ஸ்ரீ யதிராஜ விம்சதி வியாக்யானம் -ஸ்ரீ கோபாலாச்சார்ய ஸ்வாமிகள் –பாசுரம் -14-

தேவதா காண்டம் முதல் அத்தியாயத்தில் தேவதா ஸ்வரூபத்தையும்
இரண்டாவது அத்தியாயத்தில் தேவதா விசேஷத்தையும் சொல்லியது என்பர்
கீழே -13 -வது ஸ்லோகத்தில் -அஞ்ஞானத்வ அந்த ரோதாத் அகபரி ஹரணாத் -என்றபடி
அஞ்ஞான இருளை நீக்கி பாபத்தைக் கழித்து சுத்தியைத் தரும் ஆச்சார்ய ஸ்வரூபத்தைக் காட்டினார்
இங்கே -எம்பெருமானாருடைய ராமாநுஜ என்கிற சதுர அக்ஷர நாமத்தைக் குறித்துக் காட்டி
தேவதா விசேஷத்தைப் பேசுகிறார் –
தேவதையைப் போலே ஆச்சார்யனை உபாஸிக்க வேணும் என்பதற்கு –
அஞ்ஞானத்வ அந்த ரோதாத்–என்று தொடங்கிய ஸ்லோகத்தில் பல ஸாம்யங்கள் காட்டப் பட்டன –

பெருமாளுடைய ஆனந்தாதி மஹா குணங்கள் வாசா மகோசரம் -என்று ஸ்ருதி வர்ணித்தது –
இவர் எம்பெருமானார் விஷயத்திலும் அது துல்யம் என்கிறார் –
கமப்யாத்யம் குரும் வந்தே
பிரதம குரு க்ருபா க்ருஹ்யமாண –என்றபடி பெருமாள் ஆதி குரு
எம்பெருமானார் குரு பரம்பரையில் உத்தமர் –
நான் சிஷ்யபாரம்பரையில் அதமன் -என்னிலும் கடையோன் அல்ல என்று நைச்ய அனுசந்தானம் செய்கிறார்
கருணை யல்லால் வேறு கதி இல்லை என்று கருணைக்கு உத்தம்பகமான
ஆகிஞ்சன்ய அநந்ய கதித்வங்களைப் பேசுகிறார் –

வாசாம் அகோசர மஹா குண தேசிக அக்ர்ய-
கூராதி நாத கதித அகில நைச்ய பாத்ரம்
ஏஷ அஹம் ஏவ ந புநர் ஜகதி ஈத்ருசஸ் –
தத் ராமாநுஜார்ய கருணைவ து மத் கதிஸ்தே-14-

வாசாம் அகோசர மஹா குண -வாக்குகளுக்கு எட்டாத -கரணங்களுக்குள் அடங்காத –
பெரும் குண விசேஷம் உடையவரே
வாசாம் அகோசர மஹா குண-தனித்தனி பதங்களாகவும் கொள்ளலாம்
யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று ஸ்ருதி ப்ரஹ்ம ஆனந்த குணத்தைப் பற்றி பேசும் –
அது மற்ற குணங்களுக்கும் உப லக்ஷணம்
தேசிக அக்ர்ய-ஆச்சார்யர்களுக்குள் ஸ்ரேஷ்டரே
அமுநா தப நாதி சாயி பூம்நா யதி ராஜேந நிபத்த நாயக ஸ்ரீ
மஹதீ குரு பங்க்தி ஹார யஷ்டி விபுதா நாம் ஹ்ருத யங்க மா விபாதி -யதிராஜ சப்ததி
குரு பரம்பரை ஹாரத்தில் நடு நாயகம் -பின்பு எத்தனை ஆச்சார்யர்கள் வந்து சேர்க்கப் பட்டாலும்
என்றைக்குமே நடு நாயகம்
கூராதி நாத கதித அகில நைச்ய பாத்ரம்-கூரத்தாழ்வான் அருளிச் செய்த ஸகல நைச்ய வார்த்தைகளுக்கும்
விஷயமான பாத்திரம் -வியக்தி –
ஏஷ அஹம் ஏவ -இந்த நானே தான்
ஜகதி-பொங்கோதம் சூழ்ந்த புவனியில்
ந புநர் ஈத்ருசஸ் -என் போன்ற இவ்வித அதிகாரி இல்லவே இல்லை –
இனி உண்டாகப் போவதும் இல்லை -ந பூதோ ந பவிஷ்யதி
தத் ராமாநுஜார்ய கருணைவ து மத் கதிஸ்தே-ஆகையால் ராமானுஜாச்சார்யரே தேவரீருடைய
கருணை ஒன்றே எனக்கு கதி -எனக்குச் சரண் –

வாசாம் அகோசர
அகோசரம் வசஸாம் -என்று சுத்த ஜீவ விஷயமான பராசர வசனத்தையும் அநு சரிக்கிறார் –
யதோ வாசோ நிவர்த்தந்தே -என்ற ஸ்ருதியை நினைத்து -வசஸாம்-என்பதை -வாசாம் -என்று வைத்தார் –
அந்த ஸ்ருதி பெருமாள் விஷயம் –எம்பெருமானார் விஷயத்தில் இரண்டையும் கூட்டுகிறார் –

மஹா குண
பெருமாளுடைய குணத்தை ஸ்ருதி வாக்குக்கு எட்டாது என்கிறது -அங்கே ஆனந்த குணம்
மற்ற கல்யாண குணங்களுக்கு உப லக்ஷணம் –
மனுஷ்யர் ஆனந்தம் -தேவர்கள் ஆனந்தம் -அகா மஹத ஸ்ரோத்ரியரான முக்தர் முக்தர் துல்ய ஆனந்தம் –
ப்ரஹ்மானந்தம் -இவை எல்லாம் வேத புருஷன் மீமாம்ஸை செய்த ப்ரஹ்மானந்த மீமாம்ஸ பிரகரணத்தையே
இங்கே ஸூ சிப்பது ரசிக்கத் தக்கது –
ஆச்சார்ய உபாசனம் என்பது பகவான் இடம் அநந்ய போகத்தால் வியபிசாரியாத பக்தி -என்னும்
கீதாச்சார்யர் உபதேசிக்கும் சாதனங்கள் –
ஆச்சார்ய ப்ரபாவ மஹா குண மீமாம்ஸை -ப்ரஹ்ம குண மீமாம்ஸை -என்ற மீமாம்சைகளைச் சேர்த்து
தேவதா உபாசன காண்டத்தையும் ப்ரஹ்ம ஞான காண்டத்தையும் சேர்த்து
இந்த எட்டு ஸ்லோகங்களாலும் எட்டு அத்தியாயங்களை ஸூசிப்பதில் திரு உள்ளம் –

தேசிக அக்ர்ய-
ஸமித் பாணி ஸ்ரோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம் -என்றபடி
ப்ரஹ்ம நிஷ்ட ஸ்ரோத்ரிய ஆச்சார்ய உபாசனத்தை ஸூசிக்கிறார் –

கூராதி நாத கதித அகில நைச்ய பாத்ரம்
இந்த தயா பாத்ரம் அந்த தயா பாத்திரம் என்று உத் கோஷிப்பார்கள் –
உண்மையில் நைச்ய பாத்ரம் என்பதே தகும் என்று ரசமாக நைச்ய அனுசந்தானம் –
இந்த நைச்ய அனுசந்தானத்தின் பலம் தயா பாத்ரம் -கருணா பாத்ரம் ஆவது என்று
பின் பாதியில் ஸூ சிக்கும் அழகு ரசிக்கத் தக்கது –
முக்குறும்பு அறுத்த கூரத்தாழ்வானிலும் நிர் தோஷரான மஹா குணவான்கள் உண்டோ –
அவர் கூறிய நைச்யம் எல்லாம் எனக்காகவே என்கிறார் –
எம்பெருமானாரை நாதன் என்றார் முன் ஸ்லோகத்தில்
ஆழ்வானை இங்கே ஆதி நாதன் என்னும்படி அவருடைய வாசா மகோசரமான மஹிமையை ஸூ சிக்கிறார் –

அகில நைச்ய பாத்ரம் –
எல்லா நைச்யங்களும்
ஒவ்வொரு நைச்யத்தில் முழுவதும் -எல்லாம் எனக்குள் அடங்கும் –
வாசா மகோசர முதல் -பாத்ரம் வரையில் -ஒரே பதமாக வைத்து முழுவதையும்
வாசாம் அகோசர மஹா குண தேசிக அக்ர்ய-கூராதி நாத கதித அகில நைச்ய பாத்ரம்-
கூராதி நாதருக்கே -மூன்று விசேஷணங்களாகக் கொள்வதும் ரஸம்
அவர் மாசு அற்றவர் -ஸர்வ உத்தமர் –
பாபீய ஸோபி –நைவ பாவம் பாராக்ர மிதுமர்ஹதி மாம கீனம் என்றது எல்லாம் அவர் விஷயம் ஆகாது –

ஏஷ அஹம் ஏவ –
நாரத பகவான் ஸநத்குமாரர் இடம் சென்ற போது -பகவன் -என்று கூப்பிட்டு
நான் சோக சாகரத்தில் மூழ்கி உள்ளேன்
அந்த என்னை இந்த சோக சாகரத்தின் அக்கரையில் சேர்ப்பிக்க வேண்டும் என்று பிரார்த்தித்தார்
அதே விதமாக இங்கு எம்பெருமானாரை -தேசிக அக்ர்ய-என்று கூப்பிட்டு
நீசனேன் நிறை ஒன்றும் இலேன் -என்று முறையிட்டு நாரதர் ஸோஹம் சோசாமி -என்றது போல்
இங்கு -ஏஷ அஹம் ஏவ -என்று பேசுவது ரசிக்கத் தக்கது –

ஸோஹம் என்றால் வேதாந்தித்தில் பெருமாளோடு சாமா நாதி கரணமாக –
அஹம் ப்ரஹ்ம -கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் -என்பது போல்
பெருமாளுக்குள்ளே ஒன்றாகச் சொருகி முழுகுவதாக அர்த்தம் ஆகலாம்
இங்கே நைச்யத்தில் நரா தமனாக அநுஸந்திக்கும் இடத்தில் புருஷோத்தமனோடு
சாமா நாதி கரண பேச்சாக நினைக்கக் கூடிய சப்தம் அநு சிதம் –
ஆகையால் ஸ்ருதியில் போல் ஸோஹம் என்று பேசாமல் ஏஷ அஹம் என்கிறார்
இந்த நானே -எல்லாரும் ஜெகதாசார்யர் -தீ பக்த்யாதி குணார்ணவ என்று
மகிழ்ந்து புகழ்ந்து பாடும் நானே என்கிறார் –

ந புநர் ஜகதி ஈத்ருசஸ் –
அந்வயமாக அவதாரணத்தோடு அறுதி இடுதல் போதாது –
நான்ய பந்தா —
அஹமேவ நான்ய -என்றது போல்
வியதிரேகமாகவும் பேசி அகம்பநீய நியாயமாக இதை உறுதிப்படுத்த வேணும் –
தயா பாத்ரம் என்பதும் நைச்ய பாத்ரமாக இருப்பதால் ஸித்திப்பது
அநு த்தமம் பாத்ர மிதம் தயாயா -என்றபடி -நீசத் தன்மையின் கடைப்படியே –
தயா பாத்ரத்தில் உச்சிப்படியை அளிக்கும்
அந்த ஸ்லோகத்தின் அனுபவமும் நாரத பகவானின் அனுபவமும் திரு உள்ளத்தில் கலந்து ஓடுகிறது –
ஆளவந்தார் ஸ்லோகத்தில் நாரதர் சோக சாகரத்தில் முழுகி அலை நீர்க் கடலில் அழுந்தும்
நாவாய் போல் தத்தளித்த அனுபவம் ஓடுகிறது –
நாரதர் சோக சாகரத்தில் முழுகியதைப் பேசியது போல்
நிமஜ்ஜத அநந்த பவ ஆர்ண வாந்த -என்று யாமுனாச்சார்யரும் அருளிச் செய்கிறார் –

போனால் வாராது -அகப்பட்ட மஹா லாபத்தை நழுவ விடாதேயும் என்னைப் போல் நீசன் இல்லை –
என்னிலும் தயா பாத்ரம் இல்லை –
ஸித்தமான இந்த உத்தம ஆனந்தத்தை பரி யஜித்து வேறே பிஷாடனம் செய்ய வேண்டாம் –
என்னைக் கரை ஏற்றி உம்முடைய அபார கருணையை சபலம் ஆக்கிக் கொள்ளும் –
இப்படி இந்த ஸ்லோகத்தில் ஆளவந்தார் ஸ்லோகமும் நெஞ்சில் ஓடுகிறது என்பது
அடுத்த ஸ்லோகத்தில் -சுத்த ஆத்ம யாமுன-என்று தொடங்குவதாலும் நிச்சயம் என்று
ஸஹ்ருதய மனஸ் சாஷிகமாகத் தட்டு இல்லை –

தத்
ஆகையால் -கொள்வார் இல்லாவிடில் கொடுப்பார் கொடைக் குணம் கானக நிலவாகும் –
உம் தயையைப் பிரகாசப் படுத்த -உம் கருணைக் கடலை சபலமாக்க –
என் போன்ற நீசன் வேணும் –
என்னைக் காப்பாற்ற கருணா வருணா லயரான பெருமாள் போதாது –
காரேய் கருணை இராமானுசன் கருணை தான் என்னைக் காப்பாற்ற வல்லமை உள்ளது –
க்ருதார்த் தோஹம் பவிஷ்யாமி தவ சார்த்த பர கல்பதே

ராமாநுஜார்ய
தேவதா காண்டத்தின் இரண்டாவது அத்தியாயத்தில் தேவதா விசேஷத்தைப் பேசியது என்பர் –
இங்கே பெருமாளைத் தவிர ஆசார்ய தேவர் ஒருவரையே வழி படுவதால் அந்த ஆச்சார்ய தேவ ருடைய
நாம விசேஷமாகிய சதுரஷரீ நாமத்தைக் குறித்து தேவதா ஆஹ்வானம் செய்கிறார்
இங்கு ஓர் இடத்தில் ராமானுஜ என்று கூப்பிடுவது –
முதல் ஸ்லோகத்தில் பரோஷமாக நாம நிர்த்தேசம் – இங்கே தான் ப்ரத்யக்ஷ ஆஹ்வானம் செய்கிறார் –
ராமானுஜ காயத்ரியின் காரேய் கருணை இராமானுச -என்று அழைத்தத்தை அநு சரித்து இங்கே
ராமாநுஜார்ய கருணைவ-என்று அந்த சப்தங்கள் வைக்கப் படுகின்றன
காயத்ரி மந்திரத்தில் ய -என்று பரோக்ஷ நிர்த்தேசம்

தே கருணைவ
உம் கருணை ஒன்றே தான்

மத் கதி
எனக்கு உய்யும் வழி

தே கருணைவ
எனக்கு உய்யும் வழி உபாயம் உன் கருணையே

தே கருணா மத் கதி ரேவ
உம் கருணை என்னையே கதியாக உடையது என்னும் பொருளைக் கொண்டு
ஆளவந்தார் ஸ்லோகத்தின் பூர்ண ஸாம்யம் சம்பாதிக்கலாம்
எனக்கும் உம் கருணையே கதி -உம் கருணைக்கும் நானே கதி –
என் போன்ற கதி வேறே கிடையாதே –

———————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கோபாலாச்சார்ய ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: