ஸ்ரீ பரகால ஸ்ரீ பராங்குச நாயகிகளின் திருக்கண் அழகு –

திவளும் வெண் மதி போல் திரு முகத் தரிவை செழும் கடல் அமுதினில் பிறந்த
வவளும் நின்னாகத்திருப்பது மறிந்தும் ஆகிலும் ஆசை விடாளால்
குவளை யங்கண்ணி கொல்லி யம் பாவை சொல்லு நின் தாள் நயந்திருந்த
விவளை உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் இட வெந்தை யெந்தை பிரானே–2-7-1-

குவளை யங்கண்ணி –
அவளில் இவளுக்கு உண்டான ஏற்றம் சொல்லுகிறது –
திருமுகம் என்று சமுதாய சோபை இறே அவளுக்கு சொல்லுகிறது –
குவளை யங்கண்ணி –என்று
அவயவ சோபையால் உண்டான ஏற்றம் சொல்லுகிறது இவளுக்கு –
அவன் தன்னில் காட்டில் –
அஸி தேஷணை-என்று அவள் கண்ணுக்கு உண்டான ஏற்றதோ பாதியும் போருமாயிற்று
அவளில் காட்டில் இவள் கண்ணுக்கு உண்டான ஏற்றம் –
(துஷ்கரம் ராமோ பிரபு -துல்ய- சீலம் வயோ வ்ருத்தம் -ராகவோ அர்ஹதி வைதேகி –
அஸி தேஷணை–அந்தக்கண் அழகிக்கு -திருவடி )

நின் தாள் நயந்து இருந்த –
இதுவும் அவளில் காட்டில் இவளுக்கு உண்டான ஏற்றம்
அவள் மார்வை ஆசைப்பட்டாள்
இவள் திருவடிகளை ஆசைப்பட்டாள்
அவன் வாசி அறிந்தார் அவன் மார்வை ஆசைப் படுவார்கள் –
அவளோடு கூடினவன் வாசி அறிந்தார் அவன் திருவடிகளை பற்றும் இத்தனை இறே –
(அத் திரு அவனைப் பற்றும் இத் திரு இருவரையும் பற்றும்-அப்ரமேயம் தத் தேஜஸ் ஜனகாத்மஜா-
மிதுனமே உத்தேச்யம் )

——————–

குலங்கெழு கொல்லி கோமள வல்லி கொடி இடை நெடு மழைக் கண்ணி
இலங்கெழில் தோளிக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே–2-7-8-

கொடி போலே இருந்துள்ள இடையை உடையளாய் ஒரு கால் கண்ணாலே நோக்கில் ஒரு பாட்டம்
மழை விழுந்தால் போலே இலக்கானார் திமிர்க்கும் படியான நோக்கை உடையளாய்
உஜ்ஜ்வலமாக நிற்பதாய் –

—————–

குயிலாலும் வளர் பொழில் சூழ் தண் குடந்தைக் குடமாடீ !
துயிலாத கண் இணையேன் நின் நினைந்து துயர்வேனோ !-3-6-8-

உறங்காமைக்கு இரண்டு லஷ்மணர்களைப் போலே யாயிற்று கண்கள் இரண்டும் –
(உறங்கா வில்லி என்னலாம் )
இளைய பெருமாள் பிறந்த முகூர்த்ததில் ஆயிற்று இவள் கண்களும் பிறந்தது –
ஐ ஹௌ-என்று ஒரு நாளாகா விட வேண்டாவாயிற்று
(நித்ராஞ்ச –தூக்கம் சோம்பல் களைப்பு -அனைத்தையும் ஒரு நாளாகா விட்டார் )
ஆந்த்ர திருஷ்டியும் உறங்காதபடி பண்ண வேணுமோ
இக் கண்ணுக்கு இலக்காகா விட்டால் உட் கண்ணுக்கு இலக்காக வேணுமோ –
நெஞ்சம் என்னும் உட் கண் -பெரிய திரு அந்தாதி -என்னக் கடவது இறே
அணைக்க ஒட்டா விட்டால் அகவாய் பெரிய திரு நாளாய் செல்ல வேணுமோ –

————

கெண்டை யொண் கண் மிளிரக் கிளி போல் மிழற்றி நடந்து
வண்டமர் கானல் மல்கும் வயலாலி புகுவர் கொலோ ?–3-7-2-

கெண்டை யொண் கண் மிளிரக் –
அபூர்வ தர்சனங்களாலே கண்ட பதார்த்தங்களை இவை என்ன என்ன –
வினவு கண்ணாலே கேட்கை –

கிளி போல் மிழற்றி –
கண்ணால் கேட்டு கேளாதவற்றை வாயாலே கேட்டு
(கண்ணிலே நவரசமும் காட்டலாமே இங்கு வாயாலே சிலவும் கண்ணாலே பலவும் கிடக்கிறாள் )

நடந்து –
அவனுக்கு முன்னோக்கிப் போக ஒண்ணாதபடி அவன் பின்னே நடந்து
(இவள் அழகு மயக்க பின்னேயே பார்க்கும்படி

வில்லேர் நுதல் வேல் நெடுங்கண்ணியும் நீயும்
கல்லார் கடுங்கானம் திரிந்த களிறே )

—————

அம்பன்ன கண்ணாள் அசோதை தன் சிங்கத்தை
நம்பனை நாடி நறையூரில் கண்டேனே –6-8-6-

அம்பன்ன கண்ணாள் அசோதை தன் சிங்கத்தை
பிள்ளை உறங்கா வல்லி தாசர்
பிள்ளைக்கு தாய் வழி ஆகாதே கண் -என்று அருளிச் செய்வர் –
(தன்யன் -பெருமை உடையன் ஆவான் தாய் போல் பிள்ளை இருந்தால் வசனமும் உண்டே )

—————-

வில்லேர் நுதல் வேல் நெடுங்கண்ணியும் நீயும்
கல்லார் கடுங்கானம் திரிந்த களிறே–7-1-5-

வில்லோடு ஒத்த நுதலையும்-வேலோடு ஒத்த கண்களையும் உடையளுமாய்
உனக்கும் கூட ஆகர்ஷகமான சௌகுமார்யத்தை உடைய பெரிய பிராட்டியாரும்-

—————

வடித் தடங் கண் மலரவளோ வரையாகத் துள்ளிருப்பாள் என்கின்றாளால்
கடிக் கமலம் கள்ளுகுக்கும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ —8-1-5-

மார்புக்கு ஆபரணம் பிராட்டி போலே காணும் –
சேர்ப்பாரும் அருகே இருக்க -நான் எத்தைச் சொல்லி அகலுவது -என்னா நின்றாள் –
எனக்கு பற்றாசானார் இருக்க நான் என்ன கண் அழிவு சொல்லிக் கடக்க போவது

ஓர் ஆளும் ஒரு நோக்கும் நேராய்
போக்தாக்கள் அளவன்றிக்கே இருக்கிற
கண்ணை உடைய என் ஸ்வாமிநி யன்றோ திரு மார்பிலே இருக்கிறாள் –

——————

மண்ணாளா வாள் நெடும் கண்ணி மது மலராள்
கண்ணாளா கண்ண புரத் துறை யம்மானே —8-10-4-

மண்ணாளா வாள் நெடும் கண்ணி மது மலராள்-கண்ணாளா-
விஷம் தாரகமான உனக்கு ஆகாதார் இல்லை –
நீ கை விடப் பார்க்கும் அன்றும் விட ஒண்ணாத புருஷகாரம் உண்டு –
மண்ணாளா – பொறை தானாய் இருக்காய்- தான் பொறை யாளாய் இருக்கும் அளவன்றிக்கே
செய்த குற்றங்களை அவன் திரு உள்ளத்திலே படாத படி
ந கச்சின் ந அபராத்யதி – என்று அவனையும் பொறுப்பிக்கும் அவள் ஆயிற்று –
நோக்காலும் போக்யதையாலும் அவன் தன் வழியே போம்படி நியமிக்கும் அவள் ஆயிற்று –

—————-

தேசமெல்லாம் வணங்கும் திரு மாலிருஞ்சோலை நின்ற
கேசவ நம்பி தன்னைக் கெண்டை யொண் கண்ணி காணும் கொலோ —9-9-6-

பிரசஸ்த கேசனாய் இருக்கிறவனை –கெண்டை யொண் கண்ணி காணும் கொலோ –
அக் குழலுக்கு தகுதியான அவயவ சோபையை உடையவள் கிட்ட வல்லளேயோ –

—————–

மைந்நம்பு வேற் கண் நல்லாள் முன்னம் பெற்றவளை–10-7-4-

அஞ்சனம் பற்றின வேல் போலே யாயிற்று
கண்ணில் கருமையும் புகரும் இருக்கிறபடி –
அவ்வளவு அல்லாத ஆத்ம குணத்தை உடையவள் பெற்ற –

———-

பெரும் தடங்கண்ணி சுரும்புறு கோதை பெருமையை நினைந்திலை பேசில்
கருங்கடல் வண்ணா கவுள் கொண்ட நீராம் இவள் எனக் கருதுகின்றாயே –10-9-8-

போக்த்தாக்கள் அளவு அல்லாத படி மிக்க பரப்பை உடைத்தான கண் –
சுரும்புறு கோதை-வண்டுகள் மாறாத மாலையோடு கூடினமயிர் முடியை உடையவள் –
பெருமையை நினைந்திலை பேசில் –இவள் உடைய வைலஷண்யம் ஒன்றையும் புத்தி பண்ணிற்று இல்லை –

————–

ஏழை பேதை இராப்பகல் தன்
கேழில் ஒண் கண் கண்ண நீர் கொண்டாள் கிளர்
வாழ்வை வேவ இலங்கை செற்றீர் இவள்
மாழை நோக்கு ஒன்றும் வாட்டேன்மினே –-2-4-10-

தனது -ஒப்பற்ற -உயர்ந்த -அழகிய -திருக் கண்களில் -அருவி போல நீரைக் கொண்டாள்
மருண்ட பார்வை ஒன்றே பாக்கி -அனைத்தும் இழந்தாள்
முக்தமான மானின் நோக்கு போலே -போதரிக் கண்ணினாய் -சஞ்சரிக்கும் மானின் விளி -புஷ்பம் அபகரிக்கும் அழகு –
ஒன்றையாகிலும் ஷயிப்பியாது ஒழிய வேண்டும் -வாட்டம்
இவள் நோக்கு கிடீர் அனைவருக்கும் உஜ்ஜீவன ஹேது –
ஆழ்வாரை படைத்த பலன் கிட்ட வேண்டுமே -உனக்கே ஆபத்து கிடீர் -எல்லாருக்கும் -உனக்கும் உஜ்ஜீவன ஹேது என்றவாறு –
ஆஹ்லாத சீத நேத்ராம்பு –த்ரஷ்டவ்ய சர்வ தேஹபி -அனுபவித்து கண்ண நீர் -சர்வ சப்தத்தில் அவனையும் சேர்த்தே வியாக்யானம்

கண்ண நீர் இல்லாவிடிலும் கண்டார்க்கு ஆலத்தி வழிக்க வேண்டும் படியான கண் -சர்வ காலமும் அஸ்ரு பூர்ணம் ஆயிற்று
தாமரையில் முத்துப் பட்டால் போலே இக் கண்ணும் கண்ண நீருமாய் இருக்கும் இருப்பை காட்டில் எறிந்த நிலா வாக்குவதே
இவ்விருப்புக்கு கிருஷி பண்ணி பல வேளையில் இழப்பதே
பொன்னும் முத்தும் விளையும் படி இறே கிருஷி பண்ணிற்று
இப்போது இவள் இழவுக்கு அன்றியே அவன் இழவுக்கு யாயிற்று இவள் கரைகிறது –

வைவர்ண்யம்-ஆழ்வார் திரு மேனி -பசலை நோய் -வெளிறின நிறம் -பொன் விளைந்ததே
முத்து -கண்ண நீர் -அது விளைந்தது -தாமரைக் கண்ணில்
சம்ச்லேஷம் உன்மத்ம்ய-ரசமானால் –சாத்மிக்கவும் ஆர்த்தி வளர்க்கவும் -சற்றே பிரியே -கிருஷி பலித்தது
-கண்ண நீரை மாற்றி கலக்கப் பெறாமல் -ஆரண்ய சந்த்ரிகை -காட்டில் நிலவு –
கண்ண நீர் விடாத ஞான தசை -பிரேம தசை இந்த திருவாய்மொழி போல்வன -கொதிக்கும் சோறு -சமையும் பொழுது இழக்கவோ
ஸ்ரீ வைஷ்ணவர்கள் விண்ணப்பம் செய்ய -பெரும் பாழில் -ஷேம கிருஷி பலன் –பக்தி உழவன்

இவளுடைய முக்தமான நோக்கு ஒன்றும் கிடக்கும் படி கார்யம் பார்க்க வேணும்
மாழை -என்று இளமை
நோக்கு ஒன்றும் வாட்டேன்மினே — இவள் தானே முடிந்து போகிறாள் -நாங்கள் தானே இழக்கிறோம்
ஜீவிக்க இருக்கிற நீர் வேணுமாகில்-உம்முடைய ஜீவனத்தை நோக்கிக் கொள்ளப் பாரும்

—————-

இவளைப் பெறும் பரிசு இவ்வணங்கு ஆடுதல் அன்று;அந்தோ!
குவளைத் தடங்கண்ணும் கோவைச் செவ்வாயும் பயந்தனள்;-4-6-5-

குவளைத் தடம் கண்ணும் கோவைச் செவ்வாயும் பயந்தனள் –‘குவளை அம் கண்ணி’ என்கிறபடியே,
குவளைப் பூப்போலேயாய் அனுபவிக்கின்றவர்கள் அளவு அல்லாத பரப்பையுடைத்தான கண்ணும்,
‘கோவை வாயாள்’ என்கிறபடியே, கோவைப்பழம் போன்ற சிவந்த உதடும் பசலை நிறத்தையடைந்தாள்.
‘தொண்டை அம் செங்கனி வாய் நுகர்ந்தானை’-பெரிய திருமொழி-3-7-2- என்றும்,
‘மணநோக்கம் உண்டான்’-பெரிய திருமொழி -8-10-1- என்றும் சொல்லுகிறவாறே ‘இவை அல்லவோ அவனுக்கு ஊண்?
ஆதலால், அவனுடைய வாய்புகுசோறு அன்றோ பறி உண்டாகிறது?’ என்கிறாள்.(ஞானியை விக்ரகத்தோடே ஆராதிக்குமே )
பகவானைப் பிரிந்ததனால் உண்டான விரஹத்துக்கும் அகஞ்சுரிப்படாதவள்,
வேறு தெய்வங்களின் சம்பந்தத்தாலும் அத்தெய்வங்களின் அடியார்களுடைய சம்பந்தத்தாலுமாகப் பசலை நிறத்தை அடைந்தாள்.

————

மிக்க ஞான மூர்த்தியாய வேத விளக்கினை என்
தக்க ஞானக் கண்களாலே கண்டு தழுவுவனே.–4-7-10-

எனக்குத் தக்காற்போலே ஒரு ஞானக்கண் உண்டாய், அதனாலே கண்டு அனுபவிப்பன்.
காணப் பெறாமையாலே அன்பு துக்கத்திற்குக் காரணம் ஆகிறாப்போலே, நெஞ்சில் பிரகாசிப்பதுவும் துக்கத்திற்குக் காரணம்
ஆகிறாப்போலே, நெஞ்சில் பிரகாசிப்பதுவும் துக்கத்திற்குக் காரணம் ஆகாநின்றது. என்றது,
‘மயர்வு அற மதிநலம் அருளினன்’ என்கிற ஞான பத்திகள் இரண்டும் கழுத்துக் கட்டியாய்விட்டன,’ என்றபடி.
‘மறந்து பிழைக்க ஒண்ணாதபடி எனக்குத் தக்காற்போலே ஒரு ஞானமும் வேண்டுமோ?’ என்கிறார்.
கழுத்துக் கட்டி – கழுத்தைக் கட்டுவது; ‘பாதகம்’ என்றபடி. அதாவது, ‘கண்டு அனுபவிக்கவும் ஒட்டாது,
மறந்து பிழைக்கவும் ஒட்டாது,’ என்றபடி. என்பது.

—————-

என் செய்யும் ஊரவர் கவ்வை? தோழீ! இனி நம்மை
என் செய்யத் தாமரைக் கண்ணன் என்னை நிறை கொண்டான்
முன் செய்ய மாமை இழந்து மேனி மெலி வெய்தி
என் செய்ய வாயும் கருங்கண்ணும் பயப் பூர்ந்தவே.–5-3-2-

என் செய்யத் தாமரைக் கண்ணன் என்னை நிறை கொண்டான் –
‘என்னுடைய ஆத்மாவும் ஆத்மாவோடு சம்பந்தப்பட்ட பொருள்களும் நீ இட்ட வழக்கு அன்றோ’ என்கிற
அக வாயில் தண்ணளி தோற்றும்படி வாத்சல்யத்தாலே குதறிச் சிவந்த தாமரையைப் போன்ற திருக் கண்களாலே குளிர நோக்கி
‘நானும் என்னுடைமையும் உன்னது’ என்று சொல்லுவாரைப் போலே வந்து
இத் தலையிலுள்ள எல்லாச் செல்வத்தையும் கொள்ளை கொண்டு போனான். என்றது,
எனக்குக் கொடுப்பவனைப் போலே இருக்க நோக்கி, என்னை உரி கூறை கொண்டு போனான் என்றபடி.
சொல் ஒன்றும் செயல் ஒன்றுமாய் இருந்தன; “தூது செய் கண்கள் கொண்டு ஒன்று பேசி” என்னக் கடவதன்றோ.
சத்யம் வத சர -உண்பது தர்மம் வத சொல்லி விட்டு செய்யாமல் -போலே-

பிரிவோடே இருந்து மடல் ஊர்ந்து பழி விளையா நிற்கச் செய்தேயும்
என்னுடையவன்’ என்னலாம்படி காணும் அவன் கிட்டினால் இருக்கும்படி;
ஆதலின், ‘என் தாமரைக் கண்ணன்’ என்கிறாள்.

என் செய்ய வாயும் கருங்கண்ணும் பயப்பு ஊர்ந்த –
அவயவியாகத் தேடுகிறேனோ, அவயவங்கள் தோறும் வற்றி வருகிறபடி பாராயோ? என்கிறாள்.
இப்போது“செய்ய வாயும் கருங்கண்ணும்’ என்று தன்னுடைய அவயவங்களைத் தானே புனைந்துரைக்கிறாள் அல்லள்;
அவன் வந்து கிட்டின போது அவனுடைய ஸ்ரீ சகஸ்ர நாமங்களுக்கு -ஸ்தோத்ரம் -விஷயம் இவையே அன்றோ,
அதனைச் செவியாலே கேட்டிருக்குமே, அதனாலே சொல்லுகிறாள். என்றது,

தான் இழந்த முறை சொல்லா நிற்கச் செய்தே,
அவன் உகந்த முறை தோன்றா நின்றது காணும் இவளுக்கு என்றபடி.

அவன் வாய் புகு சோறு பறி யுண்ணா நின்றது என்பாள் “செய்ய வாயும் கருங்கண்ணும் பயப்பு ஊர்ந்த” என்கிறாள்.
“செங்கனி வாய் நுகர்ந்தான்”, “மண நோக்கம் உண்டான்”-பெரிய திரு மொழி-8-10-1- என்னக் கடவதன்றோ. –
இவள் வாயும் கண்ணும் அவனுக்கு ஆகாரம் அன்றோ –
செய்ய வாயும் கருங்கண்ணும் பயப்பு ஊர்ந்த-கடலும் மலையும் குடியிருப்புமான இடங்கள் எல்லாம் பிரளய காலத்தில் ஒரே வெள்ளமாய்
இருக்குமாறு போலே எங்கும் ஒக்க வைவர்ண்யமே யாயிற்று.-ஒரே வெளுப்பு ஆயிற்று.
விஷம் பரந்தாற் போலே காணக் காண வண்டல் இட்டு வை வர்ண்யமானது பரப்பு மாறிற்று.

——————-

வேலினேர் தடங்கண்ணினார் விளையாடு சூழலைச் சூழவே நின்று
காலி மேய்க்க வல்லாய்! எம்மை நீ கழறேலே.–6-2-4-

அநுபவிக்கின்றவர்களுடைய அளவு அல்லாதபடி பரப்பை யுடைத்தாய்,
ஓர் ஆளும் ஒரு நோக்கும் நேரான கண்களை யுடையராயிருக்கிற பெண்களினுடைய கண்களிலே துவக்குப்பட்டு
அவ்வருகு போக மாட்டாதே நின்று போலே காணும் பசுக்களை மேய்ப்பது! என்றது,
“கார்த் தண் கமலக் கண் என்னும் நெடுங்கயிறு படுத்தி என்னை, ஈர்த்துக் கொண்டு
விளையாடும் ஈசன் தன்னைக் கண்டீரே”-நாய்ச்சியார் திரு. 14 : 4.- என்று,
தன் கண்ணழகைக் கண்ட பெண்கள் படும்பாடு எல்லாம் இவனை அவர்கள் படுத்த வல்லவர்கள் என்பதனைத் தெரிவித்தபடி.

—————-

தவள ஒண் சங்கு சக்கரமென்றும் தாமரைத் தடங்கண் என்றும்
குவளை ஒண் மலர்க் கண்கள் நீர் மல்க நின்று நின்று குமுறுமே.–6-5-1-

தாமரைத் தடம் கண் என்றும் –
அந்த ஆழ்வார்கள் அளவும் வந்து அலை எறிகிற திருக் கண்கள்.
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் சொன்னதும்
பங்கயக் கண்ணன் -ஆங்கு அலரும் குவியும் -ஸூர்ய சந்த்ரர்கள் அன்றோ இவர்கள் –
தாமரையை ஒரு வகைக்கு ஒப்பாகச் சொல்லலாய், அநுபவிக்கின்றவர்கள் அளவன்றிக்கே இருக்கின்ற
திருக் கண்கள் ஆதலின் ‘தடம் கண்’ என்கிறாள்.
ஒரு மலை எடுத்தாற் போலே சொல்லுக்குச் சொல்லு தளர்ந்து நடு நடுவே விட்டு விட்டுச் சொல்லுகிறாள்
என்பாள் ‘என்றும் என்றும்’ என்கிறாள்.
திவ்வியாயுதங்களையும் கண்ணழகையும் காட்டியாயிற்று இவளைத் தோற்பித்தது.

குவளை ஒண் மலர் கண்கள் நீர் மல்க –
இந்தக் கண்களைக் கண்டால் தாமரைத் தடங்கண்கள் அன்றோ நீர் மல்க அடுப்பது?
கண்ணும் கண்ணீருமாய் இவள் இருக்கிற இருப்பைக் கண்டு கொண்டு இருக்க அன்றோ உங்களுக்கு அடுப்பது?
“பகவத் அநுபவத்தால் உண்டான சந்தோஷத்தாலே குளிர்ந்த கண்ணீரை யுடையவனாய்,
மயிர் கூச்சு எறிகின்ற சரீரத்தை யுடையவனாய், பரமாத்மாவின் குணங்களால் எப்போதும் ஆவேசமடைந்தவனாய்,
மக்களால் பார்க்கத் தகுந்தவனாய் இருப்பான் ஞானி” என்பது விஷ்ணுதத்வம்.
“ஆஹ்லாத சீத நேத்ராம்பு: புளகீக்ருத காத்ரவான் ஸதா பர குணாவிஷ்டோ
த்ரஷ்டவ்ய: ஸர்வதேஹிபி:”-என்பது, ஸ்ரீ விஷ்ணு தத்வம்

இதனால், எப்பொழுதும் தரிசனம் செய்துகொண்டு இருப்பதற்கு ஒரு தேசம் தேடிப்
போக வேண்டா காணும் என்பதனைத் தெரிவித்தபடி.

குவளைப் பூப் போலே அழகிய கண்கள் நீர் மல்க.
அவள் தன்னுடைய பெண் தன்மையைக் காற் கடைக் கொள்ள, நீங்கள் எங்ஙனே மீட்கப் பார்க்கும்படி?
கண்ண நீர் பாய்கையாவது, பெண் தன்மை அழிதலே அன்றோ.

நின்று நின்று குமுறும் –
பேச்சுப் போய்க் கண்ண நீராய்,
கண்ண நீர் போய்த் தடுமாறுகிற நிலையிலே மீட்கப் போமோ?

——————-

திருந்து வேதமும் வேள்வியும் திரு மா மகளிரும் தாம் மலிந்து
இருந்து வாழ் பொருநல் வடகரை வண் தொலை வில்லி மங்கலம்
கருந்தடங் கண்ணி கை தொழுத அந்நாள் தொடங்கி இந்நாள் தொறும்
இருந்திருந்து அரவிந்தலோசந! என்றென்றே நைந்திரங்குமே.–6-5-8-

கரும் தடம் கண்ணி-
கண்ணழகில், -அஸி தேஷிணை-கறுத்த கண்களையுடைய பிராட்டியோடு ஒக்கும்.

தடம் கண்ணி –
அவளைக் காட்டிலும் வேறுபாடு. அவனை அநுபவிக்கையால் வந்ததன்றோ அவளுக்கு;
அவள் கண்களைக் காட்டிலும் ஏற்றம் உண்டன்றோ, அவர்கள் இருவரையும் அநுபவிக்கையாலே இவள் கண்களுக்கு;
தொழும் போதும் வடிவு அழகியராயிருப்பார் தொழ வேணுமாகாதே.

அவன் அரவிந்தலோசனன், இவள் கருந்தடங்கண்ணி.
இருவரும் ஒருமுகத்திலே காணும் அகப்பட்டது.–பரஸ்பரம் கண்களில் அன்றோ அகப்பட்டார்கள் –

————-

நினைக்கிலேன் தெய்வங்காள்! நெடுங் கண் இள மான் இனிப் போய்
அனைத்துலகு முடைய அரவிந்த லோசனனை
தினைத் தனையும் விடாள் அவன் சேர் திருக் கோளூர்க்கே
மனைக்கு வான் பழியும் நினையாள் செல்ல வைத்தனளே.-6-7-10-

நெடும் கண் இள மான் இனிப் போய் –
விழுக்காடு அறியாமையாலே புறப்பட்டுப் போனாளத்தனை கண்டீர்!
இந்தக் கண்ணுக்கு இலக்கானவர்கள் சர்ப்ப யாகத்தில் சர்ப்பங்கள் சுருண்டு வந்து விழுமாறு போலே,
தந்தாம் முதன்மையோடே வந்து விழவேணும் கண்டீர்!

இனிப் போய் –
யார் செய்யக் கூடியதை யார் தான் செய்கிறார்?
கண் படைப்பாளும் தானாய்ப் புறப்பட்டுப் போவாளும் தானாவதே!
இத்தலை செல்லாதிருத்தற்குச் ஸ்வரூப ஞானமே அமையுமே யன்றோ.-ததேக உபாயத்வம் –
பாரதந்த்ர்ய ஞானம் கண் உடையவள்-போகலாமோ -தாய் –
நெடும் கண் -ஸ்வ யதன நிவர்த்தகம் அத்யந்த பாரதந்த்ர்ய ஞானம் -இவள் கண் அழகில் அன்றோ அவன் ஈடுபடுவது

அனைத்து உலகுமுடைய அரவிந்த லோசனனை –
இவ்வளவே காண் அவன் கண்ணுக்குத் தோற்றிருப்பது.
ஓர் உபய விபூதி மாத்திரம் கண்டீர் அவன் கண்ணுக்கு ஈடுபட்டிருப்பது ;
அவன் தன்னையும் தோற்பிக்கும் கண் அன்றோ இவளது. -அனைத்து லோகம் தானே -ஒரு உபய விபூதி தானே
அவனையும் சேர்த்து அன்றோ இவளது –அவன் அனைத்து உலகுமுடைய அரவிந்த லோசனன்;

இவள் நெடுங்கண் இளமான்.
அவன், தானும் தன் விபூதியும் இவள் கண்ணிலே ஒரு மூலையிலே அடங்கும்படி யாயிருக்கை.
கண்ணில் அல்லாத பரப்பும் இவள் பருவமும் குமர்கிடந்து போமத்தனை.-
காலியாக உள்ள கண் இடம் அனுபவிக்க ஆள் இல்லை -நெடும் கண் –

——————-

‘சேல்கொள் தண் புனல்சூழ் திருவரங்கத்தாய்!’
என்னும்’என் தீர்த்தனே!’ என்னும்;
கோல மா மழைக்கண் பனி மல்க இருக்கும்
என்னுடையக் கோமளக் கொழுந்தே.–7-2-7-

காட்சிக்கு இனியானவாய்ப் பரந்து. சிரமஹரமான கண்கள் நீர் மல்க இராநின்றாள்.
கண்ணும் கண்ணநீருமான அழகு, காட்டில் எறித்த நிலா ஆவதே!
இக்கண்ண நீருக்குச் சாதனத்தைச் செய்து பல வேளையிலே இழப்பதே!

—————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: