே³வ꞉ ஸுஷ்²ரோணி தா³னவேஷு ச தா³னவ꞉ |
மானுஷேஷ்வபி த⁴ர்மாத்மா மனுஷ்ய꞉ ஸ மஆப³ல꞉ ||2-92-21

யம் ஸதா³ தே³வி த்³ருஷ்ட்வா ஹி ஸ்ரவந்தி ஜக⁴னானி ஹி |
ஆபீனானீவ தே⁴னூனாம் ஸ்ரோதாம்ஸி ஸரிதாமிவ ||2-92-22

ந புற்ணசந்த்³ரேண முக²ம் நயனே வா குஷே²ஷ²யை꞉ |
உத்ஸஹே நோபமாதும் ஹி ம்ருகே³ந்த்³ரேணாத² வா க³திம் || 2-92-23

ஓ! பெண்ணே {பிரபாவதியே}, உன் குடும்பத்திற்கும், அழகிற்கும் ஏற்ற மணமகனை நீ விரும்பாதபோது, ஓ! அழகிய அங்கங்களைக் கொண்டவளே, துணிவு, திறமை, குலமரபு, அழகு ஆகியவற்றில் மூவுலகிலும் இணையற்றவனாக இருக்கும் ருக்மிணியின் மகன் பிரத்யும்னன் இங்கே ஏன் வரப் போகிறான்?(19,20) ஓ! அழகிய இடையைக் கொண்டவளே, பெருஞ்சக்தி வாய்ந்தவனும், அற ஆன்மா கொண்டவனுமான அவன் மனிதர்களுக்கு மத்தியில் மனிதனாக இருந்தாலும், தேவர்களுக்கு மத்தியில் தேவனாகவும், தானவர்களுக்கு மத்தியில் அவர்களில் ஒருவனாகவும் ஒளிர்ந்து கொண்டிருக்கிறான்.(21) பசுவால் பாலையும், ஓடையால் நீரையும் தடுக்க முடியாததைப் போல அவனைக் கண்ட பெண்களால் தங்கள் இயல்பான அன்பை {காதலைத்} தடை செய்ய முடியாது.(22) நான் அவனுடைய முகத்தை முழு நிலவுடனோ, அவனுடைய கண்களைத் தாமரைகளுடனோ, அவனது நடையைச் சிங்கத்துடனோ ஒப்பிடத் துணியேன்.(23)

ஜக³தஹ் ஸாரமுத்³த்⁴ருத்ய புத்ர꞉ ஸ விஹித꞉ ஷு²பே⁴ |
க்ருத்வானங்க³ம் வரே ஸாங்க³ம் விஷ்ணுனா ப்ரப³ஹ்விஷ்ணுனா ||2-92-24

ஹ்ருதேன ஷ²ம்ப³ரோ பா³ல்யே யேன பாபோ நிப³ர்ஹித꞉ |
மாயாஷ்²ச ஸர்வா꞉ ஸம்ப்ராப்தா ந ச ஷீ²லம் விநாஷி²தம் ||2-92-25

யான்யான்கு³ணான்ப்ருது²ஷ்²ரோணி மனஸா கல்பயிஷ்யஸி |
ஏஷ்டவ்யாஸ்த்ரிஷு லோகேஷு ப்ரத்³யும்னே ஸர்வ ஏவ தே ||2-92-26

ருச்யா வஹ்னிப்ரதீகாஷ²꞉ க்ஷமயா ப்ற்^தி²வீஸம꞉ |
தேஜஸா ஸுர்யஸத்³ருஷோ² கா³ம்பீ⁴ர்யேண ஹ்ரதோ³பம꞉ |
ப்ரபா⁴வதீ ஷு²சிமுகீ²ம் த்விதீஹோவாச பா⁴மினீ ||2-92-27

ஓ! அழகிய பெண்ணே, என்னால் வேறென்ன சொல்ல முடியும்? பெருஞ்சக்தி வாய்ந்த தலைவன் விஷ்ணு, உலகின் சாரத்தைப் பிழிந்து (அங்கங்கள் அற்ற அனங்க தேவனை) காமனைத் தன் ஆளுகையின் கீழ் கொண்டு வந்து, தன் அங்கங்களில் ஒன்றாக்கி தன் மகனாகவும் கொண்டான்.(24) அவன் {பிரத்யும்மன்} தன்னுடைய குழந்தைப்பருவத்தில் பாவம் நிறைந்த சம்பராசுரனால் அபகரிக்கப்பட்டான்; அவனை {சம்பரனைக்} கொன்று தன் குணத்திற்குக் களங்கமேற்படாமல் அவனது {சம்பரனின்} மாய சக்திகள் அனைத்தையும் அறிந்து கொண்டான்.(25) மூவுலகங்களிலும் அடையத் தகுந்த சிறப்புத் திறன்கள் அனைத்தும், உன்னால் கற்பனை செய்யக் கூடிய அனைத்தும் பிரத்யும்னனிடம் இருக்கின்ற்ன.(26) அவன் பிரகாசத்தில் நெருப்பைப் போன்றவன், பொறுமையில் பூமியைப் போன்றவன், கம்பீரத்தில் ஆழமான தடாகத்தைப் போன்றவன்” என்று சொன்னாள் {சுசீமுகி}.(27)

ப்ரபா⁴வத்யுவாச
விஷ்ணுர்மானுஷலோகஸ்த²꞉ ஷ்²ருத꞉ ஸுப³ஹுஷோ² மயா |
பிது꞉ கத²யத꞉ ஸௌம்யே நாரத³ஸ்ய ச தீ⁴மத꞉ ||2-92-28

ஷ²த்ரு꞉ கில ஸ தை³த்யானாம் வர்ஜனீய꞉ ஸதா³னகே⁴ |
குலானி கில தை³த்யானாம் தேன த³க்³தா⁴னி மானினி ||2-92-29

ப்ரதீ³ப்தேன ரதா²ங்கே³ன ஷா²ர்ங்கே³ண க³த³யா ததா² |
ஷா²கா²நக³ரதே³ஷே²ஷு வஸந்தி கில யே(அ)ஸுரா꞉ ||2-92-30

இத்யேதே தா³னவேந்த்³ரேண ஸந்தி³ஷ்²யந்தே ஹி தம் ப்ரதி |
மனோரதோ² ஹி ஸர்வாஸாம் ஸ்த்ரீணாமேவ ஷு²சிஸ்மிதே ||2-92-31

ப⁴வேத்³தி⁴ மே பதிகுலம் ஷ்²ரேஷ்ட²ம் பித்ருகுலாதி³தி |
யதி³ நாமாப்⁴யுபாய꞉ ஸ்யாத்தஸ்யேஹாக³மனம் ப்ரதி ||2-92-32

மஹானனுக்³ரஹோ மே ஸ்யாத்குலம் ஸ்யாத்பாவிதம் ச மே |
ஸமர்த²னாம் மே ப்ருஷ்டா த்வம் ப்ரயச்ச² ஷு²சிலாபினி ||2-92-33

ப்ரத்³யும்ன꞉ ஸ்யாத்³யதா² ப⁴ர்தா ஸ மே வ்ருஷ்ணிகுலோத்³ப⁴வ꞉ |
அத்யந்தவைரீ த³த்யாநாமுத்³வேஜனகரோ ஹரி꞉ ||2-92-34

அஸுராணாம் ஸ்த்ரியோ வ்ருத்³தா⁴꞉ கத²யந்த்யோ மயா ஷ்²ருதா꞉ |
ப்ரத்³யும்னஸ்ய ததா² ஜன்ம புரஸ்தாத³பி மே ஷ்²ருதம் ||2-92-35

யதா² ச தேன நிஹதோ ப³லவான்காலஷ²ம்ப³ர꞉ |
ஹ்ருதி³ மே வர்ததே நித்யம் ப்ரத்³யும்ன꞉ க²லு ஸத்தமே ||2-92-36

ஹேது꞉ ஸ நாஸ்தி ஸ்யாத்தேன யதா² மம ஸமாக³ம꞉ |
தா³ஸீ தவாஹம் ஸக்²யார்ஹே தூ³த்யே த்வம் ச விஸர்ஜயே ||2-92-37

இதைக் கேட்ட பிரபாவதி, அந்தச் சுசீமுகியிடம், “ஓ! மென்மையான பெண்ணே, விஷ்ணு மனிதர்களின் உலகில் வாழ்ந்து வருகிறார் என்பதை என் தந்தைக்கும், நுண்ணறிவுமக்க நாரதருக்கும் இடையில் நடந்த உரையாடல்களில் பலமுறை கேட்டிருக்கிறேன்.(28) எரியும் தேர்கள், சாரங்கம் (வில்), கதாயுதம் ஆகியவற்றால் அவர் தைத்தியர்களின் குலங்களை அழித்திருக்கிறார். ஓ! மதிப்பிற்குரிய பெண்ணே, அவர் திதியின் மகன்களுடைய பெரும்பகைவராவார்.(29) தானவர்களின் மன்னர், தமது நலத்திற்காகக் கிளை நகரங்களில் வாழும் அசுரர்களின் மூலம் விஷ்ணுவைக் குறித்த செய்திகளைத் திரட்டி வருகிறார்.(30) ஓ! இனிய புன்னகை கொண்டவளே, ஒவ்வொரு பெண்ணும், தன் தந்தையின் குடும்பத்தைவிட மேன்மையான குடும்பத்தைச் சேர்ந்த கணவரையே விரும்புவாள்.(31) அவரை இங்கே கொண்டு வருவதற்கான வழிமுறைகளை உன்னால் காண முடிந்தால் எனக்குப் பேருதவியைச் செய்தவளும், எங்களது குடும்பத்தை {குலத்தைத்} தூய்மைப்படுத்தியவளும் ஆவாய்.(32) ஓ! இனிய சொற்களைப் பேசுபவளே, விருஷ்ணிகளின் குலத்தில் பிறந்த பிரத்யும்னரை எவ்வாறு என் கணவராக்கிக் கொள்ள முடியும் என்பதை எனக்குச் சொல்வாயாக.(33) ஹரி தைத்தியர்களின் பெரும்பகைவர் என்பதையும், அவர்களுக்குப் பெருந்தொல்லைகளைக் கொடுத்து வருகிறார் என்பதையும் அசுர மூதாட்டிகளின் உரையாடல்களில் இருந்து அறிந்திருக்கிறேன்.(34) பிரத்யும்னர் பிறந்தது எவ்வாறு என்பதையும், பெருஞ்சக்தி வாய்ந்த காலசம்பரன் அவரால் கொல்லப்பட்டது எவ்வாறு என்பதையும் நான் முன்பே கேட்டிருக்கிறேன்.(35) இன்னும் நான் என்ன சொல்லப் போகிறேன்? பிரத்யும்னர் எப்போதும் என் இதயத்தில் இருக்கிறார். ஆனால் அவருடன் சேரும் வழிமுறை மட்டுமே தெரியவில்லை.(36) ஓ! மதிப்பிற்குரிய தோழி, உன் பணிப்பெண்ணாக இருந்தாலும் நான் உன்னை என் தூதராக நியமிக்கிறேன். நான் அவருடன் சேரும் வழிமுறையை எனக்கு நீ சுட்டிக் காட்டுவாயாக” என்றாள்.(37)

பண்டி³தாஸி வதோ³பாயம் மம தஸ்ய ச ஸங்க³மே |
ததஸ்தாம் ஸாந்த்வயித்வா ஸா ப்ரஹஸந்தீத³மப்³ரவீத் ||2-92-38

ஷு²சிம்க்²யுவாச
தத்ர தூ³தீ க³மிஷ்யாமி தவாஹம் சாருஹாஸினீ |
இமாம் ப⁴க்திம் தவோதா³ராம் ப்ரவக்ஷ்யாமி ஷு²சிஸ்மிதே ||2-92-39

ததா² சைவ கரிஷ்²யாமி யதை²ஷ்யதி தவாந்திகம் |
ஸாக்ஷாத்காமேன ஸுஷ்²ரோணி ப³விஷ்யதி ஸகாமினீ ||2-92-40

இதி மே பா⁴ஷிதம் நித்யம் ஸ்மரேதா²ஹ் ஷு²சிலோசனே |
கதா²குஷ²லதாம் பித்ரே கத²யஸ்வாயதேக்ஷணே ||2-92-41

அப்போது அவளைத் தேற்றிய சுசீமுகி புன்னகையுடன், “ஓ! இனிய புன்னகையைக் கொண்டவளே, நான் அங்கே உன் தூதராகச் சென்று உன்னுடைய பெரும் பக்தியை அவனிடம் சொல்வேன்.(38,39) ஓ! அழகிய இடையைக் கொண்டவளே, ஓ! இனிய புன்னகையைக் கொண்டவளே, அவனை இங்கே வரச் செய்யவும், உன்னை அந்தக் காமனின் துணைவியாக்கவும் நான் முயல்வேன்.(40) ஓ! அழகிய கண்களைக் கொண்டவளே, நான் சொன்னதை உண்மையாகக் கருதுவாயாக. நான் புத்திசாலித்தனமாகப் பேசுவதாக உன் தந்தையிடம் சொல்வாயாக; அதன் மூலம் நீ பெரும் நன்மையை அறுவடை செய்வாய்” என்றாள் {சுசீமுகி}.(41)

மமத்வம் தத்ர மே தே³வி ஹிதம் ஸம்யக்ப்ரபத்ஸ்யஸே |
இத்யுக்தா ஸா ததா² சக்ரே யத்தத்ஸா தாமதா²ப்³ரவீத் ||2-92-42

தா³னவேந்த்³ரஷ்²ச தாம் ஹம்ஸீம் ப்ரயச்சா²ந்த꞉புரே ததா³ |
ப்ரபா⁴வத்யா ஸமாக்²யாதா கதா² குஷ²லதா தவ ||2-92-43

தத்த்வம் ஷு²சிமுகி² ப்³ரூஹி கதா²ம் யோக்³யதயா வரே |
கிம் த்வயா த்³ருஷ்டமாஷ்²சர்யம் ஜக³த்யுத்தமபக்ஷிணி ||2-92-44

அன்னத்தால் இவ்வாறு சொல்லப்பட்டதும், அதன்படியே பிரபாவதி செயல்பட்டாள். தானவர்களின் மன்னன் {வஜ்ரநாபன்}, தன் அந்தப்புரத்தில் இருந்த அந்த அன்னத்திடம் {சுசீமுகியிடம்},(42) “ஓ! அழகிய சுசீமுகி, பேச்சில் உன் புத்திசாலித்தனத்தைப் பிரபாவதி என்னிடம் சொன்னாள். நல்ல கதைகளை நீ எங்களுக்குச் சொல்வாயாக. பிறரால் காணத் தகுந்தவையாக இருந்தாலும், இல்லாவிட்டாலும், இவ்வுலகில் இதற்கு முன் எவரும் காணாதவையும், உன்னால் காணப்பட்டவையுமான அற்புதங்களை எங்களுக்குச் சொல்வாயாக” என்று கேட்டான்.(43,44)

அத்³ருஷ்டபூர்வமன்யைர்வா யோக்³யாயோக்³யமனிந்தி³தே |
ஸோவாச வஜ்ரநாப⁴ம் து ஹம்ஸீ வரனரோத்தம ||2-92-45

ஷ்²ரூயதாமித்யதா²மந்த்ர்ய தா³னவேந்த்³ரம் மஹாத்³யுதிம் |
த்³ருஷ்டா மே ஷா²ண்டி³லீ நாம ஸாட்⁴வீ தா³னவஸத்தம |
ஆஷ்²சர்யம் கர்ம குர்வந்தீ மேருபார்ஷ்²வே மனஸ்வினீ ||2-92-46

ஸுமநாஷ்²சைவ கௌஷ²ல்யா ஸர்வபூ⁴தஹிதே ரதா |
கத²ஞ்சித்³வரஷா²ண்டி³ல்யா꞉ ஷை²லபுத்ர்யா꞉ ஷு²பா⁴ ஸகீ² ||2-92-47

நடஷ்²சைவ மயா த்³ருஷ்டோ முனித³த்தவர꞉ ஷு²ப⁴꞉ |
காமரூபீ ச போ⁴ஜ்யஷ்²ச த்ரைலோக்யே நித்யஸம்மத꞉ ||2-92-48

குரூன்யாத்யுத்தரான்வீர காலாம்ரத்³வீபமேவ ச |
ப⁴த்³ராஷ்²வான்கேதுமாலாம்ஷ்²ச த்³வீபானன்யாம்ஸ்ததா²னக⁴ ||2-92-49

தே³வக³ந்த⁴ர்வகே³யானி ந்ருத்யானி விவிதா⁴னி ச |
ஸ வேத்தி தே³வாந்ந்ருத்யேன விஸ்மாபயதி ஸர்வதா² ||2-92-50

ஓ! மன்னா {ஜனமேஜயா}, அப்போது அந்த அன்னப்பறவை வஜ்ரநாபனிடம், “ஓ! தானவர்களில் முதன்மையானவனே, சுமேரு மலையின் சாரலில் அற்புதம் நிறைந்த அருஞ்செயலைச் செய்பவளும், சாண்டிலி என்ற பெயர்கொண்டவளுமான நுண்ணறிவுமிக்கப் பெண்துறவியை நான் கண்டேன்.(45,46) மலைத்தலைவனின் மங்கல மகளுக்கு (உமைக்கு) நல்ல தோழியாக இருக்கும் அந்தச் சாண்டிலி, பரந்த மனம் கொண்டவளாகவும், உலகிற்குப் பெரும் நன்மையைச் செய்பவளாகவும் இருக்கிறாள்[“அஸுரச்ரேஷ்டனே, ஆச்சர்ய கார்யங்கள் செய்யும் நல்ல மனதுடைய பதிவ்ரதை சாண்டிலி என்பவள் என்னால் பார்க்கப்பட்டாள். அவள் எல்லா ப்ராணிகளின் ஹிதத்தில் ப்ரியமுடையவள். நல்ல மனதுள்ளவளும் கூட. சைலி புத்ரி சாண்டில்யைக்கு மங்களமான தோழி (ஒருத்தி). அவளுக்குக் கௌஸல்யை எனப் பெயர்”].(47) முனிவர்களிடம் வரம் பெற்றவனும், விரும்பிய வடிவங்களை ஏற்கவல்லவனும், மூவுலகங்களில் உள்ள அனைவருக்கும் எப்போதும் உணவைக் கொடுப்பவனும், அனைவராலும் விரும்பப்படுபவனுமான மங்கல நடிகன் ஒருவனையும் நான் கண்டேன்.(48) ஓ! பாவமற்ற வீரா, அந்த நடிகன் உத்தரகுரு, காலம்ர, பத்ராஸ்வ, கேதுமாலா தீவுகளுக்கும், இன்னும் பிற தீவுகளுக்கும் எப்போதும் பயணம் செய்கிறான்.(49) அவன் தேவர்கள், கந்தர்வர்கள் ஆகியோரின் பாடல்கள் பலவற்றையும், நடனங்கள் பலவற்றையும் அறிந்திருக்கிறான். அவன் தன்னுடைய நடனத்தால் தேவர்களையும் ஆச்சரியப்படுத்துகிறான்” என்றது {என்றாள் சுசீமுகி}.(50)

வஜ்ரநாப⁴ உவாச
ஷ்²ருதமேதன்மயா ஹம்ஸி ந சிராதி³வ விஸ்தரம் |
சாரணானாம் கத²யதாம் ஸித்³தா⁴னாம் ச மஹாத்மனாம் ||2-92-51

குதூஹலம் மமாப்யஸ்தி ஸர்வதா² பக்ஷினந்தி³னி |
நடே த³த்தவரே தஸ்மின்ஸம்ஸ்தவஸ்து ந வித்³யதே ||2-92-52

வஜ்ரநாபன், “ஓ! அன்னமே, இதை நான் ஏற்கனவே பலமுறை கேட்டிருக்கிறேன். உயரான்ம சித்தர்களும், சாரணர்களும் இதை எனக்குச் சொல்லியிருக்கின்றனர்.(51) ஓ! பறவையின் மகளே, இந்த வரத்தை அடைந்திருக்கும் அந்த நடிகனைக் காணும் ஆவலில் நானும் பீடிக்கப்பட்டிருக்கிறேன். அவனை என்னிடம் வரச் செய்யும் வகையில் என்னுடைய புகழை அவனிடம் சொல்ல எவரும் இல்லை” என்றான்.(52)

ஹம்ஸ்யுவாச
ஸப்தத்³வீபான்விசரதி நட꞉ ஸ தி³திஜோத்தம |
கு³ணவந்தம் ஜனம் ஷ்²ருத்வா கு³ணகார்ய꞉ ஸ ஸர்வதா² ||2-92-53

தவ சேச்ச்²ருணுயாத்³வீர ஸத்³பூ⁴தம் கு³ணவிஸ்தரம் |
நடம் ததா³க³தம் வித்³தி⁴ புரம் தவ மஹாஸுர ||2-92-54

வஜ்ரநாப⁴ உவாச
உபாய꞉ ஸ்ருஜதாம் ஹம்ஸி யேனேஹ ஸ நட꞉ ஷு²பே⁴ |
ஆக³ச்சே²ன்மம ப⁴த்³ரம் தே விஷயம் பக்ஷினந்தி³னி ||2-92-55

அந்த அன்னம் {வஜ்ரநாபனிடம்}, “ஓ! அசுரர்களில் முதன்மையானவனே, அந்த நடிகன் சிறப்புத் தகுதிகளை மெச்சுபவனாவான். சிறப்புத் திறன்களைக் கொண்ட நபர்களை {குணவான்களைப்} பற்றிக் கேள்விப்பட்டு {அவர்களைக் காண்பதற்காக} தனித்தீவுகளான ஏழு கண்டங்களுக்கும் அவன் பயணிக்கிறான்.(53) ஓ! பேரசுரா, உன்னுடைய பெருஞ்சாதனைகளை அவன் கேட்டுவிட்டால், ஏற்கனவே இங்கே வந்துவிட்டவனாக அவனை அறிவாயாக” என்றது {என்றாள் சுசீமுகி}.(54)
வஜ்ரநாபன், “ஓ! பறவையின் மங்கல மகளே, ஓ! அன்னமே, உனக்கு நன்மை நேரட்டும். அந்த நடிகன் இங்கே வருவதற்கான ஏற்பாட்டைச் செய்வாயாக” என்றான்.(55)

தே ஹம்ஸா வஜ்ரநாபே⁴ன கார்யஹேதோர்விஸர்ஜிதா꞉ |
தே³வேந்த்³ராயாத² க்ருஷ்ணாய ஷ²ஷ²ம்ஸு꞉ ஸர்வமேவ தத் ||2-92-56

அதோ⁴க்ஷஜேன ப்ரத்³யும்னோ நியுக்தஸ்தத்ர கர்மணி |
ப்ரபா⁴வத்யாஷ்²ச ஸம்ஸர்கே³ வஜ்ரநாப⁴வதே⁴ ததா² ||2-92-57

தை³வீம் மாயாம் ஸமாஷ்²ரித்ய ஸம்விதா⁴ய ஹரிர்னடம் |
நடவேஷேண பை⁴மானாம் ப்ரேஷயாமாஸ பா⁴ரத ||2-92-58

வஜ்ரநாபனால் இவ்வாறு தூதுப்பணிக்காக அனுப்பப்பட்ட அன்னங்கள் கிருஷ்ணனிடமும், தேவர்களின் மன்னனிடமும் {இந்திரனிடமும்} சென்று அனைத்தையும் சொல்லின.(56) இதைக் கேட்ட அதோக்ஷஜன் {கிருஷ்ணன்}, பிரபாவதியை அடைந்து, வஜ்ரநாபனைக் கொல்லும் பணியில் பிரத்யும்னனை ஈடுபடுத்தினான்.(57) ஓ! பரதனின் வழித்தோன்றலே, அந்த ஹரி, தெய்வீக மாயையைப் பயன்படுத்தி, நடிகர்களின் வேடத்தில் பைமர்களை அனுப்பினான்.(58)

ப்ரத்³யும்னம் நாயகம் க்ருத்வா ஸாம்ப³ம் க்ருத்வா விதூ³ஷகம் |
பாரிபார்ஷ்²வே க³த³ம் வீரமன்யான்பை⁴மாம்ஸ்ததை²வ ச ||2-92-59

வாரமுக்²யா நடீ꞉ க்ருத்வா தத்தூர்யஸத்³ருஷா²ஸ்ததா³ |
ததை²வ ப⁴த்³ரம் ப⁴த்³ரஸ்ய ஸஹாயாம்ஷ்²ச ததா²விதா⁴ன் |2-92-60

ப்ரத்³யும்னவிஹிதம் ரம்யம் விமானம் தே மஹாரதா²꞉ |
ஜக்³முராருஹ்ய கார்யார்த²ம் தே³வாநாமமிதௌஜஸாம் ||2-92-61

ஏகைகஸ்ய ஸமா ரூபே புருஷ꞉ புருஷஸ்ய தே |
ஸ்த்ரீணாம் ச ஸத்³ருஷா²꞉ ஸர்வே தே ஸ்வரூபைர்னராதி⁴பா꞉ ||2-92-62

தே வஜ்ரநக³ரஸ்யாத² ஷா²கா²நக³ரமுத்தமம் |
ஜக்³முர்தா³னவஸங்கீர்ணம் ஸுபுரம் நாம நாமத꞉ ||2-92-63

அவர்கள் பிரத்யும்னனை நாயகனாகவும் {நாடகத்தலைவனாகவும்}, சாம்பனை நகைச்சுவை நடிகனாகவும் {விதூஷகனாகவும்}, கதனை அவனது தோழனாகவும் {பக்க பாடகனாகவும் / பாரிபார்ஷவனாகவும்} வேடந்தரிக்கச் செய்தனர். பைமர்கள் பிறர் நல்ல ஆடைகளுடன் {துணை நடிகர்களாக} மாறுவேடம் பூண்டனர்.(59) இசைக்கருவிகளுடன் கூடிய முன்னணி ஆடற்பெண்டிர் {வேசிகள்} அந்தக் குழுவுக்குத் தகுந்த நாயகிகளாக இருந்தனர். நடிகன் பத்ரனும், அவனது குழுவினரும் தகுந்த ஆடைகளை உடுத்திக் கொண்டனர்.(60) அதன்பிறகு அந்த யாதவர்கள், பெருந்தேர்வீரனான பிரத்யும்னனால் செலுத்தப்பட்ட தேர்களில் {விமானத்தில்} ஏறிக்கொண்டு பெருஞ்சக்திவாய்ந்த தேவர்களின் பணியைச் செய்வதற்காகப் புறப்பட்டுச் சென்றனர்.(61) ஓ! மன்னா, ஆண்களாக இருந்தாலும் அவர்கள் ஆண்களாகவும், தேவையின் அடிப்படையில் பெண்களாகவும் வேடந்தரித்துச் சென்றனர்.(62) பிறகு அவர்கள் அசுரர்களின் வசிப்பிடமான வஜ்ரத்தின் துணை நகரான ஸுபுரத்தை அடைந்தனர்” என்றார் {வைசம்பாயனர்}.(63)

இதி ஷ்²ரீமஹாபா⁴ரதே கி²லேஷு ஹரிவம்ஷே² விஷ்ணுபர்வணி
வஜ்ரநாப⁴ப்ரத்³யும்னோத்தரே ப்ரத்³யும்நாதி³க³மனே
த்³வினவதிதமோ(அ)த்⁴யாய꞉

————–—————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாஸ பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விஷ்ணு பர்வம்–அத்யாயம் – 91–(வஜ்ரநாபவதவ்ருத்தாந்தம்)-பிரபாவதி – வஜ்ரநாபவதம் |–

January 31, 2021

வஜ்ரநாபன் பெற்ற வரங்கள்; பத்ரநாபன் பெற்ற வரம்; பிரபாவதியிடம் அன்னப்பறவையைத் தூதனுப்பிய இந்திரன்

ஜனமேஜய உவாச
பா⁴னுமத்யாபஹரணம் விஜயம் கேஷ²வஸ்ய ச ||2-91-1

க்ரீடா³ம் ச ஸாக³ரே தி³வ்யாம் வ்ருஷ்ணீநாமதிதேஜஸாம் |
அஷ்²ரௌஷம் பரமாஷ்²சர்யம் முனே த⁴ர்மப்⁴ருதாம் வர ||2-91-2

வஜ்ரநாப⁴வத⁴ம் யுக்தம் நிகும்ப⁴வத⁴கீர்தனே |
தன்மே கௌதூஹலம் ஷ்²ரோதும் ப்ரஸாதா³த்³ப⁴வதோ முனே ||2-91-3

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! முனிவரே, ஓ! அறவோரில் முதன்மையானவரே, பானுமதி அபகரிக்கப்பட்டதையும், கேசவனின் வெற்றிப்பேற்றையும், ஒப்பற்ற சக்தி கொண்ட விருஷ்ணிகள் கடலில் தேவர்களைப் போல விளையாடியதையும்,(1) தேவலோகத்தில் இருந்து சாலிக்யம் கொண்டு வரப்பட்டதையும், இன்னும் பல அற்புதக் காரியங்களையும் நான் கேட்டேன்.(2) நிகும்பன் அழிக்கப்பட்டதைச் சொன்னபோது வஜ்ரநாபன் குறித்து நீர் குறிப்பிட்டீர். ஓ! முனிவரே, இப்போது அதைக் கேட்க நான் ஆவலாக இருக்கிறேன்” என்றான்.(3)

வைஷ²ம்பாயன உவாச
ஹந்த தே வர்தயிஷ்யாமி வஜ்ரநாப⁴வத⁴ம் ந்ருப |
விஜயம் சைவ காமஸ்ய ஸாம்ப³ஸ்யைவ ச பா⁴ரத ||2-91-4

மேரோ꞉ ஸானௌ நரபதே தபஷ்²சக்ரே மஹாஸுர꞉ |
வஜ்ரநாப⁴ இதி க்²யாதோ நிஷ்²சித꞉ ஸமிதிஞ்ஜய꞉ ||2-91-5

தஸ்ய துஷ்டோ மஹாதேஜா ப்³ரஹ்மா லோகபிதாமஹ꞉ |
வரேண ச்ச²ந்த³யாமாஸ தபஸா பரிதோஷித꞉ ||2-91-6

அவத்⁴யத்வம் ஸ தே³வேப்³யோ வவ்ரே தா³னவஸத்தம꞉ |
புரம் வஜ்ரபுரம் சாபி ஸர்வரத்னமயம் ஷு²ப⁴ம் ||2-91-7

ஸ்வச்ச²ந்தே³ன ப்ரவேஷ²ஷ்²ச ந வாயோரபி பா⁴ரத |
அசிந்திதேன காமாநாமுபபத்திர்னராதி⁴ப ||2-91-8

ஷா²கா²நக³ரமுக்²யானாம் ஸம்வாஹானாம் ஷ²தானி ச |
நக³ரஸ்யாப்ரமேயஸ்ய ஸமந்தாஜ்ஜனமேஜய ||2-91-9

ததா² தத³ப⁴வத்தஸ்ய வரதா³னேன பா⁴ரத |
உவாஸ வஜ்ரநக³ரே வஜ்ரநாபோ⁴ மஹாஸுர꞉ ||2-91-10

கோடிஷோ² வரலப்³த⁴ம் தமஸுரா꞉ பரிவார்ய தே |
ஊஷுர்வஜ்ரபுரே ராஜன்ஸம்வாஹேஷு ததை²வ ச ||2-91-11

ஷா²கா²நக³ரமுக்²யேஷு ரம்யேஷு ச நராதி⁴ப |
ஹ்ருஷ்டபுஷ்டப்ரமுதி³தா ந்ருப தே³வஸ்ய ஷ²த்ரவ꞉ ||2-91-12

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “ஓ! பெரும் மன்னா, ஓ! பரதனின் வழித்தோன்றலே, காமன் {பிரத்யும்னன்}, சாம்பன் ஆகியோரின் வெற்றிப்பேற்றையும், வஜ்ரநாபனின் அழிவையும் நான் சொல்லப்போகிறேன் கேட்பாயாக.(4) ஓ! படைகளை வெல்பவனே, வஜ்ரநாபன் என்ற பெயர் படைத்த பேரசுரன் ஒருவன் சுமேரு மலையின் உச்சியில் கடுந்தவம் செய்து கொண்டிருந்தான்.(5) உலகின் பெரும்பாட்டனும், தெய்வீகனுமான பிரம்மன், அவனது தவங்களில் மகிழ்ந்து ஒரு வரம் கேட்குமாறு அவனிடம் சொன்னான்.(6) ஓ! ஜனமேஜய மன்னா, தானவர்களில் முதன்மையான அவன், தேவர்களால் கொல்லப்படாத நிலையைப் பெறுவது, காற்றும் புக முடியாததும், நினைக்காத போதும் விருப்பத்திற்குரிய ஒவ்வொரு பொருளையும் கொடுக்கவல்லதும், மதில்களால் சூழப்பட்ட தோட்டங்களையும், கிளை நகரங்கள் பலவற்றையும், பெருமைகள் அனைத்துடன் கூடிய ஒப்பற்ற ரத்தினங்களையும் கொண்டதுமான வஜ்ர நகரத்தைப் பெறுவது என்ற இரு வரங்களைக் கேட்டான்.(7-9) பேரசுரன் வஜ்ரநாபன் அந்த வரத்தின் மூலம் தான் வேண்டியதைப் பெற்றுக் கொண்டு வஜ்ர நகரத்தில் வாழ்ந்து வந்தான்.(10) ஓ! மன்னா, இந்த வரத்தைப் பெற்ற அந்தப் பேரசுரனின் புகலிடத்தை நாடி வந்த கோடிக்கணக்கான அசுரர்கள், அவனது தோட்டங்களிலும், அழகிய கிளை நகரங்கள் பலவற்றிலும் வாழ்ந்து வந்தனர்.(11) ஓ! மன்னா, தேவர்களின் பகைவர்களான அவர்கள் நல்ல உடல் நலத்துடனும், ஊட்டத்துடனும், நிறைவுடனும் அங்கே வாழ்ந்து வந்தனர்.(12)

வஜ்ரநாபோ⁴(அ)த² து³ஷ்டாத்மா வரதா³னேன த³ர்பித꞉ |
புரே(அ)ஸ்ய சாத்மனஷ்²சைவ ஜக³த்³பா³தி⁴துமுத்³யத꞉ ||2-91-13

மஹேந்த்³ரமப்³ரவீத்³க³த்வா தே³வலோகம் விஷா²ம்பதே |
அஹமீஷி²துமிச்சா²மி த்ரைலோக்யம் பாகஷா²ஸன ||2-91-14

அத²வா மே ப்ரயச்ச²ஸ்வ யுத்³த⁴ம் தே³வக³ணேஷ்²வர |
ஸாமான்யம் ஹி ஜக³த்க்ருத்ஸ்னம் காஷ்²யபானாம் மஹாத்மனாம் ||2-91-15

ஒரு காலத்தில் தான் பெற்ற வரத்தினாலும், தன்னுடைய நகரத்தினாலும் செருக்கில் மிதந்து வந்த தீயவனான வஜ்ரநாபன், உலகை ஒடுக்க முற்பட்டான்.(13) ஓ! மன்னா, அவன் தேவர்களின் மன்னனிடம் {இந்திரனிடம்} சென்று, “ஓ! பாகனைக் கொன்றவனே, மூவுலகங்கள் அனைத்தும் கசியபரின் உயரான்ம மகன்கள் அனைவருக்கும் உரிய பொது உடைமைகளாகும். எனவே, நான் மூவுலகங்களையும் ஆள விரும்புகிறேன். ஓ! தேவர்களின் மன்னா, என்னுடைய முன்மொழிவை நீ ஏற்றுக் கொள்ளாவிட்டால் என்னுடன் போரிடுவாயாக” என்றான்.(14,15)

ஸ ப்³ருஹஸ்பதினா ஸார்த⁴ம் மந்த்ரயித்வா மஹேஷ்²வர꞉ |
வஜ்ரநாப⁴ம் ஸுரஷ்²ரேஷ்ட²꞉ ப்ரோவாச குருவம்ஷ²ஜ ||2-91-16

ஸத்ரேஷு தீ³க்ஷித꞉ ஸௌம்ய கஷ்²யபோ ந꞉ பிதா முனி꞉ |
தஸ்மின்வ்ருத்தே யதா²ந்யாய்யம் ததா² ஸ ஹி கரிஷ்யதி ||2-91-17

ஓ! குருவின் வழித்தோன்றலே {ஜனமேஜயனே}, தேவர்களில் முதன்மையான மஹேந்திரன், வஜ்ரநாபனின் சொற்களைக் கேட்டு, பிருஹஸ்பதியுடன் ஆலோசித்து,(16) “ஓ! மென்மையானவனே, நம் தந்தையான கசியப முனிவர் இப்போது தவத்தில் ஈடுபட்டு வருகிறார். அது நிறைவடைந்ததும் அவரே நியாயமானதைச் செய்வார்” என்றான்.(17)

தத꞉ ஸ பிதரம் க³த்வா கஷ்²யபம் தா³னவோ(அ)ப்³ரவீத் |
யதோ²க்தம் தே³வராஜேன தமுவாசாத² கஷ்²யப꞉ ||2-91-18

ஸத்ரே வ்ருத்தே கரிஷ்யாமி யதா²ந்யாயம் ப⁴விஷ்யதி |
த்வம் து வஜ்ரபுரே புத்ர வஸ க³ச்ச² ஸமாஷ்²ரித꞉ ||2-91-19

அந்தத் தானவன் தன்னுடைய தந்தையான கசியபரிடம் சென்று தன் விருப்பத்தைத் தெரிவித்தான். தேவர்களின் மன்னன் சொன்னதையே கசியபரும் சொன்னார்.(18) அவர் {கசியபர்}, “ஓ! மகனே, வஜ்ர நகரத்திற்குச் சென்று தற்கட்டுப்பாட்டுடன் அங்கே வாழ்வாயாக. யஜ்ஞம் நிறைவடைந்ததும் நியாயமானதைச் செய்கிறேன்” என்றார்.(19)

ஏவமுக்தே வஜ்ரநாப⁴꞉ ஸ்வமேவ நக³ரம் க³த꞉ |
மஹேந்த்³ரோ(அ)பி யயௌ தே³வோ த்³வாரகாம் த்³வாரஷா²லினீம் ||2-91-20

க³த்வா சாந்தர்ஹிதோ தே³வோ வாஸுதே³வமதா²ப்³ரவீத் |
வஜ்ரநாப⁴ஸ்ய வ்ருத்தாந்தம் தமுவாச ஜனார்த³ன꞉ ||2-91-21

ஷௌ²ரேருபஸ்தி²தோ தே³வ வாஜிமேதோ⁴ மஹாக்ரது꞉ |
தஸ்மின்வ்ருத்தே வஜ்ரநாப⁴ம் பாதயிஷ்யாமி வாஸவ ||2-91-22

தத்ரோபாயம் ப்ரவேஷே² து சிந்தயாவ꞉ ஸதாம் க³தே꞉ |
நானிச்ச²யா ப்ரவேஷோ²(அ)ஸ்தி தத்ர வாயோரபி ப்ரபோ⁴ ||2-91-23

இவ்வாறு சொல்லப்பட்ட வஜ்ரநாபன் தன் நகருக்குத் திரும்பிச் சென்றான். மஹேந்திரன், பல வாயில்களைக் கொண்ட துவாராவதி நகருக்குச் சென்று,(20) வஜ்ரநாபன் சொன்னதை வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்} கமுக்கமாகச் சொன்னான். அப்போது ஜனார்த்தனன்,(21) “ஓ! வாசவா, இப்போது வசுதேவரின் குதிரை வேள்வி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அது நிறைவடைந்ததும் நான் வஜ்ரநாபனைக் கொல்வேன்.(22) ஓ! தலைவா, ஓ! அறவோரின் புகலிடமே, வஜ்ரநாபனின் விருப்பமில்லாமல் காற்றாலும் அவனது நகருக்குள் புக முடியாது. வசதியான ஒரு நேரத்தில் நாம் அதற்குள் நுழைவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்” என்றான்.(23)

ததோ க³தோ தே³வராஜோ வாஸுதே³வேன ஸத்க்ருத꞉ |
வாஜிமேதே⁴ ச ஸம்ப்ராப்தே வஸுதே³வஸ்ய பா⁴ரத ||2-91-24

தஸ்மின்யஜ்ஞே வர்தமானே ப்ரவேஷா²ர்த²ம் ஸுரோத்தமௌ |
சிந்தயாமாஸதுர்வீரௌ தே³வராஜாச்ய்தாவுபௌ⁴ ||2-91-25

ஓ! பரதனின் வழித்தோன்றலே, அந்தக் குதிரைவேள்வியில் தேவர்களின் மன்னன் {இந்திரன்}, வாசுதேவனின் மகனால் {பிரத்யும்னனால்} கௌரவிக்கப்பட்டுப் புறப்பட்டுச் சென்றான்.(24) வீரமிக்க வாசவனும் {இந்திரனும்}, தேவர்களில் முதன்மையான கேசவனும் வசுதேவரின் வேள்வி நிறைவடைவதற்கு முன்பே வஜ்ர நகரத்திற்குள் நுழைவதற்கான வழிமுறைகளைச் சிந்திக்கத் தொடங்கினர்.(25)

தத்ர யஜ்ஞே வர்தமானே ஸுநாட்யேன நடாஸ்ததா³ |
மஹர்ஷீம்ஸ்தோஷயாமாஸ ப⁴த்³ரநாமேதி நாமத꞉ ||2-91-26

தம் வரேண முநிஷ்²ரேஷ்டா²ஷ்²ச²ந்த³யாமாஸுராத்மவத் |
ஸ வவ்ரே து நடோ ப⁴த்³ரோ வரம் தே³வேஷ்²வரோபம꞉ ||2-91-27

தே³வேந்த்³ரக்ருஷ்ணச்ச²ந்தே³ன ஸரஸ்வத்யா ப்ரசோதி³த꞉ |
ப்ரணிபத்ய முநிஷ்²ரேஷ்டா²னஷ்²வமேதே⁴ ஸமாக³தான் ||2-91-28

வசுதேவனின் வேள்வியில் பத்ரன் என்ற பெயர் கொண்ட நடிகன் ஒருவன், தன்னுடைய அழகிய நடிப்பால் பெரும் முனிவர்களை மகிழ்ச்சியடையச் செய்தான்.(26) அப்போது அந்த முன்னணி முனிவர்கள் ஒரு வரத்தை வேண்டுமாறு அவனிடம் கேட்டனர். தேவர்களின் மன்னனுக்கு {இந்திரனுக்கு} ஒப்பானவனும், நடிகனுமான பத்ரன், அந்தக் குதிரை வேள்வியில் கூடியிருந்த சிறந்த முனிவர்களான அவர்களை வணங்கி, கல்வி தேவியினால் {சரஸ்வதியினால்} தூண்டப்பட்டது போலக் கிருஷ்ணனின் விருப்பத்திற்கேற்ற வகையில் பின்வரும் வரத்தை வேண்டினான்.(27,28)

நட உவாச
போ⁴ஜ்யோ த்³விஜானாம் ஸர்வேஷாம் ப⁴வேயம் முநிஸத்தமா꞉ |
ஸப்தத்³வீபாம் ச ப்ரூதி²வீம் விசரேயமிமாமஹம் ||2-91-29

ப்ரஸித்³தா⁴காஷ²க³மன꞉ ஷ²க்னுவம்ஷ்²ச விஷே²ஷத꞉ |
அவத்⁴ய꞉ ஸர்வபூ⁴தானாம் ஸ்தா²வரா யே ச ஜங்க³மா꞉ ||2-91-30

யஸ்ய யஸ்ய ச வேஷேண ப்ரவிஷே²யமஹம் க²லு |
ம்ருதஸ்ய ஜீவதோ வாபி பா⁴வ்யேனோத்பாதி³தஸ்ய வா ||2-91-31

ஸ தூர்யஸ்தாத்³ருஷ²꞉ ஸ்யாம் வை ஜராரோக³விவர்ஜித꞉ |
துஷ்தேயுர்முனயோ நித்யமன்யே ச மம ஸர்வதா³ ||2-91-32

அந்த நடிகன் {பத்ரன்}, “ஓ! முனிவர்களில் முதன்மையானவர்களே, நான் இருபிறப்பாளர்கள் அனைவரின் உணவென ஆவேனாக[“எல்லா த்விஜர்களுக்கும் நான் அனுபவிக்கத் தக்கவனாக ஆக வேண்டும்”]; தனித்தீவுகளாக இருக்கும் ஏழு கண்டங்களைக் கொண்ட பூமி முழுவதும் செல்லக்கூடியவன் ஆவேனாக;(29) எத்தடையுமின்றி நான் வானம் முழுவதும் திரிபவன் ஆவேனாக; பலத்தைக் கொடையாகப் பெற்றவனும், அசையும் உயிரினங்களாலும், அசையாத உயிரினங்களாலும் கொல்லப்பட முடியாதவனும் ஆவேனாக.(30) பிறந்த, இறந்த, பிறக்கப்போகிற எந்த வடிவத்தையும் நான் ஏற்கவல்லவன் ஆவேனாக. {அனைத்து வகையிலும் அவர்களைப் போன்றே தோன்றும் {நடிக்கும்} திறமையுடன் இருப்பேனாக}.(31) எனக்கு முதுமை நேராதிருக்கட்டும், முனிவர்கள் எப்போதும் என்னிடம் நிறைவடைந்தவர்களாக இருக்கட்டும்” என்று கேட்டான்.(32)

ஏவமஸ்த்விதி ஸம்ப்ரோக்தோ ப்³ராஹ்மணைர்ந்ருபதே நட꞉ |
ஸப்தத்³வீபாம் வஸுமதீம் பர்யடத்யமரோபம꞉ ||2-91-33

புராணி தா³னவேந்த்³ராணாமுத்தராம்ஷ்²ச குரூம்ஸ்ததா² |
ப⁴த்³ராஷ்²வான்கேதுமாலாம்ஷ்²ச காலாப்⁴ரத்³வீபமேவ ச ||2-91-34

பர்வணீஷு து ஸர்வாஸு த்³வாரகாம் யது³மண்டி³தாம் |
ஆயாதி வரத³த்த꞉ ஸ லோகவீரோ மஹானட꞉ ||2-91-35

ஓ! மன்னா, அந்த முனிவர்கள், “அப்படியே ஆகட்டும்” என்றனர். தேவனைப் போன்ற அவன் {பத்ரன்}, தனித்தீவுகளான ஏழு கண்டங்களை {த்வீபங்களைக்} கொண்ட பூமி முழுவதும் திரியத் தொடங்கினான்.(33) தானவ மன்னர்களின் நகரங்களிலும், உத்தரகுரு, பத்ராஸ்வம், கேதுமாலம் என்ற நாடுகளிலும், காலாம்ரத்தீவிலும் தன்னுடைய நிகழ்ச்சிகளை நடத்தத் தொடங்கினான்.(34) இந்த வரத்தைப் பெற்ற அந்தப் பெரும் நடிகன், ஒவ்வொரு பர்வத்தின் போதும் யாதவர்களால் அலங்கரிக்கப்பட்ட துவாரகைக்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.(35)

ததோ ஹம்ஸாந்தா⁴ர்தராஷ்ட்ராந்தே³வலோகநிவாஸின꞉ |
உவாச ப⁴க³வாஞ்ஷ²க்ர꞉ ஸாந்த்வயித்வா ஸுரேஷ்²வர꞉ ||2-91-36

ப⁴வந்தோ ப்⁴ராதரோ(அ)ஸ்மாகம் காஷ்²யபா தே³வபக்ஷிண꞉ |
விமானவாஹா தே³வானம் ஸுக்ருதீனாம் ததை²வ ச ||2-91-37

தே³வாநாமஸ்தி கர்தவ்யம் கார்யம் ஷ²த்ருவதா⁴ன்விதம் |
தத்கர்தவ்யம் ந மந்த்ரஷ்²ச பே⁴த்தவ்யோ ந꞉ கத²ஞ்சன ||2-91-38

ந குர்வதாம் தே³வதாஜ்ஞாமுக்³ரோ த³ண்ட³꞉ பதேத³பி |
ஸர்வத்ராப்ரதிஷித்³த⁴ம் வோ க³மனம் ஹம்ஸஸத்தமா꞉ ||2-91-39

க³த்வாப்ரவேஷ்²யமன்யேஷாம் வஜ்ரநாப⁴புரோத்தமம் |
இதோ(அ)ந்த꞉புரவாபீஷு சரத்⁴வமுசிதம் ஹி வ꞉ ||2-91-40

ஒரு நாள் தேவர்களின் மன்னனும், தெய்வீகனுமான சக்ரன் {இந்திரன்}, தார்தராஷ்டிர அன்னப்பறவைகளிடம்,(36) “ஓ! தெய்வீகப் பறவைகளே, நீங்கள் தேவர்கள், அறவோர் ஆகியோரின் விமானங்களாக இருப்பினும், கசியபரால் பெறப்பட்ட என்னுடன் பிறந்தவர்களுமாவீர்கள்.(37) இப்போது தேவர்களின் பகைவரைக் கொல்லும் பெருங்கடமை நமக்கிருக்கிறது. அதை நீங்கள் நிறைவேற்ற வேண்டும். இந்த ஆலோசனையை வெளிப்படுத்தாமல் கவனமாக இருப்பீராக.(38) தேவர்களின் ஆணைகளுக்கு நீங்கள் கீழ்ப்படியவில்லையெனில் கடுந்தண்டனைகளைப் பெறுவீர்கள். ஓ! அன்னங்களில் முதன்மையானவர்களே, நீங்கள் விரும்பியவாறு எங்கும் செல்லவல்லவர்கள்.(39) எனவே, வேறு யாரும் நுழைய முடியாத வஜ்ரநாபனின் மிகச் சிறந்த நகரத்திற்குச் சென்று அவனது அந்தப்புரத்தில் உள்ள தடாகங்களில் நீங்கள் திரிய வேண்டும்.(40)

தஸ்யாஸ்தி கன்யாரத்னம் ஹி த்ரைலோக்யாதிஷ²யம் ஷு²ப⁴ம் |
நாம்னா ப்ரபா⁴வதீ நாம சந்த்³ராபே⁴வ ப்ரபா⁴வதீ ||2-91-41

வரதா³னேன ஸா லப்³தா⁴ மாத்ரா கில வரானனா |
ஹைமவத்யா மஹாதே³வ்யா꞉ ஸகாஷா²தி³தி ந꞉ ஷ்²ருதம் ||2-91-42

ஸ்வயம்வரா ச ஸா கன்யா ப³ந்து⁴பி⁴꞉ ஸ்தா²பிதா ஸதீ |
ஆத்மேச்ச²யா பதிம் ஹம்ஸா வரயிஷ்யதி ஷோ²ப⁴னா || 2-91-43

தத்³ப⁴வத்³பி⁴ர்கு³ணா வாச்யா꞉ ப்ரத்³யும்னஸ்ய மஹாத்மன꞉ |
ஸத்³பூ⁴த꞉ குலரூபஸ்ய ஷீ²லஸ்ய வயஸஸ்ததா² ||2-91-44

யதா³ ஸா ரக்தபா⁴வா ச வஜ்ரநாப⁴ஸுதா ஸதீ |
தஸ்யா꞉ ஸகாஷா²த்ஸந்தே³ஷோ² நயிதவ்ய꞉ ஸமாதி⁴னா ||2-91-45

ப்ரத்³யும்னஸ்ய புனஸ்தஸ்மாதா³னயத்⁴வம் ததை²வ ச |
ஸ்வபு³த்³த்⁴யா ப்ராப்தகாலம் ச ஸம்விதே⁴யம் ஹிதம் மம ||2-91-46

நேத்ரவக்த்ரப்ரஸாத³ஷ்²ச கர்தவ்யஸ்தத்ர ஸர்வதா² ||2-91-47

ததா² ததா² கு³ணா வாச்யா꞉ ப்ரத்³யும்னஸ்ய மஹாத்மன꞉ |
யதா² யதா² ப்ரபா⁴வத்யா மனஸ்தத்ர ப⁴வேத்ஸ்தி²தம் ||2-91-48

வ்ருத்தாந்தஷ்²சானுதி³வஸம் ப்ரதே³யோ மம ஸர்வதா² |
த்³வாரவத்யாம் ச க்ருஷ்ணஸ்ய ப்⁴ராதுர்மம யவீயஸ꞉ ||2-91-49

தாவத்³யத்னஷ்²ச கர்தவ்ய꞉ ப்ரத்³யும்னோ யாவதா³த்மவித் |
பர்யாவர்தேத்³வராரோஹாம் வஜ்ரநாப⁴ஸுதாம் விபு⁴꞉ ||2-91-50

அந்த வஜ்ரநாபனுக்கு, மூவுலகங்களிலும் ஒப்பற்ற அழகைக் கொண்டவளும், சந்திரக் கதிர்களைப் போன்று வெண்ணிறம் கொண்டவளும், பெண்களில் ரத்தினமும், பிரபாவதி என்ற பெயர் கொண்டவளுமான மகள் ஒருத்தி இருக்கிறாள்.(41) ஹைமவதி தேவியால் அருளப்பட்ட வரத்தின் மூலம் அந்த அழகிய மகள் அவளது அன்னைக்குக் கிடைத்தாள்.(42) ஓ! அன்னங்களே, அந்த அழகிய பெண்ணை அவளது தோழியர் ஸ்வயம்வரத்தில் நிறுத்த போகின்றர், அவளும் தான் விரும்பிய கணவனைத் தேர்ந்தெடுக்கப் போகிறாள்.(43) உயரான்ம பிரத்யும்னனின் பல்வேறு திறன்களையும், அவனது குடும்பம், அழகு, குணம், வயது ஆகியவற்றையும் அவளிடம் நீங்கள் விளக்கிச் சொல்வீராக.(44) வஜ்ரநாபனின் மகளான அந்தக் கன்னிகை பிரத்யும்னனிடம் அன்பு கொள்கிறாள் என்பதைக் காணும்போது, அந்தச் செய்தியைக் கவனமாகக் கொண்டு சென்று,(45) பிரத்யும்னனின் பதில் செய்தியை அவளுக்குத் தெரிவிப்பீராக. தூது செல்லும் இந்தப் பணியில், உங்கள் நுண்ணறிவுக்குத் தகுந்த வகையில்,(46) அவர்களின் கண்களையும், முகங்களையும் ஆள்வீராக {கண்காணிப்பீராக}[“தக்க காலத்தில் எனக்கு ஹிதமானது உங்கள் ஸ்வய புத்தியால் செய்யத்தக்கது. ப்ரபாவதியின் நேத்ரமும், முகமும் மலரும்படி உங்களால் செய்யத்தக்கது” ]. இவ்வாறு நீங்கள் எனக்கு நன்மையைச் செய்ய வேண்டும்.(47) ஓ! அன்னங்களே, பிரபாவதியின் மனத்தை ஈர்ப்பது போன்ற வகையில் பிரத்யும்னனின் திறன்கள் அனைத்தையும் நீங்கள் விளக்கிச் சொல்ல வேண்டும்.(48) அங்கே நடப்பனவற்றை எனக்கும், துவாராவதியில் உள்ள என் தம்பி கிருஷ்ணனுக்கும் தினமும் சொல்ல வேண்டும்.(49) தற்கட்டுப்பாட்டைக் கொண்ட தலைவன் பிரத்யும்னன், வஜ்ரநாபனின் மகளை அபகரிக்கும் வரை நீங்கள் இவ்வாறு முயற்சி செய்ய வேண்டும்.(50)

அவத்⁴யாஸ்தே து தே³வானாம் ப்³ரஹ்மணோ வரத³ர்பிதா꞉ |
தே³வபுத்ரைர்ஹி ஹந்தவ்யா꞉ ப்ரத்³யும்னப்ரமுகை²ர்யுதி⁴ ||2-91-51

நடோ த³த்தவரஸ்தஸ்ய வேஷமாஸ்தா²ய யாத³வா꞉ |
ப்ரத்³யும்நாத்³யா க³மிஷ்யந்தி வஜ்ரநாப⁴விநாஷ²னா꞉ ||2-91-52

ஏதச்ச ஸர்வம் கர்தவ்யமன்யச்ச ஸர்வமேவ ஹி |
ப்ராப்தகாலம் விதா⁴தவ்யமஸ்மாகம் ப்ரியகாம்யயா ||2-91-53

ப்ரவேஷ²ஸ்தத்ர தே³வானாம் நாஸ்தி ஹம்ஸா꞉ கத²ஞ்சன |
வஜ்ரநாபே⁴ப்ஸிதே தத்ர ப்ரவேஷ²꞉ க²லு ஸர்வதா² ||2-91-54

பிரம்மன் அளித்த வரத்தால் செருக்கில் மிதக்கும் அந்தத் தானவர்களைத் தேவர்களால் கொல்ல முடியாது. எனவே பிரத்யும்னனும், தேவர்களின் பிற மகன்களும்தான் போரில் அவர்களை அழிக்க வேண்டும்.(51) பத்ரன் என்ற பெயரைக் கொண்ட நடிகன் ஒருவன், (அவனது நகருக்குள் நுழையும்) வரத்தை இப்போது அடைந்திருக்கிறான். எனவே, பிரத்யும்னன் தலைமையிலான யாதவர்கள் வேடந்தரித்துக் கொண்டு வஜ்ரநாபனின் நகருக்குள் நுழைவார்கள்.(52) ஓ! தார்தராஷ்டிரர்களே, நான் சொன்ன இவை யாவற்றையும் நீங்கள் செய்ய வேண்டும். எனக்கு இந்த நன்மையைச் செய்வதைத் தவிர்த்துக் காலத்திற்குத் தகுந்த பயனை விளைவிக்கும் செயல்களையும் நீங்கள் செய்ய வேண்டும்.(53) ஓ! அன்னங்களே, வஜ்ரன் விரும்பினால் மட்டுமே அவனுடைய நகருக்குள் நீங்கள் நுழைய முடியும். தேவர்களால் எந்த வழிமுறைகளினாலும் அங்கே நுழைய முடியாது” என்றான் {இந்திரன்}.(54)

இதி ஷ்²ரீமஹாபா⁴ரதே கி²லேஷு ஹரிவம்ஷே² விஷ்ணுபர்வணி
வஜ்ரநாப⁴வதே⁴ ஏகனவதிதமோ(அ)த்⁴யாய꞉

————–—————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாஸ பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விஷ்ணு பர்வம்–அத்யாயம் – 90–(பானுமதீஹரணம் நிகும்பவதஷ்ச)-பானுமதியை அபகரித்த நிகும்பன் | —

January 31, 2021

பிரத்யும்னன் செயலுக்குப் பழிதீர்க்க பானுமதியை அபகரித்த நிகும்பன்; நிகும்பனுடன் நடந்த கடும்போர்; நிகும்பன் வதம்; பானுமதியை சகாதேவனுக்கு மணமுடித்துக் கொடுத்தது–

வைஷ²ம்பாயன உவாச
தேஷாம் க்ரீடா³வஸக்தானாம் யதூ³னாம் புண்யகர்மணாம் |
சி²த்³ரமாஸாத்³ய து³ர்பு³த்³தி⁴ர்தே³வஷ²த்ருர்து³ராஸத³꞉ ||2-90-1

கன்யாம் பா⁴னுமதீம் நாம பா⁴னோர்து³ஹிதரம் ந்ருப |
ஜஹாராத்மவதா⁴காங்க்ஷீ நிகும்போ⁴ நாம தா³னவ꞉ ||2-90-2

அந்தர்ஹிதோ மோஹயித்வா யதூ³னாம் ப்ரமதா³ஜனம் |
மாயாவீ மாயயா ராஜன்பூர்வவைரமனுஸ்மரன் ||2-90-3

ப்⁴ராதுர்ஹி வஜ்ரநாப⁴ஸ்ய தஸ்ய கன்யா ப்ரபா⁴வதீ |
ப்ரத்³யும்னேன ஹ்ருதா வீர வஜ்ரநாப⁴ஸ்ததா² ஹத꞉ ||2-90-4

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “அறம்சார்ந்த யாதவர்கள் இவ்வாறு விளையாடிக் கொண்டிருந்தபோது, கொடியவனும், அணுகப்படமுடியாதவனும், தேவர்களின் பகைவனுமான தானவன் நிகும்பன், தன்னழிவை விரும்பி, ஒரு வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருந்து பானுமதி என்ற பெயரைக் கொண்டவளான பானுவின்[சத்யபாமாவின் மகன் ஒருவன் பானு என்ற பெயரைக் கொண்டவன் ஆவான். அவன் இவனாக இருந்தால் இங்கே சொல்லப்படும் பானுமதி கிருஷ்ணனின் பேத்தியாவாள். ஆனால் இங்கே சொல்லப்படும் பானுவும், சத்யபாமாவின் மகனான பானுவும் வெவ்வேறானவர்களாகவும் இருக்கலாம். இந்த அத்யாயத்தின் 6ம் அடிக்குறிப்பு இவர்கள் வெவ்வேறானவர்கள் என்ற முடிவையே எட்ட வழிவகுக்கும்.] அழகிய மகளை அபகரித்தான்.(1,2) ஓ! வீரா, முற்காலத்தில் அவனது சகோதரனான வஜ்ரநாபனின் மகள் பிரபாவதியைப் பிரத்யும்னன் கடத்தியிருந்தான், வஜ்ரநாபனும் கொல்லப்பட்டான். மாயைகளில் திறன்மிக்க அவன் {நிகும்பன்}, இந்தப் பழைய பகையை நினைத்து, தன்னை மறைத்துக் கொண்டு யாதவப் பெண்களைக் குழம்பச் செய்து பானுமதியை அபகரித்துச் சென்றான்.(3,4)

பா⁴னோரேவ ததா²ரண்யே வஸத்யவஸரேணா ஹி |
அஸ்வாதீ⁴னே து³ராத⁴ர்ஷே சி²த்³ரஜ்ஞோ தா³னவாத⁴ம꞉ ||2-90-5

கன்யாபுரே மஹாநாத³꞉ ஸஹஸா ஸமுபஸ்தி²த꞉ |
தஸ்யாம் ஹ்ரியந்த்யாம் கந்யாயாம் ருத³ந்த்யாம் ஸமிதிஞ்ஜய꞉ ||2-90-6

வஸுதே³வாஹுகௌ வீரௌ த³ம்ஷி²தௌ நிர்க³தாவுபௌ⁴ |
ஆர்தநாத³முபஷ்²ருத்ய பா⁴னோ꞉ கன்யாபுரே ததா³ ||2-90-7

ந த்³ருஷ்டிகோ³சரௌ தௌ து த³த்³ருஷா²தே(அ)பகாரிணம் |
ததை²வ த³ம்ஷி²தௌ யாதௌ யத்ர க்ருஷ்ணோ மஹாப³ல꞉ ||2-90-8

ஷ்²ருதார்த²꞉ ஸ்வம் விமானம் ததா³ருரோஹ ஜனார்த³ன꞉ |
பார்தே²ன ஸஹிதஸ்தார்க்ஷ்யம் நாக³ஷ²த்ருமரிந்த³ம꞉ ||2-90-9

ரதீ² த்வமனுக³ச்சே²தி ஸந்தி³ஷ்²ய மகரத்⁴வஜம் |
த்வரேதி க³ருட³ம் வீர꞉ ஸந்தி³தே³ஷ² ச காஷ்²யபம் ||2-90-10

பானுவின் பெண்களுக்குரிய அந்தப்புரத்தோடு {கன்யாபுரத்தோடு} இணைந்த தோட்டம் அணுகப்பட முடியாததாக இருந்தாலும், யாதவர்கள் விளையாட்டில் {சமுத்ரக்ரீடை / சாலிக்யக்ரீடை ஆகியவற்றில்} கவனமாக இருந்ததால் அந்நேரத்தில் அங்கே காவலர்கள் யாரும் இல்லை. இழிந்தவனான அந்தத் தானவன் {நிகும்பன்}, பாதுகாப்பில்லாத அந்தக் கணத்தைப் பயன்படுத்திக் கொண்டு அந்தக் கன்னிகையைக் கடத்திச் சென்றான்.(5) ஓ! படைகளை வெல்பவனே, அழுது கொண்டிருந்த அந்தக் கன்னிகை கடத்திச் செல்லப்பட்ட போது, பெண்களின் அந்தப் புரத்தில் {கன்யாபுரத்தில்} திடீரெனப் பெருஞ்சலசலப்பு எழுந்தது.(6) பானுவின் அந்தப்புரதில் எழுந்த ஓலத்தைக் கேட்ட வீரர்களான வசுதேவனும், ஆஹுகனும் {உக்ரசேனனும்} கோபத்தால் நிறைந்தவர்களாக வெளியே வந்தனர். குற்றம் இழைத்தவனைத் தங்கள் முன் காணாத அவர்கள், தாங்கள் அணிந்திருந்த கவச உடைகளுடன் பெருஞ்சக்தி வாய்ந்த கிருஷ்ணன் இருக்கும் இடத்திற்குச் சென்றனர்.(7,8) பகைவரைக் கொல்பவனான ஜனார்த்தனன் இந்த அவமதிப்பைக் கேள்விப்பட்டு, பார்த்தனுடன் {அர்ஜுனனுடன்} சேர்ந்து பாம்புகளின் பகைவனான கருடன் மீதேறி புறப்பட்டுச் சென்றான்.(9) அவன் {கிருஷ்ணன்}, மகரச்சின்னத்தைக் கொடியில் கொண்ட வீரனிடம் {தன் மகன் பிரத்யும்னனிடம்} தேரில் தன்னைப் பின்தொடந்து வரும்படி ஆணையிட்டு, கசியபரின் மகனான கருடனிடம் புறப்படச் சொன்னான்.(10)

வஜ்ரம் நக³ரமாயாந்தம் நிகும்ப⁴ம் ரணது³ர்ஜயம் |
பார்த²க்ருஷ்ணௌ மஹாத்மானாவாஸேத³துரரிந்த³மௌ ||2-90-11

ப்ரத்³யும்னஷ்²ச மஹாதேஜா மாயினாம் ப்ரவரோ ந்ருப |
நிகும்ப⁴ஷ்²சாத² தாந்த்³ருஷ்ட்வா த்ரிதா⁴(ஆ)த்மானமதா²கரோத் ||2-90-12

தான்ஸர்வான்யோத⁴யாமாஸ நிகும்ப⁴꞉ ப்ரஹஸன்னிவ |
ப³ஹுகண்டககு³ர்வீபி⁴ர்க³தா³பி⁴ரமரோபம꞉ ||2-90-13

ஸவ்யேனாலம்ப்³ய ஹஸ்தேன கன்யாம் பா⁴னுமதீம் ந்ருப꞉ |
த³க்ஷிணேநாத² ஹஸ்தேன க³த³யா ப்ராஹரத்புன꞉ ||2-90-14

கன்யார்த²ம் ந ச க்ருஷ்ணோ வா காமோ வா ந்ரூபஸத்தம꞉ |
நிர்த³யம் ப்ரஹரந்தி ஸ்ம நிகும்பே⁴ ச மஹாஸுரே ||2-90-15

ஸமர்தா²ஸ்தே மஹாத்மான꞉ ஷ²த்ரும் ஹந்தும் து³ராஸதா³꞉ |
நிஷ²ஷ்²வஸுர்னரபதே த³யாபா⁴ராவபீடி³தா꞉ ||2-90-16

ஓ! மன்னா, போரில் வெல்லப்பட முடியாதவனான நிகும்பன், வஜ்ரம் என்ற நகரத்தை {வஜ்ரபுரத்தை} அடைவதற்கு முன்பே பகைவரைக் கொல்பவர்களான பார்த்தனும் {அர்ஜுனனும்}, கிருஷ்ணனும் அவனை வழியிலேயே தடுத்தனர்.(11) மாயைகளை அறிந்தோரில் முதன்மையானவனும், பெருஞ்சக்திவாய்ந்தவனுமான பிரத்யும்னனும் அங்கே வந்த போது அவன் {நிகும்பன்} தன்னைத் தானே மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொண்டான்.(12) நிகும்பன் ஒரு தேவனைப் போலப் புன்னகைத்தவாறே கதாயுதத்தைக் கொண்டு அவர்கள் அனைவருடனும் {மூவருடனும்} போரிட்டான்.(13) பேரசுரன் நிகும்பன், கன்னிகையான பானுமதியைத் தன் இடது கையில் பிடித்துக் கொண்டு, தன் வலது கையால் கதாயுதத்தை மீண்டும் மீண்டும் வீசினான்.(14) கேசவன் {கிருஷ்ணன்}, காமன் (பிரத்யுமனன்), அர்ஜுனன் ஆகியோர் இவ்வாறு தாக்கப்பட்டாலும், அந்தக் கன்னிகைக்குச் சிறு காயமும் ஏற்படுத்திவிடக்கூடாது என்பதால் அவர்கள் அவனை முரட்டுத்தனமாகத் தாக்காதிருந்தனர்.(15) ஓ! மன்னா, தடுக்கப்படமுடியாத அந்தப் பகைவனைக் கொல்லவல்லர்களாக இருப்பினும் அந்தக் கன்னிகையிடம் கொண்ட பெருங்கருணையால் அவர்கள் பரிதாபகரமாகப் பெருமூச்சு விடத் தொடங்கினர்.(16)

ஷ்²ரேஷ்டோ² த⁴னுஷ்மதாம் பார்த²꞉ ஸர்வதா² குஷ²லோ யுதி⁴ |
நாகோ³ஷ்ட்ரவிதி⁴னா தை³த்யம் ஷ²ரபங்க்த்யா ஜகா⁴ன ஹ ||2-90-17

தே து வைதஸ்திகைர்பா³ணைர்விவிதா⁴ந்தா³னவான்யுதி⁴ |
ந கன்யாம் கலயா யுக்த்யா ஷி²க்ஷயா ச மஹீபதே ||2-90-18

தத꞉ ஸ கன்யயா ஸார்த⁴ம் தத்ரைவாந்தரதீ⁴யத |
ஆஸுரீமாஷ்²ரிதோ மாயாம் ந ச தாம் வேத்தி கஷ்²சன ||2-90-19

தம் க்ருஷ்ணோ ரௌக்மிணேயஷ்²ச ப்ருஷ்ட²தோ(அ)னுயயுஸ்ததா³ |
ஹாரித꞉ ஷ²குனோ பூ⁴த்வா தஸ்தா²வத² மஹாஸுர꞉ ||2-90-20

தம் பா³ணை꞉ புனரேவாத² வீரோ பூ⁴யோ த⁴னஞ்ஜய꞉ |
வைதஸ்திகைர்மர்மபி⁴த்³பி⁴꞉ கன்யாம் ரக்ஷன்னதாட³யத் ||2-90-21

ஸ இமாம் ப்ருதி²வீம் க்ருத்ஸ்னாம் ஸப்தத்³வீபாம் மஹாஸுர꞉ |
ப³ப்⁴ராமானுக³தஷ்²சைவ தைர்வீரைரரிமர்த³ன꞉ ||2-90-22

கோ³கர்ணஸ்யோபரிஷ்டாத்து பர்வதஸ்ய மஹாஸுர꞉ |
பபாத வேலாம் க³ங்கா³யா꞉ புலினே ஸஹ கன்யயா ||2-90-23

ஒரு பாம்பு ஓர் ஒட்டகத்தைச் சுற்றிக் கொள்ளும்போது ஆயுதப் பயன்பாட்டை நன்கறிந்த ஒரு மனிதன் எவ்வாறு ஒட்டகத்தைவிட்டு விட்டுப் பாம்பை மட்டும் அடிப்பானோ அதே போலவே வில்லாளிகளில் முதன்மையான பார்த்தனும், தன்னுடைய கணைகளால் அந்தத் தைத்தியனைத் தாக்கத் தொடங்கினான்[வில்தரித்தவர்களில் சிறந்தவனும், போரின் அனைத்து வழிமுறைகளிலும் நிபுணனுமான பிருதையின் மகன் நாகோஷ்ட்ரமெனும் நுட்பத்தைப் பயன்படுத்தி அந்தத் தைத்தியன் மீது கணைக்கூட்டத்தை ஏவினான்” என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், “நாகோஷ்ட்ரவிதி என்பது ஒட்டகத்தின் உடலில் ஒரு பாம்பு சுற்றியிருக்கும்போது, அந்த ஒட்டகத்தைத் தாக்காமல் கணைகளை ஏவி அந்தப் பாம்பைக் கொல்லும் நுட்பமாகும்” என்றிருக்கிறது.].(17) பார்த்தன் {அர்ஜுனன்}, காமன் {பிரத்யும்னன்}, கிருஷ்ணன் ஆகியோர் தங்கள் பயிற்சி, அறிவு, கலையின் விதிகள் ஆகியவற்றைப் பின்பற்றி அந்தக் கன்னிகையைத் தாக்காமல் பிரம்பு போன்ற {பனிரெண்டு விரல்களின் நீளம் கொண்ட / சாண் நீளம் கொண்ட} தங்கள் கணைகளால் தானவர்களை {நிகும்பனின் மூன்று வடிவங்களைத்} தாக்கினர்.(18) அப்போது நிகும்பன் தன் மாய சக்திகளைப் பயன்படுத்தி எவரும் அறியாதவாறு அந்தக் கன்னிகையுடன் அந்த இடத்தில் இருந்து மறைந்தான்; இருப்பினும், கிருஷ்ணன், காமன், தனஞ்சயன் ஆகியோர் உடனே அவனைப் பின் தொடர்ந்தனர்; அவன் {நிகும்பன்} மஞ்சள் நிறக் கழுகின் வடிவை ஏற்றுப் பறந்து சென்றான்[நிகும்பன் ஹாரிதப் பறவையின் வடிவை ஏற்றான்”அவன் பச்சைக் குருவியாக இருந்தான்].(19,20) வீரத் தனஞ்சயன் அந்தக் கன்னிகையைத் தவிர்த்துவிட்டுப் பிரம்பு போன்ற தன் கணைகளால் அவனது {நிகும்பனின்} முக்கிய உறுப்புகளைத் தாக்கினான்.(21) இவ்வாறு அந்த வீரர்களால் பின்தொடரப்பட்டவனும், பகைவரைக் கொல்பவனுமான அந்தப் பேரசுரன், தனித்தீவுகளாக இருக்கும் ஏழு கண்டங்களை {த்வீபங்களைக்} கொண்ட பூமி முழுவதும் பயணித்து, இறுதியாக {களைப்படைந்து}கோகர்ண மலையில் பாயும் கங்கையாற்றங் கரையின் மணற்திட்டில் அந்தக் கன்னிகையுடன் சேர்ந்து கீழே விழுந்தான்.(22,23)

ந தே³வா நாஸுராஷ்²சாபி லங்க⁴யந்தி தபோத⁴னா꞉ |
கோ³கர்ணம் தேஜஸா கு³ப்தம் மஹாதே³வஸ்ய பா⁴ரத ||2-90-24

ஏதத³ந்தரமாஸாத்³ய ப்ரத்³யும்ன꞉ ஷீ²க்⁴ரவிக்ரம꞉ |
கன்யாம் பா⁴னுமதீம் பை⁴மோ ஜக்³ராஹ ரணது³ர்ஜய꞉ ||2-90-25

அஸுர꞉ ஸோ(அ)ர்தி³தோ ராஜன்க்ருஷ்ணாப்⁴யாம் நிஷி²தை꞉ ஷ²ரை꞉ |
த்யக்த்வாதோ²த்தரகோ³கர்ணம் நிகும்போ⁴ த³க்ஷிணாம் தி³ஷ²ம் |
ஜகா³ம ப்ருஷ்ட²தோ யாதௌ க்ருஷ்ணௌ தார்க்ஷ்யக³தௌ ததா³ ||2-90-26

தேவர்களிலோ, அசுரர்களிலோ, பெரும் முனிவர்களிலோ எவராலும் மஹாதேவனின் சக்தியால் பாதுகாக்கப்படும் அந்த மலையைக் கடக்க முடிந்ததில்லை.(24) போரில் வெல்லப்பட முடியாதவனும், வேகமாகச் செல்லக்கூடியவனுமான பைமத் தலைவன் பிரத்யும்னன், நிகும்பனின் இந்தப் பலவீனத்தைக் கண்டு {அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு} கன்னிகையான பானுமதியைப் பிடித்துக் கொண்டான். கிருஷ்ணனும், அர்ஜுனனும் தங்கள் கணைகளால் அந்த அசுரனைப் பெரிதும் தாக்கத் தொடங்கினர். பிறகு நிகும்பன் கோகர்ண மலையின் வடக்கு எல்லையைவிட்டு அகன்று, தெற்கு எல்லைக்குத் தப்பி ஓடினான். இருப்பினும் அந்த இரு கிருஷ்ணர்களும் கருடனைச் செலுத்திக் கொண்டு அவனைப் பின்தொடர்ந்து சென்றனர்.(25,26)

விவேஷ² ஷட்புரம் சைவ ஜ்ஞாதீநாமாலயம் ததா³ |
தத்ர வீரௌ கு³ஹாத்³வாரி க்ருஷ்ணௌ ராத்ரௌ ததோ³ஷது꞉ ||2-90-27

ரௌக்மிணேயோ(அ)பி க்ருஷ்ணேன ஸந்தி³ஷ்டோ த்³வாரகாம் புரீம் |
அனயத்³பா⁴னுதனயாம் ப்ரஹ்ருஷ்டேனாந்தராத்மனா ||2-90-28

நயித்வா சாயயௌ வீர꞉ ஷட்புரம் தா³னவாகுலம் |
த³த³ர்ஷ² ச கு³ஹாத்³வாரி க்ருஷ்ணௌ பீ⁴மபராக்ரமௌ ||2-90-29

ஊஷதுர்த்³வாரமாக்ரம்ய ஷட்புரஸ்ய மஹாப³லௌ |
க்ர்^இஷ்ணௌ ப்ரத்³யும்னஸஹிதௌ நிகும்ப⁴வத⁴காங்க்ஷிணௌ ||2-90-30

அதன் பின்னர் அந்தப் பேரசுரன் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி தன் உற்றார் உறவினரின் வசிப்பிடமான ஷட்புரத்திற்குள் நுழைந்தான். அந்த இருவீரர்களும் {கிருஷ்ணனும், அர்ஜுனனும்} அந்தக் குகையின் வாயிலிலேயே அவ்விரவைக் கழித்தனர். ருக்மிணியின் வீர மகன் {பிரத்யும்னன்}, கிருஷ்ணனின் அனுமதியுடன் அந்தப் பைமர்களின் மகளைத் துவாரகை நகருக்கு மகிழ்ச்சியுடன் கொண்டு சென்றான். அவன், அவளை அங்கே விட்டுவிட்டு, தானவர்கள் நிறைந்த ஷட்புரத்திற்குத் திரும்பி, பயங்கர ஆற்றலைக் கொண்ட அந்தக் கிருஷ்ணர்கள் இருவரையும் குகையின் வாயிலில் கண்டான்.(27-29) இவ்வாறு நிகும்பனைக் கொல்ல விரும்பிய பெருஞ்சக்திவாய்ந்த கிருஷ்ணனும், அர்ஜுனனும், ஷட்புர நகரத்தின் நுழைவாயிலைப் பிரத்யும்னனுடன் சேர்ந்து காத்து நின்றனர்.(30)

ததோ(அ)னந்தரமேதஸ்மாத்³பி³லாத³திப³லஸ்ததா³ |
நிர்ஜகா³ம ப³லீ யோத்³து⁴ம் நிகும்போ⁴ பீ⁴மவிக்ரம꞉ ||2-90-31

தஸ்ய நிர்க³ச்ச²தஸ்தஸ்மாத்³பி³லாத்பார்தோ² விஷா²ம்பதே |
ருரோத⁴ ஸர்வதோ மார்க³ம் ஷ²ரைர்கா³ண்டீ³வநி꞉ஸ்ருதை꞉ ||2-90-32

ஸோ(அ)பி⁴ஸ்ருத்ய க³தா³ம் கோ⁴ராமுத்³யம்ய ப³ஹுகண்டகாம் |
ஷி²ரஸ்யதாட³யத்பார்த²ம் நிகும்போ⁴ ப³லினாம் வர꞉ ||2-90-33

அத்³ருஷ்டேனாஹதோ வீர꞉ ஷி²ரஸ்யத² முமோஹ ஸ꞉ |
க³த³யாபி⁴ஹதே பார்தே² ரக்தம் வமதி முஹ்யதி |
ஹஸித்வா ஸோ(அ)ஸுரோ த்³ருப்தோ ரௌக்மிணேயமதாட³யத் ||2-90-34

தம் ப்ராங்முக²முக²ம் வீரம் மாயாவீ மாயினாம் வரம் |
அத்³ருஷ்டேனாஹதோ வீர꞉ ஷி²ரஸ்யத² முமோஹ ஸ꞉ ||2-90-35

ததா²க³தௌ து த்³ருஷ்ட்வா தௌ முஹ்யமானௌ ஸுதாடி³தௌ |
அபி⁴து³த்³ராவ கோ³விந்தோ³ நிகும்ப⁴ம் க்ரோத⁴மூர்சி²த꞉ ||2-90-36

கௌமோத³கீம் ஸமுத்³யம்ய க³த³பூர்வோத்³ப⁴வோ க³தா³ம் |
தாவன்யோன்யம் து³ராத⁴ர்ஷௌ க³ர்ஜந்தாவபி⁴பேதது꞉ ||2-90-37

அதன்பிறகு, ஓ! மன்னா {ஜனமேஜயா}, பெருஞ்சக்திவாய்ந்த நிகும்பன் போரிடும் விருப்பம் கொண்டவனாகக் குகையைவிட்டு வெளியே வந்த உடனேயே தனஞ்சயன் தன் காண்டீவ வில்லில் இருந்து ஏவப்பட்ட கணைகளால் அவனை முற்றிலும் தடுத்தான். பலம்வாய்ந்தவர்களில் முதன்மையான நிகும்பன் அவற்றையும் மீறி வெளியே வந்து, முட்களால் நிறைந்த தன் கதாயுதத்தைக் கொண்டு பார்த்தனின் {அர்ஜுனனின்} தலையில் தாக்கினான்.(31-33) இவ்வாறு அந்தக் கதாயுதத்தால் தாக்கப்பட்ட பிருதையின் மகன், குருதி கக்கி தன் நினைவை இழந்தான். மாயைகளில் திறன்மிக்கவனான அந்த அசுரன், சிரித்துக் கொண்டே தன் முகத்திற்கு எதிரில் காத்திருந்தவனும், மாயைகளை அறிந்தோரில் முதன்மையானவனுமான ருக்மிணியின் வீர மகனை {பிரத்யும்னனைத்} தாக்கினான். அப்போது புலப்படாத கதாயுதத் தாக்குதலால் தலையில் காயமடைந்த வீரப் பிரத்யும்னனும் தன் நினைவை இழந்தான். கதனின் அண்ணனான கோவிந்தன், இவ்வாறு அவர்கள் தாக்கப்படுவதையும், உணர்விழந்ததையும் கண்டு, கௌமோதகீ எனும் தன்னுடைய கதாயுதத்தை எடுத்துக் கொண்டு நிகும்பனை நோக்கி ஓடினான். தடுக்கப்பட முடியாத வீரர்களான அவ்விருவரும் முழங்கியவாறே ஒருவரோடொருவர் போரிட்டனர்.(34-37)

ஐராவதக³த꞉ ஷ²க்ர꞉ ஸர்வைர்தே³வக³ணை꞉ ஸஹ |
த³த³ர்ஷ² தன்மஹாயுத்³த⁴ம் கோ⁴ரம் தே³வாஸுரம் ததா³ ||2-90-38

த்³ருஷ்ட்வா தே³வான்ஹ்ருஷீகேஷ²ஷ்²சித்ரைர்யுத்³தை⁴ரரிந்த³ம꞉ |
இயேஷ தா³னவம் ஹந்தும் தே³வானாம் ஹிதகாம்யயா ||2-90-39

ஸ மண்ட³லானி சித்ராணி த³ர்ஷ²யாமாஸ கேஷ²வ꞉ |
கௌமோத³கீம் மஹாபா³ஹுர்லாலயன்யுத்³த⁴கோவித³꞉ ||2-90-40

ததை²வாஸுரமுக்²யோ(அ)பி க³தா³ம் தாம் ப³ஹுகண்டகாம் |
ஷி²க்ஷயா ப்⁴ராமயாணோ(அ)த² மண்ட³லானி சசார ஹ ||2-90-41

வ்ருஷபா⁴விவ க³ர்ஜந்தௌ ப்³ருஹந்தாவிவ குஞ்ஜரௌ |
இஷிதாந்தரமாஸாத்³ய க்ருத்³தௌ⁴ ஷா²லாவ்ருகாவிவ ||2-90-42

ஆஜகா⁴ன நிகும்ப⁴ஸ்து க³த³யா க³த³பூர்வஜம் |
ஸ்பஷ்டாஷ்டக⁴ண்டயா வீர நாத³ம் முக்த்வாதிதா³ருணம் ||2-90-43

தத்காலமேவ க்ருஷ்ணோ(அ)பி ப்⁴ராமயித்வா மஹாக³தா³ம் |
நிகும்ப⁴மூர்த⁴னி ததா³ பாதயாமாஸ பா⁴ரத ||2-90-44

அவஷ்டப்⁴ய முஹூர்தம் து ஹரி꞉ கௌமோத³கீம் க³தா³ம் |
தஸ்தௌ² ஜக³த்³கு³ருர்தீ⁴மான்முமோஹ பதித꞉ க்ஷிதௌ ||2-90-45

ஹாஹாபூ⁴தம் ஜக³த்ஸர்வம் தத்காலமப⁴வத்ததா³ |
ததா²க³தே வாஸுதே³வே நரதே³வமஹாத்மனி ||2-90-46

ஆகாஷ²க³ங்கா³தோயேன ஷீ²தேன ச ஸுக³ந்தி⁴னா |
ஸிஷேசாம்ருதமிஷ்²ரேண க்ருஷ்ணம் தே³வேஷ்²வர꞉ ஸ்வயம் ||2-90-47

நூனமாத்மேச்ச²யா க்ருஷ்ணஸ்ததா² சக்ரே ஸுரோத்தம꞉ |
கோ ஹி ஷ²க்தோ மஹாத்மானம் யுத்³தே⁴ மோஹயிதும் ஹரிம் ||2-90-48

சசியின் தலைவன் {இந்திரன்}, தன் யானையான ஐராவதத்தைச் செலுத்திக் கொண்டு, தேவர்களுடன் அங்கே வந்து, தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடக்கும் போரைப் போன்ற அந்தப் பயங்கர மோதலைக் கண்டான். பகைவரைக் கொல்பவனான ரிஷிகேசன், அந்தத் தேவர்களைக் கண்டதும், அவர்களுக்கு நன்மை செய்ய விரும்பி, அந்த அற்புதப் போரில் தானவர்களைக் கொல்ல முயன்றான்.(38,39) பெருந்தோள்களைக் கொண்டவனும், படை அறிவியலை அறந்தவனுமான கேவசன், தன் கௌமோதகீயைச் சுழற்றி பல்வேறு அற்புத மண்டலங்களை {கதைவீசும் முறைகளை} வெளிப்படுத்தினான்.(40) அசுரர்களில் முதன்மையான நிகும்பனும், தன் பயிற்சியின் காரணமாக, முட்கள் பலவற்றால் நிறைந்திருந்த தன் கதாயுதத்தைச் சுழற்றி பல்வேறு மண்டலங்களை வெளிப்படுத்தினான்.(41) அந்த நேரத்தில் அவர்கள் இருவரும், ஒரு பசுவுக்காகப் முழங்கும் இரு காளைகளைப் போலவோ, பிளிறும் இரு யானைகளைப் போலவோ, கோபத்தில சீறும் இரண்டு சிறுத்தைகளைப் போலவோ போரிட்டனர்.(42) ஓ! பாரதா {ஜனமேஜயா}, நிகும்பன் பயங்கர முழக்கம் செய்பவனாக எட்டு மணிகளைக் கொண்ட தன் கதாயுதத்தால், கதனின் அண்ணனான கிருஷ்ணனைத் தாக்கினான். கிருஷ்ணனும் தன்னுடைய பெரும் கதாயுதத்தை நிகும்பனின் தலையில் வீசினான்.(43,44) அந்த நேரத்தில் உலகின் நுண்ணறிவுமிக்க ஆசானான ஹரி, கௌமோதகீ எனும் தன்னுடைய கதாயுதத்தை ஒரு கணம் சுழற்றாமல் {கிருஷ்ணன்} உணர்வற்றவனாகப் பூமியில் விழுந்தான்.(45) ஓ! மன்னா, உயரான்ம கிருஷ்ணன் இந்த அவல நிலையை அடைந்தபோது, மொத்த உலகமும் ஓலங்களால் நிறைந்து.(46) அமுதம் கலந்த மந்தாகினியின் {மந்தாகினியாற்றின்} குளிர்ந்த நீரைத் தேவர்களின் மன்னனே {இந்திரனே} கேசவன் மீது தெளித்தான்.(47) ஓ! மன்னா, தேவர்களில் முதன்மையான கிருஷ்ணன் தானே தன் விருப்பத்தின் பேரில் அவ்வாறு செய்தான், இல்லையெனில் உயரான்ம ஹரியை எவனால் உணர்வற்றவனாகச் செய்ய இயலும்?(48)

க்ருஷ்ண꞉ ப்ரத்யாக³தப்ராணஷ்²சக்ரமுத்³யம்ய பா⁴ரத |
ப்ரதீச்சே²தி து³ராத்மானமுவாச ரிபுநாஷ²ன꞉ ||2-90-49

நிகும்போ⁴(அ)ப்யதிமாயாவீ உத்பபாத து³ராஸத³꞉ |
ஷ²ரீரம் தத்பரித்யஜ்ய ந து தம் வேத்தி கேஷ²வ꞉ ||2-90-50

முமூர்ஷதி ம்ருதோ வாயமிதி மத்வா ஜனார்த³ன꞉ |
ரரக்ஷ² ஸ்மரமாணோ(அ)த² வீரோ வீரவ்ரதம் விபோ⁴ ||2-90-51

அத² ப்ரத்³யும்னகௌந்தேயாவாக³தௌ லப்³த⁴சேதனௌ |
ஸ்தி²தௌ நாராயணாப்⁴யாஷே² நிகும்ப⁴வத⁴நிஷ்²சிதௌ ||2-90-52

ப்ரத்³யும்னோ(அ)ப்யத² மாயாவீ விதி³த꞉ க்ருஷ்ணமப்³ரவீத் |
நிகும்ப⁴ஸ்தாத நாஸ்த்யத்ர க³த꞉ க்வாபி ஸுது³ர்மதி꞉ ||2-90-53

ப்ரத்³ய்ம்னேனைவமுக்தே து தன்னநாஷ² கலேவரம் |
ப்ரஜஹாஸாத² ப⁴க³வானர்ஜுனேன ஸஹ ப்ரபு⁴꞉ ||2-90-54

ஓ! பரதனின் வழித்தோன்றலே {ஜனமேஜயா}, அதன்பிறகு பகைவரைக் கொல்பவனான கிருஷ்ணன், தன் உணர்வுமீண்டவனாக எழுந்து தன் சக்கரத்தை எடுத்துக் கொண்டு, தீயவனான அந்த அசுரனிடம் அதைத் தாங்கிக் கொள்ளச் சொன்னான்.(49) தடுக்கப்பட முடியாதவனும், பெரும் மாயாவியுமான அந்த நிகும்பன், அந்த நேரத்தில் தன் உடலைக் கைவிட்டு ஓடிவிட்டான். எனினும் கேசவன் அதை அறிந்தானில்லை.(50) அவன் இறந்துவிட்டான், அல்லது இறக்கும் தருவாயில் இருக்கிறான் என்று நினைத்தும், வீரர்களின் கடமையை நினைவுகூர்ந்தும் வீழ்ந்துவிட்ட அவனை அவன் மேலும் அடித்தானில்லை. அப்போது தங்கள் உணர்வுகள் மீண்ட பிரத்யும்னனும், அர்ஜுனனும் அங்கே வந்து நிகும்பன் இறந்துவிட்டதாகக் கருதி கிருஷ்ணனின் அருகில் நின்றனர்.(51,52) அதன்பிறகு மாயைகளை அறிந்தவனான பிரத்யும்னன் உண்மையை அறிந்து கொண்டு, கிருஷ்ணனிடம், “ஓ! தந்தையே, தீயவனான நிகும்பன் இங்கே இல்லை. அவன் எங்கோ தப்பி ஓடிவிட்டான்” என்றான்.(53) பிரத்யும்னன் இதைச் சொன்னதும், நிகும்பனின் உடல் அங்கேயே அப்போதே மறைந்தது. பெருஞ்சக்தி வாய்ந்த அந்தத் தலைவன் {கிருஷ்ணன்}, அர்ஜுனனுடன் சேர்ந்து இதைக் கண்டு சிரித்தான்.(54)

ததா³யுதஸஹஸ்ராணி நிகும்பா⁴னாம் ஜனாதி⁴ப |
த³த்³ருஷு²ஸ்தே ததோ வீரா꞉ க்ஷிதௌ தி³வி ச ஸர்வத꞉ ||2-90-55

ஸஹஸ்ராண்யேவ க்ருஷ்ணம் து ததா² பார்த²மரிந்த³ம |
ரௌக்மிணேயம் ததா² வீரம் தத³த்³பு⁴தமிவாப⁴வத் ||2-90-56

பாண்ட³வஸ்ய த⁴னு꞉ கேசித்கேசித³ஸ்ய மஹாஷ²ரான் |
அன்யே(அ)ஸ்ய ஜக்³ருஹுர்ஹஸ்தாவன்யே பாதௌ³ மஹாஸுரா꞉ ||2-90-57

ஏவம் க்³ரஹாய தம் வீரமக³மம்ஸ்தே விஹாயஸி |
பார்தா²நாமபி கோட்யஸ்து க்³ருஹீதானாம் ததா³ப⁴வன் ||2-90-58

நாந்தம் த³த³ர்ஷ² க்ருஷ்ணஷ்²ச கார்ஷ்ணிஷ்²ச ரிபுநாஷ²னௌ |
விச்சி²த்³ய தௌ ஷ²ரைர்வீரௌ நிகும்ப⁴ம் பார்த²வர்ஜிதௌ ||2-90-59

ஏகைகஸ்து த்³விதா⁴ ச்சி²ன்னோ த்³வேதா⁴ ப⁴வதி பா⁴ரத |
தி³வ்யஜ்ஞானஸ்ததா³ க்ருஷ்ணோ ப⁴க³வானனுத்³ருஷ்டவான் ||2-90-60

நிகும்ப⁴ம் தத்த்வதஷ்²சாபி த³த³ர்ஷ² மது⁴ஸூத³ன꞉ |
ஸ்ரஷ்டாரம் ஸர்வமாயானாம் ஹர்தாரம் பா²ல்கு³னஸ்ய ச ||2-90-61

ஸ சக்ரேன ஷி²ரஸ்தஸ்ய சகர்தாஸுரஸூத³ன꞉ |
பஷ்²யதாம் ஸர்வபூ⁴தானாம் பூ⁴தப⁴வ்யப⁴வோ ஹரி꞉ ||2-90-62

ஸ முக்த்வா பா²ல்கு³னம் ராஜஞ்சி²ன்னே ஷி²ரஸி பா⁴ரத |
பபாதாஸுரமுக்²யோ(அ)த² ச்சி²ன்னமூல இவ த்³ரும꞉ ||2-90-63

அதா²காஷ²க³தம் பார்த²ம் பதமானம் விஹாயஸ꞉ |
க்ருஷ்ணவாக்யேன ஜக்³ராஹ கார்ஷ்ணிர்வியதி மானத³ ||2-90-64

நிகும்பே⁴ பதிதே பூ⁴மௌ ஸமாஷ்²வாஸ்ய த⁴னஞ்ஜயம் |
ஜகா³ம த்³வாரகாம் தே³வ꞉ பார்த²காமஸமன்வித꞉ ||2-90-65

ஸமியாய த³ஷா²ர்ஹோ(அ)த² த்³வாரகாம் முதி³தோ விபு⁴꞉ |
நாரத³ம் ச மஹாத்மானம் வவந்தே³ யது³நந்த³ன꞉ ||2-90-66

ஓ! வீர மன்னா, சில நிமிடங்களுக்குப் பிறகு அவர்கள் ஆகாயம் முழவதும், பூமி முழுவதும் ஆயிரக்கணக்கான நிகும்பர்களைக் கண்டனர். இதைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களும் வீரர்களான கிருஷ்ணன், பார்த்தன், ருக்மிணியின் மகன் ஆகியோரின் எண்ணற்ற வடிவங்களைக் கண்டனர். இஃது உண்மையில் அற்புதம் நிறைந்ததாகத் தெரிந்தது.(55,56) அந்த நேரத்தில், அந்தப் பேரசுரர்களில் சிலர் பார்த்தனின் வில்லைப் பிடித்தனர், சிலர் அவனுடைய பெரிய கணைகளையும், சிலர் அவனது கரங்களையும், சிலர் அவனது காலையும் பிடித்தனர்.(57) இவ்வாறு பார்த்தனின் எண்ணற்ற உடல்கள் பிடிபட்டபோது, {நிகும்பனின் எண்ணற்ற வடிவங்களாக இருந்த} அசுரர்கள் அந்த வீரத் தனஞ்சயனை {அர்ஜுனனை} வானத்தில் கொண்டு சென்றனர் {பிடித்துச்சென்றனர்}. வீரக் கிருஷ்ணனும், அவனுடைய மகனும் பார்த்தனிடம் இருந்து பிரிந்த போது, எண்ணற்ற கணைகளால் நிகும்பனைத் துளைத்தனர். இருந்தாலும் அவர்களால் அவனுடைய எல்லையைக் காண முடியவில்லை. ஒரே நிகும்பன் இரண்டாகப் பிளந்து இருவரானான், பலரானான். தெய்வீகனும், கடந்த காலத்தையும், எதிர்காலத்தையும் அறிந்தவனும், அசுரர்களைக் கொல்பவனுமான தலைவன் கிருஷ்ணன், தன்னுடைய தெய்வீக அறிவால் அனைத்தையும் சரியாகப் பார்த்து, மாயைகளைப் படைப்பவனும், தனஞ்சயனை அபகரித்துச் சென்றவனுமான நிகும்பனின் உண்மையான வடிவைக் கண்டான். அவன் அனைத்து உயிரினங்களின் முன்னிலையிலேயே தன் சக்கரத்தால் அவனுடைய தலையை அறுத்தான்.(58-62) ஓ! பரதனின் வழித்தோன்றலே, அசுரர்களில் முதன்மையான அவனுடைய {நிகும்பனுடைய} தலை இவ்வாறு அறுக்கப்பட்ட போது, அவன் தனஞ்சயனை விட்டுவிட்டு, வேரறுந்த மரம் போலக் கீழே விழுந்தான்.(63) ஓ! கௌரவங்களை அளிப்பவனே, அந்த நேரத்தில் பார்த்தன் வானத்தில் இருந்து கீழே விழ இருந்தான். கிருஷ்ணனின் ஆணையின் பேரில் அவனுடைய மகன் {பிரத்யும்னன்} அவனை {அர்ஜுனனைத்} தாங்கிப் பிடித்துக் கொண்டான்.(64) இவ்வாறு நிகும்பன் பூமியில் விழுந்ததும் தேவனான கிருஷ்ணன் பார்த்தனைத் தேற்றி அவனுடன் சேர்ந்து துவாரகைக்குச் சென்றான்.(65) யதுவின் வழித்தோன்றலும், தசார்ஹர்களில் முதன்மையானவனுமான தலைவன் கிருஷ்ணன் மகிழ்ச்சியாகத் துவாரகைக்குத் திரும்பி உயரான்ம நாரதரை வணங்கினான்.(66)

நாரதோ³.த² மஹாதேஜா பா⁴னூம் யாத³வமப்³ரவீத் |
பா⁴னோ மா கார்ஷீர்மன்யும் த்வம் ஷ்²ரூயதாம் பை⁴மநந்த³ன ||2-90-67

க்ரீட³ந்த்யா ரைவதோத்³யானே து³ர்வாஸா꞉ கோபிதோ(அ)னயா |
ஸ ஷ²ஷா²ப ததோ ரோஷான்முநிர்து³ஹிதரம் தவ ||2-90-68

அதிது³ர்லலிதை꞉ கன்யா ஷ²த்ருஹஸ்தம் க³மிஷ்யதி |
ஸுதார்தே² தே மயா ஸார்த⁴ம் முனிபி⁴꞉ ஸ ப்ரஸாதி³த꞉ ||2-90-69

பா³லாம் வ்ரதவதீம் கன்யாமநாக³ஸமிமாம் முனே |
ஷ²ப்தவானஸி த⁴ர்மஜ்ஞ கத²ம் த⁴ர்மப்⁴ருதாம் வர |
அனுக்³ரஹம் வித⁴த்ஸ்வாத² வயம் விஜ்ஞாபயாமஹே ||2-90-70

அஸ்மாபி⁴ரேவமுக்தஸ்து து³ர்வாஸா பை⁴மநந்த³ன |
உவாசாதோ⁴முகோ² பூ⁴த்வா முஹூர்தம் க்ருபயான்வித꞉ ||2-90-71

யத³வோசமஹம் வாக்யம் தத்ததா² ந தத³ன்யதா² |
ரிபுஹஸ்தமவஷ்²யம் ஹி க³மிஷ்யதி ந ஸம்ஷ²ய꞉ ||2-90-72

அதூ³ஷிதானுத⁴ர்மேண ப⁴ர்தாரமுபலப்ஸ்யதி |
ப³ஹுபுத்ரா ப³ஹுத⁴னா ஸுப⁴கா³ ச ப⁴விஷ்யதி ||2-90-73

ஸுக³ந்த⁴க³ந்தா⁴ ச ஸதா³ குமாரீ ச புன꞉ புன꞉ |
ந ச ஷோ²கமிமம் கோ⁴ரம் தன்வங்கீ³ த⁴ரயிஷ்யதி ||2-90-74

ஏவம் பா⁴னுமதீ வீர ஸஹதே³வாய தீ³யதாம் |
ஷ்²ரத்³த³தா⁴ன꞉ ஸ ஷூ²ரஷ்²ச த⁴ர்மஷீ²லஷ்²ச பாண்ட³வ꞉ ||2-90-75

அப்போது பெருஞ்சக்திவாய்ந்தவரான நாரதர், பானுவிடம், “ஓ! பைமனின் வழித்தோன்றலே[இந்த அத்யாயம் நெடுகிலும் பானுமதியின் தந்தையான பானு, பைமத் தலைவன், பைமனின் வழித்தோன்றல் என்றே குறிப்பிடப்படுகிறான். கிருஷ்ணனின் மகன் என்றோ, சத்யபாமாவின் மகன் என்றோ எங்கும் குறிப்பிடப்படவில்லை. பிரத்யும்னனும் பைமத் தலைவன் என்று குறிப்பிடப்பட்டாலும் கிருஷ்ணனின் மகன் என்றும், ருக்மிணியின் மகன் என்றும் பல இடங்களில் குறிப்பிடப்படுகிறான் என்பதை இங்கே நாம் கருத்தில் கொண்டால் இந்த அத்யாயத்தில் சொல்லப்படும் பானு, கிருஷ்ணனின் மகனாக இருக்க முடியாது என்ற கருத்தையே எட்ட வேண்டியிருக்கும்.], உன் மகள் (மற்றொருவனால்) அபகரிக்கப்பட்டதால் அவமதிக்கப்பட்டதாகக் கருதாதே. ஓ! பானு, அதற்கான பெருங்காரணத்தைக் கேட்பாயாக.(67) ஓ! வீரா, ஒரு சந்தர்ப்பத்தில் உன்னுடைய இந்த மகள் ரைவதத் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, முனிவர்களில் முதன்மையான துர்வாசரின் கோபத்தைத் தூண்டினாள். கோபம் நிறைந்த அந்த முனிவரும், அவளைச் சபிக்கும் வகையில், “தீய நடை கொண்டவளாக இருப்பதால், இவள் பகைவனின் கைளில் விழுவாள்” என்று சொன்னார். அந்த நேரத்தில் நானும், என்னுடன் இருந்த முனிவர்களும் உன் மகளின் சார்பாக அந்த முனிவரிடம், “ஓ! நல்லோரில் முதன்மையான முனிவரே, அறத்தின் சாரத்தை அறிந்த நீர் அறக்கடமைகளை நோற்கும் ஓர் அப்பாவிப் பெண்ணான இவளை இவ்வாறு சபிக்கலாமா? நீர் இவளுக்குக் கருணை காட்ட வேண்டுமென உம்மை நாங்கள் வேண்டுகிறோம்” என்று கேட்டோம்.(68-70) ஓ! பைமத் தலைவா, நாங்கள் துர்வாசரிடம் இதைச் சொன்னதும் ஒரு கணம் முகம் கவிழ்ந்த அவர் கருணையால் பீடிக்கப்பட்டவராக, “நான் சொன்னது நிச்சயம் நடக்கும். ஒருபோது மாறாகாது. இவள் மெய்யாகவே பகைவனின் கைகளில் விழுவாள். அவ்வாறு பகைவனின் கைகளில் விழுந்தாலும் இவள் ஒருபோதும் களங்கமடையமாட்டாள். இவள் அழகிய கணவனை அடைவாள், நற்பேறு பெற்றவளாகவும், பல மகன்களைப் பெற்ற அன்னையாகவும், ஏராளமான செல்வத்தின் தலைவியாகவும் இருப்பாள். மெலிந்த உடல் கொண்ட இந்தப் பெண் தன் அழகிய மேனியைச் சுற்றிலும் எப்போதும் நறுமணத்துடன் கூடியவளாகவும், எப்போதும் இளமை நிறைந்தவளாகவும் இருப்பாள். பகைவனால் அபகரிக்கப்பட்டதால் விளையும் கவலையையும் இவள் மறந்திருப்பாள்” என்றார்.(71-74) ஓ! வீரா, இவ்வாறே இது பானுமதிக்கு நடக்க வேண்டுமென ஏற்கனவே விதிக்கப்பட்டதாகும்; பாண்டுவின் மகனான சகாதேவன் அறவோனாகவும், மதிப்புமிக்கவனாகவும், வீரனாகவும் இருப்பதால் அவனுக்கே அவளைக் கொடுப்பாயாக” என்றார் {நாரதர்}.(75)

ததோ பா⁴னுமதீம் பா⁴னுர்த³தௌ³ மாத்³ரீஸுதாய வை |
ஸஹதே³வாய த⁴ர்மாத்மா நாரத³ஸ்ய வச꞉ ஸ்மரன் ||2-90-76

ஆனீத꞉ ஸஹதே³வஷ்²ச ப்ரேஷிதஷ்²சக்ரபாணினா |
விவாஹே ச ததா³ வ்ருத்தே ஸபா⁴ர்ய꞉ ஸ புரீம் க³த꞉ ||2-90-77

இமம் க்ருஷ்ணஸ்ய விஜயம் ய꞉ படே²ச்ச்²ருணுயாத³த² |
விஜயம் ஸர்வக்ருத்யேஷு ஷ்²ரத்³த³தா⁴னோ லபே⁴ன்னர꞉ ||2-90-78

அறம் சார்ந்தவனான பைமனும் {பானுவும்}, நாரதரின் சொற்களுக்கு மதிப்பளித்துப் பானுமதியை மாத்ரியின் மகனான சகாதேவனுக்கே கொடுத்தான்.(76) சக்கரபாணியான கேசவன், ஒரு தூதனை அனுப்பிச் சகாதேவனை அங்கே {துவாரகைக்கு} அழைத்து வந்தான். திருமண விழா நிறைவடைந்ததும் அவன் {சகாதேவன்} தன் மனைவியுடன் சேர்ந்து தன் நகருக்குத் திரும்பினான். கிருஷ்ணனின் இந்த வெற்றியை மதிப்புடன் கேட்கவோ, படிக்கவோ செய்யும் மனிதன் அனைத்துக் காரியங்களிலும் வெற்றியை ஈட்டுவான்” என்றார் {வைசம்பாயனர்}.(77,78)

இதி ஷ்²ரீமஹாபா⁴ரதே கி²லேஷு ஹரிவம்ஷே² விஷ்ணுபர்வணி
பா⁴னுமதீஹரணே நிகும்ப⁴வதோ⁴ நாம
நவதிதமோ(அ)த்⁴யாய꞉

————–—————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாஸ பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விஷ்ணு பர்வம்–அத்யாயம் – 89–(சா²லிக்யக்ரீடா³)-சாலிக்ய காந்தர்வம் |–

January 31, 2021

நீர் விளையாட்டுத் தொடர்ந்தது; கிருஷ்ணனும், பலராமனும் இரு தரப்பாகப் பிரிந்து விளையாடியது; அவர்களுடன் இணைந்து கொண்ட அர்ஜுனன்; சாலிக்ய காந்தர்வமெனும் தெய்வீகப் பாடல்-

வைஷ²ம்பாயந உவாச
ரேமே ப³லஷ்²சந்த³நபங்கதி³க்³த⁴꞉
காத³ம்ப³ரீபாநகல꞉ ப்ருது²ஷ்²ரீ꞉ |
ரக்தேக்ஷணோ ரேவதிமாஷ்²ரயித்வா
ப்ரலம்ப³பா³ஹு꞉ ஸ்க²லித꞉ ப்ரபாத꞉ |2-89-1

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “சந்தனம் பூசிய பெருங்கரங்களைக் கொண்ட பேரழகன் பலன் {பலராமன்}, காதம்பரி மது உண்டு தன் மீதும், தன் உடல் இயக்கத்தின் மீதுமான கட்டுப்பாட்டை இழந்து கண்கள் சிவந்தவனாக ரேவதியுடன் விளையாடத் தொடங்கினான்.

நீலாம்பு³தா³பே⁴ வஸநே வஸாந-
ஷ்²சந்த்³ராம்ஷு²கௌ³ரோ மதி³ராவிலாக்ஷ꞉ |
ரராஜ ராமோ(அ)ம்பு³த³மத்⁴யமேத்ய
ஸம்பூர்நபி³ம்போ³ ப⁴க³வாநிவேந்து³꞉ ||2-89-2

சந்திரக்கதிர்களைப் போன்று வெண்மையான தெய்வீக ராமன், மேகத்துக்கு ஒப்பான கருவண்ண ஆடை உடுத்தி, போதையில் கண்கள் உருள மேகத்தில் ஒளிரும் முழு நிலவைப் போல அங்கே ஒளிர்ந்து கொண்டிருந்தான்

வாமைககர்ணாமலகுண்ட³லஷ்²ரீ꞉
ஸ்மேரந்மநோஜ்ஞாப்³ஜக்ருதாவதம்ஸ꞉ |
திர்யக்கடாக்ஷம் ப்ரியயா முமோத³
ராமோ முக²ம் சார்வபி⁴வீக்ஷ்யமாண꞉ ||2-89-3

அழகிய தாமரைகளால் அலங்கரிக்கப்பட்டவனும், இடது காதில் மட்டும் குண்டலம் கொண்டவனுமான ராமன், புன்னகைத்தபடியே சாய்வுப்பார்வையில் தன் அன்புக்குரிய துணைவியின் முகத்தை மீண்டும் மீண்டும் பார்த்து பெரும் மகிழ்ச்சியை அடைந்தான்

அதா²ஜ்ஞயா கம்ஸநிகும்ப⁴ஷ²த்ரோ-
ருதா³ரரூபோ(அ)ப்ஸரஸாம் க³ணா꞉ ஸ꞉ |
த்³ரஷ்டும் முதா³ ரேவதிமாஜகா³ம
வேலாலயம் ஸ்வர்க³ஸமாநம்ருத்³த்⁴யா ||2-89-4

அப்போது, கம்சனையும், நிகும்பனையும் அழித்த கேசவனின் {கிருஷ்ணனின்} ஆணையின் பேரில் அழகிய அப்சரஸ்கள் ரேவதியையும், ராமனையும் பார்ப்பதற்காகச் செழிப்பில் சொர்க்கத்திற்கு இணையான கடலுக்குச் சென்றனர்.

தாம் ரேவதீம் சாப்யத² வாபி ராமம்
ஸர்வா நமஸ்க்ருத்ய வராங்க³யஷ்ட்ய꞉ |
வாத்³யாநுரூபம் நந்ருது꞉ ஸுகா³த்ர்ய꞉
ஸமந்ததோ(அ)ந்யா ஜகி³ரே ச ஸம்யக் ||2-89-5

அழகு பொருந்திய சிறந்த உடற்கட்டைக் கொண்ட அந்த அப்சரஸ்கள், ரேவதியையும், ராமனையும் வணங்கிவிட்டு, இசைக்கு இணக்கமாக நடனமாடத் தொடங்கினர்.

சக்ருஸ்ததை²வாபி⁴நயேந லப்³த⁴ம்
யதா²வதே³ஷாம் ப்ரியமர்த²யுக்தம் |
ஹ்ருத்³யாநுகூலம் ச ப³லஸ்ய தஸ்ய
ததா²ஜ்ஞயா ரைவதராஜபுத்ர்யா꞉ ||2-89-6

அவர்கள், பலதேவனின் ஆணையின் பேரிலும், ரைவத மன்னனுடைய மகளின் {ரேவதியின்} ஆணையின் பேரிலும் யாதவர்களின் விருப்பத்திற்கிணங்க தங்களால் அடையப்பட்ட பல்வேறு அங்க அசைவுகளை {அபிநயங்களை} வெளிப்படுத்த தொடங்கினர்.

சக்ருர்ஹஸந்த்யஷ்²ச ததை²வ ராஸம்
தத்³தே³ஷ²பா⁴ஷாக்ருதிவேஷயுக்தா꞉ |
ஸஹஸ்ததாலம் லலிதம் ஸலீலம்
வராங்க³நா மங்க³லஸம்ப்⁴ருதாங்க்³ய꞉ ||2-89-7

மெலிந்தவர்களான அந்த அழகிய காரிகையர், யாதவர்களின் நாட்டில் உள்ள பெண்கள் உடுத்தவது போன்ற உடைகளை உடுத்திக் கொண்டு, ஆயிரக்கணக்கான பண்களில் அமைக்கப்பட்ட பாடல்களை அவர்களின் மொழியிலேயே பாடினர்

ஸங்கர்ஷணாதோ⁴க்ஷஜநந்த³நாநி
ஸங்கீர்தயந்த்யோ(அ)த² ச மங்க³லாநி |
கம்ஸப்ரலம்பா³தி³வத⁴ம் ச ரம்யம்
சாணூரகா⁴தம் ச ததை²வ ரங்கே³ ||2-89-8

யஷோ²த³யா ச ப்ரதி²தம் யஷோ²(அ)த²
தா³மோத³ரத்வம் ச ஜநார்த³நஸ்ய |
வத⁴ம் ததா²ரிஷ்டகதே⁴நுகாப்⁴யாம்
வ்ரஜே ச வாஸம் ஷ²குநீவத⁴ம் ச ||2-89-9

ததா² ச ப⁴க்³நௌ யமலார்ஜுநௌ தௌ
ஸ்ருஷ்டிம் வ்ருகாணாமபி வத்ஸயுக்தாம் |
ஸ காலியோ நாக³பதிர்ஹ்ரதே³ ச
க்ருஷ்ணேந தா³ந்தஷ்²ச யதா² து³ராத்மா ||2-89-10

ஷ²ங்க²ஹ்ரதா³து³த்³த⁴ரணம் ச வீர
பத்³மோத்பலாநாம் மது⁴ஸூத³நேந |
கோ³வர்த்³த⁴நோ(அ)ர்தே² ச க³வாம் த்⁴ருதோ(அ)பூ⁴-
த்³யதா² ச க்ருஷ்ணேந ஜநார்த³நேந ||2-89-11

குப்³ஜாம் யதா² க³ந்த⁴கபீஷிகாம் ச
குப்³ஜத்வஹீநாம் க்ருதவாம்ஷ்²ச க்ருஷ்ண꞉ |
அவாமநம் வாமநகம் ச சக்ரே
க்ருஷ்ணோ ததா²த்மாநமஜோ(அ)ப்யநிந்த்³ய꞉ ||2-89-12

ஸௌப⁴ப்ரமாத²ம் ச ஹலாயுத⁴த்வம்
வத⁴ம் முரஸ்யாப்யத² தே³வஷ²த்ரோ꞉ |
க³ந்தா⁴ரகந்யாவஹநே ந்ருபாணாம்
ரதே² ததா² யோஜநமூர்ஜிதாநாம் || 2-89-13

தத꞉ ஸுப⁴த்³ராஹரணே ஜயம் ச
யுத்³தே⁴ ச பா³லாஹகஜம்பு³மாலே |
ரத்நப்ரவேகம் ச யுத⁴ஜிதைர்ய-
த்ஸமாஹ்ருதம் ஷ²க்ரஸமக்ஷமாஸீத் ||2-89-14

ஓ! வீரா, அந்தச் சபையின் முன்பே ராமனுக்கும் {சங்கர்ஷணனுக்கும்}, கேசவனுக்கும் {அதோக்ஷகனுக்கும்} மகிழ்ச்சி தரக்கூடிய புனிதக் கருப்பொருள்களை அவர்கள் பாடினர். கம்ச, பிரலம்ப, சாணூர வதங்களையும்;(8) யசோதையால் ஜனார்த்தனின் மகிமை நிறுவப்படவும், அவன் தாமோதரன் என்ற பெயரைப் பெறவும் காரணமாக இருந்த உரலோடு அவன் கட்டப்பட்ட கதை; அரிஷ்ட, தேனுக வதங்கள்; அவனது விரஜவாசம் {ஆயர்பாடி வாசம்}; பூதனை வதம்;(9) யமலார்ஜுன மரங்களை முறித்தது; கன்றுகளுடன் அவன் ஓநாய்களைப் படைத்தது; தடாகத்தில் {யமுனையின் மடுவில்} இருந்த பாம்புகளின் தீய மன்னன் காளியன் கிருஷ்ணனால் ஒடுக்கப்பட்டது;(10) அந்தத் தடாகத்தில் இருந்து தாமரைகள், நீலோத்பலங்கள், சங்குகள், நிதிகள் ஆகியவற்றுடன் மதுசூதனன் திரும்பியது; உலக நன்மையின் பிறப்பிடமான கேசவனால் பசுக்களின் நன்மைக்காகக் கோவர்த்தன மலை உயர்த்தப்பட்டது;(11) நறுமணப் பொருட்களை விற்கும் கூனி {குப்ஜை} கிருஷ்ணனால் குணமடைந்தது ஆகியவற்றையும், பிறப்பும், குற்றமும் அற்ற அந்தத் தலைவனின் பிற கதைகளையும் அந்தத் தலைவன் குள்ளனாக இல்லாவிட்டாலும் மிக இழிந்த குள்ள வடிவை ஏற்றதையும் அந்த அப்சரஸ்கள் பாடினர்;(12) சௌபன் கொல்லப்பட்டது; இந்தப் போர்கள் அனைத்திலும் பலதேவன் தன் கலப்பையை உயர்த்திய வகை; தேவர்களின் பகைவர் பிறரின் அழிவு; தேவர்களின் பகைவனான முராசுரனைக் கொன்றது; காந்தார இளவரசியின் {சைப்யையின்} திருமணத்தின் போது செருக்குமிக்க மன்னர்களுடன் நடந்த போர்;(13) சுபத்ரை அபகரிக்கப்பட்டது; பலாஹகன், ஜம்புமாலியுடனான போர்; சக்ரனை வீழ்த்திவிட்டு அவனது முன்னிலையிலே ரத்தினங்கள் அனைத்தையும் அபகரித்த விதம் ஆகியவற்றையும் அவர்கள் பாடினர்.(14)

ஏதாநி சாந்யாநி ச சாருரூபா
ஜகு³꞉ ஸ்த்ரிய꞉ ப்ரீதிகராணி ராஜந் |
ஸங்கர்ஷணாதோ⁴க்ஷஜஹர்ஷணாநி
சித்ராணி சாநேககதா²ஷ்²ரயாணி ||2-89-15

காத³ம்ப³ரீபாநமதோ³த்கடஸ்து
ப³ல꞉ ப்ருது²ஷ்²ரீ꞉ ஸ சுகூர்த³ ராம꞉ |
ஸஹஸ்ததாலம் மது⁴ரம் ஸமம் ச
ஸ பா⁴ர்யயா ரேவதராஜபுத்ர்யா ||2-89-16

தம் கூர்த³மாநம் மது⁴ஸூத³நஷ்²ச
த்³ருஷ்ட்வா மஹாத்மா ச முதா³ந்விதோ(அ)பூ⁴த் |
சுகூர்த³ ஸத்யாஸஹிதோ மஹாத்மா
ஹர்ஷாக³மார்த²ம் ச ப³லஸ்ய தீ⁴மாந் ||2-89-17

ஸமுத்³ரயாத்ரார்த²மதா²க³தஷ்²ச
சுகூர்த³ பார்தோ² நரலோகவீர꞉ |
க்ருஷ்ணேந ஸார்த⁴ம் முதி³தஷ்²சுகூர்த³
ஸுப⁴த்³ரயா சைவ வராங்க³யஷ்ட்யா ||2-89-18

க³த³ஷ்²ச தீ⁴மாநத² ஸாரணஷ்²ச
ப்ரத்³யும்நஸாம்பௌ³ ந்ருப ஸாத்யகிஷ்²ச |
ஸாத்ராஜிதீஸூநுருதா³ரவீர்ய꞉
ஸுசாருதே³ஷ்ணஷ்²ச ஸுசாருரூப꞉ ||2-89-19

வீரௌ குமாரௌ நிஷ²டோ²ல்முகௌ ச
ராமாத்மஜௌ வீரதமௌ சுகூர்த³து꞉ |
அக்ரூரஸேநாபதிஷ²ங்கரஷ்²ச
ததா²பரே பை⁴மகுலப்ரதா⁴நா꞉ ||2-89-20

ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்த அழகிய பெண்கள் இவை அனைத்தையும், சங்கர்ஷணனுக்கும், அதோக்ஷஜனுக்கும் {கிருஷ்ணனுக்கும்} மகிழ்ச்சி தரக்கூடிய இன்னும் பிற கருப்பொருள்களையும் பாடிக் கொண்டிருந்தபோது,(15) காதம்பரி மது பருகிய பேரழகன் பலராமன், தன் மனைவியான ரேவதியுடன் சேர்ந்து கைகளைத் தட்டி {கைத்தாளமிட்டுக் கொண்டு} பாடத் தொடங்கினான்.(16) நுண்ணறிவுமிக்கவனும், பேரான்மாவும், பெருஞ்சக்தியும் கொண்டவனுமான மதுசூதனன், ராமன் இவ்வாறு பாடுவதைக் கண்டு அவனை மகிழ்விப்பதற்காகச் சத்யாவுடன் {சத்யபாமாவுடன்} சேர்ந்து பாடத் தொடங்கினான்.(17) கடல் பயணத்திற்காக அங்கே வந்திருந்தவனும், உலகின் பெரும் வீரனுமான பார்த்தனும் {அர்ஜுனனும்}, கிருஷ்ணனுடனும், அழகிய சுபத்ரையுடனும் சேர்ந்து மகிழ்ச்சியாகப் பாடினான்.(18) ஓ! மன்னா, நுண்ணறிவுமிக்கக் கதன், சாரணன், பிரத்யும்னன், சாம்பன், சாத்யகி, சத்ராஜித்தின் மகளுடைய மகன் {சத்யபாமாவின் மகனான பானு}, பெருஞ்சக்திவாய்ந்த சாருதேஷ்ணன் ஆகியோரும் அவர்களுடன் சேர்ந்து பாடினர்.(19) ராமனின் மகன்களும், பெரும் வீரர்களுமான இளவரசர்கள் நிசடனும், உல்முகனும், தளபதியான அக்ரூரன், சங்கன் ஆகியோரும் முன்னணி பைமர்கள் பிறரும் அங்கே பாடினர்.(20)

தத்³யாநபாத்ரம் வவ்ருதே⁴ ததா³நீம்
க்ருஷ்ணப்ரபா⁴வேண ஜநேந்த்³ரபுத்ர |
ஆபூர்ணமாபூர்ணமுதா³ரகீர்தே
சுகூர்த³யத்³பி⁴ர்ந்ருப பை⁴மமுக்²யை꞉ || 2-89-21

தை ராஸஸக்தைரதிகூர்த³மாநை-
ர்யது³ப்ரவீரைரமரப்ரகாஷை²꞉ |
ஹர்ஷாந்விதம் வீர ஜக³த்ததா²பூ⁴-
ச்சே²முஷ்²ச பாபாநி ஜநேந்த்³ரஸூநோ ||2-89-22

தே³வோ(அ)திதி²ஸ்தத்ர ச நாரதோ³(அ)த²
விப்ரப்ரியார்த²ம் முரகேஷி²ஷ²த்ரோ꞉ |
சுகூர்த³ மத்⁴யே யது³ஸத்தமாநாம்
ஜடகலாபாக³லிதைகதே³ஷ²꞉ ||2-89-23

ராஸப்ரணேதா முநி ராஜபுத்ர
ஸ ஏவ தத்ராப⁴வத³ப்ரமேய꞉ |
மத்⁴யே ச க³த்வா ச சுகூர்த³ பூ⁴யோ
ஹேலாவிகாரை꞉ ஸவிட³ம்பி³தாங்கை³꞉ ||2-89-24

ஸ ஸத்யபா⁴மாமத² கேஷ²வம் ச
பார்த²ம் ஸுப⁴த்³ராம் ச ப³லம் ச தே³வம் |
தே³வீம் ததா² ரைவதராஜபுத்ரீம்
ஸம்த்³ருஷ்²ய ஸம்த்³ருஷ்²ய ஜஹாஸ தீ⁴மாந் ||2-89-25

தா ஹாஸயாமாஸ ஸுதை⁴ர்யயுக்தா-
ஸ்தைஸ்தைருபாயை꞉ பரிஹாஸஷீ²ல꞉ |
சேஷ்டாநுகாரைர்ஹஸிதாநுகாரை-
ர்லீலாநுகாரைரபரைஷ்²ச தீ⁴மாந் ||2-89-26

ஆபா⁴ஷிதாம் கிஞ்சிதி³வோபலக்ஷ்ய
நாதா³திநாதா³ந்ப⁴க³வாந்முமோச |
ஹஸந்விஹாஸாம்ஷ்²ச ஜஹாஸ ஹர்ஷா-
த்³தா⁴ஸ்யாக³மே க்ருஷ்ண விநோத³நார்த²ம் ||2-89-27

க்ருஷ்ணாஜ்ஞயா ஸாதிஷ²யாநி தத்ர
யதா²நுரூபாணி த³து³ர்யுவத்ய꞉ |
ரத்நாநி வஸ்த்ராணி ச ரூபவந்தி
ஜக³த்ப்ரதா⁴நாநி ந்ருதே³வஸூநோ꞉ ||2-89-28

மால்யாநி ச ஸ்வர்க³ஸமுத்³ப⁴வாநி
ஸந்தாநதா³மாந்யதிமுக்தகாநி |
ஸர்வர்துகாந்யப்யநயம்ஸ்ததா³நீம்
த³து³ர்ஹரேரிங்கி³தகாலதஜ்ஜ்ஞா꞉ ||2-89-29

ஓ! மன்னா, அந்நேரத்தில் கிருஷ்ணனின் சக்தியால் படகுகள் அளவில் பெருகின, முன்னணி பைமர்களுடன் சேர்ந்து ஜனார்த்தனன் மிகச் சிறப்பாகப் பாடினான்.(21) ஓ! வீர இளவரசே, தேவர்களைப் போன்ற யதுகுலத் தலைவர்கள் இவ்வாறு பாடிக் கொண்டிருந்தபோது மொத்த உலகமும் மகிழ்ச்சியில் நிறைந்தது, பாவங்களும் கழிந்தன.(22) அப்போது தேவர்களின் விருந்தினரான நாரதர், யாதவர்களுக்கு மத்தியில் மதுசூதனான கேசவனை மகிழ்விப்பதற்காகத் தமது சடையின் ஒரு பகுதி உருகும் அளவுக்குப் பாடினார்.(23) ஓ! இளவரசே, அளவற்ற சக்திவாய்ந்த அந்த முனிவர், அங்கேயே அப்போதே பாடல்களைத் தொகுத்துப் பல்வேறு உடல் அசைவுகளுடன் பைமர்களுக்கு மத்தியில் மீண்டும் மீண்டும் பாடினார்.(24) அந்த நுண்ணறிவுமிக்க முனிவர், பலதேவன், ரைவத மன்னனின் மகள் {ரேவதி}, கேசவன், பிருதையின் மகன் {அர்ஜுனன்}, சத்யபாமா, சுபத்ரை ஆகியோரைக் கண்டு மீண்டும் மீண்டும் புன்னகைத்தார்.(25) கேசவனின் மனைவியர் இயல்பாகவே பொறுமைசாலிகளாக இருந்தாலும், கேலி பேசுவதை எப்போதும் விரும்புபவரான நுண்ணறிவுமிக்க நாரதர், {பிறரைப் போலச் செய்து காட்டும்} தமது அங்க அசைவுகள், புன்னகை, உணர்வுகள் ஆகியவற்றின் மூலமும், பல்வேறு வழிமுறைகளின் மூலமும் அவர்களின் சிரிப்பைத் தூண்டி அவர்களைச் சிரிக்கச் செய்தார்.(26) தெய்வீக முனிவரான நாரதர், ஏற்கனவே அறிந்ததைப் போலவே உயர்ந்து தாளும் பல்வேறு ராகங்களைப் பாடினார்; மேலும் கிருஷ்ணனை மகிழ்விப்பதற்காக உரக்கச் சிரித்தார், மகிழ்ச்சிக் கண்ணீர் சிந்தினார்.(27) ஓ! இளவரசே, அங்க அசைவுகளை நன்கறிந்த இளங்காரிகையர், கிருஷ்ணனின் ஆணையின் பேரில், உலகின் சிறந்த ரத்தினங்களையும், அழகிய ஆடைகளையும், சொர்க்கத்தில் செய்யப்பட்ட மாலைகளையும், சந்தானக மலர்களையும், முத்துகளையும், அனைத்துப் பருவ காலங்களிலும் மலரும் மலர்கள் பிறவற்றையும் {நாரதருக்குக்} கொடையளித்தனர்.(28,29)

ராஸாவஸாநே த்வத² க்³ருஹ்ய ஹஸ்தே
மஹாமுநிம் நாரத³மப்ரமேய꞉ |
பபாத க்ருஷ்ணோ ப⁴க³வாந்ஸமுத்³ரே
ஸாத்ராஜிதீம் சார்ஜுநமேவ சாத² ||2-89-30

உவாச சாமேயபராக்ரமோ(அ)த²
ஷை²நேயமீஷத்ப்ரஹஸந்ப்ருது²ஷ்²ரீ꞉ |
த்³விதா⁴ க்ருதாஸ்மிந்பததாஷு² பூ⁴த்வா
க்ரூடா³ஜலே நௌஸ்து ஸஹாங்க³நாபி⁴꞉ ||2-89-31

ஸரேவதீகோ(அ)ஸ்து ப³லோ(அ)ர்த்³த⁴நேதா
புத்ரா மதீ³யாஷ்²ச ஸஹார்த்³த⁴பை⁴மா꞉ |
பை⁴மார்த்³த⁴மேவாத² ப³லாத்மஜாஷ்²ச
ஸத்பக்ஷிண꞉ ஸந்து ஸமுத்³ரதோயே ||2-89-32

அந்த இசைக் கொண்டாட்டத்தின் முடிவில் ஒப்பற்ற பெருமுனிவரான நாரதரின் கரங்களைப் பற்றிக் கொண்ட தெய்வீக கிருஷ்ணன், சத்யபாமாவுடனும், அர்ஜுனனுடனும் சேர்ந்து கடலுக்குள் குதித்தான்.(30) பேரழகனும், ஒப்பற்ற ஆற்றலைக் கொண்டவனுமான கிருஷ்ணன், சற்றே புன்னகைத்தபடியே சினியின் மகனிடம் {சாத்யகியிடம்}, “நாம் இரு தரப்பாகப் பிரிந்து காரிகையருடன் சேர்ந்து கடல் நீரில் விளையாடுவோம். இந்தக் கடல் நீரில், பலதேவரும், ரேவதியும், என் மகன்களும், பைமர்களில் சிலரும் ஒரு தரப்பாகட்டும், எஞ்சிய பைமர்களும், பலராமரின் மகன்களும் என் தரப்பாகட்டும்” என்றான்.(31,32)

ஆஜ்ஞாபயாமாஸ தத꞉ ஸமுத்³ரம்
க்ருஷ்ண꞉ ஸ்மிதம் ப்ராஞ்ஜலிநம் ப்ரதீத꞉ |
ஸுக³ந்த⁴தோயோ ப⁴வ ம்ருஷ்டதோய-
ஸ்ததா² ப⁴வ க்³ராஹவிவர்ஜிதஷ்²ச ||2-89-33

த்³ருஷ்²யா ச தே ரத்நவிபூ⁴ஷிதா து
ஸா வேலிகாபூ⁴ரத² பத்ஸுகா² ச |
மநோ(அ)நுகூலம் ச ஜநஸ்ய தத்தத்
ப்ரயச்ச² விஜ்ஞாஸ்யஸி மத்ப்ரபா⁴வாத் ||2-89-34

ப⁴வஸ்யபேயோ(அ)ப்யத² சேஷ்டபேயோ
ஜநஸ்ய ஸர்வஸ்ய மநோ(அ)நுகூல꞉ |
வைடூ³ர்யமுக்தாமணிஹேமசித்ரா
ப⁴வந்து மத்ஸ்யாஸ்த்வயி ஸௌம்யரூபா꞉ ||2-89-35

பி³ப்⁴ருஸ்வ ச த்வம் கமலோத்பலாநி
ஸுக³ந்த⁴ஸுஸ்பர்ஷ²ரஸக்ஷமாணி |
ஷட்பாத³ஜுஷ்டாநி மநோஹராணி
கீலாலவர்ணைஷ்²ச ஸமந்விதாநி ||2-89-36

மைரேயமாத்⁴வீகஸுராஸவாநாம்
கும்பா⁴ம்ஷ்²ச பூர்ணாந்ஸ்த²பயஸ்வ தோயே |
ஜாம்பூ³நத³ம் பாநநிமித்தமேஷாம்
பாத்ரம் பபுர்யேஷு த³த³ஸ்வ பை⁴மா꞉ ||2-89-37

புஷ்போச்சயைர்வாஸிதஷீ²ததோயோ
ப⁴வாப்ரமத்த꞉ க²லு தோயராஷே² |
யதா² வ்யலீகம் ந ப⁴வேத்³யதூ³நாம்
ஸஸ்த்ரீஜநாநாம் குரு தத்ப்ரயத்நம் ||2-89-38

பேருறுதி கொண்ட கேசவன், தன் முன் கூப்பிய கரங்களுடன் நின்றிருந்த கடலிடம் {சமுத்ரதேவனிடம்}, “பெருங்கடலே, உன்னுடைய நீர் இனிமையானதாகவும், சுறாக்கள் அற்றதாகவும் இருக்கட்டும்.(33) உன்னுடைய நீர்ப்படுகை ரத்தினங்களால் அலங்கரிக்கப்படட்டும், உன்னுடைய கரைகள் பாதங்கள் இரண்டும் தீண்டத் தகுந்ததாகட்டும். மானுட சுவைக்குத் தகுந்தவை அனைத்தையும் என் சக்தியால் கொடுப்பாயாக.(34) மக்களால் விரும்பப்படும் அனைத்துவகைப் பானங்களையும் நீ கொடுப்பாயாக, பொன், வைடூரியம், முத்துக்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட மென்மையான மீன்கள் உன் நீரில் திரியட்டும்.(35) ரத்தினங்களையும், தீண்டலுக்கு இனியவையும், வண்டுகளால் தொண்டாற்றப் படுபவையுமான நறுமணமிக்க அழகிய செந்தாமரைகளையும், நீலோத்பலங்களையும் நீ தரித்திருப்பாயாக.(36) பைமர்கள் பருகும் மதுக்களான மைரேயம், மாத்வீகம், ஸுரா, ஆஸவம் போன்ற பானங்களைப் பொற்குடுவைகளிலும், எண்ணற்ற குடங்களிலும் நீ தரித்திருப்பாயாக.(37) ஓ பெருங்கடலே, மலர்களின் நறுமணத்துடன் கூடிய குளிர்ந்த நீருடன் நீ இருப்பாயாக. யாதவர்களுக்கும், அவர்களுடைய பெண்டிருக்கும் குறையேதும் ஏற்படாத வகையில் மிகக் கவனமாக இருப்பாயாக” என்றான் {கிருஷ்ணன்}.(38)

இதீத³முக்த்வா ப⁴க³வாந்ஸமுத்³ரம்
தத꞉ ப்ரசிக்ரீட³ ஸஹார்ஜுநேந |
ஸிஷேச பூர்வம் ந்ருப நாரத³ம் து
ஸாத்ராஜிதீ க்ருஷ்ணமுகே²ங்கி³தஜ்ஞா ||2-89-39

ததோ மதா³வர்ஜிதசாருதே³ஹ꞉
பபாத ராம꞉ ஸலிலே ஸலீலம் |
ஸாகாரமாலம்ப்³ய கரம் கரேண
மநோஹராம் ரைவதராஜபுத்ரீம் ||2-89-40

க்ருஷ்ணாத்மஜா யே த்வத² பை⁴மமுக்²யா
ராமஸ்ய பஷ்²சாத்பதிதா꞉ ஸமுத்³ரே |
விராக³வஸ்த்ராப⁴ரணா꞉ ப்ரஹ்ருஷ்டா꞉
க்ரீடா³பி⁴ராமா மதி³ராவிலாக்ஷா꞉ ||2-89-41

ஷே²ஷாஸ்து பை⁴மா ஹரிமப்⁴யுபேதா꞉
க்ரீடா³பி⁴ராமா நிஷ²டோ²ல்முகாத்³யா꞉ |
விசித்ரவஸ்த்ராப⁴ரணாஷ்²ச மத்தா꞉
ஸந்தாநமால்யாவ்ருதகண்ட²தே³ஷா²꞉ ||2-89-42

வீர்யோபபந்நா꞉ க்ருதசாருசிஹ்நா
விலிப்தகா³த்ரா ஜலபாத்ரஹஸ்தா꞉ |
கீ³தாநி தத்³வேஷமநோஹராணி
ஸ்வரோபபந்நாந்யத² கா³யமாநா꞉ ||2-89-43

ஓ! மன்னா {ஜனமேஜயா}, கிருஷ்ணன், பெருங்கடலிடம் இதைச் சொல்லிவிட்டு அர்ஜுனனுடன் விளையாடத் தொடங்கினான். கிருஷ்ணனால் கொடுக்கப்படும் குறிப்புகளை நன்கறிந்த சத்ரஜித்தின் மகள் {சத்யபாமா}, நாரதரின் உடலில் நீரைத் தெளித்தாள்.(39) அப்போது ராமன், போதையில் சுழலும் உடலுடனும் ஆசையுடனும் கூடியவனாக ரேவதியின் கரங்களைப் பிடித்துக் கொண்டு கடலின் நீரில் குதித்து விளையாடினான்.(40) போதையில் உருளும் கண்களுடன் கூடிய கிருஷ்ணனின் மகன்களும், முன்னணி பைமர்கள் பிறரும், ராமனைப் பின்பற்றிக் களிம்புகள், ஆடை ஆபரணங்களைக் களைந்து, பெருங்கடலுக்குள் மகிழ்ச்சியாகக் குதித்தனர்.(41) கழுத்தில் சந்தானக மலர் மாலைகளுடனும், பல்வேறு வண்ணங்களிலான ஆடைகளுடனும் கூடியவர்களும், குடித்தவர்களும், விளையாட்டில் விருப்பம் கொண்டவர்களும், பலதேவனின் மகன்களுமான நிசடன், உல்முகன் ஆகியோரும், அவனது பிறமகன்களும், பைமர்களில் எஞ்சியோரும் கேசவனின் தரப்பை அடைந்தனர்.(42) பெருஞ்சக்தி வாய்ந்தவர்களும், அழகிய அறிகுறிகளைக் கொண்டவர்களும், மேனியில் குழம்புகளைப் பூசிக் கொண்டவர்களுமான யாதவர்கள், தங்கள் கைகளில் நீரொழுகும் குடுவைகளுடன் அந்த இடத்திற்குத் தகுந்த இனிய ராகங்களிலான அழகிய பாடல்களைப் பாடினர்.(43)

தத꞉ ப்ரசக்ருர்ஜலவாதி³தாநி
நாநாஸ்வராணி ப்ரியவாத்³யகோ⁴ஷா꞉ |
ஸஹாப்ஸரோபி⁴ஸ்த்ரிதி³வாலயாபி⁴꞉
க்ருஷ்ணாஜ்ஞயா வேஷ²வதூ⁴ஷ²தாநி ||2-89-44

ஆகாஷ²க³ங்கா³ஜலவாத³நஜ்ஞா꞉
ஸதா³ யுவத்யோ மத³நைகசித்தா꞉ |
அவாத³யம்ஸ்தா ஜலத³ர்து³ராஷ்²ச
வாத்³யாநுரூபம் ஜகி³ரே ச ஹ்ருஷ்டா꞉ ||2-89-45

குஷே²ஷ²யாகோஷ²விஷா²லநேத்ரா꞉
குஷே²ஷ²யாபீட³விபூ⁴ஷிதாஷ்²ச |
குஷே²ஷ²யாநாம் ரவிபோ³தி⁴தாநாம்
ஜஹ்ரு꞉ ஷ்²ரியம் தா꞉ ஸுரவாரமுக்²யா꞉ ||2-89-46

ஸ்த்ரீவக்த்ரசந்த்³ரை꞉ ஸகலேந்து³கல்பை
ரராஜ ராஜஞ்ச²தஷ²꞉ ஸமுத்³ர꞉ |
யத்³ருச்ச²யா தே³வவிதா⁴நதோ வா
நபோ⁴ யதா² சந்த்³ரஸஹஸ்ரகீர்ணம் ||2-89-47

ஸமுத்³ரமேக⁴꞉ ஸ ரராஜ ராஜ~
ஞ்ச்ச²தஹ்ரதா³ஸ்த்ரீப்ரப⁴யாபி⁴ராம꞉ |
ஸௌதா³மிநீபி⁴ந்ந இவாம்பு³நாதோ²
தே³தீ³ப்யமாநோ நப⁴ஸீவ மேக⁴꞉ ||2-89-48

அதன்பிறகு, இசைவிருப்பம் கொண்டவர்களும், நன்கு உடுத்தியவர்களுமான நூற்றுக்கணக்கான காரிகையர், தேவலோகத்தில் வாழும் அப்சரஸ்களுடன் சேர்ந்து பல்வேறு இனிய ஒலிகளை இசைத்து விளையாடத் தொடங்கினர்.(44) ஆகாயக் கங்கையின் நீரில் இசைக்கருவிகள் இசைப்பதை அறிந்த அந்த இளங்கன்னியர், காமனால் முழுமையாகப் பீடிக்கப்பட்ட மனங்களுடன் மகிழ்ச்சியாக ஜலதர்துரம் {ஜலதரங்கம்}[க்ருஷ்ணனின் கட்டளையால் ஸ்வர்க்க வாஸிகளான அப்ஸரஸ்களுடன் நூற்றுக்கணக்கான பணிப்பெண்கள் ப்ரியமான கோஷ வாத்தியங்களையும் நானாவித ஸ்வரத்துடன் கூடிய ஜலதரங்கம் போன்ற ஜலவாத்யங்களையும் இசைத்தனர். ஸதா யுவதிகளான அந்த அப்ஸரஸ் ஸ்த்ரீகள் காமத்திலேயே நோக்கங்கொண்டவர். ஆகாச கங்கா ஜலவாத்யமறிந்தவர். ஜலவாத்யங்களையும் வாசித்தனர். மகிழ்ந்து வாத்யத்துக்கு ஒத்துப் பாடவும் செய்தனர்” ] இசைத்து, அதற்கு இணக்கமான பாடல்களைப்பாடினர்.(45) தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவர்களும், தாமரைத் தண்டுகளால் அலங்கரிக்கப்பட்டவர்களுமான தேவலோகத்தின் அழகிய ஆடற்பெண்கள் அந்த நேரத்தில் சூரியக் கதிர்களாக முற்றாக மலர்ந்த தாமரையின் அழகை அடைந்தனர்.(46) ஓ! மன்னா, தாங்களே விரும்பியோ, எதிர்காலத் தேவைக்கான ஆதிக்கத்தின் கீழோ அங்கே வந்திருந்தவர்களும், நூற்றுக்கணக்கான முழுநிலவுகளைப் போலத் தோன்றுபவர்களுமான அந்தப் பெண்களின் நிலவு போன்ற முகங்களால் நிறைந்திருந்த அந்தப் பெருங்கடலானது, ஆயிரக்கணக்கான நிலவுகளால் அலங்கரிக்கப்பட்ட வானத்தைப் போலத் தோன்றியது.(47) ஓ! மன்னா, மேகம் போன்ற பெருங்கடல், மின்னல் போன்ற பெண்களால் அழகூட்டப்பட்டது. நீர்நிலைகளின் தலைவன் மின்னலால் வானில் விலக்கப்படும் மேகங்களைப் போலத் தெரிந்தான்.(48)

நராயணஷ்²சைவ ஸநாரத³ஷ்²ச
ஸிஷேச பக்ஷே க்ருதசாருசிஹ்ந꞉ |
ப³லம் ஸபக்ஷம் க்ருதசாருசிஹ்நம்
ஸ சைவ பக்ஷம் மது⁴ஸூத³நஸ்ய ||2-89-49

ஹஸ்தப்ரமுக்தைர்ஜலயந்த்ரகைஷ்²ச
ப்ரஹ்ருஷ்டரூபா꞉ ஸிஷிசுஸ்ததா³நீம் |
ராகோ³த்³த⁴தா வாருணிபாநமத்தா꞉
ஸங்கர்ஷணாதோ⁴க்ஷஜதே³வபத்ந்ய꞉ ||2-89-50

ஆரக்தநேத்ரா ஜலமுக்திஸக்தா꞉
ஸ்த்ரீணாம் ஸமக்ஷம் புருஷாயமாணா꞉ |
தே நோபரேமு꞉ ஸுசிரம் ச பை⁴மா
மாநம் வஹந்தோ மத³நம் மத³ம் ச ||2-89-51

உடலில் அழகிய அடையாளங்களைக் கொண்ட நாராயணன், நாரதர் ஆகியோரும் அவனது {கிருஷ்ணனின்} தரப்பைச் சார்ந்தோர் பிறரும் உடலில் அழகிய அடையாளங்களைப் பூண்ட பலதேவன் மீதும், அவனது தரப்பினர் மீதும் நீரைத் தெளித்தனர். இவர்களும், அவர்கள் மீது நீரைத் தெளித்தனர்.(49) அந்த நேரத்தில் கிருஷ்ணன், சங்கர்ஷணன் ஆகியோரின் மனைவியர் வாருணி மது கொடுத்த போதையின் மூலமும், இசையால் தூண்டப்பட்டும் தங்கள் கரங்களாலும், நீர் தெளிக்கும் கருவிகள் மூலமும் மகிழ்ச்சியாக நீரைத் தெளித்தனர்.(50) மதுவாலும், காமனாலும், தன்மானத்தினாலும் பீடிக்கப்பட்ட பைமர்கள், போதையில் சிவந்த கண்களுடன் ஒருவர் மீது மற்றொருவர் நீர் தெளித்து, இவ்வகையிலேயே பெண்களின் முன்னிலையில் முரட்டுத் தன்மையை அடைந்தனர்; நீண்ட நேரமாக விளையாடிக் கொண்டிருந்தாலும் அவர்கள் விலகாமல் இருந்தனர்.(51)

அதிப்ரஸங்க³ம் து விசிந்த்ய க்ருஷ்ண-
ஸ்தாந்வாரயாமாஸ ரதா²ங்க³பாணி꞉ |
ஸ்வயம் நிவ்ருத்தோ ஜலவாத்³யஷ²ப்³தை³꞉
ஸநாரத³꞉ பார்த²ஸஹாயவாம்ஷ்²ச ||2-89-52

க்ருஷ்ணேங்கி³தஜ்ஞா ஜலயுத்³த⁴ஸங்கா³-
த்³பை⁴மா நிவ்ருத்தா த்³ருட⁴மாநிநோ(அ)பி |
நித்யம் ததா²நந்த³கரா꞉ ப்ரியாணாம்
க்ரியாஷ்²ச தேஷாம் நந்ருது꞉ ப்ரதீதா꞉ ||2-89-53

ந்ருத்யாவஸாநே ப⁴க³வாநுபேந்த்³ர-
ஸ்தத்யாஜ தீ⁴மாநத² தோயஸங்கா³ந் |
உத்தீர்ய தோயாத³நுகூலலேபம்
ஜக்³ராஹ த³த்த்வா முநிஸத்தமாய ||2-89-54

உபேந்த்³ரமுத்தீர்ணமதா²ஷு² த்³ருஷ்ட்வா
பை⁴மா ஹி தே தத்யஜுரேவ தோயம் |
விவிக்தகா³த்ராஸ்த்வத² பாநபூ⁴மிம்
க்ருஷ்ணாஜ்ஞயா தே யயுரப்ரமேயா꞉ ||2-89-55

யதா²நுபூர்வ்யா ச யதா²வயஷ்²ச
யத்ஸந்நியோகா³ஷ்²ச ததோ³பவிஷ்டா꞉ |
அந்நாநி வீரா பு³பு⁴ஜு꞉ ப்ரதீதா꞉
பபுஷ்²ச பேயாநி யதா²நுகூலம் ||2-89-56

சக்கரபாணியான கிருஷ்ணன், இவ்வாறு கட்டுமீறும் கலவியைக் கண்டு, ஒரு கணம் சிந்தித்து, அவர்களைத் தடுத்தான். அவனும், பார்த்தன், நாரதர் ஆகியோருடன் சேர்ந்து நீரில் கருவிகளை இசைப்பதில் இருந்து விலகினான்.(52) பைமர்கள், தங்கள் அன்புக்குரிய பெண்டிருக்கும் எப்போதும் மகிழ்ச்சியை அளிப்பவர்களாகவும், பேருணர்வு கொண்டவர்களாக இருந்தாலும், கிருஷ்ணனின் குறிப்பறிந்தும், அவனது நோக்கத்தை உடனே புரிந்து கொண்டு நீரில் விளையாடுவதில் இருந்து விலகினர்; ஆனால் அந்தக் காரிகையர் தொடர்ந்து நடனமாடிக் கொண்டிருந்தனர்.(53) அந்த நடனக் கொண்டாட்டம் முடிந்தும் பிற யாதவர்கள் நீரில் இருந்த போதே உபேந்திரன் {கிருஷ்ணன்} கரையேறினான். அதன் பிறகு அவன் முனிவர்களில் சிறந்த நாரதருக்கு சுகமான களிம்புகளைக் கொடுத்து, தானும் தன் மீது பூசிக் கொண்டான்.(54) உபேந்திரன் நீரைவிட்டு எழுந்ததைக் கண்ட ஒப்பற்ற பைமர்களும் விரைவில் நீரை விட்டகன்றனர். பிறகு தங்கள் மேனியில் களிம்புகளிட்டுத் தூய்மையாகி, கிருஷ்ணனின் அனுமதியுடன் பானம் பருகும் இடத்திற்குச் சென்றனர்.(55) அங்கே அந்தப் புகழ்வாய்ந்த வீரர்கள் தங்கள் வயதுக்கும், தகுதிக்கும் ஏற்ற வரிசையில் அமர்ந்து கொண்டு பல்வேறு உணவுகளுடனும், பானங்களுடனும் புத்துணர்ச்சி அடைந்தனர்.(56)

மாம்ஸாநி பக்வாநி ப²லாம்லகாநி
சுக்ரோத்தரேணாத² ச தா³டி³மேந |
நிஷ்டப்தஷூ²லாஞ்ச²கலாந்பஷூ²ம்ஷ்²ச
தத்ரோபஜஹ்ரு꞉ ஷு²சயோ(அ)த² ஸூதா³꞉ ||2-89-57

ஸுஸ்விந்நஷூ²ல்யாந்மஹிஷாம்ஷ்²ச பா³லா-
ஞ்சூ²ல்யந்ஸுநிஷ்டப்தக்⁴ருதாவஸிக்தாந் |
வ்ருக்ஷாம்லஸௌவர்சலசுக்ரபூர்ணா-
பௌரோக³வோக்த்யா உபஜஹ்ருரேஷாம் ||2-89-58

பௌரோக³வோக்த்யா விதி⁴நா ம்ருகா³ணாம்
மாம்ஸாநி ஸித்³தா⁴நி ச பீவராணி |
நாநாப்ரகாராண்யுபஜஹ்ருரேஷாம்
ம்ருஷ்டாநி பக்வாநி ச சுக்ரசூதை꞉ ||2-89-59

பார்ஷ்²வாநி சாந்யே ஷ்²கலாநி தத்ர
த³து³꞉ பஷூ²நாம் க்⁴ருதம்ருக்ஷிதாநி |
ஸாமுத்³ரசூர்ணைரவசூர்ணிதாநி
சூர்ணேந ம்ருஷ்டேந ஸமாரிசேந ||2-89-60

ஸமூலகைர்தா³டி³மமாதுலிங்கை³꞉
பர்ணாஸஹிங்க்³வார்த்³ரகபூ⁴ஸ்த்ரூணைஷ்²ச |
ததோ³பத³ம்ஷை²꞉ ஸுமுகோ²த்தரைஸ்தே
பாநாநி ஹ்ருஷ்டா꞉ பபுரப்ரமேயா꞉ ||2-89-61

கட்வாங்கஷூ²லைரபி பக்ஷிபி⁴ஷ்²ச
க்⁴ருதாம்லஸௌவர்சலதைலஸிக்தை꞉ |
மைரேயமாத்⁴வீகஸுராஸவாம்ஸ்தே
பபு꞉ ப்ரியாபி⁴꞉ பரிவார்யமாணா꞉ ||2-89-62

ஷ்²வேதேந யுக்தா ந்ருப ஷோ²ணிதேந
ப⁴க்ஷ்யாந்ஸுக³ந்தா⁴ம்ˮல்லவணாந்விதாம்ஷ்²ச |
ஆர்த்³ராந்கிலாதா³ந்க்⁴ருதபூர்ணகாம்ஷ்²ச
நாநாப்ரகாராநபி க²ண்ட³கா²த்³யாந் ||2-89-63

அபாநபாஷ்²சோத்³த⁴வபோ⁴ஜமிஷ்²ரா꞉
ஷா²கைஷ்²ச ஸூபைஷ்²ச ப³ஹுப்ரகாரை꞉ |
பேயைஷ்²ச த³த்⁴நா பயஸா ச வீரா꞉
ஸ்வந்நாநி ராஜந் பு³பு⁴ஜு꞉ ப்ரஹ்ருஷ்டா꞉ ||2-89-64

ததா²ரநாலாம்ஷ்²ச ப³ஹுப்ரகாரா-
ந்பபு꞉ ஸுக³ந்தா⁴நபி பாலவீஷு |
ஷ்²ருதம் பய꞉ ஷ²ர்கரயா ச யுக்தம்
ப²லப்ரகாராம்ஷ்²ச ப³ஹூம்ஷ்²ச கா²த³ந் ||2-89-65

த்ருப்தா꞉ ப்ரவ்ருத்தா꞉ புநரேவ வீரா-
ஸ்தே பை⁴மமுக்²யா வநிதாஸஹாயா꞉ |
கீ³தாநி ரம்யாணி ஜகு³꞉ ப்ரஹ்ருஷ்டா꞉
காந்தாபி⁴நீதாநி மநோஹராணி ||2-89-66

அப்போது சமையற்கலைஞர்கள், சமைத்த இறைச்சியையும், புளிக்காடியையும் {புளித்த பழச்சாறுகளையும்}, மாதுளைகளையும், சூலங்களில் {இரும்புக் கம்பிகளில் வைத்து} வாட்டப்பட்ட விலங்கு இறைச்சிகளையும் மகிழ்ச்சியாக அங்கே கொண்டு வந்தனர்.(57) பிறகு சூலத்தில் நன்கு வாட்டப்பட்டதும், சூடானதும், புளி, ஆளிவிதை, புளிக்காடி ஆகியவை கலந்து தெளிந்த நெய்யில் பொரிக்கப்பட்டதுமான இளம் எருமை அங்கே படைக்கப்பட்டது.(58) திறன்மிக்கச் சமையற்கலைஞர்களின் நடைமுறைப்படி வாட்டப்பட்ட பருத்த மான்கள் பலவற்றின் இறைச்சியும், புளிக்காடியில் இனிமையாக்கப்பட்டு அடுத்ததாகக் கொண்டு வரப்பட்டது.(59) உப்பு, கடுகு ஆகியவை கலந்து தெளிந்த நெய்யில் பொரிக்கப்பட்ட விலங்குகளின் கால்களும் அங்கே படைக்கப்பட்டன.(60) ஒப்பற்றவர்களான யாதவர்கள், கிழங்கு, மாதுளை, பெருங்காயம், மஞ்சள் ஆகியவையும், நறுமணமிக்கப் பிற காய்கறிகளும் கலந்த அந்த உணவுகளைப் பெரும் மகிழ்ச்சியுடன் உண்டனர்.(61) தெளிந்த நெய், புளிச்சாறு, உப்பு ஆகியவற்றுடனும் புளிப்பான பிற பொருட்களுடனும் சேர்த்துச் சூலத்தில் வாட்டப்பட்ட பறவைகளின் இறைச்சிகளை உண்டு, மைரேயம், மாத்வீகம், ஆஸவம் போன்ற பல்வேறு மதுவகைகளைத் தங்கள் அன்புக்குரிய காரிகையர் சூழ அவர்கள் பருகினர்.(62) தயிரும், தெளிந்த நெய்யும் சேர்க்கப்பட்டவையும், வெள்ளை, சிவப்பு வண்ணங்களிலானவையும், உப்பு சேர்க்கப்பட்டவையுமான மணமிக்கப் பல்வேறு சிற்றுண்டிகளையும் அவர்கள் உண்டனர்.(63) ஓ! மன்னா, மது பருகாதவர்களான உத்தவன், போஜன் போன்ற பிற வீரர்கள், காய்கனிகளையும், மரக்கறி குழம்பையும், தயிர், பருப்பு ஆகியவற்றையும் மகிழ்ச்சியாக உண்டனர்.(64) பாலவி என்ற பெயர் கொண்ட கோப்பைகளில் அவர்கள் பல்வேறு வகையான மணமிக்கப் பானங்களையும், பால், நெய், பாயஸம் ஆகியவற்றையும் பருகி, பல்வேறு வகைக் கனிகளையும் உண்டனர்.(65) இவ்வாறே அந்த வீரப் பைமர்கள் தங்களுக்கு நிறைவாக உண்டு மகிழ்ந்திருந்தனர். அதன்பிறகு அவர்கள் தங்கள் மனைவியரால் தூண்டப்பட்டு அவர்களுடன் சேர்ந்து, மீண்டும் மகிழ்ச்சியுடன் இசையில் கலந்தனர்.(66)

ஆஜ்ஞாபயாமாஸ தத꞉ ஸ தஸ்யாம்
நிஷி² ப்ரஹ்ருஷ்டோ ப⁴க³வாநுபேந்த்³ர꞉ |
சா²லிக்யகே³யம் ப³ஹுஸந்நிதா⁴நம்
யதே³வ கா³ந்த⁴ர்வமுதா³ஹரந்தி ||2-89-67

ஜக்³ராஹ வீணாமத² நாரத³ஸ்து
ஷட்³க்³ராமராகா³தி³ஸமாதி⁴யுக்தாம் |
ஹல்லீஸகம் து ஸ்வயமேவ க்ருஷ்ண꞉
ஸவம்ஷ²கோ⁴ஷம் நரதே³வ பார்த²꞉ ||2-89-68

ம்ருத³ங்க³வாத்³யாநபராம்ஷ்²ச வாத்³யா-
ந்வராப்ஸரஸ்தா ஜக்³ருஹு꞉ ப்ரதீதா꞉ |
ஆஸாரிதாந்தே ச தத꞉ ப்ரதீதா
ரம்போ⁴த்தி²தா ஸாபி⁴நயார்த²தஜ்ஜ்ஞா꞉ ||2-89-69

தயாபி⁴நீதே வரகா³த்ரயஷ்ட்யா
துதோஷ ராமஷ்²ச ஜநார்த³நஷ்²ச |
அதோ²ர்வஷீ² சாருவிஷா²லநேத்ரா
ஹேமா ச ராஜந்நத² மிஷ்²ரகேஷீ² ||2-89-70

திலோத்தமா சாப்யத² மேநகா ச
ஏதாஸ்ததா²ந்யாஷ்²ச ஹரிப்ரியார்த²ம் |
ஜகு³ஸ்ததை²வாபி⁴நயம் ச சக்ரு-
ரிஷ்டைஷ்²ச காமைர்மநஸோ(அ)நுகூலை꞉ ||2-89-71

தா வாஸுதே³வே(அ)ப்யநுரக்தசித்தா꞉
ஸ்வகீ³தந்ருத்யாபி⁴நயைருதா³ரை꞉ |
நரேந்த்³ரஸூநோ பரிதோஷிதேந
தாம்பூ³லயோகா³ஷ்²ச வராப்ஸரோபி⁴꞉ ||2-89-72

அப்போது இரவும் வந்தபடியால் தெய்வீகனான உபேந்தரன் அந்தக் கொண்டாட்டத்தில் இருந்த அனைவரையும் சேர்ந்து பாடக் கேட்டுக் கொண்டான். தேவர்களாலும், கந்தர்வர்களாலும் பல்வேறு ராகங்களில் அமைக்கப்பட்ட சாலிக்யம் {என்ற பாடல் / காந்தர்வ கானம்} அங்கே பாடப்பட்டது.(67) ஓ! மன்னா, அப்போது நாரதர், மனத்தில் ஓர்மையைக் கொண்டு வரும் ஸ்வரங்களையும், ஆறு ராகங்களையும் கொண்ட {சத்கிராமம் இசைக்கவல்ல}[பைரவம், மாலவ சாரங்கம், இந்தோளம், வசந்தம், தீபகம், மேகம் என்ற இசையின் ஆறு வகை ராகங்கள் இவை. செய்யுள்களிலும், தொன்மங்களிலும் இவை வடிவம் கொண்ட நபர்களாக உருவகப் படுத்தப்படுகின்றன”] தன் வீணையை மீட்டினார், கிருஷ்ணன் தன் புல்லாங்குழல் இசையுடன் சேர்த்து ஹல்லீசகம் {நாட்டிய கீதம்}[குடக்கூத்து, குரவைக் கூத்து, கரகாட்டம் போன்றது எனத் தெரிகிறது.] இசைத்தான்; பார்த்தன்(68) மிருதங்கம்[ஒரு வகை இசைக்கருவி”] இசைத்தான்; முன்னணி அப்சரஸ்கள் பல்வேறு இசைக்கருவிகளை இசைத்தனர். அதன் பிறகு அசாரிதையும்[நாட்டிய முடிவில் அபிநய அர்த்த தத்வமறிந்த ரம்பை எழுந்தாள். அழகிய உடலமைப்புள்ள ரம்பையால் அபிநயம் பிடிக்கப்பட்டதும் பலராமனும், ஜனார்த்தனனும் மிக மகிழ்ந்தனர்”], நல்ல நடிகையுமான அழகிய ரம்பை எழுந்து இசைக்குத் தக்க இசைந்து {நடனமாடி}(69) ராமனையும், கேசவனையும் மகிழ்வித்தாள். அதன் பிறகு, ஓ! மன்னா, அழகிய அகன்ற விழிகளைக் கொண்ட ஊர்வசி, ஹேமா, மிஷ்ரகேசி,(70) திலோத்தமை, மேனகை ஆகியோரும் பிற தெய்வீக நடிகையரும் முறையான வரிசையில் எழுந்து ஆடல், பாடலுடன் ஹரியை மகிழ்வித்தனர்.(71) அவர்களுடைய ஆடலிலும், பாடலிலும் ஈர்க்கப்பட்ட வாசுதேவன், அவர்கள் அனைவரிடமும் மகிழ்ச்சியடைந்தவனாக அவர்களுடைய இதயம் விரும்பும் பொருட்கள் அனைத்தையும் கொடையாக அளித்தான். ஓ! இளவரசே, அங்கே அழைத்துவரப்பட்டவர்களும், மதிப்புமிக்கவர்களுமான அந்த முன்னணி அப்சரஸ்கள், கிருஷ்ணனின் விருப்பத்தின் பேரால் வெற்றிலை {தாம்பூலம்} கொடுத்துக் கௌரவிக்கப்பட்டனர்.(72)

ததா³க³தாபி⁴ர்ந்ருவராஹ்ருதாஸ்து
க்ருஷ்ணேப்ஸயா மாநமயாஸ்ததை²வ |
ப²லாநி க³ந்தோ⁴த்தமவந்தி வீரா-
ஷ்²சா²லிக்யகா³ந்த⁴ர்வமதா²ஹ்ருதம் ச || 2-89-73

க்ருஷ்ணேச்ச²யா ச த்ரிதி³வாந்ந்ருதே³வ
அநுக்³ரஹார்த²ம் பு⁴வி மாநுஷாணாம் |
ஸ்தி²தம் ச ரம்யம் ஹரிதேஜஸேவ
ப்ரயோஜயாமாஸ ஸ ரௌக்மிணேய꞉ ||2-89-74

சா²லிக்யகா³ந்த⁴ர்வமுதா³ரபு³த்³தி⁴-
ஸ்தேநைவ தாம்பூ³லமத² ப்ரயுக்தம் |
ப்ரயோஜிதம் பஞ்சபி⁴ரிந்த்³ரதுல்யை-
ஷ்²சா²லிக்யமிஷ்டம் ஸததம் நராணாம் ||2-89-75

ஷு²பா⁴வஹம் வ்ருத்³தி⁴கரம் ப்ரஷ²ஸ்தம்
மங்க³ல்யமேவாத² ததா² யஷ²ஸ்யம் |
புண்யம் ச புஷ்ட்யப்⁴யுத³யாவஹம் ச
நாராயணஸ்யேஷ்டமுதா³ரகீர்தே꞉ ||2-89-76

ப⁴ராபஹம் த⁴ர்மப⁴ராவஹம் ச
து³꞉ஸ்வப்நநாஷ²ம் பரிகீர்த்யமாநம் |
கரோதி பாபம் ச ததா² விஹந்தி
ஷ்²ருண்வந்ஸுராவாஸக³தோ நரேந்த்³ர꞉ ||2-89-77

சா²லிக்யகா³ந்த⁴ர்வமுதா³ரகீர்தி-
ர்மேநே கிலைகம் தி³வஸம் ஸஹஸ்ரம் |
சதுர்யுகா³நாம் ந்ருப ரேவதோ(அ)த²
தத꞉ ப்ரவ்ருத்தா ச குமாரஜாதி꞉ ||2-89-78

ஓ! மன்னா, இவ்வாறு கிருஷ்ணனின் விருப்பம், மானுடத்தின் மீது அவன் கொண்ட தயவு ஆகியவற்றின் மூலமும் தேவலோகத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட நறுமணமிக்கப் பல்வேறு கனிகளும், அந்தச் சாலிக்ய பாடலும் {சாலுக்ய காந்தர்வமெனும் தேவலோகப் பாட்டும்} ருக்மிணியின் நுண்ணறிவுமிக்க மகன் {பிரத்யும்னன்} மட்டுமே அறிந்தவையாக இருந்தன. அவனே அவற்றைப் பயன்படுத்தினான்; அவனே அந்நேரத்தில் வெற்றிலைகளை {தாம்பூலத்தைக்} கொடுத்துக் கொண்டிருந்தான்.(73,74) நலம்பயக்கவல்லதும், ஊட்டத்தையும், செழிப்பையும் கொடுக்கவல்லதும், நாராயணனின் புகழைச் சொல்வதும், மகிமைவாய்ந்ததும், மங்கலமானதும், மனிதர்கள் புகழையும், அறத்தையும் ஈட்டச் செய்வதுமான அந்தச் சாலிக்ய பாடலை இந்திரனைப் போன்ற கிருஷ்ணனும், ராமன், பிரத்யும்னன், அனிருத்தன், சாம்பன் ஆகியோரும் பாடினர்.(75,76) அங்கே பாடப்பட்ட சாலிக்யம், அறத்தின் அச்சாணியை நிலைநிறுத்தவல்லதாகவும், கவலையையும், பாவத்தையும் அழிக்கவல்லதாகவும் இருந்தது. சிறப்புமிக்க ரேவத மன்னன், தேவலோகத்திற்குச் சென்று, இந்தச் சாலிக்யப் பாடலைக் கேட்டு, நான்கு யுகங்களை ஒரு நாளாகக் கருதினான். அதிலிருந்தே குமாரஜாதி முதலிய காந்தர்வங்களின் பல்வேறு பிரிவுகள் {கானப் பிரிவுகள்} தோன்றின.(77,78)

கா³ந்த⁴ர்வஜாதிஷ்²ச ததா²பராபி
தீ³பாத்³யதா² தீ³பஷ²தாநி ராஜந் |
விவேத³ க்ருஷ்ணஷ்²ச ஸ நாரத³ஷ்²ச
ப்ரத்³யும்நமுக்²யைர்ந்ருப பை⁴மமுக்²யை꞉ ||2-89-79

விஜ்ஞாநமேதத்³தி⁴ பரே யதா²வ-
து³த்³தே³ஷ²மாத்ராச்ச ஜநாஸ்து லோகே |
ஜாநந்தி சா²லிக்யகு³ணோத³யாநாம்
தோயம் நதீ³நாமத² வா ஸமுத்³ரே ||2-89-80

ஜ்ஞாதும் ஸமர்தோ² ஹிமவாந்கி³ரிர்வா
ப²லாக்³ரதோ வா கு³ணதோ(அ)த² வாபி |
ஷ²க்யம் ந சா²லிக்யம்ருதே தபோபி⁴꞉
ஸ்தா²நே விதா⁴நாந்யத² மூர்ச்ச²நாஸு ||2-89-81

ஷட்³க்³ராமராகே³ஷு ச தத்ர கார்யம்
தஸ்யைகதே³ஷா²வயவேந ராஜந் |
லேஷா²பி⁴தா⁴நாம் ஸுகுமாரஜாதிம்
நிஷ்டா²ம் ஸுது³꞉கே²ந நரா꞉ ப்ரயாந்தி ||2-89-82

சா²லிக்யகா³ந்த⁴ர்வகு³ணோத³யேஷு
யே தே³வக³ந்த⁴ர்வமஹர்ஷிஸங்கா⁴꞉ |
நிஷ்டா²ம் ப்ரயாந்தீத்யவக³ச்ச² பு³த்³த்⁴யா
சா²லிக்யமேவம் மது⁴ஸூத³நேந ||2-89-83

ஓ! மன்னா {ஜனமேஜயா}, ஒரு விளக்கால் நூற்றுக்கணக்கான விளக்குகள் ஏற்றப்படுவதைப் போலவே சாலிக்யத்திலிருந்தே காந்தர்வங்களின் பல்வேறு பிரிவுகள் உண்டாகின. ஓ! மன்னா, பிரத்யும்னனும், முன்னணி பைமர்கள் பிறரும், கிருஷ்ணன், நாரதர் ஆகியோரும் இவை அனைத்தையும் அறிந்திருந்தனர்.(79) இந்த உலகத்தின் மக்கள் ஓடைகளையும், பெருங்கடலின் நீரையும் அறிந்ததைப் போல ஓர் எடுத்துக்காட்டாக மட்டுமே சாலிக்யத்தை அறிந்திருந்தனர். இமயத்தின் குணங்களையும், கனத்தையும் அறிந்துவிடலாம், சாலிக்யத்தின் மூர்ச்சனைகளையும்[ஒரு கிராமத்தின் ஏழாவது பகுதியில் வெளிப்படும் தொனி அல்லது அரைத் தொனி இஃது” என மன்], கால அளவுகளையும் கடும் தவம் {கடும் பயிற்சி} செய்யாமல் அறிய முடியாது.(80,81) ஓ! மன்னா, மனிதர்கள் பெருஞ்சிரமத்துடன் முயன்றாலும் பதினோராவது பிரிவான சுகுமாரஜாதியின் எல்லையையே அடைய முடியாது எனும்போது ஆறு ஸ்வர ராகங்களைக் கொண்ட சாலிக்யத்தைக் குறித்து என்ன சொல்ல முடியும் {அஃது எவ்வளவு கடினமானதாக இருக்க வேண்டும்?}. ஓ! மன்னா, தேவர்களும், கந்தர்வர்களும், பெரும் முனிவர்களும் சாலிக்யத்தினுடைய குணங்களின் காரணமாகப் பக்தி கொள்ளும் மனநிலையை அடையக்கூடும் என்பதற்காகவே மதுசூதனன் அதை ஏற்படுத்தினான் என்பதை அறிவாயாக.(82,83)

பை⁴மோத்தமாநாம் நரதே³வ த³த்தம்
லோகஸ்ய சாநுக்³ரஹகாம்யயைவ |
க³தம் ப்ரதிஷ்டா²மமரோபகே³யம்
பா³லா யுவாநஷ்²ச ததை²வ வ்ருத்³தா⁴꞉ ||2-89-84

க்ரீட³ந்தி பை⁴மா꞉ ப்ரஸவோத்ஸவேஷு
பூர்வம் து பா³லா꞉ ஸமுதா³வஹந்தி |
வ்ருத்³தா⁴ஷ்²ச பஷ்²சாத்ப்ரதிமாநயந்தி
ஸ்தா²நேஷு நித்யம் ப்ரதிமாநயந்தி ||2-89-85

மர்த்யேஷு மர்த்யாந்யத³வோ(அ)திவீரா꞉
ஸ்வவம்ஷ²த⁴ர்மம் ஸமநுஸ்மரந்த꞉ |
புராதநம் த⁴ர்மவிதா⁴நதஜ்ஜ்ஞா꞉
ப்ரீதி꞉ ப்ரமாணம் ந வய꞉ ப்ரமாணம் ||2-89-86

ப்ரீதிப்ரமாணாநி ஹி ஸௌஹ்ருதா³ணி
ப்ரீதிம் புரஸ்க்ருத்ய ஹி தே த³ஷா²ர்ஹா꞉ |
வ்ருஷ்ண்யந்த⁴கா꞉ புத்ரஸுகா² ப³பூ⁴வு-
ர்விஸர்ஜிதா꞉ கேஷி²விநாஷ²நேந ||2-89-87

ஸ்வர்க³ம் க³தாஷ்²சாப்ஸரஸாம் ஸமூஹா꞉
க்ருத்வா ப்ரணாமம் மது⁴கம்ஸஷ²த்ரோ꞉ |
ப்ரஹ்ருஷ்டரூபஸ்ய ஸுஹ்ருஷ்டரூபா
ப³பூ⁴வ ஹ்ருஷ்ட꞉ ஸுரலோகஸங்க⁴꞉ ||2-89-88

உலகத்திற்குத் தயவு காட்டும் வகையில் மனிதர்களுக்கு மத்தியில், பைமர்களின் முன்னிலையில் தேவன் கிருஷ்ணனால் பாடப்பட்டதன் காரணமாக, அதுவரை தேவர்களால் மட்டுமே பாடப்பட்டு வந்த சாலிக்யம், முற்காலத்தில் {பிறந்த நாள் முதலிய} விழாக் காலங்களில் பைமச் சிறுவர்கள் எடுத்துக் காட்டாக மேற்கோள் காட்டும் அளவுக்குப் புகழடைந்தது. அவர்கள் சொல்வதை முதியவர்களும் அங்கீகரித்தனர் {மதித்துப் புகழ்ந்தனர்},(84,85) சிறுவர்களும், இளைஞர்களும், முதியவர்களும், தங்கள் குலத்தில் இத்தகைய குணம் கொண்ட மனிதர்களும், புராதன அறச்சடங்குகளை வகுத்தவர்களுமான வீர யாதவர்களை நினைவுகூருவதற்காக “அன்பே இன்றியமையாதது, வயதல்ல” என்று கூட்டாகச் சேர்ந்து பாடினர்.(86) ஓ! மன்னா, நட்பு அன்பால் அறியப்படுகிறது; எனவே, கேசவனுடன் சேர்த்து விருஷ்ணிகள், அந்தகர்கள், தாசார்ஹர்கள் பிறரும் தங்கள் மகன்களைத் தங்கள் நண்பர்களாகவே கருதினர்.(87) அதன்பிறகு நிறைவடைந்தவர்களான அப்சரஸ்கள், கம்சனைக் கொன்றவனான மதுசூதனனை மகிழ்ச்சியாக வணங்கிவிட்டு, இன்பத்தில் நிறைந்திருந்த தேவலோகத்திற்குத் திரும்பிச் சென்றனர்” என்றார் {வைசம்பாயனர்}.(88)

இதி ஷ்²ரீமஹாபா⁴ரதே கி²லேஷு ஹரிவம்ஷே² விஷ்ணுபர்வணி
பா⁴நுமதீஹரணே சா²லிக்யக்ரீடா³வர்ணநே ஏகோந்நவதிதமோ(அ)த்⁴யாய꞉

————–—————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாஸ பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விஷ்ணு பர்வம்–அத்யாயம் – 88–(ஜலக்ரீடாவர்ணனம்)-யாதவக் கடல்நீர்விளையாட்டு |-

January 31, 2021

பெண்களுடனும், அப்ஸரஸ்களுடனும் ஸ்ரீ கிருஷ்ணனும், யாதவர்களும் கடல் நீரில் விளையாடிய சமுத்ர ஜலக்ரீடை

ஜனமேஜய உவாச
முனே(அ)ந்த⁴கவத⁴꞉ ஷ்²ராவ்ய꞉ ஷ்²ருதோ(அ)யம் க²லு போ⁴ மயா |
ஷா²ந்திஸ்த்ரயாணாம் லோகானாம் க்ருத்வா தே³வேன தீ⁴மதா ||2-88-1

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! முனிவரே, நுண்ணறிவுமிக்க மஹாதேவன், மூவுலகங்களில் அமைதியை மீட்டெடுக்கத் தேவையான அந்தகனின் அழிவு பற்றிய கதையை நான் கேட்டேன்

நிகும்ப⁴ஸ்ய ஹதம் தே³ஹம் த்³விதீயம் சக்ரபாணினா |
யத³ர்த²ம் ச யதா² சைவ தத்³ப⁴வான்வக்துமர்ஹதி ||2-88-2

இனி, சக்கரபாணியான கிருஷ்ணனால் நிகும்பனின் மற்றொரு உடல் அழிக்கப்பட்டது ஏன் என்பதை விரிவாகச் சொல்வதே உமக்குத் தகும்” என்று கேட்டான்

வைஷ²ம்பாயன உவாச
ஷ்²ரத்³த³தா⁴னஸ்ய ராஜேந்த்³ர வக்தவ்யம் ப⁴வதோ(அ)னக⁴ |
சரிதம் லோகநாத²ஸ்ய ஹரேரமிததேஜஸ꞉ ||2-88-3

வைசம்பாயனர் {ஜனமேஜயனே}, “ஓ! பாவமற்ற மன்னா, அண்டத்தின் பலம்வாய்ந்தவனும், உயர்ந்தவனுமான தலைவன் ஹரியின் வரலாற்றைக் கேட்பதில் பெரும் மதிப்பை வெளிப்படுத்துகிறாய். எனவே நான் இதை உனக்குச் சொல்ல வேண்டும்

த்³வாரவத்யாம் நிவஸதோ விஷ்ணோரதுலதேஜஸ꞉ |
ஸமுத்³ரயாத்ரா ஸம்ப்ராப்தா தீர்தே² பிண்டா³ரகே ந்ருப ||2-88-4

ஓ! மன்னா, ஒப்பற்ற சக்தி கொண்ட ஹரி துவாரகை நகரத்தில் வாழ்ந்தபோது, பிண்டாரகம் {பிண்டாலகம்} எனும் புனிதத் தலத்திற்குக் கடல்வழியாகப் பயணம் செய்தான்

உக்³ரஸேனோ நரபதிர்வஸுதே³வஷ்²ச பா⁴ரத |
நிக்ஷிப்தௌ நக³ராத்⁴யக்ஷௌ ஷே²ஷா꞉ ஸர்வே விநிர்க³தா꞉ ||2-88-5

ஓ! பரதனின் வழித்தோன்றலே, அந்த நேரத்தில் உக்ரசேனனும், வசுதேவனும் நகரத்தின் ஆளுனர்களாக இருந்தனர். மற்றவர் அனைவரும் நாராயணனைப் பின்தொடர்ந்தனர்.

ப்ருத²க்³ப³ல꞉ ப்ருத²க்³தீ⁴மாம்ˮல்லோகநாதோ² ஜனார்த³ன꞉ |
கோ³ஷ்ட்²யா꞉ ப்ருத²க்குமாராணாம் ந்ருதே³வாமிததேஜஸாம் ||2-88-6

ஓ! மன்னா, பலதேவனும், ஜனார்த்தனனும், தேவர்களைப் போன்ற சக்திமிக்கப் பிற இளவரசர்களின் கூட்டங்களும் தனித்தனியே புறப்பட்டுச் சென்றனர்.(

க³ணிகானாம் ஸஹஸ்ராணி நி꞉ஸ்ருதானி நராதி⁴ப |
குமாரை꞉ ஸஹ வார்ஷ்ணேயை ரூபவத்³பி⁴꞉ ஸ்வலங்க்ருதை꞉ ||2-88-7

ஓ! மன்னா {ஜனமேஜயா}, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட அழகிய விருஷ்ணி இளவரசர்களுடன் ஆயிரக்கணக்கான ஆடற்பெண்டிரும் சென்றனர்.

தை³த்யாதி⁴வாஸம் நிர்ஜித்ய யது³பி⁴ர்த்³ருட⁴விக்ரமை꞉ |
வேஷ்²யா நிவேஷி²தா வீர த்³வாரவத்யாம் ஸஹஸ்ரஷ²꞉ ||2-88-8

ஓ! வீரா, பலம்வாய்ந்தவர்களான யாதவர்கள், அந்த ஆயிரக்கணக்கான ஆடற்பெண்டிரையும் கடற்படுகையில் இருந்து நீரை விலக்கி துவாராவதி நகரில் குடியமர்த்தி இருந்தனர்[“உறுதியான பராக்ரமமுடைய யது வீரர்களைக் கொண்டு (நிகும்பன் முதலிய) அஸுரர் வஸிக்குமிடத்தை (ஷட்புரத்தை) ஜயித்து த்வாரகையில் ஆயிரக்கணக்கில் வேசியர் வைக்கப்பட்டனர்” )

ஸாமாந்யாஸ்தா꞉ குமாராணாம் க்ரீடா³னார்யோ மஹாத்மனாம் |
இச்சா²போ⁴க்³யா கு³ணைரேவ ராஜன்யா வேஷயோஷித꞉ ||2-88-9

அழகு நிறைந்தவர்களான அந்த ஆடற்பெண்டிர், தங்கள் திறன்களின் காரணமாக இளவரசர்களின் இன்பத்திற்குரியவர்கள் ஆனார்கள்.

ஸ்தி²திரேஷா ஹி பை⁴மானாம் க்ருதா க்ருஷ்ணேன தீ⁴மதா |
ஸ்த்ரீநிமித்தம் ப⁴வேத்³வைரம் மா யதூ³நாமிதி ப்ரபோ⁴ ||2-88-10

ஓ! தலைவா, நுண்ணறிவுமிக்கக் கிருஷ்ணன், பெண்களுக்கான உட்பகையால் யாதவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்று நினைத்து பைமர்களுக்கிடையே இந்த நடைமுறையை நிறுவியிருந்தான்.

ரேவத்யா சைகயா ஸார்த⁴ம் ப³லோ ரேமே(அ)னுகூலயா |
சக்ரவாகானுராகே³ண யது³ஷ்²ரேஷ்ட²꞉ ப்ரதாபவான் ||2-88-11

காத³ம்ப³ரீபானகலோ பூ⁴ஷிதோ வனமாலயா |
சிக்ரீட³ ஸாக³ரஜலே ரேவத்யா ஸஹிதோ ப³ல꞉ ||2-88-12

யதுக்களில் முதன்மையானவனும், பலம்வாய்ந்தவனும், மது பருகிய போதையுடன் கூடியவனும், காட்டு மலர்மாலையால் அலங்கரிக்கப்பட்டவனுமான பலதேவன், நீரில் விளையாடிய போது, ஒரு சக்கரவாகப் பறவையைப் போல ரேவதியுடன் மட்டுமே இன்புற்றிருந்தான்.(11,12)

ஷோட³ஷ² ஸ்த்ரீஸஹஸ்ராணி ஜலே ஜலஜலோசன꞉ |
ரமயாமாஸ கோ³விந்தோ³ விஷ்²வரூபேண ஸர்வத்³ருக் ||2-88-13

அனைத்தையும் படைத்தவனும், தாமரைக் கண்ணனுமான கோவிந்தன் {கிருஷ்ணன்}, தன் சொந்த உடல்கள் பலவற்றினால் உறவாடியபடியே தன்னுடைய பதினாறாயிரம் மனைவியருடன் கடலில் தனித்தனியாக விளையாடிக் கொண்டிருந்தான்

அஹமிஷ்டா மயா ஸார்த⁴ம் ஜலே வஸதி கேஷ²வ꞉ |
இதி தா மேநிரே ஸர்வா ராத்ரௌ நாராயணஸ்த்ரிய꞉ ||2-88-14

ஓ! மன்னா, அந்த நேரத்தில் கேசவனின் மனைவியருக்கு மத்தியில், “நானே கேசவருக்கு மிகப் பிடித்தமானவள்; அவர் என்னுடன் மட்டுமே விளையாடிக் கொண்டிருக்கிறார்” என்ற எண்ணம் இருந்தது.

ஸர்வா꞉ ஸுரதசிஹ்னாங்க்³ய꞉ ஸர்வா꞉ ஸுரததர்பிதா꞉ |
மானமூஹுஷ்²ச தா꞉ ஸர்வா கோ³விந்தே³ ப³ஹுமானஜம் ||2-88-15

தங்கள் மேனி முழுவதும் போகத்திற்குரிய அடையாங்களைக் கொண்ட அந்தக் காரிகையர் அனைவரும் கோவிந்தனிடம் காதல் சரசமாடினர்

அஹமிஷ்டாஹமிஷ்டேதி ஸ்னிக்³தே⁴ பரிஜனே ததா³ |
நாராயணஸ்த்ரிய꞉ ஸர்வா முதா³ ஷ²ஷ்²லாகி⁴ரே ஷு²பா⁴꞉ ||2-88-16

நற்பெண்டிரில் அழகியரான அந்த நாராயணக் காரிகையர் {நாராயணனின் மனைவியர்}, “நான் மட்டுமே கேசவருக்கு மிகப் பிடித்தமானவள்” என்று எண்ணி ஏமாந்தனர் {தங்களைத் தாங்களே புகழ்ந்து கொண்டனர்}.

கரஜத்³விஜசிஹ்னானி குசாத⁴ரக³தானி தா꞉ |
த்³ருஷ்ட்வா த்³ருஷ்ட்வா ஜஹ்ருஷிரே த³ர்பணே கமலேக்ஷணா꞉ ||2-88-17

{தாமரையைப் போன்று அழகிய கண்களைக் கொண்ட அந்தப் பெண்கள், தங்கள் முலைகளில் நகக்குறிகளையும், உதடுகளில் பற்குறிகளையும் மீண்டும் மீண்டும் முகக்கண்ணாடியில் கண்டு மகிழ்ச்சியடைந்தனர்

கோ³த்ரமுத்³தி³ஷ்²ய க்ருஷ்ணஸ்ய ஜகி³ரே க்ருஷ்ணயோஷித꞉ |
பிப³ந்த்ய இவ க்ருஷ்ணஸ்ய நயனைர்வத³னாம்பு³ஜம் ||2-88-18

கிருஷ்ணனின் மனைவியர், தங்கள் கண்களால் கேசவனின் முக அமுதத்தைப் பருகிவிடுபவர்களைப் போல அவனைக் கண்டனர்.

க்ருஷ்ணார்பிதமனோத்³ருஷ்ட்ய꞉ காந்தா நாராயணஸ்த்ரிய꞉ |
மனோஹரதரா ராஜன்னப⁴வன்னேகநிஷ்²சயா꞉ ||2-88-19

கேசவனிடம் மட்டுமே நிலைத்த மனங்களையும், கண்களையும் கொண்ட அந்தக் காரிகையர் முன்பைவிட அப்போது அழகாகத் தெரிந்தனர்.

ஏகார்பிதமனோத்³ருஷ்ட்யோ நேர்ஷ்யாம் தாஷ்²சக்ரிரே(அ)ங்க³னா꞉ |
நாராயணேன தே³வேன தர்ப்யமாணமனோரதா²꞉ ||2-88-20

தலைவன் நாராயணன் அந்தப் பெண்கள் அனைவரையும் நிறைவடையச் செய்ததால், ஒருவனிடமே நிலைத்த மனங்களையும், கண்களையும் கொண்ட அவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் பொறாமையை வளர்த்துக் கொள்ளவில்லை

ஷி²ராம்ஸி க³ர்விதான்யூஹு꞉ ஸர்வா நிரவஷே²ஷத꞉ |
வால்லப்⁴யம் கேஷ²வமயம் வஹந்த்யஷ்²சாருத³ர்ஷ²னா꞉ ||2-88-21

அந்த அழகிய பெண்கள், கேசவனால் முற்றிலும் பீடிக்கப்பட்டவர்களைப் போலப் பெருமையுடன் தங்கள் தலைகளை அசைக்கத் தொடங்கினர்.

தாபி⁴ஸ்து ஸஹ சிக்ரீட³ ஸர்வாபி⁴ர்ஹரிராத்மவான் |
விஷ்²வரூபேண விதி⁴னா ஸமுத்³ரே விமலே ஜலே ||2-88-22

தற்கட்டுப்பாட்டைக் கொண்ட ஹரி, தன் அண்ட வடிவின் வழிமுறைகளைப் பின்பற்றி இவ்வாறு கடலின் தூய நீரில் அந்தப் பெண்களுடன் விளையாடத் தொடங்கினான்.

உவாஹ ஸர்வக³ந்தா⁴ட்⁴யம் ஸ்வச்ச²ம் வாரி மஹோத³தி⁴꞉ |
தோயம் விலவணம் ம்ருஷ்டம் வாஸுதே³வஸ்ய ஷா²ஸனாத் ||2-88-23

ஓ! வீரா, அந்நேரத்தில் வாசுதேவனின் ஆணையின் பேரில் கடலின் நீர் உப்பிலிருந்து விடுபட்டிருந்தது, அந்தப் பெருங்கடல் அனைத்து வகை நறுமணங்களுடன் கூடிய தூய நீரைக் கொண்டிருந்தது

கு³ல்ப²த³க்⁴னம் ஜானுத³க்⁴னமூருத³க்⁴னமதா²பி வா |
நார்யஸ்தா꞉ ஸ்தனத³க்⁴னம் வா ஜலம் ஸமபி⁴காங்க்ஷிதம் ||2-88-24

கணுக்காலளவு, முழங்காலளவு, தொடையளவு, முலையளவு என அந்தப் பெண்கள் விரும்பிய அளவுக்கு அந்தக் கடல் நீரைத் தந்தது

ஸிஷிசு꞉ கேஷ²வம் பத்ன்யோ தா⁴ரா இவ மஹோத³தி⁴ம் |
ஸிஷேச தாஷ்²ச கோ³விந்தோ³ மேக⁴꞉ பு²ல்லலதா இவ ||2-88-25

ஆறுகள் தங்கள் நீரைக் கடலில் பொழிவதைப் போல, மேகங்கள் மலரும் கொடிகளில் நீரைப் பொழிவதைப் போல அந்த நீர் விளையாட்டில் {ஜலக்ரீடையில்} கேசவனின் மனைவியர் அவன் மீது நீரைத் தெளித்தனர்

அவலம்ப்³யபரா꞉ கண்டே² ஹரிம் ஹரிணலோசனா꞉ |
உபகூ³ஹஸ்வ மாம் வீர பதாமீத்யப்³ருவன்ஸ்த்ரிய꞉ ||2-88-26

மான்களைப் போன்ற கண்களைக் கொண்ட அவர்களில் சிலர், கிருஷ்ணனின் கழுத்தைத் தழுவிக் கொண்டு, “ஓ! ஹரி, நான் மூழ்கப் போகிறேன், என்னைக் காப்பீராக” என்றனர்

காஷ்²சித்காஷ்ட²மயைஸ்தேரு꞉ ப்லவை꞉ ஸர்வாங்க³ஷோ²ப⁴னா꞉ |
க்ரௌஞ்சப³ர்ஹிணநாகா³நாமாகாரஸத்³ருஷை²꞉ ஸ்த்ரிய꞉ ||2-88-27

அழகிய பெண்கள் சிலர் மயில், யானைகளின் வடிவங்களிலான மரப்படகுகளை {தெப்பங்களை} நீரில் செலுத்தத் தொடங்கினர்.

மகராக்ருதிபி⁴ஷ்²சான்யா மீநாபை⁴ரபி சாபரா꞉ |
ப³ஹுரூபாக்ருதித⁴ரை꞉ புப்லுவுஷ்²சாபரா꞉ ஸ்த்ரிய꞉ ||2-88-28

மகர {முதலை} வடிவிலான படகுகளைச் சிலரும், மீன்வடிவிலான படகுகளைச் சிலரும் பல்வேறு வடிவங்களிலான படகுகளை இன்னும் சிலரும் செலுத்தத் தொடங்கினர்

ஸ்தனகும்பை⁴ஸ்ததா² தேரு꞉ கும்பை⁴ரிவ ததா²பரா꞉ |
ஸமுத்³ரஸலிலே ரம்யே ஹர்ஷயந்த்யோ ஜனார்த³னம் ||2-88-29

கடல் நீரில் ஜனார்த்தனனை மகிழ்விக்க விரும்பிய பெண்களில் நீர்க்குடங்களைப் போன்ற தங்கள் முலைகளைக் கொண்டு சிலரும், நீர்க்குடங்களையே கொண்டு சிலரும் நீந்தினர்

ரராம ஸஹ ருக்மிண்யா ஜலே தஸ்மின்முதா³ யுத꞉ |
யேனைவ கார்யயோகே³ன ரமதே(அ)மரஸத்தம꞉ ||2-88-30

மகிழ்ச்சியால் நிறைந்த கிருஷ்ணனும் ருக்மிணியுடன் விளையாடத் தொடங்கினான். நாராயணனின் மனைவியர், தேவர்களில் முதன்மையான கேசவனுக்குப் பெரும் மகிழ்ச்சியை அளிக்கும் செயல்களையே செய்தனர்.

தத்ததே³வ ஹி தாஷ்²சக்ருர்முதா³ நாராயணஸ்த்ரிய꞉ |
தனுவஸ்த்ராவ்ருதாஸ்தன்வ்யோ லீலயந்த்யஸ்ததா²பரா꞉ |
சிக்ரீடு³ர்வாஸுதே³வஸ்ய ஜலே ஜலஜலோசனா꞉ ||2-88-31

மெலிந்தவுடல் கொண்ட அந்தக் காரிகையருக்கு மத்தியில், மேகம் போன்ற கண்களைக் கொண்டவர்களும், மெலிந்த ஆடை அணிந்தவர்களுமான சிலர் வாசுதேவனின் அசைவுகளை போலத் தாங்களும் செய்து காட்டினர்

யஸ்யா யஸ்யாஸ்து யோ பா⁴வஸ்தாம் தாம் தேனைவ கேஷ²வ꞉ |
அனுப்ரவிஷ்²ய பா⁴வஜ்ஞோ நினாயாத்மவஷ²ம் வஷீ² ||2-88-32

அனைவரின் மனவிருப்பத்தையும் அறிந்தவனான கேசவன், அந்தப் பெண்களின் மனங்களில் நுழைந்து, அவர்கள் விரும்பியதைச் செய்து நிறைவடையச் செய்தான்

ஹ்ருஷீகேஷோ²(அ)பி ப⁴க³வான்ஹ்ருஷீகேஷ²꞉ ஸனாதன꞉ |
ப³பூ⁴வ தே³ஷ²காலேன காந்தாவஷ²க³த꞉ ப்ரபு⁴꞉ ||2-88-33

தெய்வீகனும், நித்தியனும், பலம்வாய்ந்தவனுமான ரிஷிகேசன், தற்கட்டுப்பாட்டைக் கொண்ட அனைவரின் தலைவனாக இருந்தாலும், கால நெருக்கடிக்குத் தகுந்த வகையில் தன் அன்புக்குரிய மனைவியரின் கட்டுப்பாட்டுக்குள் தன்னை நிறுத்திக் கொண்டான்

குலஷீ²லஸமோ(அ)ஸ்மாகம் யோக்³யோ(அ)யமிதி மேநிரே |
வம்ஷ²ரூபேண வர்தந்தமங்க³னாஸ்தா ஜனார்த³னம் ||2-88-34

என்ன ஆச்சரியம்? அந்தக் காரிகையர், மனித வடிவில் இருந்த ஜனார்த்தனனைத் தங்கள் பிறவிக்கும் {குலத்துக்கும்}, தகுதிகளுக்கும் {தரத்திற்கும்} ஏற்ற கணவனாகக் கருதினர்

ததா³ தா³க்ஷிண்யயுக்தம் தம் ஸ்மிதபூர்வாபி⁴பா⁴ஷிணம் |
க்ருஷ்ணம் பா⁴ர்யாஷ்²சகமிரே ப⁴க்த்யா ச ப³ஹு மேநிரே ||2-88-35

அந்தப் புத்திசாலிப் பெண்கள், அன்புடனும், பேசுவதற்கு முன் எப்போதும் சிரித்தபடியும் கிருஷ்ணனுக்குத் தகுந்த மதிப்பை வழங்கி அர்ப்பணிப்புடன் அவனை நாடினர்.

ப்ருத²க்³கோ³ஷ்ட்²ய꞉ குமாராணாம் ப்ரகாஷ²ம் ஸ்த்ரீக³ணை꞉ ஸஹ |
அலஞ்சக்ருர்ஜலம் வீரா꞉ ஸாக³ரஸ்ய கு³ணாகரா꞉||2-88-36

கீ³தந்ருத்யவிதி⁴ஜ்ஞானாம் தாஸாம் ஸ்த்ரீணாம் ஜனேஷ்²வர |
தேஜஸாப்யாஹ்ற்^தானாம் தே தா³க்ஷிண்யாத்தஸ்தி²ரே வஷே² ||2-88-37

ஷ்²ருண்வந்தஷ்²சாருகீ³தானி ததா² ஸ்வபி⁴னயான்யபி |
தூர்யாண்யுத்தமநாரீணாம் முமுஹுர்யது³புங்க³வா꞉ ||2-88-38

இளவரசர்கள், பெண்களுடன் நீரில் விளையாடுவதற்காகத் தனித்தனி குழுக்களை அமைத்தனர். சாதனைகளின் சுரங்கங்களான அந்த வீரர்கள் நீரில் விளையாடிக் கொண்டிருந்தனர்.(36) ஓ! மன்னா, பாடும் கலையிலும், ஆடற்கலையிலும் திறன்மிகுந்தவர்களும், அந்த இளவரசர்களால் வலுக்கட்டாயமாகக் கொண்டுவரப்பட்டவர்களுமான பெண்கள், அன்புடன் கூடிய அவர்களின் நடத்தையால் மகிழ்ச்சியடைந்தனர்.(37) அந்த அழகிய பெண்களின் எழில்மிகு நடைகளை {அபிநயங்களைக்} கண்டும், இசைக்கருவிகளின் இசையையும், அவர்களின் பாடல்களையும் கேட்டும் அந்த யதுகுல வீரர்கள் பெரிதும் மகிழ்ந்தனர்.(38)

பஞ்சசூடா³ம் தத꞉ க்ருஷ்ண꞉ கௌபே³ர்யஷ்²ச வராப்ஸரா꞉ |
மாஹேந்த்³ரீஷ்²சானயாமாஸ விஷ்²வரூபேண ஹேதுனா ||2-88-39

தா꞉ ப்ரோவாசாப்ரமேயாத்மா ஸாந்த்வயித்வா ஜக³த்ப்ரபு⁴꞉ |
உத்தா²பயித்வா ப்ரணதா꞉ க்ருதாஞ்ஜலிபுடாஸ்ததா² ||2-88-40

க்ரூடா³யுவத்யோ பை⁴மானாம் ப்ரவிஷ²த்⁴வமஷ²ங்கிதா꞉ |
மத்ப்ரியார்த²ம் வராரோஹா ரமயத்⁴வம் ச யாத³வான் ||2-88-41

த³ர்ஷ²யத்⁴வம் கு³ணான்ஸர்வாந்ந்ருத்யகீ³தை ரஹ꞉ஸு ச |
ததா²பி⁴னயயோகே³ஷு வாத்³யேஷு விவிதே⁴ஷு ச ||2-88-42

ஏவம் க்ருதே விதா⁴ஸ்யாமி ஷ்²ரேயோ வோ மனஸேப்ஸிதம் |
மச்ச²ரீரஸமா ஹ்யேதே ஸர்வே நிரவஷே²ஷத꞉ ||2-88-43

உலகின் தலைவனும், அளவற்ற சக்தி கொண்டவனுமான தலைவன் கிருஷ்ணன், தன் அண்ட வடிவின் காரணமாக மிக அழகிய அப்சரஸ்களான பஞ்சசூடை, கௌபேரிகள் {குபேரனிடம் உள்ள அப்சரஸ்கள்}, மாஹேந்திரிகள் {இந்திரனிடமுள்ள அப்சரஸ்கள்} ஆகியோரை வரவழைத்ததும்,(39) அவர்கள் கூப்பிய கரங்களுடன் வந்து அவனை வணங்கினர். அவர்களைத் தேற்றிய அந்த உலகத்தலைவன் {ஜகத்பிரபு},(40) “ஓ! அழகிய அப்சரஸ்களே, என்னை நிறைவடையச் செய்வதற்காக இங்கே எந்தவிதக் கவலையுமின்றி நுழைந்து விளையாட்டுப் பெண்களாகி {க்ரீடாஸ்திரீகளாகி} யாதவர்களை மகிழ்வியுங்கள்.(41) பல்வேறு இசைக் கருவிகளிலும், ஆடல் பாடல்களிலும், இன்னும் பிற புதிரான கலைகளிலும் நீங்கள் பெற்ற திறன்கள் அனைத்தையும் அவர்களுக்குக் காட்டுங்கள்.(42) அவர்கள் அனைவரும் என் அங்கங்களைப் போன்றவர்கள். எனவே, அவர்களை மகிழ்வித்தால் நீங்கள் நன்மையை அடைவீர்கள்” என்றான்.(43)

ஷி²ரஸாஜ்ஞாம் து தா꞉ ஸர்வா꞉ப்ரதிக்³ருஹ்ய ஹரேஸ்ததா³ |
க்ருடா³ யுவத்யோ விவிஷு²ர்பை⁴மாநாமப்ஸரோவரா꞉ ||2-88-44

தாபி⁴꞉ ப்ரஹ்ருஷ்டமாத்ராபி⁴ர்த்³யோதித꞉ ஸ மஹார்ணவ꞉ |
ஸௌதா³மினீபி⁴ர்னப⁴ஸி க⁴னவ்ருந்த³மிவானக⁴ ||2-88-45

தா ஜலே ஸ்த²லவத்ஸ்தி²த்வா ஜகு³ஷ்²சாப்யத² வாஹயன் |
சக்ருஷ்²சாபி⁴னயம் ஸம்யக்ஸ்வர்கா³வாஸ இவாங்க³னா꞉ ||2-88-46

க³ந்தை⁴ர்மால்யைஷ்²ச தா தி³வ்யைர்வஸ்த்ரைஷ்²சாயதலோசனா꞉ |
ஹேலாபி⁴ர்ஹாஸ்யபா⁴வைஷ்²ச ஜஹ்ருர்பை⁴மமனாம்ஸி தா꞉ ||2-88-47

கடாக்ஷைரிங்கி³தைர்ஹாஸ்யை꞉ கேலிரோஷை꞉ ப்ரஸாதி³தை꞉ |
மனோ(அ)னுகூலைர்பை⁴மானாம் ஸமாஜஹ்ருர்மனாம்ஸி தா꞉ ||2-88-48

உத்க்ஷிப்யோத்க்ஷிப்ய சாகாஷ²ம் வாதஸ்கந்தா⁴ன்ப³ஹூம்ஷ்²ச தான் |
மதி³ராவஷ²கா³ பை⁴மா மானயந்தி வராப்ஸரா꞉ ||2-88-49

அந்த அப்சரஸ்கள் தலைவணங்கி ஹரியின் ஆணையை ஏற்றுக் கொண்டு யாதவர்களின் விளையாட்டுப் பெண்களாக அவர்களுடன் சேர்ந்து கொண்டனர்.(44) ஓ! பாவமற்றவனே, மின்னலால் வானத்தில் ஒளியூட்டப்படும் மேகங்களைப் போலவே அங்கே அவர்கள் நுழைந்ததும் கடலின் நீர் பிரகாசமடைந்தது.(45) அவர்கள், நிலத்தில் நிற்பதைப் போல நீரில் நின்று கொண்டு தேவலோகத்தில் இசைப்பதைப் போல நீரில் பல்வேறு பாடல்களைப் பாடினர்.(46) அகன்ற விழிகளைக் கொண்ட அந்தப் பெண்கள், தெய்வீக ஆடைகளாலும், விளையாட்டுப் புன்னகையாலும், முகபாவங்களாலும், விழி அசைவுகளாலும், கோபத்தாலும், தங்கள் இதயம் விரும்பும் வகையிலான தொண்டாலும் பைமர்களின் மனங்களைக் கொள்ளை கொண்டனர்.(47,48) முன்னணி அப்சரஸ்களான அவர்கள் போதையில் இருந்த பைமர்களை மீண்டும் மீண்டும் வானத்தில் தூக்கிப் போட்டு மீண்டும் அவர்களைக் கீழே கொண்டு வந்தனர்.(49)

க்ருஷ்ணோ(அ)பி தேஷாம் ப்ரீத்யர்த²ம் விஜஹ்ரே வியதி ப்ரபு⁴꞉ |
ஸர்வை꞉ ஷோட³ஷ²பி⁴꞉ ஸார்த⁴ம் ஸ்த்ரீஸஹஸ்ரைர்முதா³ன்வித꞉ ||2-88-50

ப்ரபா⁴வஜ்ஞாஸ்து தே வீரா꞉ க்ருஷ்ணஸ்யாமிததேஜஸ꞉ |
ந ஜக்³முர்விஸ்மயம் பை⁴மா கா³ம்பீ⁴ர்யம் பரமாஸ்தி²தா꞉ ||2-88-51

கேசித்³ரைவதகம் க³த்வா புனராயாந்தி பா⁴ரத |
க்³ருஹான்யன்யே வனான்யன்யே காங்க்ஷிதான்யரிமர்த³ன ||2-88-52

அபேய꞉ பேயஸலில꞉ ஸாக³ரஷ்²சாப⁴வத்ததா³ |
ஆஜ்ஞயா லோகநாத²ஸ்ய விஷ்ணோரதுலதேஜஸ꞉ ||2-88-53

அதா⁴வன்ஸ்த²லவச்சாபி ஜலே ஜலஜலோசனா꞉ |
க்³ருஹ்ய ஹஸ்தே ததா² நார்யோ யுக்தா மஜ்ஜம்ஸ்ததா²பி ச ||2-88-54

ப⁴க்ஷ்யபோ⁴ஜ்யானி பேயானி சோஷ்யம் லேஹ்யம் ததை²வ ச |
ப³ஹுப்ரகாரம் மனஸா த்⁴யாதே தேஷாம் ப⁴வத்யுத ||2-88-55

அம்லானமால்யதா⁴ரிண்யஸ்தா꞉ ஸ்த்ரியஸ்தானனிந்தி³தான் |
ரஹ꞉ஸு ரமயாஞ்சக்ரு꞉ ஸ்வர்கே³ தே³வரதானுகா³꞉ ||2-88-56

யாதவர்களை மகிழ்ச்சியடையச் செய்வதற்காகக் கிருஷ்ணனும் தன் பதினாறாயிரம் மனைவியருடன் மகிழ்ச்சியாக வானத்தில் விளையாடத் தொடங்கினான்.(50) வீரமிக்கப் பைமர்கள், பலம்வாய்ந்த கிருஷ்ணனின் அளவற்ற சக்தியை அறிந்திருந்ததால் அவனது இந்த அருஞ்செயலைக் கண்டு ஆச்சரியமடையவில்லை; மாறாக அதனில் முற்றான ஈர்ப்பைக் கண்டனர்.(51) ஓ! பாரதா, ஓ! பகைவரைக் கொல்பவனே {ஜனமேஜயா}, அவர்களில் சிலர் தாங்களாகவே ரைவதகத்திற்குத் திரும்பிச் சென்றனர், சிலர் தங்கள் வீடுகளுக்கும், மேலும் சிலர் தாங்கள் விரும்பிய வனங்களுக்கும் சென்றனர்.(52) எவராலும் பருக முடியாத கடல் நீரானது, உலகின் பெருஞ்சக்திவாய்ந்த தலைவனான விஷ்ணுவின் ஆணையின் பேரில் அனைவராலும் பருகத்தகுந்த நற்பானமானது.(53) அவர்கள், தாமரைக் கண்களைக் கொண்ட காரிகையரின் கரங்களைப் பற்றிக் கொண்டு, நிலத்தில் நடப்பதைப் போல நீரில் நடந்து, மீண்டும் நீருக்குள் பாய்ந்தனர்.(54) அவர்கள் உணவுப் பொருட்களையோ, பானத்தையோ நினைத்த மாத்திரத்தில் அவை அவர்களின் முன்பு கொண்டு வரப்பட்டன.(55) புத்தம்புது மலர்களாலான மாலைகளைச் சூடியிருந்த அந்தக் காரிகையர், இவ்வாறே அந்தத் தனிமையான இடத்தில் யது குல இளவரசர்களுடன் விளையாடத் தொடங்கினர்.(56)

நௌபி⁴ர்க்³ருஹப்ரகாராபி⁴ஷ்²சிக்ரீடு³ரபராஜிதா꞉ |
ஸ்னாதானுலிப்தமுதி³தா꞉ ஸாயாஹ்னே(அ)ந்த⁴கவ்ருஷ்ணய꞉ ||2-88-57

ஆயதாஷ்²சதுரஸ்ராஷ்²ச வ்ருத்தாஷ்²ச ஸ்வஸ்திகாஸ்ததா² |
ப்ராஸாதா³ நௌஷு கௌரவ்ய விஹிதா விஷ்²வகர்மணா ||2-88-58

கைலாஸமந்த³ரச்ச²ந்தா³ மேருச்ச²ந்தா³ஸ்ததை²வ ச |
ததா² நானாவயஷ்²ச²ந்தா³ஸ்ததே²ஹாம்ருக³ரூபிண꞉ ||2-88-59

வைடூ³ர்யதோரணைஷ்²சித்ராஷ்²சித்ராபி⁴ர்மணிப⁴க்திபி⁴꞉ |
மஸாரக³ல்வர்கமயைஷ்²சித்ரப⁴க்திஷ²தைரபி ||2-88-60

ஆக்ரீட³ க³ருட³ச்ச²ந்தா³ஷ்²சித்ரா꞉ கனகரீதிபி⁴꞉ |
க்ரௌஞ்சச்ச²ந்தா³꞉ ஷு²கச்ச²ந்தா³ க³ஜச்ச²ந்தா³ஸ்ததா²பரே ||2-88-61

கர்ணதா⁴ரைர்க்³ருஹீதாஸ்தா நாவ꞉ கார்தஸ்வரோஜ்ஜ்வலா꞉ |
ஸலிலம் ஷோ²ப⁴யாமாஸு꞉ ஸாக³ரஸ்ய மஹோர்மிமத் ||2-88-62

ஸமுச்ச்²ரித꞉ ஸிதை꞉ போதைர்யானபாத்ரைஸ்ததை²வ ச |
நௌபி⁴ஷ்²ச ஜி²ல்லிகாபி⁴ஷ்²ச ஷு²ஷு²பே⁴ வருணாலய꞉ ||2-88-63

புராண்யாகாஷ²கா³னீவ க³ந்த⁴ர்வாணாமிதஸ்தத꞉ |
ப³ப்⁴ரமு꞉ ஸாக³ரஜலே பை⁴மயானானி ஸர்வத꞉ ||2-88-64

வெல்லப்பட முடியாதவர்களான விருஷ்ணிகளும், அந்தகர்களும், மாலை வேளை வந்ததும் தங்கள் மேனிகளில் களிம்புகளிட்டு நீராடி, படகுவீடுகளில் விளையாடத் தொடங்கினர்.(57) ஓ! குருவின் வழித்தோன்றலே {ஜனமேஜயனே}, தேவதச்சனான விஷ்வகர்மன், அந்தப் படகுகள் அனைத்திலும் சதுரஸ்ர, ஸ்வஸ்திக முதலிய பல்வேறு அரண்மனைகளை {சதுர, ஸ்வஸ்திக வடிவங்களில் மாடங்களை} அமைத்திருந்தான்.(58) அந்தப் படகுகளில் சில கைலாச, மந்தர, சுமேரு மலைகளைப் போல இருந்தன. அவற்றில் சில பறவைகளைப் போன்றும், மான்களைப் போன்றும் இருந்தன.(59) அந்தப் படகுகளில் அமைக்கப்பட்டிருந்த அறைகள், தரைவிரிப்புகள் விரிக்கப்பட்டவையாகவும், மரகதம், சந்திரகாந்தம், சூரியகாந்தம் முதலிய விலைமதிப்புமிக்கக் கற்களால் ஒளியூட்டப்பட்டவையாகவும் இருந்தன.(60) அதன் வாயில்கள் வைடூரியங்களால் அமைக்கப்பட்டிருந்தன. கருடன், கிரௌஞ்சம், சுகம் {கிளி}, யானை ஆகியவற்றின் அழகிய வடிவங்கள் பொன்னால் வரையப்பட்ட அறைகள் அந்தப் படகுகளில் இருந்தன.(61) படகோட்டிகளால் செலுத்தப்பட்ட அந்தத் தங்கப் படகுகள், அலைகள் நிறைந்த கடலின் நீருக்குப் பெரிதும் அழகூட்டின.(62) முழுமையாக தெய்வீகப் பொருட்களால் செய்யப்பட்ட பெரிய கட்டடங்களைப் போன்ற பெரிய கப்பல்கள், சிறிய படகுகள், தெப்பங்கள் ஆகியவற்றால் வருணனின் வசிப்பிடம் {கடல்} அழகூட்டப்பட்டது.(63) கந்தர்வர்களின் வானுலாவும் நகரங்களைப் போலவே பைமர்களின் படகுகளும் கடலில் நகரத் தொடங்கின.(64)

நந்த³னச்ச²ந்த³யுக்தேஷு யானபாத்ரேஷுபா⁴ரத |
நந்த³னப்ரதிமம் ஸர்வம் விஹிதம் விஷ்²வகர்மணா ||2-88-65

உத்³யானானி ஸபா⁴வ்ருக்ஷா தீ³ர்கி⁴கா꞉ ஸ்யந்த³னானி ச |
நிவேஷி²தானி ஷி²ல்பானி தாத்³ருஷா²ன்யேவ ஸர்வதா² ||2-88-66

ஸ்வர்க³ச்ச²ந்தே³ஷு² சான்யேஷு ஸமாஸாத்ஸ்வர்க³ஸன்னிபா⁴꞉ |
நாராயணாஜ்ஞயா வீர விஹிதா விஷ்²வகர்மணா ||2-88-67

ஓ! பரதனின் வழித்தோன்றலே, தேவதச்சனான விஷ்வகர்மன், தெய்வீக நந்தவனத்தைப் போலவே அந்தப் படகுகள் அனைத்தையும் செய்திருந்தான்.(65) தோட்டங்கள், சபைகள், மரங்கள், குளங்கள், தேர்கள் ஆகியவையும், கலை வடிவங்கள் பிறவும் நந்தவனத்தில் இருப்பதைப் போலவே செய்யப்பட்டிருந்தன.(66) ஓ! வீரா, நாராயணனுடைய ஆணையின் பேரில் தேவலோகத்திற்கு ஒப்பான அந்தப் படகுகளில் அனைத்தும் தெய்வீக வடிவங்களைப் போலவே கட்டப்பட்டிருந்தன. மேலும் நான் என்ன சொல்வேன்.(67)

வனேஷு ருருவுர்ஹ்ருத்³யம் மது⁴ரம் சைவ பக்ஷிண꞉ |
மனோஹரதரம் சைவ பை⁴மாநாமதிதேஜஸாம் ||2-88-68

தே³வலோகோத்³ப⁴வா꞉ ஷ்²வேதா விலேபு꞉ கோகிலாஸ்தத்தா³ |
மது⁴ராணி விசித்ராணி யதூ³னாம் காங்க்ஷிதானி ச ||2-88-69

சந்த்³ராம்ஷு²ஸமரூபேஷு ஹர்ம்யப்ருஷ்டே²ஷு ப³ர்ஹிண꞉ |
நந்ருதுர்மது⁴ராராவா꞉ ஷி²க²ண்டி³க³ணஸம்வ்ருதா꞉ ||2-88-70

பதாகா யானபாத்ராணாம் ஸர்வா꞉ பக்ஷிக³ணாயுதா꞉ |
ப்⁴ரமரைருபகீ³தாஷ்²ச ஸ்ரக்³தா³மாஸக்தவாஸிபி⁴꞉ ||2-88-71

நாராயணாஜ்ஞயா வ்ருக்ஷாபுஷ்பாணி முமுசுர்ப்⁴ருஷ²ம் |
ருதவஷ்²சாருரூபாணி விஹாயஸி க³தாஸ்ததா² ||2-88-72

பெருஞ்சக்திவாய்ந்த பைமர்களின் படகுகளில் அமைக்கப்பட்டிருந்த வனங்களில் பறவைகள் வெளியிட்ட இன்னொலிகள் கேட்போரின் மனங்களைக் கொள்ளை கொண்டன.(68) தேவலோகத்தில் பிறந்த வெண்குயில்கள் யாதவர்கள் விரும்பும் பல்வேறு இன்னொலிகளை வெளியிட்டன.(69) இன்னொலிகளை அகவும் ஆண்மயில்கள், சந்திரக் கதிர்களைப்போன்ற அழகிய வீடுகளின் கூரைகளில் பெண் மயில்கள் சூழ ஆடிக் கொண்டிருந்தன.(70) அந்தப் படகுகளில் ஏற்றப்பட்டிருந்த கொடிகளில் பல்வேறு பறவைகள் நிறைந்திருந்தன, மாலைகளில் வண்டுகள் அமர்ந்து ரீங்காரமிட்டன.(71) நாராயணனுடைய ஆணையின் பேரில் பருவகாலத்தின் அழகிய அறிகுறிகள் வானில் தோன்றின, மரங்கள் தொடர்ந்து மலர்களைப் பொழிந்தன.(72)

வவௌ மனோஹரோ வாதோ ரதிகே²த³ஹர꞉ ஸுக²꞉ |
ரஜோபி⁴꞉ ஸர்வபுஷ்பாணாம் ப்ருக்தஷ்²சந்த³னஷை²த்யப்⁴ருத் ||2-88-73

ஷீ²தோஷ்ணமிச்ச²தாம் தத்ர ப³பூ⁴வ வஸுதா⁴பதே |
வாஸுதே³வப்ரஸாதே³ன பை⁴மானாம் க்ரீட³தாம் ததா³ ||2-88-74

ந க்ஷுத்பிபாஸா ந க்³லாநிர்ன சிந்தா ஷோ²க ஏவ ச |
ஆவிவேஷ² ததா³ பை⁴மான்ப்ரபா⁴வாச்சக்ரபாணின꞉ ||2-88-75

அப்ரஷா²ந்தமஹாதூர்யா கீ³தந்ருத்யோபஷோ²பி⁴தா꞉ |
ப³பூ⁴வு꞉ ஸாக³ரக்ரீடா³ பை⁴மாநாமதிதேஜஸாம் ||2-88-76

ப³ஹுயோஜனவிஸ்தீர்ணம் ஸமுத்³ரம் ஸலிலாஷ²யம் |
ருத்³த்⁴வா சிக்ரீடு³ரிந்த்³ராபா⁴ பை⁴மா꞉ க்ரூஷ்ணாபி⁴ரக்ஷிதா꞉ ||2-88-77

மலரிதழ்களுடன் கூடியதும், சந்தனத்தின் குளுமையைச் சுமந்து வருவதும், அழகும், இனிமையும் நிறைந்த {மனோகரமான} காற்று அங்கே வீசி மனிதர்களின் ஆசையைத் தூண்டியது.(73) ஓ! மன்னா, கதாதாரியான வாசுதேவனின் ஆதிக்கத்தின் பேரில் அந்நேரத்தில் பைமர்கள், தங்கள் இன்பத்திற்கேற்ற வெப்பத்தையும், குளிரையும் அனுபவித்தனர்.(74) அந்தச் சக்கரபாணியின் காந்தியினால் அவர்களில் எவரும் பசியையோ, தாகத்தையோ, களைப்பையோ, கவலையையோ அடையவில்லை.(75) இவ்வாறு பேரிகைகளின் ஒலி, இசை, நடனம் ஆகியவற்றால் தொடர்ந்து உயிர்ப்புடன் இருந்த அவர்களின் கடல் விளையாட்டில் கிருஷ்ணனால் பாதுகாக்கப்பட்ட பைமர்கள் பல யோஜனைகள் பரப்புடைய நீரைத் தடுத்து விளையாடிக் கொண்டிருந்தனர்.(76,77)

பரிச்ச²த³ஸ்யானுரூபம் யானபாத்ரம் மஹாத்மன꞉ |
நாராயணஸ்ய தே³வஸ்ய விஹிதம் விஷ்²வகர்மணா ||2-88-78

ரத்னானி யானி த்ரைலோக்யே விஷி²ஷ்டானி விஷா²ம்பதே |
க்ருஷ்ணஸ்ய தானி ஸர்வாணி யானபாத்ரே(அ)திதேஜஸ꞉ || 2-88-79

ப்ருத²க்ப்ருத²ங்நிவாஸாஷ்²ச ஸ்த்ரீணாம் க்ருஷ்ணஸ்ய பா⁴ரத |
மணிவைடூ³ர்யசித்ராஸ்தா꞉ கார்தஸ்வரவிபூ⁴ஷிதா꞉ ||2-88-80

ஸர்வர்துகுஸுமாகீர்ணா꞉ ஸர்வக³ந்தா⁴தி⁴வாஸிதா꞉ |
யது³ஸிம்ஹை꞉ ஷு²பை⁴ர்ஜுஷ்டா꞉ ஷ²குனை꞉ ஸ்வர்க³வாஸிபி⁴꞉ || 2-88-81

தேவதச்சன், உயரான்ம தேவனான நாராயணனின் படகை அவனது தொண்டர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற வகையில் அமைத்திருந்தான்.(78) ஓ! மன்னா, பெருஞ்சக்திவாய்ந்த கிருஷ்ணனின் படகிற்குள் மூவுலகங்களிலும் மதிப்புமிக்க ரத்தினங்கள் அனைத்தும் கொண்டுவரப்பட்டன.(79) ஓ! பரதனின் வழித்தோன்றலே, கிருஷ்ணனின் ஒவ்வொரு மனைவிக்கும் தங்கத்தால் அமைக்கப்பட்டதும், முத்து, வைடூரியங்களால் அலங்கரிக்கப்பட்டதுமான தனி அறை அமைக்கப்பட்டிருந்தது.(80) முன்னணி யாதவர்கள், அனைத்துப் பருவ காலங்களுக்கும் உரிய மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, அனைத்து வகை நறுமணப்பொருட்களும் பூசிக்கொண்டு மங்கலமான தேவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தனர்” என்றார் {வைசம்பாயனர்}.(81)

இதி ஷ்²ரீமஹாபா⁴ரதே கி²லேஷு ஹரிவம்ஷே² விஷ்ணுபர்வணி
பா⁴னுமதீஹரணே அஷ்டாஷீ²திதமோ(அ)த்⁴யாய꞉

————–—————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாஸ பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விஷ்ணு பர்வம்–அத்யாயம் – 87–(மஹாதேவேநாந்தகவதம்)–மந்தர மலைக்குச் சென்ற அந்தகன் |-

January 31, 2021

மந்தர மலைக்குச் சென்ற அந்தகன்; அந்தகனை அழித்த பரமசிவன்

வைஷ²ம்பாயந உவாச
அந்த⁴கோ நாரத³வச꞉ ஷ்²ருத்வா தத்த்வேந பா⁴ரத |
மந்த³ரம் பர்வதம் க³ந்தும் மநோ த³த்⁴ரே மஹாஸுர꞉ ||2-87-1

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “ஓ! பரதனின் வழித்தோன்றலே, நாரதரின் சொற்களைக் கவனமாகக் கேட்ட பேரசுரன் அந்தகன் மந்தர மலைக்குச் செல்லும் விருப்பம் கொண்டான்

ஸோ(அ)ஸுராந்ஸுமஹாதேஜா꞉ ஸமாநீய மஹாப³ல꞉ |
ஜகா³ம மந்த³ரம் க்ருத்³தோ⁴ மஹாதே³வாலயம் ததா³ ||2-87-2

பெருஞ்சக்தியும், பலமும் வாய்ந்தவனும், பலத்தின் செருக்கில் மிதப்பவனுமான அந்தகன், (தன்னைச் சுற்றிலும்) பிற அசுரர்களைத் திரட்டிக் கொண்டு மஹாதேவனின் வசிப்பிடமான மந்தர மலையை அடைந்தான்.

தம் மஹாப்⁴ரப்ரதிச்ச²ந்நம் மஹௌஷதி⁴ஸமாகுலம் |
நாநாஸித்³த⁴ஸமாகீர்ணம் மஹர்ஷிக³ணஸேவிதம் ||2-87-3

பெரும் மேகங்களாலும், பெரும் மூலிகைகளாலும், அறம்சார்ந்த சித்தர்களாலும் அது மறைக்கப்பட்டிருந்தது. அங்கே பெரும் முனிவர்கள் வாழ்ந்தனர்,

சந்த³நாக³ருவ்ருக்ஷாட்⁴யம் ஸரலத்³ருமஸங்குலம் |
கிந்நரோத்³கீ³தரம்யம் ச ப³ஹுநாக³குலாகுலம் ||2-87-4

வாதோத்³தூ⁴தைர்வநை꞉ பு²ல்லைர்ந்ருத்யந்தமிவ ச க்வசித் |
ப்ரஸ்ருதைர்தா⁴துபி⁴ஷ்²சித்ரைர்விலிப்தமிவ ச க்வசித் ||2-87-5

யானைகள் பலவும், சந்தனம், அகரு மரங்களும், இன்னும் பல்வேறு மரங்களும் அங்கே நிறைந்திருந்தன. கின்னரர்களின் பாடல்களால் அழகூட்டப்பட்டதிருந்த அது, காற்று வீசுவதற்கு ஏற்ப மலர்ந்த மரங்கள் ஆடுவதைப் போல ஆடிக் கொண்டிருந்தது.(4,5)

பக்ஷிஸ்வநை꞉ ஸுமது⁴ரைர்நத³ந்தமிவ ச க்வசித் |
ஹம்ஸை꞉ ஷு²சிபதை³꞉ கீர்ணம் ஸம்பதத்³பி⁴ரிதஸ்தத꞉ ||2-87-6

பறவைகள் வெளியிடும் இனியவொலி அங்கே நிரம்பியிருந்தது, அன்னங்கள் அழகாக அசைந்து கொண்டிருந்தன

மஹாப³லைஷ்²ச மஹிஷைஷ்²சரத்³பி⁴ர்தை³த்யநாஷ²நை꞉ |
சந்த்³ராம்ஷு²விமலை꞉ ஸிம்ஹைர்பூ⁴ஷிதம் ஹேமஸஞ்சயம் ||2-87-7

அசுரர்களை அழிக்கும் பெருஞ்சக்திவாய்ந்த எருமைகளாலும், சந்திரக் கதிர்களைப் போன்று வெண்மையான சிங்கங்களாலும் அஃது {அந்த மலை} அலங்கரிங்கப்பட்டிருந்தது. {மொத்த மலையும் தங்கக் குவியலைப் போலத் தோன்றியது}

ம்ருக³ராஜஸமாகீர்ணம் ம்ருக³வ்ருந்த³நிஷேவிதம் |
ஸ மந்த³ரம் கி³ரிம் ப்ராஹ ரூபிணம் ப³லத³ர்பித꞉ ||2-87-8

{சிங்கங்கள் பலவும் அந்த மலையில் உலவிக் கொண்டிருந்தன}. நூற்றுக்கணக்கான மான்கள் அங்கே நிறைந்திருந்தன.
அங்கே வந்த அவன் {அந்தகன்}, அங்கே தன்வடிவில் இருந்த சிறந்த மலையிடம்,

வேத்ஸி த்வம் ஹி யத²வத்⁴யோ வரதா³நாத³ஹம் பிது꞉ |
மம சைவ வஷே² ஸர்வம் த்ரைலோக்யம் ஸசராசரம் ||2-87-9

“என் தந்தை பெற்ற வரத்தினால் நான் எவராலும் கொல்லப்பட முடியாதவன் என்பதை அறிவாயாக. அசையும் {உயிருள்ள} படைப்புகளையும், அசையாத {உயிரற்ற} படைப்புகளையும் உள்ளடக்கிய மூவுலகங்களும் என் ஆளுகையின் கீழ் உள்ளன.

ப்ரதியோத்³து⁴ம் ந மாம் கஷ்²சிதி³ச்ச²த்யபி கி³ரே ப⁴யாத் |
பாரிஜாதவநம் சாஸ்தி தவ ஸாநௌ மஹாகி³ரே |
ஸர்வகாமப்ரதை³꞉ புஷபைர்பூ⁴ஷிதம் ரத்நமுத்தமம் ||2-87-10

ஓ! மலையே, என் மீது கொண்ட அச்சத்தால் எவராலும் என்னுடன் போரிட இயலவில்லை. ஓ! பெரும் மலையே, உன்னுடைய மேட்டுச் சமவெளியில் {தாழ்வரையில்}, விருப்பத்திற்குரிய அனைத்துப் பொருட்களையும் அளிக்கவல்ல மலர்களால் அலங்கரிக்கப்பட்டவையும், ரத்தினங்களுடன் கூடியவையுமான பாரிஜாத மரங்களைக் கொண்ட காடு {பாரிஜாதவனம்} இருப்பதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

ததா³சக்ஷ்வோபபோ⁴க்ஷ்யாமி தத்³வநம் தவ ஸாநுஜம் |
கிம் கரிஷ்யஸி க்ருத்³த⁴ஸ்த்வம் மநோ ஹி த்வரதே மம ||2-87-11

என் மனம் ஆவலால் நிறைந்திருக்கிறது. உன் மேட்டுச் சமவெளிகளில் அந்தக் காடு எங்கே இருக்கிறது என்பதை விரைவாகச் சொல்வாயாக. ஓ! மலையே, நான் உன்னிடம் கோபம் கொண்டால் உன்னால் என்னை எதிர்த்து ஏதும் செய்ய முடியாது

த்ராதாரம் நாநுபஷ்²யாமி மயா க²ல்வர்தி³தஸ்ய தே |
இத்யுக்தோ மந்த³ரஸ்தேந தத்ரைவாந்தரதீ⁴யத ||2-87-12

மறுபுறம் நான் உன்னை ஒடுக்கித் துன்புறுத்தினால், உன்னைப் பாதுகாக்கவல்லவர் எவரையும் நான் காணவில்லை” என்றான். இவ்வாறு சொல்லப்பட்டதும் மந்தர மலை அங்கேயே அப்போதே மறைந்து போனது.

ததோ(அ)ந்த⁴கோ(அ)திருஷிதோ வரதா³நேந த³ர்பித꞉ |
முமோச நாத³ம் ஸுமஹதி³த³ம் வசநமப்³ரவீத் ||2-87-13

வரத்தில் செருக்கடைந்திருந்த அந்தகன் பெருங்கோபத்தால் தூண்டப்பட்டவனாக, பயங்கரச் சிங்கமுழக்கம் செய்தபடியே

மயா த்வம் வை யாச்யமாநோ யஸ்மாந்ந ப³ஹு மந்யஸே |
அஹம் சூர்ணீகரோமி த்வாம் ப³லம் பர்வத பஷ்²ய மே ||2-87-14

“ஓ! மலையே, என்னால் வேண்டப்பட்டும் நீ போதுமான மதிப்பைக் காட்டவில்லை. இப்போது என் பலத்தைப் பார். இந்தக் கணத்திலேயே நான் உன்னை நொறுக்குகிறேன் {பொடியாக்குகிறேன்}” என்றான்.

ஏவமுக்த்வா கி³ரே꞉ ஷ்²ருங்க³முத்பாட்ய ப³ஹுயோஜநம் |
நிஷ்பிபேஷ கி³ரேஸ்தஸ்ய ஷ்²ருங்கே³ஷ்²வந்யத்ர வீர்யவாந் ||2-87-15

ஸ ஹதைரஸுரை꞉ ஸர்வைர்வரதா³நேந த³ர்பித꞉ |
தம் ப்ரச்ச²ந்நநதீ³ஜாலம் மந்யமாநம் மஹாகி³ரிம் ||2-87-16

வரத்தின் செருக்கில் மிதந்து கொண்டிருந்த பெரும் பலம்வாய்ந்த அந்தகன் இதைச் சொல்லிவிட்டு, பல யோஜனைக்குப் பரந்திருந்த ஒரு சிகரத்தை மற்ற அசுரர்களின் துணையுடன் பிடுங்கி, அதை {மற்ற சிகரங்களுடன் தேய்த்து} நொறுக்கத் தொடங்கினான். ஓ! வீரா, இதன் காரணமாக அந்தப் பெரும் மலையில் இருந்த ஓடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன.(15,16)

விதி³த்வா ப⁴க³வாந்ருத்³ரஷ்²சகாராநுக்³ரஹம் கி³ரே꞉ |
ஸவிஷே²ஷதரம் வீரம் மத்தத்³விபம்ருகா³யுதம் ||2-87-17

நதீ³ஜாலைர்ப³ஹுதரைராசிதம் சித்ரகாநநம் |
நப⁴ஷ்²ச்யுதை꞉ புரா யத்³வத்தத்³வதே³வ விராஜதே ||2-87-18

ருத்ரன் இவை அனைத்தையும் அறியவந்தபோது, அந்தகனால் பிடுங்கப்படுவதற்கு முன்பு இருந்ததைப் போலவே, மதங்கொண்ட யானைகளும், பல்வேறு ஓடைகளும், பல வண்ணங்களிலான தோட்டங்களும் நிறைந்த அதே அழகுடன் மீண்டும் அதைத் தோன்றச் செய்து தன் தயவை வெளிப்படுத்தினான்.(17,18)

அத² தே³வப்ரபா⁴வேண ஷ்²ருங்கா³ண்யுத்பாடிதாநி து |
க்ஷிப்தாநி சாஸுராநேவ க்⁴நந்தி வீராணி பா⁴ரத ||2-87-19

அதன்பிறகு, அந்தகனால் பிடுங்கப்பட்ட பயங்கரச் சிகரங்கள், அந்தத் தலைவனுடைய {சிவனுடைய} சக்தியின் மூலம் அசுரர்களுக்கு அழிவைக் கொண்டு வந்தன.

க்ஷிப்த்வா யே ப்ரபலாயந்தே ஷ்²ருங்கா³ணி து மஹாஸுரா꞉ |
ஷ்²ருஞ்கை³ஸ்தைஸ்தை꞉ ஸ்ம வத்⁴யந்தி பர்வதஸ்ய ஜநாதி⁴ப ||2-87-20

ஓ! மன்னா, அந்த மலைச் சிகரங்கள், தங்களை வேருடன் பிடுங்கியவர்களும், தப்பி ஓடுபவர்களுமான அசுரர்களை நசுக்கின

யே ஸ்வஸ்தா²ஸ்த்வஸுராஸ்தத்ர திஷ்ட²ந்தி கி³ரிஸாநுஷு |
ஷ்²ருங்கை³ஸ்தேந ஸ்ம வத்⁴யந்தே மந்த³ரஸ்ய மஹாகி³ரே꞉ ||2-87-21

எனினும், மந்தர மலையின் மேட்டுச் சமவெளிகளில் சுகமாக அமர்ந்திருந்த அசுரர்கள் கொல்லப்படவில்லை.

ததோ(அ)ந்த⁴கஸ்ததா³ த்³ருஷ்ட்வா ஸேநாம் தாம் மர்தி³தாம் ததா² |
ருஷித꞉ ஸுமஹாநாத³ம் நர்தி³த்வைவம் ததா³ப்³ரவீத் ||2-87-22

இவ்வாறு தன் படைவீரர்கள் நசுக்கிக் கொல்லப்படுவதைக் கண்ட அந்தகன், பயங்கரச் சிங்கமுழக்கம் செய்தபடியே

ஆஹ்வயே தம் வநம் யஸ்ய யுத்³தா⁴ர்த²முபதிஷ்ட²து |
கிம் த்வயாசல யுத்³தே⁴ந ஹதா꞉ ஸ்ம ச்ச²த்³மநா ரணே ||2-87-23

“ஓ! மலையே, போரில் வஞ்சகத்தால் நாங்கள் கொல்லப்பட்டோம். நான் ஏன் உன்னுடன் போரிட வேண்டும்? உன்னுடைய முகப்பில் அமைந்திருக்கும் தோட்டத்தின் உரிமையாளனை நான் அழைக்கிறேன். அவன் போரிட முன்வரட்டும்” என்றான்.

ஏவமுக்தே த்வந்த⁴கேந வ்ருஷபே⁴ண மஹேஷ்²வர꞉ |
ஸம்ப்ராப்த꞉ ஷூ²லமுத்³யம்ய தே³வோ(அ)ந்த⁴கஜிகா⁴ம்ஸயா ||2-87-24

இவ்வாறு சொல்லப்பட்டதும் அவனைக் கொல்ல விரும்பிய மஹாதேவன், தன் கதாயுதத்தை {சூலத்தை} எடுத்துக் கொண்டும், தன் காளையைச் செலுத்திக் கொண்டும் அங்கே வந்தான்.

ப்ரமதா²நாம் க³ணைர்தீ⁴மாந்வ்ருதோ வை ப³ஹுலோசந꞉ |
ததா² பூ⁴தக³ணைஷ்²சைவ தீ⁴மாந்பூ⁴தக³ணேஷ்²வர꞉ ||2-87-25

நுண்ணறிவு மிக்கவனும், முக்கண் தேவனுமான அந்தப் பூதகணேஷ்வரன் {பூத கணங்களின் தலைவனான சிவன்}, பூத கணங்கள் சூழ அங்கே வந்தான்

ப்ரசகம்பே தத꞉ க்ருத்ஸ்நம் த்ரைலோக்யம் ருஷிதே ஹரே |
ஸிந்த⁴வஷ்²ச ப்ரதிஸ்ரோதமூஹு꞉ ப்ரஜ்வலிதோத³கா꞉ ||2-87-26

மஹாதேவன் கோபத்தால் தூண்டப்பட்டபோது, மொத்த உலகமும் நடுங்கியது, ஆறுகள் எரியும் {கொதிக்கும்} நீருடன் நேர்மாறான போக்கில் பாய்ந்தன

ஜக்³முர்தி³ஷோ²(அ)க்³நிதா³ஹாஷ்²ச ஸர்வே தே ஹரதேஜஸா |
யுயுது⁴ஷ்²ச க்³ரஹா꞉ ஸர்வே விபரீதா ஜநாதி⁴ப ||2-87-27

சிவனுடைய காந்தியால் திசைகள் அனைத்தும் பற்றி எரிந்தன. கோள்கள் ஒன்றோடொன்று போரிடத் தொடங்கின. ஓ! குருவின் வழித்தோன்றலே, அந்நேரத்தில் மலைகள் அனைத்தும் அசைந்தன

சேலுஷ்²ச கி³ரயஸ்தத்ர காலே குருகுலோத்³வஹ |
ப்ரவவர்ஷாத² பர்ஜந்ய꞉ ஸதூ⁴மாங்கா³ரவ்ருஷ்டய꞉ ||2-87-28

மழையின் தேவன், புகையுடன் கூடிய கரித்துண்டுகளை {நெருப்புக் கங்குகளைப்} பொழிந்தான். சந்திரன் வெப்பமானான், சூரியன் குளிர்ந்தான்.

உஷ்ணபா⁴ஷ்²சந்த்³ரமாஷ்²சாஸீத்ஸூர்ய꞉ ஷீ²தப்ரப⁴ஸ்ததா² |
ந ப்³ரஹ்ம விவிது³ஸ்தத்ர முநயோ ப்³ரஹ்மவாதி³ந꞉ ||2-87-29

பிரம்மவாதிகள் வேதங்களை மறந்தனர். ஓ! பாவமற்றவனே, அந்நேரத்தில் குதிரைகள் பசுக்களையும், பசுக்கள் குதிரைகளையும் ஈன்றன

வட³வா꞉ ஸுஷுவுர்கா³ஷ்²ச க³வோ(அ)ஷ்²வாநபி சாநக⁴ |
பேதுர்வ்ருக்ஷாஷ்²ச மேதி³ந்யாமச்சி²ந்நா ப⁴ஸ்மஸாத்க்ருதா꞉ ||2-87-30

மரங்கள் சாம்பலாகி பூமியில் விழுந்தன. காளைகள் பசுக்களை ஒடுக்கத் தொடங்கின, பசுக்கள் காளைகளைச் செலுத்தத் தொடங்கின

பா³த⁴ந்தே வ்ருஷபா⁴ கா³ஷ்²ச கா³வஷ்²சாருருஹுர்வ்ருஷாந் |
ராக்ஷஸா யாதுதா⁴நாஷ்²ச பிஷா²சாஷ்²சாபி ஸர்வஷ²꞉ ||2-87-31

திசைகள் அனைத்திலும் ராட்சசர்களும், யாதுதானர்களும், பிசாசங்களும் நிறைந்திருந்தனர்

விபரீதம் ஜக³த்³த்³ருஷ்ட்வா மஹாதே³வஸ்தாதா²க³தம் |
முமோச ப⁴க³வாஞ்சூ²லம் ப்ரதீ³ப்தாக்³நிஸமப்ரப⁴ம் ||2-87-32

தெய்வீகனான மஹாதேவன், இத்தகைய மாறுபட்ட நிலையில் அண்டத்தைக் கண்டு, நெருப்பைப் போன்று பிரகாசமிக்கத் தன் கதாயுதத்தை {சூலத்தை} ஏவினான்.(31,32)

தத்பபாத ரஹோத்ஸ்ருஷ்டமந்த⁴கோரஸி து³ர்த்³த⁴ரம் |
ப⁴ஸ்மஸாச்சாகரோத்³ரௌத்³ரமந்த⁴கம் ஸாது⁴கண்டகம் ||2-87-33

ஓ! மன்னா, ஹரனால் ஏவப்பட்ட அந்தப் பயங்கரக் கதாயுதம் {சூலம்}, நல்லோரின் பாதையில் முள்ளாக இருந்த அந்தகாசுரனின் மார்பில் பாயந்த உடனேயே அவனைச் சாம்பலாக்கியது

ததோ தே³வக³ணா꞉ ஸர்வே முநயஷ்²ச தபோத⁴நா꞉ | வத³வா꞉
ஷ²ங்கரம் துஷ்டுவுஷ்²சைவ ஜக³ச்ச²த்ரௌ நிப³ர்ஹிதே ||2-87-34

உலகின் பகைவன் கொல்லப்பட்டபோது, தேவர்களும், தவத்தையே செல்வமாகக் கொண்ட முனிவர்களும் சங்கரனை {சிவனைத்} தணிவடையச் செய்யத் தொடங்கினர் {துதிக்கத் தொடங்கினர்}.

தே³வது³ந்து³ப⁴யோ நேது³꞉ புஷ்பவ்ருஷ்டி꞉ பபாத ஹ |
த்ரைலோக்யம் நிர்வ்ருதம் சாஸீந்நரேந்த்³ர விக³தஜ்வரம் ||2-87-35

தேவதுந்துபிகள் முழங்கின, மலர் மாரி பொழிந்தது. ஓ! மன்னா, மூவுலகங்களும் கவலையில் இருந்து விடுபட்டு நிம்மதியடைந்தன

ப்ரஜகு³ர்தே³வக³ந்த⁴ர்வா நந்ருதுஷ்²சாப்ஸரோ க³ணா꞉ |
ஜேபுஷ்²ச ப்³ராஹ்மணா வேதா³நீஜுஷ்²ச க்ரதுபி⁴ஸ்ததா³ ||2-87-36

தேவர்களும், கந்தர்வர்களும் பாடத் தொடங்கினர், அப்சரஸ்கள் ஆடத் தொடங்கினர். பிராமணர்கள் வேதமோதவும், வேள்விகளைச் செய்யவும் தொடங்கினர்.

க்³ரஹா꞉ ப்ரக்ருதிமாபேது³ரூஹுர்நத்³யோ யதா² புரா |
ந ஜஜ்வால ஜலே வஹ்நிராஷா²꞉ ஸர்வா꞉ ப்ரஸேதி³ரே ||2-87-37

கோள்கள் தங்கள் இயல்பு நிலையை அடைந்தன, ஆறுகள் முறையான போக்கில் பாய்ந்தன. நீரில் நெருப்பு எரியவில்லை {ஆறுகளில் பாய்ந்த நீர் கொதிநிலையில் இல்லை}. {திசைகள் அனைத்தும் தெளிந்தன} மக்கள் அனைவரும் நம்பிக்கைகளை வளர்க்கத் தொடங்கினர்.

மந்த³ர꞉ பர்வதஷ்²ரேஷ்ட²꞉ புநரேவ ரராஜ ஹ |
ஷ்²ரியா பரமயா ஜுஷ்ட꞉ ஸர்வதேஜ꞉ஸமுச்ச்²ரயாத் ||2-87-38

மலைகளில் முதன்மையான மந்தரம், தூய்மையுடனும், செழிப்புடனும், பிரகாசத்துடனும் மீண்டும் அழகில் ஒளிர்ந்தது

ரேமே ஸோமஷ்²ச ப⁴க³வாந்பாரிஜாதவநே ஹர꞉ |
ஸுப்ரசாராந்ஸுராந்க்ருத்வா ஷ²க்ராதீ³ந்த⁴ர்மத꞉ ப்ரபு⁴꞉ ||2-87-39

தலைவன் ஹரன், இவ்வாறு தேவர்களுக்கு நன்மையைச் செய்து, பாரிஜாதவனத்தில் மீண்டும் உமையுடன் விளையாடத் தொடங்கினான்” என்றார் {வைசம்பாயனர்}

இதி ஷ்²ரீமஹாபா⁴ரதே கி²லேஷு ஹரிவம்ஷே² விஷ்ணுபர்வணி
அந்த⁴கவதே⁴ ஸப்தாஷீ²திதமோ(அ)த்⁴யாய꞉

————–—————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாஸ பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விஷ்ணு பர்வம்–அத்யாயம் – 86–அந்தகாசுரன் |–(அந்தகவதம்)–

January 31, 2021

அந்தகாசுரன் பிறப்பு; முனிவர்களின் கவலை; மந்தார வனத்தின் பெருமையை அந்தகனிடம் சொன்ன நாரதர்–

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! முனிவர்களில் முதன்மையானவரே, ஓ! வைசம்பாயனரே, ஷட்புரம் அழிந்த கதையை நான் கேட்டேன். நீர் ஏற்கனவே குறிப்பிட்ட அந்தகனின் அழிவை இப்போது சொல்வீராக

ஓ! பேசுபவர்களில் முதன்மையானவரே, பானுமதி அபகரிக்கப்பட்டதையும், அப்போது நேர்ந்த நிகும்பனின் அழிவையும் கேட்க நான் ஆவலுடன் இருக்கிறேன்” என்றான்

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “பழங்காலத்தில் தெய்வீகனான தலைவன் விஷ்ணுவால் {கிருஷ்ணனால்} திதியின் மகன்கள் அனைவரும் கொல்லப்பட்டபோது, அவள் மரீசியின் மகனான கசியபரை தவத்தால் வழிபட்டாள்.

ஓ! பரதனின் வழித்தோன்றலே, முனிவர்களில் முதன்மையான கசியபர், அவளது தவங்கள், தொண்டு, துணை, அழகு ஆகியவற்றில் நிறைவடைந்து,

தவத்தையே செல்வமாகக் கொண்ட அவளிடம், “ஓ! அழகியே, ஓ! அறம்சார்ந்த பெண்ணே, நான் உன்னிடம் நிறைவடைந்தேன். ஒரு வரத்தை வேண்டுவாயாக” என்றார்.

திதி {கசியபரிடம்}, “ஓ! தலைவா, ஓ! அறம்சார்ந்தோரில் முதன்மையானவரே, தேவர்கள் என் மகன்களைக் கொன்றுவிட்டனர், இப்போது எனக்கு எவருமில்லை. தேவர்களால் கொல்லப்பட இயலாத ஒப்பற்ற ஆற்றல் கொண்ட மகனை நான் வேண்டுகிறேன்” என்று கேட்டாள்.

கசியபர் {திதியிடம்}, “ஓ! தேவி, ஓ! தக்ஷனின் மகளே, ஓ! தாமரைக் கண்களைக் கொண்டவளே, எனக்கு ருத்ரனுக்கு மேலான அதிகாரம் இல்லை, அவனைத் தவிர வேறு எந்த தேவனாலும் நிச்சயம் உன் மகனைக் கொல்லப்பட முடியாது. உன் மகன் ருத்ரனிடம் இருந்து தன்னைக் காத்துக் கொள்ளட்டும்” என்றார்.(7,8)

ஓ! குருவின் வழித்தோன்றலே {ஜனமேஜயனே}, அதன்பிறகு வாய்மை நிறைந்தவரான அந்தக் கசியபர் தன் விரல்களால் அந்தத் தேவியின் வயிற்றைத் தீண்டினார்.

ஆயிரம் கரங்களையும், ஆயிரம் தலைகளையும், இரண்டாயிரம் கால்களையும், இரண்டாயிரம் கண்களையும் கொண்ட ஒரு மகனை அவள் பெற்றெடுத்தாள்.

ஓ! பரதனின் வழித்தோன்றலே, அவன் ஒரு குருட்டு மனிதனைப் போலச் செல்லும் காரணத்தால் அந்த மாகாணத்தின் மக்கள் அவனை அந்தகன் என்ற பெயரில் அழைத்தனர்.

ஓ! ஜனமேஜயா, காலனுக்கும் மேலானவனாகத் தன்னைக் கருதிக் கொண்ட அந்த தைத்தியன், அனைவரையும் ஒடுக்கி அவர்களின் ரத்தினங்களை வன்முறையுடன் அபகரித்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தான்

உலகங்கள் அனைத்தையும் அச்சுறுத்திய அந்தகன், அவ்வாறு பெருஞ்செருக்குடன் அப்சரஸ்களையும் அபகரித்துத் தன் வீட்டில் வாழுமாறு அவர்களை வற்புறுத்தினான்.

அந்தத் திதியின் மைந்தன், மூடத்தனத்தால் பாவமிழைக்கத் துணிந்து பிறன் மனைவியரையும், ரத்தினங்களையும் களவு செய்தான்.

ஓ! பரதனின் வழித்தோன்றலே, அனைவரையும் ஒடுக்குபவனான அவன், ஒரு காலத்தில், தன் தொண்டர்களான அசுரர்களுடன் சேர்ந்து மூவுலகங்களையும் வெல்ல ஆயத்தம் செய்தான்

இதைக் கேட்ட தலைவன் சக்ரன் {இந்திரன்}, தன் தந்தையான கசியபரிடம், “ஓ! முனிவர்களில் முதன்மையானவரே, அந்தகன் இவையனைத்தையும் செய்கிறான்.

ஓ! தலைவா, நான் செய்ய வேண்டியதை ஆணையிடுவீராக. ஓ! முனிவரே, என் தம்பியின் இத்தகைய ஒடுக்குமுறைகளில் எவ்வாறு நான் துன்புறுவேன்?

என் மாற்றாந்தாயின் அன்புக்குரிய மகனை எவ்வாறு நான் தாக்குவேன்? ஓ! ஐயா, வழிபடத்தகுந்த இந்தத் தாயின் மகன் என்னால் கொல்லப்பட்டால், நிச்சயம் அவள் என் மீது கோபம் கொள்வாள்” என்றான் {இந்திரன்}.

தேவர்களின் மன்னனுடைய சொற்களைக் கேட்ட பெரும் முனிவர் கசியபர், ” ஓ! தேவர்களின் தலைவா, உனக்கு நன்மை நேரட்டும்; அனைத்து வழிமுறைகளினாலும் நான் அவனைத் தடுப்பேன்” என்றார்.

ஓ! பரதனின் வழித்தோன்றலே {ஜனமேஜயனே}, திதியும், கசியபரும் சேர்ந்து மிகக் கடினமாக முயற்சித்து மூன்று உலகங்களையும் வெல்வதிலிருந்து அந்தகனை விலகச் செய்தனர்.

இவ்வாறு தடுக்கப்பட்டாலும் அந்தத் தீயவன் தேவர்களையும், தேவலோகவாசிகளையும் பல்வேறு வழிமுறைகளின் மூலம் ஒடுக்கத் தொடங்கினான்

தீய மனம் கொண்ட அந்த தைத்தியன், காட்டின் மரங்களை வேருடன் பிடுங்கி, தோட்டங்களையும் அழித்தான். ஓ! பரதனின் வழித்தோன்றலே, பலத்தின் செருக்கில் மிதந்து கொண்டிருந்த அந்தத் தானவன், தேவர்களின் முன்னிலையிலேயே இந்திரனின் தேரோட்டிகளையும், குதிரைகளையும், திசைகளின் யானைகளையும் {திக்கஜங்களையும்} அபகரித்துச் சென்றான்.(22,23)

தேவர்களின் பாதையில் முள்ளாக இருந்த அவன் {அந்தகன்}, யஜ்ஞங்களால் தேவர்களைத் தணிவாக்க விரும்பிய மனிதர்களின் வழிகளில் தடைகளை ஏற்படுத்துவதை வழக்கமாகக் கொண்டான்.

ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்தகன் மீது கொண்ட அச்சத்தாலும், யஜ்ஞங்களுக்குத் தடையேற்படுவதாலும், வேள்விசெய்பவர்களான மூவர்ணத்தினர் {பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் ஆகியோர்} வேள்விகளைச் செய்வதை நிறுத்தினர், தவசிகளும் {பலனில்லாத} வெறுமையான தங்கள் தவப் பயிற்சிகளைக் கைவிட்டனர்.

அவனது ஆணையின் பேரில் காற்றானவன் வீசினான், சூரியன் தன் கதிர்களைக் கைவிட்டான், சந்திரன் நட்சத்திரங்களுடன் தோன்றவும், மறையவும் செய்தான்.

பெரும்பயங்கரனும், பலத்தின் செருக்கில் மிதப்பவனுமான தீய அந்தகனின் மீது கொண்ட அச்சத்தால் பறவைகளாலும் ஆகாயத்தில் சுதந்திரமாகப் பறக்க முடியவில்லை

ஓ! வீரா, ஓ! குரு குலத்தை நிலைநிறுத்துபவனே, இவ்வாறு பெரும்பயங்கரனான அந்தகனின் மீது கொண்ட அச்சத்தால் உலகம் ஓங்காரம், வஷட்காரம்[“{வேள்விகள்} முதலிய அறச்சடங்குகள் அனைத்தும் செய்யப்படாமல் நின்றன”] ஆகியவற்றைக் கைவிட்டது

ஒரு காலத்தில் பாவம் நிறைந்த அந்த தைத்தியன், உத்ரகுரு, பத்ராஸ்வம், கேதுமாலம், ஜம்மபூத்வீப மாகாணங்களைச் சூறையாடினான் {அங்கு வசித்த மக்களை விரட்டினான்}.

தேவர்களாலும் அணுக முடியாத அந்த அசுரனிடம், தானவர்களும், பிற உயிரினங்களும் மதிப்பைக் காட்டினர்.

ஓ! அறவோரில் முதன்மையானவனே, அந்தகனால் ஒடுக்கப்பட்ட பிரம்மவாதிகள் ஒன்று சேர்ந்து அவனது அழிவுக்காக வழிமுறைகளை வகுக்க முயன்றனர்.

அவர்களில் நுண்ணறிவுமிக்க பிருஹஸ்பதி, “ருத்ரனைத் தவிர வேறு எவராலும் அவனைக் கொல்ல முடியாது

ஏனெனில், நுண்ணறிவுமிக்க கசியபர் திதிக்கு வரமளித்தபோது, ’ருத்திரனை எதிர்த்து என்னால் உன் மகனை காக்க இயலாது’ என்று சொல்லியிருக்கிறார்.

அனைவருக்கும் நன்மையைச் செய்யும் நித்தியனான சர்வனிடம் அனைத்து உயிரினங்களுக்கும் நேரும் தொல்லைகளை எடுத்துரைக்கும் வழிமுறைகளை நாம் காண வேண்டும்.

பெருஞ்சக்திவாய்ந்தவனும், அறவோரின் புகலிடமும், தெய்வீகனுமான தலைவன் பவனிடம் நம் நோக்கத்தைத் தெரிவித்தால் அவன் நிச்சயம் உலகில் நமக்கிருக்கும் துன்பத்தை நீக்குவான்.

ஏனெனில், தீயோரிடம் இருந்து நல்லோரைக் காப்பது, அதிலும் குறிப்பாக பிராமணர்களைக் காப்பது உலகத்தின் ஆசானும், தேவர்களின் தேவனுமான பவனின் பணியாகும்.

இருபிறப்பாளரில் சிறந்தவரான நாரதரிடம் சென்று அவரது துணையை நாடுவோம். மஹாதேவனின் நண்பரான அவர், நமக்குப் பொருத்தமான வழியைச் சுட்டிக் காட்டுவார்” என்றார் {பிருஹஸ்பதி}

பிருஹஸ்பதியின் சொற்களைக் கேட்ட தவசிகள், தெய்வீக முனிவர்களில் முதன்மையான நாரதரை வானத்தில் கண்டனர்

தேவர்கள் அவரை முறையாக வழிபட்டு வரவேற்று, “ஓ! தெய்வீக முனிவரே, ஓ! தலைவா, ஓ! அறம்சார்ந்த ரிஷியே, கைலாசத்திற்கு விரைவாகச் சென்று அந்தகனின் அழிவைக் குறித்துப் பெருந்தேவனான ஹரனிடம் பேசுவீராக” என்றனர். அவர்கள் தங்கள் பாதுகாப்புக்காகவே இதை நாரதரிடம் சொன்னார்கள். அவரும், “அவ்வாறே ஆகட்டும்” என்றார்.(39,40)

கல்விமானான முனிவர் நாரதர், ரிஷிகள் புறப்பட்டுச் சென்ற பிறகு, தம் மனத்தில் இக்காரியத்தைச் சிந்தித்து ஒரு தீர்மானத்திற்கு வந்தார்.

அந்தத் தெய்வீக முனிவர், தேவர்களின் தேவனான சிவனைக் காண்பதற்காக அவன் எப்போதும் வாழும் மந்தாரத் தோட்டத்திற்குச் சென்றான்.

ஏதத்து ஸர்வமாக்²யாதம் நிகும்ப⁴சரிதம் மயா |

ஓ! பரதனின் வழித்தோன்றலே, அவர், சூலபாணியின் (சிவனுக்குரிய) அழகிய மந்தாரவனத்தில் ஓரிரவு வாழ்ந்து, இனிய நறுமணம் வீசும் பொருட்கள் அனைத்திலும் சிறந்தவையான மந்தார மலர்களால் நன்கு கோர்க்கப்பட்ட மாலையையும், சந்தன மலர்களாலான மற்றொரு மாலையையும் விருஷத்வஜனின் {சிவனின்} அனுமதியுடன் எடுத்துக் கொண்டு தேவர்களின் நகருக்கு {அமராவதிக்குப்} புறப்பட்டார்.(43-45)

ஓ! மன்னா, நாரதர், நறுமணமிக்க அந்த மாலையைத் தன் கழுத்தில் சூடிக் கொண்டு, பலத்தில் செருக்குண்டிருக்கும் தீய ஆன்மா படைத்த அந்தகன் இருக்கும் இடத்திற்குச் சென்றார்.

அந்தகன், சந்தானக மலர்களாலான அந்த மாலையைக் கண்டும், அதன் இனிய நறுமணத்தை நுகர்ந்தும், “ஓ! பெரும் முனிவரே

தவத்தையே செல்வமாகக் கொண்டவரே, இத்தகைய அழகிய நிறத்தையும், மணத்தையும் எப்போதும் கொண்டிருக்கும் இந்த அழகிய மலர்களை நீ எங்கே பெற்றீர்? இவை அனைத்து வகையிலும் தேவலோகத்தின் சந்தானக மலர்களை விஞ்சியிருக்கின்றனவே.

இவை எங்கே வளர்கின்றன, இவற்றின் உரிமையாளன் எவன்? ஓ! முனிவரே, விருந்தினராக தேவர்களால் மதிக்கப்படுபவரே, நீர் என்னிடம் மதிப்பு கொண்டிருந்தால் இவையனைத்தையும் சொல்வீராக” என்று கேட்டான்

ஓ! பரதனின் வழித்தோன்றலே, முனிவர்களில் முதன்மையானவரும், தவங்களையே ரத்தினங்களாகக் கொண்டவருமான நாரதர் இதைக் கேட்டு புன்னகைத்தபடியே அவனது வலக்கரத்தைப் பற்றிக்கொண்டு

“ஓ! வீரா, இந்த மலர்கள் மலைகளில் சிறந்த மந்தர மலையில் அமைந்திருக்கும் அழகிய காட்டில் வளர்கின்றன. இவை திரிசூல பாணியின் படைப்பு

அந்தப் பெருந்தேவனின் கணங்கள் அந்தக் காட்டைப் பாதுகாக்கின்றனர். அவனுடைய அனுமதியில்லாமல் எவனாலும் அங்கே நுழைய முடியாது.

பல்வேறு ஆடைகளை உடுத்தியவர்களும், பல்வேறு ஆயுதங்களைப் பயன்படுத்துபவர்களுமான அந்தக் கணங்கள் பயங்கரமானவர்களாகவும், அணுகப்பட முடியாதவர்களாகவும் இருக்கிறார்கள். மஹாதேவனால் நன்கு பாதுகாக்கப்படும் காரணத்தால் அவர்கள் எந்த உயிரினத்தாலும் கொல்லப்பட முடியாதவர்களாக இருக்கின்றனர்

அனைவரின் ஆன்மாவாகவும், பாதுகாவலனாகவும் உள்ளவனும், கணங்களால் தொண்டாற்றப்படுபவனுமான ஹரன், அந்த மந்தார வனத்தில் எப்போதும் உமாதேவியுடன் விளையாடிக் கொண்டிருக்கிறான்.

ஓ! கசியப குலத்தில் பிறந்தவனே, மூவுலகங்களின் தலைவனான ஹரனை ஒருவன் கடுந்தவங்களைச் செய்து துதித்தால், அவன் மந்தார மலர்களை அடைவான்

ஹரனால் விரும்பப்படும் இந்த மரங்கள் பெண் ரத்தினங்களையும், விலைமதிப்புமிக்க பிற ரத்தினங்களையும், விருப்பத்திற்குரிய அனைத்துப் பொருட்களையும் தரவல்லவையாக இருக்கின்றன

ஓ! ஒப்பில்லா ஆற்றலைக் கொண்டவனே, துன்பங்கள் இல்லாத இடமாக இருக்கும் அந்த மரங்களின் காடு, தன்னொளி பெற்றதாக இருக்கிறது. சூரியனோ, சந்திரனோ தங்கள் கதிர்களை அங்கே பொழிவதில்லை

ஓ! பெரும் பலம் கொண்டவனே, அந்தப் பெரும் மரங்களுக்கு மத்தியில் சில நறுமணங்களைக் கொடுப்பவை, சில நீரையும், வேறு சில பல்வேறு நறுமணமிக்க ஆடைகளையும் தரவல்லவை

அவை விருப்பத்திற்குரிய அனைத்து வகை உணவுப் பொருட்களையும், பானங்களையும் தரவல்லவை.

ஓ! பாவமற்ற வீரா, அந்த மந்தார வனத்தில் எவரும் தாகமோ, பசியோ, களைப்போ அடைவதில்லை என்பதை அறிவாயாக

தேவலோகத்தில் உள்ள மரங்களை விட மேன்மையான அந்த மரங்களின் குணங்களை நூறு ஆண்டுகளானாலும் விளக்கிச் சொல்ல முடியாது.

ஓ! திதியின் மகன்களில் முதன்மையானவனே {அந்தகா}, அங்கே ஒரே ஒரு நாள் வாழ்பவனும், மஹாதேவனுக்கும் மேன்மையான அனைவரையும் வெற்றி கொள்வான். இதில் ஐயமேதுமில்லை.

அந்தப் பகுதியானது, உலகம் படைக்கப்படுவதற்கு முன்பே சொர்க்கத்தின் சொர்க்கமாகவும், இன்பத்தின் இன்பமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டது என்பது என் கருத்தாகும்” என்றார் {நாரதர்}”.

————–—————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாஸ பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விஷ்ணு பர்வம்–அத்யாயம் – 85–(நிகும்பப்ரப்ருதீனாம் வதம்)–அசுரர்களின் தோல்வி |–

January 31, 2021

ஜயந்தனிடம் வீழ்ந்த நிகும்பன்; நிகும்பனின் வரலாற்றை ஸ்ரீ அர்ஜுனனுக்குச் சொன்ன ஸ்ரீ கிருஷ்ணன்; சக்கரத்தால் உயிரிழந்த நிகும்பன்; ஷட்புரத்தை பிரம்மதத்தருக்குக் கொடுத்த ஸ்ரீ கிருஷ்ணன்-

வைஷ²ம்பாயந உவாச
ருத்³தே⁴ஷு பூ⁴மிபாலேஷு ஸானுகே³ஷு விஷா²ம்பதே |
ஆவிவேஷா²ஸுராம்ஷ்²சாத² கஷ்²மலம் ஜனமேஜய ||2-85-1

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “ஓ! பேரரசே, ஜனமேஜயா, மன்னர்களும், அவர்களின் தொண்டர்களும் சிறைபிடிக்கப்பட்டதும் அசுரர்களின் மனத்தில் அச்சம் நுழைந்தது.

தி³ஷ²꞉ ப்ரதஸ்து²ஸ்தே வீரா வத்⁴யமானா꞉ ஸமந்தத꞉ |
க்ருஷ்ணானந்தப்ரப்⁴ருதிபி⁴ர்யது³பி⁴ர்யுத்³த⁴து³ர்மதை³꞉ ||2-85-2

கிருஷ்ணன், அனந்தன் {பலராமன்} ஆகியோராலும், போரில் பயங்கரர்களான பிற யாதவர்களாலும் முற்றாக முறியடிக்கப்பட்ட அந்த வீரர்கள் அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடினர்.

நிகும்ப⁴ஸ்தானதோ²வாச ருஷிதோ தா³னவோத்தம꞉ |
பி⁴த்த்வா ப்ரதிஜ்ஞாம் கிம் மோஹாத்³ப⁴யார்தா யாத விஹ்வலா꞉ ||2-85-3

தானவர்களில் முதன்மையான நிகும்பன் இதைக் கண்டு கோபத்தில் நிறைந்தவனாக, “அச்சத்தால் பீடிக்கப்பட்டும், அறியாமையால் கலக்கமடைந்தும், உங்கள் உறுதிமொழியை உடைத்தும் ஏன் தப்பி ஓடுகிறீர்கள்?

ஹீனப்ரதிஜ்ஞா꞉ காம்ˮல்லோகான்ப்ரயாஸ்யத பலாயிதா꞉ |
அக³த்வாபசிதிம் யுத்³தே⁴ ஜ்ஞாதீனாம் க்ருதநிஷ்²சயா꞉ ||2-85-4

உங்கள் உற்றார் உறவினரின் அழிவுக்குப் பழிதீர்ப்பதாக உறுதியளித்தீர்களே. இப்போது உங்கள் உறுதிமொழியை உடைத்துத் தப்பி ஓடினால் நீங்கள் எந்த உலகத்தை அடைவீர்கள்?

ப²லம் ஜித்வேஹ போ⁴க்தவ்யம் ரிபூன்ஸமரகர்கஷா²ன் |
ஹதேன சாபி ஷூ²ரேண வஸ்தவ்யம் த்ரிதி³வே ஸுக²ம் ||2-85-5

போரில் தடுக்கப்பட முடியாதவர்களான உங்கள் பகைவரை வீழ்த்தினால் நீங்கள் பலனை அறுவடை செய்வீர்கள். போர்க்களத்தில் கொல்லப்பட்ட வீரர்களோ தேவலோகத்தில் மகிழ்ச்சியாக வாழ்வார்கள்.

பலாயித்வா க்³ரூஹம் க³த்வா கஸ்ய த்³ரக்ஷ்யத² ஹே முக²ம் |
தா³ரான்வக்ஷ்யத² கிம் சாபி தி⁴க்³தி⁴க்கிம் கிம் ந லஜ்ஜத² ||2-85-6

எனினும், நீங்கள் தப்பி ஓடினால் உங்கள் வீட்டில் யாரிடம் உங்கள் முகத்தைக் காட்டுவீர்கள்? உங்கள் மனைவியர் என்ன சொல்வர்? ஐயோ, ச்சீ, ச்சீ உங்களுக்குக் கிஞ்சிற்றும் வெட்கமில்லையே” என்றான் {நிகும்பன்}

ஏவமுக்தா நிவ்ருத்தாஸ்தே லஜ்ஜமானா ந்ருபாஸுரா꞉ |
த்³விகு³ணேன ச வேகே³ன யுயுது⁴ர்யது³பி⁴꞉ ஸஹ ||2-85-7

ஓ! மன்னா, இவ்வாறு சொல்லப்பட்ட அசுரர்கள், வெட்கத்தால் நிறைந்தவர்களாக, இருமடங்கு சீற்றத்துடன் திரும்பி வந்து யாதவர்களுடன் மீண்டும் போரிட்டனர்.

உத்ஸவே யுத்³த⁴ஷௌ²ண்டா³னாம் நானாப்ரஹரணைர்ந்ருப |
யே யாந்தி யஜ்ஞவாடம் தம் தான்னிஹந்தி த⁴னஞ்ஜய꞉ ||2-85-8

யமௌ பீ⁴மஷ்²ச ராஜா ச த⁴ர்மபுத்ரோ யுதி⁴ஷ்டி²ர꞉ |
த்³யாம் ப்ரயாதாஞ்ஜகா⁴னைந்த்³ரி꞉ ப்ரவரஷ்²ச த்³விஜோத்தம꞉ ||2-85-9

தனஞ்சயன் {அர்ஜுனன்}, பீமன், நகுலன், சகாதேவன், தர்மனின் மகனான மன்னன் யுதிஷ்டிரன் ஆகிய வீரர்கள், வீரத்திருவிழா நடைபெற்ற அந்த வேள்விக்களத்திற்குச் சென்றோர் அனைவரையும் தங்களுடைய பல்வேறு ஆயுதங்களால் அழித்தனர். வானத்தில் உயர்ந்து எழுந்தோர் இந்திரனின் மகனாலும் {ஜயந்தனாலும்}, இருபிறப்பாளர்களில் முதன்மையான பிரவரனாலும் கொல்லப்பட்டனர்.(8,9)

அதா²ஸுராஸ்ருக்தோயாட்⁴யா கேஷ²ஷை²வலஷா²ட்³வலா |
சக்ரகூர்மரதா²வர்தா க³ஜஷை²லானுஷோ²பி⁴னீ ||2-85-10

ஓ! ஜனமேஜயா, அந்தப் போர்க்களத்தில், அசுரர்களின் குருதியை நீராகக் கொண்ட ஆறு பாயத் தொடங்கியது. அவர்களின் தலைமுடிகளே அதன் பாசியும், புல்லுமாக இருந்தன. சக்கரங்கள் ஆமையாகவும், தேர்கள் நீர்ச்சுழியாகவும் இருந்தன. அது யானைகளெனும் பாறைகளால் அழகூட்டப்பட்டது.

த்⁴வஜகுந்ததருச்ச²ன்னா ஸ்தனிதோத்க்ருஷ்டநாதி³னீ |
கோ³விந்த³ஷை²லப்ரப⁴வா பீ⁴ருசித்தப்ரமாதி²னீ ||2-85-11

கோவிந்த மலையில் உற்பத்தியாகி, கொடிகளெனும் மரங்களால் மறைக்கப்பட்டிருந்த அவ்வாறு கோழைகளின் இதயங்களைத் துன்புறுத்தியது.

அஸ்ருக்³பு³த்³பு³த³பே²னாட்⁴யா அஸிமத்ஸ்யதரங்கி³ணீ |
ஸுஸ்ராவ ஷோ²ணிதநதீ³ நதீ³வ ஜலதா³க³மே ||2-85-12

அங்கு எழுந்த கதறல்கள் பாய்ந்து செல்லும் அவ்வோடையின் ஒலியாகின, குருதியின் நுரைகள் குமிழிகளாகின. வாள்களே மீன்களாகின. மழைக்கால நீரால் நிறைந்த ஓடையைப் போல அந்தக் குருதியாறு பாயத் தொடங்கியது

தாந்த்³ருஷ்ட்வைவ நிகும்ப⁴ஸ்து வர்த்³த⁴மானம்ஷ்²ச ஷா²த்ரவான் |
ஹதான்ஸர்வான்ஸஹாயாம்ஷ்²ச வீர்யாதே³வோத்பபாத ஹ ||2-85-13

தன் தோழர்கள் அனைவரும் கொல்லப்படுவதையும், பகைவர்கள் சக்தியில் பெருகுவதையும் கண்ட நிகும்பன், தன் சக்தியால் திடீரென உயரக் குதித்தான் {வானத்தில் உயர்ந்தான்}.

ஸ வாரிதோ ஜயந்தேன ப்ரவரேண ச பா⁴ரத |
ஷ²ரை꞉ குலிஷ²ஸங்காஷை²ர்னிகும்போ⁴ ரணகர்கஷ²꞉ ||2-85-14

ஓ! பரதனின் வழித்தோன்றலே, அங்கே ஜயந்தனும், பிரவரனும் போரில் தடுக்கப்பட முடியாத நிகும்பனை இடிகளுக்கு ஒப்பான கணைகளால் தடுத்தனர்.

ஸந்நிவ்ருத்யாத² த³ஷ்டோஷ்ட²꞉ பரிகே⁴ண து³ராஸத³꞉ |
ப்ரவரம் தாட³யாமாஸ ஸ பபாத மஹீதலே ||2-85-15

தீயவனான நிகும்பன் அங்கிருந்து விலகியும், தன் உதடுகளைக் கடித்துக் கொண்டும், தன் பரிகத்தைக் கொண்டு பிரவரனைத் தாக்கி, அவனைப் பூமியில் விழச் செய்தான்.

ஐந்த்³ரிஸ்தம் பதிதம் பூ⁴மௌ பா³ஹுப்⁴யாம் பரிஷஸ்வஜே |
விதி³த்வா சைவ ஸப்ராணம் ஹித்வாஸுரமபி⁴த்³ருத꞉ ||2-85-16

அவன் விழுந்த உடனேயே இந்திரனின் மகன் {ஜயந்தன்} அவனைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு, தன் கரங்களால் அவனைத் தழுவிக் கொண்டான். அவன் உயிரோடிருப்பதை அறிந்த உடனே அவனை விட்டுவிட்டு அந்த அசுரனை நோக்கி ஓடினான்.

அபி⁴த்³ருத்ய நிகும்ப⁴ம் ச நிஸ்த்ரிம்ஷே²ன ஜகா⁴ன ஹ |
பரிகே⁴ணாபி தை³தேயோ ஜயந்தம் ஸமதாட³யத் ||2-85-17

ஜயந்தன், நிகும்பனை நெருங்கி நிஸ்திரிங்ஷத்தால் {வாளால்} அவனைத் தாக்கினான். அந்தத் தைத்தியனும் அவனைப் பரிகத்தால் தாக்கினான்.

ததக்ஷ ப³ஹுலம் கா³த்ரம் நிகும்ப⁴ஸ்யைந்த்³ரிராஹவே |
ஸ சிந்தயாமாஸ ததா³ வத்⁴யமானோ மஹாஸுர꞉ ||2-85-18

அடுத்தக் கணத்திலேயே இந்திரனின் மகன் நிகும்பனின் மேனியை எண்ணற்ற கணைகளால் புண்ணாக்கினான்.

க்ருஷ்ணேன ஸஹ யோத்³த⁴வ்யம் வைரிணா ஜ்ஞாதிகா⁴தினா |
ஷ்²ராவயாமி கிமாத்மானமாஹவே ஷ²க்ரஸூனுனா ||2-85-19

இவ்வாறு அந்தப் பயங்கரப்போரில் காயமடைந்த பேரசுரன் {நிகும்பன்}, “என் உற்றார் உறவினரைக் கொன்றவனும், என்னுடைய பகைவனுமான கிருஷ்ணனுடன் போர்க்களத்தில் நான் போரிட வேண்டும். இந்திரனின் மகனுடன் போரிடுவதன் மூலம் நான் ஏன் களைப்படைய வேண்டும்? {அதனால் என்ன புகழடைவேன்?}” என்று நினைத்தான்.

ஏவம் ஸ நிஷ்²சயம் க்ருத்வா தத்ரைவாந்தரதீ⁴யத |
ஜகா³ம சைவ யுத்³தா⁴ர்த²ம் யத்ர க்ருஷ்ணோ மஹாப³ல꞉ ||2-85-20

இவ்வாறு தீர்மானித்த நிகும்பன் அந்த இடத்தில் இருந்து மறைந்து, பெருஞ்சக்திவாய்ந்த கிருஷ்ணன் இருக்குமிடத்திற்குச் சென்றான்.

தம் த்³ருஷ்ட்வைராவதஸ்கந்த⁴மாஸ்தி²தோ ப³லநாஷ²ன꞉ |
த்³ரஷ்டுமப்⁴யாக³தோ யுத்³த⁴ம் ஜஹ்ருஷே ஸஹ தை³வதை꞉ ||2-85-21

பலனைக் கொன்றவனான அறம்சார்ந்த வாசவன் {இந்திரன்}, தன்னுடைய ஐராவதத்தில் அமர்ந்து கொண்டு, போரைக் காண்பதற்காகத் தேவர்களுடன் அங்கே வந்திருந்தான். தன் மகன் வெற்றியாளனாகத் திகழ்வதில் நிறைவடைந்தான்

ஸாது⁴ ஸாத்⁴விதி புத்ரம் ச பரிதுஷ்ட꞉ ஸ ஸஸ்வஜே |
ப்ரவரம் சாபி த⁴ர்மாத்மா ஸஸ்வஜே மோஹவர்ஜிதம் ||2-85-22

அவர்களின் செயல்பாடுகளை மீண்டும் மீண்டும் புகழ்ந்து, அவனையும் {ஜயந்தனையும்}, அந்நேரத்தில் மயக்கத்தில் இருந்து விடுபட்ட பிரவரனையும் ஆரத்தழுவினான்.

தே³வது³ந்து³ப⁴யஷ்²சாபி ப்ரணேது³ர்வாஸவாஜ்ஞயா |
ஜயமானம் ரணே த்³ருஷ்ட்வா ஜயந்தம் ரணது³ர்ஜயம் ||2-85-23

பயங்கரம் நிறைந்த போரில் வெற்றியடைந்த ஜயந்தனைக் கண்டும், தேவர்களின் மன்னனுடைய ஆணையின் பேரிலும் தேவதுந்துபிகள் முழக்கப்பட்டன

த³த³ர்ஷா²த² நிகும்ப⁴ஸ்து கேஷ²வம் ரணது³ர்ஜயம் |
அர்ஜுனேன ஸ்தி²தம் ஸார்த⁴ம் யஜ்ஞவாடாவிதூ³ரத꞉ ||2-85-24

மறுபுறம் அந்தப் பயங்கரப் போரில், வேள்விக்களத்தின் அருகில் அர்ஜுனனுடன் கேசவன் இருப்பதைக் கண்ட நிகும்பன்,

ஸ நாத³ம் ஸுமஹான்க்ருத்வா பக்ஷிராஜமதாட³யத் |
பரிகே⁴ண ஸுகோ⁴ரேண ப³லம் ஸத்யகமேவ ச ||2-85-25

சிங்க முழக்கம் செய்து கொண்டே தன்னுடைய பரிகத்தால் பறவைகளின் மன்னனான கருடன், பலதேவன், சத்யகன் {சாத்யகி} ஆகியோரைத் தாக்கினான்.

நாராயணம் சார்ஜுனம் ச பீ⁴மம் சாத² யுதி⁴ஷ்டி²ரம் |
யமௌ ச வாஸுதே³வம் ச ஸாம்ப³ம் காமம் ச விர்யவான் ||2-85-26

மேலும், நாராயணன் {கிருஷ்ணன்}, அர்ஜுனன், பீமன், யுதிஷ்டிரன், சகாதேவன், நகுலன் ஆகியோரையும், வாசுதேவனின் மகன்களான சாம்பனையும், காமனையும் {பிரத்யும்னனையும்} தாக்கினான்.

யுயுதே⁴ மாயயா தை³த்ய꞉ ஷீ²க்⁴ரகாரீ ச பா⁴ரத |
ந சைனம் த³த்³ருஷு²꞉ ஸர்வே ஸர்வஷ²ஸ்த்ரவிஷா²ரதா³꞉ ||2-85-27

வேகமாகச் செல்லக்கூடிய அந்தத் தைத்தியன், அனைத்து வகை ஆயுதங்களிலும் திறன்மிக்க அந்த வீரர்களில் எவராலும் தன்னைக் காண முடியாதவாறு தன் மாய சக்தியைப் பயன்படுத்திப் போரிட்டான்.

யதா³ து நைவாபஷ்²யம்ஸ்தம் ததா³ பி³ல்வோத³கேஷ்²வரம் |
த³த்⁴யௌ தே³வம் ஹ்ருஷீகேஷ²꞉ ப்ரமதா²னாம் க³ணேஷ்²வரம் ||2-85-28

அங்கே அவனைக் காணாத ரிஷிகேசன் (கிருஷ்ணன்), கணங்களின் தலைவனான வில்வோதகேஷ்வரனை {சிவனை} தியானித்தான்.

ததஸ்தே த³த்³ருஷு²꞉ ஸர்வே ப்ரபா⁴வாத³திதேஜஸ꞉ |
பி³ல்வோத³கேஷ்²வரஸ்யாஷு² நிகும்ப⁴ம் மாயினாம் வரம் ||2-85-29

பெருஞ்சக்திவாய்ந்த வில்வோதகேஷ்வரனைக் கிருஷ்ணன் தியானித்த உடனேயே, அவனுடைய {சிவனின்} சக்தியால் கைலாச சிகரத்தைக் காண்பதைப் போல மாய சக்திகளைக் கொண்டோரில் முதன்மையான நிகும்பனை அவர்கள் அனைவராலும் காண முடிந்தது

கைலாஸஷி²க²ராகாரம் க்³ரஸந்தமிவ தி⁴ஷ்டி²தம் |
ஆஹ்வயந்தம் ரணே க்ருஷ்ணம் வைரிணம் ஜ்ஞாதிநாஷ²னம் ||2-85-30

அந்த நேரத்தில் அந்த வீரன் {நிகும்பன்} அவர்கள் அனைவரையும் விழுங்கிவிடத் தயாராக இருப்பவனைப் போலத் தன் உற்றார் உறவினரைக் கொன்ற பகைவனான கிருஷ்ணனை அழைத்துக் கொண்டிருந்தான்.

ஸஜ்ஜகா³ண்டீ³வமேவாத² பார்த²ஸ்தஸ்ய ரதே²ஷுபி⁴꞉ |
பரிக⁴ம் சைவ கா³த்ரேஷு விவ்யாதை⁴னமதா²ஸக்ருத் ||2-85-31

பார்த்தன் {அர்ஜுனன்} ஏற்கனவே தன்னுடைய காண்டீவத்தில் நாண் பூட்டியிருந்தான். அவன் அவனை {அர்ஜுனன் நிகும்பனைக்} கண்ட போது, பரிகத்தாலும், கணைகள் பிறவற்றாலும் அவனுடைய {நிகும்பனின்} உடலைத் தாக்கினான்

தே பா³னாஸ்தஸ்ய கா³த்ரேஷு பரிகே⁴ ச ஜனாதி⁴ப |
ப⁴க்³னா꞉ ஷி²லாஷி²தா꞉ ஸர்வே நிபேது꞉ குஞ்சிதா க்ஷிதௌ ||2-85-32

ஓ! மன்னா, கல்லில் கூராக்கப்பட்ட அந்தப் பரிகமும், பிற கணைகளும் அவனுடைய உடலைத் தீண்டியதும் பூமியில் நொறுங்கி விழுந்து சிதறின

விப²லானஸ்த்ரயுக்தாம்ஸ்தாந்த்³ரூஷ்ட்வா பா³ணாந்த⁴னஞ்ஜய꞉ |
பப்ரச்ச² கேஷ²வம் வீர꞉ கிமேததி³தி பா⁴ரத ||2-85-33

ஓ! பரதனின் வழித்தோன்றலே, தன் வில்லில் இருந்து ஏவப்பட்ட கணைகள் இவ்வாறு கலங்கடிக்கப்படுவதைக் கண்ட தனஞ்சயன், கேசவனிடம், “என்ன இது?

பர்வதானபி பி⁴ந்த³ந்தி மம வஜ்ரோபமா꞉ ஷ²ரா꞉ |
கிமித³ம் தே³வகீபுத்ர விஸ்மயோ(அ)த்ர மஹான்மம ||2-85-34

ஓ! தேவகியின் மகனே, வஜ்ரங்களுக்கு ஒப்பான என்னுடைய கணைகள் மலைகளையும் துளைக்கவல்லவை. ஆனால் இங்கே அவை பயனற்றுப் போனதேன்? இதில் எனக்குப் பேராச்சரியம் உண்டாகிறது” என்று கேட்டான்

தமுவாச தத꞉ க்ருஷ்ண꞉ ப்ரஹஸன்னிவ பா⁴ரத |
மஹத்³பூ⁴தம் நிகும்போ⁴(அ)யம் கௌந்தேய ஷ்²ருணு விஸ்தராத் ||2-85-35

ஓ! தேவகியின் மகனே, வஜ்ரங்களுக்கு ஒப்பான என்னுடைய கணைகள் மலைகளையும் துளைக்கவல்லவை. ஆனால் இங்கே அவை பயனற்றுப் போனதேன்? இதில் எனக்குப் பேராச்சரியம் உண்டாகிறது” என்று கேட்டான்

புரா க³த்வோத்தரகுரூம்ஸ்தபஷ்²சக்ரே மஹாஸுர꞉ |
ஷ²தம் வர்ஷஸஹஸ்ராணாம் தே³வஷ²த்ருர்து³ராஸத³꞉ ||2-85-36

தடுக்கப்பட முடியாதவனும், தேவர்களின் பகைவனுமான இந்தப் பேரசுரன் {நிகும்பன்}, உத்தரகுரு மாகாணத்திற்குச் சென்று நூறாயிரம் {ஒரு லட்சம்} ஆண்டுகள் கடுந்தவம் பயின்றான்.

அதை²னம் ச²ந்த³யாமாஸ வரேண ப⁴க³வான்ஹர꞉ |
ஸ வவ்ரே த்ரீணி ரூபாணி ந வத்⁴யானி ஸுராஸுரை꞉ ||2-85-37

இதில் நிறைவடைந்த தலைவன் ஹரன் {சிவன்}, அவனுக்கு வரமளிக்க இருந்தபோது, அவன் தேவர்களாலும், அசுரர்களாலும் கொல்லப்பட முடியாத மூன்று வடிவங்களை வேண்டினான்

தமுவாச மஹாதே³வோ ப⁴க³வான்வ்ருஷப⁴த்⁴வஜ꞉ |
மம வா ப்³ராஹ்மணானாம் வா விஷ்ணோர்வா ப்ரியமாசரன் ||2-85-38

கொடியில் காளைச் சின்னத்தைக் கொண்ட தலைவன் மஹாதேவன், “ஓ! பேரசுரா, என்னையோ, விஷ்ணுவையோ, பிராமணர்களையோ எதிர்த்து செயல்பட்டால் நீ ஹரியால் கொல்லத்தக்கவன் ஆவாய்.

ப⁴விஷ்யஸி ஹரேர்வத்⁴யோ ந த்வன்யஸ்ய மஹாஸுர |
ப்³ரஹ்மண்யோ(அ)ஹம் ச விஷ்ணுஷ்²ச விப்ராணாம் பரமா க³தி꞉ ||2-85-39

வேறு எவராலும் உன்னைக் கொல்ல முடியாது. ஓ! நிகும்பா, நானும், விஷ்ணுவும் பிராமணர்களின் பெரும்புகலிடம் என்பதால் நாங்கள் பிராமணர்களுக்கும், விப்ரர்களுக்கும் நன்மையைச் செய்வோம்” என்றான்.

ஸ ஏவ ஸர்வஷ²ஸ்த்ராணாமவத்⁴ய꞉ பாண்டு³நந்த³ன |
த்ரிதே³ஹோ(அ)திப்ரமாதீ² ச வரமத்தஷ்²ச தா³னவ꞉ ||2-85-40

ஓ! பாண்டுவின் மகனே, அந்தத் தானவனே பெருஞ்சக்திவாய்ந்தவனான இந்த நிகும்பன். வரத்தால் அடையப்பட்ட அவனது மூன்று உடல்களும் அதன்படியே அனைத்து வகை ஆயுதங்களாலும் வெல்லப்பட முடியாதவை

பா⁴னுமத்யாபஹரணே தே³ஹோ(அ)ஸ்யைகோ ஹதோ மயா |
அவத்⁴யம் ஷட்புரம் தே³ஹமித³மஸ்ய து³ராத்மன꞉ ||2-85-41

இவன் பானுமதியை அபகரித்துச் சென்ற போது நான் அவனுடைய உடல்களில் ஒன்றை அழித்தேன்; இவனுடைய மற்றொரு அழிவற்ற உடல் இதோ ஷட்புரத்தில் வாழ்கிறது,

தி³திம் ஷு²ஷ்²ரூஷதி த்வேகோ தே³ஹோ(அ)ஸ்ய தபஸான்வித꞉ |
அன்யஸ்து தே³ஹோ கோ⁴ரோ(அ)ஸ்ய யேனாவஸதி ஷட்புரம் ||2-85-42

தவச் சக்தியுடன் கூடிய மூன்றாவது உடல், {தன் அன்னையான} திதிக்குத் தொண்டாற்றுகிறது. ஓர் உடலால் அவன் எப்போதும் ஷட்புரத்தில் வாழ்கிறான்.

ஏதத்து ஸர்வமாக்²யாதம் நிகும்ப⁴சரிதம் மயா |
த்வரயாஸ்ய வதே⁴ வீர கதா² பஷ்²சாத்³ப⁴விஷ்யதி ||2-85-43

ஓ! வீரா, இவ்வாறே நான் நிகும்பனின் கதை முழுவதையும் உனக்குச் சொல்லிவிட்டேன்; இனி அவனுடைய அழிவுக்கு வழிவகுக்க வேண்டும்; அவனுடைய வரலாற்றில் எஞ்சியதைப் பின்னர்ச் சொல்கிறேன்” என்றான் {கிருஷ்ணன்}

தயோ꞉ கத²யதோரேவம் க்ருஷ்ணயோரஸுரஸ்ததா³ |
கு³ஹாம் ஷ²ட்புரஸஞ்ஜ்ஞாம் தாம் விவேஷ² ரணது³ர்ஜய꞉ ||2-85-44

ஓ! குருவின் வழித்தோன்றலே, அந்தக் கிருஷ்ணர்கள் இருவரும் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோது, போரில் வெல்லப்பட முடியாதவனான அந்த அசுரன் ஏற்கனவே சொல்லப்பட்ட ஷட்புரக் குகைக்குள் நுழைந்துவிட்டான்

அன்விஷ்ய தஸ்ய ப⁴க³வான்விவேஷ² மது⁴ஸூத³ன꞉ |
தாம் ஷட்புரகு³ஹாம் கோ⁴ராம் து³ர்த⁴ர்ஷாம் குருநந்த³ன ||2-85-45

தெய்வீகனான மதுசூதனன் அதைக் கண்டதும், அந்தப் பயங்கரம் நிறைந்த ஷட்புரக் குகைக்குள் அவனைத் தேடி நுழைந்தான்

சந்த்³ரஸூர்யப்ரபா⁴ஹீனாம் ஜ்வலந்தீம் ஸ்வேன தேஜஸா |
ஸுக²து³꞉கோ²ஷ்ணஷீ²தானி ப்ரயச்ச²ந்தீம் யதே²ப்ஸிதம் ||2-85-46

அது தன்னொளியால் ஒளியூட்டப்பட்டிருந்தது, சூரியனும், சந்திரனும் தங்கள் கதிர்களை அங்கே பொழியவில்லை. விரும்பியபடியே வெப்பம், குளிர், இன்பதுன்பங்களைக் கொடுக்கவல்லதாக அந்தக் குகை இருந்தது.

தத்ர ப்ரவிஷ்²ய ப⁴க³வானபஷ்²யத ஜனாதி⁴பான் |
யுயுதே⁴ ஸஹ கோ⁴ரேண நிகும்பே⁴ன ஜனாதி⁴ப ||2-85-47

தெய்வீகனான ஜனார்த்தனன் அந்தக் குகைக்குள் நுழைந்ததும், {ஏற்கனவே அடைக்கப்பட்டிருந்த} யாதவ மன்னர்களைக் கண்டான், பிறகு பயங்கரம் நிறைந்த நிகும்பனுடன் போரில் ஈடுபட்டான்

க்ருஷ்ணஸ்யானுப்ரவிஷ்டாஸ்து ப³லாத்³யா யாத³வாஸ்ததா³ |
ப்ரவிஷ்டாஷ்²ச ததா² ஸர்வே பாண்த³வாஸ்தே மஹாத்மன꞉ ||2-85-48

பலதேவனின் தலைமையில் இருந்த பிற யாதவர்களும், பாண்டவர்களும் சேர்ந்து கிருஷ்ணனின் அனுமதியின் பேரில் குகைக்குள் அவனைப் பின்தொடர்ந்து சென்றனர்

ஸமேதாஸ்து ப்ரவிஷ்டாஸ்தே க்ரூஷ்ணஸ்யானுமதேன வை |
யுயுதே⁴ ஸ து க்ருஷ்ணேன ரௌக்மிணேய꞉ ப்ரசோதி³த꞉ |
அனயத்³யாத³வான்ஸர்வான்யானயம் ப³த்³த⁴வான்புரா || 2-85-49

நிகும்பன் கிருஷ்ணனுடன் போரிடத் தொடங்கினான். ருக்மிணியின் மகன் {பிரத்யும்னன்}, தன் தந்தையின் {கிருஷ்ணனின்} விருப்பத்தின் பேரில் அந்தத் தானவனால் அங்கே அடைக்கப்பட்டிருந்த நண்பர்களை விடுவித்தான்.

தே முக்தா ரௌக்மிணேயேன ப்ராப்தா யத்ர ஜனார்த³ன꞉ |
ப்ரஹ்ருஷ்டமனஸ꞉ ஸர்வே நிகும்ப⁴வத⁴காங்க்ஷிண꞉ ||2-85-50

ருக்மிணியின் மகனால் விடுவிக்கப்பட்ட அவர்கள் நிகும்பன் கொல்லப்படுவதைக் காணும் நோக்குடன் மகிழ்ச்சியாக ஜனார்த்தனன் இருந்த இடத்திற்கு வந்தனர்.

ராஜானோ வீர முன்சேதி புன꞉ காமம் யதா²ப்³ருவன் |
முமோச சாத² தான்வீரோ ரௌக்மிணேய꞉ ப்ரதாபவான் ||2-85-51

அப்போது கிருஷ்ணன் மீண்டும், “ஓ! வீரா, உன்னால் அடைக்கப்பட்ட மன்னர்களையும் விடுவிப்பாயாக” என்றான். வீரனும், பலம்வாய்ந்தவனுமான ருக்மிணியின் மகன், இதைக் கேட்டு அவர்கள் அனைவரையும் விடுவித்தான்.

அதோ⁴முக²முகா²꞉ ஸர்வே ப³த்³த⁴மௌனா நராதி⁴பா꞉ |
லஜ்ஜயாபி⁴ப்லுதா விராஸ்தஸ்து²ர்நஷ்டஷ்²ரியஸ்தத்தா³ ||2-85-52

செழிப்பை இழந்திருந்த அந்த வீர மன்னர்கள், வெட்கத்தினால் எதுவும் சொல்லாதிருந்தனர். அவர்கள் முகம் கவிழ்ந்தவாறு அமைதியாக அமர்ந்திருந்தனர்.

நிகும்ப⁴மபி கோ³விந்த³꞉ ப்ரயதந்தம் ஜயம் ப்ரதி |
யோத⁴யாமாஸ ப⁴க³வான்கோ⁴ரமாத்மரிபும் ஹரி꞉ ||2-85-53

கோவிந்தன், வெற்றிக்காக மிகச் சிறப்பாக முயன்று கொண்டிருந்தவனும், பயங்கரப் பகைவனுமான நிகும்பனுடன் போரிட்டுக் கொண்டிருந்தான்.

பரிகே⁴ணாஹத꞉ க்ருஷ்ணோ நிகும்பே⁴ன ப்⁴ருஷ²ம் விபோ⁴ |
க³த³யா சாபி க்ருஷ்ணேன நிகும்ப⁴ஸ்தாடி³தோ ப்⁴ருஷ²ம் ||2-85-54

ஓ! தலைவா, அப்போது கிருஷ்ணன் நிகும்பனின் பரிகத்தால் தாக்கப்பட்டான், நிகும்பனும் கிருஷ்ணனின் கதாயுதத்தால் தாக்கப்பட்டான்

தாவுபௌ⁴ ப்ரோஹமாபன்னௌ ஸுப்ரஹாரஹதௌ ததா³ |
தத꞉ ப்ரவ்யதி²தாந்த்³ருஷ்ட்வா பாண்ட³வாம்ஷ்²சாத² யாத³வான் ||2-85-55

ஜேபுர்முனிக³ணாஸ்தத்ர க்ருஷ்ணஸ்ய ஹிதகாம்யயா |
துஷ்டுவுஷ்²ச மஹாத்மானம் வேத³ப்ரோக்தைஸ்ததா² ஸ்தவை꞉ ||2-85-56

இவ்வாறு ஒருவரையொருவர் கடுமையாகத் தாக்கிக் கொண்ட அவர்கள் இருவரும் தங்கள் நினைவை இழந்தனர். இதனால் பாண்டவர்களும், யாதவர்களும் துன்புறுவதைக் கண்ட முனிவர்கள், கிருஷ்ணனுக்கு நன்மை செய்ய விரும்பி, வேதங்களில் விதிக்கப்பட்ட துதிகளால் அவனைத் துதித்து மந்திரங்களை உரைக்கத் தொடங்கினர்.(55,56)

தத꞉ ப்ரத்யாக³தப்ராணோ ப⁴க³வான்கேஷ²வஸ்ததா³ |
தா³னவஷ்²ச புனர்வீராவுத்³யதௌ ஸமரம் ப்ரதி ||2-85-57

அதன் பிறகு நினைவு மீண்டவர்களான அந்தத் தானவனும், கிருஷ்ணனும் மீண்டும் தங்களைப் போரில் ஈடுபடுத்திக் கொண்டனர்

வ்ருஷபா⁴விவ நர்த³ந்தௌ க³ஜாவிவ ச பா⁴ரத |
ஷா²லாவ்ருகாவிவ க்ருத்³தௌ⁴ ப்ரஹரந்தௌ ரணோத்கடௌ ||2-85-58

ஓ! பரதனின் வழித்தோன்றலே, போரில் பயங்கரர்களான அவ்விரு வீரர்களும் மதங்கொண்ட இரண்டு காளைகளையோ, யானைகளையோ, சிறுத்தைகளையோ போல ஒருவரையொருவர் தாக்கினர்.

அத² க்ருஷ்ணம் ததோ³வாச ந்ருபம் வாக³ஷ²ரீரிணீ |
சக்ரேண ஷ²மயஸ்வைனம் தே³வப்³ராஹ்மணகண்டகம் ||2-85-59

அப்போது, ஓ! மன்னா, புலப்படாத குரலொன்று {ஓர் அசரீரி}, கிருஷ்ணனிடம், “ஓ! பெரும்பலம் கொண்டோனே, பிராமணர்களின் பாதையில் முள்ளாக இருக்கும் இவனை உன் சக்கரத்தால் கொன்று,

இதி ஹோவாச ப⁴க³வாந்தே³வோ பி³ல்வோத³கேஷ்²வர꞉ |
த⁴ர்மம் யஷ²ஷ்²ச விபுலம் ப்ராப்னுஹி த்வம் மஹாப³ல ||2-85-60

பெரும்புகழையும் அறத்தையும் ஈட்டுமாறு தலைவன் வில்வோதகேஷ்வரன் {சிவன்} உனக்கு ஆணையிட்டிருக்கிறான்” என்றது.

ததே²த்யுக்த்வா நமஸ்க்ருத்வா லோகநாத²꞉ ஸதாம் க³தி꞉ |
ஸுத³ர்ஷ²னம் முமோசாத² சக்ரம் தை³த்யகுலாந்தகம் ||2-85-61

நல்லோரின் புகலிடமும், உலகைப் பாதுகாப்பவனுமான ஹரி, இதைக் கேட்டு, “அவ்வாறே ஆகட்டும்” என்று சொன்னான். பிறகு மஹாதேவனை வணங்கிவிட்டு, தைத்திய குலத்தை அழிக்கும் சுதர்சன சக்கரத்தை ஏவினான்

தன்னிகும்ப⁴ஸ்ய சிச்சே²த³ ஷி²ர꞉ ப்ரவரகுண்ட³லம் |
நாராயணபு⁴ஜோத்ஸ்ருஷ்டம் ஸூர்யமண்ட³லவர்சஸம் ||2-85-62

சூரிய வட்டிலைப் போன்று பிரகாசித்த அந்தச் சக்கரம், நாராயணனின் கரத்தில் இருந்து விடுபட்டு, மிக அழகிய காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த நிகும்பனின் தலையைத் துண்டித்தது.

உத்பபாத ஷி²ரஸ்தஸ்ய பூ⁴மௌ ஜ்வலிதகுண்ட³லம் |
மேக⁴மத்தோ கி³ரே꞉ ஷ்²ருங்கா³ன்மயூர இவ பூ⁴தலே ||2-85-63

{மேகங்களைக் கண்ட ஆவலால்} மலைமுகட்டில் இருந்து பூமியில் விழும் மயிலைப் போலவே காது குண்டலங்களால் அழகூட்டப்பட்ட அவனது தலையும் பூமியில் விழுந்தது.

நிகும்பே⁴ நிஹதே தஸ்மிந்தே³வோ பி³ல்வோத³கேஷ்²வர꞉ |
துதோஷ ச நரவ்யாக்⁴ர ஜக³த்த்ராஸகரோ விபு⁴꞉ ||2-85-64

ஓ! மன்னா, உலகை அச்சுறுத்திக் கொண்டிருந்த பெரும்பலம்வாய்ந்த நிகும்பன் கொல்லப்பட்டதில் தலைவன் வில்வோதகேஷ்வரன் நிறைவடைந்தான்.

பபாத புஷ்பவ்ருஷ்டிஷ்²ச ஷ²க்ரஸ்ருஷ்டா நப⁴ஸ்தலாத் |
தே³வது³ந்து³ப⁴யஷ்²சைவ ப்ரணேது³ரரிநாஷ²னே ||2-85-65

ஓ! பகைவரைக் கொல்பவனே {ஜனமேஜயா}, இந்திரனால் பொழியப்பட்ட மலர்மாரி வானத்தில் இருந்து பொழிந்தது, தேவதுந்துபிகள் முழங்கின

நனந்த³ ச ஜக³த்க்ருத்ஸ்னம் முனயஷ்²ச விஷே²ஷத꞉ |
தை³த்யகன்யாஷ்²ச ப⁴க³வான்யது³ப்⁴ய꞉ ஷ²தஷோ² த³தௌ³ ||2-85-66

மொத்த உலகமும், குறிப்பாக முனிவர்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். அதன்பிறகு, கதனின் அண்ணனான தலைவன் கேசவன், நூற்றுக்கணக்கான தைத்தியக் கன்னியரை மகிழ்ச்சியுடன் யாதவர்களுக்குக் கொடுத்தான்

க்ஷத்ரியாணாம் ச ப⁴க³வான்ஸாந்த்வயித்வா புன꞉ புன꞉ |
ரத்னானி ச விசித்ராணி வாஸாம்ஸி ப்ரவராணி ச ||2-85-67

க்ஷத்திரியர்களை மீண்டும் மீண்டும் தேற்றி விலைமதிப்புமிக்க ரத்தினங்களையும், பல்வேறு ஆடைகளையும் அவர்களுக்குக் கொடுத்தான்.

ரதா²னாம் வாஜியுக்தானாம் ஷ²ட்ஸஹஸ்ராணி கேஷ²வ꞉ |
அத³தா³த்பாண்ட³வேப்⁴யஷ்²ச ப்ரீதாத்மா க³த³பூர்வஜ꞉ ||2-85-68

அவன், பாண்டவர்களுக்குக் குதிரைகளுடன் கூடிய ஆறாயிரம் தேர்களைக் கொடுத்தான்

ததே³வ சாத² ப்ரவரம் ஷட்புரம் புரவர்த⁴ன꞉ |
த்³விஜாய ப்³ரஹ்மத³த்தாய த³தௌ³ தார்க்ஷ்யவரத்⁴வஜ꞉ ||2-85-69

நகரங்களை எப்போதும் பெருகச் செய்பவனான அந்தத் தார்க்ஷியவரத்வஜன் {கருடனை வாகனமாகக் கொண்ட கிருஷ்ணன்}, பிராமணரான பிரம்மதத்தருக்கு ஷட்புர நகரத்தைக் கொடுத்தான்.

ஸத்ரே ஸம்அப்தே ச ததா³ ஷ²ங்க²சக்ரக³தா³த⁴ர꞉ |
விஸர்ஜயித்வா தத்க்ஷத்ரம் பாண்ட³வாம்ஷ்²ச மஹாப³ல꞉ ||2-85-70

பெருஞ்சக்திவாய்ந்தவனும், சங்கு, சக்கர, கதாதாரியுமான கோவிந்தன், பிரம்மதத்தரின் யஜ்ஞம் நிறைவடைந்தபிறகு, பாண்டவர்களுக்கும், க்ஷத்திரியர்களுக்கும் விடைகொடுத்தனுப்பி,

பி³ல்வோத³கேஷ்²வரஸ்யாத² ஸமாஜமகரோத்ப்ரபு⁴꞉ |
மாம்ஸரூபஸமாகீர்ணம் ப³ஹ்வன்னம் வ்யஞ்ஜனாகுலம் ||2-85-71

வில்வோதகேஷ்வரன் முன்பு போதுமான அரிசி, குழம்பு, இறைச்சி, பருப்பு ஆகியவற்றைப் படைத்துப் பெருவிழா எடுத்தான்.

நியுத்³த⁴குஷ²லான்மல்லாந்தே³வோ மல்லப்ரியஸ்ததா³ |
யோத⁴யித்வா த³தௌ³ பூ⁴ரி வித்தம் வஸ்த்ராணி சாத்மவான் ||2-85-72

மற்போரை விரும்புபவனும், தற்கட்டுப்பாட்டைக் கொண்டவனுமான தலைவன் ஹரி {கிருஷ்ணன்}, அவ்விழாவில் திறன்மிகு மற்போர்வீரர்களைக் கொண்டு விளையாடச் செய்து அவர்களுக்கு {அந்த மற்போர் வீரர்களுக்குச்} செல்வங்களையும், ஆடைகளையும் கொடுத்தான்.

மாதாபித்ருப்⁴யாம் ஸஹிதோ யது³பி⁴ஷ்²ச மஹாப³ல꞉ |
அபி⁴வாத்³ய ப்³ரஹ்மத³த்தம் யயௌ த்³வாரவதீம் புரீம் ||2-85-73

அதன்பிறகு பிரம்மதத்தரை வணங்கிவிட்டு, தன் தந்தை, தாய் ஆகியோருடனும், யாதவர்கள் பிறருடனும் துவாராவதி நகருக்குப் புறப்பட்டுச் சென்றான்.

ஸ விவேஷ² புரீம் ரம்யாம் ஹ்ருஷ்டபுஷ்டஜனாகுலாம் |
புஷ்பசித்ரபதா²ம் வீரோ வந்த்³யமானோ நரை꞉ பதி² ||2-85-74

அந்த வீரன் {கிருஷ்ணன்}, தான் சென்ற வழியெங்கும் மக்களால் வழிபடப்பட்டவனாக, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வீதிகளைக் கொண்டதும், மனநிறைவுடன் கூடிய அழகிய மக்கள் நிறைந்ததுமான அழகிய நகருக்குள் நுழைந்தான்

இமம் ய꞉ ஷட்புரவத⁴ம் விஜயம் சக்ரபாணின꞉ |
ஷ்²ருணுயாத்³வா படே²த்³வாபி யுத்³தே⁴ ஜயமவாப்னுயாத் ||2-85-75

சக்கரபாணியால் {கிருஷ்ணனால்} ஷட்புரம் வெல்லப்பட்டதைக் கேட்பவர்களும், படிப்பவர்களும் போரில் வெற்றியை அடைவார்கள்

அபுத்ரோ லப⁴தே புத்ரமத⁴னோ லப⁴தே த⁴னம் |
வ்யாதி⁴தோ முச்யதே ரோகீ³ ப³த்³த⁴ஷ்²சாப்யத² ப³ந்த⁴னாத் ||2-85-76

மகனற்றவன் இதைக் கேட்பதனாலும், படிப்பதனாலும் மகனைப் பெறுவான், வறியவன் செல்வத்தை அடைவான், பிணியுற்றவன் பிணிகளில் இருந்து குணமடைவான், கட்டுண்டவன் தளைகளில் இருந்து விடுபடுவான்.

இத³ம் பும்ஸவனம் ப்ரோக்தம் க³ர்பா⁴தா³னம் ச பா⁴ரத |
ஷ்²ராத்³தே⁴ஷு படி²தம் ஸம்யக³க்ஷய்யகரணம் ஸ்ம்ருதம் ||2-85-77

புஞ்சவனம்[ஒரு தாய் கருவுற்றிருப்பதற்கான முதல் அறிகுறிகளைக் கண்டதும் வீட்டில் நடைபெறும் அறச்சடங்கு இஃது” ], கர்ப்பதானம்[“கருவுறுவதற்கு முன் செய்யப்படும் சடங்கு”], சிராத்தம் ஆகியவற்றில் இந்தக் கதை சொல்லப்பட்டால் அது முழுமையான வெற்றியைக் கொண்டு வரும் {அழிவற்ற பலனை கொடுக்கும்}.

இத³மமரவரஸ்ய பா⁴ரதே
ப்ரதி²தப³லஸ்ய ஜயம் மஹாத்மன꞉ |
ஸததமித³ம் ஹி ய꞉ படே²ன்னர꞉
ஸுக³திமிதோ வ்ரஜதே க³தஜ்வர꞉ ||2 85-78

ஓ! ஜனமேஜயா, ஒப்பற்ற பலம் கொண்டவனும், தேவர்களில் முதன்மையானவனுமான அந்த உயரான்ம தேவனின் {கிருஷ்ணனின்} வெற்றிக் கதையை எப்போதும் படிக்கும் மனிதன், தொல்லைகளில் இருந்து விடுபட்டு, இங்கிருந்து மிகச் சிறந்த உலகத்தை அடைவான்

மணிகனகவிசித்ரபாணிபாதோ³
நிரதிஷ²யார்ககு³ணோரிஹாதி³நாத²꞉ |
சதுருத³தி⁴ஷ²யஷ்²சதுர்விதா⁴த்மா
ஜயதி ஜக³த்புருஷ꞉ ஸஹஸ்ரநாமா ||2-85-79

ரத்தினங்களாலும், தங்கத்தாலும் அலங்கரிக்கப்பட்ட உள்ளங்கைகளையும், பாதங்களையும் கொண்டவனும், எரியும் பெருஞ்சூரியனைப் போலப் பிரகாசிப்பவனும், பகைவரை அடக்குபவனும், முதன்மையான தலைவனும், நான்கு கடல்களையும் படுக்கையாக்கிக் கிடப்பவனும், நான்கு ஆத்மாக்களைக் கொண்டவனும்[வாசுதேவன், சங்கர்ஷணன், பிரத்யும்னன், அநிருத்தன் என்ற நான்கு ஆன்மாக்கள்.], ஆயிரம் பெயர்களை {சஹஸ்ரநாமங்களைக்} கொண்டவனுமான புருஷன் {ஹரி}, எப்போதும் சிறந்த இடத்திலேயே {வெற்றியாளனாக} வசிக்கிறான்” என்றார் {வைசம்பாயனர்}

இதி ஷ்²ரீமஹாப்⁴ரதே கி²லேஷு ஹரிவம்ஷே² விஷ்ணுபர்வணி
ஷட்புரவதோ⁴ நாம பஞ்சாஷீ²திதமோ(அ)த்⁴யாய꞉

————–—————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாஸ பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விஷ்ணு பர்வம்–அத்யாயம் – 84–(ஸ்ரீ அநிருத்த விக்ரம ராஜ்ஞாம் பந்தநம்)-ஸ்ரீ கிருஷ்ணாசுரப் போர் | —

January 31, 2021

யாதவப் படையின் மகரவியூகம்; தானவர் நகர முற்றுகை; பிரத்யும்னன் செய்த ஏற்பாடு; ஷட்புரத்துக்குள் நுழைதல்; பிரம்மதத்தரைத் தேற்றிய பிரத்யும்னன்–

வைஷ²ம்பாயந உவாச
முஹூர்தாப்⁴யுதி³தே ஸூர்யே ஜநசக்ஷுஷி நிர்மலே |
ப³ல꞉ க்ருஷ்ண꞉ ஸாத்யகிஷ்²ச தார்க்ஷ்யமாருருஹுஸ்ததா³ ||2-84-1

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “மக்களின் பார்வைக்குள் தெளிந்த சூரியன் வந்த கணத்திற்குள் பலதேவன், கிருஷ்ணன், சாத்யகி ஆகியோர் தார்க்ஷியனின் {கருடனின்} முதுகில் மகிழ்ச்சியுடன் ஏறினர்.

ப³த்³த⁴கோ³தா⁴ங்கு³லித்ராணா த³ம்ஷி²தா யுத்³த⁴காங்க்ஷிண꞉ |
பி³ல்வோத³கேஷ்²வரம் தே³வம் நமஸ்க்ருத்ய ஸுரோத்தமம் ||2-84-2

போரிடும் விருப்பம் உள்ள அந்த வீரர்கள் {மூவரும்}, உடும்புத் தோலுறைகள், கவசம், விரலுறைகள் ஆகியவற்றைத் தரித்துக் கொண்டு வில்வ இலைகளுக்கும், நீருக்கும் தலைவனான {வில்வோதகனான} சிவ தேவனை வழிபட்டனர்.

ஆவர்தயா ஜலே ஸ்நாத்வா ருத்³ரேண வரத³த்தயா |
க³ங்கா³யா꞉ குருஷா²ர்தூ³ல ருத்³ரவாக்யேந புண்யயா ||2-84-3

ஓ! குரு குலப் புலியே {ஜனமேஜயனே}, ருத்திரனிடம் வரமும், அவனது சொற்களால் கங்கையைப் போன்ற புனிதமும் பெற்ற ஆவர்த்தகையெனும் புனித ஆற்றின் நீரில் அவர்கள் நீராடினர்.

ப்ரத்³யும்நமக்³ரே ஸைந்யஸ்ய வியதி ஸ்த்²பாய மாநத³꞉ |
ரக்ஷார்த²ம் யஜ்ஞவாடஸ்ய பாண்ட³வாந்விநியுஜ்ய ச ||2-84-4

கௌரவங்களை அளிப்பவனும், நல்லோரின் புகலிடமுமான தலைவன் கிருஷ்ணன், அந்த நேரத்தில் படையின் முன்னணியில் பிரத்யும்னனை நிறுத்தி, பாண்டவர்களை யஜ்ஞத்திற்குப் பொறுப்பாக்கி {வேள்வியைக் காப்பதில் அவர்களை ஈடுபடுத்தி}

ஷே²ஷாம் ஸேநாம் கு³ஹாத்³வாரி ப⁴க³வாந்விநியுஜ்ய ச |
ஜயந்தமத² ஸஸ்மார ப்ரவரம் ச ஸதாம் க³தி꞉ ||2-84-5

எஞ்சிய படைவீரர்களைக் குகையின் வாயிலில் நிறுத்திவிட்டு, ஜயந்தனையும், பிரவரனையும் மனத்தில் நினைத்தான்

தாவாபேததுரேவாத² ஸ்வயம் சாபஷ்²யதாம் ததா² |
வியத்யேவ நியுக்தௌ தௌ ப்ரத்³யும்ந இவ பா⁴ரத ||2-84-6

ஓ! பரதனின் வழித்தோன்றலே, {அவன் அவ்வாறு} நினைத்த உடனேயே அவர்களும் அங்கே வந்தனர். அந்தத் தலைவனால் {கிருஷ்ணனால்} மட்டுமே அவர்களைக் காண முடிந்தது, அவர்கள் பிரத்யும்னனுக்கு மேல் {ஆகாயத்தில்} நிறுத்தப்பட்டனர்.

தத꞉ க்ருஷ்ணஸ்ய வசநாதா³ஹதோ ரணது³ந்து³பி⁴꞉ |
ஜலஜா முரஜாஷ்²சைவ வாத்³யாந்யேவாபராணி ச ||2-84-7

கிருஷ்ணனின் ஆணையின் பேரில், போருக்கான பேரிகையும், ஜலஜம் {சங்கு}, முரஜம் {முரசு} ஆகியனவும், பிற இசைக் கருவிகளும் முழக்கப்பட்டன.

மகரோ ரசிதோ வ்யூஹ꞉ ஸாம்பே³ந ச க³தே³ந ச |
ஸாரணஷ்²சோத்³த⁴வஷ்²சைவ போ⁴ஜோ வைதரணஸ்ததா² ||2-84-8

ஓ!பரதனின் வழித்தோன்றலே, சாம்பனும், கதனும் படைவீரர்களை மகர வடிவத்தில் {மகர வியூகத்தில்} அணிவகுக்கச் செய்தனர். சாரணன், உத்தவன், போஜ குலத்தைச் சேர்ந்த வைதரணன்,

அநாத்⁴ருஷ்டிஷ்²ச த⁴ர்மாத்மா ப்ருது²ர்விப்ருது²ரேவ ச |
க்ருதவர்மா ச த³ம்ஷ்ட்ரஷ்²ச நிசக்ஷுரரிமர்த³ந꞉ ||2-84-9

அறம்சார்ந்தவனான அனாதிருஷ்டி, விப்ருது, பிருது, கிருதவர்மன், தங்ஷ்டரன், பகைவரைக் கலங்கடிப்பவனான நிசக்ஷு,

ஸநத்குமாரோ த⁴ர்மாத்மா சாருதே³ஷ்ணஷ்²ச பா⁴ரத |
அநிருத்³த⁴ஸஹாயௌ தௌ ப்ருஷ்டா²நீகம் ரரக்ஷது꞉ ||2-84-10

அறம் சார்ந்த சனத்குமாரன், சாருதேஷ்ணன் ஆகியோர் அனிருத்தனுக்கு உதவத் தொடங்கி, படையின் பின் பகுதியைப் பாதுகாத்தனர்.

ஷே²ஷா யாத³வஸேநா து வ்யூஹமத்⁴யே வ்யவஸ்தி²தா |
ரதை²ரஷ்²வைர்நரைர்நாகை³ராகுலா குலவர்த⁴ந ||2-84-11

ஓ! குலத்திற்குப் புகழ் சேர்ப்பவனே {ஜனமேஜயனே}, தேர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றையும், மனிதர்களையும் உள்ளடக்கிய {ரத கஜ துரகப் பதாதி கலந்த} யாதவப் படையின் எஞ்சிய பகுதி போர் வியூகத்தின் மத்தியில் நின்றிருந்தது.

ஷட்புராத³பி நிஷ்க்ராந்தா தா³நவா யுத்³த⁴து³ர்மதா³꞉ |
ஆருஹ்ய மேக⁴நாதா³ம்ஷ்²ச க³ர்த³பா⁴நபி ஹஸ்திந꞉ ||2-84-12

தானவர்களும், மேகங்களின் இடியொலியைப் போல முழங்கிக் கொண்டு, கழுதைகள், யானைகள் ஆகியவற்றில் ஏறி ஷட்புரத்தைவிட்டு வெளியே வந்தனர்.

மகராஞ்சி²ஷு²மாராம்ஷ்²ச த்³ருதாநபி ச பா⁴ரத |
மஹிஷாநபி க²ட்³கா³ம்ஷ்²ச உஷ்ட்ராநபி ச கச்ச²பாந் ||2-84-13

அவர்களில் சிலர் முதலைகள், முயல்கள், குதிரைகள், எருமைகள், சிங்கங்கள், ஆமைகள் ஆகியவற்றில் வந்தனர்.

ஏதைரேவ ரதை²ர்யுக்தா விவிதா⁴யுத⁴பாணய꞉ |
கிரீடாபீட³முகுடைரங்க³தை³ரபி மண்டி³தா꞉ ||2-84-14

பல்வேறு ஆயுதங்களைத் தரித்தவர்களும், கிரீடம், ஆபீடம், மகுடம், அங்கதம் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டவர்களும், பயங்கரர்களுமான அவர்களின் தேர்கள் பலவும் அவ்விலங்குகளாலேயே இழுக்கப்பட்டன.

நாநர்த³மாநைர்விவிதை⁴ஸ்தூர்யைர்நேமிஸ்வநாகுலை꞉ |
ப்ரத்⁴மாயமாநை꞉ ஷ²ங்கை²ஷ்²ச மஹாம்பு³த³ஸமஸ்வநை꞉ ||2-84-15

ஓ! மன்னா, தேவர்களின் தலைவன் தேவ படைக்குத் தலைமையேற்று வெளிப்படுவதைப் போலவே, நிகும்பனும் அசுரப் படைக்குத் தலைமையேற்று

தாஸாமஸுரஸேநாநாமுத்³யதாநாம் ஜநேஷ்²வர |
நிகும்போ⁴ நிர்யயாவக்³ரே தே³வாநாமிவ வாஸவ꞉ ||2-84-16

மேகவொலி போன்ற பேரிகை முழக்கத்தையும், தேர்ச்சக்கரங்களின் சடசடப்பு ஒலிகளையும் உண்டாக்கியவாறு சங்குகளையும் முழக்கிக் கொண்டு வெளிப்பட்டான்

பூ⁴மிம் த்³யாம் ச வவ்ருதி⁴ரே தா³நவாஸ்தே ப³லோத்கடா꞉ |
நத³ந்தோ விவிதா⁴ந்நாதா³ந்க்ஷ்வேட³ந்தஷ்²ச புந꞉ புந꞉ ||2-84-17

அந்தப் பெருஞ்சக்திவாய்ந்த தானவர்கள், பல்வேறு வகைகளில் முழக்கங்களையும், சிங்க முழக்கங்களையும் செய்து, வானத்தையும், பூமியையும் அவ்வொலியால் நிறைத்தனர்.

ராஜஸேநாபி ஸம்யத்தா சேதி³ராஜபுரோக³மா |
அஸுராணாம் ஸஹாயார்த²ம் நிஷ்²சிதா ஜநமேஜய ||2-84-18

ஓ! ஜனமேஜயா, சேதி நாட்டுப் படைவீரர்களும், பிற மன்னர்களின் படைவீரர்களும் பெருங்கவனத்துடன் அசுரர்களுக்குத் துணைபுரிந்து கொண்டிருந்தனர்

து³ர்யோத⁴நம் ப்⁴ராத்ருஷ²தம் சேதி³ராஜாநுஜாக்³ரக³ம் |
ஸ்தி²தம் ரதை²ர்நரவ்யாக்⁴ர க³ந்த⁴ர்வநக³ரோபமை꞉ ||2-84-19

ஓ! வீர மன்னா, துரியோதனனால் தலைமை தாங்கப்பட்ட நூறு சகோதரர்களும், பெருஞ்சடசடப்பொலியை உண்டாக்குபவையும், கந்தர்வ நகரத்தைப் போன்றவையும் {போன்று பெரியவையும்}, வேகமாகச் செல்லக்கூடியவையுமான தங்கள் தேர்களில் சேதி மன்னன் சிசுபாலனின் தொண்டர்களுக்கு மத்தியில் நின்று கொண்டிருந்தனர்.

கடி²நா நாதி³நோ வீரா த்³ருபத³ஸ்யந்த³நாஸ்ததா² |
ருக்மீ சைவாஹ்வ்ருதிஷ்²சைவ தஸ்த²துர்நிஷ்²சிதௌ ரணே |
தாலவ்ருக்ஷப்ரதீகாஷே² து⁴ந்வாநௌ த⁴நுஷீ ஷு²பே⁴ || 2-84-20

ருக்மியும், ஆஹ்விருதியும் பனை மரங்களைப் போன்றிருந்த தங்கள் அழகிய விற்கள் இரண்டையும் அசைத்துக் கொண்டு தங்கள் மனத்தைப் போருக்கு ஆயத்தம் செய்து கொண்டிருந்தனர்

ஷ²ல்யஷ்²ச ஷ²குநிஷ்²சோபௌ⁴ ப⁴க³த³த்தஷ்²ச பார்தி²வ꞉ |
ஜராஸம்த⁴ஸ்த்ரிக³ர்தஷ்²ச விராடஷ்²ச ஸஹோத்தர꞉ ||2-84-21

யுத்³தா⁴ர்த²முத்³யதா வீரா நிகும்பா⁴த்³யா ஜயைஷிண꞉ |
யுயுத்ஸமாநா யது³பி⁴ர்தே³வைரிவ மஹாஸுரா꞉ ||2-84-22

யாதவர்களுடன் போரிட்டு வெற்றியடையும் நோக்குடன் மன்னன் பகதத்தன், சல்யன், சகுனி, ஜராசந்தன், திரிகர்த்தன், விராடன், உத்தரன் ஆகியோரும், நிகும்பனின் தலைமையிலான அசுரர்களும் போருக்குத் தயாராகிக் கொண்டிருந்தனர்.(21,22)

ததோ நிகும்ப⁴꞉ ஸமரே ஷ²ரைராஷீ²விஷோபமை꞉ |
மமர்த³ ஸமரே ஸேநாம் பை⁴மாநாம் பீ⁴மத³ர்ஷ²நாம் ||2-84-23

போரில் நிகும்பன் பாம்புகளைப் போன்ற கணைகளால் பைமர்களின் பயங்கரப் படையைத் தாக்கத் தொடங்கிய போது, யது படையின் தலைவனான ஆனாதிருஷ்டியால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை

ஸேநாபதிரநாத்⁴ருஷ்டிர்மம்ருஷே தத்ர யாத³வ꞉ |
மமர்த³ கோ⁴ரைர்பா³ணௌகை⁴ஷ்²சித்ரபுங்கை²꞉ ஷி²லாஷி²தை꞉ ||2-84-24

அவனும் இறகுகளால் அலங்கரிக்கப்பட்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான கணைகளால் பகைவரின் படையினரைக் கொல்லத் தொடங்கினான்

ந ரதோ²(அ)ஸுரமுக்²யஸ்ய த³த்³ருஷே² ந ச வாஜிந꞉ |
ந த்⁴வஜோ ந நிகும்ப⁴ஸ்து ஸர்வே பா³ணாபி⁴ஸம்வ்ருதா꞉ ||2-84-25

கணைகளால் அனைத்தும் மறைக்கப்பட்டிருந்த நேரத்தில் நிகும்பனும் புலப்படவில்லை, அவனது தேரும், கொடிமரமும், குதிரைகளும் புலப்படவில்லை.

ஸ பரீத்ய ததோ வீரோ நிகும்போ⁴ மாயிநாம் வர꞉ |
அஸ்தம்ப⁴யத³நாத்⁴ருஷ்டிம் மாயயா பை⁴மஸத்தமம் ||2-84-26

மாய சக்தி படைத்தோரில் முதன்மை வீரனான நிகும்பன் இதைக் கண்டு கோபத்தால் நிறைந்தான். அவன் தன் மாய சக்திகளின் மூலம் பைமத் தலைவன் ஆனாதிருஷ்டியைக் கலங்கடித்தான்

ஸ்தம்ப⁴யித்வாநயத்³வீரம் கு³ஹாம் ஷட்புரஸம்ஜ்ஞிதாம் |
ருத்³த்⁴வா சாப்⁴யக³மத்³வீரோ மாயாப³லமுபாஷ்²ரித꞉ ||2-84-27

வீரமிக்க நிகும்பன், தன் மாயா சக்திகளைப் பயன்படுத்தி ஆனாதிருஷ்டியை மயக்கமடையச் செய்து, ஷட்புரம் என்ற பெயரைக் கொண்ட குகைக்கு அவனைக் கொண்டு சென்று அங்கே அவனைச் சிறையிலடைத்தான். மீண்டும் போர்க்களத்திற்குத் திரும்பிய அவன்

புநரேவ நிகும்ப⁴ஸ்து க்ருதவர்மாணமாஹவே |
அநயச்சாருதே³ஷ்நம் ச போ⁴ஜம் வைதரணம் ததா² ||2-84-28

ஸநத்குமாரம்ருக்ஷம் ச ததை²வ நிஷ²டோ²ல்குலௌ |
ப³ஹூம்ஷ்²சைவாபராந்போ⁴ஜாந்மாயாப³லஸமாஷ்²ரித꞉ ||2-84-29

தன் மாயா சக்திகளைப் பயன்படுத்தி, கிருதவர்மன், சாருதேஷ்ணன், போஜகுலத்தின் வைதர்ணன், சனத்குமாரன், ஜாம்பவதியின் மகனான ருக்ஷன், {பலராமனின் மகன்களான} நிசடன், உல்முகன் ஆகியோரையும், இன்னும் எண்ணற்ற யாதவர்கள் பிறரையும் அங்கே {அந்தக் குகைக்குக்} கொண்டு சென்றான்.(28,29)

ந தஸ்ய த³த்³ருஷே² தே³ஹோ மாயாச்ச²ந்நோ ஜநேஷ்²வர |
நயதோ யாத³வாந்கோ⁴ராந்கு³ஹாம் ஷட்புரஸம்ஜ்ஞிதாம் ||2-84-30

ஓ! மன்னா, அவன் ஷட்புரத்தின் பயங்கரக் குகைக்கு யாதவர்களைக் கொண்டு சென்ற போது, தன்னை எவராலும் காண முடியாத படிக்கு மாயாசக்தியால் மறைத்துக் கொண்டான்.

தத்³த்³ருஷ்ட்வா கத³நம் கோ⁴ரம் பை⁴மாநாம் ப⁴யவர்த⁴ந꞉ |
சுகோப ப⁴க³வாந்க்ருஷ்ணோ ப³ல꞉ ஸத்யக ஏவ ச ||2-84-31

பைமர்களின் பயங்கரப் படுகொலையைக் கண்ட தலைவன் கிருஷ்ணன், பலதேவன், சாத்யகி ஆகியோர் கோபமடைந்தனர்,

ஸவிஷே²ஷம் யதா²காம꞉ ஸாம்ப³ஷ்²ச பரவீரஹா |
அநிருத்³த⁴ஷ்²ச து³ர்த⁴ர்ஷோ பை⁴மாஷ்²ச ப³ஹவோ(அ)பரே ||2-84-32

பகை வீரர்களைக் கொல்பவனான சாம்பன், தடுக்கப்பட முடியாதவனான அனிருத்தன் ஆகியோரும், எண்ணற்ற பைமர்கள் பிறரும், குறிப்பாகப் பிரத்யும்னனும் பெருங்கோபத்தில் நிறைந்தனர்.

தத꞉ ஷா²ர்ங்கா³யுத⁴꞉ ஷா²ர்ங்க³ம் க்ருத்வா ஸஜ்யம் நரேஷ்²வர |
தா³நவேஷு ப்ரவ்ருத்தேஷு த்ருணேஷ்விவ ஹுதாஷ²ந꞉ ||2-84-33

அப்போது, ஓ! மன்னா, சாரங்கபாணி (கிருஷ்ணன்), தன் சாரங்க வில்லில் நாண் பூட்டிக் கணைகளை ஏவியவாறே நெருப்பின் தேவன் {அக்னி} புற்களில் திரிவதைப் போல அந்தத் தானவர்களின் மத்தியில் திரிந்தான்.

தம் த்³ரூஷ்ட்வா தா³நவா தே³வமபி⁴து³த்³ருவுரீஷ்²வரம் |
ஷ²லபா⁴꞉ காலபாஷா²ர்தா꞉ ப்ரதீ³ப்தமிவ பாவகம் ||2-84-34

தானவர்கள், எரியும் நெருப்பை நோக்கி விரையும் விட்டில் பூச்சிகளைப் போல யமனின் பாசக்கயிற்றால் இழுக்கப்பட்டவர்களாக அந்தப் பிரகாசமிக்கத் தேவனை நோக்கி ஓடினர்.

ஸமுத்ஸ்ருஜ்ய ஷ²தக்⁴நீஷ்²ச பரிகா⁴ம்ஷ்²ச ஸஹஸ்ரஷ²꞉ |
ஷூ²லாநி சாக்³நிதுல்யாநி ப்ரதீ³ப்தாம்ஷ்²ச பரஷ்²வதா⁴ந் ||2-84-35

பர்வதாக்³ராணி வ்ருக்ஷாம்ஷ்²ச கோ⁴ராஷ்²ச விபுலா꞉ ஷி²லா꞉ |
உத்க்ஷிப்ய ச க³ஜாந்மத்தாந்ரதா²நபி ஹயாநபி ||2-84-36

அவர்கள், ஆயிரக்கணக்கான சதக்னிகள், பரிகங்கள், நெருப்பைக் கக்கும் சூலங்கள், எரியும் கோடரிகள், பயங்கரப் பாறைகள், பெருங்கற்கள் ஆகியவற்றை எடுத்தனர், மதங்கொண்ட யானைகளையும், தேர்களையும், குதிரைகளையும் தூக்கி வீசினர்[இங்கே கிருஷ்ணன் பயன்படுத்தியது சாரங்க வில்லை மட்டும்தான்.].(35,36)

நாராயணாக்³நிஸ்தாந்ஸர்வாந்த³தா³ஹ ப்ரஹஸந்நிவ |
பா³ணார்சிஷா மஹாதேஜா ஜக³த்³தி⁴தகரோ ஹரி꞉ ||2-84-37

எனினும், ஓ! வீரா, நாராயண நெருப்பில் அனைத்தும் எரிந்தன. பெரும் பிரகாசமிக்கவனும், உலகுக்கு நன்மை செய்பவனுமான அந்த யது குலத் தலைவன் {கிருஷ்ணன்} சிரித்துக் கொண்டே தன் கணைகளின் நெருப்பால் அவர்கள் அனைவரையும் கலங்கடித்தான்.

ஷா²ரத³ம் வர்ஷணம் யத்³வத்ஸேஹே தீ⁴ரோ க³வாம் பதி꞉ |
தத்³வத்³யது³வ்ருஷ꞉ ஸேஹே பா³ணவர்ஷமரிந்த³ம꞉ ||2-84-38

கூதிர் கால மழைப்பொழிவால் துன்புறும் காளையைப் போலவே அவன் அவர்களின் கணைமாரியைப் பொறுத்துக் கொண்டான்.

ந ஸேஹிரே(அ)ஸுரா பா³ணாந்நாராயணத⁴நுஷ்²ச்யுதாந் |
வர்ஷம் பர்ஜந்யவிஹிதம் வாலுகாஸேதவோ யதா² ||2-84-39

இவ்வாறே அந்தப் போர் சிறிது நேரம் தொடர்ந்தபோது மழையைத் தாக்குப்பிடிக்கமுடியாத மண் அணையைப் போல நாராயணனின் வில்லில் இருந்து ஏவப்பட்ட கணைகளை அசுரர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை

ந ஷே²கு꞉ ப்ரமுகே² ஸ்தா²தும் க்ருஷ்ணஸ்யாஸுரஸத்தமா꞉ |
வ்யாதி³தாஸ்யஸ்ய ஸிம்ஹஸ்ய வ்ருஷபா⁴ இவ பா⁴ரத ||2-84-40

ஓ! பரதனின் வழித்தோன்றலே, அகலத்திறந்த வாயுடன் கூடிய சிங்கத்தின் முன்பு நிற்க முடியாத காளைகளைப் போலவே அசுரர்களால் கிருஷ்ணனின் முன்பு நிற்க முடியவில்லை[“அகலத்திறந்த ஐந்து வாய்களுடன் கூடிய சிவதேவனின் முன்பு நிற்க முடியாத காளைகளைப் போலவே அசுரர்களால் கிருஷ்ணனின் முன்பு நிற்க முடியவில்லை”]

தே வத்⁴யமாநா꞉ க்ருSணேந தி³வமாசக்ரமுஸ்ததா³ |
ஜீஇவிதாஷா²ம் வஹந்தஸ்து நாராயணப⁴யார்தி³தா꞉ ||2-84-41

தாநாகாஷ²க³தாநைந்த்³ரிர்ஜயந்த꞉ ப்ரவரஸ்ததா² |
நிஜக்⁴நது꞉ ஷ²ரைர்கோ⁴ரைர்ஜ்வலிதார்சிஸமை꞉ ப்ரபோ⁴ ||2-84-42

ஓ! ஜனமேஜயா, நாராயணனான கிருஷ்ணனால் இவ்வாறு கொல்லப்பட்டபோது, அச்சத்தால் பீடிக்கப்பட்ட அசுரர்கள் வானத்தில் உயர எழுந்தனர். ஓ! தலைவா, அவர்கள் வானில் எழுந்தவுடனேயே ஜயந்தனும், பிரவரனும் நெருப்பு போல எரியும் கணைகளால் அவர்கள் அனைவரையும் கொன்றனர்.(41,42)

நிபேதுரஸுராணாம் து ஷி²ராம்ஸி த⁴ரணீதலே |
த்ருணராஜப²லாநீவ முக்தாநி ஷி²க²ராத்தரோ꞉ ||2-84-43

அந்த நேரத்தில் அசுரர்களின் தலைகள் மரத்தில் இருந்து விழும் பனங்கனிகளைப் போலப் பூமியில் விழுந்தன.

நிபேதுர்பா³ஹவஷ்²சி²ந்நா꞉ தை³த்யாநாம் வஸுதா⁴தலே |
காலேநோபஹதா வீரா꞉ பஞ்சவக்த்ரா இவோரகா³꞉ ||2-84-44

காலனால் கொல்லப்பட்ட ஐந்து தலை பாம்புகளைப் போலத் தைத்தியர்களின் கரங்கள் பூமியின் பரப்பில் விழுந்தன.

ரௌக்மிணேயஸ்தத꞉ ஸ்ருஷ்ட்வா கோ⁴ராம் மாயாமயீம் கு³ஹாம் |
அத்³ருஷ்²யநிஷ்க்ரமம் வீர꞉ க்ஷத்ரம் ப்ரக்ஷேப்துமுத்³யத꞉ ||2-84-45

ருக்மிணியின் அறம்சார்ந்த வீரமகன் {பிரத்யும்னன்}, மேலும் க்ஷத்திரியக் கூட்டத்தை வெளிவர விடாமல் அழிப்பதற்காக வாயில் புலப்படாத மற்றுமொரு பயங்கரக் குகையை உண்டாக்கிவிட்டு

க³தே³நா ஸஹ த⁴ர்மாத்மா ஸாரணேந ஸுதேந ச |
ஸாம்பே³ந சபரைஷ்²சாபி பூர்வம் யேந ப்ரவேஷி²த꞉ ||2-84-46

கதன், சாரணன், சுதன் {தன் மகன் அனிருத்தன்}, சாம்பன் ஆகியோருடனும், பிற வீரர்களுடனும் அதே குகையின் வழியிலேயே யாரும் காணாமல் வெளியே வந்தான்

ப்ரமத்²ய தரஸா கர்ணம் யதந்தம் ரணமூர்த⁴நி |
ஜக்³ராஹ ப³லவாந்கார்ஷ்ணி꞉ ப்ரஸ்பு²ரந்தம் ததஸ்தத꞉ ||2-84-47

கிருஷ்ணனின் பலம்வாய்ந்த மகன் {பிரத்யும்னன்} வெளியே வந்தவுடனேயே போர்க்களத்தின் முன்னிலையில் அங்கேயும் இங்கேயும் கவனமாகத் திரிந்து கொண்டிருந்த கர்ணனைப் பிடித்து அந்தப் பயங்கரக் குகையில் அடைத்தான்[“கிருஷ்ணன் மகன் பலவான் ப்ரத்யும்னன் பின் போர் முன்னணியில் அங்குமிங்கும் துள்ளும் கர்ணனைப் பிடித்துக் கோரமான மாயக் குகையில் கோஷமிட்டுக் கொண்டு வைத்தான்”].

விநத்³ய ச கு³ஹாம் வீரோ கோ⁴ராம் மாயாமயீம் ந்ருப |
து³ர்யோத⁴நம் ச ராஜாநம் விராடத்³ருபதா³வபி ||2-84-48

அதன்பிறகு அவன், ஓ! மன்னா, தன் சிங்க முழக்கத்தால் குகையை எதிரொலிக்கச் செய்தபடியே மன்னன் துரியோதனன், விராடன், துருபதன்,

ஷ²குநிம் சைவ ஷ²ல்யம் ச நீலம் சாபி நதீ³ஸுதம் |
விந்தா³நுவிந்தௌ³ ராஜாநௌ ஜராஸம்த⁴ம் ச பா⁴ரத ||2-84-49

சகுனி, சல்யன், நீலன், பீஷ்மர், விந்தன், அனுவிந்தன், ஜராசந்தன்,

த்ரிக³ர்தாந்மாலவாம்ஷ்²சைவ வாஸந்த்யாம்ஷ்²ச மஹாப³லாந் |
த்⁴ருஷ்டத்³யும்நாதி³காம்ஷ்²சைவ பாஞ்சாலாநஸ்த்ரகோவிதா³ந் ||2-84-50

திரிகர்த்த, மாளவ மன்னர்கள், பெருஞ்சக்திவாய்ந்த வாசால்யர்கள், திருஷ்டத்யும்னன், ஆயுதப் பயன்பாட்டை அறிந்தவர்களான பாஞ்சால நாட்டின் பிற இளவரசர்கள்,

ததா²(ஆ)ப்⁴ருதிமுவாசேத³ம் மாதுலம் ருக்மிமேவ ச |
ஷி²ஷு²பாலம் ச ராஜாநம் ப⁴க³த³த்தம் ச பா⁴ரத ||2-84-51

ஆஹ்விருதி, தன் மாமனான ருக்மி, பேரரசன் சிசுபாலன், பகதத்தன் ஆகியோரை அழைத்து அவர்களிடம்

ஸம்ப³ந்த⁴ம் ச கு³ருத்வம் ச மாநயாமி நராதி⁴பா꞉ |
கு³ஹாமிமாம் கோ⁴ரரூபாம் யத்ர ப்ரக்ஷேபயாமி வ꞉ ||2-84-52

“ஓ! மன்னர்களே, மேன்மையான உங்கள் நிலையையும், என்னுடன் நீங்கள் கொண்ட உறவுமுறையையும் கருத்தில் கொண்டே நான் உங்களை இந்தப் பயங்கரக் குகைக்குள் தள்ளாமல் இருக்கிறேன்[“உங்களுடன் ஸம்பந்தத்தையும், பெருமையையும் மதிக்கிறேன். இந்தக் கோரரூப குகையில் உங்களை வைக்கிறேன். புத்திமான், சூலந்தரித்த வில்வோத ஈஸ்வரனால் உன்னால் அவ்வரசர்கள் குகையில் வைக்கத்தக்கவர்கள் என்று நான் கட்டளையிடப்பட்டிருக்கிறேன்”].

பி³ல்வோத³கேஷ்²வரேணாஹமாஜ்ஞப்த꞉ ஷூ²லபாணிநா |
ப்ரக்ஷேப்தவ்யா நரேந்த்³ராஸ்தே கு³ஹாயாமிதி தீ⁴மதா ||2-84-53

நுண்ணறிவுமிக்கவனும், திரிசூலபாணியும், வில்வத்துக்கும், நீருக்கும் தலைவனான தேவனே {வில்வோதகனே / சிவனே}, உங்கள் அனைவரையும் இந்தக் குகைக்குள் தள்ளுமாறு எனக்கு ஆணையிட்டிருக்கிறான்.

ஆஷ்²ரித்ய ஷா²ம்ப³ரீம் மாயாம் நிகும்பே⁴ந மஹாத்மநா |
ப்ரக்ஷிப்தாந்யாத³வாம்ஷ்²சைவ மோக்ஷயிஷ்யாமி ஸர்வதா² ||2-84-54

பெருஞ்சக்திவாய்ந்த நிகும்பனின் சம்பரி மாயை {சம்பர மாயை} மூலம் சிறையிலிடப்பட்டிருக்கும் யாதவர்களை விடுவிக்க என்னால் முடிந்த அளவுக்குச் சிறப்பாக நான் முயற்சிப்பேன்” என்றான் {பிரத்யும்னன்}.

இத்யுக்தோ ஷி²ஷு²பாலஸ்து ராஜா ஸேநாபதிஸ்ததா² |
ஷ²ரைஸ்ததர்த³ தாந்பை⁴மாந்ப்ரத்³யும்நம் ச விஷே²ஷத꞉ ||2-84-55

இவ்வாறு சொல்லப்பட்டதும், மன்னர்களின் படைத்தலைவனான சிசுபாலன், பைமர்களை, குறிப்பாகப் பிரத்யும்னனைக் கணைகளால் தாக்கினான்.

பி³ல்வோத³கேஷ்²வரம் தே³வம் ரௌக்மிணேயோ நமஸ்ய ச |
ஆரப⁴ந்ந்ருபதிம் ப³த்³து⁴ம் ஷி²ஷு²பாலம் மஹாப³லம் ||2-84-56

அப்போது ருக்மிணியின் மகன் சிவனை வணங்கிவிட்டுப் பேரரசன் சிசுபாலனைக் கட்டத் தொடங்கினான்.

தத꞉ பாஷ²ஸஹஸ்ராணி க்³ருஹாய ப்ரவரோத்தம꞉ |
ஷை²லாதி³ரப்³ரவீத்³தீ⁴ரம் ரௌக்மிணேயம் மஹாப³லம் ||2-84-57

அதேவேளையில், சிவகணங்களில் முதன்மையான நந்தி, ஆயிரக்கணக்கான பாசக்கயிறுகளை எடுத்துக் கொண்டு அங்கே வந்து, பெருஞ்சக்திவாய்ந்தவனும், வீரனுமான ருக்மிணியின் மகனிடம் {பிரத்யும்னனிடம்},

பி³ல்வோத³கேஷ்²வரோ தே³வ꞉ ப்ராஹ த்வாம் யது³நந்த³ந |
ஸர்வம் குரு ததா² ராத்ர்யாம் சோக்தஸ்த்வம் போ⁴ யத² மயா ||2-84-58

“ஓ! யதுவின் வழித்தோன்றலே, வில்வோதகேஷ்வரன் (சிவன்) உன்னிடம் இரவில் சொன்னதைச் செய்யுமாறு உனக்கு ஆணையிட்டிருக்கிறார்

கந்யார்த²ம் ரத்நலுப்³தா⁴ம்ஸ்து ப³த்³த்⁴வா சேமாந்நராதி⁴பாந் |
பாஷை²ஸ்த்வமேவ மோக்தும் ச ப்ரமாணம் யது³நந்த³ந ||2-84-59

கன்னியருக்கான கையூட்டாக ரத்தினங்களைப் பெற்றுக் கொண்ட இந்த மன்னர்களைப் பாசக்கயிறுகளில் கட்டுவாயாக. {பின்னர்} அவர்களை விடுவிக்கும் அதிகாரமும் உனக்குண்டு

அஸுராம்ஸ்து மஹாபா³ஹோ நி꞉ஷே²ஷாந்கர்துமர்ஹஸி |
ஏவமேவ ச வக்தவ்யஸ்த்வயா வீர ஜநார்த³ந꞉ ||2-84-60

ஓ! வீரா, ஓ! பெருங்கரங்களைக் கொண்டவனே, அசுரர்களில் ஒருவரையும் விடாமல் ஒழிப்பாயாக. இந்தச் செய்தியை ஜனார்த்தனனுக்குச் சொல்வாயாக” என்றான்

தத꞉ ஸ ப⁴க³த³த்தம் ச ஷி²ஷு²பாலம் ச பூ⁴மிப |
ஆப்⁴ருதிம் சைவ ருக்மிம் ச ஷே²ஷாம்ஷ்²சாந்யாந்நராதி⁴பாந் ||2-84-61

ப³ப³ந்த⁴ ஹரத³த்தைஸ்தை꞉ பாஷை²ருத்தமவீர்யத்⁴ருக் |
மாயாமயீம் கு³ஹாம் சைவமாநயத்குருநந்த³ந ||2-84-62

அதன்பிறகு பெருஞ்சக்திவாய்ந்த ருக்மிணியின் மகன் {பிரத்யும்னன்}, ஓ! குருவின் வழித்தோன்றலே, பாம்புகளைப் போல மூச்சுவிட்டுக் கொண்டிருந்த மன்னன் பகதத்தன், சிசுபாலன், ஆஹ்வதி, ருக்மி ஆகியோரையும், பிற மன்னர்களையும் ஹரனால் கொடுக்கப்பட்ட பாசக்கயிறுகளால் கட்டி அவர்கள் அனைவரையும் மாயக் குகைக்கு அழைத்துச் சென்றான்.(61,62)

ப³த்³த்⁴வா ச ரௌக்மிணேயோ(அ)த² நி꞉ஷ்²வஸந்த இவோரகா³ந் |
அநிருத்³த⁴ம் சகாராத² ரக்ஷிதாரம் ஸ்வமாத்மஜம் ||2-84-63

ஓ! பரதனின் வழித்தோன்றலே, யதுவின் வழித்தோன்றலான பிரத்யும்னன், தன் மகன் அனிருத்தனைக் குகைக்குக் காவலாக நிறுத்திவிட்டு,

தேஷாம் நிரவஷே²ஷேண ப³ப³ந்த⁴ யது³நந்த³ந꞉ |
ஸேநாபதீந்க்ஷத்ரியாம்ஷ்²ச கோஷா²த்⁴யக்ஷாம்ஷ்²ச பா⁴ரத ||2-84-64

ஹஸ்த்யஷ்²வரத²வ்ருந்தா³ம்ஷ்²ச சகார ச ததா²(ஆ)த்மஸாத் |
அவ்யக்³ரஸ்து ததோ ஹந்துமஸுராநுத்³யத꞉ ப்ரபோ⁴ ||2-84-65

அந்த க்ஷத்திரியர்களின் யானைகள், குதிரைகள், தேர்கள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு எஞ்சியிருந்த படைத்தலைவர்களையும், கருவூலக் காவலர்களையும் சங்கிலிகளில் கட்டினான்.
ஓ! தலைவா, கிருஷ்ணனின் மகன் {பிரத்யும்னன்} அசுரர்களைக் கொல்லத் தயாரானபோது,(64,65)

ஸந்நத்³த⁴ ஏவ சோவாச ப்³ரஹ்மத³த்தம் த்³விஜோத்தமம் |
விஸ்ரப்³த⁴ம் வர்ததாம் கர்ம மா பை⁴꞉ பஷ்²ய த⁴நஞ்ஜயம் ||2-84-66

கவசங்களுடன் கூடிய அவன் {பிரத்யும்னன்}, இரு பிறப்பாளர்களில் முதன்மையான பிரம்மதத்தரிடம், “{வேள்வியைச் செய்வீராக}. தனஞ்சயர் {அர்ஜுனர்} உமக்கு உதவப் போகிறார் என்பதைக் காண்பீராக

ந தே³வேப்⁴யோ நாஸுரேப்⁴யோ நாகே³ப்⁴யோ த்³விஜஸத்தம |
ப⁴யம் ஹி வித்³யதே தஸ்ய கோ³ப்தாரோ யஸ்ய பாண்ட³வா꞉ ||2-84-67

உமக்கு அச்சமேதுமில்லை. உறுதியான இதயத்துடன் உமது பணியைச் செய்வீராக. ஓ! இருபிறப்பாளர்களில் முதன்மையானவரே, பாண்டவர்கள் உங்களைப் பாதுகாப்பதில் ஈடுபடும்போது, தேவர்களிடமோ, அசுரர்களிடமோ, வேறு எந்த உயிரினத்திடமோ நீர் அச்சங்கொள்ள வேண்டியதில்லை.

ந சாஸுரைஸ்தவ ஸுதா꞉ ஸ்ப்ருஷ்டா꞉ க²ல்வபி சேதஸா |
யஜ்ஞவாடே நிரீக்ஷ்யந்தாம் மாயயா நிஹித மயா ||2-84-68

அசுரர்களால் உமது மகள்களை மனத்தாலும் தீண்ட இயலவில்லை; என் மாயா சக்திகளால் நான் அவர்களை வேள்விக்களத்தில் வைத்திருப்பதைப் பாரும்” என்றான் {பிரத்யும்னன்}.”

இதி ஷ்²ரீமஹாபா⁴ரதே கி²லேஷு ஹரிவம்ஷே² விஷ்ணுபர்வணி
ஷ²ட்புரவதே⁴ சதுரஷீ²திதமோ(அ)த்⁴யாய꞉

————–—————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாஸ பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விஷ்ணு பர்வம்–அத்யாயம் – 83–(யஷவிஸ்தரோ துஷ்டநிக்ரஹஷ்ச)–யாகத்தடை செய்த அசுரர்கள் |–

January 31, 2021

பிரம்மதத்தர் செய்த யாகம்; யாகத்தைக் காத்த வசுதேவன்; யாகக் காணிக்கையில் பங்கு கேட்ட அசுரர்கள்; பிரம்மதத்தரின் மகள்களைக் கடத்திச் சென்ற அசுரர்கள்; அசுரர்களுக்கு அலோசனை வழங்கிய நாரதர்.

வைஷ²ம்பாயன உவாச
ஏதஸ்மின்னேவ காலே து சதுர்வேத³ஷட³ங்க³வித் |
ப்³ராஹ்மணோ யாஜ்ஞவல்க்யஸ்ய ஷி²ஷ்யோ த⁴ர்மகு³ணான்வித꞉ ||2-83-1

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “அந்த நேரத்தில், ஓ மன்னா, யாஜ்ஞவல்கியரின் சீடரும், நான்கு வேதங்களையும், ஆறு அங்கங்களையும் நன்கு அறிந்தவரும், அறநெறி சார்ந்தவரும்,

ப்³ரஹ்மத³த்தேதி விக்²யாதோ விப்ரோ வாஜஸனேயிவான் |
அஷ்²வமேத⁴꞉ க்ருதஸ்தேன வஸுதே³வஸ்ய தீ⁴மத꞉ ||2-83-2

பிரம்மதத்தன் என்ற பெயரைக் கொண்டவருமான வாஜஸ்நேய பிராமணர் ஒருவர்

ஸ ஸம்வத்ஸரதீ³க்ஷாயாம் தீ³க்ஷித꞉ ஷட்புராலய꞉ |
ஆவர்தாயா꞉ ஷு²பே⁴ தீரே ஸுனத்³யா முநிஜுஷ்டயா ||2-83-3

ஷத்புர நகரத்தில் முனிவர்களால் அடையப்பட்ட ஆவர்த்தகை எனும் நல்லாற்றின் புனிதக்கரையில் ஓராண்டு காலம் நீளும் யஜ்ஞம் செய்யும் தீக்ஷை பெற்றார்[யாஜ்ஞவல்கியரின் சீடரும், நான்கு வேதங்களையும், ஆறு அங்கங்களையும் நன்கு அறிதவரும், அறநெறி சார்ந்தவரும், வாஜஸ்னேய ஸம்ஹிதையைக் கற்றவரும், பிரம்மதத்தன் என்ற பெயரைக் கொண்டவருமான பிராமணர் ஒருவர், ஷட்புர நகரத்தில் முனிவர்களால் அடையப்பட்ட ஆவர்த்தகை எனும் மங்கலமான ஆற்றின் புனிதக்கரையில் ஓராண்டு காலம் நீளும் வேள்வியின் தொடக்கச் சடங்கைச் செய்தார்.].

ஸகா² ச வஸுதே³வஸ்ய ஸஹாத்⁴யாயீ த்³விஜோத்தம꞉ |
உபாத்⁴யாயஷ்²ச கௌரவ்ய க்ஷீரஹோதா மஹாத்மன꞉ ||2-83-4

ஓ! குருவின் அரச வழித்தோன்றலே {குருகுலத்தவனே/ ஜனமேஜயனே}, வசுதேவனின் நண்பரும், அவனுடன் கல்வி பயின்ற மாணவருமானதால், ஓர் ஆசானும், பேரான்மா கொண்டவரும், அலுவல்முறை புரோகிதரும், இருபிறப்பாளர்களில் முதன்மையானவருமான அவர் {பிரம்மதத்தர்},

வஸுதே³வஸ்தத்ர யாதோ தே³வக்யா ஸஹித꞉ ப்ரபோ⁴ |
யாஜமான்யே ஷட்புரஸ்த²ம் யதா² ஷ²க்ரோ ப்³ருஹஸ்பதிம் ||2-83-5

யஜ்ஞம் செய்வதற்காக ஷட்புரத்திற்குச் சென்ற போது, (தேவர்களின் மன்னனான) சக்ரன் (தங்கள் ஆசானான) பிருஹஸ்பதியைப் பாதுகாப்பதைப் போலவே அவரை {பிரம்மதத்தரைப்} பாதுகாப்பதற்காகத் தேவகியுடன் சேர்ந்து வசுதேவன் அங்கே சென்றான்.

தத்ஸத்ரம் ப்³ரஹ்மத³த்தஸ்ய ப³ஹ்வன்னம் ப³ஹுத³க்ஷிணம் |
உபாஸந்தி முநிஷ்²ரேஷ்டா² மஹாத்மானோ த்³ருட⁴வ்ரதா꞉ ||2-83-6

உணவும், கொடைகளும் நிறைந்திருந்த பிரம்மதத்தரின் அந்த யஜ்ஞத்தில் {வேள்வியில்} அர்ப்பணிப்பில் உறுதிமிக்கப் பெரியோரும்

வ்யாஸோ(அ)ஹம் யாஜ்ஞவல்க்யஷ்²ச ஸுமந்துர்ஜைமிநிஸ்ததா² |
த்⁴ற்^திமாஞ்ஜாப³லிஷ்²சைவ தே³வலாத்³யாஷ்²ச பா⁴ரத ||2-83-7

ஓ! பாரதக் குலத்தோனே, வியாசர், யாஜ்ஞவல்கியர், சுமந்து, ஜைமினி, திருதிமானான ஜாபாலி, தேவலர் ஆகியோரும், முன்னணி முனிவர்கள் பிறரும் அங்கே இருந்தனர். {வைசம்பாயனனான} நானும் அங்கே சென்றிருந்தேன்.

ருத்³த்⁴யானுரூபயா யுக்தம் வஸுதே³வஸ்ய தீ⁴மத꞉ |
யத்ரேப்ஸிதாந்த³தௌ³ காமாந்தே³வகீ த⁴ர்மசாரிணீ ||2-83-8

அந்த யஜ்ஞத்தில், பூமியில் அவதரித்திருக்கும் அண்டப்படைப்பாளனான வாசுதேவனின் {கிருஷ்ணனின்} அருளால் அறம்சார்ந்த தேவகி, வசுதேவனின் பெருமைக்குத்தகுந்த முறையில் இரவலர்கள் விரும்பிய பொருட்களை அவர்களுக்கு மத்தியில் கொடையளித்தாள்.

வாஸுதே³வப்ரபா⁴வேண ஜக³த்ஸ்ரஷ்டுர்மஹீதலே |
தஸ்மின்ஸத்ரே வர்தமானே தை³த்யா꞉ ஷட்புரவாஸின꞉ ||2-83-9

யஜ்ஞம் தொடங்கியதும், ஷத்புரவாசிகளும், வரங்களால் செருக்கடைந்தவர்களுமான நிகும்பனும், பிற தைத்தியர்களும் அங்கே கூடி,

நிகும்பா⁴த்³யா꞉ ஸமாக³ம்ய தமூசுர்வரத³ர்பிதா꞉ |
கார்யதாம் யஜ்ஞபா⁴கோ³ ந꞉ ஸோமம் பாஸ்யாமஹே வயம் |
கன்யாஷ்²ச ப்³ரஹ்மத³த்தோ நோ யஜமான꞉ ப்ரயச்ச²து ||2-83-10

“எங்களுக்குரிய யஜ்ஞபாகத்தை {வேள்விப்பங்கைக்} கொடுப்பீராக. நாங்கள் சோம பானம் பருகப் போகிறோம், பிரம்மதத்தன் தன்னுடைய மகள்களை எங்களுக்குக் கொடுக்கட்டும்

ப³ஹ்வ்ய꞉ ஸந்த்யஸ்ய கன்யாஷ்²ச ரூபவத்யோ மஹாதமன꞉ |
ஆஹூய தா꞉ ப்ரதா³தவ்யா꞉ ஸர்வதை²வ ஹி ந꞉ ஷ்²ருதம் ||2-83-11

இந்தப் பெரும் மனிதனிடம் அழகிய மகள்கள் பலர் இருப்பதாக நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். எனவே, அவன் அவர்களை அழைத்து எங்களிடம் கொடுக்கட்டும்

ரத்னானி ச ப்³ரஹ்மத³த்தோ விஷி²ஷ்டானி த³தா³து ந꞉ |
அன்யதா² து ந யஷ்டவ்யம் வயமாஜ்ஞாபயாமஹே ||2-83-12

தான் கொண்ட மதிப்புமிக்க ரத்தினங்களையும் அவன் எங்களுக்குக் கொடுக்கட்டும். இந்த ஆணையை மீறினால், இந்த யஜ்ஞத்தை நடத்த நாங்கள் அவனை அனுமதிக்க மாட்டோம்” என்றனர்.

ஏதச்ச்²ருத்வா ப்³ரஹ்மத³த்தஸ்தானுவாச மஹாஸுரான் |
யஜ்ஞபா⁴கோ³ ந விஹித꞉ புராணே(அ)ஸுரஸத்தமா꞉ ||2-83-13

இதைக் கேட்ட பிரம்மதத்தர், அந்தப் பேரசுரர்களிடம், “ஓ! முன்னணி அசுரர்களே, வேள்விக் காணிக்கைகளில் உங்களுக்கென எந்தப் பங்கும் வேதங்களில் விதிக்கப்படவில்லை

கத²ம் ஸத்ரே ஸோமபானம் ஷ²க்யம் தா³தும் மயா ஹி வ꞉ |
ப்ருச்ச²தேஹ முநிஷ்²ரேஷ்டா²ன்வேத³பா⁴ஷ்யார்த²கோவிதா³ன் ||2-83-14

அவ்வாறிருக்கையில், இந்த யஜ்ஞத்தில் சோமம் பருக நான் எவ்வாறு உங்களை அனுமதிப்பேன்? உங்களுக்கு என் சொற்களில் நம்பிக்கை ஏற்படாவிட்டால், வேதங்களையும், அவற்றின் விளக்கங்களையும் நன்கறிந்த இந்தப் பெரும் முனிவர்களிடம் நீங்கள் கேட்பீராக.

கன்யா ஹி மம யா தே³யாஸ்தாஷ்²ச ஸங்கல்பிதா மயா |
அந்தர்வேத்³யாம் ப்ரதா³தவ்யா꞉ ஸத்³ருஷா²நாமஸம்ஷ²யம் ||2-83-15

வேதங்களைப் பின்பற்றி {கொடுப்பேனென ஏற்கனவே நான் மனத்தில் உறுதி ஏற்றுள்ள} உரிய மணமகன்களுக்கே என் மகள்களை நான் திருமணம் செய்து கொடுப்பேன்; இதுவே என் தீர்மானம்.

ரத்னானி து ப்ரயச்சா²மி ஸாந்த்வேனாஹம் விசிந்த்யதாம் |
ப³லான்னைவ ப்ரதா³ஸ்யாமி தே³வகீபுத்ரமாஷ்²ரித꞉ ||2-83-16

எனினும் நீங்கள் உடன்பட்டால் என்னிடம் உள்ள ரத்தினங்கள் அனைத்தையும் நான் உங்களுக்குத் தருவேன். நீங்கள் உங்கள் பலத்தைக் காட்டினால் தேவகியின் மகனுடைய {கிருஷ்ணனின்} ஆதரவைப் பெற்றவனான நான் அதையும் உங்களுக்குக் கொடுக்க மாட்டேன்” என்றார் {பிரம்மதத்தர்}

நிகும்பா⁴த்³யாஸ்து ருஷிதா꞉ பாபா꞉ ஷட்புரவாஸின꞉ |
யஜ்ஞவாடம் விலுலுடு²ர்ஜஹ்ரு꞉ கன்யாஷ்²ச தாஸ்ததா² ||2-83-17

ஷட்புரத்தைச் சேர்ந்த தீய தானவர்களும், நிகும்பனும், பிறரும், இந்தச் சொற்களைக் கேட்டு, யஜ்ஞத்திற்குரிய பொருட்களை வாரி இறைத்து, அவற்றைச் சிதறச்செய்து அவனுடைய மகள்களையும் அபகரித்துச் செல்லத் தொடங்கினர்.

தத்³த்³ருஷ்ட்வா ஸம்ப்ரவ்ருத்தம் து த³த்⁴யாவானகது³ந்து³பி⁴꞉ |
வாஸுதே³வம் மஹாத்மானம் ப³லப⁴த்³ரம் க³த³ம் ததா² ||2-83-18

அசுரர்களால் வேள்விப் பொருட்கள் கொள்ளையடிக்கப்படுவதைக் கண்ட ஆனகதுந்துபி {வசுதேவன்}, சிறப்புமிக்கக் கிருஷ்ணனையும், பலபத்ரனையும் {பலராமனையும்}, கதனையும் நினைத்தான்

விதி³தார்த²ஸ்தத꞉ க்ருஷ்ண꞉ ப்ரத்³யும்னமித³மப்³ரவீத் |
க³ச்ச² கன்யாபரித்ராணம் குரு புத்ராஷு² மாயயா ||2-83-19

அவன் அவ்வாறு நினைத்த உடனேயே அனைத்தையும் அறிந்து கொண்ட கிருஷ்ணன், {தன் மகன்} பிரத்யும்னனிடம், “ஓ! என் மகனே, செல், உன் மாயா சக்திகளைப் பயன்படுத்தி அந்தக் கன்னியரைக் காப்பாயாக.

யாவத்³யாத³வஸைன்யேன ஷட்புரம் யாம்யஹம் ப்ரபோ⁴ |
ஸ யயௌ ஷட்புரம் வீர꞉ பிதுராஜ்ஞாகரஸ்ததா³ ||2–83-20

ஓ வலிமைமிக்க வீரா, யாதவப் படையுடன் சேர்ந்து விரைவில் நானும் ஷட்புரத்திற்கு {அனுபுரத்திற்குப்} புறப்படுவேன்” என்றான்.
நுண்ணறிவுமிக்கவனும், பெருஞ்சக்திவாய்ந்தவனும், எப்போதும் தந்தைக்குக் கீழ்ப்படிபவனும், வீரனுமான பிரத்யும்னன், இதைக்கேட்டுவிட்டு, ஒரு கணத்திற்குள் {கண்ணிமைக்கும் நேரத்திற்குள்} ஷட்புரத்திற்குச் சென்று,

நிமேஷாந்தரமாத்ரேண க³த்வா காமோ மஹாப³ல꞉ |
கந்யாஸ்தா மாயயா தீ⁴மானுபஜஹ்ரே மஹாப³ல꞉ ||2-83-21

மாயாமயீஷ்²ச க்ருத்வா(அ)ன்யா ந்யஸ்தவான்ருக்மிணீஸுத꞉ |
மா பை⁴ரிதி ச த⁴ர்மாத்மா தே³வகீமுக்தவாம்ஸ்ததா³ ||2-83-22

தன்னுடைய மாயா சக்திகளால் அந்தக் கன்னியரை அபகரித்தான். ருக்மிணியின் அறம் சார்ந்த மகன் {பிரத்யும்னன்}, தன்னுடைய மாயா சக்தியால் அவர்களை {அந்தக் கன்னியரைப்} போன்றே மாயாவடிவங்களை உண்டாக்கி, அவற்றை அந்தத் தைத்தியர்களின் முன் வைத்து, தேவகியிடம், “அஞ்சாதீர்” என்று சொன்னான்.

மாயாமயீஸ்ததோ ஹ்ருத்வா ஸுதா ஹ்யஸ்ய து³ராஸதா³꞉ |
ஷட்புரம் விவிஷு²ர்தை³த்யா꞉ பரிதுஷ்டா நராதி⁴ப ||2-83-23

ஓ! மன்னா, தடுக்கப்பட முடியாதவர்களான அந்தத் தைத்தியர்கள், பிரம்மதத்தரின் மகள்களை விட்டு அந்த மாயக் கன்னியரை அபகரித்துக் கொண்டு தங்கள் நகருக்குள் நிறைவுடன் நுழைந்தனர்.

கர்ம சாஸார்யதே தத்ர விதி⁴த்³ருஷ்டேண கர்மணா |
யத்³விஷி²ஷ்டம் ப³ஹுகு³ணம் தத³பூ⁴ச்ச நராதி⁴ப ||2-83-24

அதன்பிறகு, ஓ! மன்னா, அந்த மகத்தான பெரும் யஜ்ஞம் {வேள்வி}, உரிய சடங்குகளுடன் கொண்டாடப்பட்டது

ஏதஸ்மின்னந்தரே ப்ராப்தா ராஜானஸ்தத்ர பா⁴ரத |
ஸத்ரே நிமந்த்ரிதா꞉ பூர்வம் ப்³ரஹ்மத³த்தேன தீ⁴மதா ||2-83-25

ஓ! பரதனின் வழித்தோன்றலே, நுண்ணறிவுமிக்கப் பிரம்மதத்தரால் அழைக்கப்பட்ட மன்னர்கள் அனைவரும் வேள்விக்களத்தை அடைந்தனர்.

ஜராஸந்தோ⁴ த³ந்தவக்த்ர꞉ ஷி²ஷு²பாலஸ்ததை²வ ச |
பாண்ட³வா தா⁴ர்தராஷ்ட்ராஷ்²ச மாலவா꞉ ஸக³ணாஸ்ததா² ||2-83-26

ஜராசந்தன், தந்தவக்தரன், சிசுபாலன், பாண்டவர்கள், திருதராஷ்டிரனின் மகன்கள், தொண்டர்களுடன் கூடிய மாளவன்,

ருக்மீ சைவாஹ்வ்ருதிஷ்²சைவ நீலோ வா த⁴ர்ம ஏவ ச |
விந்தா³னுவிந்தா³வாவந்த்யௌ ஷ²ல்ய꞉ ஷ²குநிரேவ ச ||2-83-27

ருக்மி, ஆஹ்விருதி, நீலன், தர்மன் ஆகியோரும், அவந்தியின் மன்னர்களான விந்தனும், அனுவிந்தனும், சல்யன் {அல்லது சால்வன்}, சகுனி ஆகியோரும்

ராஜானஷ்²சாபரே வீரா மஹாத்மானோ த்³ருடா⁴யுதா⁴꞉ |
ஆவாஸிதா நாதிதூ³ரே ஷட்புரஸ்ய ச பா⁴ரத ||2-83-28

உன்னதமான போர்வீரர்களான மன்னர்கள் பிறரும் ஷட்புரத்தின் அருகில் முகாம் அமைத்தனர்

தாந்த்³ரூஷ்ட்வா நாரத³꞉ ஷ்²ரீமானசிந்தயத³னிந்தி³த꞉ |
க்ஷத்த்ரஸ்ய யாத³வானாம் ச ப⁴விஷ்யதி ஸமாக³ம꞉ ||2-83-29

இதைக் கண்ட குற்றமற்ற நாரதர், “இந்த யஜ்ஞத்தில் ஷத்திரியர்கள், யாதவர்கள் என அனைவரும் ஒன்றுகூடியுள்ளனர். நிச்சயம் இது பிணக்கிற்கு வழிவகுக்கும். {நானே போருக்குக் காரணமாவேன்}

அத்ர ஹேதுரஹம் யுத்³தே⁴ தஸ்மாத்தத்ப்ரயதாம்யஹம் |
ஏவம் ஸன்சிந்தயித்வாத² நிகும்ப⁴ப⁴வனம் க³த꞉ ||2-83-30

எனவே நான் அதற்கான முயற்சியைச் செய்ய வேண்டும்” என்று நினைத்தார். இவ்வாறு நினைத்துக் கொண்டே அவர் நிகும்பனின் வீட்டை அடைந்தார்.

பூஜித꞉ ஸ நிகும்பே⁴ன தா³னவைஷ்²ச ததா²பரை꞉ |
உபவிஷ்ட꞉ ஸ த⁴ர்மாத்மானிகும்ப⁴மித³மப்³ரவீத் ||2-83-31

அவர் நிகும்பனாலும், பிற தானவர்களாலும் வழிபடப்பட்டார். அற ஆன்மா கொண்ட அந்த முனிவர், அதன் பிறகு தன் இருக்கையில் அமர்ந்து கொண்டு நிகும்பனிடம்,

கத²ம் விரோத⁴ம் யது³பி⁴꞉ க்ருத்வா ஸ்வஸ்தை²ரிஹாஸ்யதே |
யோ ப்³ரஹ்மத³த்த꞉ ஸ ஹரி꞉ ஸ ஹி தஸ்ய விபு⁴꞉ ஸகா² ||2-83-32

“யாதவர்களைப் பகைத்துக் கொண்டு எவ்வாறு இங்கே நீங்கள் சுகமாக அமர்ந்திருக்கிறீர்கள்? பிரம்மதத்தர், கிருஷ்ணனுடைய தந்தையின் {வசுதேவனின்} நண்பன் என்பதை நீங்கள் அறியமாட்டீரா?

ஷ²தானி பாஞ்ச பா⁴ர்யாணாம் ப்³ரஹ்மத³த்தஸ்ய தீ⁴மத꞉ |
ஆனீதா வஸுதே³வஸ்ய ஸுதஸ்ய ப்ரியகாம்யயா || 2-83-33

நுண்ணறிவுமிக்கப் பிரம்மதத்தரின் ஐநூறு மனைவியரும், வசுதேவனின் மகனுடைய {கிருஷ்ணனின்} நிறைவுக்காக வேள்விக்களத்திற்கு அழைக்கப்பட்டிருக்கின்றனர்.

ஷ²தத்³வயம் ப்³ராஹ்மணீனாம் ராஜன்யானாம் ஷ²தம் ததா² |
வைஷ்²யானாம் ஷ²தமேகம் ச ஷூ²த்³ராணாம் ஷ²தமேவ ச ||2-83-34

அவர்களில் இருநூறு பேர் பிராமணர்களுக்குப் பிறந்தவர்கள், நூறு பேர் க்ஷத்திரியர்களுக்குப் பிறந்தவர்கள், நூறு பேர் வைசியர்களுக்குப் பிறந்தவர்கள், இன்னும் நூறு பேர் சூத்திரர்களுக்குப் பிறந்தவர்கள்.

தாபி⁴꞉ ஷு²ஷ்²ரூஷிதோ தீ⁴மாந்து³ர்வாஸ த⁴ர்மவித்தம꞉ |
தேன தாஸாம் வரோ த³த்தோ முனினா புண்யகர்மணா ||2-83-35

ஏகைகஸ்தனயோ ராஜன்னேகைகா து³ஹிதா ததா² |
ரூபேணானுபமா꞉ ஸர்வா வரதா³னேன தீ⁴மத꞉ ||2-83-36

ஓ! மன்னா, கல்விமானும், அறம்சார்ந்தவருமான துர்வாச ரிஷியை அவர்கள் அனைவரும் வழிபட்டனர். அவர், “நீங்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக ஒரு மகனையும், ஒரு மகளையும் அடுத்தடுத்து பெறுவீர்கள்” என்று அவர்கள் அனைவருக்கும் வரமளித்தார்.(35,36)

கன்யா ப⁴வந்தி தனயாஸ்தஸ்யாஸுர புன꞉ புன꞉ |
ஸங்க³மே ஸங்க³மே விஈர ப⁴ர்த்ருபி⁴꞉ ஷ²யனே ஸஹ ||2-83-37

ஓ! வீர அசுரா, அந்த வரத்தால் அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கணவனுடன் கலந்து அழகிய மகள்களை ஈன்றனர். அவர்கள் ஒப்பற்ற அழகைக் கொண்டவர்களாகவும்,

ஸர்வபுஷ்பமயம் க³ந்த⁴ம் ப்ரஸ்ரவந்தி வராங்க³னா꞉ |
ஸர்வதா³ யௌவனே ந்யஸ்தா꞉ ஸர்வாஷ்²சைவ பதிவ்ரதா꞉ ||2-83-38

மென்மையானவர்களாகவும், எப்போதும் இளமை நிறைந்தவர்களாகவும், கற்புள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். அனைத்து மலர்களின் நறுமணமும் அவர்களின் உடல்களில் கமழும்.

ஸர்வா கு³ணைரப்ஸரஸாம் கீ³தந்ருத்யகு³ணோத³யம் |
ஜானந்தி ஸர்வா தை³தேய வரதா³னேன தீ⁴மத꞉ ||2-83-39

ஓ தைத்தியா, அந்த நுண்ணறிவுமிக்க ரிஷியின் {துர்வாசரின்} வரத்தால் ஆடற்பாடற்கலைகளையும், அப்சரஸ்களின் திறன்களையும் அவர்கள் அறிந்தார்கள்; அவர்கள் அனைவரும் நற்சிறப்புகளைக் கொண்டவர்களாக இருக்கின்றனர்

புத்ராஷ்²ச ரூபஸம்பன்னா꞉ ஷா²ஸ்த்ரார்த²குஷ²லாஸ்ததா² |
ஸ்வே ஸ்வே ஸ்தி²தா வர்ணத⁴ர்மே யதா²வத³னுபூர்வஷ²꞉ ||2-83-40

அதே போல அவருடைய {பிரம்மதத்தரின்} மகன்களும், தங்கள் தங்கள் வகைக்குரிய கடமைகளை முறையாகப் பின்பற்றி வருகின்றனர். அவர்கள் புனித உரைகளுக்கு விளக்கம் சொல்லும் புத்திசாலிகளாகவும், அழகர்களாகவும் இருக்கின்றனர்.

தா꞉ கன்யா பை⁴மமுக்²யானாம் த³த்தா꞉ ப்ராணேன தி⁴மதா |
அவஷே²ஷம் ஷ²தம் த்வேகம் யதா³னீதம் கில த்வயா ||2-83-41

ஓ! வீரா, நுண்ணறிவுமிக்கப் பிரம்மதத்தர், கிட்டத்தட்ட தம்முடைய மகள்கள் அனைவரையும் {நானூறு பேரை} முன்னணி பைமர்களுக்கு {பீம குலத்தோருக்குக்} கொடுத்துவிட்டார். எஞ்சிய நூறு பேரை நீங்கள் அபகரித்து வந்திருக்கிறீர்கள்

தத³ர்தே² யாத³வான்வீர யோத⁴யிஷ்யஸி ஸர்வதா² |
ஸஹாயார்த²ம் து ராஜானோ த்⁴ரியந்தாம் ஹேதுபூர்வகம் ||2-83-42

அவர்களுக்காக யாதவர்கள் போரிடுவார்கள். எனவே, ஓ! வீரா, பிற மன்னர்களின் உதவியைப் பெற முறையாக அவர்களை அழைப்பாயாக.

ப்³ரஹ்மத³த்தஸுதார்த²ம் ச ரத்னானி விவிதா⁴னி ச |
தீ³யந்தாம் பூ⁴மிபாலானாம் ஸஹாயார்த²ம் மஹாத்மனாம் ||2-83-43

ஓ! அசுரர்களே, பிரம்மதத்தரின் மகள்களை நீங்களே வைத்துக் கொள்ள விரும்பினால், பெருஞ்சக்திவாய்ந்த மன்னர்களுக்குப் பல்வேறு ரத்தினங்களைக் கொடுத்தும்

ஆதித்²யம் க்ரியதாம் சைவ யே ஸமேஷ்யந்தி வை ந்ருபா꞉ |
ஏவமுக்தே ததா² சக்ருரஸுராஸ்தே(அ)திஹ்ற்^ஷ்டவத் ||2-83-44

இங்கே வரும் மன்னர்கள் அனைவரையும் உன் விருந்தினர்களாக மதித்தும் அவர்களின் உதவியை நீங்கள் நாடுவீராக” என்றார் {நாரதர்}. நாரதரால் இவ்வாறு சொல்லப்பட்ட அசுரர்கள் பெரும் மகிழ்ச்சியுடன் அவரது ஆணைகளை நிறைவேற்றினர்.

லப்³த்⁴வா பஞ்சஷ²தம் கன்யா ரத்னானி விவிதா⁴னி ச |
யதா²ர்ஹேண நரேந்த்³ரைஸ்தா விப⁴க்தா ப⁴க்தவத்ஸலா꞉ ||2-83-45

அந்த மன்னர்கள், பல்வேறு ரத்தினங்களையும், அர்ப்பணிப்புமிக்க ஐநூறு கன்னிகையரையும் பெற்றுத் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர்.

ருதே பாண்டு³ஸுதாண்வீரான்வாரிதா நாரதே³ன தே |
நிமேஷாந்தரமாத்ரேண தத்ர க³த்வா மஹாத்மனா ||2-83-46

மறுபுறம் சிறப்புமிக்க நாரதர் ஒரு கணத்திற்குள் பாண்டுவின் வீர மகன்களிடம் சென்று, அவர்களைத் தடுத்ததால் அவர்கள் அந்தக் காணிக்கையில் எந்தப் பங்கையும் பெற்றுக் கொள்ளவில்லை.

துஷ்டைஸ்தைரஸுரா ஹ்யுக்தா ராஜன்பூ⁴மிபஸத்தமை꞉ |
ஸர்வகாமஸம்ருத்³தா⁴ர்தை²ர்ப⁴வத்³பீ⁴꞉ க²க³மை꞉ ஸ்வயம் ||2-83-47

அதன்பேரில் மகிழ்ச்சி அடைந்த முன்னணி மன்னர்கள் அந்த அசுரர்களிடம், “வானத்தில் செல்லவல்லவர்களும், இன்பத்திற்குரிய பொருட்கள் அனைத்தையும் பெற்றவர்களுமான உங்களைப் போன்ற தெய்வீக வீரர்களால்,

அர்சிதா꞉ ஸ்ம யதா²ந்யாயம் க்ஷத்ரம் கிம் வ꞉ ப்ரயச்ச²து |
க்ஷத்ரம் சார்சிதபூர்வம் ஹி தி³வ்யைர்வீரைர்ப⁴வத்³விதை⁴꞉ ||2-83-48

இதற்கு முன்னர்ப் பலமுறை க்ஷத்திரியர்கள் துதிக்கப்பட்டிருக்கின்றனர். இப்போதும் அவர்கள் முறையாக உங்களால் கௌரவிக்கப்பட்டனர். பதில்மதிப்பாக உங்களுக்கு அவர்கள் என்ன தர வேண்டும்?” என்று கேட்டனர்.

நிகும்போ⁴(அ)தா²ப்³ரவீத்³த்⁴ருஷ்ட꞉ க்ஷத்ரம் ஸுரரிபுஸ்ததா³ |
அனுவர்ணயித்வா க்ஷத்ரஸ்ய மாஹாத்ம்யம் ஸத்யமேவ ச ||2-83-49

தேவர்களின் பகைவனான நிகும்பன் இதைக் கேட்டு இன்பத்தில் நிறைந்தான். அவன், க்ஷத்திரியர்களின் பெருமையையும், வாய்மையையும் விளக்கிவிட்டு அவர்களிடம்

யுத்³த⁴ம் நோ ரிபுபி⁴꞉ ஸார்த⁴ம் ப⁴விஷ்யதி ந்ருபோத்தமா꞉ |
ஸாஹாய்யம் தா³துமிச்சா²மோ ப⁴வத்³பி⁴ஸ்தத்ர ஸர்வதா² ||2-83-50

“ஓ! முன்னணி மன்னர்களே, இன்று எங்கள் பகைவருடன் நாம் போரிட வேண்டும். உங்கள் சக்திக்குத் தகுந்த வகையில் நீங்கள் எங்களுக்கு உதவி செய்வீராக” என்றான்.

ஏவமஸ்த்விதி தானூசு꞉ க்ஷத்ரியா꞉ க்ஷீணகில்பி³ஷா꞉ |
பாண்ட³வேயாந்ருதே வீராஞ்ச்²ருதார்தா²ந்நாரதா³த்³விபோ⁴ ||2-83-51

ஓ! தலைவா, நாரதரிடம் இருந்து உண்மையை அறிந்து கொண்ட பாண்டுவின் வீர மகன்களைத் தவிர, க்ஷத்திரியர்களில் பாவம் நிறைந்த அனைவரும் நிகும்பனின் சொற்களைக் கேட்டு, “அப்படியே ஆகட்டும்” என்றனர்.

க்ஷத்ரியா꞉ ஸந்நிவிஷ்டாஸ்தே யுத்³தா⁴ர்த²ம் குருநந்த³ன |
பத்ன்யஸ்து ப்³ரஹ்மத³த்தஸ்ய யஜ்ஞவாடம் க³தா அபி ||2-83-52

{ஓ! குரு குலத்தோனே, அதன்பிறகு அந்த க்ஷத்திரியர்கள் போருக்கு ஆயத்தமாகினர். பிரம்மதத்தரின் மனைவியரும் யஜ்ஞசாலையை அடைந்தனர்}

க்ருஷ்ணோ(அ)பி ஸேனயா ஸார்த⁴ம் ப்ரயயௌ ஷட்புரம் விபு⁴꞉ |
மஹாதே³வஸ்ய வசனமுத்³வஹன்மனஸா ந்ருப ||2-83-53

மறுபுறம், ஓ! மன்னா, பலம்நிறைந்தவனான கிருஷ்ணன், தன் மனத்தில் மஹாதேவனின் {சிவனின்} சொற்களை நினைவுகூர்ந்து, தன் படையுடன் ஷட்புரத்திற்குப் புறப்பட்டான்.

ஸ்தா²பயித்வா த்³வாரவத்யாமாஹுகம் பார்தி²வம் ததா³ |
ஸ தயா ஸேனயா ஸார்த⁴ம் பௌராணாம் ஹிதகாம்யயா ||2-83-54

தலைவன் வாசுதேவன் {கிருஷ்ணன்}, குடிமக்களின் நலன் விரும்பி ஆஹுகனை {உக்ரசேனனைத்} துவாரகையில் விட்டுவிட்டு படையுடன் ஷட்புரத்தை அடைந்து

யஜ்ஞவாடஸ்யாவிதூ³ரே தே³வோ நிவிவிஷே² விபு⁴꞉ |
தே³ஷே² ப்ரவரகல்யாணே வஸுதே³வப்ரசோதி³த꞉ ||2-83-55

வசுதேவனின் ஆணையின் பேரில் வேள்விக்களத்தின் அருகில் ஒரு மங்கலமான இடத்தில் முகாமிட்டான். பலம்நிறைந்தவனும், அழகனுமான கிருஷ்ணன்,

த³த்தகு³ல்மாப்ரதிஸரம் க்ருத்வா தம் விதி⁴வத்ப்ரபு⁴꞉ |
ப்ரத்³யும்னமடனே ஷ்²ரீமான்ரக்ஷார்த²ம் விநியுஜ்ய ச ||2-83-56

புதர்களைக் கொண்டு அடைதற்கரிதான இடமாக அந்த முகாமை மாற்றி, அங்கே பிரத்யும்னனைக் காவற்பணியில் ஈடுபடுத்தினான்” என்றார் {வைசம்பாயனர்}.

இதி ஷ்²ரீமஹாபா⁴ரதே கி²லேஷு ஹரிவம்ஷே² விஷ்ணுபர்வணி
ஷட்புரவதே⁴ க்ருஷ்ணஸ்ய ஷட்புரக³மனே
த்ர்யஷீ²திதமோ(அ)த்⁴யாய꞉

————–—————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாஸ பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-