ஸ்ரீ யதிராஜ விம்சதி வியாக்யானம் -ஸ்ரீ கோபாலாச்சார்ய ஸ்வாமிகள் –பாசுரம் -16-

தேவதா காண்டம் நாலாவது அத்தியாயத்தில் பலம் விஷயம்
தேவ போகத்தில் ஸ்வர்க்கத்தில்
கந்தர்வ காநங்களும்
ஸ்வர்க்க ஸ்த்ரீகளின் ரூப தர்சனமும்
ஸ்பர்சமும்
அம்ருத ரஸமும்
பாரிஜாத குஸூம கந்தமும் –போகங்களாகக் கிடைக்கும்
அந்த தேவதா உபாசனத்தால் கிடைக்கும் அந்த ஸ்வர்க்கமும் எனக்கு வேண்டாம்
இங்கேயே ஒரு அத்புத ஸ்வர்க்க ஸூகம் உண்டு -அந்த ஸூகம் எனக்கு நீங்காமல் இருக்க வேண்டும்
ஸ்வர்க்கத்துக்குப் போய் அனுபவிப்பது என்பது தேவர்களுக்கு பசுவைப் போலே
ஊழியம் செய்வதாகும் என்று வேதம் கூறுகிறது –

அவர்களுக்கு பசுவாக அடிமையாய் இருப்பதை விட இங்குள்ள உம்முடைய அடியார்க்கு
அடியார்களில் கடைசித் தாழ்ந்த படியில்
எவர் இருப்பாரோ அவருக்கே பசுவைப் போல் ஊழியம் செய்வதிலேயே எனக்கு ரஸம் மீளாமல்
இருக்கும் படி அனுக்ரஹித்து அருள வேண்டும்
எனக்கு இதுவே பரமபுருஷார்த்தம் என்று நிஷ்கர்ஷித்து பிரார்த்திக்கிறார் –
இந்த ரஸமே தான் எனக்கு அம்ருத ரஸம்-
இப்படி பாகவத் தாஸ்யமே எனக்கு புருஷார்த்த காஷ்டை என்று அருளிச் செய்கிறார் –

சப்தாதி போக விஷயா ருசி அஸ்மதீயா –
நஷ்டா பவதி இஹ பவத் தயயா யதீந்திர
த்வத் தாஸ தாஸ கணா நா சரம அவதௌ-
யஸ் தத் தாஸ தைக ரசதா அவிரதா மம அஸ்து–16-

சப்தாதி போக விஷயா -சப்தம் ஸ்பர்சம் ரூபம் ரஸம் கந்தம் இவைகளை அனுபவிக்கும் விஷயமான
ருசி அஸ்மதீயா -எங்களுடைய ஆசையானது
யதீந்திர-யதீந்த்ரரே
நஷ்டா பவதி இஹ பவத் தயயா -தேவரீருடைய கிருபையாலேயே இங்கே அடியோடே அழியட்டும்
த்வத் தாஸ தாஸ கணா நா சரம அவதௌ-தேவரீருடைய தாஸ தாஸ தாஸன் என்று
தாழ தாழப் போகும் எண்ணிக்கைக் கணக்கில் கடைப்படியில்
யஸ் -எவர் இருக்கிறாரோ
தத் தாஸ தைக ரசதா -அவருக்கே ஆட்பட்டு இன்புறும் தன்மை
அவிரதா மம அஸ்து-ஓய்வில்லாமல் எனக்கு இருக்க அருள் புரிய வேண்டும் –

சப்தாதி போக விஷயா
ஸ்வர்க்கத்திலும் விஷய போகங்கள் தானே உண்டு –ஸ்வர்க்க போகங்கள் விஷய ருசியை
மென்மேலும் விருத்தி செய்யுமே
நெய் வார்ப்பதால் நெருப்பு விருத்தி அடைவது போல் -இந்திரன் ரசிப்பது விஷய போகமும்
அதன் மேல் ருசியையுமே —
அந்த ருசி அடியோடே நசிக்கும் படி யதீந்த்ரரான தேவரீர் தான் அனுக்ரஹிக்க வேண்டும் என்று
யதீந்த்ர சப்தத்தால் இங்கே கூப்பிடுவது அழகு –

ருசி அஸ்மதீயா –
எங்கள் ருசி -விஷய ருசியைப் பலர் கூடிச் சேர்ந்து அனுபவிபிப்பர்கள்
நட விட காயக ராஸ கோஷ்ட்யாம் –
அந்த ருசிக்கும் மோகத்திற்கும் தனிமை உதவாது –
ஆகையால் இதுவரை அஹம் -மம -என்று ஒருமையாகப் பேசியதை மாற்றி -அஸ்மதீயா -என்று
பன்மையாகப் பேசுகிறார் –
விஷயா வி நிவர்த்தந்தே நிரா ஹாரஸ்ய தேஹிந ரஸ வர்ஜம் ரஸோப் யஸ்ய பரம் த்ருஷ்ட்வா
நிவர்த்ததே -என்ற ஸ்ரீ கீதாச்சார்யர் ஸ்ரீ ஸூ க்தியை நினைத்து ருசி நஸிக்க வேண்டும்
என்று பிரார்த்திக்கிறார் –

பவத் தயயா
தேவரீருடைய கிருபையால்

நஷ்டா பவதி
நாஸமாய் போகட்டும்
அடியோடே தொலையட்டும் –

இஹ
அமுத்ர-லோகாந்த்ரம் போய்க் கிடைக்கும் ஸ்வர்க்கம் வேண்டாம்
யான் போய் இந்திரா லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் என்று பரமபதத்தையும்
திரஸ்கரிக்கும் இங்கே இச்சுவை
இங்கே -இவ்வரங்க மா நகரிலே

யதீந்திர
விஷய ருசி அறுவதற்கு ஈஷணா த்ரயங்களையும் அறுத்த இந்த யதீந்த்ரனையே
தானே கூப்பிட வேண்டும் –

த்வத் தாஸ தாஸ கணா நா சரம அவதௌ-
எவன் உமக்கு அடிமைப் பரம்பரையில் கடையோனாகத் தாழ்ந்தவனோ
ஆனந்தம் மேலே படி ஏற ஏறப் பெருகும்
இங்கே ஊழியப்படி தாழ தாழ ஆனந்தம் பெருகுகிறது –

தத் தாஸ தைக ரசதா
உம் அடியாரில் எல்லாருக்கும் தாழ்ந்த படியில் உள்ளவருக்குத் தாஸ்யம் புரிவதையிலேயே
இன்புறும் தன்மை ரஸம்
நித்ய அபி வாஞ்சித பரஸ்பர நீச பாவை -என்று பரமபதத்தில் உள்ளவர்களுக்கு
ஒருவருக்கு ஒருவர் சேஷத்வத்தில் ஆசை –
அப்படி நீசத்வத்தில் ஆசை இங்கேயே -இஹ -என்று கோறப் படுகிறது –
முன் சொன்ன நைச்யம் எல்லாம் கழிந்து இந்த நைச்யத்துக்குப் பாத்ரம் ஆக வேண்டும் என்கிறார் –
யதி சக்கரவர்த்தியின் பத பத்தணத்தில் வசித்து ஹரி பக்த தாஸ்ய ரசிகராய் வாழ வேண்டும்

அவிரதா
அனாவ்ருத்தி சப்தாத்
நீங்காமல் -மீளாமல் –

மம அஸ்து
அஸ்து என்று பலமாஸை
அஸ்து மே அஸ்து தே என்றது போலே –

———————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கோபாலாச்சார்ய ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: