ஸ்ரீ ஒப்பிலி அப்பன் ப்ரஹ்மோத்சவம் -ஸ்ரீ ஆசு கவி வில்லூர் ஸ்ரீ நிதி ஸ்வாமிகள் அருளிச் செய்த ஸ்ரீ -வஸூமதி ஸதக ஸ்லோகங்கள் -ஸ்ரீ திருக்குடந்தை ஸ்ரீ உ .வே . வெங்கடேஷ் ஸ்வாமிகள் –

ஸ்ரீ நிவாஸன் திரு அவதாரம்
பங்குனி மாச ஏகாதசி திருவோண நக்ஷத்ரம் அபிஜித் முஹூர்த்தம் திரு அவதாரம்
ஸ்ரீ பூமா தேவி திருமணம் கொண்டு அருளவும்
ஆஸ்ரிதர்களுக்கு அருள்வதற்காகவும்

தபஸ்யே பால் குனே மாஸே ஏகாதஸ்யாம் திதவ் முநே
புண்யே ஸ்ரவண நஷத்ரே முஹுர்த்தே அபி ஜித் ஆஹ்வயே
ஆஜ காம வஹா யோகீ ஸாஷாத் நாராயணோ ஹரி
ஸ தேவ ஸ்ரீ நிவாஸாக்யோ பூமி தேவ்யா பதி விபு
வஸூந்தரா விவாஹார்த்தம் லோக அநுக்ரஹ காம்யயா –ஸ்தல புராண ஸ்லோகம்

பங்குனி திருவோணத்துடன் நிறைவு பெரும் ப்ரஹ்மோத்சவம்

முதல் நாள் மாலை -இந்த்ர விமானம்
ஐந்தரம் விமானம் அதிருஹ்ய சமுஜ்ஜ்வலந்தீம்
இந்த்ரேண சர்வ ஜகதாம் தயிதேன சாகம்
இந்த்ராதி தேவ வினுதாம் அவ லோக்ய மாதா
இந்த்ர பிரியா இதி பவதீம் நிஜகாத வேத –
பூமா இந்த்ரப் பிரியா -வேதம் சொல்லுமே -ஆகவே இந்த்ர விமானத்தில் சேர்த்தி உலா

இரண்டாம் நாள் மாலை -சந்த்ர பிரபை வாஹனம்
ஒளஷ தீச ப்ரபா வாஹ மத்யக ஸூன பூஷித
நிஷ் கலங்கம் யசோ தத்தே ஸூ வம்ஸ கர பங்கஜ –
வெண்ணிலவை களங்கம் அற்றதாக ஆக்கி அருளவே இந்த வாஹனம்

மூன்றாம் நாள் சேஷ வாஹனம்
த்வாம் யோ வஹேத பஹவ கில தம் வஹந்தி
தத்ர பிரமாணம் இஹ மே புஜகாதி போஸவ்
யஸ் த்வாம் நி ஜேன சிரஸா வினதோ ததான
சர்வை அமீபி அதுனா த்ரியதே மஹே தே
பூமா தேவியைத் தாங்கும் ஆதி சேஷனைத் தலையால் கொண்டாடுவார்களே
அத்தைக் காட்டி அருளவே இந்த சேஷ வாஹனம் –

நான்காம் நாள் -பெருமாள் கருட வாஹனம் -தாயார் ஹம்ஸ வாஹனம்
த்விஜே ஷு ஹம்ஸோ பவதீம் ததாதி
த்விஜே ஷு ய குண்டலி நாம் நிஹந்தா
நாதம் த்வதீயம் யுவயோ ப்ரதீதம்
ஸ்புடம் ஹி லோகே ப்ருது தார தம்யம்
பரம ஹம்ஸர்கள்- உள்ளத்தில் தாங்கும் -பிரதிநிதியான ஹம்ஸ வாஹனம் -எழுந்து அருளும் -தாயார்
அடியார் பிரதிபந்தகங்கள் போக்கி அருளும் -சர்ப்பங்களை அழிக்கும் -பெரிய திருவடி வாஹனம் –

ஐந்தாம் நாள் -பெருமாள் ஹனுமந்த வாஹனம் -தாயார் -கமல வாஹனம் –
பட்டாபிஷேக திருக்கோலத்தில் சேவை சாதித்து திருவடியை மகிழ்விக்கிறாள்
லங்கா புர்யாம் கில ஆஸீத் அதி கமலம் அலம் ஸ்வாமினீ யா ஸதீநாம்
தஸ்யா மாதா ஹி சேயம் ஸ்வயம் இதி ஹனுமான் தர்சயதி ஆதரேண

ஆறாம் நாள் -யானை வாஹனம்
ராஜதே கஜ வரே விராஜதே
ராஜ ராஜ நத பாத பங்கஜே
நாயகோ கஜ கதி ஸூ ஹம்ஸகா
த்வம் து ஹம்ஸ கமநேதி சாம்ப்ரதம்
சேர்த்தி யானை வாகனத்தில்
அங்கு அவனோடும் உடன் சென்று அங்கு ஆனை மேல் மஞ்சனம் ஆட்டக் கனாக் கண்டேன்
தோழீ நான் -என்று ஹம்ஸ நடையான ஸ்ரீ ஆண்டாள் ஆசை தீரும்படியே சேவை –

ஏழாம் நாள் காலையில் -சூர்ணாபிஷேகம் –
ஆந்தோ லி காந்த அவனீ ரமணம் யுவாநாம்
ஆ ஸாத்ய ஸாது திஷணா ஸமயம் ஸ சாயம்
த்ருஷ்ட்வா ரதிம் கலயிதும் க்ருத கௌது கேயம்
தத்ர ஷமேதி பவதீம் அவ லோக்ய த்ருத்யா
சேவையைக் கண்டதுமே அடியார்கள் அனைவரும் அவன் மேல் காதல் மிக்கு ஆள் படுவார்களே –

புன்னை மர வாஹனத்தில் பெருமாளும் -தோளுக்கு இனியானில் தாயாரும் மாலையில் புறப்பாடு
புன்னாகம் அம்ப புருஷே புரத அதி ரூடே
சந்நாகம் அம்ச மதுரே பவதீ ததாதி
கிந்நாம தேன ஸஹ வாஹநதா கதா ஸ்யாத்
யந்நாம கோப வனிதாஸூ ததா க்ஷமா வான்
கோபிகள் வஸ்திர அபஹாரம் செய்து குருந்த மரம் ஏறி அனுபவித்த வ்ருத்தாந்தம் நினைவூட்டவே இந்த சேவை –

எட்டாம் நாள் -குதிரை வாகனத்தில் பெருமாள் -தோளுக்கு இனியானில் தாயார்
ஸூபக துரக வாஹே நாயகே அஸ்மின் த்விதீயே
த்வம் அஸி நனு புரஸ்தாம் அம்ச ரம்யே நிவிஷ்டா
துரக முக தவ ஏதத் யுஜ்யதே யுஜ்யதே அதோ
துரக வதன பேத்து ச இதி மந்த ஸ்மி தாஸ்யா
ஸ்ரீ ஹயக்ரீவராக திருவவதாரம் செய்து அருளி யது பொருத்தமே என்று
மந்தஸ்மிதம் செய்து கொண்டே தாயார் சேவை சாதித்து அருளுகிறார் –

ஒன்பதாம் நாள் திருத்தேர் ஓட்டம்
ரதஸ் யாந்த ஸ்தாயாம் த்வயி ஜனனி பவ்யே தவ பாதேயயவ்
தஸ்யாம் வீத்யாம் ரத இதி லசன் வர்தத இதி —
ஆஸ்ரிதர்களை ரஷித்து அருளவே வீதிக்கு தேரிலே பவனி செய்து அருளுகிறார் –

பத்தாம் நாள் காலை பல்லக்கு புறப்பாடு
ஆந்தோலிகா ஸூ பவதீம் ஜனதா வஹந்தீ
ஸாகாச பத்தன கதாம் தரணீம் ஸ்மரந்தீ
ஆனந்தம் அம்ப நியதம் ஹ்ருதயே பஐந்தீ
சாரோ ஹயந்தீ அத ச பாதி அவரோ ஹயந்தீ

இரண்டாம் நாள் தொடங்கி எட்டாம் நாள் வரை காலையில் திருப்பல்லக்கு சேவை உண்டே
விண்ணகரத்தில் மண் மடந்தை நித்யவாஸம் இங்கேயே அன்றோ

டோலாய மானம் கோவிந்தம் மஞ்சஸ்தம் மது ஸூ தனம்
ரதஸ்தம் கேஸவம் த்ருஷ்ட்வா புனர் ஜன்ம ந வித்யதே
ப்ரஹ்ம உத்சவத்தில் பெருமாள் தாயாரை சேர்த்து சேவிப்பாருக்கு புனர் ஜென்மம் இல்லையே –

——————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: