ஸ்ரீ சைல தயா பாத்ர தனியன் பெருமை -ஸ்ரீ உ வே வேங்கட கிருஷ்ணன் ஸ்வாமிகள் —

ஸ்ரீ அழகிய மணவாள மாமுனிகள் (ஐப்பசித் திருமூலம்)
ஸ்ரீசைலேச தயா பாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம் |
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம் ||

ஸ்ரீ திருமலை ஆழ்வார் கருணைக்குப் பாத்திரரும்,
ஞானம் பக்தி முதலிய குணங்கள் கடல் போல் நிரம்பியவரும்
ஸ்ரீ யதீந்த்ரர் ஸ்ரீ ராமாநுசரை எப்போதும் அனுசரித்திருப்பவருமான
ஸ்ரீ அழகிய மணவாள மாமுனிகளை வணங்குகிறேன்.

தெய்வ வாக்கில் வந்த மஹிமை உண்டே –
இந்த ஸ்லோகம் அருளிச் செய்த ஸ்ரீ பெரிய பெருமாளே பண்டு
ஸ்ரீ சக்ரவர்த்தி திரு மகனாகவும் ஸ்ரீ கண்ணபிரானாகவும் திரு அவதாரம் செய்து அருளினவன் –

மா முனி வேள்வியைக் காத்து அவபிரதம் ஆட்டிய அடு திறல் அயோத்தி எம் அரசே அரங்கத்தம்மா -என்றும்
கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் அண்டர் கோன் அணி அரங்கன் -என்றும்
மதுரை மா நகரம் தன்னுள் கவளமால் யானை கொன்ற கண்ணனை அரங்க மாலை -என்றும்
திரு அவதரித்த காலத்திலும் சில வியக்திகள் இடம் ஆஸ்ரயித்து திரு உள்ளத்தில் வெறுப்புடன் இருக்க
அது தீரும் படி ஸதாச்சார்ய லக்ஷண பூர்த்தியுடன் இவரை ஆஸ்ரயிக்கப் பெற்றோமே
என்று ஹ்ருஷ்டராய் இருந்தமை
இந்த ஸ்லோகத்தில் ஒவ் ஒரு விசேஷணத்தாலும் ஸ்புடமாகக் காட்டப்படுவதைக் காணலாம் –

ஸ்ரீ ராமாவதாரத்தில் ஒரு ஸ்ரீ சைல தயாபாத்ரமான ஒரு வியக்தியை -சைலம் ரிஸ்யமுக பர்வதம் –
அதுக்கு ஈசர் மதங்க முனிவர் -அவருக்கு தயா பாத்திரம் சுக்ரீவன் –
ஸூ க்ரீவம் சரணம் கத-ஸூ க்ரீவம் நாதம் இச்சதி -என்று இருந்த பெருமாள் மனஸ்தாபம் பட
நேர்ந்த குறை தீர திருமலை ஆழ்வார் என்னும் திருவாய் மொழிப்பிள்ளை இன்னருளுக்கு
இலக்கான நம் ஸ்வாமியை அடைந்து குறை தீரப் பெற்றான்

அங்கு சமுத்திரம் ராகவோ ராஜா சரணம் கந்தும் அர்ஹதி-என்ற விபீஷணன் வாக்கின் படி சரண் அடைந்தும்
சாபமாநயா ஸுமித்ரே சராம்ச்ச ஆஸீ விஷாபமான் சாகரம் சோக்ஷயிஷ்யாமி -என்று முடிந்த குறை தீர
இந்த ஞான பக்தி வைராக்யக்யம் மிக்குள்ள ஆர்ணவம் பற்றி குறை தீரப் பெற்றான்

அப்பனுக்கு சங்கு ஆழி அளித்து அருளும் பெருமாள் என்று போற்றப்படும் ஸ்ரீ ராமானுஜர் -இதில்
மந்திபாய் வட வேங்கட மா மலை வானவர்கள் சாந்தி செய்ய நின்று அருளிய
அரங்கத்து அரவின் அணையானுக்கு மனஸ்தாபம் இல்லை என்றாலும் –
தன்னை யுற்று ஆட் செய்வதில் காட்டிலும் தன்னை யுற்று ஆட் செய்யும் தன்மையினோரை யுற்று
ஆட் செய்வாரையே சிறந்தவர் என்று பாடக் கேட்டவர் ஆகையால்
யதீந்த்ரை விட யதீந்த்ர ப்ரவணரை இறைஞ்சி மகிழ்ந்தான்

விச்வாமித்ர சாந்தீப முனிகளை அடைந்து பட்ட குறைகள் தீர ஸமஸ்த கல்யாணக் குணக் கடலான
வைராக்ய நீதியான ரம்யஜா மாத்ரு முனியை ஆஸ்ரயித்து ஹ்ருஷ்டர் ஆனான்

மன்னு புகழ் சேர் மணவாள மா முனிவன்
தன்னருளே தஞ்சம் எனத் தாம் கொண்ட மின்னு புகழ்
வேதியர்கள் தாள் அன்றி வேறு அறியாதார்
மேதினியில் விண்ணவருக்கும் மேல் அன்றோ –

———————————–

ஸ்ரீ சைல அஷ்டகம் -ஸ்ரீ எறும்பி அப்பா ஸ்வாமிகள்-–6-

ஸ்ரீ மான் ரெங்கேஸ்வரோ யத் வகுல வர வஸோ பாஷ்ய ஸாரார்த்த ஜாதம்
ஸ்ருத்வா ஸுவ்ம்யோ பயந்தா முனி வர சரணே ஸாத்ர பாவம் ப்ரபந்ந
ஸ்ரீ சைலே ஸேதி பத்யம் ககபதி நிலேயே மண்டபே தத் ஸமாப்தவ்
உக்த்வாஸ் அத்யே தவ்யமே தன் நிகில நிஜ க்ருஹே ஸ்வாதி ஸத் தத் ததாதவ் –

ஸாத்ர பாவம்-ஸிஷ்ய பாவம் –
உக்த்வாஸ் அத்யே தவ்யம் ஏதன் -முதல் முதலில் இத்தையே சொல்ல வேண்டும்
நிகில நிஜ க்ருஹே-அனைத்து க்ருஹங்களிலும் திவ்ய தேசங்களிலும்

ஸ்ரீ சம்பிரதாய சந்திரிகை–ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள்–

ஆனந்த வருடத்தில் கீழ்மை ஆண்டில்
அழகான ஆனி தனில் மூல நாளில்
பானுவாரம் கொண்ட பகலில் செய்ய
பௌரணையில் நாளிட்டுப் பொருந்தி வைத்தே
ஆனந்த மயமான மண்டபத்தில்
அழகாக மணவாளர் ஈடு சாற்ற
வானவரும் நீறிட்ட வழக்கே என்ன
மணவாள மா முனிகள் களித்திட்டாரே –7–

சென்றவர்கள் இருவருமே சேர வந்து
திருவரங்கன் தினசரியைக் கேளா நிற்பச்
சந்நிதி முன் கருடாழ்வார் மண்டபத்தில்
தாம் ஈடு சாற்றுகின்ற சமயம் தன்னில்
பொன்னி தனில் நீராடி புகழ்ந்து வந்து
புகழ் அரங்கர் சந்நிதி முன் வணங்கி நிற்பச்
சந்நிதியின்று அரங்கர் தாமே அந்தத்
தனியனுரை செய்து தலைக் கட்டினாரே –5–

பிரமாதீச வருஷம் -ஆனி -பவுர்ணமி -மூலம் -12-6-1433-அன்று தனியன் அவதாரம்

ஸ்ரீ குரு பரம்பரை அனுசந்தானம் லஷ்மீ நாத -தனியன்
ஸ்ரீ ராமானுஜர் -யோ நித்யம் அச்யுதா -தனியன்
ஸ்ரீ நம்மாழ்வார் -மாதா பிதா -தனியன்
ஸ்ரீ ஆழ்வார்கள் ஸ்துதி -பூதம் சரஸ் ஸ-தனியன்

மா முனிகளுக்கு முன்பு உள்ள தனியன் அனுசந்தான க்ரமம் இப்படியே இருக்க –
அவற்றுக்கும் முன்பு இந்தத் தனியனை அனுசந்திக்க ஆணை பிறந்தது
இதுவே குரு பரம்பரைக்கும் பொருந்தும் –
ஸ்ரீ வைஷ்ணவ பரம்பரையில் உள்ள ஆச்சார்யர்கள் அனைவருக்கும் பொருந்தும் படியை மேல் பார்ப்போம்

ஸ்ரீ பெரிய பெருமாள்
ஸ்ரீ சைலம் -திருமலை –
திருமலையே ஆயன் புன வேங்கை நாறும் வெற்பு -என்றும்
திருமலை மேல் எந்தைக்கு -என்றும் ஸ்ரீ பேயாழ்வார்
அந்த ஸ்ரீ சைலத்துக்கு ஈசன் திருவேங்கடவன் -அங்கு இன்றும் ஸ்ரீ ரெங்க மண்டபம் உண்டே –
நம் பெருமாள் பல ஆண்டுகள் அங்கே எழுந்து அருளினது நாம் அறிந்ததே

ஸ்ரீ சைலத்தைத் தனக்குப் பாத்திரம் ஆக்கிக் கொண்ட ஸ்ரீ பெரிய பெருமாள் என்றும் கொள்ளலாம் –
கானமும் வானரமும் வேடுமுடை வேங்கடமான -உலகுக்கு எல்லாம் தேசமாய் திகழும் மலையைத்
தன்னுடைய தயைக்குப் பாத்திரம் ஆக்கி
தென்னாடும் வடனாடும் தொழ நின்ற திருவரங்கம் -நல்லோர்கள் வாழும் நளிர் அரங்கம் -விட்டு
பல்லாண்டுகள் எழுந்து அருளி இருந்தான் அன்றோ –
திருவரங்கன் தீ பக்த்யாதி குண ஆர்ணவன்
யஸ் ஸர்வஞ்ஞ-ஸர்வ வித் -என்றபடி ஞானக்கடல்
ஸ்நேஹ பூர்வம் அநு த்யானம் பக்தி -ப்ரீதி -அடியவர்கள் இடம் அளவற்ற ப்ரீதி கொண்டவன் -அன்றோ

யதீந்த்ரர் இடம் இவன் கொண்ட ப்ராவண்யம் லோக ப்ரஸித்தம் –
அவரும் மயலே பெருகும் படி ப்ராவண்யம் அரங்கன் மேலே கொண்டவர்

ரம்யஜா மாதா -அழகிய மணவாளன் தானே –

முனி -மனந சீலன் -உறங்குவான் போல் யோகு செய்யும் பெருமான் அன்றோ

—————-

2-ஸ்ரீ பெரிய பிராட்டியார் –
ஸ்ரீ திருமலையைத் தனக்குப் பாத்திரமாகி பல்லாண்டுகள் எழுந்து அருளி இருந்த நம்பெருமாள்
ஸ்ரீ சைலன் என்று கொண்டு அவன் தயைக்குப் பாத்திரம் அன்றோ இவளும்
இவளே ஸ்ரீ பத்மாவதிப் பிராட்டியாக ஸ்ரீ சைலனான திரு வேங்கடம் உடையானுக்குப் பாத்ரம் ஆனாள் –
திருவேங்கடத்தைத் தனது தயைக்குப் பாத்திரம் ஆக்கி ஐஸ்வர்யம் பொலிய ஆக்கி அருளினாள் என்றுமாம் –

அவன் ஸ்வரூபத்தாலே விபு -இவள் ஞானத்தால் விபு –
அகலகில்லேன் இறையும் -என்று தண்ணீர் தண்ணீர் என்னுமவள் ஆகையால் பக்தி ஆர்ணவம் அன்றோ –

விந்த்ய மலை அடிவாரத்தில் இருந்து யதீந்த்ரரை மீட்டு -வேடுவச்சியாக தண்ணீர் கேட்டு –
ப்ராவண்யம் காட்டி அருளினாள் அன்றோ –
அவரது ப்ராவண்யம்-ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாஸே -ஸ்ரீ பாஷ்யத்திலும் ஸ்ரீ கத்யத்திலும் காணலாமே –

ரம்யஜா மாதரம் -அழகே வடிவு எடுத்தவள் -உலகுக்கு எல்லாம் தாய் அன்றோ
முனி -சேதனர் உஜ்ஜீவனத்துக்காகவே அவனை அழகாலும் இவர்களை அருளாலும் திருத்துபவள் அன்றோ –

———–

3-ஸ்ரீ சேனை முதலியார்
வானவர் வானவர் கோன் உடன் சிந்து பூ மகிழும் திருவேங்கடம் -என்றும்
வானவர் வானவர் கோன் உடன் நமன்று எழும் திருவேங்கடம் -என்றும்
அவன் தயைக்குப் பாத்திரமானவர் அன்றோ –

த்வதீய புக்த உஜ்ஜித சேஷ போஜிநா த்வயா நிஸ் ருஷ்டாத்மப ரேண-ஸ்ரீ ஆளவந்தார் வாக்கின் படி
உலகையே நிர்வகிக்கும் ஞானத்தையும்
அவன் அமுது செய்து அருளிய ப்ரஸாதத்தையே அமுது செய்கின்ற பக்தியும் உடையவர் அன்றோ

விஸ்வக்சேனோ யதிபதிரபூத் –சப்தாதி –32-என்றபடி யதீந்த்ர அவதார பிரவணர் அன்றோ இவர்

ரம்யஜா மாதுர் மனநம் கரோதீதி ரம்யஜா மாத்ரு முனி -அவனையே ஸர்வ காலம் த்யானம் செய்பவர் அன்றோ –

——————————-

4- ஸ்ரீ நம்மாழ்வார்
ஒழிவில் காலம் எல்லாம் -3-3-
உலகம் உண்ட பெரு வாயா –6-10-
ஸ்ரீ த்வயம் பூர்வ உத்தர வாக்யார்த்தம் இரண்டுமே திருவேங்கடப் பதிகங்களே –
அவனுடைய பரிபூர்ண தயைக்குப் பாத்ரம் ஆனவர்

மதி நலம் அருளப் பெற்றவர் -தீ பக்த்யாதி குண ஆர்ணவம்

பொலிக பொலிக பொலிக –கலியும் கெடும் கண்டு கொண்மின் –
மாறன் அடி பணிந்து உய்ந்தவன்
பராங்குச பாத பக்தம்

ரம்யஜா மாதுர் மனநம் கரோதீதி ரம்யஜா மாத்ரு முனி -அவனையே ஸர்வ காலம்-
கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் என்று வாய் வெருவும்படி இருப்பவர் அன்றோ –

—————-

5-ஸ்ரீ நாத யாமுனர் தொடக்கமாக ஸ்ரீ எம்பெருமானார் ஆச்சார்ய குரு பரம்பரை –
அனைவருமே ஸ்ரீ சைல நாத பாத்ர பூதர்களே
ஞான வைராக்ய ராஸயே
அகாத பக்தி சிந்தவே

அனைவரும் எம்பெருமானார் ப்ராவண்யத்துக்கு இலக்கு ஆனவர்களே

ஸ்ரீ எம்பெருமானார் பரமாகும் பொழுது ஸ்ரீ ஆளவந்தாரே யதீந்த்ரர் என்று கொள்ளலாமே

ரம்யஜா மாதுர் மனநம் கரோதீதி ரம்யஜா மாத்ரு முனி என்றபடி அழகிய மணவாளனையே –
ஸர்வ காலம்- சிந்தித்துக் கொண்டே இருப்பவர்கள் தானே அனைவரும் –

————————-

ஸ்ரீ வைஷ்ணவ வேர் பற்று ஸ்ரீ ரெங்கமே
ஸ்ரீ மா முனிகள் ஒருவரே சகல பூர்வாச்சார்யர்கள் வடிவமாக -embodiment -திகழும் ஸ்வாமி
மா முனிகளின் அஷ்டோத்ர சத நாம ஸ்தோத்ரத்தில்
சர்வ பூர்வோத்தர ஆச்சார்ய ஸூதா சாகர ஸந்த்ரமா -என்பது உண்டே

இந்த தனியன் மற்றவைகளைப் போல் வேறே ஸ்தோத்ர பாடங்களில் இருந்து எடுக்கப்படாமல்
ஸ்ரீ பெரிய பெருமாளே திருச் சோதி வாய் திறந்து அருளிச் செய்து முதல் முதல் அனுசந்திக்க ஆஜ்ஜை செலுத்தி
இதன் மூலம் நாம் அனைவரையும் அநுஸந்திக்க வைத்து அருளினான் –

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் என்று அனுசந்திக்க
ஸ்ரீ ஆழ்வார் திரு நகரியில் எழுந்து அருளி சேவை சாதிக்கும் மூவரையும் குறிக்கும்

அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ,
சடகோபன் தண்தமிழ்நூல் வாழ, கடல் சூழ்ந்த,
மன்னுலகம் வாழ, மணவாள மாமுனியே,
இன்னுமொரு நூற்றாண் டிரும்.

இவ்வாறாக குரு பரம்பரையின் முதல் ஆசார்யரான, ஶ்ரீமந் நாராயணனே, கடைசி ஆசார்யன்
ஸ்ரீ மணவாள மாமுநிகளுக்கு சீட்ரானதால் ஆதியும், அந்தமும் ஒன்றே என்றாயிற்று.

“ஆழ்வார்கள் வாழி அருளிச் செயல் வாழி
தாழ்வாது மில் குரவர் தாம் வாழி” .
அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ
சடகோபன் தன் தமிழ் நூல் வாழ
கடல் சூழ்ந்த மண் உலகம் வாழ
மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்

ஆழ்வார்கள் வாழ மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்
அருளிச் செயல் வாழ மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்
தாழ்வாது மில் குரவர் தாம் வாழ மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்
அடியார்கள் வாழ மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்
அரங்க நகர் வாழ மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்
சடகோபன் தண் தமிழ் நூல் வாழ மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்
கடல் சூழ்ந்த மன் உலகம் வாழ மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்

ஆழ்வார்கள் வாழ அருளிச் செயல் வாழ வேண்டும்
அருளிச் செயல் வாழ தாழ்வாது மில் குரவர் தாம் வாழ வேண்டும்
தாழ்வாது மில் குரவர் தாம் வாழ அடியார்கள் வாழ வேண்டும்
அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ வேண்டும்
அரங்க நகர் வாழ சடகோபன் தண் தமிழ் நூல் வாழ வேண்டும்
சடகோபன் தண் தமிழ் நூல் வாழ கடல் சூழ்ந்த மன் உலகம் வாழ வேண்டும்
கடல் சூழ்ந்த மன் உலகம் வாழ மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இருக்க வேண்டுமே

ஸ்ரீ மதே ரம்ய ஜாமாத்ரு முநீந்த்ராய மகாத்மனே
ஸ்ரீ ரெங்க வாசினே பூயாத் நித்ய சீர் நித்ய மங்களம் –

——————-———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே வேங்கட கிருஷ்ணன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: