ஸ்ரீ பாஷ்யம் -மங்கள ஸ்லோகம்
அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூத வ்ராத ரக்ஷைக தீஷே
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ருஹ்மணி ஸ்ரீ நிவாஸே
பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்தி ரூபா –
அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே –ஜகத் காரணத்வம் –உயர்வற உயர் நலம் உடையவன் -அர்த்த விசேஷம்
விநத -மதி நலம் அர்த்தம் -பக்தியால் சத்தை பெற்றமை
மதிநலம் எனக்கு அருளினன் இல்லாததால் முன்பு சத்தை இல்லாமையையை தெரிவித்து அருளினார்
பக்தி வந்த பின்பு என் மனனே என்று சத்தை வந்தமையை வெளியிட்டு அருளினார்
விவித பூத வ்ராத -சம்பந்த சம்பந்திகளுக்கும் பலம் உண்டு என்று அருளிச் செய்கிறார்
பொய் நின்ற –யாம் -என்றும் -கேசவன் தமர் –எமர் -என்றும் அருளிச் செய்தது போல் இங்கும்
ரக்ஷைக தீஷே -துயர் அறு சுடர் அடி -அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வக இஷ்ட பிராப்தி
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ருஹ்மணி ஸ்ரீ நிவாஸே
பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்தி ரூபா -பிரார்த்தித்தே பெற வேண்டும் என்று காட்டி அருளுகிறார்
ப்ரார்த்த நீயம் என்பதை ஆவ்ருத்தி ரஸ க்ருத -ஸூத்ரம்
ஜிஜ்ஞாஸா -இச்சிக்க வேண்டும்
நிதித்யாஸி தவ்ய-ஸ்ருதி அர்த்தம்
பக்தி -பகவத் காமம்
யா ப்ரீதிர் அவிவேகா நாம் விஷயேஷ்வ நபாயி நீ
த்வாம் அநு ஸ்மரதஸ் ஸாமெ ஹ்ருதயான் மாப ஸர்பது —
அவிவேகிகள் விஷயாந்தர ப்ராவண்யம் போல் உன்னையே நீங்காது நினைத்து இருக்க
நீ நினைத்து இருக்க வேண்டும் -என்று ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான் பிரார்த்தித்த படி –
—————
அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே -யஸ் பஸ -ஸ்ருஷ்டி யாதிகளை லீலையாக உடைய
ஸர்வேஸ்வரன் யாதொரு ஆழ்வாருக்கு உண்ணும் சோறு -எல்லாம் கண்ணன்
விநத விவித பூத வ்ராத ரக்ஷைக தீஷே -மதுர கவி ப்ரப்ருதிகளுக்கு -திருவாய் மொழி இத்யாதி
ப்ரதானத்தால் ரக்ஷிக்குமவர் –
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ருஹ்மணி ஸ்ரீ நிவாஸே பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்தி ரூபா-திருக்குறுங்குடி நம்பியே ஆழ்வார்
எனக்கு அபிமதமாய் இருக்கும் ஆழ்வார் இடம் அனைவருக்கும் பக்தி -காமம் உண்டாகட்டும் என்றபடி –
—————–
ஸ ஏவ ஸ்ருஜ்யஸ் ஸ ச சர்க்க கர்த்தா -ஸ்ருஷ்டி ப்பவனும்-ஸ்ருஷ்டிக்கப் படுபவனும் அவனே
விசிஷ்டாத்வைதம்
விசிஷ்டஸ்ய அத்வைதம் -சேதன அசேதனங்கள் -சரீரம் -ஸூஷ்ம -ஸ்தூல -அவஸ்தைகளிலும்
பஹுஸ் யாம் ப்ரஜா யேவ
மத்தஸ் சர்வம்
அஹம் சர்வம்
மாநா தீநா மேய ஸித்தி
வேதாத் ஸாஸ்த்ரம் பரம் நாஸ்தி ந தைவம் கேஸவாத் பரம்
வேத வேத்ய பரே பும்ஸி ஜாதே தசரதாத்மஜே
வேத ப்ரா சேதஸா தா ஸீத் ஸாஷாத் ராமாயணாத் மநா
உளன் சுடர் மிகு ஸ்ருதியுள்
காரணத்வம்
அபாத்யத்வம்
உபாயத்வம்
உபேயத்வம்
நான்கையும் நான்கு அத்யாயங்களால் சாரீரிக மீமாம்ஸை சொல்லுமே
நலம் உடையவன் -காரணத்வத்துக்கு அஷிப்தங்களான கல்யாண குணங்கள்
உயர்வற -அபாத்யத்வம் -வருத்தம் அற்ற உயர்வு -லீலையாக அனைத்தும் செய்து அருளுபவர் -லோகவது லீலா கைவல்யம்
மயர்வு -ஜீவ ஸம்ஸார தோஷம்
மதி நலம் -பக்தி -உபாயம் மூன்றாம் அத்யாய கருத்து
அருளினான் -உப பத்தே -ஸித்த உபாயம்
அயர்வறும் அமரர்கள் அதிபதி -அர்ச்சிராதி கதிகள் ஸூசகம்
துயர் அறு -உத்தர பூர்வா கயோ –ஸூ த்ர அர்த்தம் அவித்யா நிவ்ருத்தி
சுடர் அடி தொழு -சம்பத்ய ஆவிர்பாவம் –
தே ந விநா த்ருணம் பிந சலதி –அவன் அன்றி ஒரு துரும்பும் அசையாது –
கர்த்தா காரயிதா ச ஸஹ -அவனே எல்லாம் செய்கிறவன் -செய்விக்கிறவன் –
—————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply