ஸ்ரீ தன்வந்திரி பகவான் அவதாரம் –

ஸ்ரீ தன்வந்திரி பகவான் மந்திரம்:
ஓம் நமோ பகவதே மஹா சுதர்சன வாசுதேவாய தந்வந்த்ரயே அம்ருத கலச ஹஸ்தாய
சர்வபய விநாசாய சர்வரோக நிவாரணாய த்ரைலோக்ய பதயே த்ரைலோக்ய நிதயே
ஸ்ரீமஹாவிஷ்ணு ஸ்வரூப ஸ்ரீதந்வந்த்ரி ஸ்வரூப
ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஒளஷத சக்ர நாராயண நம: ( ஸ்வாஹா )

தனு என்ற வார்த்தைக்கு அம்பு, உடலைத் தைத்தல் என்கிற பொருள் உண்டு.
எனவே, தன்வந்திரி என்கிற வார்த்தைக்கு அறுவை சிகிச்சை முறையில் சிறந்தவர் என்றும் கொள்ளலாம்.
தன்வ என்ற பதத்துக்கு வான்வெளி என்று பொருள். தன்வன் என்றால் வான்வெளியில் உலவுபவன் என்று பொருள் கொள்ளலாம்.
எனவே, இவரையேச் சூரியன் என்றும் சொல்வார்கள்.
சூக்த கிரந்தங்களில் தன்வந்திரி என்கிற திருநாமம் சூரியக் கடவுளையேக் குறிப்பிடுகிறது.
தன்வந்திரிதான் ஆயுர்வேதத்தைப் படைத்தவர் என்று மத்ஸ்ய புராணம் கூறுகிறது.
தன்வந்திரியை வைத்தியத்தின் அரசன், சிறந்த மருத்துவர் என்றும் குறிப்பிடுகிறது பத்ம புராணம்.
வாயு புராணம், விஷ்ணு புராணம் போன்றவையும் தன்வந்திரி அவதாரம் பற்றிச் சொல்கிறது.

தனு-அந்தம் -ரிச்யதி -வில்லால் ஆயுதங்களால் செய்யும் சிகிச்சைகளைச் சொல்லி –
ஸல்யம் -ரண சிகிச்சை -ஆழ் பொருள்களை உணர்ந்தவர்
ஆயுர் வேதம் சாஸ்திரம் பிரசாரம் -வேத உப அங்கம் இது
ரிக் வேதம் அதர்வண வேத உப அங்கம்
மருத்துவ பகுதி -ரிக் வேத உப அங்கம்
ரண சிகிச்சை பகுதி -அதர்வண அங்கம்
ஸ்ரீ மத் பாகவதம் -2-21-
ஆயுஸ் ஸூ ஆரோக்யம் கொடுக்கும் =அம்ருத மதன காலத்தில் அவதாரம்
ஸ்வயமேவ -தானே அவதாரம் -கீர்த்தி என்றே மற்ற பெயர்
நோயை சடக்கென முடிக்கிறார்
யாகம் பாகம் -உண்டு –

தீர்க்க கழுத்து அகன்ற மார்பு ஸ்யாமளம் -சர்வ ஆபரண பூஷித
மணிகள் கிரீடம் -நீண்ட சுருண்ட குழல் -அமுதம் கையில்
கடகம் அணிந்த கைகள்
விஷ்ணு அம்சம் -பாகவதம் விளக்கும்
விஷ்ணு புராணமும் விளக்கம்
விஷ்ணு மத்ஸ்யாதி அவதாரம் போல் தன்வந்திரி அவதாரமும்

கமண்டலம் அம்ருத கலசம் -வைத்தியசாலை போல் -சுக்கு கஷாயம் -கலந்து அனுப்புவார்கள்
ஸ்ரீ ரெங்கம் -நான்கு திருக்கைகள் -சங்கு சக்கரம்
கீழ் வலது கையில் அம்ருத கலசம்
கீழ் இடது கையில் அட்டைப் பூச்சி
தேவ வைத்தியர்
ஸப்த கல்ப த்ருமம் புஸ்தகம் விளக்கும்
மஹா லஷ்மி உடன் பிறந்தவர்
காசி ராசன் வம்சத்தில் பிறந்து ஆயுர் வேதம் பிரவர்திப்பிக்க நாராயணனே வரம் தந்து அருளினார்
அவரைப் பார்த்து சக்ரனான இந்திரன் -ஜீவ ராசிகளுக்கு உபகாரம் செய்ய வேண்டினார் –
அமரத்துவம் ஏற்கனவே எனது வந்து தேவர்களுக்கு உபகரித்தவர் –

காசி கோத்ரம் காசி வம்சம் பிறந்தவர் -இரண்டு அவதாரங்கள்
16 பேர்கள் நூல் எழுத்து
சரகர் -மருத்துவர் -சரகர் சம்ஹிதை
ஸூஸ் ருதர் -ரண சிகிச்சை –
சந்தான கரணி போல்வன
கருடனுக்கு சிஷ்யனாக இருந்து சாஸ்திரம் கற்று
ருத்ரனுக்கும் சிஷ்யர்
தீர்க்க தபஸ் பிள்ளை தன் வந்த்ரி காசி அரசர்

தனு என்ற வார்த்தைக்கு அம்பு, உடலைத் தைத்தல் என்கிற பொருள் உண்டு.
எனவே, தன்வந்திரி என்கிற வார்த்தைக்கு அறுவை சிகிச்சை முறையில் சிறந்தவர் என்றும் கொள்ளலாம்.
பிரமன் நான்கு வேதங்களையும் படைத்து, அதன் சாரமாகிய ஆயுர்வேதத்தையும் படைத்தான்.
இந்த ஆயுர் வேதம் நன்றாகத் தழைத்தோங்கி, பலரையும் அடைய வேண்டும் என்பதற்காக,
முதலில் சூரியக் கடவுளுக்கு உபதேசித்தார் பிரம்மன்.
சூரியனும் இதை நன்றாகக் கற்று உணர்ந்து, அதை எங்கும் பரவச் செய்யும் பணியை மேற்கொண்டார்.

ஸ்ரீ தன்வந்திரி பகவான் அவதாரம் பற்றி ஸ்ரீமத் பாகவதம், ஸ்ரீ விஷ்ணு புராணம் மற்றும்
ஸ்ரீ பிரம்மாண்ட புராணத்தில் குறிப்புகள் உள்ளன.
ஸ்ரீ திருப் பாற்கடலில் தேவர்களும், அசுரர்களும் அமுதம் கடைந்தபோது கடலில் இருந்து பல்வேறு பொருட்களும்,
பல தெய்வங்களும் வெளிவந்தன. அப்போது அண்டமே பிரமிக்கும் வண்ணம் ஜோதி ஒன்று எழுந்தது.
அந்த ஜோதியில் பிறந்த மகாபுருஷர் தான் ஸ்ரீ தன்வந்திரி. கற்பனைக்கு எட்டாத அழகுடன், திருக்கரங்களில்
சங்கு,சக்கரம், அட்டைப்பூச்சி, அமிர்தகலசம் ஆகியவற்றை ஏந்தி நின்றார்.
அவர் தான் ஸ்ரீ தன்வந்திரி என்ற தெய்வீக மருத்துவர்.

சூரியக் கடவுளிடம் இருந்து ஆயுர்வேதத்தைக் கற்றுத் தேர்ந்த பதினாறு மாணவர்களில் மிகவும்
முக்கியமானவர் ஸ்ரீ தன்வந்திரி என்று பிரம்ம வைவர்த்த புராணம் சொல்கிறது.
ஸ்ரீ தன் வந்திரி என்று சொல்லப்படுபவர் வானத்தில் வசித்து வருபவர். அதாவது, சூரியனே ஸ்ரீ தன்வந்திரி என்றும்
புராணங்களில் ஒரு குறிப்பு இருக்கிறது.
தன்வ என்ற பதத்துக்கு வான்வெளி என்று பொருள்.
தன்வன் என்றால் வான்வெளியில் உலவுபவன் என்று பொருள் கொள்ளலாம்.
எனவே, இவரையே சூரியன் என்றும் சொல்வார்கள்.
சூக்த கிரந்தங்களில் ஸ்ரீ தன் வந்திரி என்கிற திருநாமம் சூரியக் கடவுளையேக் குறிப்பிடுகிறது.
ஸ்ரீ தன் வந்திரி தான் ஆயுர்வேதத்தைப் படைத்தவர் என்று ஸ்ரீ மத்ஸ்ய புராணம் கூறுகிறது.
ஸ்ரீ தன் வந்திரியை வைத்தியத்தின் அரசன், சிறந்த மருத்துவர் என்றும் குறிப்பிடுகிறது ஸ்ரீ பத்ம புராணம்.
ஸ்ரீ வாயு புராணம், ஸ்ரீ விஷ்ணு புராணம் போன்றவையும் ஸ்ரீ தன் வந்திரி அவதாரம் பற்றிச் சொல்கிறது.

ஸ்ரீ தன் வந்த்ரி பகவானின் அம்சமாக பூமியில் தோன்றிய சித்த புருஷர்கள் ஆயுர்வேதத்தை நூலாக்கித்
தந்தனர் என்கின்றனர் ஆய்வாளர்கள். ஒரு பிறவியில் தீர்க்கமர்‌ என்பவரின்‌ மகனாகவும்,
அடுத்த பிறவியில் காசி ராஜனின்‌ மகனாகவும்‌ தோன்றிய மகானே சேதுமான்‌ என்ற திரு நாமத்தோடு
தீர்த்த பசு என்ற மன்னரின்‌ மகனாகப் பிறந்து ஆயுர் வேதம் என்ற தலைப்பில்
பல மருத்துவ நூல்களை எழுதினார் என்கின்றனர்.
கனிஷ்க மன்னனின் அவையை அலங்கரித்த சுஸ்ருதர்‌ என்ற மருத்‌துவ மேதைக்கு
ஆயுர்வேத மருத்துவ முறையை அவரே கற்பித்தார்‌.
பிறகு அனு என்ற அரசனின்‌ மகனாகப்‌ பிறந்து பராசர முனிவரிடம்‌ பாடங்கள்‌ கற்று ஆயுர் வேதத்தை
முழுமை யாக்கினார் என்கின்றன் வடமொழி நூல்கள்.

திவோ தாசர் -வைத்ய சாஸ்திரம்
நாராயண கவசம் -ஸ்ரீ மத் பாகவதம் –
உடம்பில் இருந்து ரக்ஷணம்
தன்வந்திரி -அபஷ்யம் தோஷம்-பத்தியம் -அடக்கமாக உண்பது இயற்கை
அளவு கடந்து உண்பது -கல்யாண சமையல் சாதம் உண்பதே செயற்கை
உணவே மருந்தும் விருந்தும்
அபஷ்யம் -அபத்யம் –
அத்யதே -அளவோடு உண்டால் நாம் உண்ணலாம் -இல்லையேல் அது நம்மை உண்ணும்
ரஜோ குண ஆகாரம் -தபோ குண ஆகாரம் -ஸத்ய குண ஆகாரம்
விக்ரமன் -ராஜ சபை நவரத்ன பட்டியலில்
தன்வந்திரி -முதல் -சனகர் வேதாள பாட்டர் காளி தாசர் போல் வார்-வராஹ
உஜ்ஜயன் -கடக ரேகை -விக்ரம் -5122 சாலி வாக்கம் வருஷம் காளி -விக்ரம் சம்வத-
ஆயுர் வேதம்
ஆயுர் அநேக விந்தத்தி அடைகிறோம் -வேத்தி அறிகிறோம் என்றுமாம்
அதன் படி நடந்து அடைகிறோம் -அதுவும் ஆரோக்யத்துடன்
ரிக் வேத உப -மருத்துவம்
ஸஸ்த்ர சாஸ்திரம் அதர்வண -ரண சிகிச்சை

கர்மத்தால் பிறவி -உடல் -பிறந்த பொழுது மற்றவற்றால் தொடர்பால்
இன்ப துன்பங்கள் -கர்ம பலன்களை அனுபவிக்க இவை –
படுவது ஆத்மா தான் -உடல் இருப்பதால் தான் அனுபவம் –
ஆரோக்யம் பாஸ்கராத் -ஞானம் சங்கரன் –மோக்ஷம் ஜனார்த்தனன் –
வெளிச்சம் வெப்பம் வியாதி பரவாது
vaitamin -d-
16 பேரை பிரமன் நியமிக்கிறார்
தன்வந்திரி
அஸ்வினி குமாரர்கள்
நகுலன் சகாதேவன்
பய்லர் அகஸ்தியர் -நூல்கள் உண்டே
சிகிச்சா தத்வ விஞ்ஞானம் தன்வந்திரி
சிகிச்சா தர்ப்பணம் திவோ தாசர்
கௌமிக்கி காசி ராஜர்
அஸ்வினி குமாரர் -வைதிக ஸங்க்ரஹம்
நகுலன் -சகாதேவன் -அஸ்வினி குமாரர் அம்சம் -வியாதி விமர்த்தனம்
யம ராஜரே நூல் ஞான ஆர்ணவம்
ஜீவா தானம் சபண ர்
நிலா பிள்ளை புதன் -சர்வ சாரம்
ஜாபாலர் தந்த்ர சாரம்
பாய்லர் நிதானம் -நோய் நாடி முதல் நாடி
சராசரி -சர்வ தரம்
அகஸ்தியர் நூல்
ஆயுர் வேத சாஸ்திரம் -இவர்கள் கொடுத்தது –

வைத்தியோ நாராயணன் ஹரி
மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணன்

1-சல்யம் -அறுவை சிகிச்சை
2-சாலாக்யம் -முக உறுப்புக்கள் கண் ent
3-காய சிகிச்சை
4-பூத வித்யா -மநோ தத்வ நிபுணர்
5-கௌமாரம் -குழந்தை மருத்துவம்
6-அகத தந்திரம் -விஷம் -கிருமிகள் -எதிர்ப்பு சக்தி வளர்க்க
7-ரசாயன தந்திரம் -மூலிகைகள் தங்க பஸ்பம் –
8-வாஜீ கரணம் -ஆண்மை பெண்மை குழந்தை பிறப்பு இப்படி எட்டு வகைகள்
வியாதி வராமல் தடுக்கவும் வந்தால் போக்கவும் ஆயுர் வேதம் -வரு முன் காக்கவும் ஆயுர் வேதம் உண்டே

நோய் -த்ருஷ்ட காரணமா -அத்ருஷ்ட காரணமா
தத் தேக ஆரம்பண -பிறக்க அத்ருஷ்ட காரணம்
அடிப்படை கர்மத்தால் -சத்வ ரஜஸ் தமஸ்
அசுரர் புதல்வன் -மனசில் உள்ள ஸத்வ குணத்தை வளர்த்து பரம பக்தன்
விபீஷணனும் இப்படியே ராம பக்தன்
வளரும் பொழுது -மற்றவர் சம்பந்தம்
தேக சக்தியால் எதிர்ப்பு சக்தி -த்ருஷ்ட காரணம் இவை –
புண்ய சாலிகளுக்கும் நோய் வரலாம் –
கம்சாதிகள் ராவணாதிகள் ஆரோக்கியமாகவே இருந்து உள்ளார்கள் –
சரீரம் -இருக்க துன்பம் தவிர்க்க முடியாதே –

தோஷம் தர்சனம் பிரத்யக்ஷம் -ஸ்ரீ கீதை -அறிந்து கொள்ள வேண்டும் -த்ருஷ்டங்களே காரணம்
பித்ரு கார்யங்கள் -செய்யா விடில் -சஞ்சித கர்மாவில் போய் சேரும் -சேமித்து வைத்து -பலம் அனுபவிக்காமல்
ப்ராரப்தம் -பலம் கொடுக்கத் தொடங்கிய கர்மாக்கள்
சஞ்சித கர்மாக்களின் பலன் அடுத்த பிறவிகளில் பலன் கொடுக்கும் –
நோயால் துன்பம் பட்டால் கர்மங்கள் தொலையுமா -ஆம் -பிரமாணங்கள் உண்டே இதுக்கு –
துக்கே துஷ்கர்மா க்கள் போகும் என்று பண்டிதர் அறிகிறார்கள்

ஆளவந்தார் நோயை மாறனேர் நம்பி வாங்கிக் கொண்ட ஐ திக்யம்-மிக்க நேர்மை உள்ளாருக்கு மட்டுமே இது போல் நடக்கும்

ஒரு நோய் தீர மற்றவர் பாராயணம் செய்தால் பலன் கிட்டுமா -இருக்கும் –
நம்பிள்ளைக்கு திரு மேனி நோவு சாத்திக்க -பின்பு அழகியராம் பெருமாள் ஜீயர் அடியார்கள் உடன் –
நோய் நீக்கிக் கொடுத்த ஐதிக்யம் உண்டே

தீராத நோய் -மருத்துவர் கை விட்டால் -சாஸ்திரம் உதவுமா -மஹா விசுவாசம் -கர்ம பலன் என்று விட்டவரும் உண்டு
கைங்கர்யம் செய்ய கேட்டுப் பெற்றவரும் உண்டு
விஷ்ணு சஹஸ்ர நாம பலன் —வர்த்தமான –நாராயண சப்த மாத்திரம் -விமுக்த துக்க ஸூகிநோ பவந்து
சம்சாரமே நோய் உணர்ந்தவன் சம்சார காட்டில் இருந்து விடுபடுகிறான்
ஜென்ம மிருத்யு ஜரா வியாதி ஏற்படாது

பூர்வ ஆச்சார்யர்கள் –
ஸ்ரீ நாராயண பட்டாத்ரி -ஆச்சார்யர் பக்க வாத நோயை வாங்கி
நோயை போக்கி கொடுக்க பிரபந்தம் பாடி போக்கிக் கொம்பிடார்
விசுவாசம் வேண்டுமே –
ஆரோக்யம் திடகாத்ரம் அஸ்து -அர்ச்சனை -ரிஷிகளுக்கு சாபம் போன்றவையும் உண்டே
திரு மழிசை ஆழ்வார் – கணி கண்டன் -போனகம் செய்து இளமை பெற்ற சரித்திரம்
உடைந்த நோய்களை ஒடுவிக்குமே–ஆழி எழ சங்கு எழ

ஆயுசு ஆரோக்யம் செல்வம் -சக்கரம் -ஹேதி ராஜ-ஸூ தரிசன சதகம் -கூர நாராயண ஜீயர் -அறிவோம் –
ஏகஸ்மின் -பலரும் சேர்ந்து -ஒரே கர்மம் ஒரே சமயத்தில் பலன் கொடுக்கும் படி இல்லை
இவற்றுக்கு -த்ருஷ்ட காரணம் -விமான விபத்து -சுமானி போல்வன -கண்ணுக்கு நேராகத் தெரியுமே –

——————————

கேரள மாநிலம் சேர்த்தால என்ற இடத்தில் அமைந்துள்ளது தன்வந்திரி திருக்கோயில் ஆகும்.

இத்திருக்கோயிலில் தன்வந்திரியே மூலவராக அருள்பாலித்து வருகிறார்.
இத்திருக்கோயிலில் ஓணத்தன்றும், பிறதிருவோண நட்சத்திர நாட்களிலும் பால் பாயாச வழிபாடுநடைபெறுகிறது.
சித்திரை மாதம் உத்திர நட்சத்திரத்தில் பிரதிஷ்டாதினம் நடைபெறுகிறது.
திருவோண நோன்பும், சந்தான வழிபாடும் இங்கு சிறப்பு வாய்ந்ததாகும். முக்குடி என்னும் மருந்தை 28 மூலிகைகள்,
பச்சை மருந்து ஆகியவற்றை தயிரில் கலந்து செய்கின்றனர்.

ஸ்ரீ தன்வந்திரி ஸ்லோகம்
சதுர்புஜம் பீத வஸ்திரம் ஸர்வாலங்கார சோபிதம் த்யோயேத்
தன்வந்த்ரிம் தேவம் ஸுராஸுர நமஸ்க்ருதம்.

ஸ்ரீ தன்வந்திரி அஷ்டோத்திர சத நாமாவளி!
ஓம் தந்வந்தரயே நம: ஓம் அதிதேவாய நம: ஓம் ஸுராஸுரவந்திதாய நம:
ஓம் வயஸ்ஸ்தாபகாய நம:ஓம் ஸர்வாமயத்வம்ஸகாய நம:
ஓம் பயாபஹாய நம: ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நம:
ஓம் விவிதௌஷததாத்ரே நம: ஓம் ஸர்வேச்வராய நம:
ஓம் சங்கசக்ரதராய நம: ஓம் அம்ருதகலசஹஸ்தாய நம:
ஓம் சல்யதந்த்ரவிசாரதாய நம: ஓம் திவ்யௌஷததராய நம:
ஓம் கருணாம்ருதஸாகராய நம: ஓம் ஸுககராய நம:
ஓம் சஸ்த்ரக்ரியாகுசலாய நம: ஓம் தீராய நம: ஓம் நிரீஹாய நம:
ஓம் சுபதாய நம: ஓம் மஹாதயாளவே நம: ஓம் பிஷக்தமாய நம:
ஓம் ப்ராணதாய நம: ஓம் வித்வத்வராய நம: ஓம் ஆர்த்தத்ராண பராணாய நம:
ஓம் ஆயுர்வேத ப்ரசாரகாய நம: ஓம் அஷ்டாங்கயோக நிபுணாய நம:
ஓம் ஜகதுத்தாரகாய நம: ஓம் அநுத்தமாய நம: ஓம் ஸர்வஜ்ஞாய நம:
ஓம் விஷ்ணவே நம: ஓம் ஸமாநாதிகவர்ஜிதாய நம: ஓம் ஸர்வப்ராணி ஸுஹ்ருதே நம:
ஓம் ஸர்வமங்களகராய நம: ஓம் ஸர்வார்த்ததாத்ரே நம: ஓம் மஹாமேதாவிநே நம:
ஓம் அம்ருதபாய நம: ஓம் ஸத்யஸ்ந்தாய நம: ஓம் ஆச்ரிதஜநவத்ஸலாய நம:
ஓம் ஸாங்காகதவேத வேத்யாய நம: ஓம் அம்ருதாசாய நம: ஓம் அம்ருதலபுஷே நம:
ஓம் ப்ராண நிலயாய நம: ஓம் புண்டரீகாக்ஷõய நம: ஓம் லோகாத்யக்ஷõய நம:
ஓம் ப்ராணஜீவநாய நம: ஓம் ஜந்மமருத்யுஜராதிகாய நம: ஓம் ஸத்கதிப்ரதாய நம:
ஓம் மஹோத்ஸாஹாய நம: ஓம் ஸமஸ்தடக்தஸுகதாத்ரே நம:
ஓம் ஸஹிஷ்ணவே நம: ஓம் ஸித்தாய நம: ஓம் ஸமாத்மநே நம: ஓம் வைத்யரத்நாய நம:
ஓம் அம்ருத்யவே நம: ஓம் மஹாகுரவே நம: ஓம் அம்ருதாம்சோத்பவாய நம:
ஓம் ÷க்ஷமக்ருதே நம: ஓம் வம்சவர்தநாய நம: ஓம் வீதபயாய நம: ஓம் ப்ராணப்ருதே நம:
ஓம் க்ஷீராப்திஜந்மநே நம: ஓம் சந்த்ர ஸஹோதராய நம: ஓம் ஸர்வலோக வந்திதாய நம:
ஓம் பரப்ரஹ்மணே நம: ஓம் யஜ்ஞபோக்தரே நம: ஓம் புணயச்லோகாய நம: ஓம் பூஜ்யாபாதாய நம:
ஓம் ஸநாதநதமாய நம: ஓம் ஸ்வஸ்திதாய நம: ஓம் தீர்க்காயுஷ்காரகாய நம: ஓம் புராண புரு÷ஷாத்தமாய நம:
ஓம் அமரப்ரபவே நம: ஓம் அம்ருதாய நம: ஓம் நாராயணாய நம: ஓம் ஒளஷதாய நம: ஓம் ஸர்வாநுகூலாய நம:
ஓம் சோகநாசநாய நம: ஓம் லோகபந்தவே நம: ஓம் நாநாரோகார்த்தி பஞ்ஜநாய நம: ஓம் ப்ரஜாநாம் ஜீவஹேதவே நம:
ஓம் ப்ரஜாரக்ஷணதீக்ஷிதாய நம: ஓம் சுக்லவாஸஸே நம: ஓம் புருஷார்த்த ப்ரதாய நம: ஓம் ப்ரசாந்தாத்மநே நம:
ஓம் பக்தஸர்வார்த்த ஸாதகாய நம: ஓம் போகபாக்யப்ரதாத்ரே நம: ஓம் மஹைச்வர்யதாயகாய நம:
ஓம் லோகசல்யஹ்ருதே நம: ஓம் சதுர்ப்புஜாய நம: ஓம் நவரத்நபுஜாய நம: ஓம் நிஸ்ஸீமமஹிம்நே நம:
ஓம் கோவிதாநாம் பதயே நம: ஓம் திவோதாஸாய நம: ஓம் ப்ராணாசார்யாய நம: ஓம் பிஷங்மணயே நம:
ஓம் த்ரைலோக்யாநாதாய நம: ஓம் பக்திகம்யாய நம: ஓம் தேஜோநிதயே நம: ஓம் காலகாலாய நம:
ஓம் பராமார்த்தகுரவே நம: ஓம் ஜகதாநந்தகாரகாய நம: ஓம் ஆதிவைத்யாய நம: ஓம் ஸ்ரீரங்கநிலயாய நம:
ஓம் ஸர்வஜநஸேவிதாய நம: ஓம் லக்ஷ்மீபதயே நம: ஓம் ஸர்வலோகரக்ஷõய நம:
ஓம் காவேரீஸ்நாதஸந்துஷ்டாய நம: ஓம் ஸர்வாபீஷ்ட ப்ரதாய விபூகிதாய நம:

———————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸ்ரீ தன்வந்திரி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: