ஸ்ரீ யதிராஜ விம்சதி வியாக்யானம் -ஸ்ரீ கோபாலாச்சார்ய ஸ்வாமிகள் –பாசுரம் -9-

மந்த்ரத்திலும்
மந்த்ர பிரதானனான ஆச்சார்யர் பக்கலிலும்
மந்த்ர ப்ரதிபாத்யமான தேவதையின் இடமும்
மிகுந்த பக்தி இருக்க வேண்டும் என்பது ஸாஸ்த்ர -கட்டளை
திரு மந்த்ரத்தை ஆச்சார்யர் உபதேசிக்கும் அழகிய க்ரமம் ப்ரக்ருதி ஆகும்
யதாவத்தாக அர்த்த ஞானத்தோடு ஸ்ரத்தையோடு ஸ்வர வர்ணாதிகளோடு உச்சரித்து எனக்குக் கற்பித்தார்கள் –
நான் அநுஸந்திக்கும் க்ரமம் விகாரமே யாகும்
ஸ்ரத்தை அல்லவோ முக்ய தனம்
அ ஸ்ரத்தையோடு மந்த்ர ஜப அனுசந்தானங்கள் விகாரமே -ஆபாசமே ஆகும் –

ஊஹம்-என்பது மாறுபாடு -வி பரிணாமம்
ஆச்சார்யர்கள் கற்பித்த விதத்துக்கும் நான் உச்சரிப்பதும் அன்சந்திப்பதும் மாறுபாடே ஆகும்
என்று ஆத்ம நிந்தை

தர்ச பூர்ண மாச ப்ரக்ருதியில் -அக்நேர் அஹம் உஜ்ஜிதி மநூஜ் ஜேஷம் -என்று இருப்பதை
ஸுவ்ர்ய விக்ருதியில் -ஸூர் யஸ்ய -என்று மாறு படுத்துவர்
அக்நயே ஜூஷ்டம் -என்பதை ஸூர்யாய ஜூஷ்டம் –என்று மாறு படுத்துவர்
அப்படி மாறு படுத்துவது ஊஹம் -எனப்படும் -இது மீமாம்ஸை -9-வது அத்யாய விஷயம்
மந்த்ர சாம ஸம்ஸ்காரங்களின் அந்யதா பாவாத்மகம் ஊஹம்
ப்ரோக்ஷிக்கப்பட்ட உரல் உலக்கைகளைக் கொண்டு வ்ரீஹி தான்யத்தைக் குத்தி மாவாக்க வேணும் -என்று
மூல ப்ரக்ருதியில் இருப்பதை
நைரு தசரு என்ற விக்ருதியில்
கிருஷ்ணா நாம் வ்ரீஹிணாம் நக நிர் பின்னம் -என்று இருப்பதில் நகங்களை ப்ரோக்ஷிக்க வேண்டும்
பிரக்ருதியில் உள்ள ப்ரோக்ஷணத்தை இங்கே நகங்கள் விஷயத்தில் மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும்

நித்யம் த்வஹம் பரிபவாமி குரும் ச –
மந்த்ரம் தத்தேவதாமபி ந கிஞ்சித் அஹோ பிபேமி
இத்தம் சடோப்ய சடவத் பவதீய சங்கே –
ஹ்ருஷ்ட சராமி யதிராஜ ததோஸ்மி மூர்க்க–9-

யதிராஜ-யதிராஜனே
அஹம் -நான்
நித்யம் து -நித்ய காலமும்
குரும்-மந்த்ர உபதேசம் செய்து அருளிய ஆச்சார்யரையும்
மந்த்ரம் -மனனம் செய்தவனை ரக்ஷிக்கும் மந்திரத்தையும்
தத் தேவதா மபி-பலத்தைக் கொடுக்கும் மந்த்ர ப்ரதிபாத்யமான தேவதையையும்
பரிபவாமி -பரிபவிக்கிறேன் -அவமதிக்கிறேன்
ந கிஞ்சித் பிபேமி-சிறிதும் அச்சமும் படுவது இல்லை
அஹோ -இது என்ன விந்தை
இத்தம் -இப்படி
சடோப்ய -ஏமாற்றும் சீலம் உடையவனாய் இருந்தும்
பவதீய சங்கே -உமது அடியார்கள் திரளில்
அ சடவத் -மோசக்காரார் அல்லாதவர் போல்
ஹ்ருஷ்ட சராமி -சந்தோஷமாக நடிக்கிறேன் -திரிகிறேன்
ததோஸ்மி மூர்க்க-ஆகையால் -நான் மூர்க்கன்
பிஷா டனம் எனிலும் பிஷாசர்யத்தை ஸந்யாஸி வேஷத்தோடு சரிக்கிறேன் –

நித்யம் து
சர்வ காலமுமே –
ஒரு காலத்திலேயாவது நன்றாய் நடக்கிறேன் என்பது இல்லை

அஹம்
நான்

பரிபவாமி குரும் ச -மந்த்ரம் தத்தேவதாமபி
குருவையும் -அவர் உபதேசித்த மந்திரத்தையும் -அந்த மந்திரத்தின் தேவதையையும்
பரிபவம் செய்கிறேன் -அவமதிக்கிறேன்
முனி த்ரயம் நமஸ்க்ருத்ய தத் உக்தீ பரிபாவ்ய ச -என்பர் வையாகரணர்
மும் முனிகளை நமஸ்கரிப்பர் பூஜிப்பர் அவர்கள் ஸ்ரீ ஸூ க்திகளை நன்றாக ஆலோசனை பண்ணுவார்
நம் ஸம்ப்ரதாயத்திலும் ஸ்ரீ மன் நாதமுனி ஸ்ரீ மத் யாமுன முனி ஸ்ரீ மத் ராமானுஜ முனி –
மூவரையும் நமஸ்கரிக்க வேண்டியது
அவர்கள் விவரித்து இருக்கும் மந்திரங்களையும் அவர்கள் ஸ்ரீ ஸூ க்திகளையும் பரி பாவனம்
செய்ய வேண்டி இருக்க -பரி பவம் செய்கிறேன் என்று ரஸம்
தீர்க்கம் ஹ்ரஸ்வம் ஆயிற்று -பரி பாவயாமி -என்றபடி நடந்தால் அது உசிதம்

ந கிஞ்சித் அஹோ பிபேமி
திக ஸூ சி மவிநீதம் நிர்ப்பயம் மாம லஜ்ஜம் -பெரிய முதலியாரின் ஆத்ம நிந்தையை நினைக்கிறார் –
குரு -மந்த்ரம் -தேவதை -மூவர் இடமும் நிச்சேதம் இல்லாத நிஷ்டை இருக்க வேண்டும்
சிறிதேனும் விச்சேதம் வந்தால் -அத தஸ்ய பயம் பவதி-பயம் உண்டாக வேண்டும் -நடுங்க வேண்டும் –
மதி -நிஷ்டை இல்லை என்பது மட்டும் இல்லை -அவமதிக்கவும் செய்து பய லேசமும் கூட இல்லாமல்
அன்றோ இருக்கிறேன் –

ததோஸ்மி மூர்க்க
தத்வேவ பயம் விதுஷோ மன்வா நஸ்ய -நிஷ்டையில் சோர்வு வந்தால் பய காரணம் –
வித்வானுக்கு அல்லவோ பயம் -மூர்க்கனுக்கு பயம் ஏது ஸ்ருதியை நினைத்து பயம் இல்லாமை யாலே
அவித்வான் என்பதை அனுமானம் செய்கிறார் -ததோஸ்மி மூர்க்க -என்று
மன்வா நஸ்ய
ப்ரஹ்ம மதி செய்பவனுக்கு நிஷ்டா விச்சேதம் பயம்
அவமதி செய்யும் அவித்வானுக்கு என்ன பயம்
மதி செய்ய நொடிப் பொழுது தவறுவதற்கே நடுங்குவாரே -அவமதி செய்யும் நான் அஞ்ச வில்லையே என்று பாவம் –
நபி பேதி குதச்சன நபி பேதி கதாசன -என்று ப்ரஹ்ம ஆனந்த அனுபவம் உள்ள விஷயத்தில் நிர்ப்பயத்வம் ஓதப்பட்டது
விஷயாந்தர ஆனந்த வித்வானும் ப்ரஹ்மானந்த அவித்வானுமான எனக்குப் பயம் இல்லை என்றும் பாவம் –

அஹோ
இது என்ன விபரீதம் -என்று ஆச்சர்ய சோகங்கள் –
ஸ்காலித்யே சாஸி தாவான குருவின் இடத்தில் பயம் இல்லை
மந்த்ரம் என்றால் நியமம் தவறக் கூடாது என்று உலகம் பயந்து நடுங்கும்
மந்த்ரலோபத்திலும் பயம் இல்லை
விஸ்வ ஸாஸ்தா வும் தண்டதரனும்
பீஷாஸ் மாத் வாத பவதே -என்றும்
மஹத் பயம் வஜ்ர மீவோத்யதம் -என்றும் ஓதப்படும்
ஜகத் கம்பகமான மந்த்ர தேவதை இடமும் பயம் இல்லை
வித்வானாக இருந்தால் இப்படி பயம் இல்லாமல் -இருப்பேனா

இத்தம் சடோபி
இப்படி சாட்ய ஸ்வ பாவனாய் இருந்தும்
ஊஹ அத்யாயமான ஒன்பதாம் அத்யாயம் இரண்டாம் பாதத்தில் சாம கான க்ரம விஷயமாக
பல அதிகரணங்கள் உண்டு
ஊஹம் என்றே ஒரு ஸாம கிரந்தம் உண்டு
சாந்தோக்யே தலவகாராதி ஸஹஸ்ர ஸாம ஸாகா கதா நாம் கீதி பிரகாராணாம் -என்று
கீத சம்பாதக அக்ஷர விகார விகல்ப அதிகரணத்தில் ஸாஸ்த்ர தீபிகை –

வேதம் தமிழ் செய்த மாறன் தமிழ் முறையே மகத்தான ஒரு ஊஹ மாகக் கூடும்
மூல மறையின் ஒரு மாற்றம் -ஊஹம் -மாறன் மறை –
இங்கே ஊஹ அத்யாய ஸ்மரணத்தில் சடகோபனையும் அவர் திருவாய் மொழியையும் நினைத்து
திருவாய் மொழிப் பிள்ளையை ஆஸ்ரயித்து சடகோபன் மறையையும் ஈட்டையும் ப்ரவர்த்திப்பதையே
தமக்கு அசாதாரணமான ஸ்வரூபத்தை உடையவர் எட்டு திக்குகளிலும் யஸஸ் பரவிய தாம்
அசடராக இருக்க வேண்டிய நிர்பந்தம் இருந்தும் சடராக இருக்கிறோமே என்று தம்மை
இங்கே விசேஷித்து நிந்தை செய்கிறார் –

குருவுக்குப் பயப்பட வேண்டாம் -மந்திரத்துக்குப் பயப்பட வேண்டாம் -பெருமாளுக்குப் பயப்பட வேண்டாம் –
சடனாய் இருந்தால் சடகோபருடைய கோபத்துக்கு அஞ்ச வேண்டாவோ -அதற்கும் அச்சம் இல்லையே
என்று திரு உள்ளம்
நான் அவர் கோபத்துக்குப் பயப்பட வேண்டி இருக்க
பிபேத் அல்ப ஸ்ருதாத் வேத -என்ற கணக்கில் என்னைக் கண்டு அவர் தாமும் அவர் வேதமும்
பயப்படும் படி செய்கிறேன்

அசடவத்
சாட்ய லேசமும் இல்லாமல் இருந்தால் தானே சடகோபன் மறையை பிரவசனம் செய்யலாம்
சடன் எப்படி மறையை அணுகலாம்
அதற்காக அசடன் போல் நடிக்கிறேன்

பவதீய சங்கே –
திருவாய் மொழியை ஈன்ற தாய் சடகோபன்
வளர்த்த தாய் நீர்
அப்படிப்பட்ட உம்முடைய கடாக்ஷ பாத்ரரான உத்தம சீலரான உமது அடியார்கள் அநேகர் குழாம் நடுவில்
ஒருவரும் உண்மையை அறியாதபடி மறைத்து வஞ்சிக்கிறேனே
என்னிலும் சடர் உண்டோ

தேவ்யா நிந் ஹோது மிச்சோ இதி ஸூர சரித சாட்ய மவ்யாத்வி போர்வ -என்று
முத்ரா ராக்ஷஸ நாடக நாந்தீ ஸ்லோகம்
சடையில் உள்ள கங்கையை பார்வதீ தேவிக்கும் மறைக்கும் தந்திரத்தை சாட்யம் என்கிறார் கவி

ஹ்ருஷ்ட சராமி
துளி பயமும் இல்லாமல்
துளியும் நெஞ்சம் நோவாமல்
சந்தோஷத்தோடு ஸ்ருதி சொல்லுகிறபடி
ஜ்யோக்காய் -திரிகிறேனே

யதிராஜ
யதிகட்க்கு நீர் இறைவர் ஆயிற்றே
ராஜரான உமது ராஜ தண்டனை வரும் என்ற அச்சமும் இல்லையே

மூர்க்க
இப்படி பஹு அபாயமான நடத்தையில் இருந்தும் வரும் தண்டனைகளை ப்ரத்யவாயங்களை நினையாமல்
நிர்ப்பயனாய் இருப்பதற்கு காரணம் மூர்க்கனாய் இருப்பதே –
பிறரை ஏமாற்றுவதால் பலிப்பது ஆத்ம வஞ்சனையே என்று அறியாத மூர்க்கனாய் இருப்பதே
யச்ச மூட தமோ லோகே யச்ச புத்தே பரம் கத தாவு பவ் ஸூக மே தே தே க்லிஸ் யத் யந்தரிதோ -என்றார் ஸூகர்

அடியோடு மதி கேடனான மூர்க்கன்
ஞானத்தின் கரையை அடைந்த தத்வ தர்சி இவ்விருவரும் மேலும் மேலும் ஸூகப் பெருக்கை அடைகிறார்கள் –
இரண்டிலும் சேராமல் நடுவில் இருப்பவர் க்லேசப்பட்டுத் திண்டாடுகிறார்கள் –
நான் மூட தமன் என்னும் கோஷ்ட்டியில் சேர்ந்தவன் ஆகையால் ஹ்ருஷ்டனாய் ஸஞ்சரிக்கிறேன்
பிஷ ஆசர்யம் சரிக்கிறேன் -பிக்ஷையையும் ஹ்ருஷ்டனாய் உண்கிறேன்
சர கதி பாஷணயோ

———————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கோபாலாச்சார்ய ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: