ஸ்ரீ யதிராஜ விம்சதி வியாக்யானம் -ஸ்ரீ கோபாலாச்சார்ய ஸ்வாமிகள் –பாசுரம் -15-

ஆழ்வான் அனுசந்தித்த நைச்யங்கள் வேறு
என் நைச்யத்தை அளக்க அந்த பாத்ரம் போதாது
இன்னும் நிறைய னைச்சிங்களால் பூரணமான பாத்திரம் வேணும்
அடியேன் ஆகிற நைச்ய பாத்திரம் நிரம்பி உள்ளது
ஸ்ரீ யாமுனர் ஆழ்வான் பட்டர் முதலிய தேசிகருடைய எல்லா நைச்ய அனுசந்தானங்களையும்
ஒரு மிக்கச் சேர்த்தால் நான் என்னும் நைச்ய பாத்திரம் நிரம்பும் என்று
ஆத்ம நிந்தை செய்யும் ரசம்

தேவதா உபாசானம் மூன்றாவது அத்யாய விஷயம் என்பர்
நாம் சரணாகதியை இழிபவர்
ஆச்சார்யருடைய கருணையே கதியாக வரிக்கிறார்
இந்திரன் தேவராஜன் ஸூ ர நாயகன்
தேவதா ஏற்கும்படி யதிராஜனை இங்கே யதீந்த்ரர் என்று அழைக்கும் அழகு ரசிக்கத் தக்கது

சுத்த ஆத்ம யாமுன குருத்தம கூர நாத
பட்டாக்க்ய தேசிக வர உக்த சமஸ்த நைச்யம்
அத்ய அஸ்தி அசங்கி சிதம் ஏவ மயி இஹ லோகே –
தஸ்மாத் யதீந்திர கருணைவது மத் கதிஸ் தே-15-

சுத்த ஆத்ம -பரிசுத்தமான மனமுடைய
யாமுன -ஆளவந்தாராலும்
குருத்தம கூர நாத -ஆச்சார்ய உத்தமரான ஆழ்வானாலும்
பட்டாக்க்ய தேசிக வர -பட்டர் என்னும் ஆச்சார்ய ஸ்ரேஷ்டராலும்
உக்த சமஸ்த நைச்யம்-சொல்லப்பட்ட எல்லா நீசத்தன்மைகளும் -தோஷங்களும் –
இஹ லோகே-இப்பூ மண்டலத்திலேயே
அத்ய அஸ்தி அசங்கி சிதம் ஏவ மயி -என்னிடத்திலேயே எல்லாமே எள்ளளவும்
சுருங்காமல் மிக்க விரிவாய் இருக்கிறது
தஸ்மாத் யதீந்திர கருணைவது மத் கதிஸ் தே-ஆகவே யதிகட்க்கு இறைவனே உமது கருணை ஒன்றே
எனக்கு உத்தாரகமான கதி –உமது கருணைக்கும் நானே உத்தமமான கதி –

சுத்தாத்மா
இவர் குறிக்கும் எல்லா ஆச்சார்யர்களுக்கும் அடைமொழியாவது ரஸம்
இவர்கள் எல்லாருமே மாசு அற்றவர்கள் -மனதை மலம் அறக் கழுவினவர்கள்
உண்மையில் தோஷ லேசமும் கிடையாது
அவர்கள் தங்கள் சிஷ்ய பரம்பரையில் அடியேன் ஒருவன் நீச ராமனாக வரப் போகிறேன் என்று எனக்காகவே
அவ்வளவு நைச்யங்கள் எல்லாம் கருணையால் அனுசந்தித்தார்கள் என்கிறார் –

யாமுன
தூய பெரு நீர் யமுனை -என்பர் -அது போன்ற பரிசுத்தி
தர்சனா தேவ சாதவ -என்றபடி உலகத்தைப் பரிசுத்தம் ஆக்கும் பெரியவர்

குருத்தம கூர நாத -ஆச்சார்ய உத்தமரான ஆழ்வான்

பட்டாக்க்ய தேசிக வர
பட்டர் என்று திரு நாமம் உடைய ஆச்சார்ய ஸ்ரேஷ்டர்

தேசிக வர
தனித்து யோஜித்து இதர பூர்வ ஆச்சார்யர்களையும் கொள்ளலாம்

உக்த
சொல்லிய
சுத்தாத்மாக்களான அவர்கள் விஷயத்தில் அவை அனைத்துமே யுக்தி மாத்திரமே
ஒழிய உண்மை அல்லவே

சமஸ்த நைச்யம்
எல்லா நீச பாவமும்
அத்ய அஸ்தி அசங்கி சிதம் ஏவ மயி இஹ லோகே –
கோன் வஸ்மின் சாம்பிரதம் லோகே குணவான் -என்ற ப்ரஸ்னம் நினைத்து
இங்கே குண ஹீனரில் இவ்வுலகில் இப்போது யார் முதல்வர் என்ற ப்ரஸ்னம் செய்தால்
என்னையே பொறுக்கி எடுத்து நிர்த்தாரணம் செய்ய வேண்டி இருக்கும் என்று ஆத்ம நிந்தா ரசம்
சாம்ப்ரதம்-என்று அங்கு -இங்கே அத்ய
அஸ்மின் லோகே அங்கு -இஹ லோகே இங்கு
குணவானான புருஷோத்தமனுக்கு எதிர்த்தட்டான அதம தம நரன்

அசங்கி சிதம் ஏவம் அஸ்தி
பலி புஜி சிசு பாலே தாத்ரு காகஸ் கரே வா குண லவ ஸஹ வாஸாத் த்வத் ஷமா சங்கு சந்தீ –
மயி குண பரமானு தந்த சிந்தனா பிஞ்ஞா விஹரது வரதாஸவ் ஸர்வதா ஸார்வ பவ் மீ -என்று
பட்டர் நைச்ய ஸ்லோகத்தை அனுஷ்டிப்பது ஸ்பஷ்டம் -சங்கோசம் என்பது சுருக்கம் –
அசங்கோசம் என்பது
சுருக்கமே இல்லாத மிக்க விஸ்தாரம் –
ஸமஸ்த என்று இரண்டாம் பாதத்தில் வியாசமான விரிவுக்கு எதிர்த்தட்டான சமாசம்
என்னும் சங்ஷேபமும் பொருளாம்
அவர்கள் பேசிய பேச்சு எல்லாம் சங்ஷேபம்–சுருக்கம் – –
அந்த சங்ஷேபங்கள் எல்லாம் கூடி என்னிடம் அங்குசிதமாய் விஸ்தாரமாய் அமைகின்றன
என்னும் ரஸம் கவனிக்காத தக்கது –
இதற்கு ஏற்ப ஸ்ரீ இராமாயண சங்ஷேப ஸ்லோகமும் திரு உள்ளத்தில் ஓடுகிறது –

தஸ்மாத்
ஆகையால்
அசங்கோச நியாயம் -சாஸ்திரகாரர் சொல்வது படி -எங்கே அசங்கோசமாகப் பொருந்துமோ
அந்த விஷயம் தான் பிரபலம்
அதையே தான் அநு சரிக்க வேண்டும் சங்கோசத்திலும் அசங்கோசமே பொருந்துவது
அந்த அசங்கோச நியாயத்தால் என்று நியாயத்தை நேராக்க காட்டுவதற்காக
சங்கு சந்தீ என்று பட்டர் ஸ்லோகத்தில் இருப்பதை
அங்குசித -என்று மாற்றி இருப்பதும் ரஸம்

யதீந்திர
தேவதா காண்டத்தில் தேவேந்திரனை ஸூர நாயகனாக ஹவிர்பாகம் வாங்க –
இந்த்ர ஆயாஹி -என்று கூப்பிடுவார்
இங்கு தம் ஆத்ம ஹவிஸ்ஸை சமர்ப்பிக்கையில் அதே போலவே யதீந்த்ர என்று
கூப்பிடுவது ரசிக்கத் தக்கது –

கருணைவது மத் கதிஸ் தே-
உம்முடைய கருணை தாம் எனக்குப் புகல் –

———————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கோபாலாச்சார்ய ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: