ஸ்ரீ பரகால ஸ்ரீ பராங்குச நாயகிகளின் வைராக்ய -நுண் இடை –அனுபவம்–

ஓதிலும் உன் பேர் அன்று மற்று ஓதாள் உருகும் நின் திரு வுரு நினைந்து
காதன்மை பெரிது கையற வுடையள் கயல் நெடுங்கண் துயில் மறந்தாள்
பேதையன் பேதை பிள்ளைமை பெரிது தெள்ளியள் வள்ளி நுண் மருங்குல்
ஏதலர் முன்னா வென் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே-2-7-5-

பேதையன் பேதை –
அறிவு கேடியான என் பெண் பிள்ளை –
விளைவு அறியாதே
இவளைப் பெற நோன்பு நோற்கும்படியான அறிவு கேட்டை உடைய –
நெடும் காலமும் கண்ணன் நீண் மலர்ப் பாதம் -திரு விருத்தம் -என்கிறபடியே –

பிள்ளைமை பெரிது –
பருவத்தில் அளவு அல்ல வாயிற்று மௌக்யத்தின் பெருமை –
லோக யாத்ரையில் வந்தால் தன் பருவத்தில் உள்ளார்க்கு உள்ள அறிவு போராது-

தெள்ளியள்-
உம் அளவில் வந்தால்
சுருதி உபநிஷத்கள் அளவிலும் அல்லள்-

வள்ளி நுண் மருங்குல் –
இவள் ஸ்வபாவத்தை அனுசந்தித்து
கை விட ஒண்ணாத படி யாயிற்று வடிவில் பசை –

பிள்ளைத் தனமும்-தெள்ளியமும்–அப்ரயோஜகம் –
வடிவு போருமாயிற்று -கை விட ஒண்ணாமைக்கு-

—————-

அலங்கெழு தடக்கை யாயன் வாயாம்பற்கு அழியுமால் என்னுள்ளம் யென்னும்
புலங்கெழு பொரு நீர்ப் புட்குழி பாடும் போதுமோ நீர் மலைக்கு யென்னும்
குலங்கெழு கொல்லி கோமள வல்லி கொடி இடை நெடு மழைக் கண்ணி
இலங்கெழில் தோளிக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே–2-7-8-

குலங்கெழு கொல்லி கோமள வல்லி
கொல்லி மலையிலே ஒரு பாவை உண்டு -வகுப்பு அழகியதாய் இருப்பது
அது போலே யாயிற்று இவளுக்கு உண்டான
ஏற்றமும் பிறப்பும் -அனுகூலரும் அடுத்துப் பார்க்க ஒண்ணாத சௌகுமார்யமும்-
என்னுடைக் கோமளக் கொழுந்து -நம்மாழ்வார் -என்னக் கடவது இறே –

கொடி இடை நெடு மழைக் கண்ணி–
கொடி போலே இருந்துள்ள இடையை உடையளாய்
ஒரு கால் கண்ணாலே நோக்கில் ஒரு பாட்டம்
மழை விழுந்தால் போலே இலக்கானார்
திமிர்க்கும் படியான நோக்கை உடையளாய்
உஜ்ஜ்வலமாக நிற்பதாய் –

இலங்கெழில் தோளிக்கு-
கீழ் சொன்னதுக்கு எல்லாம் மேலே அழகிதான தோள்களை உடையளான இவளுக்கு –

————

பொன் குலாம் பயலை பூத்தன மென் தோள் பொரு கயல் கண் துயில் மறந்தாள்
அன்பினால் உன் மேல் ஆதரம் பெரிது இவ் வணங்கினுக்குற்ற நோய் அறியேன்
மின் குலா மருங்குல் சுருங்க மேல் நெருங்கி வீங்கிய வன முலையாளுக்கு
என் கொலாம் குறிப்பில் என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே–2-7-9-

மின் குலா மருங்குல் சுருங்க மேல் நெருங்கி வீங்கிய வன முலையாளுக்கு-
மின் போலே வளையா நின்றுள்ள இடையானது
சுருங்கும்படியாக மேலே நெருங்கி வளரா நின்றுள்ள –
முன்பே இற்றது முறிந்தது -என்னும்படி யாயிற்று
இடை இருப்பது –
அதுக்கு மேலே ஆஸ்ரயத்தைப் பாராதே
நெருங்கி வளரா நின்றுள்ள அழகிய முலையை உடைய இவளுக்கு –

—————-

தஞ்சம் இவர்க்கு என் வளையும் நில்லா நெஞ்சமும் தம்மதே சிந்தித்தேற்கு
வஞ்சி மருங்குல் நெருங்க நோக்கி வாய் திறந்து ஓன்று பணித்தது உண்டு
நஞ்சமுடைத்திவர் நோக்கும் நோக்கம் நான் இவர் தம்மை அறிய மாட்டேன்
அஞ்சுவன் மற்று இவரார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே–2-8-9-

வஞ்சி மருங்குல் நெருங்க நோக்கி-
பண்டே தொட்டார் மேல் தோஷமாய்
இற்றது முறிந்தது என்னும்படி யாயிற்று இடை தான் இருப்பது
இதிலே தயை பண்ணாதே
இது துவளும்படி நோக்கினான் ஆயிற்று –

வாய் திறந்து ஓன்று பணித்தது உண்டு –
உருவ வெளிப்பாட்டில் சொன்ன வார்த்தை
இப்போது என்னால் உங்களுக்கு சொல்லப் போகாது –
அப்போது சொன்ன பாசுரம் கிடக்கச் செய்தேயும்
அதர ஸ்புரணத்திலே துவக்கு உண்டமை தோற்ற
வாய் திறந்து -என்கிறாள் –

ஓன்று
இன்னமும் அவன் சொல்லில் சொல்லும் இத்தனை
என்னால் அது அநு பாஷிக்கப் போகாது –
அதுக்கு கருத்து
இடை ஒடிவது போலே இரா நின்றது
ஓடியாதபடி என் தோளால் அணைப்பேனோ
என்று போலே-
(இடை மத்யம பதமான நமஸ் ஆசை சுருங்கி வைக்ராக்யம் –
நான் என்னை ரஷிக்க மாட்டேன் அறிந்தவள் )

————–

அன்னையும் அத்தனும் என்று அடியோமுக்கு இரங்கிற்றிலள்
பின்னை தன் காதலன் தன் பெரும் தோள் நலம் பேணினளால்
மின்னியும் வஞ்சியையும் வென்றிலங்கும் இடையாள் நடந்து
புன்னையும் அன்னமும் சூழ் புனலாலி புகுவர் கொலோ ?–3-7-7-

மின்னையும்
வஞ்சிக் கொம்பையும்
தோற்பிக்கும் இடையை உடையவள் நடந்து

———–

ஒசிந்த நுண்ணிடை மேல் கையை வைத்து நொந்து நொந்து
கசிந்த நெஞ்சினளாய்க் கண்ண நீர் துளும்பச் செல்லுங்கொல்?
ஒசிந்த ஒண் மலராள் கொழுநன் திருக்கோளூர்க்கே
கசிந்த நெஞ்சினளாய் எம்மை நீத்த எம் காரிகையே.–6-7-8-

ஒசிந்த நுண் இடை –
இவள் நடவாதே இருந்தாலும், நினைத்தால் வயிறு எரிய வேண்டும்படி காண் இடை இருப்பது!

நுண்ணிடை மேல் கையை வைத்து –
நடு ஒன்று இல்லை என்று அறிகின்றிலள். தன் கையை வைக்கவும் பொறாதே அன்றோ தன் இடை தான்;
“மின்னையும் வஞ்சியையும் வென்று இலங்கும் இடையாள்” – பெரிய திருமொழி, 3. 7 : 7.-என்று,
அவன் கூடப் போகச் செய்தேயும் அஞ்ச வேண்டும் படியான இடை அன்றோ.
ஒசிதல் – துவளுதல். நுண்ணியதாய் தேரிதான இடை.
பல சொல்லி என்? இடை ஒன்று இல்லை என்கை. அதாவது,
இற்றது முறிந்தது இப்போது, பின்னை’ என்று பயப்படவேண்டும்படியாய் இருக்கை.

ஒசிந்த நுண் இடை மேல் கையை வைத்து –
இப்படி விழுக்காடு அறியாதார் உளரோ!
நாயகன் கை வைக்கப் பொறுக்குமத்தனை போக்கித் தன் கை வைக்கப் பொறுக்குமோ?
தொடுங்கால் ஒசியும் இடை அன்றோ –இது,திருவிருத்தம். பா. 37.– 2
அடியே பிடித்துக் கரோபத்ரவம் கனத்தே அன்றோ இருப்பது.–கர உபத்ரவம் -அடியே -பொய் நின்ற ஞானம் தொடங்கி-
அஷ்ட புஜ பெருமாள் ஓன்று பணித்தது உண்டு -நமஸ் சப்தம் ஆழ்ந்து அனுபவிக்க அவன் மேல் விழுந்து ரஷிப்பான்
கையுள் தன் முகம் வைக்கும் நையும் —
பர பிரயத்தனமும் கூடாது ஸுவ பிரயத்தனமும் கூடாது
‘கையை வைத்து’ என்கிறாள், மலையை வைத்து என்னுமாறு போலே.

நொந்து நொந்து –
கை வாங்க மாட்டாள்; நோவாதிருக்க மாட்டாள்;
சஹஜமான பகைவர்களோடே கூடி ஜீவித்துக் கிடக்கலாம்;
வந்தேறிகள் கீழே பிழைக்க ஒண்ணாதே அன்றோ.
கை வியாபாரம் ஸூவ ப்ரயத்னம் –

நொந்து நொந்து –
மிகவும் நொந்து.
முதலிலே இல்லாமையிலே நிலையான இடையிலே தன பாரம் கொண்டு ஆற்ற ஒண்ணாதிருக்க,
வந்தேறியான கை கொண்டு பொறுக்க ஒண்ணுமோ?
பக்தி இயற்க்கை -சஹஜ சத்ரு -மார்பகம் -பக்தி தாங்க வேண்டும் -வைராக்கியம் இடை தாங்கித் தான் ஆக வேண்டும்
கைகள் வியாபாரம் தன் முயற்சி தாங்க வேண்டாமே

————-

பொன்னிவர் மேனி மரகதத்தின் பொங்கிளம் சோதி யகலத்தாரம்
மின்னிவர் வாயில் நல் வேதம் ஓதும் வேதியர் வானவராவர் தோழீ
என்னையும் நோக்கி என் அல்குலும் நோக்கி ஏந்திளம் கொங்கையும் நோக்குகின்றார்
அன்னை என் நோக்கும் என்று அஞ்சுகின்றேன் அச்சோ ஒருவர் அழகிய வா —9-2-1-

மர்மங்களிலே கடாஷியா நின்றார்
பார்த்த பார்வை ஒரு கால் மாற வைக்கிறிலர் –

————–

மூவரில் முன் முதல்வன் முழங்கார் கடலுள் கிடந்து
பூ வளருந்தி தன்னுள் புவனம் படைத்து உண்டு உமிழ்ந்த
தேவர்கள் நாயகனைத் திரு மால் இருஞ்சோலை நின்ற
கோவலர் கோவிந்தனைக் கொடியேரிடை கூடுங்கொலோ–9-9-1-

இப்படி உபய விபூதி உக்தனாய் இருந்து வைத்து – கிருஷ்ணனாய் வந்து அவதரித்து –
பசுக்களுக்கும் இடையருக்கும் வந்த கிலேசத்தைப் பரிஹரித்து – கோவிந்தாபிஷேகம் பண்ணினவன் –
பிற்பாடராய்- இடக்கை வலக்கையும் அறியாத சம்சாரிகளுக்கும் முகம் கொடுக்கைக்காக
திருமலையிலே வந்து சந்நிஹிதன் ஆனான் –
அவனோடு அணைக்கைக்கு ஈடான அழகை உடையவள்-அணைந்தே விட வல்லளோ –

————-

மின்னிடை மடவார்கள் நின்னருள் சூடுவார் முன்பு நான தஞ்சுவன்
மன்னுடை இலங்கை அரண்காய்ந்த மாயவனே!
உன்னுடைய சுண்டாயம் நானறிவன் இனியது கொண்டு செய்வதென்?
என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ!–6-2-1-

உன்னுடைய அருளைப் பெறுதற்குரியவர்களான மின்னல் போன்ற இடையையுடைய பெண்களுக்கு
முன்னே நீ படுகின்ற துன்பத்திற்கு நான் அஞ்சுவேன்;

அவர்கள் பாடு ஏறப் போகிறவன்
இடையிலே–நடுவிலே -இடை பற்றி வார்த்தை –
இது ஒன்றைச் சொன்னான், அது தான் நிலை நில்லாது’ என்று
பார்த்து‘வாராய்! நீ உபேக்ஷித்தவர்களிடத்திலே இத் துணை கால் தாழ்ந்தால்,
உன்னை விரும்பியிருப்பார் பலராகையாலே போர நெருக்குண்புதி கண்டாய்.
அவர்கள் தம்படி இருந்தபடி என்தான்? இது ஒரு தேக குணமும் ஆத்ம குணமும் இருக்கும்படியே!
‘மின்னிடை’ என்றது, மற்றைய தேக குணங்கட்கும் உபலக்ஷணம்.
மடம் – என்றது, நாணம் மடம் அச்சம் பயிர்ப்பு முதலான ஆத்தும குணங்களுக்கும் உபலக்ஷணம்.
‘மடவார்’ என்ற பன்மையாலே, ஒருவர்க்கும் உற்றானாயிராமை சொல்லுகிறது.

நீ ஒன்றை ஒன்றாக நினைக்கும்படி பண்ணுவிப்பதே அவர்கள் சிலர்.
இவனுடைய அலமாப்பைக் கொண்டே அவர்களுடைய வைலக்ஷண்யத்தை அநுமிக்கிறார்கள் அன்றோ.
அதஸ்மின் தத் புத்தி -ரஜஸ் பார்த்து சர்ப்பம் -சர்வஜ்ஞ்னையும் பிரமிக்கும் படியான இடை அழகு –
பாவியேன், உன்னை இங்ஙனே இடையிலே பிச்சு ஏறித் துடிக்கப் பண்ணினார் யாரோ?

“மின்னிடை மடவார்கள்” என்று
இவனோடு சம்பந்தமுடையாருடைய தேக குணங்களையும் ஆத்ம குணங்களையும்
சுபாஸ்ரயமாக -சிறந்த பற்றுக் கோடாக நினைத்திருந்தபடி தோற்ற வார்த்தை சொன்னபடி என் தான்!
பிரணய ரோஷம் புற வாயிலே செல்லா நிற்கச் செய்தேயும், அக வாயில் நினைவு இது வன்றோ.
அக வாயிலும் துவேஷமே யானாலும் வஸ்து இருந்தபடி சொல்ல வேணுமே.
துவேஷத்தாலே சொல்லுமன்றும் -கிமர்த்தம் புண்டரீகாஷம் -விதுரன் க்ருஹத்தில் அன்னம் –

“யௌவனப் பருவமுள்ளவர்கள், மிக்க வனப்புள்ளவர்கள், மிருதுத் தன்மை வாய்ந்தவர்கள்,
நல்ல பலமுள்ளவர்கள், தாமரை போன்ற அகன்ற திருக் கண்களை யுடையவர்கள்” என்று
“தருணௌ ரூப ஸம்பந்நௌ ஸு குமாரௌ மஹ பலௌ
புண்டரீக விஸாலாகௌ சீர க்ருஷ்ணாஜ நாம்பரௌ”-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 19 : 14.
இது, கரனைப் பார்த்துச் சூர்ப்பணகை கூறியது.
இருவர் மானுடர் தாபதர் ஏந்திய வரிவில் வாட்கையர் மன்மதன் மேனியர் தரும நீரர் தயரதன் காதலர்
செருவின் நேரு நிருதரைத் தேடுவார்.-என்பது, கம்ப ராமாயணம் கரன் வதைப்படலம், செய். 4.
அல்லது சொல்ல ஒண்ணாதே.

மின்னிடை மடவார்கள்-
தங்கள் பாடு கிட்டினால், ‘இது ஓர் இடையே! இது ஒரு குணமே!’ என்று அவன்
ஆழங்கால் படும் துறை அறிவார்களே யன்றோ;
‘அப்படியே யன்றோ இவன் போன இடத்திலும்’ என்று இருக்கிறார்கள்.
இங்ஙன் அன்றாகில், எதிர்த் தலையைக் கண்டு சொல்லுகிறார்கள் அன்றே.
இப்படி இருப்பாரும் உண்டோ புறம்பே! என்ன,

———–

பீடுடை நான்முகனைப் படைத் தானுக்கு
மாடுடை வையம் அளந்த மணாளற்கு
நாடுடை மன்னர்க்குத் தூது செல் நம்பிக்கு என்
பாடுடை அல்குல் இழந்தது பண்பே.–6-6-4-

இடமுடைத்தான நிதம்பப் பிரதேசத்தை யுடையவள். பாடு – இடம்.
“திரௌபதியினுடைய நிதம்பப் பிரதேசத்தைக் கண்ட பெண்கள் மனத்தினாலே ஆண் தன்மையை அடைந்தார்கள்”
பாஞ்சால்யா: பத்மபத்ராக்ஷ்யா: ஸ்நாயந்த்யா: ஜகநம் கநம்
யா: ஸ்திரியோ த்ருஷ்டவத்ய: தா: பும்பாவாம் மநஸா யயு:”-என்பது, பாரதம். என்பது போன்று,
ஸஜாதீயரை அழிக்கும் வடிவழகைக் குறித்தபடி.
அவன், ஆடவர்களுடைய கண்களையும் மனத்தையும் அபஹரிக்கின்றவன் ஆனாற்போலே.
பண்பு-நீர்மை.

————

கொல்லை என்பர் கொலோ? குணம் மிக்கனள் என்பர் கொலோ?
சில்லை வாய்ப் பெண்கள் அயற்சேரி உள்ளாரும் எல்லே!
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக்கோளூர்க்கே
மெல்லிடை நுடங்க இள மான் செல்ல மேவினளே.–6-7-4-

அவன் ஸ்வரூப ஞானம் இல்லாவிட்டால், தன்னுடைய ஸ்வரூப ஞானமோ தான் இவளுக்கு உண்டாயிருக்கிறது.
இவளுக்கு விழுக்காடு அறியாமை எங்கும் ஒத்தது கண்டீர்! தன் இடையை அறிந்தாளாகில் தான் புறப்பட்டுப் போமோ?
நடுவே அறியாமல் புகுந்த பிழை அன்றோ. மிருதுவான இடையானது துவுளம் படியாக.
இந்த இடையைக் கொண்டு இவள் நடக்கப் புக்கால் எதிரே புறப்பட்டு வர வேண்டாவோ? -நமஸ் சப்தார்த்தம் அறியாமல் –
எதிரே புறப்பட்டு வராமல் செல்வக் கிடப்பாலே கிடந்தான் -குற்றம்
ரஷணம் முற்பாடனாய் இருக்க -நகராமல் கிடந்தது இருக்க வேண்டுமே -அவன் வரவு அசத்சமம் ஆக்கி -வந்தாளே-என்றுமாம்

————

மல்கு நீர்க் கண்ணொடு மையலுற்ற மனத்தினளாய்
அல்லும் நன் பகலும் நெடுமால் என்றழைத் தினிப் போய்ச்
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக்கோளூர்க்கே
ஒல்கி ஒல்கி நடந்து எங்ஙனே புகுங்கொல் ஒசிந்தே?–6-7-7-

ஓர் அடியிலே பத்து அடி இட வேண்டும் படியாயிருக்கை.
ஒசிந்து – துவண்டு.

ஒல்கி ஒல்கி நடந்து ஒசிந்து எங்ஙனே புகுங்கொல் –
ஒடுங்கி ஒடுங்கி நடந்து, அது பொறாமல் துவண்டு, எங்ஙனே புகக் கடவளோ?

நடந்து எங்ஙனே புகுங்கொல் –
நடந்திலளாகில் போய்ப் புகலாம் என்றிருக்கிறாள் காணும்.
அன்ன மென்னடைப் பூங்குழலி யாகையாலே–பெரிய திருமொழி -11-2-5-
இவ் வன்ன நடை கொண்டு புக மாட்டாள் என்றிருக்கிறாள்.

———-

ஒசிந்த நுண்ணிடை மேல் கையை வைத்து நொந்து நொந்து
கசிந்த நெஞ்சினளாய்க் கண்ண நீர் துளும்பச் செல்லுங்கொல்?
ஒசிந்த ஒண் மலராள் கொழுநன் திருக்கோளூர்க்கே
கசிந்த நெஞ்சினளாய் எம்மை நீத்த எம் காரிகையே.–6-7-8-

ஒசிந்த நுண் இடை –
இவள் நடவாதே இருந்தாலும், நினைத்தால் வயிறு எரிய வேண்டும்படி காண் இடை இருப்பது!

நுண்ணிடை மேல் கையை வைத்து –
நடு ஒன்று இல்லை என்று அறிகின்றிலள். தன் கையை வைக்கவும் பொறாதே அன்றோ தன் இடை தான்;
“மின்னையும் வஞ்சியையும் வென்று இலங்கும் இடையாள்” – பெரிய திருமொழி, 3. 7 : 7.-என்று,
அவன் கூடப் போகச் செய்தேயும் அஞ்ச வேண்டும் படியான இடை அன்றோ.
ஒசிதல் – துவளுதல். நுண்ணியதாய் தேரிதான இடை.
பல சொல்லி என்? இடை ஒன்று இல்லை என்கை. அதாவது,
இற்றது முறிந்தது இப்போது, பின்னை’ என்று பயப்பட வேண்டும்படியாய் இருக்கை.

ஒசிந்த நுண் இடை மேல் கையை வைத்து –
இப்படி விழுக்காடு அறியாதார் உளரோ!
நாயகன் கை வைக்கப் பொறுக்குமத்தனை போக்கித் தன் கை வைக்கப் பொறுக்குமோ?
தொடுங்கால் ஒசியும் இடை அன்றோ –இது,திருவிருத்தம். பா. 37.– 2
அடியே பிடித்துக் கரோபத்ரவம் கனத்தே அன்றோ இருப்பது.–கர உபத்ரவம் -அடியே -பொய் நின்ற ஞானம் தொடங்கி-
அஷ்ட புஜ பெருமாள் ஓன்று பணித்தது உண்டு -நமஸ் சப்தம் ஆழ்ந்து அனுபவிக்க அவன் மேல் விழுந்து ரஷிப்பான்
கையுள் தன் முகம் வைக்கும் நையும் —
பர பிரயத்தனமும் கூடாது ஸுவ பிரயத்தனமும் கூடாது
‘கையை வைத்து’ என்கிறாள், மலையை வைத்து என்னுமாறு போலே.

—————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: