ஸ்ரீ யதிராஜ விம்சதி வியாக்யானம் -ஸ்ரீ கோபாலாச்சார்ய ஸ்வாமிகள் –பாசுரம் -19-

சாரீரகத்தில் மூன்றாம் அத்யாயம் சாதன அத்யாயம் –
ப்ரஹ்ம பிராப்தி சாதனத்தில் -ஆச்சார்ய உபாசனம் ஸுவ்ஸம் -ஆச்சார்ய உபாசனம் முக்யம்
ஸ்வ ஆச்சார்ய பரம ஆச்சார்யர் எம்பெருமானார்
இந்த ஆச்சார்யர்களின் உபாசனம் பர ப்ரஹ்ம பிராப்தி சாதனம் ஆகும் –
புருஷகாரத்தில் எம்பெருமானார் புருஷகாரம் வேண்டும் -பெரிய பிராட்டியாரின் புருஷகாரமும் வேண்டும் –
அந்த ஸ்ரீ முக்கிய சாதனம் -ஸ்ரீ மன் என்று சாதனமான ஸ்ரீ விசிஷ்டனான நாராயணனை
ஸ்ரீ மன் ஸ்ரீ மன் என்று கத்யத்தில் திரும்பவும் திரும்பவும் கூப்பிடுவது போலே கூப்பிட வேண்டும் –
ஸ்ரீ சப்தத்தை முதலில் வைப்பதால் ஸ்ரீ யும் ஸ்ரீ மானும் முக்ய சாதனம் என்பதையும்
பக்தி பரிவாஹமான கைங்கர்ய லஷ்மியான ஸ்ரீ யினுடைய வை சிஷ்ட்யம் முக்கியம் என்பதையும் ஸூசித்து
இந்த ஸ்லோகத்தை சாதன அத்யாய ஸூசகமாக அமைக்கிறார் –

பகவத் சேவா சாதனம்
சேவா பக்தி உபாசனம் பர்யாய பதங்கள்
மாதவம் சேவ நீயம் -என்று முதல் பத்தில் மாதவ சேவை கூறப்பட்டது -அது அல்லவோ ப்ரஹ்ம பிராப்தி
இங்கே எம்பெருமானார் பாதாப்ஜ சேவையை சாதனமாகவும் பலமாகவும் கூறலாமோ என்னில்
இதற்கு சமாதானம் ஸ்தோத்ரத்தில் முதலிலேயே காட்டப்பட்டுள்ளது –
அங்கே தம்முடைய உத்தேச்யம்
ஸ்ரீ மாதவங்க்ரி ஜலஜ த்வய நித்ய சேவா –பிரேம ஆவில ஆசய பராங்குச பாத பக்தம்-என்ற விசேஷணங்களால்
ஆழ்வார் கையில் பெருமாள் திருவடிகள் -ஆழ்வார் திருவடிகள் எம்பெருமானார் திரு முடியிலுமாக அனுசந்தானம்
எம்பெருமானார் திருவடிகள் சேவை கிடைத்தால் தன்னடையே பெருமாள் திருவடிகளில் சேவை ஸித்திக்கிறது

ஸ்ரீ மன் யதீந்திர தவ திவ்ய பதாப்ஜ சேவாம்-
ஸ்ரீ சைல நாத கருணா பரிணாம் தத்தாம் –
தாம் அந்வஹம் மம விவர்த்தய நாத தஸ்யா-
காமம் விருத்தம் அகிலம் ச நிவர்த்தய த்வம் –19-

ஸ்ரீ மன் யதீந்திர -ஸ்ரீ பகவத் பக்தி பரிவாஹ கைங்கர்ய ஸ்ரீ யை யுடைய ஸ்ரீ லஷ்மண யோகியே
ஸ்ரீ சைல நாத கருணா பரிணாம தத்தாம் –எம் ஆச்சார்யர் ஸ்ரீ சைல நாதர் தயா காஷ்டையாகத் தந்து அருளிய
தவ திவ்ய பதாப்ஜ சேவாம்-உம்முடைய திவ்யமான திருவடித் தாமரைகளின் சேவை யாகிய
தாம் -அந்த அரும் பெரும் பேற்றை
அந்வஹம் -தினம் தோறும்
மம விவர்த்தய -எனக்கு விசேஷமாகப் பெருகச் செய்ய வேண்டும்
தஸ்யா விருத்தம்-அந்தப் பேற்றுக்கு இடையூறான
அகிலம்-எல்லாவற்றையும்
காமம் நிவர்த்தய -அடியோடு தொலைக்க வேண்டும்
அல்லது
அகிலம் காமம் நிவர்த்தய –எல்லாக் காமத்தையும் போக்க வேண்டும் –

ஸ்ரீ மன்
லஷ்மனோ லஷ்மி சம்பன்ன -என்று லஷ்மணன் விஷயத்தில் ருஷி கூறியது
லஷ்மண முனிக்கும் பொருந்தியதே
அந்தரிக்ஷ கத ஸ்ரீ மான் என்று விஷ்ணு பதமான அந்தரிக்ஷத்திலே நின்றவனை
ஸ்ரீ மான் என்றார் ருஷி –
ஸா ஹி ஸ்ரீர் அம்ருதா ஸதாம் -அம்ருத ஸ்ரீ ஸம் பன்னர்
இந்த ஸ்ரீ அவர் கையில் ஸித்தமாய் உள்ளதாய் அவர் பாதாப்ஜ சேவையை
பகவத் பாதாப்ஜ சேவையை உட்கொண்ட தீரும் –
மதுப் நித்ய யோகத்தையும் காட்டுகிறது –
சேஷத்வமே ஸ்ரீ யாகும் – நீர் சேஷனே -நிவாஸ ஸய்யா ஆஸனம்

யதீந்திர
ஸ்ரீ யபதித்தவம் என்பது பெருமாளுக்கு என்றைக்கும் அசாதாரணம் –
ஸ்ரீ மன் என்று கூப்பிட்டதில் அந்தப் பொருளில் இல்லை
ஸந்யாசியான யதீந்த்ரரை அன்றோ கூப்பிடுகிறேன்
செல்வ நாராயணனான சேஷி அல்ல
ஸந்யாசியான சேஷனைக் கூப்பிடுகிறேன் என்று உடனே வியாவருத்தி செய்கிறார் –
ஆம் பரிசு அறிந்து கொண்டு -என்று ப்ராப்யமான கைங்கர்யத்தைச் சொன்ன அநந்தரம்
ஐம்புலன் அகத்து அடக்கி – என்று அதிலே ஸ்வ ப்ரயோஜன புத்தியால் ப்ரவணம் ஆகிற இந்திரியங்களை
நியமித்துக் கொண்டு போரும் படியைச் சொல்லிற்று இறே -என்ற
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்ரீ ஸூ க்திகள் ரசிக்கத் தக்கவை –

தவ
முன் சொன்ன இரண்டு விசேஷணங்களோடே விசிஷ்டமான உம்முடைய
முனி விசேஷணங்கள் அல்ல
பெருமாள் திருவடி சேவையோடு கூடியவர் என்று சித்தித்து விட்டது –
இதற்காகவே விசேஷணங்களை முந்துறக் கூறி -பின்பு -தவ -என்கிறார் –

திவ்ய பதாப்ஜ சேவாம்-
தாமரைப் பூ போன்ற ஸூ குமாரமான மெல்லடி
தாமரைப் பூவை விளையாட்டிற்காகக் கையில் வைத்துக் கொண்டு அதன் பரிமளத்தை
ஆக்ராணம் செய்து கொண்டு கண்களில் ஒத்திக் கொள்வர்
லீல அரவிந்தம் என்பர் -ஆகையால் இந்த சேவை பரம போக்யமே
ஸ பலமாக ஆசைப்பட்டுச் செய்வது –

ஸ்ரீ சைல நாத
எம் அடிகளான ஸ்ரீ சைல நாதருடைய

கருணா பரிணாம்
கருணா காஷ்டையால்-பேர் அருளாளன் –
பூதாநி ஹந்த நிகிலாநி நிசா மயந்தி -என்று ஸகல மநுஷ நயன விஷயமான பொருள் –

கருணா பரிணாமதஸ் தே -என்று அருளின் காஷ்டையாக அபி யுக்தரான தூப்புல் பிள்ளையும்
அருளிச் செய்தார்
அது போன்ற அருளின் காஷ்டை –
இந்த ஸ்லோகம் திரு உள்ளத்தில் ஓடுகிறது –

தத்தாம் –
எனக்கு அருளப் பட்டது -தானம் செய்யப் பட்டது –
ஸ்ரீ சைல நாதருடைய உம்முடைய பாதாப்ஜ சேவை ஸ்வம் சொந்த தனம் –
தம்முடையதான ஸ்வத்தை -தனத்தை -எனக்கு ஸ்வம் ஆகச் செய்தார் –
பரஸ்வத்வ ஆபாதநம் செய்து வைத்தார் –
என்னை யதீந்த்ர பிரவணர் ஆக்கினார்
ஸ்ரீ சைல தயா பாத்ரம் -என்பது யதீந்த்ர ப்ராவண்யத்தில் பரிணமித்தது –

தாம்
எம் ஆச்சார்யர் தந்து அருளினார் என்று சொல்லலாமே ஒழிய அவர் தந்து அருளிய பாக்யத்தை –
இத்தம் -என்று வர்ணிக்க முடியாது –
தாம் -தஸ்யா- என்றே தான் பேசலாம் –

அந்வஹம்
பவ்மா பிபந்த் வன்மஹம் -திருவடி சேவை எனக்கு சததமாய் இருந்தால் போதும் –

மம விவர்த்தய
மென்மேலும் வளரச் செய்ய வேணும் –

நாத
ஸ்ரீ சைல நாத -என்று நாத ஸப்த அங்கிதமான திரு நாமத்தைச் சொன்னேன் –
அவரை நாதன் -என்று நான் சொன்னால் சீறுவர் -கருணை எல்லாம் பரந்து போம் –

தஸ்யா-
அந்த ஸேவைக்கு

விருத்தம் அகிலம் ச
ஸ்ரேயாம் ஸி பஹு விக்நாநி
த்ரி தசா பரி பந்த்திந
இந்திரன் முதல் பரி பந்தீ
யதீந்த்ரரே நீர் தானே இந்த்ராதி தேவ பரி பந்திகளை நிவாரணம் செய்ய வேண்டும் –
சம்சாரத்தின் விருத்தியில் அவர்களுக்கு மிகுந்த ஆசை
சம்சாரன் யூ நதை -சம்சார நிவ்ருத்தி அவர்களுக்கு ஆகாது –
சம்சார நிவ்ருத்தி யதீந்த்ரரால் தான் ஆகும்

காமம் நிவர்த்தய த்வம்
யதீந்த்ரராகிய நீர் அடியோடு போக்கி அருள வேண்டும் –

———————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கோபாலாச்சார்ய ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: