ஸ்ரீ ராம நாம மஹிமை —

ஓம் ஸ்ரீசீதா லக்ஷ்மண பரத சத்ருக்ன அனுமந்த் சமேத ஸ்ரீராமச் சந்திர பரப்பிரம்மணே நமஹ!

கற்பார் இராம பிரானை யல்லால் மற்றும் கற்பரோ?,
புற்பா முதலாப் புல்லெறும் பாதியொன் றின்றியே,
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்,
நற்பாலுக் குய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே.- நம்மாழ்வார்

சிவனோ அல்லன் நான்முகனோ அல்லன் திருமாலாம்
அவனோ அல்லன் செய்தவம் எல்லாம் அடுகின்றான்
தவனோ என்னின் செய்து முடிக்கும் தரன் அல்லன்
இவனோ அவ்வேத முதல் காரணன் -கம்பராமாயணம்

ஸ்ரீராம காயத்ரி
ஓம் தாசரதாய வித்மஹே
சீதா வல்லபாய தீமஹி
தந்நோ ராம ப்ரச்சோதயாத்

ஸ்ரீ சீதா காயத்ரி
ஓம் ஜனக புத்ரியை வித்மஹே
ராம ப்ரியாய தீமஹி
தந்நோ சீதா ப்ரச்சோதயாத்

ராம பாத காயத்ரி
ஓம் ராம பாதாய வித்மஹே
ஸ்ரீராம பாதாய தீமஹி
தந்நோ ராம பாதப் ப்ரச்சோதயாத்

வேத சாரம் கீதையே
கீதை சாரம் கிருஷ்ணரே
கிருஷ்ணர் பாதம் பற்றவே
கிருஷ்ண சாரம் கிட்டுமே

கிருஷ்ண சாரம் ராமரே
ராமர் சாரம் நாமமே
ராம நாமம் சொல்லவே
ராமர் பாதம் கிட்டுமே

ராமர் பாதம் கிட்டினால்
நன்மை யாவும் கொட்டுமே
நன்மை யாவும் கொட்டினால்
நன்மையாவும் கிட்டுமே

நன்மையாவும் என்கையில்
அளவு ஒன்றும் இல்லையே
அளவொன்றும் இன்றியே
நன்மையாவும் கிட்டுமே

ராமாயணம் விவசாயம்
பாகவதம் அறுவடை

ஸ்ரீராமராம ராமேதி
ரமே ராமே மனோரமே
சஹஸ்ர நாம தத்துல்யம்
ராம நாம வரானனே!-சிவபெருமான்

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராம வென்ற யிரண்டெழுத்தினால் -கம்பர்

நாடிய பொருள்கை கூடு ஞானமும் புகழு முண்டாம்
வீடியல் வழியு மாக்கும் வேரியன் கமலை நோக்கு
நீடிய வரக்கர் சேனை நீறுபட் டழிய வாகை
சூடிய சிலையிராமன் றோளவலி கூறு வோர்க்கே -கம்பர்

மும்மை சால் உலகுக்கெல்லாம் மூல மந்திரத்தை முற்றும்
தம்மையே தமக்கு நல்கும் தனிப் பெரும் பதத்தைத் தானே
இம்மையே மறுமை நோய்க்கு மருந்தினை ராம எனும்
செம்மைசேர் நாமம் தன்னைக் கண்களால் தெரியக் கண்டான் -கம்பர்

நன்மை நேர்மை இனிமை எளிமை
கனிவு வலிவு பணிவு துணிவு
வீரம் வீரியம் வல்லமை வெற்றி
ஞாபகம் நம்பகம் நாயகம் நாணயம்
ஈரெட்டு குணங்களும் இன்னும் பலவும்
ஈரெழுத்து மந்திரம் சீராமம் தந்திடும்

அந்தி மாலை உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
சந்தி தர்ப் பணங்களும் தபங்களும் செபங்களும்
சிந்தை மேவு ஞானமும் தினம் செபிக்கு மந்திரம்
எந்தை ராம ராம ராம ராம என்னும் நாமமே. -சிவ வாக்கியர்

கதாவு பஞ்ச பாதகங்களைத் துறந்த மந்திரம்
இதாம் இதாம் அதல்ல என்று வைத்துழலும் ஏழைகள்
சதா விடாமல் ஓதுவார் தமக்கு நல்ல மந்திரம்
இதாம் இதாம் ராம ராம ராம என்னும் நாமமே.-சிவ வாக்கியர்

நானதேது? நீயதேது? நடுவில் நின்றது ஏதடா?
கோனதேது? குருவதேது? கூறிடும் குலாமரே!
ஆனதேது? அழிவதேது? அப்புறத்தில் அப்புறம்
ஈனதேது? ராம ராம ராம என்ற நாமமே!-சிவவாக்கியர்

போதடா எழுந்ததும் புனலதாகி வந்ததும்
தாதடா புகுந்ததும் தானடா விளைந்ததும்
ஓதடா அஞ்சு மூன்றும் ஒன்றைத்தான வக்கரம்
ஓதடா இராம ராம ராம வென்னும் நாமமே -சிவவாக்கியர்

ஒழியத்தான காசி மீது வந்து தங்குவோர்க்கெலாம்
வெளியதான சோதி மேனி விஸ்வநாதனானவன்
தெளியு மங்கை உடன் இருந்து செப்புகின்ற தாரகம்
எளியதோர் இராம ராம ராம விந்த நாமமே!!! -சிவவாக்கியர்

கார கார கார கார காவல் ஊழி காவலன்
போர போர போர போர போரில் நின்ற புண்ணியன்
மார மார மார மார மரங்கள் எழும் எய்த ஸ்ரீ
ராம ராம ராம ராம ராம என்னும் நாமமே!! -சிவ வாக்கியர்

நீடு பாரிலே பிறந்து நேயமான காயந்தான்
வீடு பேறு இது என்ற போது வேண்டி இன்பம் வேண்டுமோ
பாடி நாலு வேதமும் பாரிலே படர்ந்ததோ
நாடு ராம ராம ராம ராம என்னும் நாமமே !!! -சிவ வாக்கியர்

ஒரேழுத்து உலகெலாம் உதித்த அட்சரத்துளே
ஈரெழுத்து இயம்புகின்ற இன்பமேது அறிகிலீர்
மூவெழுத்து மூவரை மூண்டெழுந்த மூர்த்தியை
நாளேழுந்து நாவிலே நவ்வின்றதே சிவாயமே! -சிவவாக்கியர்

ஒன்பதான வாசல் தான் ஒழியு நாள் இருக்கையில்
ஒன்பதாம் ராம ராம ராம என்னும் நாமமே
வன்மமான பேர்கள் வாக்கில் வந்து நோய் அடைப்பராம்
அன்பரான பேர்கள் வாக்கில் ஆய்ந்தமைந்து இருப்பதே!-சிவ வாக்கியர்

காராய வண்ண மணி வண்ண கண்ண கன சங்கு சக்ர தரநீள்
சீராய தூய மலர்வாய நேய சீராம ராம எனவே
தாராய வாழ்வு தருநெஞ்சு சூழ்க தாமோதராய நம ஓம்
நாராயணாய நம வாமனாய நம கேசவாய நமவே! -வள்ளலார்

திருமாலுக்கு அடிமை செய்
அரனை மறவாதே -ஔவைப் பாட்டி

வாழிய வேதம் நான்கும் மனுமுறை வந்த நூலும்
வேள்வியும் மெய்யும் தெய்வ வேதியர் விழைவும் அஃதே
ஆழி அம் கமலக் கையான் ஆகிய பரமன் என்னா
ஏழையர் உள்ளம் என்ன இருண்டன திசைகள் எல்லாம் –யுத்த காண்டம், நாகபாசப் படலம், கம்ப ராமாயணம்

—————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: