ஸ்ரீ-கோ மாதா–

இமயம் முதல் குமரி வரை பண்பாடு ஒன்றே.
பசுவுக்கும் பிராமணனுக்கும் மதிப்பும் மரியாதையும் கொடுப்பது இலக்கிய வழக்கு.
வாழ்க அந்தணர், வானவர் ஆனினம் (திருஞான சம்பந்தர் தேவாரம்) என்பர்.

இதையே சம்ஸ்கிருதத்தில் “கோப்ரஹ்மணேப்ய சுபமஸ்து நித்யம், லோகாஸ் சமஸ்தோ சுகினோ ப வந்து” என்பர்.
அதாவது பிராமணன் முதலான எல்லாரும் பசு முதலான எல்லா ஜீவன்களும் சுபமாக இருக்கட்டும்
உலகம் முழுதும் சுபமாக இருக்கட்டும் என்பது இதன் பொருள்.

ஏன் பசுவையும் பிராமணனையும் மட்டும் சொல்ல வேண்டும்? சுயநலம் இல்லாமல் எல்லாவற்றையும்
மற்றவர்களுக்கு அளிப்பதாலும் பாலும் வேதமும் எல்லோருக்கும் பயன்படுவதாலும்
அவர்களை முதலில் வைத்து மற்றவர்களையும் வாழ்த்தினர்.

திருக்குறளில் பசுவையும் பிராமணனையும் வள்ளுவரும் முதலிடத்தில் வைக்கிறார்.
ஆபயன் குன்றும் அறு தொழிலோர் நூல் மறப்பர்
காவலன் காவான் எனின் (குறள் 560)
ஒரு நாட்டில் ஆட்சியாளர்கள் நியாயமான ஆட்சி நடத்தாவிடில் ஆறு தொழில்களைக் கொண்ட அந்தணர்கள்
வேதங்களை மறந்து விடுவர்; பசுக்களும் பால் தராது.

புற நானூற்றில் நெட்டிமையார் (புறநானூறு பாடல் 9)
பாடிய பாடலில்— பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் பாராட்டும் பாடலில்—-
ஆவும் ஆன் இயற் பர்ப்பன மாக்களும் என்ற வரிகள் வருகிறது.
கண்ணகிக் பிராமணர்களையும் பெண்களையும் எரிக்காமல் தீயோரை மட்டும் எரி என்று மதுரையில்
அக்கினி தேவனுக்கு உத்தரவிட்டது போல பாண்டிய அரசனும் பிராமணர்களும் பசுக்களும் பெண்களும்,நோயாளிகளும்
என்று சொல்லி விட்டுப் போர் தொடுப்பானாம் என்கிறார். அது தர்ம யுத்தம் நடந்த காலம்.

இவ்வாறு சங்க இலக்கியத்தில் பல இடங்களில் பிராம- பசு ஜோடி வருகிறது

ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளி வந்தது இல் (குறள் 1066)

பசுவைக் காப்பது புனிதமானது. ஆயினும் ஒருவன் பசுவுக்காக தண்ணீர் கொடுங்கள் என்று தர்ம நியாயப்படி
தண்ணீர் கேட்டாலும் பிச்சை, பிச்சைதான்; அது போல பிச்சை எடுப்பதைப் போல
நாவுக்கு இழிவான செயல் வேறு ஒன்றும் இல்லை.
பசு மாட்டை ஏன் வள்ளுவர் உதாரணமாக வைத்தார். பசுக்களைப் பூஜித்து காப்பாற்றுவது இந்துக்களின் கடமை.
அதற்காக தண்ணீர் வேண்டும் என்று கேட்பது தர்மமே.
ஆனாலும் அதை பிச்சை கேட்கும் நிலை வந்துவிட்டால், அதுவும் ஒருவனுக்கு இழிவான செயலே.

இதைத் திருமூலரும் செப்புவார்:
யாவர்க்கும் ஆம் இறைவற்கு ஒரு பச்சிலை
யாவர்க்கும் ஆம் பசுவுக்கு ஒரு வாயுறை
யாவர்க்கும் ஆம் உண்ணும்போது ஒரு கைப்பிடி
யாவர்க்கும் ஆம் பிறர்க்கு இன்னுரைதானே
எல்லோரும் எளிதில் செய்யக் கூடிய வைகளைத் திருமூலர் சொல்லிக் கொடுக்கிறரர். இதை யாரும் செய்யலாம்;
எப்போதும் செய்யலாம்; செலவின்றிச் செய்யலாம்.
பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணன் சொல்வதைப் புறநானூற்றில் புலவர் கபிலர் அப்படியே சொன்னார்;
“பத்ரம் புஷ்பம் பலம் தோயம்” (பச்சிலை, பூ, பழம், தண்ணீர்) ஆகிய எதனாலும் என்னைப் பூஜிக்கலாம்.
இதைப் புறநானூற்றில் (106) புல், இலை, எருக்கம் ஆயினும் — கடவுள் ஏற்பார் என்று கபிலர் சொன்னார்.

———————

உலகமக்களின் நன்மைக்கு ஆதிநாளிலிருந்தே ஆதாரமாக விளங்கி வருவது பசு.
முறைப்படி பசுவை வணங்குவதை கோபூஜை என்பர்.
கோ என்றால் சத்தியம், வாக்கு, நீர், சுவர்க்கம், ஒளி, சந்திரன், அக்கினி, அரசன், உலகம் என்று பொருள் சொல்லப்படுகிறது.

ராமபிரான் பூமியில் அவதரிக்க மூல காரணமே கோபூஜைதான் என்கிறது புராணம்.
சக்கரவர்த்தி திலீபன் பல வருடங்களாக பிள்ளைப் பேறின்றி வேதனையில் ஆழ்ந்திருந்தான்.
அப்போது, அவன் அரண்மனைக்கு வந்த வசிஷ்ட முனிவர், நந்தினி எனும் பசுவைக் கொடுத்து பூஜிக்கும்படி சொன்னார்.
அதன்படியே தினமும் அதனை நீராட்டி, தகுந்த ஆகாரத்தைக் கொடுத்து வழிபட்டுவந்தான் திலீபன்.
அவ்வாறு அதனைப் பேணி வளர்த்துவந்ததன் பயனாக திலீபனுக்கு ஒரு மகன் பிறந்தான்.
அந்தக் குழந்தைக்கு ரகு என்று பெயரிட்டான்.
வருடங்கள் கழிந்தன. திலீபன் தன் மகனான ரகுவுக்குத் திருமணம் நடத்தி வைத்தான்.
ஒரு வருடத்திலேயே தந்தையானான் ரகு. திலீபன் தன் பேரனுக்கு “அஜன்’ என்று பெயர் சூட்டி விழா எடுத்தான்.
கல்வி கேள்வியில் சிறந்து விளங்கிய அஜனுக்கு காலாகாலத்தில் திருமணம் நடந்தது. அவனுக்குப் பிறந்த மகன்தான் தசரதன்.
தசரத சக்கரவர்த்தி ரிஷ்யசிருங்கர் மூலம் நடத்திய யாகப் பயனால் ராமாவதாரம் நிகழ்ந்தது.
திலீபன் பல வருடங்களுக்கு முன் கோ பூஜை செய்த பயனால் மகாவிஷ்ணுவே பூவுலகில் அவதரித்தார்.

தேவலோக அமிர்தத்தை மானிடர்களால் ஜீரணிக்க முடியாது என்பதால் பிரம்மா தானே சிறிது அமிர்தத்தை உண்டு,
அதனை மனிதர்களுக்கு ஏற்றவிதத்தில் மாற்றிக் கொண்டார். பின்னர் அவர் ஒரு பசுவாக உருவெடுத்து பாலைச் சொரிந்தார்.
அந்தப் பாலே வழி வழியாக மனிதர்களுக்கு சக்தியூட்டுவதாக விளங்கிவருகிறது.
எனவே பசு மனிதர்களுக்கு தாயும் தந்தையும் போன்றது.
பசுவை வணங்கிப் போற்றுபவன் பிரம்ம தேவனையும், தனது பெற்றோர்களையும் வணங்குபவனாகிறான்.
பசுவைப் பாதுகாப்பவன் தனது பெற்றோரை, அவர்களின் முதிய காலத்தில் காப்பாற்றுவான் என்று சாஸ்திரம் கூறுகிறது.

பசுவின் கொம்புகளில் பீமனும் இந்திரனும்; காதுகளில் அஸ்வினி குமாரர்களும்;
கழுத்து, தாடைப்பகுதிகளில் ராகு- கேதுவும்; இரண்டு கண்களில் சூரிய சந்திரர்களும்;
மூக்கின் மேல்பகுதியில் விநாயகரும் முருகனும்; முன்னிரண்டு கால்களில் பைரவரும் அனுமனும்;
முகப்பகுதியில் சிவபெருமானும்;
கழுத்து முதலான பகுதிகளில் பாரத்வாஜர், குபேரன், வருணன், அக்னி, பிரம்மன், கங்காதேவி, நாரதர்,
வசிஷ்டர், ஜனக குமாரர்கள், பூமாதேவி, சரஸ்வதி, விஷ்ணு, பராசரர், விஸ்வாமித்திரர், அமிர்தசாகரமும்;
வால் பகுதியில் நாகராஜனும்; முன்குளம்புப் பகுதியில் விந்தியம், இமாச்சல பர்வதங்களும்;
பின்கால் பகுதியில் மந்த்ராசலம், துரோணாசல பர்வதங்களும்; மடியில் அமிர்தசுரபி கலசமும்;
பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமியும் வசிப்பதுடன், இன்னும் பிற தேவர்களும் பசுவின் உடலில் வாசம்செய்வதாக ஐதீகம்.
பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகளும், அஷ்ட வசுக்களும்,
நவக்கிரகங்களும் வீற்றிருந்து ஆட்சி செய்கின்றனர்.

நேத்ர ஸூர்யன் சந்திரன்
நாக்கில் சரஸ்வதி
மருத் தேவர்கள் பற்களில்
காதுகளில் அஸ்வினி
கொம்பில் ருத்ரன் பிரேமா
வயிற்றில் சமுத்திரம்
கங்கா
ரிஷிகள் ரோமா கூபங்கள்
பின் பக்கம் பூமி லஷ்மி தேவி
நான்கு பாதங்கள் நான்கு புருஷார்த்தம்
கழுத்தில் 11 ருத்ரர்கள்
ஹந்காரோ சதுர்வேத
விஷ்ணு சர்வ சரீரம்

பசுவின் கொம்புகளின் அடியில் – பிரம்மன், திருமால்
*கொம்புகளின் நுனியில் – கோதாவரி முதலிய புண்ணிய தீர்த்தங்கள்,சராசை உயிர் வர்க்கங்கள்
*சிரம் – சிவபெருமான்
*நெற்றி நடுவில் – சிவசக்தி
*மூக்கு நுனியில் – குமரக் கடவுள்
*மூக்கினுள் – வித்தியாதரர்
*இரு காதுகளின் நடுவில் – அசுவினி தேவர்
*இரு கண்கள் – சந்திரர், சூரியர்
*பற்கள் – வாயு தேவர்
*ஒளியுள்ள நாவில் – வருண பகவான்
*ஓங்காரமுடைய நெஞ்சில் – கலைமகள்
*மணித்தலம் – இமயனும் இயக்கர்களும்
*உதட்டில் – உதயாத்தமன சந்தி தேவதைகள்
*கழுத்தில் – இந்திரன்
*முரிப்பில் – பன்னிரு ஆரியர்கள்
*மார்பில் – சாத்திய தேவர்கள்
*நான்கு கால்களில் – அனிலன் எனும் வாயு
*முழந்தாள்களில் – மருத்துவர்
*குளம்பு நுனியில் – சர்ப்பர்கள்
*குளம்பின் நடுவில் – கந்தவர்கள்
*குளம்பிம் மேல் இடத்தில் – அரம்பை மாதர்
*முதுகில் – உருத்திரர்
*சந்திகள் தோறும் – எட்டு வசுக்கள்
*அரைப் பரப்பில் – பிதிர் தேவதைகள்
*யோனியில் – ஏழு மாதர்கள்
*குதத்தில் – இலக்குமி தேவி
*வாயில் – சர்ப்பரசர்கள்
*வாலின் முடியில் – ஆத்திகன்
*மூத்திரத்தில் – ஆகாய கங்கை
*சாணத்தில் – யமுனை நதி
*ரோமங்களில் – மகாமுனிவர்கள்
*வயிற்றில் – பூமாதேவி
*மடிக்காம்பில் – சகல சமுத்திரங்கள்
*சடாத்களியில் – காருக பத்தியம்
*இதயத்தில் – ஆசுவனீயம்
*முகத்தில் – தட்சிணாக்கினி
*எலும்பிலும், சுக்கிலத்திலும் – யாகத் தொழில் முழுவதும்
*எல்லா அங்கங்கள் தோறும் – கலங்கா நிறையுடைய கற்புடைய மாதர்கள் வாழ்கிறார்கள் .

அகல்யையை மணக்க பிரமாண்டத்தை (பேரண்டத்தை) மும்முறை வலம் வர வேண்டும் என்பது நிபந்தனை.
தவசீலரான கௌதம மகரிஷி, பிரமாண்டத்தை மூன்று முறை பிரதட்சிணம் செய்வதற்குப் பதில்,
பசுக்களில் சிறந்த காமதேனுவை மூன்று முறை வலம் வந்து, அகல்யையை மணந்தார்.
இவ்வாறு கௌதமர் காமதேனுவை மும்முறை வலம் வந்தது, இந்தப் பிரமாண்டத்தையே வலம் வருவதற்கும் மேலானது
என்று ஒப்புக்கொண்ட பிரம்மதேவன்,
”பசுவின் அங்கங்களில் ஈரேழு லோகங்களும் அடங்கியிருப்பதாக நானே சொல்லியிருக்கிறேன்;
காமதேனுவைப் பற்றி சொல்லவும் வேண்டுமோ. ஆகவே, அதைச் சுற்றி வந்ததால்
பிரமாண்ட பிரதட்சிணம் செய்ததற்கும் மேலானதாயிற்று” என்றாராம்.

இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் முக்கிய பொருளாக பால், தயிர், நெய் ஆகியவை இருக்கின்றன.
பால், தயிர், நெய், கோமயம், கோசலம் ஆகிய ஐந்தையும் ஐம்பூதங்களாக பாவித்து, ஒன்றாகக் கலந்து,
பூஜை செய்யும் இடத்தையும் யாகம் செய்யும் இடத்தையும் தூய்மை செய்வர்.
பொதுவாக, யாகங்களுக்கு நெய் மிக அவசியம். பசு நெய்யில் தீ வளர்த்து, அதில் பால் ஊற்றி நெருப்பை
அவிக்கும் போது அதிலிருந்து உண்டாகும் புகையானது விஷ வாயுக்களைத் தடுப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுவர்.

———————-

கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்தது பசுதான். எனவேதான் அவரை கோபாலகிருஷ்ணன் என்று அழைக்கிறோம்.

ஜனக மாதாவும், கோமாதாவும் பாலைச் சுரக்கிற மாதிரி தானியங்கள், உலோகங்கள், தாதுக்கள் ஆகிய வளங்களையும்,
இவை எல்லாவற்றுக்கும் மேலாக நீர்வளம் என்பதையும் பூமி சுரக்கிறது.
அதனால் தான் பூமாதா என்பது,கோ மாதா என்பது -பசுத்தாய் என்பது போல் புவித்தாய்.

இந்துக்களின் கலாச்சாரப்படி மாதா என்று அழைக்கப்படக்கூடியவைகள்,
பெற்ற தாய், பெண் தெய்வங்கள், பசுமாடு ஆகிய மூன்று மட்டுமேயாகும்-
பசுமாடு குறுக்கமாக கோ எனப்பட்டதால் மாதா என்னும் சொல்லும் சேர்த்து கோமாதா எனப்பட்டது

ஸ்ரீமாதாவுக்கே கோமாதா என்பதையும் ஒரு பெயராக லலிதா ஸஹஸ்ரநாமத்தில் சொல்லியிருக்கிறது.
ஸஹஸ்ரநாமத்தில் முதல் நாமாவே ‘ஸ்ரீமாதா’ என்பது.
உள்ளே அந்த நாமாவளியில் ‘குருமூர்த்தி:, குணநிதி:, கோமாதா’ என்று வருகிறது.
ஞானப் பாலூட்டும் ‘குரு மூர்த்தி’யாகவும் ஸகல கல்யாண குணமாக இருந்து கொண்டு
அருட்பாலூட்டும் ‘குணநிதி’யாகவும் ஸ்ரீமாதாவுக்கே பெயர்கள் சொன்ன கையோடு ‘கோமாதா’ என்று சொல்லியிருப்பது விசேஷம்.

கோ மாதா -பசுவுக்கு மட்டும் மாதா ஸ்தானம் -52
கவா நாம் அநேக வரனானாம் ஷீரம் ஏக வர்ணம் -ஆத்மாக்கள் அனைவரும் ஸ்வா பாவிக ஞான ஆனந்த மயம் –

மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஒரே பரமாத்மா -கற்றுக் கறவை கணங்கள் பல -ஏகோ நாராயணா –

தன் கன்றின் வழு அன்றோ காதலிப்பது -அன்று ஈன்ற -வாத்சல்யம்

இஷ்டமான பசுக்களை இனிது மறித்து நீரூட்டி
திவத்திலும் பசு நிரை மெய்ப்பு உவத்தி
விமல குண்டம் -கன்றுகளுக்கு நீரூட்ட க் கற்றுக் கொடுத்த இடம்
கன்று மேய்த்து இனிது உவந்து

இள நாகத்தின் பின் போய் கோவிந்தன் மேய்த்தது இது என்னும் -அநுகாரத்திலும் ஆழ்வார்

33 கோடி தேவர்கள் பசு மாட்டில் உள்ளவராக சாஸ்திரம் சொல்லுமே

ஸ்ரார்த்த கல்பம் -முடியாதவர்களுக்கு பாசு மாட்டுக்கு ஒரு நாளாவது புல்லைப் போட்டு –
கச்சதி -கவ் -நடப்பது -இதன் மூலம் செல்வது –
பசு மாடு தானம் கொடுத்தால் சுவர்க்கம் நோக்கி நடக்கலாம் -நடை -ஆசாரம் -கோசாரம் –
யோக ரூடம் இது குறி பெயர்
மகேயீ -பூஜிக்க படுவதால் -மகா தாய் பசு
அர்ஜுனி வெள்ளை வர்ணம்
ந ஹந்தா -யாரையும் கொல்லாதே
சபலா பசு
கபிலா பசு -மா நிதி கபிலை கண்ணாடி முதலா -விஸ்வரூபம்
பின் புறத்தில் மஹா லஷ்மி
முதலில் பச்சைப்பால் அமுது செய்து –
பசு பதி -காளை மாடு வாஹனம்

சபலா பசுவைக் கொடுக்க மாட்டேன் -வசிஷ்டர் -காமதேனு –

பவித்ரம் மதுரம் -பால் -கோ மூத்திரம் அதே அளவு நெய் -தயிர் சாணி கொஞ்சம் -பஞ்ச கவ்யம் –
கோமூத்ரம் கோமயம் க்ஷீரம் ததி ஸர்பிர் யதாக்ரமம்
ஏதாநி பஞ்ச கவ்யானி தர்ம சாஸ்த்ரை:ப்ரகீர்திதம்
பசுவின் கோமயம்,பசுஞ்சாணம்,பால்,தயிர்,நெய் ஆகியவை பஞ்சகவ்யம் என சாஸ்திரங்கள் சொல்கின்றன.
அஸ்வமேத யாகம் பலம் கிட்டும்

—————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: