ஸ்ரீ திருவரங்கன் -ஸ்ரீ நரஸிம்ஹன்- சேர்த்தி அனுபவ -அருளிச் செயல்கள் ஸ்ரீ ஸூ க்திகள்–

ஸ்ரீ பெரியாழ்வார் -35-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ ஆண்டாள் -10-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ திரு மழிசைப் பிரான் -14-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ குலசேகரப் பெருமாள் -31-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -55-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ திருப் பாண் ஆழ்வார் 10-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் -73-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ நம்மாழ்வார் -12-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் 1-பாசுரம் மங்களாசாசனம்
ஸ்ரீ பூதத்தாழ்வார் 4-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ பேயாழ்வார் -2-பாசுரங்கள் மங்களாசாசனம்

மொத்தம் –247–பாசுரங்கள் மங்களாசாசனம்

——————-

ஸ்ரீ பெரியாழ்வார் ஸ்ரீ திருவரங்கன் ஸ்ரீ நரஸிம்ஹன்- சேர்த்தி அனுபவம்-

வல் எயிற்று கேழலுமாய் வாள் எயிற்று சீயமுமாய்
எல்லை இல்லாத் தரணியையும் அவுணனையும் இடந்தானூர்
எல்லியம்போது இரும் சிறை வண்டு எம்பெருமான் குணம் பாடி
மல்லிகை வெண் சங்கூதும் மதிள் அரங்கம் என்பதுவே – 4-8 8-

உரம் பற்றி இரணியனை உகிர் நுதியால் ஒள்ளிய மார்பு உறைக்க ஊன்றிச்
சிரம் பற்றி முடி இடிய கண் பிதுங்க வாய் அலரத் தெழித்தான் கோயில்
உரம் பெற்ற மலர்க் கமலம் உலகு அளந்த சேவடி போல் உயர்ந்து காட்ட
வரமபுற்ற கதிர் செந்நெல் தாள் சாய்த்து தலை வணங்கும் தண அரங்கமே -4-9-8 –

தேவுடைய மீனமாய் யாமையாய் ஏனமாய் அரியாய் குறளாய்
மூவுருவில் ராமனாய் கண்ணனாய் கல்கியாய் முடிப்பான் கோயில்
சேவலோடு பெடை அன்னம் செங்கமல மலர் ஏறி யூசலாடி
பூவணை மேல் துதைந்து எழு செம்பொடியாடி விளையாடும் புனல் அரங்கமே -4-9 9-

————–

ஸ்ரீ திருப் பாண் ஆழ்வார்-ஸ்ரீ திருவரங்கன் ஸ்ரீ நரஸிம்ஹன்- சேர்த்தி அனுபவம்-

பரியனாகி வந்த அவுணன் உடல் கீண்ட அமரர்க்கு
அரிய வாதிப்பிரான் அரங்கத்து அமலன் முகத்துக்
கரிய வாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்ட வப்
பெரிய வாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே —-8

————

ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் -ஸ்ரீ திருவரங்கன் ஸ்ரீ நரஸிம்ஹன்- சேர்த்தி அனுபவம்-

ஏனம் மீன் ஆமையோடு அரியும் சிறு குறளுமாய்த்
தானுமாய தரணித் தலைவன் இடம் என்பரால்
வானும் மண்ணும் நிறையப் புகுந்து ஈண்டி வணங்கும் நல்
தேனும் பாலும் கலந்து அன்னவர் சேர் தென்னரங்கமே —5-4-8-

வளர்ந்தவனைத் தடம் கடலுள் வலி யுருவில் திரி சகடம்
தளர்ந் துதிற யுதைத்தவனைத் தரியாதன்றி ரணியனைப்
பிளந்தவனைப் பெரு நிலம் ஈரடி நீட்டி நீட்டிப் பண்டு ஒரு நாள்
யளந்தவனை யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே –5-6-4-

எங்கனே யுய்வர் தானவர் நினைந்தால் இரணியன் இலங்கு பூண் அகலம்
பொங்கு வெங்குருதி பொன் மலை பிளந்து பொழி தரும் அருவி ஒத்து இழிய
வெங்கண் வாள் எயிற்று ஓர் வெள்ளி மா விலங்கல் விண்ணுறக் கனல் விழித்து எழுந்தது
அங்கனே ஒக்க வரி யுருவானான் அரங்க மா நகர் அமர்ந்தானே —5-7-5–

—————-

ஸ்ரீ நம்மாழ்வார் -ஸ்ரீ திருவரங்கன் ஸ்ரீ நரஸிம்ஹன்- சேர்த்தி அனுபவம்-

சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும்
‘திருவரங்கத்துள்ளாய்!’ என்னும்;
வந்திக்கும் ஆங்கே மழைக் கணீர் மல்க
‘வந்திடாய்’ என்றென்றே மயங்கும்;
‘அந்திப்போ தவுணன் உடலி டந்தானே!
அலைகடல் கடைந்த ஆர் அமுதே!
சந்தித்துன் சரணம் சார்வதே வலித்த
தையலை மையல் செய் தானே!–7-2-5-

——————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: