ஸ்ரீ மணவாள மா முனிகள் வைபவம் -ஸ்ரீ உ வே வேங்கட கிருஷ்ணன் ஸ்வாமிகள் —

மதுரேணு ஸமாபயேத்-மதுரத்துடன் முடிக்கவே மா முனிகள் உடன் பூர்வாச்சார்ய பரம்பரை ஸமாபநம் –
முன்னவராம் நம் குரவர் மொழிகள் உள்ளப் பெற்றோம்
முழுதும் அவை நமக்குப் பொழுது போக்காகப் பெற்றோம் –என்றபடி
தூய அமுதைப் பருகிக் களிப்பதற்கே தானே நம் ஸ்வாமியின் திருவவதாரம்

ஸ்ரீ ராமானுஜரை திவாகரனாகவும் நம் ஸ்வாமியை சந்த்ரனாகவும் என்று அறுதி விடலாமே
ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகனும் ஸ்ரீ கிருஷ்ணனும் போலவே
அதுக்கு ஏற்ப அவர் ஸ்ரீ ராமாயணம் ஸ்ரீ திருமலை நம்பி இடம் ஒரு சம்வத்சரம் கேட்டு அனுபவிக்க
நம் ஸ்வாமியோ ஸ்ரீ கிருஷ்ண த்ருஷ்ண தத்வ ஸ்ரீ ஸூக்திகளுக்கு ஸ்ரீ ஈட்டையும் பிரமாணங்களையும்
தொகுத்து ஸ்ரீ அழகிய மணவாளனுக்கே சாதித்து அருளினை ஏற்றம் உண்டே –

ஸ்ரீ வியாக்கியானங்கள் அருளிச் செய்து அருளும் பொழுதும் பூர்வர்களுடைய ஸ்ரீ ஸூ க்திகளையே காட்டி அருளி –
பொய்யிலாத மணவாள மா முனி புந்தி வாழ -என்று கொண்டாடும் படி அன்றோ நம் ஸ்வாமி –

நாந் ருக்வேத விநீ தஸ்ய நா யஜுர் வேத தாரிண நா ஸாம வேத விதுஷ ஸக்யமேவம் ப்ரபாஷிதம்
நூநம் வ்யாகரணம் க்ருத்ஸ்னம் அநேந பஹுதா ஸ்ருதம் -என்று ஸ்ரீ வால்மீகி முனியும்
இல்லாத யுலகத்து எங்கும் ஈங்கு இவன் இசைகள் கூரக் கல்லாத கலையும் வேதக் கடலுமே என்னும் காட்சி
சொல்லாலே தோன்றிற்றன்றே ஆர் கொலிச் சொல்லின் செல்வன் வில்லார் தோள் இளைய வீர
விரிஞ்சனோ விடை வலானோ -என்று ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் ஸ்ரீ திருவடியைக் கொண்டாடியது போலவே
நமது ஸ்வாமி விசத வாக் சிரோமணியாகவே திகழ்ந்தாரே —

ஸ்ருஷ்டி தானே லீலை -அதுக்கு பிரயோஜனம் லீலை அல்ல –லீலை -தாதாத்விக ரஸம் ஒழிய
காலாந்தரத்தில் வரும் பலனைக் கருதிச் செய்வது இல்லையே
இதுக்குப் பிரயோஜனமாகேவல லீலை -என்று மூலத்தில் இருந்தாலும்
இதுக்கு ஒரு பிரயோஜனம் இல்லை கேவல லீலையே என்கிற வாக்ய ஸந்நிவேசம் இருந்து
இருக்க வேணும்-இப்படி லாக்ஷணகிக நிர்வாஹம் பண்ணி அருளி
பூ பரிப்பது போலே காட்டி அருளும் அழகு அனுபவிக்கத் தக்கது –

தென் அரங்கம் கோயில் கொண்ட நம் தெய்வ சிகாமணி -நம் விசத வாக் சிகாமணியிடம் ஈடு சாதிக்கக்
கேட்க ஆவல் கொண்டு தமது திரு முன்பே கருட மண்டபத்தில் ஆஸனம் இட்டு அருளி சாதிக்க ஆணை இட
நாம் யார் பெரிய திரு மண்டபம் அமர் நம் பெருமாள்
தாமாக எம்மைத் தனித்து அழைத்து -நீ மாறன்
செந்தமிழ் வேதத்தின் செம் பொருளை நாளும் இங்கே
வந்து உரை என்று ஏவுவதே வாய்ந்து -என்று நைச்யம் தோற்ற அனுசந்தித்து அருளினார் –

இந் நீணிலத்தே எமை ஆள வந்த இராமானுசனை இரும் கவிகள் புனையார் —
ஸ்ரீ கூரத்தாழ்வான் போல்வார் கவிகள் இல்லை என்பதை அமுதனார் –

நம் மா முனிகளுக்கு அஷ்ட திக் கஜங்கள் பன்னிப் பன்னி அன்றோ கவிகள் புனைந்துள்ளார்கள்

ஸ்ரீ எறும்பி அப்பா –
ஸ்ரீ வர வர முனி சதகம்
ஸ்ரீ வர வர முனி காவ்யம்
ஸ்ரீ வர வர முனி சம்பூ
ஸ்ரீ வர வர முனி கர்ண அம்ருதம்
ஸ்ரீ அம்ருத த்வநி

————-

ஸ்ரீ பெரிய பெருமாளே ரஹஸ்ய த்ரயங்களை ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு உபதேசித்து
குரு பரம்பரையில் முதல் ஸ்தானம்
ஸ்ரீ பத்ரி நாராயணன் முதலில் திருமந்திரம் வெளிட்டு அருளி –
சிஷ்யனும் ஆச்சார்யனும் தானாகே -நர நாராயணனாய் வெளியிட்டு அருளினான் –

சூரணை–ஸ்ரீ முமுஷுப்படி-6
சிஷ்யனாய் நின்றது சிஷ்யன் இருக்கும் இருப்பு -நாட்டார் அறியாமையாலே –
அத்தை அறிவிக்கைக்காக –

ஆனால் ஆசார்யனாய் நின்று வெளி இட்டு அருள அமையாதோ ?
சிஷ்யனாய் நின்றது எதுக்காகா ?-என்ன அருளிச் செய்கிறார் –
அதாவது

ஆசார்யனாய் நின்று வெளி இட்டு அருளின அளவு அன்றிக்கே -தானே சிஷ்யனுமாய் கொண்டு நின்றது –
ஆச்திகோ தர்ம சீலச்த சீலவான் வைஷ்ணவ ச சுசி
கம்பீரச் சதுரோ தீரச் சிஷ்ய இத்யபிதீயதே -என்றும் –

சரீரம் வசூ விஞ்ஞானம் வாசா கர்ம குணா நசூன் குர்வர்த்தம்
தாரேயேத்யஸ்து ச சிஷ்யோ நேதர ஸ்ம்ருத -என்றும் –

சத்புத்திஸ் சாதுசேவி சமுசித சரிதஸ் தத்வ போதாபிலாஷி
ஸூஸ்ருஷி சத்யக்தமான ப்ரநிபாதன பர பிரச்னகால பிரதீஷ
சாந்தோ தாந்தோ அனசூயஸ் சரண முபகதஸ் சாஸ்திர விசுவாச சாலி
சிஷ்ய ப்ராப்த பரீஷாம் க்ருதவிதபிமத்தஸ் தத்வதச் சிஷணீய–நியாஸ விம்சதி -இத்யாதிகளில் சொல்லுகிறபடியும்

சாத்யாந்திர நிவ்ருத்தியும் –
பல சாதன சிஸ்ருஷையும் –
ஆர்த்தியும்
ஆதரமும்
அனசூயையும்
உடையனாய் இருக்கையும் ஆகிற சிஷ்ய லஷணம் லோகத்தில் உள்ளார் அறியாமையாலே –
அத்தை ஸ்வ அனுஷ்டானத்தாலே அறிவிக்கைக்காக என்கை-

உபதேசத்தால் அறிவிக்கும் அளவில் -ஸ்வோத்கர்ஷம் தேடிக் கொள்ள வந்தான் இத்தனை என்று
நினைக்கவும் கூடும் –
அனுஷ்டானத்தில் அறிவிக்கும் அளவில் நமக்கும் இது வேணும் என்று
விஸ்வசித்து பரிக்ரஹிக்கைக்கு உடலாய் இருக்கும் இறே-

ஆச்சார்ய சிஷ்ய க்ரமம் அங்கு ஸ்பஷ்டமாக வெயிடாமையாலே மீண்டும்
ஸ்ரீ பெரிய பெருமாள் மீண்டும் ஒரு முறை சிஷ்யனாய் நின்று
தன்னுடைய அனுஷ்டானத்தாலே சிஷ்ய லக்ஷணங்களை ஸ்பஷ்டமாகவே காட்டி அருளினார் –

அவற்றில் பிரதானமான கர்தவ்யங்கள்
1- ஆச்சார்யனுக்கு தனியன் சமர்ப்பிக்க வேண்டும்
2- குரும் ப்ரகாஸயே த் தீமான் -என்றபடி ஆச்சார்யர் மஹிமையை உலகு எங்கும் பரப்ப வேண்டும்
3- தனது உடைமைகள் அனைத்தும் ஆச்சார்யனுக்கு சமர்ப்பிக்க வேண்டும்
4- ஆச்சார்யனுடைய திரு நாமத்தைத் தானும் தரிக்க வேண்டும்
5- ஆச்சார்யனுடைய திரு நக்ஷத்ரத்தையும் தீர்த்தத்தையும் உத்சவமாகக் கொண்டாட வேண்டும் –

பூர்வாச்சார்யர்கள் உடைய அனைத்து ஸ்ரீ ஸூ க்திகளையும் திரு உள்ளத்தில் தரித்து கோர்த்து
சாதிக்க வல்ல விசத வாக் சிகாமணி மா முனிகள் ஒருவரே என்பதால்
இவரையே ஆச்சார்யராகக் கொண்டான்

தன் சொல்லால் தான் தன்னைக் கீர்த்தித்த மாயன்
நம்மாழ்வாரை -மாறனில் மிக்கு ஓர் தேவும் உளதோ –2-2-3-மால் தனில் -மாறனில் – என்று அருளிச் செய்வித்தது போல்
மா முனிகளையும்
தன் குருவின் தாள் இணைகள் தன்னில் அன்பு ஒன்றும் இல்லாதார்
அன்பு தன் பால் செய்தாலும் -அம்புயை கோன்
இன்ப மிகு விண்ணாடு தான் அளிக்க வேண்டி இரான்
ஆதலால் நண்ணார்கள் அவர் திரு நாடு -என்று
அம்புயை கோன் -தனது குருவான மா முனிகள் இடத்தில் அன்பு செய்யாதவர்கள் தனது மேல்
எவ்வளவு அன்பு செய்தலும் மோக்ஷம் அளிக்க மாட்டான் -என்று அருளிச் செய்ய வைத்தான் –

—————-

அழகிய மணவாளன் -திரு நாமம் பூர்வர் பலருக்கும் உண்டே
1-அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் -நாயனார் –
2-வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர்
3-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருக்குமாரருக்கும் அழகிய மணவாளன் –
நாயனார் ஆச்சான் பிள்ளை என்றே இவரைக் குறிப்பிடுவார்கள்
4-யதீந்த்ர பிரவணர்-நம் ஸ்வாமி

முனி -மனன ஸீலா முனி
முனியே நான்முகனே முக்கண் அப்பா -10-10-1- -அவனையே நம்மாழ்வார் –
முனியே திரு மூழிக் களத்து விளக்கே –7-1-6- திருமங்கை ஆழ்வார் –
இந்த சேதனர் அறியாது இருக்கச் செய்தெ எப்போதும் ஓக்க ஹிதத்தையே அனுசந்தித்து இருக்குமவன் அன்றோ –
நம் ஸ்வாமியும்
எந்தை திருவாய் மொழிப் பிள்ளை இன்னருளால் வந்த உபதேச மார்க்கத்தைச் சிந்தை செய்து
பின்னரும் கற்க உபதேசமாகப் பேசுகின்றேன் என்றும்
முன்னவராம் நம் குரவர் மொழிகள் உள்ளப் பெற்ற முனி அன்றோ –

மா முனி
மா முனி வேள்வியைக் காத்து அவப்ரதம் ஆட்டிய அடு திறல் அயோத்தி எம் அரசே -திருப்பள்ளி -4-
தவம் புரிந்து உயர்ந்த மா முனி கொணர்ந்த கங்கை யின் கரை மேல் வதரி யாஸ்ரமத்து உள்ளானே -1-4-8-
விராதைக் கொன்று வண் தமிழ் மா முனி கொடுத்த வரி வில் வாங்கி -பெருமாள் -10-5-
என்று மந்த்ர உபதேசம் பண்ணி ஆச்சார்ய ஸ்தானம் வகித்ததாலேயே
விஸ்வாமித்ரரையும் அகஸ்தியரையும் அருளிச் செய்தார்கள் அன்றோ –
நம் ஸ்வாமியும் ஈடு காலஷேபம் செய்து அருளி மா முனி ஆனதில் வியப்பு இல்லையே –

அழகிய மணவாளன் -திரு நாமமும் பெரிய பெருமாளின் சங்கல்பத்தாலே ஏற்பட்டது
நம் ஸ்வாமி ஸந்யாஸ ஆஸ்ரமம் கொள்ளும் பொழுது சடகோப ஜீயர் -திரு நாமம் தரிக்க விரும்பி
பெரிய பெருமாள் இடம் விண்ணப்பிக்க
அவர் அழகிய மணவாளன் -என்று முந்தைய திரு நாமத்தையே முடிய நடத்த வேணும் என்று அருளிச் செய்தார் –
என்று யதீந்த்ர ப்ரவண ப்ரபாவம் சொல்லுமே
அப்படி இருந்தால் தானே சிஷ்யனாக பொழுது தானும் ஆச்சார்யர் திரு நாமம் தரிக்கும் வாய்ப்பை
இழக்க ஒண்ணாது என்றே இந்த சங்கல்பம் –

மணவாள மா முனியே வர வர முனி என்கிறோம் –

————————-

ஆதி சேஷனை ஆளவந்தார் -ப்ரக்ருஷ்ட விஞ்ஞான பலகை தாம -ஞானத்துக்கு எல்லாம்
இருப்பிடமாகவே இருப்பதால் தான் நம் உடையவராகவும் நம் ஸ்வாமியாகவும் அவதாரம் –

வேதாத்மா விஹகேஸ்வரன் –
தாஸ -ஸஹ -நிவாஸ -ஸய்யா -ஆஸனம்
இருவருமே ஸமமாக இருந்தாலும்
சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம்
நின்றால் மரவடியாம் நீள் கடலுள் என்றும்
புணையாம் அணி விளக்காம் பூம் பட்டாம் புல்கும்
அணையாம் திரு மாற்கு அரவு –முதல் -53-போன்ற பெருமை வேறே யாருக்கும் அருளிச் செயல்களில் இல்லையே
பாகவத அபசாரம் பண்ணும் ஆபத்தை விளக்க பெரிய திருவடி -ஸுமுகன் -விஷயத்தில் எனக்கு எண்ணப் பண்ணிட்றே
விண்ணுளார் பெருமாற்கு அடிமை செய்வாரையும் செறும் ஐம்புலன் அவை –திருவாய் –7-1-5-
எனக்கு ஆமிஷமாய் இருக்கிற இத்தைக் கைக்கொண்டு நோக்குவதே
தேவரீரையும் நாய்ச்சிமாரையும் நெடும் காலம் வஹித்துக் கொண்டு திரிந்தேன் –
நான் என் பெற்றேன் -என்று சொன்னான் அன்றோ

அடுத்த கடும் பகைஞற்கு ஆற்றேன் என்றோடி
படுத்த பெரும் பாழி சூழ்ந்த விடத் தரவை
வல்லாளன் கை கொடுத்த மா மேனி மாயவனுக்கு
அல்லாது மாவரோ ஆள் –ஸ்ரீ முதல் திருவந்தாதி-80-

பதிப்பகைஞற்கு ஆற்றாது பாய் திரை நீர்ப் பாழி
மதித்தடைந்த வாளரவம் தன்னை -மதித்தவன் தன்
வல்லாகத் தேற்றிய மா மேனி மாயவனை
அல்லாது ஓன்று ஏத்தாது என் நா–நான்முகன் திருவந்தாதி-74-

நஞ்சு சோர்வதோர் வெஞ்சின வரவம் வெருவி வந்து நின் சரண் எனச் சரணாய்
நெஞ்சில் கொண்டு நின் அஞ்சிறைப் பறவைக்கு அடைக்கலம் கொடுத்து அருள் செய்தது அறிந்து
வெஞ்சொல் ஆளர்கள் நமன் தமர் கடியர் கொடிய செய்வன யுளவதற்கு அடியேன்
அஞ்சி வந்து நின்னடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே -பெரிய திருமொழி-5-8-4-

மேலும் இன்னும் ஒரு அபசாரம் பெரிய திருவடிக்கு சொல்வதும் உண்டே

முள் எயிற்று ஏய்ந்திலக் கூழை முடி கொடா
தெள்ளியள் என்பதோர் தேசிலள் என் செய்கேன்
கள்ளவிழ் சோலைக் கணபுரம் கை தொழும்
பிள்ளையை பிள்ளை என்று எண்ணப் பெறுவரே–8-2-9-பாசுர வியாக்யானத்தில் பெரியவாச்சான் பிள்ளை –

பெரிய திருவடி எழுந்தருளச் செய்தே ஒரு பர்வதாக்ரத்திலே வைகித் தங்கப் புக்கான் –
அந்த பர்வத சிகரத்திலே ஒரு பெண் பெண்டாட்டி பகவத் குணங்களைப் பேசக் கேட்டு
தான் ஸ்திரீயாய் இருக்க பகவத் பஜனத்திலே இத்தனை ருசி உண்டாவதே
இவள் ஒரு புண்ய ஷேத்ரத்திலே இருக்கப் பெற்றது இல்லையே -என்று வெறுக்க
அநந்தரம்
விடிந்த அளவிலே இவன் போக நினைக்க
இவன் சிறகுகள் உதிர்ந்து எழுந்து இருக்க மாட்டாதே இருந்தான் -என்று
மகா பாரதத்திலே ஆரண்ய பர்வதத்திலே எழுதிற்று –

ஆக இத்தால் சொல்லிற்று ஆய்த்து-
பகவத் விஷயத்தில் ஒரு கீற்றுப் புகுர நின்றான் யாவன் ஒருவன்
அவன் பூர்வ வ்ருத்தத்தை பார்த்துக் குறைய நினைக்கக் கடவன் அல்லன் –
அவன் இருந்தபடியே உத்தேச்யம் பண்ணிக் கொண்டாட அடுக்கும் -என்கிற அர்த்தத்தை வெளியிடுகிறது –
துராசாரோபி -இத்யாதி –

இது போல் பகவத் அபசாரமோ பாகவத அபசாரமோ ஆதி சேஷனுக்கு எங்குமே அருளிச் செயல்களில் இல்லையே –
இது போல் அபசாரம் பட்டால் அடையும் அதோ கதியைக் காட்டி அருளவே பெரிய திருவடியை
இவ்வாறு செய்யும்படி சங்கல்பித்து அருளினான் –

பெரிய திருவடிக்கு இல்லாத பெருமை ஆதி சேஷனுக்கு உண்டு என்பதுக்கு
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலினிலையாய் அருளேலோ ரெம்பாவாய்-திருப்பாவை-26-

விதானத்துக்கு திருவவதரித்த அன்று பணத்தை இட்டுக் கவித்துக் கொண்டு போந்த
திரு வநந்த வாழ்வானைக் கொடாது ஒழிவான் என் என்னில் –
எல்லாரையும் போகச் சொன்னாலும் தன்னை ஒழிய
ஓரடி இட மாட்டாதவன் ஆகையாலே -அத்த வாளத்தைக் கொடுத்தான் –

மண் மிசை யோநிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே
கண்ணுற நிற்கிலும் காணகில்லா உலகோர்கள் எல்லாம்
அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய வப்பொழுதே
நண்ணரு ஞானம் தலைக் கொண்டு நாரணற்கு ஆயினரே –ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி- 41-

இப்படி எம்பெருமானை விட்டு ஒரு நொடிப் பிரியாமலும் -அவனும் கை விட்ட உலகத்தை
திருத்தி அருளிய பெருமை உண்டே -ஆதிசேஷனுக்கு

ஆங்கு ஆரவாரமது கேட்டு அழல் உமிழும்
பூங்கார் அரவணையான் பொன்மேனி யாம் காண
வல்லமே யல்லமே மா மலரான் வார் சடையான்
வல்லரே அல்லரே வாழ்த்து–10-

பூங்காரரவு –
தன் பரிவாலே பிரதிகூலரான நமுசி ப்ரப்ருதிகள் மேலே விஷ அக்னியை உமிழா நிற்பானாய்-
பரிவின் கார்யம் ஆகையாலே அடிக் கழஞ்சு பெறும் படியாய் இருக்கிற
அழகிய சீற்றத்தை யுடைய திரு வநந்த ஆழ்வான்

1-10-1-ஈட்டு ஸ்ரீ ஸூ க்திகள் –

அவன், ஆங்கு ஆரவாரமது கேட்டு அழலுமிழும் பூங்கார் அரவணை’யாவன் அன்றே?
அப் பரம பதத்திலும் இப்படிச் செய்யுமவன், பகைவர்கள் நிறைந்திருக்கும் இத் தேசத்தில் இப்படிச் செய்யச் சொல்ல வேண்டுமோ?
ஆங்கு ஆரவாரமாவது, “அஹமந்நம் அஹமந்நம் அஹமந்நம் அஹமந்நாத: அஹமந்நாத: அஹமந்நாத:” என்னும் ஆரவாரம்.
அஹமந்நம்-
நான் பகவானுக்கு இனியன்;
அஹமந்நாத: –
நான் பகவானாகிற இன்பத்தை அனுபவிக்கிறவன். (தைத்திரீய உபநிடதம், பிரு. 10.)
‘அங்கே அது கேட்டு அப்படிப் படுகின்றவர்கள் இத் தேசத்தில் இது கண்டால் சொல்ல வேண்டுமோ?’ என்றபடி.
‘இவர்கள் இப்படி அலமருகைக்கு அடி என்?’ என்னில்,
அரவணை மேல் தோன்றல் திசை யளப்பான் பூவார் அடி நிமிர்த்த போது-ஸ்ரீ திருவனந்தாழ்வானைப் படுக்கையாக வுடைய ஸ்ரீ சர்வேஸ்வரன்
காடும் ஓடையும் அளக்கைக்காகப் புஷ்பஹாஸ ஸூகுமாரமான திருவடிகளை நிமிர்த்த போது,
எல்லாம் படவேண்டாவோ அவன் இப்படி வியாபாரியாநின்றால்?’ (இரண்டாந்திருவந். 71.)

மங்களாஸானத்தை நித்யமாகக் கொண்ட பெரியாழ்வார் அநிமிஷரைப் பார்த்து
உறகல் உறகல் ஒண் சுடர் ஆழியே சங்கே
அறவெறி நாந்தக வாளே யழகிய சார்ங்கமே தண்டே
இறவு படாமல் இருந்த எண்மர் உலோகபாலீர்காள்
பறவை அரையா உறகல் பள்ளியறை குறிக் கொள்மின் -5 2-9 –

அநிமிஷரையும் ஆய்த்து-
பிரயோஜனாந்த பரரான மகா ராஜரும் அகப்பட பரியும் விஷயத்துக்கு நித்யர் பரிய கேட்க வேண்டா இறே –
அகர்களையும் அகப்பட உறங்காதே கொள்ளுங்கோள் என்னும் படி இவர் பரிவு –
இவர்களுக்கு உறக்கம் ஆவது -குண வித்தராய் -நஞ்சு உண்டாரைப் போலே தம் தாமை அறியாது இருத்தல் –
அனுபவத்திலே இழிந்து கைங்கர்ய பரராய் இருத்தல் –

இதிலும் திரு அனந்தாழ்வானைக் குறித்து அருளிச் செய்யவில்லையே
படுக்கையில் சாய்ந்தார் உறங்கும் அத்தனை அல்லது படுக்கைக்கு உறக்கம் உண்டோ-நாயனார் –
உறங்கா வில்லி என்று பெயர் பெற்றவன் அன்றோ –

ஆனால் இங்கே ஒரு ஸந்தேஹம் எழலாம்
ஆழ்வார்கள் திரு அவதாரங்களைப் பற்றி நம்பிள்ளை –
முக்தரிலே ஒருவரை இங்கே போர விட்டதாகில் -நாம் போந்த கார்யம் முடிந்தவாறே போகிறோம் என்று ஆறி இருக்கக் கூடும்
அங்கன் அன்றியிலே -இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்றும்
பாவியேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ -என்றும்
மாறி மாறி பல பிறப்பும் பிறந்து -என்றும்
முன் பரவை கடைந்து அமுதம் கொண்ட மூர்த்தீயோ -என்றும் கூப்பிடுகையாலே
இவர் சம்சாரிகளில் ஒருவராம் அத்தனை -என்று அருளிச் செய்கிறார்
அப்படி இருக்க ஆச்சார்யர்களை நித்யர்கள் அவதாரம் என்னலாமோ என்கிற சங்கை உதிக்கும்
நம் ஸ்வாமியும் ஆர்த்தி தலையெடுத்து ஆர்த்தி பிரபந்தம் அருளிச் செய்துள்ளார் அன்றோ
இதுக்கு முன்னோர் அருளிச் செய்யும் சமாதானம் –
திருவந்த ஆழ்வான் திரு வவதரிக்கும் போது எல்லாம் கூடவே
சக்ரவர்த்தி திருமகனாகவும் கிருஷ்ணனாகவும் வந்து இடைவிடாமல் கைங்கர்யம்
செய்து கொண்டே அன்றோ இருந்தார்கள்

ஆனாலும்
ஆதியிலே அரவரசை அழைத்து அரங்கர் அவனியிலே இரு நூறு ஆண்டு இரு நீர் என்ன
பாதியிலே உடையவராய் வந்து தோன்றிப் பரமபதம் நாடி அவர் போவேன் என்ன
நீதியாய் முன் போலே நிற்க நாடி நிலுவை தன்னை நிறைவேற்றி வாரும் என்ன
சாதாரணம் எனுமா வருடம் தன்னில் தனித் துலா மூல நாள் தான் வந்தாரே -ஸ்ரீ சம்பிரதாய சந்திரிகை -ஸ்ரீ அப்புள்ளார்
வடமொழி வேத வியானங்கள் அருள உடையவர்
தமிழ் வேத வியாக்கியானங்கள் அருள நம் ஸ்வாமி
அருளிச் செய்த அனந்தரம் ஆர்த்தி தலையெடுத்து ஆர்த்தி பிரபந்தம் அருள-எம்பெருமான் -73- திருநக்ஷத்த்ரத்திலே
தன்னுடன் சேர்த்துக் கொண்டு அருளினான்
ஆக இந்தவிஷயத்திலும் திருவனந்த ஆழ்வான் உடைய வை லக்ஷண்யமே ஸித்தித்தாயிற்று –

————–
சிறப்புப் பெயர்கள்
யதீந்த்ர ப்ரவனர்
வரவர முனி
சௌமய ஜாமாத்ரு முனி
சௌ மய பயந்த்ரமுனி
பெரிய ஜீயர்
வியக்யான சக்கரவர்த்தி.

செய்ய தாமரைத் தாளினை வாழியே ,சேலை வாழி திருநாபி வாழியே
துய்ய மார்பும் புரிநூலும் வாழியே சுந்தரத் திரு தோளினைவாழியே
கையுமேந்திய முக்கோலும் வாழியே கருணை பொங்கிய கண்ணினை வாழியே
பொய்யில்லாத மணவாள மாமுனி புந்தி வாழி புகழ் வாழி வாழியே”

——————-———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே வேங்கட கிருஷ்ணன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: