ஸ்ரீ யதிராஜ விம்சதி வியாக்யானம் -ஸ்ரீ கோபாலாச்சார்ய ஸ்வாமிகள் –பாசுரம் -18-

சரணாகதாருடைய சர்வ பாப விமோசனத்தில் எம்பெருமானார் ஸக்தர் என்றார் –
ஸ்ரீ காந்தனுக்கு அல்லவோ அந்த சக்தி -எம்பெருமானார் அந்த விஷயத்தில் சக்தர் என்று
எப்படிக் கூறுவது என்ற விரோத சங்கை உதிக்க -அதை அவிரோதமாக சமர்த்திக்கிறார் –

அபாத்யத்வ நிரூபணம் -என்பது அவிரோத அத்யாயம் என்னும் இரண்டாம் அத்யாய விஷயம்
எம்பெருமான் மோக்ஷ காரணத் வத்திற்கும் ஸ்ரீ யபதியின் மோக்ஷ காரணத் வத்திற்கும்
அவிரோதம் சமர்த்திக்கப் படுகிறது இங்கே –
உம்முடைய ஆஸ்ரிதர் ஆகிவிட்டால் ஸ்ரீ காந்தனுடைய க்ஷமை அவர்கள் செய்த எத்தகைய
கொடுமைகளாலும் பாதிக்கப் படுவது இல்லை –
அக்கொடுமைகள் எல்லாவற்றையும் அவர் க்ஷமையே பாதித்து விடுகிறது என்றும்
ரசமாக அபாத்யத்வம் என்னும் விஷயத்தை ஸூ சிக்கிறார் –

அஹம் ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -என்று சரம ஸ்லோகத்தில் ப்ரதிஜ்ஜை செய்தவர் தான்
எம்பெருமானார் ஆஸ்ரிதர் விஷயத்தில் பாப விமோசனம் செய்கிறவர்
எம்பெருமானார் தமக்காகவும் தம்மோடு குடல் துவக்குள்ள பவிஷ்யத் வர்த்தமான ஸகல ஆஸ்ரிதற்காகவும் செய்த
ஸர்வ பாப ஷமா பிரார்த்தனையான சரணாகதி
என்னும் பிரார்த்தநா மதிக்கு இணங்கி அன்றே கமலா ரமணன்
அப்படியே உம் திருவடிகளுக்கு சரணம் என்னும் திரு உடையரான பவிஷ்யத் காலத்தில் வரும்
உம் ஆஸ்ரிதருக்கும் பொறுக்க சங்கல்பித்து விட்டேன் என்று எல்லாருக்குமான ஸர்வ பாப விமோசனத்துக்கு
சங்கல்பம் செய்து விட்டார் –

அன்று நீர் எல்லாருக்குமான செய்த சரணாகதி என்னும் சர்வ பாப விமோசன பிரார்த்தனையால்
அவன் த்வாரமாக உமக்கும் உம் சரணாகதர்களுக்கும் சர்வ பாப விமோசன சக்தி உள்ளதே
ஆகையால் விரோதம் இல்லை அவிரோதமே
இன்று ஆஸ்ரயிப்பவருக்கும் அன்றே செய்த சங்கல்பம் படி சர்வ பாபா விமோசனம் லப்த ப்ராப்யமே
அன்றே லப்தமானதை இன்று நழுவாமல் நாங்கள் பூர்வ லப்த பரிபாலனம் செய்ய வேண்டுவது மட்டுமே
என்பதை வ்யஞ்ஜனம் செய்வது ஷேம ஸப்தம்
யோகம் -என்பது முன்பு கிடையாததன் லாபம்
க்ஷேமம் என்பது லப்தஸ்ய பரிபாலனம் -முன்பே கிடைத்தத்தை இழக்காமல் காப்பாற்றுவதே –

கால த்ரயேபி கர்ண த்ரய நிர்மிதாதி
பாபக்ரியச்ய சரணம் பகவத் ஷமைவ
சா ச த்வயைவ கமலா ரமணே அர்த்திதா யத் –
ஷேமஸ்ச ஏவ ஹி யதீந்திர பவஸ்ரிதா நாம்–18-

யதீந்திர–யதீந்த்ரரே
கால த்ரயேபி -எதிர் நிகழ் கழிவிலும்
கர்ண த்ரய நிர்மிதாதி பாபக்ரியச்ய -முக்கரணங்களாலும் மிகக் கொடிய பாபங்களைச் செய்பவனுக்கு
பகவத் ஷமைவ-பகவானுடைய ஷமா குணமே தான்
சரணம் – தஞ்சமாகும்
சா ச -அந்த க்ஷமை யும் -அபராத ஸஹனமும் -குற்றம் பொறு த்தலும்
த்வயைவ கமலா ரமணே -ஸ்ரீ காந்தன் இடம் உம்மாலேயே
அர்த்திதா யத் -பிரார்த்திக்கப்பட்டது என்பது யாது ஓன்று உண்டோ
ஷேமஸ்ச ஏவ ஹி பவஸ்ரிதா நாம்-அதுவே உம்மை ஆஸ்ரயித்தவர்களுக்கு மோக்ஷம் என்னும் க்ஷேமம் ஆகும் –

கால த்ரயேபி
ரஹஸ்ய த்ரயத்தாலே சர்வ காலமும் கால ஷேபம் செய்வது உசிதம்
அதற்கு எதிர்த்தட்டாய் அதி பாபச் செயல்களாலேயே முக்காலத்தையும் கழித்து வருகிறேன்

கர்ண த்ரய நிர்மித
முக்கரணங்களும் ரஹஸ்ய த்ரய நிஷ்டையிலே பொருந்தி இருக்க வேண்டி இருந்தும்
அதற்கு நேர் விரோதமான அதி பாபா சரணை செய்கிறேன் –
முக்காலங்களிலும் முக்கரணங்களாலும் பாபப் பெருக்கு மூன்று ஒன்பதாகப் பெருகுகிறது –

அதி பாபக்ரியச்ய
வாங் மனஸ் ஸு க்களுக்கு அதீதமான பாபங்களைச் செய்கிறவனுக்கு வாங் மனசீ அதி -என்றார் ஆழ்வான்
பாபிஷ்ட க்ஷத்ர பந்து ச -என்றதின் ஞாப நம்
அபி சேதஸி பாபேப்ய சர்வேப்ய பாப க்ருத்தம-என்று கீதையில் பெருமாள் அருளிச் செய்கிறார்
தமப்பின் பொருளை அதி என்று காட்டுகிறார்
கீதா ஸ்லோகத்தை அநு சரிக்கிறார்
அங்கும் வ்ருஜின சந்தரணம் பாப விமோசனம் –
வ்ருஜினம் ஸந்தரிஷ்யசி

சரணம் –
தஞ்சமாவது -ரஷிப்பது –

பகவத் ஷமைவ
பாப விமோசனத்தில் நீர் சக்தர் என்று நான் சொன்னது பகவத் த்வாரமாகத் தான்
அவர் க்ஷமை தான் பொறுத்து அருளுவது
உமக்கு வஸ்யர் ஆனபடியால் உம் ஆஸ்ரிதர் விஷயத்திலும் அவர் க்ஷமை ப்ரசரிக்கிறது –
உமது பாப விமோசன சக்தி அவருடைய ஷமா த்வாரமானது –
ஆகையால் நீர் சக்தர் என்று சொன்னதோடு விரோதம் இல்லை –

சா ச த்வயைவ கமலா ரமணே அர்த்திதா யத் –
அந்த பகவத் சாமையும் உம்மாலேயே தான் சரணாகதி ரூபா பிரார்த்தனை செய்யப் பட்டதே
யத் -என்பதற்கு அது என்றும் யஸ்மாத் என்றும் பொருள் கொள்ளலாம்
யஸ்மாத் -யாது காரணம் பற்றி முன் ஸ்லோகங்களிலே கூறி
தஸ்மாத் என்று அநுமான நிகமன க்ரமத்தை ஆதரிப்பது போலே இங்கும்
யஸ்மாத் தஸ்மாத் என்றும் பொருள் கொள்ளலாம் –

ஷேமஸ்ச ஏவ ஹி
யத் என்றது உத்தேச்யம்
விதேயமான ஷேம என்பது என்பது ஆண்பால் ஆனதால் புல்லிங்க பிரயோகம்
உத்தேச்ய அநு குணமாயும் விதேய அநு குணமாயும் லிங்கத்தை உபயோகிக்கலாம்

ஷேம ஏவ ஹி
எங்களுக்குப் புதிதாக லாபம் என்னும் யோகம் இல்லை
முன்பே லப்தமானதின் பரிபாலனமான க்ஷேமம் தான் என்றும் திரு உள்ளம் –
யோக ஷேம நிர்வாகம் எம்பெருமானார் ஆஸ்ரயணத்தால்

யதீந்திர
தேவேந்த்ரனான இந்த்ரனைப் போலே
ஷீ ணே புண்யே
ஸ்வர்க்கேபி பாத பீதஸ்ய க்ஷயிஷ்ணோர் நாஸ்தி நிர் வ்ருதி0என்று சொல்லுகிறபடியே
புண்யம் கழிந்த பின்பு கீழே தள்ளி விடுகிறது என்பது கிடையாதே
கிடைத்தது அஷய மாகவே இருக்கும்

பவஸ்ரிதா நாம்
யதீந்த்ரரே உம்மை ஆஸ்ரயித்தவற்கு

ஷேம ஏவ
என்றுமே ஷேமமே
நிரதிசயமான ஷேமமே அல்லாது புனரா வ்ருத்தி என்கிற
ப்ரஸக்தியே இல்லையே என்கிறார் –

———————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கோபாலாச்சார்ய ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: