ஸ்ரீ யதிராஜ விம்சதி வியாக்யானம் -ஸ்ரீ கோபாலாச்சார்ய ஸ்வாமிகள் –பாசுரம் -17-

மீமாம்ஸையில் -17-வது அத்யாயம் ப்ரஹ்ம ஸூத்ர முதல் அத்யாயம் ஆகும்
ஸ்ருதி சிரஸி வி தீப்தே ப்ரஹ்மணி -மங்கள ஸ்லோகம் அநு சரிப்பது ஸ்பஷ்டம்
இங்கே வேதாந்த விசார ஆரம்பம் –வேதாந்தமே ஸ்ருதி சிரஸ்ஸூ -ஸ்ருதி யக்ரம்-
சுடர் மிகு ஸ்ருதியுள் -முதல் திருவாய் மொழியையும் நினைக்கிறார் –
திருவாய் மொழியும் சாரீரக மீமாம்ஸை –
முதல் இரண்டு திருவாய் மொழிகளும் சாரீரக அதிகரணங்களைக் கோர்வையாக நிரூபிக்கின்றன –
அணி அரங்கர் மேல் ஆயிரம் -முதல் அத்யாயம் சமன்வய அத்யாயம் –

திவ்ய குண விசிஷ்டமான ஸ்வரூபத்தை உடைய ப்ரஹ்மத்தின் இடமும் சகல வேதாந்தங்களும்
சமன்வித மாவதை நிரூபிப்பது –
சமன்வய அத்யாயம் சர்வ வேதாந்த வேத்யம் என்பதை விளக்குவது –
ஸாஸ்த்ர யோநித்வாத் -என்பதை -ச்ருத்யக்ர வேத்ய-என்பதால் ஸூ சிக்கிறார்
தத் து சமன்வயாத் -ஸூத்ர அர்த்தங்களையும் ஸூ சிக்கிறார்
தத் -அது -என்ற பரோக்ஷ ப்ரஹ்மமே -இங்கே ப்ரத்யக்ஷமாக பெரிய பெருமாளாக சேவை சாதிக்கிறார்
ஆனந்த மயம் என்று ஆனந்த குண பூர்ணவத்தைப் பேசியதும்
அடுத்து அந்தர் அதிகரணத்தில் அந்த திவ்ய ஆத்ம ஸ்வரூபத்திலும் ஆனந்த குணத்திலும் இன்னமும்
அதிக போக்யமான திவ்ய மங்கள விக்ரஹத்தை ஸூ த்ரகாரர் விளக்கினார்
பரம் ப்ரஹ்ம புருஷோத்தமோ நாராயண-என்று புலப்படாத பரம் பொருளே கண்ணனாக அவதரித்து
சகல மனுஷ நயன விஷய தாங்கதன் ஆனது போல்
இங்கே அந்த பரதத்வமே -பிரத்யஷதாம் உபகத -என்கிறார் –

ச்ருத் யக்ர வேத்ய நிஜ திவ்ய குண ஸ்வரூப –
பிரத்யஷதாம் உபகத இஹ ரங்க ராஜ –
வஸ்ய சதா பவதி தே யதிராஜ தஸ்மாத் –
சக்த ஸ்வ கீய ஜன பாப விமோசன் த்வம் –17-

யதிராஜ–யதிராஜனே
ச்ருத்யக்ர –ஸ்ருதிகளின் சிரஸ்ஸுகளான உபநிஷத்துக்களால்
வேத்ய -அறிய வேண்டிய
நிஜ திவ்ய குண ஸ்வரூப -தன் ஸ்வ பாவிக திவ்ய குணங்களையும் ஸ்வரூபத்தையும் உடையவராய்
இஹ -இங்கே
பிரத்யஷதாம் உபகத –கண்களால் காணும் படி அருகே வந்து இருக்கிற
ரெங்கராஜ -அரங்கத்து அம்மான்
தே -உமக்கு
வஸ்ய சதா பவதி -எப்பொழுதும் வஸ்யராகவே இருக்கிறார்
தஸ்மாத் -ஆகையால்
ஸ்வ கீய ஜன பாப விமோசன் -உம்மைச் சேர்ந்த ஜனங்களின் பாபத்தைப் போக்குவதில் –
த்வம் சக்த–நீர் சக்தி உள்ளவரே-

ச்ருத் யக்ர வேத்ய
ஸ்ருதியின் உச்சியில் வேதாந்தத்தில் மலையின் மேல் ஜ்வலிக்கும் தீபம் போல்
வேதகிரி சிகரத்தில் ஜ்வலிக்கும்
வேதைஸ் ச ஸர்வைர் அஹம் ஏவ வேத்ய
வேத வேத்யே பரே பும்ஸி
ஸ்ருதியின் அக்ர வேத்யமான முதல் வேத்யத் பொருள்
மூல வேத்யம் அக்ர குணம் உள்ளது -அக்ர ஸ்வரூபம் உடையது –

அக்ரம்-உயர்வு -உச்சி –

நிஜ திவ்ய குண ஸ்வரூப
உயர்வற உயர் நலம் உடையவன் யவன் அவன்
நிஜம் -என்பது உடையவன் என்னும் பொருளை ஸூ சிக்கிறது
திவ்ய குணமும் திவ்ய ஸ்வரூபமும் நலம்
அக்ரமான நலம்

ஸ்ருதி அக்ரம்
வேத ஆதியான பிரணவம்
ப்ரஹ்மம் வேத மயமான பிரணவ விமானத்தில் ஜ்வலிக்கும் பொருள்
ப்ரணவத்திற்குள் எல்லா வேதமும் அடங்கியது –

பிரத்யஷதாம் உபகத
ப்ரத்யக் ப்ரத்யக்ஷம் ஆகிறது -பராக்கு போல் விஷயம் ஆகிறது
தத் -ஏதத் ஆகிறது
அது இது வாகிறது
மயர்வற மதி நலம் அருளினன்
அப்ரோக்ஷ ஸாஷாத் கார ஞானம் நம் சமீபத்திலே வந்துள்ளத்து

இஹ
இந்த இருள் தரும் மா ஞாலத்தில்
எல்லாருக்கும் கிட்ட எளியதான கோயில்

ரங்க ராஜ –
அர்ச்சா திவ்ய மங்கள விக்ரஹங்களுக்கு மூல ப்ரக்ருதியான இந்த பெரிய பெருமாள் –

தே வஸ்ய
ஸர்வஸ்ய வஸீ
ஸர்வஸ்ய ஈஸான -என்ற விஸ்வபதி யாகிற ரெங்கராஜர் உமக்கு வஸ்யராக நீர் இட்டது சட்டமாக இருக்கிறார் –
முதல் அத்யாயம் ஆனு மானிக அதிகரணத்தில் -ஈஸ்வரனை வசப்படுத்தும் உபாயம்
அவனை சரணாகதி செய்வது தான் என்று ஸ்ரீ பாஷ்யம் –
தஸ்ய ச வஸீ கரணம் தச் சரணாகதி ரேவ
பெரிய கத்யம் தவிர ஸ்ரீ ரெங்க கத்யம் தனியாக அருளப்பட்டது
ஸம்வாத ஏஷ சரணாகத மந்த்ர சார

சதா பவதி
என்றைக்கும் உமக்குப் பர தந்தரராகவே இருக்கிறார் –
ஸ்ரீ ரெங்க ஸ்ரீர் அனுதினம் ஸம் வர்த்ததாம் -என்று அனுதினம் ஜபிக்கிற படி
அரங்கனும் -ராமாநுஜார்ய திவ்ய ஆஜ்ஞா வர்த்ததாம் அபி வர்த்ததாம் என்று நம் ஆஜ்ஞயை
அபி விருத்தி அடையும்படி அனுசானம் செய்கிறார் –

தஸ்மாத்
ஆகையால் ஸர்வ லோக சரண்யனான அரங்கனை சரணம் பற்ற வேண்டி இருக்க
தாஸ பூதாஸ் ஸ்வதஸ் ஸர்வே ஹ்யாத்மான பரமாத்மனே -அதோ அஹம் அபி தே தாஸ -என்று
அனுமான ஆகாரமாக அத
ஆகையால் நானும் அவனுக்கு தாஸன் -என்று பிராமண வசனம் அறுதி இடுகையாலே
என் அடியார்க்கு தாஸன் என்னலாமோ என்ற கேள்வி வர
இங்கும் -அத –என்பது போல் -தஸ்மாத் -என்று அது மாதிரியாகவே நிகமனம் செய்கிறார்
பெருமாளை நீர் நேரில் சரணாகதி செய்து உம் வசமாக்கி விட்டீர்
உம் திருவடிகளை சரணம் பற்றினால் உம் வசமான அவர் எனக்கு மோக்ஷம் அளிப்பார்
உம் தாஸ அநு தாஸருக்கு தாஸ்யம் செய்தால் நீர் உகப்பது போலே

ஸ்வ கீய ஜன பாப விமோசன்
என் ஒருவனையே சரணம் பற்று -நான் உன்னை எல்லாப் பாபங்களில் இருந்தும் மோக்ஷணம்
செய்யக் கடவேன் -உனக்கு சோக நிமித்தம் இல்லை
என்று கண்ணன் கீதா உபநிஷத்தில் முடிவில் வேதாந்தமாக அருளிச் செய்தார்
பெருமாள் திருவடி உம் திரு முடியில் கிரீடமாக விளங்குவதால் உம் திருவடியில் செய்யும் பிரணாமம்
பெருமாள் திருவடிகளில் சேர்ந்து விடுகிறது –
கீதா ஸ்லோகத்தில் உமக்கு வஸ்யரான பெரிய பெருமாளுக்குச் சொன்ன சர்வ பாபா விமோசன மஹிமை
உமக்கும் உள்ளதே
த்வா -என்பது உப லக்ஷணமாக எல்லாரையும் சொல்லும் –
விநத விவித பூத வ்ராத ரக்ஷ ஏக தீகஷே -என்பதை அநு சரிப்பதாகும் இந்த நான்காம் பாதம் –

———————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கோபாலாச்சார்ய ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: